நல்வரவு_()_


Monday 16 January 2017

ண்லூர் சிங்ம்

ங்கு சுத்தினாலும், எப்படி மாறினாலும், யாரால் மாற்றப்பட்டாலும், யாருக்காக மாறினாலும் எதுவுமே நிரந்தரமில்லை.. அத்தனையும் நடிப்பாகவே இருக்கும்... முடிவில் நாம் நாமாகத்தான் இருப்போம்.

ப்பவுமே இதில் எனக்கு குழப்பம் உண்டு, அதாவது சிலர் சொல்கிறார்கள் மற்றவருக்குப் பிடித்தமாதிரி நம்மை நாம் மாற்ற வேண்டும் என, ஆனா என்னைப் பொறுத்து அடுத்தவருக்காக நாம் அஜஸ்ட் பண்ணிப் போகவேண்டுமே தவிர மாற நினைக்கக் கூடாது.

னெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கும், இயற்கையான சுபாவம் இருக்கும் இவற்றை மாத்த முடியாது, அடுத்தவருக்காக இவற்றை மாற்ற நினைத்தால் அது ஒரு தற்காலிக நடிப்பாகவே இருக்கும் அதே நேரம் எமக்கும் அது மனதில் ஏதோ ஒரு அன்னீசியான:) தன்மையையே தரும், அவ் மாற்றம் நீடிக்காது, சில காலத்திலேயே எம் உண்மையான சுபாவம் தான் வெளியே வரும்.

ங்கட கண்ணதாசன் சொல்லியிருக்கிறார்
நான் நினைப்பதுண்டு இக்காலத்தில் அதிகமான காதல்கள்.. கல்யாணங்கள் விரைவில் முறிவுக்கு வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ என, அதாவது தான் விரும்பும் பெண்/ஆணுக்கு தன்னைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக சிறிது காலம், அவர்களுக்குப் பிடித்தமானபடி தம்மை மாற்றி அமைக்கிறார்கள் இதனால் காதல் சிலகாலம் நீடிக்குது, பின்பு நெடுகவும் நடிக்க முடியாதுதானே அப்போ உண்மை சுபாவம் வெளியே வந்ததும் ஒத்து வராமல் போய் விடுகிறது.

தனால் என்னைப் பொறுத்து நாம் நாமாகவே எப்போதும் இருப்பதுதான் நல்லது, அடுத்தவருக்காக மாற நினைத்தால்... மாறலாம் ஆனா அது நீடிக்காது... அடுத்தவருக்காக மாற்றக்கூடியது, நம் உடை, அலங்காரம், பொழுதுபோக்கு இப்படியான இடையே வந்த விசயங்களை, ஆனா குணாதிசயம் என்பது அது நம் Genes இலயே இருப்பது... மாற்ற முடியாதது.

சரி இப்போ வண்டலூர் சிங்கம் பற்றிச் சொல்றேன் கேழுங்கோ...

ண்டலூர் ஸூவில் ஒரு சிங்கம், ராஜாவைப் போலவே நல்ல சொகுசான வாழ்க்கையில் இருந்ததாம், நல்ல இறைச்சி மீன் வகைகள் ரைம்முக்கு ரைம் கிடச்சுதாம்... இப்படி இருக்கையில் ஒருநாள் அச்சிங்கத்துக்கு அமெரிக்கா போகும் ஆசை வந்துதாம், சரி என அமெரிக்காவுக்குப் போய் அங்கே ஒரு ஸூவில் இருந்துதாம்.

ங்கு போன நாள் தொடக்கம், இச் சிங்கத்துக்கு எப்பவுமே பழங்கள் கீரை வகை மரக்கறிவகை தான் கொடுத்தார்களாம், சரி ஏதோ புதுசுக்கு தருகிறார்களாக்கும் என பொறுமை காத்ததாம் சிங்கம், ஒரு வாரமாகியும் அதே சைவ உணவுகளே கிடைத்தமையால், கோபமடைந்த சிங்கம், அவ் உணவு தருபவரைப் பார்த்துக் கத்தியதாம், இங்கே பார் நான் ஒரு ராஜா, வண்டலூரில் எனக்கு எப்படியான உணவுகள் கிடைத்தது தெரியுமோ? இங்கு எதற்கு  “சைவ” உணவே தருகிறாய் என...

தற்கு அவ் உணவு கொடுப்பவர் சொன்னாராம், நான் என்ன பண்ண, நீங்கள் அங்கிருந்து இங்கு வந்தது, ஒரு ஒட்டகத்தின் பாஸ்போர்ட்டில், அதனாலேயே ஒட்டகத்தின் மெனுவையே உங்களுக்குத் தருகிறோம் என:)..
....... தேவைக்காக மாற நினைத்தால் இப்படித்தான் ஆகிவிடும்...

ஊசிக் குறிப்பு:
இந்த ஊசிக்குறிப்பு ரொம்பப் பிடிச்சிருக்குது எனக்கு:), ஆனா அதுக்கு ஹிட்லரின் காலத்தில் பிறந்திருக்கோணும்.. :)
()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()

46 comments :

 1. //இங்கே பார் நான் ஒரு ராஜா, வண்டலூரில் எனக்கு எப்படியான உணவுகள் கிடைத்தது தெரியுமோ? இங்கு எதற்கு அசைவ உணவே தருகிறாய் என...//

  இதில் ”இங்கு எதற்கு சைவ உணவே தருகிறாய் என...” இருக்க வேண்டும்.

  உடனடியாக அசைவத்தை சைவமாக மாற்றி விடுங்கோ, அதிரா.

  இல்லாட்டி அஞ்சுவை நான் பஞ்சாயத்துக்கு அழைக்க வேண்டியிருக்கும்.

  அவங்க வந்து பார்த்தால் செய்துள்ள தவறு காஸ்ட்லி மிஸ்டேக் எனத் தீர்மானித்து உங்களை தேம்ஸ் நதியில் ஒரே அமுக்காக அமுக்கி விடக்கூடும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ... நல்ல வேளை சொன்னீங்க.. பூஸோ கொக்கோ.. நாலுகால் பாய்ச்சலில் ஓடிப்போய் அஞ்சு படிக்க முன் மாத்திட்டேன்ன்ன்:) ஸ்ஸ்ஸ்ஸப்பா இன்னும் கை கால் டைப் அடிப்பது நிக்கவில்லை ... :) மிக்க மிக்க நன்றி.

   Delete
  2. ’அஞ்சு’வைக் கண்டால் மட்டும் இப்படி ஒரேயடியாக அஞ்சி நடுங்குகிறீர்களே !

   யாருக்காகவும் அஞ்சி நடுங்காமல் (உங்களை நீங்களே மாற்றிக்கொள்ளாமல்) நீங்க எப்போதுபோல தைர்யமாக இருக்கணும் .... ஞாபகம் இருக்கட்டும்.

   Delete
  3. Gopu annaa inge spelling mistakes iruntha udane enakku thaan information varanum

   Delete
  4. Angelin Monday, January 16, 2017 7:58:00 pm

   //Gopu annaa inge spelling mistakes iruntha udane enakku thaan information varanum//

   யெஸ் .. தங்கள் உத்தரவு கரெக்டூஊஊஊ .. மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே! மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டோம்.

   Delete
  5. ///வை.கோபாலகிருஷ்ணன்Monday, January 16, 2017 6:59:00 pm
   ’அஞ்சு’வைக் கண்டால் மட்டும் இப்படி ஒரேயடியாக அஞ்சி நடுங்குகிறீர்களே !

   யாருக்காகவும் அஞ்சி நடுங்காமல் (உங்களை நீங்களே மாற்றிக்கொள்ளாமல்) நீங்க எப்போதுபோல தைர்யமாக இருக்கணும் .... ஞாபகம் இருக்கட்டும்.///
   சே சே சே... அதெல்லாம்ம் ச்ச்ச்சும்மா நடிச்சேன்ன் கோபு அண்ணன்:) ஹா ஹா ஹா.. ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ:)

   Delete
  6. AngelinMonday, January 16, 2017 7:58:00 pm
   Gopu annaa inge spelling mistakes iruntha udane enakku thaan information varanum/////
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கவலைப்படாதீங்க உடனேயே பாஆஆஆஆஆஆர்சலில் வரும்.. அதுக்கு உங்கட அட்ரஸ் + ஃபோன் நம்பரை இங்கின வச்சுக் குடுங்கோ:)) பயப்புடாதீங்க.. பாஆஆஆஆஆஅ.....பு:) பூஊஊஊஊஊஊஉ....சி:) எல்லாம் அனுப்ப மாட்டோம்ம்:)

   Delete
  7. ///வை.கோபாலகிருஷ்ணன்Tuesday, January 17, 2017 4:56:00 am
   Angelin Monday, January 16, 2017 7:58:00 pm

   //Gopu annaa inge spelling mistakes iruntha udane enakku thaan information varanum//

   யெஸ் .. தங்கள் உத்தரவு கரெக்டூஊஊஊ .. மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே! மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டோம்.//////
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உங்களுக்கு தவளையடை கிடையாது சொல்லிட்டேன்ன்ன்:)

   Delete
 2. நாம் நாமாகவே இருப்பதுதான் என்றும் எப்போதும் நல்லது. பிறருக்காக நாம் நம்மை மாற்றிக்கொள்ளவே கூடாது என்பதை அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

  இருப்பினும் நான் சுட்டிக்காட்டியுள்ள எழுத்துப்பிழையை நீங்க மாற்றியே ஆக வேண்டும்.

  ReplyDelete
 3. பூனையார் அந்த மிர்ரரில் சிங்கமாகக் காட்சியளிக்கும் படம் சூப்பர் செலெக்‌ஷனாக உள்ளது. பகிர்வுக்குப் பாராட்டுகள் + வாழ்த்துகள் + நன்றிகள்.

  ReplyDelete
 4. ஒட்டகத்தின் பாஸ்போர்டில் சிங்கம் வந்துள்ளது .... சிரிப்பாக உள்ளது. :)))))

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா நேக்கும்தான் ... ஆசை அதிகமானால் எதுவும் செய்ய ரெடியாகிவிடுகிறோம், அனைத்தும் கண்ணை மறைத்து விடுகிறது என்பதே உண்மை... இக்கதையில் ஒரு குரங்கின் பாஸ்போர்ட் எனத்தான் கேட்டேன், ஆனா எதுக்கு கொஞ்சம் டீசண்ட்டான மிருகம் போடலாமே எனத்தான் ஒட்டகம் என மாற்றினேன்.. நன்றி. கோபு அண்ணன் போஸ்ட் பார்த்ததும் ஓடிவந்து பின்னூட்டங்கள் இட்டமைக்கு.

   Delete
 5. /////கேழுங்கோ..///// haaaaaaiiiooo haa haaa

  ReplyDelete
  Replies
  1. //கேழுங்கோ..//

   இந்த எழுத்துப்பிழை வழக்கமாக நம் அதிரா அடிக்கடி ஆங்காங்கே வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை செய்து வருவது மட்டுமே. அதுதான் நம் அதிராவை நம் எல்லோரிடமும் ஸ்பெஷலாகப் பிரபலப்பட வைத்துள்ளது.

   அதனால் இது மன்னிக்கப்படலாம், கனம் நீதிபதி அவர்களே !

   -=-=-=-=-

   சிவன்: “நான் எழுதிய என் பாடலில் குற்றமா? எங்கு குற்றம் கண்டீர்? சொல் குற்றமா? பொருள் குற்றமா .... ஹா ஹா ஹா ஹா”

   நக்கீரர்: ”சொல்லில் குற்றம் இல்லை. இருப்பினும் மன்னிக்கப்படலாம். பொருளில் தான் குற்றம் உள்ளது”

   -=-=-=-=-

   ஏற்கனவே நான் சுட்டிக்காட்டியிருந்தது ‘பொருளில் குற்றம்’ என ஆகிவிட்டதால் அதிரா அந்தர்பல்டி அடித்து .... நாலுகால் பாய்ச்சலில் ஓடிப்போய் கனம் நீதிபதி அவர்கள் இங்கு வருகை தருவதற்குள் அதனை மாற்றி விட்டாள்.

   இருப்பினும் குற்றம் குற்றமே ..... குற்றவாளியை தலைகீழாகப் பிடித்துக்கொண்டு தேம்ஸ் நதியில் ஒரே அமுக்காக அமுக்கி விடுவதோ அல்லது மன்னித்து விட்டு விடுவதோ கனம் நீதிபதி அவர்களின் விருப்பம் மட்டுமே.

   இங்கு ’கனம்’ என்றால் ‘மதிப்பிற்குரிய’ ‘மரியாதைக்குரிய’ என அர்த்தமாகும்.

   நீதிபதியின் வெயிட் 124 கிலோ என்று அர்த்தம் அல்ல என கனம் நீதிபதி அவர்களுக்கு அடியேன் பெளவ்யமாக அடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு கீழ்க்கண்ட பதிவின் பின்னூட்டத்தில் குழப்பிவிட்டுள்ள அதிரடி அதிராவே சாட்சியாகும்.

   http://engalblog.blogspot.com/2017/01/170116.html

   Delete
  2. வாங்கோ அஞ்சு வாங்கோ... ஹையோ மீ பல தடவை ஓசிச்சே அதனை எழுதினேன், பின்பு 1ஸ்ட்டா வந்து கொமெண்ட் போட்ட கோபு அண்ணனும் இதுபற்றி ஏதும் சொல்லவில்லையா.. நேக்கு தெகிரியம் அதிகமாச்சு.. நான் எழுதியது கரீட்டேதான் என ஆனா இப்பூடிக் கவிட்டுப் போட்டுதே:)... இனிமேல் ழி,ளி வராத வசனமாகவே எழுத ட்ரை பண்ணப்போறேன் எங்கிட்டயேவா... :)..

   Delete
  3. ///இங்கு ’கனம்’ என்றால் ‘மதிப்பிற்குரிய’ ‘மரியாதைக்குரிய’ என அர்த்தமாகும்.

   நீதிபதியின் வெயிட் 124 கிலோ என்று அர்த்தம் அல்ல என கனம் நீதிபதி அவர்களுக்கு அடியேன் பெளவ்யமாக அடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு கீழ்க்கண்ட பதிவின் பின்னூட்டத்தில் குழப்பிவிட்டுள்ள அதிரடி அதிராவே சாட்சியாகும். ////
   ஹா ஹா ஹா நானில்ல நானில்ல.. நான் அதை அங்கின எழுதியவுடனேயே மறந்திட்டேன்ன்..:) கோபு அண்ணன் தான் இவ்ளோ தூரம் காவிட்டு வந்திருக்கிறார்ர்... அஞ்சு ஒரு கிரெயின்னுக்கு ஓடர் பண்ணுங்கோ... கோபு அண்ணனை உச்சிப் பிள்ளையார் தீர்த்தக் கேணியில் அமுக்கிடலாம்ம்ம் ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்:)

   Delete
  4. // அஞ்சு ஒரு கிரெயின்னுக்கு ஓடர் பண்ணுங்கோ... கோபு அண்ணனை உச்சிப் பிள்ளையார் தீர்த்தக் கேணியில் அமுக்கிடலாம்ம்ம் ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்:)//

   காசைக் கரியாக்கி Crane க்கு Order செய்ய வேண்டாம். முடிந்தால் அந்தப் பணத்தை எனக்கு அனுப்பச் சொல்லுங்கோ. என் செலவுக்காவது உதவும்.

   ஏனென்றால் இங்கு திருச்சியில் காவிரி ஆற்றிலும் சுத்தமாக ஒரு சொட்டு ஜலம்கூட இல்லை. கண்ணுக்கு எட்டியவரை ஒரே மணலாக மட்டுமே உள்ளது. ஊரில் எந்தக் கேணியிலும், ஒரு ஆளை அமுக்கும் அளவுக்குத் தண்ணியே இல்லை.

   வரும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு மிக அதிகமாக இருக்கும் எனப் பேசிக்கொள்கிறார்கள். பேசாமல் குடும்பத்துடன் லண்டனுக்குப் புறப்பட்டு வந்து அஞ்சுவிடமோ அல்லது அதிராவிடமோ அடைக்கலம் ஆகி விடலாமா என யோசித்துக் கொண்டுள்ளேன்.

   Delete
  5. ஹா ஹா ஹா இங்கயும் சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்திட்டேனா, தண்ணீர்ப் பிரச்சனை பற்றிப் புலம்ப வெளிக்கிட்டுவிட்டார் கோபு அண்ணன்.. அதென்னது தமிழ்நாட்டில் ஒன்றில் வெள்ளமாக் கொட்டுது இல்லையெனில் வற்றி விடுது தண்ணீர்... இங்கும் அஞ்சு இடத்திலும் தண்ணிக்கு தட்டுப்பாடுதான் தெரியுமோ, எங்கள் ஸ்கொட்லாந்தில் இருந்து பைப் மூலம் தண்ணி போகுது அஞ்சுவின் ஏரியாவுக்கெனில் பார்த்துங்கோங்க... நாங்கள் எல்லாம் வள்ளல் வாரி பரம்பரையாக்கும் க்கும்...க்கும்.... ஆமாம் ஆன்ரியையும் அழைச்சுக்கொண்டு வாங்கோ கோபு அண்ணன் மிக்க மகிழ்ச்சி, நன்றி.

   Delete
 6. ஸ்ஸ்ஸ்ஸ்பபாடா ரெம்ப குயப்பமா இருக்கே? என்னில சில குட்டி குட்டி கூடாத பழக்கங்கள் இருக்கு.அந்த பழக்கங்கள் என்னோடு சம்மந்தபட்டவர்களுக்கு இடையூறா இருக்குது எண்டு வைப்போம்.அப்ப நான் அதே கொரங்கு பழக்கங்களை கட்டிக்கொண்டு மாறாமலே இருக்கவோ?? அல்லது மற்றவைக்கு இடைஞ்சல் பண்ணகுடாது எண்டு என்னை மாத்தவோ

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சுரேக்கா வாங்கோ... எனக்கும் இதில் ரொம்பக் குழப்பம்தான் பட் இப்போ கொஞ்சம் தெளிவாகியிருக்கிறேன், முடிஞ்சவரை என் கிட்னியில் இருப்பதை தெளிவுபடுத்துறேன் கே”ளு”ங்கோ:) எப்பூடி? கரீட்டா ளு போட்டிட்டனே...

   நான் நினைக்கிறது, இப்போ நீங்களும் நானும் எத்தனை வருசமா நட்பில் இருக்கிறோம்.. இவ்வருடத்தோடு 10 வருடங்கள் ஆகிறது இல்லையா?.. எங்கு அதிராவின் பெயர் கண்டாலும் ஓடிவருகிறீங்க, அதேபோல உங்கள் பெயர் தெரிந்தால் எனக்கும் மனம் பூரிக்குது. ஆனா உங்களுக்காக நான் என்னை எப்பவும் மாற்றியதில்லை, அதேபோல எனக்காக அதாவது இப்படி எழுதினால்தான் அதிராவுக்கு பிடிக்கும் என நினைச்சு எப்பவும் நீங்க கொமெண்ட் போட்டிருக்க மாட்டீங்க...

   நீங்க நீங்களாகவே எழுதுவீங்க, நானும் என் மனதில் தோன்றுவதை அப்படியே எழுதுவேன், இது சுரேக்காவுக்குப் பிடிக்காது என தனிப்பட நினைச்சு எப்பவும் எதையும் எழுதியதில்லை, காரணம் என் எழுத்துக்கள் உங்களுக்குப் பிடிக்கும் எனும் நம்பிக்கைதான், அப்போ நாம் நாமாக இருக்கும்போது ஒருவருக்கொருவர் பிடித்துக் கொண்டமையாலேதான் இத்தனை காலமும் நம் நட்பு தொடருது,

   இதற்குள் எப்பவாவது நம் எழுத்து ஒருவருக்கு ஒருவர் ஓரிருதடவைகள் பிடிக்காமல் கூட இருந்திருக்கலாம்/இல்லாமலும் இருக்கலாம்[உண்மையில் எனக்கு எதுவும் பிடிக்காமல் இருந்ததில்லை], ஆனாலும் அதை பெரிதுபடுத்தாமல் கடக்கிறோமே அதுதான் அஜஸ்ட் பண்ணுவதென்பது, ஒருவருக்கொருவர் பிடித்துக் கொண்டுவிட்டால்... சிலதை அஜஸ்ட் பண்ணுவோம் அவ்வளவே. இது நம்மோடு கூடவே பயணிக்கும் அனைத்து நட்புக்களுக்கும் பொருந்தும்...

   நீங்க சொன்னதுபோல, குரங்குச் சேட்டைகள்.:).. உதாரணத்துக்கு உங்களையே எடுத்துக் கொள்வோம்:)[ஒரு பேச்சுக்கு], உங்கள் சேஷ்டைகள் இடையிடையேயாவது பிடிக்கும் பட்சத்தில்தான் இத்தனை காலமும் உங்கள் சம்பத்தப்பட்டவர்கள் கூடவே இருக்கிறார்கள்.

   ஆரம்பத்தில் அதாவது புத்தி தெரிந்த காலத்தில் நீங்கள் கொஞ்சம் இச் சேட்டைகளைக் குறைத்து உங்களைக் கட்டுப் படுத்தி எல்லோரையும் நம்ப வைத்து விட்டு, இப்போ அச்சேட்டைகளைக் காட்ட வெளிக்கிட்டால் அதுதான் தப்பு... அதாவது அது கூடவே வந்த குணம், அதனை நிறுத்த முடியாது, அப்பப்ப சந்தர்ப்பத்துக்கேற்ப அஜஸ்ட் பண்ண மட்டும்தான் முடியும்.

   இப்போ வலையுலகில் கூட என் எழுத்துக்கள் பிடிப்போர் மட்டுமே கூடவே தேடி வருவார்கள், ஏனையோர் ஒதுங்கி விடுவார்கள், ஆனா அனைவருக்கும் பிடிக்கும்படி என்னை மாற்ற நினைத்தால் அது நடிப்புத்தானே? நீண்ட நாள் நிலைக்காது, அதனால் நான் எப்பவும் நானாகவே என் எழுத்துக்களைப் பதிவு செய்வேன், யாருக்காவது என் எழுத்துப் பிடிக்கவில்லை எனத் தோணும் பட்சத்தில் அங்கிருந்து ஒதுங்கிவிடுவேன்.. ஏனெனில் என்னோடு கூடவே ஒட்டியிருப்பதை மாற்றி நீண்ட காலம் நடித்துக்கொண்டிருக்க முடியாது, அதைவிட ஒரு நட்பை இழப்பது மேல் எனத்தான் நினைப்பதுண்டு.. இது சரியா தப்பா தெரியவில்லை ஆனா என் மனதில் உள்ளதை சொன்னேன்.. மிக்க நன்றி சுரேக்கா.

   Delete
 7. அப்பறம் என் போட்டோ 10 வருசம் முன்னாடி எடுத்ததாக்கும்.இப்ப அதைவிட மெல்லிசு

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ஓ அப்பூடியா?:) நான் படம் பார்த்து மயங்கி விழாத குறை.. ஒரு வருடம் பார்க்காமல் விட்டு இவ்ளோ மாற்றமா என:) மியாவும் நன்றி சுரேக்கா.. உங்கள் புளொக் எங்கயும் காணமே.. இருந்தா கொஞ்சம் இங்கின லிங் பண்ணி விடுங்கோவன்..அல்லது தூசு தட்டுங்கோ.

   Delete
 8. நல்ல கருத்து பூஸக்கா!! ஐ டோட்டலி ப்ரூட்டலி அக்ரி வித் யூ! :)

  நீங்க எப்ப ழ/ள குயப்பத்தில இருந்து வெ"ழி"ய வருவீங்க?? ஹிஹிஹி!!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மஞ்சள்பூ வாங்கோ...யேஸ் யேச்ச்ச்ச் மீயும் வெஜிட்டபிள் லீ அக்றி பண்ணியே போட்டேன்ன் ஹா..ஹா..ஹா...

   ///நீங்க எப்ப ழ/ள குயப்பத்தில இருந்து வெ"ழி"ய வருவீங்க?? ஹிஹிஹி!!//// ஹா ஹா ஹா குட் குவெஷ்சன்:)) இதுவும் உப்பூடித்தான்ன்ன் ப்றூட்டலி:)) கூடவே வந்திடுச்சி:) நானும் எவ்ளோ ட்ரை பண்ணுறேன்ன் முடியல்ல அவ்வ்வ்வ்வ்வ்வ்:)

   அதிலயும் புறுணம் என்னன்னா.. ஒவ்வொரு தடவையும் எழுதும்போதும் மிகத் தெளிவா கொன்பிடண்ட்டா.. இதுதான் கரீட்டு என யோசனை பண்ணியேதான் எழுதுவேன் பட் அது காலை வாரிடும்.. ஹா..ஹா ஹா மியாவும் நன்றி மகி.

   Delete
 9. சிங்கம் படம் போட்டு, கம் கம் என்று கூப்பிட்டாலும், நாங்க அங்க வர மாட்டோம் ரீச்சர். 'ஓடி ஒளிஞ்சா, விட மாட்டேன் அத தேடி புடுச்சு கேளுன்னு' அஞ்சக்கா நூல் விட்டதால தான் என்று தெரிவித்துக் கொண்டு … தேம்ஸின் தலைகீழ் ஆசன புகழ் , பச்சப்பூ வச்ச கிளி அண்ணன் வருவதற்கு முன் விடை பெறுகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் …

  ReplyDelete
  Replies
  1. ஆவ்வ்வ்வ் வாங்கோ காதர் நானா:) வாங்கோ... அலைக்கும் சலாம்!! நீங்க வரமாட்டீங்க.. பழசை எல்லாம் மறந்துபோய்... பூமியை விட்டுப் போய் ரியூஸ்டேக் கிரகத்தில:) குடியேறி கொடிகட்டிப் பறக்கிறீங்க எனக் கேள்விப்பட்டேன்.. இருப்பினும் விடமாட்டோம் அப்பப்ப கூவிக் கூவி இடைஞ்சல் தந்துகொண்டேதான் இருப்போம்.. பழகின பாவத்துக்காக நீங்க அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு அப்பப்ப வந்து போங்கோ... பச்சப்பூ வச்ச கிளி அண்ணன் மீண்டும் காணாமல் போயிட்டார்ர்.. இப்போ எந்த மரத்தடியில் எந்த சிஷ்யை மனிக்கவும் டங்கு ஸ்லிப் ஆச்ச்ச்ச்ச்:) எந்த சீடனுடன் தியானத்தில் இருக்கிறாரோ தெரியல்ல:))...

   மிக்க நன்றி காதர்... பழையவர்களைச் சந்திக்கும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கு.. இவ்விடத்தில் அஞ்சுக்கும் நன்றி சொல்லோணும்.

   Delete
 10. அருமை... நாம் நாமாகத் தான் இருக்க வேண்டும்... (முடியும்...)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ தனபாலன் வாங்கோ, நீங்களும் ஏற்றுக்கொண்டீங்க மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

   Delete
 11. ஹாஹாஹா வண்டலூர் சிங்கம் கதை
  சூப்பரு அக்கா!

  எப்போதும் நான் நானாக இருக்க ஆசை.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மகேஷ் வாங்கோ... அதேதான் மிக்க நன்றி மகேஷ்.

   Delete
 12. அட்ஜெஸ்ட் பண்றது, சுபாவத்தை மாத்துறது ரண்டுக்குமான வித்தியாசத்தை சரியா சொன்னீங்க. சூப்பர் !

  அப்புறம் அந்த ஹிட்லர் சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன். :-) இப்போலாம் திரும்பி பார்த்தா தான், அவங்களும் திரும்பி பாக்குறாங்க. :-) :-) இல்லாட்டி கண்டுக்கவே மாட்டேங்குறாங்க.. :-)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கவிக்கா வாங்கோ...
   //// இப்போலாம் திரும்பி பார்த்தா தான், அவங்களும் திரும்பி பாக்குறாங்க. :-) :-) இல்லாட்டி கண்டுக்கவே மாட்டேங்குறாங்க.. :-)//// சத்தியமா இதேதான் நானும் ஊசிக்குறிப்பில் எழுதிவிட்டு பின்னர் அழிச்சுப்போட்டு... இப்படியாயின் ஹிட்லர் காலத்தில் இருந்திருக்க வேண்டும் என மாற்றி விட்டேன்...

   மிக்க நன்றி கவிக்கா.

   Delete
  2. அப்போ நீங்க நீங்களா இல்லாம, அட்ஜஸ்ட் பண்ணிருக்கீங்க. இந்த பதிவுக்கு மாற நடந்துகொண்டது வன்மையாக கண்டிக்கதக்கது. :-)

   Delete
  3. ஹா ஹா ஹா இல்ல கவிக்கா, நான் தான் தெளிவா சொன்னேனே, என்னை மாற்றுவது வேறு அஜஸ் பண்ணுவது வேறு:)... இதில் அஜஸ்ட் பண்ணினேனாக்கும்...க்கும்...க்கும்... ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா... கண்ணுக்குள் விளக்கெண்ணெய் விட்டபடியேதான் திரிகிறாங்க ஜாக்ர்ர்ர்ர்தையாத்தான் இருக்கோணும்:)

   Delete
 13. கர்ர்ர்ர்ர் :) நான் கேட்டது மேக்கிங் வீடியோ இல்லை ..ஒரிஜினல் படமே வேணும் ..
  அதை போட்டு தளபதி ரசிகர்கள் பார்த்து உங்களை தேம்ஸில் முக்கி எடுக்கணும் அந்த ஆசையில் தான் கேட்டேன்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீ ஒரு அப்பாஆஆஆஆவி... இது புரியாமல் உங்களுக்காக இதை தேடிப் போட்டேன்ன்ன்.. நல்லவேளை விஜய் ரசிகர்கள் என் பக்கம் பார்க்கல்லப்போல:)

   Delete
 14. நாம் நாமாகவே இருக்கணும் என்பது எனக்கும் பிடிச்ச விஷயம் ..யாருக்காவது நம்மை மாற்றிக்க நினைச்சோம்னா அது நடிப்பு போலிருக்கும் ..எனக்கு நிஜ வாழ்க்கையில் நடிப்பது பிடிக்காத ஒன்று ..அதனால் நீங்க குண்டு பூனையாகவே படத்தில் இருக்கிறார் போலே இருங்க :)))

  ReplyDelete
  Replies
  1. அதேதான் அஞ்சு, அன்று கதை எழுதும்போதும் நான் கேட்ட இடத்தில் இதையேதான் சொன்னீங்க.. உண்மைதான் நம்மை மாற்ற நினைப்பது நடிப்பதற்குச் சமம்.. அது நீடிக்காது.. மழை பெய்யும்போது சாயம் கலைவதைப்போலாகிடும்...

   ////அதனால் நீங்க குண்டு பூனையாகவே படத்தில் இருக்கிறார் போலே இருங்க :))) ///
   அஞ்சு பீஸ்ஸ்ஸ்ஸ் கொஞ்சம் தேம்ஸ் கரைக்கு வர முடியுமோ? ச்ச்ச்சும்மா வோக் போகத்தான்ன்:))

   Delete
 15. அந்த குண்டூசி குறிப்பில் ஒரு டவுட் ..அடுத்தவங்க நம்மை பார்க்கிறாங்கன்னு திரும்பி பார்த்தா இல்லைன்னா சைடால பார்த்தாதான் தெரியும் :)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அதுவும் கரெக்ட் தான்... மிக்க நன்றி அஞ்சு.

   Delete
 16. பாவம் அந்த வண்டலூர் சிங்கம். நல்ல வேளை, ஒட்டகம் மாதிரி கத்தச் சொல்லி டெஸ்ட் செய்யவில்லை!

  பதிவை விட, பின்னூட்டங்களில் கனம் அதிகம்!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வாங்கோ... ஹா ஹா ஹா சரியா சொன்னீங்க. உண்மைதான் என் பக்கம் எந்தப் பதிவைப் பார்த்தாலும் பின்னூட்டங்களே கலக்கலாக இருக்கும், என் பக்கம் வருவோர் சொல்வதுண்டு பின்னூட்டம் படிக்கவே வருகிறோம் என... பேஸ் புக்கிலும் அப்படித்தான் ஸ்ட்டேட்டஸ் ஐ விட பின்னூட்டங்களுக்கே அதிக முக்கியத்துவம்:).. தப்பிப் தவறி தேடிப்பார்க்க வெளிக்கிடாதீங்க மூடி வைத்திருக்கிறேன் வதனப் புத்தகத்தை:)...
   மிக்க நன்றி சகோதரர் ஸ்ரீராம்.

   Delete
 17. அதிரா! எப்படியிருக்கிறீர்கள்? ரொம்ப நாட்களாயிற்று உங்கள் வலைப்பக்கம் வந்து! இடையில் ரொம்ப நாட்கள் நீங்கள் உங்கள் வலைத்தளத்திற்கு வருவதேயில்லை என்று நினைத்திருந்தேன். இப்போது தான் தில்லையகத்தில் உங்களைப்பார்த்து உங்களைத்தேடிப்பிடித்து வந்தேன்.

  பதிவு அருமை!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மனோ அக்கா வாங்கோ.. நலமாக இருக்கிறேன், வேர்க் + வீடு+ குடும்பம் என ஒரே பிஸியானதால் எதையும் ஒழுங்காக கவனிக்க முடியவில்லை, எனக்கு எதுவாயினும் செய்தால் ஒழுங்காக செய்யோணும், ஏனோ தானோ என இருப்பது பிடிக்காது அதனாலேயே, மொத்தத்தில் வேண்டாம் என ஒதுங்கியிருந்தேன்.

   பின்பு இப்படியே போனால் அனைத்தும் கைவிட்டுப் போகும் எதை விட்டாலும் புளொக்கை விடக்கூடாது என திரும்பவும் இப்போ களமிறங்கினேன்.

   உண்மையில் நான் தான் உங்களிடம் முதலில் வர இருந்தேன்,எங்கள்புளொக்கில் பார்த்ததும் அட மனோஅக்கா.. போக வேண்டும் என நினைச்சேன் தாமதமாகிட்டேன், மன்னிக்கவும்.

   மிக்க மகிழ்ச்சியாக இருக்கு உங்களை எல்லாம் மீண்டும் இங்கு பார்க்கும்போது. மிக்க நன்றி மனோ அக்கா.

   Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.