மியாவ் பெட்டி
ஒவ்வொருவரும் அஞ்சறைப்பெட்டி, ரங்குப்பெட்டி, பிய்ந்த பெட்டி.... இப்பூடி எழுதீனமே , நானும் ஏதாவது எழுதலாமே என பலமாக சிந்தித்த இடத்தில் கிடைத்ததே இந்த “மியாவ் பெட்டி” அதுக்குத்தான் கிட்னியை யூஸ் பண்ணோனும் என்று சொல்றது:).
சரி சரி இப்போ விஷயத்துக்கு வருவோம்.... கிட்னிக்கு வேலை கொடுத்த இடத்தில், முன்பு நடந்த சில சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.
இங்கே பெரும்பாலான ஷொப்ஸ் எல்லாம் ஒரு செயினாகவே இருக்கும்... அதாவது இவை பிரித்தானியா முளுவதும் இருக்கும்.
இது இங்குள்ள பல பார்மஸிகளில் ஒன்று. இங்கே மருந்துப்பொருட்களோடு, அழகுசாதனப்பொருட்கள், குழந்தைகளின் ஆடையிலிருந்து, தேவையான அத்தனை பொருட்களும், மற்றும் பேர்பியூம், ரொயிலறீஸ், இப்படி பொருட்கள் எல்லாம் வாங்கலாம்.
நாங்கள் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் வீட்டில் நிற்பதில்லை, காலையில் வெளிக்கிட்டால் மாலைதான் வீட்டுக்கு வருவோம், சாப்பாடெல்லாம் வெளியிலேயே வைத்துக்கொள்வோம்.
அப்படித்தான் ஒருநாள் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு முன்பு, ஒரு மோலுக்குப் போனோம். அங்கு சுத்தித்திரிந்தோம், சின்னமகன் பிராமில்(pram) இருந்தார். வாங்கும் பொருட்களையெல்லாம், பிராமின் கீழே இருக்கும் பாதுகாப்பு ஏரியாவில் வைத்தோம்(காவும் வேலை இல்லை:)). இப்படியே இந்த பூட்ஸ் பார்மஸிக்கும் போனோம். அங்கு நான் எனக்குத்தேவைப்பட்ட, கண்ணுக்கு, சொண்டுக்கு, நகத்துக்கு..... இப்படியான பொருட்களையெல்லாம் வாங்கினேன்.... கிட்டத்தட்ட 40 பவுண்டுகள் வந்ததாக ஞாபகம். அவர்களது bag இல் போட்டுத் தந்தார்கள்.
பின்பும் வேறு கடைகளுக்குச் சென்று சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டோம். வீட்டுக்கு வந்தால், உடனே ஆராவது ரீ ஊத்துவோம், குடிப்போம்.... பின்னர் படம் பார்ப்பது/ரெஸ்ட் பண்ணுவதுதான் வேலை, வேறெதுவும் அன்று செய்வதில்லை. அப்படியே அன்றைய பொழுதும் முடிந்துவிட்டது, கணவர்தான் bags எல்லாம் எடுத்துவிட்டு பிராமை மடித்து வைத்தார். நான் வாங்கிய பொருட்கள் எதையும் செக்பண்ணவில்லை. அடுத்த நாள் பின்னேரம்தான் பிரீயாக இருக்கும்போது, கியூரெக்ஸ் வாங்கினேனே, அடிக்கலாமே என நினைத்துத் தேடினேன். அந்த bag ஐக் காணவில்லை.
எல்லா இடமும் தேடினேன் கிடைக்கவில்லை, ஏனைய bags எல்லாம் இருந்தது. அப்போ கணவரைக் கேட்டேன், “பூட்ஸ்” இல் தந்த பாக்கை நீங்களோ பிராமில் வைத்தீங்களென?, நினைவில்லையே என்றார், எனக்கும் நினைவில் இருக்கவில்லை. ஷொப்பிலேயே தவறவிட்டோம் என்ற முடிவுக்கு வந்தாச்சு. எதுவும் புரியவில்லை, கார் பூட்டிலும் இல்லை.
ஓக்கே, அடுத்தமுறை கேட்போம் என விட்டுவிட்டோம். நாங்கள் எப்பவுமே பில்லையோ/ மிகுதிக் காசையோ கவனிப்பதில்லை, வாங்கி அப்படியே பாக்கில்/பொக்கட்டில் போடுவது பின்பு ஸ்ரெட் பண்ணிவிடுவோம். இது உடனே என்பதால், பில்லை எடுத்துக் கவனமாக வைத்துவிட்டேன்.
அடுத்த கிழமை போனோம், அங்கே இதற்கெனப் பொறுப்பாக ஒருவர் இருக்கிறார், அவரிடம் சொன்னோம், பில்லைக் காட்டி, அவர் உடனே, தவறவிட்ட bags க்கு என ஒரு ரூம் இருக்கு, அங்கே போய் செக் பண்ணிவிட்டு வந்து சொன்னார், இங்கு இல்லையே, உங்கள் வீட்டில் நன்கு தேடினீங்களோ என்று. நாங்களும் தேடிவிட்டோம் இல்லை என்றோம். சற்று யோசித்தார், உடனே சொன்னார் ஓக்கே... மீண்டும் தருகிறேன் என.... பில்லைப் பார்த்துப் பார்த்து அத்தனை பொருட்களையும் எடுத்துப் போட்டு தந்தார் புன்னகையோடு. நாங்கள் இப்படி எதிர்பார்க்கவில்லை.... புன்னகையோடு வந்துவிட்டோம்.
இரண்டு நாட்கள் போனபின், நான் வக்கியூம் பண்ணும் போது, ஸ்ரெப்சின்(steps) கீழே, மகனின் சைக்கிளோடு ஒரு பாக் தெரிந்தது, எடுத்துப் பார்த்தேன், காணாமல் போன அதே பூட்ஸ் பாக். எனக்கு உடம்பெல்லாம் என்னவோ போலாகிவிட்டது..... எவ்வளவு தவறாகிவிட்டதே என நினைத்தேன். உடனே கணவருக்கு போன் பண்ணினேன், அவர் சொன்னார், அப்படியே வையுங்கோ, கொண்டுபோய்க் கொடுத்திடலாம் என்று.
அதேபோல் அடுத்த கிழமை கொண்டு சென்று, காரிலே மறைவாக இருந்துவிட்டது நாங்கள் கவனிக்கவில்லை என ஒரு குட்டிப்பொய் சொல்லி ஒப்படைத்தோம். அவர்கள் எம்மை நம்பி உடனேயே அனைத்துப் பொருட்களையும் திரும்பத் தந்தார்களே.... அந்த நல்லெண்ணம், எப்பவுமே.. ~Boots~ ஐ நினைக்கும்போது வந்துவிடுகிறது. வாழ்க, வளர்க அவர்கள் சேவை.
TESCO

இது இங்குள்ள பல சுப்பமார்கட்டுகளில், ஒரு ஷெயின் சுப்பமார்கட் ரெஸ்கோ. இதுவும் பிரித்தானியாவில் எல்லா இடங்களிலும் உண்டு. 90 வீதமானவை 24 மணித்தியாலமும் திறந்தே இருக்கும். பெயர்தான் சுப்பமார்கட், ஆனால் இது ஒரு மோல்போல இருக்கும்... இங்கு உடுப்பிலிருந்து, அலங்காரம், சூஸ் வகைகள். எலக்ரிக், மருந்து, சமையல்...., கார்டின் பொருட்கள் அத்தனையும் கிடைக்கும். கிட்டத்தட்ட அனைத்துமே வாங்கலாம். எங்கள் வீட்டுக்கு கிட்டவும் 2 இருக்கு. ஒன்று 10 நிமிடம் ஓட வேண்டும், இன்னொன்று 15 நிமிடம் ஓடவேண்டும். 24 மணிநேரமும் திறந்திருக்கும்.

ஒருநாள் போனபோது, ஒரு அழகான ஷோட்ஸ்(மகனுக்கு), அதன் விலை £15 பவுண்டுகள், ஆனால் சேல் பிறைஸ் £7.50 பவுண்டுகள் என இருந்தது. சரியென எடுத்துவிட்டேன். வீட்டுக்கு வந்துவிட்டேன்.
எப்பவுமே பில் செக்பண்ணும் பழக்கமில்லாத நான், அன்று, இதன் விலையைப் பார்ப்போமே என செக் பண்ணினேன். £15 பவுண்டுகள் என்றே போடப்பட்டிருந்தது. எனக்கு கோபமாக வந்தது, காசு பெரிசில்லை, ஆனால் சேல் எனப்போட்டு ஏமாற்றிவிட்டார்களே என. சேல் என்பதால்தான் எடுத்தேன், இல்லாவிட்டால் எடுத்திருக்கமாட்டேனே என நினைத்துவிட்டு. அடுத்தநாள் போனேன், கஸ்ரொமர் சேர்விசில் போய் காட்டிக் கதைத்தேன், உடனே அந்த லேடி போய்ச் செக் பண்ணினார், பண்ணிவிட்டு வந்து சொன்னார், இது சேல்தான், ஆனால் கசியர் மெசினுக்கு(Till), சேல் பிறைஸ் வந்திருக்கவில்லை. இது எங்கள் தப்புத்தான் எனக்கூறி, மொத்தப்பணத்தையும் திரும்பத் தந்து, ஷோட்ஸ் ஐயும் இலவசமாகத் தந்தார். இப்படித்தப்பு நடந்தால், அவர்கள் ரூல்ஸ் இதுதானாம். இது அடுத்த இன்ப அதிர்ச்சி எனக்கு.
ஆனால் ரூல்ஸ் இப்படி இருந்தாலும், அங்கு சேவீசில் நிற்பவர்களையும் பொறுத்து இருக்கிறது எல்லாம். சிலர் சுவாமி கொடுத்தாலும் ஐயர் கொடுக்கமாட்டார் என்பதுபோலவும் இருப்பார்கள்.
என்ன இருந்தாலும், இந்த இரண்டு நல்ல விஷயங்களையும் “மியாப் பெட்டி” மூலம் வெளியே தெரியப்படுத்துவதையிட்டு... பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
பின் இணைப்பு:
ஸாதிகா அக்கா!!! அதி....ராவைத் தெரியுதோ?
இது எந்த இடம், எவடம்? என்றெல்லாம் கேட்கப்பூடாது, சும்மா ஒரு இடம், கைபோன போக்கில் எடுத்தேன் அவ்ளோதான்:).

எமது நாடுகளில் கிரிக்கெட் மச் போல, இங்கத்தைய நாடுகளில் சொக்கர் மச்சுக்குத்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஸ்கூல் எல்லாம் இதே கதைதான். இந்த T-Shirt, மச் ஆரம்பமான அன்றே,எங்கள் மகன் பிளேன் ரீசேட்டுக்கு, தானே எழுதி, கொடியும் கீறி போட்டிருக்கிறார்.
ஓகே, நித்திரை வருகிறதே.... குட்நைட்...