நல்வரவு_()_

****

Tuesday, 21 August 2012

மக்கள்ஸ்ஸ்!!! அதிரா ஸ்மாட்டா?:)சரி இம்முறை சுற்றி வளைக்காமல் நேரடியாகவே விஷயத்துக்கு வந்திடுவம் என, என் உள்மனசு சொல்லுது:)... அதனால தாமதிக்காமல் சொல்லிடுறேன்:).

இங்கு ஸ்கூல் எல்லாம் ஆரம்பமாகிட்டுது, அதனால எனக்கும் பழைய பள்ளிக்கால நினைவுகள் கொஞ்சம் மனதில வந்துது... நினைவுகள் வந்தால் டக்குப் பக்கெனச் சொல்லிடோணும் என அம்மம்மா சொல்லியிருக்கிறா, அப்போதுதான் அவை புதுப்பிக்கப்படுமாம்:).

நான் ஹைஸ் ஸ்கூலுக்குப் போன முதல் அனுபவம்... (நொட்  “ஹைஷ்” ஸ்கூல்:)... நோட் திஸ் பொயிண்ட் கெ.கிருமீஸ்:)).. ஐந்தாம் வகுப்புவரை அப்பாவுக்குத் தெரிந்த அதிபர், ஆசிரியர்கள், நண்பரின் பிள்ளைகள் என தெரிந்த, ஆண் - பெண் ஸ்கூலில் படித்த நான், 6ம் வகுப்புக்காக பெண்கள் கல்லூரிக்கு மாற்றப்பட்ட முதல் நாள். ஏற்கனவே அக்கா அங்கு படித்துக் கொண்டிருந்தமையால் கொஞ்சம் துணிவு, இருப்பினும் நான் தான் தெனாலிபோல தானே அன்றும் இன்றும்:)... ஹையோ உளறிட்டேனோ:))..

வீட்டிலிருந்து ஸ்கூல் பஸ்ஸில் போய் வரவேண்டும். முதல் நாள், காலையில் அப்பா, அம்மா கூடவே வந்து ஸ்கூலில் சேர்த்து விட்டு, பின்னேரம் அக்காவோடு ஸ்கூல் பஸ்ஸில் வரச் சொல்லிப்போட்டுப் போய் விட்டார்கள்.

பெரிய பாடசாலை, பல கட்டிடங்கள், என்னா ஒரு ஒழுங்கு, ஆசிரியர்கள் படிப்பு என பெரிய ஒரு வித்தியாசமாக இருந்தது. ஸ்கூல் விட்டது, அக்கா என் வகுப்புக்கு வந்து கூட்டிப் போனா, ஸ்கூல் வாசலுக்கே பஸ் வரும்.  ஆண்களுக்குப் புறிம்பான ஸ்கூல் பஸ், பெண்களுக்கு புறிம்பான ஸ்கூல் பஸ். என் கஸ்டகாலம், அன்று பார்த்து, ஆண்களுக்கான பஸ் பிரேக் டவுனாம், அதனால் ஆபத்துக்குப் பாவமில்லை:) என, இருபாலாருக்கும் ஒரு பஸ் என வந்தது பஸ்.

பெண்களுக்கே ஒரு பஸ் போதாது, இதில் ஆண் பிள்ளைகளும் ஏறினால் சொல்லவா வேண்டும், நாமும் இடிபட்டு ஏறினோம், இது எனக்கு புது அனுபவம்... சின்ன ஆளும்தானே அப்போ, மேலேயும் பிடிக்க முடியவில்லை, மூச்சு எடுக்க முடியவில்லை, நெரிசலோடு நின்றேன், பக்கத்திலே என் வயதை ஒத்த ஒரு boy,  அவரும் குட்டி, நெரிசல் பொறுக்க முடியாமலோ என்னவோ, என் கையில் நுள்ளத் தொடங்கிட்டார்ர்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

னக்கோ அழுகை வரத் தொடங்கிவிட்டது, அக்கா இவர் நுள்ளுறார் என்றேன் கலங்கிய கண்களோடு, உடனே அக்கா, ஆரிடமோ கேட்டு, சீற்றுக்குள்ளே என்னைத் தள்ளி விட்டா.

பின்பு, எம் வீடு நெருங்கும் போது, கிட்டத்தட்ட பஸ் வெளிப்பாகிவிடும். எமக்கெல்லாம் இருக்க இடம் கிடைத்துவிடும். எனக்குப் பயம், பெல் அடிக்காமல் விட்டால், பஸ் வீட்டைத் தாண்டிப் போய்விடும் என:), அதனால 3,4 ஹோல்ட்க்கு முன்பே எழும்பி, அக்கா வா... எனக் கூப்பிட்ட படி கண்டக்ரரிடம் வாசலுக்குப் போய் விட்டேன், அக்காவுக்கோ வெட்கம், அதிரா பேசாமல் இரு என.. அடக்குவா... இது பல நாட்கள் தொடர்ந்தது.

ப்பவுமே ஆண்கள் ஸ்கூல் பஸ்ஸும், பெண்கள் ஸ்கூல் பஸ்ஸும் சோடியாகவே முன் பின்னாக வந்து கொண்டிருக்கும். நாம் கொஞ்சப்பேர் இருந்தோம், ரைவருக்குக் கிட்டப் போய் நின்று கொண்டு, கத்துவோம், அவர்களை முந்த விட்டிட வேண்டாம் என, இதனால் ரைவருக்கும் நல்ல சந்தோசம் போட்டி போட்டு ஓடுவார்கள், இதேபோல ஆண்கள் ஸ்கூல் பஸ்ஸிலும் ஒரு கூட்டம் கத்தும்:).

ரு பஸ்ஸை, இன்னொரு பஸ் முந்தினால், கூக்குரலுக்கு எல்லையே இருக்காது. ஒவ்வொரு ஹோல்ட்டிலும் பிள்ளைகளை கெதியா இறங்கச் சொல்லிக் கத்துவோம், அவர்களும் எமக்கு ஒத்துழைத்து, மேல் படியில் இருந்து கிட்டத்தட்டக் கீழே குதிப்பார்கள்:)... இப்படிக் குட்டிக் குட்டிச் சந்தோசங்கள் பல.

சரி இனித் தலைப்புக்கு வாறேன். பாருங்கோ எவ்ளோ ஸ்மாட்டாக விழுகிறார்கள் கீழே:)
 
ப்படி நான் படிக்கத் தொடங்கி ஒருவருடம் முடிந்த வேளை. எனக்கொரு கவலை, என்னோடு பிரைமறி ஸ்கூலில் படித்த என் பக்கத்து வீட்டுத் தோழி... தேவிகா. அவ இப்பவும் அதே ஸ்கூலிலேயே படித்துக் கொண்டிருந்தா. அவவின் அக்கா அண்ணா எல்லாம், பெரிய ஸ்கூலில் படித்தார்கள், தந்தையும் நல்ல தொழிலில் இருந்தவர், இருப்பினும் இவவை ஏனோ மாற்ற நினைக்கவில்லை.

அப்போ எனக்கொரு எண்ணம் உதயமாகியது, ஏன், என் ஸ்கூலில் இவவையும் கொண்டுபோய்ச் சேர்க்கக்கூடாது என்று. நான் 5ம் வகுப்பு புலமைப் பரீட்சையில், அதிக புள்ளிகள் எடுத்துப் பாஸ் பண்ணியமையால், கேட்டவுடன் இடம் கிடைத்தது அங்கு, இல்லையெனில் அப்பிளிகேசன் போட்டு, பரீட்சை வைத்து பாஸ் பண்ணினால் மட்டுமே இடம் கிடைக்கும். இந்தப் புறுணம் எதுவும் எனக்குத் தெரியாது அப்போ. எல்லா வேலையும் அப்பாதானே பார்த்தார்.

நான் நண்பியிடம் சொன்னேன், திங்கட் கிழமை யூனிஃபோம் போட்டு என்னோடு பஸ்ஸில் வாங்கோ, நான் கூட்டிப் போய்ச் சேர்த்து விடுகிறேன் என. அவர்கள் பெற்றோரோ, எம் பெற்றோரோ ஆருமே எதுவும் சொன்னதாக தெரியவில்லை, அது என்ன நடந்ததென எனக்கும் நினைவில்லை. நண்பி வெளிக்கிட்டு வந்தா, ஸ்கூலுக்குள் கூட்டிப் போனேன்...

இது இப்படியே இருக்க, எம் அதிபர் பற்றிக் கொஞ்சம் சொல்கிறேன். அவ அஸம்பிளியில் பேசினால், அந்த பெரிய ஹோல் அதிரும், கணீர் என இருக்கும் குரல். நாம் எல்லோரும் மூச்சுவிடும் சத்தம்கூடக் கேட்காமல் நிற்போம், மயான அமைதி என்பார்களே அப்படித்தான் இருக்கும். அவ்வளவு பயமும், மரியாதையும் அவவில். அவ மிக நல்லவ, அதே நேரம் அளவுக்கு மீறிய ஸ்ரிக்ட்.

கதைக்க மாட்டா, பார்த்தாலே போதும்... நாம் சுருண்டு போய் விடுவோம். நிமிர்ந்து பார்க்கவே பயமாக இருக்கும், ஆளும் நல்ல உயரம், கொண்டையும் போட்டுக் கம்பீரமாக இருப்பா.

என் நண்பி இங்கு இருக்கிறாவெல்லோ (பெஸ்ட் ஃபிரெண்ட்), அவ திருமணமாகி கணவரோடு கொழும்பு, காலி வீதியில், போய்க் கொண்டிருந்தபோது, இந்த அதிபர் எதிரே வந்தாவாம், தான் தூரத்தில் கண்டதும், கணவரின் கையைப் பிடித்து இழுத்து, வாங்கோ ரோட்டைக் குறொஸ் பண்ணிப் போயிடலாம் என்றாவாம்:), கணவர், சே.. என்ன இது, போய்க் கதை கேட்போம் எனச் சொல்லி, கதைத்தார்களாம், அவ்ளோஓ பயம்:)) எமக்கு:).

அப்படிப்பட்ட அதிபரின் ஒபீஷுக்கு, என் நண்பியை நேரடியாக அழைத்துப் போனேன், எம்மைக் கண்டதும் அவ ஏதோ எழுதிக்கொண்டிருந்தவ, நிமிர்ந்து பார்த்து....

 “என்னம்மா?” என்றா.

“இவ என் நண்பி, ஸ்கூலில் சேர்க்கக் கூட்டி வந்திருக்கிறேன்”, என்றேன்..

அவவுக்கு சிரிப்பும் வந்து விட்டது, புன்னகையோடு சொன்னா,
“அப்படியெனில், முதலில் ஒபீஷில் ஃபோம் எடுத்து நிரப்பி, போடச் சொல்லுங்கோ பின்பு Test இருக்கும், அதன் பின்புதான் சேர்க்கலாம்” என்றா...

நான் உடனே சொன்னேன், இவவுக்கு தனியே போகத் தெரியாது, அதனால ஸ்கூல் விடும்வரை, இங்கு இருக்கலாமோ என்றேன், சரி உங்கள் வகுப்பில், பின் ஷெயாரில் இருக்க விடுங்கோ, ரீச்சருக்கு, நான் சொன்னேன் எனச் சொல்லுங்கோ என்றா.

அதேபோல் அவவைக் கூட்டிப் போய் வகுப்பில் இருக்க விட்டு, அன்று முழுக்க ஒவ்வொரு பாட ஆசிரியருக்கும் விளக்கமும் கொடுத்து, நான் பட்ட வேதனை சொல்ல முடியாது, கடசிவரை அந்நண்பி, பழைய பாடசாலையிலேயே படித்தார்.
இப்ப சொல்லுங்கோ அதிரா SMART ஓ?:):):)...  ஆஆஆ.... முறைக்கப்படாது:).

குட்டி இணைப்பு:)
இப்போ நகத்தையும், நெயில் பொலிஸையும் காட்டுவது பாஷன் இல்லையாம்:))... எப்பவுமே மாத்தி யோசிக்கோணுமாம்:) எனப் பெரியவங்க சொல்லியிருக்கினம்:) அதனால மாத்தி ஓசிச்சேன்:)) இப்பூடி ஆச்சு:).. இது ஆருக்கும் தரமாட்டேன்:).
மு.கு:
தெகிரியம்:) இருந்தால், ஆரும் இப்படத்தைத் தொடருவினமோ பார்ப்பம்:))).
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஊஊஊஊசிக் குறிப்பு:


இம்முறை ஊசிக்குறிப்பேதும் இல்லை:)).. ஹா..ஹா..ஹா.... எங்கிட்டயேவா?:) ஓசியில, ஊசிக் குறிப்பு படிக்கப்போகினம்:) விட மாட்டனில்ல:))

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

  பள்ளிக் கூட தொடர்பதிவினைத் தொடர நான் அழைக்க விரும்பும் பதிவர்கள்:::                                                
 கலைக்கு...  http://kalaicm.blogspot.co.uk/2012/03/blog-post_12.html,         
அப்பவே வாக்கு கொடுத்திருந்தேன், ஒருநாள் எழுதுவேன்     நிட்சயம் என, சொன்ன வாக்கை மீறக்கூடாதெல்லோ..   ஏதோ என்னால் முடிந்ததை எழுதிட்டேன், மகிழ்ச்சியோ கலை?:)     
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
======================================================
அழகான பெண்ணை, அன்பாகப் பார்ப்பது காதலில்லை!!!
அன்பான பெண்ணை, அழகாகப் பார்ப்பதுதான் காதல்!!!
======================================================

                             

118 comments :

 1. தற்செயலா வந்தால் ஆகா புது போஸ்ட்.

  ReplyDelete
 2. //இப்ப சொல்லுங்கோ அதிரா SMART ஓ?:):):)... ஆஆஆ.... முறைக்கப்படாது:).//


  Sooooo !!!!!!!!!!Sweeeeeeet of you Athees .
  பின்நூட்டமிடக்கூட மறந்து அந்த சம்பவத்தில் மூழ்கிட்டேன் .
  உதவும் மனப்பான்மை இருந்தாலும் இவ்ளோ தைரியம் எனக்கில்லை

  ReplyDelete
 3. உங்க அனுபவங்களை வாசித்ததும்,எங்க பாடசாலை அனுபவத்தையும் ஞாபகப்படுத்திவிட்டீங்க.அப்போ ஸ்கூல்பஸ் என்றால் யாரை யார் முந்துவது என போட்டிதான்.அப்போ 2 பஸ்களும் ஓடின.(மினிபஸ்,CTB பஸ் இவர்களுக்கிடையிலும் போட்டி) நல்லதொரு அனுபவக்(கதை)குறிப்பு.

  ReplyDelete
 4. ""அழகான பொண்ணு நான்
  அதற்கேற்ற கைகள்தான்
  எங்கிட்டே இருப்பதெல்லாம்
  கைச்சங்கிலி ஒன்னுதான்
  எங்கிட்டே இருப்பதெல்லாம்
  ரோஜாப்பூ(வைத்திருக்கும்)கைகள்தான்"

  ReplyDelete
 5. இருப்பினும் நான் தான் தெனாலிபோல தானே அன்றும் இன்றும்:)... ஹையோ உளறிட்டேனோ:))..
  ///////////////////////

  ஹையோ ஹையோ......இது வேறயா தெரியாமப் போச்சே

  ReplyDelete
 6. எனக்குப் பயம், பெல் அடிக்காமல் விட்டால், பஸ் வீட்டைத் தாண்டிப் போய்விடும் என:), அதனால 3,4 ஹோல்ட்க்கு முன்பே
  ////////////////////////

  உண்மைதான் நாங்களும் அப்படித்தான் அது எல்லாம் அந்த வயசில சகஜம்பா.....

  ReplyDelete
 7. அதேபோல் அவவைக் கூட்டிப் போய் வகுப்பில் இருக்க விட்டு, அன்று முழுக்க ஒவ்வொரு பாட ஆசிரியருக்கும் விளக்கமும் கொடுத்து
  //////////////////////////

  ஆஹா இதப் போல ஒரு அவஸ்த்தை கிடைக்கவே கிடைக்கப் படாது.....

  ReplyDelete
 8. இப்ப சொல்லுங்கோ அதிரா SMART ஓ?
  /////////////////////

  இருந்தோ பார்லிமெண்ட்ல கதச்சிட்டு இருக்கிறாங்க உலகம் அழியிறத்துக்கு இடையில ஒரு முடிவு எடுத்துடுவாங்க அப்புறம் சொல்லிக்கிறேன்

  ReplyDelete
 9. தெகிரியம்:) இருந்தால், ஆரும் இப்படத்தைத் தொடருவினமோ பார்ப்பம்:))).
  ///////////////////////
  அட தொட்டுட்டேன்பா..........ஆனாலும் எனக்கு தெகிரியம் ரொம்ப ஓவர் தானாக்கும்

  ReplyDelete

 10. அழகான பெண்ணை, அன்பாகப் பார்ப்பது காதலில்லை!!!
  அன்பான பெண்ணை, அழகாகப் பார்ப்பதுதான் காதல்!!!
  /////////////////////////
  என்ன _____ டா இது ஒன்னுமே புரியுது இல்ல

  ReplyDelete
 11. மணிசாருக்கு முதலில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. நல்ல காலம் கலை தனிமரத்தை பள்ளிக்காலத்தை தொடர்பதிவுக்கு அழைக்கவில்லை!ஹீ படிக்காதவன் ஏது பள்ளி!ஹீ

  ReplyDelete
 13. பஸ் அனுபவம் சுகமான சுமை !ம்ம்

  ReplyDelete
 14. ஊசிக்குறிப்பு !ம்ம் சூப்பர் அதிரா!

  ReplyDelete
 15. ஆஆஆஆஆஅ அஞ்சு!! வாங்கோ.. இம்முறை உங்களுக்கே ஆயா:)))... கொஞ்ச நாளைக்கு அஞ்சுவுக்கு ஹொலிடே:)) ஆயா சமையலைப் பார்ப்பாவெல்லோ:))..

  //உதவும் மனப்பான்மை இருந்தாலும் இவ்ளோ தைரியம் எனக்கில்லை//

  அது தான் சொல்வார்களாக்கும், “இளம் கன்று பயமறியாது” என:) பின் விளைவுகளை யோசிக்காமல் நடக்கும் வயது...

  மியாவும் நன்றி அஞ்சு.

  ReplyDelete
 16. வாங்கோ அம்முலு.. என்ன கொஞ்ச நாளாக புளொக் அசையாமல் இருக்கு, காத்தடிக்கவில்லையோ?:).

  //அவர் இன்னும் எல்லாக்கால்வாய்களையும் தொட என் வாழ்த்துக்கள்.//

  ஹா..ஹா..ஹா.. அவர் நினைச்சால் உலகப் படத்தில, ஒரு நிமிஷத்தில எல்லாத்தையும் தொட்டுக் காட்டிடப்போறார்:)) மாத்தி ஓசிப்பவராச்சே:))...

  //எங்கிட்டே இருப்பதெல்லாம்
  கைச்சங்கிலி ஒன்னுதான்//

  ஹையோ அது வைரமுத்தாக்கும் என நினைச்சு, சனம் வீட்டுக்குள்ள வந்திடப்போகினம்:).. நான் டோருக்குப் பட்லொக் போட்டிட்டேன்ன்ன்ன்ன்:)))..

  மியாவும் நன்றி அம்முலு.

  ReplyDelete
 17. அஞ்சூஊஊஊஊஊஊஊ.. ஒரு சின்ன டவுட்டு:) பிறந்தநாளுக்கு எதுக்கு கத்தி கொடுக்கிறீங்க?:))... கத்தியில்லாமலே இவ்ளோ காலமும் சங்கிலி காப்பென... லொட்றி அடிச்சது அவருக்கு:), இனிக் கத்தியைக் காட்டி... வைரம், வைடூரியம் என அடிக்கப்போறாரே:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது தேவையா அஞ்சு:).

  ReplyDelete
 18. ஆஅ அவர் செஃப் என்கிறதால் அந்த ஹாட் கேக் மற்றும் சமையல் உபகரணம் எல்லாம் கொடுத்தேன் ..நீங்கதான் மாத்தி யோசிச்சிட்டீங்க இப்ப )))

  ReplyDelete
 19. சுமையான சுகமான அனுபவம் அருமை.. :-))

  ReplyDelete
 20. ஆங்கிலக் கால்வாய் ஒனர் அவர்களுக்கு இனிய வணக்கம்! புதன்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ!

  ஆஆஆஆஆஆ மேல் முகட்டிலேயே வாழ்த்துச் சொல்லியிருக்கினம்! மெர்ஸி புக்கு! மெர்ஷி புக்கு!

  பில்லா பாட்டுக்கு இன்னொரு ஸ்பெஷல் தாங்க்ஸ்!

  [im]http://www.animated-gifs.eu/website-thanks/0155.gif[/im]

  ReplyDelete
 21. சங்கிலித் திருடன் தேசிக்காய் சூனிய அதிபதி எங்கள் அண்ணர் கருமை நிறக் கன்ணர் மனியம் கபே ஓனர் அவர்களுக்கு இதயம் கணிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் //////

  மிக்க நன்றி சிட்டு! ஆஹா என்ன ஒரு அருமையான வாழ்த்து! மிக்க நன்றி நண்பா!

  [im]http://i176.photobucket.com/albums/w188/Criada/THANK-YOU.gif[/im]

  ReplyDelete
 22. மணிசாருக்கு முதலில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!////////

  மிக்க நன்றி நேசன் அண்ணா!

  [im]http://www.allgraphics123.com/ag/01/9445/9445.gif[/im]

  ReplyDelete
 23. ஆங்கிலக் கால்வாய் ஓனருக்கு ஒரு சின்ன ஐடியா - இப்போதெல்லாம் மொபைலில் தானே ப்ளாக்குகள் படிக்கிறோம்! ஸோ, மொபைல் செட்டிங் மிக மிக அவசியம் எல்லோ? உங்கட ப்ளாக் மொபைல் செட்டிங்கில் “அவ்சம்” எனும் ஒப்ஷன் செலெக்ட் செய்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்! பின்னணி கறுப்பாக இருக்கு!

  இது படிப்பதற்கு மிகவும் சிரமமான இரு டெம்ப்ளேட் ஆகும்! ஆகவே டாஷ்போர்ட் - செட்டிங் - சென்று மொபைல் வியூவில் - டீஃபோல்ட் என்பதை செலெக்ட் செய்து சேவ் பண்ணுங்கோ!

  [im]https://lh6.googleusercontent.com/-_D3PiiE4YDw/UDQpsle7GXI/AAAAAAAABgM/KFhkKkZ0qko/s720/Screenshot_2012-08-21-22-01-14.png[/im]

  அப்புறம் பாருங்கோ, உங்கள் ப்ளொக் மொபைல்களில் அசத்தலாகத் தெரியும்!

  ( ஐடியா கட்டணம் - 50 பவுண்ட்ஸ்! அனுப்பவும்! இரண்டு அழகிய பேர்ப்பிள் கலர் 20 பவுண்ட்ஸ் நோட் கட்டாயம் அனுப்பவும்! ):-))

  ReplyDelete
 24. பிறந்த வாழ்த்துக்கள் மணி அண்ணாவுக்கு

  ஸ்கூல் போன கதை
  ம் ம் கலக்குங்க
  நல்ல தகிரியம் தான் உங்களுக்கு
  ஸ்மார்ட் கேர்ள்...:)

  ரோசாப்பு கை
  பேபி அதிரா கையில்
  ரோஜா கையில் ரோஜாவா ??

  ReplyDelete
 25. வணக்கம் அக்கா எப்படி சுகம்?
  நீண்ட காலத்துக்கு பிறகு அக்கா வூட்டுப்பக்கம் வருகின்றேன்

  ReplyDelete
 26. ////அழகான பெண்ணை, அன்பாகப் பார்ப்பது காதலில்லை!!!
  அன்பான பெண்ணை, அழகாகப் பார்ப்பதுதான் காதல்!!!////

  என்ன ஒரு பஞ் டயலாக்

  ReplyDelete
 27. பெரிய வகுப்பில் படித்த கதை சொல்லுவீங்கனு பார்த்தா ஏதோ 5ம் கிளாஸ் கதை சொல்லுறீங்க நீங்க ரொம்ப மோசம் அக்கா

  ReplyDelete
 28. இப்போ நகத்தையும், நெயில் பொலிஸையும் காட்டுவது பாஷன் இல்லையாம்:))... எப்பவுமே மாத்தி யோசிக்கோணுமாம்:) எனப் பெரியவங்க சொல்லியிருக்கினம்:) அதனால மாத்தி ஓசிச்சேன்:)) இப்பூடி ஆச்சு:).. இது ஆருக்கும் தரமாட்டேன்:).//

  நீங்க மகிமாவயும்
  டீச்சரையும் கிண்டல் பண்ணலை தானே:)
  நீங்கள் தரவேணாம் எல்லாம் அவங்களே எடுத்துபினம்

  ரோஜா அழகா இருக்கு பேபி அதிரா
  பதிவும் கலக்கல்
  கடைசி நச்
  தொடரட்டும் உங்கள் பள்ளிப்பணி....

  ReplyDelete
 29. பள்ளிக்கூடப்பதிவு அருமை.//ஒரு பஸ்ஸை, இன்னொரு பஸ் முந்தினால், கூக்குரலுக்கு எல்லையே இருக்காது. ஒவ்வொரு ஹோல்ட்டிலும் பிள்ளைகளை கெதியா இறங்கச் சொல்லிக் கத்துவோம், அவர்களும் எமக்கொத்துழைத்து மேல் படியில் இருந்து கிட்டத்தட்டக் கீழே குதிப்பார்கள்:)... இப்படிக் குட்டிக் குட்டிச் சந்தோசங்கள் பல.// உண்மைதான் அதிரா.இப்படி சின்ன சின்ன சந்தொஷங்களை சின்னவளில் அனுபைத்ததை நினைத்துப்பார்க்கும் பொழுது மிகவும் சந்தோஷமாக உள்ளது.

  ReplyDelete
 30. நேரமின்மையால் இப்போதைக்கு... ஆஹா! ம் ;)))  ReplyDelete
 31. பள்ளி நினைவுகள் ப்ஸ் அனுபவம் எல்லாமே ஒரு அருமையான நாட்கள்
  அதை நினைத்து பார்த்தால் இன்னும் இனிக்கும் இந்த நாட்கள்.

  அதிரா ரொம்ப ரொம்பவேஏஏஏ ஸ்ம்மாட்ட்ட்ட்ட்டூஊஊஊஉ
  பூ எடுத்து கொண்டேன்

  ReplyDelete
 32. காலை வணக்கம்,அதிரா!நலமா?பள்ளிக் கால நினைவுகள் அருமை!நான் கூட கல்லூரிக் காலம்?! ஸ்கூல் பஸ்ஸில் தான் போவேன்."அந்த"(முந்திச் செல்வது)அனுபவம் எனக்கும் உண்டு!பகிர்வுக்கு நன்றி.(எமக்கொத்துழைத்து-----இதனைப் பிரித்தே எழுத வேண்டும்.இல்லையெனில் பொருள் வேறுபடும்.எமக்கு- ஒத்துழைத்து ......)

  ReplyDelete
 33. பிறந்த வாழ்த்துக்கள் மணி அண்ணாவுக்கு ////

  மிக்க நன்றி சிவா

  [im]http://regimeweightwatchers.r.e.pic.centerblog.net/2be44729.gif[/im]

  ReplyDelete
 34. சரி இம்முறை சுற்றி வளைக்காமல் நேரடியாகவே விஷயத்துக்கு வந்திடுவம் என, என் உள்மனசு சொல்லுது:)... ////

  அப்ப எங்கள் மேல உள்ள அக்கறையால நிங்கள் நேரடியாக, விஷயத்துக்கு வரேலையோ? உள் மனம் சொன்னதாலதான் வந்தனியளோ?

  ReplyDelete
 35. அன்புச் சகோதரர் மணியம் கபே ஓனர் மாத்தியோசி மணி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!

  அதிரா! இம்முறை பள்ளிக்கால நினைவலைகளுடன் பதிவு அருமையாக இருக்கு.

  //அன்று முழுக்க ஒவ்வொரு பாட ஆசிரியருக்கும் விளக்கமும் கொடுத்து, நான் பட்ட வேதனை சொல்ல முடியாது// உண்மைதான் ஆனாலும் கடைசி வரை பழைய பாடசாலையிலேயே படித்த உங்கள் நண்பி தேவிகாவுக்கு அன்று உங்கள் தயவால் ஹைஸ் ஸ்கூலில் ஒருநாளாகிலும் அங்கு வந்து பார்க்கக் கிடைத்தது பெரீய விஷயமாயிருந்திருக்கும். மிகவும் சந்தோஷப்பட்டிருப்பாவெல்லோ!
  ஆனால் அதிரா உங்களின் துணிச்சலை பாராட்டியே ஆகணும். எதையும் செய்து பார்த்துவிடும் உங்களின் துணிச்சல், சிறுவயதுமுதல் இப்பவும் அப்பிடியேதான் இருக்கு:)))

  நிகழ்வுகள் அனைத்தையும் வாசிக்கும்போது கண்முன் காட்சியாய் தெரிகிறது. அருமையாக விபரித்து எழுதியிருக்கிறீங்கள்.

  பூவும் பூவையும் அழகு;)
  சரீஈஈ, இப்படி கையில் பிடிக்கிறீங்களே ரோஸ் கொத்துக்குள் பூச்சி ஏதும் இருக்காதோ???

  ReplyDelete
 36. [co="dark green"]வாங்கோ ஜிட்டு வாங்கோ... [/co]

  //சிட்டுக்குருவி said... 8
  சங்கிலித் திருடன் தேசிக்காய் சூனிய அதிபதி எங்கள் அண்ணர் கருமை நிறக் கன்ணர் மனியம் கபே ஓனர் அவர்களுக்கு இதயம் கணிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்///

  [co="dark green"]ஹா..ஹா..ஹா... என்ன ஒரு அழகாக, ஆளைப் புரிஞ்சு வச்சு வாழ்த்துறீங்க என்னைப்போலவே:)).. [/co]

  ReplyDelete
 37. //சிட்டுக்குருவி said... 12
  இப்ப சொல்லுங்கோ அதிரா SMART ஓ?
  /////////////////////

  இருந்தோ பார்லிமெண்ட்ல கதச்சிட்டு இருக்கிறாங்க உலகம் அழியிறத்துக்கு இடையில ஒரு முடிவு எடுத்துடுவாங்க அப்புறம் சொல்லிக்கிறே//

  [co="dark green"]அவ்வ்வ்வ்வ்:)) இந்த விஷயம் பார்லிமெண்ட் வரை போயிட்டுதோ?:)) அப்போ என்ன முடிவு வந்தாலும் எனக்கு டபிள் okay தான்ன்ன்:)). [/co]

  //சிட்டுக்குருவி said... 13
  தெகிரியம்:) இருந்தால், ஆரும் இப்படத்தைத் தொடருவினமோ பார்ப்பம்:))).
  ///////////////////////
  அட தொட்டுட்டேன்பா..........ஆனாலும் எனக்கு தெகிரியம் ரொம்ப ஓவர் தானாக்கும்//

  [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) ஆராம் தொடச் சொன்னது:))) உங்கட ஆமி அங்கிளிடம் சொல்லிக் கொடுப்பேன் ஜாக்ர்ர்தை:)) [/co]

  ReplyDelete

 38. சிட்டுக்குருவி said... 14

  அழகான பெண்ணை, அன்பாகப் பார்ப்பது காதலில்லை!!!
  அன்பான பெண்ணை, அழகாகப் பார்ப்பதுதான் காதல்!!!
  /////////////////////////
  என்ன _____ டா இது ஒன்னுமே புரியுது இல்ல

  [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) முதல்ல ஒரு அன்பான பெண்ணைக் கண்டு பிடியுங்கோ:)) பின்பு மிகுதியை புரிய வைக்கிறேன்ன்ன்:))))... மியாவும் நன்றி ஜிட்டு... [/co]

  ReplyDelete
 39. //அழகான பெண்ணை, அன்பாகப் பார்ப்பது காதலில்லை!!!
  அன்பான பெண்ணை, அழகாகப் பார்ப்பதுதான் காதல்!!!//

  அழகான பெண்ணை அன்பாக இத்தனை நாள்(வருஷம்) பார்த்தது(கொண்டிருந்ததுக்கு)க்கு காதலில்லைன்னு சொன்னா முதுகுல டின்னு கட்டிடுவாங்க ...அவ்வ்வ் :-)))

  ReplyDelete
 40. சோக்லெட் கிடைக்காம யாருக்கும் நான் வாழ்த்து சொல்வதில்லை ஹி...ஹி... :-)))

  ReplyDelete
 41. கடவுளே!!!! எனக்காராவது சுட்டாறின தண்ணியாத் தெளியுங்கோஓஓஒ... நல்லவேளையா காப்பெட்டிலதான் விழுறேன்ன்... முருகா வள்ளிக்கு முத்துமாலை கன்ஃபோம்:))

  [im]http://i.ytimg.com/vi/0ohyETjyth4/0.jpg[/im]

  ReplyDelete
 42. வாங்கோ நேசன்..

  //தனிமரம் said... 16
  நல்ல காலம் கலை தனிமரத்தை பள்ளிக்காலத்தை தொடர்பதிவுக்கு அழைக்கவில்லை!ஹீ படிக்காதவன் ஏது பள்ளி!ஹீ//

  ஹா..ஹா..ஹா... ஒருவேளாஇ, பள்ளிக்குப் போயிருந்தால், ஐராங்கனியைக் கோட்டை விட்டிருப்பீங்கள்:) எல்லாம் நன்மைக்கே:).

  மியாவும் நன்றி நேசன்.

  ReplyDelete
 43. வாங்கோ சினேகிதி.. வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete


 44. மாத்தியோசி - மணி said... 24

  [co="dark green"]ஆஆஆஆ.. எங்கட அனுமதி இல்லாமலேயே.. எங்கட கால்வாயைத் தொட்ட ஆட்கள் வந்திருக்கினம்:).. வாங்கோ வாங்கோ... நலம்தானே? உங்கட வ.பு கமும்... ஏனையோரும் நலமோ:)) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்பு:). [/co]  பில்லா பாட்டுக்கு இன்னொரு ஸ்பெஷல் தாங்க்ஸ்!

  [co="dark green"]ச்ச்சும்மா ஒரு கண்டுபிடிப்பு:))(அஞ்சு சமையல் குறிப்புக் கண்டு பிடிப்பதைப்போல:)) பில்லாவில வாற அஜித் மாதிரி இருப்பீங்களாக்கும் என:)).. நோ..நோஒ இதுக்கெல்லாம் ஷை ஆகக்கூடாது:). [/co]

  ReplyDelete
 45. மாத்தியோசி - மணி said... 25

  மிக்க நன்றி அம்முலு ( அக்காவா? தங்கச்சியா? ) மேடம்! உலகில் எல்லா நதிகளிலும் நீராட எனக்கும் விருப்பம் தான்! பார்ப்போம்!////

  ஹா..ஹா..ஹா... ச்ச்ச்சோஓஓ சிம்பிள், பக்கட்டில தண்ணீரை இறக்குமதி செய்து, வீட்டிலிருந்தே சொகமாக் குளிச்சிடலாம்:))) அவ்வ்வ்வ்வ்வ்:)).

  ReplyDelete
 46. மாத்தியோசி - மணி said... 29
  ஆங்கிலக் கால்வாய் ஓனருக்கு ஒரு சின்ன ஐடியா -

  இது படிப்பதற்கு மிகவும் சிரமமான இரு டெம்ப்ளேட் ஆகும்! ஆகவே டாஷ்போர்ட் - செட்டிங் - சென்று மொபைல் வியூவில் - டீஃபோல்ட் என்பதை செலெக்ட் செய்து சேவ் பண்ணுங்கோ!
  ///
  [co="green"]சொன்னமைக்கு மெர்ஷி புக்கு.... நான் கண்டபடி புளொக்கில கைபோடுவதில்லை, ஏதும் ஒண்டு கிடக்க ஒண்டாயிட்டாலும் எனப் பயம்:), ஆனா நீங்க சொன்னமைக்காக செய்கிறேன், தப்பித்தவறி ஏதும் தட்டுப்பட்டு.. புளொக் காணாமல் போயிட்டால்ல்....

  ஆங்கிலக் கால்வாயை கால்நடையாவே கடந்து வருவேன்:), கையில புளொக்கையும் தூக்கிக்கொண்டு:)... சொல்லிட்டேன் இப்பவே... :)).. இது தேம்ஸ்கரையில் நிற்கும் முள்ளு முருக்கம்மரம் மீது சத்தியம்:)). [/co]

  ReplyDelete
 47. ( ஐடியா கட்டணம் - 50 பவுண்ட்ஸ்! அனுப்பவும்! இரண்டு அழகிய பேர்ப்பிள் கலர் 20 பவுண்ட்ஸ் நோட் கட்டாயம் அனுப்பவும்! ):-))//

  உவ்வளவும் தானோ?:) ரொம்ப ஷீப்பா இருக்கே:))... சரி சரி யோசிக்காதீங்க.. எனக்கு நம்பிக்கையான ஆள் அஞ்சுதான்:) அவவிடமே கொடுத்தனுப்புவேன், மறக்காமல் வாங்கிடுங்கோ:)

  ReplyDelete
 48. [co="dark green"]வாங்கோ சிவா வாங்கோ.. இம்முறை ரொம்ப லேட்டூஊஊஊ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).[/co]

  Siva sankar said... 34

  நீங்க மகிமாவயும்
  டீச்சரையும் கிண்டல் பண்ணலை தானே:)
  நீங்கள் தரவேணாம் எல்லாம் அவங்களே எடுத்துபினம் //

  [co="dark green"]ஹா..ஹா..ஹா.. நீங்க எப்பூடி கொழுத்தினாலும் எங்களுக்குள் பத்தாது:)).. அது கிண்டல் இல்லை “எசப்பாட்டூஊஊஊஊ”:).

  நல்லவேளை மகிமா இங்கின இல்லை:)) இல்லட்டில் இப்ப ஒரு ரொனாடோ வெடிச்சிருக்கும்:))

  றீச்சர் காக்கா போயிட்டா:).[/co]

  மியாவும் நன்றி சிவா..

  ReplyDelete
 49. வாங்கோ ராஜ் வாங்கோ...

  //K.s.s.Rajh said... 31
  வணக்கம் அக்கா எப்படி சுகம்?
  நீண்ட காலத்துக்கு பிறகு அக்கா வூட்டுப்பக்கம் வருகின்றேன்//

  அதுதானே நீங்களும் நீண்ட நாளாக மறந்துபோயிட்டீங்க:).

  ////K.s.s.Rajh said... 33
  பெரிய வகுப்பில் படித்த கதை சொல்லுவீங்கனு பார்த்தா ஏதோ 5ம் கிளாஸ் கதை சொல்லுறீங்க நீங்க ரொம்ப மோசம் அக்கா///

  நான் இன்னும் 5ம் வகுப்பிலதானே ராஜ் இருக்கிறேன்:)).. மேலே போனால்...மேலே சொல்லுவேன்... நான் கதையைச் சொன்னேன்:)).

  மியாவும் நன்றி ராஜ்:).

  ReplyDelete
 50. வாங்கோ ஸாதிகா அக்கா...

  அப்பப்ப பழசை நினைத்துப் பார்த்துக் கதைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்...

  மியாவும் நன்றி.

  ReplyDelete
 51. றீச்சர் வாங்கோ..
  நான் வேணுமெண்டால் ஒரு கிலோ நேரம் அனுப்பி விடட்டோ?:)).. இலவசமாத்தான்.. ஹா..ஹா..ஹா..

  இல்ல இமா.. எல்லோர் பாடும் இப்போ நேரமின்மையால் திண்டாட்டம்தான்..

  மியாவும் நன்றி.

  ReplyDelete
 52. வாங்கோ ஜலீலாக்கா..

  நோன்பெல்லம் நல்லபடி முடிஞ்சுதோ? எனக்குத்தான் நீங்க நெய்ச்சோறு அனுப்பவில்லை:), இந்த நெய்ச்சோறை வாழ்க்கையில் மறக்க முடியாது, அதுக்கு ஒரு நினைவு இருக்கு பின்பு சொல்லுவேன்.

  மியாவும் நன்றி ஜல் அக்கா.

  ReplyDelete
 53. வாங்கோ யோகா அண்ணன் வாங்கோ..

  ஓ நீங்களும் ஸ்கூல் பஸ்தானோ? மறக்க முடியாத அனுபவங்கள் நிறைய இருக்குமே...

  எங்கட அண்ணனும் ஸ்கூல் பஸ்ஸில்தான் போய் வந்தவர், அப்போ அவர்கள் பஸ்ஸில் ஒரு “குண்டு” boy ஏறினாராம், ஏறிக் கேட்டாராம்.. “ஒண்டரை ரிக்கெட் தாங்கோ” என:))..

  அவர் கேட்டது ஒரு - அரை ரிக்கெட்:).
  உடனே கண்டக்டர் சொன்னாராம், ஓம் தம்பி, உம்மட சைஸ்ஸுக்கு 1 1/2 ரிக்கெட் தான் தரவேணும் என:)).. இப்பூடிப் புறுணங்கள் பல:).


  //(எமக்கொத்துழைத்து-----இதனைப் பிரித்தே எழுத வேண்டும்.இல்லையெனில் பொருள் வேறுபடும்.எமக்கு- ஒத்துழைத்து ......)///

  இப்பவே மாத்திடுறேன், மியாவும் நன்றி யோகா அண்ணன்.

  ReplyDelete
 54. அதிரா, எப்படி இருக்கீங்க? நலம்தானே? நான் இல்லை-ன்னு நினைச்சு "ஏதேதோ" எல்லாம் சொல்லக் கூடாது.. மழை விட்டாலும் தூவானம் விடாது...அப்பப்ப இப்படி எட்டிப் பார்ப்பேன். :)

  பள்ளி அனுபவங்கள் நல்லா இருக்கு. ஆனாலும் இப்படி அஞ்சாப்பு :) நினைவுகளைப் போட்டு ஏமாத்திப் புட்டீங்க. அடுத்து ஐஸ்கூல் ;) நினைவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். :)

  ///குட்டி இணைப்பு:)
  இப்போ நகத்தையும், நெயில் பொலிஸையும் காட்டுவது பாஷன் இல்லையாம்:))... எப்பவுமே மாத்தி யோசிக்கோணுமாம்:) ////// கர் * 1001 !!! ரோசாப்பூ அயகா இருக்கு..பக்கத்தில அந்த கை:)தான் கொஞ்சம் இடிக்குது! ;);) ;);)

  கையில எதுக்கு இத்தனை தாயத்து மந்திரிச்சு கட்டியிருக்கீங்கள்?! என்ன மந்திரம் போட்டாலும் எங்களிடம் இருந்து தப்ப முடியாது. ஹாஹா ஹாஹா! :D

  ஊ.கு.---->மழை விட்டாலும் தூவானம் விடாது...அப்பப்ப இப்படி எட்டிப் பார்ப்பேன். :)

  ReplyDelete
 55. are u online athirav? avvvvvv....! :)))

  P.S. I have not seen the video...shall come n see it later. :)

  ReplyDelete
 56. மாத்தியோசி - மணி said... 40
  ///

  அப்ப எங்கள் மேல உள்ள அக்கறையால நிங்கள் நேரடியாக, விஷயத்துக்கு வரேலையோ? உள் மனம் சொன்னதாலதான் வந்தனியளோ?///

  அச்சோ..அச்சோ... உங்கள் எல்லோர் மீதும் இருக்கும் அக்கறையாலதானே.. விஷயத்துக்கே வந்தேன்ன்ன்:)))...
  ..............

  இருங்கோ முருகனோட கொஞ்சம் நான் பேசோணும்:):
  முருகா, இப்பூடியெல்லம் மாத்தி ஓசிச்சு குறுக்கு கெவெஷ்ஷன் ஆரும் கேட்டிடப்பூடா:)) என்றுதானே வேண்டுதல் வச்சு, புஸ்பா அங்கிள்: கடையில, புகை இல்லாத கற்பூரம் வாங்கிக் கொளு:)த்தினேன்... கற்பூரப் புகை அடங்குறத்துக்குள்ளயே:)) என்னைக் கைவிட்டு விட்டியே முருகா:)).. குரொஸ் குவெஷ்ஷன் கேட்கினம் முருகா:))..

  --------------------

  மெர்ஷி புக்கு.. மியாவும் நன்றி.

  ReplyDelete
 57. ஆவ்வ்வ்வ்வ்வ் மகி... கேட்குதோ?
  நலமா? நல்லா ஊர் சுற்றி, நல்லாச் சாப்பிடுங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

  வீடியோவை ஆறுதலாப் பாருங்கோ.. கெதியா அமெரிக்கா வரும் வழியைப் பருங்கோ:))... என்னையும் கெதியா ஒரு விசிட் போடச் சொல்லி, எங்கட ஒபமா அங்கிள் ஒரே ஆக்கினை:)

  ReplyDelete
 58. ////நல்லா ஊர் சுற்றி, நல்லாச் சாப்பிடுங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..//// As you say! :))))

  See you later. Bye!

  ReplyDelete
 59. கையில எதுக்கு இத்தனை தாயத்து மந்திரிச்சு கட்டியிருக்கீங்கள்?! என்ன மந்திரம் போட்டாலும் எங்களிடம் இருந்து தப்ப முடியாது. ஹாஹா ஹாஹா! ://


  WELL DONE SIS:))))

  ReplyDelete
 60. [co="dark green"] வாங்கோ யங்மூன்....

  நீங்கள் சொல்வதும் ஒரு வகையில் சரிதான், இதுதான் மாத்தி ஓசிப்பது:), என் புண்ணியத்தினால், தேவிக, ஸ்கூல் பஸ்ஸிலும் ஏஏறி, ஹைஸ் ஸ்கூலையும் பார்த்திட்டா.[/co]

  //எதையும் செய்து பார்த்துவிடும் உங்களின் துணிச்சல், சிறுவயதுமுதல் இப்பவும் அப்பிடியேதான் இருக்கு:)))//

  [co="dark green"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இது என்ன புதுக்கதை, நான் தான் தவறே செய்யாது விட்டாலும், தவறு செய்துவிட்டேனோ என நடுங்கியே மெலிஞ்சிடுவேன்ன்:)).. இதில துணிச்சல் எங்கின இருக்கு:))...

  றோஜாவில் பூச்சியோ? நோ சான்ஸ்ஸ்... இங்கு விஷப்பூச்சிகள் எதுவும் இல்லை என்றே கேள்விப்பட்டேன்ன்.. தேனி தவிர.

  மியாவும் நன்றி யங்மூன்.[/co]

  ReplyDelete
 61. ஆஆஆஆஆ ப...பூ.. ப....பூ... வாங்கோ வாங்கோ!! கரீட்டா நோன்பை முடிச்சுக்கொண்டுதான் வந்திருக்கிறார்:), நோன்பு நேரம் வந்தால், நாம் நெய்ச்சோறு கேட்டாலும் எனும் பயமாக்கும்...:)).

  //ஜெய்லானி said... 45
  //
  அழகான பெண்ணை அன்பாக இத்தனை நாள்(வருஷம்) பார்த்தது(கொண்டிருந்ததுக்கு)க்கு காதலில்லைன்னு சொன்னா முதுகுல டின்னு கட்டிடுவாங்க ...அவ்வ்வ் :-)))//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அந்தத் தத்துவமெல்லா, கல்யாணத்துக்கு முன்னாடி, காதல் வசப்படும்போது மட்டும்தேன்ன்ன்ன் பொருந்தும்..

  சொன்னவர்.. புலாலியூர்... பூஸானந்தா.. இல்லை:).

  ReplyDelete
 62. ஜெய்லானி said... 46
  சோக்லெட் கிடைக்காம யாருக்கும் நான் வாழ்த்து சொல்வதில்லை ஹி...ஹி... :-)))///

  ஹா...ஹா..ஹா... இப்பூடிச் சொன்னதே, நீங்க மனதார வாழ்த்தினதாத்தான் அர்த்தம்... ஆனாலும் எங்கிட்டயேவா:)))..

  கொஞ்சம் இருங்க...

  இந்தாங்கோ சொக்கலேட்ட்...ஹா..ஹா..ஹா.. எங்கிட்டயேவா... மியாவும் நன்றி ஜெய்...:).

  நான் நினைச்சேன் பாலைவனப் பூச்சி கடிச்சுப் போட்டுதாக்கும் என:), நல்லவேளை இப்பத்தான் தெரியுது, நீங்கதான் பூச்சிக்குக் கடிச்சிருக்கிறீங்களென:)

  [im]http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f2/Chocolate.jpg/250px-Chocolate.jpg[/im]

  ReplyDelete
 63. அடடா நம்மட மகியோ இது?:) வாங்கோ அம்கி, வாங்கோ.. நீங்க ஊரில உல்லாசமாச் சுத்துவீங்க என நம்பி.. நான் பயப்பிடாமல் மேல.. சே.சே.. அது ஒண்டுமில்லை:).

  //மழை விட்டாலும் தூவானம் விடாது...அப்பப்ப இப்படி எட்டிப் பார்ப்பேன். :)
  //

  என்னாது?:) இது தூவானமோ:)) கோடை இடிபோலல்லவ இருக்கு:)).. ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:).

  ///அடுத்து ஐஸ்கூல் ;) நினைவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். :)/////////

  வெடி சொடி:) எனக்கு ஐஸ்:) எண்டால் அலர்ஜி:) அதனால ஐஸ் பக்கமே போவதில்லை:)).. ஐஸ்பயம்:) குடிச்சிருக்கிறேன்ன்ன்.. அதுவும் 6 வயசில அஞ்சாம் வகுப்பில:)))

  ReplyDelete
 64. // கர் * 1001 !!! ரோசாப்பூ அயகா இருக்கு..பக்கத்தில அந்த கை:)தான் கொஞ்சம் இடிக்குது! ;);) ;);)////

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ஏன் கிளியோப்பத்ராவின் கைபோல இருக்கோ?:))... கொஞ்சம் நில்லுங்க வாறேன்ன்ன்:))..

  அம்மம்மா.. அம்மமா நீங்க சொன்னது சரியாப்போச்சூஊஊஊஊஊ:))... நீங்க சொன்னபடி, கையுக்கு, புஸ்பா அங்கிள் கடைப் புகையில்லாத கற்பூரம் வாங்கித் துடைச்சுக் கொண்டுபோய், ஆவரங்கால் சந்தியில போட்டிட்டு வாங்கோ:))...


  //கையில எதுக்கு இத்தனை தாயத்து மந்திரிச்சு கட்டியிருக்கீங்கள்?! என்ன மந்திரம் போட்டாலும் எங்களிடம் இருந்து தப்ப முடியாது. ஹாஹா ஹாஹா! :D///

  ஆவ்வ்வ்வ்வ்வ்வ்.. அது கண்ணூறு படாமல் இருக்க, மருதமலை மாமணியே முருகையா... எனச் சொல்லியபடி கட்டிய, முருகனின் நூலாக்கும்:)).

  மகி எப்பூடியாவது 5 கிலோ ஏத்திட்டு வந்திடுங்க:)) நான் உடம்பைச் சொன்னேன்:)).

  மியாவும் நன்றி மகி.. எட்டிப்பார்த்திட்டு ஓடிடாமல் களம் இறங்கியமைக்கு.

  அஞ்சுவைக் கண்டனீங்களே எங்காவது:)) புகைக்குது கீழ்ப்பக்கமிருந்து:)

  ReplyDelete
 65. எம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!... என்றும் மகிழ்வோடும், நோய் நொடியின்றியும், நீடூழி வாழ வாழ்த்துகிறோம்../////

  நோய் இல்லாமல் வாழ வாழ்த்தினதுக்கு மிக்க நன்றி! ஆனா நொடி இல்லாமல் எப்படி வாழுறது?

  வெள்ளி, சனி இரவுகளில நானும், தம்பியும், அக்காவும், அத்தானும் வட்டமா குந்தியிருந்து, இரவு ஒரு மணிவரைக்கும் கதைப்பம்! அப்ப, மாறி மாறி நொடி கேட்பம்!

  நிறைய நொடிக்கு சரியான விடை சொல்லுற ஆக்களுக்கு அத்தான், ஸ்பெஷல் டீ போட்டுத்தாறவர்!

  இப்புடி எம் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த நொடியை, இல்லாமல் வாழச் சொன்னா எப்படி??

  ReplyDelete
 66. angelin said... 65
  கையில எதுக்கு இத்தனை தாயத்து மந்திரிச்சு கட்டியிருக்கீங்கள்?! என்ன மந்திரம் போட்டாலும் எங்களிடம் இருந்து தப்ப முடியாது. ஹாஹா ஹாஹா! ://


  WELL DONE SIS:))))///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) தப்பி.. ஒளிச்சு ஓடினாலும் விட மாட்டாங்க போலிருக்கே முருகா:))...

  [im]http://dailypicksandflicks.com/wp-content/uploads/2011/04/Worried-cat-300x275.jpg[/im]

  ReplyDelete
 67. அப்போ எனக்கொரு எண்ணம் உதயமாகியது, ஏன், என் ஸ்கூலில் இவவையும் கொண்டுபோய்ச் சேர்க்கக்கூடாது என்று. /////

  அட, அந்தக் காலத்திலையும் மாத்தியோசிச்சிருக்கிறா!!

  ReplyDelete
 68. ஹையோ யாமீஈஈஈஈஈஈஈ மருதமலையானே...... கறுப்புக்கண்ணாடி, கறுப்புக் கோர்ட் ஆனா அடக்கொடுக்கமா கை கட்டிக்கொண்டுதான் நிற்கினம்... இருப்பினும், உந்தப் போஸைப் பார்க்க, எனக்குத்தான் என்னமோ ஏதோ என, ரைப் அடிக்குதே கை எல்லாம்:))..

  திருச்செந்தூர் முருகா, அரிசிமாவில மாவிளக்குப் போடுவேன்ன் என்னை காப்பாத்திப்போடப்பா:)

  ReplyDelete
 69. இப்ப சொல்லுங்கோ அதிரா SMART ஓ?:):):)... ஆஆஆ.... முறைக்கப்படாது:).

  ஒரு அப்பாவி பொம்பிளை பிள்ளையை, ஹைஸ் ஸ்கூலிக்குக் கொண்டுபோய், ஒரு நாள் வைச்சிருந்திட்டு, நைஸா அனுப்பிட்டு, ஸ்மார்ர்ட்டாம்! ஸ்மார்ட்ட்!

  ReplyDelete
 70. // மாத்தியோசி - மணி said...


  நோய் இல்லாமல் வாழ வாழ்த்தினதுக்கு மிக்க நன்றி! ஆனா நொடி இல்லாமல் எப்படி வாழுறது?//

  ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... என் பக்கம் வந்தாலே எல்லோருக்கும் குரொஸ் குவெஷனா வருதே சாமி:))..

  எப்பூடியாவது ஜமாளிச்சிட வேண்டியதுதான்... எங்கிடயேவா?:))

  அது வேற நொடி.. இது வேற நொடியாக்கும்:)).. இது நொடிஞ்சு.. ஒடிஞ்சு போறது:))..

  உஸ்ஸ்ஸ் ஒரு குத்து மதிப்பாச் சொன்னாலும் விடமாட்டினமமே:)).

  ReplyDelete
 71. மாத்தியோசி - மணி said...

  இப்புடி எம் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த நொடியை, இல்லாமல் வாழச் சொன்னா எப்படி??///

  ஆஹா... இண்டைக்கு கறுப்புக்கோர்ட் காரர்:).. ஆங்கிலக்கால்வாயைத் தொட்ட வீரர்:) யூப்பர் மாட்ட்டி:))

  இதில பின்னினது சரி? அதென்ன பிணைந்த நொடி?:)))ஆவ்வ்வ்வ் அம்மம்மா ஓடி வாங்கோஓஓஒ:)... வாழ்க்கையில முதல் முறையா கிட்னியை ஊஸ் பண்ணி ஒரு கேள்வி கேட்டிட்டேன்ன்ன்ன்ன்:))).

  ஹையோ வெயா இஸ் மை முருங்ஸ்ஸ்ஸ்ஸ்?:).. இங்கினதானே சாமி இருந்திச்சு:)

  ReplyDelete
 72. //
  மாத்தியோசி - மணி said...
  இப்ப சொல்லுங்கோ அதிரா SMART ஓ?:):):)... ஆஆஆ.... முறைக்கப்படாது:).

  ஒரு அப்பாவி பொம்பிளை பிள்ளையை, ஹைஸ் ஸ்கூலிக்குக் கொண்டுபோய், ஒரு நாள் வைச்சிருந்திட்டு, நைஸா அனுப்பிட்டு, ஸ்மார்ர்ட்டாம்! ஸ்மார்ட்ட்!///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
  [im]http://4.bp.blogspot.com/-jvvtyS7jEb4/TvVZYKsMNzI/AAAAAAAAdvU/fw5-QHxZreg/s400/cat-on-a-tree-640x480.jpg[/im]

  ReplyDelete
 73. திருச்செந்தூர் முருகா, அரிசிமாவில மாவிளக்குப் போடுவேன்ன் என்னை காப்பாத்திப்போடப்பா:)//

  அது ஏன்னா அரிசின்னு தெளிவா சொல்ணும்.
  :))) கருப்பு புட்டரிசின்னா அவர் அக்சப்ட் பண்ணுவார் ஏனென்றால் அதான் எக்ச்பென்சிவ் :)))

  ReplyDelete
 74. This comment has been removed by the author.

  ReplyDelete
 75. [im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcR7OfTS6FKuRSDiy5pLQeVrniJam2898_JcA4asFhaZ-ROxeio7vw[/im]

  ReplyDelete
 76. [im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTK8vNyRAPaEzhHmIc-gu8cv6va6Mr0ArYU1JYPliGXPZVRyDOpAw[/im]

  ReplyDelete
 77. இதென்ன இது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் கீழ நிற்கிறன் ஒரு ஹாய்.. ஒரு மருவாதை இல்லாமல் இப்பூடிப் போகுதே ஃபிஸ்ஸ்:)..

  [im]http://www.colourbox.com/preview/2103262-363673-angry-cat-and-gold-fish-on-white.jpg[/im]

  ReplyDelete
 78. அழகான பதிவு...நகைச்சுவையாய் சொல்லப்பட்ட விதம் கூட அருமை!!

  ReplyDelete
 79. //அதுவும் 6 வயசில அஞ்சாம் வகுப்பில:)))//
  ஜெய் உடனே இவ்விடம் வருமாறு கேட்டுகொள்ளபடுகிறார்
  ??? ஆறு வயசில் அஞ்சாப்பு ??

  ReplyDelete
 80. ////அதுவும் 6 வயசில அஞ்சாம் வகுப்பில:)))//

  அது ஒன்னுமில்ல 6 மாச கை குழந்தையா இருக்கும் போதே LKG சேர்த்துட்டாங்கப்போலிருக்கு ஹய்யோ...ஹய்யோ :-))))

  ReplyDelete
 81. [im]https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcQ0WDuCbM0dfjAK76ByRlrPt7K-rVOe54xezjVjoqL5Msu-tOz1tg[/im]

  இது நிபி சார்பாக :))

  ReplyDelete
 82. [im]https://encrypted-tbn3.google.com/images?q=tbn:ANd9GcS0xA6dJKoEqTtWzU5t9W-KINO2cgJ3_N4nV7XTw3U5pgWbq5vmsg[/im]


  mee meee

  ReplyDelete
 83. ஜெய் !! இப்ப உங்களுக்கு இது [im]https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcSksI7afDW2UBgKcmjTlEdP0JxAx8PCL33Qke10pRwdyeFjcgay[/im]

  ReplyDelete
 84. //நான் இன்னும் 5ம் வகுப்பிலதானே ராஜ் இருக்கிறேன்:)).. மேலே போனால்...மேலே சொல்லுவேன்... நான் கதையைச் சொன்னேன்:)).//

  jai !!!!!how did you miss this

  awwwww :))


  ReplyDelete
 85. மைந்தன் சிவா said... 84
  அழகான பதிவு...நகைச்சுவையாய் சொல்லப்பட்ட விதம் கூட அருமை!!

  [co="dark green"] வாங்கோ மைந்தன் சிவா..முதன்முதலா வந்திருக்கிறீங்க என எண்ணுகிறேன், நல்வரவு மிக்க நன்றி.[/co]

  ReplyDelete
 86. //angelin said... 85

  ஜெய் உடனே இவ்விடம் வருமாறு கேட்டுகொள்ளபடுகிறார்
  ??? ஆறு வயசில் அஞ்சாப்பு ??////

  [co="dark green"] ஹையோ இந்தக் கொடுமையைக் கேட்க இங்கின ஆருமே இல்லையோ?:)... ஜெய் மட்டும்தான் இங்கின எனக்கு சப்போட்டா இருக்கிறார்:) அவருக்கு மட்டின் பாயா:), மீன் பொரிச்ச:) குழம்பெல்லாம் கொடுத்து, தங்கட கட்சிக்கு சேர்க்கப் பார்க்கினம்ம்ம்ம்:))

  உது நடக்காது:)) அவர்தான் திங்க திங்க ஆசை பாடினவராச்சே:)) முடிவில என்ன சொல்லியிருக்கிறார்ர்:)) ஹையோ நான் பாட்டின் முடிவைச் சொன்னேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...

  ஜெய்.. உந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சிடாமல் நீங்க ஸ்ரெடியா இருங்க:)) ஹையோ புளியங்கொப்பை விடுங்க..:))[/co]

  ReplyDelete
 87. ஜெய்லானி said... 86
  ////அதுவும் 6 வயசில அஞ்சாம் வகுப்பில:)))//

  அது ஒன்னுமில்ல 6 மாச கை குழந்தையா இருக்கும் போதே LKG சேர்த்துட்டாங்கப்போலிருக்கு ஹய்யோ...ஹய்யோ :-))))///

  [co="dark green"] ஆஆஆஆஆ ஜெய் வந்திட்டார்... நேக்குச் சப்போட்ட் பண்ணுறார் பாருங்கோஓஒ:))... இருப்பினும் முடிவில அந்த “ஹையோ..ஹையோ..” எங்கினமோ இடிக்குதே சாமீஈஈஈ:))..[/co]

  ReplyDelete
 88. [co="green"]பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த நன்றிகள் [/co]

  [im]https://lh6.googleusercontent.com/-M952l6frtoU/UDdyj9sPKsI/AAAAAAAABhw/GNKe4ipaTVE/s512/SMemo.jpg[/im]

  ReplyDelete
 89. ///இது நிபி சார்பாக :))///

  karrrrrrrrrrrrrrrr:) மாப்பிள்ளைக்கு காலா காலத்தில கல்யாணட்தைப் பண்ணி வைக்காமல்.. சிரிப்பு வேற.. எலிக்குட்டியையும் கோட்டை விட்டாச்சோ அஞ்சு:)) பொம்பிளையைக் காணேல்லைக் கொஞ்சக் காலமா:))

  ReplyDelete
 90. //angelin said... 89
  ஜெய் !! இப்ப உங்களுக்கு இது ////

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவர் கேட்டாரா?:)) இல்ல தெரியாமல்தான் கேட்கிறேன் அவர் என்ன எனக்கு பச்சை றோஜாப்பூக் கேக் வேணுமெனக் கேட்டாரோஓ:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதை இதைக் கொடுத்து தங்கட கட்சியில சேர்த்திடப் பார்க்கினம்:)) விடமாட்டனில்ல:)) எங்கிட்டயேவா:))..

  ஹையோ ஜாமீஈஈஈஈஈஈஈஈஈ:) மருதமலை மாமணியே நாகையாஆஆஆஆஆஆஅ:)) நான் ஞானியாகிட்டேஏஏஏஏஏஏன்ன்ன் என்னை ஆரும் தேட வேண்டாம்ம்ம்ம்ம்:)).

  ReplyDelete
 91. வாங்கோ கீரி வாங்கோ... கீரி கீரி எனக் கூப்பிட்டுப் பழகி:) அங்கின கிரிஜா எனப் பெயர் பார்த்ததும், இது ஆரா இருக்கும் சாமீ என அஞ்சும் கெட்டும் அறிவும் கெட்டு விழப்போன வேளையிலதான், கிட்னில தட்டுப் பட்டுக் கண்டு பிடிச்சேன்ன்ன்:) சரி அது போகட்டும்....

  //உங்க கைய யாரோ ஒரு தம்பி கிள்ளினாரா? எவ்வுளோ தெகிரியம் ? அப்பெல்லாம் தாயத்து கட்டலையோ நீங்க?///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அது தம்பியாயிருக்க சான்ஸ் இல்லை:) ஏனெனில் 6 ம் வகுப்பிலிருந்துதான் எல்லோரும் ஸ்கூல் பஸ் அங்கு, அப்போ நான் 6ம் வகுப்பு:) சோ அவரும் 6 அல்லது 7 ஆகத்தான் இருக்கோணும்...:).

  என்னாது தாயத்தோ?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதெல்லாம் கட்டுவதில்லை:) நெத்தியில ... ஒரு கறுப்பு சாந்துப் பொட்டிருக்கும்:) அது கண்படாமலாம்:))... சரி சரி இதுக்கெல்லாம் முறைக்கப்பூடாது:)..

  மியாவும் நன்றி கீரி.

  ReplyDelete
 92. ஹையோ ஜாமீஈஈஈஈஈஈஈஈஈ:) மருதமலை மாமணியே நாகையாஆஆஆஆஆஆஅ:)) நான் //  நோட் திஸ் பாயின்ட் மக்கள்ஸ் :))
  நாகையா என்பது பழம் பழம் பெரும் நடிகர் :))
  அது முருகையா .பூஸ் நீங்க .என்னதான் உருண்டாலும் முர்க் ஜி
  கடைக்கண் கூட காட்ட மாட்டார்

  ReplyDelete
 93. angelin said...
  //நான் இன்னும் 5ம் வகுப்பிலதானே ராஜ் இருக்கிறேன்:)).. மேலே போனால்...மேலே சொல்லுவேன்... நான் கதையைச் சொன்னேன்:)).//

  jai !!!!!how did you miss this

  awwwww :))////

  karrrrrrrrrrrrrrrr:)) ஹையோ முருகா!!! இப்ப எதுக்கு ஜெய்க்கு இதைக் காட்டுறா:)))...

  [im]http://www.tamilcloud.com/wp-content/uploads/2012/08/cat-in-hole.jpg[/im]

  ReplyDelete
 94. ஆங் !!:)) ஒண்ணுமில்ல சும்மாதான் ...நாலு தேள் /அரணை/நட்டுவாக்களி எல்லாம் ஆர்டர் கொடுக்க ...அந்த மர பொந்தினுள் சும்மானாலும் ஃப்ரீயா விட :)))))))))))))))))))))))

  ReplyDelete
 95. நான் போய் என் செல்ல தங்கையின் ரெசிப்பி ஒண்ணை செய்யபோறேன் பை பை ,என்ஜாய்

  ReplyDelete
 96. angelin said... 100
  ஹையோ ஜாமீஈஈஈஈஈஈஈஈஈ:) மருதமலை மாமணியே நாகையாஆஆஆஆஆஆஅ:)) நான் //  நோட் திஸ் பாயின்ட் மக்கள்ஸ் :))
  நாகையா என்பது பழம் பழம் பெரும் நடிகர் :))
  அது முருகையா .பூஸ் நீங்க .என்னதான் உருண்டாலும் முர்க் ஜி
  கடைக்கண் கூட காட்ட மாட்டார்////

  [co="dark pink"]
  மருதமலை முருகா!!
  பழனி ஆண்டவா!!
  நல்லூர்க் கந்தா!
  செல்வச்சன்னதியானே!!
  திருச்செந்தூர் வேலா!!
  கதிரமலைக் கந்தா!
  .. காதைக் கொஞ்சம் பெரிசாக்குங்கோ:).. நான் உங்களோட கொஞ்சம் பேசனலாக் கதைக்கப்போறன்:)).. நீங்க கடைக்கண்கூடப் பார்க்க மாட்டீங்களாம் என இங்குன:)) எல்லோரும் சொல்லீனம்:))...

  அது உண்மையெண்டால்ல். நான் கொழுத்தின புஷ்பா அங்கிள் கடைக் கற்பூரமெல்லாம் திருப்பித்தாங்கோ:))).. இல்ல என் 5 பவுண் சங்கிலியையாவது மீட்டுத்தாங்கோ:)) இல்லையெனில்... மீ உண்ணாவிரதம் ஆரம்பிக்கிறேன்ன்.. தேம்ஸ் கரையிலதான்ன்ன்:))...

  ஹையோ மக்கள்:)) புதினம் பார்ப்பதை விட்டுப் போட்டு ஃபயர் எஞ்சினுக்குப் போன் பண்ணுங்கோவன்:)).[/co]

  ............................

  [im]http://www.curiositiesbydickens.com/wp-content/uploads/prayers.jpg[/im]

  ReplyDelete
 97. உஸ்ஸ் யப்பாஆஆஆஆஅ... அஞ்சு போயிட்டாஆஆஆஆஆ:)) எவ்ளோ நேரம்தான் இந்த இருட்டுக்குள்ள ஒளிக்கிறதாம்ம்:))).. பின்னூட்டம் போடோணுமில்ல:)) எங்கிட்டயேவா?:) பயமோ எனக்கோ அஞ்சுவுக்கோ?:)) கர்ர்ர்ர்ர்ர்:)).

  [im]http://www.imageenvision.com/450/1074-picture-of-a-white-cat-walking-out-of-a-cave-by-kenny-adams.jpg[/im]

  ReplyDelete

 98. மாத்தியோசி - மணி said...
  [co="green"]பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த நன்றிகள் [/co]

  [im]https://lh6.googleusercontent.com/-M952l6frtoU/UDdyj9sPKsI/AAAAAAAABhw/GNKe4ipaTVE/s512/SMemo.jpg[/im]

  [co="dark green"]நோஓஓ.. இது அநியாயம்.. அக்கிரமம்... :)) நான் இதை ஏற்க மாட்டேன்ன்ன்ன்... தங்கூ ஓல்/ஆல் எண்டுதான் சொல்லியிருக்கிறார்:), தங்கூபூஸ் எனச் சொல்லேல்லை:))... முருகா.. திருத்தணிகையில முள்ளு மிதியடி எடுப்பேன்ன்.. இஞ்ச வந்து ஞாயத்தைக் கேளப்பா:))... [/co]

  [im]http://files.sharenator.com/crying_cat-s350x283-160639.jpg[/im]

  ReplyDelete
 99. உங்க அக்ிகா ரொம்ப பொறுமைசாலி போல........இப்பவே இப்பிடீன்னா அப்ப எப்பிடி இருந்திருப்பீங்கன்னு தெரியுதக்கா....:)

  கையில கிள்ளின பையனுக்ககு களவா கடிச்ச கதைய மறைச்சிட்டீங்களேக்கா......

  ReplyDelete
 100. அது உண்மையெண்டால்ல். நான் //கொழுத்தின //புஷ்பா அங்கிள் கடைக் கற்பூரமெல்லாம் //  கொளுத்தின ...கரெக்ட் தட் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ROFL:))
  [im]https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcQGei7JputC2opxLFj4AL968h6nXmnge-Z0Ozu7hY1mPpU02dqd[/im]


  ReplyDelete
 101. //ஆங் !!:)) ஒண்ணுமில்ல சும்மாதான் ...நாலு தேள் /அரணை/நட்டுவாக்களி எல்லாம் ஆர்டர் கொடுக்க ...அந்த மர பொந்தினுள் சும்மானாலும் ஃப்ரீயா விட :))))))))))))))))))))))) //

  ஆஹா... இதென்ன கொடுமை ..அவ்வ்வ்வ்வ் :-)))

  ReplyDelete
 102. ஆஹா... இதென்ன கொடுமை ..அவ்வ்வ்வ்வ் :-)))//

  ஆஆஆ ஜெய் !!!!
  முருங்க்ஸ் என்று தப்பர்த்தம் எடுக்க கூடாது :))
  அந்த பூசார் உக்காந்திருக்கே அந்த மரம் அந்த மரத்தை தான் சொன்னேன் ..
  சீக்கிரமா வந்து கமேண்ட பாருங்க ..இல்லன்னா பூஸ் தேம்சுக்கும் வீட்டுக்குமா கும்மியடிச்சு டான்ஸ் ஆடுவாங்க சந்தோஷத்தில

  ReplyDelete
 103. வாங்க அதிசயா வாங்கோ..

  //கையில கிள்ளின பையனுக்ககு களவா கடிச்ச கதைய மறைச்சிட்டீங்களேக்கா.....//

  அப்போ தான் ரெண்டு பல்லு விழுந்து முளைக்கத் தொடங்கின காலமாக்கும்:)) அந்தப் பல்லால கடிச்சிருந்தால்... எமேஜென்சிக்குத்தான் ஆளை அனுப்பியிருக்கோணும்:)) சரி சரி என்னவாயினும் இது நமக்குள் இருக்கட்டும்:)) ஹா..ஹ..ஹ..

  மியாவும் நன்றி அதிசயா.

  ReplyDelete
 104. angelin said... 109
  அது உண்மையெண்டால்ல். நான் //கொழுத்தின //புஷ்பா அங்கிள் கடைக் கற்பூரமெல்லாம் //  கொளுத்தின ...கரெக்ட் தட் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ROFL:))///

  அச்சச்சோஓஓஓஓ கோல்ட் ஃபிஸ், கிரீன் ஃபிஸ்ஸா மாறி எனக்கு ஊசி போடக் கலைக்குதூஊஊஊ... சரி சரி சொல்லிடுறேன்ன்ன்:))
  யவள தபட கமல:).. ஹா..ஹா..ஹா... சிரிச்சதால ஸ்பெல்லிங்கு மிசுரேக்காகப் பார்க்குது, இருப்பினும் ஒழுங்கா எழுதி முடிச்சிட்டமில்ல:)).

  ReplyDelete
 105. ///ஜெய்லானி said... 110
  //ஆங் !!:)) ஒண்ணுமில்ல சும்மாதான் ...நாலு தேள் /அரணை/நட்டுவாக்களி எல்லாம் ஆர்டர் கொடுக்க ...அந்த மர பொந்தினுள் சும்மானாலும் ஃப்ரீயா விட :))))))))))))))))))))))) //

  ஆஹா... இதென்ன கொடுமை ..அவ்வ்வ்வ்வ் :-)))///

  [co="dark pink"]
  அஞ்சூஊஊஊஊஊஊஊஊஊஊ.. ஓடிவாங்கோஓஓஓஓஒ.. நேக்குப் புரிஞ்சிட்டுதூஊஊஊஊஉ:)).. . நீங்களுக்குப் பிரியேல்லையோ?:)).

  அம்மம்மா சொல்லுறவ ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கோணுமாம் (ஹையோ இது வேற ஆடி:)).. பா.க.மா.... பாடிக்.க..ம்ம் என:) அப்பூடித்தான், நாங்க தேவையில்லாமல் என்னென்னமோ எல்லாம் சொல்லிக் கூப்பிட்டுப் பார்த்தம்,ஆள் வரேல்லை:) ஆனா இப்ப பாருங்கோ நட்டுவாக்காலி, தேள் என்றதும், டபக்கென காதில கேட்டு என்னா ஸ்பீட்டில ஆள் களம் இறங்கியிருக்கிறார்:))

  இனிமேல் கொஞ்ச நாளைக்கு இதையே மெயிண்டைன் பண்ணுவம் அஞ்சு:)) டீல்?:))) சரி சரி படிச்சதும் கிழிச்சுப் பரனில போட்டிடுங்க..:)) அங்கினதான் ஏறிப்பார்க்காயினம்:)) ஏன் ஏற மாட்டினமோ அவையள் என்ன குண்டோ எண்டெல்லாம் நோ குரொஸ் குவெஷ்ஷன் பிளீஸ்ஸ்ஸ்:)).[/co]

  ReplyDelete
 106. angelin said... 111

  ஆஆஆ ஜெய் !!!!
  ..
  சீக்கிரமா வந்து கமேண்ட பாருங்க ..இல்லன்னா பூஸ் தேம்சுக்கும் வீட்டுக்குமா கும்மியடிச்சு டான்ஸ் ஆடுவாங்க சந்தோஷத்தில///

  நோ..நோ..நோஒ..நோஓ..நோஓஒ:))... அப்பூடியெல்லாம் நினைக்கப்பூடாது:) அதிக சந்தோசம் வரேக்கை நான் நினைப்பது “இதுவும் கடந்து போகும்”..... ஹா..ஹா..ஹா.... இது எப்பூடி.. மாத்தி யோசிக்கோணுமாம்:).

  ReplyDelete
 107. பள்ளிக்கால நினைவுகள் சிரிப்பாக இருந்தாலும் ரசிக்கும்படி இருந்தது.

  ReplyDelete
 108. பஸ்சில் பக்கத்தில் இருந்த குட்டிப்பையன் பாவம்தான். நீங்கள் அவனை நுள்ளிவிட்டு நீங்க அழுதால் என்ன நியாயம். அந்த குட்டிப்பையன் நானாக இருந்திருக்கனும். ஆ.. ஐயோ... சட்னிதான்(நான்தான்)

  ReplyDelete
 109. நான் அழகாகப்பார்ப்பேன். நீங்கள் அன்பாக இருப்பதினால். என்னது...என்னையை அடிக்க ஆளைக் கூட்டி வர்றீங்களா? அம்புட்டு அன்பா!!!! ஐயோ சாமி ஆளை விடுங்க.....

  ReplyDelete
 110. அந்தப்பூவெல்லாம் எனக்குத்தான். தைரியமா தொட்டுப்பார்த்துட்டேன்.

  ReplyDelete
 111. வாங்கோ விச்சூஊஊஊஉ:)

  ஏன் சூ சூ என விரட்டுறீங்க எனக் கேட்கப்பூடா:) நீங்க ரொம்ப லேட்டூஊஊ.. அதுக்குத்தான் இந்த சூ சூ:).

  //என்னையை அடிக்க ஆளைக் கூட்டி வர்றீங்களா? அம்புட்டு அன்பா!!!! ஐயோ சாமி ஆளை விடுங்க..//

  ஹா..ஹா..ஹா... அடிக்கிறதுக்குப் பெயர் அன்பில்லை, அம்பூஊஊஊ:).

  //விச்சு said...
  அந்தப்பூவெல்லாம் எனக்குத்தான். தைரியமா தொட்டுப்பார்த்துட்டேன்.//

  ஆவ்வ்வ்வ்வ்வ்.. வர வர ஆருமே பூஸுக்குப் பயப்புடீனமில்லையே:))..

  மியாவும் நன்றி விச்சு.

  ReplyDelete
 112. முன்பு தந்த பூங்கொத்தை விட இது ரொம்ப அழகு தராவிட்டாலும்.நான் எடுத்துக் கொண்டேன்.நல்ல மணம்.

  ReplyDelete
 113. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்

  வலைச்சர தள இணைப்பு : அனைவரும் பள்ளிக்கூடம் செல்லலாம் வாங்க :)

  ReplyDelete
 114. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.