நல்வரவு_()_


Tuesday 27 March 2012

இனிய இனிய வாழ்த்துக்கள்!!!

28.03.2012

னிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹைஸ் அண்ணன்.. நீங்கள் வலையுலகை விட்டுத் தூர தூரப் போனாலும், யாராலும்.., உங்களையும் உங்கள் மறைபொருள் ரகசியத்தையும் மறந்திடவே முடியாது. அதேபோல், நீங்களும் எம்மை மறந்திடாமல், முடியும்போதெல்லாம் எட்டீஈஈ எட்டிப் பாருங்கோ பிளீஸ்ஸ்ஸ்.நோய் நொடியின்றி, நீண்ட ஆயுளோடும், மிக்க மகிழ்ச்சியோடும்.. பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்... 


இலங்கை வானொலி வாழ்த்துப் பாடலோடு .... வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்.... (ஐ... நாலுதரம் வாழ்த்திட்டேன்.. :))


===================================================
இடைவேளை
எல்லோருக்கும் உள்ளுணர்வு சொல்லுமே..:)).. ம்..ம்ம்ம்ம் இவ்ளோ நாளும் எட்டிப் பாராமல் இருந்திட்டு, இப்போ புதுத்தலைப்புப் போட்டிருக்கிறா.. அதுக்கு நாங்க உடனே ஓடோணுமாக்கும் என:))...ஆனாலும் அதிராவின் உள்ளுணர்வு சொல்லுது...  “சே..சே.. நீங்க அப்பூடியெல்லாம் நினைப்பீங்களோ?:), நேரம் இருக்கும்போதெல்லாம் நான் எங்கேயும் வராமல் விட்டதில்லை, இப்போ முடியவில்லை அவ்ளோதான்”.. இனியும் ஏப்ரல் கடைசியில்தான் வருவேன்
=======சரி சரி இடைவேளை முடிஞ்சு போச்ச்ச்ச்:)=======

இது பின் இணைப்பு:
இது எந்தாப் பெரிசூஊஊஊஊஊ.. என நினைக்காதீங்க( நான் பின் இணைப்பைச் சொன்னேன்:))... கொஞ்சம்தான்... ரிலாக்ஸ் பண்ணுங்க பிளீஸ்ஸ்ஸ்:)).

ஆஆஆஆஆ... நாம் 29ம் திகதி “ஹொலிடே” போகிறோம்(அப்பூடித்தான் சொல்லோணுமாமே:))... மூன்று கிழமையில் வந்திடுவோம்...

அதுவரை உங்களுக்கு ரிலாக்ஸ்தான்:).. அதாவது என் தொல்லை இருக்காதுன்னேன்:)) அதாரது மெதுவா விம்முறது... சே..சே... கிரிசா.... இதென்ன புதுப்பழக்கம்... நான் என்ன மூனுக்கா போகிறேன்?:))  உந்த “அண்டாட்டிக்கா” வுக்குத் தானே:)? இதுக்கே அழலாமோ? என்னைப் பாருங்க, எவ்ளோ ஸ்ரெடியா நிற்கிறேன் என:)).

என் சிஷ்யை எங்ங்ங்ங்ங்ங்ங்ஙேஙேஙேஏஏஏ?:)..

சிஷ்யையே...
குருவே..
சிஷ்யையே ..
குருவே...

ஆ.. என் சிஷ்யையே.. உங்களை நெம்பி:).... என் இதயமான புளொக்கையே ஒப்படைக்கிறேன்... இங்கின “வெளிநாட்டுத் திருடர்களின்” அட்டகாசம் அதிகமாகிட்டுதாம்.. அதனால நான் வரும்வரை பத்திரமாப் பாதுகாத்துக் கொள்ளுங்கோ:).
----------------------------------------------------------------------------------------------------
இந்த வீடியோக்களை, மெல்ல மெல்லமாப் பார்த்து, நான் திரும்பி வரும்வரை ரசியுங்கோ... எனக்குப் பிடித்த இரு வாதாட்டக்காரர்களை மட்டும் இணைத்திருக்கிறேன்....


======================================================

கொஞ்சம் ரிலாக்ஸ் பிளீஸ்ஸ்ஸ்:))..


இது தலைகீழ் ஆசன ஆசானாக இருக்குமோ?:).. குரல் கேட்டதாம் ஓடிவந்திருக்கிறாராம்:)... ஹையோ நான் ஒண்ணும் சொல்லமாட்டேன்.. நீங்களே பாருங்கோ:)...  

நான் மேலே போட்டிருக்கும் வீடியோக்களில் விஷயம் இருக்கோ இல்லையோ தெரியாது, ஆனால், வாழ்க்கையில எப்பவுமே சீரியஸா இருக்கக்கூடாது, அப்பப்ப சிரித்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நிமிடத்தையும் என்ன என்னத்துக்கோ எல்லாம் செலவழிக்கிறோம்.. ஒரு கொஞ்ச நேரத்தையாவது மகிழ்ச்சிக்காக செலவழிப்போம். நாமும் சந்தோசமாக இருந்து அடுத்தவரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதே.. மிகப்பெரிய மகிழ்ச்சியாகும். அதனால ரசித்து மகிழ்வோம்.  இதைவிட நல்ல கொமெடிக் கலக்‌ஷன் எடுத்து வைத்திருந்தேன், ஆனால் இப்போ அவசரமாக தேட அவை எதுவும் வரவில்லை.

ஊசிக்குறிப்பு:
அதிரா இல்லைத்தானே பிறகெதுக்குப் பின்னூட்டமெல்லாம்:) என நினைச்சு காக்கா போனால் , நான் திரும்பி வந்து “ஐஸ் இனிப்பு” தரமாட்டேன்:). பின்னூட்டம் போட்டாக்களுக்கு மட்டுமே “அண்டாட்டிக்கா” இனிப்புக் கிடைக்கும் சொல்லிட்டேன்:))).

=========எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்========

Wednesday 14 March 2012

பெண் புத்தி பின் புத்தி:)

தலைப்பைப் பார்த்து அவதிப்பட்டு எதுவும் யோசிச்சிடாதீங்கோ... போன “உள்ளுணர்வு”  தலைப்பில சொல்லிப்போட்டன்... அடுத்ததில தொடரும் என... சொல்லும்போது மனதில அப்பூடியே எல்லாம் இருந்தது, ஆனா எழுத வர, மறந்துபோனது போல ஒரு உள்ளுணர்வு:))...

பிறகு யோசிச்சன், தேம்ஸ்ல குதிக்கப்போறன்.. குதிக்கப் போறன் எனச் சொல்லிச் சொல்லியே... குதிக்காமல் காலத்தை ஓட்டுறனெல்லோ:)).. அப்பூடிப் பட்ட எனக்கு இதைச் சமாளிக்கிறது என்ன பெரிய விஷயமோ?:))..

அது பூஸ் ரேடியோவில காதால கேட்டு, பிறகு கிட்னியில சேஃப் பண்ணி, இங்கின புரியும்படியா எழுதும்போது பாதி காணாமல் போயிடுறமாதிரி ஒரு பீலிங்ஸூஊஊஊஉ:))... சரி சரி இந்தப் பீலிங்ஸ் எல்லாம் நமக்குள்ள இருக்கட்டும்.

அப்படியான உள்ளுணர்வுத் தன்மை, ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகமாம்.  அதிலும் பெண் புத்தி பின் புத்தி என்கிறார்களே.. அது ஒருவித அறிவுக் கூர்மை, சமயோசித புத்தியைக் குறிக்கின்றதாம்... அதுவும் பெண்களுக்கே அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்...

அதுக்கு ஒரு சின்ன கதை...

ஒரு தாய் தந்தையருக்கு(ஆரம்பம் கரீட்டுத்தானே?:)) ஒரு மகள். அவவுக்குத் திருமணமாகி கணவன் வீட்டுக்குப் புறப்பட்டுப்போக ஆயத்தமாகிறா.

அப்போ தந்தை, மகளை அணைத்து அழுதுகொண்டே சொல்கிறார்.. “ அம்மா நீ, இங்கே செல்லமாக வளர்ந்திட்டாய், அங்கு கணவன் வீட்டில் உன்னை எப்படிக் கவனிக்கப் போகிறார்களோ, மாமியார் எப்படியானவரோ என எதுவும் எமக்குத் தெரியாது, ஆனால் நீ தைரியமாக இரு, அங்கு உனக்கு எந்த விதமான பிரச்சனை வந்தாலும் உடனே எமக்குக் கடிதம் போடு, அடுத்த நிமிடமே நாம் அங்கு நிற்போம், நீ கஸ்டப்பட நாம் விடமாட்டோம்” என்றார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த தாய் சொன்னார்..

 “என்னங்க நீங்க சொல்றீங்க? இப்படியா மகளுக்கு சொல்லி அனுப்புவது? அங்கு கடிதம் எழுதும்போது, அதை மருமகனோ அல்லது மாமியாரோ படித்து விட்டால், எம் மகளின் கதி என்னாகும்? கொஞ்சமாவது “கிட்னியை” யோசிக்க வேண்டும்”.. எனச் சொல்லி விட்டு, தாய் மகளிடம் சொன்னா....

“இஞ்ச பாரம்மா, அங்கு ஏதும் பிரச்சனை இருப்பின், எமக்கு அதை எழுதாதே,  அது உன் வாழ்க்கையைப் பாதிக்கும்,  எப்பவும் நலமாக இருக்கிறேன் என்றே எழுது, ஆனால் நீ தாங்க முடியாத துன்பத்தில் இருக்கிறாயாக இருந்தால், கடிதம் எழுதும்போது, ஒரு பென்சிலால் எழுதிப்போடு, இல்லை சந்தோஷமாக இருக்கிறாய் எனில் பேனாவால் எழுதிப்போடு, நாம் அதை வைத்தே புரிந்து கொள்வோம்”.

உன்னில் தவறு வந்திடுமளவுக்கு எதுவுமே பண்ணாதே என.. அறிவுரை கூறி அனுப்பினார்..

மகள் கணவர் வீடு போனபின், ஒரு மாதத்தால் மகளிடமிருந்து கடிதம் வந்தது....

தந்தையும் தாயும் போட்டிபோட்டுப் பிரித்தார்கள்..

பேனாவாலோ அல்லது பென்சிலாலோ எழுதப்பட்டிருக்கு என... ஆஹா.. என்ன சந்தோசம்... பென்னால் எழுதப்பட்டிருந்தது கடிதம்... பெற்றோருக்கோ மகிழ்ச்சி... மகள் சந்தோசமாக இருக்கிறா அதுவே போதும் என எண்ணியபடியே கடித்தத்தைப் படித்தனர்....

அன்புள்ள அப்பா, அம்மாவுக்கு...
உங்கள் மகள் “தங்கம்” எழுதிக்கொள்வது,


நான் இங்கு மிகவும் நலமாக இருக்கிறேன்... என் கணவர் என்னை கண் கலங்காமல் பார்த்துக்கொள்கிறார், மாமியார் தலைமேல் தாங்கி நடக்கிறா... எனக்கு துன்பம் என்ன வென்றே தெரியவில்லை ... அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன்... உங்கள் இருவரையும் பார்க்க வேண்டும்போல் உள்ளது...


இத்துடன் முடிக்கிறேன்... அம்மா இங்கு ஒரே ஒரு பிரச்சனைதான்.. என்னவெனில் வீடெல்லாம் தேடினேன்.. ஒரு பென்சிலுமே கிடைக்கவில்லை, அதனாலேயே பேனாவினால் எழுதியிருக்கிறேன்...
அன்பு மகள்,
தங்கம்.

இப்போ எல்லாமே பிரிஞ்சிருக்குமே?:)))... பெண் புத்தி பற்றி:))...

ஊசிக்குறிப்பு:))

எனக்கு ஆராவது ஏசப்போறீங்கள், அல்லது திட்டப் போறீங்கள் எனில்.. மனதுக்குள்ளேயே திட்டிடுங்கோ:)).. ஏனெனில் பப்ளிக்கில திட்டினால் அது அழகில்லை எல்லோ... அதனால தான் முன் ஜாக்கிர்ர்ர்தையா இதையும் சொல்லி வைக்கிறேன்:)).


========================================================
படித்ததில் பிடித்தது..
அடை மழை
நிலா பெண்ணுடன் 
கொண்ட காதல் தோல்வி...
ஓயாமல் அழுகிறது 
வானம்...

======================================================
 “என்னதான் பரீட்சையில 100 மார்க்ஸ் வாங்கினாலும், ஆம்லெட் போடவேண்டுமாயின்.. முட்டை வாங்கித்தான் ஆக வேண்டும்”
**********************************************
 “என்னதான் கொம்பியூட்டரில் உலகமே தெரிஞ்சாலும் பக்கத்து வீட்டுப் ஃபிகர் அதில் தெரியாது”
================================================

Saturday 10 March 2012

உள் உணர்வு:)

தலைப்பைப் பார்த்ததும் ஏதேதோ எண்ணமெல்லாம் மனதில வருமே:).. இது பூஸ் ரேடியோவில் சொன்ன நல்ல விஷயங்கள், அதைப் பகிர்ந்து கொள்ளலாமே நம்மவர்களோடு... எண்டு ஒரு ஆசை:)

பூஸின் உள்ளுணர்வு:
ஏன் உவர் உப்பூடிப் பார்கிறார்? எனக்கென்னமோ டவுட்டா இருக்கே:)

ரி முதலில் உள்ளுணர்வுக்கு வருவம். அதாவது உள்ளுணர்வு என்பது எம்மை அறியாமல் எமக்குள் ஏதோ ஒரு மாறுதலை ஏற்படுத்துவது. அது நம் கிட்னியின்:) கண்டுபிடிப்பல்ல.. அது தானாக உருவாகும் ஒரு அதிர்வு அலை.

அதுக்காக ஒரு உதாரணக் கதை சொல்கிறேன், கதை படித்தால் எல்லாம் புரியும்.

ரு அரசன் இருந்தார். அவர் தினமும் காலையில், தன் குதிரை வண்டிலில், ஊரைச் சுற்றிப் பார்த்து வருவது வழக்கம். அப்படி ஊரைச் சுற்றி வரும்போது, எதிரில் வரும் மக்கள் கும்பிடுவார்கள், கை காட்டுவார்கள், அப்போ பதிலுக்கு அரசனும் சிரிப்பார், கை காட்டுவார், கும்பிடுவார்.

அப்போ ஒருநாள் இப்படி அரசன் ஊரைச் சுற்றி வந்தபோது, ஒரு சந்தன மர வியாபாரி எதிரே வந்தார், அவர் அரசனைக் கண்டதும் கும்பிட்டார்.. ஆனால் அவரைப் பார்த்ததும் அரசனுக்கு கொஞ்சம் எரிச்சலாக வந்தது, ஏனோ பதிலுக்கு கைகாட்டக்கூட பிடிக்கவில்லை.. பேசாமல் போய் விட்டார்.

2ம் நாளும் அதே வியாபாரி இன்னும் மரியாதையாகக் கும்பிட்டார், அரசருக்கு அவரின் செயல்,  இன்னும் அதிக எரிச்சலையே கொடுத்தது, அன்றும் கோபமாக பதிலுக்கு ஏதும் சொல்லாமல் வந்துவிட்டார்.

அரண்மனைக்கு வந்தவருக்கு மனம் கேட்கவில்லை, தனக்கு ஏன் இப்படிக் கோபம் வந்தது, அந்த வியாபாரி ஏதும் தனக்கு தவறு செய்யவில்லையே என எண்ணியவாறு, மந்திரியைக் கூப்பிட்டுச் சொன்னார் நடந்ததை.

மந்திரி சொன்னார் நாளைக்குப் போய் வாங்கோ எல்லாம் சரியாகிடும் என. அடுத்த நாள் போனார் அரசர், வியாபாரி கும்பிட்டார், அரசனுக்கு பதிலுக்கு கோபம் வரவில்லை, கையெடுத்து தானும் கும்பிட்டு விட்டு வந்தார்.

வீட்டுக்கு வந்து மீண்டும் மந்திரியிடம் விசாரித்தார்... அப்போ மந்திரி விளக்கினார்...

அந்த வியாபாரி சந்தனக் கட்டைகள், நிறைய வெட்டி வந்து அடுக்கியிருக்கிறார், அப்போ முதல் நாள் உங்களைக் கண்டபோது, மனதிலே நினைத்தார் அரசன் குடும்பத்தில் யாராவது இறந்தால், தன் சந்தனக்கட்டைகளை வாங்குவாரே அரசன், என நினைத்துக் கும்பிட்டார், அதனால் அரசனுக்கு மனதில் ஏதோ உள்ளுணர்வு பிடிக்காமல் போய் விட்டது அதனால் கோபத்தில் வந்தார்.

அரச பரம்பரை மட்டுமே சந்தனக் கட்டைகளைப் பாவிப்பார்களாம் அக்காலத்தில்.

2ம் நாள் போனபோது அந்த வியாபாரி எண்ணினார், அரசனே இறந்தால், தன் சந்தனக் கட்டைகள் முழுவதையும் விற்றிடலாமே என, அவ்வாறு எண்ணிக்கொண்டே கும்பிட்டமையால், அந்த அலை வரிசையால் அரசனால் பதிலுக்குக் கும்பிட முடியவில்லை. எரிச்சல் இன்னும் அதிகமானது.

3ம் நாள் அரசன் ஊர் சுற்றப் போகுமுன்பே, இந்த மந்திரி போய், சந்தன வியாபாரியிடம் சொல்லியிருக்கிறார், அரச சபையில் யாகம் வளர்க்கப் போகிறோம், எனவே யாகம் செய்ய நிறைய சந்தனக் கட்டைகள் தேவை என. அதனால் மனம் குளிர்ந்த வியாபாரி, சந்தோசத்தோடும், நன்றியுணர்வோடும் கும்பிட்டார், அது அரசனாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என விளக்கம் கொடுத்தார்.இதுதான் உள்ளுணர்வு என்பது. அதாவது எம்மையும் அறியாமல் எம் மனதில் தோன்றும் எண்ணம். ரோட்டால் போகும்போது, ஒருவர் சிரித்துவிட்டுச் சென்றால், சிலநேரம் எமக்கு மனம் அரிக்கும், அவரின் சிரிப்புச் சரியில்லையே... ஒரு மாதிரி இருந்துதே... என்றெல்லாம். அதேபோல, சிலர் சிரித்தால் அன்று முழுவதும் சந்தோசம் பொங்கும்.

இப்படித்தான் தெரிந்தோ தெரியாமலோ அடுத்தவரின் மனநிலை எமக்குத் தெரிந்து விடுகிறது.. இப்படியான மனநிலை ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகமாம். ... அதனை அடுத்த பாகத்தில் பார்ப்போம்:).


ஊசி இணைப்பு:
 “மணி”ப் பிளாண்ட் இருக்கிறதுதானே? அதை வீட்டுக்குள் வளர்த்தால் செல்வம் பெருகுமாம். வெளியே வளர்த்தாலும், ஒரு சின்னக் கன்றாவது வீட்டுக்குள் வளர்க்க வேண்டுமாம்... செல்வம் வந்து கதவைத் தட்டுமாம். (பக்கத்து வீட்டு “செல்வம்” அங்கிள் அல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..


======================================================
அரசர் ஏன் ரொம்பக் கோபமாகப் போகிறார்?

அது அந்தப்புரத்தில் இருந்து யாரோ, 
அவரை “அண்ணா” என அழைத்து விட்டார்களாம்:).
======================================================

Friday 2 March 2012

பந்திக்கு முந்தவேணும்...

குறிப்பைப் பார்த்துச் சமைத்தோம் சாப்பிட்டோம் என்று மட்டுமில்லாமல் , கொஞ்சம் அதைப் படமெடுத்தும் போட்டால்... குறிப்புக் கொடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியாகவும் அதே நேரம் ஊக்குவிப்பாகவும் இருக்குமே என நினைத்தேன்... அதனால செய்தேன்...

நன்றாக வந்தமையால் படங்களும் எடுத்தேன்... சிலதைப் பார்த்தவுடன் செய்யவேணும்போல இருக்கும், அப்படியானதைச் செய்தேன்... அவசரமாகச் சமையல் செய்யும்போது, நம் சொந்தச் சமையலே இலகு, ஆறுதலான நேரங்களில் மட்டுமே குறிப்பைப் பார்த்து செய்ய முடிகிறது.

எனக்கு அனைத்து சாத வகைகளுமே மிகவும் பிடிக்கும்(எனக்கு மட்டும்:)).. ஆசியாவின் குறிப்பு பார்த்து சுலப புளியோதரை செய்தேன்... சூப்ப்ப்ப்பரோ சூப்பர்...

நான் அரைத்துப் போடவில்லை, எங்கள் கறிப்பவுடர், எல்லாம் சேர்ந்தது என்பதால் அதையே பாவித்தேன்...


=======================================================

இது, அம்முலு எனக்கு, அளவுகளும் அனுப்பி, செய்யுங்கோ சூப்பராக வரும் என்றா மெயிலில். நான் ஓடிப்போய் புதிதாக அப்பத்துக்கு என ஒரு நொன் ஸ்ரிக் வாங்கி வந்து செய்தேன் சூப்பராக வந்தது...

2 கப் பசுமதி அரிசிக்கு, 4 பிரட் துண்டுகள்(கரை நீக்கியது), தனித்தனியே ஊறவிட்டு அரைத்து, உப்பும், அப்பச்சோடாவும் சேர்த்து ஓரிரவு புளிக்க விட்டுச் சுட்டேன்....

 நான் பிறந்து வளர்ந்ததுக்கு, முதன்முதலாக, நானே செய்து, சுட்ட அப்பம்ம்ம்ம்:)... சுப்பராக இருக்கெல்லோ?:).


இது பாலப்பம்:)


இது முட்டை:) அப்பம்..

=======================================================


பின் இணைப்பு:
நான் மகியின் குறிப்புப் பார்த்துச் செய்து, படமெடுத்த கையோடு, ஃபோனைத் தண்ணிக்குள் போடுவிட்டேனெனச் சொன்னேன் தானே, அதை அறிந்ததும் எனக்கொரு மெயில் வந்துது.. மகியினுடையதைப் படமெடுத்த கையோடுதானே ஃபோன் தண்ணிக்குள் விழுந்தது, அதனால, மகியிடமே அதன் பணத்தை வாங்குங்கோ என:))... நான் கொஞ்ச நாள் போகட்டும் என விட்டிருக்கிறேன்:)).
படங்களை திரும்ப பெற்று விட்டேன், அடுத்த பகுதியில் வெளிவரும்.
=======================================================


ஊஊஊசி இணைப்பு:
சே..சே.. இதுக்கே இப்பூடி நடுங்கினால்?:)) பயப்பூடாதீங்க, எலிக்குட்டி, குட்டி எலி.... நான் ஒரு மாதம் டயட்டில் இருக்கிறேன்.... ச்சும்மா பார்த்திட்டு விட்டிடுவேன்:)).. சுத்த சைவம்:)..

========================================================