நிஜமாத்தான் சொல்றீங்களோ?:)
வாழ்க்கை வெறுத்துப் போச்சுது
எனச் சொல்லிக்கொண்டு
இன்னும் உயிரோடிருப்போரை
எனக்குப் பிடிக்காது
வாழ்க்கை வெறுத்தால்
சாக வேண்டியதுதானே
சொல்லிச் சொல்லி
ஏன் இருக்க வேண்டும்?:)
இதை நான் சொல்லவில்லை, முன்பு நான் 10 வயதாக இருந்தபோது, அப்பாவின் ஒபிஷில் வேலை பார்த்த ஒருவர் கவிதைகள் எழுதுவார், அதில் ஒன்றுதான் இக்கவிதை, வரிகள் மறந்திருப்பேன், ஆனா இப்படித்தான் ஆரம்பமாகியது அக்கவிதை, எழுதி எல்லாம் வைக்கவில்லை, என் மனதில் அப்பவே பதிஞ்சு போச்சுது.
சரி இனி பூஸ் ரேடியோவில் கேட்ட ஒரு சங்கதிக்கு வருகிறேன்.
ஒரு பணக்காரன், ஒரு பசுவைக் கயிற்றால் கட்டி, கையில் பிடித்துக்கொண்டு போனார், அதைப் பார்த்த துறவி ஒருவர் சொன்னார்,
“ஐயாவை மாடு கட்டியிழுத்துப் போகிறது” என.
இதைக் கேட்ட பணக்காரருக்கு கோபம் வந்துவிட்டது,
“ஏய் துறவியே, நன்றாகப் பார், நான் தான் மாட்டைக் கட்டியிழுத்துப் போகிறேன்” என்றார்.
அதுக்கு துறவி கேட்டார்,
“ஏன் கட்டியிழுத்துப் போகிறீர்கள்” என்று.
“கையை விட்டால் பசு போய்விடும்” என்றார் பணக்காரன்.
“அப்போ பசு, தனியே, தன் பாட்டில் போக ரெடி, ஆனால் உங்களால்தான் பசுவை விட முடியாமல் பின்னால் போகிறீர்கள், ஆனா ஏதோ பசுவுக்காகத்தான் நீங்கள் போகிறீர்கள் என்பதுபோல சொல்கிறீர்கள்” என்றார்.
இதன் கருத்து என்னவென்றால், ஒவ்வொருவரும் வாழ்க்கைக்கு ஒவ்வொரு சாட்டுச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம், யாரும் தனக்காக வாழ்கிறேன், தனக்காக உழைக்கிறேன் என்று சொல்ல மாட்டார்களாம், என் பிள்ளைகளுக்காகத்தான் வாழ்கிறேன், என் குடும்பத்துக்காகத்தான் உழைக்கிறேன். இப்பவே இறந்துவிடுவேன் ஆனா, பிள்ளைகள் வருந்துவார்களே என்றுதான் இன்னும் உயிரோடிருக்கிறேன் என எப்பவும் சாட்டை அடுத்தவர்மேல் போடுவதே நம் மனிதருக்கு பழகிப்போச்சாம்.
நாம் இல்லாமல் போனாலும், ஏனையோர் உயிர் வாழத்தான் போகிறார்கள், ஆனா நமக்கொரு நினைப்பு, அவர்களுக்காகத்தான் நாம் இருக்கிறோம் என.
ஏன், எனக்காகத்தான் நான் உழைக்கிறேன், வாழ ஆசையாக இருக்கு அதனால்தான் இருக்கிறேன் எனச் சொன்னால் என்ன?
எனக்கு வாழ்க்கை வெறுத்துப்போச்சு, ஆனா அவர்களுக்காகத்தான்- இவர்களுக்காகத்தான் இன்னும் உயிரோடிருக்கிறேன் எனச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும், எனக் கேட்டார் பூஸ் ரேடியோவில் பிரசங்கம் நடத்தியவர். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
இனியும் ஆராவது வாழ்க்கை வெறுத்துப் போச்செனச் சொல்லுவினமோ?:))).
நான் முன்பு சொல்லியிருக்கிறேன் தானே மக் பை பறவைகள் பற்றி. சமீபத்தில் BRITISH BIRDS என்றொரு புத்தகம் பார்த்தேன், அதிலேயே மக் பையின் கீழே எழுதியிருக்கிறார்கள் ONE FOR SORROW, TWO FOR GLAD என. அப்போ எனக்கு சந்தோசம் தாங்க முடியாமல் போச்சு, நம்மவர் மட்டுமில்லை, வெள்ளையர்களும் நம்புகிறார்கள் என்று.
பின்பு என் ஒரு வெள்ளை நண்பியை இதுபற்றிக் கேட்டேன், அவ 10 வரைக்கும் பாட்டுப் பாடிக் காட்டினா, நாங்க 4 வரையும்தானே பாடுவோம். 10 குருவிகள் கண்டால் "SURPRISE" எனச் சொன்னா.... எதிர்பாரா சந்தோசம் நிகழுமாம்.. அவ்வ்வ்வ்வ்.
ஆனா இது எனக்கு நிஜமாகவே நிகழுது. எங்கள் ஏரியாவில் எப்பவும் இவர்கள் இருப்பார்கள், ஒன்றைக் கண்டால், நான் கார் ஓடுவதையும் விட்டுவிட்டு மற்றது இருக்கோ எனத் தேடுவேன்:)).
இது பற்றிய பதிவுக்கு-----> எங்கட கார்டினும் மக்கு பையும்:).
வாழ்க்கை வெறுத்துப் போச்சுது
எனச் சொல்லிக்கொண்டு
இன்னும் உயிரோடிருப்போரை
எனக்குப் பிடிக்காது
வாழ்க்கை வெறுத்தால்
சாக வேண்டியதுதானே
சொல்லிச் சொல்லி
ஏன் இருக்க வேண்டும்?:)
இதை நான் சொல்லவில்லை, முன்பு நான் 10 வயதாக இருந்தபோது, அப்பாவின் ஒபிஷில் வேலை பார்த்த ஒருவர் கவிதைகள் எழுதுவார், அதில் ஒன்றுதான் இக்கவிதை, வரிகள் மறந்திருப்பேன், ஆனா இப்படித்தான் ஆரம்பமாகியது அக்கவிதை, எழுதி எல்லாம் வைக்கவில்லை, என் மனதில் அப்பவே பதிஞ்சு போச்சுது.
சரி இனி பூஸ் ரேடியோவில் கேட்ட ஒரு சங்கதிக்கு வருகிறேன்.
ஒரு பணக்காரன், ஒரு பசுவைக் கயிற்றால் கட்டி, கையில் பிடித்துக்கொண்டு போனார், அதைப் பார்த்த துறவி ஒருவர் சொன்னார்,
“ஐயாவை மாடு கட்டியிழுத்துப் போகிறது” என.
இதைக் கேட்ட பணக்காரருக்கு கோபம் வந்துவிட்டது,
“ஏய் துறவியே, நன்றாகப் பார், நான் தான் மாட்டைக் கட்டியிழுத்துப் போகிறேன்” என்றார்.
அதுக்கு துறவி கேட்டார்,
“ஏன் கட்டியிழுத்துப் போகிறீர்கள்” என்று.
“கையை விட்டால் பசு போய்விடும்” என்றார் பணக்காரன்.
“அப்போ பசு, தனியே, தன் பாட்டில் போக ரெடி, ஆனால் உங்களால்தான் பசுவை விட முடியாமல் பின்னால் போகிறீர்கள், ஆனா ஏதோ பசுவுக்காகத்தான் நீங்கள் போகிறீர்கள் என்பதுபோல சொல்கிறீர்கள்” என்றார்.
இதன் கருத்து என்னவென்றால், ஒவ்வொருவரும் வாழ்க்கைக்கு ஒவ்வொரு சாட்டுச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம், யாரும் தனக்காக வாழ்கிறேன், தனக்காக உழைக்கிறேன் என்று சொல்ல மாட்டார்களாம், என் பிள்ளைகளுக்காகத்தான் வாழ்கிறேன், என் குடும்பத்துக்காகத்தான் உழைக்கிறேன். இப்பவே இறந்துவிடுவேன் ஆனா, பிள்ளைகள் வருந்துவார்களே என்றுதான் இன்னும் உயிரோடிருக்கிறேன் என எப்பவும் சாட்டை அடுத்தவர்மேல் போடுவதே நம் மனிதருக்கு பழகிப்போச்சாம்.
நாம் இல்லாமல் போனாலும், ஏனையோர் உயிர் வாழத்தான் போகிறார்கள், ஆனா நமக்கொரு நினைப்பு, அவர்களுக்காகத்தான் நாம் இருக்கிறோம் என.
ஏன், எனக்காகத்தான் நான் உழைக்கிறேன், வாழ ஆசையாக இருக்கு அதனால்தான் இருக்கிறேன் எனச் சொன்னால் என்ன?
எனக்கு வாழ்க்கை வெறுத்துப்போச்சு, ஆனா அவர்களுக்காகத்தான்- இவர்களுக்காகத்தான் இன்னும் உயிரோடிருக்கிறேன் எனச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும், எனக் கேட்டார் பூஸ் ரேடியோவில் பிரசங்கம் நடத்தியவர். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
இனியும் ஆராவது வாழ்க்கை வெறுத்துப் போச்செனச் சொல்லுவினமோ?:))).
************************************************************************************
ஊசி இணைப்பு:நான் முன்பு சொல்லியிருக்கிறேன் தானே மக் பை பறவைகள் பற்றி. சமீபத்தில் BRITISH BIRDS என்றொரு புத்தகம் பார்த்தேன், அதிலேயே மக் பையின் கீழே எழுதியிருக்கிறார்கள் ONE FOR SORROW, TWO FOR GLAD என. அப்போ எனக்கு சந்தோசம் தாங்க முடியாமல் போச்சு, நம்மவர் மட்டுமில்லை, வெள்ளையர்களும் நம்புகிறார்கள் என்று.

|
Tweet |
|
|||