நல்வரவு_()_


Saturday, 8 June 2013

குகை வழியே, ஒரு நீண்ட பயணம்:)

Dordogne's ancient cave art

ஃபிரான்ஸ்சிலே லூட்ஸ் போய் அங்கு மேரிமாதா கோயிலைத் தரிசித்தோம் தானே?... அப்போ அங்கிருந்த ஹொட்டேலில் சொன்னார்கள்.. இங்கு கிட்ட ஒரு மலை இருக்கு, அதைக் குடைந்து உள்ளாலே பயணிப்பது போல செய்யப்பட்டிருக்கு, அழகிய இடம் போய்ப் பார்க்க தவறிடாதீங்க என.

நாங்களும் Van ல் போனமையால் ஈசியாகிவிட்டது. ரைவரிடம் சொன்னோம், அதனாலென்ன கண்டுபிடிப்போம் என்றார். கண்டு பிடித்து போனால் சூப்பராக இருந்துது.

இங்கு தெரிகிறதே.. இதுதான் அந்த மலை... இது முழுமையாக கமெராவில் அகப்படவில்லை. இதன் ஒரு தொங்கலில் ஆரம்பித்து.. உள்ளாலே மறு தொங்கலில் வெளியே வந்தோம்ம்...


ஃபிரான்சில் அதிகமான இடங்களில் நான் பார்த்த ஒருவகை மரம் இது... இது அங்கேயும் நின்றுது, இதுதான் கார் பார்க்கிங் ஏரியா. இங்கு காரைப் பார்க் பண்ணியதும், பின்பு அவர்களது பஸ்ஸில் ஏற்றி.. மலை அடிவாரத்துக்கு கொண்டு போவினம், அங்கு எம்மோடு ஒரு ஹைட்டும் வருவார், விளங்கப்படுத்த, பாதை சொல்ல...

இவர்தான் அவர்:). இவர் அடிக்கடி பாவித்த ஒரு வசனம்.. “I am from Morocco, you are from Shri Lanka".. என்பது:). நல்ல நகைச்சுவையாளர், அழகாக சொல்லி விளங்கப் படுத்தினார். நாம் கமெராவைத் தூக்கினாலே ஓடிவந்து வாங்கி, நில்லுங்கோ நான் எடுக்கிறேன் என்றார்:).
படங்களில் “அதிக ஆர்வம்” இருப்பின் மட்டும்:).. கேர்ஷரை வைத்து கிளிக் பண்ணி பெரிதாக்கிப் பாருங்கோ:).. இவை அனைத்தும் மலையின் உள்ளே நடந்த போது எடுத்தவை..

















உள்பகுதியில் இன்னும் மலைக் கற்கள் அழகாக வளர்ந்து கொண்டிருக்கின்றன... அவை வளரும் விதம்.. ஒவ்வொரு உருவங்களாகத் தெரிந்தது... இங்கு படத்தில் பார்ப்பதை விட, நேரில் பார்த்தபோது சொல்லமுடியாத அழகாக இருந்துது...




இடையிடயே தண்ணி மேலிந்து வந்து குளம்போல சில இடங்களில் தேங்கி இருந்தது.
                        



போனதும் பின்பு ஒரே தண்ணி, அந்த இடத்தைக் கடக்க அழகான படகு ரெடியாக இருந்துது, அப்படகில் ஏறி கொஞ்சதூரம் கடந்தோம்.. படகின் முன் பகுதியில் பொருத்தப் பட்டிருந்ததுதான்.. இந்த மிருகத்தின் தலை.


தூரத்திலே படகு நிற்பது தெரியுதெல்லோ... பின்பு படகால் இறங்கி மீண்டும் சிறிது தூரப் பயணம்...


இங்கு மொத்தப் பயணமும் முடிந்து விட்டது, பாருங்கள் உள்ளே எவ்ளோ அழகாக கற்கள் வளர்ந்திருக்கு.... ஆனா இப்பவும் மலையின் உள்ளேதான் நிற்கிறோம்ம்.. 

பின்னர் இந்த ரெயினில் ஏறினோம்.... அவர் அழகாக அக்குகையினூடு எம்மை வெளியே கொண்டு வந்து விட்டார்..




கோடை ஆரம்பித்ததும் எங்கள் வீட்டின் முன்புறத்தை, அழகாக்குகிறார் இந்த அழகு ராணி..

நம் வீட்டின் பின் முற்றத்தை அழகாக்குகிறார்ர்..  இந்த அழகுக் குயின்:)..
=======================================================
குட்டி இணைப்பு:
போன கிழமை அப்பாவின் பிறந்ததினம். அதுக்காக கொஞ்சம் தூர இருக்கும், மோலில் இருக்கும் ரெஸ்டோரண்ட் ஒன்றுக்குப் போயிருந்தோம்.. அங்கு 4டி தியேட்டர்போல ஒரு விளையாட்டு இருக்கு தெரிஞ்சிருக்கும் உங்களுக்கு. நான் முன்பும் ஏறியிருக்கிறேன் அது பெரிதாக பயமாக இருக்கவில்லை. இம்முறை உள்ளே போய் கண்ணாடி எல்லாம் போட்டு, பெல்ட்டும் கட்டியாச்சு:)... அது அசுர வேகத்தில கிளம்பிச்சுதா.... ஹையோ.. கண்ணை இறுக்கி மூடிட்டேன்ன்.. ஆஃப்ரிக்கா காட்டுக்குள் எல்லாம் ஓடித் தள்ளிச்சுது.. அங்கிருக்கும் மிருகம் எல்லாம் நம்மேல் பாய்வதுபோல .. முருகா!!! நான் அவயளை..கையால அடிச்சு விழுத்தினதும்:).. கூக்குரல் போட்டதும்:))... முடிஞ்சால் நீங்களும் ஒருக்கால் போய் வாங்கோ.. கதிரையில தான் இருப்பீங்க.. ஆனா உள்ளே போவதுபோல எபெக்ட் இருக்கும்.. உண்மைபோலவே இருக்கும்...

===================================================
என்னால முடியுது, எங்கட சுவீட் 16ல இருக்கும்:)அம்மாவாலயும் முடியுது:) உங்களால முடியுமோ?:)
ZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZ
ஊசி இணைப்பு:
சின்னச் சின்ன விஷயங்களிலெல்லாம் எமக்கு சந்தோஷம் கிடைக்குது, ஆனா சந்தோஷம் சின்ன விஷயம் இல்லை
இந்த அரிய தத்துவத்தை வளங்கியிருப்பவர்: புலாலியூர் பூஸானந்தா அவர்கள்:)
ZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZ

எங்கட லக்ஸ்மி அக்காவை நீண்ட காலமாகக் காணவில்லை, ஆருக்காவது அவ பற்றி தெரிந்தால் சொல்லவும் பிளீஸ்ஸ்.. கவலையாக இருக்கு, அவ அடிக்கடி பதிவு போடுவா, இப்போ சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போயிட்டா, ஏதும் சுகயீனமோ தெரியவில்லையே...
=============================================================

74 comments :

  1. அதிராவுக்கு ஆஜர். மீண்டும் வருவேன்.

    ReplyDelete
  2. வித்தியாசமான கார் பார்க்கிங் ஏரியா... நாங்களும் உள்ளே புகுந்து வந்து விட்டோம்...!

    ReplyDelete
  3. மனம் கவர்ந்த அழகு ராணி... அதை விட தத்துவம் செம... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  4. திருச்சி கோர்ட்டில் 5ம் தேதி தொடரப்பட்ட வழக்கு எண் 5க்கு ஆஜராகமல், 7ம் தேதி தொடரப்பட்ட வழக்கு எண் 6க்கு மட்டும் அதிரா ஆஜராகி, அதுவும் மின்னல் வேகத்தில் மறைந்துள்ளது, கோர்ட்டாரால், கோர்ட் அவமதிப்பாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்பதை, பிரித்தானியா இளவரசி அதிரா அறியவும் ;)

    ReplyDelete
  5. //குகை வழியே, ஒரு நீண்ட பயணம்:)//

    குகைக்குள் போய் வந்தீர்களா??????

    ஒரே இருட்டா இருக்குமே!

    //இதன் ஒரு தொங்கலில் ஆரம்பித்து.. உள்ளாலே மறு தொங்கலில் வெளியே வந்தோம்ம்...//

    எங்கு போனாலும் தொங்கல் தானா? ;)

    ReplyDelete
  6. //இதுதான் கார் பார்க்கிங் ஏரியா.//

    மொட்டையாக இருப்பினும் அழகாக பெரிசாகக் காத்தாட உள்ளது. நான் மரத்தைச் சொன்னேனாக்கும்.

    >>>>>

    ReplyDelete
  7. //அங்கு எம்மோடு ஒரு ஹைட்டும் வருவார், விளங்கப்படுத்த, பாதை சொல்ல...//

    அந்தத்தொப்பித்தலையரா. ஜிம்மின்னு இருக்கிறார்.

    நாங்க இங்கு கைடு [GUIDE] என்று சொல்லுவோம்.

    //ரைவரிடம் சொன்னோம், //

    டிரைவரோ [DRIVER] ?

    எப்படி டக்குன்னு கற்பூரமாகப் புரிஞ்சுக்கிட்டேன் பார்த்தீங்களா?

    ReplyDelete
  8. கார்பார்க்கிங் மரங்கள் அழகாக இருக்கு. இங்கும் ஓரு சிட்டியில் தண்ணீர் விழுந்து(மலைக்குள்) கல்லாக வளர்ந்து இருக்கு.அவைகளைப்பார்த்தால் அசல் ஒவ்வொரு உருவங்களாக இருக்கும்.2வாரத்துக்குமுன் போக சந்தர்ப்பம் கிடைத்து போனோம்.ஆனா படங்கள் எடுக்கமுடியாது.
    நீங்க சொன்னது போல்தான் இடையில் குளம்மாதிரி இருக்கு.
    அழகாக இருக்கு உங்க குயினும்,ராணியும்.இப்ப வெயில் வந்திட்டுது போல. இங்கு நல்ல வெயில்.
    உண்மையிலே பாடல்கள் எல்லாமே நினைத்தாலேஏஏஏ இனிக்கும்.புலிக்கு பிறந்தது பூனையாகாதே. தத்துவம் அருமை. நல்ல சுற்றுலா.
    இம்முறை கொஞ்சம் முன்னமே வந்தாச்சு.

    ReplyDelete
  9. ஜயா டி.வி.யின் நினைத்தாலே இனிக்கும் வீடியோ காட்சிகள், இனிப்பாக இருந்தன.

    அதன் கீழே கண்ணைச்சுழட்டுவது யாரு? அதிராவோ! ;)

    பூஸாரைக்கையில் தூக்கியிருக்கும் குழந்தைப்படம் நல்லா இருக்குதூஊஊ.

    >>>>>>

    ReplyDelete
  10. //உள்பகுதியில் இன்னும் மலைக் கற்கள் அழகாக வளர்ந்து கொண்டிருக்கின்றன... அவை வளரும் விதம்.. ஒவ்வொரு உருவங்களாகத் தெரிந்தது...//

    கல்லைக்கண்டால் நாடைக்காணும், நாயைக்கண்டால் கல்லைக்காணும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.

    அதாவது கல்லில் நாய் உருவம் தெரியும் போது அது கல் என்பது தெரியாது.

    கல் என்று பாவித்துப்பார்த்தால் நாய் உருவம் தெரியாது.

    //இங்கு படத்தில் பார்ப்பதை விட, நேரில் பார்த்தபோது சொல்லமுடியாத அழகாக இருந்துது...//

    சொல்லாட்டிப்போங்க. படங்களிலேயே அழகாகத்தான் உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  11. //பின்னர் இந்த ரெயினில் ஏறினோம்.... அவர் அழகாக அக்குகையினூடு எம்மை வெளியே கொண்டு வந்து விட்டார்..//

    எங்களுக்கெல்லாம் ரெயின் [RAIN] என்றால் மழை. உங்களுக்கு TRAIN ஆக இருக்கும்போலத் தெரிகிறது.

    எப்படியோ நல்லபடியாக குகையிலிருந்து வெளியே வந்தீங்களே !

    இல்லாவிட்டால் இவ்வளவு அழகான பதிவினைப் பார்க்கவோ படிக்கவோ முடியாமல் ஏங்கியிருப்போமாக்கும்.

    >>>>>

    ReplyDelete
  12. அழகு ராணியும் அழகுக்குயினும் சூப்பரோ சூப்பராக உள்ளனர்.

    வீட்டின் முன்புறத்துக்கு நேரில் வந்து அழகு ராணியையும் அழகுக்குயினையும் நேரில் பார்த்து மகிழ மிகவும் ஆசையாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  13. //என்னால முடியுது, எங்கட சுவீட் 16ல இருக்கும்:)அம்மாவாலயும் முடியுது:) உங்களால முடியுமோ?:)//

    உங்களாலேயே முடியாது என்றால் ஒரு பயலாலும் முடியாது.

    >>>>>>

    ReplyDelete
  14. நாங்களும் Van ல் போனமையால் ஈசியாகிவிட்டது. /////

    ////இது அங்கேயும் நின்றுது, இதுதான் கார் பார்க்கிங் ஏரியா. இங்கு காரைப் பார்க் பண்ணியதும், பின்பு அவர்களது பஸ்ஸில் ஏற்றி.. //////

    மேடம் ஒரு டவுட்டுங்கோ -

    நீங்கள் குகைக்குப் போனது காரிலா? Van லா? :) :)

    ReplyDelete
  15. //ஊசி இணைப்பு:
    சின்னச் சின்ன விஷயங்களிலெல்லாம் எமக்கு சந்தோஷம் கிடைக்குது, ஆனா சந்தோஷம் சின்ன விஷயம் இல்லை.

    இந்த அரிய தத்துவத்தை வளங்கியிருப்பவர்: புலாலியூர் பூஸானந்தா அவர்கள்:)//

    அரிய தத்துவத்தை ஊசி இணைப்பில் அள்ளித்தந்த பூஸானந்தா வாழ்க!

    >>>>>>

    ReplyDelete
  16. //எங்கட லக்ஸ்மி அக்காவை நீண்ட காலமாகக் காணவில்லை, ஆருக்காவது அவ பற்றி தெரிந்தால் சொல்லவும் பிளீஸ்ஸ்.. கவலையாக இருக்கு, அவ அடிக்கடி பதிவு போடுவா, இப்போ சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போயிட்டா, ஏதும் சுகயீனமோ தெரியவில்லையே...//

    குறையொன்றும் இல்லை + தமிழ் விரும்பி லட்சுமி அம்மாவா?

    ஆமாம். அவங்களைக் கொஞ்ச நாளாக் காணோம். கவலையாகத்தான் உள்ளது. நான் தொடர்பு கொண்டு பேசிவிட்டுச் சொல்கிறேன்.

    இன்றைய தங்களின் பதிவு அருமை.
    தங்களுடன் சேர்ந்து சுற்றுலா போய் வந்தது போல ஓர் மகிழ்ச்சியும், எழுச்சியும் ஏற்பட்டது.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    Bye for Now.

    ReplyDelete
  17. [co="blue green"] வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ... இம்முறை முதலாவதா வந்த உங்களுக்கு, இலவசமா ஒரு ரிக்கெட்.. குகையில் போக அல்ல.. அந்த குட்டீஷ் பறக்கும்.. வானத்தைத் தொடும் கேபிளில் ஏறி வானம் போய்வர:))..

    ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி கோபு அண்ணன் உடன் வருகைக்கு. [/co]

    ReplyDelete
  18. ஏலேய் அக்காச்சி வணக்கமில்லே..
    என்னை நினைவிருக்கோ?
    அட நம்ம புரோபைல் போட்டோவைப் பார்த்தாச்சும் தம்பியை அடையாளம் காணுவீங்க எல்லே..
    எப்படிச் சுகம்?

    ReplyDelete
  19. அதிரா... மிகமிக அருமையாக இருக்குதே அத்தனையும்.

    குகைப்படங்கள் சூப்பர். அத்தனை படங்களும் திரும்பத்திரும்ப பார்க்கவைக்கின்றன.
    ஆனால் அதற்குள் போவது போல உணரும்போது எனக்கு நெஞ்சில் லேசா வலிக்கிறது போல இருந்திச்சு...

    உட்பக்கம் வெளிச்சத்திற்கு மின்சார இணைப்போ செய்திருக்கினம். ஆனாலும் இருட்டுப்போலதான் இருக்கே...
    என்றாலும் அருமையாக இருக்கு. ஹும் இதெல்லாம் பார்க்கிறதுக்கு கொடுத்துவைச்சனீங்கள்தான்...:).

    ReplyDelete
  20. அப்பாவுக்கு சென்ற வாரம் பிறந்ததினமோ?... பிந்தினாலும் எங்களின் அன்பான வாழ்த்தையும் சொல்லிவிடுங்கோ மறக்காமல்...

    4d திரை அனுபவமும் திறில் திகில்தான்...:).

    பூஸானந்தா மொழி சூப்பர். ஆனா... சந்தோஷம் சின்ன விஷயமில்லை எண்டீங்கள் பாருங்கோ அங்கதான் பூஸானந்தா மகிமையே துலங்குது...:).

    அழகிய அருமையான அனுபவப் பதிவு அதிரா. மிக்கநன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. அக்காச்சி..ஏமாத்திப்புட்டியே..
    இது அநியாயம்! அக்கிரமம்!
    இப்பவே நான் ஈபிள் டவருக்கு ப்ளைட் புடிச்சு போயி...
    அங்கிருந்து குதிப்பேன்..

    கனம் மாட்டிஜோஜியின் படம் எங்கே?
    இந்த ப்ளாக்கில் அட்லீஸ்ட்
    ஒரு மூலையில் திருஷ்டி கழிக்க என்றாலும் மாட்டியிருக்கலாம் அல்லவா?

    பிரான்ஸ் சுற்றுலாவில் மாத்தியோசி மணியின் போட்டோ எடுத்தீங்க தானே..
    இப்பவே இங்கே ஷேர் பண்ணுங்க

    ReplyDelete
  22. படங்கள் அனைத்தும் அருமை..மீ ரொம்ப பிஸி..
    அப்புறமா வாரேன்

    ReplyDelete
  23. படங்களும் அனுபவமும் சூப்பர் அதிரா தந்தைக்கு காலம் தாழ்த்திய வாழ்த்துக்கள்§

    ReplyDelete
  24. படங்கள் அனைத்தும் அருமை..மீ ரொம்ப பிஸி..
    அப்புறமா வாரேன்.// ஆஹா பாஸ் நலமா!ம்ம் வாங்க கும்மி அடிப்போம் மீண்டும்!ஹீ

    ReplyDelete
  25. 25 வது பின்னூட்டம் தனிமரம் நீண்ட காலத்தின் பின்!ஹீநானும் பிசி! ஒரு பால்க்கோப்பி கிடைக்குமா அதிரா குயீன் ராணி! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  26. கோடை ஆரம்பித்ததும் எங்கள் வீட்டின் முன்புறத்தை, அழகாக்குகிறார் இந்த அழகு ராணி..

    நம் வீட்டின் பின் முற்றத்தை அழகாக்குகிறார்ர்.. இந்த அழகுக் குயின்:)..

    இரண்டு பேருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துவிடுங்கள் அதிரா..
    ரொம்ப அழகா இருக்கிறார்கள்..!

    ReplyDelete
  27. lakxmiஅம்மா நல்ல உடல் ந்லத்துடன் இருக்கிறார்.வெகு விரைவில் பதிவுலகிற்கு வருவார் அதிரா.

    ReplyDelete
  28. திண்டுக்கல் தனபாலன் said...
    வித்தியாசமான கார் பார்க்கிங் ஏரியா... நாங்களும் உள்ளே புகுந்து வந்து விட்டோம்...!

    [co="purple"] வாங்கோ வாங்கோ... உண்மைதான் அழகான பார்க்கிங். நான் நினைக்கிறேன், இப்போ போனால்ல் பூத்துக் குலுங்கும் என.. கோடையிலும் போய்ப் பார்க்கோணும்.

    அங்கு இன்னொருவகையான மரமும் நிண்டுது, அதன் இலைகள் மாவிலைபோல ஆனா மாவிலையின் பாதியளவுதான் இருக்கும். வான் ரைவர் சொன்னார், இந்த இலை சும்மா சாப்பிடலாம் என, நான் ஓடினேன் பிடுங்க:)... கணவர் என்னைப் ஒரு முறைப்புடன் நோக்கினார்ர்:)).. பிரேக் போட்டுவிட்டேன்ன்:))... எனக்கென்னமோ.. இப்படி மரங்களின் ஆய்ந்து சாப்பிடுவதில் ஒரு தனி இன்பம். [/co]

    ReplyDelete
  29. திண்டுக்கல் தனபாலன் said...
    மனம் கவர்ந்த அழகு ராணி... அதை விட தத்துவம் செம... வாழ்த்துக்கள்... நன்றி...

    [co="purple"]தத்துவம்.... அது பூஸ் ரேடியோவில பொறுக்கி எடுத்தேன்ன்:))... மியாவும் நன்றி.. உடன் வருகைக்கும் பதிலுக்கும். [/co]

    ReplyDelete
  30. வை.கோபாலகிருஷ்ணன் said...
    திருச்சி கோர்ட்டில் 5ம் தேதி தொடரப்பட்ட வழக்கு எண் 5க்கு ஆஜராகமல், 7ம் தேதி தொடரப்பட்ட வழக்கு எண் 6க்கு மட்டும் அதிரா ஆஜராகி, அதுவும் மின்னல் வேகத்தில் மறைந்துள்ளது, கோர்ட்டாரால், கோர்ட் அவமதிப்பாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்பதை, பிரித்தானியா இளவரசி அதிரா அறியவும் ;)

    [co="purple"] ஹா..ஹா..ஹா... தெரியாததுபோல.. காக்கா போனாலும்:) கோபு அண்ணன் விடமாட்டார்ர்போல.. பலமா சிரிச்சே சமாளிச்சிட வேண்டியதுதான்ன்ன்ன்ன்:))).

    மின்னல் வேகத்தில மறைந்தது உண்மைதான்.. நான் ஒத்துக் கொள்கிறேன்ன் கனம் நீதிபதி அவர்களே... ஆனா பாருங்கோ. .. நீதிபதி அவர்களே.. அதுக்கு முழுக்காரணமும் கோபு அண்ணன் தான்ன்..:).

    அதாவது எனக்கு எங்கு போனாலும் நகைச்சுவையாக, ஏதும் சொல்லி கூத்துக்குள் கோமாளியாகி பின்னூட்டம் போடுவதுதான் அதிகமா எழுத வரும்.

    ஆனா சீரியசான பதிவுகள் போடுமிடத்து அதுக்கு மரியாதை கொடுப்பது என் “பறம்பறை”:) ப் பயக்கவயக்கம்:))..

    அப்போ கோபு அண்ணன் தொடர்ச்சியாக பெரியவர் பற்றி பதிவுபோடுமிடத்து... நான் மிகவும் அடக்கொடுக்கமான:), நற்பண்புள்ள:), பிள்ளையாக மிகவும் மரியாதையாக:) ஒரு பின்னூட்டம் போட்டேன்ன்... அது தப்பா நீதிபதி அவர்களே...?:)) தப்பெனில் இப்பவே தண்டனையாக...

    1]குழல்புட்டும்..கத்தரிப் பொரியலும்..
    2]இடியப்பமும் பொரித்திடித்த சம்பலும்...
    3]இட்லியும் தேங்காய் சட்னியும்..
    3] முனியாண்டிவிலாஸ் கொத்துரொட்டி
    4]உள்ளே என்ன இருப்பினும் ஓகே.. ரோல்ஸ்ஸ்(முனியாண்டி விலாசில வாங்கித்தரோணும்:)..

    இந்த 4 இல எதையாவது சாப்பிடச்சொல்லி என் தண்டனையை நிறைவேத்திடுங்கோ:)) பிளீஸ்ஸ்:))..


    [/co]

    ReplyDelete
  31. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //அங்கு எம்மோடு ஒரு ஹைட்டும் வருவார், விளங்கப்படுத்த, பாதை சொல்ல...//

    அந்தத்தொப்பித்தலையரா. ஜிம்மின்னு இருக்கிறார்.

    நாங்க இங்கு கைடு [GUIDE] என்று சொல்லுவோம்.

    //ரைவரிடம் சொன்னோம், //

    டிரைவரோ [DRIVER] ?

    ///
    [co="purple"] ஆஹா... கரீட்டா எல்லாத்துக்கும் விளக்கம் சொல்றீங்களே...:)).. எனக்கு ஆங்கில தமிழாக்கம் எழுதுவது தெரியாது, நான் எப்படிக் கதைப்போமோ அப்படியே எழுதிடுவேன்ன்.. அதாவது...
    ~T~ இல ஆரம்பிப்பதை “ரீ” எனும் எழுத்திலதானே உச்சரிப்போம்.. அப்படியே எழுதுவேன்ன்..

    அதேபோல “D” ல ஆரம்பிப்பதை டி..ட... எனும் எழுத்தில் எழுதுவேன்ன்... Driver டி ல ஆரம்பித்தாலும்.. சொல்லும்போது டி க்கு அழுத்தம் கொடுக்கமாட்டோமெல்லோ? அதனால ரைவர்ர்/ றைவர்... இப்பூடியே எழுதிடுவேன்ன்ன்:).

    [/co]

    எப்படி டக்குன்னு கற்பூரமாகப் புரிஞ்சுக்கிட்டேன் பார்த்தீங்களா?//
    [co="purple"] நோஓ கோபு அண்ணன்... இங்கதான் நீங்க தப்பு பண்ணுறீங்க..:)).. இந்தக் காலத்தில கற்பூரம் மாதிரி இருக்கப்பூடா:).. புஸுக்கென லைட்டரைப் பத்தவச்சு:) ஒரு நொடியில ஆவியாக்கிடுவினம்:)).. அதனால கரிமாதிரி இருக்கப் பழகோணும்:))..

    மீ பிறந்ததிலிருந்தே இப்பூடி மாத்தி யோசிக்கிறனானாம்ம் ... அம்மம்மா சொல்றவ:). [/co]

    ReplyDelete
  32. priyasaki said...
    கார்பார்க்கிங் மரங்கள் அழகாக இருக்கு. இங்கும் ஓரு சிட்டியில் தண்ணீர் விழுந்து(மலைக்குள்) கல்லாக வளர்ந்து இருக்கு.அவைகளைப்பார்த்தால் அசல் ஒவ்வொரு உருவங்களாக இருக்கும்.2வாரத்துக்குமுன் போக சந்தர்ப்பம் கிடைத்து போனோம்.ஆனா படங்கள் எடுக்கமுடியாது.

    [co="purple"] வாங்கோ அம்முலு வாங்கோ.. எப்பவும் தப்பாமல் ஆஜராகிடுறீங்க.. அதுக்கு என் நன்றிகள்.

    ஆஆஆ இங்கும் உள்ளே போனதும் அந்த ஹைட் சொன்னார்.. படங்கள் எடுக்ககூடாது.. கமெரா ஓஃப் பண்ணோனும் என.. என்னடா இது வம்பாப்போச்சே .. என ஒரு செக்கன் யோசிக்கமுன்.. சொன்னார்.. படம் எடுத்தால் அழகை ரசிக்க மாட்டீங்க அதுதான் சொன்னேன் என...

    இபடியான இயற்கைக் காட்சிகள் எப்பவும் அழகுதானே..

    அதிலயும் வெளியே.. அடர்ந்த மரங்களும்.. பற்றையுமாக காட்சிதரும் மலையின் உள்ளே எவ்வளவு அழகான சிற்ப வேலைப்பாடுபோன்ற இடமிருக்கு என்பதை எப்படி நம்ப முடியும்...

    ஆனா உள்ளே நிற்கும்போது ஒரு குட்டி நிலநடுக்கம் வந்தால் கதை சரி:).. சில இடங்களில் குட்டியூண்டு இடைவெளி.. அதாவது ஒற்றையடிப்பாதையாலதான் போய் வந்தோம்ம்.. அப்பாதையில் ஒரு பாறாங்கல்லு விழுந்தால்ல்... ????..[/co]

    ReplyDelete
  33. அழகாக இருக்கு உங்க குயினும்,ராணியும்.இப்ப வெயில் வந்திட்டுது போல. இங்கு நல்ல வெயில்.
    உண்மையிலே பாடல்கள் எல்லாமே நினைத்தாலேஏஏஏ இனிக்கும்.புலிக்கு பிறந்தது பூனையாகாதே. தத்துவம் அருமை. நல்ல சுற்றுலா.
    இம்முறை கொஞ்சம் முன்னமே வந்தாச்சு.
    [co="purple"] இம்முறை மே வரை குளிர் ஜூன் ஆரம்பித்ததும் வெயில் கொழுத்துது... ஆசையாக இருக்கு... ஊரில் இருக்கும் ஃபீலிங் வருது..

    வீட்டினுள் இருக்க விருப்பமில்லை.. வெளி முற்றத்தில் மர நிழலில் இருக்கத்தான் விருப்பமா இருக்கு.. இங்கு வெள்ளைகள் முகத்தில் புன்னகை தவிர வேறில்லை:)).. குளி வந்தால் இவர்களின் முகமெல்லாம் சுருண்டுவிடும்.. ஹா..ஹா..ஹா..:).

    ஒரே மூச்சில் அனைத்தையும் படித்து கருத்தும் சொல்லிட்டீங்க.. மியாவும் நன்றி அம்முலு. [/co]

    ReplyDelete
  34. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //உள்பகுதியில் இன்னும் மலைக் கற்கள் அழகாக வளர்ந்து கொண்டிருக்கின்றன... அவை வளரும் விதம்.. ஒவ்வொரு உருவங்களாகத் தெரிந்தது...//

    கல்லைக்கண்டால் நாடைக்காணும், நாயைக்கண்டால் கல்லைக்காணும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.

    அதாவது கல்லில் நாய் உருவம் தெரியும் போது அது கல் என்பது தெரியாது.

    கல் என்று பாவித்துப்பார்த்தால் நாய் உருவம் தெரியாது.

    [co="purple"] அதேதான் கோபு அண்ணன்... ஒவ்வொரு விதமாக கற்கள் வளர்ந்திருக்கு.. சிங்கம்போல, தவளைபோல... புத்த விகாரைபோல எல்லாம் தெரிஞ்சுது.. அந்த ஹைட் சொல்லித் தருவார், அதை நினைச்சுக்கொண்டே கல்லைப் பார்க்க அப்படியே தெரியும்... :). [/co]

    ReplyDelete
  35. வை.கோபாலகிருஷ்ணன் said...


    எப்படியோ நல்லபடியாக குகையிலிருந்து வெளியே வந்தீங்களே !

    இல்லாவிட்டால் இவ்வளவு அழகான பதிவினைப் பார்க்கவோ படிக்கவோ முடியாமல் ஏங்கியிருப்போமாக்கும்.

    [co="purple"] பூஸோ கொக்கோ:)).. உள்ளே போகுமுன் வள்ளிக்கு வைர மூக்குத்தியோடு பவளம் பதிச்ச தோடும் போடுவேன் என:)).. அதுதான் அந்த முருகன்.. நிலநடுக்கம் வராமல் காப்பாத்திப் போட்டார்:)).... ஆனா நான் இன்னும் நேர்த்தியை நிறைவேத்தேல்லை:)).. [/co]

    ReplyDelete
  36. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //என்னால முடியுது, எங்கட சுவீட் 16ல இருக்கும்:)அம்மாவாலயும் முடியுது:) உங்களால முடியுமோ?:)//

    உங்களாலேயே முடியாது என்றால் ஒரு பயலாலும் முடியாது.////

    [co="purple"]ஹா..ஹா..ஹா... கோபு அண்ணன்.. ஒருக்கால் ஓடிப்போய்க் கண்ணாடியைப் போட்டுக்கொண்டுவந்து திரும்பப் படிக்கும்படி:)).. பிரித்தானிய மேன்மைதங்கிய .. பெருமதிப்புக்குரிய..... நீதவான்ன்(அது நானேதான்)))ஆணையிடுகிறார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... :)) [/co]

    ReplyDelete
  37. மாட்ஜியோஜ்ஜி மனீ மனீ said...
    [co=" green"]ஆவ்வ்வ்வ்வ்வ் மணியங் கஃபே ஓனர்.. பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய... மாட்ஜி ஓசி மன்னி மனீஈஈஈ... வாங்கோ வாங்கோ:)).. உஸ்ஸ் ஸாப்பாஆஆஆஅ... பல்லுக் கொழுவுதே:))..

    ஒரு பழமொழி ”பம்பலா” நாட்டில உலாவுது அறிஞ்சிருப்பீங்கள்:)).. “சொந்தச் செலவில சூனியம் வைக்கிறதாம்” என:)).. அதிண்ட உண்மையான கருத்தை இப்பத்தான் உணர்றன்:))...

    என்ன ஒரு அழகான படத்தோட..:) எல்லோரும் “மணி” என.. கணீர் எனக் கோயில் மணிமாதிரி அழைத்த பெயரைப்போய்ய்:)))

    ஆரோ எங்கயோ இருந்து வந்து:), அடுத்த நிமிடமே காமாமல் போய்விட்ட:)).. ஒரு வெள்ளைக்கார ஓல்ட் ஆன்ரிக்காக:)) பெயரை மாத்தப் போய்ய்ய்ய்... இப்போ என்னவோ ஏதோ தொனியில சொந்தபந்தமெல்லாம் ”மனீஈஈஈஈஈ..” என அழைப்பதைப் பார்க்க:)) இன்னொரு ”பயமொயி “ நினைவுக்கு வருதே:))..

    அதாவது ஓட்டப்பம் வீட்டைச் சுடுமாம்ம்ம்ம்:)).. அமேஷன் காட்டுக்குள்ளபோய் “சிலருக்கு”:) பைத்தன் பிடிச்சு காலுக்குள்ள விடுறன் என வெளிக்கிட்ட இடத்தில, பைத்தன்... கால் பெருவிரலை நக்கிய இடத்தில:) இப்பூடி வார்த்தைகள் தடுமாறி:))) நாக்கு நடுக்கமாகி:)) பெயரையும் மாத்தியாச்சோ என:))

    உஸ்ஸ்ஸ்ஸ் அப்பா எனக்கெதுக்கு ஊர்வம்புஸ்ஸ்ஸ்:)) அம்மம்மா சொல்றவ... ஓவராக் கதைச்சால் உன்ர நல்ல குணத்தை:))[நோட் திஸ் பொயிண்ட் பிளீஸ்ஸ்]] தப்பா எடை போட்டுவிடுவினம் என:)) அதனால இப்பவெல்லாம் அடக்கி வாசிக்கிறனாக்கும்:)) [/co]


    ReplyDelete
  38. நாங்களும் Van ல் போனமையால் ஈசியாகிவிட்டது. /////

    ////இது அங்கேயும் நின்றுது, இதுதான் கார் பார்க்கிங் ஏரியா. இங்கு காரைப் பார்க் பண்ணியதும், பின்பு அவர்களது பஸ்ஸில் ஏற்றி.. //////

    மேடம் ஒரு டவுட்டுங்கோ -

    நீங்கள் குகைக்குப் போனது காரிலா? Van லா? :) :)

    [co=" green"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மீ கன்னி ராசியாக்கும்:)) மேடம் இல்லை:))..

    ஹையோ பார்க்க படிக்க எவ்ளோ விஷயமிருக்கே:))... அதையெல்லாம் விட்டுப்போட்டு டவுட்டுக் கேக்கினமே முருகா:))...

    அது ஓனர்.. ஐ மீன் மணியம் கஃபே ஓனர்ர்....
    நாங்கள் போனதென்னமோ வான் லதான்ன்.. ஆனா அங்கின பார்க்கிங்ல.. “கார் பார்க்கிங்” எண்டுதான் போர்ட்டு இருந்துது:)).. அதிலதான் ரைவர் பார்க் பண்ணினார்ர்:)) அப்போ நான் மாத்தி ஓசிச்சான்ன்.. ஓ.. இதுக்கும் பேர் கார் தானாக்கும்:)) நான் தான் டப்புடப்பா:) வான் என ஓசிச்சிட்டேன் என:))..

    இப்போ தெளிஞ்சுதோ? ஐ மீன் டவுட்?:) இல்ல குழப்பிட்டனோ?:)))..

    முருகா இவ்ளோ கஸ்டப்பட்டு :)ஒரு சுவீட் 16 பிள்ளை:), ரிக்கெட் எடுத்து, போய் வந்து படம் காட்டினால்ல்..:) அதைப் பார்க்க்கிறதை விட்டுப் போட்டு:)))) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:))

    எப்பூடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு:)) இருங்கோ ஒருகப் மோர் குடிச்சிட்டு வாறன்.. தொடர:))..

    மியாவும் நன்றி மணி. [/co]

    ReplyDelete
  39. அருமையான பகிர்வு. போட்டோஸ் சூப்பர்.

    ReplyDelete
  40. அடடடடா... இன்னும்கொஞ்ச நாளைக்கு நான் பிரான்சுக்கு போகத்தேவையில்ல... பூஸார்... பிரான்சில் பார்க்காத மிச்ச இடங்களை எப்ப பார்க்கப் போறீங்கள்் ?

    அத்தனையும் அழகு.... செம... சூப்பர்... பிரமாதம். எக்ஸலண்ட்.. . :))

    ReplyDelete
  41. விபரிப்பு எல்லாம் வடிவா எழுதியிருக்கிறீங்கள்.

    இங்கயும் வந்து, அதைப் பற்றி ஒரு போஸ்ட் போட வேணும் எனத் தாழ்மையாக விண்ணப்பம் வைக்கிறேன்.

    மேலிருந்து ஒரு விஷயம் கண்ணில பட்டுது, ஆனாலும்... இமா க.கா.போ. ;)

    ReplyDelete
  42. கார்பார்க்கிங் மரங்கள் அழகாக இருக்கு.அழகாக இருக்கு உங்க குயினும்,ராணியும். நல்ல சுற்றுலா அத்தனையும் அழகு.... சூப்பர்...

    ReplyDelete
  43. நாங்களும் Van ல் போனமையால் ஈசியாகிவிட்டது. ரைவரிடம் சொன்னோம், அதனாலென்ன கண்டுபிடிப்போம் என்றார். ////

    ரொம்ப நல்ல ட்ரைவரா இருக்காரே? அதுசரி, உங்கள் டூருக்கு மொத்தம் எவ்வளவு பணம் எடுத்தார்??

    ReplyDelete
  44. இவர்தான் அவர்:). இவர் அடிக்கடி பாவித்த ஒரு வசனம்.. “I am from Morocco, you are from Shri Lanka".. என்பது:). நல்ல நகைச்சுவையாளர், அழகாக சொல்லி விளங்கப் படுத்தினார். ///

    இவர் அன்று கொஞ்சம் மப்பும் மந்தாரமுமாக நின்றாராமே? உண்மையா? :)

    ReplyDelete
  45. போனதும் பின்பு ஒரே தண்ணி, அந்த இடத்தைக் கடக்க அழகான படகு ரெடியாக இருந்துது, அப்படகில் ஏறி கொஞ்சதூரம் கடந்தோம்.. ///

    ம்ம்... மலைக்குள் ஒரு குளம்! அந்தக் குளத்தில் படகுப் பயணம்! வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!

    ReplyDelete
  46. அந்த ரெயின் பயணம் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லியிருக்கலாம்! அந்த ரெயின் நீண்ட தூரம் பயணித்தது! அது போன வழி எங்கும் நிறைய பொருட்கள் இருந்தன! என்று உங்கள் வீட்டுக்காரர் சொன்னாரே??

    ReplyDelete
  47. என்னால முடியுது, எங்கட சுவீட் 16ல இருக்கும்:)அம்மாவாலயும் முடியுது:) உங்களால முடியுமோ?:) ///

    இதைச் சொன்னவரின் பெயரைச் சொல்லலாமே?? :)

    ReplyDelete
  48. தலைப்பை டாக் கோன் ன்னு வாசிச்சேன்...-:)

    படங்கள் அனைத்தும் அருமை...

    நலமா ?

    ReplyDelete
  49. [IM]https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSNvkckdlzDEN-w4Fi-98inSQE5f2Vj9iVDONwRvkVmCW5RL3Kr[/IM]


    ஆஆஆஆ ஹாய் :)) மியாவ் அந்த மொட்ட மரம்ஸ் இங்கேயும் நிறைய இருக்கே ....

    படங்கள் எல்லாம் அருமை ...

    ReplyDelete
  50. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //

    குறையொன்றும் இல்லை + தமிழ் விரும்பி லட்சுமி அம்மாவா?

    ஆமாம். அவங்களைக் கொஞ்ச நாளாக் காணோம். கவலையாகத்தான் உள்ளது. நான் தொடர்பு கொண்டு பேசிவிட்டுச் சொல்கிறேன்.

    இன்றைய தங்களின் பதிவு அருமை.
    தங்களுடன் சேர்ந்து சுற்றுலா போய் வந்தது போல ஓர் மகிழ்ச்சியும், எழுச்சியும் ஏற்பட்டது.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    Bye for Now.

    [co=" blue green"] வருகைக்கும் அனைத்துக் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கோபு அண்ணன்.

    லக்ஸ்மி அக்கா நலமாக இருக்கிறா என அறிந்தேன், மனதுக்கு சந்தோசமாக இருக்கு, இனி அவ நேரமுள்ளபோது பதிவைப் போடட்டும்.

    மிக்க நன்றி கோபு அண்ணன். [/co]

    ReplyDelete
  51. மின்னல் மியாவின் கவனத்திற்கு:
    ==============================

    பகுதி-5 சுத்தமாக விட்டுப்போச்சு.

    http://gopu1949.blogspot.in/2013/06/5.html

    பகுதி-7 அரைகுறையாக உள்ளது.

    பகுதி-1 முதல் பகுதி-10 வரை தொடர்ச்சியாக வருபவர்களுக்கு பகுதி-11 இல் பூங்கொத்து கொடுக்கப்பட உள்ளது என்பதை மின்னல் மியாவின் கவனத்திற்குக் கொண்டுவரப்படுகிறது.

    ஓடியாங்கோஓஓஓஓஓ

    ReplyDelete
  52. //லக்ஸ்மி அக்கா நலமாக இருக்கிறா என அறிந்தேன், மனதுக்கு சந்தோசமாக இருக்கு, //

    அப்படியா, மிகவும் சந்தோஷம்.

    தகவலுக்கு மிக்க நன்றி, அதிரா.

    நான் இன்னும் அவர்களுடன் போனில் பேச இயலவில்லை.

    ReplyDelete
  53. பகுதி-1 முதல் பகுதி-10 வரை தொடர்ச்சியாக வருபவர்களுக்கு பகுதி-11 இல் பூங்கொத்து கொடுக்கப்பட உள்ளது என்பதை மின்னல் மியாவின் கவனத்திற்குக் கொண்டுவரப்படுகிறது.

    ஓடியாங்கோஓஓஓஓஓ///

    [co=" blue green"] கோபு அண்ணன், விட்டகுறை தொட்டகுறை எல்லாம் இன்று நிவர்த்தி செய்யோணும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டேதான் நித்திரையால எழுந்தேன்ன்:)).. இதோ பூஸ் ஒன்று புறப்படுதே...:))..

    மியாவும் நன்றி கோபு அண்ணன்.

    லக்ஸ்மி அக்கா வராமல் இதுவரை விட்டதில்லை, சிங்கப்பூர், அஃப்ரிக்கா எங்கு போயிருந்தும் பின்னூட்டமாவது போட்டு தொடர்பிலிருந்தவ, இப்போ எங்குமே வராமல் இருப்பது கொஞ்சம் மனதுக்கு கஸ்டமாகவே இருக்கு.

    பார்ப்போம், எங்கிருந்தாலும் நலமே இருந்தால் சரிதான்.

    இப்படித்தான் எங்கள் ”சமையல் கீரி” எனப்படும் கிரிஜாவும்... காணாமலே போய்விட்டா.. எத்தொடர்பும் ஆரோடும் இல்லை... மனதுக்கு வேதனையாகவே இருக்கு, அஞ்சு எப்பவும் கவலைப்படுவா.. கீரிக்கு என்னாச்சோ என. [/co]

    ReplyDelete

  54. நிரூபன் said...
    ஏலேய் அக்காச்சி வணக்கமில்லே..
    என்னை நினைவிருக்கோ?
    அட நம்ம புரோபைல் போட்டோவைப் பார்த்தாச்சும் தம்பியை அடையாளம் காணுவீங்க எல்லே..
    எப்படிச் சுகம்?//

    [co=" blue green"] அடடா நிரூபனோ.. அந்த 2 மகள்மார் இருக்கும்:) மாமாவின் மருமகந்தானே?:) எப்பூடி மறப்பேன்?:)).. வாங்கோ நிரூபன் வாங்கோ.. நாம் நலம் நீங்க நலம்தானே?:))

    ஆனா ஏணிப்படியா இருந்து, புகழின் உச்சிக்கு ஏத்திவிட்ட இந்த அக்காவை நீங்கதான் மறந்திட்டிங்க:)).. ஹையோ ஆராவது என்னைக் காப்பாத்துங்கோ:).[/co]

    ReplyDelete
  55. இளமதி said...
    அதிரா... மிகமிக அருமையாக இருக்குதே அத்தனையும்.

    [co=" blue green"] வாங்கோ இளமதி வாங்கோ..

    நினைச்சுப் பார்க்கத்தான் பயம் மற்றும்படி போகும்போது தெரியாது. நுழைவாயில் ஒரு பெரிய கட்டிடமாக இருக்கும், ஏதோ ஒரு வீட்டுக்குள் போவதுபோல உணர்வு அப்படியே குகைக்குள் என்றியாகிடுவோம்:)..

    ஓம் உள்ளே லைட்தான்.. நாம் போகப் போக ஓன் பண்ணி, பின்பு பார்த்த இடங்களை டக்கு டக்கென ரிமூட் கொன்றோலினால் ஓஃப் பண்ணினார்.[/co]

    ReplyDelete
  56. [co=" blue green"] ாப்பாவின் வாழ்த்துக்கு மிக்கநன்றி இளமதி. இம்முறை பிறந்தநாள் எம்மோடு கழிந்ததால் அவருக்கும் அதிக மகிழ்ச்சியே.

    உண்மைதானே சந்தோஷம் என்பது எவ்ளோ பெரிய விஷயம், ஆனா குட்டிக் குட்டிச் சமாச்சாரத்திலெல்லாம் அது எமக்கு கிடைக்குது. இது தெரியாமல் சின்ன விஷயம்தானே என நாம் பொருட் படுத்தாமல் போகிறோம்ம்.. உதாரணத்துக்கு.. குட்டியாக ஒரு பின்னூட்டம் போட்டாலே, ஹையோ பின்னூட்டம் போட்டிருக்கிறாரே என நினைக்கும்போது அதனால் எவ்ளோ பெரிய சந்தோஷம் கிடைக்குது நமக்கு...:))..

    மியாவும் நன்றி இளமதி. [/co]

    ReplyDelete
  57. நிரூபன் said...


    கனம் மாட்டிஜோஜியின் படம் எங்கே?
    இந்த ப்ளாக்கில் அட்லீஸ்ட்
    ஒரு மூலையில் திருஷ்டி கழிக்க என்றாலும் மாட்டியிருக்கலாம் அல்லவா?

    பிரான்ஸ் சுற்றுலாவில் மாத்தியோசி மணியின் போட்டோ எடுத்தீங்க தானே..
    இப்பவே இங்கே ஷேர் பண்ணுங்க

    [co=" blue green"] ஹா..ஹா..ஹா.. படம் எடுத்தது என்னமோ உண்மைதான் நிரூபன்... ஆனா என்ன மாயமோ என்ன மந்திரமோ..:) பிரிண்ட் பண்ணினால் படத்தில ஆளைக் காணம்:)).

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் மியாவும் நன்றி நிரூபன். [/co]

    ReplyDelete
  58. தனிமரம் said...
    25 வது பின்னூட்டம் தனிமரம் நீண்ட காலத்தின் பின்!ஹீநானும் பிசி! ஒரு பால்க்கோப்பி கிடைக்குமா அதிரா குயீன் ராணி! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    //[co=" blue green"] வாங்கோ நேசன் வாங்கோ.. 25 ஆவது பின்னூட்டத்துக்கு பால்கோப்பி போதுமோ?:), மட்டின் பிர்ராணி, முனியாண்டி விலாசில சொல்லி செய்து தாறேன்ன்ன்:)).. ஹா..ஹா..ஹா...

    மியாவும் நன்றி நேசன்.

    [/co]

    ReplyDelete
  59. [co=" blue green"]வாங்கோ ராஜேஸ்வரி அக்கா வாஅங்கோ.. குயினுக்கும் ராணிக்கும்(இது வேற:)) உங்கள் வாழ்த்துக்களை சொல்லிட்டேன்ன்.. கொஞ்ச நாளைக்கு வர்ணபகவானிடம் சொல்லி, மழைக்கு தடாப் போடட்டாம் எனச் சொல்லிச்சினம்:)) ..

    மியாவும் நன்றி. [/co]

    ReplyDelete
  60. [co=" blue green"] வாங்கோ ஸாதிகா அக்கா வாங்கோ.. லக்ஸ்மி அக்கா நலமோடு இருப்பது கேட்க மகிழ்ச்சியாக இருக்கு.. பதிலுக்கு மிக்க நன்றி. [/co]

    ReplyDelete
  61. [co=" blue green"] வாங்க வான்ஸ்ஸ் மியாவும் நன்றி. இன்னும் கொஞ்சம் சூப்பர் இருக்கு போடட்டே?:) [/co]

    ReplyDelete
  62. [co=" blue green"] வாங்கோ ஆசியா... வருகைக்கு மியாவும் நன்றி. [/co]

    ReplyDelete
  63. பூங்கோதை செல்வன் said...
    அடடடடா... இன்னும்கொஞ்ச நாளைக்கு நான் பிரான்சுக்கு போகத்தேவையில்ல... பூஸார்... பிரான்சில் பார்க்காத மிச்ச இடங்களை எப்ப பார்க்கப் போறீங்கள்் ?

    அத்தனையும் அழகு.... செம... சூப்பர்... பிரமாதம். எக்ஸலண்ட்.. . :))
    [co=" blue green"] வாங்கோ பூங்கோதை வாங்கோ.. நீங்க உப்பூடி எல்லாம் வாழ்த்தினால் போனாப்போகுதென இப்பவே ரிக்கெட் எடுத்துக்கொண்டு மீண்டும் போயிடுவேன்ன்:)) இம்முறை ஜேர்மனிக்கு:)) இளமதியை மீட் பண்ண:)).. ஹையோ ஏன் இளமதி உப்பூடி ஓடுறா:))..

    மியாவும் நன்றி கோதை. [/co]

    ReplyDelete
  64. [co=" blue green"] வாங்கோ இமா வாங்கோ.. உங்கயும் வந்தோ?:) ஆண்டவன் ஆணையிட்டால் மீ என்ன மாட்டேன் எண்டோ சொல்லப் போறேன்ன்:).. ஆனா ஒருநாள் முழுக்க பயணம், நினைக்கவே மனம் விரும்புதில்லை.

    பரிஸுக்கு 2 மணித்தியாலம் என ரிக்கெட்டில போட்டிருந்துது. ஆனா ஏறி இருந்து பெல்ட்டைப் போட்டதும், பைலட் எனவுன்ஸ் பண்ணினார்ர் “பலமான காற்று காரணமாக, முப்பது நிமிடங்கள் முந்திப் போய்விடுவோம்” என.

    அடக் கடவுளே என நினைச்சுக் கொண்டு கொஞ்சம் புறுணம் பார்த்து , ஹேம் விளையாடி, நித்திரை வாறமாதிரி இருக்கே என நினைக்க.. சரியா ஒரு மணித்தியாலத்தில் மீண்டும் எனவுன்ஸ் பண்ணினார்.. “ எல்லோரும் பெல்ட்டைப் போடுங்கோ லாண்ட் பண்ணப் போகிறோம்” என.. மீக்கு கையும் ஓடல்ல காலும் ஆடல்ல:)

    கிட்டப் போனதும் பார்த்றூம் போய் கொஞ்சம் மேக்கப் பண்ணலாமே:) என எண்ணிக்கொண்டு போனனா.. எல்லாம் போச்ச்ச்ச்ச்ச்:)).. இருந்தபடியே பெல்ட்டைப் போட்டதுதான்ன்:))..

    ஆவ்வ்வ்வ்வ் இமா காக்கா போயிட்டா:) நல்ல வேளை அஞ்சு வராததால்ல் மீ தப்பிட்டேன்ன்ன்:)).. என்ன இருந்தாலும் கோட் இஸ் கிரேட் இல்லையா?:))

    மியாவும் நன்றி இமா. [/co]

    ReplyDelete
  65. VijiParthiban said...
    கார்பார்க்கிங் மரங்கள் அழகாக இருக்கு.அழகாக இருக்கு உங்க குயினும்,ராணியும். நல்ல சுற்றுலா அத்தனையும் அழகு.... சூப்பர்...

    [co=" blue green"]வாங்கோ விஜிபா வாங்கோ.. மியாவும் நன்றி. ஏன் உங்கட பக்கம் நீண்ட நாட்களாக துசு தட்டாமல் இருக்கு?:). [/co]

    ReplyDelete
  66. மாட்ஜியோஜ்ஜி மனீ மனீ said...
    இவர்தான் அவர்:). இவர் அடிக்கடி பாவித்த ஒரு வசனம்.. “I am from Morocco, you are from Shri Lanka".. என்பது:). நல்ல நகைச்சுவையாளர், அழகாக சொல்லி விளங்கப் படுத்தினார். ///

    இவர் அன்று கொஞ்சம் மப்பும் மந்தாரமுமாக நின்றாராமே? உண்மையா? :)
    [co=" blue green"] என்ன கொடுமை சாமீஈஈஈஈஈஈ:) [/co]

    [im]http://i34.photobucket.com/albums/d127/rabbit1951/catanim.gif[/im]

    ReplyDelete
  67. மாட்ஜியோஜ்ஜி மனீ மனீ said...
    அந்த ரெயின் பயணம் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லியிருக்கலாம்! அந்த ரெயின் நீண்ட தூரம் பயணித்தது! அது போன வழி எங்கும் நிறைய பொருட்கள் இருந்தன! என்று உங்கள் வீட்டுக்காரர் சொன்னாரே??//

    [co=" green"]உண்மைதான் மணி, ஆனா படங்கள் அட் பண்ணியே மீ களைச்சிடுறேன்ன்.. அதனால எழுத்து குறைஞ்சு போகுதுபோல.. [/co]

    ReplyDelete
  68. மாட்ஜியோஜ்ஜி மனீ மனீ said...
    என்னால முடியுது, எங்கட சுவீட் 16ல இருக்கும்:)அம்மாவாலயும் முடியுது:) உங்களால முடியுமோ?:) ///

    இதைச் சொன்னவரின் பெயரைச் சொல்லலாமே?? :)

    [co=" green"]ஹா..ஹா..ஹா.. சொன்னவரின் பெயரையோ கேட்கிறீங்க?:) அவர்தான் “மேன்மை மிக்க” “புலாலியூர்ப் பூஸானந்தா” அவர்கள்:))..

    ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி மணியம் கஃபே ஓனர் வருகைக்கும் கருத்துக்களுக்கும். [/co]

    ReplyDelete
  69. ரெ வெரி said...
    தலைப்பை டாக் கோன் ன்னு வாசிச்சேன்...-:)

    படங்கள் அனைத்தும் அருமை...

    நலமா ?

    [co=" blue green"] வாங்கோ ரெவெரி வாங்கோ.. அது ஃபிரெஞ் உச்சரிப்புபோல வாய்க்குள் நுழையுதில்ல:))..

    நாங்க நலம், இப்போ கொஞ்ச நாட்களாக சூப்பர் வெதரும். ஆனா கண்ணு பட்டிடிச்சி:) 2 நாளா திரும்ப குளிரும் மந்தாரமுமாக இருக்கு. மிக்க நன்றி ரெவெரி. [/co]

    ReplyDelete
  70. Cherub Crafts said...

    [co=" blue green"] ஆஆ வாண்டோ அஞ்சு வாண்டோ:)).. கோல்ட்டு பிஸ்ஸு எப்போ பிரவுன் ஆண்டியா:)) (ஐ மீன் எறும்பை ஆங்கிலத்தில சொன்னனாக்கும்) மாறிச்சுது?:)).

    அப்பூடி மரம் இங்கிருக்கோ? இலைகள் பார்த்தால்தான் எனக்கு சொல்ல முடியும் அஞ்சு?.. அதுபோன்ற மரங்கள் பாரிஷில் காணவில்லை.. லூட்ஸ் உம் அது சார்ந்த பக்கத்திலும்தான் கண்டோம். அதன் பூக்கள் இலைகள் எப்படி இருக்குமென பார்க்க ஆசையா இருக்கு.

    உங்களுக்கு தெரிஞ்சிருக்குமென நினைக்கிறேன்.

    மியாவும் நன்றி அஞ்சு. [/co]

    ReplyDelete
  71. அதிரா, வணக்கம்.

    பகுதி-9 + 10க்கு உடனே ஓடியாங்கோ.

    நாளைக்குத்தான் கெடுதேதி முடிகிறது.

    பிறகு என் மீது ஏதும் வருத்தப்படக்கூடாது. சொல்லிப்பூட்டேன். ;)

    http://gopu1949.blogspot.in/2013/06/9.html

    http://gopu1949.blogspot.in/2013/06/10.html

    ReplyDelete
  72. குகைக்குள் நுழையும் போது பயமாக இருந்து இருக்குமே

    எல்லா படங்களும் ரொம்ப சூப்ப்ர்
    பூஸாரில் தத்துவமும் அருமையுங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஒ

    ReplyDelete
  73. வாங்கோ ஜல் அக்கா.. பழசை எல்லாம் படிச்சுப் பின்னூட்டம் போடுறீங்க மிக்க நன்றி.

    --------------------------------


    கோபு அண்ணன் மிக்க நன்றி.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.