எப்பவுமே, நகைச்சுவை, நகைச்சுவையான சினிமாக்கள் தான் அதிகமா தேடிப் பார்ப்போம். அந்த வகையில் போனகிழமை தேடிய இடத்தில்..
“நான் பெத்த மகனே” படம் கைக்குக் கிடைத்தது.
நடிகர்கள் யாரென பார்த்தபோது, அத்தனை நகைச்சுவையாளர்களும் இருந்தார்கள்... மனோரமா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, வடிவேல்... இவர்களோடு ஊர்வசி.. மற்றும் ராதிகா, நிழல்கள் ரவி.
அப்போ என் சந்தோசத்துக்கு எல்லையே இல்லை, இதனை இப்பவே பார்த்து முடிக்க வேண்டும் என ஆரம்பித்தால்... முடிவு வரை நிறுத்தவே மனம் வரவில்லை எண்டால் பாருங்கோவன்... அவ்ளோ ஆர்வமா நகர்த்தியிருக்கிறார்கள் கதையை.
==========================இடைவேளை===========================
அப்போ எங்கட டொக்டர்- பிரின்சிபல்- செஃப் ... தாமோதரம்பிள்ளை அங்கிளைப் பார்த்தால் திருமணம் முடிச்சவர்போலவா தெரியுது:)).. ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))
=========== சரி சரி லைட் ஓவ் பண்ணியாச்சு, தடக்குப் படாமல் உங்கள் உங்கள் seat களில் எல்லோரும் வந்து இருந்திடுங்கோ.. மாறிக்கீறி இருந்திடாதையுங்கோ....... இடைவேளை முடிஞ்சுது===_()_
நல்ல விடுப்ஸ் கதை:).. நல்ல நகைச்சுவையான காட்சிகள். ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்ட படம், இடங்கள் பார்க்க பார்க்க ஆசையாக இருக்கு.
மாமிமார்கள் எல்லோரும் ஒரு கட்சியாகவும், மருமகள்மார் எல்லோரும் ஒரு கட்சியாகவும் கூடி இருந்து பேசுவது, சந்தைக்குப் போய் வருவது எல்லாம் பார்க்க, அவ்விடத்தில் நாமும் இருந்தால் நன்றாக இருக்குமே எனும் ஆசை வருது..(மருமகளாக..,மாமியாராக இல்லை:)).. இதையெல்லாம் ஒழுங்காச் சொல்லிடோணும்)).
லோயராக கவுண்டமணியும், அவரிடம் கஸ்டமராக செந்திலும், செந்திலுக்கு மகனாக வடிவேல் வருகிறார். வடிவேலுக்குத் திருமணம் முடிந்து விட்டது, ஆனால் முதலிரவு நடப்பதற்குள்.. சம்பந்திமாருக்குள் பிரச்சனை ஏற்பட்டு வழக்கு தொடர்கிறது... தனக்கு எப்போ முதலிரவு நடக்கும் என பகல் கனவில் மிதக்கிறார் வடிவேல்ல்ல்.. நடந்ததா என்பதை அறியப் படம் பாருங்கோ:)).
ஆனா நகைச்சுவைக்கு மத்தியில் நல்ல ஒரு படிப்பினையையும் ஒளித்து நகர்த்துகிறார்கள்.. ஒரே ஒரு மகனாக நிழல்கள் ரவி .. தன் மகனே உலகம் என வாழும் அம்மாவாக மனோரமா வருகிறார்.
தானாகவே விரும்பி மருமகளை செலக்ட் பண்ணுகிறார்.. ஒரு, தாய் தந்தை இல்லாத பெண்ணை, அப்போதான் மருமகள் தனக்குள் அடங்கி நடப்பார் என தப்புக் கணக்குப் போடுகிறார்...
அம்மாவுக்காக தன் காதலை விட்டுக் கொடுத்து, இப்பெண்ணை மணம் முடிக்கிறார் மகன்..
ஆனா கொஞ்சம் ஓவராக, மனைவி கணவனுக்கு ஆசையாகச் செய்யும் பணி விடைகளை, மனைவியைச் செய்ய விடாமல் தானே செய்கிறார்.. மனோரமா., இதனால் மகனுக்கு எரிச்சல் வருகிறது... பின்பு மருமகளும் கொஞ்சம் மாமியை எதிர்க்க தொடங்குகிறார்.
வீட்டுக்குள் பூகம்பம் ஆரம்பம்... முடிவு கவலையான முடிவுதான்.. லோயர் ஆக ராதிகா வந்து நன்கு வாதாடுகிறார்.... விரும்பினால்.. பொழுது போகாதுவிட்டால் நிட்சயம் இப்படம் பாருங்கோ... முடிவு கவலை எனினும் பார்க்கக்கூடிய படம், முடிவை சற்று மாற்றி அமைத்திருக்கலாம். மற்றும்படி படம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது.
சில கிராமங்களில் நடக்கும் உண்மைச் சம்பவத்தின் தழுவலாக இருக்கலாம் கதை.
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அதிராவும் சினிமா விமர்சனம் எழுதிட்டேன்ன்ன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஊசிக்குறிப்பு:
போனதடவை சிலபேர் வோட் பண்ணவில்லை என கறுப்புப் பூஸ் படைத்தலைவர் அறிவிச்சார்ர்:)) அதனாலதான் இம்முறை கண்காணிப்புப் படைத் தலைவரை:) இங்கின காவலுக்குப் போட்டிட்டேன்ன்:)).. சே சே சே எப்பூடி மிரட்டினாலும், சிலபேர் வோட் பண்ண மாட்டினமாமே:))
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~