இது ஒரு வேதனைக்குரிய உண்மைச் சம்பவம்.. கதை கேட்டதும் என்னமோ போலாகிட்டேன், என்ன செய்வது வாழ்க்கை மிகக் குறுகியது, ஒவ்வொருவரின் தலை எழுத்து ஒவ்வொரு விதமானது, இதில் பூஸ், பப்பி கூட விதி விலக்கல்ல.
எங்கள் அண்ணன் குடும்பம் ரோட்டில் போய்க் கொண்டிருந்தார்களாம், கனடா ரோட்டுக்கள் பற்றி நான் ஏற்கனவே “அதிரா தியேட்டர் - கனடா” எனும் லேபலில் நிறைய சொல்லிட்டேன்... பெரிய பெரிய ரோட்டுக்கள் அதுவும்.. பெரும்பாலும் எங்கேயும் குறைந்தது 4 இருக்கும். அப்போ இவர்கள் போய்க் கொண்டிருந்தபோது, ஒரு குட்...ட்ட்டிப் பூஸ் ரோட்டைக் கடக்கிறதாம்..
அவ்ளோ வாகனத்துள் அந்தப் பெரிய ரோட்டை, ஒரு பெரிய எலியளவு சைஸில், ஒரு பூஸ் குட்டி கடக்கிறதாம், இதைப் பார்த்ததும், உடனே நடு ரோட்டிலேயே காரை நிறுத்திப்போட்டு, அண்ணன் இறங்கி ஓடிப்போய், ட்ரபிக் போலீஸ் போல ஏனைய கார்களுக்கு சைகை காட்டி நிறுத்தச் சொல்லி, அவசரமாக அப் பூஸ் குட்டியை பிடிச்சுக் கொண்டு பக்கத்திலே ஒரு இரும்பு வேலியாம் உள்ளே ஒரு பில்டிங்,
அப்போ இவர் உள்ளே போய் அந்த பில்டிங் கோனரில் விட்டு விட்டு ஓடி வந்து காரை எடுத்திட்டார். டென்சன்தானே... நடு ரோட்டில் கார் நிற்கும்போது அவரால் எதையும் யோசிக்க முடியவில்லை, அப் பூஸ் குட்டியை காப்பாற்றினால் போதும் என மட்டும்தான் எண்ண முடிஞ்சிருக்கு.
அப்போ மீண்டும் காரை எடுத்துக் கொண்டு போகப்போக, காருக்குள்ளிருந்து அண்ணியும் பிள்ளைகளும் சத்தம் போடத் தொடங்கிட்டினமாம், எதுக்கு அங்கு கொண்டு போய் விட்டீங்க அதை, வீட்டுக்கு எடுத்துப் போயிருக்கலாம், அல்லது ஒரு பெட்ஷொப் ல குடுத்திருக்கலாம் எனப் பெரிய அட்டகாசமாம்.
அப்போதான் அண்ணனுக்கும் மனதில் தட்டியதாம், சரி எடுத்துப் போய் பெட்ஷொப்ல குடுக்கலாமே என, [இவ்ளவுக்கும் நிறையத் தூரம் ஓடியிருப்பார்கள்தானே] உடனே காரை திருப்பிக் கொண்டு அவ்விடத்துக்கு வந்திருக்கிறார்கள்...
அங்கு கண்ட காட்சி, அந்தப் பூஸ்குட்டி திரும்ப வெளிக்கிட்டு அதே ரோட்டை திரும்பவும் குரொஸ் பண்ணிய இடத்தில், வேறு ஏதோ வாகனம் அடித்துப் போட்டுப் போயிருக்கு.. இவர்களுக்கு மனமே கலங்கிப் போச்சாம்... விதி வலியது:(.
ஊசிக்குறிப்பு:)
இணுவில் மாம்பழத்தை..
கோண்டாவில் கொய்யாவை...
கொக்குவில் அணில் பார்த்துக்...
கொட்டாவி விட்ட கதை...
இனி இருக்கவே இருக்காதூஊஊ.... [ மேலே பாடல் கேளுங்கோ]
என்ன தலை சுத்துதோ என் பாட்டுக் கேட்டு?:).. கிட்டத்தட்டப் 15 வருசமா எங்கள் இந்த ஊரில ஒரு தமிழ்க் கடை இல்லையே என நான் ஏங்காத ஏக்கம் இல்லை:), அழாத நாளில்லை:).. ஒவ்வொருவரும் தமிழ்க்கடையில் அது வாங்கினேன் இது வாங்கினேன் எனக் கேட்டுக் கேட்டுக் கொட்டாவி விட்டுக்கொண்டிருந்த காலம் 2016 உடன் மலையேறிப்போச்ச்ச்:)) எங்களுக்கும் இலங்கைத் தமிழ்க் கடை வந்திட்டுதூஊஊஊஊஊஉ... அங்கு இல்லாத சாமான் இல்லை.. மண் சட்டியில் இருந்து அனைத்து இலைவகைகள், நெக்டோ சோடா, விழா/ளாம்பழம்:), றம்புட்டான் அனைத்துமே உண்டு.. இனி பனங்கிழங்கும் வருமென எதிர்பார்க்கிறேன்ன்.. சந்தோசம் பொயிங்குதே:).
===========================================================================
இனிமேல் ஈமெயிலில் பெற விரும்புவோர் மெயில் ஐடியை போட்டு வையுங்கோ பிளீஸ்.. இணைப்பு குடுத்திருக்கிறேன் வலது பக்கத்தில்...
இனிமேல் ஈமெயிலில் பெற விரும்புவோர் மெயில் ஐடியை போட்டு வையுங்கோ பிளீஸ்.. இணைப்பு குடுத்திருக்கிறேன் வலது பக்கத்தில்...
===========================================================================
|
Tweet |
|
|||
பூஸ் குட்டி ungal annan irakka pattu uthava ninaiththu uthavi seythathu nallathuthaan aanal.
ReplyDeletemindum pinnukku varaamal irunthirukkalam.
வாங்கோ மகேஷ் வாங்கோ... உடன் பதில் போட நேரம் கிடைக்குதில்லை.. இப்போ லீவில் நிற்கிறேன், இனி ஸ்கூல் தொடங்கினால் அவ்ளோதான்:)..
Deleteஉண்மைதான் மகேஷ் மீண்டும் திரும்பி வராமல் இருந்திருந்தால் எதுவும் தெரிந்திருக்காது.... இதுதான் விதி. மிக்க நன்றி மகேஷ்.
முதல் வேலையாக வோட் போட்டுட்டேன். என்னுடையது மூன்றாம் நம்பர் என்பதை முக்கியமாகக் குறித்துக்கொள்ளவும்.
ReplyDeleteவாங்கோ கோபு அண்ணன் வாங்கோ... ஹா ஹா ஹா மியாவும் நன்றி வோட்டுக்கு... இல்லையெனில் உச்சிப்பிள்ளையார் மலையில் இருந்து தள்ளி விட்டிடுவேன்ன்ன்:)) ஞாஆஆஆஆஆபகம் இருக்கட்டும்(கேணியில் தண்ணியில்லை என்பதால் மாத்தி ஓசிச்சேன்ன்ன்:)).
Deleteஇம்முறை நீங்க ஜஸ்ட்டு மிஸ்ட்டாகிட்டீங்க கோபு அண்ணன்!!!
//இனிமேல் ஈமெயிலில் பெற விரும்புவோர் மெயில் ஐடியை போட்டு வையுங்கோ பிளீஸ்.. இணைப்பு குடுத்திருக்கிறேன் வலது பக்கத்தில்...//
ReplyDeleteவலது பக்கத்தில் நீங்க இணைப்புக்கொடுத்திருந்த இடத்தில் கரெக்டாக என் மெயில் ஐடியைப் போட்டு வைத்தேன். உடனே இடது பக்கத்தில் ஏதேதோ கிறுக்கலான எழுத்துக்கள் வந்து என்னை ரீ-டைப் செய்யச் சொல்லிச்சு. ரீ-டைப் செய்து விட்டேன். Close Window எனச் சொல்லிச்சு. க்ளோஸ் செய்ததும் அதுவும் Close ஆகி எங்கோ மறைந்து விட்டது. சரியாகச் செய்தோமா இல்லையா எனக்கு ஒரே குயப்பமாக உள்ளது .... அதிரா !
இல்ல அது சரிதான், இனிமேல் என் அடுத்த போஸ்ட் ஓட்டமெட்டிக்கா உங்கள் மெயிலுக்கு வரும்... ஆனா அதுபற்றி நீங்க கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில் நீங்கள் புளொக்கராக இருப்பதால் அந்த லிஸ்ட்டில் உடனே காட்டிடுமெல்லோ, மெயிலில் கொஞ்சம் லேட்டாத்தான் காட்டும் என அஞ்சு பறைஞ்சா:))
Deleteஅந்த மெயின் ரோட்டில் ஏதோவொரு வாகனத்தில் அடிபட்டு செத்துப்போன பூனைக்குட்டியை நினைத்தால் மனதுக்குக் கஷ்டமாக உள்ளது.
ReplyDelete//என்ன தலை சுத்துதோ என் பாட்டுக் கேட்டு?:)..//
கரெக்டூஊஊஊஊ. அதே .... அதே .... சபாபதே .... அதிர(ரா)பதே !
பகிர்வுக்கு நன்றிகள்.
ஹா ஹா ஹா.. அது எங்கள் ஊர்ப்பாடல், அதில் கூறும் ஊர்களெல்லாம் நான் சைக்கிளில் + ஸ்கூட்டரில் சுத்திய நாட்களையும், கோயிலுக்கு சாறியுடன் வெட்கப்பட்டுச் சென்ற காலங்களையும், இரவிரவா மேடைப்பேச்சு, பிரசங்கம் வில்லுப்பாட்டு என அம்மாவிடம் அடம் பிடித்து ஒரு பெரியாளுடந்தான் போகிறோம் தனியே கேள்ஸ் ஆகப் போகவில்லை என சத்தியம் பண்ணிப் பெர்மிஷன் வாங்கிப் போன காலங்களையும் நினைவு படுத்துது...
Deleteஅதாவது உச்சிப் பிள்ளையார் கோயில் கொண்ட இடம் திருச்சி மலையினிலே... எனக் கேட்கும்போது உங்களுக்கு ஒரு புளகாங்கிதம்(கரீட்டுத்தானே:)) கிடைக்குமே அப்படியே, இப்பாடல் கேட்கும்போது சோகம் கலந்த ஒரு சந்தோசம் மனதில் வருது...
http://swamysmusings.blogspot.com/2017/01/blog-post_24.html இந்தப்பதிவு நம் ஸ்வீட் சிக்ஸ்டீன், அதிரடி, அலம்பல், அட்டகாச, அதிரஸ அதிராவின் வருகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பதாக, கோவை வானொலி நிலையத்தில் ஓர் செய்தி இன்று வெளியாகியுள்ளது.
ReplyDeleteபிரித்தானியா மஹாராணியாரின் பேத்திக்கு இது விஷயம் தெரியுமோ தெரியாதோ .... அது எனக்குத் தெரியாது.
ஹா ஹா ஹா பூஸ் வாரொலியும் ஒலிபரப்பினார்கள்:)) ..
Deleteமிக்க நன்றி கோபு அண்ணன்.
பாடல் சூப்பருங்கோ...
ReplyDeleteவாங்கோ தனபாலன் மிக்க நன்றி.
Delete:( போங்க பூஸக்கா!! ஐ ஸோ சேட்!! :(
ReplyDeleteவாங்கோ மஞ்சள் பூ வாங்கோ.. என்ன செய்வது.. 2 சாட்டாக இருந்தமையாலேயே இங்கே போஸ்ட் பண்ணி என் மனப் பாரத்தை உங்களிடமெல்லாம் பகிர்ந்து விட்டேன்ன்.. இப்போ மீ சாட்டில்லை:)).. எப்பூடி?:)) மியாவும் நன்றி மகி.
Deleteஇதுதான் விதி ..பாவம் rip
ReplyDeleteஇனி இப்படி சோகக்கதை போட்டா அவ்ளோதான் சொல்லிட்டேன் ..தேம்ஸ்ல முக்கி எடுப்பேன் உங்கள
வாங்கோ அஞ்சு வாங்கோ.. ஹா ஹா ஹா .. எல்லாம் படிச்சு நம் மனதை புடம் போட்டு வச்சிருக்கோணும் அப்போதான் எப்பவும் எதையும் தாங்கும் தைரியம் ஏற்படும்... நானும் இப்படித்தான் துக்கம் பார்க்காமல் , கேட்காமல் இருக்க முயற்சிப்பேன்ன் ஆனா அது நல்லதல்ல...
Deleteமிக்க நன்றி அஞ்சு.
விதி வலியதுதான் :-(
ReplyDeleteஅதுசரி ஊசிக்குறிப்பெல்லாம் இரண்டு மூன்று வரியில் தானே எழுதிட்டு இருந்தீங்க. இதென்ன இரண்டு கிலோ மீட்டர் நீளத்துக்கு எழுதி வச்சிருக்கீங்க. ஐ! ஊசிக்குறிப்பு வந்திச்சு இப்போ முடிஞ்சிடும்னு நம்பிக்கையோட படிக்குறவங்களோட மனசு கஷ்டப்படாதா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... சும்மா சொன்னேன் :-) :-)
வாங்கோ கவிக்கா.. யேஸ்ஸ் விதி வலியது:(.
Deleteஹா ஹா ஹா.. ஆளும் வளரணும் அறிவும் வளரணும் எனத்தானே சொன்னாங்க:).. அதுதான் 2,3 வரி இப்போ கில்ல்ல்ல்லோ மீட்டராச்சூ.. ஹா ஹா.. மிக்க நன்றி கவிக்கா.
ஐயோ பாவமே .துணிவா நிப்பாட்டி காப்பாற்றி இருக்கிறார்.இங்க ஒராள் வாத்துக்குஞ்சுக்கு நிப்பாட்டி ரோட்டை கடக்க உதவி செய்து கொண்டிருக்க பின்னால அவோக்கு பின்னால இல்ல அதுக்கும் பின்னால ரெண்டு கார் இதால ஆக்சிடண்ட் பட்டு வாத்தை காப்பாற்றினாவாக்கு 10 வருசம் ஜெயில் .அது போதாது எண்டு இன்னும் மக்கள் கூச்சல் ம் குழப்பங்களும் இன்னும் வாதாட்டமா இருக்கு.ஏனெண்டா ஆக்சிடண்ட் பட்ட குடும்பத்தில அம்மாவும் குழந்தைகளும் இறைவனடி போய் விட்டார்கள்.
ReplyDeleteவாங்கோ சுரேக்கா வாங்கோ, ஓ மை கடவுளே இப்படியும் நடந்திருக்கோ, இப்படி சம்பவங்களைக் கேள்விப்படுவதனால்தான், இப்போ எல்லோரும் , யாருக்கு என்ன நடந்தாலும் நமக்கென்ன என்பதுபோல காக்கா போறாங்க....
Deleteமியாவும் நன்றி சுரேகா.
பாவம் அந்த மியாவ்....உங்கள் அண்ணன் காப்பாற்றியும் அடி வாங்கியுள்ளதே..அதன் விதி என்போம்...ஆனால் நாம் தான் அதன் விதியை விதித்தோமோ...என்றும் நினைக்கத் தோன்றுகிறது இல்லையா...அண்ணியும் குழந்தைகளும் சொல்லியது போல் செய்திருந்தால் ..ருந்தால்.... ந்தால்....தால்....ல்.....ம்ம்ம் இனி என்ன சொல்ல..
ReplyDeleteகீதா
வாங்கோ கீதா வாங்கோ, ஓம் உன்மைதான், அது எதைப் பார்த்தாலும் உடனே எடுத்து ஓரமாக வைத்தே பழகிப்போச்சு, அவசரத்துக்கு கிட்னி வேர்க் பண்ணவில்லைப்போலும் அவருக்கு ஹா ஹா ஹா...
Deleteமியாவும் நன்றி கீதா.
துளசி : பாடல் சூப்பர், படமும்....ஆனால் பதிவின் நிகழ்வுதான் மனம் வேதனை...
ReplyDeleteவாங்கோ துளசி அண்ணன் வாங்கோ, மிக்க நன்றி, மேலே பாடல் மாத்திவிட்டேன்ன், எழுத்தில் இருக்கும் பாட்டு வேறு, லிங் இனைத்து விடுறேன். மிக்க நன்றி.
Delete