நல்வரவு_()_


Sunday 23 June 2013

ப்பாடா முடிஞ்சிடுச்சா?:))...

ன நீங்க எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விடுவது எனக்கு கேட்குது:)).. ஒஃப் கோர்ஸ்:)) முடிஞ்சிடுச்சு:).... ஆனா இல்லை:).. ஹையோ அதிகம் குழம்பிடாதீங்க:)).. ஃபிரான்ஸ் ட்ரிப் பதிவுகள் இத்தோடு நிறைவடைகின்றன:)..  என்றேன் அதுக்கு மேல .. எதுவும் சொல்றதுக்கில்ல:)).. அனைத்தும் ஆண்டவன் சித்தம்..:)).. இதை நிறைய எடிட் பண்ணி, இப்பதிவோடு முடிவுக்கு கொண்டுவர, மீ... பட்ட பாடிருக்கே:)).. (முடியல்ல,, டிஷ்யூ பிளீஸ்ஸ்:)) பிங் லதான் வேணும்:))


ரி வாங்கோ இம்முறை ஃபிரான்ஸ்சின் தலநகரம் பரிஸில் இருந்தே, அனைத்துப் படங்களும் இணைக்கிறேன்.

இது பிரசித்திபெற்ற ஒரு சேர்ஜ்.. பெயர்.. நோத்ர் டாம்[ Notre Dame] சேர்ஜ்.. 




இந்த சேர்ஜ்ஜின் ஒரு பக்கத்தால் செந்நதி ஓடுகிறது. அதைக் கடந்து போக பாலம் போடப்பட்டிருக்கு. அப்பாலத்தின் இரு கரையிலும், இப்படி பூட்டுக்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. இது எதற்காகவெனில்.. காதலர்கள்.. திருமணம் முடிக்க இருப்போர் எல்லாம், தாம் இருவரும் பிரிந்திடாமல் இணையவேண்டும் என நேர்த்தி வச்சு, இப்பூட்டில் தம் பெயர்கள் திகதி ஆண்டு எல்லாம் எழுதி இப்படி பூட்டி விடுகின்றனராம். இனி பூட்ட இடமே இல்லாமல் இரு பக்கமும் அழகிய பல வண்ணப் பூட்டுக்களால் நிறைந்திருக்கு.


இந்த சென் நதியிலே போர்ட் ட்ரிப்பும் உண்டு.



இது பாலத்திலிருந்து எடுத்த படம்.




இது செந்நதியின் இன்னொரு பக்கம்.. இது லூவ்ர் மியூசியத்துக்கு பின் பக்கத்தால் போகிறது.



இதுதான் பிரசித்திபெற்ற “லூவ்ர்” மியூசியம். இங்குதான் “மோனாலீசா” வின் ஒரிஜினல் ஓவியம் வைக்கப்பட்டிருக்கு.(இது பொது அறிவுக்கு பயன்படும் குறிச்சு வையுங்கோ.. சமீபத்தில் “நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில்” பிரகாஸ்ராஜ் அவர்கள், இக்கேள்வி கேட்டிருந்தார்.



======()======()=======()======()============()======()========()======()======

இதுதான் ட்ராம்:). தார் ரோட்டிலே தண்டவாளத்தில்... கார் பஸ்போல ஓடிக்கொண்டிருக்கும். முன்பெல்லாம் பிரித்தானியாவில் இதுதான் இருந்ததாம்ம்.. 18ம் நூற்றாண்டுகளில்.. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி இப்போ முழுவதும் தார் ரோட்டாக்கி வாகனம் ஓடப்பண்ணிட்டினம்.

ஆனால் பரிசில் இப்பவும் புதுசு புதுசா கட்டி விடுகினம், சூப்பராக இருந்துது. என் ஒரு கனவும் இதில் ஏறோணும் என்பது ஏறிட்டேன்ன்:)).




இந்த வீடியோவைப் பாருங்கோ. இது யூ ரியூப்பில் எடுத்தேன். இதே ட்ராமில் தான் நாங்கள் ஏறியதாக நினைவு.  “போர்த்து வன்ஸன்” போகிறது. முழு வீடியோவும் பாருங்கோ சூப்பர்.

(((((((((((((((((((((((())))))))))))))))))))))))

இதுவும் இன்னொரு பிரபல்யமான இடம், இது
[Arc de Triomphe] “நெப்போலியன் வளைவு” எனச் சொல்லப்படுகிறது. அதாவது 2ம் உலகப் போரிலே, வெற்றியோடு நெப்போலியன் திரும்பி வரும்போது, அவரை வரவேற்பதற்காக கட்டிய வளைவாம். இங்கு ஒரு நெருப்பு சுவாலை இருக்கு, அது எப்பவும் ஒலிம்பிக் தீபம்போல அணையாமல் எரிஞ்சுகொண்டிருக்கு.

இது முன் பக்கம்

இது சைட் வியூ..

==()==()==()==()==()==()==()==

ஆவ்வ்வ்வ்வ் பொயிண்ட்டுக்கு வந்தாச்சு:). இதுதான் பரிசில் இருக்கும் “லா ஷபேல்” எனும் ஏரியா. இது கிட்டத்தட்ட தமிழிடமாகவே இருந்துது. தமிழ்க் கடைகள் அனைத்தும் இங்கிருக்கு. கடை மட்டுமல்ல.. தமிழர் அலுவலகங்கள்.. அனைத்தும் இங்கு காணக்கூடியதாக இருந்துது.



இது முனியாண்டி விலாஸ். இங்கு கொத்து ரொட்டி, மட்டின் ரோல்ஸ் எல்லாம் சாப்பிட்டோம்.. நல்ல சுவை. பக்கத்திலே அண்ணாச்சி உணவகம், அங்கு மட்டின் கறி ரொட்டி வாங்கினோம். ஆனா உள்ளே ஒரு சிறிய துண்டு மட்டின் மட்டுமே இருந்துது, அதன் பின், அதை எட்டியும் பார்க்கவில்லை.


இதில் தூர தெரிகிறதே சிகப்பு நிறத்தில், அதுதான் சென்னையில் பேமஸாக இருக்கும் “நாளா அப்பக்கடை”. நாளா அப்பக்கடையினர்தானாம்,”அது இது எது” நிகழ்ச்சியில் சிரிச்சாப் போச்சு பகுதிக்காக பரிசு கொடுப்போர் எனக் கேள்விப்பட்டோம்.





இது சேரன் உணவகம். இது ஒரு தமிழ் Buffet. நன்றாகவே இருந்துது. இனிப் போனாலும் போக ஆசையாக இருக்கு. நிறைய ஐட்டங்கள் வைத்திருந்தனர்.


பக்க இணைப்பு:
நான் முன்பு போட்ட லூட்ஸ் இங்கே பாருங்கள் பதிவில் இருக்கும் சேர்ஜ் இடங்களுக்கு போனவாரம், படு மழை காரணமாக, வெள்ளம் ஏற்பட்டதாம், நாம் நடந்த இடங்கள், மெழுகுதிரி எடுத்த இடமெல்லாம் தண்ணியால் மூழ்கியிருக்கிறதைப் பார்க்க கவலையாக இருக்கு. இதிலே பாருங்கள் நான் சொன்ன அந்த மொட்டையான மரங்களெல்லாம் துளிர்த்து நிற்கின்றன.


குண்டு:) ஊசி இணைப்பு:
ஆவ்வ்வ் எங்களுக்கு வரும் புதன் கிழமை 26 ம் திகதி, Summer ஹொலிடே விடுகிறது..(கவனிக்கவும் அஞ்சுவுக்கு இல்லை.. ஆவ்வ்வ்வ் :)) ஹா..ஹா..ஹா...அவர்களுக்கு யூலையில்தான்:)).. எங்களுக்கு ஹொலிடேஏஏஏஏஏஏஏஏ.. அதனால நாங்க “இந்தாட்டிக்கா” போகிறோம்ம்.. நீண்டகாலமில்லை ஓகஸ்ட்டில் திரும்பிடுவோம்ம்.. ஆனா இம்முறை அங்கிருந்தும் புளொக்கில் பதிவு போடோணும் என ரெடி பண்ணி வச்சிருக்கிறேன்.

அத்தோடு எல்லா புளொக்கும் வருவேன் எனவும் மனதில் கங்கணம் கட்டியிருக்கிறேன்ன்ன்:)) எந்தளவு தூரம் சாத்தியமாகுமோ ஆண்டவனுக்கே வெளிச்சம்:).. எதுக்கும் உங்க உங்க குல தெய்வங்களுக்கு நேர்த்தி வையுங்கோ:)..(நல்ல நல்ல நேர்த்தியா வச்சு.. நீங்களே நிறைவேத்திடுங்கோ எனவும் வேண்டப்படுகிறீர்கள்:) பூஸோ கொக்கோ?:) நாங்க இதில எல்லாம் வலு ஷார்ப்பாக்கும்:)).
==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==
ஒரு வெளவால் வீட்டுக்கு, இன்னொரு வெளவால் வந்தால், 
அதுவும் தொங்கிக் கொண்டுதானிருக்கும்..
இந்த அரிய தத்துவத்தை, உங்கள் எல்லோரின் நலனுக்காகவும் சொன்னவர்:)).. 
வேறு ஆருமல்ல:) புலாலியூர்ப் பூஸானந்தாவேதான்ன்:)).
==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==

Wednesday 12 June 2013

குடும்பம் ஒரு கதம்பம்.. பல வண்ணம்:)

பல எண்ணம்:)...

என்ன இது தலைப்பில் என்னவோ சொல்றா, ஆனா படத்தில என்னவோ தெரியுதே எண்டுதானே குழம்புறீங்க?:) அதுதான் இல்ல:))... ஒரு அழகிய கதை:)) காதல் கதை:).. குடும்பக் கதை:)) சொல்லப்போறேன்ன் வாங்கோ... என்னோடு சேர்ந்து நடவுங்கோ.. கூட்டிப்போறேன்ன்ன்:))... பயப்பூடாதீங்க.. ஒண்ணும் பண்ணமாட்டேன்ன்....தெகிரியமா வாங்கோ என் பின்னே:)..


இது என்ன தெரியுமோ?:) இது தான் பச்சை.. பச்சை.. ஹையோ இல்ல.. ப எண்டாலே வார்த்தை எல்லாம் தடுமாறுதே சாமீஈஈஈஈ:))).. பச்சைப் பசேலென வளர்ந்திருக்கும் மரங்கள் இதனூடேதான், அதிராவின் நடைப்பயிற்சி ஆரம்பமாகும்... இப்பூடியே நடந்து போனால்ல்ல்:))

இப்பூடி ஆத்தங்கரையூடாக போகும் அப்பாதை


போய் ஆத்தங்கரையோடு இருக்கும் அழகிய பென்னாம்பெரிய புல் வெளியில் கொண்டுபோய் விடும். இதில் பாருங்கள்.. அந்த ரோசாப்பழம் அழகாக இங்கும் பூத்திருக்கிறா. அவவைப் பார்க்க ஆசையிருப்பின் இங்கே வாங்கோ...



அப்பூடியே நடந்து வந்தால் இங்கு எண்டர் ஆவோம். இது ஆத்தங்கரையோரமாக இருக்கும் புல்வெளி. குட்டிக் குட்டி குழந்தைகள் பார்க்கும் அங்காங்கு இருக்கு. இது நடை பாதையும் சைக்கிளும் ஓட முடியும். நடப்பதற்கென்றே இப்படி புல் தரையைச் சுற்றிச் சுற்றிக் கட்டியிருக்கினம்.


நடக்கும் இடங்களில் இப்படி அங்காங்கு பூ மரங்களும், இருப்பதற்கு பெஞ்சுகளும் உண்டு.

இதுதான் அந்த ஆறு, பெயர்தான் ஆறு ஆனா சமுத்திரம்போலவேதான் இருக்கும். இது அக்காலத்து பாலம்போலும், இப்போ உடைந்திருக்கு.

இந்த பாதை வழியேதான் நான் நடப்பேன். அப்போது ஒரு சுவான் தம்பதியினர்.. கரையிலும், ஆறிலுமாக உலா வருவதையும், அங்கு நடப்போர் அவற்றுக்கு பிரெட், பிஸ்கெட் என கொண்டு வந்து கொடுப்பதையும் பல தடவை பார்ஹ்திருக்கிறேன், படமும் எடுத்திருந்தேன், ஆபத்துக்கு தேடினால் கிடைக்குதில்லை இப்போ:)) கர்ர்ர்ர்ர்:))..

வாரம் 4நாட்களாவது  பெரும்பாலும் இதனூடு நடப்பதுண்டு.. சமீபமாக ஒரு வாரத்துக்கு கிட்ட, முதலில் மழை, பின்பு கடும் வெயில் காரணமாக நடக்கவில்லை நான்.  நேற்று போனேன், இப்படி ஒரு போர்ட் போடப்பட்டிருந்தது அங்கு, கிட்டப் போய்ப் பார்த்தால்ல்ல்...

.

இங்கே பாருங்கள், ஆற்றில் கிடைக்கும் பாசி, அங்கிங்கு கிடக்கும் தும்பு, பேப்பர், சேலைத்துணி.. இப்படி எல்லாம் பொறுக்கி ஒரு பெரிய வட்ட மெத்தையாக கட்டி, அதிலே இவர் பேசாமல் படுத்திருக்கிறார். மக்கள் அருகிலே தண்ணியும், உணவும், இலைகளும் பிடுங்கி மெத்தையாக்கி அழகாக்கி விட்டிருக்கினம்.  அருகில் போனேன்ன்.. காலை மெதுவாக தூக்கி முதுகு சொறிந்தார், கீழே பார்த்தால் பெரிய ஒரு வெள்ளை முட்டை தெரிந்தது. படம் எடுத்தேன் அது அகப்படவில்லை.



இது ஆற்றில் படகில்/தோணியில் இறங்குவோரின் பாதை. தண்டவாளம்போல இருக்கும். இதில் காரிலே BOAT ஐக் கொண்டுவந்து இங்கு இறக்கி, தோணியைத் தள்ளிக்கொண்டு போய் ஆற்றில் இறக்கி, வெயில் காலத்தில் பொழுது போக்கும் இடம். அதில் வந்து இவர் மேடை போட்டு முட்டை இட்டிருக்கிறார். இதில் கண்கொள்ளாக் காட்சி என்னவெனில்...



....அவரின் பார்ட்னர்தான்:). மனைவிக்கு அருகாமையிலேயே, தான் நடந்து நடந்து தும்புகள் சேகரித்தார். அவவுக்கு மெத்தையை இன்னும் சொஃப்ட்டாக்க:). இந்த அழகிய காட்சியைப் பார்த்ததும் எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது... மனிதர்களை விட, மேலே போய்விட்டதோ இந்தத் தம்பதிகள் என...

 இன்று போனேன்ன்... இதோ பாருங்கள் அடுத்த கண்கொள்ளாக் காட்சியை. மனைவிக்கு அருகாமையில், தான் படுத்திருந்து கொண்டு பாதுகாக்கிறார். என்ன சொல்ல இதை???.

 படத்தில் பார்க்க தெரியவில்லை. அவ இருக்கும் மெத்தை கிட்டத்தட்ட அரை அடி உயரமானது. அவருக்கு மெத்தை இல்லை, சும்மா வெறும் தரையில் படுத்திருக்கிறார்.  அவ, அந்த முட்டையை விட்டு எழுந்திருக்கவே இல்லை. பொதுமக்கள்தான் உணவு கொடுக்கின்றனர் போலும்.  எப்போ குஞ்சு வருமோ தெரியாது. வந்ததும் என் கண்ணில் பட்டால் உடனே படம் எடுத்து வருகிறேன். சிலநேரம் குஞ்சு வந்தவுடன், ஆட்கள் எடுத்துப் போய் வளர்க்கும் இடமிருக்கு, அங்கு கொடுத்திடுவினமே தெரியாது பாதுகாப்புக்காக. எதுக்கும் பொறுத்திருப்போம்.

இதேபோல இன்னொரு சோடியின் (சோகக் கதைதான்) கதை படிக்க இங்கே வாங்கோ...

==============================================================
இது 2 நாட்களுக்கு முன்பு எங்கள் வீட்டடியால் போன உல்லாச கப்பல்.


நீங்க நம்ப மாட்டீங்க என:) எங்கட முற்றத்து ராணியையும்:)) சேர்த்துப் படமெடுத்தேன்:)) இப்போ நம்புவீங்களெல்லோ?:) இது அதிராவின் ஆறு:)தான் என:)).
ஊசி இணைப்பு:
முடிவு எண்ணண்ணா:)).. இயற்கையிலேயே அதிரா அழகுதான்:)) ஹையோ டங்கு ஸ்லிப்பாச்சே..:)) ஐ மீன் அதிரா இருக்குமிடம் அழகு என்றேன்ன்ன்:))).. அதாரது முறைக்கிறதூஊஊஊஊஊஊஊ:)). நம்மள நாமளே புகழ்ந்தால் தான் உண்டு ஆக்கும்..க்கும்..க்கும்..:).


=======================================================
”என்னதான் மாபெரும் போர் வரப்போவதை எதிர்வு கூறினாலும், இரு தரப்பும் அமைதியாக இருப்பின் அது பொய்த்து விடும்”

இங்கனம்: ”புலாலியூர்ப் பூஸானந்தா”
=======================================================

Saturday 8 June 2013

குகை வழியே, ஒரு நீண்ட பயணம்:)

Dordogne's ancient cave art

ஃபிரான்ஸ்சிலே லூட்ஸ் போய் அங்கு மேரிமாதா கோயிலைத் தரிசித்தோம் தானே?... அப்போ அங்கிருந்த ஹொட்டேலில் சொன்னார்கள்.. இங்கு கிட்ட ஒரு மலை இருக்கு, அதைக் குடைந்து உள்ளாலே பயணிப்பது போல செய்யப்பட்டிருக்கு, அழகிய இடம் போய்ப் பார்க்க தவறிடாதீங்க என.

நாங்களும் Van ல் போனமையால் ஈசியாகிவிட்டது. ரைவரிடம் சொன்னோம், அதனாலென்ன கண்டுபிடிப்போம் என்றார். கண்டு பிடித்து போனால் சூப்பராக இருந்துது.

இங்கு தெரிகிறதே.. இதுதான் அந்த மலை... இது முழுமையாக கமெராவில் அகப்படவில்லை. இதன் ஒரு தொங்கலில் ஆரம்பித்து.. உள்ளாலே மறு தொங்கலில் வெளியே வந்தோம்ம்...


ஃபிரான்சில் அதிகமான இடங்களில் நான் பார்த்த ஒருவகை மரம் இது... இது அங்கேயும் நின்றுது, இதுதான் கார் பார்க்கிங் ஏரியா. இங்கு காரைப் பார்க் பண்ணியதும், பின்பு அவர்களது பஸ்ஸில் ஏற்றி.. மலை அடிவாரத்துக்கு கொண்டு போவினம், அங்கு எம்மோடு ஒரு ஹைட்டும் வருவார், விளங்கப்படுத்த, பாதை சொல்ல...

இவர்தான் அவர்:). இவர் அடிக்கடி பாவித்த ஒரு வசனம்.. “I am from Morocco, you are from Shri Lanka".. என்பது:). நல்ல நகைச்சுவையாளர், அழகாக சொல்லி விளங்கப் படுத்தினார். நாம் கமெராவைத் தூக்கினாலே ஓடிவந்து வாங்கி, நில்லுங்கோ நான் எடுக்கிறேன் என்றார்:).
படங்களில் “அதிக ஆர்வம்” இருப்பின் மட்டும்:).. கேர்ஷரை வைத்து கிளிக் பண்ணி பெரிதாக்கிப் பாருங்கோ:).. இவை அனைத்தும் மலையின் உள்ளே நடந்த போது எடுத்தவை..

















உள்பகுதியில் இன்னும் மலைக் கற்கள் அழகாக வளர்ந்து கொண்டிருக்கின்றன... அவை வளரும் விதம்.. ஒவ்வொரு உருவங்களாகத் தெரிந்தது... இங்கு படத்தில் பார்ப்பதை விட, நேரில் பார்த்தபோது சொல்லமுடியாத அழகாக இருந்துது...




இடையிடயே தண்ணி மேலிந்து வந்து குளம்போல சில இடங்களில் தேங்கி இருந்தது.
                        



போனதும் பின்பு ஒரே தண்ணி, அந்த இடத்தைக் கடக்க அழகான படகு ரெடியாக இருந்துது, அப்படகில் ஏறி கொஞ்சதூரம் கடந்தோம்.. படகின் முன் பகுதியில் பொருத்தப் பட்டிருந்ததுதான்.. இந்த மிருகத்தின் தலை.


தூரத்திலே படகு நிற்பது தெரியுதெல்லோ... பின்பு படகால் இறங்கி மீண்டும் சிறிது தூரப் பயணம்...


இங்கு மொத்தப் பயணமும் முடிந்து விட்டது, பாருங்கள் உள்ளே எவ்ளோ அழகாக கற்கள் வளர்ந்திருக்கு.... ஆனா இப்பவும் மலையின் உள்ளேதான் நிற்கிறோம்ம்.. 

பின்னர் இந்த ரெயினில் ஏறினோம்.... அவர் அழகாக அக்குகையினூடு எம்மை வெளியே கொண்டு வந்து விட்டார்..




கோடை ஆரம்பித்ததும் எங்கள் வீட்டின் முன்புறத்தை, அழகாக்குகிறார் இந்த அழகு ராணி..

நம் வீட்டின் பின் முற்றத்தை அழகாக்குகிறார்ர்..  இந்த அழகுக் குயின்:)..
=======================================================
குட்டி இணைப்பு:
போன கிழமை அப்பாவின் பிறந்ததினம். அதுக்காக கொஞ்சம் தூர இருக்கும், மோலில் இருக்கும் ரெஸ்டோரண்ட் ஒன்றுக்குப் போயிருந்தோம்.. அங்கு 4டி தியேட்டர்போல ஒரு விளையாட்டு இருக்கு தெரிஞ்சிருக்கும் உங்களுக்கு. நான் முன்பும் ஏறியிருக்கிறேன் அது பெரிதாக பயமாக இருக்கவில்லை. இம்முறை உள்ளே போய் கண்ணாடி எல்லாம் போட்டு, பெல்ட்டும் கட்டியாச்சு:)... அது அசுர வேகத்தில கிளம்பிச்சுதா.... ஹையோ.. கண்ணை இறுக்கி மூடிட்டேன்ன்.. ஆஃப்ரிக்கா காட்டுக்குள் எல்லாம் ஓடித் தள்ளிச்சுது.. அங்கிருக்கும் மிருகம் எல்லாம் நம்மேல் பாய்வதுபோல .. முருகா!!! நான் அவயளை..கையால அடிச்சு விழுத்தினதும்:).. கூக்குரல் போட்டதும்:))... முடிஞ்சால் நீங்களும் ஒருக்கால் போய் வாங்கோ.. கதிரையில தான் இருப்பீங்க.. ஆனா உள்ளே போவதுபோல எபெக்ட் இருக்கும்.. உண்மைபோலவே இருக்கும்...

===================================================
என்னால முடியுது, எங்கட சுவீட் 16ல இருக்கும்:)அம்மாவாலயும் முடியுது:) உங்களால முடியுமோ?:)
ZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZ
ஊசி இணைப்பு:
சின்னச் சின்ன விஷயங்களிலெல்லாம் எமக்கு சந்தோஷம் கிடைக்குது, ஆனா சந்தோஷம் சின்ன விஷயம் இல்லை
இந்த அரிய தத்துவத்தை வளங்கியிருப்பவர்: புலாலியூர் பூஸானந்தா அவர்கள்:)
ZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZ

எங்கட லக்ஸ்மி அக்காவை நீண்ட காலமாகக் காணவில்லை, ஆருக்காவது அவ பற்றி தெரிந்தால் சொல்லவும் பிளீஸ்ஸ்.. கவலையாக இருக்கு, அவ அடிக்கடி பதிவு போடுவா, இப்போ சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போயிட்டா, ஏதும் சுகயீனமோ தெரியவில்லையே...
=============================================================