நல்வரவு_()_


Monday, 26 November 2018

鮽鮽鮽அதிராஸ் ஸ்பெஷல் சீனி அரியதரம்鮽鮽鮽

தெக்கினிக்கா தலைப்பைப் போடோணும், அப்போதானே, இது என் செய்முறை, ஆரும் நோ குறொஸ் கொஸ்ஸன் பிளீஸ் எனச் சொல்லி வாயை அடைச்சிடலாம்:))
அப்பாவி போல முகத்தை வச்சிருந்தால்தால் இண்டைக்குத் தப்பலாம்:)

அதிரா வீட்டுச் சீனி அரியதரம் சாப்பிடலாம் வாங்கோ. எங்கள் வீட்டிலதான் இனிப்பு என்பது யாருக்குமே பிடிக்காதே.. அதாவது பலகாரங்கள், மற்றும்படி சொக்கலேட் ஐஸ்கிரீம் பற்றி இங்கு நான் பேசவே இல்லை:).

ஆனாலும் செய்ய வேண்டிய கட்டாயம், ஏனெனில்..கெளரி விரதம் என்பது 21 நாட்கள் நோன்பிருந்து முடிவில் கையில் இருக்கும் பழைய காப்பை கழட்டி வைத்து விட்டுப் புதிய காப்பைக் கட்டிக் கொள்வோம். அந்த காப்புக் கட்டும் அன்று காப்புக் கட்டுபவர், ஒருநேர உணவாக இந்த சீனி அரியதரம் மட்டுமே சாப்பிடோணும்.. இப்படித்தான் நம் வழக்கம். கோயில் இருக்கும் ஊர்களில் பூஜைக்கு பணம் கொடுத்தால் கோயில்லயே சுட்டுத் தருவார்கள், அதிரா என்ன பண்ண முடியும் ஜொள்ளுங்கோ:).. அதனால நானே சுட்டு எடுப்பேன்.. சிலசமயம் பாறாங்கல்லுப் போலவும் வந்திருக்கு:) என் பற்கள்தான் எதையும் உடைச்செறியுமே அதனால எனக்கு இதுபற்றிய கவலை எல்லாம் இருந்ததேயில்லை:) ஹா ஹா ஹா.

ஆனா அடிபட்டு இடிபட்டு.... போனவருடத்தை விட இம்முறை மிகவும் சூப்பராகவும் சொஃப்ட்டாகவும் வந்துது.. இந்த நேரம் பார்த்துப் பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாக, தீபாவளி வாழ்த்துப் பரிமாற்றத்தோடு.. அம்முலு[பிரியசகி] கேட்டா, அதிரா சீனிஅரியதர ரெசிப்பி போடுங்கோ.. இதுவரை நான் செய்ததில்லை, எனவே செய்யப்போகிறேன் என:)).. அவ்வ்வ்வ்வ் கிடைச்ச சான்ஸ் ஐ மிஸ் பண்ணுவேனோ நான்?:).. அதனாலதான் ரெசிப்பி போடத் துணிஞ்சேன்:)..


முதலில் வாங்கோ சுவாமி அறைக்குப் போய்க் கும்பிடலாம்..
தில ஒரு குட்டிக் கதை சொல்லோணும் உங்களுக்கு, எனக்கு இந்தக் கெளரி காப்பு[படத்திலிருக்கே] கனடாவிலிருந்துதான் வரும், அதை அங்கு பூஜையில் வைத்து, கடைசி வாரம்தான் எடுத்துப் போஸ்ட் பண்ணுவார்கள், ரைமுக்குக் கிடைத்துவிடும், ஆனா இம்முறை நான் அனைத்து வேலைகளும் முடித்து, சுவாமிக்குப் படைத்தும் விட்டேன், காப்பு வந்து சேரவில்லை, நேரமோ பகல் 1.30 தாண்டி விட்டது, சரி இனி நாளைக்குத்தான் வரலாம், பறவாயில்லை, தொடர்ந்து கந்தசஷ்டி விரதம் தானே, அதுக்குள் கட்டிடலாம் என எண்ணிக் கொண்டே, கும்பிட்டு முடித்து விட்டு, எதுக்கும் லாஸ்ட்டா ஒரு தடவை ஜன்னலால பார்ப்போமே, போஸ்ட்மான் வருகிறாரா என எண்ணி, ஜன்னல் அருகே போனேன், வீட்டு டோரில், டொங்ங்ங்ங் எனக் கேட்டுதா.. ஓடிப்போய்ப் பார்த்தால் காப்பு வந்திருக்குது.. எப்படி இருந்திருக்கும் எனக்கு.. மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை:).

சரி செய்முறைக்குள் நுழைவோமா?:).. தீட்டல் பச்சை அரிசிதான் இதுக்குப் பாவிப்போம், அது வெள்ளை அல்லது சிவப்பு எதுவாயினும், நான் பொதுவாக சிவப்புத் தீட்டல்ப் பச்சைதான் பாவிப்பேன். ஒரு கப் அரிசி எடுத்து 2,3 மணி நேரம் ஊறவிட்டு, பின்னர் வடித்து வைத்து விடுங்கோ, கொஞ்சம் ஈரத்தன்மை போகும்வரை.

பின்பு அரிசியை அரைத்து, அரித்து எடுக்க வேண்டும். அரிப்பதற்கு அரிதட்டு பெரிய கண் உள்ளதாக இருக்கோணும், அதாவது குருணலும் சேர்ந்து மாவுடன் வர வேண்டும், தனி மா எனில் சரியில்லை. சிலர் என்ன பண்ணுவார்கள் எனில், அரித்துப்போட்டு, மிகுதி மாக்கட்டையை கொளித்தெடுத்துக் குருணலையும் இதனோடு கலப்பார்கள், அதுக்கு கொஞ்சம் பிறக்டிஸ் வேணும் என்பதால, இப்படி பெரிய கண் அரிதட்டைப் பாவிப்பது நல்லது.

இனி நீங்கள் செய்வதற்கு ரெடியாகியதும்தான், மிகுதி வேலையைத் தொடரோணும், பிக்கோஸ்ஸ்ஸ்.. சீனியைக் கலந்துவிட்டால், உடனேயே சுட்டிட வேண்டும்.. இலை எனில் தண்ணியாகிடும்.

இப்போ ஒரு கப் இற்கு அரைக் கப் அல்லது முக்கால் கப் சீனி எடுத்து மாவுடன் கலந்து குழைக்க வேணும். தண்ணி சேர்க்கக்கூடாது, மாவில் இருக்கும் ஈரத்தன்மையுடன் சீனி கரைந்து வரும், அல்லது கையை மட்டும் தண்ணியில் தொட்டுத் தொட்டு குழைத்தால் போதும், 10 நிமிடம் அப்படியே விட்டாலே தன் பாட்டுக்கு மா குழைந்து வரும்.

இப்படியே விட்டேன்ன்..

பத்து நிமிடத்தில் இப்படி ஆச்சு..

இப்போ சுட ஆரம்பிச்சிடோணும், இல்லை எனில் இன்னும் தண்ணியாகிவிடும். இப்படிக் குட்டிக் குட்டி உருண்டைகளாக்கிப்போட்டு...

எண்ணெயை நன்கு கொதிக்க விட்டு, பின்பு உருண்டைகளை தட்டையாக பருப்பு வடைபோலத்தட்டி, ஸ்லோ ஃபயரிலேயே பொரித்தெடுக்க வேண்டும், அப்போதான் உருண்டையின் உள்ளும் மா அவிந்திருக்கும். நெருப்பு அதிகம் எனில், சீனி சேர்த்திருப்பதால் வெளிப்பகுதி டக்கெனக் கருகி விடும்.

ஆஆஆவ்வ் அதிராஸ் ஸ்பெஷல் சீனி அரியதரம் ரெடீஈஈஈ:)

இது என்ன தெரியுதோ? சுவீட் பொட்டாட்டோவும்[நாங்கள் வத்தாளங்கிழங்கு எனச் சொல்லுவோம்] சாதாரண பொட்டாட்டோவும், இது கிட்டத்தட்ட ஒரு கிலோ அளவு இருக்கும். அதன் அழகில் மயங்கி வாங்கினேன், சின்னவருக்கு மட்டும் இது ரொம்பப் பிடிக்கும்.

அதில் இதுவரை அவித்தே குடுப்பேன், இம்முறை அதிகம் என்பதால், பாதியைப் பொரித்து, உப்பு, தூள் எதுவும் போடாமல் பொரித்து எடுத்து அந்த சூட்டிலேயே உப்பையும் தூளையும் கொட்டிப் பிரட்ட வேண்டும், பொரியல் வகைகளுக்கு இப்படிச் செய்து பாருங்கோ... எண்ணெயும் பழுதடையாது, சுவையும் சூப்பர்.

ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா கந்தசஷ்டி பாரணையும் முடிஞ்சு போச்சு..  மகிழ்ச்சி, நிறைவு...
 இனி அடுத்து...:))

ஊசி இணைப்பு:
[ஸ்ரீராம்:-///"பிள்ளையாரப்பா... இருக்கற பிரச்னைகள் யாவும் சீக்கிரம் நல்லபடியா முடியணும்..."//
அதிரா:- ஹா ஹா ஹா...இதுக்கொரு மீம்ஸ் வச்சிருக்கிறேன்ன்.. போட்டு விடுறேன் விரைவில்:)..]
ஸ்ரீராமுக்குச் சொல்லியிருந்தேன் அதுதான் இது:)

ஊசிக் குறிப்பு:

சரி அப்போ புறப்படலாமோ?:).. மீண்டும் இன்னொரு இனிய சமையல் குறிப்புடன் உங்களைச் சந்திக்கும் வரை நன்றி கூறி விடை பெறுபவர் உங்கள் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய புலாலியூர்ப் பூஸானந்தா:)_()_.

கடுதாசி இணைப்பு:-
இக்கிழமை முழுவதும் மீ பிசியாக இருப்பதால், பதில் தர பலசமயம் தாமதமாகலாம்.. பல நாட்கள்கூட ஆகலாம்:).. அதனால கோபிச்சிடாதீங்கோ என இப்பவே மன்னிப்புக் கேட்கிறேன்_()_.
அப்போ இப்போ எதுக்கு அவசரமாக போஸ்ட் போட்டீங்க என நெ.தமிழனின் மைண்ட் வொயிஸ் கேட்குது:).. அது அம்முலு எங்காவது அந்தாட்டிக்கா அப்புறிக்கா எனப் பயணம் போயிட்டாலும் எனத்தான் அவசரப் போஸ்ட்:)... ஸ்ஸ்ஸ் அப்பா முடியல்ல:)
銏銏銏銏銏銏銏銏銏銏銏銏銏銏銏銏 

Sunday, 11 November 2018

 “எங்கள்புளொக்” இலிருந்து ஒரு  “நூல்வேலி”

ப்போ அதிராவின் போஸ்ட் தலைப்புப் பார்த்தாலே ரென்ஷன் வந்திடுதே:)) ஹா ஹா ஹா.. ஆரும் பயப்பிட்டு ஹார்ட் அட்டாக் வர வச்சிடாதையுங்கோ, எல்லாம் நல்ல விசயம் தான்:)..  ஹா ஹா ஹா:)).

Saturday, 3 November 2018

தக்காளி “காய்” வெள்ளைக்கறி..

வாங்கோ வாங்கோ எல்லோரும் வாங்கோ சுடச்சுடச் சுவையான டிஷ்:) உங்களுக்காகவே கனடாவில் இருந்து இறக்குமதி செய்து, சமைச்சுக் காட்டியிருக்கிறேன்.. ஆனா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆரும் டச்சூப் பண்ணக்கூடாதூஊஊஊஉ பிக்கோஸ்ஸ்ஸ் இது அதிராவின் கன்னிக் கறீஈஈ:)).