நல்வரவு_()_


Sunday 11 June 2023

 பாதி ஞானி, ஆகிவிட்ட அதிரா👧

 


வாங்கோ வாங்கோ ஏற்கனவே அதிரா ஒரு ஞானி என்பது, என் தேம்ஸ்கரை ஆச்சிரமத்தில, எல்லோருக்கும் நான் தீட்சை கொடுக்கும்போதே உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்:), இருப்பினும் எல்லோருக்கும் இங்கின மறதி அதிகமாகிவிட்டதால அடிக்கடி சொல்லவேண்டிக் கிடக்கே கர்ர்ர்ர்ர்:)).

சரி சரி இப்போ எதுக்குப் பாதி ஞானி எனச் சொல்றேன் எண்டுதானே ஓசிக்கிறீங்க:)), அதுவந்து பாருங்கோ, கங்காதேவியில போய் முக்கோ முக்கென முக்கி எழும்பி வந்தேனாக்கும்:).. 


இதில பாருங்கோ, என்னைச் சுற்றி இருக்கும் ஆரையும் எனக்குத் தெரியாது, அங்கு குளிக்க வந்திருப்போர் அவர்கள்... சங்கிலி இருக்குது, அதை இறுக்கிப் பிடிச்சபிடியில குளிக்க வேண்டியதுதான்...

                           

அதனால பாதி ஞானி, இனிப்பாருங்கோ காசிக்குப் போய், அங்கிருக்கும் குட்டிச் சிவனுக்குப் பால் அபிசேகம் செய்யலாமாமே, அப்பூடிச் செய்திட்டால் மீ முழு ஞானியாகிடுவேன்:))..

உங்களுக்குத்தான் தெரியுமே, சுவிமிங் ப்பூல் போனால்கூட, தலையைத் தண்ணியில வைக்காத நான், ஹரித்வார் போய், தலையை உள்ளே வைக்கோணுமாம் எனச் சொன்ன இடத்தில, மூக்கைப் பொத்திக் கொண்டு ஒம்பேதூஊஊ தடவை முக்கி மூழ்கி எழும்பினேனாக்கும், அதனால அதிராவில, அங்கின இங்கின ஒட்டியிருந்த குட்டித் தோஷங்கள்கூட இப்போ நீங்கிப்போச்ச்ச்ச்:)).  ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சு, கீதா...... ஆருமே இப்போ என்னைத் தொடக்கூடாதாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) 3 அடி தள்ளித்தான் நிற்பேன் நான்:))... ஆண்டவா மறுபடியும் கல்லெடுக்கப் போயினமே:).. என் வாய்தான் நேக்கு எதிரி.. இனி நான் பேச மாட்டேன் பேசமாட்டேன்:)) ஹா ஹா ஹா[சிரிக்க மாட்டேன் எனச் சொல்லலியே:)]

ஆனா அங்கு கங்கை நதி என்னா ஸ்பீட்டா ஓடுறா தெரியுமோ, அடிச்சுப் பிரண்டு ஓடுறா, நல்ல உயரத்துக்கு கங்கை ஓடுறா, ஆனா அவ்வளவு உயரத்திலும் முழுக்க முழுக்க மண்ணாக இருக்குது தண்ணி, அதுதான் ஏனெனப் புரியவில்லை எனக்கு.உடுப்பு, உடம்பெல்லாம் ஒரே மண், நான் நினைச்சிருந்தேன், கங்கை எனில் மண் இல்லாமல் பளிங்குபோல இருக்குமென, ஆனா தண்ணி கலங்கலாகவே இருந்துது.

அங்கு கங்கை நீர் எடுத்து வருவதற்கென பிளாஸ்ரிக் கலன்கள், போத்தல்கள் விற்கிறார்கள், நான் கையில காசோடு ஓடிப்போய், அங்கு வித்துக் கொண்டிருந்த தம்பியிடம் விலை கேட்டேன், இங்கிலிசில, தமிழ் ல எல்லாம் கேட்டேன், அவருக்குப் புரியவில்லை, அவர் சொல்வது எனக்குப் புரியவில்லை, விரல்களை நீட்டி சைன் லங்குவேஜ் லயும் பேசிப் பார்த்தேன்[நேக்கு கொஞ்சம் தெரியுமாக்கும் இது, அஞ்சுவோட கதைப்பதற்காகவே பழகினேன்:) ஹா ஹா ஹா].. ம்ஹூம் அவருக்கு எதுவும் புரியவில்லை..

பின்பு கொஞ்சம் தள்ளி நின்ற ஒருவரைக் கூப்பிட்டுக் கேட்டு , அவர் சொல்லி வாங்கி வந்து, கங்கைத் தீர்த்தம் எடுத்து வந்தால் மூடி சரியில்லை, ஊத்துப்படத் தொடங்கிட்டுது, பின்னர் போத்தலில் ஊற்றி ஸ்கொட்லாண்ட் கொண்டு வந்திட்டோம்.

ஹரித்வாரில் ஒரே ஒரு பிரச்சனை, உடுப்பு மாற்றுவது வசதிக்குறைவு, இருப்பினும் குட்டிக் குட்டி அறையாகக் கட்டியிருந்தது, அதனுள் பலரும் உடுப்புக்களைப் போட்டு விட்டுப் போயிருக்கிறார்கள், சுத்தம் இல்லை, ஏதோ மண்புழுமேல் நிற்பதைப்போல இருந்தது, உடுப்பு மாற்றும் போது. 

மற்றும்படி, கங்கை நதி என்றாலே உடம்பெல்லாம் ஒரு மகிழ்ச்சிப் பிரவாகம், அதைத்தொட்டுப் பார்த்தபோது இருந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை... 

அங்கு எனக்குப் பிடிச்ச சிற்றுண்டி, பக்கோறா வகைகள்தான்(சைவம்), அதிலும் அங்கு ஸ்பெஷல் பிரெட் பக்கோடா, அவற்றோடு சாயா:) கிடைக்கும் அதுவும் மண் கப்பில்... என்னா சுசி:) தெரியுமோ...


இன்னும் அதன் வீடியோ யூரியூப்பில் பதிவேற்றவில்லை, எடிட் பண்ண மூடு வரோணும் எல்லோ ஹா ஹா ஹா..

அதனால ஹையா ஜாலி தப்பித்தோம் எனக் குதிக்காதீங்கோ... அது இல்லாட்டில் என்ன:), இதோ அதிராவின் வட இந்திய.. வீடியோவில ஒன்று பொற்கோயில் வீடியோ, இதைப் பாருங்கோ, சப்ஸ்கிரைப் பண்ணாதோர் பண்ணோணும்ம்ம்ம்ம்ம்:)).. இல்லை எனில் இரவைக்கு சூரியக்காரக் கிழவி துரத்துவா கனவில:), ஹா ஹா ஹா எப்பூடியெல்லாம் மிரட்ட வேண்டிக்கிடக்கு:))

இது தேனீர் இடைவேளை விட்டேனாக்கும்:)
=========================================================

என் கார்டினில் இந்த கபேஜ், வெங்காயம், புரோக்கோலி எப்பூடி மூசி மூசி வளருது பாருங்கோ... வீடியோவில் இருப்பதற்கும் இதுக்கும் எவ்ளோ வித்தியாசம்.....

இது என் கார்டினில் முதல்(கொஞ்சமா) அறுவடை, சுண்டல் செய்து சாப்பிட்டாச்சு...

என் கார்டின் வீடியோப் பார்க்க விரும்பினால்... இதில் பார்க்கலாம்...

இம்முறை நிறையச் சொல்லிட்டேனோ, அதனால பெரிய மனசு பண்ணி இத்தோடு முடிச்சிடுறேன்:)) நன்றி_/\_ வயக்கம்:)..
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சிந்திப்பதற்காக ஒரு ஊசிக்குறிப்பு:


ஞான ஊசி இணைப்பு:)
நம்மிடம் ஏதுமில்லை என நினைப்பது ஞானம்:)
நம்மைத்தவிர ஏதுமில்லை என நினைப்பது ஆணவம்:)....

இவ்வரிய தத்துவத்தை உங்களுக்காகக் கண்ணதாசன் அங்கிளிடம் இரவல் எடுத்து வந்திருப்பவர்... உங்கள் பண்புக்கும் பாசத்துக்கும் நேசத்துக்கும் நீதிக்கும் நியாயத்துக்கும் நேர்மைக்கும் எருமைக்கும்:).. பாத்திரமான.. தேம்ஸ்கரை ஆச்சிரமத்தில் டெய்லி தீட்சை கொடுத்துக் கொண்டிருக்கும் புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்:)).

100 comments :

 1. என்னது கங்கை மகளா !!!! சாமீ இது பார்த்து என் கண்ணு இப்போ கலங்கலா தெரியுது

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு வாங்கோ, ஆனா 3 அடி தள்ளி நிண்டு பேசோணும் ஜொள்ளிட்டேன்ன் ஹா ஹா ஹா..

   /// என் கண்ணு இப்போ கலங்கலா தெரியுது
   ///
   அது வயசானாலே இப்பூடியெல்லாம் வருவது நோர்மல்தானே:)) அதனால எங்களுக்குப் புரியும் நீங்கள் யோசிக்க வேண்டாம், நாம் தப்பா நினைச்சிடுவோமோ என ஹா ஹா ஹா:))

   Delete
 2. பாதி ஞானிக்கும் முழு ஞானிக்கும் என்ன வித்தியாசம் :) யோசிச்சு சொல்லுங்க நாளைக்கு வரேன் :) Gangai magale☺️☺️☺️☺️

  ReplyDelete
  Replies
  1. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. உப்பூடியெல்லாம் ஒரு ஞாஆஆஆஆனியைப் பார்த்துக் குறொஸ் கொஸ்ஸ்ஸ்ஸ்ஸன் கேய்க்கப்பூடாதாக்கும்:)) பின்பு ஞானிக்குற்றமாகிடும் தெரியுமோ:))... சே..சே இப்பூடி மிரட்டாட்டில்.. கேள்வி கேட்டே என் ஆச்சிரமத்தை மூடப்பண்ணிடுவினமே கர்ர்ர்ர்ர்ர்ர்:)))

   ஹா ஹா ஹா ஓகே ஓகே மெதுவா வாங்கோ அஞ்சு...

   Delete
 3. இன்று நிறைய வேலைகள். பிரயாணம் வேறு இருக்கிறது. மதியத,துக்கு மேல்தான் வருவேன். கங்கையில் பலமுறை குளித்த நினைவில் படங்களைக் கண்டேன். ஹரித்துவார்.

  ReplyDelete
  Replies
  1. ஆவ்வ்வ்வ் இம்முறையும் போனதடவைபோல நெல்லைத்தமிழன் 2 வதாக வந்திருக்கிறார்.. வாங்கோ வாங்கோ... ஹரித்வார், கங்கை.. குளியல்.. அதெல்லாம் சொல்ல முடியாத ஒரு மகிழ்ச்சியான தருணங்கள்.. இனியும் முடிஞ்சால் போய்வரத்தான் ஆசையாக இருக்குது...

   வாங்கோ .. வாங்கோ...

   Delete
 4. நாங்கள் கங்கையில் குளித்த இடம் அவ்வளவு மோசமாக இல்லை.  ப்ரக்யாராஜ் திரிவேணி சங்கமம் தவிர மேலும் இரண்டு இடங்களில் குளித்தோம்.  யமுனா, கோமதி ஆற்றிலும் குளித்தோம்.  நான் ஹரித்வார் செல்லவில்லை.  பொற்கோவில் செல்லவில்லை.

  ReplyDelete
  Replies
  1. யமுனைல எங்க குளிச்சிருப்பீங்க? தில்லி, தாஜ்மஹல்/ஆக்ரா....? நிறைய இடங்களில் நுரையுடன் பார்க்கவே படு மோசமாக இருக்குமே. திரிவேணி சங்கமம் போவதற்கு முன்பும் யமுனை ரொம்பவே கறுப்பா இருக்குமே

   Delete
  2. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.... 3 வதாக வந்திருக்கிறீங்கள் உங்களுக்கு என் ஆச்சிரமத்து முதலாவது தீட்சை, இலவசமாக அளிக்கப்படுகிறது:)).. ஹையோ ஆண்டவா படிச்சதும் கிழிச்சிடுங்கோ ஆரும் தீட்சை கொடுப்போர் பார்க்க முன்:)) ஹா ஹா ஹா.

   Delete
  3. //நாங்கள் கங்கையில் குளித்த இடம் அவ்வளவு மோசமாக இல்லை//
   நான் நினைக்கிறேன், என் எழுத்து சரியாக புரியும்படி இல்லைப்போலும்... நான் கங்கை சுத்தமில்லை எனச் சொல்லவில்லை, உண்மையில் 10-15 வருடத்துக்கு முன்பெல்லாம் இந்தியா போய் வந்தோர் சொன்னதைக் கேட்டு, இந்தியா என்றாலே .. சுத்தமில்லை, திருப்பதி வளவிலெல்லாம் அசுத்தமாக இருக்கும், ஏன் சென்னை எயார்போர்ட்டில் கூட ரொயிலெட் யூஸ் பண்ண முடியாது எனச் சொல்லிருந்தார்கள்.

   அதே நினைப்பிலேயே பயந்துகொண்டு போனோம், ஆனா இப்போ சுத்தமெண்டால் அப்படி ஒரு சுத்தம், எங்கும் குப்பை கூழம் காண முடியவில்லை.. வட இந்தியா, மத்தியப்பிரதேஸ் அங்கெல்லாம்...

   அது மோடி அங்கிள் வந்துதான்[ட்றுத்துக்கு வலது மீசை துடிப்பது தெரியுது ஹா ஹா ஹா:))] சுத்தத்தைக் கொண்டு வந்தார் என்கின்றனர்.

   ஹரித்வாரும் அப்படி ஒரு சுத்தமாகத்தான் இருந்தது, ஆனா நான் சொன்னது, உடை மாற்றுவதற்கென மரத்தால் குட்டிக் குட்டி அறைகள் கட்டி வச்சிருக்கினம், அதைப் படமெடுக்காமல் விட்டு விட்டேன், அதனுள் உடையைக் கழட்டிப் போட்டுவிட்டுப் போயிருந்தார்கள், குமிஞ்சு கிடந்தது, அதில் இலையான்கள் வேறு பறந்தது,

   இது கீழே நெ.தமிழன் சொன்னபின்புதான் யோசிக்கிறேன், கழட்டியதை எடுத்துப் போகக்கூடாது என நினைச்சு விட்டிட்டுப் போயிருக்கலாம் கர்:)).. எடுத்து குப்பை போடுமிடத்தில் போடலாமே.. நம் மக்களைத் திருத்த முடியாது, பைன் கட்டச் சொல்லோணும்..

   ஆனால், இரவில் அனைத்தையும் சுத்தப்படுத்தி விடுவார்களாம்.

   கங்கா தேவி, கலங்கலாக இருந்தா, அதுவும் கீழே நெ.த சொன்னதைப்போல, மழைக்காலம் என்பதாலாகக்கூட இருக்கும்... நிலமண் ஏதும் தெரியவில்லை அவ்ளோ கலங்கல் தண்ணி, அத்தோடு என்னா ஸ்பீட் தெரியுமோ... கால் தவறிப்போயிட்டால் அவ்ளோதான்...

   Delete
  4. //யமுனா, கோமதி ஆற்றிலும் குளித்தோம்.//

   நெல்லைத்தமிழன் கேட்டதைப்போலதான் நினைச்சேன், யமுனை ஆறு ஆக்ராவில் ஓடுது, ஆனா அதில் குளிக்க முடியாது.. நீங்கள் சொல்வது திரிவேணி சங்கமத்தில் ஓடும் ஜமுனை என நினைக்கிறேன்... கங்கை, யமுனை சரஸ்வதி.. இவர்கள் மூவரும்தானே அங்கு சங்கமிக்கின்றனர்.

   கோமதி ஆறோ?. அவ்வ்வ்வ் இது எங்கின ஓடுது ஸ்ரீராம்... பொன்னி நதி.. என்பது காவேரியாம், அதுபோல இதுவுமோ?..

   ஹரித்வார் போய் வாங்கோ நன்றாக இருக்கிறது, ஒரு படத்தில் பின்னாலே மலையில் தெரிவது வைஸ்ணவி கோயில் என நினைக்கிறேன், அதற்குப் போக கேபிள் கார்கள் உண்டு.

   பஞ்சாப் பொற்கோயில்.. அங்கு போனால் நிட்சயம் வாஹா போடரும் பார்த்திடோணும் இரண்டும் சூப்பர்.

   Delete
  5. திரிவேணி சங்கமத்துல குளிச்சத்தைதான் சொல்றேன்னு நினைக்கறேன்.

   Delete
 5. கூகுள் டிரைவ் 90 சதவிகிதம் நிரம்பி விட்டது என்று எச்சரிக்கை விட்டதும் நிறைய காலி செய்து மறுபடி காலி இடம் ஏற்படுத்திக் கொண்டேன்.  அதுபோல கங்கையில் குளித்ததும் அதுவரை செய்த பாவங்கள் போயின என்றார்கள்.  அப்புறம் செய்யும் பாவங்கள்தான் எனக்கும் இப்போது..  ஆமாம், நீங்கள் என் 'காசிக்கு போகும் சம்சாரி' படித்தீர்களோ ?!!  விற்றுத் தீர்வதற்குள் வாங்கிப் படியுங்கள்!  கிண்டிலில் இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. ///ஸ்ரீராம்.Monday, June 12, 2023 12:43:00 am
   அதுபோல கங்கையில் குளித்ததும் அதுவரை செய்த பாவங்கள் போயின என்றார்கள். அப்புறம் செய்யும் பாவங்கள்தான் எனக்கும் இப்போது.. ///

   ஹையோ மிரட்டுறீங்களே.. ஹா ஹா ஹா:))

   //ஆமாம், நீங்கள் என் 'காசிக்கு போகும் சம்சாரி' படித்தீர்களோ ?!! விற்றுத் தீர்வதற்குள் வாங்கிப் படியுங்கள்! கிண்டிலில் இருக்கிறது!////

   நீங்கள் காசி போய் வந்து, தொடர் எழுதி முடிக்கும்வரை நாங்களும் கூடவேதானே இருந்து கும்மியடிச்சோம், மறந்திட்டீங்களோ:)).. பின்னர் அதைத்தானே கிண்டிலில் ஏற்றினீங்கள் என்பதால் அதைப் படிக்கவில்லைத்தான்... படிக்கப் பார்க்கிறேன்.. அதுசரி ஓன்லைன் புக் கூட விற்று முடியுமோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

   Delete
 6. கங்கை நீரை அவர்களே செப்பு(க் குட்டிக்குட்டிக் குடங்கள் போன்ற) செம்பில்  நிரப்பி சீல் செய்து ரெடியாக வைத்திருப்பர்.  அதை வாங்கி கொள்ளலாம்.  அல்லது நீங்கள் சேகரம் செய்த நீரை அதே போல பாக் செய்து வாங்கிச் செல்லலாம்.  உள்ளூரில் கடைகளில் செய்து தருவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஓ அங்கு அப்படி நான் காணவில்லை, எங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையோ என்னமோ, ஆனாலும் நம் கையால கங்கையை அள்ளி எடுத்து வருவதைப்போல வராதெல்லோ, அவர்கள் எந்தத்தண்ணியை நிரப்பி விற்கினமோ என டவுட்டாவே இருக்கும்:))..

   இது விதம் விதமாக, கலன்கள் போத்தல்கள் தான் விற்பதைப் பார்த்தேன்.

   Delete
 7. உங்கள் யு டியூப் பக்கம் ஒரு லட்சத்து அறுபதாயிரம் சப்ஸ்க்ரைபர்ஸை கொண்டிருப்பப்பதற்கு வாழ்த்துகள்.  நான் பெரும்பாலும் பார்த்து விடுகிறேன்.  லைக் செய்து விடுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. //உங்கள் யு டியூப் பக்கம் ஒரு லட்சத்து அறுபதாயிரம் சப்ஸ்க்ரைபர்ஸை கொண்டிருப்பப்பதற்கு வாழ்த்துகள்.///

   ஆவ்வ்வ்வ் உங்கள் வாய்போல பலிக்கட்டும்:)) அவ்ளோஓஓஓஓ எல்லாம் இன்னும் இல்லை ஹா ஹா ஹா..

   மிக்க நன்றி லைக் பண்ணுவதற்கு. நான் எனக்குத் தெரிஞ்சோரிடம் சொல்வது, நீங்கள் பார்க்காவிட்டாலும், கொமெண்ட் போடாவிட்டாலும் பறவாயில்லை, ஆனால் சப்ஸ்கிரைப் பண்ணி லைக்கும் போட்டு விட்டாலே போதும் என, ஏனெனில் இப்போ வளர்க்கோணும் பின்னர் தானா எல்லாம் வந்திடும்:))...

   Delete
 8. ஊசிக்குறிப்பும் ஞான ஊசிக்குறிப்பும் ஆஹா ஓஹோ  பேஷ் பேஷ்...   ஞான ஊசிக்குறிப்பை வேறு விதத்தில் சிவகுமார் மகன் சூர்யா கஜினியில் முருகதாஸ் சொல்லச் சொல்லி இருக்கிறாராக்கும்!

  ReplyDelete
  Replies
  1. சூரியா, கஜினியில் சொல்லியிருக்கிறாரோ.. பார்க்கோணும் திரும்ப:))..

   மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

   Delete
 9. //எல்லோருக்கும் நான் தீட்சை கொடுக்கும்போதே உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்//

  ஸாரி எனக்கு இதுவரை தெரியாது.

  //கங்கை எனில் மண் இல்லாமல் பளிங்குபோல இருக்குமென, ஆனா தண்ணி கலங்கலாகவே இருந்துது//

  "கங்கை மகள்" என்ற வஜனத்தை படித்து விட்டு கங்கை மௌனமாக அழுகிறது போலும் ஆகவே கலங்கலாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ...

   //ஸாரி எனக்கு இதுவரை தெரியாது.///

   ஆண்டவா எங்கின ஓடிப்போய் ஒளிப்பது எனத் தெரியேல்லையே:)) ஹா ஹா ஹா

   https://www.shutterstock.com/image-photo/british-short-hair-cat-hiding-behind-238542814

   ///"கங்கை மகள்" என்ற வஜனத்தை படித்து விட்டு கங்கை மௌனமாக அழுகிறது போலும் ஆகவே கலங்கலாக இருக்கிறது.///

   ஹா ஹா ஹா கர்:)) கங்கையில் குளிச்சபின்பெல்லோ கங்கை மகள் ஆகிட்டேன்ன்ன் நான்:)))

   மிக்க நன்றி கில்லர்ஜி.

   Delete
 10. கங்கை நீர் பளிங்குபோல், சுத்தமாக வருவது ஹரித்துவாரில்தான். ஆனால் நீங்கள் சென்ற சமயம் மழைக்காலமாக இருக்கவேண்டும். கங்கை பிரவாகமெடுத்து ஓடுகிறாள். அதனால் ஒருவேளை மண் கலந்திருக்கலாம்.

  நான் ரிஷிகேஷில் ஹரிண்வாரில் கங்கை குளியலின்போது படங்களும் காணொளியும் எடுத்துக்கொண்டேன்.. அங்கு நாங்கள் எடுத்த கங்கைநீர் மிகச் சுத்தமாக ஒரு வருடத்துக்குமேல் ஆனபின்னும் பாட்டிலில் இருக்கிறது. நெல்லைத்தமிழன்

  ReplyDelete
  Replies
  1. //கங்கை நீர் பளிங்குபோல், சுத்தமாக வருவது ஹரித்துவாரில்தான். ஆனால் நீங்கள் சென்ற சமயம் மழைக்காலமாக இருக்கவேண்டும். கங்கை பிரவாகமெடுத்து ஓடுகிறாள். அதனால் ஒருவேளை மண் கலந்திருக்கலாம்.///

   இதுதான் கரெக் நெல்லைத்தமிழன், யூலை ஓகஸ்ட்டில் அங்கு மழைக்காலம், ஆனா இந்த கங்கையிருக்கும் இடத்துக்குப் போக முன், 2,3 கிலோமீட்டர் தொலைவிலேயே, பல இடங்களில் கங்கையை திருப்பி விட்டிருக்கிறார்கள், பாதை மாறி கார் உள்ளே போய் சுத்தியடிச்சு வந்தபோது பார்த்தோம்... அங்கு [கங்கை பளிங்குபோல ஓடியது, நான் அதிலேயே இறங்கப்போகிறேன் எனச் சொன்னதற்கு, அங்கு தொட முடியாது, பாதுகாப்பாக வச்சிருக்கினம் என்றிச்சினம்...

   கங்கை நீர் போத்தலில் பத்திரமாக இருக்குது இங்கும், நான் விரத நாட்களில், வீட்டுத் தண்ணிக்குள், ஒரு குட்டி மூடியளவு, இக்கங்கைதீர்த்தத்தைக் கலந்து, வீடு முழுக்க தெளிச்சு விடுவேன்.

   Delete
 11. சில மாதங்கள் முன்பு வாரணாசியில் (காசி) கங்கைக் குளியல் மூன்று நாட்கள் அக்கரைக்குச் சென்று குளித்தோம். அது நல்ல அனுபவம். நெல்லை

  ReplyDelete
  Replies
  1. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்னை உசுப்பேத்துறார் யுவர் ஆனர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா பொறுங்கோ பொறுங்கோ.. நானும் அங்கெல்லாம் போய் வந்தபின்பு புகழ் பாடுவேன் ஹா ஹா ஹா...

   எங்கள் வன் அண்ட் ஒன்லி மாமா[அம்மாவின் தம்பி] விடம் சொன்னேன், மாமா நான் காசிக்குப் போக ஆசை என, உடனே சொன்னார்.. "காசிக்குப் போகும் சந்நியாசி, உன் குடும்பம் என்னாகும் நீ யோசி" எனப் பாட்டிருக்கெல்லோ, உனக்குத் தெரியுமோ என்கிறார்...

   அப்போதான் மனதில நினைச்சேன் ஸ்ரீராம் காசிக்குப் போய் வந்தும் சந்நாசி ஆகல்லியே என, இப்போ நீங்களும் போய் வந்திட்டேன் என்கிறீங்க நெல்லை தமிழன்:).. அப்போ மீயும் இனித் தைரியமாகப் போகலாம் ஹா ஹா ஹா ஆனா அஞ்சுவைக் கூட்டிப்போகோணும்:)).. விட்டிட்டு வரோணும் எல்லோ ஒன்றை:))) ஹா ஹா ஹா...

   Delete
 12. ஹரித்வாரில் சாயா சாப்பிட்ட பிறகு இப்போ, எப்படி நல்ல சாயா போடுவது என்பதைக் கற்றுக்கொண்டுவிட்டீர்களா?

  ReplyDelete
  Replies
  1. //nonymousMonday, June 12, 2023 4:15:00 am
   ஹரித்வாரில் சாயா சாப்பிட்ட பிறகு இப்போ, எப்படி நல்ல சாயா போடுவது என்பதைக் கற்றுக்கொண்டுவிட்டீர்களா?//

   நெ.த//
   ஆண்டவா இது என்ன ஸ்கொட்லாண்டுக்கு வந்த ஓதனை கர்ர்:))., இதுக்கு அப்பவே பென்னாம் பெரிய பதில் எழுதிப் போட்டனே, இன்று பார்த்தால் காணம்...
   அதில ஒன்று மட்டும் சொல்லிடுறேன், அங்கு டெல்லியில் பெரும்பாலும் ஒரு மண் கப் சாயா 20 ரூபா, ஆனா எயார்போர்ட்டில் திரும்ப வரும்போது, உள்ளிருக்கும் சாயா கடையில் வாங்கினோம், ஒரு கப் 220 ரூபா... ஆனா கண்முன்னே எல்லாம் இடிச்சு அவிச்சு போட்டுத்தந்தார்கள், பத்திரமாக பார்த்துக் கொண்டு வந்து இப்போ சூப்பராக செய்கிறேனே:))..

   ஆனாலும் அங்கு குடிச்ச ரேஸ்ட் வருகுதில்லை, அது பிரெஸ் மில்க் என்பதால இருக்கலாம்..

   Delete
 13. வாழ்க்கை மாற சில நொடிகள் போதும் என்பது உண்மைதான். இதற்கு பல்வேறு உதாரணங்களைப் பார்த்திருக்கிறேன். அந்த தினம் வராமலே போயிருந்தால்? என எண்ண வைக்கும். நெல்லைத்தபிழன்

  ReplyDelete
  Replies
  1. அதைத்தானே விதி எனச் சொல்லி மனத்தைத் தேற்றிக் கொள்கிறோம்...
   மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

   Delete
 14. ஆருமே இப்போ என்னைத் தொடக்கூடாதாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ///// நீங்க எங்கிட்ட நெருங்கி வந்தாக்காக்குட நான் உங்களை தொடக்கூடமாட்டனே நல்லா கேட்டுகுங்க நான் சொன்னது உங்களைத்தான் ஆனால் உங்கள் வைர நெக்லைஸை அல்ல

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ட்றுத் வாங்கோ..
   ஆஆஆ நீங்கள் இன்னும் அந்த நெக்லெஸ் ஐ மறக்கவே இல்லையோ கர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதை அஞ்சுவிடம் கொடுத்து பாங் ல வைக்கச் சொல்லிட்டனே பத்திரமா:))

   Delete
 15. மோடிஜி சுத்தம் செய்த கங்கையில் யாரரோ ஒன்பது மூறை தலை மூழ்கி எழுந்ததால் அது மண்ணாக்கியதோ அதுக்குதான் சொல்லுறது களிமண்ணால் ஆன தலையை தண்ணீரில் ஒன்பது முறை முழ்க செய்யக் கூடாது என்பது

  ReplyDelete
  Replies
  1. //Avargal UnmaigalMonday, June 12, 2023 5:02:00 am
   மோடிஜி சுத்தம் செய்த கங்கையில்///

   ஆஆஆஆ எப்போ ட்றுத் நீங்கள் இப்பூடிக் கட்சி மாறினனீங்கள்??:), நாங்கள் இல்லாமல் போன இடைவெளியில ஆரோ சூனியம் வச்சிட்டினம் ட்றுத்துக்கு... ஹா ஹா ஹா இது தெரியாமல் மேலே ஸ்ரீராமுக்கு குடுத்த பதிலிலும் என்னமோ சொல்லிட்டேன் உங்களைப்பற்றி:))

   Delete
 16. பாதி ஞானி? முழு ஞானி? இதென்ன புதுசா கீது!! தேம்ஸ் ஒர் காலத்தில் ரொம்ப அழுக்கா இருந்துச்சாமே...சரி சரி "நான் ஆஸ்ரமம் போட்டதாலதான் தேம்ஸ் க்ளீன் ஆச்சு" ன்னு சொல்லுவீங்களே!!!!! எல்லாம் இந்த ஞானப்பழத்தால்...ஹையோ டங்கு டங்கு...ஞானத்தவத்தால்னு!!! சொன்னாலும் தட்டிக் கேட்க எனக்குக் கை கொடுக்க ஆள் இருக்காங்களாக்கும்!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீதா வாங்கோ...

   ///AnonymousMonday, June 12, 2023 5:21:00 am
   பாதி ஞானி? முழு ஞானி? இதென்ன புதுசா கீது!///
   இதென்ன இது கூட்டுச்சதி நடக்குது இங்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), அது காசிக்குப் போனபின்பு முழு ஞாஆஆஆஆனி :)..

   //தேம்ஸ் ஒர் காலத்தில் ரொம்ப அழுக்கா இருந்துச்சாமே...///

   அதே அதே.. அதிராவின் பாதம் பட்டுத்தான் இப்போ பளிச்சென ஓடுது..
   [[வள்ளி மலை முருகா, வள்ளிக்கு வைரத்தில நெத்திச் சுட்டி வாங்கித் தாறேன் என்னை இம்முறை மட்டும்:) காப்பாத்திடுங்கோ:)]] ஹா ஹா ஹா

   ///"நான் ஆஸ்ரமம் போட்டதாலதான் தேம்ஸ் க்ளீன் ஆச்சு" ன்னு சொல்லுவீங்களே!!!!!/// பளீச் ஆனபின்பு மீண்டும் அழுக்காகிடக்கூடாதெனத்தான் அங்கு ஆச்சிரமம் அமைத்தேன்:)...
   மனதில ஒரு போஸ்ட் ரெடி பண்ணினேன், அதிலிருப்பதை இப்போ கேட்டுவிட்டீங்கள் கீதா:)...

   ///சொன்னாலும் தட்டிக் கேட்க எனக்குக் கை கொடுக்க ஆள் இருக்காங்களாக்கும்!!!///

   தெரியுமே.. தெரியுமே... எனக்கு எதிரி வீட்டுக்குள்ளயேதான்ன்ன்...:), அஞ்சுவைத் தேம்ஸ் கரைக்கு வரச்சொல்லி ஆசையாக் கூப்பிடுறேன் , வரமாட்டாவாம்ம் , நான் தள்ளி விட்டிடுவேனாம் கர்ர்ர்ர்:)), என் முகத்தைப் பார்த்துச் சொல்லுங்கோ கீதா:), நான் தள்ளுவேனா:)) ???:) ஹா ஹா ஹா

   Delete
  2. பளீச் ஆனபின்பு மீண்டும் அழுக்காகிடக்கூடாதெனத்தான் அங்கு ஆச்சிரமம் அமைத்தேன்:)...
   மனதில ஒரு போஸ்ட் ரெடி பண்ணினேன், அதிலிருப்பதை இப்போ கேட்டுவிட்டீங்கள் கீதா:)...///

   இப்ப யாரு ஞானி சொல்லுங்க !!! பஞ்சாயத்தைக் கூட்டுங்க!!! நியாயம் வேணும்!! வேணும்...!

   (ஸேம் மைன்ட்ஸ் திங்க் அலைக்!!! ஹையோ பூஸாருக்கு இது நினைவுக்கு anthஇடக் கூடாதே எண்டே பகவதி யம்மே!!!)

   கீதா

   Delete
  3. ஹா ஹா ஹா கீதா, பூவோடு[அதிரா ஞானியோடு:)] சேர்ந்த நாரும் மணக்குமாமே:)).. என்னோடு சேர்ந்து நீங்கள் எல்லோரும் குவாட்டர் ஞானி:) எண்டாலும் ஆகிடுவீங்கள்தானே:))..
   எதுக்கும் ஆச்சிரமக் கட்டிலுக்குக் கீழயே ஒளிச்சிருப்பம்:).. கல்லெறி விழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை:))

   Delete
 17. கங்கா தேவில முங்கும் முன்ன சொல்லிக் கிட்டது எல்லாம்!!!!!!!!???????? அப்ப முழு ஞானியா இருந்தவங்க இப்ப கங்கையில் முங்கி.....எழுந்து......ஹா மண்டைக்குள் ஒரே கேள்விக்குறிகளா முளைக்குதே!!!!

  அது சரி நீங்கதான் தேம்ஸ்ல ஆஸ்ரமம் வைச்சிருக்கீங்க அப்ப அதுவே புனிதமாச்சே!! அப்புறம் கங்கைக்கு வந்து முங்கி பாதி ஞானியானீங்களோ!!!!!!!! ஹையோ உங்க வாலை பிடிச்சு இழுக்கலைனா எனக்குத் தூக்கம் வராதுங்கோ!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ///அப்ப முழு ஞானியா இருந்தவங்க இப்ப கங்கையில் முங்கி.....எழுந்து......ஹா மண்டைக்குள் ஒரே கேள்விக்குறிகளா முளைக்குதே!!!!///

   ஹா ஹா ஹா கீதா இப்போதான் மீ ரெம்ம்ம்ம்ம்ம்பத் தெலி:)வா இருக்கிறேனாக்கும், ஏனெண்டால் உங்கள் எல்லோரையும் குழப்பிட்டதால:))...

   ஹா ஹா ஹா அது ஞானியைக்(என்னைச் சொன்னேன்:)) கண்டால், பக்தர்களுக்கு[உங்களைச் சொன்னேனாக்கும்:)] கேள்விகள் எழுவது, தூக்கம் கலைவது எல்லாம் நோர்மல்தானே கீதா.. ஆஆஆஆ வழிவிடுங்கோ மீ ஓடோணும்:))

   Delete
 18. ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சு, கீதா...... ஆருமே இப்போ என்னைத் தொடக்கூடாதாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) 3 அடி தள்ளித்தான் நிற்பேன் நான்:))... ஆண்டவா மறுபடியும் கல்லெடுக்கப் போயினமே:)..//

  அதான் உங்க வால் இப்ப எங்க கையிலயாக்கும்!!!! அப்புறம் என்ன தொடக் கூடாதாக்கும்!!!! எவ்வளவு தூரம் போனாலும்!!!! போக முடியாதே!!!

  க்வெஷன் மார்க்ஸ் மண்டைக்குள்ள குடையுது....காசிக்குப் போய் குட்டி சிவனுக்குப் பாலபிஷேகம் செஞ்சா முழுஞானி...ஹையோ அப்ப இதுவரை பூஸாந்தா முழு ஞானின்னு சொல்லிக்கிட்டதெல்லாம்!!!??????????? ஹாஹாஹா ஞானியோட குழப்பங்களை எல்லாம் தீர்த்துவையுங்கப்பா !!!

  கீதா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ///அதான் உங்க வால் இப்ப எங்க கையிலயாக்கும்!!!! அப்புறம் என்ன தொடக் கூடாதாக்கும்!!!! எவ்வளவு தூரம் போனாலும்!!!! போக முடியாதே!!!///

   ஆஆஆ எனக்கு என் வால்ல்ல்ல் முக்கியம்ம்ம்:))

   https://preview.redd.it/r78ytk8h9so11.jpg?auto=webp&s=29af866eeaaa612dabd0f04f64b28a95a52fabe0

   Delete
 19. //உங்கள் பண்புக்கும் பாசத்துக்கும் நேசத்துக்கும் நீதிக்கும் நியாயத்துக்கும் நேர்மைக்கும் பாத்திரமான..//

  இது நம்புறது மாதிரி இல்லையே....

  ஒருவேளை அலுமினிய பாத்திரமோ ?

  ReplyDelete
  Replies
  1. ///இது நம்புறது மாதிரி இல்லையே....

   ஒருவேளை அலுமினிய பாத்திரமோ ?///
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர் கில்லர்ஜி, ஒரு ஞாஆஆஆஆனியைப்(என்னைச் சொன்னேன்:), சே சே இதைக்கூட அடிக்கடி சொல்ல வேண்டிக்கிடக்கே வைரவா:))) பார்த்து உப்பூடியெல்லாம் ஜொள்ளக்குடா கில்லர்ஜி.. நில்லுங்கோ கொஞ்சம் இங்கின சிரிச்சுப்போட்டு வாறேன்ன்..:) ஹா ஹா ஹா...

   Delete
 20. முதல் காணொளி ஏற்கனவே பார்த்து இருக்கிறேன்.

  இரண்டாவது வயற்காடு காணொளி கண்டேன் அருமை.

  ReplyDelete
  Replies
  1. ஓ மிக்க நன்றி.. என்னாதூஊ வயற்காடோ? கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எப்போ பார்த்தாலும் ஞானியை(மீ..மீ:)) க் கொயப்புவதே கில்லர்ஜிக்கு வேலை கர்ர்:))..

   மீள் வருகைக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   Delete
 21. அவ்வளவு உயரத்திலும் முழுக்க முழுக்க மண்ணாக இருக்குது தண்ணி, அதுதான் ஏனெனப் புரியவில்லை எனக்கு.//

  நிறைய காரணங்கள் உண்டு....மழை வெள்ளம் மலையிலிருந்து அல்லது பனி உருகி வரும் வெள்ளம் மலையிலிருந்து அடித்து வரும் மண் சேர்ந்து கொள்ளலாம்....சமீபத்திய தகவல்படி ஹரித்வாரில் கங்கை சுத்தமாக இல்லை என்பதே. உத்ரகான்ட் மாநிலத்தில் இருக்கும் Pollution control Board சொல்லியிருக்கிறது. லாக்டவுன் சமயத்தில் கங்கை எப்படி இருந்தாள் தெரியுமா?

  மக்கள் பலரும் அவரவர் சமய, சம்பிரதாய நம்பிக்கைகளின் அடிப்படையில் துணிகளைக்களைவது, இன்னும் பல பொருட்களை மிதக்க விடுவது என்று செய்கிறார்கள். நிறைய கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும். புனிதமானவை என்று சொல்லப்படுபவை சுத்தமாக இருக்க வேண்டும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும் வேண்டும்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இதேதான் நெ தமிழனும் சொல்லியிருக்கிறார் கீதா, மேலே நான் சொன்ன பதில்களையும் பார்த்தால் புரியும், உண்மைதான், மக்கள் தொகையும் அதிகம் அங்கு... கோவிட் நேரத்தில் யாரும் போயிருக்க மாட்டினம்தான்.

   நதி கலங்கலாக இருந்ததே தவிர, குப்பையாக இல்லை கீதா, சுத்தமாக இருந்தது.

   Delete
 22. ஆமாம் அங்கு சாயா மண் கோப்பையில் செமையா இருக்கும்...

  ஹையோ அதிரா எனக்கும் இந்த வீடியோ, அப்புறம் பதிவுகள் எழுதுவது எடிட் செய்வதுக்கு எல்லாம் மூட் வர ரொம்ப லேட் ஆகுது..டக்குனு வர மாட்டேங்குது.

  ப்ரெட் பக்கோரா ரொம்ப நல்லாருக்கும்..,,நான் தில்லியில் சாப்பிட்டது வைத்துச் சொல்கிறேன்.

  நீங்கள் போய்ட்டு வந்த பொற்கோயில் பார்த்த நினைவு இருக்கிறதே.தங்க கோபுரம்....குளம் மீன் எல்லாம் சொல்லி வருவீங்களே ...நினைவு இருக்கு

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நான் மண் எல்லாம் சேர்த்து வச்சேன் கீதா, பின்பு கொண்டு வரவில்லை, வெயிட் எல்லோ.
   அங்குதான் பிரெட் பக்கோடா முன்ன முன்னம் அதுவும் ஒரு நகைக்கடையில் தந்தார்கள், சாப்பிட்டதும் என்னால பொறுக்க முடியவில்லை அதன் சுவை, அது என்ன எனக் கண்டுபிடிக்க முடியாமல் போச்சு, பின்பு கேட்டு அறிஞ்சு, அதிலிருந்து எப்பவும் எங்கு போனாலும் பிரெட் பக்கோடா எனக் கேட்டிடுவேன்...

   ஒரு டாபா[ஹோட்டேல்]வில் , பஞ்சாப் போகும் பாதையில், பிரெட் பக்கோடா கேட்டோம், ரெடிப்பண்ணி பிரீசரில் வச்சிருக்கினம், உடனே எடுத்து மாவில் தோச்சு, பொரிச்சுத் தந்தார்கள்.

   நீங்கள் எல்லா வீடியோவும் பார்த்திருப்பீங்கள்தான் கீதா...

   Delete
  2. கங்கை மகள் நு சொல்லிட்டு இங்கிருந்து ஒரு பிடி மண்ணு எடுத்துட்டுப் போகலையோ...கங்கை தண்ணீர் மட்டும்தானா..!!!

   உங்க வீடியோ இப்ப லேட்டஸ்ட் நேற்றைய இடியாப்பம் இன்னும் ஃபுல் பார்க்கலை...ஒரு கமென்ட் மட்டும் போட்டுட்டு வந்திட்டேன்..

   துளசி அனுப்பிய பதிவு டைப் செஞ்சு வீடியோஸெல்லாம் எடிட் செய்து அவர் வாய்ஸ் தனியா அனுப்ப அதைக் கோர்த்து கட் செய்து இப்படி டைட்டா போச்சு போனாவாரம் ஃபுல்லும்...இந்த வாரத் தொடக்கும்...

   இனிதான் பார்க்கணும் ஃபுல்லும்...

   கீதா

   Delete
  3. ம்ஹூம்ம்ம் பொலீசில பிடிச்சுக் குடுத்திடாதையுங்கோ கர்ர்:)) மண் எதுவும் இதுவரை எடுக்கவில்லை, ஆனா நீங்க அஞ்சு எல்லாம் கேட்ட பிறகு, இனிமேல் போனால் எடுத்து வரோணும் எனும் எண்ணம் வருதே ஹா ஹா ஹா நன்றி கீதா.

   Delete
 23. உங்கள் கார்டன் வீடியோவும் பார்த்திட்டேனே அங்கு...ஆமா இங்க நல்லா தெரியுது காபேஜ் ப்ரோக்கோலி, வெங்காயம் எல்லாம்...சூப்பரா இருக்கு

  இப்ப நானும் இங்கு மாறிய வீட்டில் விதைக்கத் தொடங்கியிருக்கிறேன். இங்கு தொட்டிகள்தான்....மண் இல்லை. பழைய வீட்டு கார்டனே - அங்கு பாத்ரூம் சைஸ் மண் இருந்தது அதில்தான் போட்டேன்...அது பற்றி இன்னும் சரியா பதிவு போடலை...ஹிஹிஹிஹி...போடுகிறேன்...பதிவுகள் என்னவோ இருக்கு ஆனா போடத்தான் மூட் வருவதில்லை...சில சமயம் நிறுத்திவிடலாமா என்றும் தோன்றுகிறது.

  ஊசிக்குறிப்பு, தத்துவம் எல்லாம் பாதி ஞானியார் சொல்வதாக....ஹூம்...அப்ப முழு ஞானியானா என்ன சொல்வீங்களோ!! வேண்டாம் இப்ப வாலை இழுக்கலை...ஹாஹாஹா

  சுண்டல் சூப்பர்...ஓ பாதி ஞானி அதனால இதெல்லாம் சாப்பிடலாம் போல!! பாதி ஞானிக்கு ஏது டயட்!!! ஹாஹாஹா....வெங்காயத் தாள் சுண்டல் சூப்பர் போங்க!! பார்க்கவே நல்லா இருக்கு...இனி இப்படிச் செய்யும் போது இங்கும் ஒரு பார்சல் அனுப்பிக் கொடுங்க!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இப்போ தொடர்ந்து சூப்பர் வெயில் கீதா, அதனால எல்லாம் கிடுகிடுவென வளர்ந்திருக்குது, உருளைக்கிழங்குகூட நன்கு பத்தையாக வளர்ந்து பூ வந்திட்டுது, பீன்ஸ் உம் பூக்கத் தொடங்கிட்டுது...

   அடுத்த தடவை சுண்டும்போது அனுப்புறேன்.... மிக்க நன்றிகள் கீதா...

   Delete
  2. எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும்.....அதென்ன பாதி ஞானி புலாலியூர் பூஸானந்தா தேம்ஸ்ச் நதிக்கரையில தீட்சை கொடுக்கறாரா,ஆ? அப்ப இந்த ஞானியார் யார்.....பூஸானந்தா யார்.....பாதி ஞானிங்க எல்லாம் தீட்சை கொடுக்கறாங்களாமமே....எண்டே ஈஸ்வரா!!! சரி தான் அப்ப கைலாசம் பக்கம் இன்னொரு தீவு இருக்காம்...வாங்கிடலாமா!!!

   பாதி ஞானியார் நேற்றைய இடியாப்பம் எல்லாம் செஞ்சு ஹை சாப்பாடு மேல ஆசை தீராதவங்க எல்லாம் தீட்சை வேறு!!! ஹாஹாஹாஹாஹா

   சரி சரி....சுண்டும் போது அனுப்புங்க..அனுப்புங்க!!!

   கீதா

   Delete
 24. நாலு பகோடாவுக்கு 4 லிட்டர் சாம்பார், 5 கரண்டி சட்னியா?

  ReplyDelete
  Replies
  1. அதேதான் நெ தமிழன், மற்றும் இடங்களில் சட்னி குறைவாக இருக்கும்... பிரெட் பக்கோடாவும் ஓடர் கொடுத்திருந்தோம், அது வர லேட்டாகிட்டுது, ஆனா இந்த பச்சை சட்னி ஒரு வித்தியாசமான சுவையாக இருந்துது, சும்மாவே சாப்பிடலாம்...:).

   Delete
 25. கங்கை நதி ஓரம் பாடல் பிடித்த பாடல்...

  கங்கை நதி ஓரம் பூஸார் நடந்தார்!!!!
  கங்கையில் முங்கி எழுந்து பாதி ஞானியானார்!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ///கங்கை நதி ஓரம் பூஸார் நடந்தார்!!!!
   கங்கையில் முங்கி எழுந்து பாதி ஞானியானார்!!!

   கீதா////

   https://cf.ltkcdn.net/cats/cat-training-and-behavior/images/orig/320789-849x565-cat-hiding.jpg

   Delete
  2. ஹாஹாஹாஹா உங்க ரெண்டு லிங்குப் பார்த்திட்டேன்!!!

   கீதா

   Delete
 26. கங்கையில், செயினைப் பிடித்துக்கொண்டிருக்கும் நீலப் பெண் நீங்களா?

  //அதனுள் பலரும் உடுப்புக்களைப் போட்டு விட்டுப் போயிருக்கிறார்கள், சுத்தம் இல்லை,// - இந்தியாவில் இது ஒரு பெரிய பிரச்சனை. எவனோ போக்கத்தவன், ஆறு குளங்களில் பழைய துணியைப் போட்டால் நல்லது என்று சொல்லியிருக்கிறான். இந்த மக்களும் கண்ட கழிசடை டிரெஸ்ஸையும் போட்டுட்டுப் போயிடுதுகள். திருப்பதி சென்றிருந்தபோது, அங்குள்ள திருக்குளம் இந்த ஐயப்ப பக்தர்களால் கடுமையாக மாசு படுது, அவங்க பழைய துணி, மாலைகள் எல்லாவற்றையும் குளத்தில் போடுவதால், நீர் போகும் பாதை அடைத்துக்கொள்கிறது வருடா வருடம் செலவழித்துச் சுத்தம் செய்யவேண்டி இருக்கிறது என்றார்கள். வாரணாசி கங்கையிலும் நீரில் மண்ணோடு மண்ணாக பழைய துணிகள் இருந்ததைப் பார்த்தேன். யாராவது, இவர்களிடம், நதி நீரை இப்படி பழைய துணிகளால் மாசுபடுத்தினால் ஏழேழு ஜென்மத்திற்கும் அந்தப் பாவம் தீராது என்று சொல்லிப் புரியவைத்தால் தேவலை.

  ReplyDelete
  Replies
  1. ///நீலப் பெண்/// ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)).. ஆதாரத்தோடு சொல்லாவிட்டால் நம்ப மாட்டீங்கள் எல்லோ அதிராவும் கங்கையில் குளிச்சேன் என..:).

   உண்மைதான் நெல்லைத்தமிழன், நீங்கள் சொல்வதைப்போலதான் எனக்கும் கேள்விப்பட்டபோது கோபம்தான் வந்தது, முன்பு காசியில் உடல்கள் மிதக்குமாமே, இப்போ மோடி அங்கிள்தான் அதைத்தடுத்து, சுத்தமாக இருக்காம், எங்கள் பிள்ளைகள் நெட்டில் தேடிப் பார்த்துவிட்டுச் சொல்லிச்சினம்... ஆஆஆ கான்ஜி போக வேண்டாம் அங்கு பொடீஸ் இருக்குமாம் என...

   ஆனா பப்ளிக்கில் மிகவும் சுத்தமாக வைத்திருக்கிறார்கள், ரொயிலெட்டுக்கள் எல்லாம் வட இந்தியாவில், பாசி, கறுப்பு அப்படி இருந்தாலும், அசிங்கம் இல்லை, எப்பவும் ஒருவர் நின்று சுத்தம் செய்வதைப் பார்க்க முடிந்தது, அது ஒரு மிகப் பெரிய மாற்றம்தானே..

   பப்ளிக்கில் போடத் தடை என்பதாலதான், இப்படி மறைவிடங்களில் வைத்துவிட்டுப் போய் விடுகின்றனர் போலும்.

   ///நதி நீரை இப்படி பழைய துணிகளால் மாசுபடுத்தினால் ஏழேழு ஜென்மத்திற்கும் அந்தப் பாவம் தீராது என்று சொல்லிப் புரியவைத்தால் தேவலை.
   //

   ஹா ஹா ஹா உண்மைதான், இப்பூடி ஏதும் சொல்லி மிரட்டினால்தான் திருந்துவார்கள்போலும்...

   Delete
 27. ஹரித்வாரில் (முதல் படம்) இந்த இடத்தில்தான் கங்கா ஆரத்தி பார்த்த நினைவு இருக்கிறது. என் படங்களின் தொகுப்பைப் பார்த்தால் கண்டுபிடித்துவிடலாம். இங்குதான் கங்கைநீர் நான் சேகரித்தேன். இன்று வரை அது ஒரு தூசு இல்லாமல் பளீர்னு இருக்கு

  ReplyDelete
  Replies
  1. ஒ இருக்கலாம், நாங்கள் ஆராத்திக்கு நிற்கவில்லை திரும்பிவிட்டோம்.

   //இன்று வரை அது ஒரு தூசு இல்லாமல் பளீர்னு இருக்கு//
   நீங்கள் சொன்னதும் ஓடிப்போய் எங்கள் கங்கைத் தீர்த்தத்தை எடுத்துப் பார்த்தேன் இப்போ... அதுவும் பளிங்கு நீராகத்தான் இருக்குது, அடுத்தபோஸ்ட்டில் படம் போடுகிறேன், அதெப்படி எனத் தெரியவில்லை. ஒருவேளை மேலாலே எடுத்ததாலாக்கும், உடுப்பு, தலை உடம்பெல்லாம் ஒரே மண்ணாக இருந்தது, உடுப்பைக் கழுவக் கழுவ மண்ணோ மண், மூழ்கி எழும்பியதாலோ என்னமோ தெரியவில்லை, ஆனா தண்ணியைப் பார்த்தபோது பளிங்காக இருக்கவில்லை.

   Delete
  2. ஓ இவ்ளோ நேரமாக எனக்கு ஒரே யோசனை, குளிக்கும்போது அவ்ளோ கலங்கலாக, மங்கலாக இருந்த கங்கை தீர்த்தம், இப்போ வீட்டில் பார்க்கும்போது எவ்ளோ சுத்தமாக பளிச் என இருக்கே அதெப்படி என யோசிச்சுக்கொண்டே இருந்து, இப்போதான் கண்டு பிடிச்சேன்.

   நாங்கள் கலனில் தானே எடுத்துப்போனோம், பின்னர், மூடி சரியில்லாததால், அப்படியே வச்சிருந்துபோட்டு, இங்கு வரும்போது, மேலாலே பிளாஸ்ரிக் பொட்டிலில் ஊற்றி எடுத்துக் கொண்டு, மிகுதியை அங்கு வைத்தோம், அப்போ மண் எல்லாம் கலனில் போய் அடைஞ்சிருக்குது... இப்போதான் எனக்குப் புரியுது, கங்கை நீர், படு சுத்தமாகத்தான் இருந்திருக்குது, ஆனா மண்ணோடு சேர்ந்து கலங்கியிருக்குது... உஸ்ஸ்ஸ் அப்பா, இப்போதான் தெளிவடைஞ்சிருக்கிறேன் நான்..

   மிக்க நன்றி நெ தமிழன்.

   Delete
 28. /நம்மிடம் ஏதுமில்லை என நினைப்பது ஞானம்:)
  நம்மைத்தவிர ஏதுமில்லை என நினைப்பது ஆணவம்:).//

  இது எந்த ஆனந்தா சொன்னது. கையில் கோடி கோடியாய் வைத்துக் கொண்டு நம்மிடம் ஏதுமில்லை என்று மேலும் மேலும் ஆசைப்படுவது எப்படி ஞானம் ஆகும். நம்மைத் தவிர ஏதுமில்லை என்பது அறியாமையே தவிர ஆணவம் ஆகாது. jk ஆனந்தா
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ..

   ஹா ஹா ஹா இப்பூடியும் ஒரு கோணத்தில் யோசிக்க முடியும் என இப்போ நினைச்சுப் பார்க்கிறேன், உண்மைதான் இப்படியும் மனிதர்கள் உண்டுதான்... ஜே கே ஆனந்தா ஹா ஹா ஹா இதுவும் நல்லாத்தான் இருக்குது.

   மிக்க நன்றிகள்.

   Delete
 29. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. தாங்கள் நேற்று இரவிலிருந்து தீடீரென கங்கை மகளாக ஆகிவிட்டதற்கு வாழ்த்துகள். நாம் பத்து மணியளவில் எ. பியில், மற்றும் என் பதிவில் பேசும் போது கூட கம்ப வாரிசாகத்தான் இருந்தீர்கள். அதற்குள் எப்படி "கங்கை" தத்து எடுத்துக் கொண்டாள் என இன்று திகைத்து விட்டேன். ஆனால், பதிவின் விபரங்கள் அனைத்தையும் புரிய வைத்தது. நான் கூட உங்கள் கருத்துக்கு நேற்று என் பதிலாக "நானும் உங்கள் ஆசிரமத்தில் கற்றதுதான்" என குறிப்பிட்டிருக்கிறேன். காலையில் கண் விழித்ததும் பார்த்தால், .நீங்களும் இன்று பாதி ஞானி என்றபடி திருவோடுடன் (ஸாரி பதிவோடு) (ஆகா... எனக்கும் ஞானியை அதிர்ச்சியில் வார்த்தை ஸ்லிப் ஆகுதே... :))) )
  வந்துள்ளீர்கள்.ஹா ஹா ஹா

  நீங்கள் கங்கை நதி ஸ்னானம் செய்து வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி சகோதரி. எனக்கு இதுவரை வாய்க்கவில்லை. வேளை வரும் போது வரட்டும்.

  நீங்கள் தந்திருக்கும் படங்கள் அருமை. காலையிலிருந்து ஏதேதோ வேலைகள் வந்து விட்டபடியால். கைப்பேசியை கையில் எடுக்கக் கூட இயலவில்லை. அதனால் தாமதமாக வந்திருக்கிறேன் மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கமலாக்கா வாங்கோ..

   //தாங்கள் நேற்று இரவிலிருந்து தீடீரென கங்கை மகளாக ஆகிவிட்டதற்கு வாழ்த்துகள்.///

   ஸ்ஸ்ஸ்ஸ் நேக்கு ஷை ஷையா வருது வாழ்த்தைப் பார்க்க:)).. சின்னப்பிள்ளையாக இருந்தபோது, ஏதும் அலுவல் சொன்னால், எனக்கு வெக்கமாக இருக்குது நான் போக மாட்டேன் என அப்பம்மாவிடம் சொல்லுவேன், அதுக்கு அவ சொல்லுவா.. "வெக்கத்தைக் கக்கத்துக்குள் வைத்து விட்டுப் போ" என ஹா ஹா ஹா அந்த நினைவு வருது....

   //நாம் பத்து மணியளவில் எ. பியில், மற்றும் என் பதிவில் பேசும் போது கூட கம்ப வாரிசாகத்தான் இருந்தீர்கள்.///
   ஆஆ பார்த்தீங்களோ கமலாக்கா, நீங்கள்தான் லாஸ்ட்டா வந்தாலும்:), கரெக்ட்டாப் பொயிண்ட்டுக்கு வந்திருக்கிறீங்கள்... :),

   இப்போ திரும்படியும் மேலே போய் என் ஊஊஊஊசிக்குறிப்பைப் படிச்சுப் பாருங்கோ:)).. ///வாழ்க்கை மாற சில நிமிடங்கள் போதும்///// ஹா ஹா ஹா..

   Delete
  2. ///நான் கூட உங்கள் கருத்துக்கு நேற்று என் பதிலாக "நானும் உங்கள் ஆசிரமத்தில் கற்றதுதான்" என குறிப்பிட்டிருக்கிறேன். ///
   பார்த்தேனே:)..

   //நீங்களும் இன்று பாதி ஞானி என்றபடி திருவோடுடன்/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா

   ஏன் கங்கை தமிழ் நாட்டில் இல்லையோ?... கங்கை யமுனை எல்லாம் வடபகுதியில் தானோ.... நாம் நினைத்து எதுவும் நடக்காது, ஆனா அதிகம் ஆசைப்பட்ட்டால் தானாக நடக்கும்... அதுபோல உங்களுக்கும் ரைம் வரும், திடீரெனப் போய்க் கங்கை நீராடி வரும் வாய்ப்பு வரும்...

   ஜமுனையையும் பார்த்துவிட்டேன், குளிக்கவில்லை, அது திரிவேணி சங்கமம் போகோணுமாம்.. பார்ப்போம்...

   என் இந்த வீடியோவில் பாருங்கோ ஜமுனை ஓடுவது தெரியுது... இது விளம்பரத்துக்காக அல்ல, எல்லாம் வீடியோவாகப் போட்டு விட்டமையால், திரும்ப இங்கு போஸ்ட் போடுவதில் ஆர்வம் இல்லை...

   https://youtu.be/DlP3PDK9jJQ

   தாமதமானால் என்ன, என் ரெயின் இன்னும் புறப்படவில்லை... உடனே புறப்படாது, எல்லோரையும் ஏற்றிக்கொண்டுதான் புறப்படுமாக்கும்:))

   Delete
  3. தாஜ்மஹல் பதிவில், மும்தாஜ் சமாதி அருகில் போகும்போது உங்களுக்கு ஒரு வைப்ரேஷன் கிடைக்குதுன்னு சொல்லியிருக்கீங்களே (வீடியோவில்). அதுதான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு. உங்க ஊர்ல, பார்க் பெஞ்சில் உள்ள பூக்கள் அருகில் செல்லும்போதும் அதே வைப்ரேஷன் கிடைக்குதா?

   Delete
  4. //நெல்லைத் தமிழன்Sunday, June 18, 2023 9:29:00 am
   தாஜ்மஹல் பதிவில்,//

   அங்கின போட்ட கொஸ்ஸனையே இங்கினவும் கேட்டிருக்கிறார் கர்:)) நான் அங்கு என்ன பதில் போட்டதென மறந்திட்டேனே ஹா ஹா ஹா

   //உங்க ஊர்ல, பார்க் பெஞ்சில் உள்ள பூக்கள் அருகில் செல்லும்போதும் அதே வைப்ரேஷன் கிடைக்குதா?
   ///
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா, பெஞ்.. பூக்களுடன் வீடியோ எடுத்து 2 வருடமாகுது, இன்னும் எடிட் பண்ணி அப்லோட் பண்ணவில்லை:))

   Delete
 30. விரைவில் முழுமையாக வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ டிடி வாங்கோ

   ஹா ஹா ஹா நன்றி(எதில முழுமையடைவதென ஜொள்ளவே இல்லை நீங்கள்:))).. கீழ்ப்பாக்கமோ எண்டெல்லோ மக்கள் நினைச்சிடப்போகினம் ஹா ஹா ஹா:))

   Delete
 31. வணக்கம் அதிரா சகோதரி

  இதற்கு முன் நான் போட்ட கருத்துரை என்னாச்சோ? அட... ஆண்டவா... ஒரு வேளை கங்கையில் முழ்கி விட்டதோ என்னவோ...? தெரியவில்லை. நீங்கள் மீண்டும் கங்கைக்கு போகப் வேண்டுமென்ற ஆசையில் போனால் அங்கு பல முறைகள் முங்கி எழும் போது எனக்காக தேடிப் பாருங்கள்.

  "கங்கை நதியோரம் ராமன் நடந்தான்.." பாடல் அருமை.. பொருத்தமாக இப்போது "கன்னியவள் சீதை தானும் நடந்து" விட்டு வந்துள்ளார்...

  இப்படியொரு மகள் தீடிரென கிடைத்திருப்பதற்கு கங்கை மகிழ்ச்சியடைந்திருப்பாள். பகோடா தேனீர் படங்கள் நன்றாக உள்ளது. காணொளிகள் கண்டேன்.

  தங்கள் நிலத்தில் தங்களின் உழைப்பால் உருப்பெற்று காய்கறிகள் கனிகள் பூக்கள் என அத்தனையுமே மிக அழகு. தங்களது பூஸார் விடாமல் வந்து வந்து அவரும் போஸ் தருகிறாரே... .. ரசித்தேன்.

  ஊசிக்குறிப்பும், ஞான ஊசி இணைப்பும் சுருக்கென்று மனதில் தைக்கும்படியாக சென்று அமர்கிறது.

  ஆ..... நேற்றெல்லாம் யோசித்து, யோசித்து இந்த புலியூர் பூசானந்தா (இல்லையில்லை... புலாலியூர் பூஸானந்தா) பெயர் நினைவுக்கே வரவில்லை.. (ஒழுங்காக ஆசிரமத்திற்கு வந்தால்தானே குருவின் பெயர் நினைவுக்குள் நிற்கும் என நீங்கள் மிரட்டுவது கேட்கிறது. :))) )
  நினைவாக இதற்கு முன் போட்ட நான் கருத்துரையை அருகிலிருக்கும் தேம்ஸிலாவது தேடி பாருங்கள். ஒரு வேளை தன் மகளுக்காக (உங்களுக்காக) தாய் கங்கா தேவி தேம்ஸிலே வந்து தரலாம் என காத்திருப்பான். :)))

  எல்லாமே நன்றாக உள்ளது சகோதரி. இப்படியான கலகலப்புக்கள் இனி எப்போதும் தொடரட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கருத்து மூழ்கவில்லை, நான் தான் கொமெண்ட் பொக்ஸ் ஐப் பார்ப்பதையே மறந்துபோய், இங்கு பதில்கள் போட்டுக் கொண்டிருந்தேன் அதனால தாமதமாகிவிட்டது மன்னிக்கவும் என் தவறுதான்.

   //நீங்கள் மீண்டும் கங்கைக்கு போகப் வேண்டுமென்ற ஆசையில் போனால் அங்கு பல முறைகள் முங்கி எழும் போது எனக்காக தேடிப் பாருங்கள்.///
   இப்போ நான் கங்கை மகள் எல்லோ.. இனி அடிக்கடி போவேனாக்கும் ஹா ஹா ஹா

   Delete
  2. ///இப்போது "கன்னியவள் சீதை தானும் நடந்து" விட்டு வந்துள்ளார்...///
   ஹையோ ஆண்டவா இந்த வசனம் மட்டும் அஞ்சு, நெ தமிழன் கண்ணில பட்டிடக்குடாதாக்கும்:)) கீதா பார்க்கமாட்டா:))).

   வீடியோக்கள் பார்த்து மகிழ்ந்தமைக்கு நன்றி. உங்கள் கருத்து சிவனின் முடியிலிருந்து கிடைத்துவிட்டது:).. அங்குதானே கங்கை இருக்கிறா ஹா ஹா ஹா...

   அதெல்லாம் சரி, மேலே எட்டிக் கம்பியை இறுக்கிப் பிடியுங்கோ ஏனெண்டால் கடசியாக வந்து கார்ட் பெட்டியில ஏறியிருக்கிறீங்கள் ரெயின் ஓடத்தொடங்கினால் ஆடத் தொடங்கும் பிறகு விழுந்திட்டால் முன்புபோல காலில நோ வந்திடும் ..:)), கொஞ்ச நேரம் அஜஸ்ட் பண்ணுங்கோ ஆரையாவது எழுப்பிப்போட்டு உங்களுக்கு சீட் எடுத்துத் தாறன்:)..

   மிக்க நன்றிகள் "சகோதரி" கமலாக்கா.. ஹா ஹா ஹா.

   Delete
 32. கங்கைமகள் அதிராவுக்கு வணக்கங்கள்.
  எனக்கும் கொஞ்சம் தீக்ஶை அணுப்புங்கள்.
  அப்பரம் எப்ப யமுனை மகள் அதிராவாய் மாறுவிங்க?
  யுட்டியூப் சந்தாதாதர் ஆகிவிட்டேன்.
  சீக்கிரம் ஒரு அண்டார்ட்டிகா டூர் போயி அப்லோடு செய்யுங்க.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அரவிந்த் வாங்கோ..

   நீங்கள் முன்பு என்பக்கம் வந்திருக்கிறீங்கள் என நினைவாக இருக்குது, இல்லை எனில்.. வருகைக்கு நல்வரவு.

   //எனக்கும் கொஞ்சம் தீக்ஶை அணுப்புங்கள்.///
   இது தீர்த்தமோ? இல்லை தீட்சை ஆ?.. புரியவில்லை... :). தீட்சை எனில் வெரி சோரி:)).. அதுக்கு தேம்ஸ் கரை ஆச்சிரமத்துக்கு நேரில் வரோணும், ஆனா முன்பணம் அனுப்பி இடப்பதிவு[முன்பதிவு] செய்யோணும்:), இது நோகாமல் நொங்கெடுக்கப் பார்க்கிறீங்க.. ஹா ஹா ஹா

   //அப்பரம் எப்ப யமுனை மகள் அதிராவாய் மாறுவிங்க?//
   அது ஜமுனா அம்மாவை, அட்லீஸ்ட் டச்சாவது பண்ணிய பின்னர்தான், நான் ச்ச்சும்மா எல்லாம் பெயர் வைக்க மாட்டேன் தெரியுமோ:)).. ஹா ஹா ஹா ஹையோ ஜாமி நல்லவேளை அஞ்சு இங்கின பிஸி:))

   Delete
  2. //யுட்டியூப் சந்தாதாதர் ஆகிவிட்டேன்.//
   ஓ மிக்க நன்றிகள்.

   //சீக்கிரம் ஒரு அண்டார்ட்டிகா டூர் போயி அப்லோடு செய்யுங்க.//

   என்னாது அண்டாட்டிக்காவோ?:).. நீங்கள் 2016 இல[சரியா நினைவில்லை] தைப்பொங்கலுக்கு வந்த பட்டிமன்றம் பார்க்கேல்லையோ?:))..

   அது இங்கு, அதே தலைப்பை வச்சு ஒரு போஸ்ட்டும் போட்டிருக்கிறேன்..

   //அண்டாட்டிக்காவில மனிசன் வாழ முடியாதாம்
   பொண்டாட்டியோட புருசன் வாழ முடியாதாம்" ஹா ஹா ஹா எப்பூடி எல்லாம் கோர்த்துப் பேசுகிறார்கள் பட்டிமன்றத்தில்..

   மிக்க நன்றி.

   Delete
  3. நான் நிற்பது, கரையில படிக்கட்டில்.... கீழே இறங்கிப் போனால் சரியாள ஆழம்.... நான் கயிற்றுக்கு அங்கால எட்டியும் பார்க்க மாட்டேன்ன்...

   Delete
  4. நான் கயிற்றுக்கு அப்பால், ஆனால் கயிற்றைப் (இரும்புச் சங்கிலியைப்) பிடித்துக்கொண்டு குளித்தேன். என் மனைவிக்கு ரொம்பவே பயம். எதுக்கு வேண்டாத வேலைலாம் பண்ணறீங்க என்றாள்.

   Delete
  5. நெல்லைத் தமிழன், கயிற்றுக்கு வெளியே போய்க் குளிக்கும் உங்களுக்கு முசுப்பாத்தி, இங்கால நிக்கும் எங்களுக்கு நெஞ்சு பதறும்..

   Delete
 33. ///ஆனா அவ்வளவு உயரத்திலும் முழுக்க முழுக்க மண்ணாக இருக்குது தண்ணி, அதுதான் ஏனெனப் புரியவில்லை எனக்கு.//

  ஹையோ ஹாயையோ ..அது மண்ணு கலங்கி இருக்க ரிஸன் நீங்கதான் :) உங்க குண்டு உடம்பை தொம் த்தோம்னு போட்டு முங்கினத்தில் மண்ணு கிளம்பி மேலே வந்திருக்கு

  ReplyDelete
  Replies
  1. வந்திட்டாய்யா வந்திட்டா.. எங்க ஆளைக் காணமே... கொக்கு புறா மயில் என, சமரில தேடிப்போயிட்டாவோ என நினைச்சேன்:)..

   அது அஞ்சு அந்நேரம் கங்கை அப்பூடியே பெருக்கெடுத்து அடிச்சுப் பிரண்டு ஓடியது, நிலம்தெரியாமல் கலங்கி இருந்தது.

   Delete
  2. ஹாஹாஹா ஹையோ ஏஞ்சல் கை கொடுங்க கை கொடுங்க!!!!!!

   கீதா

   Delete
 34. ///விரல்களை நீட்டி சைன் லங்குவேஜ் லயும் பேசிப் பார்த்தேன்[நேக்கு கொஞ்சம் தெரியுமாக்கும் இது, அஞ்சுவோட கதைப்பதற்காகவே பழகினேன்:) ஹா ஹா ஹா].. ம்ஹூம் அவருக்கு எதுவும் புரியவில்லை//


  அப்டியா ஓகே அடுத்த விடியோல சைன் லங்வஜில் பேசி யூ டியூபில் போட்ருங்க :))) வியூஸ் எகிறும் கூட்டமா கூடி உங்களை மொத்தறத நான் பாக்கணும் :)

  ///ஊத்துப்படத் தொடங்கிட்டுது, பின்னர் போத்தலில் ஊற்றி ஸ்கொட்லாண்ட் கொண்டு வந்திட்டோம்.//

  இருங்க இமிக்ரேஷன் ஆட்களுக்கு தகவல் அனுப்பறேன் இந்திய கங்கை நீரை கடத்தி இருக்கீங்க உங்க ஊருக்கு

  //அதுவும் மண் கப்பில்... என்னா சுசி:) தெரியுமோ...//

  எது மண் கப்போ :))) ஹாங் ஹாஆஆ ஹீஈஈ ஹூஊஊ :)

  ReplyDelete
  Replies
  1. ///
   அப்டியா ஓகே அடுத்த விடியோல சைன் லங்வஜில் பேசி யூ டியூபில் போட்ருங்க :)///

   கொஞ்சம் தேம்ஸ் கரைக்கு வாங்கோ அஞ்சு, லேட்டானாலும் பறவாயில்லை, இப்போ எங்களுக்கு இங்கு இருள 11 மணி ஆகுது, அதனால நான் வெயிட் பண்றேன், உங்களோடுதான் சைன் லங்குவேஜ் ல பேசி வீடியோ எடுக்கோணும், அப்போதான் மக்களுக்குப் பிடிக்குமாக்கும்:))

   ///இருங்க இமிக்ரேஷன் ஆட்களுக்கு தகவல் அனுப்பறேன் இந்திய கங்கை நீரை கடத்தி இருக்கீங்க உங்க ஊருக்கு///

   ஐயா ஜாமீஈஈஈஈஈஈ இது வேறையா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஆனா அஞ்சு, நேற்று செவ்வாய்க்கிழமையும் வீடெல்லாம் கங்கை தீர்த்தம் கலந்து தெளிச்சேன், அப்போ நினைச்சேன்... எங்கிருந்த தீர்த்தம், ஸ்கொட்லாண்டில அதிரா வீட்டில தெளிபடுதே.. இது கங்கைக்கே தெரிய நியாயமில்லை ஹா ஹா ஹா...

   மண் சட்டிபோல, மண் கப் .. அப்பூடித்தானே சொல்லோணும்.. அதுக்கொரு ஹிந்திப்பேர் இருக்குது மறந்திட்டேன்..

   Delete
  2. அப்டியா ஓகே அடுத்த விடியோல சைன் லங்வஜில் பேசி யூ டியூபில் போட்ருங்க :))) வியூஸ் எகிறும் கூட்டமா கூடி உங்களை மொத்தறத நான் பாக்கணும் :)//

   ஹையோ சிரித்து முடியலை ஏஞ்சல்!!!! நானும் கூடச் சேர்ந்துவிடுவேன்....

   கீதா

   Delete
 35. கபேஜ் ,வெங்காயத்துக்கூட அங்கே கொண்டை கடலையும் வளருது கண்டுபிடிச்சிட்டேனே :)

  ஞானம் ஆணவம் வாழ்க்கை னு தத்துவமா பொழியறீங்க ..எனக்கு எதிலும் மனசு நிக்கலை .நிறைய நாட்டு நடப்பு அக்கம்பக்கம் பல விஷயங்கள் மனசை குழப்புது ஏனன்றே புரியல கொஞ்சம் உங்க ரிலாக்ஸ் ப்ளஸ் கிளாசுக்கு வரணும் ஒரு ஒன் hour செசனுக்கு புக் பண்ணுங்க :)


  ReplyDelete
  Replies
  1. கொண்டைக்கடலை அழகிய பிங்கிப்பூ வந்திருக்குது அஞ்சு... இப்போ கடும் வெயில் என்பதால எல்லாப் பயிரும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா சூப்பரா வளரீனம் எல்லோரும்..

   //எனக்கு எதிலும் மனசு நிக்கலை .நிறைய நாட்டு நடப்பு அக்கம்பக்கம் பல விஷயங்கள் மனசை குழப்புது///
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. அது போலன் அலர்ஜிக்காலம் என்பதால மைண்ட் அப்பப்ப சுவிங் ஆகும்... நீங்க கட்டாயம் என் ஆச்சிரமத்துக்கு வரோணும்:), வேப்பங் குழை ஒரு கட்டுக் கொண்டு வாங்கோ.... என் யூரியூப் சுவிஸ்:)) [கொஞ்சம் இருங்கோ சிரிச்சிட்டு வாறேன் ஹா ஹா ஹா:)] எக்கவுண்டில் பணத்தை முன்கூட்டியே செலுத்தவும்:)))

   மிக்க நன்றி அஞ்சு, ரெயின் புறப்பட முன் வந்து ஏறிட்டீங்கள்:).

   Delete
 36. கங்கைப் பக்கம் போனதில்லையேன்னு ரொம்பவே வருத்தப்பட்டிருக்கேன். கங்கை மகள் அதிராவின் பதிவையும், பின்னூட்டங்களையும் படிச்சதில் வருத்தம் போயே போச்சுது.

  கங்கைக்குக் கணக்குவழக்கில்லாம நிறையப் பொண்ணுக இருக்குன்னு படிச்சிருக்கேன். அதிராதான் மூத்த பொண்ணா?

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கூமுட்டை வாங்கோ..

   உங்கள் பக்கம் போய்ப் பதிவு பார்த்தேன், பார்த்ததனால்தான் கூப்பிடலாமே என கூமுட்டை எனப் போட்டுள்ளேன்:). முதன்முதலாக வந்திருக்கிறீங்கள்.. நல்வரவு.

   //கங்கைப் பக்கம் போனதில்லையேன்னு ரொம்பவே வருத்தப்பட்டிருக்கேன்.///
   நியாயமான வருத்தம்தேன்ன்:))

   //கங்கை மகள் அதிராவின் பதிவையும், பின்னூட்டங்களையும் படிச்சதில் வருத்தம் போயே போச்சுது./////
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) .. ஓ பொஸிடிவாத் திங் பண்ணோணுமாக்கும்[எனக்குச் சொன்னேன்:)].. அதாவது போஸ்ட் படிச்சு படங்கள் பார்த்தது, கங்கைக்கு நேரில்போய்க் குளிச்சதைப்போல இருக்குதென்கிறீங்கள்.. இருக்கட்டும் இருக்கட்டும்... ஹா ஹா ஹா.

   //கங்கைக்குக் கணக்குவழக்கில்லாம நிறையப் பொண்ணுக இருக்குன்னு படிச்சிருக்கேன். அதிராதான் மூத்த பொண்ணா?///

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நீங்க எங்கயோ டப்பாப் படிச்சிருக்கிறீங்க:)... வன் அண்ட் ஒன்லி சைல்ட்:)).. அது மீ மட்டும்தேன்:))).. ஹா ஹா ஹா மிக்க நன்றி ...

   Delete
 37. கங்கை நதியோரப் படங்கள் அருமை. நன்றி

  ReplyDelete
  Replies
  1. பாதி ஞானிக்கு சொன்னேனுங்க வந்தனம்... முழு ஞானியாக உடம்பு முழுக்க பூச வேணும் சந்தனம்...
   www.scientificjudgment.com/

   Delete
  2. //
   Nanjil SivaThursday, June 22, 2023 7:25:00 pm
   பாதி ஞானிக்கு சொன்னேனுங்க வந்தனம்.//

   வாங்கோ வாங்கோ நல்வரவு...
   சே சே பெருமை பேசக்குடா என, ஒரு மரியாதைக்காக பாதி ஞானி எனச் சொன்னது ஒரு தப்பா:)))...
   நான் காசி மண்ணெடுத்து எப்போ உடம்பில பூசுறேனோ அப்போ நான் புல்ல்ல்ல்ல்ல்ல் ஞானீஈஈஈஈஈஈஈஈ:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி வரவுக்கு.

   Delete
 38. அவ்வளவு உயரத்திலும் முழுக்க முழுக்க மண்ணாக இருக்குது தண்ணி, அதுதான் ஏனெனப் புரியவில்லை எனக்கு.//

  நல்ல மழை பெய்து இருக்கும் போது இப்படி கல் மண்ணை உருட்டிக்கொண்டு ஓடி வருவாள் கங்கை. மற்ற படி தெளிவாக இருப்பாள். நாங்கள் எடுத்து வந்த தண்ணீர் அடியில் மண் படிய வில்லை.
  எனக்கு உடை மாற்ற கங்கை கரையில் பூ விற்கும் பெண் அவர் கூடாரத்திற்கு அழைத்து போனார்கள். அந்த உதவிக்கு கொஞ்சம் பணம் கொடுத்தேன் பூக்கள் வாங்கி கொண்டேன். மகிழ்ச்சியாக சிரித்தார்கள்.
  சிறி கூடாரத்தை சுத்தமாக வைத்து இருந்தார்கள். கயிற்று கட்டில் இரண்டு, தட்டு முட்டு சாமான்கள் கொஞ்சம். எளிமையான அன்பான மக்கள்.

  ReplyDelete
 39. பொற்கோவிலில் காய்கறிகள் வெட்டி கொடுத்து உதவி செய்தாள் என்மகள்.
  நாங்கள் அங்கு சப்பாத்தி சாப்பிட்டு வந்தோம். உணவை இரண்டு கையால் வாங்க வேண்டும். உணவை வீணாக்க கூடாது. பெரிய பெரிய மனிதர்கள் (பணம் படைத்தவர்கள்) எல்லாம் நம் செருப்பை கையில் வாங்கி அதற்கு உள்ள இடத்தில் வைக்கும் பணியை மேற் கொள்வார்கள்.
  பாத்திரம் கழுவி கொடுப்பார்கள். எங்கு பார்த்தாலும் சுத்தம் சுத்தம் எனக்கு மிகவும் பிடித்த கோவில்.

  ReplyDelete
 40. பொற்கோவில் காணொளி முன்பே பார்த்து லைக் செய்து விட்டேன், உங்கள் தோட்ட காணொளியும் முன்பே பார்த்து விட்டேன்.
  அனைத்தும் அருமை.

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.