நல்வரவு_()_


Tuesday 17 March 2020

அதிராவின் வளர்ப்பு வெந்தயக்கீரையும்
 கினோவா ரொட்டியும்[Quinoa Rotty]

 ந்த ரொட்டி சுட்டுச் சாப்பிட்டு நீண்ட நாளாகிட்டுது, ஆனா அதன் சுவையில் மயங்கி:) போஸ்ட் போடுவோம் என நினைச்சு நினைச்சு.. இப்போதான் நேரம் அமைஞ்சிருக்குது.
சரி அதுக்கு முன், என் வெந்தயக் கீரை வளர்ப்பைக் கொஞ்சம் பாருங்கோவன்.. கிச்சின் வளர்ப்பாக்கும்:)).. வோட்டமிலன் வாங்கினேன், வெட்டும் அலுப்பில் வெட்டாமல் வைத்திருந்தால், அது உள்ளே தண்ணியாகிட்டுது, அதனால இப்படி வெட்டியதும், ஐடியா வந்துது இதனுள் ஏதாவது நடலாமே என, உடனே கொஞ்சம் எரு மண் போட்டு, அதில் வெந்தயம் எடுத்துப் போட்டேன், கிறிஸ்மஸ் குளிர் நேரத்திலும் இப்படி முளைத்து வந்தது..
சரி இந்த வெந்தயக் கீரையை என்ன பண்ணலாம் என ஓசிச்சேனா:))......... ..........
================== இடைவேளை=================
          பதில் சொல்லுங்கள்.. பனங்கட்டியைத் தட்டிச் செல்லுங்கள்:)).. 

இது ஊரில கதிர்காமத்தில் வாங்கி அனுப்பியது, இப்போதான்.. இதனை தித்துள்[கித்துள்] பனங்கட்டி என்போம்.. இப்படி வாழை இலையில் சுற்றிக் கட்டி விற்பார்கள்.. 
============= இடைவேளை முடிஞ்சு போச்ச்ச்ச்:)============

பொதுவா கினோவா வாங்கி, சோறுபோல செய்தும், கஞ்சி காச்சியும், பலவகை சாதமாகவும் சாப்பிடுவதுண்டு, ஆனா இப்போ கினோவா மா கிடைக்குது, அதுவும் குளூட்டன் ஃபிறீ மா. அதனால டக்கென ஒரு யோசனை உதித்தது, இந்த வெந்தயக் கீரையைச் சேர்த்து ரொட்டி சுடலாமே என...

கினோவா மாவை, கொஞ்சம் ஸ்-ரீம்[ஆவியில் அல்லது மைக்குறோவேவில் அவித்து எடுக்கலாம்] பண்ணி எடுத்து, இப்படி ரொட்டி செய்தேன்ன்..

வெந்தயக்கீரை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய்ப்பூ, உப்பு.. சேர்த்துக் குழைத்து...தோசைபோல சுட்டு எடுத்தேன் ரொட்டியாக... ஸ்ஸ்ஸ்ஸ் கயர்ப்பே இல்லாமல் இனிப்பாக இருந்தது என் கினோவா ஒட்டீஈஈஈ:)...
ஸ்ஸ்ஸ்ஸ் ரொட்டியைத் தொட முன் எல்லோரும் சோப் போட்டுக் கை கழுவியிருக்கோணும் ஜொள்ளிட்டேன்ன்:)... 
🔺🔺🔺🔺🔺🔺
⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎இன்று ஒரு தகவல்⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎
இந்த ஜனவரியில் அம்மா ஊருக்குப் போயிருந்தா, அப்போ எனக்கு அனுப்பி விட்ட பொருட்களில் இதுவும் ஒன்று.. இது என்ன எனத் தெரியுதோ? கல் அரிக்கன் சட்டி எனச் சொல்வார்கள், கல் அரித்தெடுப்பது.. இங்கு சாமை, தினை, வரகில் கல்லு மண் வருகிறது, அதனாலதான் இவரை இறக்குமதி செய்தேன், இப்படி மண்ணிலும் கிடைக்கும்.. அத்துடன் மீண்டும் அகப்பை...

இது அங்கிருந்து வந்த என் ஃபேவரிட்:)

இது என்ன காய் தெரியுமோ? மாமரம் போல இருக்கும், நிறையக் காய்க்கும், மாமா வீட்டு முற்றத்தில் நிற்குதாம்..  “அம்பிறல்லங்காய்” என்போம், மாங்காய்போலவே கொஞ்சம் இனிப்பாக இருக்கும்.. சும்மா சாப்பிடத்தான் நல்லது, கறிக்குள்ளும் போடலாம்... குட்டிக் கை ஒன்று அதனைத் தொடுவது தெரியுதோ?:))
⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎()()()()()()()⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎

ஊசிக்குறிப்பு
பிபிசி நியூஸ்:- நயந்தாரா அக்கா:) நியூயோர்க் வாறாவாம், ஆனா ட்றுத் ஆல இப்போ அவவைக் கட்டிப்பிடிச்சு வரவேற்க முடியாதே:)) என்ன கொடுமை பாருங்கோ:))

ஊசி இணைப்பு 


ஸ்பெஷல் இணைப்பு
இப்போ என்ன ஆகபோகிறது என நினைச்சு பேசாமல் இருக்காதீங்கோ, புயல் மழை என்றால்கூட கால அவகாசம் உண்டு, இதற்கு இல்லையே..., பெரிய கொடிய விலங்கைக்கூட எதிர்த்து நிற்கலாம், ஆனா இது கண்ணுக்குத் தெரியாத கெட்ட கிருமி வந்து ஆட்டிப்படைக்குதே உலகையே:)..
        வெளியே வெளிக்கிடக்கூடாது என, திடீரென அறிவிச்சால் என்ன பண்ண முடியும்?.. இங்கு, எங்கள் இடங்களில் பொருட்கள் எதுவும் வாங்க முடியவில்லை, சூப்பமார்கட் எல்லாம் வெறிச்சோடி வருகிறது, இப்போ சொக்கலேட் வகைகளும் உடுப்புக்களும் ஒருசில மரக்கறிகளுமே உள்ளன... காலப்போக்கில் எந்த உணவும் இல்லாமலும் போகலாம், அதனால சோப், சம்போ, சீனி, தேயிலை, மருந்து வகைகள், அரிசி, மா, பருப்பு வகைகள், எண்ணெய் இவை மட்டுமாவது வாங்கி வையுங்கோ.. இங்கு 2 நாட்களுக்கு முன்னர்கூட சில பொருட்கள் இருந்தது, வாங்கலாம் என விட்டால், இப்போ எல்லாமே எக்ஸ்பிரஸ் வேகத்தில் முடிஞ்சு போச்ச்ச்:(.
========_()_========

165 comments :

 1. Replies
  1. ஆஆஆஆஆ வாங்கோ ட்றுத் வாங்கோ.. சத்தியமாக இக்கொமெண்ட்டைப் பார்க்காமலேயே பப்ளிஸ் பண்ணியிருக்கிறேன் விடிய, ட்றுத் இன்னும் வரவில்லை என நினைச்சுக்கொண்டு இப்போ பார்க்கிறேன் கொமெண்ட் வந்திருக்கு ஹா ஹா ஹா...

   அதுசரி மாஸ்க் போட்டுக் கொண்டுதானே வந்திருக்கிறீங்க ட்றுத்?:)

   Delete
 2. மீ பர்ஸ்ட் என்பதற்க்காக கினோவா ரொட்டியை மட்டும் எனக்கு கொடுத்திடாதீங்க

  ReplyDelete
  Replies
  1. கையை சோப் போட்டு 20 செகண்டுகளாவது தேய்ச்சுக் கழுவினோரை மட்டுமே ரொட்டியைத் தொட்டுப் பார்க்க விடுவேன்ன்..:)

   Delete
 3. நயந்தாரா எப்ப ரஜினி கூட நடிச்சாரோ அப்பவே அவரை கைவிட்டுட்டேன் இப்ப Sai Pallavi கூட சேர்ந்து ஆட்டம் போட்டுகிட்டு இருக்கேன்

  ReplyDelete
  Replies
  1. என்னாதூஊஊ சாய் பல்லவியா? இது என்ன கொடுமை சாமீ:))..

   நயந்தாரா ஆரம்பத்திலும் ரஜனி அங்கிள்கூடத்தானே நடிச்சா[கொக்கு பறபற.. கோழி பற பற:)].. அப்போ கைவிடாத நீங்க இப்போ எதுக்கு கழட்டி விட்டீங்க கர்ர்ர்ர்:))..
   “எட்டாத பயம் புய்க்கும்” எனும் கதையா இருக்கே ஹா ஹா ஹா:))

   Delete
  2. ஹாஹாஆ :) sai pallavi அது பல் டாக்டராம் பார்த்து ட்ரூத் :) மொத்தமா பல் செட் போட்டு விட்டுடும் 

   Delete
  3. ஆஆஆஆஆஅ ட்றுத்துக்குப் பல்லுப்போச்சா?:)) மாமியின் பூரிக்கட்டையால பல்லெல்லாம் போயிந்தியோ?:)) ஹா ஹா ஹா..

   Delete
  4. இந்த மதுரைத் தமிழன், நம்மைப் போல, 30+ தான் இருப்பார்னு நினைத்தால், மதுரைத் தமிழன் துரை, 60+ வயது இருக்கும் போலிருக்கு. நயனதாராலாம், பில்லா காலத்தோட ஓவர். அதுக்கு அப்புறம் லிப்போசக்‌ஷன் செஞ்சுக்கிட்டு வற்றல் போல முகம் மாறி, பிறகு ஒரு சில திருமணத்துக்குப் பிறகு பாட்டி ஆகிவிட்டார். இனி ரஜினியின் அக்கா, அம்மா பாத்திரங்களுக்குத்தான் அவர் சரிப்படுவார். அவரது ரசிகரா மதுரைத்தமிழன். அடப்பாவமே...

   Delete
  5. எவ்ளோ டீட்டெயில்ஸ் பாருங்க மியாவ் :) 
   நெல்லைத்தமிழன் உங்களுக்கு ஆனாலும் ரொம்ப சந்தோஷம் இருங்க இருங்க இதே நயன் லிஸ்டில் தம்ஸ் வர நாள் தூரமில்லை

   Delete
  6. @நெதமிழன்
   //நயனதாராலாம், பில்லா காலத்தோட ஓவர். அதுக்கு அப்புறம் லிப்போசக்‌ஷன் செஞ்சுக்கிட்டு வற்றல் போல முகம் மாறி, பிறகு ஒரு சில திருமணத்துக்குப் பிறகு பாட்டி ஆகிவிட்டார்.///

   @அஞ்சு//எவ்ளோ டீட்டெயில்ஸ் பாருங்க மியாவ் :) //

   ஹா ஹா ஹா அதேதான் அஞ்சு.. ஆவ்வ்வ்வ் என்னா ஒரு அவதானிப்பு:)) இதுவே சொல்லுதே நயன்:) எவ்ளோ பிரபல்யம் என்பதை:)).. எனக்கும் நயந்தாராவை ரொம்பப் பிடிக்குமாக்கும்.. அழகுக்காக என இல்லை, சிம்பிளாக புன்னகைத்தபடி இருப்பா.. லெவல் இல்லாத முகம்.. அது பிடிக்கும்.

   Delete
  7. //இதே நயன் லிஸ்டில் தம்ஸ் வர நாள் தூரமில்லை// - அவங்க அந்த லிஸ்டில் வந்து ரொம்ப நாளாச்சு. கடைசியா நான் பார்த்த பெட்ரோமாக்ஸ் படம்(னு நினைக்கிறேன்) மேக்கப் போடலைனா த எப்படி இருப்பாங்கன்னு காட்டிடிச்சு. ஹா ஹா (அ வும் அந்த லிஸ்டில் வந்து பல வருஷங்களாச்சு.... ஹா ஹா ஹா. அதுனாலதான் ஒரு சிலர், மிகப் பழைய அ படங்களைப் போட்டு ஆறுதல் பட்டுக்கறாங்க).

   Delete
 4. உங்க ஊரு பிபிசி நியூஸ்:ல வயசானவங்க பத்திதான் நீயூஸ் போடுவாங்க போல இருக்கு அதை வயசான நீங்க பார்த்து என்றும் இளமையோடு இருக்கும் எங்க்கு தகவல் தறீங்க....ஹும்ம்

  ReplyDelete
  Replies
  1. யார் இளமையாக இருக்கினம் ஆருக்கு வயசாகிவிட்டது என்பதற்குக் கொரனா கரீட்டாப் பதில் சொல்லும் ஹா ஹா ஹா ஹையோ இப்போ கொரொனா வந்தாலும் வெளியே சொல்லாமல் வீட்டில் இருக்கினமாம் அதனால நம் ஊரில் கொரனா இருக்கோ இல்லையோ எனத் தெரியாமல் இருக்காம் என நேற்று ஒரு ரீச்சர் ஏசிக்கொண்டிருந்தா ஹா ஹா ஹா..

   மிக்க நன்றி ட்றுத்..

   Delete
 5. மறுபடியும் ஒரு பிடித்த பாடல்.  சுசீலாம்மாவின் குரலில் மிக இனிமையான ஒரு பாடல்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. எனக்கும் மிக மிகப் பிடிச்ச பாட்டூ...

   Delete
 6. வெந்தயக்கீரை நன்றாய் வந்திருக்கிறது.  நாங்கள் கடையில் வெந்தயக்கீரை வாங்கி, வேறை அகற்றிவிட்டு, அலம்பி சுத்தம் செய்து சாம்பாரில் அப்படியே போட்டு விடுவோம்!

  ReplyDelete
  Replies
  1. ஓ நான் வெந்தயக்கீரை வாங்கினால் சுண்டல் அல்லது மைசூர்பருப்பு சேர்த்து வெள்ளைக்கறி இவை இரண்டும் மட்டுமே செய்வேன், ஆனா சுண்டலுக்கே வீட்டில் வரவேற்பு.. கடையில் வாங்குவது பெரிய மரச்செடிபோல எல்லோ கிடைக்கிறது.. முக்கால் அடி நீளத்தில்.. இரு 3 இஞ்சி சைஸ்ல வந்துது எனக்கு ஹா ஹா ஹா..

   Delete
  2. ஸ்ரீராம் - ஒன்று உங்கள் தமிழில் எழுதணும். இல்லைனா அதிரா தமிழில் எழுதணும். இப்படி ரெண்டுங்கெட்டானாக, 'வேறை அகற்றி, சாம்பாரில்' என்று எழுதாதீங்க. உங்க தமிழ் 'வேரை அகற்றி சாம்பாரில்'. அதிரா தமிழ் 'வேறை அகற்றி சாம்பாறில்' ஹா ஹா (கேட்டா, பேஸ்ற டமிள்லதான் எளுதரேன் என்பார்கள்)

   Delete
  3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நெ தமிழன்:)).. நான் எப்போ டமில்ப் பிழை விட்டேன்:)).. நேக்கு டமில்ல டி எல்லோ:)) ஹா ஹா ஹா..

   Delete
 7. படப்புத்திருக்கு விடை தெரியவில்லை.    சுனாமியா அது?    இன்னொன்று சிறுத்தை மாதிரி தெரிகிறது.  ஊ...ஹூம்...   யோசிக்க முடையவில்லை!

  ReplyDelete
  Replies
  1. நல்ல ரயேட்டாக அல்லது பயங்கர பிஸியாக இருப்பது தெரியுது எழுத்துப்பிழைகள் பார்க்க:))..

   விடை ஆருக்கும் தெரியவில்லை என நினைக்கிறேன்.. ஆரும் சொல்லவில்லை எனில் முடிவில் ஆர் நடிச்ச மூவி எனக் குளூ தருகிறேன்:))

   Delete
 8. கிமோனா...   ச்சே...கினோவா என்றால் என்ன என்றே தெரியவில்லையே...  ஆனால் ரொட்டி அழகாய் வந்திருக்கிறது.  கட்லெட் போல தெரிகிறது!

  எங்க ஊரிலும் கருப்பட்டி போன்றவற்றை இப்படிதான் பொட்டலம் கட்டி விற்பார்கள்.

  ReplyDelete
  Replies
  1. //கிமோனா... ச்சே...கினோவா//
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
   இதுவும் ஒரு வித மில்லெட் வகைதான் ஸ்ரீராம்.. வரகு, சாமை போல, இதை அவித்தால் சரியாக வெள்ளைக்கறையான் போல இருக்கும்:)) கறையான் தெரியும்தானே.. புற்றுக் கட்டி எழுப்புமே...

   //கட்லெட் போல தெரிகிறது!//
   சப்பாத்தி அளவு பெரிசு, ரொட்டி போல மொத்தம்.. பார்க்க சின்னனாகத் தெரியுதோ..

   இதுவும் கருப்பட்டிதான் ஆனா பெயர் சிங்களப்பெயர் என நினைக்கிறேன் ஏனெனில் சிங்களப் பகுதியில்தான் கிடைக்கும் இப்படி.

   Delete
 9. கல் அரிக்கஞ்சட்டி நன்றாய் இருக்கிறது.  பனங்கிழங்கு ஏனோ எனக்குப் பிடிப்பதில்லை!  குட்டிக்கை ஒன்று தொடுவது தெரிகிறது.  ஆனால் யாரென்று தெரியவில்லையே?  பேத்தியா?

  ReplyDelete
  Replies
  1. //கல் அரிக்கஞ்சட்டி //

   ஓ உங்களுக்குத் தெரியுது.. அஞ்சுவுக்குத் தெரியாதாமே இப்படி கர்ர்:)) இதில டேவடை சமையல் தளம் வேறு வச்சு நடத்துறாவாம்ம்.. இப்பவே கொரொனாவைக் காரணம் காட்டி கிச்சினை மூட வைகப்போறேன் பாருங்கோ பூஸோ கொக்கோ:))

   நாங்கள் அரிக்கன் சட்டி என்போம்.

   //குட்டிக்கை ஒன்று தொடுவது தெரிகிறது. ஆனால் யாரென்று தெரியவில்லையே? பேத்தியா?//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என் செல்ல மகள்.. அம்மா வந்து நின்றால், நான் சொல்லுவேன் “டெய்ஷி பாட்டியைப் பாருங்கோ” என.. அம்மா சொல்லுவா நான் பாட்டி இல்ல பாட்டி இல்லை என ஹா ஹா ஹா.... ஏனெனில் நம் ஊரில் பாட்டி எனச் சொல்ல மாட்டோம்ம்.. பாட்டி என்றால் மிகவும் நடக்க முடியாத படுக்கையில் இருக்கும் வயதானோர் போல ஒரு அர்த்தம் வரும் அங்கு..

   Delete
  2. ஹலோ உண்மையா இதெல்லாம் பாட்டி காலத்து பொருட்கள் :)எனக்கெப்படி தெரியும் 

   Delete
  3. அல்லோ மிஸ்டர் அஞ்சூஊ வாங்கோ உங்களைக் கட்டி அணைச்சு வரவேற்கிறேன் ஹா ஹா ஹா:))..

   பாட்டி காலத்து ரசம் எல்லாம் செய்து போடுவாவாம்.. இது தெரியாதாம் கர்ர்ர்ர்ர்:)) டேவடைக் கிச்சினை மூடோணும் ஜொள்ளிட்டேன்:)).. கொரோனாவால நாங்கள் வெளில சாப்பிட மாட்டோம்ம்ம்:))

   Delete
  4. ஹலோ :)  பனங் காட்டு நரி :) கட்டிபுடிக்கிறதுக்கெல்லாம் அசர மாட்டேன் வாங்க கன்னத்தில் ஒருஉம்மா சேர்த்து தரேன் உங்களுக்கு :))))))))))))) அதுவும் ஹாஸ்பிடல் போயிட்டு வந்து 

   Delete
  5. [[im] https://i.pinimg.com/236x/e2/34/2a/e2342ada12320f3b7d8c7f1f2019dd88--cat-climbing-wall-cats.jpg[/im]

   Delete
 10. ஊசிகுறிப்பு சிரிப்பு.  ஊசி இணைப்பு ஜிந்திக்க வைக்கிறது!

  நாங்களும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வைக்க நினைக்கிறோம்.  அப்படியே போகிறது!

  ReplyDelete
  Replies
  1. பழுதடையாதுதானே ஸ்ரீராம், எப்பவும் பாவிக்கும் பொருட்களான, அரிசி,பருப்பு, மா, சீனி, தேயிலை, எண்ணெய், சோப், மருந்துகள்.. இவற்றை மட்டும் வாங்கி வையுங்கோ.. பிரசனை வராவிட்டலும் பாவிக்கலாம் தானே நட்டம் இல்லையே..

   நான் எப்பவும் பெரிய ஸ்ரொக் வைத்திருப்பேன் பொதுவாகவே... அதனால எங்களுக்கு ஓரளவு உணவுப்பொருட்கள் இருக்கு.. மிகுதி வாங்கினோம்..

   இங்கு தட்டுப்பாடான மெயின்ன்ன்ன்ன்ன்ன்ன் பொருள்.. “ரொயிலட் ரிஷூ”/.. ஹையோ கடவுளே சனம் சாப்பாட்டுச் சாமானுக்கு முன், toilet tissue ரிஷூக்களை வாங்கி விட்டார்கள்.. ஒரே தட்டுப்பாடு.. எங்கு பார்த்தாலும் முதலாவதாக சொல்கின்றனர்.. ஆஆ ரொயிலட் ரிஷூ எல்லாம் முடிஞ்சு போச்சென... haa haa haa
   மிக்க நன்றி ஸ்ரீராம்... மீம்ஸ் களும் வரத்தொடங்கிட்டுது இது பற்றி:))

   Delete
 11. கினோவா ரொட்டியையே நன்றாக சோப் போட்டுக் கழுவி, சோப் ஆயில் போட்டுத் துடைத்து, ப்ளீச்சிங் லிக்விட் போட்டபிறகுதான் நானே எடுத்துக்கொள்வதாக எண்ணம்.

  கொரோனா பயம் அவ்வளவு ஆகிவிட்டது

  ReplyDelete
  Replies
  1. அப்படியெல்லாம் கஷ்டப்பட்டாவது, அதிராவின் கொரானா ஒட்டுவா ரொட்டியை .. ஸாரி .. கினோவா ரொட்டியை, டேஸ்ட் பார்க்கணுமா ஸ்வாமீ. உமக்கு நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன்.

   உமது ஜாதகத்தில் ராகு, கேது, சனி எல்லோரும் ஒரே கட்டத்தில் கூடியிருப்பார்கள் என நினைக்கிறேன். எச்சரிக்கையாக இருங்கோ ஸ்வாமீ.

   Delete
  2. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ.. அதுசரி மாஸ்க் போட்டு , கைக்கு சோப்பும் போட்டபின்னர்தானே என் பக்கம் வந்திருக்கிறீங்க?:)) ஹா ஹா ஹா.. ஆசைக்கு ஒரு உணவுப்பொருளைப் பகிர்ந்து சாப்பிடப் பயமாக இருக்கு...
   நன்றி நெ தமிழன்..

   Delete
  3. வை.கோபாலகிருஷ்ணன்Wednesday, March 18, 2020 7:39:00 am
   அப்படியெல்லாம் கஷ்டப்பட்டாவது, அதிராவின் கொரானா ஒட்டுவா ரொட்டியை .. ஸாரி .. கினோவா ரொட்டியை, டேஸ்ட் பார்க்கணுமா ஸ்வாமீ. உமக்கு நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன்.///

   [im]https://img.webmd.com/dtmcms/live/webmd/consumer_assets/site_images/articles/health_tools/behavior_problems_in_cats_slideshow/photolibrary_rm_photo_of_angry_cat_with_ears_back.jpg[/im]

   Delete
  4. ///உமது ஜாதகத்தில் ராகு, கேது, சனி எல்லோரும் ஒரே கட்டத்தில் கூடியிருப்பார்கள் என நினைக்கிறேன். எச்சரிக்கையாக இருங்கோ ஸ்வாமீ.//

   ஹா ஹா ஹா உங்கட ஸ்வாமியைக் கூப்பிட்டு உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஒளிச்சு வச்சிருங்கோ கோபு அண்ணன்:).. அங்குதான் பத்திரமான இடம்:))

   Delete
  5. //ஜாதகத்தில் ராகு, கேது, சனி எல்லோரும் ஒரே கட்டத்தில் கூடியிருப்பார்கள் // - தனுசு ராசிக்காரர்களான என்னைப் போன்றவர்களுக்கு ஜூன் வரை உடல் நிலைக்குப் பிரச்சனை வருமாம். இந்த கினோவா..இல்லை இல்லை கொரோனா போன்றவைகளால் தாக்கப்படும் வாய்ப்பு தனுர் ராசிக்காரர்களுக்கு அதிகமாம்..

   ஜாக்கிரதை.... நான் எனக்குச் சொல்லிக்கொண்டேன்.... ஹா ஹா ஹா

   Delete
  6. 16 வயசுப் பெண், கோபு சாரைப் பார்த்து அண்ணன் என்று சொன்னால், நான் என்ன செய்வது... ஐயஹோ... இந்த மாதிரி உலகத்தில் வாழத்தான் வேணுமா. பேசாம தேம்ஸ் நதிக்கரைக்குச் சென்று..... அவர்களைத் தள்ளிவிட வேண்டியதுதான்.

   Delete
  7. ///தனுசு ராசிக்காரர்களான என்னைப் போன்றவர்களுக்கு///

   ஆஆஆஆ நான் முன்பு ஒருநாள் சொன்னேனே நீங்கள் தனுசுராசிபோல இருக்கே என ஹா ஹா ஹா அது சரியாப்போச்சே ஹா ஹா ஹா...

   தனுசுக்கு சனி மாற்றம் நல்லதாம் எல்லோ.. பிறகென்ன கவலை:)..

   //16 வயசுப் பெண், கோபு சாரைப் பார்த்து அண்ணன் என்று சொன்னால், நான் என்ன செய்வது...//

   ஹா ஹா ஹா கரீட்டாச் சொன்னீங்க:)) அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு:))... ஹா ஹா ஹா அதுக்காக இப்போ தேம்ஸ்ல எல்லாம் குதிக்க முடியாது:)) ரொம்பக் குளிராக்கும்:)).. வேணுமெண்டால் இப்பவே ஓடிப்போய் அஞ்சுவைத் தள்ளி விடுறேனே:))

   Delete
  8. ஆன்லைனில் ப்ரியாக்கும் உங்களுக்கும் பொருள் ஆர்டர் செய்யலாம்னு நினைச்சேன் but now your ஆர்டர் கேன்சல்ட் :)

   Delete
  9. ஹா ஹா ஹா இப்போ எதுக்கு அஞ்சு பொயிங்கிறா என ஓசிச்சேன்:).. ஓ இதுக்கோ:))
   //வேணுமெண்டால் இப்பவே ஓடிப்போய் அஞ்சுவைத் தள்ளி விடுறேனே:))//
   ஹா ஹா ஹா:))..

   நோ நீங்க ஓடரைக் கான்சல் பண்ணாதீங்கோ அஞ்சு பிளீஸ்ஸ்:)) எனக்கது வேணும் .., அப்பூடி எனில் நான் அம்முலுவைத் தள்ளுறேன்:)) ஹா ஹா ஹா..

   Delete
 12. வணக்கம் அதிரா சகோதரி

  பதிவு வழக்கம் போல் மிக அருமை. வெந்தய கீரை வளர்ப்பு தங்களது வித்தியாசமான திறமையை பறைசாற்றுகிறது. வாட்டர்மிலான் தொட்டி பார்க்கவே அழகாகவும் உள்ளது.அதில் உள்ள ஈர சக்திக்கே செடி நன்றாக வளர்ந்தது போலும்...நல்ல ஐடியா உங்களுக்கு. பாராட்டுக்கள்.

  வெந்தய கீரை ரொட்டி செய்முறை படங்களுடன் நன்றாக உள்ளது. எடுத்து சாப்பிடலாம் என ஆசையாக எண்ணும் போது, கை அலம்புங்கள் என நீங்கள் கூறிவிட்டதால், போஃனை தொட்ட கைகளை அலம்பி விட்டு சாப்பிடுவதற்கு பிறகு வருகிறேன். இப்போதுள்ள சூழ்நிலையில் கையலம்பி, கையலம்பி தண்ணீர் பிரச்சனை வந்து விடபோகிறதேன்னு பயமாக வேறு இருக்கிறது.

  அந்தப்படம் பாயும் பலியா? ஏதோ என் அறிவுக்கு பதில் கூறுகிறேன். பனங்கற்கண்டு சாப்பிட்டு நாளாகி விட்டது.

  ஊசி இணைப்பு ஊசிக்குறிப்பு இரண்டுமே நல்ல கருத்துக்கள். ரசித்தேன். பிற அனைத்துமே நன்றாக உள்ளன. நானும் பிறகு வருகிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கமலாக்கா..

   //வெந்தய கீரை வளர்ப்பு தங்களது வித்தியாசமான திறமையை பறைசாற்றுகிறது. //
   நன்றி நன்றி.. எனக்கு இது பார்த்ததும் உதித்த ஐடியா, அவ்ளோ அழகான ஜாடிபோல இருந்தது மெலனை வெட்டியபாதி....

   //அதில் உள்ள ஈர சக்திக்கே செடி நன்றாக வளர்ந்தது போலும்//
   அதேதான் ஆனா இதில் வெந்தயம் போன்றவை மட்டுமே வளர்க்கலாம் போல இருக்கு, ஏனெனில், நாளாக ஆக விளிம்புப் பகுதி அழுகத் தொடங்கியது, காரணம் நான் கொஞ்சம் தண்ணீர் அதிகமாக ஊற்ரி விட்டேன், அப்படி ஊற்றக்கூடாது, நீங்க சொல்வதுபோல அதிலிருக்கும் ஈரமே போதும் செடி வளர.

   //கை அலம்புங்கள் என நீங்கள் கூறிவிட்டதால், போஃனை தொட்ட கைகளை அலம்பி விட்டு சாப்பிடுவதற்கு பிறகு வருகிறேன்///

   ஆஆஆஆஆஆஆஆ அப்போ மாஸ்க் கட்டாமல், சோப் போட்டுக் கை கழுவாமலோ அதிரா பக்கம் வந்தீங்க கர்:)) ஹா ஹா ஹா..

   Delete
  2. //கையலம்பி தண்ணீர் பிரச்சனை வந்து விடபோகிறதேன்னு பயமாக வேறு இருக்கிறது.//
   உண்மை, இங்கு தண்ணீர்ப் பிரச்சனை வராது, சோபும் கை துடைக்கும் ரிஷூக்களுமே தட்டுப்பாடு..

   //அந்தப்படம் பாயும் பலியா?//
   ஹா ஹா ஹா முயற்சியாவது பண்ணியிருக்கிறீங்க வாழ்த்துக்கள்.. இல்லை விடை தவறு:).. பனங் கற்கண்டு கிடையாது உங்களுக்கு:))..

   மிக்க நன்றிகள்.. முடிஞ்சால் இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்கோ:)..

   Delete
  3. பாயும் புலி பாயும் போது கால் இடறி பலியாகி விட்டது. இருப்பினும் முயற்சிக்கு வாழ்த்து சொன்னமைக்கு நன்றிகள். இன்னமும் முயற்சி செய்கிறேன். அதற்குள் முயற்சிக்கும் பேர்களுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்களும்.

   Delete
  4. வணக்கம் சகோதரி

   ஒரு நிமிஷம் மாத்தி யோசித்தேன். அந்தப்படம் "அலை பாயுதே" எனவும் இருக்குமோ எனத் தோன்றியது. இதுவும் தவறுதான் என மனது சொன்னாலும், ஒரு முயற்சிதான்.

   Delete
  5. ஹா ஹா ஹா கமலாக்கா கரீட்டாச் சொல்லிட்டீங்க.. அந்தக் கித்துள்ள முக்கால்வாசி உங்களுக்கே:)).. கால் வாசி ஆருக்கு எனத்தானே கேட்கிறீங்க?:)) அது ஆராட்சி பண்ணி, கூகிள் அங்கிளிடம் கேட்டுக் கண்டுபிடிச்ச அஞ்சுவுக்கு:))..

   நன்றி கமலாக்கா.

   Delete
  6. //போஃனை தொட்ட கைகளை அலம்பி விட்டு சாப்பிடுவதற்கு பிறகு வருகிறேன்.// - நல்ல வேளை... போனை அலம்பிவிட்டு வருகிறேன் என்று அதனைத் தண்ணீரில் முக்காமல் விட்டீர்களே... ஹா ஹா

   Delete
  7. /போனை அலம்பிவிட்டு வருகிறேன் என்று அதனைத் தண்ணீரில் முக்காமல் விட்டீர்களே... ஹா ஹா/

   ஹா. ஹா. ஹா. போகிற போக்கைப் பார்த்தால், அதுவும் ஒரு நாள் வந்து விடுமென்றே தோன்றுகிறது. எப்போதும் எதையும் அலம்பி அலம்புன்னு அலம்பியபடியே, இருக்கும் நம்மை பார்த்து கொனோரோ அலுப்பு காட்டி எப்படியோ அகன்று விட்டால் சரிதான்..!

   Delete
  8. கமலாக்கா.. கொரொனா அங்கிளும் கிட்டத்தட்ட செவின் பொயிண்ட் 5 அங்கிள் மாதிரி:)).. அடிக்கடி கூப்பிட்டுக் கொண்டிருந்தீங்களெனில், ஆசையாகக் கூப்பிடுறீங்கள் என வீட்டுக்கு ஓடி வந்திடுவார்ர்:)) ஜாக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்தை:)) ஹா ஹா ஹா..

   Delete
 13. ரொட்டியை தொட்டு எடுக்கவும் பயமாக இருக்குது

  கொரானோ எந்த ரூபத்திலும் வருமாமே

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கில்லர்ஜி.. ஹா ஹா ஹா எந்த ரூபத்திலும் இல்லை, தொடுகை மூலம் மற்றும் மூச்சு, எச்சில் இவை மூலமும் எனச் சொல்கின்றனர்.. ஜாக்ர்ர்ர்தை:)..

   நன்றி கில்லர்ஜி.

   Delete

 14. குயினோவா காக்கா சோளம் என்று அறியப்படுவது. multigrain ஆட்டா மாவில் இதுவும் ஒரு பங்கு உண்டு. கீழ்கண்ட வவுனியா தோட்ட பயிர்களை எங்களுக்கு தமிழில் அல்லது ஆங்கிலத்தில் படங்களுடன் ஒரு பதிவுஎழுதுங்களேன். 

  பழ வர்க்கம் என்று நினைக்கிறேன். 
  கப்பல், செங்கதலி, இதரை, சாம்பல், சீனிக்கதலி,  பப்பாசி,பட்டர்புருட் ,ஜம்பு, தம்பலை.
  வேறு சில காய்கறிகள்.
  மூட்டைமிளகாய், வானம் பார்த்த மிளகாய், போஞ்சி, வல்லாரை, சாரணை, சண்டிக்கீரை, பொன்னாங்காணி, சிவப்பு பசலி, தக்காளி கீரை, பச்சை பசலி, கங்குன், கொத்து பசலி, செமன் கிழங்கு, சீனி வாழை கிழங்கு, வற்றாளை கிழங்கு, ரம்பை.
  கற்பூரவள்ளி, குறிஞ்சா, அறத்தை, கொள்வாய்.
  இவை என்ன பூக்களா.பொட்டில் பிரஸ், கிளி சூரியா.இவை யாவும் இந்த லிங்கில் இருந்து எடுக்கப்பட்டவை.
  https://www.jvpnews.com/srilanka/04/198383

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஜேகே ஐயா..
   // காக்கா சோளம் என்று அறியப்படுவது//
   ஓ புதுசாக இருக்குது பெயர், இப்போதான் அறிகிறேன்.

   //கீழ்கண்ட வவுனியா தோட்ட பயிர்களை எங்களுக்கு தமிழில் அல்லது ஆங்கிலத்தில் படங்களுடன் ஒரு பதிவுஎழுதுங்களேன்.//

   ஹா ஹா ஹா இதுபற்றி நான் பல கொமெண்ட்ஸ்களில் பல இடங்களில் எழுதி விட்டேனே...

   //கப்பல், செங்கதலி, இதரை, சாம்பல், சீனிக்கதலி, //
   இவை அனைத்தும் வாழைப்பழ வகைகள்.. இதில் சாம்பல் மொந்தன் எனப்படுவது கறி சமைக்க மட்டும் பயன்படும் சாம்பல் பூசியதுபோல இருக்கும் வாழை..

   ///பப்பாசி,//
   பப்பாளிப்பழம் தெரியும்தானே.. நாங்கள் பப்பாசி எனப் பேசுவதுண்டு..

   //பட்டர்புருட்//
   இது சரியாக தெரியவில்லை, இவை மலைநாட்டுப்பழ வகை, கொக்கோ பழம் என நான் சாப்பிட்டிருக்கிறேன், ஹற்றன் நுவரெலியா, மாத்தளைப் பகுதிகளில் கிடைக்கும்..

   // ,ஜம்பு,//
   இது ஒருவகை நாவல் பழம் என்போம், பிங், வெள்ளை நிறத்தில் கிடைக்கும்...

   //தம்பலை/
   இது தெரியவில்லை எனக்கு.. இப்படிப் பெயர் கேள்விப்பட்டதில்லையே...

   Delete
  2. //மூட்டைமிளகாய், வானம் பார்த்த மிளகாய், //
   இது ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு விதமாக சொல்லுவினம் என நினைக்கிறேன், குட்டியாக வானத்தை நோக்கிக் காய்க்கும் மிக உறைப்பு மிளகாய் இது என நினைக்கிறேன்..

   //
   போஞ்சி,//

   இது மஞ்சளிலும் பச்சை நிறத்திலும் இருக்கும், கொடியாக இல்லை, மிளகாய்ச்செடிபோல இருக்கும் அப்படி கிடைக்கும் பீன்ஸ் ஐ போஞ்சி என்போம்...

   //வல்லாரை,,பொன்னாங்காணி//
   இவை தெரியும்தானே உங்களுக்கு. ..

   //சிவப்பு பசலி, தக்காளி கீரை, பச்சை பசலி//

   கொடியில் வரும் பசளிக்கீரை.. குளிர் அதிகம், ஸ்பினாச் இலைகள்போல இருக்கும்.

   //கங்குன்//
   இது ஒருவகை தண்ணி உள்ள இடத்தில் வளரும் கீரை, இலங்கையில் சைனீஸ் ரெஸ்ரோரண்ட் போனால் இதை வாங்கிச் சாப்பிடாமல் வந்ததில்லை, சூப்பராக சமைப்பார்கள் அவர்கள்.. இது வடமாகாணப்பக்கம் இல்லை.

   //வற்றாளை கிழங்கு//
   இதுதான் சுவீட் பொட்டாட்டோ:))

   // ரம்பை//
   இவ ஊர்வசியின் தங்கை ஹா ஹா ஹா வாசனைக்காக கறிக்கு சேர்க்கும் இலை, தென்னை ஓலைபோல கடையில் கிடைக்குமே.. கட் பண்ணி.

   //கற்பூரவள்ளி//
   இது தெரியாதோ? வீடுகளில் வளர்ப்போமே... குழந்தைகளுக்கு சளி பிடிககமல் இருக்கக் கொடுபினம்.

   //சாரணை//
   இதன் வேர்களை எடுத்து ரசம், பத்தியக்கறிகளில் சேர்ப்போம், என்னிடம் இப்போ இருக்கு:)).

   //குறிஞ்சா//
   கொடியில் கிடைக்கும் இலைவகை, இது முக்கியமாக சுகர் பேஷண்ட்டுக்கு நல்லது.. எனக்கு ரொம்ம்ம்ம்ம்பப் பிடிக்கும்.. நம் ஊர்த்தமிழ்க் கடைகளில் இங்கு கிடைக்கும், எனக்கு கிடைச்சால் ரெசிப்பி போடுறேன் .. சுண்டல் செய்வோம், சிலர் மாவுடன் இவ்விலைகளை இடிச்சுப் புட்டு அவிப்பினம்.

   ஏனைய வகைகள் எனக்குத் தெரியவில்லை, ஏதும் மருத்துவ இலைகளாக இருக்கலாம்..

   நன்றி ஜே கே ஐயா.

   Delete
  3. bottle brush = Callistemon https://anneofgreengardens.com/wp-content/uploads/2016/09/bottle-brush-close-up-Anne-of-Green-Gardens.jpg

   Delete
  4. Gliricidia sepium இதைத்தான் க்ளைசூரியா னு சொல்லியிருக்கணும் .இது லீஃப் feed ஆடுமாடுகளுக்கு 

   Delete
  5. / ரம்பை//

   Pandanus amaryllifolius
   In Sri Lanka, it is called rampé and it is grown almost in every household. Most of the Sri Lankan dishes use these leaves for aroma along with curry leaves.


   Kewra, keora or kewda is an essential oil distilled from the male flower of the Pandanus odorifer tree.

   Delete
  6. butter fruit is avocado

   தம்பலை is winged bean சிறகவரை chathura payir in malayalam /4 angled bean

   Delete
  7. Herbal plant Perun Kurinjan is /குறிஞ்சா//

   Delete
  8. ஆவ்வ்வ்வ்வ்வ் ஆராட்சி அம்புஜம்.. ஓடி ஓடிக் கலெக்ட் பண்ணிக் கொண்டு வந்து போட்டுவிட்டா தரவுகள்:)).. ஜே கே ஐயா இப்போ நிறையத் தெளிவாகியிருப்பார்.. மிக்க நன்றி அஞ்சு.

   //butter fruit is avocado//

   ஓ இருக்கும் இருக்கும்... இப்போ நினைவு வருது..

   ///தம்பலை is winged bean சிறகவரை//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

   Delete
 15. அம்பிறல்லங்காய்

  பெயரே மகிழ்வைத் தருகிறது

  ReplyDelete
 16. ர்பூசணி கிண்ணத்தில் வெந்தயக்கீரை வளர்ப்பா? அசத்தி விட்டீர்கள் அதிரா! உண்மையிலேயே அருமை! அப்புறம் அதை வைத்து கினோவா ரொட்டியா! இந்த ஐடியாவுக்கு தாராளமாக ஒரு அவார்ட் தரலாம்! கினோவா மாவை எதற்காக ஸ்டீம் செய்தீர்கள்? அப்படியே மாவு பிசையக்கூடாதா? எத்தனை நிமிடம் ஸ்டீம் செய்தீர்கள்? மைக்ரோ வேவ் செய்தீர்களா? மைக்ரோவேவ் என்றால் எப்படி? விபரம் எழுதுங்கள்.
  துபாயில் பனை வெல்லம் இலங்கையிலிருந்து இப்படித்தான் சருகில் கட்டி பாக் செய்து வரும். கொஞ்சம் கடினமாக இருக்கும் உடைக்க. ஆனால் சுவை அதிகம்.
  ஊசி இணைப்பு அருமை!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மனோ அக்கா வாங்கோ.. ஆவ்வ்வ்வ் மிக்க நன்றி.

   //இந்த ஐடியாவுக்கு தாராளமாக ஒரு அவார்ட் தரலாம்!//
   ஹா ஹா ஹா நன்றி மனோ அக்கா நன்றி.. 2008 இல் என் பட்டிமன்ற வாதத்தை வாழ்த்தி, நீங்கள் தந்த பூங்கொத்து, இன்னமும் மனதில் இருக்குதெனக்கு.

   அப்படியேயும் செய்திருக்கலாம்தான், ஆனா எனக்கு கொஞ்சமாக அவித்தால் நன்றாக இருக்கும் என மனம் சொல்லியது, அதன் மணம் கொஞ்சம் ஸ்ரோங்காக இருந்தது அதனால அப்படிச் செய்தேன்.

   நான் மைக்குறோவேவ் லதான் ஒரு கப் மா என்பதனால ஃபுல் பவரில் 1.5 நிமிடம் வைட்த்ஹதாக நினைவு... நீங்கள் மைக்குரோவேவ் அவன் என்பீங்களே, உணவைச் சூடுபண்ணுவது.. அதுதான் மனோ அக்கா.

   வழமையாக இந்த வெல்லம் கடினமாக இருக்கும் மனோ அக்கா, ஆனா இம்முறை ஏதோ தப்பு நடந்திருக்குது, சொஃப்ட்டாக இருக்குதே.. ஆனா இந்த சொஃப்ட் தான் எனக்குப் பிடிச்சிருக்கு..

   மிக்க நன்றி மனோ அக்கா.

   Delete
 17. வெந்தயக் கீரை வளர்ப்பு சிறப்பு...

  இப்படியொரு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று தான் தெரியும்...!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ டிடி வாங்கோ. நன்றி.

   என்னாது கொரோனா பாதிப்பு இன்றுதான் தெரியுமோ? கர்ர்.. பாண்டிச்சேரியில் ஸ்கூல்கள் மூடியாச்சு, மும்பையில் அனைவரையும் வீட்டுக்குள் இருக்கும்படி சட்டம் வந்திருக்காம், டெல்லியில்கூட ஸ்கூல்கள் மூடினார்கள்.. நீங்க இப்படிச் சொல்லலாமோ... வெளிநாட்டவர்கள் இப்போ இந்தியாவுக்குள் வரக்கூடாது என மோடி அங்கிள் சொல்லிட்டார்ர்.. இவ்வளவும் நடந்திருக்கே அங்கும்...

   Delete

 18. ஆஹா தர்பூஸ் தொட்டி ...பார்க்கவே அட்டகாசமா இருக்கு ..  ரொம்ப ஆச்சிரியமாவும்.. நல்ல ஐடியா ...


  குட்டி குட்டி வெந்தயக் கீரை ..வாவ் சூப்பர்  வாழை இலையில் சுற்றிக் கட்டி விற்பார்கள்...புதுசா இருக்கு  கினோவா ரொட்டி நல்லா இருக்கு

  கயர்ப்பே இல்லாமல் இனிப்பாக இருந்தது ...எப்படி கினோவா இனிப்பா இருக்கும் மா  நயந்தாரா அக்கா:) நியூயோர்க் வாறாவாம், ஆனா ட்றுத் ஆல இப்போ அவவைக் கட்டிப்பிடிச்சு வரவேற்க முடியாதே:)) என்ன கொடுமை பாருங்கோ:))...அதானே பாவம்  ஊசி இணைப்பு ...மிக சரி அடுத்தவர் மனதில் பதிந்த நம் பிம்பத்தை மாற்ற முடியாது ..


  இது கண்ணுக்குத் தெரியாத கெட்ட கிருமி வந்து ஆட்டிப்படைக்குதே உலகையே:)......ஆமா

  மக்கள் எல்லாரும் தம் தேவைக்கும் மிக மிக அதிகமாக வாங்கி வைக்கிறார்கள் ...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அனு வாங்கோ..

   //ஆஹா தர்பூஸ் தொட்டி ...பார்க்கவே அட்டகாசமா இருக்கு ..
   ரொம்ப ஆச்சிரியமாவும்.. நல்ல ஐடியா ...//
   நன்றி நன்றி.. இப்பூடி ஐடியாவெல்லாம் அஞ்சுவுக்கு வராதாக்கும்:))

   //வாழை இலையில் சுற்றிக் கட்டி விற்பார்கள்...புதுசா இருக்கு//
   ஆனா இது பழசுதான் ஹா ஹா ஹா..

   //எப்படி கினோவா இனிப்பா இருக்கும் மா//
   கினோவா இனிமையாகவே இருக்கும், அவிச்சுப்போட்டு கொஞ்சம் ஒயில் விட்டுப் பிரட்டினாலே சும்மாவே சாப்பிடலாம் கினோவா அரிசியை.
   இதில் வெந்தயக்கீரை சேர்த்தமையால கயர்க்குணம் வருமோ என நினைச்சேன் ஆனா அப்படி வரவில்லை.

   //ஆனா ட்றுத் ஆல இப்போ அவவைக் கட்டிப்பிடிச்சு வரவேற்க முடியாதே:)) என்ன கொடுமை பாருங்கோ:))...அதானே பாவம்//

   அதுதானே அனு:)).. ட்றுத்துக்கு இபோ செவின் பொயிண்ட் 5 நடக்குதோ?:)) எனக்கெதுக்கு ஊர் வம்பு ஹா ஹா ஹா:))..

   //மக்கள் எல்லாரும் தம் தேவைக்கும் மிக மிக அதிகமாக வாங்கி வைக்கிறார்கள் .//
   அப்படி என்றில்லை அனு, பயமாக இருக்குது, இன்னும் எவ்வளவு காலம் நீடிக்குமோ என.. போகிற போக்கைப் பார்த்தால் பொருட்கள் தட்டுப்பாடும் வரக்கூடும்தானே..

   மிக்க நன்றிகள் அனு.

   Delete
  2. https://4.bp.blogspot.com/-GDRtKk95g48/ViZ9TK6gb9I/AAAAAAAAGew/oDZFsLNSuj4/s400/11831802_932698163454434_1066879390581067862_n.jpg

   https://kaagidhapookal.blogspot.com/2015/10/loud-speaker-29.html

   Delete
 19. இங்கு எங்கள் ஊரில் அவ்வப்போது விற்கப்படும் வெந்தயக்கீரையைப் பார்த்துள்ளேன். கேள்விப் பட்டுள்ளேன். அது என்ன கினோவா ரொட்டி? ஏதேதோ புதுச்சு புதுச்சா பெயர் சூட்டி ஒரு பதிவு.
  பொறுமையாகக் க்யூவில் நின்றபடி ஏராளமானவர்களின் பின்னூட்டங்கள். நல்லாவே கல்லாகட்டி வருகிறீர்கள். ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! பாராட்டுகள் + வாழ்த்துகள் அதிரா.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ..

   புதுசா வந்த வட்சப்பை மட்டும் உடனேயே மொபைலில் இறக்கி எல்லோருக்கும் நெல்லைத்தமிழன் உஸ்வாமியுடன்[ஹையோ உங்கட முறையில் ஜொன்னேன்:)] எடுத்த செல்பி அனுப்புறீங்க எல்லோருக்கும்:)) ஆனா அதிரா புதிசாக் கண்டுபிடிச்சுப் போட்டால் மட்டும் ஜண்டைக்கு வாறீங்க கர்ர்ர்ர்ர்ர்:))... தேம்ஸ்கரைக்கு கொஞ்சம் வர முடியுமோ கோபு அண்ணன்?:)).. பயப்பூடாதீங்கோ தள்ளி விடும் பழக்கமெல்லாம் அதிராவுக்கு இல்லையாக்கும்:))..

   //பொறுமையாகக் க்யூவில் நின்றபடி ஏராளமானவர்களின் பின்னூட்டங்கள். நல்லாவே கல்லாகட்டி வருகிறீர்கள்///
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஏன் இப்பூடிப் புகைக்குது:)) .. வாயுள்ளபிள்ளைதான்[நேக்குத்தான்] பிழைக்கும் தெரியுமோ?:)).. நன்றி ..

   Delete
  2. //ஏராளமானவர்களின் பின்னூட்டங்கள். நல்லாவே கல்லாகட்டி வருகிறீர்கள். // - கோபு சார்... முன்ன மாதிரி, சுடச் சுட இடுகை போட்டு, வரும் பின்னூட்டங்களுக்கும் உடனுக்குடன் வெளியிட்டு, பதில் கொடுத்து வரும் எல்லாருடைய இடுகைகளிலும் அதிக பின்னூட்டங்கள் வரும். பின்னூட்டங்களைப் பற்றிக் கவலையில்லாமல் இருப்பவர்களுக்கும், வரும் பின்னூட்டத்துக்கு சவக் என்று பதில் கொடுப்பவர்களுக்கும் அதிக பின்னூட்டங்கள் வராது.

   மொத்தத்தில் இணையத்தில் வருபவர்கள், வரும் கொஞ்ச நேரம் மனதை கலகலப்பாக வைத்துக்கொள்ளவே இணையத்துக்கு வர்றாங்க என்பது என் எண்ணம்.

   Delete
  3. //மொத்தத்தில் இணையத்தில் வருபவர்கள், வரும் கொஞ்ச நேரம் மனதை கலகலப்பாக வைத்துக்கொள்ளவே இணையத்துக்கு வர்றாங்க என்பது என் எண்ணம்.//

   இது 200 வீதம் உண்மை நெல்லைத்தமிழன், “கொடுமை கொடுமை என கோயிலுக்குப் போன.....” கதைபோல ஆகிடக்கூடாது என்பதற்காகவே மகிழ்ச்சியாக, குதூகலமாக இருக்கோணும் என நினைப்பேன்..

   நானும் மகிச்சியாக இருக்கோணும் அடுத்தவரையும் மகிழ்ச்சிப்படுத்தவே போஸ்ட் போடுகிறேன் நான், மற்றும்படி தமிழ்ப்பற்றாலேயோ இல்லை தமிழை வளர்க்கவோ இல்லை அடுத்தவரைத் திருத்தவோ இல்லை புத்திமதி கூறவோ .. இப்படி எதுக்காகவும் என சத்தியமாக நான் போஸ்ட் போடுவதில்லை ஹா ஹா ஹா..

   2009 இல் ஒரு நண்பி எனக்கு மெயில் போட்டிருந்தா, இப்போ அவ எங்கிருக்கிறாவோ தெரியாது தொடர்பிலில்லை.. அவ சொன்ன வார்த்தை இப்பவும் எனக்கு மகிழ்ச்சியைத் தருது.. மெயிலில் எழுதியிருந்தா..

   “அதிரா விடிய எழும்பியதும், நான் முதலாவதாகத் தேடிப் படிப்பது உங்கள் கொமெண்ட்ஸ் ஐத்தான், படிச்சால் எனக்கு உற்சாகமாக மகிழ்ச்சியாக இருக்கும்” என்றா..

   அப்போ டெய்லி கும்மி... கோலாட்டம் நடந்த காலம்:))

   Delete
  4. /தமிழ்ப்பற்றாலேயோ இல்லை தமிழை வளர்க்கவோ இல்லை அடுத்தவரைத் திருத்தவோ இல்லை// - இது ஏதோ உள்குத்து போலனா தோணுது... நானும் வெறும் ஆர்வத்தால் 'தமிழ் எழுதின குறை' இருந்தால் பின்னூட்டத்தில் போடறேனே தவிர, பெரிசா தமிழ் தெரியும்னு சொல்றதுக்காக இல்லை. இதுவும் ஜாலியாத்தானே எடுத்துக்குவாங்கன்னு நான் நினைச்சுப்பேன்.

   2012 இடுகைகளில் பின்னூட்டம் இட்டவர்களில் 90% இப்போ எங்க இருக்காங்க, ஏன் இடுகைகளைப் படிக்கறது இல்லை என்றே புரியலை. அப்போல்லாம் வாட்சம் இவ்வளவு அதிகமான உபயோகத்தில் இல்லாததால், இடுகைகளுக்குப் பின்னூட்டமே, நேரில் கலாய்த்துப் பேசுவதுபோல எழுதுவாங்க.

   ஏன் தொடர்ந்து அவ்வாறு எழுதுவதில்லை என்பது எனக்கு ஆச்சர்யம்தான்...

   Delete
  5. @நெ தமிழன்
   //பின்னூட்டங்களைப் பற்றிக் கவலையில்லாமல் இருப்பவர்களுக்கும், வரும் பின்னூட்டத்துக்கு சவக் என்று பதில் கொடுப்பவர்களுக்கும் அதிக பின்னூட்டங்கள் வராது.//

   இதையேதான் இதைப் பல்ர் புரிஞ்சுகொள்ளாமல்.. என்னிடம் ஆரும் வருவதில்லை, என்னை ஊக்கப்படுத்துகிறார்கள் இல்லை என அழுகிறார்கள், ஆனா இதை நானும் பல இடங்களில் சொல்லிக்கொண்டே வந்தேன், இப்போ பலரும் கொமெண்ட்ஸ்க்குப் பதில் போடுவது அதிகரித்திருப்பதைப் பார்க்க மகிச்சியாக இருக்குது.. சிலரின் பழைய போஸ்ட்களைச் செக் பண்ணினால் உண்மை தெரியும் ஹா ஹா ஹா..

   நான் நினைப்பது, இங்கு வந்து கொமெண்ட் போடுவோர் என்பது, என் வீட்டுக்கு நேரடியாக வந்திருப்பவர் என நினைப்பேன், அப்போ அவர்களை நாம் வரவேற்று மகிழ்ச்சிப்படுத்தினால்தானே, இன்னொருதடவை அதிரா வீட்டுக்குப் போகக் கிடைக்காதா எனும் எண்ணம் வரும்...

   இதனாலதான், போஸ்ட் எழுத நிறைய இருந்தாலும், நான் போடுவதில்லை, எனக்கு எப்போ கொமெண்ட்ஸ் க்கு எல்லாம் பதில் போடுமளவுக்கு நேரம் கிடைக்குதோ அப்போதான் போஸ்ட் போட விரும்புவேன், அப்படி இருந்தும் உடன் பதில் போட முடியாமல் போய் விடுகிறது சில நேரங்களில்...

   முக்கிய குறிப்பு.. எங்களுக்கும் கொரோனாவால் நாளையுடன் ஸ்கூல்கள் மூடப்படுகின்றன:))

   சிறிய இடைவேளையின் பின்னர் வந்து மிகுதிக்குப் பதில்கள் போடுகிறேன்.

   Delete
  6. @நெ தமிழன்
   //இது ஏதோ உள்குத்து போலனா தோணுது... நானும் வெறும் ஆர்வத்தால் 'தமிழ் எழுதின குறை' இருந்தால் பின்னூட்டத்தில் போடறேனே தவிர, பெரிசா தமிழ் தெரியும்னு சொல்றதுக்காக இல்லை. இதுவும் ஜாலியாத்தானே எடுத்துக்குவாங்கன்னு நான் நினைச்சுப்பேன்.//

   அச்சச்சோ கீழே போய் மொபைலில் கொமெண்ட் பார்த்துவிட்டுப் பதறி அடிச்சு மீண்டும் ஓடிவந்து மேலேதான் ஹா ஹா ஹா இப்பதில் போடுகிறேன்..

   என்ன இப்பூடிச் சொல்லிட்டீங்க நெ தமிழன்.. என் வைரவர்மேல் சத்தியமாக அப்படி நினைச்சோ அல்லது உள்குத்தாகவோ எழுதவில்லை நான்.. அப்படி எனில் நேரேயே சொல்லிவிடும் ரைப் நான்[ஹையோ அது டைப்:) ஹா ஹா ஹா]..

   இதில் நான் சொன்னது, சிலரின் எழுத்துக்களில்.. சொல்வார்கள்-போஸ்களில் பார்த்ததுண்டு- தமிழ்ப்பற்றாலதான் எழுத வந்தேன், தமிழை வளர்க்கவே எழுதுகிறேன் இப்படி எல்லாம்.. அதைப் பார்த்து மனதில் சிரிப்பதுண்டு.. அதைத்தான் சொன்னேன்...

   மற்றும்படி நீங்கள் அடியோ அடியென அடிப்பதும், பின்னணிப்பாடகராக அஞ்சு வந்தும் அடிப்பதும் நான் வாயடிச்சு வெற்றி பெறுவதும்[ஒரு பேச்சுக்கு சொன்னா விட்டிடோணும்] தானே இங்கு மகிழ்ச்சி... இல்லை எனில் உங்கள் கொமெண்ட்ஸ் வராதுவிட்டால் ஏன் தேடுகிறோம் எங்கே போயிட்டார்.. ஆளைக் காணோமே என..

   அதனால உப்பூடி எடுத்தொம் கவிழ்த்தோம் என கண்டதையும் நினைச்சு எழுதி நம்மையும் கலக்கடிப்படுத்தக்கூடாது ஜொள்ளிட்டேன் ஹையோ ஹையோ..

   இன்னொன்று ஆராவது வேணுமென்று நோகடிப்பதுபோல பேசினால்கூட நான் அதையும் பொஸிடிவ்வாகவே எடுக்கும் பேர்வழி.. தப்பாக எடுத்து வாழ்க்கையில் எதை சாதிக்கப் போகிறோம்.. இப்போ பாருங்கோ கொரொனா மிரட்டுது:))

   Delete
  7. ஹ்ஹஹ்ஹா சந்தேகமே வேணாம் அது உள்குட்டே :))))))))))))))))))))))

   (அப்பா இப்போதான் மனசுக்கு நிம்மதி :) ))

   Delete
  8. ///2012 இடுகைகளில் பின்னூட்டம் இட்டவர்களில் 90% இப்போ எங்க இருக்காங்க, ஏன் இடுகைகளைப் படிக்கறது இல்லை என்றே ப//

   இதற்கான பதில் தெரியுமே :) ஆனா சொல்ல மாட்டோம் மாஓட்டோம் மாட்டோம் :)))))))))))))))))))))))))

   Delete
  9. // Angel Thursday, March 19, 2020 10:10:00 am
   ஹ்ஹஹ்ஹா சந்தேகமே வேணாம் அது உள்குட்டே :)))))))))))))))))))))) //


   பிறர் மனத்தில் உள்ளதை, நன்கு ஆராய்ந்து, உள்ளது உள்ளபடி, உண்மையாகச் சொல்லும், தனித்திறமைகள் வாய்ந்த கோல்ட்ஃபிஷ் அவர்களுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள்.

   //(அப்பா ...... இப்போதான் மனசுக்கு நிம்மதி :) )) //

   எனக்கும்தான் :)))))) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

   Delete
  10. /தமிழ்ப்பற்றாலதான் எழுத வந்தேன், தமிழை வளர்க்கவே எழுதுகிறேன் இப்படி எல்லாம்..// - இதுக்கு வாலி அங்கிள் தெளிவாச் சொல்லியிருக்கார் அவர் பேட்டில. நாங்க (சினிமாப் பாடகர்கள், பேச்சாளிகள்) தமிழை வளர்க்கிறோம் என்று சொல்றதுலாம் சுத்த ஹம்பக். தமிழால நாங்க பிழைக்கிறோம், நாங்க வளத்துத்தான் தமிழ் வளரணும்னு இல்லை, அதை வச்சு நாங்க சாப்பிடறோம் என்று சொல்வார்.

   இணையத்துல இடுகைகள் படிக்கறதுல (1) மத்தவங்க ரசனையா அவங்க அனுபவங்களை எழுதினா படித்துத் தெரிந்துகொள்ளலாம், ரசிக்கலாம் (2) தமிழ் ஆர்வத்துல நிறைய இலக்கிய இடுகைகள் நல்லா இருக்கும் படிக்க. அதை ரசிப்பவர்களுக்கு மட்டும் (3). கொஞ்சம் பொழுதுபோக்கு, இணைய நட்பு. அதிலும் பெரும்பாலான நட்புகள், நம்ம உறவினர்கள் போல என்ற எண்ணம் தோன்றிடும்-தொடர்ந்து இணையத்துல அவங்களோடு interact செய்வதால். இன்னைக்கு இணைய வட்டத்துல நான் பின்னூட்டமிடுற யாரைப் பார்த்தாலும், அப்போதான் அவங்களைப் பார்ப்பதுபோல இருக்காது..தொடர்ந்த நட்பு மாதிரி பேச ஆரம்பித்துவிடுவோம். இது அனைவருக்கும் பொருந்தும்னு நினைக்கிறேன். அவ்ளோதான். யாராவது அக்கப்போர் சண்டையை ஆரம்பித்தால், அவங்க தளம் பக்கமே தலை வைத்துப் படுக்கமாட்டேன். யாராவது வேலியில் போகும் ஓணானை வேட்டியில் விட்டுக்கொள்வார்களா?

   Delete
  11. /ஆனா சொல்ல மாட்டோம் மாஓட்டோம் மாட்டோம் :))))))// - சீரியஸா நான் நினைத்தது. உதாரணமா, நிரூபன், ராஜீவன், ஸாதிகா, இளமதி, சமீப காலமா சீராளன்.......

   Delete
  12. // இதற்கான பதில் தெரியுமே :) ஆனா சொல்ல மாட்டோம் மாஓட்டோம் மாட்டோம் :))))))))))))))))))))))))) //

   மூன்றாம் பிறை சந்திரனான ’இளைய நிலா’வைக் காண்பது அரிது. அதுபோல 2012 போன்ற அந்தக் காலக் கட்டத்தில், மிகப்பொறுமையாக பதிவுகளை ஊன்றிப்படித்து, அன்புடனும், அழகழகாகவும், அறிவு பூர்வமாகவும், பின்னூட்டமிட்டவர்களை இன்று காண்பதும் மிகவும் அரிதாகிவிட்டது. :((((((

   அவரவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம். இங்கு வந்து கும்மியடித்து கோலாட்டம் போடவா முடியும்?

   Delete
  13. //AngelThursday, March 19, 2020 10:10:00 am
   ஹ்ஹஹ்ஹா சந்தேகமே வேணாம் அது உள்குட்டே :))))))))))))))))))))))

   (அப்பா இப்போதான் மனசுக்கு நிம்மதி :) ))///

   [im] https://media0.giphy.com/media/lojil9HflxEjOq4gBz/giphy.gif [/im]

   Delete
  14. //வை.கோபாலகிருஷ்ணன்

   பிறர் மனத்தில் உள்ளதை, நன்கு ஆராய்ந்து, உள்ளது உள்ளபடி, உண்மையாகச் சொல்லும், தனித்திறமைகள் வாய்ந்த கோல்ட்ஃபிஷ் அவர்களுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள்.//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கோபு அண்ணன், கொரொனாவையும் பார்க்காமல் ரிக்கெட் போட்டு வந்து உச்சிப்பிள்ளையார் கேணியில் இறங்கப் பண்ணினால்தான் இப்பொ நேக்கு நிம்மதி:))..

   கொமெண்ட் பார்த்ததும், 100 மைல் வேகத்தில ஓடி வந்து, நெல்லைத்தமிழனையும் அஞ்சுவையும் மூண்டு நல்ல வார்த்தை சொல்லித் திட்டுவீங்களென எதிர்பார்த்தால்:)).. இது 200 மைல் வேகத்தில ஓடிவந்து, அதிராவுக்கு ஆப்பு வைச்சிட்டீங்களே:)) இது நீதியோ நிஜாயமோ?:)).. பூமிதான் தாங்குமோ?:))

   உங்களுக்குக் குண்டா கான்சல்ட் கர்ர்ர்ர்ர்:))..
   ஹா ஹா ஹா:))

   Delete
  15. @நெதமிழன்//
   //தமிழால நாங்க பிழைக்கிறோம், நாங்க வளத்துத்தான் தமிழ் வளரணும்னு இல்லை, அதை வச்சு நாங்க சாப்பிடறோம் என்று சொல்வார்.////

   ஓ .. அப்படியோ எனக்கும் இதை எங்கோ பார்த்தது கேட்டது மாதிரி இருக்குது, நானும் அவரின் இண்டவியூக்கள் பார்த்திருக்கிறேன்.. அது உண்மைதானே... இப்போ யூ ரியூப்பில் பணம் சம்பாதிப்போர் சிலரும் என்ன சொல்லுகினம் எனில்.. “எனக்குத் தெரிஞ்சதை உங்களுக்குச் சொல்லித்தரோணும் எனும் ஒரே நோக்கத்துக்காகவே இந்த வீடியோ”.. என்கின்றனர் ஹையோ ஹையோ..

   //இணையத்துல இடுகைகள் படிக்கறதுல//
   உண்மைதான் நமக்கு நமக்கென ஒவ்வொரு இன்றஸ்ட் இருக்கும்.. அதற்கேற்ப தேடிப் படிப்போம், பார்ப்போம்..

   //யாராவது அக்கப்போர் சண்டையை ஆரம்பித்தால், அவங்க தளம் பக்கமே தலை வைத்துப் படுக்கமாட்டேன். யாராவது வேலியில் போகும் ஓணானை வேட்டியில் விட்டுக்கொள்வார்களா?///

   இதனாலதான் நான் தெரியாதோர் மற்றும் என் பக்கம் வராதோர் பக்கம் போவதில்லை நமக்கெதுக்கு ஊர் வம்பு என:)).. ஆனா எனக்கு தெரிஞ்சவர்கள்+ பழகியோர் பக்கம் சண்டை எனில்,, விட மாட்டனே:)).. ஜாலியாகப் போடும் சண்டையை சிலர் சீரியசாக எடுத்து விடுவார்கள் எனவும் பயம் அதனால ஆழம் அறியாமல் காலை விடுவது குறைவு நான்:)) ஹா ஹா ஹா

   Delete
 20. ’அதிராவின் வளர்ப்பு வெந்தயக்கீரை’ என்பதைத்தான் நம்ப முடியவில்லை.

  ’ஆத்தா கோழி வளர்த்துச்சு, ஆடு வளர்த்திச்சு, பூனை வளர்த்துச்சு’ன்னு கமல் ஒரு வசனம் பேசுவாரு .... 16 வயதினிலே என்ற படத்தில்.

  இந்த ஆத்தா தானே வெந்தயக்கீரை வளர்த்திச்சோ, அல்லது வெந்தயக்கீரை வளர்த்துள்ள யார் வீட்டிலாவது போய் படமெடுத்து, களவாடிட்டு வந்திச்சோ. நமக்கெதற்கு ஊர் வம்ப்ஸ். :)

  ReplyDelete
  Replies
  1. //16 வயதினிலே//
   யேச்ச்ச் யேச்ச்ச்ச் அதிராவின் வயசுதான்.. அதிராவின் வயசுதான்:))

   //அல்லது வெந்தயக்கீரை வளர்த்துள்ள யார் வீட்டிலாவது போய் படமெடுத்து, களவாடிட்டு வந்திச்சோ//
   நல்லவேளை நான் உச்சிப்பிள்ளையார் வீதியில இல்லையாக்கும்:)) இலை எனில், தன் வீட்டில வந்து படமெடுத்துப் போய்ப் போட்டிருக்கிறேன் எனச் சொன்னாலும் சொல்லிடுவார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா மீக்கும் ஊர் வம்பு பிடிக்காதாக்கும்:))

   Delete
  2. ///அப்போ டெய்லி கும்மி... கோலாட்டம் நடந்த காலம்:))//

   300 -400 கமெண்ட்ஸ் வரைக்கும் அடிப்போம் இல்லையா 
   அதுவும் ஒரே நேரம் எல்லாரும் போஸ்ட் போட்டு ஆளாளுக்கு அங்கிங்கென ஓடுவோம் 


   Delete
  3. உண்மைதான் அஞ்சு. எதுவும் நிலையில்லை, மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது உண்மைதானே..

   Delete
 21. ஊசிக்குறிப்பில் உள்ள அனைத்து எனக்கு உள்ளதே என நினைத்து நான் பயந்தேபூட்டேன்.

  பிறகுதான் ஓசித்தேன். எனக்கும் கல்யாணம் ஆகி 47 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்பது நினைவுக்கு வந்தது. சற்றே ஆறுதல் அடைந்தேன். ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா :)))))

  நொந்து போயிருந்த மனதுக்கு மிகவும் ஆறுதல் அளித்த அதிரா வுக்கு என் நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. //ஊசிக்குறிப்பில் உள்ள அனைத்து எனக்கு உள்ளதே என நினைத்து நான் பயந்தேபூட்டேன்//
   ஹா ஹா ஹா அப்போ அது கொரனா இல்லையாக்கும்:))

   //பிறகுதான் ஓசித்தேன்.//
   ஆஆஅ கோபு அண்ணனும் ஓசிக்கப் பழகிட்டார் ஓசியில ஹா ஹா ஹா...

   //நொந்து போயிருந்த மனதுக்கு மிகவும் ஆறுதல் அளித்த அதிரா வுக்கு என் நன்றிகள்//
   ஹா ஹா ஹா இதுக்கெல்லாம் நொந்திடாமல் ஸ்ரெடியா இருக்கோணும் கோபு அண்ணன்:))..

   மிக்க நன்றிகள்.

   Delete
 22. ரொட்டி சுவை.
  அம்பரெல்லா மாங்காய் போல குழம்பு,சம்பல் சமைக்கலாம். எனது முன்னைய பகிர்வில் பகிர்ந்துள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மாதேவி வாங்கோ.. இம்முறை, ரெயினின் முதல் பெட்டியிலேயே வந்து ஏறிவிட்டீங்கள்..:)..

   //எனது முன்னைய பகிர்வில் பகிர்ந்துள்ளேன்.//
   ஓ பார்க்கிறேன், ஏன் நீங்கள் இப்போ போஸ்ட் எழுதுவதில்லை.. எழுதலாமே..
   மிக்க நன்றி..

   Delete
 23. வெந்தயக் கீரை அதுவும் தர்பூசணியில் - நன்று.

  ரொட்டி - இங்கே இப்படிச் சேர்த்து செய்வதை பராந்தா என்று சொல்வார்கள். நிறைய வகைகள் அதில் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வெங்கட் வாங்கோ..

   ஓ பராந்தா எனில் ஹிந்தியில் ரொட்டியோ.... ரொட்டியில் பல வகை உண்டுதான்.. மிக்க நன்றி.

   Delete
 24. // குட்டிக் கை ஒன்று அதனைத் தொடுவது தெரியுதோ?:)),,//
  ஹாஹா பட்டு குட்டிக்கைக்கு ஒரு உம்மா :)))அடு மட்டுமே முதலில் தெரிஞ்சதால் முதல் கமெண்ட் குட்டிக்கைக்கே 

  ReplyDelete
  Replies
  1. ஆஆ வாங்கோ அஞ்சு வாங்கோ.. நேற்றே உங்களைக் கட்டிப் பிடிச்சு வரவேற்றுவிட்டமையால:)).. இன்று காண்ட் ஷேக் மட்டும்:)).. என்ன அழகா கை வருது பாருங்கோ.. ஹா ஹா ஹா..

   Delete
 25. தெய்வமே நான் :) அவோகேடோ தோலை ஸீட் POT ஆகிருக்கேன் ஆரஞ்சு தோலை ஆக்கியிருக்கேன் ஆனா தர்ப்பூசணியை ஆக்கினதில்லை :) செம ஐடியா எதுக்கும் பேடண்ட் வாங்கிடுங்க நிறைய மக்கள் சுட சான்ஸ் உண்டு 

  ReplyDelete
  Replies
  1. லிங்கில் பார்த்தேன் அஞ்சு, அப்போ நான் இங்கிருக்கவில்லை.

   அவை சின்ன சின்ன பொட், இது பெரிதாக இருந்தமையால, வந்தால் வரட்டும் போனால் போகட்டும் என ஆரம்பிச்சேன் வெற்றி..:))

   //செம ஐடியா எதுக்கும் பேடண்ட் வாங்கிடுங்க நிறைய மக்கள் சுட சான்ஸ் உண்டு //
   ஹா ஹா ஹா நன்றி அஞ்சு..

   Delete
 26. அந்த ஊசி இணைப்பை நான் கன்னா பின்னாவென ஆதரிக்கிறேன் :) நிறையபேரை தூக்கிப்போட்டிட்டு வந்திருக்கேன் :) இன்க்ளூடிங் ------   ஹாஹாஆ .
  தன்மானம் முக்கியம் இல்லையா அதுவும் எனக்கு கொஞ்சம் அதிகம்  

  ReplyDelete
  Replies
  1. நானும் அப்படி நினைப்பேன். இருந்தாலும், மத்தவங்க நம்மை அவமானப்படுத்தும்போது, நம் பாவங்களை அவங்க இலவசமா நம்மிடமிருந்து எடுத்துக்கறாங்க என்றுதான் அர்த்தம். மத்தவங்க நம் மீது தவறில்லாதபோது திட்டினாலும் அதுதான் கதி. அதுவும் நாம அப்பாவி என்பதால் அவங்க அட்வாண்டேஜ் எடுத்துக்கிட்டு அவமானப்படுத்தினால், நம் மனதில் வரும் கண்ணீர் அவங்களோட எதிர்காலத்தை அழிக்கும் வல்லமை பெற்றது. இதை நம்புங்க.

   Delete
  2. அப்படியே ஏற்கிறேன் நெல்லைத்தமிழன் ..நான் சுலபத்தில் offend ஆகமாட்டேன் ஆனா செய்யாத தப்புக்கு திட்டினா அவ்ளோதான் அழுகை வந்துடும் ..
   நீங்க சொன்னபடி நடக்கிறேன் இனி .

   Delete
  3. //இருந்தாலும், மத்தவங்க நம்மை அவமானப்படுத்தும்போது, //

   இதுக்கு ஒரு பொன்மொழி வைட்த்ஹிருக்கிறேன், அடுத்த போஸ்ட்டில் இணைக்கிறேன் பாருங்கோ..

   Delete
 27. பிஞ்சு :)பட்டத்தை மாத்தலையா :) வில்லேஜ் விஞ்ஞானி அதிரா என்ற பெயர் பொருத்தமா இருக்கு அந்த தர்பூஸ் தொட்டி ஐடியாக்கு :)எங்க ஊரில் இப்படி குட்டி காட்டாதான் வெந்தய கீரை கிடைக்கும் இங்கே தான் முருங்கை இலை செடி அளவுக்கு விக்கிறாங்க அதுவும் கசப்பு வேறே .நான் வீட்டில் இந்த அளவுதான் வளர்த்து எடுப்பேன் .உருளைக்கிழங்குடன் கூட்டா செய்யுங்க சூப்பர் சுவை 

  ReplyDelete
  Replies
  1. அது எப்படிப் பார்த்தாலும் ஒரு கைப்பிடி அளவுதான் அஞ்சு வருது, பெரிய சாடியில் வளர்த்தால்தான் ஒரு கறிக்குக் கிடைக்கும் என நினைக்கிறேன், வீட்டில் வளர்ப்பது நல்ல பிஞ்சக சொஃப்ட்டாக இருக்குது, வாங்குவது கொஞ்சம் கார்ட்டா இருக்கும்...

   Delete
 28. https://kaagidhapookal.blogspot.com/2013/07/blog-post.html

  எல்லாம் ஒரு விளம்பரம்தேன் :))

  ReplyDelete
  Replies
  1. போய்ப் படிச்சுப் பார்த்தேன், நான் எப்படி மிஸ் பண்ணினேன் அப்போ அதை எனத் தெரியவில்லையே..

   Delete
 29. பிறகு வருவேன் மற்றவற்றை படித்து கலாய்க்க 

  ReplyDelete
  Replies
  1. நேரமுள்ளபோதெல்லாம் வந்து படிங்கோ.. ரெயின் இங்குதான் நிற்கும்:))

   Delete
 30. பாடல் கேட்டு இருக்கிறேன்.

  கினோவா ரொட்டியை தெரிந்து கோண்டேன்.
  செய்முறை விளக்கம், படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

   மிக்க நன்றி.

   Delete
 31. வெந்தயக்கீரையை தர்பூசணி தொட்டியில் அழகாய் வளர்த்து இருக்கிறீர்கள் அதிரா.
  கல் அரிப்பு சட்டி, மரக்கரண்டி , பனங்கிழங்கு எல்லாம் அழகு.

  ReplyDelete
  Replies
  1. ரசிப்ப்புக்களுக்கு மிக்க நன்றி கோமதி அக்கா.

   Delete
 32. //“அம்பிறல்லங்காய்” என்போம், மாங்காய்போலவே கொஞ்சம் இனிப்பாக இருக்கும்.. //

  மாங்கா போல் இனிப்பா? மாங்காய் போலவே இருக்கே! அம்பிறல்லங்காய் கேள்வி பட்டது இல்லை.

  ReplyDelete
  Replies
  1. அங்கு வேறு பெயரில் இருக்கும் என நினைக்க்கிறேன், கிட்டத்தட்ட மாங்காய்போலத்தான் ஆனால் இதன் விதையில் தும்பு தும்புபோல இருக்கும்... சதைக்குள் போயிருக்கும்,

   Delete
 33. ஊசிகுறிப்பு, ஊசி இணைப்பு எல்லாம் சொல்வது சரிதான்.

  மகன் ஊரிலும் பொருட்கள் எல்லாம் கிடைக்க மாட்டேன் என்கிறது. வந்தாலும் விற்றுப் போய்விடுகிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல்
  சிலர் வாங்கி குமிக்கிறார்கள்.

  பால் இரண்டு மூன்று கடை அழைந்து வாங்கி வைத்து இருக்கிறார்கள். அதை எவ்வளவு நாள் வைத்துக் கொள்ள முடியும் அதையும் இப்படி நிறைய எடுத்து போவது மனதுக்கு கஷ்டமாய் இருக்கிறது. மருந்துகளும் அப்படித்தான் நிறைய வாங்கி வைத்துக் கொள்கிறார்கள்.

  நிலமை சீர் ஆக வேண்டும். கொரனாவிற்கு மூலிகை மருத்து கண்டு பிடித்து இருக்கிறார்களாம்.

  மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும் தினம்.

  ReplyDelete
  Replies
  1. பயமாக இருக்கு கோமதி அக்கா, வெளியே ஆரும் போகக்கூடாது என சட்டம் போட்டால் என்ன பண்ணுவது எனும் பயம்தான்.

   நான் பால்ப்பவுடர் தான் விதம் விதமாக வாங்கி வைத்திருக்கிறேன், விவா, ஹோர்லிக்ஸ், நெஸ்டமோல்ட், நிடோ இபடி, அது வழமையாக வாங்குவதுதான்.

   அதைவிட இங்கு லோங் லைஃப் மில்க் எனவும் கிடைக்குது, அது பால்தான், ஓபின் பண்ணாமல் வருடக்கணக்காக வைத்திருக்கலாம், வெளியே, ஃபிரிஜ்ஜில் அல்ல.

   செப்டெம்பர் ஆகும் நிலைமை சீராக என்கின்றனர்...

   Delete
 34. மேடம் தமிழில் எப்படி சொல்றாங்கன்னு தெரில இது சீமைத்தினை வகை இங்கிலீஷில் quinoa வை KEEN-wah  அதாவது கீன் வா என்று சொல்வாங்க .இது எல்லாம் ஒவ்வாமை தரும் என்பதை கொழுக்கட்டை செஞ்சபிறகே அறிஞ்சேன் அதிலிருந்து தொடறதில்லை :) ஆசைதான் ஆனா ஒத்துக்கலை முந்தி சூப்பில் கூட சேர்த்தேன் .
  அந்த ரொட்டியை நெல்லைத்தமிழனுக்கே கொடுத்திடுங்க ப்ளீச் 

  ReplyDelete
  Replies
  1. இல்ல அஞ்சு ஆங்கிலத்திலும் கின் -ஒவா எனத்தான், சேர்த்துச் சொல்கின்றனர்.

   சிலதில் அலர்ஜி இருக்குது.. எனக்கு குரக்கன்[ராகி] சாப்பிட்டால் மூக்கு கரை எல்லாம் கடிக்கும், கண் கடிக்கும், ஆனா இது குளூட்டன் ஃபிறீயாக கிடைக்குது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றில் அலர்ஜி..

   Delete
 35. மேடம் தமிழில் எப்படி சொல்றாங்கன்னு தெரில இது சீமைத்தினை வகை இங்கிலீஷில் quinoa வை KEEN-wah  அதாவது கீன் வா என்று சொல்வாங்க .இது எல்லாம் ஒவ்வாமை தரும் என்பதை கொழுக்கட்டை செஞ்சபிறகே அறிஞ்சேன் அதிலிருந்து தொடறதில்லை :) ஆசைதான் ஆனா ஒத்துக்கலை முந்தி சூப்பில் கூட சேர்த்தேன் .
  அந்த ரொட்டியை நெல்லைத்தமிழனுக்கே கொடுத்திடுங்க ப்ளீச் 

  ReplyDelete
  Replies
  1. ஏஞ்சலின்... அதிரா எழுதியிருக்கறதே எனக்கு நல்லாப் புரியுது. நீங்க சீன் வா, கீன் வா என்றெல்லாம் எழுதறது சுத்தமாப் புரியலை.

   Delete
  2. //நெல்லைத் தமிழன்Thursday, March 19, 2020 3:54:00 am
   ஏஞ்சலின்... அதிரா எழுதியிருக்கறதே எனக்கு நல்லாப் புரியுது. நீங்க சீன் வா, கீன் வா என்றெல்லாம் எழுதறது சுத்தமாப் புரியலை.//

   ஆஆஆஆஆஆ வெற்றி வெற்றி:)) ஹா ஹா ஹா அதிராவின் தமிழ்தான் யுத்தமான சே சே சுத்தமான டமில் ஆக்கும்:)).. அஞ்சுவுக்கு டமில்ல டி இல்லை:))

   Delete
 36. அந்த படம் அலை பாயுதே :)சத்தியமா கூகிள் பண்ணிதான் கண்டுபுடிச்சேன் :)))))))

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கரீட்டு.. உண்மையைச் சொன்னதால உங்களுக்கு கால்வாசி ரொட்டீஈஈஈஈ:))

   Delete
 37. ஸ்பெஷல் இணைப்பில் சொன்னது அத்தனையும் இங்கேயும் நடக்குது .நேத்து அரிசி மூட்டையா இருக்கும் இடமே காலி ஆசியர் கடையில் அதோட மாவும் இல்லை .எனக்கு கோபமே எனக்கு பிடிச்ச நேந்திரம் சிப்ஸையும் எம்ப்டி ஆக்கிட்டாங்க கர்ர்ர் இன்னிக்கு நியூஸில் சொல்றாங்க ஒவ்வொரு பொருளும் 3 க்கு மேல் எடுக்க கூடாதுன்னு 

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா மக்கள் பனிக் ஆகிட்டங்க:)).. அனைத்துக்கும் நன்றி அஞ்சு.

   Delete
 38. மிக அருமையான பதிவு. அரிக்கன் சட்டி
  பித்தளையில் இருக்கும். இது நவீனமாக இருக்கிறது.
  அம்பரல்லங்காய் புதிது.

  உங்கள் வாட்டர்மெலன் தொட்டி ஐடியா சூப்பர்.
  வெந்தயக் கீரை காணவே குளிர்ச்சியாக இருக்கிறது.
  கினோவா நல்ல தானியம். அதுவும் க்ளூட்டன் ஃப்ரி என்றால்
  கேட்க வேண்டுமா.

  இங்கும் பல கடைகளில் அரிசி கூட இல்லை.
  மகள் முன் கூட்டியே வாங்கி வைத்ததிலும், வேறு
  சாப்பாடு எடுத்துக் கொள்வதாலும் கொஞ்சம் நிம்மதி.

  ஊசிக்குறிப்பு பலே ஜோர்.
  பெயரை மாற்றவில்லையே. எல்லோரும் பாராட்டும் அதிரா
  என்ற பட்டத்தை இதோ உமக்கு வழங்கினோம்.
  நலமுடன் இருங்கள்..

  ReplyDelete
  Replies
  1. //பல கடைகளில் அரிசி கூட இல்லை.// ரொம்ப இர்ரெஸ்பான்சிபிள் சிடிசன்ஸ். எதைத்தான் வாங்கிக் குவிப்பது என்பதற்கு அளவில்லையா? அந்த ஊர் அரசுகளெல்லாம் மக்களை அப்படிக் கைவிட்டுடுமா? ஒன்றுமே கிடைக்கலைனா, கோதுமை மாவு, ஆல் பர்பஸ் மாவுலாம் கிடைக்காமல் போயிடுமா? என்ன அநியாயம்?

   பஹ்ரைனில், நான் சென்ற வருடத்திலிருந்து திரும்பிய வருடம் வரை (22 வருஷம்) கோதுமை மாவு ஒரே விலை - கிலோ 8 ரூபாய்-நம் ரூபாய்க்கு. அதையும் மைதாவையும் வைத்துச் செய்யும் (களிமண் அடுப்பில் சுடும்) ரொட்டி - கிட்டத்தட்ட ஒரு அடி விட்டம், 1/2 செண்டிமீட்டர் தடிமன் - 5 ரொட்டி 18 ரூபாய். இது அரசு சலுகை விலையில் அனைவருக்கும் கிடைக்கும்படிச் செய்திருக்கிறது. பஞ்ச காலம், பிரச்சனை காலம் என்று எதுவும் இதனை அஃபெக்ட் செய்ததில்லை. (நம்ம ஊரைப் பற்றிச் சொல்ல எதுவுமில்லை)

   Delete
  2. வாங்கோ வல்லிம்மா..வாங்கோ..

   //அரிக்கன் சட்டி
   பித்தளையில் இருக்கும். இது நவீனமாக இருக்கிறது.//
   ஓ இது கல்வெள்ளி வல்லிம்மா, மண்ணிலும் உண்டு, எனக்கு அதுதான் விருப்பம், ஆனா பார்சலில் அனுப்ப முடியாதே..

   நாடுகள் வெளிநாட்டு வருகையில்லாமல் போடர்களை மூடினாலும், கார்கோ மூடப்படாது என்கின்றனர், அதனால பொருட்கள் வரும் என்கின்றனர், இருப்பினும் தற்பாதுகாப்புக்காக கொஞ்சம் வாங்கி வைத்திருந்தால் நிம்மதிதானே.. பெற்றோல் நிலைமையும் என்னாகுமோ தெரியவில்லை, பின்பு பெற்றோல் இல்லை எனில் கடைக்கு எப்படிப் போக முடியும் .. இப்பூடி எல்லாம் யோசிக்கப் பயம் வருதே:)..

   //பெயரை மாற்றவில்லையே. எல்லோரும் பாராட்டும் அதிரா
   என்ற பட்டத்தை இதோ உமக்கு வழங்கினோம்.//
   ஹா ஹா ஹா நன்றி வல்லிம்மா.. பெயர் மாற்றவில்லை, அவசரத்தில் மாற்ற மறந்து போஸ்ட் போட்டுவிட்டேன், சரி இருக்கட்டுமே என விட்டேன் அடுத்ததுக்கு மாற்றுவேன்..

   நன்றி வல்லிம்மா.

   Delete
  3. அது நெல்லைத்தமிழன், பிரச்சனை என்னவெனில், இப்போ வந்திருப்பது தொற்று என்பதால, நமக்கு வந்திட்டால், அது நோர்மல் என்றாலும், வெளியேயும் போக முடியாது, ஆரும் உள்ளேயும் வர மாட்டினம், அப்போ வீட்டில் பொருள் இருந்தால்தானே எதாவது பண்ண முடியும்..

   இங்கு கடைகளில், ரொயிலட், கிச்சின், மற்றும் கை துடைக்கும் ரிஷூ வகைகள், மருந்துப்பொருட்கள், சோப் வகைகள், கோதுமை மா வகைகள், பதப்படுத்தப்பட்ட பால் வகைகள், அரிசி, சிக்கின் ஏரியாவே வெறிச்சுப்போய்க் கிடக்குது, மற்றும் ரின் உணவுகளையும் சனம் அள்ளிப்போய் ஸ்ரொக் பண்ணி விட்டனர் ஹையோ ஹையோ மற்றும் டயப்பர்கள், நப்கின்ஸ்.. இவை எங்குமே இப்போ கிடைக்குதில்லை..

   இல்லை என்றால் இலைத்தானே, அரசாங்கம் ஆருக்கென உதவ முடியும்.

   ஆனால், இங்கு வீட்டுக்காக கடன் கட்டிக்கொண்டிருப்போருக்கு[மோட்கேச்].. 3 மாதங்கள் கட்டத்தேவையில்லை, பின்னர் கட்டலாம் என அறிவித்திருக்கு அரசாங்கம், ஏனெனில் பலருக்கு சம்பளம் இல்லாமல் போகுதெல்லோ.. ரெஸ்ரோரண்ட், கடைகள் இப்படியானவை எல்லாம் மூடுப்படும்போது...

   ஆனா இங்கு விலை ஏற்றம் மட்டும் வரவில்லை, வழமையான விலைகளிலேயே அனைத்தும் விற்குது..

   Delete
 39. பழத்தோலில் வெந்தயம் வளர்த்தது அருமை. இப்படி முட்டை ஓட்டினுள்ளும் வளர்த்ததை வீடியோவில் பார்த்தேன். இதெல்லாம் எனக்கு சரிவராது. இப்ப கறிலீவ்ஸ் பாதுகாக்கவே கஷ்டமாயிருக்கு. வெயில் வந்ததால் தப்பித்தது. இம்முறை வெந்தய‌கீரை வைக்கவேண்டும். இந்த கொரோனா கலவரம் என்ன,ஏது நடக்குமோ தெரியல. முடிவுக்கு வரத்தான் எதுவும் செய்ய‌லாம். இப்ப மனம் ஒன்றிலும் ஈடுபடுதில்லை.. வெ. கீரையில் கூட்டு.ரொட்டி, தோசை செய்தாச்சு. கசப்பு இருக்காது அதிரா. நல்லாயிருக்கும்.

  இங்கும் நீங்க சொன்ன அதே நிலமைதான். tissue சுப்பர்மார்க்கெட் ஒன்றிலுமே இல்லை. வாழைப்பழம், சொக்லேட் இருந்தது. இனி அதுவும் இருக்காது. இப்ப ஒருஆள் ஒரு tissue தான் எடுக்கலாம் என லிமிட் ஆக்கினம்.. நாளை போகனும். பொருட்கள் இருக்குமோ,இல்லையோ தெரியாது.. வரவர நிலமை மோசமாகுது. இங்கு சில வேளை ஊரடங்கு சட்டம் வந்தாலும் வரலாம். சனம் சொல்வழி கேட்கினமில்லை. ஊரோடு..இல்லையில்லை உலகத்தோடு ஓத்தது என்றபடியால்.. ஒவ்வொருத்தரும் நலம் விசாரிக்கினம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்முலு வாங்கோ..

   ஓமோம் முட்டை ஓடு, ஆரோ சைனீஸ் வளர்த்துக் காட்டினார்கள் ஆனா அதில வளர்த்தால் அது அழகுக்கெல்லோ, சமைக்க்கும் அளவு கிடைக்காதே..

   குளிர் கொஞ்சம் குறைஞ்சிட்டால் கார்டின் வேலையை ஆவது செய்யலாம், இது வீட்டுக்குள்ளேயே இருப்பது எவ்ளோ கஸ்டம் தெரியுமோ:))..

   எங்களுக்கு நேற்று 2 பெரிய கிச்சின் ரோல்கள் கிடைத்தன, அதுவே பெரிய நிம்மதி, தடிமன் தும்மல் எனில் ரிஷூ இல்லாமல் கஸ்டம்..

   செப்டெம்பர் வரை நீடிக்கும் என சி என் என் நியூஸ் ல சொன்னார்கள்.

   Delete
 40. கினோவா நான் பாவித்ததில்லை. இந்த கலவரம் ஓயட்டும் செய்துபார்ப்போம். கோதுமைமா ரொட்டியில் இப்படி வெ.கீரை,வெங்காயம்,ப.மிளகாய், தேங்காய்பூ,கொத்தமல்லி போட்டு செய்கிறனான். இந்த மா இருக்கோ என பார்க்கோனும்.
  நான் கித்துள்தான் எல்லாத்துக்கும் பாவிக்கிறேன். மோதகம்,கொழுக்கட்டை,பொங்கல் என. நல்லாயிருக்கும்.
  அரிக்கன்சட்டி,அகப்பை எல்லாம் இருக்கு. எனக்கு ஒருக்கா உளுந்தில் கல் வந்தது. அதன் பின் அரித்தே பாவிக்கிறேன். பொதுவா வாறேல்லை. எனக்கு வந்தபின் பயம். அக்கா எதுவாயினும் அரித்தே பாவிப்பா. பனக்கிழங்கு, அம்பிறலங்காய் சாப்பிட்டாச்சு. அம்பிறலங்காய் சும்மா சாப்பிடவே நல்லது. குட்டிகையும் எடுக்க பார்க்கிறா...
  ஊசி இணைப்பு சூப்ப்ப்ப்ப்பர். மிக உண்மை. அனுபவபட்டாச்சு. விலத்தியாச்சு. ஊசி குறிப்பு..ஹா..ஹா.ஹா..பாட்டும் நான் கேட்டிருக்கேன். நல்லபாட்டு. சுஜாதா அக்காலத்தில் ஊரில் கனவுகன்னி நிறையபேருக்கு. எங்க பக்கத்துவீட்டு அக்கா அவாட பிக்பான். அவா மாதிரி முன்முடி கட் பண்ணி இருந்தா.(வளைவா நெற்றியில்)
  உங்க போஸ்ட் ஒன்றை தவறவிட்டிட்டேன். சொறி. என் பேவரிட் அப்பம். இம்முறையில்தான் அம்மா செய்வா. அப்படியே நானும் செய்கிறேன். பால் அப்பம் இங்கு எடுபடாது.அதனால சாதா அப்பமும்,சம்பலும்தான். உங்கள் அப்பம் நல்லாயிருக்கு அதிரா. ப்ளீஸ் மன்னிச்சு இங்கு போட்டதற்கு. 🙅‍♀️ 🙅‍♀️
  எனக்கு இந்தமாதிரி கெஸ் செய்யிறது பிடிக்கும்.டிவியில் பார்க்கிறனான். அஞ்சு சொன்னது சரி. அவாவுக்கே கித்துளை கொடுங்கோ. நானும் அதையே நினைத்தேன். எழுதபிந்திவிட்டது. கை,கால் நல்லா கழுவிட்டுதான் உங்கபக்கம் வந்தனான்.

  ReplyDelete
  Replies
  1. கினோவா நல்லாயிருக்கும் அம்முலு, ஆனால் அரிசிதான் எங்கும் கிடைக்குது, ரவ்வை போல இருக்கும், மா கிடைக்கவில்லை எங்கும், இது ஹொலண்ட் அண்ட் பரட்ஸ் ல மட்டும் கிடைக்குது.

   ஓ நீங்கள் கித்துள்தான் பாவிக்கிறனீங்களோ.. எனக்கு அதைவிட சக்கரைதான் பிடிக்கும்.. தேத்தண்ணிக்கும்..

   //அரிக்கன்சட்டி,அகப்பை எல்லாம் இருக்கு//
   ஓ அப்படியோ..

   தமிழ்க்கடைப் பொருட்களில் மட்டும் கல், மண் வரப்பார்க்குது, அதனாலேயே இதை அனுப்பச் சொல்லிக் கேட்டு வாங்கினேன்.

   ///ஊசி இணைப்பு சூப்ப்ப்ப்ப்பர். மிக உண்மை. அனுபவபட்டாச்சு. விலத்தியாச்சு.//

   ஆஆஆஆஆஆஆ எங்கு ஆருடன் எப்போது? உங்கள் விபரம் போதாது?[ஹா ஹா ஹா ஜி எம் பி ஐயா இபடித்தான் கேட்டார் ஸ்ரீராமை:)] ஹா ஹா ஹா..

   //உங்க போஸ்ட் ஒன்றை தவறவிட்டிட்டேன். சொறி. என் பேவரிட் அப்பம்//

   ஆஆஆஆஆஆஅ பார்த்தனீங்களோ? அது திங்கட்கிழமையில் என்பதனால என்னால பதில் கொடுக்க முடியாமல் போய் விடுது ...:(.

   நான் முதன் முதலில் அப்பம் செய்து இங்கு போட்டது நீங்கள் சொல்லி அனுப்பிய ரெசிப்பி மூலம் தானே.. அதன் பின்னரே தைரியம் வந்து அடிக்கடி செய்கிறேன்.

   //ப்ளீஸ் மன்னிச்சு இங்கு போட்டதற்கு. //சே..சே.. இது என்ன இது.. அப்பம் பற்றிச் சொன்னதே பெரிய விஷய்ம்.. நன்றி..

   ஓ நீங்களும் கண்டு பிடிச்சிட்டீங்க. அப்போ அஞ்சு உங்கட கால்ல பாதி அம்முலுவுக்கு குடுங்கோ.. ஹையோ இது வேற கால்.. நன்றி அம்முலு...

   Delete
 41. வணக்கம் சகோதரி

  அந்த கற்சட்டியும், அகப்பைகளும் அழகாக இருக்கின்றன. பனங்கிழங்கு வேக வைத்து, சுட்டு என அம்மா வீட்டில் இருக்கும் போது சாப்பிட்டுள்ளேன். எனக்கும் ரொம்ப பிடிக்கும். இப்போது வாயு தொந்தரவு தரும் என்பதால் சாப்பிட இயலவில்லை உங்கள் பதிவில் மறுபடி கிழங்கை ஆசை தீர பார்த்தாகி விட்டது. ஹா.ஹா.ஹா.

  ரொட்டி மாவு என்ன தானியமென்று புரிபட வில்லை. எனினும் பார்க்க அழகாக உள்ளது.

  மாங்காய்களை போலிருக்கும் அந்தக் காயைப் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அதன் பெயரும் புது விதமாக, நன்றாக உள்ளது.

  கொரோனா வைரஸ் பயமுறுத்திதான் வருகிறது. பலசரக்கு சாமான்களையும் நம்மை அண்ட விடாமல், ஒருகை பார்க்கிறதோ? ஹா. ஹா. ஹா. இருக்கும் சாமான்களை கிடைக்கும் போது வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். என் மகனுக்கும் அதைத்தான் கூறிக் கொண்டே உள்ளேன். கடவுள் அந்த கிருமிகளை கூடிய விரைவில் அழித்து அனைவரையும் காக்க வேண்டுமென பிரார்த்தித்துக் கொண்டேயுள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. பனங்கிழங்கில் வாய்வு இருக்குதோ? இல்லையே.. அப்படி இருக்காது, அப்படிக் கேள்விப்படவில்லை..

   //ரொட்டி மாவு என்ன தானியமென்று புரிபட வில்லை//
   கூகிள் பார் இல் கினோவா என தமிழில் ரைப்பண்ணி, இமேஜ் பாருங்கோ ... பலவகைப் பதார்த்தங்கள் வந்து குமியும்:)..

   இது அம்பிரலங்காய்.. எல்லோருக்கும் பிடிக்காது, எனக்குப் பிடிக்கும்...


   நீங்களும் கொஞ்சமாவது அத்தியாவசியப் பொருட்கள் வாங்கி வைப்பது நல்லதே...

   மிக்க நன்றிகள் கமலாக்கா.

   Delete
 42. Please Use Page Break option into your post

  தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 15 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

  தற்போது, தங்களது அதிராவின் வளர்ப்பு வெந்தயக்கீரையும் கினோவா ரொட்டியும்[Quinoa Rotty] பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

  உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

  உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

  எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சிகரம் பாரதி வாங்கோ.. சொறி, இப்போ செய்துவிட்டேன். மிக்க நன்றி.

   Delete
 43. இப்போடான் தளம் வர நேரம் கிடைத்தது.

  வாட்டர்மெலன் நான் வாங்கினால் (அந்த சூடான ஊரில்தான் 20 வருடங்களுக்கு மேல் இருந்தேன்) உடனே அந்தத் தோலை டிஸ்போஸ் செய்துவிடுவேன். வெறும்ன வாட்டர்மெலனை கட் செய்து கிச்சனில் வைத்தாலும், கிச்சனுக்கு ஏசி கிடையாது என்பதால், சில மணி நேரத்திலேயே வாட்டர்மெலன் கெட்டுப்போயிடும். கட் பண்ணினதை பிளாஸ்டிக்கில் (உணவு) சுற்றி வைத்தாலும் ஒரு நாள் தாங்காது.

  உங்க ஊரில் கிளைமேட் நல்லா இருக்கும் என்பதால் நீங்கள் அதில் வெந்தயம் வளர்க்க முடிந்தது. பார்க்கவும் நன்றாக இருக்கு. அதிலேயே கொத்தமல்லியையும் வளர்க்கலாம். நல்ல முயற்சி. பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ.. நீங்கள் நேரம் கிடைக்கும்போது வந்து கொமெண்ட்ஸ் போடுவீங்கள் எனத் தெரியும்...

   //வெறும்ன வாட்டர்மெலனை கட் செய்து கிச்சனில் வைத்தாலும், கிச்சனுக்கு ஏசி கிடையாது என்பதால், சில மணி நேரத்திலேயே வாட்டர்மெலன் கெட்டுப்போயிடும்//
   ஓ இங்கு 6,7 நாட்கள் வரை வைத்திருப்போம், பழுதாகாது.. அதற்கு மேல் எனில், தோல் பழுதடையாது ஆனால் வெட்டினால் உள்ளே தண்ணிபோலாகியிருக்கும்.

   ///அதிலேயே கொத்தமல்லியையும் வளர்க்கலாம். நல்ல முயற்சி. பாராட்டுகள்//
   நன்றி நன்றி...

   Delete
 44. நீங்கள் பனங்கட்டி என்று சொல்வதை நாங்கள் பனை வெல்லம் என்போம். எனக்கு பனைவெல்லத்தில் ரொம்பவே கிரேஸ் (வீக்னெஸ் என்றும் சொல்லலாம். பலாச் சுளை, மாங்காய், தேன், பனைவெல்லம், பனங்கல்கண்டு, வெல்லம் - இவற்றை நான் எப்போ பார்த்தாலும் வாங்குவேன். மனைவி சண்டைக்கு வருவார்..இவ்வளவு இருக்கும்போது இன்னும் வாங்குகிறீர்களே என்று, குறிப்பாக பனைவெல்லம், சுக்குவெல்லம் மற்றும் பனங்கல்கண்டு)

  தமிழகத்தில் 'உடன்குடி பனங்கருப்பட்டி' (பனைவெல்லம்) தான் ரொம்ப ஃபேமஸ். அதை பெரும்பாலும் நியூஸ் பேப்பரில் சுற்றித்தருகிறார்கள்.

  சென்னை புறநகர் பகுதிகளிலும் பனைவெல்லம் நிறைய வரும். என் மனைவி, அதெல்லாம் கலப்படம் (வெல்லம் கலந்தது) என்பார்கள் (வெல்லம் கிலோ 60-70 ரூபாய், ஜீனி 35 ரூபாய், பனங்கருப்பட்டி 140-200 ரூபாய்க்கு மேலே). அதனால் அவற்றை வாங்க அனுமதி தரமாட்டார்.

  இங்க கூட பெங்களூரில் ஒரு கடையில் பனங்கருப்பட்டி பார்த்தேன். வாங்க ஆசை. (வீட்டுல ஸ்டாக் இல்லை. சென்னைலேயே எல்லாவற்றையும் கொட்டிவிட்டு வந்துவிட்டேன்). விரைவில் வாங்கணும்

  ReplyDelete
  Replies
  1. பனங்கட்டி எனவும் உண்டு பனை வெல்லம் எனவும் உண்டு நெ தமிழன். பனங்கட்டி எனில், பனை ஓலையில் சிறிய பெட்டிபோல பின்னி அதனுள் வருவதைத்தான் பனங்கட்டி என்போம்.. அதன் சரியான பெயர் “பனங்கட்டிக் குட்டாஅன்” என்போம்...

   ஆனா பனை வெல்லம் என்பது இப்படி வட்டக் கட்டிகளாக வருவது, மற்றும்படி அச்சில் போட்டு கட்டியாக வருவது சக்கரை... அடுத்து சுகர்-சீனி.

   //பலாச் சுளை, மாங்காய், தேன், பனைவெல்லம், பனங்கல்கண்டு, வெல்லம் - இவற்றை நான் எப்போ பார்த்தாலும் வாங்குவேன்.//
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. என் ஃபிரிஜ்ஜில் எப்பவுமே முடியாமல் வாங்கி நிரப்பி நான் வைத்திருப்பது தேசிக்காய்களும், கபேஜ் வகைகளும் ஹா ஹா ஹா இவை எப்பவும் என்னிடம் இருக்கும்:)).. எங்கு கண்டாலும் வாங்குவேன்:)).. ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு வியாதி இருக்குது போலும் ஹா ஹா ஹா.

   உண்மைதான் , இப்போ பனைவெல்லம் உண்மையானதாக இல்லை, வெறும் சீனிக்கட்டிபோல இருக்குது.. கலப்படம்தான்..

   //விரைவில் வாங்கணும்//
   ஹ ஹா ஹா வாழ்த்துக்கள்.

   Delete
 45. கினோவா ரொட்டி நன்றாக வந்திருக்கிறது. இதற்கு எனக்கு கொத்தமல்லி துவையல் (புளி, 3-4 செத்தல் மிளகாய், உ.பருப்பு சேர்த்து அரைத்தது) நன்றாக இருக்கும்னு தோணுது. (எப்பவாச்சும் செய்யும் ராகி-கேப்பை ரொட்டிக்கும் அது நன்றாக இருக்கும்)

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்வது சரி, அத்தோடு இதற்கு நிறைய வெங்காயம் ப மிளகாய் சேர்த்துச் செய்வதால் சும்மாவே சுவை நன்றாக இருக்கும்.

   Delete
 46. பனங்கிழங்கு - எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதன் தோல் பகுதியை நீக்கி, கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம். பனங்கிழங்கு படங்களைப் பார்த்ததும் எனக்கு உங்கள் ஒடியல் கூழ்தான் நினைவுக்கு வந்தது. ஹா ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. இம்முறை சாப்பிட்டீங்களோ வாங்கி பனங்கிழங்கு ..? சென்னையில் அவித்து விற்றார்களாம் கடைகளில், ஆனா இப்போ சீசன் முடிஞ்சுபோச்செல்லோ...

   //எனக்கு உங்கள் ஒடியல் கூழ்தான் நினைவுக்கு வந்தது. ஹா ஹா ஹா//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதை நீங்கள் இன்னும் செய்யவில்லை என்பதை நினைவுக்குக் கொண்டு வருகிறேன்:)) ஹா ஹா ஹா...

   Delete
 47. பிறரிடம் பிம்பத்தை அழகாகக் காட்ட சிரமப்படவேண்டாம்னு சொல்லிட்டு அந்தப் படத்துல உள்ளவ, ரொம்பத்தான் ஒற்றைக் கண்ணை முடியால் மறைத்து தன்னை அழகாகக் காட்ட சிரமப்பட்டிருக்கா. அப்போ நேர்ல பார்த்தா, சந்தேகமே இல்லாம, கொ.வா.பி போலத்தான் இருப்பா போலிருக்கு

  ReplyDelete
  Replies
  1. //அந்தப் படத்துல உள்ளவ, ரொம்பத்தான் ஒற்றைக் கண்ணை முடியால் மறைத்து தன்னை அழகாகக் காட்ட சிரமப்பட்டிருக்கா//
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   //சந்தேகமே இல்லாம, கொ.வா.பி போலத்தான் இருப்பா போலிருக்கு//
   எங்கே என் செக் போயிட்டா இதுக்கு விரிவாக்கம் கொடுக்காமல் கர்:)) அஞ்சுவுக்கும் இது என்ன எனப் புரியவில்லைப்போலும்:)) கொ.வா.பி:)= கொண்டு வா பிள்ளை:)) ஹா ஹா ஹா.

   Delete
  2. ஹையோ அது கொள்ளி வாய் பிசாசு :))இப்போதான் கவனிச்சேன் இந்த abbreviation :)

   என் நேந்திரம் சிப்ஸ் எல்லாம் முடிஞ்சு அந்த கவலையில் இருக்கேன் :) கோபு அண்ணா கிட்ட ஒரு ஆர்டர் அனுப்ப சொல்லணும் .மினி ஸ்னாக் ஷாப்  கடை ஓனராச்சே அவர் :))))))))))

   Delete
  3. //ஹையோ அது கொள்ளி வாய் பிசாசு :))//
   ஹா ஹா ஹா ஓ அப்படியா அஞ்சு... நாங்கள் அதை கொள்ளி வால்ப் பிசாசு என்போம் என நினைக்கிறேன் அல்லது நான் சொல்வது தப்போ தெரியவில்லை... ஆஆஆஆஅ இவர் எதுக்கு அந்தப் பிள்ளையைத் திட்டுறார் இப்போ ஹா ஹா ஹா..:))..

   //கோபு அண்ணா கிட்ட ஒரு ஆர்டர் அனுப்ப சொல்லணும் .மினி ஸ்னாக் ஷாப் கடை ஓனராச்சே அவர் :)))//
   ம்ஹூம் அவரிடம் இருக்கும் ஸ்ரொக் அவருக்கு ஒரு கிழமைக்கே போதாதாம்:) இதில உங்களுக்கெல்லாம் அனுப்ப மாட்டார்ராக்கும்:)) ஒருவேளை அதிராவுக்கெனில் அனுப்புவார்ர்:)) அந்த உறைப்புப் பக்கோடாவை ஹா ஹா ஹா:))..

   Delete
 48. //சோப், சம்போ, சீனி, தேயிலை, மருந்து வகைகள், அரிசி, மா, பருப்பு வகைகள், எண்ணெய் இவை மட்டுமாவது வாங்கி// - இப்படி எதையும் ஆண்டிசிபேட் செய்து வாங்கிக் குவித்து வைக்க முடியாது அதிரா. உதாரணமா, உப்பு, காய்கறிகள், அரிசி போன்றவை எவ்வளவுதான் வாங்கிவைப்பது? ஆனால் இதைச் சாக்கிட்டு இங்கு பதுக்கல் ஆரம்பித்துவிட்டது.

  நான் ஒரு கடைக்காரரிடம், சானிடைசர் கேட்டேன். அவர் சொன்னார், நேற்று எனக்கு ஒரு பெட்டி நிறைய வந்தது, ஆனால் 60 ரூபாய் எம்.ஆர்.பி (Max Retail Price) போட்டிருப்பதற்கு எனக்கு 85 ரூபாய் பில் போட்டு அனுப்பியிருந்தார்கள். நான், MRPக்கு மேல விற்பது குற்றம் என்பதால் திருப்பி அனுப்பிட்டேன் என்றார்.

  பதுக்கி, அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள்தாம் லாபமடைவார்கள்

  ReplyDelete
  Replies
  1. அவை, பிரச்சனை நோர்மலானாலும் பழுதாகாது, வைத்துப் பாவிக்கலாமெலோ, அதனால வாங்குவது நட்டமில்லை நெ தமிழன்.

   // உதாரணமா, உப்பு, காய்கறிகள், அரிசி போன்றவை எவ்வளவுதான் வாங்கிவைப்பது?//
   அரிசி- 2 மாதங்களுக்கு ஒரு 5-10 கிலோ அரிசி போதுமெல்லோ ஒரு குடும்பத்துக்கு..

   காய்கறிகள் வங்க முடியாது, அதற்காகத்தான் பருப்பு, சோயா மீட் போன்றவை வாங்கி வைக்கலாம், மற்றும்படி பிரச்சனை அதிகமாகும்வரை, கடையில் வாங்கிச் சமைக்கோணும், இவற்றை தொடக்கூடாது.

   //ஆனால் இதைச் சாக்கிட்டு இங்கு பதுக்கல் ஆரம்பித்துவிட்டது.//
   இங்கு இப்படி விளையாட்டுக்கள் இல்லை வெள்ளைகளின் சுப்பர்மார்கட்டில்.. இன்றுகூட சில பொருட்கள் அரை விலை போட்டிருந்தனர் வழமைபோல.. நம்மவர்கள் எனில் இவற்றை டபிள் விலைக்கு விற்பர்....

   நம் நாடுகளில் வியாபாரம் ரொம்ப மோசம்தான்.

   Delete
  2. //அரிசி- 2 மாதங்களுக்கு ஒரு 5-10 கிலோ அரிசி போதுமெல்லோ ஒரு குடும்பத்துக்கு..// - இல்லை. பொதுவா நம் ஊர்கள்ல, காலைல சாதம், சாம்பார், கரேமது போன்றவை. இன்னொரு வேளை, தயிர் சாதம், தொட்டுக்க ஒன்று. மூன்றாவது வேளை டிஃபன் என்று ஓடும். அதனால் பொதுவா மாதம் 10-20 கிலோ - குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கையைப் பொறுத்து ஆகும். அதனால்தான் இங்க ரேஷன் கார்டுலயே ஒரு குடும்பத்துக்கு மாதம் 20 கிலோ அரிசி தர்றாங்க(ன்னு நினைக்கிறேன்)

   கொஞ்சம் above Middle class familiesல, மற்றவை - பிட்சா, சாண்ட்விச் போன்றவை சாப்பிடுவதாலும், எடை கண்காணிப்பு மனதில் ஓடுவதாலும், அரிசி consumption குறைவாக இருக்கும்.

   Delete
 49. //வாங்கலாம் என விட்டால், இப்போ எல்லாமே எக்ஸ்பிரஸ் வேகத்தில் முடிஞ்சு போச்ச்ச்:(.//

  ஏஞ்சலின் --- அதிரா இப்படி எழுதியதில் எனக்கு ஒரு தவறும் தெரியலை. பின்ன எதுக்கு நீங்க, 'அதிரா பண்ணற குழை சாதத்துக்கும் ஒடியல் கூழுக்கும்' இந்தப் பொருட்கள் எதுவுமே தேவையில்லையே.. இந்தப் பொருட்களை வச்சு அதிராவுக்கு வேற ஒண்ணும் பண்ணத் தெரியாதுன்னு ஏன் சொல்றீங்க?

  ReplyDelete
  Replies
  1. அது ஒண்ணுமில்லை மேடத்துக்கு அலமாரி முழுக்க எல்லா சாமானும் இருக்கணும் கண்ணில் பட்டது கையில் கிடைச்சது எல்லாத்தையும் போட்டு சமைப்பாங்க :) இப்போ அதுக்கு சான்ஸ் இல்லாமப்போச்சாம் ஹ்ஹஹ்ஹா :)))குழை சாதத்துக்கே நிறைய இன்க்ரிடியன்ட்ஸ் தேவை தெரியுமோ :)))

   Delete
  2. ///ஏஞ்சலின் --- அதிரா இப்படி எழுதியதில் எனக்கு ஒரு தவறும் தெரியலை///

   [im] http://amazinganimalphotos.com/wp-content/uploads/2014/11/peekaboo.jpg[/im]

   Delete
  3. //AngelThursday, March 19, 2020 10:24:00 am
   அது ஒண்ணுமில்லை மேடத்துக்கு அலமாரி முழுக்க எல்லா சாமானும் இருக்கணும்//

   ஹா ஹா ஹா இது கரீட்டு:) நான் சமைக்கிறேனோ இல்லையோ வீட்டில் நிறையப் பொருட்கள் வாங்கி வச்சிருப்பேன், அதனால திடீரென ஒரு பிரச்சனை வந்தாலும் என்னால ஒரு மாதட்த்ஹுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியும் எப்பவுமே... அது எனக்குப் பழகி விட்டது..

   //கண்ணில் பட்டது கையில் கிடைச்சது எல்லாத்தையும் போட்டு சமைப்பாங்க :)///

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)).. புது முயற்சி பண்ணுவது டப்போ அஞ்சு?:))

   //குழை சாதத்துக்கே நிறைய இன்க்ரிடியன்ட்ஸ் தேவை தெரியுமோ :)))//
   ஏதோ உடனேயே செய்து பார்த்தவமாதிரியே ஒரு பேச்சு:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

   நெலைத்தமிழனும் அஞ்சுவும் என் குழைசாதம் அல்லது ஒடியல்கூழ் செய்து படம் போட்ட பின்பே என் அடுத்த சமையல் குறிப்பு வெளிவரும் என்பதனை.. இங்கு பகிரங்கமாக ஜத்தியம்[பிள்ளையாரே என்னை மன்னியுங்கோ இது பொய்ச் சட்த்ஹியம்:)] பண்ணிக்கொள்கிறேனாக்கும்:)).. ஹா ஹா ஹா நன்றி அஞ்சு.

   Delete
 50. அனைத்துக்கும் நன்றிகள் நெல்லைத்தமிழன்.

  ReplyDelete
 51. பின்னூட்டங்களில் மூழ்கியதில் என்ன படித்தோம் என்பதே மறந்து விட்டேன். மீண்டும் ஒரு முறை பின்னோக்கி நடக்க வேண்டியதாகி விட்டது. கொரோன ரொட்டி, சே! கினோவா ரொட்டி அருமையாக இருக்கிறது. வாட்டர்மெலன் கப் அழுகாமல் இருக்குமா?  

  ReplyDelete
 52. அதிராவுக்கு அக்கா ஆதிரா ?
  http://tamizhnodigal.blogspot.com/


  ReplyDelete
 53. பிஞ்சு பேச்சாளருக்கு இந்த பிஞ்சிலும் பிஞ்சான கீதாவின் வணக்கம்!! ஹா ஹா ஹா

  கை கால் எல்லாம் நன்றாஅகக் கழுவி கழுவி விட்டுத்தான் உங்க வீட்டுக்குள் வந்திருக்கிறேன் ஓகே..

  சரி சரி பதிவு பார்த்து ஒரு அட்டெண்டன்ஸ் வைக்கோனுமல்லஓ. பூஸாரின் வாலைப் பிடிக்க ஏஞ்சலோடு நெல்லையோடு சேர்ந்து கீதா எப்போது குதிப்பாள் என்று தெரியாது என்று ஜொல்லிட.

  என் கணினி இன்னும் சரியாகலை..கணவரின் கணினி. அது எப்போது கிடைக்குதோ அப்போதுதான்...அதுவும் கொஞ்சமே நேரம் தான். ஸோ கிடைக்கும் நேரத்தில் இங்கு ஏர்டெல் செர்வீஸ் அஃபெக்ட் ஆகுது கொரோனாவினால் வேலை செய்பவர்கள் கொஞ்சம் பேரே அதுவும் ஆஃபீஸை சனிட்டைஸ் செஞ்சு கொண்டே இருப்பதால் நு மெசேஷ் வந்துச்சு...

  கீன் வ்வாவை பொங்கல் மிளகு சாதம் வெஜ் கீன் வாஹ் என்று செஞ்சு சாப்பிட்டாச்சு ,,,னானும் வீட்டிலேயே அதை பொடர் செய்து ரொட்டி போல செய்தேன் ராகி ரொட்டி செய்வது போல. உங்கள் குறிப்பையும் நோட் செய்துவிட்டேன் ரொம்ப நல்லா செஞ்சுருக்கீங்க...வெந்தயக்கீரை போட்டு செய்யலை. ஸ்ப்ரிங்க் ஆனியன் போட்டு செய்திருக்கேன். உங்கள் மெத்தேட் செய்துவிடுகிறேன். வெ கீ நல்லதாச்சே...

  சிலப்போ கொஞ்சம் கசப்பு தெரியும் நல்லா கழுவிட்டால் ஓகேயாகிடும்..

  பாருங்கோ ஜெஸி உங்க வீட்டுக்கு வந்து கையை நீட்டுவதை !! ஹா ஹா ஹா டெய்சி பிள்ளைக்கு ட்ரெய்னிங்க் கொடுக்க வந்தாவோ?

  எல்லாம் ரசித்தேன் ஊசிக் குறிப்பு ஹா ஹா ஊசி இணைப்பு இன்னும்யோசிக்க வைக்குது..

  சட்டி அகப்பை சூப்பர்...அதைப் பார்த்ததும் சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும் என்ற வாசகம் நினைவுக்கு வந்துச்சு!! உங்களைச் சொல்லலை ஹா ஹா ஹா ஹா ஹா..அழ்கா இருக்கு இரண்டும்...

  பனங்கிழங்கு ரொம்பப் பிடிக்கும் இலங்கையில் இருந்தவரை நிறைய சாப்பிட்டுருக்கேன் இங்கு திருனெல்வேலி செல்ல்லும் போது மட்டுமே.

  இப்போதைக்கு அட்டெண்டன்ஸ் இவ்வளவு

  அப்புறம் னீங்க பதிவு போட்டா சிலப்போ ரொம்பவே லேட் ஆகலாம் நான் பார்க்க...

  ஸ்டே ஸேஃப்

  கீதா

  ReplyDelete
 54. புது விதமாக கீரை வளர்த்திருக்கிறீங்கள். நல்ல ஐடியா.
  பனங்கிழங்கு, அம்பிரெல்லாங்காய் எல்லாம் போட்டு புகை வர வைக்கிறீங்கள் அதீஸ்.
  கித்துள்பனங்கட்டியை கித்துள் ஓலை தானே சுற்றி விக்கிறவங்கள்!!

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.