நல்வரவு_()_


Saturday 25 May 2013

வெ...ளாடலாம் வாங்கோ:)

ஐ மீன்... “டிஸ்னி” ல:).
ன்னடா அதிரா ஓய்ஞ்சுபோயிட்டாவே.. இனி ஃபிரான்ஸ் படங்கள் இல்லையாக்கும் என நினைச்சு நிம்மதியா இருந்திருப்பீங்க:) அதுதான் இல்ல..:) அதிரா.. மீ...  றிரேன்:).

பரிஸ்.. என்றாலே நினைவுக்கு வருவது "DISNEY WORLD"  தானே. அங்கு இரண்டு வகையான உலகமாகப் பிரிச்சு வச்சிருக்கினம், ஒன்று விளையாட்டுக்களுக்காகவும், இன்னொன்று அதிகமாக மூவி தயாரிப்பதுபோலவும், அது சம்பந்தமானதுமானது. இரண்டுமே சுற்றிப் பார்க்க, அதுவும் அழகாக ரசிச்சுப் பார்ப்பதாயின் குறைந்தது 3 நாட்களாவது தேவை.

நாங்கள் உள்ளே போன நேரத்தை மிக்கி மவுசார் தொட்டுக் காட்டுவது தெரியுதோ?:).
உள்ளே போனால், நடந்தே முடிக்க முடியாது.. அவ்ளோ பெரிய இடம்..

நாங்கள் ஹயர் பண்ணிய வான் ட்ரைவர் சொன்னார்.. “எதுக்கு டிசுனிக்கு:) ப்போறீங்க, அதைவிட நல்ல நல்ல பார்க்குகள் இருக்கு, அங்கு போய் ஏன் காசை அதிகம் வீணாக்குறீங்க என.  நாம் போன நேரம், இரு உலகமும் பார்ப்பதாயின் 79 யூரோக்கள். ஒன்று மட்டும் பார்ப்பதாயின் 69 யூரோக்கள். விலையில் பெரிய வித்தியாசமில்லை. ஆனால் ஒன்று பார்க்கவே ஒருநாள் போதாதே. அடுத்தநாளுக்கு ரிக்கெட் பாவிக்க முடியாதுதானே.

சிறியவர்களுக்காக எல்லாம் நிறைய விளையாட்டுக்கள் இருக்கு.

நாங்கள் உள்ளே நுழைந்ததும்.. ஒரு பக்கமாகப் போய், இதென்ன பெரிய விஷயம், நாங்க ஏறாத ரோல ஹோஸ்டரோ என ஒன்றில ஏறி இருந்திட்டோம்:))... ஹையோ முருகா நான் கூப்பிடாத தெய்வமில்லை:).. அதை தலை கீழாக எல்லாம் சுழட்ட வெளிக்கிட்டு விட்டது. ஏறி இருந்ததும் மூடிய கண்:), இருப்பிடத்துக்கு வந்ததும்தான் திறந்தேன்:).. ஒவ்வொரு முறையும் இப்படித்தான், ஆனா ஏறுவதை நிறுத்தவே மாட்டேன்ன்:) அதிராவோ கொக்கோ:).
========================================

இதில் தெரிகிறதே.. இதுதான்  “டிஸ்னி காசில்”, ரோய் ஷொப் களில் பார்த்திருப்பீங்க, பெண்பிள்ளைகளுக்காக, குட்டி குட்டியாக இது விற்பனையாகும்.


இது சுற்றுவர லேக்போல செய்து, நடுவிலே மண் புற்றுப்போல ஒரு காசில் கட்டி வச்சிருக்கினம். தூரப் பார்க்க கழிமண்ணினால் கட்டியதுபோலவே இருந்துது, கிட்டப் போய்ப் பார்த்தால் அத்தனையும் பிளாஸ்டிக்.

 இதிலே ரோலர் ஹோஸ்டர் ரெயின் ஓடித்திரிகிறது, இது பார்க்கப் பயம் ஆனா ஏறி இருந்தால் சூப்பராக இருந்துது. ரெயினில் சுழட்டி அடித்தது என்னமோ ஐந்தே ஐந்து நிமிடங்கள்தான், ஆனா அதுக்காக கியூ:) வரிசையில்:) காத்திருந்தது.. நம்ப மாட்டீங்க சரியா ஒரு மணித்தியாலம். ஆனா இனி summer ரைமில் எனில் 2,3 மணித்தியாலங்கள் கியூவில் நிற்கவேண்டி வருமாம். நாம் போனது நல்ல நேரம்:).. God is great பாருங்கோ:)).

கீழே இருக்கும் படத்தில் பாருங்கோ ரெயின் பெட்டிகளும் ஆட்கள் இருப்பதும் தெரியுதெல்லோ:).. அனைத்தும் ஆதிகாலம்போல கறள் பிடித்த இரும்புபோல அமைத்திருக்கினம் ரெயினை.

========================================
அங்கு "Molly Brown" என ஒரு ஷிப்பும் சுற்றி வந்தது எம்மை ஏற்றிக்கொண்டு.
========================================
%%%%%%%%%%%%%%%%%%%%--இடைவேளை--%%%%%%%%%%%%%%%%%
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்னாதிது , இப்பத்தானே “இடைவேளை” வந்திருக்கு:) அதுக்குள் ஒரே அடைமழையாக் கொட்டுதே:)).. ஐ மீன்... பின்னூட்டங்களுக்குச் சொன்னேன்:).

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இதில் தூர ஒரு பில்டிங் தெரியுதெல்லோ இதுதான் hunted house எனப்ப்டுவது, கிட்டத்தட்ட பேய்வீடுபோல இருக்கும். லைட் இருக்காது, ஒரே மயான அலறல்கள்போல ஒலிகள் இருக்கும்.ொரு ரெயினில் ஏறி இருக்கோணும்... அது இருட்டுக்குள் சுற்றி சுற்றி ஓடும்:) நாம் பயந்து நடுங்கிக் கொண்டு, ஆரோடு ஆர் இருப்பதென பதறிக்கொண்டு ஏறினோம், ஆனா பயந்தளவுக்கு பெரிதாக பயம் இருக்கவில்லை. சில இடங்களில் எலும்புக்கூடெல்லாம் தோளில தட்டும்:).. இங்கு அப்படியிருக்கவில்லை.. Thank GOD:).
=========================================

இது ஓரிடத்தில் NEW WORLD என ஒரு BOAT TRIP  செய்து இருக்கினம், அதில் ஏறி இருந்தால். ஒரு புது உலகை சுற்றி வரும் ஃபீலிங் கிடைக்கும். 

 BOAT போவது தெரியுதோ?..
என்ன புறுணம்:) எனில்.. உலகிலுள்ள அத்தனை நாடுகளையும் குட்டி குட்டியாக வடிவமைச்சிருக்கினம், நாம்தான் படம் பார்த்துக் கண்டுபிடிக்கோணும் எந்த நாடென்பதை.

அவசரமாக படமெடுத்ததில் சில நாடுகளே அகப்பட்டது... இது அஃப்றிக்காவெல்லோ?:)
 இது சிவனின் உருவம் தெரிந்தது பார்த்ததும் ஒரு பரவசமாகிட்டேன்ன் இங்கயுமா என:)...

 இது எங்கட முகப்பெருமானின் அண்ணனெல்லோ...
========================================

இதில் கங்காருப்பிள்ளை இருக்கிறார்.. அப்போ ஒஸ்ரேலியா..
========================================
இது எந்த நாடாக இருக்கும்?..
========================================
இன்னும் எத்தனையோ எத்தனையோ இருந்துது.. படம் போட்டதில நானே களாஇச்சுட்டேன்:) அப்போ உங்கட கதி?:)) அதனால பெரிய மனது பண்ணி டிஷ்னி வேல்டை விட்டு வெளில வாறேன்ன்..:).. இது சின்னவருக்காக “மிக்கி மவுஸாரையும்” சந்தித்தோம்:)) எனக்கும் காண்ட் சேக் பண்ணினாரே:) என்னா தைரியம்?:) ஆனா நான் பிராண்டி.. கடிச்சு ஒண்ணும் பண்ணல்ல:).. மீ தான் குட் கேள் ஆச்சே:) சின்ஸ் 6 இயேர்ஸ்ஸ்:)..

 இதுதான் மறு பக்கத்தில் இருந்த, நான் ஆரம்பத்தில் சொன்ன மூவி வேல்ட்.. அங்கு போகவில்லை.. அடுத்ததடவை பார்க்கலாம்ம்..:). இறைவன் நாடினால்:)

ஊசி இணைப்பு:
டிசினி:) வேல்டின்மீது ஆணையாக, இதை நான் எங்கேயும் களவெடுக்கவில்லையாக்கும்..:) இவர் அந்த ஷிப் போகும் லேக்கில் இருந்தார், அவருக்கு பொப்கோன் போட்டதும் படமெடுக்க விட்டார்ர்.. கடைக்கண் போஸும் தந்தார்ர்... எங்கட சொந்தக் கமெராவில:) கிளிக் பண்ணி வந்தேனாக்கும்:)..
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
“ஒரு சோற்றுப் பருக்கையின் மதிப்பு,சிதறவிட்ட நமக்குத் தெரியாது.. 
அதை எடுத்துச் செல்லும், எறும்புக்குத்தான் தெரியும்”


இதை மக்களுக்காக இங்கின சொன்னவர்:...
பெருமதிப்பிற்குரிய, மேன்மைதங்கிய:),அன்பும் பண்பும் + அதிக பாசமும் நிறைந்த:), விட்டுக்கொடுக்கும் தன்மை அதிகமுள்ள:)அடுத்தவரை அடக்கியாளும் குணமற்ற:)மிகமிக நல்ல குணங்கள் அதிகமுள்ள:), சொல்வழிகேட்கும் தன்மை நிறைந்த:), அதி புத்திசாலியாக இருக்கும்:).. புலாலியூர் பூஸானந்தா அவர்கள்:)..

உஸ்ஸ்ஸ்ஸ்..., நானும்தான் பிறந்தன்றிலிருந்து, பதினாறு வருஷமா:).. அதாவது இன்றுவரை:) ஆராவது நம்மளை இப்பூடியெல்லாம் சொல்லுவினமோ.. சொல்லுவினமோ:) என்றால்.. ம்ஹூம்ம்.. ஒருசனமும் சொல்லீனமில்லை:) அதுதான் டக்கென மாத்தி ஓசிச்சு.. நம்மளை நாமளே புகழாட்டி:), அடுத்தவர்களா புகழ்வாங்க எனும் முடிவுக்கு வந்திட்டேன்ன்:). பூஸோ கொக்கோ:).
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஆரோ ஓடி வாறமாதிரி இருக்கே:)
=============================================================

Saturday 11 May 2013

அதிராவின் "சிக்கின் சமோசா"..

சாப்பிட வாங்கோ.. வாங்கோ வாங்கோ.. அனைவரும் வாங்கோ:)

அதிராவோ கொக்கோ..:)

த்தனை நாள்தான், நானும் சமோசா செய்ய வெளிக்கிட்டு, எப்படி மடிப்பதெனத் தெரியாமல், பன்னாக்கி(bun) முடிச்ச கதை சொல்லுவது?:).. இப்படியாக நொந்து போய்.. சமோசாவே வாணாம் என முடிவெடுத்தவேளை.. அஞ்சு அழகா செய்து போட்டிட்டா:).. விடுவனோ நான்:) பொயிங்கிட்டேன்ன்ன்:)..

ஆனா உண்மையில அஞ்சுதான் பல வழிமுறைகள் சொல்லி.. பஞ்சாபி அங்கிளைப் பார்க்க வச்சதால:) ஐ மீன் ஊ ரியூப்ல:) அவர் செய்யும் செய்முறையைச் சொன்னேன்:)... மீயும் பஞ்சாபி சமோசாவே செய்தேன். அவர்கள்தான் சுருளாகச் செய்து மடிப்பார்களாம். அது எனக்கு இலகுவாக இருந்துது.

இதற்காக நான் கறிக்குப் பயன் படுத்தியது. சிக்கின், உ.கிழங்கு, லீக்ஸ் வெங்காயம், மிளகாய்த்தூள் உப்பு.

வெங்காயம் வதக்கி,பூண்டு இஞ்சி சேர்த்து, அதனுள் சிக்கினைப் போட்டு, தண்ணி சேர்க்காமல் நன்கு வதக்கி, பின் கொஞ்சம் தண்ணி விட்டு அவியவிட்டு, தூள் உப்பு சேர்த்து, கறிப்பதமாக பிரட்டலானதும், லீக்ஸ் சேர்த்து.

சிறிது நேரத்தில் குக்கரை ஓவ் பண்ணி, அவித்து வைத்திருந்த கிழங்கைச் சேர்த்து பிரட்டி, கொஞ்சம் அஜீனோமோட்டோ போட்டேன். கிடைக்கவில்லையாயின் லைம் யூஸ் சேர்க்கோணும்.

பிளேன் ஃபிளவருக்கு, கொஞ்சம் பேக்கிங் சோடா, ஒரு முட்டை, நெய் கொஞ்சம் சேர்த்து அளவாக தண்ணி சேர்த்து ரொட்டிப் பதமாக குழைத்து....

முட்டை அவித்து, குட்டியாக அதை வெட்டி எடுத்து... அனைத்தையும் ரெடியாக்கியபின்..மாவை சிறு உருண்டையாக்கி, இப்படி உருட்டி எடுக்கவும் ஓரளவு மெல்லிசாக..

ஏதாவது இரு பக்கத்தை எடுத்து இப்படி சுருள்போல ஆக்கி, கையிலே தூக்கி வைத்து நன்கு அழகாக்கி ஒட்டிவிடவும், தானாகவே நசித்து விட ஒட்டிவிட்டது, அதுக்காக எதுவும் பாவிக்கவில்லை நான்.


பின்பு கறியை நன்கு உள்ளே அடைத்து, வெட்டிய முட்டைத் துண்டுகளை அங்கங்கு வைக்கவும்...


பின்பு மேல் பகுதியை மூடி அமத்தி விட்டால், தானாக ஒட்டிக்கொள்ளும்.. இப்போ சமோசா ஷேப் தெரிகிறதா?:).. ஆவ்வ்வ் அதிராவுக்கும் வந்திட்டுதூஊஊஊஊஊ.. சமோசா செய்யவதுதான்ன்:).
இந்தாங்கோ ஆளாளுக்கு ஒண்ணு:).. ஆஆஆ அப்பூடியே சாப்பிடப்பூடா:) பொரிக்கோணும் வெயிட்:).
-----------------------------------------------------------
இடைவேளை
-----------------------------------------------------------
-----------------------------------------------------------
தொடர்கிறது...
-----------------------------------------------------------

பின்பு பார்க்கிறேன் ஸ்ரவ் முடிந்துவிட்டது, ஆனா மா கொஞ்சம் மிஞ்சிவிட்டது.. விடுவேனோ நான்ன்... ஜல் அக்கா(பார்த்த ஞாபகம் ஆனா லிங் தேடினேன் கிடைக்கவில்லை), ஆசியா  இவர்கள் வீட்டில பார்த்து கண்ணால படமெடுத்து வைத்தது நினைவுக்கு வரவே... டக்கென பரோட்டா ஆக்கிட்டேன்ன்ன்ன்:)) இது எப்பூடி?:)..

படம் பார்த்துப் புரிஞ்சுகொள்ளுங்கோ:)..


ஊசிக்குறிப்பு:)
வெள்ளையாக வர விருப்பமோ? -- கரட் சாப்பிடுங்க..
கறுப்பாக வர விருப்பமோ? - ச்ச்ச்சோ சிம்பிள்:)--- கரட் சாப்பிடாதீங்கோ:)
=========================================================
ந்த தேம்ஸ் நதிக் கரையில, நான் இருக்கும், குட்டிக் கருங்கல்லின் மீது சத்தியமாக:), இதோ என் முன்னால் விசில் சத்தத்தோடு பறக்கும் இந்த தேன்பூச்சி மீது ஆணையாக:), அதோ அந்தக் கல்லிலே இருக்கும் குட்டி இலையான் மீது சத்தியமாக:) நேற்று எனக்கு கடித்த நுளம்பின் மீது சத்தியமாக:).. இதை நான் எங்கேயும்..  ஆரோ இருவருடைய புளொக்கிலிருந்தும் களவெடுத்து வரவில்லை:).. 

வேர்க்க விறுவிறுக்க நானே எடுத்து வந்தேன்.. ஐ மீன்.. நானே கஸ்டப்பட்டு செய்து.. சொறி அது டங்கு ஸ்லிப்பாச்சு:) தேடி எடுத்து வந்து போட்டிருக்கிறேன் என்பதனை.. இந்த சபையோர் சாட்சியாக சொல்லிக் கொள்கிறேன்ன்:) எப்பூடி அழகா இருக்கோ?:.


=========================================================

Monday 6 May 2013

அதிரா ஞானியாகிட்டேன்ன்:)
-LOURDES

ஹா அதிரா உண்மையாகவே ஞானியாகிட்டாவோ, இந்தக் காலத்திலயும் இப்பூடி நல்லவிஷயமெல்லாம் நடக்குதோ:) என ஓடி வந்திருப்பீங்க:) அதுதான் இல்ல:) அதிராவாவது ஞானியாகிறதாவது:)).. ஹையோ அதாரது கண்வெட்டாமல் முறைக்கிறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

சரி சரி வந்ததுதான் வந்தீங்க.. அப்பூடியே லூட்த்ஸ் மாதாவையும் தரிசிக்கலாம் வாங்கோ....

ஃபிரான்ஸ்க்குப் போனால் லூட்ஸ்க்குப் போய் வர மறக்காதீங்க. என்ன ஒரு அருமையான இடம். மலை, ஆறு.. அமைதி, நல்ல சுத்தம். எந்த வித பயமும் இல்லாத தன்மை. தேர்த் திருவிளாவுக்குப் போடப்படும் கடைகள்போல, வீதியெங்கிலும் சோவினியர் கடைகள். அதிகமா காப்புச் சங்கிலி தோடென ஒரே கலக்கலாக இருந்துது.

நாம் போனது ஏப்ரல் மாதமென்பதால், மக்கள் கூட்டம் பெரிதாக இருக்கவில்லை, இனி கோடை காலமெனில் முன் பக்கமே கூட்டம் அலைமோதும். இது கோயிலின் முகப்பு. ஒரு மலையில்தான் இருக்கு, ஆனா மலையேறுவதுபோல தெரியாமல் மெதுவாக உயர்ந்துகொண்டுபோகும்.  இதிலே மூன்று மாடியாக கோயில் இருக்கு.
--------------------------==========================-----------------------------
 இது கீழ் நிலத்தோடு இருக்கும் வாசல். மேலே போக இருபக்கத்தாலும் படிகள் போகுது.
--------------------------==========================-----------------------------
 இது கீழிருக்கும் கோயிலின் உள்பகுதி. வேலைப்பாடுகள் எனில் சொல்ல முடியாது அத்தனையும் மாபிள் வேலைப்பாடாக இருந்தது.
--------------------------==========================-----------------------------
இது இரண்டாவது மாடியில் உள்ள கோயில், இதன் பக்கத்தால் ஏறும் படிகளில் ஏறினால் மேலே ஒரு வாசல் தெரியுதெல்லோ அது மூன்றாவது கோயில் இருக்கு.

--------------------------==========================-----------------------------
து கோயில் மேல் மாடியில் நின்று எடுத்த படம், அருகிலே ஆறு ஓடுகிறது. கோயில் வீதியில் மக்கள் போய் வருவது தெரியுதெல்லோ. அதிகமாக சுகயீனமுற்றோரைத்தான் காண முடிந்தது, புனித நீரில் குளிக்க வைப்பதற்காக வீல் ஷெயார்களில் கூட்டி வந்தவண்ணம் இருந்தார்கள்.

இது மேலிருந்து எடுக்கப்பட்ட கோயிலின் முன் பக்கவீதி.
--------------------------==========================-----------------------------
இது கீழ் கீழ் தளத்தில் இருக்கும் கோயிலின் உள்ளே நுழையும் வாசல் கதவு. இதில் தெரிவது அத்தனையும் மாபிள் துண்டுகள். என்னாலே கதவை கொஞ்சம்கூட அசைக்க முடியாத பாரமாக இருந்துது.
--------------------------==========================-----------------------------
அந்த ஏரியாவில் பயமெனும் சொல்லுக்கே இடமிருக்கவில்லை. வொலண்டியராகவே அனைவரும் சேவை செய்கிறார்கள். 24 மணி நேரமும் கோயிலின் வெளிப் பகுதியில் பூஜை, விட்டுவிட்டு நடந்து கொண்டே இருக்கும், எப்பவும் மக்கள் போய் வந்துகொண்டே இருக்கினம். இப்படத்தைப் பாருங்கோ இது எடுக்கும்போது நேரம் இரவு 12 ஐத் தாண்டி விட்டிருந்தது. அப்பவும் மக்கள் கும்பிட்டுக்கொண்டிருக்கினம்.

இதில் இடது மேல் பக்கம் மேரி மாதாவின் உருவம் தெரியுதெல்லோ, அதில்தான் இந்த லூட்ஸ் கோயில் ஆரம்பித்த கதையின் தொடக்கமே இருக்கிறது, இந்த இடத்தில்தான் மலை இரண்டாகப் பிளந்து ஆறு ஓடத் தொடங்கியதாம், எனக்கு கதையின் விபரம் தெரியாது. அதனால் இவ்விடத்தில் எப்பவும் பூஜை நடக்கும், பூஜை முடிய மக்கள் வரிசையாக அந்த மலையைத் தொட்டு வணங்குகிறார்கள், இது ஒரு குட்டிக் குகை. இதிலிருக்கும் மெழுகுவர்த்திகள் 24 மணி நேரமும் எரிந்து கொண்டே இருக்கும்.
இந்தப் படத்தைப் பாருங்கள், 
அதே இடம்தான், இது பகல் 9 மணிக்கு எடுத்தது.
--------------------------==========================-----------------------------
இதில் இன்னொரு விஷயம் சொல்லியே ஆகோணும், என்னவெனில் வெளிவீதியிலே, இப்படி மெழுகுவர்த்திகள் வைக்கப்பட்டிருக்கு, ஆகவும் சின்னது 2.50 யூரோவில் ஆரம்பித்து ஆள் அளவுகூட இருக்கு. ஒவ்வொன்றும் இப்படி அடுக்கப்பட்டு, பக்கத்திலே அதன் விலையும் எழுதப்பட்டிருக்கு. அதில் ஒரு உண்டியல் இருக்கு. மக்கள் அதற்குள் அந்த விலையைப் போட்டுவிட்டு மெழுகுவர்த்தியை எடுத்துப் போகிறார்கள். அதுக்கு எந்த வித பாதுகாப்போ, கண்காணிக்க ஆட்களோ இல்லை, எல்லாம் நம்பிக்கையில் ஓடுது.

ஒவ்வொரு சைஸ் மெழுகுவர்த்திக்கும் ஒவ்வொரு இடமிருக்கு, அதில்தான் கொழுத்திவைக்க வேண்டும்...
--------------------------==========================-----------------------------
இது இந்தக் கோயிலில் இருந்து வெளியே செல்லும் இன்னொருபக்க பாதை, இதில் இடது பக்கத்தில் தூரத்திலே ஒரு யேசுநாதர் சிலை தெரிகிறதெல்லோ.. அதன் அருகிலே இன்னொரு பாதை போகிறது அது பக்கத்து மலைக்கு போகிறது, அதன் உச்சியிலும் ஒரு கோயில், உண்டு.
--------------------------==========================-----------------------------
அந்த மலைக்கு ஏறும் பாதையெல்லாம், இயேசுநாதரை சிலுவை சுமக்க வைத்த கதையை சிலையாக செய்து வைத்திருக்கினம், மலையேறும்போது ஒவ்வொரு இடத்திலும் மக்கள் நின்று அதற்குரியதை சொல்லி ஜெபம் பண்ணிப் பண்ணி ஏறுகிறார்கள்..


இதிலும் ஏதோ கதை இருக்கிறதுபோலும், நான் இப்படி எங்கேயும் கேள்விப்படவில்லை. நான் நினைக்கிறேன் கிரிஸ்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.
--------------------------==========================-----------------------------
இது கோயிலின் நேர் எதிர்ப்பக்கம் முன் முற்றத்தில் அமைந்திருக்கு. இந்த மேரிமாதா உருவம்தான் படங்கள், போத்தல்கள் எங்கினும் இருக்கு, பெரும்பாலும் பார்த்திருப்பீங்க.
படம் எடுக்கும்போது கவனிக்கவில்லை, ஆரோ ஒருவர் வணங்கிக்கொண்டிருக்கிறார்..
இதில் பாருங்கள் விதம் விதமான போத்தல்கள் அனைத்திலும் இந்த மேரிமாதாவின் உருவம் இருக்கும். இதனை வாங்கிக் கொண்டுபோய், அங்கு கோயிலில் ஒரு பக்கத்தில், மலையிலிருந்து வரும் புனித நீரூற்றை ரப்களில்(குழாய்) விடுகிறார்கள், நாம் நிரப்பி வர வேண்டியதுதான்.
--------------------------==========================-----------------------------
இது கோயிலின் அருகாமை, சற்று தள்ளி, அது அந்த ஏரியா முழுவதும் இப்படித்தான் இருந்தது வீதிகள்... இதில் என், பவளம் பதித்த:) பிரேஸ்லெட் தெரியுதோ? நாம் விரும்பும் வகையைச் சொன்னால் உடனே அளந்து வெட்டுகிறார்கள், உடனேயே ஒரு நிமிடத்தில் கொழுக்கி எல்லாம் போட்டு தருகிறார்கள், நீளத்துக்கு ஏற்ப விலை உண்டு.
--------------------------==========================-----------------------------
இது நாங்கள் தங்கிய ஹொட்டேலில் இருந்து கோயிலுக்கு போகும் பாதை..


--------------------------==========================-----------------------------
அங்கு புனித நீரூற்று இருக்கிறது. அதில் குளித்தால் உடல் வருத்தங்கள் நீங்குமென, நேர்த்தி வச்சு வந்து குளிக்கிறார்கள். அங்கு போவோர் குளிக்காமல் வருவதில்லை. ஆண், பெண்களுக்கென புறிம்பான ஹோல்கள் இருக்கின்றன. வரிசையில் உள்ளே போகவேண்டும், போகப் போக குட்டி அறையாக முடிவில் வரும் அங்கு ஒரு பெரிய தொட்டியில் அந்த நீரூற்றை விடுகிறார்கள், எமக்கு  புது ஆடை தரப்படும், அதனை மாற்றியதும், இருவர், எம் இரு கையைப் பிடித்து அத்தொட்டியில் இருக்கவைத்து எழுப்பிவிடுவார்கள்(குளிருது, மாட்டேன் எனத் திரும்பி ஓட முடியாது:)).

நாம் போனநேரம் தண்ணியோ ஐஸ் வோட்டர்போல இருந்துது, அப்படியே ஃபிறீசரில் இருப்பதுபோல டபக்கென இறங்கி ஏறினோம். ஆனா குளித்தபின் குளிர் தெரியவில்லை, நன்றாக இருந்தது. சிறுகுழந்தைகளைக்கூட குளிக்க வைக்கினம், ஒரே குழந்தைகள் அழும் சத்தம் கேட்ட வண்ணம் இருந்துது, குளிரல்லவா.

அனைத்தையும் நடாத்த, நிறைய வொலன்ரியேர்ஸ் இருக்கிறார்கள். கடகடவென 5 நிமிடத்தில் அலுவல் முடிக்குமளாவுக்கு சேவை நடக்கிறது. இதில் விஷேஷம் என்னவெனில், கோயில் சம்பந்தப்பட்ட எந்த ஒன்றுக்கும் ஒரு சதம் கூட ரிக்கட் எனும் பெயரால் செலவில்லை, அனைத்துமே ஃபிரீயாக நடக்கிறது.
===============================================================

சரி சரி படங்கள் பார்த்திருப்பீங்க சந்தோசமாகப் போய் வாங்கோ மீண்டும் சந்திப்போம்:). அதுக்கு முன் மொய் எழுத மறந்திடாதீங்க:). மொய் எழுதாவிட்டால், பட்டனைத் தட்டி விட்டிடுவேன்ன்ன்... கனவிலதான்ன்ன்:))

=======================()()()()()()========================
போர்க்களத்தில் கூட,
 பூக்களை ரசிக்கும் மனநிலை வாய்த்தவருக்கு
 வாழ்க்கை என்றும் இனிக்கிறது
இதை உங்கள் எல்லோருக்கும் காட்டோணும் எனும் நல்லெண்ணத்தில:) 
வெற்றியோடு, கூகிளில் களவாடி எடுத்து வந்தவர்... 
பெருமதிப்பிற்குரிய:) புலாயியூர்ப் பூஸானந்தா அவர்கள்:)!!


=======================()()()()()()========================
()()()()()()()()()()()()()()()