நல்வரவு_()_


Friday 31 August 2012

(மீ:)) “வெங்காயம்” (மோ?:))

ஹா.. ஹா.. ஹா.. தலைப்பைப் பார்த்ததும் ஹெட் (head:)) சுழலுதோ?:)) சே..சே... பலபேர் ஏற்கனவே வெங்காயத்தின் பெருமை பற்றி சொல்லியிருக்கினம் புளொக்குகளில்.

ஆனா நான் சொல்லோணும் என நினைத்தமைக்கு முக்கிய காரணம்...  “இருக்கு, ஆனா இல்லை:)”.

என்னைச் சிலர், சிலநேரம் “வெங்காயம்”:) எனச் சொல்வதுண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))(செல்லமாகத்தான்:).  இருப்பினும், அதனால நான் இந்த வெங்காயம் பற்றிக் கொஞ்சம் ஆழமா(ழ கரீட்டு????:)) ஆராய்ச்சி செய்தன்:)) அதிலயிருந்து  பெற்ற முடிவுகளைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்ன்ன்..... அது தப்போ?:).... ச்சும்மா நிற்காமல் “நோஓஒ தப்பில்லை” எனச் சொல்லோணும்:).

சரி, முதல்ல, ஏன் ஆட்கள், ஒருவரைப் பார்த்து “வெங்காயம்” எனச் சொல்கிறார்கள் தெரியுமோ?

வெங்காயத்தை எடுத்து, தோல் நீக்கி பட்டை பட்டையாக உரித்துக் கொண்டே போனால், முடிவில் ஏதும் மிஞ்சாது... எல்லாம் ஒரே மாதிரியே உரியும் உள்ளே ஏதுமிருக்காது, அதனாலதான், உள்ளே விஷயமில்லாமல் , ஆனா தனக்கெல்லாம் தெரியும் என்பதைப்போல,  எங்கிட்டயேவா?:) என, வாய் வீரம் பேசும்:) என் போன்றோரைப் பார்த்து:) வெங்காயம் என்கிறார்கள்:).

ஆனா இந்த வெங்காயத்தில எவ்ளோ விஷயமிருக்குத் தெரியுமோ?.. பூஸ் ரேடியோவில் கேட்டேன், மனதில் பதித்து, இங்கு எழுதுகிறேன்.

வெங்காயத்தை உரித்து, வெட்டும் போதெல்லாம், எமக்கு கண் எரிந்து தண்ணீர் வரும், இதனால் நான் சிலநேரம் சன்கிளாஸசைப் போட்டுக்கொண்டும் உரிப்பதுண்டு:). ஆனா வெங்காயத்திலிருந்து வெளியேறும் ஒருவித ஒயில் தான், காற்றில் கலந்து, கண் எரிவைத் தருகிறதாம்,  கண்ணைச் சுத்தப் படுத்துகிறதாம், இதனால் நம் கண்களில், “கற்றக்”(cataract) உருவாவதை இது தடுக்கிறதாம். இனிமேல் ஆரும் கண்ணாடி போட்டு உரிக்காதீங்கோ, கண் எரிந்து, கண்ணீர் வழிந்தால் நல்லது.
அடுத்து, சின்ன வெங்காயத்தை வெட்டி, மோரில் போட்டு தினமும் குடித்தால்,

*பெண்களுக்கு கர்ப்பப்பையிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் உருவாகும், நீர்க்குமிழிகள் இல்லாமல் போகுமாம்.

*தொடர்ந்து புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு(ச்செயின் ஸ்மோக்கர்ஸ்), உருவாகும் ரத்தக் குழாய் அடைப்புக்கள் நீக்கப் படுமாம்.

*தயத்தின் வால்வுகளில், உண்டாகும் அடைப்புக்கள் கரைக்கப்படுதாம்.
=========================BREAK=======================
இது எங்கட திருமணநாள் பரிசு:) இதன் குரு அஞ்சு, ஆனா இதன் ஓனர் பெயர் சொல்லப்பிடாதாம்ம்ம், அதனால வாணாம்ம் ம்ம்ஹூம்ம்.. அவிச்ச கோழிமுட்டை தந்து, மிரட்டிக் கேட்டாலும் சொல்லவே மாட்டேன்ன்:))

======================================================

இதில முக்கிய விஷயம் என்னவெனில், இப்போ பெரும்பாலானோர், அவசரச் சமையலுக்காக வெங்காயத்தை உரித்து வெட்டி, பிரிஜ்ஜில் வைத்து விடுவதும் உண்டு. ஃபுரோசின் வெங்காயம்கூடக் கிடைக்கிறது. இதிலெல்லாம் ஒன்றுமே இல்லையாம். வெங்காயத்தை வெட்டியவுடன் பாவிக்க வேண்டுமாம்.

மோரில் போடும்போது கூட, எல்லாம் தயாரானபின், உடனே உரித்து, வெட்டிப் போட்டு, உடனேயே குடிக்க வேண்டுமாம், இல்லையெனில், அதிலுள்ள சத்துக்கள் காற்றில் கலந்திடுமாம்.

வெங்காயத்திலே நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் இருக்கிறதாம். இதனால்தான், அம்மன் நோய் வந்தோருக்கு, சின்ன வெங்காயம் போட்டு மோர் குடுப்பது வழக்கமாம். ஆதி காலத்தில், அம்மை நோய் வந்தால், அவரது படுக்கையைச் சுற்றி, சின்ன வெங்காயத்தை மாலையாகக் கோத்துக் கட்டி விடுவார்களாம்.

ஊசிக்குறிப்பு:)
ஓடிவாங்கோ ஓடிவாங்கோ.. கிலோ பத்துப் பவுண்ட்டுகள் மட்டுமே:)).. செக்காத் தந்தாலும் நாங்க வாங்க ரெடி:).

முக்கியமாக சின்ன வெங்காயத்திலதான், அதிகம் சத்துக்கள் இருப்பதாகச் சொன்னார்கள்.... அதனாலோ என்னவோ,  “சின்ன”(6):) வயசிலிருந்தே, தெரிஞ்சோ தெரியாமலோ, எனக்கு  “சின்ன வெங்காயம்” எனில் நல்ல விருப்பம்...

குட்டி இணைப்பு:
இம்முறை வெதர் நன்றாகவே இல்லை, அதனால் வெங்காயம் மட்டும் நட்டோம், நிறைய வெங்காயப் பூ வந்தது, சுண்டல் செய்தோம். ஆஆஆஆ என்ன சுசி:)யப்பா:))

ஆப்பூ இணைப்பூஊ:))
ஆஆவ்வ்வ்வ் இதாரது குட்டி எலியோ?:) எலிக்குட்டியோ?:) கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கோ மக்கள்ஸ்ஸ்ஸ்:)), நான் முருகனைக் கூப்பிடுறேன் எனும் ரோஷத்தில ஓடிப்போய்ப் பிள்ளையாரோடு  குட்டி உறக்கம் போடுதோ?:).
88888888888888888888888888888888888888888888888888888888888888
 “எப்பவுமே ஒரு பொருள் உங்களிடம் இருக்கும்வரை
அதன் அருமை உங்களுக்குத் தெரியாது,
அது அடுத்தவர் கைக்குப் போனபின்பே தெரியும்”
88888888888888888888888888888888888888888888888888888888888888

Saturday 25 August 2012

மறக்க முடியாத பிறந்த நாட்கள்!!வாழ்க்கையில் எத்தனையோ பேரைச் சந்தித்திருப்போம், எத்தனையோ பிறந்தநாளைக் கொண்டாடியிருப்போம், ஆனா அவற்றில் சில மனதில் நீங்காததாகிவிடும். அப்படியானவற்றில் இரண்டு.....

கொஞ்சக்காலம் அப்பாவோடு, குவாட்டேஷில் இருந்தகாலம். பக்கத்துக் குவார்ட்டேஷில் என்னை விட இளைய ஒரு தங்கை, பெயர் சிந்து. ஆனா நாம் இருவரும், நல்ல திக் ஃபிரெண்ட்ஸ். அவவின் அக்காவுக்கும் எனக்கும் ஒரே வயது, ஆனா அக்காவோடு நான் ஒட்டில்லை, சிந்துவும் நானும்தான் எல்லாமே கதைப்போம்.

சிந்து கிட்டத்தட்ட ஒரு நல்ல புரிந்துணர்வுள்ளவ.  நீதி, நியாயம் எனத்தான் நாம் கதைப்போம்:), அதுக்காக எதிர்த்து சண்டையும் பிடிப்போம்:). ஆனா இவவின் புரிந்துணர்வை வீட்டில் ஆரும் ஏற்பதில்லை:). அவ கடைசிப் பிள்ளை என்பதால் செல்லமும் கொஞ்சம் ராங்கியும். அதனால வீட்டில் வாய் காட்டி ஏச்சும் வாங்குவா:). ஆளும் அழகானவ. அதனால பிரச்சனைகளும் அவவுக்கு அதிகம். வீட்டில் எதையும் சொல்ல முடியாது, ஏனெனில் அவர்களுக்கு பொஸிட்டிவ்வாக எடுக்கத் தெரியாதாம், இவவுக்குத்தான் ஏச்சு விழுமாம். அதனால எல்லாம் பிரச்சனைகளும் எனக்கே சொல்லுவா.

நான் தான் ஞானி:) ஆச்சே... எங்கட கண்ணதாசன் சொன்னதிலிருந்து, தத்துவங்கள், பொன் மொழிகள் எல்லாம் சொல்லி, ஆளைப் பாதுகாப்பேன், ஆறுதலைக் கொடுப்பேன். அவவும், நான் என்ன சொன்னாலும் அப்படியே ஆமோதித்து கேட்டு நடப்பா.

அவவுக்கு பிறந்ததினம் ஜனவரி 12 ஆம் திகதி. என் பிறந்ததினத்துக்கும் மறக்காமல் பரிசு தருவா, நானும் அதேபோல் கொடுப்பேன்.

ஒரு தடவை அவவுக்கு பிறந்ததினம் வரப்போகிறதெனத் தெரிந்து, நல்ல ஒரு அழகான ஸ்கேட் அண்ட் பிளவுஸ் வாங்கினேன். கார்ட்டும் வாங்கி, எல்லாம் பக் பண்ணி எடுத்து வைத்துவிட்டேன்.

எனக்கு ஆருக்காவது ஒரு குட்டிப் பரிசுப்பொருள் வாங்கினாலும், அதை உடனே கொடுக்கோணும், அதுக்கு அவர்கள் உடனே பதில் தரோணும், அது அவர்களுக்குப் பிடிக்குமோ என்றெல்லாம் எண்ணுவேன். இப்படித்தான், அந்தத் தடவை, மனதிலே பெரிய மனக்கோட்டை கட்டினேன்.

என்னெண்ணா:)). 12ம் திகதி விடியவே ஃபோன் பண்ணி விஸ் பண்ணுவனாம், பின்பு 9 மணிபோல, எல்லோரும் வேர்க் க்குப் போயிடுவினம், பெண்கள் ஆட்சியாக இருக்கும், பெரீய குவாட்டேர்ஷ், பெரீய வளவு, காலையில் சில்லெனக் காத்தடிக்கும், மாமாரங்கள் அசையும்... அந்த 9 - 11 காலை நேரம், அந்நேரத்து அமைதி.. அதெல்லாம் எப்பவுமே எனக்குப் பிடிக்கும், .... அந்த நேரம் ஒரு சொல்லவொண்ணா சந்தோசமாக இருக்கும். 

அப்போ நல்ல அழகாக வெளிக்கிட்டு, சிந்து வீட்டுக்குப் போய், நேரில் விஷ் பண்ணி, பிரசண்டையும் கொடுக்கோணும் என, மனக்கோட்டை ரெக்கை கட்டிப் பறக்குது எனக்கு:).  [குட்டிக்குறிப்பு:): சின்ன வயதிலிருந்தே எனக்கொரு பழக்கம், அருகில் இருக்கும் வீட்டுக்கு விளையாடப் போவதாயினும், மேக்கப் பண்ணியே போவேன், நிண்டபடி ஓடமாட்டேன்:))]. அவவுக்குப் பிரசண்ட் வாங்கியதிலிருந்து.. ஒரே இந்த நினைப்புத்தான், ஆருக்கும் என்னவும் வாங்கிட்டால், அதைக் கொடுக்கும்போதுதான் எனக்கு மிகப்பெரிய சந்தோசமாக இருக்கும்.

என்னில் ஒரு பழக்கம், கடனே என எப்பவுமே எதுவும் செய்ய மாட்டேன், அப்படியே மனம் வைத்து, கிட்டத்தட்ட அப்பொருளில் என் மனம் இருக்கும், அப்படித்தான் கொடுப்பேன், அதில் எனக்கு வரும் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது.

இப்படியே கற்பனை வானில் மிதந்து,ஜனவரி 10 ம் திகதியும் வந்திட்டுது, அதில ஏதோ ஒரு மயக்கமாகி, என் கண்ணை விதி மறைச்சு:), 12 ம் திகதி அன்று, அதாவது பிறந்தநாளன்று, 11ம் திகதி என நினைச்சிட்டேன். அப்போ அன்று காலை முழுக்க இதே நினைவு....  நாளைக்கு சிந்துவுக்கு பேர்த்டே... விடியப் போகோணும்.. இப்படி எல்லாம். இத்தனைக்கும் எங்கட குவாட்டேஷிலிருந்து ஒரு 40,50 அடி தூரம்தான் அவர்களுடைய குவாட்டேர்ஸ்.:). பக்கத்தில பக்கத்தில.

அப்போ அன்று காலை, நான் வீட்டில் இருக்கிறேன், ஒரு 11 மணிபோல, சிந்துவின் அக்கா வந்து என்னமோ தந்தா.

என்ன.....  என்றேன்...
இது கேக் என்றா.... ஒரு புன்னகையோடு...

நானும் வாங்கிட்டு வந்தேன், அப்பகூட என்ன நினைத்தேன் தெரியுமோ.... சிந்துவுக்கு நாளைக்கு பேர்த்டேக்கு கேக் செய்திருக்கினம், இன்று சும்மா சாம்பிளுக்கு தந்திருக்கிறா என்றுதான். நாங்கள் வழமையாக உணவு வகைகள் பரிமாறிக்கொள்வது வழக்கம். என் கிட்னியில் கொஞ்சம் கூட சந்தேகமே எழவில்லை, ஏனெனில் அன்று 11ம் திகதியேதான் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருந்தேன்(என்னில் அவ்வளவு நம்பிக்கை எனக்கு:)).

சரி இது முடிஞ்சு நாங்க லஞ்சும் முடிச்ச பின்பு, நானும் அம்மாவும் படுத்திருப்பது வழக்கம், இருவரும் நன்கு கதைப்போம்..  அப்போ நான் அம்மாவிடம் சொன்னேன், நாளைக்கு 12ம் திகதி, நான் விடியவே போய் சிந்துவுக்கு பிரசண்ட் கொடுக்கப் போறேன் என.

உடனே அம்மா கேட்டா, இண்டைக்கெல்லோ 12? கலண்டரைப் பார் என... எனக்கு கறண்ட் கம்பி அறுந்து என்மேல் விழுந்துவிட்ட உணர்வு, படுத்திருந்தே கலண்டரைப் பார்த்தேன், அன்றுதான் 12.  அப்படியே கட்டிலால் பாய்ந்தேன் கீழ.. அச்சம்பவம் இப்பவும் கண்ணுக்குள் நிக்குது.  “கடவுளே!!! அம்மா.. சிந்து என்ன நினைக்கப்போறா, கேக் தந்தும் நான் பேசாமல் இருந்தேனே” எனப் புலம்பியபடி, ஓடிப்போய் முகம் கழுவி வெளிக்கிட்டுப் பறந்தேன் சிந்து வீட்டுக்கு.. நேரம் 2.30 இருக்கும்.

போய் மூச்செடுக்காமல், மேலே எழுதியதெல்லாம் புலம்பி, உண்மையைச் சொல்லி பிரசண்ட்டையும் கொடுத்து விட்டு வந்தேன். சிந்துவுக்குத் தெரியும், என்னைப் பற்றி, நான் வேண்டுமென எதுவும் செய்ய மாட்டேன், இது ஏதோ ஒன்று கண்ணை மறைத்து விட்டது என.

இதை ஆராவது, இல்லை நீ மறந்தது தப்பு, எப்படி மறக்கலாம் எனக் கேட்க முடியுமோ? அது நியாயமோ? ஏனெனில் பேர்த்டே வரப்போகுதென, நான் கட்டிய கோட்டையும், பின்பு திகதி மாறுப்பட்டதும், நான் துடித்த துடிப்பும் எனக்குத்தான் தெரியும், அதை உணராமல் மறந்தது தப்பு என ஆரும் சொல்ல முடியுமோ... சொன்னாலும் ஒண்ணும் பண்ண முடியாது..:)).
======================================================
இப்பதிவே நீண்டு விட்டது, அடுத்ததை எப்பூடி எழுதுவேன் சாமி:)).. ஆனாலும் எழுதிடுறேனே. இது ஏற்கனவே “அங்கின” ஒரு கதையில் சொல்லியிருப்பதாக நினைவு... இருப்பினும் வலையுலகில் தெரியாமையால் எழுதுகிறேன்.
என்னில் ஒரு குணம், எனக்குப் பிடித்தோருக்கெல்லாம் வாழ்த்துச் சொல்வேன்(பிறந்ததினம் தெரிந்தால்), அதிலும் சிலருக்கு , சாமம் 12 க்கே சொல்ல வேணும், அதுவும் நான் தான் முதல் ஆளாகச் சொலோணும் எனத் துடிப்பேன், இல்லாட்டில் எனக்கு கவலை வந்திடும்.

அப்படித்தான் ஒரு தடவை, என் கணவரின் பிறந்ததினம், மறுநாள் விடுமுறையாக்கும், நாம் படுக்கவில்லை, அப்போ 12 க்கு நான் தான் முதல் ஆளாக விஸ் பண்ணுவேன் என அவருக்கும் தெரியும். அப்படியிருக்க, அவரின் ஒன்றுவிட்ட தங்கை, 11.45 அப்படி ஃபோன் பண்ணிக் கதைச்சுக் கொண்டிருந்தா, அவவும் 12 க்கு விஸ் பண்ணும் ஐடியாவோடு,கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா..ஹா..ஹா..

அப்போ நேரம் 12 ஆகியது, கணவருக்கு தெரியும்:), நான் முதலாவதாக விஸ் பண்ணாவிட்டால்,  உருண்டு பிரண்டு கத்துவனெல்லோ:) ச்சும்மா ஒரு கதைக்குச் சொல்கிறேன்ன்:), பிறகு என்னை எப்பூடியாம் சமாளிக்கிறது:), அதனால ஃபோன் கதைச்சுக் கதைச்சு எனக்கு கையைக் கையை நீட்டுறார், என்னவெனில் விஸ் பண்ணுங்க என, எனக்கு இலகுவில் புரியாது:) அன்று டக்கென பத்திட்டுது:)), ஓடிப்போய்க் கை கொடுத்து முதலாவதாக விஸ் பண்ணிட்டேன்,... இதெல்லாம் ஒரு குழந்தைப் பிள்ளை விளையாட்டுத்தான், என்றாலும் அதில எனக்கொரு பெரு மகிழ்ச்சி:).

ப்படித்தான், ஹொஸ்டலில் இருந்த காலத்தில், என் பெஸ்ட் பிரெண்ட், இங்கிருக்கிறாவெல்லோ, அவவுக்கு பிறந்ததினம்.  ஹொஸ்டலில் ஒரு பழக்கம், இரவில் படித்துக் கொண்டிருப்போர், நண்பர்களுக்கு பிறந்ததினம் எனத் தெரிந்தால், நித்திரை கொள்வோராயினும் தட்டி எழுப்பி 12 க்கு விஸ் பண்ணுவினம்.

அதனால நான் வலு கவனம், என் நண்பிக்கு நான் தான் முதல் முதலா வாழ்த்துச் சொல்லோணும் என்று. அவவும் அப்படித்தான் எனக்குச் சொல்வா. இப்ப கேட்டுப் பாருங்கோ அதிராவுக்கு எப்போ பி.தினம் என..?:), அதிராவுக்கு எப்ப? இப்படித்தான் கேட்பா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). ( எண்டு நினைக்கிறன்).

சரி அன்றும் அப்படித்தான், ரூம் லைட் போட்டபடி,  பெட்டில் இருந்து படித்துக் கொண்டிருந்தோம், விஸ் பண்ணும் நினைப்பிலேயே நானும் நித்திரையாகிட்டேன்,  நித்திரையானபோது 10 மணியிருக்குமாக்கும். நண்பியும் நித்திரையாகிட்டா, இருவரும் பக்கத்து பக்கத்துக் கட்டில், ஒட்டப் போட்டு வைப்போம். ஏனையோர் (என் அக்கா உட்பட) படிச்சுக் கொண்டிருக்கினம்.

நான் நன்கு நித்திரையாகிட்டேன்.. டீப் ஸ்லீப். டக்கெனக் கண்ணை முழிச்சேன், அதேபோல எல்லோரும் படிச்சுக் கொண்டிருக்கினம், நண்பி நல்ல நித்திரை. நான் என்ன நினைத்தேன் என்றால், விடிந்து விட்டது, எல்லோரும் எழும்பிப் படிக்கினம் என. உடனே நண்பியை உலுக்கி உருட்டினேன், தட்டி எழுப்பினேன், அவ பாதிக்கண்ணைத் திறந்தபடி எழும்பினா, எட்டிக் கையைப் பிடிச்சு இழுத்து ஹப்பி பேர்த்டே என விஸ் பண்ணினேன்.....

உடனே படிச்சுக் கொண்டிருந்தோரெல்லாம் பெரிய சத்தமாகச் சிரிக்கினம்... எமக்கு எதுவும் புரியவில்லை, அப்போதான் சொன்னார்கள் நேரத்தைப் பாருங்கோ என:) பார்த்தேன் .....ஙேஙேஙேஙேஙே... 11 மணி, அவர்கள் ஒருவரும் படுக்கவில்லை:))... பின்பு எல்லோரும் சேர்ந்து சிரிச்சதில் நித்திரை போய் விட்டது, நாமும் முழிச்சிருந்து 12 க்கு ஒயுங்கா:) விஷ் பண்ணிட்டுப் படுத்தேன். இதெல்லாம் வாழ்க்கையில் மனதை விட்டு நீங்க நினைவுகள்.

ஊசி இணைப்பு:
அன்பைக் கொடுங்கள்... அன்பைப் பெறுவீர்கள்.... 
சொன்னவர் புலாலியூர் பூஸானந்தா:)

=====================================================
 “சில நேரங்களில் உண்மையான அன்பும் தோற்றுவிடும்,
உரிமை இல்லாதவரிடம் காட்டும்போது”
====================================================

Tuesday 21 August 2012

மக்கள்ஸ்ஸ்!!! அதிரா ஸ்மாட்டா?:)சரி இம்முறை சுற்றி வளைக்காமல் நேரடியாகவே விஷயத்துக்கு வந்திடுவம் என, என் உள்மனசு சொல்லுது:)... அதனால தாமதிக்காமல் சொல்லிடுறேன்:).

இங்கு ஸ்கூல் எல்லாம் ஆரம்பமாகிட்டுது, அதனால எனக்கும் பழைய பள்ளிக்கால நினைவுகள் கொஞ்சம் மனதில வந்துது... நினைவுகள் வந்தால் டக்குப் பக்கெனச் சொல்லிடோணும் என அம்மம்மா சொல்லியிருக்கிறா, அப்போதுதான் அவை புதுப்பிக்கப்படுமாம்:).

நான் ஹைஸ் ஸ்கூலுக்குப் போன முதல் அனுபவம்... (நொட்  “ஹைஷ்” ஸ்கூல்:)... நோட் திஸ் பொயிண்ட் கெ.கிருமீஸ்:)).. ஐந்தாம் வகுப்புவரை அப்பாவுக்குத் தெரிந்த அதிபர், ஆசிரியர்கள், நண்பரின் பிள்ளைகள் என தெரிந்த, ஆண் - பெண் ஸ்கூலில் படித்த நான், 6ம் வகுப்புக்காக பெண்கள் கல்லூரிக்கு மாற்றப்பட்ட முதல் நாள். ஏற்கனவே அக்கா அங்கு படித்துக் கொண்டிருந்தமையால் கொஞ்சம் துணிவு, இருப்பினும் நான் தான் தெனாலிபோல தானே அன்றும் இன்றும்:)... ஹையோ உளறிட்டேனோ:))..

வீட்டிலிருந்து ஸ்கூல் பஸ்ஸில் போய் வரவேண்டும். முதல் நாள், காலையில் அப்பா, அம்மா கூடவே வந்து ஸ்கூலில் சேர்த்து விட்டு, பின்னேரம் அக்காவோடு ஸ்கூல் பஸ்ஸில் வரச் சொல்லிப்போட்டுப் போய் விட்டார்கள்.

பெரிய பாடசாலை, பல கட்டிடங்கள், என்னா ஒரு ஒழுங்கு, ஆசிரியர்கள் படிப்பு என பெரிய ஒரு வித்தியாசமாக இருந்தது. ஸ்கூல் விட்டது, அக்கா என் வகுப்புக்கு வந்து கூட்டிப் போனா, ஸ்கூல் வாசலுக்கே பஸ் வரும்.  ஆண்களுக்குப் புறிம்பான ஸ்கூல் பஸ், பெண்களுக்கு புறிம்பான ஸ்கூல் பஸ். என் கஸ்டகாலம், அன்று பார்த்து, ஆண்களுக்கான பஸ் பிரேக் டவுனாம், அதனால் ஆபத்துக்குப் பாவமில்லை:) என, இருபாலாருக்கும் ஒரு பஸ் என வந்தது பஸ்.

பெண்களுக்கே ஒரு பஸ் போதாது, இதில் ஆண் பிள்ளைகளும் ஏறினால் சொல்லவா வேண்டும், நாமும் இடிபட்டு ஏறினோம், இது எனக்கு புது அனுபவம்... சின்ன ஆளும்தானே அப்போ, மேலேயும் பிடிக்க முடியவில்லை, மூச்சு எடுக்க முடியவில்லை, நெரிசலோடு நின்றேன், பக்கத்திலே என் வயதை ஒத்த ஒரு boy,  அவரும் குட்டி, நெரிசல் பொறுக்க முடியாமலோ என்னவோ, என் கையில் நுள்ளத் தொடங்கிட்டார்ர்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

னக்கோ அழுகை வரத் தொடங்கிவிட்டது, அக்கா இவர் நுள்ளுறார் என்றேன் கலங்கிய கண்களோடு, உடனே அக்கா, ஆரிடமோ கேட்டு, சீற்றுக்குள்ளே என்னைத் தள்ளி விட்டா.

பின்பு, எம் வீடு நெருங்கும் போது, கிட்டத்தட்ட பஸ் வெளிப்பாகிவிடும். எமக்கெல்லாம் இருக்க இடம் கிடைத்துவிடும். எனக்குப் பயம், பெல் அடிக்காமல் விட்டால், பஸ் வீட்டைத் தாண்டிப் போய்விடும் என:), அதனால 3,4 ஹோல்ட்க்கு முன்பே எழும்பி, அக்கா வா... எனக் கூப்பிட்ட படி கண்டக்ரரிடம் வாசலுக்குப் போய் விட்டேன், அக்காவுக்கோ வெட்கம், அதிரா பேசாமல் இரு என.. அடக்குவா... இது பல நாட்கள் தொடர்ந்தது.

ப்பவுமே ஆண்கள் ஸ்கூல் பஸ்ஸும், பெண்கள் ஸ்கூல் பஸ்ஸும் சோடியாகவே முன் பின்னாக வந்து கொண்டிருக்கும். நாம் கொஞ்சப்பேர் இருந்தோம், ரைவருக்குக் கிட்டப் போய் நின்று கொண்டு, கத்துவோம், அவர்களை முந்த விட்டிட வேண்டாம் என, இதனால் ரைவருக்கும் நல்ல சந்தோசம் போட்டி போட்டு ஓடுவார்கள், இதேபோல ஆண்கள் ஸ்கூல் பஸ்ஸிலும் ஒரு கூட்டம் கத்தும்:).

ரு பஸ்ஸை, இன்னொரு பஸ் முந்தினால், கூக்குரலுக்கு எல்லையே இருக்காது. ஒவ்வொரு ஹோல்ட்டிலும் பிள்ளைகளை கெதியா இறங்கச் சொல்லிக் கத்துவோம், அவர்களும் எமக்கு ஒத்துழைத்து, மேல் படியில் இருந்து கிட்டத்தட்டக் கீழே குதிப்பார்கள்:)... இப்படிக் குட்டிக் குட்டிச் சந்தோசங்கள் பல.

சரி இனித் தலைப்புக்கு வாறேன். பாருங்கோ எவ்ளோ ஸ்மாட்டாக விழுகிறார்கள் கீழே:)
 
ப்படி நான் படிக்கத் தொடங்கி ஒருவருடம் முடிந்த வேளை. எனக்கொரு கவலை, என்னோடு பிரைமறி ஸ்கூலில் படித்த என் பக்கத்து வீட்டுத் தோழி... தேவிகா. அவ இப்பவும் அதே ஸ்கூலிலேயே படித்துக் கொண்டிருந்தா. அவவின் அக்கா அண்ணா எல்லாம், பெரிய ஸ்கூலில் படித்தார்கள், தந்தையும் நல்ல தொழிலில் இருந்தவர், இருப்பினும் இவவை ஏனோ மாற்ற நினைக்கவில்லை.

அப்போ எனக்கொரு எண்ணம் உதயமாகியது, ஏன், என் ஸ்கூலில் இவவையும் கொண்டுபோய்ச் சேர்க்கக்கூடாது என்று. நான் 5ம் வகுப்பு புலமைப் பரீட்சையில், அதிக புள்ளிகள் எடுத்துப் பாஸ் பண்ணியமையால், கேட்டவுடன் இடம் கிடைத்தது அங்கு, இல்லையெனில் அப்பிளிகேசன் போட்டு, பரீட்சை வைத்து பாஸ் பண்ணினால் மட்டுமே இடம் கிடைக்கும். இந்தப் புறுணம் எதுவும் எனக்குத் தெரியாது அப்போ. எல்லா வேலையும் அப்பாதானே பார்த்தார்.

நான் நண்பியிடம் சொன்னேன், திங்கட் கிழமை யூனிஃபோம் போட்டு என்னோடு பஸ்ஸில் வாங்கோ, நான் கூட்டிப் போய்ச் சேர்த்து விடுகிறேன் என. அவர்கள் பெற்றோரோ, எம் பெற்றோரோ ஆருமே எதுவும் சொன்னதாக தெரியவில்லை, அது என்ன நடந்ததென எனக்கும் நினைவில்லை. நண்பி வெளிக்கிட்டு வந்தா, ஸ்கூலுக்குள் கூட்டிப் போனேன்...

இது இப்படியே இருக்க, எம் அதிபர் பற்றிக் கொஞ்சம் சொல்கிறேன். அவ அஸம்பிளியில் பேசினால், அந்த பெரிய ஹோல் அதிரும், கணீர் என இருக்கும் குரல். நாம் எல்லோரும் மூச்சுவிடும் சத்தம்கூடக் கேட்காமல் நிற்போம், மயான அமைதி என்பார்களே அப்படித்தான் இருக்கும். அவ்வளவு பயமும், மரியாதையும் அவவில். அவ மிக நல்லவ, அதே நேரம் அளவுக்கு மீறிய ஸ்ரிக்ட்.

கதைக்க மாட்டா, பார்த்தாலே போதும்... நாம் சுருண்டு போய் விடுவோம். நிமிர்ந்து பார்க்கவே பயமாக இருக்கும், ஆளும் நல்ல உயரம், கொண்டையும் போட்டுக் கம்பீரமாக இருப்பா.

என் நண்பி இங்கு இருக்கிறாவெல்லோ (பெஸ்ட் ஃபிரெண்ட்), அவ திருமணமாகி கணவரோடு கொழும்பு, காலி வீதியில், போய்க் கொண்டிருந்தபோது, இந்த அதிபர் எதிரே வந்தாவாம், தான் தூரத்தில் கண்டதும், கணவரின் கையைப் பிடித்து இழுத்து, வாங்கோ ரோட்டைக் குறொஸ் பண்ணிப் போயிடலாம் என்றாவாம்:), கணவர், சே.. என்ன இது, போய்க் கதை கேட்போம் எனச் சொல்லி, கதைத்தார்களாம், அவ்ளோஓ பயம்:)) எமக்கு:).

அப்படிப்பட்ட அதிபரின் ஒபீஷுக்கு, என் நண்பியை நேரடியாக அழைத்துப் போனேன், எம்மைக் கண்டதும் அவ ஏதோ எழுதிக்கொண்டிருந்தவ, நிமிர்ந்து பார்த்து....

 “என்னம்மா?” என்றா.

“இவ என் நண்பி, ஸ்கூலில் சேர்க்கக் கூட்டி வந்திருக்கிறேன்”, என்றேன்..

அவவுக்கு சிரிப்பும் வந்து விட்டது, புன்னகையோடு சொன்னா,
“அப்படியெனில், முதலில் ஒபீஷில் ஃபோம் எடுத்து நிரப்பி, போடச் சொல்லுங்கோ பின்பு Test இருக்கும், அதன் பின்புதான் சேர்க்கலாம்” என்றா...

நான் உடனே சொன்னேன், இவவுக்கு தனியே போகத் தெரியாது, அதனால ஸ்கூல் விடும்வரை, இங்கு இருக்கலாமோ என்றேன், சரி உங்கள் வகுப்பில், பின் ஷெயாரில் இருக்க விடுங்கோ, ரீச்சருக்கு, நான் சொன்னேன் எனச் சொல்லுங்கோ என்றா.

அதேபோல் அவவைக் கூட்டிப் போய் வகுப்பில் இருக்க விட்டு, அன்று முழுக்க ஒவ்வொரு பாட ஆசிரியருக்கும் விளக்கமும் கொடுத்து, நான் பட்ட வேதனை சொல்ல முடியாது, கடசிவரை அந்நண்பி, பழைய பாடசாலையிலேயே படித்தார்.
இப்ப சொல்லுங்கோ அதிரா SMART ஓ?:):):)...  ஆஆஆ.... முறைக்கப்படாது:).

குட்டி இணைப்பு:)
இப்போ நகத்தையும், நெயில் பொலிஸையும் காட்டுவது பாஷன் இல்லையாம்:))... எப்பவுமே மாத்தி யோசிக்கோணுமாம்:) எனப் பெரியவங்க சொல்லியிருக்கினம்:) அதனால மாத்தி ஓசிச்சேன்:)) இப்பூடி ஆச்சு:).. இது ஆருக்கும் தரமாட்டேன்:).
மு.கு:
தெகிரியம்:) இருந்தால், ஆரும் இப்படத்தைத் தொடருவினமோ பார்ப்பம்:))).
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஊஊஊஊசிக் குறிப்பு:


இம்முறை ஊசிக்குறிப்பேதும் இல்லை:)).. ஹா..ஹா..ஹா.... எங்கிட்டயேவா?:) ஓசியில, ஊசிக் குறிப்பு படிக்கப்போகினம்:) விட மாட்டனில்ல:))

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

  பள்ளிக் கூட தொடர்பதிவினைத் தொடர நான் அழைக்க விரும்பும் பதிவர்கள்:::                                                
 கலைக்கு...  http://kalaicm.blogspot.co.uk/2012/03/blog-post_12.html,         
அப்பவே வாக்கு கொடுத்திருந்தேன், ஒருநாள் எழுதுவேன்     நிட்சயம் என, சொன்ன வாக்கை மீறக்கூடாதெல்லோ..   ஏதோ என்னால் முடிந்ததை எழுதிட்டேன், மகிழ்ச்சியோ கலை?:)     
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
======================================================
அழகான பெண்ணை, அன்பாகப் பார்ப்பது காதலில்லை!!!
அன்பான பெண்ணை, அழகாகப் பார்ப்பதுதான் காதல்!!!
======================================================

                             

Sunday 5 August 2012

அதிர(ரா)மான்:)

ண்டு கிழமைக்கு முன்பு, எங்கட முன் வீட்டுக்கு, திடீரென ஒரு மான் குட்டி வந்துதே... உடனேயே பிடிச்சிட்டேன்ன்.. கமெராவிலதான்:). ஆனா எனக்கு டவுட்டாக இருக்கு, இது மான் தானோ? இல்லை மரை என்பார்களே அதோ தெரியவில்லை. மான் எனில் புள்ளி இருக்குமெல்லோ. ஆனால் மரைக்குக் கொம்பில்லை எனச் சொல்வார்கள், இதுக்கு கொம்பிருக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).பார்க்கும் இடமெல்லாம், திரும்பும் திசையெல்லாம், புல், பூண்டு போல ரோஜா பூத்துக் குலுங்குது, நெடுகவும் படமெடுத்துப் போட வேண்டும் என ஆவலாக இருக்கு, ஆனா படம் படமாப் போட்டால், என் புளொக்குக்கு பெற்றோல் ஊத்திக் கொழுத்திடுவினம் எனப் பயமாக இருக்கு:)), அதனால இது ஒரேஞ் ரோஜாவை மட்டும் எடுத்துப் போட்டிருக்கிறேன்... (இனியும்  இப்பூடிப் படங்கள் வரும்:))
எங்கள் ஜன்னலில் இருந்து, மாலை நேரக் காட்சி.... இது நான் முன்பு எடுத்த சூரியன் என்றோ நினைக்கிறிங்க? நோஓஓஓ இது இந்த மாதம் எடுத்தது... இந்தச் சூரியன் என்றைக்குமே கறுக்காது:).. எவ்ளோ அடிச்சாலும் தாங்கும்:).... ஐ மீன் ஒளியைத்தான் கொடுக்குமாக்கும்.. ஏனெனில் இது பிரித்தானியாச் சூரியனாச்சே:)))... ஹையோ ஏன் ஓட்டுக்கு மேல கல்லு விழுகிற சத்தம் கேட்குது.... சே..சே.... அது காத்துக்கு அப்பூடிக் கேட்குதாக்கும், எங்கட மக்கள்ஸ்ஸ் எல்லோரும் ரெம்ப:) நல்லவிங்க:)).
 இது, மறைய சற்று முன்னர்:)
இது ஒரு வித்தியாசமான வடிவமைப்புடன் கூடிய ஃபெரி, இது கோடை காலத்தில் மட்டும்தான் ஓடும்.

குட்டி இணைப்பு:
ஹையோ ஏன், குட்டி இணைப்பைப் பார்த்ததும், எல்லோரும் “மெஷின் gun" தூக்கிறீங்க:)) உதெல்லாம் த்றீ மச் எனக்கு:), ச்ச்ச்சும்மா ஒரு முறைப்போடு பார்த்தாலே நான் மயங்கி விழுந்திடுவேனே:)), சே..சே... அம்மம்மா சொல்றவ, உன்ர வீக்னஸ்ஸை:) எல்லாம் வெளில சொல்லிடாமல், ஸ்ரெடியா இருப்பது போல காட்டிக்கொள் என:), அப்பூடித்தான் இருக்கிறனான், ஆனா என்னையும் மீறி, அப்பப்ப உளறியும் போடுறன்:). சரி இளையராஜா அவர்களின் குரலில் ஒரு பாட்டுப் போடலாம் என தேடினேன், இது கிடைச்சுது,ஆனந்தக்கும்மி , நான் இன்னும் படம் பார்த்தறியேன், ஆனால் பாடல்கள் அருமை...அஜீஸ் பண்ணுங்கோ:).


===============================================
 “விழிகளைக் காயப்படுத்தும் துன்பங்கள் வேண்டும், அப்போதுதான், கண்ணீரைத் துடைக்கும் கைகள் யாருடையதெனத் தெரியும்”
சொன்னவர்: புலாலியூர் பூஸானந்தா:)
================================================