நல்வரவு_()_


Showing posts with label நான் எழுதும் கவிதைகள்...... Show all posts
Showing posts with label நான் எழுதும் கவிதைகள்...... Show all posts

Thursday, 31 January 2019

Sunday, 25 February 2018

கடவுள் நேரில் வந்தால்?:)

சமீபத்திலே திருமதி மிஸ்டர் அஞ்சு:) அவர்கள் என்னை ஒரு பேட்டி எடுத்திருந்தா:) பிறந்தநாளில்:), அதில் கேட்ட கேள்வியில் ஒன்றுக்கு பதில் கவிதையாக இருக்கு தருவேன் எனச் சொல்லி இருந்தனா:)).. அதுதான் இப்போ உங்கள் முன். 

Monday, 20 November 2017

ரவுள் நீளுதே:)

தேம்ஸ் இல் குதிப்பேன் காசிக்குப் போய்
நிரந்தரமாகத் தங்குவேன்:)
என மிரட்டியும் - நீ
வர மறுக்கிறாய்..!!

Thursday, 4 May 2017

நிலா.., ஹனிமூன் போயிருக்காம்:)

ப்பப்ப எனக்கு இப்பூடி விபரீத ஆசைகள்:) உதிப்பதுண்டு, மனதில் தோன்றியவுடன் கல்லெறி விழுந்தாலும் பறவாயில்லை என டக்குப் பக்கென எழுதிடுவேன் என் நோட் புக்கில்:).. சமீபத்தில் காதில் கேட்ட இரு வரிகளை வச்சு இரண்டு கவிதைகளாக்கிட்டேன்.. ஓடிவாங்கோ வந்து படிச்சு.. மகாகவி, கவிஞர் அதிராவை வாழ்த்துங்கோ:)..

Saturday, 16 February 2013

ஆவ்வ் பிறந்திட்டுதூஊஊஊஊஊ:)

சுகப் பிரசவம் தான்ன்ன்ன்:)..
பெயர் வச்சது, மீயும் என் கணவரும் சேர்ந்து, கலந்து, கதைச்சுத்தான்:).

பிறந்தது 16.02.2009. இன்று நான்காவது பிறந்ததினம்..
ல்லோரும் வாங்கோ வாழ்த்துங்கோ.. அதுக்கு முன்னம்.. மொய்ய்ய்ய்ய் ஐ வாசல்லயே எழுதிடுங்கோ:).. பரிசின்(மொய்யின்:)) தகுதிக்கேற்ப்ப.. பல்கனியா:), கலரியோ:), என சீட் நம்பர் கையில் கொடுக்கப்படும்:) அதற்குரிய இருக்கைகளில் அமர்ந்து, கேக் வெட்டும் காட்சியை கண்குளிரக் கண்டுகளியுங்கோ:).

கேக் வெட்டமுன் வானிலை அறிக்கை வாசிக்கப்படும்:), ஏனென்டால் வெளிநாடுகளில் காலநிலை அறிக்கைதான் முக்கியம்:).. இங்கு ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது... ஹலோ!!! ஹவ் ஆ  யூ?.. என்பதுக்கு அடுத்து வரும் வசனம், வெதர் பற்றியதாகத்தான் இருக்கும்..

முன்பின் அறிமுகமில்லாத ஒருவர்கூட எதிருக்கெதிர் சந்திக்க நேரின், நைஸ் வெதர், வொண்டபுல் வெதர், லவ்லி வெதர்.. இப்படி ஏதும் சொல்லிட்டுப் போவினம்.. அதுதான் இங்கத்தைய ஒரு நாகரீகமான உரையாடல்.

அதனாலதான் இப்பிறந்தநாளில்.. மீயும் வெதர்பற்றி வாசிக்கிறனாக்கும்:)).

வானிலை அறிக்கை...
வாசிப்பவர்: .. புலாலியூர் பூஸானந்தா..


மூன்று வாரமாக
மேகம் கர்ப்படைந்திருந்தது!
அக் கர்ப்பத்துக்கு காரணம்
சூரியன் தான், எனக் கூறி..
முகிலினங்கள் கர்த்தால் நடத்தின!
அதனானல் பூமிக்கு
சூரியன் தென்படவில்லை...

தைக் கேட்டு
மனமுடைந்த மேகம்..
தன் கர்ப்பத்துக்கு காரணம்
சூரியன் அல்ல எனவும்
இதனால் அப்பாவிப்
பூமியைத் தண்டிக்க வேண்டாம்
எனவும் அறிக்கைகள் விட்டது..!

தையும் ஏற்காமல் தொடர்ந்தும்
வழியடைப்புச் செய்தன முகில்கள்..
இதுக்கொரு தீர்வு காண வேண்டி..
மேகம் தன் கருவைக்
கலைக்க முடிவெடுத்தது..!

தனால் கடுமையாக
உடலைக் குலுக்கியது..
காற்றின் வெப்பநிலையைக்
குறைத்தது....!

ர்ப்பம் ஈடாட்டம் கண்டது..
அதன் வெற்றியாக
இன்று ஸ்நோத் தூறல்கள்
விழ ஆரம்பித்தன..
இது நீடித்து..

ரும் வெள்ளிக்கிழமை
அதிக ஸ்நோவோடு
மேகத்தின் கர்ப்பம்

முழுவதும் கலைக்கப்படுமென
எதிர்ப்பார்க்கப் படுகிறது :)..

இது போனமாதம் இங்கத்தைய வானிலை அறிக்கையை கேட்டவுடன், அதிரடியாக என் மனதில் உதித்த கவிதை, ஏற்கனவே சிலருக்கு இது தெரியும்.. இருப்பினும்..:))..

ஓ நாங்க படிச்சிட்டமே எனச் சொல்லிட்டு ஓடாமல்.. ஆஹா.. ஓஹோ சூப்பர்ர்.. வைரமுத்து அங்கிளையே மிஞ்சிட்டீங்க:)எண்டெல்லாம் புகழ்ந்து சொல்லோணும் சொல்லிட்டேன்ன்ன்... பாருங்கோ:))

இல்லாட்டில் பட்டினைத் தட்டிடுவேன்ன்ன்:)) எங்கிட்டயேவா?:).
==============================================

ஊசிக்குறிப்பு:
புளொக் எப்ப ஆரம்பித்தேன் என்பதே எனக்கு மறந்துபோயிருந்தது, ஒருதடவைகூட இதை நினைவு கூர்ந்ததில்லை இதுவரை. இம்முறை புளொக்கை அழகாக வடிவமைக்கும்போது, மணிதான் நினைவு படுத்தினார்.. 4ஆம் ஆண்டு நிறைவு வருகிறதே என, அதனால்தான் இந்த திடீர் கேக் கட்டிங்:).. நன்றி மணி.
===============================================
 “வாழ்க்கையில் பயம் இருக்கோணும் - ஆனால்
வாழ்க்கையே பயம் ஆகிடக்கூடாது”...
இப்படிக்கு புலாலியூர் பூஸானந்தா:)
===============================================

Wednesday, 5 September 2012

நான் ஒரு கொலை செய்யோணும்:)


ணவருக்குத் தெரியாமல்..
பிள்ளைகளுக்குப் புரியாமல்..
போலீசில் மாட்டாமல்...’
கொலை ஒன்று செய்யோணும்..

து கொலைதான்!!!
ஆனா உருவமில்லாதது..
எப்பவுமே கண்ணுக்குத் தெரியாது..
ஆனா அப்பப்ப எட்டிப்பார்க்கும்..

து ஆருக்காகவும் அல்ல..
எனக்காக  நான் செய்யப்போகும்
கொலை - ஏனெனில்
என் உயிர் நண்பி!!!

கொஞ்சம் தொலைவில் இருப்பவ..
அதிரா என்றால் அவவுக்கு உயிர்..
அன்பென்றால் அப்படியொரு அன்பு..
அக்கறை எனில் அதை,
அவவிடமே கற்றுக்கொண்டேன்ன்..

வவின் அறிவுத் திறமை பார்த்து
நான் வியந்த தருணங்கள் பல..
அவ என்னோடு, மனம் திறந்து
பாசம் காட்டிக் கதைச்சால்..நான்
பத்து நாள் உறக்கமின்றித் தவிப்பேன்..

திலுமே குறைந்தவ அல்ல
ஆனாலும், அவவிடம் ஒரு குறை
கோபம் வந்தால் - தான்
என்ன கதைக்கிறேன் என்பது
அவவுக்கே புரியாது!!

கோபம் அடங்கியதும்
கேட்டால் சொல்கிறா
 “நான் கோபிக்கவில்லை
என்னுள் உறங்கிக்கொண்டிருக்கும் 
மிருகம் தான், விழித்துத் திட்டியது
என்னை உனக்குத் தெரியாதா” என...

==================== இடைவேளை==================
நீயா ஏசியது:) என் அன்பே...  நீயா ஏசியது...:))... 
அது பிபிசில சிட்டுவேஷன் சோங் போகுதூஊஊஊஊஊ:)) என்னைக் கரெக்ட்டாப் புரிஞ்சு:) அப்பப்ப சிட்டுவேஷன் சோங் போடுவது இந்த பிபிசி வானலை உறவுகள் மட்டும்தேன்ன்ன்:))
================கவிதை:) தொடர்கிறது===============

னக்கோ பயம், கோபம் அதிகமாகி
இப்படி நிதானமிழந்து,
கொலை வரை போய்விட்டால்???..
என் நண்பியைக் கொலைகாரியாக
விடமாட்டேன்ன், அதுக்கு முன்
நான் ஆகிறேன்  “கொலையாளியாக”!!!

னக்கு என் நண்பி வேணும்
அந்த மிருகம் வேண்டவே வேண்டாம்
அது "buy one get one free" போல
கூடவே வருது நண்பியோடு!!!

தனால் நான் ஒரு 
கொலை செய்யோணும்”
அந்த மிருகத்தைக்
கொல்லோணும்!!!..
                ....... இப்படிக்கு கவிஞர் பூஸானந்தா:)

ஊசிக்குறிப்பு:
இதுக்கு “லேபல்” கவிதை என்றுதான்:))... போடுவேன்:)) அதைப் பார்த்திட்டு கவிஞர்கள் ஆரும் அடிக்க வரப்பூடா:)))... இது சாதாரண கவிதை அல்ல
அதையும் தாண்டிப்.. புனிதமானது!... புனிதமானது!... அதுதாங்க “பூஸ் கவிதை”:).

ஊசி இணைப்பூஊ:):
படிச்சதில் பிடிச்சது....
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஒரு பெண் தன் அழுத்தமான பொறுமையினால் 
ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்கலாம், 
அடங்காப்பிடாரித்தனத்தாலே, அதை அழித்து 
வாழ்க்கையை நிர்மூலமாக்கிக்கொள்ள வேண்டி ஏற்படும்.. 
எங்கட கண்ணதாசன்...
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



Friday, 7 October 2011

ஆஆஆ.. ரத்துஊஊஊ:(


விவாகரத்து!!!

ப்போ வெளிநாடுகளில், குறிப்பாக நம்மவரிடையே விவாகரத்து, ஒரு விளையாட்டுப்போல பெருகி வருவதைக் காண முடிகிறது. பெண்கள்தான் விவாகரத்துக் கேட்கிறார்களாம். ஊரில் எனில் எதுக்கும் கணவரின் உதவி தேவை என்பதாலோ என்னவோ, எது வந்தாலும் சகித்துப் போகிறார்கள்???.


ஆனால் வெளி நாடுகளில் தனியாக இருக்கும் பெண்களை, அதிக அக்கறையாக அரசாங்கம் பார்த்து, அதிக சலுகைகளை வழ(ள:))ங்குகிறது, என்பதாலோ என்னவோ, கணவர் முறைத்துப் பார்த்தாலே,  “அடிச்சுப்போட்டார்ர்ர்ர்ர்” எனப் போலீஸுக்குப் போன் பண்ணினால், போலீஸ் ஓடிவந்து, எக்கதையும் கேட்காதாம், முதலில் காப்புப் போட்டுக் கூட்டிப்போய், 3,4 நாட்கள் கம்பியினுள் வைத்துப்போட்டுத்தான், விளக்கம் கேட்பார்களாம். பெண்களுக்கே இங்கு முன்னுரிமை.


அதனால் வெளிநாடுகளில் ஆண்களுக்கு மனைவியோடு மோத சரியான பயம்.. என சமீபத்தில் கேள்விப்பட்டேன்:)). இது நகைச்சுவைபோல தோன்றினாலும், எவ்வளவு கொடுமையான விடயம். நம் நாட்டுப் பெண்களால், நம் கலாச்சாரங்களைப் பின்பற்றி வளர்ந்தவர்களால், எப்படி இப்படி முடிகிறது, என்பதை எண்ணிப்பார்க்க முடியவில்லை.


கடசிவரை ஒத்துபோகாத, முடியாத விடயமான விவாகரத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சின்னச் சின்னக் காரணங்களுக்கெல்லாம், விவாகரத்து என ஓடினால் என்ன செய்வது?. திருமணம் முடித்து குழந்தைகள் கிடைத்தபின்பு, குழந்தைகளுக்காகவேனும் அஜஸ்ட் பண்ணி வாழப் பழகலாமே. பெற்றோர் பிரிந்தால் பாதிக்கப்படப்போவது, குழந்தைகள்தானே. எவ்வளவு வசதியாக வாழ்ந்தாலும் குழந்தைகளின் மனதில் ஒரு ஏக்கம் குடிகொண்டு விடுமல்லவா.


எனக்குத் தெரிந்து, இரு குடும்பங்கள்(கனடாவில்), கணவனை வீட்டுக்கு வரப்படாது என மனைவி சொல்லிப்போட்டார், அதனால் தனி அறைகளில் கணவன் தங்கியிருந்து, வீட்டுக்குப் பணம் கொடுத்து, குழந்தைகளையும் பார்த்து வருகிறார்கள். கணவன்மார் சொல்கிறார்கள், 45 வயதாகிவிட்டது, இனி என் குடும்பத்தைவிட்டு இன்னொருவரை நாட முடியுமோ? இப்படியே காலத்தை ஓட்ட வேண்டியதுதான் என உழைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பல கதைகள் அறிந்திருக்கிறேன்.


சமீபத்தில் பூஸ் ரேடியோவில்:) கேட்டேன், ஒருவர் சொல்கிறார், நானும் என் மனைவியும் விவாகரத்தாகி 20 வருடங்கள் ஆகிவிட்டது, ஆனால் இன்றுகூட மனைவியோடு போனில் பேசி சுகம் கேட்டேன், நான் ஊருக்குப் போனபோதுகூட என் மனைவிதான் என்னை எயார்போர்ட் வரை வந்து வழியனுப்பி வைத்தார். எமக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றின, அதனால் பிரிந்தோம், இப்போ நான் என் பிள்ளைகளுக்கு கிட்டவே ஒரு வீட்டில் தனியாக இருக்கிறேன், மனைவி பக்கத்து நாட்டில் இன்னொரு பிள்ளையோடு இருக்கிறார் என. ஏனோ இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விவாகரத்துப் பெறாமலேயே இப்படி இருந்திருக்கலாமோ?.


இங்கிருக்கும் ஒரு மகசினில் படித்தேன், ஒரு white boy சொல்கிறார், தான் ஒரு பெண்ணோடு இருந்தாராம் ஒன்றாக. தமக்குள் எல்லாமே ஒத்துப்போனதாம், அப்பெண், நல்ல குணமாம், அழகாம், தனக்கு எல்லாமே பிடித்திருந்ததாம், ஆனால், ஒரே ஒரு பிரச்சனையாம், என்னவென்றால், அவவின் கால்கள் எப்பவுமே ஐஸ் கட்டிபோல குளிராம். நல்ல ஆழ்ந்த உறக்கத்தில், அவவின் கால் தன்னில் பட்டால், தான் அப்படியே துடித்துப்போய் விழிப்பாராம். இப்படி வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க முடியாதே என...


அதனால் தான் அவவை விட்டு மெதுவாக விலத்தி விட்டேன், அவவுக்குக் காரணம் சொல்லவில்லை, சொன்னால் கவலைப்படுவா என, கொஞ்சம் கொஞ்சமாக விலத்தி விட்டேன் எனச் சொல்லியிருந்தார்... சரி விஷயத்துக்கு வந்தாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்:))).


இந்தக் கவிதை எழுதி.. 2 வருடத்துக்கு மேலாகப்போகிறது... இன்றுதான் அதுக்கு காலநேரம் அமைஞ்சிருக்கு:))

நாளைக்கு
முடிவு தெரிந்துவிடும்
நமது ஏழு வருட
திருமணபந்தத்தின்
இறுதி அத்தியாயம்
அரங்கேறப்போகிறது!


எனக்கு
நெஞ்செல்லாம்
வலிக்கிறது
ஏன் உன்னில் இந்தத் 
திடீர் மாற்றம்?!


ஒற்றைக் காலில்
நின்றுதானே- என்னை 
ஒருதலையாய்க் 
காதலித்தாய்!


உன் பெற்றோரின்
எதிர்ப்பையும்
முறியடித்து
என்னைக்
கைப்பிடித்தாய்!


சிவனே என்று
என்பாட்டில் இருந்த
என்னை - உன்
கண் ஒளியைக்
காட்டி -உந்தன்
இதயத்தில்
சிக்க வைத்தாய்!


திடீரென
என்ன வந்தது
என்னை ஏன்
வெறுக்கிறாய்?
நான் நானாகத்தான்
இருக்கிறேன்
நீதான் நீயாக இல்லை!


பொழுது விடிந்ததும்
நம் விவாகரத்து
அறிவிக்கப்பட்டுவிடும்
சிந்திக்க இன்னும்
அவகாசம் இருக்கிறது!


உன் முடிவை
மாற்றுவாயா? இல்லை,
விவாகரத்துப் பெற்றபின்
நான் - எனக்கு
கொடுக்கப்போகும்
இறுதிமுடிவை
உனக்குச் சொல்லலாமா?!
====================__()__=====================

பின் இணைப்பு:
இது பூஸ் வானொலி நிலையம், வானிலை அறிக்கை.. வாசிப்பவர் மியாவ்வ்வ்வ்வ்:)))).


இன்று மேகம் சற்று தெளிவாகக் காணப்படும், வானத்தில் அங்காங்கு பூஸ் குட்டிகள் தென்படும்:)).. குளிர் தாக்கம் அதிகமாகும். பூஸ் குட்டிகளைப் பார்த்து வாகனத்தை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாகிட வாணாம் என, பூஸ் வானொலி நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது:))).


இது இன்றுகாலை எடுத்த படம், நேரிலே சூப்பராக இருந்திச்சா... காரில் ஓடும்போதே “கிளிக்” பண்ணிட்டேன்.


கடவுளே என்ன இது வட்டம் வட்டமாக இருக்கு, பூஸ் குட்டியேதும் தெரியேல்லையே என அடிக்கக்கலைக்கப்போகினமே.... உஸ்ஸ்ஸ்ஸ் முருங்கை உச்சிக்குப் போயிட வேண்டியதுதான்.... ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))).
======================================================
சொன்னால் புரியாது
சொல்லுக்குள் அடங்காது
நீங்கெல்லாம் என்மேல
வச்ச பாசம்....
.................. வேல் +வெப்பன்:)))))
====================================================

Friday, 10 June 2011

காணாமல் போன நண்பிக்கு!!!!



ஒரு கற்பனைக் கவிதை:)


திருவிழாக் கூட்டத்திலே
தொலைந்துபோன சங்கிலிபோல்
இடம் பெயர்ந்த மக்களோடு
காணாமல் போன என் நண்பியே!!

நீ எங்கே இருக்கிறாய்?
முகவரிகள் மாறியதால்
தொடர்புகள்
துண்டிக்கப்பட்டனவே!!

பின்புறத்தைப் பார்த்து
நீயாக இருக்காதா
என எண்ணி ஓடிச்சென்று
முகம் பார்த்ததும் - அது
நீயில்லை என்று எத்தனைநாள்
ஏமாந்திருக்கிறேன்!!

என்னைப்போலவேதான்
நீயும் எங்காவது
ஏமாந்துகொண்டிருக்கிறாயா?!!

நம் உருவங்கள்
மாறியிருக்கலாம் - ஆனால்
என்றைக்குமே - நம்
நட்பு மாறாது!!

ஏனெனில்
முகம் பார்க்க முன்பே
பேனாவினால்
கருத்தரித்த நட்பல்லவா
நம் நட்பு!!

*********************************************************************************
ஊசி இணைப்பு:)
 
“பிறர் என்ன சொன்னாலும், அவர்களுக்காக உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாதீர்கள்,உங்கள் மனச்சாட்சி என்ன சொல்கிறதோ, அதன்படியே உங்கள் வாழ்வை அமைத்துக்கொள்ளுங்கள்”.

**********************************************************************************


விடுங்கோ தம்பி வாறன்:), ஏதோ சத்தம் கேட்குது.. ஓஓஓஓ... பிளேன்போலதான் இருக்கு.... கொஞ்சம் பதிஞ்சதுபோல போகுதே.. எப்பத்தான் லாண்ட் பண்ணப்போகுதோ???:(.....

**********************************************************************************
கொசுக்கடிக்கு சே..சே... கொசு மயிலுக்கு தம்பி அனுப்பினவர்... இங்க மட்டுமில்ல, தம்பிக்கு எங்கபோனாலும் இலவச:) அனுமதியும் பல்கனில சீற்றும் குடுக்கினம்ம்ம்ம்ம்ம்ம்ம்:). 


**********************************************************************************

Sunday, 17 April 2011

எனக்குத் தெரியும்:)... எனக்குத் தெரியும்:)..

எல்லோரும் முறைப்பீங்க என் கவித:) பார்த்து என எனக்கு நல்லாவே தெரியும்... அதுக்காக நானே என் கைப்பட, என் ஒரே ஒரு கிட்னியைப் பாவித்து எழுதிய “அருமந்த கவிதையை” , என் பக்கத்தில நானே போடத் தயங்கினால்...

அதைவாங்கி ஸாதிகா அக்கா போடுவாவா?, இல்ல ஜலீலாக்கா போடுவாவா?, இல்ல இமா போடுவாவா? இல்ல ஆசியாதான் போட்டிடுவாவா தன் பக்கத்தில, அதுவுமில்லாட்டில் இடிச்சு இடிச்சு பக்கத்திலயே ஒட்டிக்கொண்டிருந்தாலும் இலா தான் போட்டிடுவாவா?.. போனாப்போகுதென வான்ஸ்ஸ் கொண்டுபோய் போட்டிடுவாவோ? இல்ல இன்னும் எல் போர்ட்டாகவே இருக்கிறமே இக்கவிதையைப் போட்டாவது பாஷாகிடுவமே என சந்துதான் தூக்கிப்போய் போட்டிடுவாவோ?:))).

யாருமே போடமாட்டாங்க:((, சோ... நான் போட்டேதான் ஆகவேணும்... ஏன் எண்டால் இது முளுக்க முளுக்க என் உழைப்பாச்சே....

உஸ் முறைக்காதீங்க... இப்ப என்ன காலம்? காலத்துக்கேற்றபடி சிந்திக்கத் தெரியோணும் என்னைப்போல.... அதைவிட்டுப்போட்டு முறைக்கப்பிடா.... எனக்குத் தெரியும் பின்னூட்டம் போடமாட்டீங்க ஆரும் என.. சரி சரி படிச்சிட்டாவது போங்க மக்காள்ஸ்ஸ்ஸ்..

=====================================================

இளவேனிற்காலம்

இவை சுடச்சுட எடுத்த படங்களே...

புற்றாலே புறப்பட்ட
ஈசல்களாக
பார்க்குமிடமெல்லாம்
மக்கள் கூட்டம்!!

ஆடையின்றி இருந்த
பசுமரங்களெல்லாம்
பச்சை இலைகளையும்
பலவர்ணப் பூக்களையும்
கொண்டு - தம்
மானத்தை மறைக்க
முயல்கின்றன!!

வெறிச்சோடியிருந்த
"பார்க்"குகளெல்லாம்
குழந்தைகளின்
குதூகலத்தைக் கண்டு
புத்துயிர் பெறுகின்றன!!

அரையும் குறையுமாக
இருந்த குப்பைத்
தொட்டிகளெல்லாம்
நிரம்பி வழிகின்றன - வீடுகள்
சுத்தப்படுத்தப்படுவதால்!!

இறந்து விடுவோமா
என பனிக்கட்டிக்குள்ளே
ஏங்கிக்கிடந்த - புல்
வேர்களெல்லாம்
விட்டோமா பாரென
விட்டத்தைப் பார்த்துப்
பசும்தரையாகின்றன!!



இருட்டையும் குளிரையுமே
கண்டு விறைத்திருந்த
கண்களெல்லாம் 
வெளிச்சத்தைக்
கண்ட நாணத்தில்
கறுப்புக்கண்ணாடியைத்
தேடுகின்றன -தம்மை
மறைத்துக்கொள்ள!!






நீயின்றி நானில்லை -என
ஒட்டி உறவாடிய
குளிர்கால அங்கிகளெல்லாம்
சிறிது ஓய்வெடுக்கவென்று
அடிப்பெட்டியிலே
அடைக்கலமாகின்றன!!

காணாத தூரத்திலிருந்த
பறவைகளும் அவற்றின்
அழகிய கூக்குரல்களும்
கண்ணுக்கும் காதுக்கும்
கவிமழையாகின்றன!!



நானும் இதுவரை
போட்டிருந்த என்
முக்காடை நீக்கி,
மெதுவாகப் பார்க்கிறேன்
ஆம் - இளவேனில் காலம்
ஆரம்பித்துவிட்டதை!!

====================================================

ஊசி இணைப்பு:

======================================================
ஆயிரம் தான் சொல்லுங்கள்
 கல்லாய் நடக்கும் மனிதர்களை விட
 கல்லாய் கிடக்கும் கல்
மேன்மையானதே
======================================================

Sunday, 18 July 2010

என் பரிசுப்பொருள் நீதான்..

நான், என் நண்பியைப் பிரிந்து வந்தபின்னர், முதன்முதலாக அவவுக்குப் போட்ட கடிதத்தோடு, இக் கவிதையையும் எழுதியிருந்தேன்.

இதை, உண்மைகளோடு, சில கற்பனைகளையும் சேர்த்து எழுதியுள்ளேன்.


என் நண்பியே!!!
ஏனோ தெரியவில்லை
இன்று உன் ஞாபகம்
அடிக்கடி வருகிறது
இதயமெல்லாம் வலிக்கிறது..

ஓ.. இப்போதுதான் தெரிகிறது
இன்று திகதி ஆகஸ்ட் 4
நாம் பல்கலைக்கழகத்திலிருந்து
பிரிந்து வந்த இறுதி நாள்,
நாம் நண்பராய்ப் பிரிந்த
அந்தக் கொடிய நாள்
எமது 15 வருட பள்ளி,
கழக நட்பின் கடைசி நாள்..

நான் பிரியாவிடை பெற்று
பிரிந்தபோது - நீ
என் முகம் பார்த்து
வழியனுப்ப முடியாமல்
நிலம் பார்த்து நின்றாயே..

நான் என் அப்பாவுடன்
வண்டியில் ஏறிச்
சென்றபோது நம் வாகனத்தின்
சிகப்பு விளக்குகள்
பத்திப் பத்திச் சென்று
எம் ரீ கடைச் சந்தியில்
மறைந்திருக்குமே..

இல்லை
நீ அதை நிட்சயம்
பார்த்திருக்க மாட்டாய்
ஏனெனில் உன் கண்ணீர்
அவற்றை மறைத்திருக்கும்


நண்பியே - நீ
அடிக்கடி சொல்வாயே
பிரிந்தபின் சந்திக்க நேர்ந்தால்
பரிவுடன் ஓடிவந்து
பழைய நண்பர்களாகவே
கதைக்க வேண்டும்
இவைதான் என்
எதிர்பார்ப்புகள் என்று
என்னுடையதும் அதே...


“நெஞ்சிருக்கும் வரை
நினைவிருக்கும்
அந்த நினைவினில்
உன் முகம் நிறைந்திருக்கும்”
நண்பியே!!!
என் கல்விக்கால
வாழ்க்கையின்
பரிசுப்பொருள் நீதான்!!!!.


இதை இப்போது படிக்கும்போது, பெரிதாக ஏதும் தோன்றவில்லை, ஆனால் அப்போதிருந்த பிரிவின் வேதனை, நெஞ்செல்லாம் கனத்ததுபோல, சாப்பிடமுடியாமல்... எதைப் பார்த்தாலும் நண்பியின் நினைவாக... அந்த வயது.... எல்லாம் சேர்ந்து, இக்கவிதை கிடைத்ததும், நண்பியிடமிருந்து பதில் வந்தது, அன்று முழுவதும் தான் சாப்பிடவுமில்லை, அழுத அழுகை யாருக்குமே தெரியாதென.

அதுக்கு முக்கியமாக இன்னொரு காரணம் நம் நாட்டுப் பிரச்சனை. நினைத்தவுடன் போக முடியாது, இனிமேல் நாம் சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்குமா என்ற ஏக்கம். நாம் இருவரும் பக்கத்துக்கட்டிலிலேயே, நித்திரையாகும் வரை கதைப்போம், ஒன்றாக உடையணிந்து, சாப்பிட்டு, கதைத்து.... இருவருமாகவே இருந்துவிட்டமையால்... திடீரெனப் பிரிந்ததும் சொல்ல முடியாத ஒரு துன்பம்.

பின்னர் அவவின் திருமணம் முடிந்து கணவரோடு எயார்போட்டுக்கு போனபோது, சொன்னார், ஒரு வீட்டிலே நிற்பேன் எப்படியாவது வந்துவிடுங்கோ, இதை விட்டால் இனி எப்போ சந்திப்போமோ தெரியாதென, நான் அப்பாவுடன் ஓடிச் சென்றேன், அவவைப் பார்த்ததும், கணவரைக்கூடக் கவனிக்காமல், ஓடிச்சென்று பாய்ந்து கட்டிப்பிடித்து அழுதது.... (பூனை என்றால் பாயும்தானே என நினைத்திடாதீங்கோ... அது அந்நேரத்து பீலிங்ஸ்ஸ்ஸ்..:)) இப்பவும் கண்ணில் நிற்கிறது.


நேற்று, அந்த நண்பி போன் பண்ணிச் சொன்னார், அதிரா வாற கிழமை உங்களிடம் வருவதாக இருக்கிறோம் என, அதுதான் அந்த நாள் ஞாபகம் வந்துவிட்டது.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நண்பன் நல்லவன் என்றால் நம்பிவிடு
தீயவன் என்றால் விலக்கிவிடு,
நம்பியவனை விலக்காதே
விலக்கியவனை நம்பத் தொடங்காதே
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Monday, 28 June 2010

ஆருடைய தப்.....பூ:))))


யார் தப்பு??


சத்தியமாக என் “தப்பு” இல்லிங்கோ..., நான் ஒரு அப்பாஆஆஆஆவி...:)

பாடசாலை செல்லும்போது
உன்னை - உன்
கைபற்றி கவனமாக
அழைத்துச் செல்வேன்!!

பாதி வழியிலே
கால் வலிக்கிறதென்பாய்
என் முதுகில் - உன்னை
உப்பு மூட்டையாகச்
சுமந்தே செல்வேன்!!

நாவற்பழம் கேட்பாய்
என் தோழில்
உனைத் தாங்கி
பழம் பறிக்க வைப்பேன்
எனக்கும் தந்து
நீயும் உண்பாய்!!

எனக்கு
பல்கலைக்கழக
அனுமதி கிடைத்தது
கேட்டு - அந்த
அறியாத வயதிலும்
அனைவரைக் காட்டிலும்
அதிகம்
ஆனந்தப்பட்டவள் நீ!!

அந் நாளில், உன் அம்மா
உனது கையை, எனது கையில்
ஒப்படைத்து - கவனம்
என்று கூறி பாடசாலை
அனுப்பி வைப்பார்!!

உனக்கு வேலியாக
இருந்த எனக்கு
இன்று - வேலி
அமைத்துவிட்டனர்
உன் பெற்றோர்!!

நீ என்னுடன்
இருந்தபோது
நான் எதுவுமே
எண்ணியதில்லை
ஆனால் - இன்று
என்மனம் தவியாய்த்
தவிக்கிறது
உனைக் காண!!

நீ வயதிற்கு வந்தது
உன் தப்பா - இல்லை
கடவுளின் தப்பா?
தவிப்புடன் நான்!!

நம்பமாட்டீங்களோ? சாமியைத் தொட்டுச் சொல்கிறேன்....
இது என் கிட்னியிலிருந்து, உருவாகிய கவிதை.....

பூ((பின்)) இணைப்பு:
நான் வளர்க்கும் செவ்வந்திப் பூஊஊஊஊஊ...