இன்று ஒரு பகிடி ...:)) என் சொந்தக்கதை சோகக்கதையைக் கேளுங்கோ:))).
பார்ஷல் போஸ்ட் பண்ண வேண்டியிருந்தது. ஸ்கூலுக்குப் போகும்போது போஸ்ட் பண்ணிடலாம் என இருந்தேன். வேலை முடித்து வெளிக்கிட, நேரம் மட்டுமட்டாக இருந்துது. 25 நிமிடங்களே இருந்தன ஸ்கூல் முடிய.
கொஞ்சம் விரைவாகப் போனால் நேரம் போதும், ஸ்கூலுக்கு கொஞ்சம் தள்ளி போஸ்ட் ஓபிஸ், அங்குபோய் மீண்டும் திரும்பி வர வேண்டும் ஸ்கூலுக்கு.
சரி இன்று எப்படியாவது பார்ஷலை அனுப்பிடோணும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு புறப்பட்டேன்:) (நான் தான் சொன்னேனே, எதையாவது நினைத்தால், அதை உடனே முடிக்காதுவிட்டால், எனக்கு ஏதோபோல் இருக்கும்).
வழியில் ரோட் வேலை நடக்கிறது. அப்போ ஒரு பக்கம் கார்கள் பார்க் பண்ணியிருக்கு, மறுபக்கம் ரோட் திருத்தும் மெஷின்கள் பார்க் பண்ணி வேலை நடக்குது...
ரோட்டின் நடுவிலே உள்ள இடைவெளியால் போக வேண்டும். அது போதும் போகலாம். ஆனா எதிரே ஒரு பெரிய கார்.. அதில் ஒரு நல்ல வயதானவதான் ரைவர்.. அவ அந்த இடைவெளியால் எடுக்க முற்பட்டுவிட்டு, பயத்தில போலும், முன் பக்கத்தை மட்டும் கரைக்கு திருப்பி விட்டு, பின் பகுதி நடு ரோட்டிலே நிற்குது கார். எதிரே வந்து, கரையில் நின்ற என்னை, வா..வா.. என லைட் போட்டா, அவவின் பின்னாலும் பல கார்கள், என் பின்னாலும் பல கார்கள்.
இங்கே ஒரு முறை இருக்கிறது, கார் லைட்டை அடித்தால், நீங்கள் முதலில் காரை எடுங்கள், அல்லது வழி விடுகிறேன் போங்கள் என அர்த்தம்.
ஆனா அவதான் வர முடியும் நான் போக முடியாது, அப்போ நான் லைட் அடித்தேன் நீ வா என... அவ கையைக் காட்டினா நீ வா என.. கிழிஞ்சுது போ என எண்ணிக்கொண்டு, சரி அவ கூப்பிடுறா, வயதானவ, நான் கிட்டப்போவம் என, ஒரு மாதிரி வெட்டி எடுத்தேன், ஆனா அங்கால போக முடியாது....
அவவின் கார் பின்பக்கம் புளொக் பண்ணிச்சுது, அவவோ அசையாமல் நிற்கிறா, அப்போ நான் விண்டோவைத் திறந்து மரியாதையாகச் சொன்னேன், பிளீஸ் கொஞ்சம் முன்னுக்கு எடுங்கோ என, அப்போ அவ சொன்னா, நான் பேவ்மண்ட்டில எல்லாம் ஏத்த மாட்டேன் என....
வேலில போன ஓணானை, வீட்டுக்குள் எடுத்துவிட்ட கதையாக என்னைக் கூப்பிட்டுப்போட்டு, இப்படிச் சொன்னால்... நான் என்ன பண்ணுவது..
நானோ என் கணவரோ, கார் ரயர் எல்லாம் பார்க்க மாட்டோம், பேவ்மண்டில் ஏத்தோணும் என்றாலும், கல்லோ முள்ளோ ரயர் போனால் மாத்தலாம், முதலில் பிரச்சனை தீரட்டும் என்றுதான் முடிவெடுப்போம்.... ஆனா இது எப்படியும் 70 வயதிருக்கும், சரியான மேக்கப்பும் போட்டிருக்கிறா, காரும் நல்ல புதுக்கார், இங்குள்ள வயசானோருக்கு, நல்ல பெரிய ரோட்டில் நேராக போய் பார்க் பண்ணித் திரும்புவினம், ஆனா இப்படி ஏதும் இடக்கு முடக்கென்றால், அவர்களால முடியாது, ரிவேசும் பண்ணக் கஸ்டப்படுவார்கள்... அதனால அப்படியே அசையாமல் நிற்பார்கள், நாம்தான் வெட்டி எடுக்க வேண்டும்.... அதுதான் பிரச்சனையே..
என்னாலும் கோபிக்க முடியவில்லை, ஆனா ஒருவித விசராகிட்டேன், என் பக்கம் பேவ்மண்டும் இல்லை, இருந்திருந்தால் ஏத்தியிருப்பேன்..பின்பு மீண்டும் விண்டோவைத் திறந்து சொன்னேன், பிளீஸ் கொஞ்சம் அப்போ, பின்னால எடுக்கிறீங்களோ என, பின்னால் நின்ற காரெல்லாம் ரிவேஸ் எடுத்து, இடம் விட்டுவிட்டார்கள், இவவின் கார் boot மட்டும் நடு ரோட்டில், அப்போ அவ சொன்னா.. என்ன ஜோக் பண்ணுகிறாயா? என்னால் பின்னுக்குப் போக முடியாது என்று...., சும்மா நிண்ட என்னை அவதானே வா வா எனக் கூப்பிட்டா, நான் நம்பியெல்லோ வந்தனான்... என மனதில எண்ணினேன், அதன்பின் மெதுமெதுவாக வெட்டி வெட்டிப் பின்னுக்கு எடுத்தா.... நான் கடந்து போய் விட்டேன்...
“இதுவும் கடந்து போகும்” என மனதில் எண்ணிக்கொண்டேன்... ஆனாலும் உடம்பு ஒருவித டென்ஷனாகிவிட்டது, மனதில் ஒரு அரியண்டமான உணர்வு ஏற்பட்டது, கோபமல்ல. அதில் பத்து நிமிடம் போய் விட்டது.
பறவாயில்லை, போஸ்ட் ஓபிஷில் பார்க்கிங் இருக்கோணும் ஆண்டவா.. என எண்ணியவாறு விரைந்து போனேன், அங்கு பக்கத்திலே பொலீஸ் ஸ்டேஷன் இருக்கு, அதன் முன்னால்தான் சில நேரம் பார்க்கிங் கிடைக்கும் . அதில் சில பார்க்கிங் போலீசுக்கென ரிசேவ் பண்ணப்பட்டிருக்கும். அப்போ நினைத்தேன்
பார்க்கிங் கிடைத்தால் இன்று, கிடைக்காதுவிட்டால், இன்று போய் நாளை வருவோம்.... இனி என்ன செய்வது என. ஆனா அங்கு ஒரு பார்க்கிங் இருந்துது. அப்பாடா என பார்க் பண்ணினேன்.
நல்ல மழை ஊஊ எனக் காத்தோடு பெய்து கொண்டிருந்தது. தொப்பியெல்லாம் போட்டு, கீழே இறங்கி பார்ஷல்களையும் நனைந்திடாமல் நெஞ்சோடு அணைத்துப் பிடித்துக்கொண்டு, விறுவிறு என போஸ்ட் ஒபீஷை நோக்கி நடந்தேன்...
அப்போ பின்னாலிருந்து பீம்...பீஈஈஈஈஈம் என கார்க் கோன் சத்தம் கேட்டுது.
இங்கு யாருமே கோன் பண்ணுவதில்லை, அப்படிப் பண்ணுவதாயின், ஆரையும் அவசரமாகக் கூப்பிட, அல்லது ஆராவது தவறு செய்தால் மட்டுமே. அப்போ கோன் சத்தம் கேட்டதும்
திரும்பிப் பார்த்தேன், என் ஜீப்பின் பக்கத்திலே போலீஸ் கார், அவர்கள்தான் கோன் பண்ணினார்கள்... எனக்கு ஏற்கனவே இருந்த டென்ஷனோடு, இன்னும் டென்ஷனாகிட்டேன். தொட்டில் பழக்கம்:), இப்பவும் போலீஸ், ஆமியைக் கண்டால் மனம் பதட்டமாகிவிடுது.
அப்போ, நான் அவர்களிடத்தில் பார்க் பண்ணிவிட்டேனோ, இல்லையே, சரியாகத்தானே பார்க்பண்ணினேன்... என்னில் எந்தப் பிழையும் இல்லையே, அப்போ ஏன் கூப்பிடுகிறார்கள், சரி புதுசாக ஏதும் சட்டம் வந்திட்டுதோ, அதில் பார்க் பண்ணப்படாதென, எனக்குத் தெரியாதுதானே, தெரிந்து செய்தால்தான் பயப்பட வேணும்.. என எண்ணியபடி திரும்ப நடந்து கிட்டப் போனேன்,
போலீஸ்காரர்கள், வானம் பார்ப்பவர்கள்போல இருந்தார்கள்.... கிட்டப் போய்க் கேட்டேன்... என்னையோ கூப்பிட்டீங்கள் என...
அப்போதுதான் திடுக்கிட்டவர்களாக...
நான் உன்னை அழைக்கவில்லை....... என்றார்கள்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))). (பயந்திடாதீங்க... வெள்ளையர்கள்தான்:)) இவ்வளாத்துக்கும் 20 நிமிடம் செலவாகியிருக்கும்,
துன்பம் வரும்போது சிரிங்க... என அடிக்கடி நான் மனதில் எண்ணுவதுண்டு, அப்படித்தான் நினைத்து மனதில் ஹா..ஹா..ஹா.. என சிரித்துக்கொண்டே...
மீண்டும் போஸ்ட் ஓபிஷை நோக்கி ஓடினேன்.... நல்லவேளை அங்கு கியூ இருக்கவில்லை. பார்ஷல்களைப் போஸ்ட் பண்ணிவிட்டு, ஸ்கூல் வாசலுக்கு வரவும் பெல் அடிக்கவும் நேரம் சரியாக இருந்தது.
இவ்ளோ சிரமப்பட்டு அனுப்பிய பார்ஷல்கள் நேர காலத்தோடு, உரிய இடத்தில் கிடைத்திட வேண்டுமென, வேண்டச்சொல்லி நீங்களையும்:) கேட்டுக்கொள்கிறேன்.
இதைப் பின்னூட்டமாகப் போட நினைத்தே ரைப் பண்ணினேன்... ஆனா நீஈஈஈஈஈண்டு விட்டதால்... இதுக்கடிச்சது யோகம்... ஒரு தலைப்புப்போடக் கொடுத்து வச்சிருக்கு:))).
ஊசி இணைப்பு:
இதுதான் வழி எனத் தெரிந்தால்,
முள்ளிலேயும் நடந்துவிட முடியும் - ஆனால்
எது வழி எனத் தெரியாதபோது,
என்ன செய்ய முடியும்?..
.....கண்ண......தாசன்.
(((((((((((((((((((((((((((((((((*******************)))))))))))))))))))))))))))))))))