நல்வரவு_()_


Sunday 25 February 2018

கடவுள் நேரில் வந்தால்?:)

சமீபத்திலே திருமதி மிஸ்டர் அஞ்சு:) அவர்கள் என்னை ஒரு பேட்டி எடுத்திருந்தா:) பிறந்தநாளில்:), அதில் கேட்ட கேள்வியில் ஒன்றுக்கு பதில் கவிதையாக இருக்கு தருவேன் எனச் சொல்லி இருந்தனா:)).. அதுதான் இப்போ உங்கள் முன். 

Sunday 18 February 2018

நியூயோர்க்கைச் சுத்திப் பார்க்கப் போறோம்...

ரு இடத்துக்குப் போவது.. போய்ப்  படமெடுப்பது ஒன்றும் பெரிய விசயமில்லை:).. அதை செட் பண்ணி, தொகுத்து எடுத்து புளொக் இல் போடும் வேலை இருக்கே.. அப்பப்பா.. இதை விட தேம்ஸ் இல் குதிப்பது எவ்ளோ ஈசி தெரியுமோ?:)..

stop stop!!!.. முதலில் இந்த 3D glasses ஐப் போட்டுக் கொண்டு பாருங்கோ:) அப்போதான் அயகா இருக்கும்:)..

Tuesday 13 February 2018

காதலர் தினமும், வெள்ளையர் மனமும்:)

பெப்ரவரி மாதம் வரமுன்பே, எங்கு பார்க்கினும் வலன்ஸ்டைன் டே க்கான பொருட்களே கண்ணைக் கவருது... ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கொண்டாட்டம் வைக்கிறார்களே என சிலர் திட்டினாலும், இதுவும் ஒரு விதத்தில் மனதுக்கு மகிழ்ச்சியே.

பெயர்தான்  “காதலர் தினம்” ஏ தவிர, கொண்டாடுவோர் என்னமோ குழந்தையில் இருந்து வயதானோர் வரை எல்லோருமே கொண்டாடுகின்றனர்.

ஆணாதீக்கம் வெளிநாடுகளில் குறைவு/இல்லை எனச் சொன்னாலும் அது வேறு வடிவில் இங்கும் இருக்கிறது. பொதுவாக நம் நாடுகளில்,  ஒரு காதல் எனில் .. அதை ஆண் தான் சொல்ல வேண்டும், ஆண் தான் ஒரு பெண்ணின் பின்னால் போய் கேட்க வேண்டும், மாறி ஒரு பெண் வலியப் போய் தன் அன்பைச் சொல்லி விட்டால் அதை தரக்குறைவாக நினைப்பது, ஏதோ காதலுக்காக அலையும் பெண் என்பது போல பார்ப்பது, இதையும் தாண்டி, ஒரு சின்ன பிரச்சனை வந்திட்டாலே.. நானா உன் பின்னால வந்தேன், நீதானே என்னை விரும்பி வந்தாய் எனக் கூறி மனதை உடைப்பது என பல வகை இருப்பதைப்போல...

இங்கும் ஒரு முறை இருக்கிறதாம், இங்கு காதலுக்கு அல்ல, திருமணம் எனும் பேச்சை முதலில் சொல்ல வேண்டியவர் ஆண் தானாம். காலம் காலமாக ஒன்றாக லிவிங் 2 கெதர் லைஃப் இல் இருப்பார்கள், ஆனால் திருமணம் முடிப்போமா எனும் முடிவை எடுப்பது, சொல்லுவது எப்பவும் ஆண் தானாம். பெண் அதில் தலையிடுவதில்லையாம்.

ஆனா இந்தக் காதலர் தினம் இருக்குது பாருங்கோ, அன்று மட்டும், பெண் கேட்கலாமாம், திருமணம் முடிக்கிறாயா என....

எங்கள் திருமணம் நிட்சயமான பின், என் கணவரும் இப்படி ஒரு கார்ட் எனக்கு அனுப்பினார் ஹா ஹா ஹா:)..

பல நேரங்களில் நம்மவர்கள் வெள்ளைகள் பற்றிப் பேசும்போது, கொஞ்சம் தரக்குறைவாகவே பேசுவது வழக்கம், அதுவும் இந்த குடும்ப உறவு முறைகளில். ஆனா அன்பு பாசம் என வரும்போது, சில சமயங்களில் நம்மவர்களை மிஞ்சும் அளவுக்கு இவர்கள் நடப்பதை பார்க்க, எல்லோரும் மனிதர்கள்தானே, நிறத்தில் என்ன இருக்கு எனத்தான் எண்ணத் தோணும்.

நம்மவர் ஒருவர், தன்னை விட வயதில் கூடிய ஒரு பெண்ணை விரும்பினாராம், நன்றாக இருந்த வேளை, திருமணம் எனும் பேச்சு வரும்போது, 4 பேர் நாலு விதமான கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள், உடனே அந்த ஆண் வந்து பெண்ணிடம் சொன்னாராம், நீ வயதில் அதிகமாக இருப்பதால், இன்னும் 15,20 வருடங்களில் உனக்கு உறவில் ஈடுபாடு குறைந்து விடுமாமே, அப்போ என் நிலைமை அந்நேரம் எப்படி இருக்கும் எனக்கூறி, இதை விடக் கொடுமை இன்னொன்று சொன்னாராம்... வயதான சிலரை விசாரித்துப் பார், அவர்களின் நிலைமை எப்படி இருக்கிறது என, அதன் பின் நாம் திருமணம் முடிக்கலாம் என.  அப்போ இவர் விரும்பியது மனதையா??? நாளைக்கே நாம் இருப்பது உறுதியில்லை எனும்போது, 20 வருடத்தின் பின் யோசித்து மனதை உடைப்பது எவ்வளவு கேவலமானது.

இதை எதுக்கு சொன்னேன் எனில், நம்மவர்களின் கிட்னி இப்படி வேர்க் பண்ணும்போது, இங்கு ஒரு ஸ்கொட்டிஸ் கப்பிள், இந்த தம்பியின் சிந்தனையைப் பாருங்கோ.. இதுதானே மனதை நேசிப்பதென்பது.

இருவருக்கும் 25 வயது, 5,6 வருடங்களாக லிவிங் 2 கெதர் வாழ்கையில் இருந்து வந்த வேளை, திடீரென ஒருநாள் பெண்ணுக்கு வயிற்றுக்குத்தென ஹொஸ்பிட்டல் போய் செக் பண்ணிய இடத்தில், கிட்னி கான்சர்.. வந்து விட்டது, இது விரைவில் பரவி விடும், இன்னும் 6 மாதங்களே இருப்பா என டொக்டர் எடுத்தோம் கவிழ்த்தோம் என பெற்ரோர் எல்லோரையும் அழைத்துச் சொல்லி விட்டார்.

நமக்கு நன்கு தெரிஞ்ச பிள்ளை, இதைக் கேட்டு நான் 2,3 நாட்களாக நித்திரையே கொள்ளாமல் பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன், அக்குடும்பத்து நிலைமை எப்படி இருந்திருக்கும்.

பின்னர் டொக்டேர்ஸ் க்குள் பெரிய ஒரு மீட்டிங் வைத்து, ஒரு முடிவுக்கு வந்தார்கள், ஒரு வித ட்றீட்மெண்ட் ஆரம்பிக்கலாம், அதில் ஏதும் நன்மை ஏற்படலாம் என.

அப்படி ஆரம்பிச்சு, முதலில் 3 மாதங்கள், பிள்ளை ஹொஸ்பிட்டலும் வீடுமாக இருந்தா, ஆனா அந்த தம்பியோ அவவை விட்டு விலத்தவே இல்லை. 3 மாதம் முடிந்தபின், அவ கொஞ்சம் ஓகேயானா, திரும்ப வேர்க் பண்ண தொடங்கினா, ஆனா பெற்றோர் வீட்டிலேயே இருந்தா, அத் தம்பியும் வந்து ஒன்றாக நின்றார், இதைப் பார்த்த பெற்றோர் அவர்களுக்கு ஒரு வீடு எடுத்து அருகில் தங்க வைத்தனர். வெள்ளைகளுக்கு வீட்டில் ஒன்றாக வைத்திருப்பது பிடிக்காது.

இப்படியே ஒரு வருடம் ஓடி விட்டது, இருவரும் கிட்டக் கிட்ட சுற்றுலா எல்லாம் போய் வந்தார்கள். ஒரு தடவை ஸ்பெயின் போய், அங்கு அவவை சுவிமிங் பூலில் குளிக்க விட்டு விட்டு, ஹோட்டல் மனேச்சரின் உதவியோடு, தங்கியிருந்த ரூமிலிருந்து Pool வரை பூத்தூவி, அவர் நடந்து வந்து, மோதிரம் போட்டு என்கேஜ்ட் பண்ணினாராம்... அதனாலேயே அப்பிள்ளைக்கு பாதி நோய் குணமானதுபோல உசாராகிட்டா... ஒரே துள்ளலாம், ஏனெனில் வெள்ளையர்களில் நலமோடு இருந்தாலே என்கேஜ்மெண்ட், வெடிங் என்பது குதிரைக் கொம்பு:)..

பின்னர் 2,3 மாதத்தில், ஒரு கிட்னி போயே விட்டது, ஒபரேசன் பண்ணியே தீரோணும் என பண்ணி, அதிலும் தேறி விட்டா.. இப்போ 2 வருடங்கள் கடந்து விட்டது, அறிந்தேன், வரும் ஜூலை மாதம் வெடிங் செய்வதற்கு எல்லா ஆயத்தங்களும் அந்த Boy செய்கிறாராம், நாள் எல்லாம் குறித்தாயிட்டாம்.... அப்போ இதுதானே உண்மையான அன்பு, மனதை நேசிப்பதென்பது இதுதானே, 20 வருடத்தின் பின் என்னாகும் என யோசிக்கும் நம்மவருக்கு மத்தியில், இன்று மகிழ்ச்சியாக இருப்போம் என நினைத்து வாழும் இந்தக் கப்பிள்ஸ் எனக்கு உண்மையில் சிறந்த ஒரு காதலர்களாக தெரிகின்றனர். இந்த சந்தோசத்தாலயே 6 மாதம் எனச் சொல்லியும் அப்பிள்ளை இன்னும் நலமாக இருக்கிறா.. வேர்க் பண்ணுகிறா.

இதில் இன்னொரு நன்மை, இப்பிள்ளையின் அண்ணா லிவிங் 2 கெதர் லைவ் ல பல வருடங்களாக இருந்தார், ஒரு குழந்தையும் உண்டு, தங்கைக்கு ஏதும் ஆகி விட்டாலும் அதுக்குள் தன் வெடிங் க்கு தங்கை இருக்கோணும் என, அவர் அவசரமாக போன வருடம் தம் வெடிங்கை சிறப்பாக கொண்டாடினார்.


இது விட்ட குறை தொட்ட குறை:-
போன தடவை விடுபட்ட சில வெள்ளையர்களின் பழக்க வழக்கம். முக்கியமான ஒன்றை மறந்திட்டேன். நம் ஊரில் ஒரு ரிப்பெயார் செய்யோணும் எஞ்சினியர் வீட்டுக்கு வரோணும் எனில், அவருக்கு ஒரு ட்றைவர் கார் ஓட, மற்றும் bag தூக்க ஒருவர் என மூவராக வீட்டுக்கு வருவினம், வந்து செய்து போட்டு அப்படியே விட்டு விட்டுப் போயிடுவார்கள்.

ஆனா இங்கெனில், எஞ்சினியர் தானே காரோடி, பெரிய சூட்கேஸ் போன்ற பாக் ஐ முக்கித்தக்கித் தூக்கிக் கொண்டு வந்து, செய்ய வேண்டியதை செய்தபின்னர், நம்மிடம் தும்புத்தடி கேட்டு, நான் விட மாட்டேன் இல்லை விடுங்கோ நான் கிளீன் பண்ணுவேன் என்பேன், இல்லை தாங்கோ நான் செய்கிறேன் என கூட்டித் துப்புரவாக்கிட்டே போவார், தண்ணி வேலை எனில், மொப்பர் வாங்கி மொப் பண்ணிட்டே போவார்கள்.

நம் வீட்டுக்கு அவர்கள் வந்தாலோ, நாம் அவர்கள் வீட்டுக்குப் போனாலோ கேட்டுத்தான் எதுவும் குடுகோணும், ரீ, கொஃபி யூஸ் என்ன வேணும் குடிக்கிறீங்களா என.. தேவை எனில் நேரே சொல்லுவினம் இல்லை எனில் இல்லைதான், ஃபோஸ் பண்ணவும் கூடாது, நம்மையும் பண்ணாயினம். சாப்பாடும் அபடியே.. ஃபுபே போலதான் செய்து வைப்போம் தாமே எடுத்து சாப்பிடுவினம் நாம் போனாலும் அப்படித்தான். ஆனா இந்த சாப்பாட்டு முறை இப்போ நம்மவர்களும் எங்கும் அப்படித்தானே மாறி விட்டது. போட்டுக் குடுப்பது கப்பலேறி விட்டது,.

ஊசி இணைப்பு:
  

இலவச இணைப்பு:
 
*********************************************************************************************
 “அன்புள்ளம் கொண்ட அனைவருக்கும் இனிய Valentine's day வாழ்த்துக்கள்”
*********************************************************************************************

Thursday 1 February 2018

தி ம்பம்:)

ச்சூச்ச்மீ:) தலைப்பைச் சேர்த்துப் படிக்கவும்:).. எதையும் பிரிச்சுப் பார்க்க ஆசைப்படப்பிடா:)