நல்வரவு_()_


Tuesday, 22 October 2013

அதிரா வீட்டில்.. 
 இன்னொரு அதிரசம்:) சே..சே.. அதிசயம்:))

ஹா..ஹா..ஹா..ஹா.... வாங்கோ.. வாங்கோ.. அதிரசம்.. சே..சே... அதிசயம் காண வாங்கோ.. முன்பு இதேபோல ஒன்று நிகழ்ந்ததே... அதை மறந்தோர்ர் அல்லது படிக்காதோர் ஒரு தடவை.. அதிரா வீட்டு ஜன்னலுக்கு வாங்கோ... போய்ப் படிக்காட்டில், இரவைக்குக் கனவு கண்டு, கட்டிலால விழுவீங்க:) அதுக்கு மீ பொறுப்பல்ல இப்பவே சொல்லிட்டேன்ன்ன்ன்:)).

ஒரு சூரியகாந்தியின் கதை 

சரி இது நடந்தது போன வருட ஆரம்பம் என நினைக்கிறேன்.. ஒவ்வொரு அதிசயத்துக்கும் காரணம் எங்கட அம்மாதான்:).. போன தடவை அம்மா வந்து நின்ற நேரம், எங்கட வீட்டு ஜன்னலில் நான் ஏதோ ஒரு செடி, சாடியில் வச்சிருந்தேன். சில நாட்களில் செடி பட்டுவிட்டது, ஆனா அந்த சாடி மண்ணில், சில புல் பூண்டுகளோடு, ஒரு குட்டி மரமும் முளைத்திருந்தது.

அப்போ அந்தக் குட்டி மரத்தைப் பார்த்து, அம்மா சொன்னா, “அதிரா இது ஏதோ தேசி மரம்போல தெரியுது, பிடுங்கி எறிஞ்சிடாதே, வளர விடு பார்ப்போம்” என.

அவ இங்கு நிற்கும்வரை நான் அதைக் கவனிப்பதில்லை. அம்மாதான், ஏனைய பூண்டுகளைப் பிடுங்கி விட்டு, இதை மட்டும் பத்திரப்படுத்தி, தண்ணி ஊத்தி வந்தா.. அதுவும் கிசுகிசுவென.. இலை வச்சு வளர்ந்துது.

பின்னர் அம்மா அவட ஊருக்குப் போயிட்டா. ஆனா போனதிலிருந்து, டெய்லி ஃபோன் பண்ணும்போது, அம்மரத்தையும் விசாரிக்கத் தவறுவதில்லை. போன கிழமைகூடக் கேட்டா, இப்போ எப்படியிருக்கென. கிடுகிடுவென நிறைய இலைகள் வச்சு, முட்களும் வந்திருக்குது என்றேன்.

 “ஓ அது அந்த யெலோ லெமனாகத்தான் இருக்கோணும், அதன் விதையை நான் சும்மா அதில் போட்டதாக நினைவு” என்றா. நான் சொன்னேன்,  “இருக்காதே அம்மா.. இது லைம் ஆகத்தான் இருக்கும், நான் தான் மஞ்சள் லெமன் வாங்குவதில்லையே” என்றேன்.  “இல்ல, நீ ஒரு தடவை வாங்கியதாக நினைவு” என்றா:).. ஹா..ஹா..ஹா.. சரி காய்க்கட்டும் பார்ப்போம் என விட்டிருக்கு.

இதுக்கு..தாவர எக்ஸ்பேர்ர்ட்ட் எல்லோரும் என்ன சொல்லப் போறீங்க?:)

ஒருவேளை குட்டி ஒரேஞ் ஆக இருக்குமோ?:)..அதுக்கு, பெரிய சாடி மாத்து, மண் போட்டு வை என பெரும் ஆரவாரம்.. விரைவில பெரிய சாடிக்கு இடம் மாற்ற இருக்கிறேன்.
======================__()__======================

இதுதான் நான் கூறிய, எங்களிடம் இருக்கும் ஐந்தூரியம் ..இமா...
====================================================

ஆவ்வ்வ்வ் எங்கட வீட்டு ”மின்ட்” அறுவடை இது.. மகியை நம்பி:) அப்படியே அடியோடு:), ஒவ்வொரு கிணுக்காக வெட்டி எடுத்துட்டேன்ன்ன்ன்:)).. மரம் பட்டிட்டால்ல்ல்.. நேரே அமெரிக்காதான் வருவேன்:))

இது முதலாவது ஆறுவடை.. சே..சே.. டங்கு ஸ்லிப்பாச்ச்ச்:)) அறுவடை:)
இது ரெண்டாவது அறுவடை:.. இன்னும் ஒறுவடை:) செய்யலாம்ம்:) பின்பு அடுத்த வறு:)டம்தான்ன்:))

ஊசி இணைப்பு:
எங்கிட்டயேவா?:).. ஹையோ இம்முறை பதிவு முழுவதும் இமாறீச்சரின் கதையே அடிபடுதே:). இமா சொன்னா, இங்கத்தைய சூப்பர் மார்கட்டுகளில் குட்டிக் குட்டிப் போத்தல்களில் “மணித்தக்காழி” வத்தல் கிடைக்குது என. நானும் சரி பார்க்கலாமே என தேடினேன்.. இவர் கிடைத்தார், ஆனா இது ஒன்றுக்குமே போதாதே.. மூக்குப் பொடிபோல இருக்கே:)... ஆனா இதுதான் அதா:)??.

பின் குறிப்பு: சந்தோசம் பொயிங்குதே:) என வாங்கிட்டு வந்து.. கூகிளில் தேடினேன்ன்.. இது “அது” இல்லையாம்ம்ம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
=========================================================================
சரி சரி இத்தோடு பதிவை நிறுத்திடலாம் என ஓசிக்கிறேன்ன்:) இதுக்கு மேல எழுதினால்ல் உங்கட எல்லோரின்:)வயசுக்கும்:) மயக்கம்:) வந்திடும்.
=========================================================================

பின் செருவல்:)
பார்த்தீங்களோ இவர் தெரியும்தானே என்னோட(bro..) புரோ:) வும்..அதாவது குயின் அம்மம்மாட மூத்த பேரனும்.. ஆத்துக்காரங்களும்:).. அவங்க வெடிங்குக்கு இதில பிஸ்கட் வந்துது வாங்கிச் சாப்பிட்டோம்ம்ம்...

அது செமிக்க முதல்.. எனக்கு பெறாமகன் பிறந்திட்டார்ர்:)) அவருக்கும் பிஸ்கட் வித்தவை.. நாங்க வாங்கிச் சாப்பிட்டோம்ம்.. மொத்தத்தில சாப்பிடும் குடும்பமா இருக்கே:) என தப்புக் கணக்குப் போடாதீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது சேவை மனப்பாங்காக்கும்:))
^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ 
இறைவன் மனிதனுக்கு நிர்ணயித்த வேகத்தில், ஏறுகின்ற வேகத்தை விட, இறங்குகின்ற வேகம்தான் அதிகம். விதையைப் பார்க்கும்போது, கண்களுக்கு மரம் தெரியாது, விதை மரமான பின் தான், கண்ணுக்கு தெரிகிறது. வினை அறுவடை செய்யப்பட்ட பின்புதான் அனுபவம் கிடைக்கிறது. “ஏன் நடந்தது?”, “நமக்கா இது நடந்தது?” என எண்ணிப் பார்க்கும்போது, ஏதோ ஒன்று நடந்திருக்கும்.
இவ் அளப்பரிய அரிய சிந்தனையை.. உங்களுக்காக வேர்வை சிந்தி:), படித்து:) கண்ணதாசன் அங்கிளிடமிருந்து சுட்டு வந்தவர்... உங்கள் பெருமதிப்பிற்குரிய: புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்..:)
^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^

65 comments :

 1. முதலில் உங்களுக்கு பெறா மகன் பிறந்த செய்தி கேட்டு மனமார்ந்த வாழ்த்துக்கள் .
  தேசிக்காய் காய்த்தால் சொல்லுங்கள் நானே நேரில் வந்து பெற்றுக் கொள்கின்றேன் .
  (இலண்டன் ஒன்றும் சுவிசுக்குத் தூரமில்லைப் பாருங்கள் சகோதரி :))) ......) பிஸ்கட்
  கொஞ்சம் எங்களுக்கும் அனுப்பி வையுங்கள் .விலாசம் சுவிஸ் வாங் பாசல் :)))))

  ReplyDelete
 2. Present! :) will come back in a bit

  ReplyDelete
 3. தேசிக்காய்க் கண்டோ...குழப்பமா கிடக்கு அதிரா..
  ஆனா இலையைப் பார்த்தா அதுபோலவும் தெரியுது..
  இலையைக் கிள்ளி மணந்து பார்த்தாலே தெரியுமே..
  தேசியோ தோடையோ எதென்னாலும் வாசம் வருமே..:)

  நானெண்டா என்னெண்டாலும் மணந்தே பார்த்துப் பிடிச்சிடுவன்...
  அதி உயர் மோப்ப சக்தி என்னிடம்..:))
  அதுக்காண்டி அங்கை மேல ஓடுற 4 காலோன்னு நினைக்கவேண்டாம் ப்ளீஸ்..:)

  த ம.3

  ReplyDelete
 4. பெறாமகன் பிறந்ததோ எப்ப... எங்கை..
  சொல்லவே இல்லை... வாழ்த்துக்கள்!..

  பூஸானந்தா மொழி அருமை...
  விதைச்சது வளர்ந்து பலன் தரேக்கைதான் அதைப்பற்றித் தெரியவரும்...
  விதைச்சது நச்சோ நல்லதோ என்று..:)

  எல்லாமே சூப்பர்.. வாழ்த்துக்கள் அதிரா!

  ReplyDelete
 5. m... பெறா பேரன் என்று நினைச்...

  ;))))

  அந்தூரியம்தான் இது. வெள்ளை!

  நான் ஜுனிப்பர் பெரி என்றா சொன்னனான் அதீஸ்!! ப்ளக் நைட்ஷேட் என்று சொல்லேல்லயா? இது... பழம். totara மரம் மாதிரி இருக்கும் என்று நினைவு. பாவம் ம.தக்கா'ளி'. ;D

  தேசி.. நல்லா வருது. கட்டாயம் பெரிய தொட்டிக்கு மாற்றுங்கோ. வேர் அறுந்து போகாமல் கவனம். அப்பிடியே ஒரு தடியும் குற்றிவிடுங்கோ. ஒட்டுச் செடி இல்லை. பூக்க நாள் ஆகலாம்.

  மின்ட் பூக்குமட்டும் விட்டு இருக்கிறீங்கள். ;D

  ReplyDelete
 6. தேசிக்காய் மரத்தில் தேசிக்காய் காய்க்கிம் போது சொல்லி அனுப்புங்கோ ஓடிவாரன் ;:)))

  ReplyDelete
 7. எப்படியோ அடிக்கடி மரம் பற்றி அடிக்கடி பதிவு போட்டு தனிமரத்தையும் ஓடிவரச்செய்வது அதிசயம்தான்:)))

  ReplyDelete
 8. பெறாமகன் பிறந்ததோ எப்ப... எங்கை..
  சொல்லவே இல்லை... வாழ்த்துக்கள்!..//
  @ima and @ilamathy yes yes yes :)) thats grand son ...:)))))))))

  ReplyDelete
 9. ;))) @ AnjuS

  அதீஸ்... சோடியா இன்னொரு தேசிக்கன்று, இன்னொரு அந்தூரியமும் வாங்கி வையுங்கோ கெதியா. :)

  வஞ்சி இது வஞ்சி... இப்பதான் முதல் தரம் கேட்கிறன்.

  மின்ட்... ப்ளாஸ்டிக் கதிரையில வைச்சால் நல்லாச் சடைக்கும் என்று யாராவது சொன்னவையோ அதீஸ்!!!

  ReplyDelete
 10. வீட்டுக்குளேயே சூரியகாந்தி வளர்த்த கதை இன்னும் மறக்கலை அதுக்குள்ளே எலுமிச்சையா ஆ ஆஅ :))

  ஆமாம் அது என்ன கிசு கிசுன்னு வளர்ந்தது ...வளரும்போதே சினிமா கிசு கிசு சொல்லி வளர்தீங்களா :))

  எனக்கு இப்பவே ஒரு வடையாச்சும் வேணும் ஆறு வடைல ஒன்னையும் காணோம் :))

  ReplyDelete
 11. //அதிரா வீட்டில்..

  இன்னொரு அதிரசம்:) //

  ஆஹா, [அதிரஸம்] வந்திடுச்சுன்னு ஆசையில் ஓடி வந்தேன்.

  ஆனால் என்ன ஒரு ஏமாற்றம்.

  இருப்பினும் மறக்காமல் வோட் அளித்து விட்டேனாக்கும்.

  6வது வோட் என்னோடது. ஞாபகம் இருக்கட்டும்.


  >>>>>

  ReplyDelete
 12. //எனக்கு பெறாமகன் பிறந்திட்டார்ர்:))//

  ஒத்தையா இரட்டையா ?


  >>>>>

  ReplyDelete
 13. // விதையைப் பார்க்கும்போது, கண்களுக்கு மரம் தெரியாது, விதை மரமான பின் தான், கண்ணுக்கு தெரிகிறது. வினை அறுவடை செய்யப்பட்ட பின்புதான் அனுபவம் கிடைக்கிறது. “ஏன் நடந்தது?”, “நமக்கா இது நடந்தது?” என எண்ணிப் பார்க்கும்போது, ஏதோ ஒன்று நடந்திருக்கும்.//

  சுட்டது அருமை. இன்னும் சுடச்சுடவே உள்ளது.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 14. [im]http://www.blogcdn.com/www.pawnation.com/media/2013/05/cats-stuck-in-trees-1-510x600.jpg[/im]

  ReplyDelete
 15. இனிய வணக்கம் சகோதரி..
  நலமா?
  மரத்தை பார்த்தால் எலுமிச்சை போலத்தான் தெரியுது..
  என் வீட்டிலும் இதுபோலவே இருக்கிறது.
  அம்மா சொன்னா சரியாத்தான் இருக்கும்...

  ReplyDelete
 16. நல்வினையை விதைக்கையிலே
  நாளைவரும் விளைபொருள் அறிவோம்..
  பொல்லா வினையை விதைக்கையில் தான்
  அதன் விளைவினை கண்டு
  எப்போதும் எதிர்பார்ப்பு இருக்கும்...
  நல்வினையை விதைப்போம்...
  நற்பொருளை பெற்றிடுவோம்...
  கவியரசரின் அற்புதமான சிந்தனைகளை
  இங்கே தந்த சகோதரிக்கு நன்றிகள்.

  ReplyDelete
 17. எலுமிச்சை என்று நினைக்கிறேன்... இலையை வாசம் பிடித்தால் தெரிந்து விடும்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 18. மரம் காய்ச்சதும் சொல்லி அனுப்புங்கள் வந்துடறேன்...

  ReplyDelete
 19. //அது செமிக்க முதல்.. எனக்கு பெறாமகன் பிறந்திட்டார்ர்:)) அவருக்கும் பிஸ்கட் வித்தவை.// அவ்வ்வ்வ்வ்.
  //பெறாமகன் பிறந்ததோ எப்ப... எங்கை...சொல்லவே இல்லை. வாழ்த்துக்கள்!.// அதுதானே.
  மணத்தக்காளி விவகாரம் இன்னும் முடியேல்லைப்போல.
  இப்ப இங்கு indiansommer நல்ல வெயில்.மிண்டில் திரும்ப புது இலைகள் வளருது. எலுமிச்சையோ,தேசியோ காய்க்கும்போதுதான் தெரியும்.
  பாட்டு நானும் முதல் தடவையா கேட்கிறன்.பூஸானந்தா சுட்டது நல்லாயிருக்கு.புதுப்புது டிசைன் எல்லாம் போட்டிருக்கிறீங்க நல்லாயிருக்கு. நல்ல அறுவடை.

  ReplyDelete
 20. அதிராவ்..தூங்கப்போறம்! நாளை சந்திப்போம், வரட்டா? டாட்டா! குட் நைட்! ;) :)

  ReplyDelete
 21. // விதையைப் பார்க்கும்போது, கண்களுக்கு மரம் தெரியாது, விதை மரமான பின் தான், கண்ணுக்கு தெரிகிறது. வினை அறுவடை செய்யப்பட்ட பின்புதான் அனுபவம் கிடைக்கிறது. “ஏன் நடந்தது?”, “நமக்கா இது நடந்தது?” என எண்ணிப் பார்க்கும்போது, ஏதோ ஒன்று நடந்திருக்கும்.//

  சுடச்சுட அதிரசம் மாதிரி சுவைக்கும்
  சுட்ட மொழிகள்..!

  ReplyDelete
 22. [co="OrangeRed"]ஆட்ட்ட் வாங்கோ வாங்கோ எல்லோரும் வாங்கோ ரீ எடுங்கோ... அவதிப்படப்பூடா ஆரியபவானில மரக்கறி பிர்ராணி, ஓசை, இடியப்பம், எல்லாம் ஓடர் கொடுத்திட்டேன்ன் இப்போ வந்திடும்.. எல்லோரும் சாப்பிட்டுத்தான் போகோணும் சொல்லிட்டேன்ன்..:) [/co]

  [im]http://img.thesun.co.uk/aidemitlum/archive/00643/cat1_682_643397a.jpg[/im]

  ReplyDelete
 23. Ambal adiyal said...
  முதலில் உங்களுக்கு பெறா மகன் பிறந்த செய்தி கேட்டு மனமார்ந்த வாழ்த்துக்கள் .
  தேசிக்காய் காய்த்தால் சொல்லுங்கள் நானே நேரில் வந்து பெற்றுக் கொள்கின்றேன்

  [co="OrangeRed"]வாங்கோ அம்பாளடியாள்.. அட ஒரு தேசிக்காய்க்காக அங்கிருந்து இங்கு வரப்போறீங்களோ?:)) வாங்க வாங்க... காய்க்கட்டும்...:)..

  மியாவும் நன்றி. [/co]

  ReplyDelete
 24. Mahi said...
  Present! :) will come back in a bit

  [co="OrangeRed"] மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ் கொஞ்சம் ஓடியாங்கோஓஓஓஓ இன் எ பிட் எண்டால்ல் ரெண்டு நாள்ள:)) என அர்த்தமோ அமெரிக்காவில?:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எங்கிட்டயேவா:)).. ஒபாமா அங்கிளிட்ட சொல்லி அமெரிக்கர்களுக்கு ஆங்கிலீசு சொல்லிக் கொடுக்கச் சொல்லோணும்:))..

  ஹா..ஹா..ஹா.. வாங்க மஞ்சள் பூ வாங்க... அதிரா உப்பூடித்தான்:) பயந்திடாதீங்க.. உடன் வருகைக்கு மியாவும் நன்றி மகி. [/co]

  ReplyDelete
 25. இளமதி said...
  தேசிக்காய்க் கண்டோ...குழப்பமா கிடக்கு அதிரா..
  ஆனா இலையைப் பார்த்தா அதுபோலவும் தெரியுது..
  இலையைக் கிள்ளி மணந்து பார்த்தாலே தெரியுமே..
  தேசியோ தோடையோ எதென்னாலும் வாசம் வருமே..:)//

  [co="OrangeRed"] வாங்கோ இளமதி வாங்கோ.. வாசம் தேசிபோலதான் இருக்கு... ஆனாலும் பிஞ்சு இலைதானே அதனாலோ என்னவோ ஸ்ரோங் வாசமா இல்லை.[/co]

  நானெண்டா என்னெண்டாலும் மணந்தே பார்த்துப் பிடிச்சிடுவன்...
  அதி உயர் மோப்ப சக்தி என்னிடம்..:))

  [co="OrangeRed"] ஹா..ஹா..ஹா..ஓ புரியுது:) புரியுது:).. எங்க என் கையைக் கொஞ்சம் மணந்து பார்த்துச் சொல்லுங்க நான் என்ன காண்ட்பாக் பாவிக்கிறன் என:))) [/co]


  ReplyDelete
 26. இளமதி said...
  பெறாமகன் பிறந்ததோ எப்ப... எங்கை..
  சொல்லவே இல்லை... வாழ்த்துக்கள்!..
  [co="OrangeRed"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உந்த நாடெல்லாம் கொண்டாடிச்சினமே ஏதோ தங்களுக்குப் பிறந்ததுபோலவே:)).. ஜேர்மனியில் கொண்டாடேல்லையோ?:)) அந்த ரின் ல திகதி போட்டிருக்கு பிறந்த திகதி.. என்னோட நெம்பராக்கும்..க்கும்..க்கும்..:). [/co]

  விதைச்சது வளர்ந்து பலன் தரேக்கைதான் அதைப்பற்றித் தெரியவரும்...
  விதைச்சது நச்சோ நல்லதோ என்று..:)
  [co="OrangeRed"] ஓம் அதுக்குத்தான் சொல்லுவார்கள்.. அலரி விதை போட்டா மாமரமா முளைக்கும் என... கதைச்சுத் தப்பிடவும் முடியாது குற்றமும் சொல்ல முடியாது, நாம் போடுவதுதானாமே முளைக்கும்...

  ஏன் ஏதோ குழந்தை:) மாறிப் போட்டு விட்டுதே என நினைச்சு, ஆண்டவன் நல்ல மரத்தை வளர்த்து தந்தால் என்னவாம்ம் கர்ர்ர்ர்ர்:)).. ஹா..ஹா மியாவும் நன்றி இளமதி. [/co]

  ReplyDelete
 27. இமா said...
  m... பெறா பேரன் என்று நினைச்... [co="OrangeRed"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஆஆஆ வாங்க இமா வாங்க... [/co]
  அந்தூரியம்தான் இது. வெள்ளை!
  [co="OrangeRed"] கரீட்டு போன வருடம் பூத்திச்சே.. [/co]

  நான் ஜுனிப்பர் பெரி என்றா சொன்னனான் அதீஸ்!! ப்ளக் நைட்ஷேட் என்று சொல்லேல்லயா? இது... பழம். totara மரம் மாதிரி இருக்கும் என்று நினைவு. பாவம் ம.தக்கா'ளி'. ;D
  [co="OrangeRed"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்க அதுக்குப் பெயரே சொல்லலியே... சே..சே... வர வர எங்கட றீச்சர் வல்லாரை சாப்பிடுவதை நிறுத்திட்டாஅ:)) [/co]

  ReplyDelete
 28. இமா said...
  தேசி.. நல்லா வருது. கட்டாயம் பெரிய தொட்டிக்கு மாற்றுங்கோ. வேர் அறுந்து போகாமல் கவனம். அப்பிடியே ஒரு தடியும் குற்றிவிடுங்கோ. ஒட்டுச் செடி இல்லை. பூக்க நாள் ஆகலாம். [co="OrangeRed"] ஓ நீங்க சொன்ன ரெண்டையும் செய்யத்தான் பெரிய சாடி தேடிக்கொண்டிருக்கிறன். ஓ பூக்க நாளாகுமோ? கடைகளில் குட்டி மரமாவே பூத்திருக்கே.. அவை எல்லாம் ஒட்டியதோ?.. நான் ஊரில ஒருநாள் செம்பரத்தை ஒட்ட,ி வெற்றி கண்டேனே...:)) [/co]

  மின்ட் பூக்குமட்டும் விட்டு இருக்கிறீங்கள். ;D
  [co="OrangeRed"] ஹா..ஹா..ஹா.. பூக்க முன் பிடுங்கோணுமோ? அது இம்முறை கோடையில் நாங்கள் அந்தாட்டிக்கா போயிட்டமெல்லோ அதனாலதான் அவை பற்றை ஆகிட்டினம் இமா. [/co]

  ReplyDelete
 29. [co="OrangeRed"]வாங்கோ நேசன்..

  உண்மைதான் அடுத்தடுத்து மரப்பதிவாகுது:).

  மிக்க நன்றி. [/co]

  ReplyDelete
 30. Cherub Crafts said...

  [co="OrangeRed"] வாங்கோ அஞ்சு வாங்கோ.. [/co]
  பெறாமகன் பிறந்ததோ எப்ப... எங்கை..
  சொல்லவே இல்லை... வாழ்த்துக்கள்!..//
  @ima and @ilamathy yes yes yes :)) thats grand son ...:)))))))))

  [co="OrangeRed"] அடக் கடவுளே.. அஞ்சுவுக்கு ஆராவது ஆங்கிலீசு ஃபிரீயாப் படிப்பியுங்கோ... மாறிக்கீறிக் கதைக்கிறா:) ஆண்டவா இதென்ன ஆங்கிலம் தோன்றிய பிரித்தானியாவுக்கு வந்திருக்கும் ஓதனை:)) [/co]

  ReplyDelete
 31. இமா said...
  ;))) @ AnjuS

  அதீஸ்... சோடியா இன்னொரு தேசிக்கன்று, இன்னொரு அந்தூரியமும் வாங்கி வையுங்கோ கெதியா. :)
  [co="OrangeRed"]என்ன இமா சொல்றீங்க.. அந்தூரியம் பூத்திட்டுது, அதிலயே 3 கன்றுகள் ஒன்றாக இருக்கு.

  ஆனா தேசிக்கு மீ எங்கின போவேன்ன்?.. அப்போ இன்னொரு விதை போட்டு முளைக்க வைக்கட்டோ? இங்கு தேசிக்காயில் விதை இருக்காதே.. அது வேற பிரச்ச்சனை.. வைரவா இப்போ மீ எங்கின போவேன்ன்ன்:). [/co]

  வஞ்சி இது வஞ்சி... இப்பதான் முதல் தரம் கேட்கிறன்.
  [co="OrangeRed"]உண்மைதான் நிறையப் பேர் கேட்டிருக்க மாட்டோம், நானும் அந்த சீ டியில்தான் கேட்டேன்.

  இன்னும் பல பாட்டுக்கள்.. ஜேசுதாசின் குரலில் சூப்பரா இருக்கு..

  காஞ்சிப் பட்டுடுத்து கஸ்தூரிப் பொட்டு வச்சு... [/co]

  மின்ட்... ப்ளாஸ்டிக் கதிரையில வைச்சால் நல்லாச் சடைக்கும் என்று யாராவது சொன்னவையோ அதீஸ்!!!
  [co="OrangeRed"] ஹா..ஹா..ஹா... அது மரத்தால வெட்டினதும், ரயேட்டா இருக்கு கொஞ்ச நேரம் காலாற:) இருக்கப் போறம் எண்டிச்சினம் அதுதான் இருக்க விட்டனான்:))...

  மியாவும் நன்றி இமா. [/co]

  ReplyDelete
 32. Cherub Crafts said...
  வீட்டுக்குளேயே சூரியகாந்தி வளர்த்த கதை இன்னும் மறக்கலை அதுக்குள்ளே எலுமிச்சையா ஆ ஆஅ :))
  [co="OrangeRed"] ஹா..ஹா..ஹா.. அதுதான் அஞ்சு.. ஏதோ ஒன்று முளைச்சிடுது:) [/co]

  ஆமாம் அது என்ன கிசு கிசுன்னு வளர்ந்தது ...வளரும்போதே சினிமா கிசு கிசு சொல்லி வளர்தீங்களா :))

  [co="OrangeRed"] என்ன கொடுமை வைரவா?:) இன்னும் ஏன் உலகம் அழியாமல் இருக்கூஊஊஊஊ:)) [/co]
  எனக்கு இப்பவே ஒரு வடையாச்சும் வேணும் ஆறு வடைல ஒன்னையும் காணோம் :))
  [co="OrangeRed"] கொஞ்சம் இருங்க:) சுடச்சுட பருப்புவடை கந்தசஸ்டி பாறணைக்குச் சுட்டுத்தாறன்:))..

  மியாவும் நன்றி கோல்ட் ஃபிஸ்:). [/co]

  ReplyDelete
 33. ஒரு செடி வளரும் போதே அதன் இலையை கொஞ்சம் நசுக்கி பார்த்தாலே வாசனையில் தெரிந்துவிடுமே அது என்ன வகை என்று ...:-).

  ReplyDelete
 34. ஒரு செடி வளரும் போதே அதன் இலையை கொஞ்சம் நசுக்கி பார்த்தாலே வாசனையில் தெரிந்துவிடுமே அது என்ன வகை என்று ...:-).

  ReplyDelete
 35. கடைசி படத்தில் கடைசியில் போவது ஜீனோவா ..:-) :-) :-)

  ReplyDelete
 36. [co="OrangeRed"] ஆவ்வ்வ்வ்வ் கொஞ்சம் இருங்க.. கொஞ்சம் இருங்க.. என்னமோ பபபபபபச்சையா தெரியுதேஏஏஏஏஏஏஏஏஏ.. இமா.. “அங்கின” அப்போ:) தெரிஞ்சது இப்போ இங்க தெரியுதேஏஏஏ.... அஞ்சு உங்களுக்குத் தெரியுதாஆஆஆஆஆஆ.... எனக்காராவது சுட்டாறின தண்ணி தெளியுங்க... என்னமோ பபபபபச்சையாத் தெரியுதூஊஊஊஊ:)).... இமா உங்கட மூத்த மகளுக்கு தகவல் சொல்லிடுங்க:)).. மூத்த மருமகன் வந்திட்டார்ர் என:)))

  ஆஆஆஆ ஜெய் வாங்க வாங்க.... எப்போ தியானம் முடிச்சு சிஷ்யனுக்கு அடிச்சுப்போட்டு:) விடு நான் போறேன் எனச் சொல்லிட்டு புறப்பட்டு வந்தீங்க?:)).. வெல்கம் பக்.. பலபேர் தேடிச்சினம் உங்களை... அது புளியமரத்தில கல்வீடே கட்டிவிட்டதாக அறிவிச்சிட்டோம்ம்..:)) [/co]

  ஜெய்லானி said...
  கடைசி படத்தில் கடைசியில் போவது ஜீனோவா ..:-) :-) :-)

  [co="OrangeRed"]ஹா..ஹா..ஹா... வந்த வேகத்திலயே என்னா ஒரு கண்டுபிடிப்பூ:).. உதுக்குப் பதில் இப்போ இமாவுக்கு மட்டும்தான் தெரிஞ்சிருக்கும்:)..

  நீண்ட இடைவெளிக்குப் பின் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி.. மியாவும் நன்றி. [/co]

  ReplyDelete
 37. வை.கோபாலகிருஷ்ணன் said...


  இருப்பினும் மறக்காமல் வோட் அளித்து விட்டேனாக்கும்.

  6வது வோட் என்னோடது. ஞாபகம் இருக்கட்டும்.//

  [co="OrangeRed"] வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ... ஹா..ஹா..ஹா... வோட் போட்டுவிட்டீங்களோ?:) அதானே பார்த்தேன்ன்ன்ன்... சே..சே.. எதையாவது சொல்லி மிரட்டினால்தான் வோட்டே போடீனம்:). [/co]

  ReplyDelete
 38. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //எனக்கு பெறாமகன் பிறந்திட்டார்ர்:))//

  ஒத்தையா இரட்டையா ?

  [co="OrangeRed"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எல்லோருக்கும் ரெட்டை பிறக்குமா?:)) [/co]

  சுட்டது அருமை. இன்னும் சுடச்சுடவே உள்ளது.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  [co="OrangeRed"] மியாவும் நன்றி கோபு அண்ணன் அனைத்துக்கும். [/co]

  ReplyDelete
 39. மகேந்திரன் said...
  இனிய வணக்கம் சகோதரி..
  நலமா?
  [co="OrangeRed"] வாங்கோ மகேந்திரன் அண்ணன்... [/co]

  மரத்தை பார்த்தால் எலுமிச்சை போலத்தான் தெரியுது..
  என் வீட்டிலும் இதுபோலவே இருக்கிறது.
  அம்மா சொன்னா சரியாத்தான் இருக்கும்...

  [co="OrangeRed"] எலுமிச்சை அல்லது தோடைதான்ன்... குட்டிக் குட்டி முட்களும் வந்துவிட்டன. ஆனா உரிச்சு சாப்பிடும் குட்டி ஒரேஞ்சாக இருக்குமோ எனவும் ஒரு டவுட்டூ:)... உண்மைதான் ஊரில் பெரும்பாலும் எலுமிச்சை சாதாரணமாக நிற்கும். நாங்களும் கறிக்கு கடையில் வாங்குவது குறைவு.

  கவிஞரின் தத்துவங்கள் சொல்லி முடிக்கேலாது.... மியாவும் நன்றி அனைத்துக்கும். [/co]

  ReplyDelete
 40. திண்டுக்கல் தனபாலன் said...
  எலுமிச்சை என்று நினைக்கிறேன்... இலையை வாசம் பிடித்தால் தெரிந்து விடும்... வாழ்த்துக்கள்..[co="OrangeRed"] வாங்கோ வாங்கோ... இன்று கொஞ்சம் லேட்டாகிட்டீங்க:).. வாசம் எலுமிச்சைபோல்தான் தெரியுது.. ஆண்டவன் கிருபையால் படாமல் வளரட்டும் பார்ப்போம். மியாவும் நன்றி. [/co]

  ReplyDelete
 41. வெற்றிவேல் said...
  மரம் காய்ச்சதும் சொல்லி அனுப்புங்கள் வந்துடறேன்...
  [co="OrangeRed"] ஹா..ஹா..ஹா.. என்னாது எல்லோரும் எப்போ காஅய்க்கும் என்பதிலேயே குறியா இருக்கிறீங்க... வாங்க வெற்றிவேல் வாங்க.. மியாவும் நன்றி. [/co]

  ReplyDelete
 42. priyasaki said...
  [co="OrangeRed"]வாங்கோ அம்முலு வாங்கோ... பெறாமகனை தொட்டிலில் கிடத்தப் போகப் போறேன் என ஊரெல்லாம் சொல்லித் திரிஞ்சனே:) நீங்க கவனிக்கவில்லைப்போலும்:). இப்போ அவருக்கு பல்லு வரப்போகுது:)..

  மணத்தக்காழியை மறக்க முடியுமோ?.. எனி என்னிடம் தப்பவே முடியாது:) நான் மணத்தக்காழிக்குச் சொன்னேனாக்கும்:).

  என்னாது இந்தக் குளிரிலும் வெயில்.. அதிலயும் மிண்ட் வளருதா அவ்வ்வ்வ்வ்:)).. நான் இப்போ மிண்ட் பக்கம் போய்ப் பார்ப்பதில்லை அவ்ளோ குளிர்.. அம்மா கேட்டா மிண்ட்டை எட்டிப் பார்த்தியோ என:)).. இல்லம்மா குளிரில எங்க கீழே இறங்குவது என்றிட்டு இருக்கிறேன்:))..

  மியாவும் நன்றி அம்முலு. [/co]


  [co="OrangeRed"] [/co]

  ReplyDelete
 43. Mahi said...
  அதிராவ்..தூங்கப்போறம்! நாளை சந்திப்போம், வரட்டா? டாட்டா! குட் நைட்! ;) :)//

  [co="OrangeRed"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நா வாணாம் எண்டால் மட்டும் தூங்காமல் விட்டுவாவாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா..ஹா..ஹா.. நல்லிரவு மகி. மியாவும் நன்றி. [/co]

  ReplyDelete
 44. இராஜராஜேஸ்வரி said...


  சுடச்சுட அதிரசம் மாதிரி சுவைக்கும்
  சுட்ட மொழிகள்..!

  [co="OrangeRed"] வாங்கோ ராஜேஷ்வரி அக்கா.. மியாவும் நன்றி.. அடுத்தமுறை சுடாத மொழிகள் பறிச்சு:)) வாறேன்ன்:). [/co]

  ReplyDelete
 45. மணத்தக்காழியை //spelling missssssssssssstake :)

  ReplyDelete
 46. so so so !!! he is your great grandson..am i right miyaaaaaav ?

  ReplyDelete
 47. அன்புள்ள அதிரா,

  இன்னும் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு பாக்கியிருக்குதும்மா !

  http://gopu1949.blogspot.in/2013/10/65-1-4.html

  வாங்கோ, ப்ளீஸ்.

  அன்புடன் கிளி

  ReplyDelete
 48. அஞ்சூஸ்... க.கா.போ. ;))) நான் நைஸாக சொல்லிப் பார்த்தேன். ம்ஹும்! ட்ரிக்ஸிக்கு 3 கால்ல்ல்ல். ;)))

  ReplyDelete
 49. Cherub Crafts said...
  மணத்தக்காழியை //spelling missssssssssssstake :).//

  [co="OrangeRed"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அது அம்முலுதான் சொன்னதாக நினைவு.. தக்கா... ழி/ளி... க்கு ழி தான் வரும் என:)) ஹையோ எல்லோரும் என்னைக் குழப்பீனம்ம்ம்ம்ம்ம்ம்:))..

  றீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) [/co]

  ReplyDelete
 50. இமா said...
  அஞ்சூஸ்... க.கா.போ. ;))) நான் நைஸாக சொல்லிப் பார்த்தேன். ம்ஹும்! ..
  [co="OrangeRed"] விடுங்கோ விடுங்கோ மீயைத் தடுக்காதீங்க:) நான் தேம்ஸ்ல உண்ணாவிரதமிருக்கப் போறேன்ன்.. ழி, ளி யை நாட்டில இருந்து சந்திர மண்டலத்துக்கு அனுப்பச் சொல்லி:)).. முடியல்ல முருகாஆ:)) [/co]

  ட்ரிக்ஸிக்கு 3 கால்ல்ல்ல். ;)))[co="OrangeRed"] அச்சச்சோஓஓஒ றீச்சரின் டிக்‌ஷிக்கு 3 காலாம்ம்ம்ம்ம்ம்ம்:)) ஏன்ன்ன் என்னாச்சூஊஊஊஊஊ:)... போனகிழமை படம் பார்த்தபோதும் 4 கால் இருந்திச்சேஏஏஏஏஏஏஏ:)).. அஞ்சு முடிஞ்சால்ல் 3 காலோட ஒரு டிக்‌ஷி குயிலிங் செய்யுங்கோ:)).. எங்கிட்டயேவா....:)) விடுங்கோ மீ இஸ் கோயிங் 2 தேம்ஸ்ஸ்ஸ்ஸ்:) [/co]

  ReplyDelete
 51. வை.கோபாலகிருஷ்ணன் said...//

  கொஞ்சம் இருங்கோ கோபு அண்ணன்... இதோ புறப்பட்டுவிட்டேன்ன்.. சைனாவுக்குத்தான்:).. அங்க போய் ஒரு சிங்குஜானைப் பிடிச்சு:) உந்தக் கிளியாருக்கு.. ஒரு மந்திரிச்ச்ச கயிறு கட்டாமல் இனிப் பின்னூட்டுவதில்லை எனும் முடிவோடு புறப்பட்டிருக்கிறேன்ன்ன்ன்:)))...

  ஹா..ஹா..ஹா.. இவ்ளோ கரெக்ட்டாக் கண்டுபிடிச்சு தகவல் தரும் உங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 52. விதையிலிருந்து மரம் வளர்க்கும் பூஸாரே, ஆனாலும் உங்களுக்குப் பொறுமை அதிகமுங்கோ! மரம் வளர்ந்து காய் காய்சுப் பழம் பறிக்க கொஞ்சம் நாட்கள் அதிகமாகும். அதனால பொறுமையா அருமையா வளருங்க மரத்தை! :)

  புதினா மரத்தை பூப்பூக்க வைச்சு சாதனை படைச்சதுக்கு இன்னுமொரு வாழ்த்துக்கள். புதினா மரம் துளிர்க்கும், நம்பிக்கை வைங்கோ. இல்லாட்டிலும் பரவால்ல, புதினா புண்ணியத்தில ஹை ஹீல் ஷூவூடன் வரும் 2 கால் பூஸை பார்க்கும் பாக்கியம் கிடைக்கும். :)

  உங்க பெறாப் பேரனை டீவில பாத்தேன். அழகா இருக்கார். திருஷ்டிப் பொட்டை மறக்காம வைங்க அடுத்த போட்டோ ஷுட்டில. ;))

  வஞ்சி வஞ்சி பாட்டு நாளை வந்து கேக்கிறேன்.

  ReplyDelete
 53. //அது அம்முலுதான் சொன்னதாக நினைவு.. தக்கா... ழி/ளி... க்கு ழி தான் வரும் என:))//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இது எப்ப.
  றீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.நான் என்ர தமிழ் றீச்சரைக்கூப்பிட்டேன்.

  ReplyDelete
 54. Priyasaki said...
  //அது அம்முலுதான் சொன்னதாக நினைவு.. தக்கா... ழி/ளி... க்கு ழி தான் வரும் என:))//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இது எப்ப.
  றீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.நான் என்ர தமிழ் றீச்சரைக்கூப்பிட்டேன்.

  [co="red purple"] ஐயா சாமீஈஈஈஈஇ விடுங்க விடுங்க வழிவிடுங்க:) சுனாமி வருமெண்டு தெரிஞ்சுதான்:) எழுதினனான்:)) ஆனா இவ்ளோ வேகமா என தெரியாமல் போச்சேஏஏஏஏஏஏ.... றீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மீயும் என் றீச்சரைக் கூப்பிட்டேன்ன்ன்ன்ன்:)[/co]
  [im]http://catloves9.files.wordpress.com/2012/04/cat-climbing-tree.jpg?w=490[/im]

  ReplyDelete
 55. Mahi said...
  விதையிலிருந்து மரம் வளர்க்கும் பூஸாரே, ஆனாலும் உங்களுக்குப் பொறுமை அதிகமுங்கோ! மரம் வளர்ந்து காய் காய்சுப் பழம் பறிக்க கொஞ்சம் நாட்கள் அதிகமாகும். அதனால பொறுமையா அருமையா வளருங்க மரத்தை! :) //

  [co="OrangeRed"] இப்போதானே மிக்கு சுவீட் 16... அப்போ பொறுமையா இருப்பனாக்கும்:)) [/co]

  புதினா மரத்தை பூப்பூக்க வைச்சு சாதனை படைச்சதுக்கு இன்னுமொரு வாழ்த்துக்கள்///

  [co="OrangeRed"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா..ஹா..ஹா.. எனக்கு தெரியாதே.. பூக்க முன் பிடுங்கோணும் என:).. அடுத்தமுறை பார்த்திடலாம் எங்கிட்டயேவா:)[/co]

  புதினா புண்ணியத்தில ஹை ஹீல் ஷூவூடன் வரும் 2 கால் பூஸை பார்க்கும் பாக்கியம் கிடைக்கும். :)
  [co="OrangeRed"] ஹா..ஹா..ஹா.. ஹை ஹீல் போட்டால் காரால கால் வைக்கிறதெனில் வீட்டுப் படியாத்தான் இருக்கோணும்:) ஐ மீனு:) நடக்கமாட்டமாக்கும்:)) [/co]

  ///உங்க பெறாப் பேரனை டீவில பாத்தேன். அழகா இருக்கார். திருஷ்டிப் பொட்டை மறக்காம வைங்க அடுத்த போட்டோ ஷுட்டில. ;)) ///
  [co="OrangeRed"] ஆவ்வ்வ்வ்வ் “அதிரா மாமியின்” முகச் சாயல் இருக்கோ?:) [/co]

  வஞ்சி வஞ்சி பாட்டு நாளை வந்து கேக்கிறேன்.

  [co="OrangeRed"] கேழு/ளுங்க (ச்சே.. என் நிம்மதி போச்சே:))கேளுங்க அப்பூடியே சொக்கிப் போவீங்க:) [/co]

  ReplyDelete
 56. இமா said...
  ;))))///

  [co="OrangeRed"] புரியுது புரியுது:) மூத்த மருமகன் திரும்பி வந்த சந்தோசத்திலதானே இந்தச் சிரிப்பு வருது றீச்சருக்கு?:))).. ஹையோ வழி விடுங்கோ.. ஆரைப் பார்த்தாலும் கலைக்கினமே:)) [/co]

  ReplyDelete
 57. அதிரா வீட்டில் அதிசயமாம்
  எல்லோரும் கெளம்பி வாங்கோ

  முதல்ல இன்னும் வளரட்டும் பார்த்து சொல்கிறோம் அதிரா
  அப்பாடா தப்பியாச்சு

  ReplyDelete
 58. mee the first...

  Advance Deepavali wishes

  ReplyDelete
 59. வணக்கம் சகோதரி.
  தங்கள் இல்ல அதிசயத்திற்கும், புது வரவுக்கும் வாழ்த்துக்கள் தங்களுக்கு. வாசம் பிடித்து அறிந்து கொள்ள தங்கள் வாசகர்கள் வாய்மொழி வழங்கி விட்டார்கள் (நண்பர்கள் பின்னூட்டங்களில்). தாமத வருகைக்கு மன்னிக்கவும் சகோதரி வழக்கமாய் சொல்வதென்றால் வேலைப்பளு. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 60. [co="blue green"] வாங்கோ சீராளன் வாங்கோ.. அடிக்கடி இப்படி அதிசயம் நடக்கும் எங்கட வீட்டில:))..

  மியாவும் நன்றி.[/co]

  ReplyDelete
 61. [co="blue green"]அடடா சிவாவோ... வாங்கோ சிவா வாங்க.. நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும்.. நீங்கதான் 1ஸ்ட்டூஊஊஊஊ என்பது.. இந்த ஹோல் வேல்ட்க்கே தெரியுமே:))... மியாவும் நன்றி சிவா..

  உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

  அப்புறம் பொன்னியை மிகவும் உருக்கமாக விசாரித்ததாகக் கூறிடுங்கோ:). [/co]

  ReplyDelete
 62. [co="blue green"] வாங்கோ பாண்டியன் வாங்கோ.. தாமதமாக எனினும், வந்தமைக்கு மிக்க நன்றி. [/co]

  ReplyDelete
 63. நல்ல சுவாரசியமான பகிர்வு.எலுமிச்சை செடி மாதிரி தான் தெரியுது.பார்ப்போம்.பிழைத்துக் கிடந்தால்,நான் என்னைச் சொன்னேன்,.புதினா வருமென்று எங்க வீட்டில் தவமாய் தவமிருக்கிறேன்.இங்கே கொஞ்சம் பார்சல் அனுப்புங்கோ..

  ReplyDelete
 64. [co="OrangeRed"] வாங்கோ ஆசியா. ஓம் பிழைச்சால் பார்ப்போம்.. நானும் என்னைச் சொன்னேன்:).

  புதினா ச்சும்மா ச்சும்மா வளருமாமே.. ஒருதடவை மரம் முளைச்சிட்டால்ல். பின்பு நாம் நிறுத்தச் சொன்னாலும் அது கேட்காது, வேரோடி ஓடி முளைக்கும்

  மிக்க நன்றி ஆசியா. [/co]

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.