அஞ்சு[5] ஏஞ்சலுக்கு
ஆஆஆ வந்துவிட்டது வந்துவிட்டது அடுத்த பிறந்தநாளும் வந்துவிட்டது.. திரும்பிப் பார்ப்பதற்குள் ஒரு வயசு கூடிப்போச்சு:)..
ஏன் அஞ்சுவுக்கு மட்டும் இப்பூடி கடகடவென வயசு ஏறிக்கொண்டு போகுதெனத் தெரியவே இல்லையே:)).. ஹா ஹா ஹா சரி சரி இப்ப அதுவோ முக்கியம்..:).
அஞ்சு பயப்பூடக்கூடா:) மீ ஊதுறேன் கன்டிலை:))
எல்லோரும் வாங்கோ அஞ்சுவை மனதார வாழ்த்துங்கோ.. வாழ்த்த வயதில்லை எனில், வணங்குங்கோ:), வணங்கி ஆசிர்வாதம் வாங்குங்கோ.. நான் ஒண்ணும் வாணாம் சொல்லலியே:)) ஹா ஹா ஹா:).
அஞ்சு ஆரெனத் தெரியாமல் இருப்போரும் இருக்கலாம்:), சிலர் மறந்தும் இருக்கலாம்:), அப்பப்ப தூசு தட்டப்படும்:)..
“காகிதப் பூக்களின்” ஓனர், பூனைகள் படுக்கவும் எலிகள் ஓடி விளையாடவும் என்றே, சமைக்காமல்
“டேவடைக் கிச்சின்” எனும் பெயரில ஒரு புளொக்கை திறந்து வைத்திருப்பவர்
[இப்பூடி நல்ல மனசு ஆருக்கு வரும் சொல்லுங்கோ?:)]..
கிராஃப்ட் வேலைகளுக்கென ஒரு புளொக்கை தன் சொந்தக் காசில வாங்கி அதையும், ஊத்தையாகிடாமல் பூட்டி வச்சிருப்பவர்.. இப்படி பல வீடுகளின் ஓனர் தான் இவர்.
அதிரா கையால அஞ்சுவுக்கு இந்தாங்கோ ரோஜாப்பூ....
ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் இப்பூடியே சொல்லிச் சொல்லி ஸ்பீச் குடுத்திட்டேன், இம்முறை புதுசா என்ன பண்ணலாம் என நினைச்சேன் ஒண்ணுமே வருகுதில்லை:)), சரி ஒண்ணுமே பண்ணாமல் பேர்த்டேயை தேம்ஸ்கரையில் அமைந்திருக்கும், அழகான, அமைதியான, பொஸிடிவ் வைபிரேஷன் நிறைந்த ஆச்சிரம வாசலில் வச்சுக் கொண்டாடலாம் எனும் முடிவுக்கு வந்து, உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். அஞ்சுவின் முற்பிறப்பு அண்ணன் ஹரி தலைமையில் கேக் கட் பண்ணும் வைபவம் நடக்கவிருக்கிறது:)) வாங்கோ வந்து கேக் கட் பண்ணும் வைபவத்தில் கலந்துகொண்டு, அஞ்சுவை வாழ்த்தி, என்வலப்புக்கள், நகைகள் குடுக்க விரும்புவோர் அவற்றை ஆச்சிரம உண்டியலுக்குள் போடும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள், கையில வாங்க அஞ்சு கூச்சப்படுவா என்பதால, நீங்கள் கூச்சப்பட்ட்டிடாமல் உண்டியலில் போடுங்கோ, நான் பின்னர் கொடுக்கிறேன் அஞ்சுவுக்கு:).
விளக்கேற்றி வைக்கிறேன், விடிய விடிய எரியட்டும், இனி வரப்போகும் நாட்களெல்லாம், நல்ல மங்களகரமானதாக அமையட்டும் என வாழ்த்துகிறேன், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஞ்சு..
பார்ட்டிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் அழகிய, விதம் விதமான விருந்தும், செமிபாட்டுக்காக கொக்கு மாங்காய்காய் ரசமும் உண்டு, அனைத்து உணவும் எங்கட ஆரியபவான் கிச்சினில்:), அதிரா செலவில்:), அதிரா வீட்டு ஆயா கையாலயே செஞ்சது:), ரெசிப்பி தேவை எனில், பெயரைக் கிளிக் பண்ணிப் பார்க்கவும்:))
9 * 10 = 90 [நான் வயசைச் சொன்னேன்:)]
====================
இன்று இன்னொரு விஷேசம், எங்கட புளொக்ஸ் கொமெண்ட் புகழ், தமிழ்ப் புரொபிஸர்:), நெல்லைத்தமிழன் அண்ணாவுக்கும் அண்ணிக்கும் இனிய திருமணநாள்.. கூச்சப்பட்டுக்கொண்டே அண்ணி கழுத்தில் தாலி கட்டிய நாள் இன்றுதான், கஜூனா beach இன் கடற்கரை மணல்போல பல்லாண்டு காலம், மகிழ்வோடும் நலமோடும் இருவரும் நீடூழி வாழ்க என வாழ்த்துகிறோம்.
----------------------------------------------------------------
==================
“ஒரு வெளவால் வீட்டுக்கு இன்னொரு வெளவால் வந்தால், அதுவும் தொங்கிக் கொண்டுதான் இருக்கும்”
💃💃💃💃💃💃