ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதானே வளர்த்தி என்று சொல்லிப்போட்டினம்.... ஆனா அத்தோடு சகிப்புத் தன்மையையும் வளர்க்க வேண்டி இருக்கே.
முக்கியமா இங்கு வெளிநாட்டுக்கு வந்ததில் இருந்து என் சகிப்புத் தன்மையை நாளுக்கு நாள் பல்லைக் கடிச்சு, நாக்கைக் கடிச்சு கூட்டிக்கொண்டே வாறேன்.. ஏனெனில் நாம் இருக்கும் ஊரும் அப்படிப்பட்டது. கலப்படமில்லாத வெள்ளையர்கள் இருக்கும் இடம், வெளிநாட்டவர்கள் எனில் நாமும் இன்னொரு குடும்பமும்தான், மற்றும்படி 2 சைனீஸ் குடும்பமும் உண்டு, எங்கு போனாலும் மிக ஒழுங்காக இருப்பார்கள்.
ரோட்டில் என்னதான் மெதுவா போனாலும், இடையே அவசரமா காரை நிறுத்தி யாருடன் பேசினாலும், பின்னாலே வரும் கார்கள் எல்லாம் பொறுமை காப்பார்கள், கோன் அடிக்க மாட்டார்கள். கோன் சத்தமே காதில் கேட்காது.
இரண்டே இரண்டு விசயத்துக்கு மட்டுமே கோன் அடிப்பார்கள்...
1. சிக்னலில் முதலாவது ஆளாக காரை நிறுத்திவிட்டு கனவில மிதந்து கொண்டே இருந்து, கிரீன் லைட் மாறியபின்பும் அப்படியே கனவு காணும்போது:) கோன் பண்ணுவார்கள்... எடு காரை என:).
2. டக்கென ஏதும் றூல்ஸ் ஐ மீறி, காரைக் கண்டபடி திருப்பினாலோ, வெட்டினாலோ மட்டும் கோன் அடிப்பார்கள்(அதாவது, எதிர்பாராமல் பின்னே வரும் காரை திடுக்கிடப் பண்ணினால் மட்டும்).
இப்படியான மென்மையான ஊரில் இருப்பதனால் மிகவும் கவனமாக நாம் நடப்பது வழக்கம். தப்பித் தவறியும், ஏசியன்ஸ் என்றாலே இப்படித்தான் என இவர்கள் எண்ணிடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருப்பதனால்.. அதிகமா சகிப்புத் தன்மை தேவைப்படுது.
அடுத்து Learners car முன்னாலே போகும்போது, பின்னாலே ஊர்ந்து ஊர்ந்து போவதுக்கு எவ்வளவு சகிப்புத் தன்மை தேவை தெரியுமோ? Dual carriageway எனில் (டபிள் ரோட்) முந்திக்கொண்டு போயிடலாம், ஒரு ரோட் எனில் முந்தவும் முடியாது... அந் நேரம் ஸ்கூலுக்கு நேரமாச்சே என காருக்குள் இருந்து பதறத்தான் முடியுமே தவிர ஒண்ணும் பண்ண முடியாது:).
ஆனா நான் நினைப்பேன் முன்பு ஒருகாலத்தில் கார் பழகும்போது, என் பின்னாலேயும் இப்படி சகிப்புத் தன்மையோடுதானே ஏனையோர் இருந்திருப்பார்கள்.... இனி நம் பிள்ளைகள் பழகும்போதும் யாரும் திட்டாமல் சகிச்சுக் கொண்டு பின்னாலே ஊர்ந்து செல்லத்தானே போகிறார்கள் அதனால.. இது நான் கடந்து வந்த பாதை.. என நினைச்சு மிகவும் சகிப்புத் தன்மையோடு.. "நீ ஓடு ராசா!! பத்திரமா ஓடு" என நினைச்சு, பொறுமை காப்பேன்.
இன்னொரு இடம், சில இடங்களில் வயதானோரின் பின்னால் நடப்பது. முந்தவும் முடியாத இடமாகவும் சன நெருசலான இடமாகவும் இருக்கும் இடங்களில், வயதானோர் மிக மெதுவாக நடப்பார்கள்.. ஒரு காலை எடுத்து வைத்து பின் மெதுவா அடுத்த காலை எடுத்து வைப்பார்கள், இவ்விடத்தில் பயங்கர சகிப்புத் தன்மை வேணும் - பின்னாலே மெதுவா ஊர:).. அப்போ நினைப்பேன்.. இது நான் பின்னாளில் சந்திக்கப் போகும் பாதைதானே- அதாவது கடக்க இருக்கும் பாதை, என. அதை நினைச்சே மிகவும் சகிச்சுக்கொண்டு பின்னாலே போவேன்.
எனக்கு என்னமோ வயதானோரிலும், குழந்தைகளிலும் அதிக பாசம் உண்டு. எங்கு போனாலும் நான் அதிகம் ஒட்டியிருப்பது இந்த இருவரோடும்தான். அதிலும் நான் நினைப்பதுண்டு, நம் வயதை ஒத்தோரை எல்லோரும் கவனிப்பார்கள் நோர்மலா, ஆனா வயதானோரைத்தான் தேடுவது குறைவு, அதனால நான் நம் வீட்டுக்கு விருந்தினர் வரும்போது பெற்றோரை அழைச்சு வந்தால், பெற்றோரோடுதான் அதிகம் பேசுவேன்.
நம் வீட்டுக்கு எதிர் வீட்டில் ஒரு தம்பதியினர் இருக்கிறார்கள் (65/70) வயசுக்காரர்(ஸ்கொட்டிஸ்) அவர்கள் என்னைக் கண்டால் நொன் ஸ்ரொப்பாக பேசுவார்கள், நானும் தப்பி ஓடாமல் பொறுமையா நின்று பேசுவேன், வீட்டுக்கும் போய்ப் பேசிவிட்டு வருவேன், நம் சமையல் பிடிக்கும் அவர்களுக்கு, ஏதும் செய்தால் கொண்டு போய்க் கொடுப்பேன். இந்த விசயத்தில் நிறையப் பேசலாம், ஆனா அது தற்பெருமை பேசுவது போலாகிடும் என்பதனால என்னைக் கொன்றோல் பண்ணிக் கொண்டு...
இப்போகூடப் பாருங்கோ உங்களுக்கும் சகிப்புத் தன்மை வந்திருக்குமே?:) என் போஸ்ட்டை ஒருவரிகூட விடாமல்:) முழுவதையும் சகிச்சுக்கொண்டு படிச்சு முடிச்சிட்டீங்கதானே?:)).
ச்ச்சோஓ நான் சொல்ல வருவது யாதெனில் சில நேரங்களில் கெட்ட கெட்ட கோபமா வரும், கோபத்தை அடக்க அடக்க உடம்பும் நடுங்கப் பார்க்கும்.. ஆனா இப்பூடியான நேரங்களில்.. மேலே நான் யோசிச்சதைப்போல “மாத்தியோசிச்சு” சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கோ...
இதிலிருந்து முடிவா நான் என்ன சொல்கிறேன் எனில்... பார்த்தீங்களோ? அதிரா ரொம்ப நல்ல பொண்ணு:)).. இதைச் சொல்லத்தான் சுத்தீஈஈஈ வளைச்சு இவ்வளவும் சொல்லி முடிச்சேன்ன்ன்.. ஸ்ஸ்ஸ் இனி யாரும் என்னைத் திட்டிடக்கூடாது:) சகிச்சுக் கொள்ளோனும்:))... ஹா ஹா ஹா..
முக்கியமா இங்கு வெளிநாட்டுக்கு வந்ததில் இருந்து என் சகிப்புத் தன்மையை நாளுக்கு நாள் பல்லைக் கடிச்சு, நாக்கைக் கடிச்சு கூட்டிக்கொண்டே வாறேன்.. ஏனெனில் நாம் இருக்கும் ஊரும் அப்படிப்பட்டது. கலப்படமில்லாத வெள்ளையர்கள் இருக்கும் இடம், வெளிநாட்டவர்கள் எனில் நாமும் இன்னொரு குடும்பமும்தான், மற்றும்படி 2 சைனீஸ் குடும்பமும் உண்டு, எங்கு போனாலும் மிக ஒழுங்காக இருப்பார்கள்.
ரோட்டில் என்னதான் மெதுவா போனாலும், இடையே அவசரமா காரை நிறுத்தி யாருடன் பேசினாலும், பின்னாலே வரும் கார்கள் எல்லாம் பொறுமை காப்பார்கள், கோன் அடிக்க மாட்டார்கள். கோன் சத்தமே காதில் கேட்காது.
இரண்டே இரண்டு விசயத்துக்கு மட்டுமே கோன் அடிப்பார்கள்...
1. சிக்னலில் முதலாவது ஆளாக காரை நிறுத்திவிட்டு கனவில மிதந்து கொண்டே இருந்து, கிரீன் லைட் மாறியபின்பும் அப்படியே கனவு காணும்போது:) கோன் பண்ணுவார்கள்... எடு காரை என:).
2. டக்கென ஏதும் றூல்ஸ் ஐ மீறி, காரைக் கண்டபடி திருப்பினாலோ, வெட்டினாலோ மட்டும் கோன் அடிப்பார்கள்(அதாவது, எதிர்பாராமல் பின்னே வரும் காரை திடுக்கிடப் பண்ணினால் மட்டும்).
இப்படியான மென்மையான ஊரில் இருப்பதனால் மிகவும் கவனமாக நாம் நடப்பது வழக்கம். தப்பித் தவறியும், ஏசியன்ஸ் என்றாலே இப்படித்தான் என இவர்கள் எண்ணிடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருப்பதனால்.. அதிகமா சகிப்புத் தன்மை தேவைப்படுது.
அடுத்து Learners car முன்னாலே போகும்போது, பின்னாலே ஊர்ந்து ஊர்ந்து போவதுக்கு எவ்வளவு சகிப்புத் தன்மை தேவை தெரியுமோ? Dual carriageway எனில் (டபிள் ரோட்) முந்திக்கொண்டு போயிடலாம், ஒரு ரோட் எனில் முந்தவும் முடியாது... அந் நேரம் ஸ்கூலுக்கு நேரமாச்சே என காருக்குள் இருந்து பதறத்தான் முடியுமே தவிர ஒண்ணும் பண்ண முடியாது:).
ஆனா நான் நினைப்பேன் முன்பு ஒருகாலத்தில் கார் பழகும்போது, என் பின்னாலேயும் இப்படி சகிப்புத் தன்மையோடுதானே ஏனையோர் இருந்திருப்பார்கள்.... இனி நம் பிள்ளைகள் பழகும்போதும் யாரும் திட்டாமல் சகிச்சுக் கொண்டு பின்னாலே ஊர்ந்து செல்லத்தானே போகிறார்கள் அதனால.. இது நான் கடந்து வந்த பாதை.. என நினைச்சு மிகவும் சகிப்புத் தன்மையோடு.. "நீ ஓடு ராசா!! பத்திரமா ஓடு" என நினைச்சு, பொறுமை காப்பேன்.
இன்னொரு இடம், சில இடங்களில் வயதானோரின் பின்னால் நடப்பது. முந்தவும் முடியாத இடமாகவும் சன நெருசலான இடமாகவும் இருக்கும் இடங்களில், வயதானோர் மிக மெதுவாக நடப்பார்கள்.. ஒரு காலை எடுத்து வைத்து பின் மெதுவா அடுத்த காலை எடுத்து வைப்பார்கள், இவ்விடத்தில் பயங்கர சகிப்புத் தன்மை வேணும் - பின்னாலே மெதுவா ஊர:).. அப்போ நினைப்பேன்.. இது நான் பின்னாளில் சந்திக்கப் போகும் பாதைதானே- அதாவது கடக்க இருக்கும் பாதை, என. அதை நினைச்சே மிகவும் சகிச்சுக்கொண்டு பின்னாலே போவேன்.
எனக்கு என்னமோ வயதானோரிலும், குழந்தைகளிலும் அதிக பாசம் உண்டு. எங்கு போனாலும் நான் அதிகம் ஒட்டியிருப்பது இந்த இருவரோடும்தான். அதிலும் நான் நினைப்பதுண்டு, நம் வயதை ஒத்தோரை எல்லோரும் கவனிப்பார்கள் நோர்மலா, ஆனா வயதானோரைத்தான் தேடுவது குறைவு, அதனால நான் நம் வீட்டுக்கு விருந்தினர் வரும்போது பெற்றோரை அழைச்சு வந்தால், பெற்றோரோடுதான் அதிகம் பேசுவேன்.
நம் வீட்டுக்கு எதிர் வீட்டில் ஒரு தம்பதியினர் இருக்கிறார்கள் (65/70) வயசுக்காரர்(ஸ்கொட்டிஸ்) அவர்கள் என்னைக் கண்டால் நொன் ஸ்ரொப்பாக பேசுவார்கள், நானும் தப்பி ஓடாமல் பொறுமையா நின்று பேசுவேன், வீட்டுக்கும் போய்ப் பேசிவிட்டு வருவேன், நம் சமையல் பிடிக்கும் அவர்களுக்கு, ஏதும் செய்தால் கொண்டு போய்க் கொடுப்பேன். இந்த விசயத்தில் நிறையப் பேசலாம், ஆனா அது தற்பெருமை பேசுவது போலாகிடும் என்பதனால என்னைக் கொன்றோல் பண்ணிக் கொண்டு...
இப்போகூடப் பாருங்கோ உங்களுக்கும் சகிப்புத் தன்மை வந்திருக்குமே?:) என் போஸ்ட்டை ஒருவரிகூட விடாமல்:) முழுவதையும் சகிச்சுக்கொண்டு படிச்சு முடிச்சிட்டீங்கதானே?:)).
ச்ச்சோஓ நான் சொல்ல வருவது யாதெனில் சில நேரங்களில் கெட்ட கெட்ட கோபமா வரும், கோபத்தை அடக்க அடக்க உடம்பும் நடுங்கப் பார்க்கும்.. ஆனா இப்பூடியான நேரங்களில்.. மேலே நான் யோசிச்சதைப்போல “மாத்தியோசிச்சு” சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கோ...
இதிலிருந்து முடிவா நான் என்ன சொல்கிறேன் எனில்... பார்த்தீங்களோ? அதிரா ரொம்ப நல்ல பொண்ணு:)).. இதைச் சொல்லத்தான் சுத்தீஈஈஈ வளைச்சு இவ்வளவும் சொல்லி முடிச்சேன்ன்ன்.. ஸ்ஸ்ஸ் இனி யாரும் என்னைத் திட்டிடக்கூடாது:) சகிச்சுக் கொள்ளோனும்:))... ஹா ஹா ஹா..
ஊசிக்குறிப்பு:
புளொக் ஆரம்பித்து இத்தோடு ஒன்பது வருடங்கள்... ஆனா இதுதான் என் 200 ஆவது பதிவு:) எல்லோரும் ஓடி வந்து, அதிரா கையில தாம்பூலம் எடுத்து, வாழ்த்துங்கோ அதிராவை:).
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
வாழ்க்கையில் எந்த விசயத்தில் தோற்றாலும்,
ஒன்று மனசை மாத்தத் தெரியோணும்,
இல்லையெனில் தேற்றவாவது தெரியோணும்
இவ்வரிய தத்துவத்தை, இந் நன்னாளில் உங்களுக்காக காவி வந்து தந்திருப்பவர்..
உங்கள் பெருமதிப்பிற்கும்:), பேரன்புக்கும் உரிய புலாலியூர்ப் பூஸானந்தா:)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
|
Tweet |
|
|||
வாழ்த்துக்கள் மியாவ்😸
ReplyDeleteவாங்கோ அஞ்சு மிக்க நன்றி.
Delete9 வருஷம் எங்களை
ReplyDeleteகீரோ கீறி பிராண்டி விட்டதுக்கு அப்புறம் 200 வது பதிவுக்கு 😊 😁வாழ்த்துக்கள் மியாவ் 😸 😸 😸
கர்ர்ர்ர்ர் இவ்ளோ காலமும் ஸ்லோவாத்தான் பிராண்டினேன்ன் இனித்தான் ஸ்பீட்டாஆ இருக்கப் போகுது:).
DeleteNaan
ReplyDeleteஹை நான் தான் first
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நீங்களேதான்ன் 1ஸ்ட்டூ வேணெமெண்டால் கிள்ளி நுள்ளிப் பாருங்கோ:) உங்களைத்தான்ன் ஹா ஹா ஹா மிக்க நன்றி பிஸ்...
Deleteநான் செகண்டா???
ReplyDeleteதாம்பூலம் எடுத்து கொடுத்து வாழ்த்தியாச்சு.. ஆமா பிளாக் அனிவர்சரிக்கு ஸ்வீட் எங்க?????????
யாரு இது இன்னும் இன்ன புள்ளையாட்டம் ஸ்வீட்ட் கேட்கிறது ஒன்லீ சரக்குதான் ட்ரீட்
Deleteஆவ்வ்வ் அபி வாங்கோ... யேச்ச்ச்ச் நீங்க செகண்ட்டூ:), நீங்க இப்ப மறக்காமல் ஒவ்வொரு தடவையும் வருவதால், நான் ஓவரா உணர்ச்சிவசப்பட்டு என் வைர மோதிரத்தை உங்களுக்குப் போட்டாலும் போட்டிடுவேன் போல இருக்கே:)...
Deleteஸ்வீட் விரைவில தருவேன்ன்ன் இப்போதைக்கு அஞ்சு தேம்ஸ் கரையில வச்சு கொடுக்கிறா எல்லோருக்கும்:)... அஞ்சு ஒரு பக்கட் சுவீட் அபிக்கு குடுங்கோ, பெரிசாக் குடுங்கோ... ஹா ஹா ஹா மிக்க நன்றி அபி.
///Avargal UnmaigalSunday, January 29, 2017 7:03:00 pm
Deleteயாரு இது இன்னும் இன்ன புள்ளையாட்டம் ஸ்வீட்ட் கேட்கிறது ஒன்லீ சரக்குதான் ட்ரீட்///
ஆவ்வ்வ்வ்வ் வாங்கோ அவர்கள் உண்மைகள் வாங்கோ.. முதன்முதலா வந்திருக்கிறீங்க.. றைட் லெக்கை எடுத்து வச்சு வாங்கோ...
வரும்போதே என்னமோ எல்லாம் ட்ரீட் கொண்டு வாறீங்க.. ஓ சரக்கு எனில் நாம் ஸ்பைசஸ் ஐச் சொல்லுவோம்:) அதெதுக்கு ?:)...
///அதிரா ரொம்ப நல்ல பொண்ணு:)).///
ReplyDeleteஅமெரிக்க வந்தால் நான் நல்ல பொண்ணு என்று யாரிடமும் சொல்லிடாதீங்க. அவங்க உங்களை ஒரு மாதிரியா பார்ப்பாங்க
ஹா ஹா ஹா.. அவங்க எப்படிப் பார்த்தாலும் பறவாயில்லை நான் உண்மையை மட்டும்தான் பேசுவேன்ன்ன்ன் என்பதை தேம்ஸ் நதியில் மிதக்கும் அந்தப் படகின் மீது அடிச்சுச் சத்தியம் செய்கிறேன்.
Deleteஅதுசரி நீங்க உங்க பாட்டுக்கு கொமெண்ட்ஸ் ஐப் போட்டிட்டு... என்ன ஏது எனப் பார்க்காமல் ஒரு கணம் அதிராவை தப்பா நினைச்சிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்:)) கொமெண்ட்ஸ் ஏதும் என் மெயிலுக்கு வராமல், புளொக் செட்டிங்ஸ்.. கொமெண்ட்ஸ் ... ஸ்பாம் ல போய் ஒளிச்சிட்டினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
பின்பு அஞ்சு என் வாலைப்புடிச்சு:) வெறி சொறி என் காலைப்பிடிச்சு தேம்ஸ்ல தள்ளப்போய்... நான் எதுவும் தெளியாமல் விளிச்சு(பார்த்தீங்களோ கரெக்ட் ளி:)) வேர்த்து விறுவிறுத்த வேளைதான் சொன்னா.. எங்கே அவர்கள் உண்மைகள் போட்ட கொமெண்ட்ஸ் என:))..
ஹையோ இதென்ன புது வம்பாக்கிடக்கு.. நான் ஒண்ணுமே பண்ணல்ல சாமி என.. ஓடினேன்ன்ன் ஓடினேன்ன்ன் தேம்ஸ் இன் முடிவு வரை ஓடித்தேடி எடுத்து வெளியிட்டேன்ன்ன்ன்...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா.. அஞ்சூஊஊஊஊ சூடா ஒரு மங்கோ லஸி தாங்கோ ரொம்ப ரயேட்ட் ஆகிட்டேன்ன்ன்ன்:)).. ஹா ஹா ஹா ...
இதான் சொல்றது :)) ஹா ஹா ஆ தப்பு தப்பு //விளிச்சு(பார்த்தீங்களோ கரெக்ட் ளி:))// அது ழி பழம் ல வருமே அந்த ழி
Deleteகண் விழித்து
ஹையோ ஆண்டவா ஆபத் பாண்டவா:)).. எனக்கு ஆரோ சொல்லித்தந்தினம்.. கண் விழித்தல்.. என வருமாம்ம் ஆனா விளித்தல் எனில் அகல திறந்து பார்ப்பதை சொல்வதாம்ம்ம்ம் அதாவது மூடி விழிப்பதல்ல... எது சரி???
Delete@Angelin
ReplyDelete//Naan
ஹை நான் தான் first ///
நீங்க பர்ஸ்டா இருக்கலாம் ஆனால் நாந்தான் பூஸ்ட் ஹீஹீ
///நாந்தான் பூஸ்ட் ஹீஹீ///
Deleteஇது மாமிக்குத் தெரியுமோ?:)... அஞ்சூஊ அந்த கிரெயினைக் கொண்டு வாங்கோ.. இப்பூடியே விட்டால் சரிவராது:))
வாங்கோ மீயாவ் நலமா பார்த்து நீண்ட காலம் ஆச்சு[[ சினேஹா நலம் கேட்டா[[
ReplyDeleteவாவ்வ்வ்வ் நேசன் வாங்கோ வாங்கோ.... அஞ்சுவிடம் விசாரிச்சேன்ன் , எங்கே நேசனைக் காணல்லியே ஸ்நேகாவிடம் போயிட்டாரோ என, அவ சொன்னா " நேசன் இப்போ அந்தப்புரத்தில இருக்கிறார், ஒரு மாதத்தாலதான் வருவார்" என:)...
Deleteவந்திட்டீங்க சந்தோசம் நேசன் பழையபடி எல்லோரும் இங்கு ஒன்று சேருவோம்....
வலையுலக பாட்டிக்கு(டொனல்ட்டின் தங்கைக்கு ) சீனியரை நாங்க அப்படித்தான் அழைப்போம் வாழ்த்துக்கள்
ReplyDeleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) .. அவர் நேக்கு அங்கிள்:) ஆக்கும்ம்ம்..க்கும்...க்கும்... உப்பூடி எல்லாம் சொன்னால் பிறகு ட்ரம்ப் அங்கிளிடம் சொல்லி விசாவைக் கான்சல் பண்ண வச்சிடுவேன்ன்:) இப்போ அவர் என்னைத்தான் தன் பேசனல் செக்கரட்டறி ஆக போட யோசிக்கிறார்ர்ர்.. ஏனெனில் முன்பு ஒபாமா அங்கிளின் பேசனல் செக்கரட்டறி ஆக்கும் மீ:))..
Deleteஹா ஹா ஹா மிக்க மிக்க நன்றிகள் அனைத்துக்கும்...
டெல்லியில் மோடியை சந்தித்த கதை இனி தொடரும் போல[[ மீயாவ்!
ReplyDeleteஹா ஹா ஹா நீங்க இன்னும் அதை மறக்கேல்லைப்போல நேசன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அது பழய கதையாகிட்டுது, இப்போ ட்ரம்ப் அங்கிளைச் சந்தித்த கதைத்தான் புதுக் கதையா ஓடுது:)
Deleteநான் தான் முதல் அஞ்சலின் அக்காச்சி அல்ல சப்பாத்தி சுட ரெடியாகனும்[[[
ReplyDeleteஹா ஹா ஹா சுடுங்கோ சுடுங்கோ.. ஒரு மாதம் ஓய்வெடுத்தது போதும்தானே..
Deleteபூசார் நலம்தானே நீண்ட ஓய்வின் பின் சந்திப்பதில் நலம் நாடி சினேஹா மன்றம் காத்து இருக்கு [[[வெட்டியாக!
ReplyDeleteஅச்சச்சோ பாவம் ஸ்நேகா அக்கா:))போனதுதான் போனீங்க அவர்களோடு நின்று ஒரு ஃபோட்டோவாவது எடுத்து வந்திருக்கலாம்:))..
Deleteமிக்க மிக்க நன்றி நேசன்..
உள்குத்து பதிவா இருக்குமோ பட்நல்ல பதிவு . மீ உங்களுக்காக வெளியே சிதறி கிடக்கிற என் போஸ்ட் ஐ எல்லாம் கொண்டாந்து ஒன்று சேத்து ஒம்பது வருசமா றன் பண்ணாமல் இருந்த பிளாக் க்கு வந்து கொண்டிருக்கிறேன் .
ReplyDeleteவாங்கோ சுரேக்கா வாங்கோ... கர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னிடம் வருவோரை எப்பூடிப் பாதுகாப்பதென நான் யோசிக்கையில்.. இதில வேற உள்குத்துப் போட்டு.. இருந்ததையும் இழந்தாய் போற்றி ஆகிறதோ?:).. நான் யாருக்கு உள்குத்துப் போட.. இதில் என்ன இருக்கு எதுவுமே குத்தாக இல்லையே(பதிவில்)...
Deleteநான் ஏதுமெனில் நேராகவே சொல்லுவேன் சுரே.. உள்குத்தெல்லாம் தெரியாது.
அதுசரி கொமெண்ட் போட்டால் பப்ளிஸ் பண்ண மாட்டேன் என அடம் புய்க்கிறீங்க.. இருந்தாப்போல பார்த்தால்ல் 35 போஸ்ட் இருக்கு.. இது சரியான இடம்தானா.. இல்ல கனவோ எனப் பயந்திட்டேன்ன்... வாங்கோ வாங்கோ தொடருங்கோ..
கவிதைகளாக் கொட்டுங்கோ.. மியாவும் நன்றி சுரேக்கா..
சகிப்பு தன்மை யை இப்புடித்தான் டெஸ்ட் பண்ணி பாக்குறது .ஓம் உங்களுக்கு நிறய இருக்கு.
Deleteஅது வந்து முந்தி நான் ப்ளாக் தொடங்கேக்க எனக்கு ப்ளாக் ஐ பற்றி எதுவும் தெரியாது.அப்போ ஒரு ப்ளாக் ஐ திறந்து பிறவு ஒவொரு தலைப்புக்கும் தனித்தனி ப்ளாக் திறந்து அதாவது மொத்தம் 7 ப்ளாக் ஓப்பன் பண்ணி அதை மெயின் ப்ளாக் க்கு
கனக்ட் பண்ணினான்.
அதுக்கு பிறகு பாத்தா நான் என்ன செய்யுறன் எங்க நிக்குறன் என்ன செய்ய வேணும் எண்டு எதுவும் தெரியெல்ல அதன் காரணமாவும் நாடு நாடா சுத்தி திரிஞ்சதாலயும் அப்டியே விட்டுட்டு போயிட்டன்.போன வருசம்தான் இம்ஸ் ட்ட
கேட்டு எல்லாம் தெரிஞ்சு கொண்டு வர இருந்தும் வெட்டி பேஸ்புக் விடமாட்டன் எண்டுட்டு .இப்ப நீங்கள் வந்த உடன புழுகு வந்துட்டு எல்லாத்தையும் ஒண்டு சேத்துட்டு தொடந்து எழுதுவம் எண்டு வந்துட்டன்.
உங்களை இம்புட்டு மிஸ் பண்ணினாங்கள் தெரியுமோ.நீங்கள் எழுதாமல் விட்ட உடன என் தங்கா பேஸ்புக் க்கு வாரதில்ல.நான் எழுதுறன் வா சுச்சு எண்டாலும் நீ எழுதுறதை நீயே வாசி எண்டுட்டு போயிட்டாப்ல.
///அப்போ ஒரு ப்ளாக் ஐ திறந்து பிறவு ஒவொரு தலைப்புக்கும் தனித்தனி ப்ளாக் திறந்து அதாவது மொத்தம் 7 ப்ளாக் ஓப்பன் பண்ணி அதை மெயின் ப்ளாக் க்கு
Deleteகனக்ட் பண்ணினான்.////
ஹா ஹா ஹா சுரேக்கா சிரிச்சு முடியுதில்ல.
///இப்ப நீங்கள் வந்த உடன புழுகு வந்துட்டு எல்லாத்தையும் ஒண்டு சேத்துட்டு தொடந்து எழுதுவம் எண்டு வந்துட்டன்.///
நிட்சயமா தொடர்ந்து எழுதுங்கோ.. இங்கு எல்லோர் புளொக்குகளுக்கும் நேரம் கிடைக்கும்போது விசிட் பண்ணுங்கோ.
///உங்களை இம்புட்டு மிஸ் பண்ணினாங்கள் தெரியுமோ.நீங்கள் எழுதாமல் விட்ட உடன என் தங்கா பேஸ்புக் க்கு வாரதில்ல.///
ஓ... என்ன பண்ண நேரம் இல்லாமையால் மூடிட்டு ஓடிட்டேன் பின்பு யோசித்தேன், புளொக் என்பது ஒரு டயரி.. பொக்கிசம் போல எப்பவும் திரும்ப பார்க்க ஒரு மகிழ்ச்சியா இருக்கும்.. பேஸ் புக்கில் அவசர ஆபத்துக்கு எதையும் தேடி எடுக்க முடியாது... இது அப்படி இல்லை.
அதனால இதை விடக்கூடாது, எனக்கு இரு தோணியில் கால் வச்சு ரெண்டு காலும் தவறி கீழே விழுவதைக் காட்டிலும் ஒண்டில உறுதியா ஒழுங்கா இருப்பம் என இங்கு வந்தேன். இப்போதைக்கு அங்கின வரும் எண்ணம் இல்ல, ஆனா பின்பு வருவேன்.
சுச்சுவை நானும் மிஸ்பண்றேன் எனவும்.. தம்பியையும் கேட்டதாகவும்(அக்காவின்) சொல்லுங்கோ... சுச்சுவை இங்கு கூட்டி வாங்கோவன்..
///நான் எழுதுறன் வா சுச்சு எண்டாலும் நீ எழுதுறதை நீயே வாசி எண்டுட்டு போயிட்டாப்ல./// ஹா ஹா ஹா.. இனிக் கூட்டி வந்து உங்கட புளொக்கையும் காட்டுங்கோ... ,மியாவும் நன்றி சுரேக்கா.
அப்போ அதிரா நீங்க ஏழு வயதிலிருந்தே ப்ளாக் எழுதத்தொடங்கியிருப்பீங்களோ? 9 வருடம் ஆன பிறகு இப்போ ஸ்வீட் சிக்ஸ்டீனோ?
ReplyDeleteவெற்றிகரமான 200-வது பதிவுக்கு என் வாழ்த்துகள்.
4-வது வோட் என்னோடதாக்கும். ஞாபகம் இருக்கட்டும்.
வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ... வர வர ரொம்ப ஸ்லோவா நடந்து வாறீங்களே.. அடுத்த தடவை ஓடியாங்கோ அஞ்சுவைப்போல:)...
Delete///அப்போ அதிரா நீங்க ஏழு வயதிலிருந்தே ப்ளாக் எழுதத்தொடங்கியிருப்பீங்களோ? 9 வருடம் ஆன பிறகு இப்போ ஸ்வீட் சிக்ஸ்டீனோ?///
ஹா ஹா ஹா உப்பூடியெல்லாம் குரொஸ் குவெஷன்ஸ் கேட்டால் நேக்கு மயக்கம் வந்திடும்:)) இதை நான் எதிர்பார்க்கேல்லை:)) ஜமாளிச்சிடுவோம்ம் எங்கிட்டயேவா?:)..
ஹையோ அது கோபு அண்ணன் மீக்கு, புளொக் ஆரம்பிச்ச காலம் தொடங்கி சுவீட் 16 தான்:)) அதாவது மார்க்கண்டேயரின் அன்புத் தங்கை:).
///4-வது வோட் என்னோடதாக்கும். ஞாபகம் இருக்கட்டும்.///
ஹா ஹா ஹா மிக்க நன்றி.. இல்லையெனில் பிராண்டிப்புடுவேனாக்கும்...
வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி கோபு அண்ணன்.
சகிப்புத்தன்மை பற்றி நல்லாவே சொல்லிட்டீங்கோ. சகிப்புத்தன்மையுடன் படித்து முடித்தேன். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஹா ஹா ஹா இதே சகிப்புத் தன்மையோடு மீண்டும் வந்து வோட் பண்ணிச் செல்ல வேண்டி, நன்றி கூறி நிற்கிறேன்.. மிக்க நன்றி.
Deleteநீங்கள் சொன்ன மாதிரி சகிக்க வேண்டிய விஷயங்கள் சென்னைல நிறையவே உண்டு. சொல்லாததும் உண்டு. விதியேன்னு போய்க்கிட்டு இருக்கோம்..
ReplyDeleteவாங்கோ சரவணன் வாங்கோ... உண்மைதான், சனத்தொகை அதிகமான இடங்களில் மிகவும் கஸ்டம்தான், சகிப்புத் தன்மையைக் கூட சகிக்க முடியாமல் போய் விடும்...
Deleteஉங்கள் புளொக் ஏன் இன்னும் தூசு தட்டுப்படவில்லை????..
மிக்க நன்றி சரவணன்.
ஹலோ நான் போட்ட கருத்துக்களை எல்லாம் காக்கா தூக்கிட்டு போயிடுச்சா என்ன? ஒன்றுகூட காணவில்லையே?
ReplyDeleteஹா ஹா ஹா இதாரிது இடையில வந்து என்னைத் திட்டுவது எனப் பார்த்து திடுக்கிட்டுவிட்டேன்ன்ன்:)).. நல்ல வேளை நீங்க உங்கள் கொமெண்ட்ஸ் எங்கே எனத் தேடியமையாலேயே எனக்கும் தெரிஞ்சுது, தேடாமல் மனதுக்குள்ளேயே.. அதிராவுக்கு ஏதோ விருப்பமில்லையாக்கும் அதனால் வெளியிடவில்லைப்போலும் என நினைச்சு விட்டிருந்தால்.. அவ்ளோதான் எனக்கும் தெரியாமலே போயிருக்கும்...
Deleteதெரியப்படுத்தியமைக்கு முதலில் என் நன்றிகள். இப்போ காக்கா எல்லாத்தையும் திரும்பக் கொண்டு வந்து போட்டுவிட்டு, வடை சுட்ட ஆயாவைத்தூக்கிட்டுப் போயிடுச்சு:) ஹையோ இனி ஆயாவை எங்குபோய்த் தேடுவேன்ன்...
மிக்க நன்றி, வந்தமைக்கும், கொமெண்ட்ஸ் போட்டமைக்கும்.
நகைச்சுவை கலந்து எந்த ஒரு விசயத்தையும் சொல்வதில் நீங்கள் கில்லாடி... வாழ்த்துகள்...
ReplyDeleteவாங்கோ தனபாலன்.. ஹா ஹா ஹா மிக்க நன்றி.
Delete200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அதிரா.
ReplyDeleteவாழ்க்கையில் எந்த விசயத்தில் தோற்றாலும்,
ஒன்று மனசை மாத்தத் தெரியோணும்,
இல்லையெனில் தேற்றவாவது தெரியோணும்//
அருமையான தத்துவமுத்து.
வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. மிக்க சந்தோசம், மிக்க நன்றி.
Deleteமணம் மிக்க பூமாலை போட்டு இதயம் நிறைந்த வாழ்த்துக்களைச் சொல்லுகிறேன் அதிரா!
ReplyDeleteசகிப்புத்தன்மையைப்பற்றிய பதிவு மிக அருமை!
வாங்கோ மனோ அக்கா வாங்கோ.. மிக்க மிக்க நன்றிகள்,.
Deleteசிலர் கடந்து வந்த பாதையை மறந்துவிடுகிறார்கள். சிலர் கடக்க இருக்கும் பாதையை பற்றி யோசிப்பதில்லை அதனால்தான் சகிப்புதனிமை இல்லை என்பதை தெளிவாக எழுதியுள்ளீர்கள்!
ReplyDelete200 பதிவுக்கு வாழ்த்துகள் !
வாங்கோ கவிக்கா வாங்கோ... கரெக்ட்டாப் பிடிச்சீங்க விஷயத்தை.. மிக்க நன்றி கவிக்கா.
Delete//சில இடங்களில் வயதானோரின் பின்னால் நடப்பது. முந்தவும் முடியாத இடமாகவும் சன நெருசலான இடமாகவும் இருக்கும் இடங்களில், வயதானோர் மிக மெதுவாக நடப்பார்கள்.//
ReplyDeleteஓகே எல்லாம் சரி நீங்க எதுக்கு வயதானவங்க நடக்கற இடத்தில்போறீங்க :)
ஸ்வீட் 16 பாதையில் போக வேண்டியதுதானே :)
ஸ்ஸ்ஸ்ஸ் எனக்கு தற்பெருமை புய்க்காது என நீங்களுக்குத் தெரியுமெல்லோ:)).. அதனாலதான்.. சிம்பிளா வயதானோரின் பின்னால போறேன்ன்:))
Deleteவொய் திஸ் பொய் :))) இப்போ கடந்துகொண்டிருக்கும் பாதை என்றுதானே டைப் செஞ்சிருக்கணும் ..
ReplyDeleteஇது வாக்கிய மிஸ்டேக் திருத்தவும்
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*156890 :)
Deleteவெறி ஸாரி //
ReplyDeleteயாதெனில் சில நேரங்களில் கெட்ட கெட்ட கோபமா வரும், கோபத்தை அடக்க அடக்க உடம்பும் நடுங்கப் பார்க்கும்.. ஆனா இப்பூடியான நேரங்களில்.. மேலே நான் யோசிச்சதைப்போல “மாத்தியோசிச்சு” சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கோ//
கோபத்தை அடக்கக்கூடாதுன்னு அலாலியூர் அலமானந்தா எனக்கு கனவில் சொன்னார் .இனிமே கோபம் வந்தா டைரக்ட் அடிதான் சகிப்புத்தன்மையை வளர்த்து அது நம்மைவிட பெரிசாகிடுச்சின்னா சாப்பாடு போட கஷ்டம்
அய்ய்ய்ய் பிஸ்க்கும் நல்லா திங் பண்ண வருதே:) ஆனா இந்த இடத்தில் அது பொருந்தாது பிஸ்ஸு.. கோபத்தை அடக்கக்கூடாதுதான்.. உடனுக்குடன் வெளிக்காட்டிட்டால்ல் பின்பொருநாள் பூதமா வெடிக்கும் சான்ஸ் குறைவாம்ம்...
Deleteஆனா இது தவிர்க்க முடியாமல்.. கியூவில் வெயிட் பண்ணும்போது, ட்ரபிக்கில் மாட்டி நிற்கும்போது... இப்படியான பொது இடங்களில் வரும் கோபங்களை சகிச்சுத்தான் ஆகோணும் அதுக்காகவே, இவ்விடங்களில் மாத்தியோசிச்சு, சகிப்புத் தன்மையை வளர்க்கோணும் என்றேன்ன்ன்:).
ஒன்பது வருஷங்கள் என்பது மிக பெரிய விஷயம் அதிராவ் ..மனமார்ந்த வாழ்த்துக்கள் ,,இன்னும் நிறைய வார யோசிச்சேன் ..அவசர வேலை ஒன்று இருப்பதால் இரவு தொடர்வேன்
ReplyDeleteஉண்மைதான் அஞ்சு.. திரும்பிப் பார்க்க முன் 9 வருடங்கள் ஆகிவிட்டது.. எந்தாப் பெரிய நட்பு வட்டத்தை.. வீட்டிலிருந்துகொண்டே சேகரித்திருக்கிறோம்.. இது கோட் கிரேஸ்தானே....
Deleteதுக்கம் சந்தோசம் என பல பாதைகள் கடந்து வந்திருக்கிறோம்ம்.. நினைக்கவே பிரமிப்பாக இருக்கு... பல நட்புக்களை தொலைத்து விட்டோம்ம்... அதில் இலா, சந்தனா மற்றும் எங்கட பிரித்தானியாவிலிருந்து ஒருவர்.. திடீரெனக் காணாமல் போனாவே ஓ கீரி என அழைக்கும் கிரிஜா....
இதை கண்டிப்பா சொல்லியாகணும் ..நான் நடக்கும்போதும் காரில் இருக்கும்போதும் ரோட்டில் ஏதாவது சின்ன ஜீவன் குட்டி மியாவ்ஸ் கண்ணுக்கு படுதா என்று பார்த்திட்டே போவேன் ..பிக்காஸ் ஐ ஹாவ் மெனி மியாவ் ப்ரண்ட்ஸ் :) குட்டி பிரபு ..ஜில்ஜில் ரமா ..வெள்ளையம்மா இப்படி நிறைய பேர் இருக்காங்க :) அதனால் மெதுவாக போவேன் சோ நான் 60 என்று கணக்கிட கூடாதது
ReplyDeleteஹா ஹா ஹா நுணலும் தன் வாயால் கெடுமாமே:)) நான் இங்கின பேசாமல் போறேன்ன் சாமீஈஈஈ:))..
Deleteமியாவும் நன்றி அஞ்சு... போஸ்ட் போட்டு உங்கள் பக்கம் வாழ்த்தியமைக்கும் மிக்க மிக்க நன்றி.
எனது கருத்துக்களை வெளியிடாமல் பதுக்கி வைத்த அதிராவிற்கு எதிராக போராடி அதை வெளியிட செய்த தானைத்தலைவி ஏஞ்சலுக்கு பாராட்டுக்கள். இந்த முய்ற்சிக்கு உங்கள் அண்ணன் டொனல்ட் ட்ர்ம்ப் விருது கொடுக்க போகிறாரம்
ReplyDeleteஎனது அண்ணனா !! அவ்வ்வ் வேணாம் .
Deleteஅதிரா இவர் எதோ பிளான் வச்சிருக்கார் .வாய்க்கு பூட்டுன்னு சொல்லியிருந்தார் ட்ரம்ப்க்கு தங்கைன்னா உலகமே என்னை குழில போட்டு மூடிடுமே அவ்வ்
///செய்த தானைத்தலைவி ஏஞ்சலுக்கு பாராட்டுக்கள். இந்த முய்ற்சிக்கு உங்கள் அண்ணன் டொனல்ட் ட்ர்ம்ப் விருது கொடுக்க போகிறாரம்////
Delete///AngelinTuesday, January 31, 2017 12:22:00 pm
எனது அண்ணனா !! அவ்வ்வ் வேணாம் .///
சந்தோசம் பொயிங்குதே:) சந்தோசம் பொயிங்குதே:) சந்தோசம் நெஞ்சில் பொஉஇங்குதே:)).. பாட்டு வாய்ச்சால் பூஸும்:) பாடுமாம்ம்ம்:))..
எங்கட ட்ரம்ப் அங்கிளுக்கு 72 வயசுதானாம் இப்போ(ஒன்லி 72:)).. அப்போ அஞ்சுக்கு ஒரு 71.5 இருக்குமோ?:)) எதுக்கும் விசாரிச்சு சொல்லுங்கோ “அவர்கள் ட்ருத்” ஏனெனில் இவ்ளோ நாளும் அஞ்சுவை பெயர் சொல்லி அழைச்சமைக்கு இப்பவே மன்னிப்பு கேட்கோணும்.. ஏனெனில் மீ ரொம்ப நல்ல பொண்ணாச்சே:)) ஹா ஹா ஹாஅ....
ப்ளாக் ஆரம்பித்து ஒன்பது வருடங்களா? அடடே.... வாழ்த்துகள். தாம்பூலம் உங்களிடமிருந்தே எடுத்துக் கொள்ளவும்!
ReplyDeleteவாங்கோ சகோ ஸ்ரீராம் வாங்கோ.. ஓம் ஒன்பது வருடங்கள்.. அதாவது அப்போ எனக்கும் ஒன்பது வயசு:)) அப்பப்ப இதையும் கரெக்ட்டா சொல்லி வச்சிடோணும்:))
Deleteஈமெயில் சப்ஸ்கிரிப்ஷன் வைக்காதது எனக்கு சிரமமாய் இருக்கிறது.
ReplyDeleteஅன்று நீங்க சொன்ன உடனேயே போட்டு விட்டேன், அடுத்த போஸ்ட்டிலும் சொன்னேன், ஆனா நீங்கதான் இப்பக்கம் வரவில்லை, பிசியாக இருப்பீங்க அழைப்பது சரியில்லை வரும்போது சொல்லலாம் என விட்டிருந்தேன்ன்... இன்றும் வராது இருந்தால்ல்ல்.. பிரிட்டிஸ் தூதுவரை:) அனுப்ப இருந்தேன்.. வந்திட்டீங்க:) மிக்க நன்றி.
Deleteநன்றி மியாவ்... "கொசு மெயில்" சப்ஸ்கிரைப் செய்து விட்டேன். அதற்குள் நீங்கள் இந்த கேட்ஜெட் வைத்து விட்டதை ஒரு உளவாளி மூலம் அறிந்தேன்! அவருக்கும் என் நன்றி. இது வைக்காத பட்சத்தில் ஃபேஸ்புக்கிலோ, கூகிள் பிளஸ்சிலோ பகிரவும் என்று அடுத்த கோரிக்கை வைக்கத் தயாராயிருந்தேன்!
ReplyDeleteஹா ஹா ஹா.. உந்த “உளவாளியை” த்தான் நானும் உங்களிடம் அனுப்ப ரெடி பண்ணி ட்ரெயினிங் கொடுத்துக்கொண்டிருந்தேன்ன்:)).. என் பேஸ்புக்கை மூடி வைத்திருக்கிறேன், அங்கின போவதில்லை இப்போ, அங்கும் இப்படித்தான் கொமெண்ட்ஸ் போட்டே நிறையப் பேசுவோம்ம்.. இரு இடமும் சரிவர மெயிண்டைன் பண்ணுவது கஸ்டம்.. இப்போதைக்கு இங்கு மட்டுமே உள்ளேன்ன்..
Deleteஆனால் என்ன, இந்த ஃபீட் பர்னர் நீங்கள் பதிவு போட்டு 24 மணிநேரம் கழித்துதான் எனக்குத் தகவல் சொல்லும்!
ReplyDeleteநோஓஓஓஓஓஒ நான் இதை ஒத்துக்க மாட்டேன்ன் அதே “உளவாளி” யை வச்சு செக் பண்ணிய இடத்தில், விரைவாகவே காட்டுதாம்:)).. இது பூஸ் வானலை என்பதால் ரொம்ப ஸ்பீட்டு:)) ஹா ஹா ஹா...
Deleteஇல்ல எதுவானாலும் பிரச்சனை இல்லை நேரம் கிடைக்கையில், காணும்போது வாங்கோ.. வந்தால் சந்தோசமே. சில நேரங்களில் வேலை பிசியால் வரமுடியாமலும் போகலாம்.. வேண்டுமென்று அவொயிட் பண்ணினால் மட்டுமேதான் கவலை.. மற்றப்படி வசதிப்படி வாங்கோ, மிக்க மகிழ்ச்சி.. மிக்க மிக்க நன்றி.
ஆஹா இத்தினி பேர் fb ல லைக் போட்ருக்காங்களே ..தெரிஞ்சிருந்தா ஒரு உண்டியல் வச்சிருப்பேனே ..:)))
ReplyDeleteஎத்த்த்த்தனை பேர்ர்ர்ர் சொல்லவே இல்ல நீங்க???:)) இனியாவது ஒரு உண்டியல் வச்சு.. காசு சேர்த்து எனக்கொரு நெக்லெஸ் வைரம் வச்சதா வாங்கி பரிசாத் தரலாமெல்லோ ஹா ஹா ஹா:))
Deletehttp://swamysmusings.blogspot.com/2017/01/blog-post_24.html
ReplyDeleteathira "தியாராஜ ஸ்வாமிகள் பற்றிய சில குறிப்புகள்." என்ற இடுகையில் புதிய கருத்துரை விட்டுச் சென்றுள்ளார்:-
-=-=-=-=-=-=-=-=-
இங்கே பகிர்வைப் பதிந்துள்ள இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கோபு அண்ணன் குட்டிக் குட்டியா 12 பாகமா கதை சொல்லியிருக்கும் விதம் அருமை. 12 பாகம் மட்டும்தான் இப்போ படிக்க முடிந்திருக்கிறது, நேரம் கிடைக்கையில் மீண்டும் வந்து பின்னூட்டங்கள் படிக்கிறேன். //
மீண்டும் வருவதாகவும், பின்னூட்டங்களையெல்லாம் படிப்பதாகவும் சொன்னீங்கோ. ஆனால் உங்களை அங்கு அதன்பிறகு காணவே காணும். :((((( அதிரா .... நீங்க அங்கு மீண்டும் மீண்டும் வந்தால் மட்டுமே, அங்கு பின்னூட்ட எண்ணிக்கையில் 100 என்ற சிறப்பு எண் உங்களுக்குக் கிடைக்கும்.
பதிவை வெளியிட்டுள்ள பெரியவருக்கும், அதுவே மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
நாம் இருவருமாக அந்தத்தேரினை இழுத்து 100 க்குக் கொண்டு வருவோம். ஓடியாங்கோ. வரும்போது ஹெல்புக்கு நம் அஞ்சுவையும் அழைத்து வாருங்கோ.
ஓஒ சொறி கோபு அண்ணன், நான் நினைச்சேன்ன் புதுத் தலைப்பு போட்டிருப்பார் என, அதனால்தான் திரும்ப வரவில்லை, அதில் இன்னொன்று .. அது கொஞ்சம் சீரியசான இடம்போல தெரிந்ததால், கொமெண்ட்ஸ் போட பயமாக இருந்தது, எனக்கு சீரியசாக எழுத வராது, இடையிடையே என்குணத்தைக்:) காட்டி விடுவேன், அது யாருக்கேனும் பிடிக்காமல் போய்விட்டாலும் எனும் பயத்தில் அடக்கஒடுக்கமாக அமைதியாகிட்டேன்ன்ன்.
Deleteஅஞ்சூஊஊஊஊஊ ஓடிவாங்கோ கையைப் பிடிங்கோ போவம்.. 100 கொமெண்ட்ஸ் போட்டால்ல் கடலைச் சுண்டல் எல்லாம் தருவினம்போல தெரியுது, சாப்பிட்டுச் சாப்பிட்டுப் பேசலாம் வாங்கோ....
//அஞ்சூஊஊஊஊஊ ஓடிவாங்கோ கையைப் பிடிங்கோ போவம்.. 100 கொமெண்ட்ஸ் போட்டால்ல் கடலைச் சுண்டல் எல்லாம் தருவினம்போல தெரியுது, சாப்பிட்டுச் சாப்பிட்டுப் பேசலாம் வாங்கோ....//
Deleteமிக்க நன்றி. ஆஹா .... காரசாரமான நிலக்கடலை சுண்டல் .... அந்தப் பெரியவரிடம் ஆளுக்கு ஒரு கிலோ வீதம் நாம் மூவருமே வாங்கிக்கொள்வோம்.
WELCOME TO ATHIRA WITH ANCHOOOOOOO :))))))
டங்கூ:)
Deleteமீயாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅவ்...ஒன்னுமில்ல அதிரா மீ வாழ்த்து சொன்னென்!!!
ReplyDeleteகீதா
ஆவ்வ்வ் வெல்கம் கீதா வெல்கம் துளசி அண்ணன்... முதன்முதலா வந்திருக்கிறீங்க மியாவும் நன்றி.. மிக்க சந்தோசம்.. உங்கள் வாழ்த்து .. இங்கு தேம்ஸ்கரை வரை கேட்டு, வோக் போறேன் எனச் சொல்லிட்டு ஒளிச்சு தூங்கிக்கொண்டிருந்த அஞ்சுவை எழுப்பிப்போட்டுது:))
Deleteஹா ஹா மிக்க நன்றி கீதா.
hi அதிரா....வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉங்களோட கமெண்ட்ஸ் எல்லாம் செம்ம...எனக்கல்லாம் இப்பூடி எல்லாம் வராது..so உங்க கமெண்ட்ஸ் ரசிகர் மன்றத்தின் உறுப்பினர் நான்...
( அய்யோ..அனு கூட 2 லைன்ல கமண்டு போட்டுருகா..சூப்பர் அனு )
வாங்கோ அனு வாங்கோ.. முதன்முதலா வாறீங்க பத்திரமா வலதுகாலை எடுத்து வச்சு வாங்கோ. எனக்கு கினா மு..னாக் காலத்தில நடந்ததுகூட நினைவுக்கு வருது ஆனா அனுவை எங்காவது இதுக்கு முன் சந்திச்சேனா என நினைக்க நினைக்க நினைவு வருதே இல்லை:)...
Delete///( அய்யோ..அனு கூட 2 லைன்ல கமண்டு போட்டுருகா..சூப்பர் அனு )///
புல்லைக்கூடப் பாட வச்ச புல்லாங்குழல்...
அனுவைக்கூட 2 வரி டமில்ல:) எழுத வச்ச அதிரா:))..
மியாவும் நன்றி அனு... அடிக்கடி வாங்கோ:) மிக்க நன்றிகள்.
ஏற்கனவே நிறைய தடவை வந்தது உண்டு...ஆன blog activa இல்லன்னு follow செய்யல...இனி கண்டிப்பா வருவோம்...
Deleteபுல்லைக்கூடப் பாட வச்ச புல்லாங்குழல்...
அனுவைக்கூட 2 வரி டமில்ல:) எழுத வச்ச அதிரா:)).. இதுக்கும் எனது வாழ்த்துக்கள் ...
இப்படிக்கு
அதிராவின் ரசிகை...
////இப்படிக்கு
Deleteஅதிராவின் ரசிகை...////
ஹா ஹா ஹா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ அனு.. அஞ்சுக்குப் பாஆஆஆஆஆஆ...புக் காது:) கேட்டுதோ அவ்ளோதான் ... பிரித்தானியாவில ஒரு பிளேன்கூட எழும்ப முடியாமல் புகைப் புகையாப்போகும்:).. பிறகெப்பூடி நான் ட்ரம்ப் அங்கிளின் மீட்டிங்க்குப் போவது?:))))
// எனக்கொரு தகவல் வேணும், யூ ரியூப்பில் (இதென்ன புதுசா இருக்கு...!) அப்லோட் பண்ணாமல் நேரடியாகவே ஃபோனில் இருக்கும் வீடியோவை புளொக்கில் அட் பண்ண முடியுமோ? //
ReplyDeleteஇதென்ன magic-கா...? முதலில் உங்கள் ஃபோனில் (you mean mobile - இதுவே புரியலே சாமீ...!) இருக்கும் வீடியோவை உங்கள் கணினிக்கு மாற்றுங்கள்... அது எப்படி...? உங்க ஃபோன்- அதாவது மொபைல் எந்த மாடல், எந்த கம்பெனி என்றே தெரியாது... வாங்கிய இடத்தில் "ஃபோனில் (mobile) இருக்கும் வீடியோவை உங்கள் கணினிக்கு மாற்ற" வழி சொல்லி கொடுப்பார்கள்... அப்புறம் கீழே உள்ள இணைப்பை சொடுக்கி, அது போல் செய்யவும்...
நன்றி...
ஹா ஹா ஹா ஹையோ சாமீ ... இதெல்லாம் எனக்கு தெரிகும்... நான் வேலை மினக்கெட்டு வயர்கொழுவி மொபைலைக் கொனெக்ட் பண்ணி எல்லாம் வீடியோ, போட்டோஸ் ... கொம்பியூட்டருக்கு அப்லோட் பண்ணுவதில்லை... ஏதாவது வைபர்... மெசெஞர் இப்படி செயா பண்ணிவிட்டு அதனூடாக எடுப்பேன்.
Deleteஅப்படி வீடியோவை புளொக்கில் ஏத்த முடியாமல் இருந்தது, இப்போ நான் திரும்பி வந்தபின் (. இவ்வருடம்) முயற்சித்துப் பார்க்கவில்லை இன்னும். மிக்க நன்றி. நான் வத்திருக்கும் மொபைல் .... iPhone 6s Plus.
https://www.youtube.com/watch?v=PECLd821AXY
ReplyDeleteபார்க்கிறேன் மிக்க நன்றி.
Deleteகீழே உள்ள எனது நண்பரின் பதிவும் உதவும்... நன்றி...
ReplyDeleteInsert Video (காணொளியை இணைக்க) : http://www.bloggernanban.com/2010/12/how-to-add-videos-in-blogger.html [கவனிக்க : Compose Mode-டில் செய்ய வேண்டும்]
போய்ப் படிக்கிறேன் மியாவும் நன்றி, நான் கேட்டதுக்காக நேரம் ஒதுக்கி மினக்கெட்டு இவ்வளவு தகவலும் தந்திட்டீங்க , மிக்க நன்றி, ஸ்கூலால் ரைம் கிடைக்கவில்லை, அதனால் பதில் தாமதமாச்சு மன்னிக்கவும்.
Deleteவாழ்த்துக்கள் அதிரா. (நல்ல வேளை மொய் எழுதச் சொல்லேல்ல.)
ReplyDeleteahaa 9 aandukalaa nampave mudiyala ennavo nethu unga blog arimukamaana maathiri irukku. ennikkaiyai vidungkal akka ennangkalai pakirungkal sakippuththanmaiyodu vaasikka naangkal irukkirooom:)))). avvv.
ReplyDeletevazthukkal.