நல்வரவு_()_


Sunday 29 July 2012

ஒட்ட...வா மியாவ்ஸ்:)

ஆஆஆஆஆ பொயிண்ட்டுக்கு வந்தாச்சு, ஏற்கனவே எங்கினயோ சொல்லியிருக்கிறேன் எல்லோ, கனடா தலைநகர் ஒட்டாவா பார்லிமெண்டில பூனைகள் வளர்க்கிறார்கள் என. முன்பு இருந்ததை விட அவர்களுக்கு இப்போ அழகான தொடர் வீடுகள்:) கட்டிக்கொடுத்து.. அவர்களைப் பராமரிக்கவும் இருவர் இருக்கினம் அங்கு.

புறப்பட்டு விட்டோம்.... மியாவ்!!! பார்க்க:)..

சூரியக் குளியல்?:)

நோ எனக்கு வெயில் ஒத்து வராது:)

இங்கின ஒருவருமில்லை  பேச்சுத் துணைக்கு:)

இதுதான் எங்கட வசந்த மாளிகை:)


இவர்களைப் பராமரிக்க, இருவர் பொறுப்பாக இருக்கிறார்கள்!

பிக்க..பூஊஊஊ:)

பூஸ் இஸ் ஹைடிங்:))

பிராண்டிப்போடுவம்:)

அரண்மனை அன்னக்கிளி தரையில நடப்பது அடுக்குமா?:)


பூஸுக்கு ஃபிரெஞ்சும் தெரியுமாக்கும்:)).. இல்லாட்டில் ஏன் இரு பாஷையில போர்ட் வச்சிருக்கினம்:))

இது ஒட்டாவாவில் இருக்கும், மேபிள் ஸிரப் தயாரிக்கும் பக்டரி, குளிர் காலமென்பதால் பூட்டப்பட்டிருந்தது, மேபிள் மரங்களிலிருந்து பால் எடுத்துத்தான் ஸிரப் தயாரிக்கிறார்கள், கிட்டத்தட்ட றப்பர் தயாரிப்பதைப்போல.
=======================================================
குட்டி இணைப்பு:
என் பக்கத்தில் இணைந்திருக்கும் ஃபலோவேஸை, எல்லோரையும்போல நானும் கவனித்து வருகிறேன், என் பக்கம் இணைந்திருக்கும் எல்லோருக்கும்  மியாவும் நன்றி. ஆனா இதுவரையில் இல்லாமல் ஒரு “குட்டி ஏஞ்சல்”,   Flowers Crafty Room இன் OWNERஇம்முறை என் ஃபலோவராக இணைந்ததை இங்கு சொல்லித்தானே ஆகோணும்..... 


Welcome SHARON!!!!
======================================================
சரி எல்லோரும் பூஸ் படம் பார்த்து உள்ளம் மலர்ந்து போயிருப்பீங்க:)), அந்த மலர்ச்சியோடு, அதைப்பற்றி 4,5 வசனம்:) சொன்னால் என்னவாம் எனக் கேள் கிளியே:))... இப்போ என் தூதுவர் கிளியார்தான்:).
======================================================
ஊசி இணைப்பு:
 “நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, இது இப்படித்தான் இருக்குமென்றால், அதற்கேற்றபடி, நாம் வளைந்து கொடுத்துத்தான் ஆக வேண்டும்”

 “எமது உள்ளத்தில் ஒளி இருக்குமாயின், வாக்கில் ஒளி இருக்கும், உள்ளத்து ஒளியே, கைகளை வேலை செய்யத் தூண்டுகிறது”.
=============================================

Saturday 14 July 2012

மனைவி ஒரு மந்திரி...யாம்ம்ம்ம்!.

இது பூஸ் ரேடியோவின் பிரித்தானிய சேவை:) அப்பிள் ஐஃபோனின் இயஃபோனைப் போட்டுக் கேழுங்கோ:).


ஒரு, 80 வயதைத் தாண்டிய தம்பதிகள். அழகான பார்க் ஒன்றிலிருந்து சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பேச்சையும் சிரிப்பையும் பார்க்க இளைய தலைமுறையினருக்கே பொறாமை வருவது போலிருந்தது.

அருகிலே போய் பேட்டி கண்டோம். அந்த தாத்தாவைக் கேட்டோம்,
“இந்த வயதிலும் இவ்வளவு ஒற்றுமையாக, இப்படிக் காதலாக, இப்படி மனம் விட்டுச் சிரித்து பேசிக்கொண்டிருக்கிறீங்களே.... இதுக்கான வாழ்க்கையின் ரகசியம் என்ன?”

அதுக்கு தாத்தா சொன்னார்...
“இதுக்கு எல்லாம் காரணம், என்னிடம் அதிகம் கெட்ட குணங்கள் இருந்தன, அவைதான் இன்று என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது” என்று.

அப்படியா? புதுத் தகவலாக இருக்கிறதே... கெட்ட குணங்கள் அதிகம் இருந்தமையால் மகிழ்ச்சியாக இருக்கிறீங்களோ.. என கேட்டபடி பாட்டியிடம் திரும்பி... அதே கேள்வியைக் கேட்டோம்... அதுக்குப் பாட்டி சொன்ன பதில்.


“அவரிடம் இருந்த கெட்ட குணங்கள்தான், இன்று எம்மை இவ்ளோ மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது”

எமக்கு ஏதும் புரியவேயில்லை... உங்களுக்கு?:)) புரியல்ல இல்ல?:).

அதுக்கு அவர்கள் அளித்த விளக்கம்... எம்மை எங்கேயோ கொண்டு சென்றது..

அதாவது, தாத்தாவிடம் இருந்த நல்ல குணங்களை விட, அவரிடமிருந்த கெட்ட குணங்களை ஆராய்ந்து, அதனை லஃப் பண்ணத் தொடங்கினாவாம் பாட்டி.. நல்ல குணங்கள் எப்பவும் எல்லோருக்குமே பிடிக்கும்தானே? அதனால் நல்ல குணங்கள் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை அல்லவா.

கணவனிடமிருக்கும் கெட்ட குணங்களைக் கண்டறிந்து, அதனை மனைவி விரும்பத்தொடங்கினால், வாழ்க்கையில் சந்தோசம்தான் அதிகமாகும். இப்படியே கணவனும் நடந்து கொண்டால், அக் குடும்பத்தில் துன்பத்திற்கு இடமேது.
========================__( )__=====================

உலகில் எத்தனையோ ஆண் பிரபல்யங்களின் வெற்றிக்குப் பின்னாலும் அவர்களின் மனைவிதான் இருக்கிறார்களாம்.


முன்னைய ஒரு அமெரிக்க ஜனாதிபதி (பெயரைக் கேட்டேன் இப்போ மறந்திட்டேன்:)). அவருக்கு எழுதப் படிக்கக்கூடத் தெரியாதாம். அவரைக் காதலிக்கும்போதே அவருக்கு படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி, கல்விகற்கச் சொல்லி அவரை ஒரு படிப்பாளியாக்கி, பின்னாளில் அவர் அமெரிக்காவுக்கே அதிபராக உறுதுணையாக நின்றவர் அவரின் மனைவிதான்.

இதேபோல சேர்ஜ்ஜில் கூட அப்பப்ப தனக்கு ஏற்படும் பெரிய மனச் சிக்கல்களுக்கெல்லாம், மனைவியிடம் ஓடிச்சென்றே ஆலோசனை கேட்பாராம்.

மோட்டார் காரைக் கண்டு பிடித்தவர், அவர் சிறுவயதாக இருக்கும்போது அவரின் சிந்தனை, போக்குகளைப் பார்த்து ஏனையோர் நகைத்துச் சிரிப்பார்களாம். ஆனால் அவரின் மனைவிதான்,  “இல்லை உங்களுக்குள் நிறைய நல்ல விஷயங்கள் புதைந்திருக்கு, நீங்கள் நிட்சயம் பெரியாளாக வருவீங்கள்” எனச் சொல்லிச் சொல்லி ஊக்குவித்தாராம், அந்த ஊக்குவிப்பும், நம்பிக்கை ஊட்டலுமே, பின்னாளில் மோட்டார் காரைக் கண்டுபிடிக்க உதவியதாம்.

இன்னொருவர், அவர் எப்பவும் கதைகள் இயற்றி மனைவிக்குச் சொல்லிக் கொண்டேயிருப்பாராம். ஒருநாள் மனைவி ஒரு கொப்பியும் பென்னும் கொடுத்துச் சொன்னாவாம், எனக்குச் சொல்லும் கதைகளை எல்லாம் இதில் எழுதுங்கோ, உங்கள் கதைகள் என்னோடு மட்டும் நின்றுவிடாமல் உலகுக்கும் தெரியட்டும், நாம் பேப்பரில், புத்தகங்களில் வெளியிடுவோம் என.

அதுக்கவர், சே என்னுடையதெல்லாம் ஒரு கதையா, அதையெல்லாம் எப்படி வெளியிடலாம் எனத் தயங்கினாராம், மனைவியோ,  “இல்லை நீங்கள் சொல்வதிலெல்லாம் ஏதோ ஒரு கருத்திருக்கு, உங்களால் முடியும்” என உஷார் கொடுத்து எழுத வைத்தாவாம், பின்னாளில் அவர் எழுதிய ஒரு கதைப் புத்தகம் மிகவும் பிரபல்யமாக வந்ததாம் (இதுக்கும் பெயர் சொல்லிச்சினம் மறந்திட்டேனே கர்ர்ர்ர்ர்ர் 4 மீ:)).

இதிலிருந்து  முடிவுரை என்னான்னா:)).


கணவன் எவ்வளவு உயர் பதவியிருக்கலாம், பெரிய படிப்புக்கள் படித்தவராக இருக்கலாம். அதேபோல மனைவியும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.


ஆனால் மனைவி படித்திருக்கா விட்டாலும் கூட, பதவியிலிருக்கா விட்டாலும் கூட, கணவனிடம் இல்லாத சில விஷயங்களில் மனைவி அதிகம் கெட்டிக்காரியாக இருக்கலாம், இருப்பார். அப்போ, அப்பப்ப அதுக்கேற்றபடி மனைவியிடமும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளும்போது, கணவனிடம் இருக்கும் குறைகளும், மனைவியின்  “கிட்னி” மூலம் தீர்க்கப் படுகிறதெல்லோ.


இதேபோல கணவனும் தன் ஆலோசனைகளை அப்பப்ப மனைவிக்குக் கூற வேண்டும்.


இதில் முக்கிய விடயம் என்னவெனில், ஒருவருக்கொருவர் ஆலோசனைகளைக் கூறும்போது, அதனை மதித்து ஏற்று நடக்கவும் இருவருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.


 சில குடும்பங்களில் “ஈகோ” பிரச்சனையால், ஒருவரின் கருத்தை, மற்றவர் ஏற்பதில்லை, இது தப்பு, இது மகிழ்ச்சியைக் குறைக்கும், முன்னேற்றத்தைக் குறைக்கும்.


அதனால இருவரும், கருத்துக்களை மனம் திறந்து பரிமாறவும் வேண்டும். அதே நேரம், கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தையும் உருவாக்கவும் வேண்டும். இது ஒரு அழகிய குடும்பத்தைக் கட்டி எழுப்ப உதவும்.
======================================================
ஊசி இணைப்பு:
எப்பவுமே ஜாக்கிரதையாகவே கால் எடுத்து வையுங்கோ..
அது பஸ் ஏறும் படியாயினும் சரி, வாழ்க்கையாயினும் சரி
======================================================

குண்டூசி இணைப்பு:
சில பறவைகள் எனது பக்கத்தை மறந்தே போனதே....:((
வார்த்தை தவறி விட்டினம் பூஸம்மா:((.. 
என் பக்கம் துடிக்குது கண்ணம்மா:((. 

இப்போ வதனப் புத்தகமே கதியென இருக்கினமாம் கர்:).... புளியமரத்தாட்களும் இப்போ அங்கினதானாம்:((.  இனி இங்கின இருந்து தேசிக்காய் எறிவது சரிப்பட்டு வராது, அதனால தேசிக்காயோடு, நேரடிப் போருக்கு தயாராகிட்டேன்ன்.. மக்கள்ஸ்ஸ் 4வது உலகப்போர் ஆரம்பம்ம்ம்ம்:)).
==========================()()()==========================

Friday 6 July 2012

ஒட்ட...வா:)) சிவன் கோவில்!!!!

ஸ்ரீ வைத்தீஸ்வரர் சுவாமி!!!
ன்னாது தலைப்பைப் பார்க்க ஒரு மாதிரித் தெரியுதோ? சே..சே.. அப்பூடி இருக்காது. கனடாவின் தலைநகரத்தின் பெயர் என்ன தெரியுமோ? ஒட்டாவா(OTTAWA)... 
அங்கு தமிழர்கள் குறைவு. அதனால் இருக்கும் தமிழ்க் குடும்பங்கள் சேர்ந்து ஒரு காணி வாங்கி ஒரே ஒரு கோயிலை ஆரம்பித்திருக்கினம். அதுதான் சிவன் கோவில். வைத்தீஸ்வரர் எனப் பெயர். இவர் இந்தியாவில் இருந்து வரவைக்கப்பட்டிருக்கிறார்....

ஆரம்பத்தில் ஒரு காணியோடு இவ்வீட்டை வாங்கி, பின் அதைக் கட்டிக்கொண்டு வருகிறார்கள். காணி வாங்கி விட்டபோதே, அவ் வீட்டைப் போய்ப் பார்த்தோம், இப்போ சுவாமி எல்லாம் வைத்து அழகாக இருக்கு. இனித்தான் கோபுரம் எல்லாம் கட்டப்போகினம்..

இவர் அங்கிருக்கும் “கற்பக விநாயகர்”

இவர்தான் மூலஸ்தானத்திலிருக்கும்  “ஸ்ரீ வைத்தீஸ்வரர்”...




துர்க்கை அம்மன், காளி அம்மன்.....


இதிலிருப்பது  “என் வைரவரும், சூரிய பகவானும்”... பின் பக்கத்தில் இருக்கிறார்கள்...


உள்ளுக்குள்ளேயே வேப்பமரம் வளருது, பார்க்க ஆசையாகவும் அழகாகவும் இருந்துது....

வெளியிலே ஒரு தேரும் இருந்தது, இப்பத்தான் யோசிக்கிறேன், அதைப் படமெடுக்கத் தவறிவிட்டேன், நல்லவேளை எல்லாத்தையும் படமெடுக்காமல் விட்டது.. அது உங்கள் நல்ல காலம்:), நீங்கள் எல்லோரும் தப்பி விட்டீங்கள் என் கடியிலிருந்து ஹா..ஹா..ஹா...:)).


பின் இணைப்பு:
அக்கா வீட்டு முற்றத்தில் இருக்கும் மேபிள் மரம், அப்போதான் துளிர் வரத் தொடங்கியிருந்தது.
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
குட்டி இணைப்பு:
எம் ஜன்னலின் அளவைப் பொறுத்தே காற்று உள்ளே வருகின்றது. ஜன்னல்களே இல்லாத வீடெனில் சுகாதாரம் கெட்டுப்போகிறது. அதேபோல சூழ்நிலைகளைப் பொறுத்தே துன்பமும் வருகின்றது, அந்தச் சூழ் நிலைகளைப் போக்கிக் கொள்ளும் பொறுப்பு மனிதனுக்குத்தான் இருக்கிறது.


நம்மை அறியாமல் வரும் துன்பம், நாம் அறியாமலேயே தீர்க்கப் படுகின்றது. நாம் அறிந்து வருவதை நாமே தீர்க்க வேண்டும்.


இந்த இருவகைத் துன்பங்களில் முதல் வகையானது, கடவுள் நம்பிக்கையால் தீர்க்கப்படுகின்றது. இரண்டாவது, நம் கூரிய புத்தியினால் தீர்க்கப்படுகிறது.  


பக்தியும் இல்லாமல், புத்தியும் இல்லாமல்,  “ஐயோ அம்மா” என அலறுவதில் எந்தப் பலனும் இல்லை.
------- Kanna...dasan.......

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO


ஊசி இணைப்பு

இந்த வேண்டுதலில், உங்களுக்கு ஏதும் பிரியுதோ?:)))
===============================================