நல்வரவு_()_


Sunday, 29 March 2020

 “கொரொனா” மிக்ஸர்,  “கொரொனா” ரவ்வைப் பக்கோடா

ஹா ஹா ஹா என்ன தலைப்புப் பார்த்துப் பயந்திட்டீங்களோ?:)).. இருமினாலும் தும்மினாலும் இப்போ பயப்பிடுவதே எல்லோருக்கும் வேலையாப்போச்சு கர்ர்ர்ர்ர்:))... கொரொனா ஹொலிடேயில எல்லோரும் இருக்கும்போது, அடிக்கடி பசிக்கும் எல்லோ?:), அப்போ அதுக்காக இப்படி டக்குப் பக்கெனச் செய்யக்கூடிய ஸ்நக்ஸ், செய்து அசத்திட்டேன்[பின்ன நம்மள நாமளேதானே புகழோணும்:)]... சரி சரி இந்நேரத்தில ஓவராப் பேசப்பிடாது:))..
இப்பூடியே தொங்கிட்டால்:) நம்மளை கொரொனா 
நெருங்காதாக்கும்:)) பூஸோ கொக்கோ:))

Monday, 23 March 2020

என்றும் இளமையாக.. சே..சே பசுமையாக இருக்க, வாருங்கள்👧..

அதிரா வீட்டுக்குள்:)..

னக்குப் பாருங்கோ, வீடு முட்ட குட்டிப் பிளாண்டுகள் வைக்க விருப்பம், ஆனா இங்கு குளிர் அதிகமென்பதால, வளர்ந்தாலும் நெடு நாட்களுக்கு நிற்பதில்லை, பட்டு விடுகின்றன, ஆனாலும் நானும் விடுவதில்லை, ஒவ்வொரு சமரின் போதும் புதிதாக வாங்கி வைத்து விடுவேனே.. சரி சரி இப்போ அதிகம் அலட்டக் கூடாதாம்:)) வாய் மூடிப் பேசோணும் என்பதால, அதிரா அடக்கொடுக்கமாப் பேசிவிட்டு போஸ்ட்டுக்குள் சே..சே அதிரா வீட்டுக்குள் நுழைவோமா?:))
வாங்கோ வாங்கோ முதலில் இந்தாங்கோ நல்ல நெஸ்டமோல்ட்டும் போன்விட்டாவும் போட்ட ஸ்ரோங் ரீ குடியுங்கோ:))

Tuesday, 17 March 2020

அதிராவின் வளர்ப்பு வெந்தயக்கீரையும்
 கினோவா ரொட்டியும்[Quinoa Rotty]

 ந்த ரொட்டி சுட்டுச் சாப்பிட்டு நீண்ட நாளாகிட்டுது, ஆனா அதன் சுவையில் மயங்கி:) போஸ்ட் போடுவோம் என நினைச்சு நினைச்சு.. இப்போதான் நேரம் அமைஞ்சிருக்குது.

Thursday, 12 March 2020

அதிராவின் தமிழும், கொரொனாவும்:)

நிறைய விஷயங்கள் போஸ்ட் போடுவதற்கு இருக்கு, ஆனா அதற்கிடையில சிலதை சொல்லோணும் என விரும்பி இன்று எப்பூடியாவது போஸ்ட் போட்டிடோணும் என அவசரமாக எழுதுகிறேன்.