நல்வரவு_()_

****
என்ன பாட்டோ என நினைத்து வந்திருந்தால் மன்னிக்கவும்:))

Monday, 3 December 2018

😍😍எங்கள் டேவடைக்கு:) வாழ்த்துக்கள்😍😍

வாங்கோ வாங்கோ எல்லோரும் வாங்கோ, ரெண்டு பொம்ப்பிளைப் பிள்ளைகளைத் தத்தெடுத்து  வளர்ப்பதோடில்லாமல், ஊராற்ற காணியில எல்லாம் வீடு வீடா மூண்டு வீடு கட்டி வச்சிருக்கிறா, ஆனா தூசு தட்டாமல் இருக்கு...
1.காகிதப்பூக்கள்[இதைப் பயத்தில மூடி வச்சிருக்கிறா:)]
2.பேப்பர்கிராஃப்ட்   
3.இது டேவடையின் கிச்சினாம் [இதை மட்டும் திறந்தே வச்சிருக்கிறா:) என்னா ஒரு தெகிறியம்:) பாருங்கோ:))]..
ப்படி ஊருலகில் இருக்கின்ற பூமி எல்லாம், தன்னுடைய சீதனம் என, சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கும்:).. முன்னாள் பெண்களின் புரட்சித்தலைவியும், இந்நாள் புழுப்பூச்சி, பூஸ் களின் தானைத் தலைவியுமாகிய ஏஞ்சலின் என்கிற அஞ்சுவுக்கு, அவவின் “68” ஆவது பிறந்தநாளை[04/12/1950][ஹா ஹா ஹா இத்தோடு எல்லோரும் கொன்போமா நம்பிடுவினம்:)], மிகவும் சிறப்பாக.. கேக் கட் பண்ணி, குத்து விளக்கேற்றி வாழ்த்துவோம் வாங்கோ. டிசம்பரில கன்னா பின்னா எனப் பலர் பிறந்திருக்கிறார்கள் பாருங்கோ:).. ஆனா அதிரா பிறந்தது மட்டும் ஸ்பெஷலாக்கும்:), ஏனெண்டால் அம் மாதத்தில் நான் மட்டும்தான் பிறந்தேன்[நம்மளை நாமளேதானே புகழோணும், பின்ன அடுத்தவர்களோ வந்து புகழுவினம்:) ஹா ஹா ஹா].

இங்கு ஒரு குட்டிக் கதை, என்னுடைய கீ பேர்த்டேயின்போது, எங்கள் மாமாவும் இருந்தார், அப்போ மெழுகுதிரி கொழுத்தி அணைப்பதை அவர் விரும்பவில்லை, அவர் சொன்னார், தீபத்தை அணைத்துக் கொண்டாடுவது தப்பு இல்லையா, எதுக்கும் குத்துவிளக்கை ஏற்றிவிட்டு பின்னர் மெழுகுதிரியை ஊதலாமே என, அது சரியாகவே பட்டுது, அதனாலேயே இதிலும் குத்துவிளக்கு வைத்திருக்கிறேன், 4ம் திகதி ஏற்றிடுவோம்:)..

போன வருட வாழ்த்தைப் பார்க்க விரும்பினால் .. இங்கு.. ஒரு தடவை டச்சு பண்ணவும்:)

ம்முறை பிறந்தநாள் வாழ்த்து சற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என நினைச்சு, கேக் செய்து ஐசிங் போட்டிருக்கிறேன், குறைகள் நிறைய தெரியலாம் அதுக்காக சிரிக்கக்கூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்:). திருமணத்துக்கு முன்பு பல குட்டீஸ் களுக்கு நானே கேக் செய்து ஐசிங் போட்டு அழகழகா கொடுத்திருக்கிறேன், திருமணத்தின் பின்பு கேக் செய்ததுண்டு, ஆனா ஐசிங் போட்டு மேக்கப் பண்ணியதில்லை, அதற்குரிய நொசில்ஸ்களோ பொருட்களோ எதுவும் இல்லை, திடீரென ஒரு யோசனை, மீண்டும் ஐசிங் போட ஆரம்பித்தாலென்ன என, அதனாலேயே இதனை ஆரம்பிச்சேன், பொருட்கள் இல்லாமையால, பொலித்தீன் பையை மட்டுமே பாவித்துப் போட்டேன், அதனால அழகழகாக பற்றன் போட முடியவில்லை,  நீண்ட நேரமும் எடுத்தது.., பார்ப்போம் எனித் தேடி வாங்கோணும் அழகிய நொசில்ஸ்.

ஆப்பி பேர்த்டே அஞ்சு, நலமோடும் செழிப்போடும், சந்தோசத்தோடும் நீடுழி வாழ வாழ்த்துகிறோம்... 

யாரிடமிருந்து வாழ்த்து:), என்பதற்காகத்தான் பூஸ் கார்ட்ஸ்:))

இது கேக் பிறந்த கதை:) இல்லை எனில் நம்ப மாட்டீங்களெல்லோ கர்ர்ர்:))

 இது ஐஸிங் பிறந்த கதை:))

 இது சமீபத்தில் எங்கள் வானில் தோன்றிய வானவில், வானவில் பார்த்தால் லக் ஆமே உண்மையோ?.. எங்களுக்கு இங்கு அடிக்கடி வரும்.. இது இரட்டை வானவில், வடிவா உத்துப் பாருங்கோ அருகில் ஒன்று அழிந்து தெரிகிறது, 

ஸ்பெஷல் இணைப்பு:-
போன மாதம் 11 ஆம் திகதி தன் பிறந்த தினத்தை இனிதே கொண்டாடிய ஜி எம் பி ஐயாவுக்கும், வெளியில சொன்னால் செலவாகிடுமே என:), தன் படம் காட்டாதது போலவே:), பிறந்தநாளையும் எங்களுக்குச் சொல்லாமல் கோயிலுக்குப் போய்க் கொண்டாடிய நெல்லைத்தமிழனுக்கும்,  மறுபிறவி எடுத்து ரகசியமாகக் கொண்டாடி இருப்பார் ட்றுத் என நினைக்கிறேன் அவருக்கும் [இவ்வளவும்தான் எனக்குத் தெரியும்] தாமதமான வலையுலகினரின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. வாழ்க வளமோடு.._()_.

நமக்குத் தெரிந்து இந்த டிசம்பரில்,  1ம் திகதி பிறந்தநாளை இனிதாகக் கொண்டாடிய எங்கள் புளொக்கின் சின்ன வீட்டின் ஓனர்:) கெள அண்ணனுக்கும், வரும் எட்டாம் திகதியே பிறந்துவிட்டு, ஆனா குறைமாதக் குழந்தை[கு.கு] யாக போன 27 ம் திகதியே நமக்கெல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் பிறந்தநாளைச் சிறப்புறக் கொண்டாடிய கோபு அண்ணனுக்கும், அடுத்து 19ம் திகதி தன் பிறந்தநாளை உகண்டாவில் இனிதே.. கொண்டாட இருக்கும் கில்லர்ஜிக்கும், கொஞ்ச நாட்களாக காணாமல் போயிருக்கும் டிசம்பரில் பிறந்தநாள் கொண்டாடும் நேசனுக்கும்... மற்றும் பிறந்தநாளை இம்மாதம் கொண்டாடும் அனைவரையும்.. வலையுலக ஓனர்கள் அனைவரும் வாழ்த்துகிறோம். வாழ்க வளமுடன்..._()_.

முக்கிய இணைப்பு
 எங்கள் வலையுலகின் சளைக்காத, அழகாக, பொறுமையாக அனைவருக்கும் பதில் கொடுக்கும் பின்னூட்ட வித்துவான்:) நெல்லைத்தமிழன் அண்ணாவும்[அதிரா முறையில மட்டும்:)] அண்ணியும் என்றென்றும்  ..கஜூனா beach இன் கடற்கரை மணல் போல் பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்


ஊசி இணைப்பு:

ஊசிக் குறிப்பு:
((((((((((((((((((((((((((((((((((_()_))))))))))))))))))))))))))))))))

114 comments :

 1. [im]https://i.gifer.com/3bBJ.gif[/im]

  ஆஆவ்வ் !!! நானேதான் FIRST :))
  தாங்க்யூ தாங்க்யூ மை டியர் மியாவ் :)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ பேர்த்டே girl... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. இன்று நைட் தான் ஃப்ரீ யாக இங்கு வருவேன் என நினைக்கிறேன்.

   Delete
  2. [im] https://s-media-cache-ak0.pinimg.com/736x/b7/b8/15/b7b8156bdaf52d97e2f5207303f3f354.jpg [/im]

   Delete
 2. [im]http://ekladata.com/GJO5cIKdx5oswu7RjIRfAkETpAA.gif[/im]

  ஆவ்வ் சூப்பரா செஞ்சிருக்கீங்க கேக் ..நானும் நொசில்ஸ் வாங்கினேன் கை முறுக்கு சுடலாம்னு நினைச்சி :) அது எங்கேன்னு தேடணும் இப்போ ..ஹலோ மியாவ் மறந்து உங்க வயசை போட்டுட்டீங்க :)))) அது 6+8 =14 தான் நான்

  ReplyDelete
  Replies
  1. @ஏஞ்சலின் - //கை முறுக்கு சுடலாம்னு நினைச்சி :) // - இப்போ உங்க கணவர் வேலையில் பிஸி. அதனால இந்த ஐடியாவை இன்னும் சில மாதங்களுக்குத் தள்ளிப்போடுங்க. அச்சு முறுக்கு செய்தே நொந்துபோயிட்டார்னு கேள்விப்பட்டேன். நீங்க செய்ய ஆரம்பித்து எல்லாவற்றையும் அவர்தானே செய்யணும்...

   Delete
  2. அச்சு முறுக்கு ஷேப்பில் எதை பார்த்தாலும் நெஞ்சு பக் பக்குன்னும் :) அதைவிட டிசம்பர் வந்தாலே இன்னும் நெஞ்சு பஃபக்னும் :) எல்லாரும் க்ரிஸ்மஸுக்கு என்ன செய்ய போறீங்கன்னு கேக்கும்போது :)
   ஆனாலும் துண்டு போட்டு வச்சிட்டேன் அவருக்கு.. அவர்தான் அதிராவின் சமீபத்து ரெசிப்பி செய்யப்போறார்

   Delete
  3. //.நானும் நொசில்ஸ் வாங்கினேன் கை முறுக்கு சுடலாம்னு நினைச்சி :)//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எதையும் ஒழுங்காகச் செய்ய மாட்டாபோல:)..

   //ஹலோ மியாவ் மறந்து உங்க வயசை போட்டுட்டீங்க :)))) அது 6+8 =14 தான் நான் //

   அல்லோ அது அப்படி இல்லை பிரட்டிப் போட்டால் 86 வந்திடும் அதனாலதான் இப்படிப் போட்டேனாக்கும்:)).. இதில கூட்டல் கணக்கும் தனக்கு தெரியுமாம் எனக் காட்டுறா கர்ர்:).

   Delete
  4. //அதைவிட டிசம்பர் வந்தாலே இன்னும் நெஞ்சு பஃபக்னும் :) //

   அல்லோ மிஸ்டர் உங்களுக்கெதுக்கு பக்கூப்ப்ப்ப் பக்கெண்டுது:) ஆத்துக்காரருக்கெல்லோ அடிக்கோணும்.. எங்கே என்னைத்திரும்பவும் அச்சு முறுக்குச் செய்ய விட்டிடப்போறாவோ என:).

   //அவர்தான் அதிராவின் சமீபத்து ரெசிப்பி செய்யப்போறார் //

   ஹா ஹா ஹா கர்ர்ர்:) இருப்பினும் நல்ல ஐடியா அஞ்சு, நீங்க எனில் சொதப்பி விட்டு என் மானத்தை கப்பல் ஏத்திடுவீங்க:) அவர் எனில் அச்சு முறுக்கையே சரியாக்கியவர், இதனை பதம் பிழைச்சாலும் நேராக்கிடுவார் ஹா ஹா ஹா:).

   Delete
 3. எப்பவும் ரிவர்ஸ் ஆர்டரில் வருவேன் இன்னிக்கு எனக்கு பிடிச்ச ருத்ரா படம் பார்த்து பாடலை கேட்டே பதிவில் கால் வைச்சேன் ..
  இதுவரைக்கும் கேட்டதில்லை தமிழ் பிறந்த நாள் வாழ்த்து சூப்பரா இருக்கு

  ReplyDelete
  Replies
  1. இது புதுசு என நினைக்கிறேன் அஞ்சு, தேடிய இடத்தில கண்ணில பட்டுது சூப்பரா இருக்குது ஆனா குட்டிப் பாட்டு.. இன்னும் படத்துக்கு வரவில்லைப்போலும்..

   Delete
 4. அந்த ரெயின்போ படம் செம க்ளிக் அந்த கார் மட்டும் முன்னாடி வரலைன்னா காலண்டர் போடலாம் பிரிண்ட் எடுத்து அத்தனை அழகு

  ReplyDelete
  Replies
  1. ஆத்தங்கரைக்குப் போயிருந்தால் இன்னும் நல்லா எடுத்திருக்கலாம், இது பர்த்ததும் ஒரு கிளிக்.. நானும் காரில் இருந்துதான் எடுத்தேன்.

   Delete
 5. கேக் பிறந்த கதையில் மியாவ் paw பிரிண்ட் இருக்கு ஆகவே நம்பிட்டோம்

  ReplyDelete
 6. அந்த கீ பெர்த்டே விஷயத்தில் பூஸ் வசமா மாட்டிக்கிச்சே :)

  மூன்று decade முன்னாடி 21 ஆவது பெர்த்டே கொண்டாடியிருக்கிங்க :))))))

  ஜோக்ஸ் அபார்ட் ..உங்க மாமா சொன்னதை நானும் ஆமோதிக்கிறேன் எனக்கும் காண்டில் அணைப்பது பிடிக்காது .புது வருஷத்தை ஒளிமயமான தான் துவங்கணும்

  ReplyDelete
  Replies
  1. அல்லோ என் கீபேர்த்டேப் படம் போட்டிடுவேன் ஜாக்ர்ர்தை:)

   அது வெள்ளையர்களுக்கு ஓகே, நமக்கு நாம் பார்க்கும் முறைகளுக்கு, அணைப்பதென்பது தப்பாகத்தானே தோணுது.

   Delete
 7. சந்தோஷமாக தூங்கபோறேன் குட்நைட் மியாவ் :)

  ReplyDelete
  Replies
  1. //சந்தோஷமாக தூங்கபோறேன்//

   இதுதான் தேவை.. மிக்க நன்றி அஞ்சு.

   Delete
 8. /^தீபத்தை அணைத்துக் கொண்டாடுவது தப்பு இல்லையா, எதுக்கும் குத்துவிளக்கை ஏற்றிவிட்டு பின்னர் மெழுகுதிரியை ஊதலாமே//

  அருமை எனக்கும் இது சரியென்றே படுகிறது.

  ஏஞ்சல் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  எனது பிறந்தநாளை நினைவில் வைத்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கில்லர்ஜி சகோ . டிசம்பரில் நிறைய பிரபலங்கள் நல்ல மனசுக்காரங்க தங்கமான நல்லுள்ளங்கள் பிறந்திருக்காங்க :))))))))))

   Delete
  2. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

   உண்மைதான் ஏதோ ஒரு முறையைக் கடைப்பிடிச்சால் தப்பில்லை, நமக்கு நம் கலாச்சாரமும் வேணும், வெள்ளையர்களின் கலாச்சாரமும் வேணும் என்பதனாலதான் தப்பாகிடுது. போன வருடம் வாழ்த்துச் சொல்லும்போது உங்கள் திகதி தெரிஞ்சிருக்கவில்லை, இப்போ தெரிஞ்சிட்டுது.

   மிக்க நன்றி.

   Delete
  3. //டிசம்பரில் நிறைய பிரபலங்கள் நல்ல மனசுக்காரங்க தங்கமான நல்லுள்ளங்கள் பிறந்திருக்காங்க :))))))))))//

   அல்லோ ஆராவது இதைக் கேட்டார்களா?:) கேட்டார்களா?:).

   ஹிட்லர் பிறந்ததும் டிசம்பரிலயாம்:)
   வீரப்பன் பிறந்ததும் டிசம்பரிலயாம்:)
   பூலாந்தேவி பிறந்ததும் டிசம்பரிலயாம்:)
   ஹா ஹா ஹா இன்னும் அடிச்சு விடட்டோ? இல்ல இது போதுமோ?:) கர்ர்ர்ர்:))

   Delete
 9. ஏஞ்சலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்னை ஞாபம் வைத்திருப்பார் என நினைக்கிறேன்.... நெல்லை தமிழன் ஜிஎம்பி சார் மற்றும் நேசன் அனைவருக்கும் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மதுரைத் தமிழன், எனக்கு போன மாசம். இந்த மாசம் என் பையனுக்கு மற்றும் இன்று எங்கள் திருமண நாள்.

   Delete
  2. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ட்ரூத் friend :) நீங்க my பெர்த்டேக்கு அனுப்பறதா சொன்ன அந்த 500 டாலர் இன்னும் கிடைக்கலை :)

   Delete
  3. //நீங்க my பெர்த்டேக்கு அனுப்பறதா சொன்ன அந்த 500 டாலர் இன்னும் கிடைக்கலை :)//

   அதுவா அதை அவர் வைர அட்டியல் செய்ய ஓடர் குடுத்திட்டார்:) வள்ளியின் நேர்த்தியை அடைக்கோணுமெல்லோ நான்:)..

   Delete
 10. ஏஞ்சலுக்கு மட்டும் கேக்கு மற்றவர்களுக்கு இல்லையா ஹும்ம்ம்ம்ம் பரவாயில்லை ஏஞ்சலுக்கு பண்ணிய கேக்கையாவது எங்களுக்கு ஷேர் பண்ணுங்கள் இல்லையென்றால் உங்கள் செல் போனை சார்ஜ் பண்ணினால் அது சார்ஜாகமல் போகும் என்பத்தை சொல்லி கொள்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தெரிஞ்சுக்கிட்டே நீங்க இந்த வலையில் விழலாமா? ஏஞ்சலினுக்காக அதிரா கேக் பண்ணினாங்கன்னா, அது எப்படி இருக்கும், என்ன என்ன பிரச்சனைகளைக் கொண்டுவரும்னுலாம் யோசிக்காம, உங்களுக்கும் வேணும்னு சொல்றீங்களே மதுரைத் தமிழன்.

   Delete
  2. எல்லாரும் ஆசைப்படுவதால் நான் ஒரு கேக் செய்ய நினைச்சிருக்கிறேன் :)

   Delete
  3. வாங்கோ ட்றுத் வாங்கோ..

   //இல்லையென்றால் உங்கள் செல் போனை சார்ஜ் பண்ணினால் அது சார்ஜாகமல் போகும் என்பத்தை சொல்லி கொள்கிறேன்//

   ஹையோ சார்ஜ் என்ன கரண்டெ போயிடுத்தூஊஊஊஊ:) மண்ணெண்ணெய் விளக்கிலதான் கொம்பியூட்டரை ஓன் பண்ணி ரைப் பண்ண்றேனாக்கும்:) முதலில் உங்கட வீட்டு அட்றஸ் குடுங்கோ:).

   ஹா ஹா ஹா மிக்க நன்றி ட்றுத்.

   Delete
  4. //நெல்லைத் தமிழன்Tuesday, December 04, 2018 7:25:00 am
   தெரிஞ்சுக்கிட்டே நீங்க இந்த வலையில் விழலாமா? ஏஞ்சலினுக்காக அதிரா கேக் பண்ணினாங்கன்னா, அது எப்படி இருக்கும்,//

   ஹா ஹா ஹா அஞ்சு- அதிராவை நல்லாப் புரிஞ்சு வச்சிருக்கும் ஒரே ஆள் நீங்கதான்:)).. நல்லவேளை கேக் க்கு மேலே தூவி இருப்பது எலி எச்சமோ என கேட்டுவிடுவீங்களோ எனப் பயந்து கொண்டே இருந்தென் அப்படி எதுவும் ஆகாமல் வைரவர் என்னைக் காப்பாத்திப் போட்டார் ஹா ஹா ஹா:).

   Delete
  5. ///AngelTuesday, December 04, 2018 8:41:00 am
   எல்லாரும் ஆசைப்படுவதால் நான் ஒரு கேக் செய்ய நினைச்சிருக்கிறேன் :)//

   ஐயா சாமீஈஈஈ மலையூர் வைரவா, கிழக்கனூர் கிஸ்கிஸ்தா, மேற்கூர் முனியாண்டியே... கேக் செய்வது நினைவோடயே நிக்கட்டும்:)) ஹா ஹா ஹா.

   Delete
 11. அடடே... அஞ்சுவுக்கு / ஏஞ்சலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன் பல்லாண்டு.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் :)

   Delete
 12. கேக் எல்லாம் செய்து கொண்டாடி இருக்கும் உங்கள் நட்பூ வாழ்க அதிரா... நீங்கள் இருவரும் வலையுலகில் அதிசய பிறவிகள். அனுபுக்கு இலக்கணம். இந்த நட்பும் அன்பும் என்றும் தொடர வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

   மிக்க நன்றி ஸ்ரீராம்.

   ஆனா நாங்க அடிபடுவது நீங்க பார்க்கல்லியே.. பயங்கரமா சண்டை போடுவமே அப்பப்ப இப்படி:)

   [im] http://awesomegifs.com/wp-content/uploads/epic-cat-fight-on-a-ladder.gif [/im]

   Delete
 13. இந்நாள் புழு பூச்சி பூஸ் களின் தானைத்தலைவி என்பதை அறிவேன்.

  முன்னாள் பெண்களின் புரட்சித்தலைவி என்பதை அறிய மாட்டேனே...

  தகுந்த உதாரணங்களுடன் இடம் சுட்டி விளக்குங்களேன். மேலும் அது முன்னாளாகவே ஆகிவிட்டதா என்றும் தெரிந்து கொள்ளவும் ஆவல்!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) அந்த முன்னாள் போயே போச்சு :) தற்சமயம் ஆடுகள் மேய்க்கும் பணி தான் :)

   Delete
  2. //முன்னாள் பெண்களின் புரட்சித்தலைவி என்பதை அறிய மாட்டேனே...
   //

   ஹா ஹா ஹா சரியான ஒரு கொஸ்ஸன் கேட்டீங்க ஸ்ரீராம், நானும் இதை ஆராவது கேட்க மாட்டினமோ பதில் சொல்றதுக்கு என ஏஎங்கிக் கொண்டிருந்தேனா:) கரெக்ட்டாக் கேட்டிட்டீங்க ஹா ஹா ஹா..

   அது இப்போ சின்மயி ஆதாரத்தோடு நிரூபிச்சிருக்கிறாவாமே:) ராதாரவி அங்கிளின் பெயருக்கு முன்னால இருக்கும் சிங்கப்பூரில் வழங்கும் பட்டம், சிங்கப்பூரால வழங்கப்படவில்லை, இது அவர் தனக்குத் தானே வச்சது என:)) ஹா ஹா ஹா மிச்சம் சொல்ல முடியாமல் சிரிப்பு வருது நில்லுங்கோ சிரிச்சுப் போட்டுத் தொடர்றேன்:)) ஹா ஹா ஹா..

   அப்பூடித்தான் இதுவும் போல:)) நானும் எதையும் கண்ணால காணல்ல:)) ஹையோ ஹையோ:) சரி சரி படிச்சதும் கிழிச்சு அந்த கூவத்தில போட்டிடுங்கொ ஒபிஸ் போற வழியில:) பிளீஸ்ஸ்:).

   //தகுந்த உதாரணங்களுடன் இடம் சுட்டி விளக்குங்களேன்.//

   ஹையோ இதுக்கு உதாரணம் சொல்ல எங்கின போவேன் நான்.. வலையுலகில் இல்லை பேஸ்புக்கில நடந்திருக்க வாய்ப்புண்டு ஹா ஹா ஹா:).

   ///மேலும் அது முன்னாளாகவே ஆகிவிட்டதா என்றும் தெரிந்து கொள்ளவும் ஆவல்!//

   ஹா ஹா ஹா இப்போ அதிரா இருப்பதால பொயிங்கப் பயம் அவவுக்கு:) .. ஹையோ உங்களுக்கு இப்படி எல்லாம் டவுட் வருமெனத் தெரிஞ்சிருந்தால் சொல்லியிருக்க மாட்டனே:))

   Delete
 14. கீ பர்த்டே என்றால் என்ன? மெழுகுவர்த்தி ஊதி அணைப்பதை இங்கும் யாரும் விரும்புவதில்லை. வானவில் பார்த்தாலென்ன அதிருஷ்டம் வருமாம்? கேள்விப்பட்டதில்லை.

  ReplyDelete
  Replies
  1. ///கீ பர்த்டே என்றால் என்ன?//
   பொதுவா சுவீட் 16 ஐ பெரிதாக கொண்டாடுவார்கள், பின்பு 21 ஆவது வயதில் கீ பேர்த்டே கொண்டாடுவார்கள்.. அதாவது 21 என்பது கீயைப் போட்டு பூட்டைப் பெற்றோர் திறந்து விடுவது போல கருத்து எனக் கேள்விப்பட்டேன், ஆனா இப்போ 18 வந்தவுடன் அடல்ட் எனப் பட்டம் சூட்டி திறந்து விடுகின்றனர் எல்லோ.

   Delete
  2. //வானவில் பார்த்தாலென்ன அதிருஷ்டம் வருமாம்? கேள்விப்பட்டதில்லை.//

   வானவில் காண்பது அரிதான விடயமெல்லோ. அதனாலோ என்னமோ தெரியவில்லை வனவில்லைப் பார்த்தால் லக் எனச் சொன்னார்கள் சரியா டப்போ தெரியவிலை, எங்களுக்கு அடிக்கடி தெரியும் ஆனா லொட்டரி விழுகுதில்லையே ஹா ஹா ஹா.. என் ஆத்துக்காரருக்கு மட்டும் ஒரு தடவை 100 பவுண்ட்ஸ் விழுந்துது.. எனக்கு ஒரு தடவை 7 பவுண்ட்ஸ் விழுந்துது.. அதுக்கு குறைய நிறைய கிடைச்சிருக்குது ஆனா பெரிய தொகை விழவில்லை:)) ஹா ஹா ஹா.

   Delete
 15. ஊசி இணைப்புக்கு சிரித்தேன். ஊசிக்குறிப்புக்கு சிந்தித்தேன்....

  ReplyDelete
  Replies
  1. ஊசிக்குறிப்பு உண்மைதானே... குழந்தையாயினும் பெரியவராயினும் அவர்களின் செயலைப் பொறுத்துத்தானே மதிப்புக் கூடுவதும் குறைவதும்:)..

   Delete
 16. போன வருடம் 66 வயசு... இந்த வருடம் 68 வயசா? நல்லா இருக்கு கணக்கு!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அதனால்தானே முன்னெச்சரிக்கையாக நேற்றே உங்கள் பக்கத்தில் நெல்லைத்தமிழனுக்குச் சொல்லிட்டனே அஞ்சுவுக்கு மட்டும் வருடம் 2 பேர்த்டே வருமென ஹா ஹா ஹா.. அடுத்த வருடம் 70 அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).

   இதை வச்சே அவ என்னைத் திருப்பி அடிப்பா:) அப்படிச் செய்யாமல் புதிசு புதுசா ஜிந்திக்க ஜொள்ளுங்கோ ஸ்ரீராம்:)) அதிராவைப்போல ஹா ஹா ஹா ஹையோ ஹையோ:))

   மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

   Delete
 17. எத்தனையோ பேரை வாழ்த்திட்டீங்க அதிரா ஆன்டி.... இன்று எங்கள் திருமண நாள். அதற்கும் சேர்த்து வாழ்த்திடுங்க

  ReplyDelete
  Replies
  1. ///அதிரா ஆன்டி...///
   சட்டை கிழிஞ்சுதுன்னா.. தச்சு முடிச்சிடலாம்.. நெஞ்சு கிழிஞ்சிடுச்சே.. ஹையோ அது ஒண்ணுமில்லை சிட்டுவேசன் சோங் பிபிசில போகுதூஊஊஊஊஉ:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. சரி சரி நல்லநாள் பெருநாளில உங்களை எப்பூடிப் பேச முடியும்?:) அந்த தைரியத்திலதானே இப்பூடிச் சொல்லிட்டீங்க.. போனாப்போகுது:) ஆனா அஞ்சு, கீதா மட்டும் இதை பார்த்திடக்கூடாது முச்சந்தி முனியாண்டியே காப்பாத்துங்கோ:)..

   ஹப்பி அனிவெசரி நெலைத்தமிழன்.. மேலே உங்களுக்காக இணைச்சிருக்கிறேன் போஸ்ட்டில் படிக்கவும்.. நேரமில்லை பின்பு வருகிறேன்.

   Delete
 18. ஏஞ்சலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொல்லிக்கறேன். தயவு செய்து கடையில் வாங்கிய கேக்கை எனக்குக் கொடுக்கவும். தேவதைக் கிச்சனிலிருந்து அல்ல

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன் ..உங்களுக்கும் இன்று திருமணநாள் என்பது இனிய ஆச்சர்யம் ..எனக்கு இந்த நாள் பல வருஷமுன் வெளிநாட்டில் முதலடி வைத்த நாளும் கூட நான் மணமாகி பிராங்ப்பர்ட் வந்திறங்கிய நாள் .தேவதை கிச்சனில் இருந்து vegan கேக் வரலாம் விரைவில் :)

   Delete
  2. ஹலோ மேடம்..... நான் தி.பதிவுக்கு என் மகள் செய்த இரண்டுவித கேக் செய்முறை எழுதிக்கிட்டிருக்கேன். இரண்டு வெவ்வேறு தி. பதிவுல வரலாம்.

   நீங்க இதற்கிடையில் அதே மாதிரி கேக் செஞ்சு செய்முறை அனுப்பிடாதீங்க ஹா ஹா.

   Delete
  3. ஏஞ்சலின்... வாழ்க்கை இப்போதுபோல எப்போதும் உங்களுக்கு நன்றாகப் போகட்டும்.

   அதிரா உங்களுடன் அதே அன்புடன் இருக்கட்டும். உங்களுக்காக கேக் செய்து படம் போட்டிருக்கிறாரே... அந்த அன்புக்கும் பாராட்டுகள்.

   Delete
  4. @ நெல்லைத்தமிழன் தாங்க்யூ தாங்க்யூ :)

   [im]https://i.pinimg.com/originals/7f/52/02/7f5202031c016df6c6eaf60b62dc14c0.jpg[/im]

   Delete
  5. @நெ.த
   //தேவதைக் கிச்சனிலிருந்து அல்ல//
   ஹா ஹா ஹா இனியும் அவ டேவடைக் கிச்சினைத் திறப்பா என்று நம்புறிங்களோ?:).

   //நீங்க இதற்கிடையில் அதே மாதிரி கேக் செஞ்சு செய்முறை அனுப்பிடாதீங்க ஹா ஹா.//
   ஹா ஹா ஹா சைவக் கேக் பற்றிப் பேசுகினம் போல:) நமக்கு இங்கென்ன அலுவல்:)).

   //அதிரா உங்களுடன் அதே அன்புடன் இருக்கட்டும்.//
   அவ எப்பவும் சொறி சொல்லும் பழக்கம் இல்லை நெ.தமிழன்:) சொறி சொல்லச் சொல்லுங்கோ அதிராவுக்கு:).. தான் பிழை விடல்லியே என வாதாடுவா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மீ பாவம் ஆமா ஆமா:)) ஹா ஹா ஹா மிக்க மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்:))

   Delete
  6. @அஞ்சு
   //தேவதை கிச்சனில் இருந்து vegan கேக் வரலாம் விரைவில் :)///

   விடுங்கோ விடுங்கோ என்னை விடுங்கோ எனக்கு பெயர் பார்த்ததுமே ஹெட் சுழலுதே அப்போ ரெசிப்பி வெளி வந்தால் நான் தேம்ஸ்லதானே மிதப்பேன்:).. அப்போ சோயா பட்டரிலயா செய்யப்போறீங்க அவ்வ்வ்வ்வ்வ்:))

   Delete
 19. இந்த இடுகையைப் படிக்கும்போது, இலங்கை வானொலியில் வந்த பிறந்த நாள் அறிவிப்பு (வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அப்பம்மமா, அம்மம்மா... பிறகி, பிறந்தநாள் இன்று பிறந்த நாள்.. நாம் பிள்ளைகள் போலே... பாடலும்) மனதில் வந்து போனது

  ReplyDelete
  Replies
  1. அதேதான் எனக்கு எப்பவுமே பிறந்தநாள் என்றாலே அப்பாடல்தான் மனதில் வரும் கூடவே கவலையும் வரும், ஏனெனில் சின்ன வயதில் ஸ்கூலுக்கு வெளிக்கிட்டு, அப்பாவுக்காக வெயிட் பண்ணும்போது அப்பாடலும் பிறந்தநாள் வாழ்த்தும் போகும்:(.. அவை எல்லாம் இனி திரும்பி வரவே முடியாத நாட்கள் எல்லோ...

   இன்றைய நாளும்தானே.. இன்று முடிஞ்சிட்டால் திரும்ப வரப்போவதில்லை, அதனால ஒவ்வொரு நாளையும் மகிழ்வாகக் கழிக்க முயற்சி செய்வோம்.

   Delete
 20. ஊசிக்குறிப்பு அருமை வழக்கம் போல். அஞ்சுவுக்கு நிஜம்மாவே பிறந்த நாளா? இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அதைக் கொண்டாடும் உங்களுக்கும் வாழ்த்துகள். அஞ்சுவுக்கு 68 வயசுன்னா உங்களுக்கு? 108 தானே? இல்லைனா அதுக்கும் மேலேயா?

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிக்கா ..கீதாக்கா போன வருஷம் ஜீரா /சுருள் போளி செஞ்சீங்க என் பெர்த்டேக்கு :)
   அந்த பூனைக்கு 145 க்கும் மேலேக்கா :))))))))

   Delete
  2. வாங்கோ கீசாக்கா வாங்கோ...

   //அஞ்சுவுக்கு நிஜம்மாவே பிறந்த நாளா?// நிஜம்மா அதுவும் 68 ஆவது கீசாக்கா அறுபத்தி எட்டு:) எழுத்திலும் ஜொள்ளியிருக்கிறேன்:)).

   //உங்களுக்கு? 108 தானே? /

   ஹா ஹா ஹா இதென்ன இது போலீசூஊஊஉ நெம்பர் போல இருக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   //அந்த பூனைக்கு 145 க்கும் மேலேக்கா :))))))))//

   அது கீசாக்கா ஒண்ணே முக்காலை, செல்லமா 1..45 எனச் சொல்லுறா அஞ்சு:)) ஹா ஹா ஹா:).

   Delete
 21. இந்தக் கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடுவது நமக்கெல்லாம் இல்லைனாலும் மெழுகுவர்த்தியை அணைப்பதற்குப் பதில் ஏற்றலாம் என்பதில் நான் உடன்படுகிறேன். மற்றும் இந்த மாசம் பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் கீசாக்கா. இனியாவது நம் குழந்தைகளுக்கு குத்து விளக்கேற்றிக் கேக் கட் பண்ணும் முறையைக் கொண்டு வருவோம்:).

   Delete
 22. ஆப்பி பேர்த்டே அஞ்சு, நலமோடும் செழிப்போடும், சந்தோசத்தோடும் நீடுழி வாழ வாழ்த்துகிறோம்... //

  முதலில் ஏஞ்சலுக்கு வாழ்த்து சொல்லிக்கிறேன் உங்களோடு சேர்ந்து.
  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன் .

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கோமதி அக்கா :)

   Delete
 23. கேக் அலங்கரிப்பு, விளக்கு எல்லாம் வைத்து அழகு அதிரா.
  உங்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. முதலில் ஏதும் ஜேசு படம் மேரி படம் அப்படி குயிலிங்கில் செய்யலாம் என நினைச்சேன், ஆனா உருவங்கள் கும்பிடும் வழக்கம் இல்லை எனச் சொல்லிட்டா, அதனால அதைக் கைவிட்டுப் போட்டு கவிதை எழுதலாம் என ஓசிச்சேன்.. நேரமே கிடைக்கவில்லை சிந்திக்க, எனக்கு அவசரத்துக்கு கதையோ கவிதையோ வராது, ஆனா டக்கென உதிக்கும் அதனால அதையும் விட்டுப்போட்டு... திடீர் நினைவாக கேக் செய்ய தொடங்கினேன்.
   மிக்க நன்றிகள்.

   Delete
 24. ஸ்பெஷல் இணைப்பில் நீங்கள் சொன்ன அத்தனை அன்பர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் என்று உங்களுடன் இணைந்து வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கோமதி அக்கா :)

   Delete
 25. ஊசி இணைப்பு, ஊசிக்குறிப்பு அனைத்தும் அருமை.

  ReplyDelete
 26. சிறப்பான பிறந்தநாள் பாடல் .
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் மிக்க நன்றிகள்... லால லால லாலாஆஆஆஆஆ .. நல்லா இருக்குதெல்லோ ஆரம்பமே...

   Delete
 27. Replies
  1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி துரை அண்ணா :)

   Delete
 28. ஓ!!!! ஏஞ்சல்!!! நீங்க நிஜமாகவே ஏஞ்சல்! மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் ஏஞ்சல். காட் ப்ளெஸ்!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க கை பிடிச்சு தட்டா மாலை சுத்துவோம் :) ஹாஹா மிக்க நன்றி வாழ்த்துக்களுக்கு கீதா

   Delete
 29. சகோதரி ஏஞ்சல் பிறந்த நாள் வாழ்த்துகள்! ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியுடன் என்றென்றும் வாழ்ந்திட இறைவனின் அருள் கிடைத்திட பிரார்த்தனைகளூடன் வாழ்த்துகள்.

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி துளசி அண்ணா :)

   Delete
 30. ஊசி இணைப்பு ஹா ஹா ஹா ஹா ஹா....

  ஊசிக்குறிப்பு அருமை அதிரா..

  கெதா

  ReplyDelete
  Replies
  1. //கெதா//

   வாங்கோ கீதா, துளசி அண்ணன் வாங்கோ.

   எப்போ கீதா பெயர் மாத்தினீங்க? ஓ பெங்களூர் போனதும் கர்நாடகாவில பெயர் வச்சிட்டீங்க போல ஹா ஹா ஹா:).

   Delete
 31. ஏனல் கவனிச்சீங்களா அது என்னன்னு 68 ஆமே....பாருங்க!! அவங்க வயசை குறைச்சு போட்டு உங்க வயசாம்.... பூஸாரின் வாலைப் பிடியுங்க...இதோ வரேன் சேர்ந்து பிடிக்கலாம்....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அது நடுவில் + போட மறந்து அவங்க வயசை போட்டுட்டாங்க மியாவ் கீதா :)

   Delete
  2. [im] http://ecdn.funzypics.com/grumpycatmemes/pics/16/Kitty-Fighting-With-The-Evil-FINGER---Animated-GIF.gif [/im]

   Delete
 32. அதிரா ஐசிங்க் செட் வாங்க நினைத்தால் கோன் பேக்ஸ் வாங்காதீங்க....இதோ இங்க லிங்க் கொடுக்கறேன் பாருங்க இதில் ஏதாவது வாங்கலாம்...அங்கு கடைகளில் இருக்கும் நிறைய....

  https://www.google.co.in/url?sa=i&source=images&cd=&cad=rja&uact=8&ved=2ahUKEwj3x_3ouIXfAhXJZSsKHTBVBkIQjRx6BAgBEAU&url=https%3A%2F%2Fwww.bhg.com%2Fshop%2Fmeigar-meigar-1pcs-cake-piping-gun-plus-4pcs-piping-nozzle-tips-stainless-steel-icing-syringe-gun-set-with-4-piping-metal-cake-nozzles-for-cake-sugarcraft-decorative-tool-set-pa41448cbb3a9271f4f6c4ade0bf2e917.html&psig=AOvVaw17jJ3wbhFM4I8hiclMIXuT&ust=1543987742486863

  https://www.google.co.in/url?sa=i&source=images&cd=&cad=rja&uact=8&ved=2ahUKEwj8nvyZuYXfAhVZWX0KHW9_BU8QjRx6BAgBEAU&url=https%3A%2F%2Fwww.laabai.lk%2Fshop%2Ficing-syringe-10340-9%2F&psig=AOvVaw17jJ3wbhFM4I8hiclMIXuT&ust=1543987742486863

  இது போன்றவையோ அல்லது இன்னொரு விதம் உண்டு....அது ரொம்பவே எளிதாக செய்யவும் க்ளீன் செய்யவும் எளிதாக இருந்தது....அதன் படம் கிடைக்கவில்லை...அது அமெரிக்காவிலிருந்து என் உறவினருக்கு அவர் தங்கை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்திருந்தார். அதன் ப்ரான்ட் பெயர் நினைவில்லை. அது ரொம்ப எளிதாக வந்தது...

  நெட்டில் கிடைத்தால் இங்கு லிங்க் தரேன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இதில் முதலாவது லிங் வேலை செய்யவில்லை கீதா.
   2 வது லிங்கில் இருப்பதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன், பெயர் சரியாக தெரியாமல் இருந்தேன், இதுதான் இலங்கையில் வச்சிருந்தேன், ஆனா இங்கு இப்படிக் கிடைக்குதில்லை, முன்பு எங்கோ பார்த்தேன் இங்கும் கனடாவிலும், நொசில்ஸ் ஐ பொலித்தீன் பாக்கில் போட்டுச் செய்வது போலத்தான் கிடைக்குது.

   இனி ஒன்லைனில் தேடி வாங்கோணும். மிக்க நன்றிகள் கீதா லிங்குக்கு.

   Delete
 33. பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் நம் எல்லோரது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  சொல்லியாச்சு அதிரா. இலங்கை வானொலி போல எல்லாரையும் சொன்னது சூப்பர்!!!

  அதிரா கேக் ரொம்ப அழகா வந்திருக்கு...ஐசிங்கும் நன்றாகவே இருக்கு அதிரா.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. //ஐசிங்கும் நன்றாகவே இருக்கு அதிரா//
   இல்ல கீதா எனக்கு பெரிதாக திருப்தி இல்லை, முன்பு நல்ல அழகாக செய்திருக்கிறேன், இது குட்டிப் பொலித்தீன் பாக் பாவித்துப் போட முடியவில்லை, அத்தோடு பாக்கின் துவாரமும் கிழியத் தொடங்கிட்டுது... இடைவெளிகளுக்குள் குடுத்துப் போடுவதும் கஸ்டமாக இருந்துது கர்ர்ர்ர்ர்ர்:)).

   ஆனாலும் பேர்த்டே க்கு செய்துவிட்டேன் எனும் திருப்தி..

   மிக்க நன்றிகள் கீதா.

   Delete
 34. // எங்கள் மாமாவும் இருந்தார், அப்போ மெழுகுதிரி கொழுத்தி அணைப்பதை அவர் விரும்பவில்லை, அவர் சொன்னார், தீபத்தை அணைத்துக் கொண்டாடுவது தப்பு இல்லையா, எதுக்கும் குத்துவிளக்கை ஏற்றிவிட்டு பின்னர் மெழுகுதிரியை ஊதலாமே என, அது சரியாகவே பட்டுது, அதனாலேயே இதிலும் குத்துவிளக்கு வைத்திருக்கிறேன், 4ம் திகதி ஏற்றிடுவோம்:)..//

  அதே தான் ஆனால் அதிரா எங்கள் வீடுகளில் குத்து விளக்கு ஏற்றவில்லை என்றாலும், கேண்டிலை ஏற்றி அணைக்காமல் அதை ஏற்றி விட்டு அதாவது ஏற்றும் போது எல்லாரும் பாடுவார்கள் அப்படிக் கொண்டாடுவதுண்டு. அணைப்பதில்லை ஆனால் கேண்டில் எரிந்து மெழுகு கேக்கில் வழியக் கூடாது என்று கேக்கின் முன்னில் ஒரு தட்டு வைத்து அதில் ஏற்றுவார்கள்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஓ.. அது நல்ல முறைதான் ஆனா நாம் இங்கு அதைக் கடைப்பிடிக்கவில்லை, பிள்ளைகளே போட்டி போட்டு அணைத்து விடுவார்களே ஹா ஹா ஹா... அதுக்குள் பேர்த்டேக்காரரை ஊத விடாமல் மற்றவர் ஊதிப்போட்டார் எனவும் பிரச்சனை வந்துவிடும் ஹா ஹா ஹா..

   மிக்க நன்றிகள் கீதா அனைத்துக்கும்.

   Delete
 35. நலமோடும் செழிப்போடும், சந்தோசத்தோடும் நீடுழி வாழ வாழ்த்துகிறோம்...


  நாங்களும் அதிரா..


  அன்பு தேவதைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..தங்கள் நாட்கள் என்றும் மகிழ்ச்சியாக ,,சிறப்பாக அமையட்டும்..


  அதிரா கேக் அருமை,..j தான் ரொம்ப அழகு ( j யை எடுத்துட்டா anu வருது ,,,ஹா ஹா)


  அஞ்சுவிற்கும் ...பிறந்தநாள் கொண்டாடும் நம் சுற்றத்தார் அனைவருக்கும் எனது அன்பு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அனு :)

   Delete
  2. வாங்கோ அனு வாங்கோ... ஹா ஹா ஹா கரெக்ட்டாச் சொல்லிட்டீங்க ஜே ஐ எடுத்திட்டால் அனு.. ஹா ஹா ஹா.. மிக்க நன்றிகள்.

   Delete
 36. அனைவரின் வருகைகும் நன்றி.. கோச்சுக்கக்கூடாஅது கேக்கில் ஆரும் டச்சு பண்ணக்கூடாது:) கட் பண்ணோனுமெல்லோ:) பின்பு வாறேன்.

  ReplyDelete
 37. அதிரா... உங்களை மாதிரி வயதில் ரொம்ப பெரியவங்ககிட்ட இருந்து 68 வயதான (நீங்க சொல்லியிருக்கீங்க. நான் சொல்லலை) ஏஞ்சலினுக்கு ஆசீர்வாதம் கிடைக்கறது ரொம்ப அபூர்வம். ஏஞ்சலின் கொடுத்துவச்சவங்க.

  ReplyDelete
  Replies
  1. ஹஹ்ஹா :) வெல்டன் இப்படித்தான் வாரி விடணும் :)

   Delete
  2. @நெ.த
   https://www.bing.com/th?id=OIP.HSoquTQRmINWlc7hyGR7BwHaEo&w=300&h=187&c=7&o=5&pid=1.7

   Delete
 38. ஐயையோ... இப்போதானே எனக்காக நீங்க போட்ட கேக் படத்தையும் வாழ்த்தையும் பார்த்தேன்.... அதிரா... உங்களைப் பத்தி எழுதினதெல்லாம் வாபஸ் வாங்கிக்கறேன். நீங்க எப்போதும் 16தான்.

  அது சரி, நான் என்னத்தை வித்தேன். //பின்னூட்ட வித்துவான்:) // என்று எழுதியிருக்கீங்களே.

  ReplyDelete
  Replies
  1. // அதிரா... உங்களைப் பத்தி எழுதினதெல்லாம் வாபஸ் வாங்கிக்கறேன். நீங்க எப்போதும் 16தான்.//

   ஹா ஹா ஹா இப்போ உண்மை வெளியே வந்திடுச்சூஊஊஊ:) எல்லாம் மேலே அந்தக் கறுப்புப்பூனை சீறுவதைப் பார்த்துத்தானே:)).. பொய் எப்பவும் நிலைக்காது தெரியுமோ?:) உண்மை வெளியே வந்தே தீரும்.. சுவீட் 16 ஐச் சொன்னேன் ஹா ஹா ஹா:).

   //அது சரி, நான் என்னத்தை வித்தேன்.//

   ஹா ஹா ஹா அதுவா :) யோசிச்சுப் போட்டுச் சொல்லுறேனே:)) ஆவ்வ்வ்வ்வ்வ்:)..

   Delete
 39. @
  நெல்லைத்தமிழன் இனிய மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள் :)

  [im]https://s-media-cache-ak0.pinimg.com/originals/8f/38/00/8f380058167359a2a5052d337220f6de.jpg[/im]

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஏஞ்சலின்.

   எனக்குப் புரியுது. உங்க பிளாக்குகளைத் திறந்தால் டஸ்ட் அலர்ஜி உங்களுக்கு வந்துடும்னு, இங்க எனக்கு வாழ்த்தைத் தெரிவிச்சிருக்கீங்க. மிக்க நன்றி.

   எதுக்கும் கேக் இடுகைக்கு முன்னால் தேவதைக் கிச்சனை கிளீன் பண்ணிக்கோங்க. கிச்சனுக்கு மூடுவிழா நடத்தி ஆறு மாதம் ஆகியிருக்குமில்லையா? ரொம்ப தூசி தும்பட்டை இருக்கப்போகுது. பார்த்து..

   Delete
  2. முதல்ல கிச்சினுக்கு பெனாயில் அல்லது பிலீச்ச்ச் போட்டுக் கழுவச் சொல்லுங்கோ நெ தமிழன்:) ஹா ஹா ஹா:)..

   Delete
 40. நம்ப முடியவில்லை வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சார் :)

   Delete
  2. அஞ்சுவின் வயசைத்தானே சொல்றீங்க ஜி எம் பி ஐயா?:) ஹா ஹா ஹா என்னாலயே நம்ப முடியவில்லை:) நேற்றுத்தான் 66 கொண்டாடியதுபோல இருக்கு அதுக்குள் 68 அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஹா ஹா ஹா:)).

   Delete
 41. அனைவருக்கும் வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ டிடி :)

   Delete
 42. Replies
  1. மிக்க நன்றி சகோ வெங்கட் :)

   Delete
 43. இனிதே பிறந்தநாள் முடிந்தது மிக்க மகிழ்ச்சி, வாழ்த்திய வரவு தந்த அனைவருக்கும் நன்றிகள்....

  அஞ்சுவுக்காக அந்தாட்டிக்காவில் ஸ்பெஷல் ஓடர் கொடுத்துச் செய்த இந்த வைரக்கல் பதித்த அழகிய கோட் இஸ் பெண்டனை பரிசளிக்கிறேன்ன்ன்.. இதன் விலை என்ன தெரியுமோ? ஒரு கோடி...ப்பூ.. ஒரு கோடி:))..[[சிவகார்த்திகேயனைப்போல .. நீ பார்த்த?:) எண்டெல்லாம் கேய்க்கப்பூடாது:)]]

  [im] https://tse1.mm.bing.net/th?id=OIP.Pfymb8j4yVZGnkpkv0VzKAAAAA&pid=Api&w=240&h=300&rs=1&p=0 [/im]

  ReplyDelete
 44. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணா :)

   Delete
 45. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அஞ்சு. மன்னிக்கவும் மிக தமதமான வாழ்த்துக்கு)

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு நன்றி ப்ரியா :)

   Delete
 46. அதிரா கோணக்க மானக்கவாக இருந்தாலும் (ஹா..ஹா..) கேக் அழகா இருக்கு.
  வானவில் பார்த்தால் லக் என ஜேர்மன்காரர்களும் சொல்வார்கள்.
  டிசம்பர் மாதம் பிறந்தநாள்,திருமணநாள் கொண்டாடும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.