நல்வரவு_()_


Sunday 27 March 2011

இனிய இனிய வாழ்த்துக்கள்:)இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹைஷ் அண்ணன்(மார்ச் 28)என்றும் வாழ்வில், நீங்கள் விரும்புவதெல்லாம் அடைந்து, சீரும் சிறப்புமாக நோய் நொடியின்றி... பல்லாண்டுகாலம் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்.
++++++++++++++++++++++++++++++++++++++++

யாரும் குறை நினைத்திடாதையுங்கோ.. இது போனவருடம் நட்பிலே இருந்த உறவுகளின் பெயர்களைப் போட்டு, போனவருடம் நான் எழுதி வெளியிட்ட வாழ்த்து.. அதையே இங்கும் இணைக்கிறேன்... ஓல்ட் இஸ் கோல்ட் எல்லோ?++++++++++++++++++++++++++++++++++++++++

இன்று பிறந்தநாள் பரிசாக அனைவருக்கும் “இனிப்பான அவித்த கோழி முட்டை”.


....................==================.....................

இனிப்பான இணைப்பு:

ஒற்றைக்காலில் தவம் செய்தாலும்,
தரமாட்டேன் என் மகளை........ கொக்கு சொன்னது.
.....................................................................................
தலைகீழாக நின்று தவம் செய்தாலும்
தரமாட்டேன் என் மகளை ... வெளவால் சொன்னது..
(மேலே உள்ள இரண்டும், சிங்கை டாக்டர் மா. தியாகராஜன் அவர்கள் தமிழ்த்தோட்டத்தில் எழுதியது... நான் ஒளிச்சு தூக்கி வந்திட்டேன்:))
...................................................................................................................

துவக்குக் காட்டி மிரட்டினாலும்
வரவே மாட்டேன் என் வீட்டைவிட்டு,
உங்கள் பூவுக்கு... பப்பி ஜீனோ சொன்னதாம்:)
........................................................................................

அடை மழை கொட்டினாலும்,
வானம் இருட்டினாலும்
கழட்டமாட்டேன் என் சன் கிளாஸஸை ...
 பைலட் அண்ணன் சொன்னதாம்:)

######################################################

என்ன இன்று பூஸாரை எங்கயுமே காணவில்லையே என யோசிக்கிறீங்களோ?:)... கிளியோடு வி”ழை”யாடிக்கொண்டிருக்கிறார்..

..................................................................................................


Sunday 13 March 2011

பூஸ் "ஆர் ஏ டீ ஐயோ....."

என்ன தலைப்பைப் பார்த்ததும் தலை சுத்துதோ?:) அதுதான் ரேடியோவிற்கு ஸ்பெலிங்...(RADIO).. சின்ன வயதில் இப்பூடித்தான் பாடமாக்கினேன்:).


பூஸ் ரேடியோ.... இது பூஸ் வானொலி நிலையம், 24 மணிநேர சேவை, நேரடி ஒலிபரப்பு...

ஒரு தலைப்பு போட நினைக்க இன்னொன்று இடையில் வந்துவிடுகிறது... சரி இதைப் போட்டுவிட்டு, அதைப்போடலாமே என ஆரம்பிக்கிறேன்.


இன்று அதிகாலை 5 மணிபோல ஒரு ஃபோன் வந்து தட்டி எழுப்பியது.. கண்விழித்துவிட்டேன்.. பின் நித்திரை வரவில்லை,  அடுத்தவரை டிஷ்ரேப்புப் பண்ணக்கூடாதே அதனால், ரேடியோ கேட்டுக்கொண்டு
படுக்கலாமே என, ஐ போனுக்கு இயர்போனைப்போட்டுக் காதில போட்டபடி படுத்திருந்தேன்.....ரேடியோவிலே, கீழே நான் சொல்லியுள்ளவை ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாகப் போனது, மனதில் போட்டுக்கொண்டு, என் பாஷையில் எழுதியிருக்கிறேன், நிறையச் சொன்னார்கள் ஆனால் அனைத்தையும் பதிக்க முடியவில்லை. 

இரு எறும்புகள் ஒரு ஸ்கூட்டரிலே போய் ஒரு பெண்டிலே திரும்பியது, அங்கு ஒரு யானை போய்க்கொண்டிருந்ததாம், யானையிலே மோதப்பார்த்து, எறும்புகள் காலை ஊன்றி பிரேக் பிடித்துவிட்டு, யானையைப் பார்த்துத் திட்டியதாம் “நீ சாவதற்கு என் ஸ்கூட்டரோ கிடைத்தது” என, எறும்பு யானையில் மோதினால் யானையோ சாகும்? எறும்புக்கு அப்படி ஒரு நினைப்பு:). என்ன கொடுமை இது?:)).

=========================================================

ஒரு கல்லூரியிலே படிப்பித்துக்கொண்டிருந்த பிரம்மச்சாரியான(யாருமற்ற) ஆசிரியர் காலமாகிவிட்டாராம். உடனே பொதுமக்கள் அக்கல்லூரி மாணவர்களிடம் கேட்டார்கள் “அடக்கம் செய்ய 4000 ரூபா தேவை,  பணம் திரட்டித் தர முடியுமா?” என்று. அதற்கு மாணவர்கள் அவசராவசரமாக 12,000 ரூபா பணம் திரட்டிக் கொடுத்தார்கள்.

மக்கள் சொன்னார்கள் “4000 ரூபா தானே தேவை, எதுக்கு மும்மடங்காக தருகிறீர்கள்” என்று. மாணவர்கள் சொன்னார்களாம் “பறவாயில்லை இன்னும் இரு ஆசிரியர்களைச் சேர்த்து அடக்கம் செய்துவிடுங்கள்”..


==========================================================
மன்னிக்கவும் அலைவரிசையில் சிறு குழப்பம்:)... சற்று நேரத்தில் தொடரும்..

அது வேறொன்றுமில்லை, தம்பிக்கு நகைச்சுவை பிடிக்கும்,
அதுதான் ஆ.கோ றினால் ரேடியோவின் மேலே ஏறிவிட்டார்.....:)

தடங்கலுக்கு வருந்துகிறோம்...:)
==========================================================

நாசாவிலிருந்து சில விண்வெளி ஆராட்சியாளர்கள் விண்வெளிக்குப் போயிருந்தார்கள், அங்கு போனதும் பேனையை எடுத்தார்கள் எழுத, ஆனால் அவர்களால் எழுத முடியவில்லை, அங்கு புவியீர்ப்பு விசை இல்லாத காரணத்தால், பேனையின் இங்(ink) பேனை முனைக்கு வரவில்லை. அதனை நாசாவுக்கு அறிவித்தார்கள்.

இதைக் கேட்டதும் நாசாவில் சொன்னார்கள், முதலில் இதற்கொரு வழியைக் கண்டுபிடித்த பின்பே, ஆராட்சியைத் தொடர்வோம் என. அதன்படி பத்துவருடங்களாக குப்புறக்கிடந்து, கிட்னியை யூஸ் பண்ணி, 1 1/2 கோடி டொலர்கள் செலவுபண்ணி கண்டுபிடித்தார்களாம்.

இதைக் கேட்ட பிரித்தானிய:)  நாட்டவர் கேட்டாராம்.. “அப்போ ரஷ்யாக் காரர், அப்போதே எல்லாம் எழுதி அனுப்பினார்களே விண்வெளியிலிருந்து, அது எப்பூடி?” என. அதுக்கு நாசா விஞ்ஞானி சொன்ன பதில்... “ரஷ்யாக்காரர் பென்சிலை உபயோகித்தார்கள்”. இதில் முடிவு என்னவென்றால்..... எதிலும் எளிமையாக இருக்கப் பழக வேண்டும்:).

==========================================================

ஒரு ஊரிலே ஒரு பெண் இருந்தவாம், அவ எப்பவுமே அடுத்தவருக்கு சேவை செய்து, அடுத்தவரை மகிழ்விப்பதே தன் தொழிலாகக் கொண்டிருந்தா. அவவிடம் ஒருநாள் ஒரு தேவதை வந்ததாம்.

அது சொன்னதாம் “என்னிடம் ஒரு புத்தகம் இருக்கு, அதில் அடுத்தவருக்கு சேவை செய்து அடுத்தவர்களை மகிழ்விப்போரின் பெயரெல்லாம் இருக்கும், பார்க்கலாம் உன் பெயரிருக்கா என”, சொல்லியபடியே புத்தகத்தில் தேடியதாம், அதில் அப்பெண்ணின் பெயர் இல்லை. அதற்கு அப்பெண் சொன்னாவாம், பறவாயில்லை, பெயரில்லாவிட்டால் என்ன, அடுத்தவருக்கு சேவை செய்வதில் எனக்கு மகிழ்ச்சியே என்று.

தேவதை மீண்டும் இன்னொரு புத்தகத்தைக் காட்டிச் சொன்னதாம், இது கடவுளின் புத்தகம், இதில் கடவுளுக்கு யாரை பிடித்திருக்கோ அவர்களின் பெயர்கள் இருக்கும், இதில் உன் பெயர் இருக்கா பார்ப்போம் எனக்கூறிக் கொண்டே புத்தகத்தைத் திறந்ததாம், முதலாவதாக அப்பெண்ணின் பெயர் இருந்ததாம். இதில முடிவு என்னெண்ணா.... நாம் அடுத்தவருக்கு சேவை செய்து, அடுத்தவரை மகிழ்வித்தால், கடவுளுக்கு நம்மைப் புய்க்கும்ம்ம்ம்ம்.
========================================================

இத்தனை நேரமும் மிகவும் பொறுமையாக, அடக்கமாக இருந்து கேட்டு ரசித்தமைக்கு மியாவும் நன்றி.... இத்துடன் இன்றைய நிகழ்ச்சி நிறைவடைகிறது, மீண்டும் நாளை காலை வழமைபோல் தொடரும்.. அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுபவர்... உங்கள் அன்பு அறிவிப்பாளர்.. மியாவ் பூஸ்:)


=========================================================
ஃபோன் இணைப்பு:

I remember the time, I was kidnapped and they sent a piece of my finger to my father. He said he wanted more proof.
=======================================================

பின் ஊசி இணைப்பு:


ஹா..ஹா....ஹா... கஸ்டப்பட்டுப் படிச்சு எக்ஸாம் எழுதினது..(தெரியும்தானே ஆரென?? பீஈஈஈஈகொக்:))..., ஆனா தொப்பி கிடைச்சதென்னமோ எங்களுக்குத்தான்...(உதென்ன தொப்பி என ஆரும் கேட்டிடப்பூடா...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

=======================================================
இது எங்கட சொந்த பந்தம்தான்...  “அங்கின” (ஆசனம் செய்வோர் பக்கம்:))
படத்தில இருந்தவங்களும் இவிங்களும் சொந்தபந்தம்தானாம்.....


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


Tuesday 1 March 2011

என் சமையல் அறையில்....:)


இத் தலைப்பை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... நான் குப்புறக்கிடந்து “என் ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணான” கிட்னியை யூஸ் பண்ணி, பலமாக சிந்தித்துக் கண்டு பிடித்த தலைப்பூஊஊஊஊ இது...


இது என் கொப்பிரைட் தலைப்பூ:).... இதை ஆராவது களவாடிப்போய் எங்காவது போட்டதைக் கண்டால், உடனேயே எனக்கு சொல்லிடுங்க மக்கள்ஸ்ஸ்ஸ்.... எதுக்கோ? ஓடிப்போய் கட்டிலுக்குக்கீழ ஒளிக்கத்தேன்:).


இது எப்பவோ, பொழுதுபோகாத ஒரு பொழுதில் எடுத்தேன், இங்கு போடுவதற்கென பிளான் பண்ணி எடுக்கப்படவில்லை. இப்போ ஏதோ திடீரென போடலாமே என ஒரு துணிவு வந்துது அதேன்....

பூஸ் குட்டிகள் தெரியுதோ?:)


கிச்சினிலிருந்து பின் கார்டினுக்குச் செல்லும் வாசல்...

                                       


=========================================================
==========================================================

ஊசி இணைப்பு:)==========================================================