நல்வரவு_()_


Monday 18 December 2017

மழையில் நனைந்து விறைத்த புறாப்பிள்ளை:)

ஸ்ஸ்ஸ்ஸ் சாப்பிடும்போதுகூட மனிசரால நிம்மதியாச் சாப்பிட முடியுதோ.. கர்ர்ர்ர்ர்ர்:))

ங்களுக்கு கிளி/ மைனா வளர்க்க சரியான விருப்பம். அவை இரண்டையும் கதைக்கப் பழக்கலாமாம் என்பதால். எங்கள் அப்பாவின் கண்டிப்பான உத்தரவு, எது வேண்டுமானாலும் வளருங்கள், ஆனால் கூட்டிலே அடைத்து எதையும் வளர்க்கப்படாது என்பது. அப்போ கூண்டிலே அடைக்காவிட்டால் எந்தப் பறவையும் வளர்க்க முடியாதே. அந்த நேரம்தான், சொல்வார்களே "கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிரித்துக்கொண்டு கொடுக்கும்" என்று. அது எங்கள் வீட்டில் நிகழ்ந்தது.

ஒருமுறை சரியான மழை. வெளியே இறங்கவே முடியாது. யாரும் ஸ்கூலுக்குப் போகவில்லை. அப்பா மட்டுமே ஒபீஸுக்குப் போய் வந்தார். முற்றமெல்லாம் ஒரே தண்ணி மயம். தொடர்ந்து மூன்று நாட்கள் சோவெனக் கொட்டிய மழை, நான்காவது நாள் ஓய்ந்தது. ஆனாலும் வெயில் இல்லை. வெளியே இறங்கமுடியாது. எங்கள் வீட்டின் முன்னால் இரண்டு பெரிய மாமரங்கள் இருந்தது. நாங்கள் காலை உணவைச் சாப்பிட்டு விட்டு, வீட்டுக்குள் இருந்து கதைத்துக்கொண்டிருந்தோம்.

அப்போ "தொப்" என்று முற்றத்தில் ஏதோ விழுந்ததுபோல் சத்தம் கேட்டது, இப்படித்தான் பல சமயம் மாம்பழங்கள் பழுத்து விழுவதுண்டு:). ஓடிச்சென்று பார்த்தோம், ஏதோ ஒரு பறவை தண்ணியினுள் விழுந்துபோய்க் கிடந்தது, எழும்ப முடியவில்லை, ஆனால் கண்களை மட்டும் உருட்டியபடி பரிதாபமாகக் கிடந்தது.

நாம் ஓடிச் சென்று தூக்கி வந்தோம். நாம் நினைத்தோம் செட்டை, கால் எல்லாம் உடைந்துவிட்டதென்று. உணர்வின்றியதுபோல் இருந்தது. ஓட எத்தனிக்கவில்லை. அது மூன்று நாட்களும், மழையில் நனைந்துகொண்டு மாங்கொப்பில் இருந்திருக்கிறதுபோலும், அப்படியே உடம்பு விறைத்து, பலன்ஸ் இன்றி விழுந்து விட்டது. நன்கு மழையில் நனைந்திருந்தமையால், ஒரு கறுப்புப் பறவையாக இருந்தது. அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை.

நாங்கள் ஆராட்சியில் இறங்கினோம், இது காகமாக இருக்குமோ, அல்லது மைனாவோ, புறாவோ இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொல்ல, அம்மா சொன்னா முதலில் அப்பறவையைக் கொண்டுபோய் அடுப்பின் பக்கத்தில் ஒரு மட்டை போட்டு பிளேட்டிலே படுக்க வையுங்கள் குளிரால் விறைத்திருக்கிறதென்று.  அதைக் கொண்டுபோய் அடுப்பின் பக்கத்திலே இருக்க வைத்து முன்னாலே அரிசியும் போட்டு வைத்தோம், வைத்துவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தோம், கொஞ்ச நேரத்தில்தான், சூடு உடம்பில் பிடித்ததும், அதன் விறைப்புக் குறைந்து, மெதுவாக உடம்பை ஆட்டியது, கால்களை நீட்டியது, எழுந்து நின்றது. எம்மை மிரள மிரளப் பார்த்தது, அப்போதுதான் நாம் அடையாளம் கண்டோம் அது ஒரு அழகான மணிப்புறா என்று.

நான் அதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். இப்போ புறா என்பது கன்போம் ஆகிவிட்டது. அதனால அதைப் பறக்கவிட விருப்பமில்லை, ஆனால் பின்னேரம் அப்பா வருவதற்கிடையில் பழக்கிவிட வேண்டும், இல்லையென்றால் பறக்கவிட்டு விடுவார், என ஒரே யோசனையும் கவலையுமாக இருந்தது.

இப்போ புறாப்பிள்ளை செட்டைகளை விரித்துக் காய வைத்தார், எம்மைப் பார்த்தும் பயப்படாமல் அரிசியைச் சாப்பிட்டார். இப்பவும் கண்ணில் நிற்கிறது அந்தக் காட்சி, தான் ஒரு புது இடத்துக்கு வந்திருக்கிறேனே, இவர்கள் மிரட்டுவார்களா என எந்தவிதப் பயமும் இல்லாமல், ஏதோ தன் வீடு போலவே பயப்படாமல் இருந்தது. அதன் பின்னர் அவரை கிச்சினுள்ளேயே விட்டு விட்டு, எல்லா வெளிவாசல் கதவையும் பூட்டி விட்டு, நாம் ஹோலிலே இருந்தோம்.

சிறிது நேரத்தில் ஆச்சரியம் என்னவென்றால், புறாப்பிள்ளை அடுப்பால் இறங்கி அழகாக "டொக்" "டொக்" என்று உடம்பை அசைத்துக்கொண்டு எம்மைத்தேடி ஹோலுக்கு வந்தார். அவரது அந்த வருகை என் மனக்கண்ணில் இப்பவும் நிற்கிறது. நாம் இப்படி எதிர்பார்க்கவில்லை, திகைத்துப்போய், ஆடாமல் இருந்தோம், ஆடினால் பறந்துவிடும் என்பதுபோல் பயமாக இருந்தது. பின்னர் மெதுவாக பக்கத்தில் சென்று தடவினோம், அவர் எதுக்கும் பயப்படவில்லை, வீட்டுக்கு முதல்தடவை வந்த விருந்தாளி, வீட்டைச் சுற்றிப் பார்ப்பதுபோல் நடந்து கொண்டே திரிந்தார்.

3 நாளாக மரத்தில் இருந்து விறைத்து விட்டதால், அவருக்கு பறப்பது மறந்துபோனதோ என்னவோ நடந்தே உலாவினார். நாங்கள் கையிலே அரிசியைக் கொடுத்தோம் வந்து கொத்திச் சாப்பிட்டார். இத்தனையையும் பார்த்து ஒருவித முறைப்போடு, ஒரு வித்தியாசமான சவுண்ட் எழுப்பியபடி பூனைப்பிள்ளை ஒரு பக்கம் இருந்தார், பூனைப்பிள்ளைக்கு, புறாவைக் காட்டிச் சொல்லிக் கொண்டிருந்தோம், இதைத் தொடப்படாது என்று.  நாயாருக்கும் அப்படியே பழக்கப் படுத்தினோம்.

சரி பின்னேரம், அப்பா வரும் நேரமானது, வெளியே இன்னும் மெதுவாக மழை தூறிக்கொண்டே இருந்தது. இனியும் அடைத்து பாதுகாக்க முடியாதே, அப்போ அம்மா சொன்னா, வாசல் கதவை திறந்து விடுங்கோ, இனி அது போகும்போல் தெரியவில்லை, பழகிவிட்டது என்று. மனதிலே பறந்துவிடக்கூடாதே என்று எல்லாத் தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு, கதவைத் திறந்து விட்டோம்.
தொடரும்....:)
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
தொடரோடு நிறுத்தி, உங்கள் எல்லோரையும் காக்க வைக்க விரும்பவில்லை:).. அதனால தொடர்கிறேன்:)..  தவைத் திறந்ததுதான், புறாப்பிள்ளை அவசரமாக வாசல்வரை நடந்து சென்றார், போகப்போகிறதோ என எதிர்பார்த்தோம், வாசலில் நின்று வெளியே பார்த்தவருக்கு போகப் பிடிக்கவில்லை, மழை தூறுகிறதெல்லோ, உடனே திரும்பி வந்திட்டார். எமக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. இனி அவருக்கு படுக்க இடம் கொடுக்க வேண்டுமென்று இடம் தேடினோம். ஹோலிலே "கோனர் பிளேட்", இருந்தது, அழகுப் பொருட்கள் வைக்க. அந்த இடத்தை வெளியாக்கி அதிலே பேப்பரெல்லாம் விரித்து, அரிசி போட்டு அவரை இருத்தினோம் அவருக்கும் பிடித்துக்கொண்டது. அப்பா வந்தார், பார்த்தார், அப்பாவுக்கும் பிடித்துவிட்டது, கூடில்லாமல் வளர்ப்பதானால் வளருங்கோ என்று சொன்னார்.

அன்றும் அடுத்த நாளும் புறாப்பிள்ளை எம் வீட்டுக்குள்ளேயே இருந்தார். நாம், கையில் அரிசியை வைத்து, வாயால் விசில் பண்ணுவதுபோல் செய்தால் உடனே பறந்துவந்து கையில் இருந்து சாப்பிடுவார், பின்னர் தன் கோனர் பிளேட்டில் போய் இருப்பார். இரு நாட்கள் போனபின்னர் மழை முடிந்து வெயில் வந்தது. புறா வெளியே பறந்துபோய் மரத்திலே இருந்தது.
தன் இனம் இருக்கிறதா எனத் தேடியதுபோல் இருந்தது. வேறு புறாக்கள் இருக்கவில்லை, மீண்டும் எம்மிடம் வந்து இரவு தன் இருப்பிடத்தில் உறங்கியது.

இப்படியே கொஞ்ச நாட்கள் போனது. புறாவுக்கு தனியே இருக்கப் பிடிக்கவில்லைபோலும். அதனால் புறாப்பிள்ளை, கோழிகளை தன் இனமாக நினைத்து, அவற்றோடு போய் புல்லிலே மேய்ந்தது, மரத்தின் கீழே கோழிகள் இளைப்பாறினால் தானும் போய் உரசிக்கொண்டு படுத்திருந்தது. அந்தக் காட்சிகளைப் பார்க்கவே ஆசையாக இருக்கும். எங்கள் வீட்டிலே, கோழிகளுக்கென்று, அழகான கூடு செய்து வைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட லவ் பேட்ஸ் கூடுபோல இருக்கும். இரு தட்டுக்கள். நான்கு கால்கள் வைத்து, முன்பகுதி முழுக்க நெற் போட்டு அழகான கூடு. இரவில் கோழிகள் அதில் ஏறிப் படுத்துக் கொள்ளும், அதன் பின்னர் அதைப் பார்த்துப் பூட்டிவிடுவது [நம் வீட்டில் எப்பவும் ஒருவர் வெளி வேலைக்கு இருப்பார்] அந்தப் பையனின் பொறுப்பு. அம்மாவும் இடைக்கிடை பூட்டப்பட்டிருக்கோ என்று பார்த்துக்கொள்வா.

அப்போ இந்தப் புறாப் பிள்ளைக்கு, கோழியோடு படுக்கும் ஆசை வந்தது. நாங்கள் வீட்டுக்குள் புறா படுக்க வரவில்லையே எனத் தேடினோம், அந்தப் பையன் கூப்பிட்டார், இங்கே வந்து பாருங்கள், கோழிக்கூட்டிலே புறாப்பிள்ளை படுத்திருக்கிறார் என்று. எல்லோரும் ஓடிப்போய் பார்த்தோம். கோழியோடு ஒட்டியபடி அழகாகப் படுத்திருந்தது. அன்றுமுதல் அதுதான் அவரிடன் உறைவிடமானது. அழகழகா கோழிகள் கூட்டிலே இருக்கும் கொப்புப் போன்ற தடிகளில் ஏறிப் படுத்திருப்பார்கள், அவற்றோடு ஒட்டிக்கொண்டு புறாப்பிள்ளை படுப்பார்.

எங்கள் பூனையாருக்கு எப்பவுமே இந்தப் புறாவில் ஒரு கண். புறா, புல் மேய்கிறபோது, பூனையார், குறி வைத்து பாய ஆயத்தமாவதை சில வேளைகளில் நாம் கண்டு கத்தி, உறுக்கியிருக்கிறோம். பின்னர் இந்தக் கோழிக் கூட்டை, இரவில் எல்லோருமே ஒரு தடவை, பூட்டப்பட்டுள்ளதா எனச் செக் பண்ணுவது வழக்கமாகிவிட்டது, ஏனெனில் புறா இருப்பதால். ஒரு நாள் என்ன நடந்ததோ தெரியாது. எல்லோருமே கூட்டைப் பூட்ட மறந்துவிட்டோம். காலையில் எழுந்து புறாவைப் பார்க்க ஓடினோம், என்ன சொல்ல??, புறா கழுத்திலே கடி பட்டு இறந்து கிடந்தது. அது எங்கள் பூனையாரின் வேலைதான். ஏனெனில் வேறு பூனைகள் வருவதை எங்கள் நாயார் அனுமதிக்க மாட்டார். அது எப்படித்தான் அவ்ளோ கோழிகளுக்கு மத்தியில் புறாவை மட்டும் குறி வைத்தாரோ தெரியாது, கொன்றது மட்டும் தான், தன் வேலை முடிந்தது என்பது போல அப்படியே விட்டு விட்டு எஸ்கேப் ஆகிட்டார் பூனையார். எல்லாமே நம் செல்லங்கள்தானே.. யாரை நோக முடியும்?...

நாங்கள் சொந்த ஊரை விட, வளர்ந்தது படித்ததெல்லாம் இவ்வீட்டில்தான். ஒரு நாள் திடீரென வந்த நாட்டுப் பிரச்சனையால், எதுவுமே எடுக்காமல் வீட்டைவிட்டு திடீரென வெளிக்கிட்டாச்சு:), அன்று வெளிக்கிட்டதுதான் இன்றுவரை அந்த வளவிலே கால் வைக்கவில்லை. சில வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் றோட்டிலே நின்று வீட்டைப் பார்த்தோம். ஏனெனில் எங்கள் வீடு மெயின் றோட்டிலே அமைந்திருந்தது. வளவிலே கண்ணிவெடிகள் இருக்கலாம், கால் வைப்பது நல்லதல்ல என்றார்கள். அதனால் நாம் உள்ளே போகவில்லை. வீடு இடிபட்டு, வீட்டின் பெயரை மட்டுமே தாங்கியபடி சண்செட் மட்டும் நிமிர்ந்து நின்றது. மாமரங்களெல்லாம் வெட்டப்பட்டு விட்டது. அதைச் சொல்லால் விபரிக்க முடியாது. அனுபவித்தால்தான் உணர முடியும்.

இதன் பின்னர் தான், நான் போனதடவை சொன்ன பப்பி, ஸ்கிப்பி வளர்த்த கதை நடந்தது.

நான் சிறு வயதிலிருந்தே டயறி எழுதுவது வழக்கம். எனக்கு வரும் கடிதங்கள், என் பெயருக்கு வரும் வாழ்த்து அட்டைகள் எல்லாம் ஒழுங்காக சேகரித்து ஒரு குட்டி சூட்கேசில் வைத்திருப்பேன். அந்த சூட்கேசை, பொழுது போகாத நேரங்களில், எடுத்து வந்து திறந்து வைத்துவிட்டு, ஒவ்வொன்றாக எடுத்து ரசித்துப் படித்துப் பார்ப்பேன்:).. அப்போ அண்ணன் வேணுமெண்டே தனகுவார், தனக்குக் காட்டும்படி கடிதங்களை, நான் குடுக்க மாட்டேன், அதுக்கு காசு அல்லது சொக்கலேட் வாங்கித்தருவதாக புரொமிஸ் பண்ணுவார், பின்பு படிக்க கொடுப்பேன்:). அவ் வீட்டோடு அதுவும் போனது. அன்றிலிருந்து டயறி எழுதுதல், பொருட்கள் சேகரித்தல் இப்படியான எல்லாப் பழக்கத்தையும் கைவிட்டேன். இப்போகூட எமக்கு, பிள்ளைகளுக்கு வரும் வாழ்த்துமடலெல்லாம், ஒரு கிழமையில் எறிந்துவிடுவேன். அதைப் பாதுகாத்து பின்னர் தொலைக்கும்போது ஏற்படும் மன வேதனையை விட உடனேயே எறிவதுமேலென நினைக்கிறேன்.
நன்றி வயக்கம் _()_.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
ஊசிக்குறிப்பு:
நமது நல்ல எண்ணம், சிலவேளைகளில், கெட்ட பெயர் எடுக்கக் காரணமாகி விடுகின்றது.. 
இதை உங்களுக்காகக் காவி வந்திருப்பவர்..
உங்கள் அன்புக்கும், பண்புக்கும், பணிவுக்கும் உரிய:) புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்:)
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
ஊசி இணைப்பு:
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
பஹூத் அச்சா:) பகூத் அச்சா:))


========================================================

144 comments :

 1. ஹையோ இப்போதான் கவனிக்கிறேன் :) புறா விஷயம் நிறைய இருக்கு என்கிட்டயும் ,,நாளைக்கு சொல்றேன் :)

  ReplyDelete
  Replies
  1. ஆவ்வ்வ் வாங்கோ அஞ்சு, நைட்டே வந்திருக்கிறீங்க, நான் நித்திரையாகிட்டேன்ன்ன்... சொல்லுங்கோ சொல்லுங்கோ..

   Delete
  2. ஹையோ எனக்கு ஒரே ஷை ஷையா வருதூஊஊஉ.. விடிவதற்குள் மகுடம் ஏறிவிட்டது.. எப்பூடி நன்றி சொல்வேன் எல்லோருக்கும்ம்ம்ம்:))..

   ஹையோ நெ தமிழன் இப்போ இதுவும் ஒரு விளம்பரம் எனச் சொல்லிடப்போறாரே கர்ர்ர்ர்:))

   Delete
  3. அதிரா - உங்கள் தளத்துக்கு வருபவர்களை நீங்கள் மிரட்டி வைத்திருப்பதுபோல், அந்தக் காலத்தில் உங்கள் பூனையை மிரட்டி வைத்திருந்தீர்களென்றால், புறா இன்னும் பத்திரமாக இருந்திருக்கக்கூடும். இங்கதான், கருத்து போடறீங்களோ இல்லையோ, தமன்னாவை டச் பண்ணிட்டுப்போங்கோ என்று சொல்கிறீர்களே. :-)

   Delete
  4. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்.. உங்கள் பக்குப்பக்கென வரும் கொமெண்ட்ஸ் பார்த்துச் சிரிச்சு உருள்றேன்ன்ன்... இப்படியான சந்தோசங்களால்.. நம் எல்லோர் நாட்களும் மகிழ்ச்சியாகவே போகுது.. :)

   பூஸாரை மிரட்டித்தானே வச்சிருந்தோம்ம்.. அதனால்தான் பிளான் பண்ணி நைட்டில் கொலை செய்திருக்கிறார் கர்ர்ர்ர்ர்ர்:). நம்மால் 100 வீதம் கொலையாளி யாரென்பதையும் கண்டு பிடிக்க முடியாமல் போச்சே..:))

   Delete
  5. ///இங்கதான், கருத்து போடறீங்களோ இல்லையோ, தமன்னாவை டச் பண்ணிட்டுப்போங்கோ என்று சொல்கிறீர்களே. :-)///

   ஹா ஹா ஹா அதனால தானே மிரட்டல் ஆகிடக்கூடாது என நினைச்சு பிளீஸ்ஸ்ஸ்ஸ் போட்டிடுறேன்:))... வெளிநாட்டுக்கு நான் வந்தவுடன் .. என் கணவர் எனக்குச் சொல்லித்தந்தது... அதிரா.. இங்கு யார் என்ன சொன்னாலும் எது நடந்தாலும்.. தயக்கமில்லாமல்.. சொறி, தங்கியூ, பிளீஸ் இவற்றை அடிக்கடி யூஸ் பண்ணுங்கோ.. இல்லையெனில்.. இவர்கள் வேறு நாட்டவர்கள்.. ரூட் ஆனவர்கள் என எண்ணி விடுவார்கள் என்று... அன்றிலிருந்து அதை அப்படியே ஃபலோ பண்ணுகிறேன் யான்:))..

   ஒரு மாஸ்டரிடம் நான் அதிகம் சந்தேகக் கேள்விகள் கேட்பேன்.. அதனால எனக்கு அவர் அடிக்கடி பதில் சொல்கிறாரே என சிலருக்குப் பொறாமை.. அப்போ அந்த மாஸ்டர் ஒரு தடவை சொன்ன வசனம் இப்பவும் ஒலிக்குது...

   அழுகிற பிள்ளைதான் பால் குடிக்கும்:)..

   Delete
 2. வேதனையைச் சுமந்த நினைவுகள்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வாங்கோ.. என்ன பண்ணுவது இன்பமும் துன்பமும் கலந்ததுதானே வாழ்க்கை... இப்படி அனுபவங்களால், எது வந்தாலும் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இப்போ வந்திருக்கிறது...

   மிக்க நன்றிகள்.

   Delete
 3. எங்கள் அப்பாவின் கண்டிப்பான உத்தரவு, எது வேண்டுமானாலும் வளருங்கள், ஆனால் கூட்டிலே அடைத்து எதையும் வளர்க்கப்படாது என்பது.// ஆமாம் அதிரா எனக்கும் கூட அப்படியான எண்ணம் உண்டு...பறவைகள் பறப்பதற்கே இல்லையா...அது போல பூஸார் பைரவர் கூட வீட்டில் கூண்டில் அடைத்து வைப்பதும் இஷ்டம் இல்லை. கட்டிப் போடவும் மகன் சம்மதிக்க மாட்டான்...

  மீண்டும் வரேன்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீதா, உண்மைதான், சின்ன வயதில் புரிவதில்லை, அப்பா எதுக்கும் விடுறாரில்லையே எனக் கோபம்தான் வரும், ஆனா வளர்ந்தபின் தான் புரிகிறது அது எவ்ளோ தப்பென.... இப்போ நான் வளர்ந்திட்டேனெல்லோ கீதா.. ஹாஅ ஹா ஹா:))

   Delete
 4. ச்சே... பாவம் அந்தக் கிளி... அதற்கு ஒரு வாய் தரக்கூடாதோ... துளிதானே அதன் வாய்க்குள் போகும்!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ...

   ஹா ஹா ஹா நான் பாவம் பூஸாருக்கு சாப்பிடும்போது கூட நிம்மதி இல்லையே எனக் கவலைப்படுறேன்:) நீங்க கிளிப்பிள்ளைக்குப் பங்கு குடுக்கச் சொல்றீங்க:))

   Delete
 5. புறா அனுபவங்கள் வரும்போது சோகமுடிவு கொடுத்து விட்டீர்கள்.

  ஆம், நன்றியில் நாயளவு இல்லைதான் பூனைகள்...

  ஓரளவு இடைவேளைப் படமும் அதைச் சொல்கிறது.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் அது சோக முடிவாகவே ஆகிவிட்டது...:(

   நாய்ப்பிள்ளைகள் சொன்னதைக் கேட்பார்கள்.. பயப்படுவார்கள்.. பூஸ் அப்படி இல்லை, புரிஞ்சாலும் பயப்படாது, தான் நினைச்சதையே சாதிக்கும் கர்ர்:))..

   இடைவேளைப் படம் ஹா ஹா ஹா அது 100 வீதமும் சரி என்றே எனக்கும் படுது:).

   Delete
  2. //பூஸ் அப்படி இல்லை, புரிஞ்சாலும் பயப்படாது, தான் நினைச்சதையே சாதிக்கும்// - ஸ்ரீராம் உங்களைப் பற்றி ஏதும் கேட்டதுபோல் தெரியவில்லையே. ஏன் இந்த தன் விளக்கம்?

   Delete
  3. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
 6. //தனகுவார்//

  யூகிக்க முடியாத பதம்! அப்படி என்றால் என்ன? வம்பு பண்ணுவார்?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அதேதான்... செல்லச் சண்டைகள் போடுவது என்றுகூடச் சொல்லலாம்... அண்ணன் என்னோடு எப்பவும் அப்படித்தான்.. ஆனா அண்ணனும் நானும் ஒருநாள்கூட சண்டையே பிடித்ததில்லை... அத்தோடு அண்ணன் பேசவும் மாட்டார்ர்.. இப்பகூட, நான் தான் ஏதும் வாய் காட்டினாலும் காட்டுவேன்:) அவர் அதைப் பொருட்படுத்த மாட்டார்ர்:))..

   ஆனா அக்காவோடு சின்னனில் நிறையச் சண்டை போட்டிருக்கிறேன்.. ஆனா அக்கா பாவம் அவ அமைதி விட்டுக் கொடுப்பா... நான் அவவுக்கு
   நுள்ளிப்போட்டு.. பின்பு நானே சத்தமாக அழுவேன்ன்ன்:).. அம்மா ஓடிவந்து என் அழுகை பார்த்து அக்காவுக்கு ஏசுவா:)) ஹையோ இப்படிப் பல கதைகள்... ஆனா வளர்ந்தபின் இன்றுவரை பயங்கர ஒட்டாக இருப்போம்..

   Delete


  2. நுள்ளிப்போட்டு - மறுபடியும் புதிய வார்த்தை!

   Delete
  3. ஹையோ இப்போ பார்த்து என் செக்:) கார்ட் செய்வதில் பிஸி கர்:)).. இல்லை எனில் டக்குப் பக்கென இதுக்கு விளக்கம் கொடுத்திருப்பாவே:)... உங்கள் எல்லோரும் சாட்சியாகச் சொல்கிறேன்ன்.. அவவுக்கான டிசம்பர் மாத சலரி கட்:))...

   பாருங்கோ ஸ்ரீராம்.. என்னால.. நீங்கள் எல்லோரும் டிக்‌ஷனறி இல்லாமல் டமில்:) படிக்கிறீங்க ஹா ஹா ஹா.. அது கிள்ளுவதை நாங்க நுள்ளுவது என்போம்...:)

   Delete
 7. ஊசிக்குறிப்புப் பலனை நான் அவ்வப்போது அனுபவித்திருக்கிறேன்! எல்லோருமே அனுபவித்திருப்பார்கள்.

  ReplyDelete
  Replies
  1. அது உண்மைதானே.. நன்மை செய்கிறேன் பேர்வழி என, நல்லது நினைச்சுத்தான் மின்னி முழக்குவோம்:).. ஆனா அது சிலநேரங்களில் நம்மைத் தப்பானவர்களாக்கிடும்:)) ஹா ஹா ஹா...

   Delete
 8. ஊசி இணைப்பு படிக்கும்போது நினைவுக்கு வரும் வரிகள் : பதவி வரும்போது பணிவும் வரவேண்டும், துணிவும் வரவேண்டும் தோழா....

  ReplyDelete
  Replies
  1. ஆவ்வ்வ்வ்வ்வ் ஸ்ரீராமுக்கும் சிட்டுவேஷன் சோங் எல்லாம் வருதே:)) ஹா ஹா ஹா..

   Delete
 9. தம வாக்கு மற்ற தளங்களில் கன்னுக்குத் தெரிகிறது, வாக்கும் அளிக்கமுடிகிறது. எங்கள் தளத்துக்குப் போகவே எனக்கு முடியவில்லை!

  ReplyDelete
  Replies
  1. இதுக்காகத்தான் முன்பெல்லாம் நான் இடைக்கிடை என் புளொக்கில் தேசிக்காய் கட்டி விடுவேன்:)) ஹா ஹா ஹா நீங்களும் ஏதும் திருஷ்டி சுத்திப் போடுங்கோ.. சூனியக் கிழவி உலாவுறாபோல:)) ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ.. இல்லை எனில் இன்று நான் தேம்ஸில் இதப்பது கன்போம் ஆகிடும்:))))...

   இன்னொன்று, குரோம் பாவிப்பது பல நேரங்களில் தமிழ் புளொக்ஸ் க்கு கஸ்டம் கொடுக்குது...

   மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

   Delete
  2. க்ரோம் மட்டுமில்லை, பயர்பாக்சிலும் அதே கதை.

   Delete
  3. இவை இரண்டையும் விட, ஒபெரா நன்றாக வேர்க் பண்ணுது ட்றை பண்ணிப்பாருங்கோ.. நான் என் கொம்பியூட்டரின் 4 புரெளசர்கள் வைத்திருக்கிறேன்... ஒன்று வேலை செய்யாட்டில் இன்னொன்று... ஆனா குரோம் தான் இப்போ மெயினாக வைத்திருக்கிறேன்.. அது பலதடவை சிக்கல் கொடுக்கும் அப்போ ஒபெரா தான் நன்றாக இருக்கு.

   Delete
 10. மணிப்புறாவின் முடிவு மனதை சங்கடப்படுத்தி விட்டது.
  நினைவலைகள் அருமை நானும் இப்படித்தான் பேப்பர்களை சேகரிக்கும் பழக்கம் இன்னும் விடவில்லை.

  இதனால் பெட்டிகள் நிறைந்து விடுகிறது அதைக்காணும் நமக்கு சந்தோஷமாயினும் இன்றைய பிள்ளைகள் அதை சுமையாக பார்க்கின்றது.

  நீங்கள் சொல்வதுபோல் நாம் வாழும் காலத்திலேயே அவைகளை எரித்து விடுவதே நல்லது.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ....

   பல நேரங்களில் சேகரிக்கச் சொல்லித்தான் மனம் சொல்லும்.. ஆனா நன்கு யோசித்துத்தான் சிலதை வைத்திருப்பேன், ஏனையவற்றை உடனேயே வீசி விடுவேன்... இன்னுமொன்று, நாம் இடம் மாறி விட்டாலோ இல்லை நமக்கேதும் ஒரு இரவுக்குள் நடந்திட்டாலோ.. சொல்ல முடியாதெல்லோ.. அப்போ ஆரும் அனைத்தையும் எடுத்துப் படிக்கலாமெல்லோ.. அந்த நிலையை எதுக்கு உருவாக்கோணும் என்றுதான்.. டயறி எழுதுவதையும் நிறுத்தி விட்ட்டேன்ன்.. கிட்டத்தட்ட 7,8 வயசிலிருந்தே அப்பா டயறி தந்து எப்படி ..என்ன எழுதுவது என்றெல்லாம் சொல்லித்தந்தார்... அப்போ தொடக்கம் எழுதி வந்தேன்ன்.. எல்லாம் போச்ச்ச்ச்ச்:(.

   இப்போது எல்லோரும் வீடு சுத்தமாக , இடவசதியாகவே இருப்பதை விரும்புகின்றனர்.. எனக்கு இப்படிச் சேர்ப்பதில் இருக்கும் இந்த ஆர்வம் இப்போ நம் பிள்ளைகளுக்கு இல்லை... ஒருவேளை எல்லாம் இண்டநெட் மயமாகி விட்டமையாக் கூட இருக்கலாம்.

   மிக்க நன்றிகள்.

   Delete
 11. அருமை.. அருமை..

  என்றென்றும் வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் துரை அண்ணா!
   நான் நலமே இருக்கிறேன். அந்தப் பதிவில் நீங்கள் விசாரித்ததற்கு
   இந்தப்பதிவில் பதிலிடுகிறேன். ஒருவாறு நானும் என் மடிகணினியும்
   உயிர்த்துள்ளோம்..:)
   விரைவில் தங்கள் பதிவுகளையும் படிக்க வருவேன் அண்ணா!
   நல விசாரிப்பிற்கு மிக்க நன்றி!
   எல்லோர் நலனையும் இறையருள் காக்கட்டும்!

   Delete
  2. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) புறாவைப் பூஸார் கொன்றதும் அருமையோ?:)) ஹா ஹா ஹா ஓகே மிக்க நன்றி துரை அண்ணன்.

   இளமதி.., துரை அண்ணன் இதைப் படிப்பார் என்றே நினைக்கிறேன்...

   Delete
 12. சண்செட் மட்டும் நிமிர்ந்து நின்றது. மாமரங்களெல்லாம் வெட்டப்பட்டு விட்டது. அதைச் சொல்லால் விபரிக்க முடியாது. அனுபவித்தால்தான் உணர முடியும்.//

  இல்லை அதிரா நீங்கள் சொல்லும் போதே மனக்கண் முன் விரிந்து மனதை வேதனையுறச் செய்கிறது....அதை நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது அதிரா...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் கீதா.. நம் சின்ன வயது நினைவுகள் முழுக்க அவ்வீட்டிலேயே புதைந்து இருக்கின்றது... இப்பவும் கனவில் அடிக்கடி அந்த வீடு வரும்... இதன் பின்புதான் ஊர் வீட்டில் போயிருந்து ஸ்கிப்பி வளர்த்த கதை சொன்னேன்.

   Delete
 13. நாயாரைக் குறித்தும், பூனையாரைக் குறித்தும் நீங்கள் போட்டிருக்கும் அந்தப் படம் சரியானதே....நாயார் எப்பவுமே நம்மை காட் எனதான் நினைப்பார்...அதில் சில எக்ஸெப்ஷன்ஸ் மட்டுமே உண்டு.....பூனையார் பெரும்பாலும் தம்மை உயர்வாகவே கருதுவர்...ஆனால் அதிலும் எக்ஸெப்ஷன்ஸ் உண்டுதான்...

  பூனையாரும் சரி நாயாரும் சரி இப்படி புறாக்களையோ, அணில்களையோ கடித்தால் அதைக் கொன்றுவிட்டு அப்படியெ போட்டுவிட்டுச் செல்வர். நாயார் மட்டும் அதைக் காவல் காப்பார். யாரையும் அருகில் விட மாட்டார். தானும் திங்க மாட்டார். ஆனால் காகங்கள் வருவதையும் விரும்ப மாட்டார். ஆனால், பூனையார் போட்டுவிட்டுச் சென்று விடுவார்கள்....புலியின் குணமும் அதே...தனக்கு இரை வேண்டுமென்றால் மட்டுமே தின்னும் இல்லை என்றால் கொன்றுவிட்டுப் போகும். ஆனால் சிங்கம் தனக்கு இரை வேண்டுமென்றால் மட்டுமே கொல்லும். இல்லை என்றால் வேட்டை ஆடாது. ஆனால் புலியார் தனக்கு வேண்டுமோ வேண்டாமோ வேட்டையாடும்...

  உங்கள் பதிவை ரசித்தேன் அதிரா,,,,,ஆனால் இறுதியில் மனம் கனத்தது...நாட்டின் பிரச்சனையால் உங்களுக்கெல்லாம் ஏற்பட்ட துன்பம்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. முதல் பந்தி உண்மைதான் கீதா. அதே நேரம், நாயாரை விட பூஸாருக்கு ஓவராக செல்லம் கொடுக்கிறோமெல்லோ.. இப்போ தன் இஸ்டப்படி எங்கு வேணுமெண்டாலும் படுக்க அனுமதி... நம் மீதுகூட எப்பவும் ஏறிப் படுப்பது.. உளக்கிக் கொண்டுபோவது.. இப்படி.. இதனாலகூட பூசாருக்கு லெவல் அதிகமோ?:)..

   //பூனையாரும் சரி நாயாரும் சரி இப்படி புறாக்களையோ, அணில்களையோ கடித்தால் அதைக் கொன்றுவிட்டு அப்படியெ போட்டுவிட்டுச் செல்வர். நாயார் மட்டும் அதைக் காவல் காப்பார்//

   ஓ இதை நானும் அவதானிச்சிருக்கிறேன்.. நாயாரில் இன்னொரு குணம்.. தானும் உண்ணார்ர்.. மற்றோரையும் உண்ண விடார்ர் கர்:) வைக்கோல் பட்டடை....:))

   புலிக்கதை, சிங்கக் கதை அருமை. புலிபற்றி தெரியாது, சிங்கம் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு...

   Delete
 14. ஊசிக் குறிப்பு ...ஆஹா அதை ஏன் கேக்கறீங்க அது மிகவும் உண்மையே!!!! நாம் நலல்து என்று நினைச்சு செய்யறது அப்படி ஆகிப் போகும்..நல்லது செய்தாலும் கவனமாகவே செய்யணும் இல்லை என்றால் செய்துவிட்டு அதன் பின் அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் எந்தக் கமென்ட் வந்தாலும் துடைத்து எறிந்துவிட்டுச் செல்லும் மனப்பக்குவம் இருக்கணும்....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அச்சச்சோ ஏதோ நினைவில் மேலே வரவேற்கத் தவறி விட்டேன் கீதா.. வாங்கோ வாங்கோ..

   அது உண்மைதான்.. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை...

   Delete
 15. ஊசி இணைப்பு சூப்பர்...யெஸ் யேஸ்.....

  இன்று உங்கள் பதிவு ஏனோ உங்களைக் கலாய்க்கத் தோணலை அதிரா...ஹா ஹா ஹா

  ஆராட்சி - ஆராய்ச்சி என்று வர வேண்டும். டைப்போ எரர்??

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அது போன போஸ்ட்டிலிருந்து யாருக்கும் கலாய்க்கும் எண்ணம் வருகுதில்லை:)).. சனி மாற்றம் என்பதாலகூட இருக்கும்:))...

   ஆவ்வ்வ்வ் நீங்க சொன்னதுபோலவும் சொல்லலாம்:)) நான் சொன்னது போலவும் எழுதலாமோ?:)) ஹா ஹா ஹா உங்களோடதுதான் கரெக்ட் கீதா... ரைப் எரர் இல்லை:) சில நேரத்தில சோட்டாக முடிக்க நினைக்கிறேன் போலும் ஹா ஹா ஹா... இதுக்கும் சிரிப்புத்தானா என நீங்க சொல்வது கேட்குது:))

   Delete
 16. எனக்கும் டயரி எழுதும் பழக்கம் இருந்தது. பல கடிதங்கள், வாழ்த்து அட்டைகள் எல்லாம் சேர்த்து வைத்திருந்தேன்.எல்லாம் வீடு மாறிக் கொண்டே இருந்ததில் போய்விட்டது. இப்போது இருப்பது என் வகுப்பு மாணவர்கள் கல்லூரி முடியும் இறுதிநாளில் எனக்கு எழுதிக் கொடுத்த ஆட்டோ க்ராஃப்ஸ் மட்டும்....பதிவாகப் போட எண்ணம் உள்ளது பார்க்கிறேன்...இப்போது டயரி எழுதும் பழக்கம் எல்லாம் இல்லை...ஆமாம் அதைத் தொலைக்கும் போது, தொலைக்க வேண்டிய தருணம் வரும் போதுமனது வேதனையுறும்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆவ்வ்வ்வ் என்னிடமும் எப்படியோ தப்பித்தப்பி வந்து ஒரு ஓட்டோகிராப் மட்டும் இருக்கு.. ஆனா அதில் நிறையப்பேரின் எழுத்து இல்லை.. கொஞ்சப்பேரின் கை வண்ணம் மட்டுமே இருக்க்கு.. இப்போ படிச்சுப் பார்க்கும் போது சிலர் யாரென்றே தெரியவில்லை.. ஏனெனில் அப்போதைய ஆர்வத்தில் கன்னா பின்னா என எல்லோரிடமும் கொடுத்து வாங்குவது ஒரு பழக்கம்:)..

   மிக்க நன்றிகள் கீதா.. அனைத்தையும் ரசிச்சுப் படிச்சமைக்கு..

   Delete
 17. அச்சோ...என்னப்பா பூஸார் இப்படி பண்ணிட்டார்...


  குட்டி கவிதை படம் பார்த்த மாதரி இருந்தது அதிரா...ஆன முடிவு தான் கஷ்டம் போங்க...அதுவரை கவிதையாய் இருந்துச்சு...சோ nice..  பிரேக் போட்டோ...சூப்பர்..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அனு.. வாங்கோ..

   அதுதானே பார்த்தீங்களோ பூஸார் கொலையாளி ஆகிட்டார்:)..

   மிக்க நன்றிகள் அனு..

   Delete
 18. வழக்கமாக உங்கள் பதிவுகளை படித்த பின் முகத்தில் சிறு புன்னகை தவழும் காரணம் வெள்ளாந்தியாக ஒரு சிறு பிள்ளை போல உங்கள் எழுத்து இருக்கும். ஆனால் இன்று முகத்தில் புன்னகைக்கு பதில் மனதில் ஒரு சோகம் குடி பெயர்ந்துவிட்டது

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ட்றுத் வாங்கோ...

   இல்ல அதெல்லாம் முடிஞ்சுபோச்சு ட்றுத்... அப்போ அது பெரிய விசயம் தான் இப்போ நினைக்கையில் அது கஸ்டமாகத் தெரியவில்லை.

   நீங்க என் இதன் முந்தின பகுதி படிக்கவில்லையோ??..

   https://gokisha.blogspot.com/2017/11/blog-post_96.html

   இதுக்கு நீங்கள் வரவில்லை.. அதையும் கொஞ்சம் படிச்சுப் பாருங்கோ.. இந்த வீட்டை விட்டு அங்கு போய்.. அந்த வீட்டில் நடந்த நிகழ்வு அது:)...

   மிக்க நன்றி ட்றுத்.

   Delete
 19. அருமை அக்கா
  பாவம் புறாப்பிள்ளை.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மொகமெட் வாங்கோ... உண்மைதான்.. அன்று மிகவும் கவலைப்பட்டோம்ம்.. ஏனெனில் காலையில் எழும்பி ஓடிப்போய்ப் புறாப்பிள்ளையைப் பார்ப்பது ஒரு பொழுதுபோக்காகி இருந்தது அப்போ...

   மிக்க நன்றி மொகமெட்.

   Delete
 20. 'நடந்த நிகழ்வை மிகவும் ரசித்தேன். மிகப் பொருத்தமான காணொளியை (GIF) இணைத்திருக்கிறீர்கள். உங்கள் அப்பா சொன்னதில் (கூண்டில் அடைக்கக்கூடாது) மிகுந்த அர்த்தம் இருக்கிறது.

  உங்கள் வீட்டில் 'பிள்ளை' என்பதைச் சேர்த்து பிராணிகளைக் கூப்பிடுவது என்னைக் கவர்ந்தது.

  'வீட்டைவிட்டு வெளிக்கிட்டது' பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறீர்கள். அதை மனக்கண்ணால் நினைத்துப்பார்க்கும்போதே எவ்வளவு கொடுமை அது என்று புரிகிறது. யுத்த காலத்தில் ஈழத் தமிழர்கள் மிகவும் கஷ்டப்பட்டுள்ளனர். மிகுந்த அனுதாபத்துக்குரியது. நீங்கள் எப்படி உங்களின் டைரியை மட்டும் (எல்லாப் பழமொழிகளையும் எழுதிவைத்திருப்பது) எடுத்துவந்தீர்கள்?

  தனகுவார் - இதன் அர்த்தம் என்ன?

  'நல்ல எண்ணம் கெட்ட பெயர்' - சில வேளைகளில் அல்ல, பல வேளைகளில். குழந்தைகள் கேட்பதில் எத்தனை முறை அது அவர்களுக்கு நல்லதல்ல என்று நினைத்து நாம் மறுக்கிறோம். அப்போவெல்லாம் அது நம்மைப் பற்றி நல்ல எண்ணமா கொண்டிருக்கும்?

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ...

   ///'நடந்த நிகழ்வை மிகவும் ரசித்தேன்.////

   மிக்க நன்றி..

   /// மிகப் பொருத்தமான காணொளியை (GIF) இணைத்திருக்கிறீர்கள்.//
   ஹா ஹா ஹா நன்றி எனக்கும் அது பிடிச்சிருக்கு நன்கு... கிளிப்பிள்ளைக்கு உணவு தேவையில்லை, பூஸாரை டிஸ்ரேப் பண்ணுறாவாம் ஹாஅ ஹா ஹா..

   ///உங்கள் அப்பா சொன்னதில் (கூண்டில் அடைக்கக்கூடாது) மிகுந்த அர்த்தம் இருக்கிறது.//
   உண்மைதான் அப்போ அது புரியவில்லை.. கனடாவில் அக்கா வீட்டில் லவ் பேர்ட்ஸ் வளர்த்தார்கள், மகள் ஆசைப்பட்டு அடம் பிடிச்சு அடைக்காமல் ஃபிரீயா விட்டு வளர்க்கிறேன் எனச் சொல்லி வாங்கினாவாம்:)..... வீட்டுக்குள் திறந்து விட்டு, அதுக்கு படுக்க இடம் ஒதுக்கி கொடுத்து வளர்த்தார்களாம்ம்.. அது ஒவ்வொருவராகக் கதவைத் திறக்கும்போதும்.. ஒவ்வொன்றாக வெளியே பறந்து போயிடுச்சாம்:)) ஹா ஹா ஹா.

   //

   Delete
  2. ///வீட்டைவிட்டு வெளிக்கிட்டது' பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறீர்கள்.//

   இல்லை நெல்லைத்தமிழன்.. நீங்க எல்லோரும் குழப்பமடைவீங்க என நினைச்சேன், ஆனா போஸ்ட்டிலயே தெளிவா எழுதினா.. பெருத்திடும் என்பதால கொஞ்சம் எழுதியதையும் டிலீட் பண்ணிட்டேன்.

   அந்த வெளிக்கிட்டது.. அன்று சொன்னது.. இதுக்குப் பின்பு நிகழ்ந்தது... அது ஊர் வீடு இப்பவும் அப்படியே இருக்கு. இது எங்கள் இன்னொரு வீடு, இந்த வீட்டில்தான் நாம் வளர்ந்தது... அந்நேரம் நாங்கள் ஹொஸ்டலில் இருந்தோம்.. அன்று நல்லவேளை அப்பாவும் வீட்டில் இருந்திருக்கிறார்...

   தூரத்தில் துவக்குச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்ததாம், அப்போ நிற்க வேண்டாம் ஓடுங்கோ.. ஓடுங்கோ.. ஆமி சுட்டுச் சுட்டு வருகிறார்கள் என கத்தியபடி ரோட்டால் ஆட்கள் ஓடினார்களாம் வாகனங்களில்... எங்கள் வீட்டின் வலது பக்கமிருந்து ஆமிக்காரர்கள் வந்த வண்ணம் இருந்திருக்கிறார்கள்.. நல்ல வேளையாக அப்பா வேர்க் பண்ணிய கொம்பனி இடது பக்கம் இருந்துது, நாட்டு நிலைமை மோசமாகி வருவதை.. அறிஞ்சு, ஒரு ஒபிஷேஸ் குவாட்டேர்ஸ் புக் பண்ணி விட்டிருந்திருக்கிறார் அப்பா.. ஆனா பொருட்கள் எதுவும் கொண்டு போய் வைக்க வில்லை அல்லது ரைம் கிடைக்கவில்லை...

   அப்போ அப்பாவும் அம்மாவும் உடனேயே நின்றபடி எதுவுமே எடுக்கவில்லையாம்.. வீடுகூட சரியாக பூட்ட வில்லையாம்ம் வெளிக்கிட்டு அங்கு ஓடித்தப்பி விட்டார்கள்... இல்லை எனில் சூடு விழுந்திருக்கும்.. அன்று கண்ணில் பட்டோர் யாரும் தப்பவில்லையாம்.. ரோட்டில் எல்லாம் பலர் சுட்டுச் சுட்டு விழுந்து கிடந்ததாகக் கேள்விப்பட்டோம்ம்..

   [இது எந்த இடம் என்றெல்லாம் .. சொல்ல விரும்பவில்லை நான்., சொல்லவும் மாட்டேன்]

   அதன் பின் அவ் வீட்டுக்குத் திரும்ப முடியவில்லை.. அப்படியே ஊருக்கு மூவ் ஆகிட்டோம்ம்... மாத்த உடுப்பில்லாமல் உடனே கடையில் வாங்கித்தான் மாத்தினார்களாம் அப்பா அம்மா.

   அங்கு இன்னொரு பிரச்சனை, சுட்டு விட்டு எரித்து விட்டும் போய் விடுவார்கள் அடையாளம் தெரியாமல்.. இதனால் பல குடும்பங்களுக்கு ஆள் இருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா என்று அறிவதே பெரும்பாடு.. உறுதிப்படுத்தப் படாவிட்டால், டெத் சேர்டிபிகேட் கிடைக்காது.. அது இல்லை எனில் பென்சனோ, அல்லது ஏதும் தொகைப் பணமோ எதுவும் பெறமுடியாது.

   அன்று, எங்கள் அப்பாவின் ஒரு ஒன்றுவிட்ட அண்ணாவும்.. சைக்கிளில் ஓடியபோது சுட்டு விட்டார்கள்... அவர் உடனே இறந்தாரா இல்லை உதவி கிடைக்காமல் இறந்தாரா தெரியாது[ஒரு 40-45 வயது இருக்குமென நினைக்கிறேன்]... ஒரு அப்பாவி அவர், அவர் பேசினாலே சத்தம் வராது.., மனைவியும் மகனும் ஊரில் இருந்தார்கள்...கணவரின் பதிலேதும் கிடைக்காமல் மனைவி கிட்டத்தட்ட மெண்டலாகிட்டா.. அப்பா தான் ஆட்களை விட்டு விட்டுத்தேடி.. முடிவில்.. அவர் ஒரு பவுண் பல்லுக் கட்டியிருந்தாராம்ம்.. அதை அடையாளமாக்கி , பல நாட்களின் பின் கண்டு பிடிச்சு.. உடம்பை ஊருக்கு எடுத்துச் செல்லும் அளவில் இருக்கவில்லையோ என்னமோ எனக்கு விபரம் தெரியவில்லை... பின்பு டெத் சேர்ட்டிபிகேட் செய்து அக்குடும்பத்துக்கு போக வேண்டிய தொகைப் பணம் எல்லாம் எடுக்க உதவி செய்தார்.

   இப்படிக் கதைகள் ஒன்றா இரண்டா...

   Delete
  3. ///நீங்கள் எப்படி உங்களின் டைரியை மட்டும் (எல்லாப் பழமொழிகளையும் எழுதிவைத்திருப்பது) எடுத்துவந்தீர்கள்?///

   ஹா ஹா ஹா அதை ஏன் கேட்கிறீங்க? பூனை குட்டி காவுவதுபோலத்தான்:))..
   இது பற்றிச் சொல்வதானாலும் ஒரு போஸ்ட் போடலாம்:)..
   இந்த வீட்டில் இருந்தது எல்லாம்.. என் பால் பல்லுக் காலம் ஹா ஹா ஹா:)).. பின்னர் எழுதிய கொப்பிதான் இப்பவும் வைத்திருப்பது:))... கவிதைகள் குட்டிக் கதைகள் என்பன பல பேப்பரில் வெட்டி எடுத்து சேர்த்து வைத்திருப்பேன்..

   அப்போ ஒவோரு பிரயாணத்தின்போதும் கொஞ்சக் கொஞ்சத் தூரத்துக்கு ஒரு தடவை ஆமி செக்கிங் படுபயங்கரமாக நடக்கும்... அதில்.. வயசுப் பிள்ளைகள் எனில் துருவித்துருவிக் கேள்வி கேட்பினம்... அப்போ அவசியமில்லாமல் யாரும் பிரயாணம் செய்வதில்லை.

   நான் பயணம்போகும்போது அம்மா சொல்லுவா, உதை எல்லாம் எறி.. நோட்டீஸ் என நினைச்சுக் கேள்வி கேட்பாங்கள் என.. தமிழ் புரியாதெல்லோ அவர்களுக்கு.

   ஆனா அப்பாவுக்கு தெரியும் நான் எவ்வளவு ஆசையா சேர்க்கிறேன் என்பது, அதனால அப்பா தான் சொல்லுவார்ர்.. இல்லை கொண்டுவா, நான் பேசிப் பார்க்கிறேன், ஏதும் மறுத்தால் அங்கே எறிஞ்சிடலாம் என.. ஆனா ஒவ்வொரு செக்கிங் வரும்போதும் உயிர் போகப்போவதுபோல இருக்கும்.. உச்சி முதல் உள்ளங்கால் வரை நம்ப மாட்டீங்க எனக்கு தூக்கி தூக்கி அடிச்சு நடுங்கும்...

   ஏனெனில் ஆமியுடன் ஆரும் எதுவும் பேசி வாதாடவே முடியாது... உன்னை செக் பண்ணோனும் காம்ப் உள்ளே வா என்றால் அவ்ளோதான்.. கதை முடிஞ்சுது என நினைக்கோணும்... அனைத்தும் கடவுள் செயல் தான்.. நான் கையிலே கந்த சஷ்டி கவசப் புத்தகம் வைத்திருப்பேன்.. மனதிலே செக்கிங் முடியும்வரை சொல்லுவேன்.. அப்போ எனக்கது தண்ணிபோல பாடம் ஹா ஹா ஹா:)..

   அதன் பயனோ என்னமோ ... பெரிதாக எங்கும் கஸ்டப்படவில்லை நான். இதனையும் மனதில் வைத்தே முன்பு சொன்னேன்ன்.. அதிகம் என்னை அறியாமல் பயந்தேன் எனில்.. அது பிரச்சனை ஏதும் இல்லாமல் சுமுகமாக முடியும்.

   அப்படித்தான் , அப்பா குடுத்த தைரியத்தால்தான் அதனைப் பாதுகாத்தேன்.

   இவற்றை இங்கு எழுதுவதில் ஏதும் தப்பில்லைத்தானே?..

   தனகுதல்.. அர்த்தம் கண்டு பிடிச்சிட்டீங்க:).

   Delete
  4. //அப்போவெல்லாம் அது நம்மைப் பற்றி நல்ல எண்ணமா கொண்டிருக்கும்?//

   அதுவும் உண்மைதான், ஆனால் சிறியவர்கள் எனில் பின்னாளிலாவது உணர்வார்கள்... ஆனா பெரியவர்களுக்குள் மிஸ் அண்டஸ்ராண்டிங் என வரும்போதுதான், நமக்கும் அது கஸ்டமாக இருக்கும்.. நன்மைக்கு இப்போ காலமில்லையே என எண்ணத் தோன்றும்.

   மிக்க நன்றி நெல்லைத்தமிழன்... உங்களுக்கு இருக்கும் ஆர்வம் பார்த்துத்தான் நான் இவ்ளோ விளக்கம் குடுக்கிறேன்:)..

   Delete
  5. ///உங்கள் வீட்டில் 'பிள்ளை' என்பதைச் சேர்த்து பிராணிகளைக் கூப்பிடுவது என்னைக் கவர்ந்தது//

   ஹா ஹா ஹா அது பிராணிகள் மட்டுமில்லை.. செல்லமாக யாரைப் பற்றிப் பேசினாலும் பிள்ளை சேர்த்துக் கொள்வோம்ம்... இப்போ..
   அதிராப்பிள்ளை என்ன சொன்னா தெரியுமோ?:))...,
   அஞ்சுப்பிள்ளைக்கு இப்போ என் பக்கம் வர நேரமே கிடைக்குதில்லை... ஹா ஹா ஹா இப்படி அதிகம் பேசுவோம்ம்.:))

   Delete
  6. உங்களைப்போல்தான் எத்தனை எத்தனை ஆயிரம் குடும்பங்கள் அழிந்தனவோ. செக்கிங் என்றெல்லாம் சொல்லும்போதே அது எவ்வளவு மனக்கஷ்டத்தை உண்டாக்கும் என்று புரிந்துகொள்ளமுடிகிறது. எப்போதும், சிறுபான்மையினர், அந்தக் கஷ்டங்களைக் கடக்காமல் வரமுடியாது.

   சௌதி பிரயாணங்களின்போது, அங்க உள்ள அதாரிட்டிகள் செக் பண்ணும்போது கொஞ்சம் மனதுல வித்தியாசமாத்தான் இருக்கும் (பயம் போல). தேவையில்லாமல் பேசவும் முடியாது. முன்னெல்லாம் இமிக்ரேஷன் முன்பு, பெட்டியைத் திறந்து, அதில் கவர் இருந்தாலும் அதையும் கிழித்துப் பார்ப்பார்கள்.

   உங்களுக்கு ஒன்று தெரியுமா? சிறிய வயதில் கஷ்டப்பட்டவர்கள், வளர்ந்தபிறகு சுகம் அனுபவிப்பார்கள். அதேபோல் சிறிய வயதில் மிகவும் சுகமாக இருந்தவர்களுக்கு வளர்ந்த பிராயம் அவ்வளவு சுகமானதாக இராது.

   நாங்கள், அணிப்பிள்ளை, தென்னம்பிள்ளை, கிளிப்பிள்ளை, கீரிப்பிள்ளை என்று சொல்லுவோம். நீங்கள் எழுதின, அதிராப்பிள்ளை' என்பதைப் படித்தவுடன் எனக்கு ஞாபகம் வந்தது, 'அதிரா இங்க வாங்கோடா என்று உங்கள் கணவரின் அம்மா கூப்பிட்டதைப் படித்தது'

   Delete
  7. //செக்கிங் என்றெல்லாம் சொல்லும்போதே அது எவ்வளவு மனக்கஷ்டத்தை உண்டாக்கும் என்று புரிந்துகொள்ளமுடிகிறது.//

   வெளிநாட்டுக்கு வந்தபின்பும் பொலிஸ் ..ஆமியைக் கண்டால் ஒருதடவை நெஞ்சு பகிர்ர் என அடிச்சே நிக்கும்:)..

   இன்னும் இருக்கு அப்பப்ப அவிழ்த்து விடுவேன்:))

   Delete
 21. எனது நீண்ட கருத்துரை எங்கே ?

  ReplyDelete
  Replies
  1. கில்லர்ஜி மேலே உங்கள் கொமெண்ட் வந்திருக்கிறதே.. அதைத்தானே தேடினீங்க?..

   Delete
 22. இப்போதான் அர்த்தம் கண்டுபிடித்தேன். தனகுவார் - வம்புக்கு இழுப்பார்.

  ReplyDelete
 23. மீண்டும் மலரும் நினைவுப் பதிவா... அருமை!

  எங்கள் நாட்டில், ஊரில், வீட்டில் நடந்த எத்தனை எத்தனையோ நிகழ்வுகள்
  எல்லாம் எங்கள் மனத்தைவிட்டு ஒருபோதும் அகலாது அதிரா!

  அதிலும் போர்க்காலச் சூழலில் சிக்கித்தவித்த நிலை.... இன்று நினைத்தாலும்
  எனக்கு உள்ளமும் நடுநடுங்குகிறது. யூலைக் கலவரம் ஆரம்பித்த இரவு நேரம்.. அன்று திருகோணமலையில் நானும் என் கணவரும் 18 மாதங்களேயான எம் மகனைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு ஒருபொருளும் கையில் எடுக்காமல் இரவிரவாக வீட்டைவிட்டு அடுத்த தெருவிற்கும் அப்பாலிருந்த சிறிய பற்றைக்காட்டுக்குள் பதுங்கி இருந்ததும், பசியால் அழுத மகனுடன் பட்ட துயரமும், வானவெளியெங்கும் நெருப்புச் சுவாலையும் புகைமூட்டமும் நெடியும் மக்களின் அலறலும்.... காட்சிகளாகத் தொடர்ந்து வருகின்றன எனக்கு...:`(
  அனுபவித்த கொடுமைகளை நிறைய இப்படிச் சொல்லிக்கொண்டு போகலாம்.
  வேண்டாம் நிறுத்திக் கொள்கிறேன்!..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ இளமதி வாங்கோ...

   உண்மைதான் ஒவ்வொரு இலங்கையர் வாழ்விலும் எவ்ளோ துன்பங்கள்.. ஆனா இந்தத் துன்பங்கள் மத்தியில் நாங்க பிள்ளைகள் நன்கு என் ஜோய் பண்ணியும் இருக்கிறோம் பல தடவைகள். உங்கள் வீடுகள் எரிந்த கதை சொன்னதும் எனக்கும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

   எங்கள் வீட்டோடு பக்கத்து வீடுகளிலும் 2,3 குடும்பங்கள் எப்பவும் சேர்ந்தே ஓடி ஒளிப்பது வழக்கம்:).. பெரியவர்களுக்குக் கவலை, பிள்ளைகள் எங்களுக்கு ஒன்றாகக் கூடி இருக்கும்போது ஹப்பிதானே.

   ஒருநாள் சாமம் 12,1 மணி இருக்கும் பக்கத்து வீட்டுக் காரகள் கூப்பிட்டார்கள்.. தூரத்தில் வீடுகள் எரியுது, என்ன பிரச்சனையோ தெரியவில்லை, வாங்கோ தூரமா போயிடலாம் என.. வீடு ரோட்டோரம் இருந்தமையாலதான் அதிகம் தொல்லை...

   அப்போ கிட்டத்தட்ட 15, 20 பேர் அயலவர்கள் ஒன்றாக சேர்ந்து வீட்டை விட்டு, உள் பக்கமாக நடந்து போய் ஒரு வெளியில் இருந்தோம்... நல்ல நிலவு வெளிச்சம்...

   அப்போ பக்கத்து வீட்டு குடும்பத்தில் 3 அண்ணாக்கள்.. நல்ல சகோதரர்கள்போல அப்பவும்.. இப்பவும் கனடாவில் நம்மோடு ஒட்டாகப் பழகுவார்கள். அந்த மூத்த அண்ணாவுக்கு எங்கள் அண்ணனின் வயசு.. அவர் பயங்கரக் கொமெடியன்...

   அப்போ இரவிரவாக, அன்று... எங்கள் சேவண்ட் போய் ஐ அவர் கூப்பிட்டுக் கூப்பிட்டுச் சொல்வார்ர்.. “அப்பு[செல்லமாக].. எழும்பிப் பாரடி.. எங்கட வீடும் எரியுதோ என”... ஹா ஹா ஹா இப்படி ... ... எல்லோரும் சிரித்துக் கொண்டிருப்போம்ம்.. துன்பத்திலும் இன்பம்..

   விடிய ஒரு 4,5 மணிவரை இருந்து பார்த்தோம் பின்பு எந்த அசம்பாவிதமும் இல்லை, வீட்டுக்கு வந்திட்டோம்.

   Delete
  2. இன்னொரு கதை சொன்னால் எல்லோரும் சிரிப்பீங்க... ஒருநாள் இப்படித்தான்.. வீட்டை விட்டு எழும்பிடுங்கோ... பிரச்சனை வருகிறது.. இப்பவே ஓடுங்கோ எனச் சொல்லிச் சொல்லி ரோட்டில் ஒரே சனங்கள் வலது பக்கமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.

   அப்போ நம் அயலவர்கள் எல்லாம் அவசர மீட்டிங் வச்சு:)).. ஒரு 4 மைல் தூரத்தில் அவர்களின் ஒரு உறவினரின் மில்லுடன் கூடிய பெரீய வீடிருக்கு அங்கு போனால் தங்கலாம்.. எல்லோரும் அங்கு வந்து சேருங்கோ எனச் சொல்லியாச்சு..

   அவசர அவசரமா அம்மா கொஞ்சம் உடுப்புக்கள், சாமான்கள் பக் பண்ணிக்கொண்டே.. அப்பா அம்மா சொன்னார்கள் ரோட்டுக்குப் போய் பக்கத்து வீட்டு மாமா மாமியுடன் .. முதலில் மெதுவா சைக்கிளில் நீங்கள் போங்கோ.. இதோ பின்னால வருகிறோம் என என்னையும் அக்காவையும்...

   யாரும் ரோட்டில் நிற்கவே இல்லை.. கை கால் பதறுது... ஒரு சைக்கிளில் நானும் அக்காவும் டபிள் ஏற வந்தோம்[அக்கா ஓடுவா].. அப்போ அந்த ஏரியா அண்ணா ஒருவர் ஹா ஹா ஹா.. ஏறுங்கோ அதிரா ஏறுங்கோ என்றார்.. நான் அவர் கூப்பிடுகிறாரே என அவரின் சைக்கிளில் ஏறிட்டேன்...[பதட்டத்தில்தான்] ஹா ஹா ஹா அக்கா சேர்ந்து தனியாக சைக்கிள் ஓடி வந்தா...

   ஒரு 5 நிமிட இடைவெளியில் அப்பா அம்மாவும் வந்திட்டினம்.. அப்போ அப்பா கண்டிட்டார்.. அப்பாவில் ஒரு குணம் ஆரையும் பேச மாட்டார் எதையும் தப்பா எடுக்க மாட்டார்ர்...

   உடனே அப்பா .. ஓடிவந்து... என்னை இறங்கு இறங்கு இதில் கொஞ்ச நேரம் நின்றிட்டுப் போகலாம் எனச் சொல்லிச் சமாளிச்சு.. அந்த அண்ணாவைப் பார்த்து.. தங்கியூ தம்பி தங்கியூ.. இனி அவ எம்மோடு வரட்டும் எனச் சொல்லி அவரை அனுப்பிப்போட்டு.. என்னை அக்காவோடு அழைச்சு வந்தார்ர்.. ஹா ஹா ஹா ஹையோ ஹையோ.. அப்போ எனக்கொரு 9,10 வயசிருக்கும்..:)

   Delete
  3. அதிரா , நான் நீங்கள் அண்மையில் எழுதிய எல்லாப் பதிவுகளையும் படித்திருக்கிறேன். காரணம் அத்தனை நிகழ்ச்சிகளையும் மண்வாசனை சற்றும் குறையாமல் நீங்கள் எழுதும் பாணியும் உங்கள் ஞாபக சக்தியும் என்னை வியக்க வைக்கும். எனக்கு இத்தனை ஞாபக சக்தி இல்லை. இப்படி யாராவது சொன்னால் பலதும் ஞாபகத்துக்கு வந்து போகும்.
   இளமதியின் இந்த பின்னுட்டத்தை படித்ததும் என்னை அறியாமலே தொண்டை கட்டி கண்ணீர் வந்து விட்டது. இதே ஜூலைக் கலவரத்தில் ஒரு இரவு, நீங்கள் சொல்லும் இதே காட்சி என் மனதிலும் பதிந்துள்ளது.
   நெருங்கிய உறவினர் ஒருவரும் உயிரோடு கொளுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
   அப்போது நான் சின்னங் சிறுமி ஆதலால் பலதை நினைவு படுத்த முடியவில்லை. அன்று இரவு எங்கள் அயலில் வசித்த ஒரு இள வயது சிங்களவரும் அவர் மனைவியும் எங்கள் குடும்பத்திற்கு அடைக்கலம் கொடுத்து செய்த உதவியை எதனாலும் ஈடு செய்ய முடியாது, ஏனென்றால் இது மற்றவர்களுக்கு தெரிந்தால் அவர்கள் குடும்பத்தையும் உயிரோடு கொளுத்தி விடுவார்கள் காடையர்கள் என்பது உங்களுக்கு தெரியும் தானே..
   நாங்கள் பின்பு எங்கள் சொந்த ஊருக்கு திரும்பி விட்டோம். அவர்களை அதன் பிறகு இன்று வரை சந்திக்கவே இல்லை, இது ஒரு குற்ற உணர்ச்சியாக என் பெற்றோர் மனதில் இருந்தது. பல வருடங்களுக்கு முன் அப்பா காலமாகி விட்டதால் இப்போது அம்மாவுக்கு மட்டுமே அவர்களை பற்றிய விபரம் தெரியும் என்பதால் அம்மாவின் காலத்திற்குள் அவர்களை ஒரு முறை சந்தித்து நன்றி சொல்ல வேண்டும், அதுவும் உடனடியாக. கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேல் என்பதால் உயிருடன் இருக்கிறார்களா அல்லது வேறு ஏதும் ஊருக்கு இடம் பெயர்ந்து விட்டார்களா தெரியவில்லை.

   மிக்க நன்றி அதிரா மற்றும் இளமதி. உங்கள் ஞாபக மீட்டல் எங்கள் வாழ்க்கையின் மிக முக்கிய மனிதர்களையும் அவர்களுக்கு நாங்கள் செலுத்த வேண்டிய நன்றிக்கடனையும் நினைவூட்டி விட்டது.

   Delete
  4. அவ்வ்வ்வ் உங்கள் கொமெண்ட் இங்கே இருக்கோ.. நான் தேடு தேடு எனத் தேடிட்டு கீழே கொப்பி பேஸ்ட் பண்ணிப் பதிலும் போட்டு விட்டேன்:)

   Delete
 24. புறாவின் வரவும் பிரிவும் மனதைப் பிசைந்துவிட்டது...:(

  தருணம் பார்த்திருந்திருக்கிறார் பூனையார். அப்படியாயின் கோழியைப் பிடிக்க ஏன் முயலவில்லை.? கொத்திவிடுவினம் என்று பயமாக்கும்..:)

  நாயாருக்கும் பூனையாருக்கும் காத்திருந்து கைப்பற்றும் பழக்கத்தில் ஒற்றுமை உண்டு!

  ஆரம்பப் பாடல் முதல் கிளியாரும் பூஸாரும் சாப்பாட்டுச் சண்டைக் காணொளி,
  ஊசிக்குறிப்பு மற்றும் ஊசி இணைப்பு அனைத்தும் சிறப்பு!
  கனமான பதிவு அதிரா!.. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. பூசார் கோழிக்குஞ்சுகளைத்தான் பிடிக்கப் பார்ப்பினம், கோழிகளைப் பிடிக்க முடியாதே.. பெரிசெல்லோ.. கொத்தும் விழும்.. நாய்ப்பிள்ளையே கோழிச்சாப்பாட்டில் வாய் வச்சுக் கொத்து வாங்குவார் ஹா ஹா ஹா.

   மிக்க நன்றி இளமதி.. சந்தோசம்.

   Delete
 25. கம்ப பாரதி தூங்க போகுமுன்னே தான் போஸ்ட் பார்த்தேன் அதான் ப்ரெசென்ட் மட்டும் போட்டுட்டு போனேன் ..
  பாட்டு யூ டியூபில் தான தெரியுது ..சொர்ண லதா என்னவொரு குரல் ..ரொம்ப பிடிச்ச வாய்ஸ் ..பாவம் சீக்கிரம் உறங்கிவிட்டது அந்த தேன் குரல்

  ReplyDelete
  Replies
  1. ஓ அவ இப்போ இல்லையா?.. நான் எப்பவுமே ரசிப்பது பாடல் வரிகளைத்தான், ஆனா இப்பாட்டில் எனக்கு அதிகம் பிடிச்சது அந்த மியூசிக் தான்... இதுவும் நான் பலதடவைகள் திரும்பத் திரும்பக் கேட்ட பாடல்களில் ஒன்று.. முரளியும் இப்போ இல்லைத்தானே..:(..

   ஓ நானும் அவதானிச்சேன், இப்போ திரும்ப வேறு லிங் இணைத்து விட்டேன், இப்போ இங்கயே பாட்டுக் கேட்கலாம்.

   Delete
 26. இப்போதான் முழுதுமே வச்சேன் மியாவ் .எங்க வீட்டில் 60 புறாக்கள் ஒரு கிளி நிறைய கோழி முயல் பூனை பைரவ செல்லங்கள் அணில்கள் இருந்தாங்க எல்லாரும் ஒண்ணா சாப்பிட்டு ஒன்னாவே படுப்பாங்க உங்க வீட்டு பூஸ் ஜெசி மாதிரின்னு நினைக்கிறேன்
  கிறிஸ்துமஸ் நேரம் மேஞ்சர் செட் (குடில் ) அமைச்சர் அதில் காலையில் பூனையோ இலை முட்டை இடும் கோழியோ உக்கார்ந்திருக்கும் :)
  பூனையை எங்கள் வீட்டு கிளி மிரட்டி வச்சிருந்ததே ..

  ReplyDelete
  Replies
  1. அதிரா - ஒரே தவறுகள் ஏஞ்சலின் எழுதியிருக்கறதுல. கேட்டா, தூக்கக் கலக்கம் என்று சொல்லுவாங்க.

   கிடைச்ச வாய்ப்பை விடாதீங்க. கலாய்ச்சுத் தள்ளிருங்க. (வச்சேன் - வாசிச்சேன், ஒன்னாவே-ஒண்ணாவே, அமைச்சர் - அமைச்சு, இலை-இல்லை)

   Delete
  2. அதிரா-எனக்கென்னவோ நீங்க, அவங்க கொடுத்த பூ மகுடத்துல மயங்கி, போனாப்போகுதுன்னு விட்டுடுவீங்கன்னு தோணுது. (புகழ்ச்சிக்கு மயங்காதார் யார்?)

   Delete
  3. @நெல்லைத்தமிழன் இன்னிக்கு மட்டும் எச்சூஸ்மீ :) 20 கார்ட்ஸ் செஞ்சேன் சர்ச் பிள்ளைங்களுக்கு அதனால் கண்ணு டயர்ட் :)
   ஹாஹ்ஹா :) அந்த பூஸ் கம்பபாரதி அளவுக்கே வந்துடுச்சி அதனால் என் அளவு பூஸ் படத்தை இப்போ இணைச்சிருக்கேன்

   Delete
  4. ///எங்க வீட்டில் 60 புறாக்கள் ஒரு கிளி நிறைய கோழி முயல் பூனை பைரவ செல்லங்கள் அணில்கள் இருந்தாங்க எல்லாரும் ஒண்ணா சாப்பிட்டு ஒன்னாவே படுப்பாங்க///

   ஹையோ என்ன இது ஒரு குட்டி zoo போல இருக்கே:).. ஹா ஹா ஹா 60 புறாக்களோ.. நினைச்சுப் பார்க்க முடியவில்லை.

   //பூனையை எங்கள் வீட்டு கிளி மிரட்டி வச்சிருந்ததே ..//

   ஹா ஹா ஹா அந்தக் கிளி புத்திசாலி:).. எங்கட புறா ஒரு அப்பாவி.. அது தன்னை ஒரு கோழியாக நினைச்சு வாந்துது பாவம்...

   Delete
  5. நெல்லைத் தமிழன் எனக்கு இப்படிச் சான்ஸ் இனிமேல் கிடைக்குமோ??:) அதனால கிடைச்ச சான்ஸ்சை மிஸ் பண்ணுவேனோ?:).... ஹா ஹா ஹா இன்று முடியல்ல நாளைதான் வெடி:)...
   பாருங்கோ பயத்தில பேரைப் பக்கெண்டு மாத்திட்டா ஹா ஹா ஹா:)..

   Delete
  6. ஹலோவ் மேடம் :) நான் இனிமே டெய்லி ஒரு பேரை போடப்போறேன் :) இப்ப இன்ன பண்ணுவீங்க :)

   Delete
  7. ///நெல்லைத் தமிழன்Tuesday, December 19, 2017 9:58:00 am
   அதிரா-எனக்கென்னவோ நீங்க, அவங்க கொடுத்த பூ மகுடத்துல மயங்கி, போனாப்போகுதுன்னு விட்டுடுவீங்கன்னு தோணுது. (புகழ்ச்சிக்கு மயங்காதார் யார்?)///
   ஹா ஹா ஹா நான் மயங்க மாட்டேன்ன்ன்ன் “இதுவும் கடந்து போகும் “ என 108 தரம் எழுதிட்டேன்ன்:)).. நெல்லைத்தமிழன் விட மாட்டேன்ன்ன்:) பாருங்கோ திரும்பத் திரும்ப என்னைக் கொப்பி பண்ணுவதிலேயே கண்ணாக இருக்கிறா:) நேக்கு நீதீஈஈஈஈஈஇ வேணும்ம்ம்ம்ம்ம்:))

   Delete
 27. எங்க வீட்டு புறாக்கள் வேற ஏரியாலருந்தும் புறாக்களை கூட்டிட்டு வருவாங்க :) இரவில் கூண்டில் அடைக்கும்போது பார்த்தா ரெண்டு மூணு எக்ஸ்டராவா நிற்கும் :)
  நிறைய நினைவுகளை கிளறி விட்டுட்டீங்க .நானா 2012 கு அப்புறம் ஊருக்கு போகலை ..இன்னும் அப்பா அம்மா செல்லங்கள் எல்லா நினைவும் அப்படியே மனதில் பதிந்து விட்டது .pets வளர்ப்பது சந்தோஷத்தையும் தரும் அதே போல பிரிவும் தாங்கவே முடியாதது ..

  ReplyDelete
  Replies
  1. ///எங்க வீட்டு புறாக்கள் வேற ஏரியாலருந்தும் புறாக்களை கூட்டிட்டு வருவாங்க :) ///
   ஹா ஹா ஹா இது நல்லா இருக்கே... கோழிகளும் இப்படிச் செய்தால் இன்னும் நல்லா இருக்கும்..

   உண்மைதான் அஞ்சு.. நம்மோடு கூட இருக்கும்போது எதுவும் ஹப்பிதான்... ஆனா என்றோ ஒருநாள் பிரிவு வரும் எனத் தெரிஞ்சுதானே வளர்க்கிறோம்.. அந்தத்தைரியத்தையும் வளர்த்தே வரோணும்:)..

   Delete
 28. மணிப்புறா வீட்டுக்குள்ளே இருந்திருந்தா பூஸார் டச் செஞ்சிருக்க மாட்டார் ..உங்க மேலே இருக்கும் பயத்தில் ..சரி என்ன பண்றது அது விலங்குகளின் இயல்பு .ஒருவேளை பொறாமையாலும் செய்திருக்கும் பூனை ..எங்கள் வீட்டில் ஒருவர் இருந்தார் அத்தை குழந்தை அப்போ ஒன்றரை வயது தூளியில் படுத்திருந்த குழந்தையின் காலை நறுக்குன்னு கடிச்சிட்டு ஓடியது ..அது தனது இடத்தை இன்னொருவர் எடுக்கும்போது மனுஷ குணம் பூனைக்கும் எட்டிபார்த்திருக்கும் :)

  ReplyDelete
  Replies
  1. அது அஞ்சு, புறாப்பிள்ளை தன்னை ஒரு கோழியாகவே நினைக்கத் தொடங்கிட்டுது பாவம்...

   ///எங்கள் வீட்டில் ஒருவர் இருந்தார் அத்தை குழந்தை அப்போ ஒன்றரை வயது தூளியில் படுத்திருந்த குழந்தையின் காலை நறுக்குன்னு கடிச்சிட்டு ஓடியது ///

   புரிஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்ச்:) கடிச்சிட்டு ஓடியது ஆரெனப் புரிஞ்சுபோச்ச்ச்ச்ச்:)) ஹா ஹா ஹா அப்பவே இப்பூடியாஅ?:)

   Delete
 29. முன்பே ஒரு பின்னூட்டத்தில் நீங்கள் ஊரை விட்டு விலக நேர்ந்த சம்பவங்களை எழுதக் கேட்டிருந்த நினைவு மறு படியும் ந்னைவூட்டுகிறேன்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஜி எம் பி ஐயா...

   இதுவரை எழுதியதைப் பற்றி ஒன்றும் பேசாமல்.. இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறீங்களே... ஹா ஹா ஹா மிக்க நன்றி.

   Delete
 30. /நமது நல்ல எண்ணம், சிலவேளைகளில், கெட்ட பெயர் எடுக்கக் காரணமாகி விடுகின்றது.. //
  அதெல்லாம் நாம் வாங்கிட்டு வந்த வரம் மேடம் :)
  அதுக்காக நாம் நமது இயல்பை விட முடியுமா ? நான் நல்லதை செஞ்சுட்டு திரும்பி பார்ப்பதில்லை :)

  ReplyDelete
  Replies
  1. ///அதெல்லாம் நாம் வாங்கிட்டு வந்த வரம் மேடம் :)///

   ஹா ஹா ஹா நீங்க சொல்வது சரிதான் மிஸ்டர்:)..

   ///அதுக்காக நாம் நமது இயல்பை விட முடியுமா ? நான் நல்லதை செஞ்சுட்டு திரும்பி பார்ப்பதில்லை :)//

   அப்போ கெட்டதைச் செய்தா திரும்பிப் பார்க்கோணுமோ?:) ஹா ஹா ஹா சரி சரி ஒரு ஃபுலோல வந்திட்டுது.. ஜமாதானமாகிப் போயிடலாம்:).. இதுக்காக கோபிச்சுக்கொண்டு சன்ரா விடம் என் பிரெசெண்ட்டைக் குடுக்க மறக்காதீங்கோ பீஸ்ஸ்ஸ்:)).

   Delete
 31. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. [im]https://t3.ftcdn.net/jpg/00/90/11/04/500_F_90110434_ncnJCEq6TwLKvSNMVwKy0kkbJet9V4Z9.jpg[/im]

   Delete
  2. இது மகுடம் வாங்கிய கம்ப பாரதிக்கு :)

   Delete
  3. நன்றி நன்றி நன்றி அஞ்சு... அனைத்துக்கும் மிக்க மிக்க நன்றிகள்.. கரெக்ட்டா மகுடப்படம் இணைச்சிட்டேன்ன் நாளைக்கு வழக்கு எண்டு ஏதும் வந்தால்.. சாட்சி வேணுமெல்லோ:).. ஹா ஹா ஹா.

   Delete
 32. எனக்கு டைரி எழுதும் பழக்கமில்லை .ஆனால் பொருட்களை சேமிக்கும் பழக்கம் இன்னும் விட முடியலை ..பெட்டி நிறைய வாழ்த்து அட்டைகள் ..ஒரு நாள் மனதை கல்லாக்கிட்டு வீசத்தான் வேண்டும் .
  என் கணவர் எங்கள் எங்கேஜ்மென்டின் பொது சாப்பிட்டு கைத்துடைத்தார் ஒரு டவல் அதை கூட இவ்ளோ வருஷமா பத்திரமா வச்சிருக்கேன் :) சரி சரி நோ வயலன்ஸ் ப்ளீஸ் :)
  கடிதங்களும் நிறைய இருக்கு .நினைவுகளை அப்புறம் சொல்றேன் :)

  ReplyDelete
  Replies
  1. //பெட்டி நிறைய வாழ்த்து அட்டைகள் ..ஒரு நாள் மனதை கல்லாக்கிட்டு வீசத்தான் வேண்டும்//

   அது உண்மைதான் அஞ்சு... இப்போ எங்கள் பிள்ளைகளைக் கூப்பிட்டுக் காட்டுவேன் சில பொருட்களை இது உங்களுடையது பாருங்கோ என... ஆஅ.. ம்ம் இத்தோடு போய் விடுவார்கள் கர்:) ரசிப்பது என்னமோ பெற்றோர்தான்.

   பிள்ளைகள் இருவரும் பால் குடித்த சூப்பிப் போத்தல் இப்பவும் வைச்சிருக்கிறேன்.

   சில முக்கியமானதை மட்டும் வைத்துக் கொண்டு மிகுதியை வீசிட வேண்டியதுதான்.

   ///என் கணவர் எங்கள் எங்கேஜ்மென்டின் பொது சாப்பிட்டு கைத்துடைத்தார் ஒரு டவல் அதை கூட இவ்ளோ வருஷமா பத்திரமா வச்சிருக்கேன் :)///

   எனக்கும் ஒரு பூஸ் குட்டி வாங்கித்தந்தார்.. அது இப்பவும் இருக்கு:).. எங்களுக்கும் எவிடன்ஸ் வேணுமெல்லோ ஹா ஹா ஹா:)..

   Delete
  2. //அதை கூட இவ்ளோ வருஷமா பத்திரமா வச்சிருக்கேன்// - அப்பா வீட்டிலிருந்து ஒண்ணுவிடாமல் எல்லாத்தையும் லவட்டிக்கிட்டு வந்துட்டேன் என்று ஏஞ்சலின் சொல்றாங்க. நீங்க அதைப் பெருமையா நினைக்கறீங்களே.

   Delete
  3. @ நெல்லைத் தமிழன்... ha haa haa

   [im]https://thumbs.gfycat.com/WellgroomedFoolhardyCrocodileskink-max-1mb.gif [/im]

   Delete
  4. Garrrrrrrrrrrr :)
   நெல்லைத்தமிழன் :)எனக்கு டிக்கட் புக் பண்ணினதும் முதலில் பெட்டியில் எடுத்து வைச்சதே வீட்டில் எனது சாமான்கள் தான் ..நினைவுக்கு வேணுமே .இவர் பெண் பார்த்து எங்கேஜிமென்ட் முடிந்ததும் நிறைய கிஃப்ட்ஸ் தந்தார் அதைஎல்லாமா கூட அள்ளிப்போட்டு வந்திட்டேன் :) பெண்கள் சேமிப்பதில் வல்லவர்கள் தெரியுமோ

   Delete
 33. படித்துக் கொண்டு வரும்போதே எனக்குள் தயக்கம் இருந்தது - இந்த பூனையார் புறாவை ஏதும் செய்துவிடக்கூடாதே என.... அப்படியே நடந்துவிட்டது. வளர்க்கும் பறவைகள்/விலங்கினங்கள் இப்படி இறக்கும்போது ரொம்பவே வருத்தம் மனதில் வந்திடும்.

  டைரி எழுதிக் கொண்டிருந்தேன் - தில்லி வந்த புதிதில்! பிறகு படிப்படியாக நின்று விட்டது! :) கல்யாணத்துக்குப் பிறகு எழுத விருப்பமும் இல்லை! பழைய டைரிகள் அனைத்தும் Destroyed!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வெங்கட் வாங்கோ...

   ஹா ஹா ஹா உண்மைதான் பூஸார் கண்ணிலிருந்து எதுவும் தப்ப முடியாது.

   //கல்யாணத்துக்குப் பிறகு எழுத விருப்பமும் இல்லை!//

   ஹா ஹா ஹா ஏன்?.. சரி விடுங்கோ..

   மிக்க நன்றிகள்.

   Delete
 34. புறா மாடப்புறாவோ? நான் மணிப்புறா என்று நினைத்துவந்தேன்))சினேஹாவிடு தூது விரைவில் எழுதலாம் என்று)))

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா வாங்கோ ஸ்னேகாவின் வலது கண்:).. ஸ்னேகாவை இப்போ கிட்டத்தட்ட எல்லோருமே மறந்து விட்டார்கள்.. நீங்க மட்டும்தான் இத்தனை விசுவாசமா இன்னும் சுமக்கிறீங்க:)..

   Delete
 35. ஒரே கூட்டில் இருந்தால் இப்படித்தான் போலும் புறாவை வேட்டையாடிவிட்டது பூணை!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா நேசனின் எழுத்துக்கள் எப்பவுமே என்னைச் சிரிக்க வைக்கும்:)).. அது பூனை நேசன் ஹா ஹா ஹா:))

   Delete
 36. இடப்பெயர்வு வேதனை என்றும் மறந்து போகமுடியாத ஆழ்மன வடு அதிரா கட்டையில் போகும் வரை நம் தேசத்தில் யுத்தத்தில் விட்டு வந்த மாடுகள் ,ஆடுகள்,விலைமதிப்பற்ற பொருட்கள் எல்லாம் நீங்காத சாபச்சுமை!

  ReplyDelete
  Replies
  1. ///கட்டையில் போகும் வரை//

   ஹா ஹா ஹா வெளிநாட்டில் எங்க இருக்கு கட்டை:)).. கறண்டில் போகும்வரை என இனி மாத்திப் பேசுங்கோ:)..

   உண்மைதான் இளமை நினைவுகள் மனதில் ஆழமா பதிஞ்சால் மறப்பது கடினம்.

   Delete
 37. தபால் அட்டை போல பாடல் ஒலிப்பேழைகள் தொலைத்த வலிகள் தான் அதிகம் எனக்கு இன்றும்.

  ReplyDelete
  Replies
  1. ஓ.. ஆனா என்ன பாடல்கள்.. சினிமா எனில் திரும்ப எடுக்கலாம்தானே.

   இப்போ நீங்க சொன்னதும்தான் நினைவு வருது.

   ஒவ்வொரு சினிமாப்படமும் வெளி வந்த பின்பு, கடையில் அப்படத்தின் பாடல்கள் குட்டிப் புத்தகமாக விற்பார்கள். அதையும் வாங்கிச் சேகரித்திருந்தேன்.. அதுவும் போச்ச்ச்ச்ச்:(.

   Delete
 38. ஊசிக்குறிப்பு அருமை பணிவு எப்போதும் நம்மை மேலேற்றும் ஒரு ஏணி.

  ReplyDelete
 39. டயறி எழுதும் பழக்கம் புலம்பெயர்வின் பின் நின்றே போய்விட்டது இணையத்தில் உருகும் பிரெஞ்சுக்காதலி போல)))

  ReplyDelete
  Replies
  1. இப்போ என்ன தேவை எனினும் மெயிலில் அல்லது நெட் டயறியில் சேகரித்து விடலாம்.. எப்பவும் யாராலும் படிக்கவும் முடியாது நம்மைத்தவிர.

   Delete
 40. கைவசம் இருக்கும் டயரியை இவ்வாண்டு ஏதாவது ஆற்றில் கங்கையில் விடுத்த ஓலை போல விடும் எண்ணம் இருக்கு பார்க்கலாம் இந்தியாபோகும் வாய்ப்பு அமையட்டும்)))

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா டயறிக்காக நீங்க கங்கையில் குதிச்சிடாதீங்க:) பொலீஸ் பார்க்காதபோது சென் நதியில் வீசுங்கோ:)..

   மிக்க நன்றி நேசன்.. ஒவ்வொரு போஸ்ட் போடும்போதும், நீங்க புறப்பட்டு விட்டீங்க என நினைப்பேன்... மாலை போட்டிருக்கிறீங்கதானே?..

   Delete
 41. வணக்கம் !

  அழகான நினைவுகளை அள்ளிக் கொடுக்குறீங்க பூஸ் எல்லாமே நன்றாக இருக்கிறது பரிவும் பாசமும் கலந்த அந்த நாள் நினைவுகள் பாடல் தொடங்கி ஊசிக்குறிப்பு வரை வழமைபோல சிறப்பு !

  உயிரொன்று வலிபட்டு உடைகின்ற நேரத்தில்
  உதவாதார் மனிதம் இல்லை - சிறு
  பயிரொன்று வெயில்பட்டுப் படராமல் கருகிட்டால்
  பருவங்கள் புனிதம் இல்லை !

  பிறப்போடு கலந்திட்ட பிரியங்கள் அதிராவின்
  பெருமைக்குச் சான்று சொல்லும் - மனச்
  சிறப்போடு விளைகின்ற செயலெல்லாம் புதிராகச்
  சிகரங்கள் கண்டு வெல்லும் !

  கரும்பாக இனிக்கின்ற கதையெல்லாம் அதிராவின்
  கருணைக்குச் சாட்சி தானே - மனம்
  இரும்பாக இருந்தாலும் இவளன்பில் மூழ்கிட்டால்
  இதயத்தில் ஊறும் தேனே !

  அரிதாகப் படைக்கின்றான் அகிலத்தில் சிலபேரை
  அடியொற்றி வாழும் என்று - நாம்
  பரிவாராய் இலதாயும் பணிவோடு இருந்திட்டால்
  பலவெற்றி சூழும் நன்று !

  எழிலான பதிவெல்லாம் இடுகின்ற அதிராவை
  இனிதாக வாழ்த்த வாரீர் - நம்
  மொழியான தமிழன்னை முகம்பூக்க மணமொன்று
  முகைதன்னைப் போழ்ந்து தாரீர் !


  உங்களையும் உங்கள் செயல்களையும் மட்டுமே எழுத வருகிறது ஏனெனில் பதிவை வாசிக்கும் போதே தங்கள் பரிவு படர்ந்து விடுகிறது எண்ணத்திலும் எழுத்திலும்
  பகிர்வுக்கு நன்றி ( தமன்னாவை டச்சு பண்ணி பல மணி நேரம் ஆச்சு ) ஆமா எல்லாம் சரிதான் அந்தக் கம்ப வாரிதி மட்டும்தான் எங்கேயோ இடிக்கிதுங்கோ ,,,,,,,,,,,

  வாழ்க நலம் பூசாரே பகிர்வுக்கு நன்றி !

  ReplyDelete
  Replies
  1. சீராளன்... மிக அருமையா பாடல் செய்திருக்கிறீர்கள். ரொம்ப நாளைக்கு அப்புறம் இங்கு பின்னூட்டத்தில் உங்கள் பாடலைப் பார்க்கிறேன். நல்ல சந்தம். வாழ்த்துக்கள். (எப்போதும் சொல்வதுதான் இது. ஏதாவது காவியத்தை கஷ்டப்பட்டு செய்ய ஆரம்பியுங்கள். அதுதான் உங்கள் பெயர் சொல்லும் ஓவியமாக இருக்கும். திறமையை, காலம் காலமாக நினைவுகொள்ளும்படியாக ஒன்று செய்யுங்கள். பிற்காலத்தில் என்று ஒத்திப்போட்டுக்கொண்டே வந்தால், காலம்தான் போகும்).

   மணமொன்று முகைதன்னைப் போழ்ந்து தாரீர் ! - மொட்டைப் பிளந்து தந்தால் மணம் வரும். அதனால் தமிழன்னை முகம் பூப்பாள். சரி. ஆனால், 'மணமொன்று' என்பதில் அர்த்தம் சரியாக வரவில்லை.

   மொழியான தமிழன்னை முகம்பூக்க மணமுடைய (அல்லது மணம் நல்கும்)
   முகைதன்னைப் போழ்ந்து தாரீர்

   என்பது சரியாக வருமல்லவா? வாழ்த்துக்கள்.

   Delete
  2. முதலில் நெல்லைத்தமிழனின் கொமெண்ட்டுக்குப் பதில் கொடுத்திட்டுத்தான் கவிஞர்ருடையதுக்கு வருகிறேன்:).. காரணம்...

   ///சீராளன்... மிக அருமையா பாடல் செய்திருக்கிறீர்கள்.///

   ஹா ஹா ஹா அப்போ இது பாடலுக்குள் வருமோ? கவிதை இல்லையா?:)..

   சத்தியமா சீராளனின் தமிழ் எனக்குப் புரிவதில்லை, ஆனா இம்முறை ஒவ்வொரு வரியும் அழகாகப் புரிகிறதே.. [ஒரு வரி தவிர...], என நினைச்சு, எனக்குள் நானே நினைச்சுக் கொண்டேன்ன் அடடா வரவர தமிழ் இலக்கணக் கவிதைகூட எனக்குப் புரிகிறதே:) எண்டெல்லாம்.. ஹா ஹா ஹா..

   Delete
  3. வரிக்குவரி அற்புதமாய் வார்த்த கவிதை!
   விரித்துவிட்ட ஆழியலை வீச்சு! - சொரிந்திடும்
   தேன்சுவைச் சந்தப்பா! சீராளன் இங்கிட்ட
   வான்மழைதான்! சேர்த்தேனென் வாழ்த்து!

   அழகிய அருமையான கவிதை சீராளரே!..
   உளமார்ந்த வாழ்த்துக்கள்!

   Delete
  4. வாங்கோ சீராளன் வணக்கம்!..

   //பாடல் தொடங்கி ஊசிக்குறிப்பு வரை வழமைபோல சிறப்பு ! //
   மிக்க நன்றி.. மிக்க நன்றி..

   உண்மையைச் சொன்னால், இம்முறை உங்கள் பாடல்/கவிதை ஒவ்வொரு வரியும் எனக்குப் புரிந்து வியத்தேன்..

   ///பயிரொன்று வெயில்பட்டுப் படராமல் கருகிட்டால்
   பருவங்கள் புனிதம் இல்லை !//
   ஆஹா என்ன அழகாக சொல்லியிருக்கிறீங்க...

   ///அடியொற்றி வாழும் என்று/// இதுதான் அர்த்தம் புரியவில்லை மேஜரே???

   ///( தமன்னாவை டச்சு பண்ணி பல மணி நேரம் ஆச்சு ) ///
   ஹா ஹா ஹா எனக்கும் தெரியுமே:) நன்றி.

   ///ஆமா எல்லாம் சரிதான் அந்தக் கம்ப வாரிதி மட்டும்தான் எங்கேயோ இடிக்கிதுங்கோ ,///

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)) இதுக்கே குத்துது இடிக்குது என்கிறீங்களே..:)
   என் அடுத்த பட்டம் பார்த்தால்?:)..... ஹா ஹா ஹா..

   மிக்க நன்றிகள் சீராளன்.

   Delete
  5. வணக்கம் சகோதரர் நெல்லைத்தமிழன் அவர்களே!

   //மொழியான தமிழன்னை முகம்பூக்க மணமுடைய (அல்லது மணம் நல்கும்)
   முகைதன்னைப் போழ்ந்து தாரீர்//

   நீங்கள் சொல்வது மிகச் சரியே! மணமுள்ள, மணமுடைய என்றுதான் வந்திருக்க வேண்டும்.
   வேலையால் வந்து சமைத்துச் சாப்பிட்ட அலுப்புடன் (இதனை அவரே சொல்லியிருக்கிறார்) பதிவிற்கு உடனேயே கருத்திடுகையில் பா எழுதும் ஆர்வம் உந்த எழுதியிருப்பார்.
   கவனிக்காமல் அப்படியே இட்டுவிட்டார் போலும்!
   விரல் நொடிக்கையில் ஆழ்ந்த சுவைதரும் பாக்கள் எழுதிடும் வேகமுள்ளவர்! விவேகி!
   வேறேதோ வரிகள் வர எழுதியதைப் பின்னர் மாற்றும்போது சில இடங்கள் கவனக்குறைவாகி விடுபட்டு விடுவதுண்டு. இதுவும் அவ்வாறே தானென எண்ணுகின்றேன். வந்து விளக்கம் தருவார்!..:)

   தங்களின் ரசனை மிகமிகச் சிறப்பாக இருக்கிறது. கலைஞனுக்கு மேடையில் கைதட்டல் எவ்வளவு முக்கியமோ அதுபோல வலையுலக மேடையில் உங்களைப் போன்றோர் தரும் ரசனையும் அத்தோடு தெளிவிலாத இடங்களில் சுட்டிக்காட்டித் தரும் திருத்தமும் சிறப்புடையது! தங்களின் ஆர்வமும் கருத்தும் என்னையும் உங்களுக்குப் பதிலிட வைத்துவிட்டது. அதிகப் பிரசங்கித்தனமாகக் கொள்ளாதீர்கள்..:) நன்றி!
   உங்களுக்கும் நல் வாழ்த்துக்கள்!

   Delete
  6. அதிரா -

   அரிதாகப் படைக்கின்றான் அகிலத்தில் சிலபேரை
   அடியொற்றி வாழும் என்று

   இதற்கு நான் புரிந்துகொண்டது. உலகத்தில் சில பெரியோர்களே தோன்றுகிறார்கள். காரணம் மற்ற மக்களெல்லாம் அவர்களை அடியொற்றி வாழட்டும் என்று. (அதுக்காக உங்களைச் சொல்றார்னு நினைச்சுக்காதீங்க அதிரா. அவர் சொன்னது புத்தன், ஏசு, காந்தி போன்றோரைத்தான்)

   Delete
  7. ////(அதுக்காக உங்களைச் சொல்றார்னு நினைச்சுக்காதீங்க அதிரா. அவர் சொன்னது புத்தன், ஏசு, காந்தி போன்றோரைத்தான்)////

   ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்.. கீழே நிண்டு இக்கொமெண்ட் பார்த்துச் சிரிச்சு உருண்டு படியால மேலேறி வந்தேன் பதில் போட ஹா ஹா ஹா:))..

   அரிதான.. அதிரா:)) ஹா ஹா ஹா இந்தப் பெயரும் நல்லா இருக்கே:))

   Delete
  8. இளமதி - உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சியளிக்கிறது.

   சாதாரண கவிதை பற்றி பெரும்பாலும் நான் எழுதுவதில்லை. சீராளன் நல்ல திறமைசாலியாக, மரபுக் கவிதைகளைப் படைக்கிறார். அவர் கவிதை வார்ப்பவர், நான் வாசிப்பவன். 12 செகன்டுல 100 மீட்டர் ஓடக்கூடியவரைத்தான், இன்னும் வேகமாக ஓட முயற்சி செய்யுங்கள் என்று சொல்லமுடியும். அதனை உத்வேகமாகக் கொண்டு காலத்தை மீறிய கவிதை அவர் படைக்கமுடிந்தால் நல்லதுதானே. அவரும் நான் எழுதும் பின்னூட்டத்தைத் தவறாக எடுத்துக்கொண்டதுபோல் தெரியவில்லை.

   சீராளன் அவர்களை அதிரா 'மேஜர்' என்று விளிக்கிறார்கள். அவர் புலம் பெயர்ந்த தமிழராக இருக்கணும். அவர்களுக்கு கடுமையான வேலைச் சுமை இல்லாமலா இருக்கும். இருந்தும் பின்னூட்டங்களில் அவர் கவிதை எழுதுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எங்கிருந்தாலும் அவர் வாழ்க.

   உங்கள் வெண்பாவும் நன்றாக வந்திருக்கிறது.

   சீராளன் பின்னூட்டமிடுவது அதிரா அவர்களின் இடுகைக்கு. ஆனாலும் நான் எனது கருத்தை சீராளனுக்கு எழுதுகிறேன். உங்கள் பின்னூட்டத்தையும் அவ்வாறே எடுத்துக்கொள்கிறேன். இதில் தவறு என்ன இருக்கிறது?

   Delete
  9. //சீராளன் அவர்களை அதிரா 'மேஜர்' என்று விளிக்கிறார்கள். அவர் புலம் பெயர்ந்த தமிழராக இருக்கணும்.///

   அத்தோடு எனக்குத் தெரிஞ்சு அவர் ஒரு குட்டித்தம்பி:)).. ஹா ஹா ஹா இப்போ இதைப் படிச்சால் அடிக்கக் கலைக்கப்போகிறார்ர்:)).. ஹையோ மீ எஸ்கேப்ப்ப்:)..

   Delete
 42. இது ராஜ்ஸ்ரீ எனக்கு கொமெண்ட் போட்டிருக்கிறா.. முதல் வருகைபோல இருக்கு.. தப்பெனில் மன்னிக்கவும்.. ஆனா நான் பப்ளிஸ் பண்ணியும் அது இங்கு பப்ளிஸ் ஆக மாட்டேன் என்கிறது, ஏனோ தெரியவில்லை,, அதனால கொப்பி பேஸ்ட் பண்ணுகிறேன்....


  raajsree lkcmb has left a new comment on your post " மழையில் நனைந்து விறைத்த புறாப்பிள்ளை:) ":

  அதிரா , நான் நீங்கள் அண்மையில் எழுதிய எல்லாப் பதிவுகளையும் படித்திருக்கிறேன். காரணம் அத்தனை நிகழ்ச்சிகளையும் மண்வாசனை சற்றும் குறையாமல் நீங்கள் எழுதும் பாணியும் உங்கள் ஞாபக சக்தியும் என்னை வியக்க வைக்கும். எனக்கு இத்தனை ஞாபக சக்தி இல்லை. இப்படி யாராவது சொன்னால் பலதும் ஞாபகத்துக்கு வந்து போகும்.
  இளமதியின் இந்த பின்னுட்டத்தை படித்ததும் என்னை அறியாமலே தொண்டை கட்டி கண்ணீர் வந்து விட்டது. இதே ஜூலைக் கலவரத்தில் ஒரு இரவு, நீங்கள் சொல்லும் இதே காட்சி என் மனதிலும் பதிந்துள்ளது.
  நெருங்கிய உறவினர் ஒருவரும் உயிரோடு கொளுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
  அப்போது நான் சின்னங் சிறுமி ஆதலால் பலதை நினைவு படுத்த முடியவில்லை. அன்று இரவு எங்கள் அயலில் வசித்த ஒரு இள வயது சிங்களவரும் அவர் மனைவியும் எங்கள் குடும்பத்திற்கு அடைக்கலம் கொடுத்து செய்த உதவியை எதனாலும் ஈடு செய்ய முடியாது, ஏனென்றால் இது மற்றவர்களுக்கு தெரிந்தால் அவர்கள் குடும்பத்தையும் உயிரோடு கொளுத்தி விடுவார்கள் காடையர்கள் என்பது உங்களுக்கு தெரியும் தானே..
  நாங்கள் பின்பு எங்கள் சொந்த ஊருக்கு திரும்பி விட்டோம். அவர்களை அதன் பிறகு இன்று வரை சந்திக்கவே இல்லை, இது ஒரு குற்ற உணர்ச்சியாக என் பெற்றோர் மனதில் இருந்தது. பல வருடங்களுக்கு முன் அப்பா காலமாகி விட்டதால் இப்போது அம்மாவுக்கு மட்டுமே அவர்களை பற்றிய விபரம் தெரியும் என்பதால் அம்மாவின் காலத்திற்குள் அவர்களை ஒரு முறை சந்தித்து நன்றி சொல்ல வேண்டும், அதுவும் உடனடியாக. கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேல் என்பதால் உயிருடன் இருக்கிறார்களா அல்லது வேறு ஏதும் ஊருக்கு இடம் பெயர்ந்து விட்டார்களா தெரியவில்லை.

  மிக்க நன்றி அதிரா மற்றும் இளமதி. உங்கள் ஞாபக மீட்டல் எங்கள் வாழ்க்கையின் மிக முக்கிய மனிதர்களையும் அவர்களுக்கு நாங்கள் செலுத்த வேண்டிய நன்றிக்கடனையும் நினைவூட்டி விட்டது.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ராஜ்ஸ்ரீ வாங்கோ.. முதன் முதலா வந்திருக்கிறீங்கபோல, நல்வரவு மிக்க மகிழ்ச்சி. நன்கு பழகியவர்போல பேசுறீங்க.. நாம் முன்பு எங்கயோ பேசியிருக்கிறோமோ எனவும் எண்ணத் தோணுது.. மன்னிச்சுக்கொள்ளுங்கோ தவறாக எடுக்க வேண்டாம்.

   மிக்க நன்றி நீங்கள் என் பதிவுகள் படிக்கிறீங்க என்பதை, படிப்பதோடு போகாமல் கொமெண்ட் போட்டுச் செல்வதற்கும் நன்றி.

   நான் யோசிப்பேன்ன் இப்போ எல்லாம்.. என் ஒவ்வொரு போஸ்ட்டும் 2000.. 3000 வியூஸ் களைத் தாண்டுகிறதே.. இது உண்மைதானோ என...

   ஒவ்வொருவருக்குள்ளும் பல நினைவுகள் நீறு பூத்த நெருப்பாக இருக்கும் ஆராவது தட்டி விட்டால்தான் அனைத்தும் வெளியே வரும்...

   வருகைக்கு மிக்க நன்றி.

   Delete
 43. /எங்களுக்கு கிளி / மைனா வளர்க்க சரியான விருப்பம். அவை இரண்டையும் கதைக்கப் பழக்கலாமாம் என்பதால். எங்கள் அப்பாவின் கண்டிப்பான உத்தரவு, எது வேண்டுமானாலும் வளருங்கள், ஆனால் கூட்டிலே அடைத்து எதையும் வளர்க்கப்படாது என்பது. அப்போ கூண்டிலே அடைக்காவிட்டால் எந்தப் பறவையும் வளர்க்க முடியாதே.//

  இதைப் படித்ததும் நான் கேள்விப்பட்ட கதையொன்று நினைவுக்கு வந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:

  வாழும் போதே செத்துப்போவோர் செத்த பிறகும் வாழ்வார்கள் என்பது ஓர் தத்துவம். இதை விளக்க ஓர் கதை சொல்வதுண்டு.

  நம்மாளு ஒருத்தன் ஆப்பிரிக்கா காடுகளுக்குப் போய் கிளியொன்றைப் பிடித்து வந்தான். கூட்டில் அடைத்து தன் வீட்டில் வளர்த்தான். வேளா வேளைக்கு அதற்கு ஆகாரம், தண்ணீர் எல்லாம் வைத்து செளகர்யமாகவே அதனைப் பார்த்துக்கொண்டான்.

  மீண்டும் அவன் ஆப்ரிக்கா செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது கிளியிடம் கேட்டான்:

  ”நான் மீண்டும் ஆப்ரிக்கா காடுகளுக்குச் செல்லப்போகிறேன். அங்குள்ள உன் உறவினர்களுக்கு ஏதேனும் செய்தி சொல்லணுமா”

  கிளி சொல்லிற்று:

  “நான் இது போல உன் வீட்டில் கூட்டில் அடைபட்டு இருக்கிறேன். வேளா வேளைக்கு சோறு + தண்ணீர் கிடைத்து வருகிறது என்று சொல் போதும்”

  ஆப்பிரிக்கா போனவன் காட்டுப்பக்கம் போய் ஒவ்வொரு மரத்தடியிலும் நின்று மேலே உள்ள கிளிகளிடம் இந்த விஷயத்தைச் சொன்னான். அங்கு மகிழ்ச்சியாக இருந்த எந்தக் கிளிகளும் இவன் சொல்வதைச் சட்டை செய்யாமலும், காதில் வாங்கிக்கொள்ளாமலும் இருந்தன.

  வேறு ஒரு மரத்தில் ஓர் ஒற்றைக்கிளியைக் கண்டான். அதனிடம் போய் “இதுபோல உன் ஜோடிக்கிளி என் வீட்டில் கூட்டில் அடைக்கப்பட்டு பத்திரமாக உள்ளது. வேளாவேளைக்கு சோறும், தண்ணீரும் கொடுத்து வருகிறேன்” என்றான்.

  இதைக்கேட்டதும் அந்தக்கிளி பொல பொலவென்று கண்ணீர் விட்டுவிட்டு, அப்படியே சுருண்டு கீழே விழுந்து செத்துப் போனது. இதைப்பார்த்த இவன் மிகவும் வருந்தினான். அடடா, நாம் சொன்னதைக் கேட்டதும் இந்தக் கிளி இப்படி அநியாயமாக உயிரைவிட்டு விட்டதே, இது தான் அதன் ஜோடியாக இருக்கும் போலிருக்குது என நினைத்துக்கொண்டு, தன் நாட்டுக்கும் வீட்டுக்கும் திரும்பி வந்து, தன்னிடம் கூட்டினில் இருந்த கிளியிடம் இந்த சோகக்கதையைச் சொன்னான்.

  இதனைக் கேட்டதும் அந்தக்கூட்டினில் இருந்த கிளியும் பொலபொலவென்று கண்ணீர் விட்டுவிட்டு, சுருண்டு கூட்டுக்குள் விழுந்து செத்துப் போனது.

  இவன் மேலும் வருத்தப்பட்டு, அடடா இப்படி அநியாயமாக இரண்டு கிளிகளும் செத்துப் போய் விட்டனவே என நினைத்து வருந்தி, கூட்டுக்குள் இருந்த செத்த கிளியை, கூட்டிலிருந்து எடுத்து வெளியே தூக்கி எறிந்தான்.

  அது உடனே படபடவென்று ,தன் இறக்கைகளை அடித்துக்கொண்டு பறந்து மரத்தின் மீது ஏறி அமர்ந்துகொண்டது. உடனே அது இவனிடம் பேசியது:-

  ”அடைபட்டிருக்கும் கூட்டிலிருந்து தப்பிப்பதற்கான வழியை என் ஜோடிக்கிளி உன் மூலமாக எனக்குச் சொல்லி அனுப்பியுள்ளது. அதுவும் அங்கு சாகவில்லை. நானும் இங்கு சாகவில்லை. செத்தது போல அதுவும் நடித்துள்ளது. என்னையும் இங்கு நடிக்கச் சொல்லியுள்ளது”

  இதிலிருந்து தெரிவது என்னவென்றால், வாழும் போதே செத்துப்போகிறவர்கள், செத்த பிறகும் வாழ்கிறார்கள் என்பது மட்டுமே.

  கிளிக்கூடு என்பது நம் வாழ்க்கை என்கிற சம்சார சாஹரம். அதாவது துன்பக்கடல். வாழும் போதே சாவது என்பது, துன்பக்கடலான வாழ்க்கையிலிருந்து நாம் செத்தது போல விலகி, ஆன்மீக ஞானத்தை அடைவது.

  துன்பத்திலிருந்து விலகி சுதந்திரமாக இன்பமாக இருப்பது.

  இது எப்படி இருக்கு?

  அன்புடன் கோபு அண்ணன்

  ReplyDelete
  Replies
  1. வாழும் போதே சாவது என்பது - கோபு சார்.. கதை நல்லா இருக்கு. முதலில் 'வாழும்போதே செத்துப்போகிறவர்கள் செத்த பிறகும் வாழ்கிறார்கள்' என்பது புரியவில்லை. உங்கள் விளக்கம் கண்டபின் புரிந்தது.

   ஸ்திதப்ப்ரக்ஞன் என்பவன், வாழும்போதே செயல்களிலிருந்து விலகி இருப்பவனல்லவா? அப்படி இருக்கும்போதுதான் ஆன்மீக ஞானத்தை அடையமுடியும்.

   குட்டிக் கதைகளை, கூண்டிலிட்டுச் சிறையிடாமல் (மனதிலேயே வைத்துக்கொள்ளாமல்), உங்கள் தளத்தில் அவ்வப்போது, இடுகை என்னும் சுதந்திரவானில் பறக்கவிடவேண்டியதுதானே. இதையும் எனக்கு உங்கள் கதைதான் ஞாபகப்படுத்திற்று. :-)

   Delete
  2. ///மேற்படி என் ஷார்ட் & ஸ்வீட் கதையின் தொடர்ச்சியை இப்போது கீழே தனியாக அனுப்ப உள்ளேன்.

   அதையும் மிகவும் கவனமாக என் கதைக்கு நெல்லைத்தமிழன் ஸ்வாமீ எழுதியுள்ள பதிலுக்குக் கீழே வெளியிட்டு மகிழ்விக்க வேண்டுமாய் ......

   மேதகு பிரித்தானியா மஹாராணியின் ஒரே செல்லப்பேத்தியும் வாரிசுமான ஸ்வீட் சிக்ஸ்டீன் அவர்களைக் கேட்டுக்கொள்கிறான் ......
   கோபு அண்ணன்.///

   Delete
  3. ////இப்படித்தான் நம்மாளு ஒருத்தன், ஒரு நாள் ஒரு மனநோய் மருத்துவரை சந்திக்கச் சென்றான்.

   டாக்டர்: ”வாப்பா, உட்காரு. என்ன ப்ராப்ளம் உனக்கு?”

   அவன்: ”டாக்டர், நான் செத்துப்போய் விட்டேன். ஆனால் யாரும் நம்ப மறுக்கிறார்கள், டாக்டர்”

   [ டாக்டர் தன் மனதுக்குள் நினைத்துக்கொள்கிறார். ’வாழும் போதே செத்துப்போய் விடுபவர்கள், செத்த பிறகும் வாழ்கிறார்கள்’ என்று ஒரு தத்துவம் சொல்லப்பட்டு வருகிறதே. அது போன்ற ஞானியாக இருப்பானோ இவன்? ]

   டாக்டர்: ”நீ இன்னும் சாகவில்லையப்பா. உயிருடன் தான் இருக்கிறாய்”

   அவன்: “இல்லை டாக்டர், நான் செத்துப்போய் விட்டேன். நன்றாக சோதித்துப் பாருங்கள்”

   [ டாக்டர் தனக்குள் நினைத்துக்கொள்கிறார். இது ஏதோ முற்றிய கேஸாக இருக்குமோ! அதனால் என்ன .... இவன் இன்னும் சாகவில்லை என இவனை நாம் எப்படியாவது நம்ப வைக்கணும். இது சுலபம்தான். செய்துவிடலாம் என தீர்மானிக்கிறார்.]

   டாக்டர்: ”இதோ பாருப்பா, செத்தவர்களால் பேச முடியாது. நீ என்னுடன் பேசுகிறாய். நான் உன்னுடன் பேசுகிறேன். அதனால் நானும் சாகவில்லை. நீயும் சாகவில்லை. இருவருமே உயிருடன் தான் பேசிக்கொண்டு இருக்கிறோம்.”

   அவன்: ”இல்லை டாக்டர். நான் உண்மையிலேயே செத்துப் போய் விட்டேன். நீங்கள் என்னை ஏமாற்றி திரும்பி அனுப்பப்பார்க்கிறீர்கள்.”

   டாக்டர்: ”சரி ஒரு சின்ன சோதனை செய்து உனக்கு உயிர் உள்ளது; நீ இன்னும் சாகவில்லை என்பதை நான் நிரூபிக்கிறேன்” எனச் சொல்லி இரண்டு குண்டூசிகளைத் தன் கையில் எடுத்து வருகிறார்.

   டாக்டர்: ”இதில் ஒரு குண்டூசியை இப்போது என் விரலில் குத்திக்கொள்கிறேன். என்ன நடக்கும் ?”

   அவன்: “உடனே இரத்தம் வரும்”

   டாக்டர்: ”வெரி குட். உயிருள்ள ஆசாமிக்கு மட்டும் தான் குண்டூசி குத்தினால் இரத்தம் வரும். இதை நீ ஒத்துக்கொள்கிறாயா?

   அவன்: ஆமாம். ஒத்துக்கொள்கிறேன்.

   இப்போது டாக்டர் வேறொரு புதிய குண்டூசியை எடுத்து, வந்தவன் விரலைப் பிடித்து ஒரு சின்ன குத்து குத்துகிறார். அவன் விரலிலும் உடனே இரத்தம் வருகிறது.

   டாக்டர்: ”இப்போ என்ன சொல்கிறாய்? உனக்கும் உயிர் உள்ளது. நீ இன்னும் செத்துப் போகவில்லை என்று நம்புகிறாயா?”

   அவன்: “நீங்கள் உண்மையிலேயே மிகப்பெரிய மனநோய் மருத்துவர் தான் டாக்டர் !”

   டாக்டர்: ”இதை எப்படி நீ சொல்கிறாய்?”

   அவன்: ”ஒரு செத்தவன் உடம்பிலிருந்தே இரத்தத்தை எடுத்துக் காண்பிச்சுட்டீங்களே .... யூ ஆர் ஸோ கிரேட்” என்று சொல்லி அவர் கையைப் பிடித்து ஷேக்-ஹாண்ட் கொடுத்துவிட்டுப் புறப்பட்டானாம்.

   இதுபோன்ற ஆசாமிகளை நாம் என்ன செய்ய முடியும்?

   -oOo-

   அன்புடன் கோபு அண்ணன் :)
   ///

   Delete
  4. உடனே அவன் விரலிலும் ரத்தம் வருகிறது என்ற வரிகளை அடித்துவிட்டு மேலே படிக்கவும்.

   குத்து குத்துகிறார். அவன் விரலில் ரத்தம் வரவில்லை. டாக்டருக்கு ஒரே ஆச்சர்யம். எப்படி இது நடந்தது? விரலில் குத்தினால் ரத்தம் வரணுமே.

   கோபு சார்... மிக்க நன்றி. இதற்குமேல் கதையை முடியுங்கள்.

   Delete
  5. ///கோபு சார்... மிக்க நன்றி. இதற்குமேல் கதையை முடியுங்கள்.///

   ஹா ஹா ஹா இன்னும் சத்தமாச் சொல்லுங்கோ நெல்லைத்தமிழன்:) உச்சிப் பிள்ளையார் கோபுரக் கலசத்தில் பட்டு எதிரொலிக்கட்டும்:) ஹா ஹா ஹா:)..

   Delete
 44. வணக்கம் சகோதரி ராஜ்ஸ்ரீ!
  தங்களின் கருத்திடுகையைக் கண்டேன். இத்தகைய மனதை விட்டகலாத பல சம்பவங்களே ஈழத்தமிழர்களுக்குக் கிடைத்த வரம். இதை எல்லாம் மனசுக்குள் எவ்வளவோ அடக்கி அமிழ்த்தி வைத்திருப்பினும் தண்ணீருக்குள் அமிழ்த்திய பந்தாக அவ்வப்போது மேலே வந்துவிடுகிறது.
  அதிராவின் பதிவு என்னை மீண்டும் அங்கே கொண்டுபோய்விட கொஞ்சம் எழுதிவிட்டேன்.

  //இளமதியின் இந்த பின்னுட்டத்தை படித்ததும் என்னை அறியாமலே தொண்டை கட்டி கண்ணீர் வந்து விட்டது. இதே ஜூலைக் கலவரத்தில் ஒரு இரவு, நீங்கள் சொல்லும் இதே காட்சி என் மனதிலும் பதிந்துள்ளது. //

  எனது இடுகை இப்படி உங்களையும் உலுப்பிவிட்டதே!..:(

  தங்களுக்கும் மனப்பாரம் குறைய நீங்கள் விரும்புவதைச் செய்யுங்கள்.
  நல்லதே நடக்குமென நம்புவோம்! நன்றி சகோதரி!

  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 45. எல்லா செல்லங்களுடன் கலந்து விளையாடிவிட்டீர்கள் சூப்பர்.... பாவம் புறா இந்த பூஸாருக்கு இவ்வளவு தைரியம் கூடாது..... ஊசி குறிப்பு ரொம்பவே சரி
  லேட்டு டச்சு லேட்டஸ்டா ஆகட்டும்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ பூவிழி வாங்கோ... லேட்டா வந்தாலும் ரெயினைப் பிடிச்சு தமனாக்காவையும் டச்சுப் பண்ணிட்டீங்க.. மிக்க மகிழ்ச்சி.. நன்றி பூவிழி.

   Delete
 46. ஹையோ, 130 கருத்துக்களா? நம்மால் எல்லாம் தாங்க முடியாது! அதான் போல! யாரும் வரதில்லை! :))))

  வழக்கம்போல் அருமையாக எழுத ஆரம்பிச்சு சோகத்தில் முடிச்சுட்டீங்க! :( புறா இறந்து போனது ரொம்ப வேதனையாக இருந்தது. நாங்களும் ஓர் கிளிக்குஞ்சைக் கொஞ்ச நாட்கள் வளர்த்தோம். அப்புறமா அது தானே பறந்து விட்டது. கொஞ்ச நாட்களுக்கு ஒரு மீன் கொத்திக்குப் பாதுகாப்புக் கொடுத்தோம். பின்னர் அதை நாங்களே வெளியே விட்டுட்டோம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீதாக்கா வாங்கோ..

   //நம்மால் எல்லாம் தாங்க முடியாது! அதான் போல! யாரும் வரதில்லை! :))))//

   ஹா ஹா ஹா கர்ர்ர்:)) நீங்க நல்ல சூடா விவாதம் ஆரம்பிச்சதுமே புளொக்கை மூடிட்டு ஓடிடுவீங்க:).. கொமெண்ட்ஸ் ஐயும் வெளியிட மாட்டீங்க:).. அப்போ எப்படி நாங்க மின்னி முழக்கி உங்களுக்கு கொமெண்ட்ஸ் போட முடியும்?:)...

   ஒவ்வொருவருக்குள்ளும் இப்படிக் குட்டிக் குட்டிக் கதை இருக்கும்.. இதனை ஒரு தொடர்போல நினைச்சு எல்லோருமே எழுதலாமே.

   நான் ஆமையும் வளர்த்தேனே:).. பெயர் இமயவரம்பன்:)... “இமையா” எனச் செல்லமாக் கூப்பிடுவேன்:))

   Delete
 47. இன்னொண்ணு சொல்லணுமே! சுப்புக்குட்டிங்க தெரியுமா சுப்புக்குட்டிங்க! ஹிஹிஹி பாம்பார்! அவரைத் தான் நாங்க சுப்புக் குட்டினு செல்லமா அழைப்போம். அவங்கல்லாம் நாங்க அழைக்காமலேயே எங்களோடு வந்து தங்கி இருந்திருக்காங்க! வித விதமான நிறங்களில், நீள, அகலங்களில் வருவாங்க!

  ReplyDelete
  Replies
  1. ஓ பாம்பாருக்கே செல்லப் பெயரோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:) அதில வேற கூப்பிடுவீங்களோ?:)... ஹா ஹா ஹா...

   ஊரிலும் வருவினம் ஆனா எப்பவாவது அருமையா.. காரணம், நாய்ப்பிள்ளை பூஸார் விடாயினமெல்லோ... வளவில எதுவும் நெருங்க முடியாது.

   மிக்க நன்றி கீதாக்கா.

   Delete
 48. வேலைத்தளத்தில் இருந்துதான் எப்போதும் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவது வழமை.பல நேரத்தில் முதலாளி வருகின்றாவா ?என்ற பதட்டத்திலேயே பின்னூட்டத்தில் விடும் எழுத்துப்பிழைகளை கவனிப்பதில்லை! இனி கொஞ்சம் திருத்திக்கொள்(ல்)கின்றேன்.)))

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா தெரியும் நேசன்... எல்லோருமே அவசரமாகத்தான் பின்னூட்டம் போடுகிறோம்.. கிடைக்கும் நேரத்தில்.. அதனால எழுத்துப் பிழைகள் ஏராளம் வரும்..

   Delete
 49. சரோஜாதேவிக்கு கூட இப்போதும் ரசிகர்கள் இருக்கின்றார்கள்)) முகநூலில் குழுவே இருக்கு கும்மியடிக்க. அப்படி இருக்கும் போது சினேகாவுக்கு சிலை வைக்கும் வரை ரசிகர் வட்டம் மாறாது)))

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா எங்க பரிஸ் சென் நதிக்குப் பக்கத்தில சிலை வைக்கும் ஐடியா இருக்கோ?:) திறப்பு விளாவுக்கு எங்களுக்கும் ஒரு ரிக்கெட் அனுப்பிடுங்கோ:)..

   Delete
 50. மாலை அணிந்துவிட்டேன் மாமலை போக அழைபுக்காக காத்து இருக்கின்றேன் பார்க்கலாம் ஐய்யப்பன் சித்தம் எப்படி என்று?.

  ReplyDelete
  Replies
  1. ஓ மிக்க சந்தோசம் நேசன்... நேசனை.. மாலையுடனும் கறுப்புச் சேர்ட் உடனும் எப்படி இருப்பார் எனக் கற்பனை பண்ணிப் பார்க்கிறேன்...

   எல்லாம் நல்லபடியே நடக்கும்.. நலமே சென்றுவர வாழ்த்துக்கள். மிக்க நன்றி நேசன் மீள் வருகைக்கும்.

   Delete
 51. இந்த ஊர் கதையெல்லாம் எழுதி உசுபேத்தி எழுத வைத்திடுவீங்க போல..
  முதல் பாடல் எனக்கும் மிக பிடிக்கும். செல்லப்பிராணிகள் கதை செம டச்சிங்.எங்க வீட்டு பிள்ளைகள் எல்லாரும் வரிசையா வந்து போச்சினம். நாட்டுப்பிரச்சனையால் எவ்வளவை இழந்துவிட்டோம் நாம.. எங்க வீட்டு பூசார்தான் வெடி சத்தத்துக்கு ஓடிட்டார். நாய்பிள்ளைகளை கொண்டு போய்விட்டோம். பசுவை முதலே அனுப்பிவிட்டோம் மாமாவீட்டுக்கு..
  அதனால கொஞ்சம் பரவாயில்லை.
  தத்துவம் அருமை. மிகவும் ஒரு கன மான பதிவு,
  நான் ஹாலிடேக்கு துருக்கி போனதால் வரமுடியல அதிரா. இப்போதான் வாசிக்கின்றேன்.
  மகுடம் சூட்டியமைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 52. //அதைப் பாதுகாத்து பின்னர் தொலைக்கும்போது ஏற்படும் மன வேதனையை விட உடனேயே எறிவதுமேலென நினைக்கிறேன்.// போங்கோ அதிரா! ;( வேலை மினக்கெட்டு கையால‌ தாங்களே செய்து அனுப்புறவைடதுகளை எறியேலாது அப்பிடி. ;( நான் அதையெல்லாம் ரீசைக்கிள் பண்ண‌ நினைக்கிறேன். ஆனால் பெறுக்கொள்ளுறவை முழுக்க‌ முழுக்க‌ என் வேலை எண்டு நினைச்சு ஏமாறக் கூடாதே! :‍) யோசிச்சுக் கொண்டு இருக்கிறன். ஏதாவது ஐடியா வந்தால் சொல்லுங்கோ.

  வீட்டுப் பூனைகளுக்கு சாப்பாட்டுப் பஞ்சம் இல்லை. அவை சிங்கம், புலி வகை ஆட்கள். அதனால் வேட்டைக் குணம் நிச்சயம் இருக்கும். ரெண்டுபேரும் சின்னன்ல‌ இருந்து ஒன்றாக‌ வளர்ந்திருந்தால் சரியாக‌ இருந்திருக்கும். எங்கட‌ ஜூலி முதல் இருந்த‌ எப்பவும் வீட்டில‌ பூனையோட‌ வெளியில‌ தான் திரிஞ்சவர்.

  ஊரில‌ எங்கள்ட்டயும் ஒரு புறா வந்து சேர்ந்துது. வருத்தமா இருந்திருக்கும் போல‌. பக்கத்து வீட்டு அங்கிள் தன் கோழிக் கூட்டில‌ மூன்று நாளாக‌ நிக்குது என்று எங்கட‌ புறாப்பிள்ளைகளோட‌ வளர்க்கத் தந்தவர். அது மூன்று நாளில‌ அவுட்.

  கன‌ காலத்துக்குப் பிறகு முழுசா ஒரு நீளமான‌ இடுகை வாசிச்சிருக்கிறன். :‍)

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.