நல்வரவு_()_


Saturday, 7 December 2013

அனுபவம் புதுமை!!!

அதை  “ஆஷா போஸ்லே அதிரா” விடம் காண வாருங்கள்!!!... 
சரி சரி ஆரும் முறைக்காதீங்க:)... பதிவிட நிறைய விஷயங்கள் இருக்கு, ஆனா நேரம்தான் இடம் கொடுக்குதில்லை(இதை எத்தனை தரம் தான் நானும் சொல்லுவதாம்?:))..

இம்முறை நான் அதிகம் பேசப் போவதில்லை:) என் கை வண்ணம்தான் பேசப்போகிறது(அதாரது முறைக்கிறதூஊஊஊ?:).

இது முன்பு அஞ்சு செய்து போட்டிருந்தா,அதேபோல செய்தேன்.., அதே கடையில்:) ஃபிரேம் வாங்கிப் போட்டிருக்கிறேன்:).ஆனா, முகம் கொஞ்சம் கஸ்டமாகிவிட்டது செய்ய. 

இதனை செய்து என்னோடு வேலை பார்க்கும், இங்கத்தைய ஒரு நண்பிக்கு கொடுத்தேன், அவவுக்கு சந்தோசம் எனில் சொல்ல முடியாது, அதுக்காக ஒரு தங்கியூ கார்ட்டும், சொக்லேட்டும் வாங்கித் தந்தா..

=================================================================
இடைவேளை:)
அடுத்த வாரம் முதல், நாங்க “அந்தாட்டிக்கா” ஹொலிடே போகிறோம்... அதனால, எங்கே பாடலும் கேட்கவில்லை..:) ஆஷா போஸ்லே அதிராவையும் காணல்லியே:) என ஆரும் யோசிச்சிடாதீங்க:).. புதுவருடப் பொங்கலோடு சந்திப்போம்ம்ம்:)
===================இடைவேளை முடிஞ்..போச்ச்ச்:)====================

இது என்னாது?:) உங்களுக்கு ஏதும் புரியுதா?.. இது இங்கிருக்கும் ஒருவர்(வலையுலகில்:)) அவவுக்கு சமீபத்தில் சுவீட் 18:) பேர்த்டே வந்தது[ அதிராவுக்கு சுவீட் 16 ஆக்கும்:)) சொன்னாத்தானே எல்லோருக்கும் புரியுது:) ]அவவுக்காக செய்தேன்.. ஆராக இருக்கும் என்பதனை கடல்ல:) தேடிக் கண்டு பிடிங்கோ:).


========================================================================
இந்தப் படத்தை நன்கு உற்றுப் பாருங்க:) இதில எங்காவது மஞ்சள் பூ மலர்ந்திருக்கா? இல்லையில்ல?:) ஆனாலும் இதுக்கும் மஞ்சள் பூவுக்கும் ஒரு தொடர்பிருக்குது. என்னவெனில் நான் புதுசா ஒரு குயிலிங் ஸ்ரூல் வாங்கினேன், புதுசா வாங்கிய உஷாரில:) இதனை மளமளவென செய்தேன்.. செய்து முடிக்கும் தறுவாயில், மெசேஜ் கிடைச்சுது.. மகிக்கு ஒரு குட்டித் தேவதை பிறந்திருப்பதாக. உடனேனே இப்படம் அக்குட்டிக்கே என மனதில் நினைத்தேன். ஏற்கனவே யோசித்திருந்தால், மஞ்சள் பூவைக் கலந்திருப்பேன்.. யோசிக்கவில்லை.

சரி, இதில இன்னொரு கதையும் இருக்குது:) கவனமாப் படிங்கோ. நான் அஞ்சுவோடு ஒரு போட்டி வச்சேன்... அது என்னான்னா.. மகிக்கு என்ன பேபி கிடைக்கும் எனச் சொல்லுங்க.. அதிராவோ அஞ்சுவோ கரெக்ட்டா சொல்கிறோம் எனப் பார்ப்போம் என:)
சரி இனி எமது:) கொசுமெயில்:) உரையாடலைப் பார்ப்போமே:)

[இது அதிரா]
அஞ்சூஊஊஊஊஊஊ ஒரு போட்டி வைப்போமா?

மகிக்கு குழந்தை கிடைக்கவிருப்பது உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். அதுபோல வளைகாப்பு படம் உங்களுக்கும் கிடைச்சிருக்கும்:).

இப்போ போட்டி என்னவெனில், வளைகாப்புப் படத்தின் மூலம் மகிக்கு என்ன குழந்தையாக இருக்கும் என படம் பார்த்துச் சொல்லுங்கோ.. மீ மனதில நினைத்திட்டேன்ன்.. நீங்க சொன்னதும் சொல்கிறேன். அடுத்த மாதம் குழந்தை கிடைக்கட்டும்.. ஆர் சொன்னது சரியென பிறைஸ் கொடுப்போம் நமக்கு நாமே:)).. உஸ்ஸ்ஸ்ஸ் எல்லாமே நமக்குள் இருக்கட்டும் இப்போ..

[இது அஞ்சு]
BOYYYYYYYYYYYYYYYYYY:))))

How did u know that I knew :))

KARRRRRRRRRRRRRRRRRRRRRRRRRR:)))  NAAN GOOD GIRL EVLO NAAL MAINTAIN PANNEN PAARUNGA :))

[இது அதிரா]
//How did u know that I knew :))//
நாம் யாவும் அறிவோம்:) அதுதான் புலாலியூர்ப் பூஸானந்தா:) ஹா..ஹா..ஹா....

ஹா..ஹா..ஹா.. நல்லாவே மெயிண்டைன் பண்ணுறீங்க:)... கீப் இட் மேல:).. நா மட்டும் என்னவாம்ம்ம்?:)

சரி சரி எனக்கென்னமோ கேர்ள் எண்டுதான் மனதில தோணுது... மகி உடம்பு வச்சிருப்பதுபோலவும், கணவர் மெலிஞ்சிருப்பது போலவும் தெரியுது, அப்படியெனில் பொம்பிளைப்பிள்ளை என அம்மம்மா:) சொல்லுவா:)).. ஓகே வெயிட் அண்ட் சீயா:))

[இது அஞ்சு]
ஆமாம் அதிஸ் :)) ..தெய்வமே பூசானந்தா ...:)  அடுத்த பிரித்தானிய பிரதமர் யாருன்னு சொல்லுங்களேன் :)) உங்க கணிப்பு பார்ப்போம் 

ஆனா நான் யோசிச்சேன் ..உடம்பு வச்சா ஆண் குழந்தைன்னு ..ஆனா மகி வகை வகையா கலர்ஃபுல்லா வெஜ் உணவு சாப்டரா ..அது ஒன்று confirms   ..இட்ஸ் எ கேர்ள் :))

..லெட்ஸ் வெயிட் அண்ட் seeee :)))///////////

இந்த மஞ்சள் பூவை வச்சு, பேபிக்காக இதைச் செய்தவர்... படம் பார்த்துக் கண்டு பிடிங்க..:)

முடிவில இருவருமே girl baby  என முடித்தோம்ம்:).. இப்போ பரிசை எப்படிப் பங்கு போடுவது?:)).

ஊசிக்குறிப்பு:
முடிவு என்னான்னா.. நாங்க, ஆரும் அடிச்சாலும்:) உதைச்சாலும்:) எந்தக் கதைகளையும் வெளில சொல்ல மாட்டமாக்கும்:).. ஏனெண்டால் நாங்க “4ம் நம்பராக்கும்” :)... சரி சரி இதுவும் நமக்குள்ள இருக்கட்டும்:).
=============================================================================================
ஆரது வோட் பண்ண மறந்துபோய்ப் போறதூஊ?:)
================================================================================
அனைவருக்கும் இனிய கிரிஸ்மஸ் - புதுவருட வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்

இனி உங்கள் அனைவரையும் புதுவருடப் பொங்கலோடு சந்திக்கும் வரை, உங்களிடமிருந்து விடை பெறுபவர்.. உங்கள் பேரன்புக்கும்:) பெருமதிப்புக்கும் உரிய:) புலாலியூர்ப் பூஸானந்தா:).
^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ =^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ 


Sunday, 10 November 2013

GRAVITY ... 3D ஊடாகப் பார்த்ததில் தெரிந்தது..

இப்போ, 8ம் திகதி முதல்... இங்கின தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஆங்கிலப் படம். நேற்றுப் பார்த்தமா.. உடனேயே அதுபற்றி ஒரு விமர்சனம் எழுதோணும் எனும் ஆவல் தூண்டப்பட்டு விட்டது.

சரி படம் பற்றிய விமர்சனத்துக்கு முன்பு கொஞ்சம் என்னைப் பற்றிச் சொல்கிறேனே.. ஏனெனில், எனக்கு படம் ஏன் பிடித்தது என்பதை நீங்க அறிய இது உதவிபண்ணுமெல்லோ:)... “இந்த விருப்பம்” உங்களுக்கு இல்லாவிடில், படம் பிடிக்காமலும் போகலாம்.. அதனாலயே முன்னறிவித்தல்..

எனக்கு விண்வெளி.. ஸ்பேஸ் புரோகிராம் எனில் கிட்டத்தட்ட பைத்தியம் மாதிரி.[ இந்தத் தகவல் இங்கே பெரும்பாலும் உங்களுக்கு தெரிந்திருக்கும்:)] அங்கிருந்து சட்லைட்டில் படமெடுக்கும்போது, நம் உலகம் ஒரு புறம் தெரியும், சந்திரன் ஒருபக்கம் தெரியும்.. நட்சத்திரங்கள் கல்லுகள் என.. சுற்றிய வண்ணம் இருக்கும்.. அதை ரசிச்சே முடியாதெனக்கு. அவ்ளோ விருப்பம். அப்போ இப்படம் எனக்காகவே எடுக்கப் பட்டதுபோல:) என்னுள் ஒரு மகிழ்ச்சி:)..

சரி கதைக்கு வருகிறேன்ன்.. இதில் கதையே இல்லை:).. அதை விடுங்கோ.. தியேட்டருக்குள் போய் இருந்து பொப்கோனும் நச்சூஸ் சும்(nachos chips) வாங்கி சாப்பிட்டபடி, இருந்தமா.. அட்ஸ் ஓடிக்கொண்டிருந்துது. டக்கென ஸ்கிறீனை ஸ்ரொப் பண்ணி விட்டு.. தியேட்டரில் ஒருவர் வந்து எனவுன்ஸ் பண்ணினார்ர்.... அதாவது என்ன மெயினா சொன்னாரெனில்.. கொஞ்சம் பயமாக இருக்கும் காட்சிகள் எனில் கண்ணை மூடிடுங்கோ என. 3டி கண்ணாடி போட்டுப் பார்க்கும்போது, எல்லாமே நமக்கு கிட்ட வருவதுபோல இருக்குமெல்லோ..

அப்போ அப்படிச் சொன்னதும்.. கொஞ்சம் பயம் எனக்கு வந்திட்டுது என்றால் பாருங்கோவன்:).

சரி கண்ணாடி எல்லாம் போட்டுப் படம் பார்க்கத் தொடங்கியாச்சு...

ஸ்பேஸிலே ஒரு ஸ்பேஸ் ஷிப் நிற்கிறது.. அதில் சிலர் போயிருக்கிறார்கள்,ஒரு 6/7 பேர்தான். அவர்கள் அந்த ஷிப்பில் சில வேலைகள் செய்கிறார்கள், அதனை பூட்டி நேராக்குகிறார்கள். அந்த ஷிப் இருப்பது விண்வெளிதானே.. ஒரு பக்கம் உலகம் தெரிகிறது, சந்திரன் தெரிகிறது, கற்கள், உடைந்த சில துண்டுகள் பறந்த வண்ணமிருக்கின்றன. அதனுள் இவர்களும் பறந்து பறந்து பூட்டுகிறார்கள்.

அப்போ வெளியில் இருந்து பறந்து வந்த வேறு சில ஷிப்ஸ் இன் பகுதிகள் வந்து அடிக்கிறது, அதனால் இவர்களில் சிலர் அந்த ஷிப்பை கையால் பிடிக்க முடியாமலும், மற்றும் ஒட்ஷிசன் போதாமல் போயும் இறந்து விடுகிறார்கள். எல்லாமே பறந்து சுற்றிக் கொண்டிருக்கும், ஒன்றுமே கீழே விழாதுதானே.
=============================INTERVAL==============================
========================================================================
கடசியாக ஒரு பெண்ணும் ஒரு ஆணும் மட்டுமே எஞ்சுகிறார்கள். இருவரும் வெளியே பறந்து மீண்டும் பூட்ட முயலும் போது, பெண் தவறிப்போக.. அந்த ஆண்தான் காப்பாற்றுகிறார். இப்படி நடந்து பின்னர் ஒரு கட்டத்தில், அந்த ஆண் இந்த விண்வெளிக் கப்பலைப் பிடிக்க முடியாமல் தூரமாக எட்டித் தவிப்பார்.... அப்போ பெண் என்ன செய்வார், அவரைக் காப்பாற்ற, எட்டிப் பிடிப்பார்...

இந்த நிலை எப்படி இருக்குமெனில், இவர்களின் விண்வெளிக் கப்பலில் இருந்து சில நாடாக்கள் பெண்ணின் காலில் சுற்றப்பட்டிருக்கும், அதன் மூலம் பறந்த வண்ணமே அந்த ஆணை இழுத்துப் பிடிப்பார்...பலமான காற்றுப்போல பிச்சு அறுத்துக் கொண்டு போவது போல இருக்கும், அப்போ அந்த ஆண் சொல்வார், என்னை விடு, நான் போகிறேன், என்னை இழுத்தாயானால் அந்த நாடா அறுந்துவிடும், அப்போ இருவரும் இறந்திடுவோம், ஆருமே மிஞ்சமாட்டோம் என.

அப்போ அவ பெரிதாக கத்தி கூச்சல் எல்லாம் போட மாட்டா[வெள்ளைக்காரப் பெண்ணல்லவா:)].. ஆனா முகபாவனையில் கவலை தெரியும்... கையைப் பிடித்து இழுத்தபடி சொல்லுவா... பிளீஸ்ஸ் போயிடாதே வா.. என, ஆனா அவரோ இல்லை, நாடா அறுமுன் நான் கிளிப்பைக் கழட்டுகிறேன் என, அவ இழுக்கும் அந்த பட்டியில் இருக்கும் கிளிப்பைக் கழட்டுவார்ர்.. ஸ்லோ மோசனில்.. அவ அழுவா.. பிளீஸ்ஸ் பிளீஸ்ஸ் போகாதே என.. அவர் இல்லை நீ தப்பிப்போ என கிளிப்பைக் கழட்டுவார்ர்..

அப்படியே அவர் தூரப் பறந்து போவது தெரியும். இவவுக்கு ஒட்ஷிசன் போதாமல் வந்து விடும், பலமாக மூச்சு வாங்குவா, உடனே சிப்பின் டோரை இறுக்கித் திறப்பா, திறந்து உள்ளே வந்து கதவை மூடிவிட்டு, ரீவியின் முன்னால் வந்து இருப்பா. எல்லாமே பறந்துதான்.. நடப்பதில்லை. செயாரில் இருந்து பெல்ட்டைப் போட்டால்தான் எழும்பிப் பறக்காமல் இருக்கலாம்.

அப்போ அவவுக்கு தாங்க முடியாத கவலையாக இருக்கும்.. ஆருமே இல்லை.. ஒரு சுவிட்சைப் போடுவா... அதில் ஏதோ ஒரு ஷைனீஸ் ரேடியோ சனல் போகும்.. இவ அவரோடு கதைக்க வெளிக்கிடுவா.. அது ரேடியோத்தானே .. தன் பாட்டில் போகும்.. அதில் ஒரு குழந்தையின் மழலை மொழி எல்லாம் கேட்ட்கும்... இவ துக்கம் தாளாமல் வாய் மூடி அழுவா...

அப்போது ஒரு துளி கண்ணீர் வந்து கன்னத்தால் வழிந்து.. அது ஒரு உருண்டையாகி விழும்.. விழுந்து.. அந்த ஒரு துளியும்.. அப்படியே கீழே விழாமல்.. பறந்து சுற்றிப்போகும்... மிகவும் ஒரு கவலையான கட்டமாக இருக்குமது.

அந்நேரம் அவவுக்கு ஒட்ஷிசன் காணாமல் மூச்சு வாங்கும், ஆனா அவ கவலையால் செயலிழந்ததுபோல, மாஸ்க் கை எடுத்து மாட்டாமல் அப்படியே இருப்பா... அப்போ அந்த ஸ்பேஸ் சிப்பின் கதவை ஒருவர் தட்டுவார்ர்... தட்டி விட்டு திறந்து உள்ளே வருவார்ர்... பார்த்தால், கடசியில் என்னை விடு எனச் சொல்லி கிளிப்பைக் கழட்டிப் போன அவரேதான்... அவர் உள்ளே வந்து இவவின் பக்கத்துச் செயாரில் பெல்ட்டைப் போட்டு இருப்பார்..

உடனே அவவுக்கு ஒரு புத்துணர்வு வரும்.. டக்கென மாஸ்க்கைப் போட்டிடுவா, உடனே உஷாராகிடுவா.... பின்பு அவவை மட்டுமே காட்டுவார்கள்... அப்போ எமக்கு ஒரு குட்டி டவுட்.. வந்தவர் எங்கே????

அது அப்படி இருக்க.. மீண்டும் இவவின் ஸ்பேஸ் சிப்.. துண்டு துண்டாக வெடிக்கும்... முடிவில் அவவாவது உயிர் பிழைக்கிறாவா? இல்லை.. அவவும் இறந்து விடுவாவா????? முடிவை தியேட்டரில் பாருங்கோ... 

அந்த வந்தவர் எங்கே???? பின்புதான் நாம் உணர்வோம்ம்.. அது உண்மையல்ல... அவவை உஷார் பண்ண, ஒரு ட்ரீம் வந்தது அப்படி...

என்னைப் பொறுத்து படம் சூப்பர். நல்ல 3டி தியேட்டரில் பாருங்கோ.. அப்படியே நாமும் உள்ளே போவதுபோல, ஸ்பேஷில் சுற்றுவது போல இருக்கும்... படம் முடிந்த பின்னும்.. இன்னும் தொடராதா.. அதுக்குள் முடிந்து விட்டதா எனும் உணர்வை உருவாக்கிய படம்... தியேட்டரைக் கண்டாலே நித்திரையாகும் என்னையே.. சொக்க வைத்திருந்தது...

அதிகமான ஆங்கிலப் படங்கள்.. டொமார்ர்.. டும்.. எனச் சத்தமாக இருக்கும்.. பளீச் பளீச்ச் என வெளிச்சம் வரும்... இதனால் எனக்கு தலையிடி வந்திடும்.. ஆனா இதில் பெரிதாக அப்படி எதுவுமே இருக்கவில்லை.. எல்லாமே அளவாக இருந்துது. ஆரம்பம் ஒரு 20 நிமிடம் தவிர்த்து, படம் முழுவதும் இருவரே நடிக்கின்றனர்.. விண்வெளியல்லவா மருந்துக்கும் ஆட்கள் இல்லை.

சிறியவர்களையும்(குட்டீஸ்) கூட்டிப் போய்ப் பார்க்கலாம். திரும்பவும் சொல்கிறேன், ஸ்பேஸ் புரோகிராம் பிடித்தவர்களுகு இப்படம் 100 வீதமும் பிடிக்கும்.


=========================================================================
ஊசி இணைப்பு:

Friday, 8 November 2013

பழகலாம் வாங்க!!.. வாங்க!!!:)

அட எதுக்கு இவ்ளோ கூச்சப் படுறீங்க... உள்ள வாங்க..:)..
அஞ்சு விதமாமே:))
இதை நான் எந்த “மீன்” வீட்டிலயும்:) களவெடுத்து வரவில்லை என்பதையும்:), இது அஞ்சுவின் செல்லம் “ஜெஷி”  [தான் என்பதையும்.. ஹையோ நானே பிடிச்சுக் கொடுத்திடுவன் போல இருக்கே வைரவா:))...] அல்ல என்பதையும்:) தேம்ஸ் கரைக் கல்லின் மீது அடித்துச் சத்தியம் செய்கிறேன்ன்:).. 
 பழகத்தானே கூப்பிடுறேன்:).. அதாவது சமைச்சுப் பழகலாம் வாங்க எனக் கூப்பிட்டேனாக்கும்:)... அதிரா வீட்டில தோசை சுடுகிறாவாம் எண்டால், ஆருமே வரமாட்டீங்க:).. அதனாலதான்..  பின்பாதியை மட்டும் சொன்னேன்ன் அது டப்பா?:).

சரி இப்போ விஷயத்துக்கு வருவம்... இது இன்று நேற்றுச் சமைத்தவை அல்ல:) ஒருகாலத்தில சமைச்சு, இங்கின போட்டு வச்சேன்ன்.. 

1.இது அதிராவின் ஸ்பெஷல் தோசை... இதில போட்டிருக்கும் இன்கிறீடியன்ஸ் எல்லாம்.. அதிரா கபேட்டைத் திறந்து தேடும்போது, என்ன என்ன அகப்படுதோ, அவை எல்லாம் இன்கிறீடியன்ஸ்தான்:). அதனால தோசை ஸ்பெஷலிஸ்ட் ஆரும் சண்டைக்கு வந்திடப்பூடா சொல்லிட்டேன்:)).. அதுக்குத்தான் பழகலாம் வாங்கன்னேன்ன்:)).

சரி இப்போ இங்கின இருப்பவை என்ன?
கொண்டைக் கடலை அரைகப்..
பச்சைப் பட்டாணிக் கடலை அரை கப்..
உழுந்து அரை கப்..
சமைத்த ரைஸ்(சோறு) அரைக் கப்..
வாழி அரிசி அதாவது.. பார்லி ரைஸ் - 3 மேசைக்கரண்டி.

சோறு தவிர்த்து அனைத்தையும் ஊறப்போட்டு அரைத்து, அதனோடு சோறும் சேர்த்து அரைச்சு... வழமைபோல அப்பச்ச்சோடா உப்பு சேர்த்து புளிக்க வச்சுச் சுட்டேனா... ஸ்ஸ்ஸ்ஸ் நல்லெண்ணெய் ஊத்தி ஊத்தி சுட... சூப்பரா வந்துதே.....


இந்தாங்க தேங்காய்ப் பூச் சட்னியோடு சாப்பிட்டுப் பாருங்கோ!!! உஸ்ஸ்ஸ் அப்பாடா அஞ்சில ஒண்டு சொல்லிட்டேன்ன்:)
=================================================
2.இது என்ன தெரியுதோ? உங்களுக்கு எங்க தெரியப்போகுது, நானே சொல்லிடறேன்ன்.. இது பயற்றங்காய் வித் பலாக்கொட்டைப் பிரட்டல் கறி( என் ஃபேவரிட் ஆக்கும்:)).

எப்பூடியெனில், வெங்காயம் செத்தல் மிளகாய் போட்டு எண்ணெயில் வதக்கி, அதனுள் பயத்தங்காய், பலாக்கொட்டை போட்டு உப்பும் போட்டு, உள்ளியும் போட்டு கொஞ்சம் வதக்கி, பின் கொஞ்சம் வெந்தயமும், கறித்தூளும் சேர்த்து நன்கு பிரட்டி, மூழ்கும் அளவு மட்டும், கொதி தண்ணி விட்டு, மூடி அவிய விடுங்க.. அவிந்து வந்ததும், மூடியை எடுத்துப்போட்டு, கறிவேப்பிலை சேருங்க, பக்கத்திலயே நின்று:).. பிரட்டிப் பிரட்டி நன்கு தண்ணீர் வத்தும் வரை, பிரட்டி... இறக்கி தேசிக்காய்/எலுமிச்சம் புளி பிளிந்து விடுங்க... கறிவேப்பிலையை கடசியாப் போட்டால்தான் அப்படியே பபபச்சையா இருக்கும், முன்னமே போட்டிட்டால் கலர் போயிந்தி:).

சைவக் காரர் எல்லாம் கண்ணை மூடுங்க:)
=========================இடைவேளை=======================
3.இடைவேளையில அசைவம் உண்ணலாம் வாங்க:).. இது sea bass [ uk kind:) ] மீனில் செய்த பிரட்டல் கறி.. தோசைக்கு சூப்பராம் என, வீட்டுக்கு வந்த விருந்தினர் புகழ்ந்தாங்கோ:)).. செய்முறை வேணுமெண்டால்ல்.. செக் -பவுன்டில அனுப்புங்க:) சொல்லித் தாறேன்:)

^._.^ ==== ^._.^ ==== முடிஞ்சு..^._.^ போச்ச்ச்ச்:)==== ^._.^ ==== ^._.^ 
சரி சரி இப்போ திறங்க.... கண்ணைத்தான்:)

4.இது உங்களுக்கு பழக்கப் பட்டுப் போய்விட்ட... அதே புதினா மேடைதான்ன்:)
இது புதினா சட்னி. இது நான் செய்வது, கொஞ்சூண்டு எண்ணெயில், செத்தல் மிளகாய், மிளகு, உள்ளி அதனோடு ஒரு கைப்பிடியளவு ஷனா டாலை ஊறப்போட்டு சேர்ப்பேன், அல்லது ரோஸ்டட் ஷனா டால் சேர்த்து வறுத்து, அதனுள் இவ்விலைகளைக் கொட்டி நன்கு வதக்கி இறக்கி ஆறியதும்... பழப்புளி உப்பு, தேங்காய் சேர்த்து நன்கு அரைத்தெடுப்பேன், அல்லது, அரைத்து பாதி தேசிக்காய்ப்புளி சேர்ப்பேன்...

எனக்கொரு டவுட்டு:).. நான் பல நேரங்களில் இலைவகை/கீரைவகை வாடியிருந்தால், அவற்றை துப்பரவு செய்து, வெட்டமுன் தண்ணியில் போட்டு விடுவேன். பின்பு பார்க்க அவை எல்லாம் புதுசா மரத்தில் இருப்பதுபோல துளிர்த்து நிற்கும். அதன்பின் சமைக்க ஆசையாக இருக்கும்.

அந்த நினைப்பில், நல்லாயிருந்த புதினாவை பிடுங்கி வந்து, நைட் தண்ணியில் போட்டு விட்டு, காலை எழுந்து பார்க்கிறேன், அத்தனை இலைகளும் கறுத்து விட்டது, அத்தோடு தண்ணியும் கறுப்பாகியிருந்தது... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... ஏன் புதினாவுக்கு மட்டும் இப்பூடி ஆகுது?:).
==================================================================
5. ஆவ்வ்வ்வ் தலைப்பிலே சொன்னபடி இது அஞ்சூஊஊஊஊ ஆவது குறிப்பாக்கும்:)).. 
இது என்னவெனத் தெரியுதோ? இதுதான் துவரம்பருப்பு வடைக்கறி:).. நான் ஆவியில் அவிக்காமல் நேரடியாகப் பொரித்தெடுத்தேன். இது பொதுவா எல்லோருக்கும் தெரியும் முறையில்தான் செய்தேன், அதனால குறிப்பெல்லாம் தேவையில்லை.. பேசாமல் சாப்பிடுங்கோ:).

^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ 
ஊசிக்குறிப்பு:
வாங்க!! வாங்க... கையைக் கழுவுங்கோ:), வெயிட்..வெயிட்ட்.. உடனேயே சாப்பிடுவதா?:) சாப்பிட முன்.. “மொய்ய்ய்ய்” எழுதுங்க:)).. ஆங்ங்ங்ங்.. வெயிட் வெயிட்.. இன்னும் இருக்கில்ல:)) ச்சும்மா அவதிப்படப்பூடா:).. எங்க உங்கட சின்னி விரலைக் காட்டுங்க.. ஆஆஆஆஆ.. வோட் பண்ணிட்டீங்களா?:)).. ஆவ்வ்வ்வ்வ் இப்போ சாப்பிடுங்கோ... “பொன்ன பித்தி”.. இது ஃபிரெஞ்சாக்கும்:)
^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ 
இந்தத் தொப்பியும் கண்ணாடியும், போனமுறை நீங்கள் எல்லோரும் கொடுத்த, மொய்ப் பணத்தில் வாங்கியதென்பதை மிகவும் தாழ்மையுடன் கூறிக்கொள்கிறார்.. பு.பூ:)
^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ 

Friday, 1 November 2013

கண்டு பிடிக்க முடியுமா உங்களால்?:)

நாம் பரிஷிலே(Paris) போயிருந்தபோது, பலதடவைகள் ஈபிள் டவருக்குப் போயிருக்கிறோம், பிள்ளைகளுக்கு அதிகம் பிடித்த இடமாக அது இருந்தது, அதனால் பெரும்பாலான பின்னேரங்கள், அங்கு போனோம்.

அங்கு அதிகமாக சைனீஸ்தான் இப்படியான தொழில் செய்கிறார்கள்.. அதாவது, எமது முகத்தை வரைகிறார்கள்.. முன்னாலே இருக்க விட்டு கடகடவென வரைவார்கள்.. அதுக்கு எடுத்துக் கொள்வது வெறும் 5, 6 நிமிடங்கள் மட்டுமே... அப்படம் இன்னொரு நாளில் வெளிவர இருக்கிறது:).

இப்போ இது என்ன தெரியுமோ? இதுவும் ஒருவர், இரண்டு நிமிடங்களுக்குள் வரைந்தவையே இவை. சும்மா பக்குப் பக்கென கீறித் தள்ளுகிறார். முன்னாலே பிரஷும் பெயிண்ட்டும் இருக்கும்.. அவரின் கை பின்னி பெடலெடுக்குது.

சரி, படம் போல பார்த்திட்டுப் போகாமால்.. படத்தில் இருப்பது என்ன? கண்டு பிடித்துச் சொல்லுங்கள்.. தீபாவளிக்கு இலவச இனிப்பு உங்கள் வீட்டு வாசல் கதவைத் தட்டும்:)

இது ஒன்று:)

இது ரெண்டு:)

இரண்டையும் கரீட்டாக் கண்டு பிடித்துச் சொல்லோணும்:)
_________________________(^-^)__________________________

குண்டூசி இணைப்பு:
கம்பன் வீட்டுத் தறியும் கவிபாடும் எனத் தெரியுமெல்லோ உங்களுக்கு? ஆனா அதை நேரில் பார்த்ததுண்டோ?:)) இதோ குயிலிங் செய்யுதே அஞ்சு வீட்டுச் செல்லம்:)).. என்ன அயகா:) கதிரையில் இருந்து.... ஸ்ஸ்ஸ் எல்லாம் அதிராட ட்ரெயினிங்தான்ன்ன்ன்:)))

ஊசி இணைப்பு:)
தேம்ஸ் கரைமீது அடித்துச் சத்தியம் பண்ணுறேன்ன்ன்:) இதை அதிரா செய்யவில்லையாக்கும்:)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
உஸ்ஸ்ஸ்ஸ் ஸப்ப்பாஆஆஆஆ.. இரவோடிராப் போய் ஒவ்வொரு வீடாய்த் தேடி:), இருட்டில சுட்டெடுத்து:) வருவதுக்குள் வாழ்க்கையே வெறுத்துப் போகுதே சாமீஈஈஈஈஈஈஈ:))
[[நான் முதலில் போட்டது அவசரமா சுட்டது, அதில் இருக்கும் எழுத்துக்கள் எனக்கே பிடிக்கல்ல, அதனால மாத்திட்டேன்ன்:))]]

என அலுக்காமல் சளைக்காமல், அடுத்த சூட்:) டுக்கு ஆயத்தமாபவர்... உங்கள் பேரன்புக்கும் + பெரு மதிப்புக்கும் உரிய : புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்..
==================================================================================

Thursday, 31 October 2013

கங்கையிலே என் படகு மிதந்து கொண்டிருக்கிறது!!!

அன்புள்ள அம்மாவுக்கு!!



ம்மா.. நலமாக இருக்கிறீங்களோ? அப்பா எப்படியம்மா இருக்கிறார்? எனக்கு தெரியும், என்னையும் தம்பியையும் விட உங்கள் மனதில் வேறு எந்த சிந்தனையுமே இருக்காது.

ம்பி இப்போ நன்கு வளர்ந்து விட்டானம்மா.பார்க்க அப்பா மாதிரியே இருக்கிறான்.அவனின் பேச்சு, நடை, உடை, பாவனை அனைத்தும், அப்பாவை என் கண் முன்னே கொண்டு வருகிறதம்மா!. என்னப் பார்ப்போரெல்லாம், “மேரி அக்கா” போலவே இருக்கிறாய் என உன்னைத்தானம்மா சொல்கிறார்கள்.

நாங்கள் என்ன பாவம் செய்தோமம்மா? ஏன் எம்மை ஆண்டவன் படைத்தார்? ஆரைக் கேட்டாலும் சொல்கிறார்கள், “உங்கள் அப்பா, அம்மா போல தங்கமான மனிஷரைக் காணவே முடியாது” என. அப்போ, அப்படிப் பெற்றோருக்குப் பிறந்த நமக்கு, ஏனம்மா இப்படி நிலைமை வந்தது? எதுக்காக அம்மா சுனாமி வரவேண்டும்? சரி வந்ததுதான் வந்துது.. எதுக்காக அம்மா என்னையும் தம்பியையும் விட்டு விட்டு, உன்னையும் அப்பாவையும் கொண்டு போக வேண்டும்?.

ன்று நீங்கள் இருவரும் இறந்தே போய்விட்டீர்கள் என்ற செய்தி கேட்டதும், செய்வதறியாது, நானும் சாகிறேன் என கடல் நோக்கி ஓடினேன் அம்மா, ஆனால் என்ன காலமோ பின்னாலே தம்பி, அக்கா!! அக்கா!! என எழுப்பிய ஓலம் காதில் கேட்டதும்,என்னால் கடலில் குதிக்க முடியவில்லையம்மா!!.

ப்போ அவனுக்கு ஐந்து வயதுதானே அம்மா? அவனுக்கு என்ன தெரியும் குழந்தை!!. எனக்காவது அப்போ பத்து வயதாகியிருந்தது. அதன் பின்பு இன்றுவரை எவ்வளவோ நடந்து விட்டதம்மா...அனைத்தையும் உன்னிடம் சொல்ல வேணும் என மனம் துடிக்கிறதம்மா. அதன் பின்னர் எங்கள் மாமா எங்களை வெளிநாட்டுக்குக் கூப்பிட்டார். நாங்கள் வந்து சில வருடங்களில், அவரும் மாரப்பால் போய் விட்டார். இப்போ பொறுப்புக்கள் அனைத்தையும் சுமந்தபடி, நானும் தம்பியும் வாழ்கிறோமம்மா.

னக்கு உங்களிருவரின் முகமும் நினைவிருக்கிறது, ஆனால் தம்பி, கண்ணை மூடிப் பார்த்துவிட்டுச் சொல்கிறான், நினவு வருகுதில்லையாம். அவனுக்குக் காட்ட, ஒரு படம் கூட இல்லையே அம்மா.. அத்தனையும் சுனாமியோடு போய் விட்டதே..

ப்போ நான் ட்ரைவிங் லைசன்ஸ் எடுத்து விட்டேனம்மா. நன்றாகக் கார் ஓடுகிறேன். அப்பாவின் மடியில் இருந்து, வீட்டுக் கேட்வரை, கோன் அடித்து அடித்துக் கார் ஓடியது, என்  கண் முன்னே எப்பவும் வருகிறது. எங்கள் காரின் கலர்கூட, தம்பிக்கு நினைவில்லையாம் அம்மா.

ப்பவெல்லாம் அப்பாவோடு, கோன் அடித்தபடி காரால் நாம் வந்து இறங்க, நீ ஓடிவந்து கதவு திறந்து ரீ ஊத்தித் தருவாய் அம்மா. இப்போ திறப்பைப் போட்டு நானே வீட்டைத் திறந்து வந்து, ரீ ஊத்திக் குடிக்கிறேன் அம்மா.

ம்பி நன்றாகப் படிக்கிறானம்மா, அப்பா அடிக்கடி சொல்வதுபோல, அவனை ஒரு டாக்டர் ஆக்கவே நானும் பாடுபடுகிறேனம்மா. நீ எனக்குச் சொன்ன அறிவுரைகளையெல்லாம், நான் அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறேனம்மா. அவனை எப்படியெல்லாம் உயர்த்தி, ஒரு நல்ல நிலைமைக்குக் கொண்டுவர முடியுமோ, அப்படியெல்லாம் பாதுகாக்கிறேன் அம்மா.

னக்குக் காதல் பிடிக்காதென்பது எனக்குத் தெரியுமம்மா. ஆனாலும் அது தெரிந்திருந்தும்,நானும் ஒரு சின்னப் பெந்தானே அம்மா, அப்பாவைப்போல, உன்னைப்போல எம்மில் ஒருவர் அதிக பாசம், அக்கறை காட்டும்போது, மனம் அப்படியே துவண்டு விடுகிறதம்மா.... அதனால் நானும் ஒருவரைக் காதலித்தேனம்மா.. நல்லவர், அன்பானவர், இங்கு பெரிய பதவியில் இருப்பவர், எம் கவலைகளை மறக்கடித்து, எமக்கு வெளிச்சம் காட்டுவார் என, விரும்பினேன் அம்மா..

“கங்கையிலே என் படகு மிதந்து கொண்டிருக்கிறது..
அதில் ஒருவர் ஏறினார்..
கரைசேர்க்கப் போகிறார் என நம்பினேன்ன்..ஆனால்
நடுக்கடலிலேயே விட்டுவிட்டு இறங்கி விட்டாரம்மா..”

காதலித்தது தப்பா அம்மா? எனக்கு வாழ்க்கையில் எல்லாமே வெறுத்துவிட்டதம்மா, ஒரு 20 வயதுப் பெண் பேசக்கூடாத பேச்சுத்தானம்மா, ஆனால் “பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்” என நீ முன்பு சொல்லும் பழமொழிதான் நினைவுக்கு வருகிறதம்மா.

ன் வாழ்க்கையின் வசந்த காலங்கள் எல்லாம் முடிந்து விட்டனவம்மா. இனிமேல் என் வாழ்வுக்கு வசந்தம் கிடைக்குமென, நான் ஆரையும் நம்ப மாட்டேனம்மா. இப்போ நான் வாழ்வது தம்பிக்காகவே. அவன் ஒரு நல்ல நிலைமைக்கு வரும்வரை, நான் ஒரு நடைப்பிணமாகவெனினும், வாழ்ந்தே ஆகவேணுமம்மா.

சூரன்போர் வருகிறது, ஊரிலே அப்பா என்னைத் தோளிலே தூக்கி, சூரன் ஒளிந்துவரும் மாங்கொப்பில் மாங்காய் பிடுங்க, மக்களோடு மக்களாக இடிபடுவது, மனக் கண்ணிலே வந்து போகுதம்மா.நான் எந்த நினைவையும் தம்பியோடு பகிர்ந்து கொள்வதில்லையம்மா, ஏனெனில் அவன் சந்தோசமாக இருக்கிறான், நன்கு படிக்கிறான். அதனால் நான், என் எண்ணங்கள், கனவுகள், கவலைகள் அனைத்தையும் என்னுள்ளே புதைத்து விடுவேனம்மா.

ன் துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள எனக்கு ஆருமே இல்லையம்மா. அதனால்தான் கண்ணீர் வழிந்து ஓட ஓட இக்கடிதத்தை எழுதுகிறேன். இதன் மூலம் எனக்கு கொஞ்சமாவது ஆறுதலும், உன்னோடு பேசிவிட்ட திருப்தியும் கிடைக்கிறதம்மா.

இப்படிக்கு,
என்றும் உன் அன்பு மகள்,
பிலோமினா!.
===============================================================================

குட்டிச் சிந்தனை:
சமீபத்திலே, என் காதுக்கு எட்டிய ஒரு உண்மைத் தகவலை வைத்து, என் கற்பனையில் ஒரு கடிதம் வரைந்திருக்கிறேன். இதன் கரு மட்டுமே உண்மை, மற்றவை யாவும், என் கற்பனை கொடுத்து எழுதப்பட்ட கடிதமே.

எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும், என அனைத்தையும் நகைச்சுவையாக்கி, சிரித்தபடி வாழப் பழகி வந்தாலும், இப்படியான சம்பவங்களைக் கேட்கும்போது, மனம் ஒரு கணம் கலங்கத்தான் செய்கிறது. சுனாமியால் பாதிக்கப் பட்டோர்..இப்படி எத்தனை எத்தனை ...
==============================================================


புலாலியூர்ப் பூஸானந்தாவின், களவெடுத்த கைவண்ணம்:)

Tuesday, 22 October 2013

அதிரா வீட்டில்.. 
 இன்னொரு அதிரசம்:) சே..சே.. அதிசயம்:))

ஹா..ஹா..ஹா..ஹா.... வாங்கோ.. வாங்கோ.. அதிரசம்.. சே..சே... அதிசயம் காண வாங்கோ.. முன்பு இதேபோல ஒன்று நிகழ்ந்ததே... அதை மறந்தோர்ர் அல்லது படிக்காதோர் ஒரு தடவை.. அதிரா வீட்டு ஜன்னலுக்கு வாங்கோ... போய்ப் படிக்காட்டில், இரவைக்குக் கனவு கண்டு, கட்டிலால விழுவீங்க:) அதுக்கு மீ பொறுப்பல்ல இப்பவே சொல்லிட்டேன்ன்ன்ன்:)).

ஒரு சூரியகாந்தியின் கதை 

சரி இது நடந்தது போன வருட ஆரம்பம் என நினைக்கிறேன்.. ஒவ்வொரு அதிசயத்துக்கும் காரணம் எங்கட அம்மாதான்:).. போன தடவை அம்மா வந்து நின்ற நேரம், எங்கட வீட்டு ஜன்னலில் நான் ஏதோ ஒரு செடி, சாடியில் வச்சிருந்தேன். சில நாட்களில் செடி பட்டுவிட்டது, ஆனா அந்த சாடி மண்ணில், சில புல் பூண்டுகளோடு, ஒரு குட்டி மரமும் முளைத்திருந்தது.

அப்போ அந்தக் குட்டி மரத்தைப் பார்த்து, அம்மா சொன்னா, “அதிரா இது ஏதோ தேசி மரம்போல தெரியுது, பிடுங்கி எறிஞ்சிடாதே, வளர விடு பார்ப்போம்” என.

அவ இங்கு நிற்கும்வரை நான் அதைக் கவனிப்பதில்லை. அம்மாதான், ஏனைய பூண்டுகளைப் பிடுங்கி விட்டு, இதை மட்டும் பத்திரப்படுத்தி, தண்ணி ஊத்தி வந்தா.. அதுவும் கிசுகிசுவென.. இலை வச்சு வளர்ந்துது.

பின்னர் அம்மா அவட ஊருக்குப் போயிட்டா. ஆனா போனதிலிருந்து, டெய்லி ஃபோன் பண்ணும்போது, அம்மரத்தையும் விசாரிக்கத் தவறுவதில்லை. போன கிழமைகூடக் கேட்டா, இப்போ எப்படியிருக்கென. கிடுகிடுவென நிறைய இலைகள் வச்சு, முட்களும் வந்திருக்குது என்றேன்.

 “ஓ அது அந்த யெலோ லெமனாகத்தான் இருக்கோணும், அதன் விதையை நான் சும்மா அதில் போட்டதாக நினைவு” என்றா. நான் சொன்னேன்,  “இருக்காதே அம்மா.. இது லைம் ஆகத்தான் இருக்கும், நான் தான் மஞ்சள் லெமன் வாங்குவதில்லையே” என்றேன்.  “இல்ல, நீ ஒரு தடவை வாங்கியதாக நினைவு” என்றா:).. ஹா..ஹா..ஹா.. சரி காய்க்கட்டும் பார்ப்போம் என விட்டிருக்கு.

இதுக்கு..தாவர எக்ஸ்பேர்ர்ட்ட் எல்லோரும் என்ன சொல்லப் போறீங்க?:)

ஒருவேளை குட்டி ஒரேஞ் ஆக இருக்குமோ?:)..அதுக்கு, பெரிய சாடி மாத்து, மண் போட்டு வை என பெரும் ஆரவாரம்.. விரைவில பெரிய சாடிக்கு இடம் மாற்ற இருக்கிறேன்.
======================__()__======================

இதுதான் நான் கூறிய, எங்களிடம் இருக்கும் ஐந்தூரியம் ..இமா...
====================================================

ஆவ்வ்வ்வ் எங்கட வீட்டு ”மின்ட்” அறுவடை இது.. மகியை நம்பி:) அப்படியே அடியோடு:), ஒவ்வொரு கிணுக்காக வெட்டி எடுத்துட்டேன்ன்ன்ன்:)).. மரம் பட்டிட்டால்ல்ல்.. நேரே அமெரிக்காதான் வருவேன்:))

இது முதலாவது ஆறுவடை.. சே..சே.. டங்கு ஸ்லிப்பாச்ச்ச்:)) அறுவடை:)
இது ரெண்டாவது அறுவடை:.. இன்னும் ஒறுவடை:) செய்யலாம்ம்:) பின்பு அடுத்த வறு:)டம்தான்ன்:))

ஊசி இணைப்பு:
எங்கிட்டயேவா?:).. ஹையோ இம்முறை பதிவு முழுவதும் இமாறீச்சரின் கதையே அடிபடுதே:). இமா சொன்னா, இங்கத்தைய சூப்பர் மார்கட்டுகளில் குட்டிக் குட்டிப் போத்தல்களில் “மணித்தக்காழி” வத்தல் கிடைக்குது என. நானும் சரி பார்க்கலாமே என தேடினேன்.. இவர் கிடைத்தார், ஆனா இது ஒன்றுக்குமே போதாதே.. மூக்குப் பொடிபோல இருக்கே:)... ஆனா இதுதான் அதா:)??.

பின் குறிப்பு: சந்தோசம் பொயிங்குதே:) என வாங்கிட்டு வந்து.. கூகிளில் தேடினேன்ன்.. இது “அது” இல்லையாம்ம்ம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
=========================================================================
சரி சரி இத்தோடு பதிவை நிறுத்திடலாம் என ஓசிக்கிறேன்ன்:) இதுக்கு மேல எழுதினால்ல் உங்கட எல்லோரின்:)வயசுக்கும்:) மயக்கம்:) வந்திடும்.
=========================================================================

பின் செருவல்:)
பார்த்தீங்களோ இவர் தெரியும்தானே என்னோட(bro..) புரோ:) வும்..அதாவது குயின் அம்மம்மாட மூத்த பேரனும்.. ஆத்துக்காரங்களும்:).. அவங்க வெடிங்குக்கு இதில பிஸ்கட் வந்துது வாங்கிச் சாப்பிட்டோம்ம்ம்...

அது செமிக்க முதல்.. எனக்கு பெறாமகன் பிறந்திட்டார்ர்:)) அவருக்கும் பிஸ்கட் வித்தவை.. நாங்க வாங்கிச் சாப்பிட்டோம்ம்.. மொத்தத்தில சாப்பிடும் குடும்பமா இருக்கே:) என தப்புக் கணக்குப் போடாதீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது சேவை மனப்பாங்காக்கும்:))
^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ 
இறைவன் மனிதனுக்கு நிர்ணயித்த வேகத்தில், ஏறுகின்ற வேகத்தை விட, இறங்குகின்ற வேகம்தான் அதிகம். விதையைப் பார்க்கும்போது, கண்களுக்கு மரம் தெரியாது, விதை மரமான பின் தான், கண்ணுக்கு தெரிகிறது. வினை அறுவடை செய்யப்பட்ட பின்புதான் அனுபவம் கிடைக்கிறது. “ஏன் நடந்தது?”, “நமக்கா இது நடந்தது?” என எண்ணிப் பார்க்கும்போது, ஏதோ ஒன்று நடந்திருக்கும்.
இவ் அளப்பரிய அரிய சிந்தனையை.. உங்களுக்காக வேர்வை சிந்தி:), படித்து:) கண்ணதாசன் அங்கிளிடமிருந்து சுட்டு வந்தவர்... உங்கள் பெருமதிப்பிற்குரிய: புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்..:)
^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^

Tuesday, 8 October 2013

 என்னைக் கொஞ்சம் தனியாக அழ விடுங்கள்:)

 “தனிமை”...


என்னைக் கொஞ்ச நேரம் தனியாக இருக்கவிடுங்கள் நான் அழப்போகிறேன்.

என் துயரங்களைத் தலையணையில் இறக்கி வைக்கப் போகிறேன்.
விதியின் சுழற்சியை மீறமுடியாத நேரங்களிலெல்லாம் இப்படி அழுவது என் பழக்கம்.

என்னைத் தனியாக இருக்க விடுங்கள்.

பூமி தன் கடமையை ஒழுங்காகச் செய்கிறது.
மேகம் தன் கண்களை அடிக்கடி திறந்து மழை பொழிகிறது.
காலங்களின்படி புஷ்பங்கள் மலர்கின்றன.
அலுப்புச் சலிப்பில்லாத இயற்கையின் ஓட்டத்தில் எனக்கு மட்ட்டும் ஏனோ, அடிக்கடி சலிப்பு வருகிறது. இனம் தெரியாத பயம் வருகிறது.
காரணம் இல்லாமல் துணிச்சல் வருகிறது.
ஒன்றும் புரியாத நேரத்தில், ஓ வெனக் கதறவேண்டும்போல் இருக்கிறது.
ஒருதடவை கண்ணீர் விட்டு அழுது முடித்தால், கனம் உள்ளத்தில் குறைகிறது.

என்னைக் கொஞ்ச நேரம் தனியாக இருக்கவிடுங்கள் நான் அழப்போகிறேன்.

நான் ஒரு வலை பின்னினேன், அதில் நானே சிக்கிக் கொண்டேன்.
நான் ஒரு காடு வளர்த்தேன், அதிலிருந்து வெளியேற எனக்கே வழி தெரியவில்லை.
நான் ஒரு கிணறு வெட்டினேன், அதில் நானே விழுந்து விட்டேன்.
ஆக்கியதும் நானே.. என்னை அழித்துக் கொண்டதும் நானே...

சிந்திக்கச் சிந்திக்க எனக்கே என்மீது கோபம் வருகிறது.
என்னை நானே கோபிக்காமல் இருக்க வேண்டுமென்றால், நன்றாக அழ வேண்டும்.
என்னைத் தனியாக அழ விடுங்கள்.

நான் ஒரு மகாகவி(பூஸ்) என்பதில் சந்தேகமில்லை.
எப்படி வாழ்வது என எனக்குத் தெரியாததிலிருந்தே, நான் ஒரு மகாகவி(பூஸ்:)) ஆகத்தான் இருக்கவேண்டுமென்பதில், உங்களுக்குச் சந்தேகமில்லை.

பாம்பின்(பூஸின்)அழகை நான் ரசிக்கிறேன். புலியின் மீது அழகான கோடுகள் இருக்கின்றனவே, அவற்றை நான் தடவிப் பார்க்கிறேன்.
நான் கவிஞனல்லவா? அவற்றை நான் ரசிக்கிறேன்.

ஆனால், பாம்பு என்னைக் விழுங்குகிறது, புலி என்னைக் கடிக்கிறது. நான் என்ன செய்வேன், என்னைத் தனியாக இருக்க விடுங்கள்.. மீ அழப்போகிறேன்...

கற்பூரம் எரிந்து போனபிறகு, அதன் கரித்தூள்கூட மிஞ்சுவதில்லை.
நான் கற்பூரமாக இருந்திருக்கக் கூடாதா?... என்னுடைய காலடிச் சுவடுகள் பூமியில் பதியாமல் இருந்திருக்குமே.

எண்ணங்களை வலிதாகச் சொல்லுகிறேன்... அது எல்லோர் மனதிலும் பதிகிறது.

எனது சிந்தனைப் புஸ்பங்களுக்கு நானே உரம்.என்னைத் தின்ற பிறகுதான், அவை பூத்துக் குலுங்குகின்றன.

தொளிலாளி கட்டிய வீட்டில், தொழிலாளி குடியிருக்க முடியாததுபோல, எனது சிந்தனைகள் எனக்கு ஆறுதல் அளிக்கவில்லை.

இறைவனிடம் முறையிட வேண்டும்போல் இருக்கிறது.
இறைவன் தான் வரமாட்டேன் என்கிறார்.என்னை அங்கே வரச் சொல்லுகிறார். சீக்கிரம் போய்விடலாமா என எண்ணுகிறேன்.
கால்கள் சங்கிலிகளால் பிணைக்கப் பட்டிருக்கின்றன.
சாலை சுத்தமாக இருக்கிறது, ஆனாலும் பயணத்தைப் பற்றிய பயம் இருக்கிறது.

பிறருக்காகவே நான் இங்கே இருக்க வேண்டியிருக்கிறது. என்னுடைய அபிலாஷைகளெல்லாம் ஆகாயத்தில் இருக்கின்றன.

எனக்காக வாழ வேண்டும் என்றால், நான் மேலே போய் விடவேண்டும்...

ஆனால் பிறகு ஆருக்காவது நான் திரும்பி வரவேண்டும் என்றால், இறைவன் அதுக்கொரு வழி வைக்கவில்லை.. என்ன செய்வேன்?...

என்னைக் கொஞ்ச நேரம் தனியாக இருக்கவிடுங்கள் நான் அழப்போகிறேன்.

நான் மூடனாக இருந்திருந்தால், எதையும் சிந்தித்திருக்க மாட்டேன். தாயை அறியாத கன்றுபோல, வாயும் வயிறுமாக வாழ்ந்திருப்பேன்.

நினைக்கத் தெரிந்த மனதை எனக்கு வைத்தது, இறைவன் செய்த குற்றம். அந்தக் குற்றத்துக்கான தண்டனையை, நான் அனுபவிக்கின்றேன்.

அவன் நியதிகளுக்கு நான் கட்டுப் பட்டாக வேண்டும். ஆனால் அவனோ என் தேவைகளை உணர மாட்டானாம், நான் என்ன செய்வேன்ன்?..

நான் அழத்தான் வேண்டும், என்னைத் தனியாக அழ விடுங்கள்...

எதை முழுதாகச் சொல்ல முடியவில்லையோ, அதை உளறிக் கொட்டுவது என் வழக்கம்.
உடைந்து போன கண்ணாடித் துண்டுகளை, ஒவ்வொன்றாக எடுத்து ஒட்ட வைக்க, யார் யாரால் முடியுமோ, அவர்களெல்லாம், சிதறிக் கிடக்கும் இந்தச் சிந்தனைகளை, ஒட்ட வைத்துப் பாருங்கள்...

என்னை மட்டும் தனியாக இருக்க விடுங்கள்.. ஏனெனில் நான் அழப் போகிறேன்:).
+++++++++++++++++++++++++++++++++ __( ) __++++++++++++++++++++++++++++++++++

ஊஊஊஊசி இணைப்பு:
அடடா.. எப்பவுமே பகிடியாகத் தானே அதிரா பேசுவா:) இண்டைக்கு என்னாச்சோ ஏதாச்சோ?:) என எண்ணிக் கொண்டே.. உங்க உங்க குலதெய்வங்களையும்:) வேண்டிக்கொண்டு:).. அதிராவுக்கு இப்படி ஏதும் கவலைகள் வந்திருக்கப் படாதென:)... படிச்சிருப்பீங்களே [இல்லயே நாங்க ஏதும் அப்படி கும்பிடேல்லையே:) எண்டு மட்டும் சொல்லிடாதீங்க பிளீஸ்ஸ்:) சுவீட் 16 கார்ட்:) தாங்காது:) ரொம்ப மென்மையாக்கும்:)).. 

ஹா..ஹா..ஹா.. அதுதான் மீ சொல்ல வருவதென்னவென்றால், இம்முறை வாங்கி வந்த கண்ணதாசனின் கட்டுரைப் புத்தகத்திலே ஒரு பகுதி...  தலைப்பு “தனிமை”... படிச்சேன், சற்று வித்தியாசமாக இருக்கே பகிரலாமே என...

இன்று எங்களுக்கு கும்மிருட்டு.. + குளிர்.. அதனால, ரேபிள் லாம்பைப் போட்டு விட்டு.. ஒண்ணொண்ணா புத்தகம் பார்த்து ரைப் பண்ணிய பதிவாக்கும்... ச்சோஓ:) . இதனை ஆரும் மிஸ் “சூஸ்”:) பண்ணினால்ல்.. மீ அவிங்களை “சூ” பண்ணிடுவேன்ன்.. ஹையோ இது வேற சூ:).  மிஸ் “சூஸ்” என்பது.. கொப்பி பண்ணிப் போய் எங்காவது வெளியிடுதல்:)[ இதையும் என்னையே சொல்ல வைக்கிறியே முருகா!!!!)]... நீங்க கேட்டால் நான், மாட்டேன் என்றா சொல்லிடப் போறேன்ன்ன்:).
=================================================================




Friday, 4 October 2013

ச்சும்மா.. சும்மா முளைக்குதாமே:)

ன்னது  “ச்சும்மா சும்மா” முளைக்குதா?:) அதென்னது எண்டுதானே எல்லோரும் மூச்சிறைக்க:) ஓடிவாறீங்க:).. வெயிட் வெயிட் முதல்ல கன்றோல் பண்ணுங்க:) உங்கட மூச்சுக்குச் சொன்னேன்:)..

 “இது மணத்தக்காழியாக இருக்குமோ”?:)
கொஞ்சம் “சும்மா” இதில இருங்கோ, என் சொந்தக் கதை:) யோகக் கதை:) சொல்றன் கேளுங்கோ:)..

நானும் எவ்ளோ நாளைக்குத்தான் நல்லபிள்ளையாகவே நடிப்பது?:) இல்ல ”சும்மா” சொல்லுங்கோ?:) எவ்ளோ நாளைக்குத்தான்?:).. அதனாலதான் இன்று பொயிங்கிட்டேன்ன்ன்:)).. எரிமலை எப்படிப் பொறுக்கும்?:) .ம்ம்ம்ம்ம்ம்ம்:).

சரி பொயிண்ட்டுக்கு வருவம்:).. இலங்கையில் இருந்த காலத்தில நான் சாப்பிடாத இலைவகை இல்லை எனலாம்...
1)பசளிக்கீரை, புளிக்கீரை, தட்டைக் கீரை, குப்பைக் கீரை,அறக்கீரை, மரக்கீரை, மிகுதி நினைவிலில்லை.

2)அடுத்து, இலைவகையில்.... குறிஞ்சா, முசுட்டை,அகத்தி இலை, மொசுமொசுக்கை இலை, காணாந்தி இலை, முள்முருக்கம் இலை, முருங்கை இலை,பாஷன்ஃபுரூட் இலை, வாதநாராணி இலை, லெச்சகட்டை இலை,தூதுவளை இலை,செம்பரத்தம் இலைகூட நல்லதெனச் சொல்லி சுண்டிய நினைவு:)...

3)அடுத்து பொன்னாங்காணி, வல்லாரை, பீற்ரூட் இலை,
4)வெளிநாட்டுக்கு வந்தபின்னர்...
கரட் இலை(இப்போ கண்டுபிடிச்சது:)), மேத்தி இலை, மல்லி இலை, கடுகு இலை...

இன்னும் இருக்கலாம், நினைவில் இப்போ இருப்பது இவ்ளோதான்ன்... இத்தனையும் சாப்பிட்டிருக்கிறேன், ஆனா..ஆனா.. இந்த மணத்தக்காழி என்பது... பெயரே மீ கேள்விப்படவில்லை... 2008 ம் ஆண்டு அறுசுவைக்குள் நுழைந்தபோதுதான், முதன் முதலில் இப்பெயர் கேட்டு, இப்படியும் இருக்கோ என வியந்துபோய்.. வேர்த்திருந்தேன்:)).. சரி அதுவும் போகட்டும்...

அது முடிந்து போன வருடம்.. ஆசியா பக்கம் என நினைக்கிறேன்,வோக் போனபோது,“ச்சும்மா சும்மா” மணத்தக்காளி நிறைய முளைத்திருப்பதைக் கண்டு, ஆய்ந்து வந்து சமைத்து, குறிப்புப் போட்டிருந்தா... சரி இருக்கட்டும் என விட்டிருந்தேன்ன்..:))

அடுத்து இமா பக்கத்திலே... குருவி போட்ட எச்சத்தாலோ என்னவோ. “ச்சும்மா சும்மா” முளைச்சுதே மணத்தக்காளி என படம் போட்டு.. பழமும் சாப்பிட்டேன் எனக் கூறியிருந்தா...:)) அதையும் பார்த்திட்டு:), என் கிட்னி:), என் மனதுக்கு சொல்லியது “இங்க பார், நீ இருக்கும் நாடு அப்படி:), முழு வெள்ளைகள் இருக்குமிடம், அதனால கன்றோல் பண்ணிக்கொண்டு இரு என”:).. சரி என மனமும், கேட்டுவிட்டுப் பேசாமல் இருந்துது:).

கொஞ்ச நாளால், சமீபத்தில் பார்க்கிறேன்ன்ன்..  “எங்க வீட்டு தொட்டியில் “ச்சும்மா சும்மா” ஒரு மணத்தக்காளி முளைச்சு.. இங்கின பாருங்கோ பழங்களை.. எவ்ளோதான் நானும் சாப்பிடுவது.. பிரிஜ்ஜிலும் வச்சு, இப்போ குழம்பு செய்தோம்” என குறிப்பு போட்டிருந்தா.. மஞ்சள்பூ மகி:).. இதைக் கேட்டதும்.. என் மனம் கொன்றோலை இழந்து:).. பொயிங்க:) ஆயத்தமானது:).. கிட்னி சொல்லிச்சுது:)..  “அடங்கு அடங்கு... அடுத்த தடவை கனடா போகும்போது, நிட்சயம் வாங்கிப் பார்த்திடலாம்” என:)..  சரி அதுவும் சரிதான் என.. ஒருமாதிரி, மோர் எல்லாம் குடிச்சு:).. நோர்மலுக்கு வந்த வேளை:))..


===============================INTERVAL================================
இதேபோலவே, முன்பும் நான் பொயிங்கிய:) ஒரு பதிவு:).. 

அன்று வாங்கிய ஒரியினல் “அகரகர்” இன்றும் செய்யாமல், என் கிச்சின் றோயரிலே, அதைத் திறக்கும் போதெல்லாம் “என்னை எப்போ பிள்ளை..... நீ செய்யப்ப்ப்ப்ப்போறேஏஏஏஏஏ?:) எனக் கேட்குது:))
=========================முடிஞ்சு போச்ச்ச்ச்:)============================

சரி, அடுத்து போனகிழமை எனக்கொரு படம் வந்திச்சே..:))..
 “அதீஸ்.. இது என்ன மரம்?:) கண்டு பிடிங்க பார்க்கலாம்”?:))என.. நான் கொஞ்சமும் டவுட்டே இல்லாமல்:).. “ஓ நேக்குத் தெரியுமே.. இது கத்தரி”:) எண்டேன்ன்ன்... உடனே பதில் வந்திச்சா.. “இல்ல இல்ல இது மணத்தக்காளி”:) நான் நடல்ல:), எங்க வீட்டு கார்டினில் “ச்சும்மா சும்மா”:) முளைச்சிருந்துது.. நான் கன்ஃபோமா கண்டு பிடிச்சேன்ன் இது மணத்தக்காளிதானாம்:))” என.. கோல்ட் பிஸ்ஸு அஞ்சு சொன்னாவா...:))...

இதுக்கு மேலும்.. ஒரு சுவீட் 16 பிள்ளை:) ச்சும்மா இருக்குமோ?:) நீங்களே சொல்லுங்கோ?:) மீ பொயிங்கிட்டேன்ன்:)... இன்று காலை லேசான மழை... வானம் கறுத்திருந்தது, பெரிதாக குளிரவில்லை.... இப்படிப் பொழுதிலே.. பூஸ் ஒன்று புறப்பட்டது “ச்சும்மா வோக்” போகலாமே என:))

என் கணவர், என் வலது கையைப் புடிச்சு இழுத்துச் சொன்னார்:) “அதிரா.. நீங்க ஓல்ரெடி சுவீட் 16 தானே:) இந்த மழை குளிருக்குள் வோக் வாணாமே:).. இன்னும் எதுக்கு மெலியோணும்:) ஏதும் சுகயீனமாகிடப்போகுது” என:).. மீ சொன்னேன் “இஞ்ச பாருங்கோ.. நான் ஒரு இலட்சியத்துக்காகப் போகிறேன்ன்:)) என்னை வாழ்த்தி அனுப்பி வையுங்கோ”:) என சொல்லிப்போட்டு:) “ச்சும்மா“ தான் போனேன்ன்.. ஆத்தங்கரைக்கு வோக் பண்ண....

நான் என்பாட்டிலே நடந்து போனனா:).. அங்கின ஒரு குட்டிமரம்.. பார்க்க அஞ்சுவின் மணத்தக்காளி போலவே இருந்துது:).. சே..சே.. அப்படி இருக்காதே..:) என எண்ணிக்கொண்டு தொடர்ந்து நடந்தனா.. குட்டி குட்டியா நிறைய மரங்கள்.. நிறையப் பூ கொஞ்சம் காய்களோடு... உடனே பாதையை விட்டு, மணலில் இறங்கிட்டேன்ன்ன்.. படம் எடுக்கத்தான்ன்ன்:):)..

ஒரு தக்காளி மரத்தை ஆரும் கிட்ட கொண்டுவந்தால், கண்ணை மூடியபடி அதன் வாசத்தை வைத்தே சொல்ல முடியுமெல்லோ இது என்ன மரம் என.... அப்படித்தான், இதனிலிருந்தும் ஒரே தக்காளி வாசம்.. கமகமத்தது...

இப்போ மணத்தக்காளி ஸ்பெஷலிஸ்ட்.. இமா றீச்சரும்.. மஞ்சள் பூ மகியும்... இதுக்கு என்ன சொல்லப் போறீங்க?:).. தெரிந்தவர் எல்லோரும் வந்து என் டவுட்டைக் கிளியர் பண்ணிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்.. நான் எடுத்ததும் இப்போ சமைக்க மாட்டேன்ன்../ இல்ல சமைக்கலாமோ? ஆனா, கன்ஃபோம் பண்ணினா,  கன்றுகள் பிடுங்கி வந்து எங்கட கார்டினில் நடலாம் எனும் ஓசனை:).. 


 காய்கள் கொஞ்சம் பெரிதாக இருக்கே....
 வேறு தாவரத்தோடு பின்னிப் பிணைந்து முளைச்சிருக்கினம்...



பூ தெரியுதெல்லோ?

குண்டூசி:) இணைப்பு:
இம்முறைக் கோடைகாலம் வழமையை விட நல்ல வெயிலாக இருந்ததாம், அதன் காரணத்தால் எங்கு பார்க்கிலும் ஒரே பழங்களாக பழுத்துக் கிடக்கு.. அதிகம், பிளாக்பெரீஸ், கிரான்பெரீஸ்..  இன்றும் கொஞ்சம் பிளாக்பெரீஸ் புடுங்கி வந்தனே...


இதேபோல ஆற்றங்கரையில் பிடுங்கி, அதில் செய்த கிரான்பெரி ஜாம், என் ஃபிரெண்ட் ஒருவர் தந்தா... சூப்பராக இருக்கு...

ஊசி இணைப்பு:
இது எங்கட வீட்டுக்கு அருகாமையில்... ஆப்பிள் பழங்கள் பழுத்து சொரிந்து விழுகுது.. ஆரும் தேடுவதில்லை.. ரோட்டோரம் நிற்கும் மரத்தில் மட்டும், நான் எட்டிப் பிடுங்கி வந்து உப்போடு தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கு... இங்குள்ளவர்கள் கடையில் பக் பண்ணி வருவதை மட்டுமே வாங்கி உண்கின்றனர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

============================================================
கணவன் - மனைவி.. குடும்ப உறவில்...உடலைத் தாண்டி, அதனுள் அடங்கியிருக்கும் ஆன்மா குளிர்ச்சியாக இருக்க வேண்டும், இருவரும் துன்பங்களைப் பங்கு போட்டுக் கொள்பவர்களாக அமைய வேண்டும்,இன்பத்தில் பங்குபெற எவ்வளவோ பேர் கிடைப்பார்கள், தமக்கு வரும் சோதனைகளைப் பகிர்ந்துகொண்டு மகிழ்ச்சியை உருவாக்குபவர்களே.. அபூர்வமான கணவன், மனைவி...
 இவ் அரிய தத்துவத்தை.. கண்ணதாசனின் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து... படித்து எடுத்து வந்தவர்.. 
மேன்மைமிகு:) புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்:)..
============================================================