இந்த முதலாளிகள் பற்றி, சகோ டிடி ஒரு போஸ்ட் போட்டார் அப்பவே நானும் என்னிடம் இருப்பதைப் போடோணும் என நினைச்சேன், பின்னர் கரந்தை அண்ணனும் இதுபற்றிய தலைப்பில் ஒரு போஸ்ட் போட்டார்..[ஆனா என்னுடையது சற்று வேறுபட்ட போஸ்ட், தலைப்புத்தான் ஒன்று:)] அதனால நானும் விரைவாக இதனைப் போட்டுவிட ஆசைப்பட்டு இங்கு, எழுதுகிறேன், இக்கதை படிக்க நன்றாக இருக்குது, யார் எழுதியது என்பது தெரியாது.
எதற்கும் ஒரு அளவு வேண்டும், சிலர் தாம் நல்லபிள்ளை எனப் பேர் எடுக்க வேண்டும், அப்படி எனில் சம்பளமும் கூட்டித்தரப்படலாம் என்றெல்லாம் நினைத்து, ஓவராக, குடும்பத்தைக்கூடக் கவனிக்காமல் வேலையே கதி என உழைப்போரும் உண்டு, ஆனா பலன் கிடைக்காதபோது, ஹையோ அநியாயமாக நம் நேரத்தை ஒதுக்கினோமே, குடும்பத்தைக் கூடச் சரியாக கவனிக்காமல் தொழிலே கெதி என வாழ்ந்தும் என்னத்தைக் கண்டோம் என வருந்துவதும் உண்டு.
நாம் வாங்கும் சம்பளத்துக்கும், நம் மனட்சாட்சிக்கு விரோதமில்லாமலும் நடந்தாலே போதும். ஒன்றை நினைவில வைத்துக் கொள்ள வேண்டும்..
“நாம் எவ்வளவுதான் உடம்பில் எண்ணெயைப் பூசிவிட்டு, மண்ணிலே உருண்டாலும், நமக்கு ஒட்டுவதுதான் ஒட்டும்”.. நமக்காக அளந்ததுதான் அளவு. அதனால நம் உடல் நிலையையும், குடும்பத்தையும் கவனிக்கத் தவறிடக்கூடாது. சரி சரி எனக்குப் பாருங்கோ ஓவரா அலட்டுவது பிடிக்காது:), அதனால கதைக்குள் போவோமா, இது ஒவ்வொரு எழுத்தாக ரைப் பண்ணிப்போடும் கதையாக்கும்.. கொப்பி பேஸ்ட் அல்ல.
வியாபாரி ஒருவர், தன் ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை, தன் மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று, பக்கத்து ஊரில் விற்பது வழக்கம். ஒருநாள் அந்த வண்டில் மாடு, வியாபாரியிடம் வந்து கேட்டது “எஜமான் இரண்டு ஆண்டுகளாக நான் உங்களுக்கு வேலை செய்கிறேன், நான் செய்யும் வேலைக்கு, நீங்கள் எனக்குக் கொடுக்கும் புல்லின் அழவோ மிகக் குறைவு.., தயவுசெய்து என் புல்லின் அளவைக் கூட்டுங்கோ” என்றது.
அதைக் கவனமாகக் கேட்ட வியாபாரி “மாடே, நீ கடினமாக உளைப்பது உண்மையே, ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு, ஒரு நாளைக்கு 25 மூட்டைகளை வண்டியில் சுமக்கிறது, நீயோ 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய், நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால், நானும் புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன் என்றார்.
பக்கத்து வீட்டு மாடு, பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாத இந்த மாடு, தானும் அதிக மூட்டைகளைச் சுமக்க ஒத்துக் கொண்டது. இப்படியே ஓராண்டு சென்றதும், மாடு மறுபடியும் வந்து, தன் புல்லின் அளவை அதிகரிக்கச் சொல்லிக் கேட்டது.
அதற்கு வியாபாரி “மாடே, அதிக பாரம் ஏற்றியதால், நம் பழைய வண்டி பாதிப்படைந்து விட்டது, எனவே இப்பொழுது ஒரு புதுவண்டி செய்யச் சொல்லியுள்ளேன், அதற்கு ஆகும் செலவையும் நான் பார்க்க வேண்டும், இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்துக் கொள், புல்லின் அளவை நிட்சயம் அதிகரிக்கிறேன்” என்றார்.
வேறு வழியின்றி, மாடும் ஒத்துக் கொண்டது. புது வண்டியும் வந்து ஆறு மாதங்களும் ஆன பின்பு, மாடு திரும்பவும் சென்று புல்லின் அளவைக் கூட்டச் சொல்லிக் கேட்டது.. அதற்கு வியாபாரி..
“மாடே, இப்போதெல்லாம் உனது வேகம் மிகக் குறைந்துவிட்டது, பக்கத்து ஊருக்குச் செல்ல, முன்பை விட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாய், இதனால என் வியாபார நேரம் குறைந்துவிட்டது, எனவே உனக்கு அதிக புல் தருவது, இப்போதைக்கு சாத்தியமில்லை” என்றார்.
கோபமடைந்த மாடு[ஆஆவ்வ் மாட்டுப்பிள்ளைக்கு ரோஷம் வந்திட்டுதாம் ஹா ஹா ஹா:)] “எஜமான், இப்புது வண்டியின் பாரம், பழைய வண்டியை விட அதிகம், இந்தக் கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியிருப்பதாலேயே என்னால முன்பு போல விரைவாகச் செல்ல முடியவில்லை” என்றது... அதற்கு வியாபாரி..
“மாடே!.. நீ என்ன காரணம் சொன்னாலும், உன்னால் எனக்கு அதிக லாபத்தைப் பெற்றுத்தர முடியவில்லை, நான் வேண்டுமானால் உன்மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன், ஆனால் நீ அதிக புல் கேட்காதே” என்றார்.
தன் இத்தனை வருட உழைப்பும் வீணாகிவிடும் எனப் பயந்த மாடு “வேண்டாம் எஜமான், நான் எப்படியாவது வேகமாகச் சென்று, உங்களுக்கு அதிக லாபம் பெற்றுத் தந்து விடுகிறேன்”.. என்றது.
மறுநாள் தொடங்கி, மாடு தன் சக்தியெல்லாம் திரட்டி, வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும், முன்பு தான் எடுத்துக் கொண்ட நேரத்திலேயே வியாபாரியைக் கொண்டுபோய்ச் சேர்த்தது. ஆனால், மிகக் கடின உழைப்பால், ஒரு மாதத்திலேயே நோயுற்று, படுத்த படுக்கையானது. வழமையாகச் சாப்பிடும் புல்லைக்கூட, அதனால் உண்ண முடியவில்லை.
சில நாட்கள் அதற்கு மருந்து கொடுத்த வியாபாரி, ஒருநாள் அதனிடம் “மாடே, உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார், அவரிடம் உன்னை விற்று விடப் போகிறேன்” என்றார்.
“எஜமான், நான் இப்போதிருக்கும் நிலையில், என்னால் எந்த வேலையையும் செய்ய முடியாதே, இப்போ எதுக்கு என்னை விலைக்குக் கேட்கிறார்கள்” என்றது.
“உன்னை அவர்கள் வேலை செய்ய வாங்கவில்லை, உன்னைக் கொன்று, தோலை எடுக்கவே கேட்கிறார்கள்” என்றார் வியாபாரி. வியாபாரியின் பேச்சைக் கேட்ட மாட்டுக்கு அழுகை வந்தது, அழுதழுது மாடு சொன்னது..
“எஜமான், நிங்கள் செய்வது ரொம்ப அநியாயம், உங்கள் பேச்சை நம்பி, மாடாய் உழைத்ததாலேயே நோயுற்றேன், இல்லை எனில் நீண்டகாலம் ஆரோக்கியமாக இருந்திருப்பேன், நீங்கள் செய்வதெல்லாம் துரோகம்” என்றது. அதைக் கேட்ட வியாபாரி..
“நான் செய்வது துரோகம் இல்லை, ஒரு முதலாளியின் லட்சியம், தன் தொளிலாளியிடம், முடிந்த அளவு வேலை வாங்கி அதிக லாபம் பெறுவது, அதையே நானும் செய்தேன், உன்மூலம் 5 ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டியதை மூன்று ஆண்டுகளிலேயே சம்பாதித்து விட்டேன், இப்போ உன்னை விற்பதன் மூலமும் பணம் ஈட்டப்போகிறேன், என்னுடைய அதிக லாபம் பெறும் நோக்கம் நிறைவேற, உன்னுடைய ஆசையை என் மூலதனமாக்கிக் கொண்டேன், நீ ஆரம்பித்திலேயே சுதாகரித்துக் கொண்டிருந்தால், தப்பித்திருக்கலாம்” என்றார்.
தன் முட்டாள்தனத்தை எண்ணி, மாடு நொந்து அழுதது.
இப்படித்தான் சில நிர்வாகங்களின் நோக்கமும், ஊழியர்களிடமிருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ, அவ்வளவு வாங்கிக்கொள்வார்கள். எனவே ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.
😆😆😆😆😆😆
ஊசி இணைப்பு
ஆஆஆ மொம்மி:) பிடிச்சிட்டேன், விரதம் முடிஞ்சுபோச்செல்லோ மசாலா ரெடி பண்ணுங்கோ பிர்ராஆஆஆணிக்கு:))
ஊசிக்குறிப்பு:
💓💓💓💓💓💓