நல்வரவு_()_


Sunday, 24 December 2017

ந்திட்டுதோ கிறிஸ்மஸ்?:)

சன்ரா வந்திட்டாரா? சன்ரா வந்திட்டாரா? கண்ணைத் திறக்கட்டோ?:)

Monday, 18 December 2017

மழையில் நனைந்து விறைத்த புறாப்பிள்ளை:)

ஸ்ஸ்ஸ்ஸ் சாப்பிடும்போதுகூட மனிசரால நிம்மதியாச் சாப்பிட முடியுதோ.. கர்ர்ர்ர்ர்ர்:))

Thursday, 14 December 2017

மீ.. பஸ்ல போய்.. ஊஞ்சல் ஆடினேனே:)

ங்கு எங்களுக்கு பஸ்  இல் ஏறும் வாய்ப்பே கிடைப்பதில்லை, வெளி நாடுகளுக்குப் போனால் மட்டுமே பஸ் இலும் ஏறுவதுண்டு, இங்கு அப்படித்தேவைப் பட்டால் ரக்‌ஷிதான்.

அதனால பஸ் இல் போவதெனில் சரியான விருப்பம் எனக்கு. ஆனா எங்கள் ஊருக்கு வரும் பஸ், காரில் 15 நிமிடத்தில் வந்திடும் தூரத்தை, இது 45 நிமிடங்கள் எடுக்கும் வந்து சேர.. ஊரெல்லாம் சுத்திச் சுத்தி வரும்:)).. அவசரமில்லை எனும் நேரங்களில், பஸ் எனில் ஹப்பியாக எஞ்சோய் பண்ணி வரலாம்.

Wednesday, 6 December 2017

கம்புத் தோசை, கொள்ளுத்தோசை தேம்ஸ்:) ஸ்பெஷல்:)

ளாளுக்கு கண்ட நிண்ட ஸ்பெசல் எனப் பெயர் வைக்கும்போது:) மீ ஏன் தேம்ஸ் ஸ்பெசல் என வைக்கக்கூடாது எனப் பலமா ஓசிச்சே இந்த முடிவுக்கு வந்தேன்:)..

இப்போ உலகமெல்லாம் வாழும் நம்மவர்கள்.. அரிசியை, மா வகையை எல்லாம் குறைத்து, தானிய வகையை அதிகப்படுத்தி வருகின்றனர் ஹெல்த் க்காக, ஆனா அதிராவைப் பொறுத்தவரை, நான் ஹெல்த் க்காக எனப் பெரிசாப் பார்ப்பதில்லை, பிடிச்சதைச் செய்வேன் .. அந்த வகையில் எனக்கு எப்பவும் விதம் விதமாக இலைவகைகள் மற்றும் தானிய வகைகள் ரொம்பவும் பிடிக்கும், எங்கு போனாலும் வித்தியாசமாக என்ன இருக்கு எனத் தேடிப் பார்த்து வாங்கி வந்திடுவேன், ஒத்துக் கொள்ளவில்லை எனில் விட்டிட வேண்டியதுதான்.

என் கிச்சின் ட்றோவெரில் இருக்கும் ஸ்ரொக்:)

சரி... கம்பு, கொள்ளு, வரகு , கோதுமை.. இவை எல்லாம் வாங்குவேன், எப்பவும் கஞ்சி அல்லது சுண்டல்தான் செய்வேன்.. 

எனக்கு இட்லி, தோசை எப்படிக் கஸ்டப்பட்டு வச்சாலும் பொயிங்கவே பொயிங்காது:), இங்கு குளிரும் அதிகம் என்பதனால் அவணை கீட் பண்ணி ஓவ் பண்ணிப்போட்டு வச்சு எடுப்பேன், அபூர்வமாகத்தான் பொயிங்கும்:).. அதனால செய்ய விரும்புவதில்லை...

இதுபற்றி அஞ்சுவுக்கு மெயில் அனுப்பியபோது, நான் தோசை மாக்குழைப்பதில் ஒரு தெக்கினிக்கைப் பாவிப்பேன்:) எனச் சொன்னேன்:).. அதைக் கேட்டு அஞ்சு ஹீல்ஸ் ஐக் கழட்டிப்போட்டு என்னைக் கலைக்கத் தொடங்கிட்டா:)... ஹையோ எதுக்குக் கலைக்கிறீங்க எனக் கேய்ட்டேன்ன்:).. நான் சுடுதண்ணியில்தான் (கொதிநீர் அல்ல வோம் வோட்டர்).. குழைப்பேன் எனச் சொல்லிட்டேனாம்:) ஹா ஹா ஹா:).. விரைவில் புளிக்கட்டுமே என அப்படிச் செய்வேன்:). அது டப்பா?:)..

அதனால இனிமேல் குளிர் தண்ணியிலேயெ கரைச்சு வையுங்கோ  என மிரட்டினா:)

அப்போ இம்முறை தோசை செய்யலாமே என வெளிக்கிட்டேன்:).

முக்கால் கப் முழு உழுந்து, கால் கப் கம்பு சேர்த்து ஒரு மேசைக்கரண்டி வெந்தயம், ஒரு 5,6 மணி நேரம் ஊறவிட்டு, பின்பு நன்கு அரைத்து, 2 கப்பிலும் கொஞ்சம் குறைந்த ரவ்வை சேர்த்துக் குழைச்சு... கவனிக்கவும் குளிர் தண்ணியில்:))... இதில் பாவிக்கும் ரவ்வை எப்பவும் கோர்ஸ் ஆக இருக்கோணும் ஃபைன் ரவ்வை கூடாது.........

உப்பு, சோடா எதுவுமே சேர்க்காமல் குழைத்து வைத்துப், 10 மணி நேரத்தால் பார்த்தேன் பொயிங்கி வந்திருந்துதே.. ஹையோ என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை:)).. அப்போ இவ்ளோ காலமும் பொயிங்காததுக்கு காரணம் என் சுடு தண்ணியாஆஆஆஆ?:)

எதுக்கும் தோசை சாப்பிட முன்னர், இந்தாங்கோ.. இதைக் குடிச்சு கொஞ்சம் தென்பாகுங்கோ:)) ஃபுரூட் யூஸரில் அடிச்செடுத்த... கரட், பீற்றூட், அப்பிள் சேர்ந்த ஊஸ்:).. அருகிலே இருப்பது பிழிந்து கிடைத்த சக்கை.. கொட்ட்டுவதற்கு முன் படமெடுத்தேன்..

இங்கே பாருங்கோ.. என் ஓசை:) என்னா சூப்பரா வந்திருக்குதென:)
 ஆனா கம்புத் தோசை கொஞ்சம் தடிப்பாக வரும்.. சுவை சூப்பர்ர்.. மிகுதி மாவில் இட்லியும் அவித்தேன்.. அதுவும் சூப்பர்.. படம் எடுக்காமல் விட்டிட்டனே:).

தோசை மா, பொயிங்கியதால், ஆசையில் டக்கென திரும்பவும் தோசைக்கு வைக்கலாம் என:).. இம்முறை அரைக்கப் உழுந்து, கால் கப்பிலும் கூடிய கம்பு, மிகுதிக்கு கொள்ளுச் சேர்த்து ஒரு கப்பாக்கினேன்... அதே முறையில், வெந்தயம் மட்டும் சேர்த்து அரைச்சு, 1.45 கப் ரவ்வை சேர்த்தேன்.. வேறு எதுவும் சேர்க்கவில்லை..... பொயிங்கியிருக்குது பாருங்கோ:)..

ஹையோ அது பேப்பர் தோசையேதான்... பாருங்கோ அதிரா சுட்ட ஓசையின் அழகை:)..

 எப்பவும் நல்லெண்ணெய் ஊற்றித்தான் தோசை சுடுவதுண்டு, இது நெல்லைத்தமிழனின் இட்லிப்பொடி அரைத்து வச்சிருக்கிறேன், அதை மேலே தூவி, அதனுள் ஒலிவ் ஒயிலை விட்டு.. வெந்ததும் ஸ்ஸ்ஸ்.. ஆஆஆஆஆஆ:))
 அப்படியே மடிச்சு, புரட்டிப் பிரட்டிப் போட்டு முறுகலாக்கி எடுத்தேன் என்னா சுவை தெரியுமோ?:)..



இதுக்கு சட்னி கூடத் தேவையில்லை, நல்லெண்ணெய் விட்டுச் சுட்டமையால், சும்மாவே சாப்பிடலாம் தெரியுமோ:)..
எங்கள் சூப்பர்மார்கட்டுக்கு இப்படி விதம் விதமாக பல வண்ணங்கள் பல சைஸ்களில் பூசணிக்காய்கள் வரும், ஆனா எனக்கு வாங்கப் பயம்:)..
இந்த வெங்காயம் எங்காவது கண்டிருக்கிறீங்களோ?:)  இது அதிரா ஊரில் மட்டும்தான் கிடைக்குதூஊ..:) அதனாலதான் மெல்லிசூஊஊஊ அதிராவைப்போலவே:)).. ஏனைய இடங்களில் எல்லாம் குண்டாக்கும்:)..   அ.. வைப்போல:))
ஊசி இணைப்பு:-
என் கீரைவடை பார்த்து, பல நூறு ரசிகர்கள் உடனேயே செய்து, எனக்கு மெயில் அனுப்பினர்:) எல்லாத்தையும் இங்கின போட முடியாதெல்லோ:).. அதனால என் பரம ரசிகை[ஹா ஹா ஹா அம்முலு மன்னிக்கவும்:))] ஃபுறொம் ஜேர்மனி:)).. இதைச் செய்து அனுப்பியிருந்தா..  அம்முலு எனும் பிரியசகி.. அதை அஞ்சுட பேர்த்டேக்கு டெடிகேட்:) பண்ணுறாவாம்:)

இது கீதாக்காவின் ரெசிப்பி பார்த்து, அதிரா செய்த சுவீட் போளி:)
===========================================================================
சுயநலமென்பது குடிசைக்குச் சமனானது, பொது நலமோ அரண்மனைக்குச் சமனானது... இப்படிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா:)
======================================================================
ஆவ்வ்வ்வ் டங்கியூ:))

=======================================================================

Sunday, 3 December 2017

மார்கழித்  “தேவதை:)”  க்கு வாழ்த்துக்கள்!!!...

இது அஞ்சுவின் பிறந்தநாளுக்கு அதிரா செய்த குயிலிங்:).. இம்முறை அல்ல:), படம் புரியுதோ? மீனைப் பிடிப்பதற்காக:) குளக்கரையில் பூஸ் காவல் இருக்குது... லிப்ஸ்ரிக் + மீசையுடன்:))
ஓடி வாங்கோ ஓடிவாங்கோ.. எங்கள் வலையுலகத் தேவதை.. அதிராவின் அன்பு எதிரி:).. பாசக்காரப் பெரியம்மா (டெய்சியின் முறையில ஜொன்னேன்:))..  ஹா ஹா ஹா ஹையோ கலைக்கிறாவே:)
இடிக்கப்பூடாது அஞ்சு கர்ர்ர்ர்ர்ர்ர்:) என்னையும் பேர்த்டேப் போட்டோக்குப் போஸ் குடுக்க விடோணும் :)

இரண்டடிக் ஹீல்ஸ் க்கு சொந்தக்காரர்:).. கிச்சினைத்திறந்து, சமைக்காமலேயே, தான் சமையலில் வில்லி எனச் சொல்லித் திரிபவர்:).. கட்டிலுக்குக் கீழே ஒளிச்சிருந்தபடியே, தான் பெண்களுக்குக் குரல் கொடுக்கும் தீவிரவாதி:) என முழங்குபவர்:).. கண்ட நிண்ட பூச்சி, புழுக்கள் எது நகர்ந்தாலும்:) அவற்றோடு நின்று, வீட்டில் சமைப்பதைக்கூட மறந்து பேசிவரும்:).. பிரியமான பூச்சிகளின் தோழி:)  இப்பூடிப் பலபல பட்டங்களோடும் புகழோடும் வாழ்ந்து வரும்.. 

காகிதப்பூக்கள் , பேப்பர்கிராஃப்ட் புளொக்குகளின் ஓனர்:) அஞ்சுவுக்குப் .... 04/12/17
பிறந்தநாள்... இன்று பிறந்தநாள்...
பிள்ளைகள்போலே
தொல்லைகள் எல்லாம்
மறந்தநாள்....

இதில் வெள்ளையா நடுவில் இருக்கும் அப்பாவிதேன் நான்:).. மற்றது கீதா, அஞ்சு, அம்முலு ஆக்கும்:))

இந்தப் பதினேழாம் ஆண்டில் தனது 66 வது [பிரட்டிப் போட்டாலும் 66 தேன்.. மீ இதில ரொம்ப விபரமாக்கும்:)]  பிறந்ததினத்தைக் கொண்டாடும் அஞ்சுவுக்கு.. ஆண்டவர் நல்ல ஆயுளையும், நிரந்தர மகிழ்ச்சியையும், நலம் நிறைந்த வாழ்க்கையையும்.. மற்றும் அனைத்து செல்வங்களையும் கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்...
ந்தப்பாடல் என் கண்ணில் பட்டு இப்போ கிட்டத்தட்ட ஒரு வருடமாகுது, கேட்ட உடனேயே இதை அஞ்சுவின் பிறந்தநாளுக்கு வெளியிடலாமே என சேஃப் பண்ணிப் பத்திரமாக வச்சிருந்தேன்ன்.. இதை முன்பு எப்பவுமே கேட்டதில்லை நான்.. நீங்கள் கேட்டிருக்கிறீங்களோ? முழுமையாகக் கேழுங்கோ.

==================================================================================
மற்றும் இம்மாதம் 1ம் திகதி பிறந்தநாளைக் கொண்டாடிய கெள அண்ணனுக்கும், வரும் 8ம் திகதி தன் பிறந்தநாளைக் கொண்டாடும் கோபு அண்ணனுக்கும், திகதி தெரியாது ஆனா டிசம்பரில் பிறந்தநாளைக் கொண்டாடும் சகோ கில்லர்ஜி க்கும்.. , சகோ தனிமரம் நேசனுக்கும் மற்றும் பிறந்தநாளை இம்மாதம் கொண்டாடும் அனைவரையும்.. வலையுலக ஓனர்கள் அனைவரும் வாழ்த்துகிறோம். வாழ்க வளமுடன்..._()_.
==================================================================================
ஆங்ங்ங்ங் பொயிண்டுக்கு வந்தாச்ச்ச்ச்சு:).. கொண்டு வாங்கோ கொண்டு வாங்கோ.. பிரசண்ட்டை எல்லாம் பவுண்ட்ஸ் ஆ மாத்தி இந்த உண்டியலில் போடுங்கோ:) நான் அஞ்சுவுக்கு வைர நெல்க்லெஸ் செய்து குடுக்கப்போறேன்ன்:))
-----------------------------------------------------------------------------------------------
தமனாக்காவை அன்போடு டச்சு செய்ய:)
_________________()________________