காந்தித்தாத்தா என்ன சொன்னார்? “கண்டது கற்கப் பண்டிதராவாய்” எனச் சொன்னாரெல்லோ?:)).. சரி காந்தியா சொன்னார் என ஜண்டைக்கு வரக்குடா கர்ர்ர்ர்:)).. அதனாலதான் “அதிராவின் ஆச்சிரமம் வந்தால் ஞானியாவீர்கள்”:).. நான் கண்டது கேட்டதெல்லாம் இங்கு எழுதியிருக்கிறேனாக்கும்:)).. எப்பூடியாவது உங்களில் பாதிப் பேரையாவது ஞானி ஆக்கினால்தான், இந்த உசிறூஊஊஉ இந்த உடம்பை விட்டு வெளியேறுமாக்கும்:)) ஹா ஹா ஹா:)..
))))))))))))))))))))))))))))))))))))))))))_()_(((((((((((((((((((((((((((((((((((((((((((
சிலர் புலம்புவார்கள் “என்னடா வாழ்க்கை இது” எதைச் செஞ்சாலும் தோல்வியாகவே வருதே என.., அப்பூடி எல்லாம் சொல்லப்பிடாதாக்கும்.... வாழ்க்கையில் வெற்றி கிடைக்க வேண்டுமெனில்..
1. நம் உறவுகளை, நட்புக்களை மேன்படுத்தியும், நல்ல விதமாகவும் பேண வேண்டும்... இவை இருந்தால்தான் வெற்றி சாத்தியம்
2. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், கை விடாமல், பயப்படாமல், றிஸ்க் எடுக்கப் பழகுங்கள்.. றிஸ்க் எடுத்தால் தான், வெற்றி அல்லது தோல்வியாவது கிடைக்கும்.
3.தோல்வி கிடைத்தால் துவண்டிடக்கூடாது, ஏனெனில் வெற்றி கிடைப்பதே தோல்வியின் மூலம்தான்:)..
“தோற்றவர் புன்னகைத்தால், வெற்றி பெற்றவர், வெற்றியின் சுவையை இழந்து விடுகிறார்”... பு.பூஸானந்தா:)
))))))))))))))))))))))))))))))))))))))))))_()_(((((((((((((((((((((((((((((((((((((((((((
வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை, அதனால என்னிடம் என்ன இல்லை, அடுத்தவர்களிடம் அது இருக்கிறதே என எண்ணி ஏங்காமல், என்னிடம் என்னவெல்லாம் இருக்கிறது என்பதைப் பட்டியல் போட்டுப் பாருங்கள், மனம் நிறைவடையும்.
))))))))))))))))))))))))))))))))))))))))))_()_(((((((((((((((((((((((((((((((((((((((((((
மழையின் வீழ்ச்சி என்பது முடிவு அல்லவே, அந்த முடிவில இருந்து மீண்டும் தண்ணி ஆவியாகி மேலே போய், மீண்டும் மழையாகிறது, இலைகள் உதிர்வது மீண்டும் மரம் தளைக்கவே..
அருவியின் முடிவில்தானே ஆறு ஆரம்பமாகிறது, எனவே நமக்குத் தேவை தன்னம்பிக்கை, எப்பவும் தன்னம்பிக்கையைக் கைவிட்டிடக்கூடாது.
))))))))))))))))))))))))))))))))))))))))))_()_(((((((((((((((((((((((((((((((((((((((((((
இப்படங்களுக்கு, இன்ஸ்டண்ட் ஆகக் கவித.. கவித..:) சொல்ல முடியுமோ?:).. அல்லது ஆறுதலாகக் கூட உங்கள் போஸ்ட்டில் போடலாம்..
================================
இந்த ஆட்டுக் குட்டியையும், குழந்தையையும் பார்த்ததும் எனக்கு பழைய நினைவு வந்தது, எங்கள் வீட்டில் சில ஆடுகள் இருந்தன, அதில் ஒன்றுக்கு கண் சரியாகத் தெரியாது, ஆனால் வெளியே போய்ப் புல் மேய்ந்து வரும், அது ஒரு குட்டி போட்டது, அக்குட்டியை வளர்த்தது நான் தான்:)).. எந்நேரமும் ஒரு பக்கத் தோளில், குழந்தையைத்தூக்குவது போல தூக்கித் திரிவேன்:)).
))))))))))))))))))))))))))))))))))))))))))_()_(((((((((((((((((((((((((((((((((((((((((((
இது நல்லாயிருக்கில்ல?:))
மனிதா
விலங்கை வணங்கு
குறிப்பாகக் குரங்கைக் கும்பிடு
உன் மூதாதையர்க்கு
முதல் வணக்கம் போடு
ஒவ்வொரு விலங்கும் உன் ஆசான்
கற்க கற்றபின் நிற்க
அதற்குத் தக
விலங்குகள் நம்மினும்
மானமுள்ளவை
யானையின் காலில்
யானை விழுந்ததாய்த்
தகவல் இல்லை
பூனைக்கு எலிகள்
பல்லக்குச் சுமந்ததில்லை:)
கரடிக்கு மான்கள்
கால் பிடித்து விட்டதில்லை
ஒன்று சுதந்திரத்தின் வானம்,
இல்லை மரணத்தின் பள்ளம்
இடைப்பட்ட வாழ்க்கை
விலங்குக்கில்லை
(வைரமுத்து அங்கிளின் பெரிய கவிதையில் ஒரு பகுதியை இங்கு பார்த்து எழுதினேன்)
))))))))))))))))))))))))))))))))))))))))))_()_(((((((((((((((((((((((((((((((((((((((((((
ஒரு கணவன் மனைவிக்குக் குழந்தைகள் இல்லை, அந்த வீட்டுக்கு புலாலியூர்ப் பூஸானந்தாபோல ஒரு சாமியார் போனார், அவரை அந்தம்மா நன்கு கவனிச்சு உணவளிச்சா, மனம் மகிழ்ந்த சாமியார் கேட்டார்.. குழந்தாய் உனக்கு குறை ஏதும் உள்ளதோ?.. அதற்கு அப்பெண் சொன்னா, “சாமி எங்களுக்கு இன்னும் குழந்தைகள் கிடைக்கவில்லை, செய்யாத வைத்தியமில்லை, போகாத இடமில்லை”..
சாமியார் சொன்னார், “ஒரு தடவை உன் கணவரை எருசலேம் போய், அங்கு இருக்கும் மாதாவின் முன்னால் ஒரு விளக்கை ஏற்றி விட்டு வரச்சொல், உனக்குக் குழந்தைகள் கிடைக்கும்”...
எனச் சொல்லிப்போட்டு சாமியார் போய் விட்டார்.
அதேபோல, கணவரிடம் மனைவி சொன்னா, கணவரும் சம்மதிச்சு, எருசலேம் போய், விளக்கேற்றி விட்டு வந்தார்...
சுமார் 10, 11 வருடங்கள் கழிச்சு, இந்தச் சாமியார் திரும்ப வந்தார், வீட்டில் குழந்தைகள் இருப்பதைப் பார்த்து, உன் கணவர் எங்கே எனக் கேட்டார்..
அதுக்கு அப் பெண் சொன்னார் “சாமி, நீங்கள் சொல்லியதைக் கேட்டு, என் கணவர் சென்று விளக்கேற்றி விட்டு வந்தார், அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் குழந்தை பிறந்து கொண்டே இருக்கிறது, தடைப்பண்ண முடியவில்லை, அதனால அந்த விளக்கை அணைத்துவிட்டு வரப் போயிருக்கிறார் மீண்டும்” என:)). ஹா ஹா ஹா .. படிச்சிட்டு ஏதோ சோகப் படம் பார்த்த பீலிங்ஸில இருக்காமல் சிரிக்கோணும் ஜொள்ளிட்டேன் கர்ர்ர்ர்ர்:))
))))))))))))))))))))))))))))))))))))))))))_()_(((((((((((((((((((((((((((((((((((((((((((
“மீன் போன அடிச்சுவட்டையும் அறிய முடியாது
பறவை பறந்த சுவட்டையும் அறிய முடியாது,
அதேபோல, ஞானிகள் சென்ற வழியையும்
அறிய முடியாது”
“வெறும் புத்தகங்களைப் படிப்பதன் மூலம்,ஞானம் பெற்றுவிட முடியாது,
யாராவது ஒருவர் ஆறுதல் சொன்னால்தான்,அழுகை அடங்குகிறது
அதேபோல, யாராவது ஒரு ஞானி ஆசிரியரிடம்[அதிராவைப்போல:)]
உபதேசம் கேட்டுக் கொண்ட பின்னாலேதான்,
ஏற்கனவே இருந்த மனோபாவம் மாறி, ஞானி ஆக முடியும்”
இவ்வரிய தத்துவங்களை உங்களுக்கு அள்ளித் தெளித்தவர்.. உங்கள் அன்புக்கும் பண்புக்கும் நேசத்துக்கும் பாசத்துக்கும் பாத்திரமான:) புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்:))
=====================================
ஊசி இணைப்பு
ஊசிக் குறிப்பு
)))))))))))))_()_((((((((((((