நல்வரவு_()_


Sunday 29 January 2017

சகிப்புத் தன்மை...

ளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதானே வளர்த்தி என்று சொல்லிப்போட்டினம்.... ஆனா அத்தோடு சகிப்புத் தன்மையையும் வளர்க்க வேண்டி இருக்கே.

முக்கியமா இங்கு வெளிநாட்டுக்கு வந்ததில் இருந்து என் சகிப்புத் தன்மையை நாளுக்கு நாள் பல்லைக் கடிச்சு, நாக்கைக் கடிச்சு கூட்டிக்கொண்டே வாறேன்.. ஏனெனில் நாம் இருக்கும் ஊரும் அப்படிப்பட்டது. கலப்படமில்லாத வெள்ளையர்கள் இருக்கும் இடம், வெளிநாட்டவர்கள் எனில் நாமும் இன்னொரு குடும்பமும்தான், மற்றும்படி 2 சைனீஸ் குடும்பமும் உண்டு, எங்கு போனாலும் மிக ஒழுங்காக இருப்பார்கள்.

ரோட்டில் என்னதான் மெதுவா போனாலும், இடையே அவசரமா காரை நிறுத்தி யாருடன் பேசினாலும், பின்னாலே வரும் கார்கள் எல்லாம் பொறுமை காப்பார்கள், கோன் அடிக்க மாட்டார்கள். கோன் சத்தமே காதில் கேட்காது.

இரண்டே இரண்டு விசயத்துக்கு மட்டுமே கோன் அடிப்பார்கள்... 
1. சிக்னலில் முதலாவது ஆளாக காரை நிறுத்திவிட்டு கனவில மிதந்து கொண்டே இருந்து, கிரீன் லைட் மாறியபின்பும் அப்படியே கனவு காணும்போது:) கோன் பண்ணுவார்கள்... எடு காரை என:).

2. டக்கென ஏதும் றூல்ஸ் ஐ மீறி, காரைக் கண்டபடி திருப்பினாலோ, வெட்டினாலோ மட்டும் கோன் அடிப்பார்கள்(அதாவது, எதிர்பாராமல் பின்னே வரும் காரை திடுக்கிடப் பண்ணினால் மட்டும்).

ப்படியான மென்மையான ஊரில் இருப்பதனால் மிகவும் கவனமாக நாம் நடப்பது வழக்கம். தப்பித் தவறியும், ஏசியன்ஸ் என்றாலே இப்படித்தான் என இவர்கள் எண்ணிடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருப்பதனால்.. அதிகமா சகிப்புத் தன்மை தேவைப்படுது.

டுத்து Learners car முன்னாலே போகும்போது, பின்னாலே ஊர்ந்து ஊர்ந்து போவதுக்கு எவ்வளவு சகிப்புத் தன்மை தேவை தெரியுமோ? Dual carriageway எனில் (டபிள் ரோட்) முந்திக்கொண்டு போயிடலாம், ஒரு ரோட் எனில் முந்தவும் முடியாது... அந் நேரம் ஸ்கூலுக்கு நேரமாச்சே என காருக்குள் இருந்து பதறத்தான் முடியுமே தவிர ஒண்ணும் பண்ண முடியாது:).

னா நான் நினைப்பேன் முன்பு ஒருகாலத்தில் கார் பழகும்போது, என் பின்னாலேயும் இப்படி சகிப்புத் தன்மையோடுதானே ஏனையோர் இருந்திருப்பார்கள்.... இனி நம் பிள்ளைகள் பழகும்போதும் யாரும் திட்டாமல் சகிச்சுக் கொண்டு பின்னாலே ஊர்ந்து செல்லத்தானே போகிறார்கள் அதனால.. இது நான் கடந்து வந்த பாதை.. என நினைச்சு மிகவும் சகிப்புத் தன்மையோடு..  "நீ ஓடு ராசா!! பத்திரமா ஓடு" என நினைச்சு, பொறுமை காப்பேன்.

ன்னொரு இடம், சில இடங்களில் வயதானோரின் பின்னால் நடப்பது. முந்தவும் முடியாத இடமாகவும் சன நெருசலான இடமாகவும் இருக்கும் இடங்களில், வயதானோர் மிக மெதுவாக நடப்பார்கள்.. ஒரு காலை எடுத்து வைத்து பின் மெதுவா அடுத்த காலை எடுத்து வைப்பார்கள், இவ்விடத்தில் பயங்கர சகிப்புத் தன்மை வேணும் - பின்னாலே மெதுவா ஊர:).. அப்போ நினைப்பேன்.. இது நான் பின்னாளில் சந்திக்கப் போகும் பாதைதானே- அதாவது கடக்க இருக்கும் பாதை, என. அதை நினைச்சே மிகவும் சகிச்சுக்கொண்டு பின்னாலே போவேன்.

னக்கு என்னமோ வயதானோரிலும், குழந்தைகளிலும் அதிக பாசம் உண்டு. எங்கு போனாலும் நான் அதிகம் ஒட்டியிருப்பது இந்த இருவரோடும்தான். அதிலும் நான் நினைப்பதுண்டு, நம் வயதை ஒத்தோரை எல்லோரும் கவனிப்பார்கள் நோர்மலா, ஆனா வயதானோரைத்தான் தேடுவது குறைவு, அதனால நான் நம் வீட்டுக்கு விருந்தினர் வரும்போது பெற்றோரை அழைச்சு வந்தால், பெற்றோரோடுதான் அதிகம் பேசுவேன்.

ம் வீட்டுக்கு எதிர் வீட்டில் ஒரு தம்பதியினர் இருக்கிறார்கள் (65/70) வயசுக்காரர்(ஸ்கொட்டிஸ்) அவர்கள் என்னைக் கண்டால் நொன் ஸ்ரொப்பாக பேசுவார்கள், நானும் தப்பி ஓடாமல் பொறுமையா நின்று பேசுவேன், வீட்டுக்கும் போய்ப் பேசிவிட்டு வருவேன், நம் சமையல் பிடிக்கும் அவர்களுக்கு, ஏதும் செய்தால் கொண்டு போய்க் கொடுப்பேன்.  இந்த விசயத்தில் நிறையப் பேசலாம், ஆனா அது தற்பெருமை பேசுவது போலாகிடும் என்பதனால என்னைக் கொன்றோல் பண்ணிக் கொண்டு...

ப்போகூடப் பாருங்கோ உங்களுக்கும் சகிப்புத் தன்மை வந்திருக்குமே?:) என் போஸ்ட்டை ஒருவரிகூட விடாமல்:) முழுவதையும் சகிச்சுக்கொண்டு படிச்சு முடிச்சிட்டீங்கதானே?:)).

ச்ச்சோஓ நான் சொல்ல வருவது யாதெனில் சில நேரங்களில் கெட்ட கெட்ட கோபமா வரும், கோபத்தை அடக்க அடக்க உடம்பும் நடுங்கப் பார்க்கும்.. ஆனா இப்பூடியான நேரங்களில்.. மேலே நான் யோசிச்சதைப்போல “மாத்தியோசிச்சு” சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கோ...

இதிலிருந்து முடிவா நான் என்ன சொல்கிறேன் எனில்... பார்த்தீங்களோ? அதிரா ரொம்ப நல்ல பொண்ணு:)).. இதைச் சொல்லத்தான் சுத்தீஈஈஈ வளைச்சு இவ்வளவும் சொல்லி முடிச்சேன்ன்ன்.. ஸ்ஸ்ஸ் இனி யாரும் என்னைத் திட்டிடக்கூடாது:) சகிச்சுக் கொள்ளோனும்:))... ஹா ஹா ஹா..

ஊசிக்குறிப்பு:
புளொக் ஆரம்பித்து இத்தோடு ஒன்பது வருடங்கள்... ஆனா இதுதான் என் 200 ஆவது பதிவு:) எல்லோரும் ஓடி வந்து, அதிரா கையில தாம்பூலம் எடுத்து, வாழ்த்துங்கோ அதிராவை:).
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
வாழ்க்கையில் எந்த விசயத்தில் தோற்றாலும், 
ஒன்று மனசை மாத்தத் தெரியோணும், 
இல்லையெனில் தேற்றவாவது தெரியோணும்
இவ்வரிய தத்துவத்தை, இந் நன்னாளில் உங்களுக்காக காவி வந்து தந்திருப்பவர்.. 
உங்கள் பெருமதிப்பிற்கும்:), பேரன்புக்கும் உரிய புலாலியூர்ப் பூஸானந்தா:)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Tuesday 24 January 2017

ன்கொடுமைது :(


து ஒரு வேதனைக்குரிய உண்மைச் சம்பவம்.. கதை கேட்டதும் என்னமோ போலாகிட்டேன், என்ன செய்வது வாழ்க்கை மிகக் குறுகியது, ஒவ்வொருவரின் தலை எழுத்து ஒவ்வொரு விதமானது, இதில் பூஸ், பப்பி கூட விதி விலக்கல்ல.

எங்கள் அண்ணன் குடும்பம் ரோட்டில் போய்க் கொண்டிருந்தார்களாம், கனடா ரோட்டுக்கள் பற்றி நான் ஏற்கனவே “அதிரா தியேட்டர் - கனடா” எனும் லேபலில் நிறைய சொல்லிட்டேன்... பெரிய பெரிய ரோட்டுக்கள் அதுவும்.. பெரும்பாலும் எங்கேயும் குறைந்தது 4 இருக்கும். அப்போ இவர்கள் போய்க் கொண்டிருந்தபோது, ஒரு குட்...ட்ட்டிப் பூஸ் ரோட்டைக் கடக்கிறதாம்..

அவ்ளோ வாகனத்துள் அந்தப் பெரிய ரோட்டை, ஒரு பெரிய எலியளவு சைஸில், ஒரு பூஸ் குட்டி கடக்கிறதாம், இதைப் பார்த்ததும், உடனே நடு ரோட்டிலேயே காரை நிறுத்திப்போட்டு, அண்ணன் இறங்கி ஓடிப்போய், ட்ரபிக் போலீஸ் போல ஏனைய கார்களுக்கு சைகை காட்டி நிறுத்தச் சொல்லி, அவசரமாக அப் பூஸ் குட்டியை பிடிச்சுக் கொண்டு பக்கத்திலே ஒரு இரும்பு வேலியாம் உள்ளே ஒரு பில்டிங்,

அப்போ இவர் உள்ளே போய் அந்த பில்டிங் கோனரில் விட்டு விட்டு ஓடி வந்து காரை எடுத்திட்டார். டென்சன்தானே... நடு ரோட்டில் கார் நிற்கும்போது அவரால் எதையும் யோசிக்க முடியவில்லை, அப் பூஸ் குட்டியை காப்பாற்றினால் போதும் என மட்டும்தான் எண்ண முடிஞ்சிருக்கு.

அப்போ மீண்டும் காரை எடுத்துக் கொண்டு போகப்போக, காருக்குள்ளிருந்து அண்ணியும் பிள்ளைகளும் சத்தம் போடத் தொடங்கிட்டினமாம், எதுக்கு அங்கு கொண்டு போய் விட்டீங்க அதை, வீட்டுக்கு எடுத்துப் போயிருக்கலாம், அல்லது ஒரு பெட்ஷொப் ல குடுத்திருக்கலாம் எனப் பெரிய அட்டகாசமாம்.

அப்போதான் அண்ணனுக்கும் மனதில் தட்டியதாம், சரி எடுத்துப் போய் பெட்ஷொப்ல குடுக்கலாமே என, [இவ்ளவுக்கும் நிறையத் தூரம் ஓடியிருப்பார்கள்தானே] உடனே காரை திருப்பிக் கொண்டு அவ்விடத்துக்கு வந்திருக்கிறார்கள்...

அங்கு கண்ட காட்சி, அந்தப் பூஸ்குட்டி திரும்ப வெளிக்கிட்டு அதே ரோட்டை திரும்பவும் குரொஸ் பண்ணிய இடத்தில், வேறு ஏதோ வாகனம் அடித்துப் போட்டுப் போயிருக்கு.. இவர்களுக்கு மனமே கலங்கிப் போச்சாம்... விதி வலியது:(.

ஊசிக்குறிப்பு:)
இணுவில் மாம்பழத்தை..
கோண்டாவில் கொய்யாவை...
கொக்குவில் அணில் பார்த்துக்...
கொட்டாவி விட்ட கதை...
இனி இருக்கவே இருக்காதூஊஊ.... [ மேலே பாடல் கேளுங்கோ]

என்ன தலை சுத்துதோ என் பாட்டுக் கேட்டு?:).. கிட்டத்தட்டப் 15 வருசமா எங்கள் இந்த ஊரில ஒரு தமிழ்க் கடை இல்லையே என நான் ஏங்காத ஏக்கம் இல்லை:), அழாத நாளில்லை:).. ஒவ்வொருவரும் தமிழ்க்கடையில் அது வாங்கினேன் இது வாங்கினேன் எனக் கேட்டுக் கேட்டுக் கொட்டாவி விட்டுக்கொண்டிருந்த காலம் 2016 உடன் மலையேறிப்போச்ச்ச்:)) எங்களுக்கும் இலங்கைத் தமிழ்க் கடை வந்திட்டுதூஊஊஊஊஊஉ... அங்கு இல்லாத சாமான் இல்லை.. மண் சட்டியில் இருந்து அனைத்து இலைவகைகள், நெக்டோ சோடா, விழா/ளாம்பழம்:), றம்புட்டான் அனைத்துமே உண்டு.. இனி பனங்கிழங்கும் வருமென எதிர்பார்க்கிறேன்ன்.. சந்தோசம் பொயிங்குதே:).
===========================================================================
இனிமேல் ஈமெயிலில் பெற விரும்புவோர் மெயில் ஐடியை போட்டு வையுங்கோ பிளீஸ்.. இணைப்பு குடுத்திருக்கிறேன் வலது பக்கத்தில்...
===========================================================================

Friday 20 January 2017

து ப்போ?:)



மேடைப் பேச்சு முடித்து
மிகுந்த களைப்போடு
வீடு வந்தேன்..

மெத்தையில் பொத்தென விழுந்தேன்
ஒருத்தி ஓடிவந்து
கொஞ்சம்கூடக் கூச்சமே இல்லாமல் 
என்மீது புரண்டு தழுவினாள்..

நான் திரும்பத் 
தழுவ விரும்பவில்லை எனினும்
தள்ளிவிட விரும்பாமல், தழுவட்டும்
என விட்டிருந்தேன்

கொஞ்ச நேரத்தில்
இன்னொருத்தி வந்தாள்..
இதென்ன ஒரு கட்டிலில்
இருவரா என்பீர்கள்..

நான் சொன்னது...
முன்னே வந்தவள் தூக்கம்!
பின்னே வந்தவள் கனவு!!

ஹா ஹா ஹா நான் எப்பவும் பூஸ் ரேடியோ கேட்பது வழக்கம் என என் பக்கம் வரும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும், அதனாலேயே இங்கு  “பூஸ் ரேடியோ” என லேபல் கொடுத்தே பல போஸ்ட்கள் போட்டிருக்கிறேன்.

இந்தக் கவிதை கலைஞர் அவர்கள் நேரடியாகச் சொன்னது, ஒரு தடவைதான் கேட்டேன்.. ரேடியோ எல்லோ.. திரும்ப  கேட்க முடியாது:), ஒரு தடவை கேட்டாலும் மனதில் பதித்துக் கொண்டேன்... கேட்டபொழுது விழுந்து விழுந்து சிரித்ததில் புரையேறிவிட்டதெனக்கு, என்ன ஒரு கற்பனை..

அதனால் என் மனதில் நினைவில் உள்ளதை அப்படியே என் பாஷையில் இங்கு பதித்திருக்கிறேன், வசனங்கள் தவறியுமிருக்கலாம் அஜீஸ் பண்ணுங்கோ.

இன்னொரு ஹைக்கூபோன்றது .. இது பர்வீன் சுல்தானா சொன்ன கவிதை..
இது நட்பு, காதல், தம்பதியினர் அனைவருக்குமே பொருந்தும்...

நீயும் நானும்
பிரிவதென்று
முடிவெடுத்தபின்
உனக்கும் எனக்கும்
பகைமை என்ற
புது உறவு எதற்கு..

இரண்டு கவியும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, அதனால் இங்கே காவி வந்தேன்...  
“யான் பெற்ற இன்பம் பெற வேண்டும் நீங்களும்” எனும் நல்லெண்ணத்தில்:).

ஊசிக்குறிப்பு:
இங்கு வரும் நீங்கள் எல்லாம் தமிழ்மணம் வோட் பண்ணாமல் போயிடுறீங்க:( .. இனியும் பண்ணாமல் போனீங்க.. வச்சிடுவேன் :) ஹையோ எனக்குச் சொன்னேனாக்கும்..க்கும்..க்கும்..(இது எக்கோ)..
======================================================================

Monday 16 January 2017

ண்லூர் சிங்ம்

ங்கு சுத்தினாலும், எப்படி மாறினாலும், யாரால் மாற்றப்பட்டாலும், யாருக்காக மாறினாலும் எதுவுமே நிரந்தரமில்லை.. அத்தனையும் நடிப்பாகவே இருக்கும்... முடிவில் நாம் நாமாகத்தான் இருப்போம்.

ப்பவுமே இதில் எனக்கு குழப்பம் உண்டு, அதாவது சிலர் சொல்கிறார்கள் மற்றவருக்குப் பிடித்தமாதிரி நம்மை நாம் மாற்ற வேண்டும் என, ஆனா என்னைப் பொறுத்து அடுத்தவருக்காக நாம் அஜஸ்ட் பண்ணிப் போகவேண்டுமே தவிர மாற நினைக்கக் கூடாது.

னெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கும், இயற்கையான சுபாவம் இருக்கும் இவற்றை மாத்த முடியாது, அடுத்தவருக்காக இவற்றை மாற்ற நினைத்தால் அது ஒரு தற்காலிக நடிப்பாகவே இருக்கும் அதே நேரம் எமக்கும் அது மனதில் ஏதோ ஒரு அன்னீசியான:) தன்மையையே தரும், அவ் மாற்றம் நீடிக்காது, சில காலத்திலேயே எம் உண்மையான சுபாவம் தான் வெளியே வரும்.

ங்கட கண்ணதாசன் சொல்லியிருக்கிறார்
நான் நினைப்பதுண்டு இக்காலத்தில் அதிகமான காதல்கள்.. கல்யாணங்கள் விரைவில் முறிவுக்கு வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ என, அதாவது தான் விரும்பும் பெண்/ஆணுக்கு தன்னைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக சிறிது காலம், அவர்களுக்குப் பிடித்தமானபடி தம்மை மாற்றி அமைக்கிறார்கள் இதனால் காதல் சிலகாலம் நீடிக்குது, பின்பு நெடுகவும் நடிக்க முடியாதுதானே அப்போ உண்மை சுபாவம் வெளியே வந்ததும் ஒத்து வராமல் போய் விடுகிறது.

தனால் என்னைப் பொறுத்து நாம் நாமாகவே எப்போதும் இருப்பதுதான் நல்லது, அடுத்தவருக்காக மாற நினைத்தால்... மாறலாம் ஆனா அது நீடிக்காது... அடுத்தவருக்காக மாற்றக்கூடியது, நம் உடை, அலங்காரம், பொழுதுபோக்கு இப்படியான இடையே வந்த விசயங்களை, ஆனா குணாதிசயம் என்பது அது நம் Genes இலயே இருப்பது... மாற்ற முடியாதது.

சரி இப்போ வண்டலூர் சிங்கம் பற்றிச் சொல்றேன் கேழுங்கோ...

ண்டலூர் ஸூவில் ஒரு சிங்கம், ராஜாவைப் போலவே நல்ல சொகுசான வாழ்க்கையில் இருந்ததாம், நல்ல இறைச்சி மீன் வகைகள் ரைம்முக்கு ரைம் கிடச்சுதாம்... இப்படி இருக்கையில் ஒருநாள் அச்சிங்கத்துக்கு அமெரிக்கா போகும் ஆசை வந்துதாம், சரி என அமெரிக்காவுக்குப் போய் அங்கே ஒரு ஸூவில் இருந்துதாம்.

ங்கு போன நாள் தொடக்கம், இச் சிங்கத்துக்கு எப்பவுமே பழங்கள் கீரை வகை மரக்கறிவகை தான் கொடுத்தார்களாம், சரி ஏதோ புதுசுக்கு தருகிறார்களாக்கும் என பொறுமை காத்ததாம் சிங்கம், ஒரு வாரமாகியும் அதே சைவ உணவுகளே கிடைத்தமையால், கோபமடைந்த சிங்கம், அவ் உணவு தருபவரைப் பார்த்துக் கத்தியதாம், இங்கே பார் நான் ஒரு ராஜா, வண்டலூரில் எனக்கு எப்படியான உணவுகள் கிடைத்தது தெரியுமோ? இங்கு எதற்கு  “சைவ” உணவே தருகிறாய் என...

தற்கு அவ் உணவு கொடுப்பவர் சொன்னாராம், நான் என்ன பண்ண, நீங்கள் அங்கிருந்து இங்கு வந்தது, ஒரு ஒட்டகத்தின் பாஸ்போர்ட்டில், அதனாலேயே ஒட்டகத்தின் மெனுவையே உங்களுக்குத் தருகிறோம் என:)..
....... தேவைக்காக மாற நினைத்தால் இப்படித்தான் ஆகிவிடும்...

ஊசிக் குறிப்பு:
இந்த ஊசிக்குறிப்பு ரொம்பப் பிடிச்சிருக்குது எனக்கு:), ஆனா அதுக்கு ஹிட்லரின் காலத்தில் பிறந்திருக்கோணும்.. :)
()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()

Friday 13 January 2017

ந்நாளும் நானும்!

ண்மையில் நம்பவே மாட்டீங்க, அன்று நான் பட்ட அவஸ்தையும் மகிழ்ச்சியும் சொல்லில் அடங்காது.... இதுக்குப் போய் இப்படியா எனக் கேட்பீங்க... ச்ச்சும்மா இருந்த என்னை உசுப்பி விட்டதே இந்த புளொக் உறவுகள்தான்...

ண்மையைச் சொல்லப்போனால், திருமணத்துக்கு முதல்நாள் ஒரு பெண் எப்படி இருப்பாவோ,  ஒரு பெண்ணாக இருப்பதனால் உணர்வுகளைச் சொல்றேன், எத்தனை வருடம் கடந்தாலும் எதையும் மறக்க முடியாது வாழ்க்கையில்.... அதாவது வீட்டில் விதம் விதமா சமையல் நடக்கும், பலகாரம் செய்வார்கள், பழைய உறவினர்கள் எல்லோரும் வந்திருப்பார்கள் ஆனா இத்தனைக்கும் மத்தியில் நாமோ, ஏதோ ஒரு கனவுலகில் ஒரு திகிலோடு பறந்து கொண்டிருப்போம்..... அதேபோல, சொல்லமுடியாத ஒரு உணர்வில் நான் இருந்தேன்.

கோடை விடுமுறையின்போது இதுக்காகவே கனடா போனேன், அண்ணன் வீட்டிலிருந்து எம்மைத் தம் வீட்டுக்கு அழைத்துப் போக, அக்கா குடும்பம் வந்திருந்தார்கள்... எம்மை ஏற்றிக் கொண்டு அக்காக்களின் அக்குரா.. முன்னே பறக்க.. என் மனமோ பின்னே பறந்தது... அருகில் அஞ்சு , இமா, ஆசியா, மகி, அம்முலு, இளமதி பறக்கிறார்கள்.. ஏனெனில் தம் புளொக்குகளில் படம் படமா போட்டு என்னை உசுப்பி விட்டதே இவர்கள் தானே...

தில வேறு, ஃபோனில் பேசும்போது அம்மாவிடம்,  “அம்மா அங்கு அக்கா வீட்டில் இருக்காம்மா” எனக் கேட்டேன், உடனே அம்மா சொன்னா “ச்சும்மா ச்சும்மா வேலி ஓரமெல்லாம் முளைச்சிருக்கு, ஏனைய பயிர்களை பழுதாக்குதே என சிலதைப் பிடிங்கி எறிஞ்சேன்” என, என்னம்மா இப்பூடிப் பண்றீங்களேம்மா என அம்மாவுக்குப் பேசினேன், இல்லை நிறைய இருக்கு பயப்படாமல் வா என தைரியம் தந்தா.

க்கா வீட்டுக்குப் போய்ச் சேர இரவு 9 மணிக்கு மேலாகிவிட்டது, நன்கு இருட்டி விட்டது, அர்ச்சுனன் கண்ணுக்கு குருவித் தலை மட்டுமே தெரிந்ததுபோல, எனக்கு அந்நேரம் எதுவுமே தெரியவில்லை அந்த நினைவைத் தவிர.. வீட்டுக்குள் போனதும் நேரே காட்டுங்கோ வாங்கோ கார்டினுக்கு எனக் கேட்டேன், தோட்டப்பக்க லைட்டைப் போட்டுக் காட்டினார்கள் ஓடிச்சென்று அந்த இருட்டிலும் முதன் முதலாக தொட்டு தடவி மணந்து பார்த்தேன்ன்ன்ன்.. அதுதான் மணத்தக்காழிக் கீரையை... நம்ப மாட்டீங்கள், என் வாழ்க்கையில் வந்த எத்தனையோ மகிழ்ச்சிகளில் - இந்த நாளும் ஒரு இடம் பிடித்துக் கொண்டது என்பது உண்மையேதான்.

டெய்லி கறி சமைச்சு சாப்பிட்டேன்...






இதைப்பற்றிய ஏக்கப்:) பதிவு படிக்க இங்கு கொஞ்சம் வாங்கோவன்...









பழம் பறிக்க முடியவில்லை, ஏனெனில் நாம் போனபோதுதான் குட்டிக் குட்டியாக முளைக்கத் தொடங்கிய காலம், சில காய்களும் வந்திருந்தன...

இது அக்கா வீட்டுத் தோட்டத்தில் இருந்த ஏனைய மரக்கறிகள்... இப்போதான் முளைக்க, பூக்க ஆரம்பித்த நேரம் அது....
பூசணி, பீன்ஸ், தக்காழி, கீரை, பாவல்

Add caption

வெங்காயம், பயத்தை, ஹேல் லீவ்ஸ், கபேஜ், சோளம், கத்தரி

Add caption
சரி இத்தோடு இம்முறை போதும் மீண்டும் என் வீட்டுத் தோட்டத்தோடு இன்னொருநாள் சந்திப்போம்.

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.. 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஊசிக்குறிப்பு:-
அரசனாக வந்து அடிமையாகி இருப்பதும், அடிமைபோல வந்து அரசியாகி விடுவதும்தான் திருமணபந்தம்... ஹா..ஹா..ஹா..
இதனை உங்களுக்காகக் கண்டு பிடித்து எடுத்து வந்தவர்.. உங்கள் பேரன்புக்குரிய புலாலியூர்ப் பூஸானந்தா:).
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Monday 9 January 2017

இது நானேதான்..


மிக நீஈஈஈஈண்ட இடைவெளிக்குப் பின் திரும்படியும் என் முன்னங்காலை முதன் முதலில் எடுத்து வைக்கிறேன், ஏதோ மீண்டும் பழையபடி கலக்கோணும் புளொக்குகள் எல்லாம் எனும் நம்பிக்கையோடு... என்னை வாழ்த்தி ஆஜீர்ர்ர்ர்ர்ர்ர்ர் வதியுங்கோ:)...


நிறையப்பேர் என்னை மறந்திருக்கலாம், மறக்க நினைச்சிருக்கலாம், மறக்காமல் இருக்கலாம்... நினைச்சுக்கொண்டும் இருக்கலாம்:)... அனைவருக்கும் ஒண்ணு டெல்ல ஆசைப்படுறேன்.. அது என்னவெண்டால் நான் யாரையும் மறக்கேல்லை, ஏன் தெரியுமோ... இப்போதானே “சுவீட் 16” பேர்த்டே கொண்டாடினேன்(எனக்குத்தேன்:)).. [தெளிவாச் சொல்லாட்டில் குறுக்க குறுக்க கேள்வி கேட்பினம்.. எங்கிட்டயேவா?:))...

எனக்கு எழுத ஒண்டும் இப்போ வருகுதில்லை... எல்லோரும் கொஞ்சம் புளொக் பக்கமும் வாங்கோ... பெயர் சொல்லி அழைக்கப் பயமா இருக்கு ... தப்பித் தவறி யாரையாவது தவறவிட்டு, வந்ததும் வராததுமா மனதைப் புண்படுத்திட வாணாம் என நினைச்சு... எல்லோருக்கும் ஓபின் இன்விட்டேஷன் வைக்கிறேன்...

இலங்கை கம்பன் கழகத் தலைவர் திரு ஜெயராஜ் அங்கிள் ஒரு பேச்சின் போது சொன்னார், “தலைமுறை மாற்றம்” என்பதை முதன்முதலில் 2005 ஆண்டில்தான் நான் உணர்ந்தேன் என... அதாவது அவரது அலுவலகம் நல்லூரடியில் இருந்தது (இப்பவும் அங்குதானாக்கும்)... அப்போ 90 களில் அவர் மிகவும் பிரபல்யம்...

அதனால் அப்போ தான் அந்த வீதியால் போகும்போது அனைவரும் தலையசைத்து வணக்கம், நலம் விசாரிப்பார்களாம், பின்னர் இடம்பெயர்வு வந்தது 1995 இல் அப்போ அவரும் ஊரை விட்டு தமிழ்நாடு, கொழும்பு என அதிக காலம் வாழ்ந்திட்டு பின்பு 2005 இல் யாழ்ப்பாணம் போய் , 1990 காலம்போல் அதே வீதியால் போனபோது யாருமே கண்டுகொள்ளவில்லையாம்... அதாவது தலைமுறை மாற்றம் ஏற்பட்டதால் யாருக்கும் இவரை பெரிதாக புரியவில்லையாம்...

இதேபோலதால், இடைவெளி விடும்போது தலைமுறை மாற்றங்கள் ஏற்பட்டுவிடும்... அதனால நாங்க இடைவெளியில்லாமல் இருக்க முயற்சிக்கோணும் என ஜொல்லிக்கொண்டு..... மீண்டும் வருகிறேன்...

என் இனிய புளொக் ஓனர்கள்.. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

==========================================================================
நாம் போகுமிடமெல்லாம் - நம் மனதும்
கூடவே வருவதில்லை...
ஜிப்படிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா
====================================================================