நல்வரவு_()_


Friday 28 December 2018

நம் எனர்ஜி லெவல்:)

(1)
ந்த நம்முடைய எனர்ஜி லெவல் பற்றி, பல பல விசயங்கள்.. அனுபவங்களாகவும், கேட்டதும் அறிஞ்சதும் தெரிந்ததுமாக பல விசயங்கள் இருந்தாலும், போஸ்ட்டாகப் போடலாமே எனும் எண்ணம் தோன்றியதில்லை, ஆனா அடிக்கடி டெய்சிப் பிள்ளைக்கு இப்படிச் செய்வேன், இருப்பினும் சமீபத்தில் டக்கென நினைச்சேனா, உடனே போஸ்ட்டில் எழுதும் ஆசை வந்துது.
(2)

அதாவது நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு எனர்ஜி இருக்குதுதானே, அது அனைவருக்கும் மாறுபடும்.. இந்த எனர்ஜி தான் நம்மை வெளிக்கொணர உதவுகிறது, அதாவது நல்லவராகவும் மாற்றும், தீயவராகவும் மாற்றும், கெட்ட செயல்கள் செய்யத் தூண்டும்.. இப்படி.

(3)

முதலில் கணவன் மனைவியிலிருந்து ஆரம்பித்தால், இருவருக்கும் எனர்ஜி லெவல் சேம் எனில் பிரச்சனை இல்லாமல் வண்டில் ஓடும்:).. ஆனா பொதுவாக ஆண்கள் வேலைக்குப் போய் வருவதனால் அவர்களின் எனர்ஜி செலவழிக்கப்படும், பெண்ணும் அதேபோல வேர்க் பண்ணுபவராயின் ஓகே, ஆனா பெண் வீட்டிலிருப்பவவாயின்... அதிலும் அவவின் எனர்ஜி லெவல் அதிகமாகவும் இருக்கும் இடத்து....

அவவின் எனர்ஜியை எவ்வழியிலாவது செலவழிக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்... இப்போ நம்மைப்போல புளொக் எழுதி... கொமெண்ட்ஸ் போட்டு, இல்லை சிலர் விதம் விதமாக சமைப்பார்கள், கைவேலை செய்வது, கார்டினிங், வீட்டை அலங்கரிப்பது, இப்படி எதுவாயினும் ஒரு வழியில் பெண்கள் ஈடுபடும்போது, தேவையில்லாத பிரச்சனைகள் தவிர்க்கப்படும்... அதாவது அவர்களின் எனர்ஜி.. இவ்வழியில் செலவழிக்கப்பட்டுவிடும்.

ஹா ஹா ஹா மன்னிச்சுக்கோங்க, இம்முறை அதிக ஆசையா இருந்தமையால இரண்டு ஆங்கில கோட்ஸ் போடுறேன்ன்:))
(4)


எங்காவது பெட்டி வைத்தால் போதும், உடனே அதனுள் இறங்கி 
இடம் பிடிச்சிடுவா:) கர்ர்ர்ர்ர்:)))
(5)

ஆனா இப்படி எதுவும் செய்யாமல் பொழுது போகவில்லையே என இருப்போர்தான் அதிகமாக வீண் வம்புகளில் சிக்கல்களில் மாட்டி தம் எனர்ஜியை தப்பான வழியில் செலவழித்து விடுகின்றனர். இதனால வீட்டிலிருப்போரை, எப்பவும் அடக்கி வைத்திருக்க நினைக்கக்கூடாது, அவர்களின் எனர்ஜி நல்ல வழியில் செலவழிவதற்கு நாம் ஊக்கம் கொடுக்க வேண்டும். அதையும் தாண்டி தப்புப் பாதையில் போவோரை ஒண்ணும் பண்ண முடியாது:)..

அதேபோலத்தான் ஆண்களிலும் ஓவர் எனர்ஜி உள்ளோர், வேலை முடிந்த பின்பும்.. எப்பவும் ஓடி ஆடி அங்கு போக வேண்டும், இங்கு போக வேண்டும் என அமளிப்படுவோரும் இருக்கிறார்கள், அதுக்கேற்ப நாமும் அவர்களோடு ஒத்துப் போக வேண்டும். சண்டை, வெட்டுதல், போராட்டம் இப்படியானவைகூட ஒருவிதத்தில் அவர்களின் எனர்ஜி வேறு வழியில் செலவழிக்கப்படாமையாலேயே, இப்படிப் பாதையில் செலவாகிறது...
(6)

பிள்ளைகள் விசயத்தில் இது சரியான முறையில் கையாளப்பட வேண்டும். அவர்களை எப்பவுமே வீட்டில் இரு, படி படி எனச் சொல்லிக் கொண்டிருந்தால்.. சில பிள்ளைகள் முளுக்க முளுக்க படிப்பில் செலவிடக்கூடும், ஆனா பெரும்பாலான பிள்ளைகளுக்கு வேறு பொழுது போக்கு, விளையாட்டும் தேவைப்படுகிறது, அதை நாம் கண்டித்து முடக்கினால், அது தப்பாக தேவையில்லாத சட்டிங்குகளில் ஈடுபடுதல்[காதல் பிரச்சனை], இல்லை சிகரட், குடி என இறங்குதல் இப்படி தப்பான வழியில் செல்லும் வாய்ப்பும் அதிகம்.

(7)

முக்கியமாக ஆண்குழந்தைகளை நன்கு விளையாட அனுமதிக்க வேண்டும்.. அப்போதான் எனர்ஜி வெளியேறி, அமைதியாக அடக்கமாக இருப்பார்கள். எங்கள் வீட்டில் சில நாட்களில் இரவு 10 மணிக்கும்.. கோல் வரும்[வீட்டுக்குள் இருந்தே:)] அல்லது கதவு தட்டப்படும்.. ரெட்மில் செய்யப் போகிறேன் என, ஓம் செய்யுங்கோ எனத்தான் ஓகே பண்ணுவது, போய் 20-30 நிமிடங்கள் செய்வார்கள், பின்பு குளித்துவிட்டுப் படுப்பார்கள்.. இப்படி எந்த வழியிலாவது ஒவ்வொருவரின் எனர்ஜியும் செலவழிக்கப் பட வேண்டும், அது நல்ல வழியில் செலவழியும்போது பிரச்சனை இல்லை, மாறி தீய பாதையில் கால் வைத்திட்டால் மீள்வது கஸ்டமாகிவிடும்.

இதேபோல்தான் எங்கள் டெய்சிப்பிள்ளையும் எப்பவும் வெளியே விடு வெளியே விடு என அடம் பிடிப்பா....

கவனமாகப் பாருங்கோ.. இடப்பக்கம் அணில்பிள்ளை ஜம்பண்ணி வேலியால ஓடுறார், எனக்கு இவ கீழே குதிக்கும்வரை நெஞ்சுக்குள் தண்ணியே இல்லை:)..

 சாதாரண பூனைகளை விட இவவுக்கு எனர்ஜி லெவல் கொஞ்சம் அதிகம்.. எப்பவும் ஓவரா ஓடோணும் துள்ளோணும் என இருப்பா. சிலசமயம் வெளியே போய் மழையில் நனைந்து வந்திருப்பா, அப்படி உள்ளே வந்தால் உடனே அவவை புரட்டிப் புரட்டி துடைச்சு விடோணும்.. அதுவரை விடமாட்டா.. மீயா மீயா எனக் கத்திக் கொண்டே பின்னால வருவா, துடைக்கும்போது கீழே படுத்திருந்து, வடிவேல் அங்கிளைப்போல .. இங்க துடை.. ஆ இங்க துடை எனபது போல கை காலை தூக்கித் தருவா, பின்பு 5 நிமிடத்தில் உடனேயே அடம் பிடிப்பா, கதவைத்திற வெளியே போக என...

விடாமுயற்சி:)

அந்நேரம் திரும்பவும் மழையில விட்டு துடைக்கோணுமெல்லோ.. அதனால நான் அவவுக்கு ஓடப்பண்ண விளையாட்டுக்கள் காட்டுவேன்.. ஓடி ஓடி பாய்ந்து பிடித்து உருண்டு பிரண்டு விளையாடுவா.. ஒரு 5 -10 நிமிடத்தில் எனர்ஜி இழந்து களைத்து ஓடிப்போய்ப் படுத்து அமைதியாக நித்திரை கொள்ளுவா... இதனை நோட் பண்ணியே.. இந்த எனர்ஜி லெவல் உண்மை என நம்பி.. இப்போஸ்ட் எழுத ஆரம்பிச்சேன்.

(8)

இது உண்மைதானே?
(9)

கீசாக்கா போனதடவை .. மீ கேக்கூஊஊ தரவில்லை எனச் சொல்லியிருந்தா, அதனால இந்தாங்கோ கிறிஸ்மஸ்க்கு[வாங்கிய:)] எக்லெஸ் ஃபுருட் அண்ட் நட் கேக்:)

ஊசி இணைப்பு:)
ஆஆஆஆ புதுவருடத்துக்கு இம்முறை அதிரா நிறையக் காசு தரப்போறேனாக்கும் எல்லோருக்கும்:))).. என்னிடம் இருந்தவற்றை மட்டும் வச்சுப் படமெடுத்தேன்:).. இதில முதலாவதாக வருபவருக்கு.. 20 ரூபாய்த் தாள்கள்.. 2 வதாக வருபவருக்கு 10 பவுண்ட் தாள்கள்.. லேட்டா வருபவருக்கு கேக் துண்குகள்:).. கடசிப் பெட்டியில் ஏறுவோருக்கு வெற்றலை பாக்கு:)) ஹா ஹா ஹா அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்💝.

ஊசி இணைப்பு
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மேலே படங்களுக்கு நம்பர் கொடுத்திருக்கிறேன், ஏதும் சொல்ல நினைச்சால் உங்கள் வேலையை ஈசியாக்க:).
கமலா சிஸ்டர் சொன்னா, தான் வருசம் முடிவதற்குள் 4 போஸ்ட்டாவது போட்டிட வேணும் என, அப்பூடித்தான் நானும் நினைச்சேன், 2018 சூசைட்டு பண்ண முந்தி:) மீயும் போட்டிடோணும் என.. போட்டிட்டேன்ன்ன்:).
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Monday 24 December 2018

திராவும் திர்வுளும்:)👸

2013 ம் ஆண்டென நினைக்கிறேன் கனடா ரொரண்டோவில பெரிய ஸ்னோ ஸ்ரோம் வந்து, கறண்ட் இல்லாமல் தண்ணியில்லாமல் போய் சனமெல்லாம் ஹோட்டேலில் போய்த் தங்கி வந்த சம்பவம் நடந்துது, அப்போ நாங்களும் அங்கு போயிருந்தோம்.. அப்போ எடுத்த அழகிய:) படங்களில் சில..

Friday 21 December 2018


💑👫ஸ்கொட்லாந்தில் முதல் நாள்:)👫💑

ஸ்கொட்லாந்தில் வந்து காலை எடுத்து வைக்கிறேன் நிலத்திலே.... சில்லென ஒரு குளிர்... பின்னேரம் ஒரு 3 மணி இருக்கும்.. சுட்டெரிக்கும் வெயில்... அப்படியே எயார்போர்ட்டிலிருந்து வீடு நோக்கிப் பயணம்.. பச்சைப் பசும் புல் வெளிகளும்.. அங்காங்கு செம்மறி ஆட்டுப் பிள்ளைகள்.. கொழுத்த குண்டு மாட்டுக் கண்டுகள், அழகிய மலைகள்.. இடையே ஆறு. இப்படி ரிவியில் பார்த்ததை நேரில் பார்த்தபோது ஏதோ ஒரு பரவசம்... விதம் விதமாக கண்ணில் இடையிடையே பட்டது.. மனதை மிக உற்சாகமாக்கி விட்டது...


வீட்டுக்குப் போன களைப்பில் சாப்பிட்டு விட்டு, நித்திரையாகி விட்டோம்,  திடீரென கண்ணில ஏதோ சுடுவதைப்போல இருந்துது, திடுக்கிட்டு கண் முழிச்சேன், ஜன்னல் கேர்ட்டின் சரியாக மூடுப்படவில்லை, அந்த இடைவெளிக்குள்ளாலே சூரியன் என் கண்ணை கூசப்பண்ணியது..

படாரென துடிச்சுப் பதைச்சு எழுந்தேன், அய்யய்யோ காலை விடிஞ்சு பத்து மணி வெயில்போல இருக்கே[இலங்கையில் அப்படித்தானே],  நேரமும் புரியுதில்ல, எங்கு இருக்கிறேன் எனவும் தெரியவில்லை, இது இலங்கையா இல்ல ஸ்கொட்லாண்ட் வந்து விட்டோமா.. என பதைபதைத்து கொஞ்சம் நிதானத்துக்கு வந்து, நாளைக்கு வேர்க் இருக்கு என ஹஸ்.. சொன்னாரே, எலாம் வைக்க மறந்து விட்டோமே என அவசரமாக கணவரைத் தட்டி எழுப்பினேன், அவர் எழும்பி நேரத்தைப் பார்த்துப்போட்டுச் சொன்னார்.. இப்போ நேரம்- இரவு பத்து மணியாகிறது .. பயந்து விட்டீங்களோ.. இப்பவே வெளிக்கிடுங்கோ வெளியே போய்ச் சுற்றிவிட்டு வரலாம் என,  “என்ன? பத்து மணிக்கு இப்படி வெய்யிலா?.. நீங்க பொய் சொல்றீங்க நான் நம்ப மாட்டேன், இது விடிஞ்சுபோச்சு”.. எனச் சொன்ன, அந்த முதல் நாள் இரவு வெயிலை, வாழ்க்கையில் மறக்கவே முடியாது.

இங்கு கோடை காலத்தில் இரவு 11 வரை வெயில் இருக்கும்... அதேபோல காலை 3.30-4 மணிக்கே சூரியனார் பளாச் என மின்னுவார்ர்... அதனால இவ்வருடம் சில படங்கள் எடுத்தேன்.. இரவுப் படங்கள்.. ஏதோ ஓடி ஓடி நிறைய எடுத்ததைப்போல இருந்துது, ஆனா இப்போ பார்க்க கொஞ்சம் தான்:).. ஆனா படத்தில வெளிச்சம் குறைவாகக் காட்டுது நேரில் பார்பதை விட..

இந்தப் படம் இரண்டும் ஒரே நேரத்திலேயே எடுத்தேன் நேரம் இரவு 10.30. நிலவு இடது பக்கமும் சூரியன் வலது பக்கத்தில் மறைவதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது.. ஆனா நிலவு தெரியும் திசை தென்மேற்கு, சூனியன் அங்கிள் மறைவது வட மேற்கில்...

இது நேரம் சரியாக சொல்லத் தெரியவில்லை, அநேகமாக 10-11 மணிக்கு இடைப்பட்ட நேரம்தான்..

இதில் பாருங்கோ காரில் நேரம் தெரிகிறது, நைட் 9.46 காட்டுது, வெளியே போனபோது ரோட்டில் எடுத்தேன்.. ரோட் லைட் கூடப் பத்தவில்லைப்பாருங்கோ.. அவ்ளோ வெளிச்சம்..

😊😊===============😊😊INTERVAL😊😊==============😊😊
ஆவ்வ்வ்வ்வ்வ் பொயிண்ட்டுக்கு வந்தாச்சு:).. இந்தப் பூங்கொத்தை எப்பூடி நெல்லைத்தமிழனிடம் குடுப்பேன், நேக்கு ஒரே ஷை.. ஷையா வருதே ஏனெண்டால்ல்.. புளொக்குகளிலெல்லாம்.. என்னைத் “தமனா” எனச் சொல்லாமல்..  “கொடி இடையாள்”..  “இடையிலாள்”, எண்டெல்லோ சொல்றாராம்.., அதில அவர் இப்போ நெருங்கிட்டாராமே.. ஐ மீன் சென்னைக்கே வந்திட்டாராமே... சீ..... நேக்கு வெய்க்கமா வருது:))
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்ன ஸ்ரீராம்.. எதுக்கு இவ்ளோ வெய்க்கப் படுறீங்க?:) நிமிர்ந்து பாருங்கோ:). இந்தாங்கோ பூங்கொத்து... புளொக்குகளிலெல்லாம் என்னை அனுஸ்.. அனுஸ்ஸ் எனச் செல்லமாக அழைக்கிறீங்களாமே.. அப்போ வராத வெய்க்கம் இப்போ எப்பூடி.. வெய்க்கப் படாதீங்கோ ஸ்ரீராம்:))
========================😛😛😛😛=======================

 இந்தப் படங்கள் இரவு பகல் கலந்திருக்குது.. முகில்களைப் பாருங்கோ ஏதும் கதை சொல்லுதோ உங்கள் காதில்:).. கப்பல் போவது இந்த விண்டரில். மலை மீது.. ஸ்னோ இருப்பது தெரியுதெல்லோ...

இது ஒரு மழைநேரம் போல இருக்கே... கண்ணழகிபோல இன்னொரு அழகி போகிறா எங்கள் ஆத்தில்:)..

இது நல்லா இருக்குதெல்லோ?:)

ஹா ஹா ஹா எங்கட குண்டுப்பிள்ளையாரை, குட்டி எலிப்பிள்ளை ஏத்திப் போகுதே.. என்னா தைரியம் :). 

ஹா ஹா ஹா அதானே?:)

ஊசி இணைப்பு:)

  ஊசிக்குறிப்பு
💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑

திருவாவடுதுறை முருகப் பெருமானே வள்ளிக்கு இம்முறை ஏமாத்தாமல் வைர மூக்குத்தி போடுவேன் என்னைக் காட்டிக் குடுத்திடாமல் காப்பாத்துங்கோ:)..
()()()()()()()()()()()()()()()()()

Monday 3 December 2018

😍😍எங்கள் டேவடைக்கு:) வாழ்த்துக்கள்😍😍