நல்வரவு_()_


Tuesday 26 May 2020

கேக்கில் நூறு வகை🜓
 அதில நான் செய்தது இரண்டு வகை❁❀

சே சே அதிரா எவ்ளோ பெரிய ஆள் [சமையலில், உருவத்தில் அல்ல கர்ர்:)] என்பதை முழுமையாக இங்கின காட்டவே முடியல்லியே:)).. வெள்ளிக்கிழமையிலிருந்து போஸ்ட் ஒன்று எழுத நினைக்கிறேன், இன்னும் ஆரம்பிக்கவே இல்லை, சரி... தோஓஓஒ எழுதிக்கொண்டிருக்கிறேன்:)..

ஓவரா அலட்டினால் உங்களுக்கும் பிடிக்காது.. எனக்கும்தேன்:)... அதனால நான் செய்து, வீட்டில பாராட்டுப்பெற்று, 5 நிமிடத்திலேயே முடிஞ்சு போன:), ரெண்டுவகைக் கேக்கை இங்கு சொல்லப்போறேன்...

முதலாவது வகை.

சொக்கலேட் மாபிள் கேக்
சீனி - 1 கப்[1 1/2 கப் போட்டால் நல்ல இனிப்பாக இருக்கும், இது இனிப்பு குறைவாக இருந்தது]
எண்ணெய்[refined oil]/வெண்ணெய் - 1/4 கப் 
பால் - 1 கப் [கொஞ்சம் கூடத் தேவைப்படலாம்]
plain flour - 1 1/2 கப்
கொக்கோ பவுடர் - 4 தே.கரண்டி
பேக்கிங் பவுடர் - 1 தே.கரண்டி
பேக்கிங் சோடா - 1/2 தே.கரண்டி

இந்த வகைக் கேக்குகள் எல்லாம் மிக மிக ஈசியானவை, ரெடி பண்ண கொஞ்ச நேரம் போதும்..

முதலில் மாவுடன் பே.பவுடர், சோடாவைக் கலந்து ஒரு தரம் அரித்து ஒன்றாக்கி எடுத்து வைக்கவும்.

பேக்கிங் ட்ரேயை எடுத்து, நன்கு பட்டர் தடவி வைத்துக் கொள்ளவும்..

பின்பு சீனியை[சுகர்] மிக்ஸியில் போட்டு மாவாக்கி எடுத்து, அதனுள் எண்ணெயை ஊற்றிக் கலந்து, அதனுடன் ஒரு கப் பாலை ஊற்றி நன்கு கலக்கவும்.

பின்பு ரெடியாக்கி வைத்துள்ள மாவை அதனுள் போட்டு, கட்டி இல்லாமல் நன்கு கலக்கவும்.. இப்படிக் கலந்து முடிந்ததும், மாவின் தன்மை, தோசை மாப் பதம்போல வர வேண்டும், ஆகவும் தண்ணி ஆகிடாமலும், கட்டியாக இல்லாமலும் இருக்க வேண்டும்.

அதற்காககத்தான், தேவைப்பட்டால், கொஞ்சம் இன்னும் பால் ஊற்றிக் கலக்கவும். பால் குளிராக இல்லாமல், கொஞ்சம் அறை வெப்பநிலைக்கு சூடாக்கிப் பாவிக்கவும்.. இவ்ளோதான் மற்றர் ஓவர்:)!!!

அடுத்து, கலக்கி வைத்திருக்கும் மாக்கலவையை, இரண்டாகப் பிரித்து, ஒன்றினுள் மட்டும் கொக்கோ பவுடரை சேர்த்து மிக்ஸ்ட் பண்ணிப்போட்டு, 

வேறு வேறு கரண்டிகள் பாவித்து, முதலில் ஒரு குட்டிக்கரண்டி மாவை நடுவில் ஊற்றி, பின்பு கொக்கோவில் ஒரு குட்டிக் கரண்டியை அதன் நடுவில் ஊற்ற வேண்டும்.. இப்படி மாத்தி மாத்தி ஊத்தும் போது, இங்கு படத்தில் ஊத்தியதைப்போல பரந்து விரிந்து வட்டமாகும்.

அனைத்தும் ஊத்தி முடிஞ்சதும், ஒரு பாபகியூ ஸ்ரிக் அல்லது ஏதும் கூரிய ஆயுதம்:) எடுத்து, இங்கு கடசிப் படத்தில் உள்ளதைப்போல கோடுகள் போட்டு பற்றன் மேக் பண்ணவும்...

அவணை 3-4 காஸ் மார்க்கில் விட்டு, 25-30 நிமிடங்கள் அவித்து எடுக்கவும். அடுப்பிலும் செய்யலாம்.. அந்த முறையைக் கீழே சொல்கிறேன். பட்டர் நைவ் ஆல் குத்திப் பார்த்தால், ஒட்டாமல் இருக்கவேண்டும் அதில் மா, அப்போ ரெடி ஆகிவிட்டது என அர்த்தம்... மற்றர் ஓவர்:)!!!!


ஆவ்வ்வ்வ் இதோ அதிராவின் அழகிய கேக் ரெடீஈஈஈஈஈ:))

=================🜋இடைவேளை🜋===============
சே சே இதென்ன இது, கேக் செய்த இடைவேளையில், அபச்சாரம் அபச்சாரம் ஹா ஹா ஹா:)
================🝝🝝🝝===============
இது ரெண்டாவது கேக்கூஊஊஊ:)...

கேக் எனும்போது, எனக்கு எப்பவுமே ஒரு நினைவு வரும். ஊரில் ஒரு பையன், அவர் கொஞ்சம் விவேகம் குறைவானவர், வீடுகளுக்கு வந்து, சொல்லும் வேலை எல்லாம் செய்துபோட்டு பணம் வாங்குவார்.

அவருக்கு பணத்தோடு சாப்பாடும் குடுப்போம். அப்போ ஒருநாள் காலையில், அம்மா கேட்டிருக்கிறா, சாப்பிட்டுப்போட்டு வேலை செய், என, அப்போ சொன்னாராம், இல்லை இப்போ வேண்டாம், நான் கேக் சாப்பிட்டு விட்டேன் என, இந்தக் காலையில கேக் ஆ? எங்கு சாப்பிட்டாய் என, அவர் சொன்னாராம் அது வெள்ளைக் கேக், பக்கத்து வீட்டில் என்று. பின்புதான் பக்கத்து வீட்டு ஆன்ரியிடம் விசாரித்தபோது, அவ சொன்னா அது கேக் அல்ல இட்லி என்று ஹா ஹா ஹா.

நம் நாட்டில் புட்டு இடியப்பம்தானே நம் தேசிய உணவு:), எங்கும் செய்வார்கள், கடைகளிலும் கிடைக்கும், இட்லி தோசை குறைவான கடைகளில்தான் கிடைக்கும், வீடுகளிலும் கிழமையில் ஒருதடவை.. இப்படித்தான் செய்வது வழக்கம், அதனால இப்படி வறிய குடும்பத்தில் இருப்போருக்கு இவை தெரிய நியாயமில்லை. இப்போ எல்லாக் கடைகளிலும் எல்லாம் கிடைக்கிறதாம். 

ஓகே ஓகே மெய் மறந்து கதை கேட்டது போதும் வாங்கோ வகுப்பறைக்குள் நுழைவோம்:)

ஈசி சொவ்ட் கேக்
பிளேன் ஃபிளவர்/ஓல் பேப்பஸ் ஃபிளவர் - 1 கப்
பட்டர்/எண்ணெய் - 1/4 கப்
தயிர் -1/2 கப்
சீனி[சுகர்] - 1/2 கப்
பேக்கிங் பவுடர் - 3/4 தே கரண்டி, பே.சோடா - 1/4 தே.க.

வழமைபோல மாவுடன், பேக்கிங் சோடா, பவுடர் சேர்த்து அரித்து எடுத்து வைக்கவும்.

கேக் பேக் பண்ணப்போகும் பாத்திரத்தில் எண்ணெய் அல்லது வெண்ணெய் நன்கு தடவி, மேலே பிளேன் ஃபிளவர் கொஞ்சம் போட்டு நன்கு பிரட்டி எடுத்து வைக்கவும், அப்போதான் கேக் ஒட்டாமல் வரும்.

பின்பு சீனியை கொஞ்சம் பவுடராக்கி, எண்ணெயும் தயிரும் சேர்த்து நன்கு கலக்கவும்.. விரும்பினால் வனிலா எசன்ஸ் கொஞ்சம் சேர்க்கலாம்[இது அனைத்துக் கேக்குக்கும் சேர்க்கலாம்]

அதனுள் ரெடியாக்கி வைத்திருக்கும் மாவையும் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கலக்கவும்.. ரெடியாக்கிய கேக் பாத்திரத்தில் ஊத்தவும்.

இங்கும் அதேபோல, கொஞ்சம் பால் சூடில்லாத பதமாக வைத்திருக்கவும், மாவின் பதம், தோசைப்பதம்போல வரும் வரை பால் சேர்த்துக் கலக்கவும்.. 

இது நான் அடுப்பில் செய்த முறையைக் காட்டுகிறேன்..
அடுப்பில் செய்வதற்கு, ஒரு அடிகனமான பாத்திரத்தை எடுத்து, அடியில் கொஞ்சம் உப்பு போட்டு,

அடுப்பில் வைத்து கொஞ்சம் ஹீட் பண்ணி, உப்பு சூடானதும், இந்த கேக் பாத்திரத்தை வைத்து மூடி, மிடியம் ஹீட்டில் அவிய விடவும்... படம் எடுக்க தவறிவிட்டேன், உப்பின் மேல் ஒரு கம்பித்தட்டு ஏதும் வைத்து அதன்மேல் பாத்திரத்தை வைக்கவும், நேரடியாக உப்பில் வைத்தால், அடிப்பகுதி கருகிவிடும்.

 அரை மணித்தியாலம் எடுக்கும்

நல்ல கலர் வந்ததும், அதேபோல கத்தியால குத்திப் பார்த்து ஒட்டாமல் வந்தால் உடனே இறக்கி ஆறவிட்டு எடுக்கவும்
 மேலே செய்ததைப்போல அவணிலும் வைத்து எடுக்கலாம், இரண்டிலும் முடிவு ஒன்றுதான்:)

அதிரா செய்த டபிள் கலர் ஜெலியையும் சேர்த்துச் சாப்பிடலாமே.. லாமே:))


இன்று ஒரு திருக்குறள் குறிப்பு:)

சமையலுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை:)

ஊசிக் குறிப்பு
இதை எனக்கு அனுப்பினவர் என் அன்பான எதிரி  எனச் சொல்ல மாட்டேனே:))

ஊசி இணைப்பு
∰∰∰🙏🙏🙏∰∰∰

129 comments :

 1. Replies
  1. வாங்கோ கரந்தை அண்ணன் வாங்கோ இன்று நீங்கதான் 1ஸ்ட்டூ.. கேக் உங்களுக்கே..நன்றி நன்றி..

   வழமைபோல என் புளொக் வழக்கப்படி.... ஆயா கில்லர்ஜிக்கே:))

   Delete
 2. ஒரு கப் சீனி என்றால் கப் ஐந்து கிலோ பிடிக்குமா ?

  கேக் அழகாக செய்து இருக்கிறீர்கள் ஆனால் ??? சுவை ???

  எனக்கு தெரியாது.

  காணொளி ஜூப்பர் ரசித்தேன்.

  ஷெல்லி அழகாக இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

   //ஒரு கப் சீனி என்றால் கப் ஐந்து கிலோ பிடிக்குமா ?//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா நியாயமான டவுட்தான், இங்கு எல்லோருமே சமையல் கலை நிபுணர்கள்தானே அதனால விளக்கம் சொல்லாமல் விட்டேன், நமக்கு எந்த கப்பில் செய்ய விருப்பமோ, ஒரு கப்பை எடுத்தால், முழு அளவையும் அதே கப்பாலயே செய்து முடிக்க வேண்டும்.. நான் எடுத்திருப்பது, ரைஸ் குக்கர் அளவு கப்.

   //ஆனால் ??? சுவை ???//
   அதுதான் சூப்பர் எனச் சொல்லிட்டேனென்ல்லோ.. நம்போணும்:)).

   //காணொளி ஜூப்பர் ரசித்தேன்.//
   ஹா ஹா ஹா

   மிக்க நன்றி கில்லர்ஜி.

   Delete
 3. ஆஆஆஆ மியாவ் பிஞ்சு ஞானி இன்னுமா அதே பட்டத்துடன் சுத்தறீங்க :) பெயருக்கு வேறே ஐடியா எதுவும் கிடைக்கல்லியா :) நான் சொல்லட்டா :) 

  ReplyDelete
  Replies
  1. அதாரது என் தவத்தைக் கலைப்பது:)

   Delete
  2. ஹாஹ்ஹா :) அதுக்குள்ள catering ஓனரா :) 

   Delete
  3. வாங்கோ அஞ்சு வாங்கோ.. நீங்கள் ஜஸ்ட்டூ மிஸ்ட்டூ:)) கொஞ்சம் ஸ்பீட்டாக ஓடி வந்திருந்தால்..... ஆயா உங்களுக்கே எனச் சொல்ல வந்தேன்:))

   Delete
 4. சாக்லேட் மார்பிள் கேக் மிக அழகாக இருக்கு. காணொளி போட்டிருக்கலாம்.

  என் பெண் செய்யும் கேக், பன் செய்முறைகளை எபிக்கு அனுப்பலாம்னு பார்த்தா இப்படி முந்திரிக்கொட்டையாட்டம் எல்லாத்தையும் எழுதறீங்களே... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ...

   //காணொளி போட்டிருக்கலாம்.//
   ஆஆஆஆஆ, எனக்கு ஸ்ரெப் பை ஸ்ரெப்பாக ஓவராகப் படமெடுத்துப் போடவும் பயம், ஏனெனில், எதுக்கு இவ்ளோ படங்கள் எனக் கேட்டு விடுவார்களோ என்று...

   //முந்திரிக்கொட்டையாட்டம் எல்லாத்தையும் எழுதறீங்களே... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//
   ஹா ஹா ஹா எந்தக் கொண்டாட்டத்துக்குப் போனாலும், ரெடியாக இருந்து என்னையும் இழுத்துக் கொண்டு, வரிசையில் முதலாவதாக ஓடி, வாழ்த்திப்போட்டு, அதே வேகத்தில பந்தியிலும் முந்த வைப்பதில் என் கணவரை மிஞ்ச ஆருமில்லை ஹா ஹா ஹா பந்திக்கு முந்திடோணும் பின்பு இருந்து ஆறுதலாக எதுவும் செய்யலாம், இல்லை எனில் வீட்டுக்கும் வந்திடலாம் என்பார்.. இல்லை எனில், மக்கள் கியூ அஞ்சு கிலோ மீட்டருக்கு நீண்டு விடும், அப்படிச் சாப்பிடுவதிலும் பார்க்க சாப்பிடாமல் விடலாம் எனும் எண்ணம் வரும் ஹா ஹா ஹா ..

   அதேபோலத்தான் இப்போ எங்கு பார்த்தாலும் பேக்கிங் தான் நடக்குது வீடுகளில்.. இங்கு பிரெட் செய்யலாமே என பல நாட்களாகத் தேடுகிறோம், எந்த சூப்பர்மார்கட், கடை.. எங்குமே பேக்கிங் பவுடர் + ஈஸ்ட் இல்லவே இல்லை.. இனி ஓன்லைனில்தான் வாங்கோணும்.

   இல்லை ஒவ்வொருவரின் ரெசிப்பியிலும் கொஞ்சம் கொஞ்சம் நம் ஓன் செய்முறை வரும், அதனால நீங்கள் எதுவாயினும் அனுப்புங்கோ ஹா ஹா ஹா..

   நல்லவேளை பேக்கிங் சோடா, பவுடர் என்னிடம் ஏற்கனவே இருந்ததால் கேக் செய்ய முடிகிறது..

   Delete
  2. //இனி ஓன்லைனில்தான் வாங்கோணும்.//

   online delivery slots for extremely elderly :)) ஹலோவ் பிஞ்சு cat டெரிங் ஓனர் ..நானும் கணவரும் ஆன்லைன் ஆர்டர் குடுக்க எலிஜிபிள் இல்லையாததால் ப்ளீஎச் உங்களுக்கு ஆர்டர் கொடுக்கும்போது எனக்கும் ஒரு பேக்கிங் சோடா ஒரு சோடா பைகார்பனேட் வாங்கி அனுப்புங்க 

   Delete
  3. //நானும் கணவரும் ஆன்லைன் ஆர்டர் குடுக்க எலிஜிபிள் இல்லையாததால்//

   புரிஞ்சு போச்சு புரிஞ்சே போச்சூ:)).. உங்களுக்குக் கொரோனா வந்திருக்குது அதனால ஓன்லைனில கை வைக்கப்ப்படாதென ஜோன்சன் அங்கிள் உத்தரவு போட்டிருக்கிறார்:) இதை அதிராவுக்குச் சொல்லாமல்.. என்னைப் பேய்க்காட்டியிருக்கிறீங்க இவ்ளோ காலமும் கர்ர்ர்ர்:))...

   வேணுமெண்டால் ஜெஸிப்பிள்ளையை அனுப்புங்கோ.. ஒரு கிண்ணத்தில:)) கொஞ்சம் சோடாக் கொட்டுக் குடுத்து விடுறேன்:)).. ஈஸ்ட் என்னிடம் இல்லை கர்ர்:))

   Delete
  4. அஞ்சூஊஊ...என்கிட்ட இருக்கே..நான் அனுப்பவா . கேற்றரிங் ஓனருக்கு சொல்லாதேங்கோ.
   ஆனா இந்த ஈஸ்ட் க்கு அதுவும் dry ஈஸ்ட் க்கு வந்த வாழ்வு. டாஸ்மாக் கடை க்யூ போல இங்கு மா வுக்கும், ஈஸ்ட் க்கும் நின்றார்கள். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் . இப்ப ப்ரெஷ் ஈஸ்ட் 2 எடுக்கலாம். (ஆனா 2 பேர் சேர்ந்து போய் எடுக்க 4 எடுக்கமுடியாது. பிறிம்பாக போய் எடுக்கவேணும்) dry ஈஸ்ட் அடுத்த மாதம் வருமாம்.

   Delete
  5. ///கேற்றரிங் ஓனருக்கு சொல்லாதேங்கோ.//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஈஸ்ட் இல்லாமல் கேற்றரிங் ஷொப் ஐயே மூட வேண்டி வரப்போகுதே எனப் பயமாக இருக்கெனக்கு...

   ஓ அங்கு அப்படியாவது வாங்க முடியுதே.. இங்கு செல்ஃப் எல்லாம் வெறிச்சோடிப்போய்க் கிடக்குது, ஆனா பிளேன் ஃபிளவர் தாராளமாகக் கிடைக்குது...

   Delete
  6. ///priyasakiTuesday, May 26, 2020 6:29:00 pm
   அஞ்சூஊஊ...என்கிட்ட இருக்கே..நான் அனுப்பவா . கேற்றரிங் ஓனருக்கு சொல்லாதேங்கோ.///
   Thanks 😍😍😍😍

   Delete
  7. https://i.pinimg.com/originals/82/a0/c1/82a0c1faea8c9757319c5c75eac2bb15.jpg

   Delete
  8. இங்க ஒரு மாதத்திற்கும் மேல் ஈஸ்ட் தேடினேன். கிடைக்கவே இல்லை (மகள் வாங்கித்தரச் சொல்லியிருந்தாள்). அப்புறம் ஒரு கடையில் எனக்காக அவர் வாங்கிவந்திருந்தார் (10 பாக்கெட். நான் 1 பாக்கெட் 40 ரூபாய்க்கு வாங்கினேன்). மகள் இன்னும் 2-3 பாக்கெட் வேணும்னு சொல்லியிருக்கா.

   பட்டர் பேப்பரும் இன்னும் கிடைக்கலை.

   இந்த ஊரடங்குனால நிறைய பொருட்கள் வரத்து கம்மியாக இருக்கு.

   இந்த ஊர்ல மல்கோவா, பதாமி, பங்கனப்பல்லி இன்னும் சில வெரைட்டிகள் கிலோ 40-50 ரூபாய்க்குக் கிடைக்கின்றன.

   Delete
  9. ஓ அங்கும் இதே நிலைமைதானோ நெ தமிழன்...

   //பட்டர் பேப்பரும் இன்னும் கிடைக்கலை.//
   இதுக்குப் பதில், பிரிண்டர் பேப்பர் இருப்பின், அதனை அளவுக்கு கட் பண்ணி எடுத்து, இருபக்கமும் பிரஸ் ஆல ஒயில் போட்டுத்தேய்த்துப்போட்டுப் பாவிக்கலாம்...

   //பங்கனப்பல்லி //
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது என்ன பல்லி ஹா ஹா ஹா...

   Delete
 5. இப்போல்லாம் எத்தனைபேர் குறள் இடுகைல எழுத ஆரம்பிச்சுட்டாங்க. தாங்கலைடா சாமி.

  ஆனா நீங்க போட்டிருக்கும் குறளின் பொருளை ஒத்ததுதானே

  பீலிபெய் சாக்காடும் அச்சிறும் அப்பண்டம்
  சால மிகுத்துப் பெயின்

  ReplyDelete
  Replies
  1. //இப்போல்லாம் எத்தனைபேர் குறள் இடுகைல எழுத ஆரம்பிச்சுட்டாங்க. தாங்கலைடா சாமி.//

   எனக்கும்தான் ஹா ஹா ஹா.. நானும் நினைச்சேன் ஆனா இது கையில் அகப்பட்டது, என் சமையலுக்கும் பொருந்துவதால் போட்டேன்..

   //பீலிபெய் சாக்காடும் அச்சிறும் அப்பண்டம்
   சால மிகுத்துப் பெயின்//
   அச்சச்சோ எனக்கு விளக்கம் சொல்லாவிட்டால் ஒரு சொல்லுக்கூடப் புரியாதாக்கும் ஹா ஹா ஹா..

   Delete
  2. வெறும் மயில் தோகைதானே (பீலி) என்று ஏகப்பட்டதை மாட்டு வண்டியில் ஏற்றக்கூடாது. ஒரு அளவுக்கு மேல், ஒரு தோகை அதிகம் வைத்தாலும் அச்சாணி முறிந்துவிடும் (அச்சு இறும்).

   உயர உயர ஏறுகிறேன் என்று ஒரு அளவுக்கு மேல் ஏறினால் கீழே விழ வேண்டியதுதான்.

   இரண்டும் கருத்து ஒற்றுமையோடு இருக்கா?

   Delete
  3. ஆஆ ஓ இரு குறள்களும் ஒரே கருத்தாக இருக்கே.. அப்போ எதுக்கு ஒரே விதமாக தாத்தா எழுதினார் ஹா ஹா ஹா...

   சின்ன வயசில ஒருநாள் அப்பா என்னிடம் கேட்டார்..

   கரெக்ட்டாப் பதில் சொல்லு பார்க்கலாம்..
   “ஒரு தராசு இருக்குது, அதில் ஒரு பக்கம் ஒரு கிலோ இரும்புச் சாமான்கள் போட்டிருக்குது, இன்னொரு பக்கம் ஒரு கிலோப் பஞ்சு போட்டிருக்குது, இப்போ எந்தப் பக்க தராசு மேலே போகும், எந்தப்பக்க்த் தராசு கீழே போகும்?:)”

   நான் கரெக்ட்டாப் பதில் சொன்னேன் தெரியுமோ:))

   Delete
 6. அவன் என்று அழகாகச் சொல்வதை விட்டுவிட்டு, ஏதோ கவண்கல் போல அவண் என்று அழுத்துகிறீர்களே... கேக் ரொம்பவும் அமுங்கிவிடப் போகிறது.

  ReplyDelete
  Replies
  1. “அவனுக்குள் அன்பை வைக்கலாம், பாசத்தை வைக்கலாம், ஆனால் கேக்கை வைக்கலாமோ?” ஹா ஹா ஹா அதனாலதான் அவண் என எப்பவும் எழுதுகிறேன்:))
   கவித கவித..:))

   Delete
 7. கேக் பார்க்க சூப்பரா இருக்கு .அதுவும் டிசைன் அட்டகாசம் உங்களுக்குள்ள ஒரு Cat Cora ஒளிஞ்சிருக்கார் :) அந்த பூனை கோரா அமெரிக்கன் செஃப் :) ஜெல்லியும் அழகா வந்திருக்கு ஆனா என்னால் செய்தாலும் சாப்பிட முடியாது என் பங்கை வேற  கொடுங்க 

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆஆஆ அஞ்சு வாயார வாழ்த்திட்டா:))..


   நான் இன்னும் அழகாக டிசைன் பண்ணியிருப்பேன், அது என்னவெனில்.. கேக்கை “அவணுக்குள்”:) ஹா ஹா ஹா வைத்தபின்பே டிசைன் போடும் நினைவு வந்து, சுடச்சுட அவசரமாகப் போட்டேன்...

   என்னாதூஉ ஒரு பி மிஸ்ஸிங்:)).. ஒரு பூஸ் ஐப் பார்த்து நாகபாம்பு எனச் சொல்லிட்டா அஞ்சூஊஊஊஊஊ:)).. நான் கோப்றா யோகா செய்வேன் தான் அதுக்காக இப்பூடியா:)) ஹா ஹா ஹா சரி சரொ கோறா:))..

   //ஆனா என்னால் செய்தாலும் சாப்பிட முடியாது என் பங்கை வேற கொடுங்க ///
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. என்னால எது செஞ்சாலும் சாப்பிட முடியும்:)) இதுதான் என் பிரச்சனையே:) இதனாலதான் செய்வதைக் குறைக்க நினைப்பேன்:)) ஹா ஹா ஹா..

   Delete
  2. //என்னால எது செஞ்சாலும் சாப்பிட முடியும்:))// - சாப்பிட்டுத்தான் ஆகணும். கொஞ்சம் நல்லா இல்லைனா வேற யாரும் சாப்பிட மாட்டார்கள். அப்புறம் அதில் போட்ட பொருட்களின் விலையை எண்ணி, வீணாக்க மனமில்லாமல், எது செஞ்சாலும் சாப்பிட்டுத்தான் ஆகணும்.... ஹா ஹா

   Delete
  3. @ நெல்லைத் தமிழன்


   https://i.pinimg.com/originals/5c/c4/bd/5cc4bdcb5484e0c79fe51761f9dee3cf.jpg

   Delete
 8. ஊசி இணைப்பு :))))))))))) அடுத்த 5 நிமிஷத்தில் சண்டைபோட்டாலும் உடனே ஐ லவ் யூ சொல்லிக்கிற கூட்டமாச்சே நாமெல்லாம் :)

  ReplyDelete
  Replies
  1. //உடனே ஐ லவ் யூ சொல்லிக்கிற கூட்டமாச்சே நாமெல்லாம் :)//

   அல்லோ மிஸ்டர், நான் சிலபேர்களைச் சொல்லுவேன், எங்க்நே ஓடிப்போய் ஐ லவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஊஊஊஊஉ சொல்லுங்கோ பார்க்கலாம் ஹா ஹா ஹா..

   உங்களைத் தெரியுமஞ்சு எனக்கு... உடனேயே சமாதானமாகிடுவீங்க...

   Delete
  2. ////அல்லோ மிஸ்டர், நான் சிலபேர்களைச் சொல்லுவேன், எங்க்நே ஓடிப்போய் ஐ லவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஊஊஊஊஉ சொல்லுங்கோ பார்க்கலாம் ஹா ஹா ஹா..//

   😈😈😈😈😈

   Delete
  3. ஏறுங்கோ அஞ்சு ஏறுங்கோ.. ஏறிப்போய் ஐ லவ் யூ சொல்லிட்டு வாங்கோ:)))
   இப்போ நீங்க ரொம்ம்பக் குண்டாகிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்:))
   கொஞ்சம் மெலியப்பூடாதோ அதிராவைப்போல:)).. ஹா ஹா ஹா..

   https://i.pinimg.com/564x/2c/da/38/2cda38a9ce74e85b5de9021d3569c098.jpg

   Delete
 9. ஹாஹா :) ஊசி இணைப்பு :)) என்னமா முன்னாடி போகுது பாருங்க கரீனா :) சேசே கொரோன :)
  அதுவா பழகுச்சினா அதுக்கும் இடம் தட்டு பெட் எல்லாம் கேக்கும் :)

  ReplyDelete
  Replies
  1. என்னாது கரீனாக் கபூர் ஆஆஆஆஆ?:)) ஹா ஹா ஹா நீங்க எனக்குள் ஏறட்டும் எனத்தானே அனுப்பினனீங்க:)) பூஸோ கொக்கோ.. ஒரு கட்டி சந்திரிக்கா சோப் போட்டுக் கழுவிப்போட்டுத்தான் வீட்டுக்குள் ஆளை எடுத்தேனாக்கும் ஹா ஹா ஹா...

   //அதுவா பழகுச்சினா அதுக்கும் இடம் தட்டு பெட் எல்லாம் கேக்கும் :)//

   ஹா ஹா ஹா ஒரு புளொக்கும் தன் பெயரில ஓபின் பண்ணித்தரச் சொல்லிக் கேட்கும்:))

   Delete
 10. ஐந்து நிமிடத்தில் முடிந்துபோன.... ஹா ஹா

  நானும் இதே கேள்வியைத்தான் என் பெண்ணைப் பார்த்துக் கேட்டேன். பன் (Bun) பண்ணறேன்னு சாக்குல 3-4 மணி நேரம் கிச்சன்லயே இருந்துட்டயே என்றேன். அதுக்கு அவ, பன் செய்ய பத்து நிமிடங்கள்தானே ஆகும். மாவு ப்ரிபேர் பண்ணணும். அப்புறம் டிரேல வைக்கணும் (நான் அப்போ அப்போ அது பெருசாகுதான்னு பார்ப்பேன்). பிறகு அவன்ல வைக்கணும். இதில் என்னுடைய வேலை பத்து நிமிடங்கள்தானே என்றா.

  என்னைப் பொறுத்தவரையில் ஐந்து நிமிடம் என்றால், கேக் பண்ணப்போறேன்னு சொல்லிட்டு கிச்சன்ல நுழைந்து ஐந்தாவது நிமிடம் என் தட்டில் கேக் இருக்கணும்.

  எப்படித்தான் டைம்லாம் எழுதறீங்களோ

  ReplyDelete
  Replies
  1. //என்னைப் பொறுத்தவரையில் ஐந்து நிமிடம் என்றால், கேக் பண்ணப்போறேன்னு சொல்லிட்டு கிச்சன்ல நுழைந்து ஐந்தாவது நிமிடம் என் தட்டில் கேக் இருக்கணும்.
   //

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதெப்பூடி, நீங்கள் கழுவி, வெட்டி எல்லாம் ரெடி பண்ணி வச்சால், எங்களுக்கு 5 நிமிடம் போதும், டக்குப் பக்கென கொதிப்பிச்சு இறக்க:)) ஹா ஹா ஹா.

   எங்கட அம்மா சொல்லுவா, இந்தக்காலப் பொம்பிளைகள்[மறைமுகமாக அக்காவையும் அண்ணியையும்:))], தாங்கள் அரை மணித்தியாலத்தில சமைச்சுப் போட்டு கிச்சினை விட்டு வெளியே வந்திடுவோம் என்பினமாம், ஆனா அது ஒழுங்கான சமையல் இல்லையாம், பெரிய பெரிய துண்டுகளாக வெங்காயம் முதல் அனைத்தையும் வெட்டி, ஹை ஃபிளேமில, கொதிக்கப்பண்ணி இறக்கிப் போடுவினமாம் ஹா ஹா ஹா...

   அம்மா எனில் அனைத்தையும் நல்ல குட்டியாக அரிஞ்சு, ஸ்லோ ஃபயரில கனிய வச்சுச் சமைப்பா:)).. அப்போதான் கறிகளில் அனைத்தும் ஊறி, சுவை அதிகமாகுமாம்...

   Delete
  2. //ஐந்து நிமிடத்தில் முடிந்துபோன.... ஹா ஹா//

   ஹா ஹா ஹா ஐந்து நிமிடத்தில என் சரித்திரப் பெருமையையே:) மாத்திப்போட்டீங்களே:))..

   நான் சொல்ல வந்தது, கேக் செய்ததும், அஞ்சு நிமிடத்தில சாப்பிட்டு முடிச்சுப் போட்டினம் ஹா ஹா ஹா:)).. அவ்ளோ டுசி:) ஆக்கும்:)) பின்ன அதிரா சமைச்சால் அப்பூடித்தான் இருக்கும்:).

   ஹா ஹா ஹா உங்கட மகள் சொல்றது கரீட்டூஊஊஊ... மெயின் வேலை 5 -10 நிமிடம்தானே..:))

   //எப்படித்தான் டைம்லாம் எழுதறீங்களோ///
   நீங்கள் எல்லாம், இதை எங்கே செய்து பார்க்கப்போறீங்கள் எனும் தைரியம்தேன்ன்:))

   Delete
 11. அபச்சாரக் காணொளி, கோபு சார், ஓரிரு முறைகள் எனக்கு எப்பவோ அனுப்பினதுதான். அதனால் மீண்டும் பார்க்கவில்லை.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ஓ... இனி கோபு அண்ணனுக்கு அனுப்பி, இது அவரின் கைக்கு வந்ததோ எனச் செக் பண்ணிப்போட்டே இங்கு வெளியிடோணும்:)).. ஏன் தெரியுமோ, அவரின் கைக்குப் போனால்.. இந்தப் பிரபஞ்ச மக்களே பார்த்ததுபோலாகிடும் ஹா ஹா ஹா:))

   Delete
 12. டபிள் கலர் ஜெலி செஞ்ச கையோட அகரகர் ஜெலி செஞ்சு போடுங்க பிஞ்சு :)

  ReplyDelete
  Replies
  1. சத்தியமாக அஞ்சு, இப்போ கொஞ்ச நாளாகவே இந்த அவர் அவர்.. சே..சே அகர் அகர்:) என் மனதில ஓடிக்கொண்டிருக்கு... அமேசனில் இருக்கு, வாங்கோணும்:))..

   இம்முறை பிழை வராமல் செய்து போட்டு இங்கே காட்டுவேன் பாருங்கோ:))

   Delete
 13. கலர் ஜெல்லியைவிட, டூட்டி ஃப்ரூட்டி அல்லது ப்ளம் சேர்த்தால் இன்னும் அருமையாக இருக்கும் இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. உண்மை நெல்லைத்தமிழன், கேக் க்கு ஜெலி பொருத்தமில்லை, ஆனா நட்ஸ், கஸ்ராட் இவையுடன் எனில் ஜெலியும் சேர்த்து கேக்கை அலங்கரிக்கலாம், இது இப்போ அடிக்கடி செய்கிறேன் ஜெலி, உடம்புக்கு, ஹெயாருக்கு குளிர்மையைக் குடுக்கும்.. முன்பு எனில் சாப்பிட மாட்டினம், இப்போ விரும்பிச் சாப்பிடுகினம், அதனால செய்கிறேன், செய்ததை இங்கு போட்டேன்ன்...

   Delete
  2. மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்.

   Delete
 14. கேக்கை விட ஜெல்லி மிட்டாய் தான் நன்றாக இருக்கிறது. எனக்கு முட்டை போட்ட கேக் தான் பிடிக்கும். அதுதான் ஒரிஜினல். மற்ற எல்லாம் டூப்ளிகேட் தான். அதாவது ஒரு கட்டி இனிப்பு அப்பம் தான் (இட்டிலி கேக் ஆனது போல்)

   பூஸார் நுனிக்கொம்பில் ஏறிவிட்டாரோ? பிடிக்க முடியாமல் போயிற்றோ? அதற்கா திருக்குறளை போட்டீர்கள்? 

  சண்டையிட்டு 5 நிமிடத்தில் சமாதானம் கணவன் மனைவி இடையே மட்டும் ஏற்படும்.மற்ற சண்டைகள் தீர்வதற்கு ஒரு நாளாவது ஆகும்.
   Jayakumar

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ..

   ஹா ஹா ஹா கர்ர்ர்:) ஜெலியையும் மிட்டாய் ஆக்கிட்டீங்கள். முட்டை போட்டதெனில், அது ஒரு வித்தியாசமான சுவைதான், ஆனா அது அடிக்கடி செய்து அலுத்துவிட்டது, இப்படி ஒரு மாறுதலாகவும் இடைக்கிடை செய்யோணும்.

   //பூஸார் நுனிக்கொம்பில் ஏறிவிட்டாரோ? பிடிக்க முடியாமல் போயிற்றோ?//
   ஹா ஹா ஹா சமையலில் உச்சிக்குப் போயிட்டார்ர்:))..

   //மற்ற சண்டைகள் தீர்வதற்கு ஒரு நாளாவது ஆகும்.//
   நீங்க சொல்வது பெருஞ் சண்டைகள் பற்றி, நான் சொன்னது.. குட்டிக் குட்டிச் சண்டைகள்:)) ஹா ஹா ஹா..

   மிக்க நன்றிகள் ஜேகே ஐயா.... அடுத்து உங்களை என் “ஸ்பரோ” வுடன் விரைவில் சந்திக்கிறேன்.. ஓடி வந்திடுங்கோ:)..

   Delete
 15. அந்த ஊர் பையன் பாவம் .இதுமாதிரி நிறையபேருக்கு Pizza என்னன்னு தெரியாது .இப்போ டிவி சீரியல்சலாம் வந்ததால் கொஞ்சம் பார்த்து தெரிஞ்சிருப்பாங்க 

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான், இப்போ சாப்பிடாட்டிலும் நமக்கே சைனீஸ் நத்தை சூப் தெரியுதே:)) ஃபிரைட் தவளை தெரியும்:))... ஹா ஹா ஹா

   Delete
  2. சே சே சொல்ல விட்டுப் போயிடுது.. மிக்க நன்றி அஞ்சு.

   Delete
 16. ஸ்ஸ்ஸ்ஸ் :))))))) ஹையோ நேத்துதான் இண்டெர்வெல் வரைக்கும் மீண்டும் மகள் கணவருடன் 96 பார்த்தேன் பார்த்தோம் :)பொண்ணு முதல்ல சொல்லிட்டா விஜய் சேதுபதி தலைமுடி  ஸ்டைல் நல்லால்லையாம் :)இன்னும் த்ரிஷா சலூனுக்கு கூட்டிட்டுப்போற சீன பார்க்கல்ல ஹாஹாஆ :)

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆஆ என்னாதிது 2ம் தடவையாகவோ?.. மகள் சொல்வது உண்மைதான்.. அந்த ஹெயார் ஸ்டைல்.. கொஞ்ச நேரத்துக்கெனினும் சகிக்க முடியல்ல.. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஜிங்கமா இருகுது:)) ஹா ஹா ஹா..

   Delete
  2. ஹல்லோ முதல் டைம் நான் தனியே பார்த்தேன் :) நேத்து விட்ட இடத்திலில் இருக்குறது பார்க்கலாமான்னு கேட்டேன் அப்பா பொண்ணு ரெண்டுபேரும் நோ சொல்லிட்டாங்க :)))))))))))

   Delete
 17. வணக்கம் அதிரா சகோதரி

  பதிவு அருமை. கேக் செய்முறைகள் அசத்தல். முதல் கேக்கும், இரண்டாவது அடுப்பில் வைத்து செய்த கேக்கும். படங்களும். செய்முறைகளும் மிக நன்றாக இருக்கின்றன. குறித்துக் கொண்டேன். கேக்கின் மேல் வரைந்த ஓவியங்களைப் பார்த்தால் அதை வெட்டிச் சாப்பிடவே மனம் வராது போலிருக்கிறதே.. இருந்தாலும் அதன் முடிவும் நம் கையில்தான்..! ஹா. ஹா. ஹா. இட்லி கதை அருமை. மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கமலாக்கா வாங்கோ...
   செய்து பாருங்கோ.. நெடுகவும் ஒரே மாதிரிச் சமைக்காமல் இடைக்கிடை டின்னரைக் கட் பண்ணிப்போட்டு இப்பூடிச் செய்யுங்கோ:).

   //கேக்கின் மேல் வரைந்த ஓவியங்களைப் பார்த்தால் அதை வெட்டிச் சாப்பிடவே மனம் வராது போலிருக்கிறதே//
   ஹா ஹா ஹா அதேதான்..

   மிக்க நன்றி கமலாக்கா.

   Delete
 18. பதிவு அருமை.படித்து விட்டேன்.என் பிள்ளைகள் வந்தால்தான் செய்ய வேண்டும். மருமகள் நன்றாக செய்வாள், பேத்தியும் இப்போது கற்றுக் கொண்டு செய்கிறாள்.
  இப்போதுதான் பார்த்தேன், நாளை வருகிறேன். நிதானமாக பேச.

  கேக் டிசைன் வெங்கட் நாகராஜ் பதிவில் பார்த்த கேக் மாதிரி இருக்கிறது.
  கேக் செய்முறை படங்கள், காணொளி, எல்லாம் அருமை.குழந்தையின் சிரிப்பு மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

   ஹா ஹா ஹா அனைத்தையும் ரசித்து எழுதிப்போட்டீங்கள்.. முடியும்போது வாங்கோ.. மிக்க நன்றி கோமதி அக்கா.

   Delete
  2. //கேக் டிசைன் வெங்கட் நாகராஜ் பதிவில் பார்த்த கேக் மாதிரி இருக்கிறது.//

   ஓ நான் அதை மிஸ் பண்ணிவிட்டேன் என நினைக்கிறேன்.

   Delete
  3. இன்று மகன் கேக் செய்து இருந்தான் முதன் முதலில் ,மருமகளின் பிறந்த நாளுக்கு.

   கிட்டதட்ட இது போல் தான் இருந்தது . இரண்டு அடுக்காக செய்து இருந்தான்.

   Delete
  4. ஆஹா அப்படியோ கோமதி அக்கா.. உங்கள் மருமகளுக்கு, எங்கள் எல்லோர் சார்பிலும் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

   Delete
 19. வணக்கம் அதிரா சகோதரி

  கேக் செய்முறைகள் படங்கள் அட்டகாசம். மறுபடியும் பார்த்து ரசித்தேன். அழகான கேக்கை பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்.

  ஜெல்லி எப்படி செய்தீர்கள் என பகிரவில்லையே..! அதுவும் நன்றாக உள்ளது.

  திருக்குறள் இணைப்பு நன்றாக உள்ளது. ஒரு நிமிடம் (சாப்பிட்டவுடன் தூக்க கலக்கம் வேறு) இது சகோ தனபாலன் பதிவோ என திகைத்துப் பின் மீண்டேன்.ஹா.ஹா.ஹா

  ஊசி இணைப்பு அருமை. கொரானாவுடன் கொஞ்ச நாளில் நமக்கு பழகி விடும். இப்போதே நிறைய பழக்கம் (அது சம்பந்தபட்ட செய்திகளை பார்த்து கேட்டு, அது இல்லாத செய்திகளை பார்க்கவே பிடிக்காமல் போகுமளவிற்கு) வந்தாகி விட்டது இப்போதும் அது நட்புறவோடு நம்மை பார்ப்பதால்தான் அதற்கு நம்மை விடவே மனதில்லை. ஹா.ஹா.

  அடுத்த ஊசி இணைப்பும் அருமை.(ஆமாம்.. ஊசிக்குறிப்பு எங்கே?) ரசித்தேன்.இப்படிபட்ட நட்புதான் நமக்கு வேண்டும். சண்டையே போடாமல் இருந்து விட்டாலும் போரடிக்கும். ஐந்து நிமிட சண்டை நடுவில் ஒரு சிறு உற்சாகம் தரும். ஆனால், நீங்கள் சொல்வது போல், எதுவும் நடவாவது போல் நட்புடன் மீண்டும் சமாதானமாகி விட்டால் மிக நல்லது.(சொர்க்கம்) மாறாக யார் அப்படி போவது என்ற ஈகோ மட்டும் நட்புக்குள் வந்து விட்டால் அது நரகந்தான்.

  அத்தனையும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆ திரும்படியும் கமலாக்கா வாங்கோ.. மீள் வருகை தருபவர்களில் நீங்களும் ஒருவராகி விட்டீங்கள் மகிழ்ச்சி நன்றி...

   //அழகான கேக்கை பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்.//
   நன்றி நன்றி, ஒருதடவை பூஸ்குட்டிப்படம் போட்டுச் செய்யோணும்:)..

   //ஜெல்லி எப்படி செய்தீர்கள் என பகிரவில்லையே..! //
   இது டக்கு டிக்கு டோஸ் தானே கமலாக்கா.. அதனாலதான் சொல்லவில்லை நான். ஜெலிப் பவுடர் விற்கிறது, அப்பக்கற்றிலேயே அளவு போட்டிருக்கும், அதன்படி, ஒரு பக்கட்டிற்கு 200 மில்லி லீட்டர் அப்படி, கொதி தண்ணி ஊற்றிக் கலக்கி வைத்தால் ஜெலியாக இறுகி வரும், சிலர் அதுக்கு எக்ஸ்றாவாகச் சீனி சேர்ப்பினம், ஆனா அதில ஒரு இனிப்பும் கலந்துதான் இருக்கும்.. பல கலர்களில் கிடைக்குது, ஒவ்வொரு பழ ஃபிளேவரிலும், வித்தியாசமான பச்சை மஞ்சள்.. இப்படிக் கலர் எனில் ஒன்றின் மேல் ஒன்று ஊத்தும்போது, வித்தியாசம் தெரியும், இது ஒரேஞ் உம் சிவப்பும் என்பதனால தெரியவில்லை பெரிசாக. கிட்டத்தட்ட அகரகர் தான்.

   //இது சகோ தனபாலன் பதிவோ என திகைத்துப் பின் மீண்டேன்.ஹா.//
   ஹா ஹா ஹா இப்போ கில்லர்ஜியும் எல்லோ திருக்குறள் பற்றி எழுதத் தொடங்கிட்டார்ர்:))

   Delete
  2. ///(அது சம்பந்தபட்ட செய்திகளை பார்த்து கேட்டு, அது இல்லாத செய்திகளை பார்க்கவே பிடிக்காமல் போகுமளவிற்கு)//
   உண்மைதான் இப்போ ஆரும் நியூஸ் பார்ப்பதில்லை, போனிலும் அதுபற்றிப் பேசுவதில்லை, மாச் ஏப்ரலில் கோல் வந்தாலே கொரோனா கொரோனா தான் பேச்சு ஹா ஹா ஹா...

   //ஊசிக்குறிப்பு எங்கே//
   இருக்கிறதே..

   நட்போ உறவோ.. எல்லாம் பொருத்தத்தைப் பொறுத்துத்தான் அமையும்...மனம் பொருந்தி விட்டால், சண்டை வந்தாலும் மறந்திடுவொம், இல்லை எனில்.. சின்னச் சண்டையாலேயே பல வருடங்கள் பேசாமல் பிரிஞ்சு போயிடுவோம் ஹா ஹா ஹா..

   மிக்க நன்றிகள் கமலாக்கா.. திரும்பவும் நாளைக்கும் வருவீங்களோ?:)) ஹா ஹா ஹா..

   Delete
  3. உண்மைதான்..! நானும் இப்போதெல்லாம் அடிக்கடி மீள் வருகை தருகிறேன்.உங்கள் பதிவின் அற்புதமான செய்திகள் என்னை அடிக்கடி இப்படி வர வைக்கிறது.

   /திரும்பவும் நாளைக்கும் வருவீங்களோ?:)) ஹா ஹா ஹா../ .

   வந்தால் போயிற்று. இப்போது பாருங்கள். நீங்கள் சொன்ன உடனே மறுநாளாகிய இன்றும் வந்து விட்டேன்.
   எப்படி? ஹா.ஹா.ஹா.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  4. இன்று என் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளேன். உங்களுக்கு முடிந்த போது வந்து கருத்திடுங்கள்.

   அன்புடன்
   கமலா ஹரிஹரன்

   Delete
  5. ///உங்கள் பதிவின் அற்புதமான செய்திகள் என்னை அடிக்கடி இப்படி வர வைக்கிறது.///
   ஹா ஹா ஹா ஞானி என்றாலே அற்புதங்கள் பல நிகழ்த்துபவர்தானே:) நான் மட்டும் என்ன விதிவிலக்கோ:))).

   //நீங்கள் சொன்ன உடனே மறுநாளாகிய இன்றும் வந்து விட்டேன்.//
   ஆஆஆ உங்களுக்குப் 12 மணி தாண்டிவிட்டது ஹா ஹா ஹா அப்போ மறுநாள் தான் நன்றி நன்றி...

   புதிய போஸ்ட் சொன்னமைக்கு நன்றி, சொலியிருக்காட்டில் பலசமயம் நான் பார்த்திருக்க மாட்டேன் நாளைக்குத்தான் மீ த லாஸ்ட் என வந்திருப்பேன் ஹா ஹா ஹா.. காலையில ஒழுங்காக பார்ப்பேன் புதுப் போஸ்ட்டுகள் வந்திருக்கோ என, மற்றும்படி பார்க்கத் தவறி விடுகிறேன்... பொஸ்ட் க்கும் கொமெண்ட் மாதிரி உடனடி நோட்டிபிகேசன் ஏதும் இருபின் நல்லது.. இது பற்றி நான் ட்றம்ப் அங்கிளோடு பேசப்போகிறேன்:))

   நன்றி கமலாக்கா நன்றி.

   Delete
 20. 96 பாட்டுகள் எல்லாம் பிடித்த பாடல். நானும் இப்படம் 2, 3 தரம் பார்த்தாச்சு. சி.கருப்பட்டியும். ஆங்... சொல்லமறந்திட்டேன். பாகுபலியும் பார்த்தாச்சு. இங்கன சொல்லேல்லை. அங்கே சொல்கிறேன்.
  2வகை கேக்கும் அப்பாடா நான் செய்யலாம். என்ன செய்துபோட்டு நானும், மகனும்தான் சாப்பிடோனும். ஆனாலும் ஸ்வீட் ரெசிப்பிகள் செய்து பார்க்காமல் விடுவதில்லை.
  அழகா டிசைன் போட்டிருக்கிறீங்க. அதுக்கு பாராட்டவேணும். நல்ல கலைதிறன் உங்களிடமிருக்கு. சமையலிலும் தான்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்முலு வாங்கோ..

   //நானும் இப்படம் 2, 3 தரம் பார்த்தாச்சு.//
   ஆஆஆ கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எனக்கு சில படங்கள் திரும்பத் திரும்பப் பார்க்க விருப்பமில்லை.. மனதில கவலையாக வரும்..

   //பாகுபலியும் பார்த்தாச்சு//

   ஆவ்வ்வ்வ் ஜொள்ளவே இல்ல:))..

   //இங்கன சொல்லேல்லை. அங்கே சொல்கிறேன்.//
   ஓ போஸ்ட் ரெடியாகுதோ? ஹா ஹா ஹா.. போடுங்கோ போடுங்கோ..

   //2வகை கேக்கும் அப்பாடா நான் செய்யலாம்.//
   ஹா ஹா ஹா கர்ர்ர்:))..

   //நல்ல கலைதிறன் உங்களிடமிருக்கு.///
   ஆஆஆஆஅ அஞ்சூஊஊஊஊஉ வந்து இதைப் படியுங்கோ.. என்னைப் பார்க்காமலேயே சொல்லிட்டா அம்முலு:))

   // சமையலிலும் தான்.//
   ஹா ஹா ஹா மிக்க நன்றி அம்முலு...

   Delete
 21. முதலாவது சூப்பர். இரண்டாவது அடுப்பிலும் செய்து விட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மாதேவி வாங்கோ.. இன்றும் உடனே வந்திருக்கிறீங்கள்.. உங்களுக்காகவே ஒரு பீஸ் சொக்கலேட் கேக் ஒளிச்சு வச்சனான்.. இந்தாங்கோ:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி மாதேவி.

   Delete
 22. 2வது கேக்கும் சிம்பிளா பார்க்க நல்லாயிருக்கு.

  இப்போ ஊரில் pizza hut (யாழில்) ஆரம்பத்தில் புதுசுக்கு நல்ல சனம். க்யூ என சொன்னார்கள். இப்ப அவங்களும் பாஸ்ட் புட் க்கு பழகிவிட்டார்கள். இப்ப எங்கள் உணவே take away ல எடுக்கலாம். வீட்டில் சமைத்து கொடுக்கிறார்கள்.

  கல் உப்புதானே போட்டீங்க. அப்ப நீங்க கம்பி வைக்கலையா? ஜெலி கலர்புல்லா இருக்கு. அகர் அகரா?
  ஊசி இணைப்பு ஹா..ஹா...ஹா. அதுவா பழகினால் நிறைய டிமாண்ட் பன்னும்.
  நட்பு தத்துவம் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. அது அம்முலு தயிர் சேர்ப்பதால், இன்னும் மெத்து மெத்தென சொஃப்ட்டாக வருது...

   ஃபாஸ்ட் ஃபூட்டில இருந்து திரும்பவும் மக்கள் சமையல் ஒன்லி:)) ஆக மாறி வருகின்றனரே.. நாங்களும் இங்கு வெளி உணவு வாங்கி ரெண்டரை மாதமாகிறது, சின்னவர் அடிக்கடி கேட்கிறார், தன் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் ஹோம் டெலிவரியில் வாங்குகிறார்களாம்.. இதில புதினம் என்னவெனில், சைனீஸ் ரெஸ்டோரண்டுகளில் இருந்துதான் அதிகமாக ஹோம் டெலிவரி நடக்குதாம் இங்கு ஹா ஹா ஹா...

   இல்ல அம்ம்முலு நான் போட்டது கல்லுப்பு இல்லை. நான் அடிக்கடி உப்பில கொண்டைக்கடலை, இப்படி பல வறுத்து எடுப்பேன் என் பொழுது போக்குக்கு, முன்பு இங்கு ரெசிப்பி போட்டிருக்கிறேன் எல்லோ.. அப்படி வறுப்பதில், அந்த உப்பைக் கட்டிக் கட்டி வைத்திருக்கிறேன், அதில இப்போ உப்புத் தன்மை போய், மண்போல வந்திட்டுது:))..

   //அப்ப நீங்க கம்பி வைக்கலையா?//
   அதனைப் படமெடுக்கத் தவறி விட்டேன்..

   //அகர் அகரா?//
   ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எனைக் கடுப்பேத்துறா அம்முலு.. யுவர் ஆனர்:)) ஹா ஹா ஹா அமேசனில் அகர் அகர் கிடைக்குது, பவுடராகவும் இருக்குது... வாங்கிச் செய்யப்போறேன்.. இது ஜெலி ஆக்கும்:)).

   மிக்க நன்றிகள் அம்முலு...
   உங்களிடம் என் ஏச் எம் ட்ரைட்டர் இல்லையோ கொம்பியூட்டரில?

   Delete
  2. நான் உங்க கொமண்ட் பகுதியிலதான் எழுதுறேன். கொப்பி பேஸ்ட் செய்வதில்லை. இனி பகுதி பகுதியா எழுதி விடுறேன். நீங்க ஏன் கேட்டீங்க என்று தெரியுமேஏஏ..
   NHM இல்லை. ஆனா கீபோர்டில் தமிழ் டொச் என மாத்தலாம். அந்த வசதியிருக்கு.

   Delete
  3. //நீங்க ஏன் கேட்டீங்க என்று தெரியுமேஏஏ..//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா இல்ல ஒவ்வொரு கொமெண்ட்டும் அதிக இடைவெளி எடுத்தூஊஊ எடுத்துப் போட்டமையால, பக்கத்து வீட்டில் போய் ரைப் பண்ணி பண்ணிக் கொண்டு வாறீங்களோ என நினைச்சேன்ன் அது டப்போ?:)) ஹா ஹா ஹா..

   Delete
 23. ஊசி இணைப்பில் இருப்பது போல மிகச்சிலருடன் மட்டுமே பழக முடியும் இல்லையா?  இன்று வெளியிட்டிருக்கும் பாடல் ரொம்பப்புதுசு போல!  விஜய் சேதுபதி தெரிகிறார்.  ஒரு பாட்டு கேக்கவே நேரமில்லை...  96 பாட்டு எப்படிக் கேக்கறதுன்னு விட்டுப்போட்டேன்!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

   //ஊசி இணைப்பில் இருப்பது போல மிகச்சிலருடன் மட்டுமே பழக முடியும் இல்லையா?//

   ஆஹா நீங்களும் கீழிருந்து மேலா.. ஹையோ இது எப்போ தொடக்கமாக்கும்?:)).. அனைத்துக்கும் காரணம் அஞ்சுதான் கர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

   உண்மைதான், சிலரோடுதான், சரி போனால் போகட்டும் விட்டிடலாம் என நினைச்சு திரும்பப் பழகுவோம்...

   //ஒரு பாட்டு கேக்கவே நேரமில்லை... 96 பாட்டு எப்படிக் கேக்கறதுன்னு விட்டுப்போட்டேன்!//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)) வரவர நீங்கள்.. ஓடுற மீனில நழுவுகிற மீனாக மாறிக் கொண்டு வாறீங்கள்... :) சரி சரி மொபைல் என்பதால விட்டிடலாம்:)

   Delete
 24. கேக்குகள் ஸூப்பர்.  ஆனால் பாருங்கள் நாங்கள் கடையிலேயே கேக்குகள் வருடத்துக்கு ஒருமுறை வாங்கினால் பெரிசு!  .ஹா.  ஹா..  ஹா...   வீட்டில் செய்ய முயற்சித்ததே இல்லை.  ஆர்வம் இருந்தால் அல்லவா செய்ய!

  ReplyDelete
  Replies
  1. அது உண்மைதான் ஸ்ரீராம், எதுவாயினும் விருப்பம் இருந்தால் மட்டுமே செய்ய முடியும், இப்போ நான் வடகம் செய்வது, பயங்கர ஆர்வமும் சொல்ல முடியாத ஒரு விருப்பத்துடனும்தான் செய்கிறேன்ன்...

   Delete
 25. காணொளியைப் பார்த்து ரசிரித்தேன்!  எப்படி எல்லாம் ஏமாற்றத்தோன்றுகிறது!  

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா எப்பூடி எல்லாம் திங் பண்ணீனம்..

   Delete
 26. குறள் எல்லாம் சொல்ல ஆரம்பித்து விட்டீர்கள்.  நன்று.  அன்பான எதிரி அஞ்சுதானே?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கரீட்டு.. மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 27. இந்த இரண்டு கேக்குமே அவன் இருக்கும்போது செய்திருக்கேன். அதே போல் சமைக்கும் குக்கரில் அடியில் உப்புக்குப் பதிலாக நல்ல மணல் போட்டுக் கேக், பிஸ்கட் எல்லாமும் செய்திருக்கேன். உங்களோட முதல் கேக்கின் வரைவு அழகாய் இருக்கிறது. அதனால் கொஞ்சம் சந்தேகம், நீங்க தான் செய்தீங்களா? இஃகி,இஃகி,இஃகி!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீசாக்கா வாங்கோ...

   //இந்த இரண்டு கேக்குமே அவன் இருக்கும்போது செய்திருக்கேன்///
   அவன்.. இப்போ எங்கே போயிட்டார்ர்?:).. ஹா ஹா ஹா..

   ச்சும்மா அடிச்சு விடக்கூடா கீசாக்கா.. இப்பூடிப் பற்றன் போட்டு டபிள் கலரில செய்தனீங்களோ?? எனக்கு ஆதாரப் படங்கள் காட்டினால் மட்டுமே நம்புவேனாக்கும் கர்ர்ர்:))..

   //அதனால் கொஞ்சம் சந்தேகம், நீங்க தான் செய்தீங்களா? இஃகி,இஃகி,இஃகி!///
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
 28. வழக்கம்போல் ஊசிக்குறிப்பு/ ஊசி இணைப்புத் தானே வந்திருக்கு? குறிப்பு வரலை. அதுக்குப் பதிலாத்தான் திருக்குறள் குறிப்பா? ஓகே, எல்லாம் நல்லா இருக்கு. உங்க வலைப்பக்கம் பக்கத்தில் (சைட் பார்) உள்ளவை எதுவும் சில நாட்களாக வருவதே இல்லை. sorry, this image is currently unavailable. என்றே வருது.

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆ என்ன சொல்றீங்கள் என்றே புரியாமல் இப்போ பார்த்தேன் இரு இடத்திலும் ஒரே தலைப்பைக் குடுத்துவிட்டேன், இப்போ மாத்தி விட்டேன் கீசாக்கா நன்னி ஹெ ஹை...:).

   ஓ என் பக்கத்தில் நான் கை வச்சுக் கொஞ்சக்காலம் எந்தத் திருத்தமும் பண்ணவில்லை, நேரம் பொதவில்லை, வடகம் போடுவதிலேயே காலம் ஓடுது... ஹா ஹா ஹா.. இப்போதான் பார்க்கிறேன், கூகிள் இமேஜ் எல்லாம் சில காலங்களில் காணாமல் போயிடுது அதனால தான் அப்படி... மாத்தி விடுகிறேன் நன்றி.

   மிக்க நன்றி கீசாக்கா.

   Delete
 29. கேக் புராணம் எல்லாம் நன்றாக இருக்கிறது...

  ஆனால்...

  அதென்ன இறைமாட்சி / வலியறிதல்

  ???

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ டிடி வாங்கோ...

   //அதென்ன இறைமாட்சி / வலியறிதல்//

   அதானே.. நீங்கள்தான் இதுக்கு விளக்கம் சொல்லுவீங்கள் என எதிர்பார்த்தேன்.. நீங்களே கேள்வி கேட்டால் எப்படி?:).. ஹா ஹா ஹா... தமிழில் கருத்துப் போட்டிருப்பதாலதான் எனக்கு குறளே புரிஞ்சது:))..

   மிக்க நன்றி டிடி.

   Delete
 30. முதலாவது கேக் பார்க்க ரொம்பவே நன்றாக வந்திருக்கிறது. இரண்டாவதும் ஓகே. ஜெல்லி - வாவ்.

  பாராட்டுகளும் வாழ்த்துகளும். தொடரட்டும் சோதனைகள். இட்லி - ரைஸ் கேக் என சிலர் சொல்வதுண்டு அதிரா - அட ஞானியிலிருந்து பிஞ்சு கேட்டரிங் ஓனர் ஆயாச்சா?

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வெங்கட் வாங்கோ..

   //முதலாவது கேக் பார்க்க ரொம்பவே நன்றாக வந்திருக்கிறது. இரண்டாவதும் ஓகே. ஜெல்லி - வாவ்.//

   ஆஆஆ ஹா ஹா ஹா நன்றி.

   //இட்லி - ரைஸ் கேக் என சிலர் சொல்வதுண்டு அதிரா - ///
   ஓ.. ஆஆஆஆஆ இப்படியும் ஒன்றிருக்குதோ? அதுவும் சரிதான், கேக் போல சொஃப்ட்தானே..

   இப்போ பான்கேக் என்பதும், ஒருவித தோசைதானே... சரியாகச் சொன்னீங்க..

   //அட ஞானியிலிருந்து பிஞ்சு கேட்டரிங் ஓனர் ஆயாச்சா?//
   அது கொரோனாவால ஹா ஹா ஹா

   மிக்க நன்றி வெங்கட்.

   Delete
 31. இட்லி கதை சூப்பர். நாங்கள் இலங்கை வந்த போது இட்லி மாதிரி குண்டு குண்டாக இடிபாப்பம் , எல்லா மாவிலும் செய்த இடியாப்பங்கள் கிடைத்தன எல்லா ஓட்டல்களிலும். அது போல் தட்டு நிறைய வடைகளும் கொண்டு வந்து வைத்துவிடுகிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அக்கா, நீங்கள் இலங்கை போனது பற்றிச் சொல்றீங்கள்.. அதுபற்றிப் போஸ்ட் போட்டிருக்கிறீங்களோ? போட்டிருந்தால் லிங் தரவும் படிக்க ஆவலாக இருக்கிறேன்.. எங்கெல்லாம் போனீங்கள் என.

   அங்கு பிரயாணத்தின் போது நான் விரும்புவது, “பிளேன் ரீயும், பருப்பு வடை” யையும் தான்.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆ அந்தக் களைப்பின்போது, என்னா ஒரு சூப்பராக இருக்கும்...

   Delete
  2. கதிர்காமம், முன்னேஸ்வரம், கேதீச்சரம், பொன்னம்பலவாணர்
   திருக்கோயில்,திருக்கோணமலை, அனுராதபுரம் எல்லாம் போனோம் 6 நாட்கள் போதவில்லை.

   https://mathysblog.blogspot.com/2012/02/blog-post_03.html

   இலங்கைத்திருக்கோயில்கள் என்று பதிவு போட்டு இருக்கிறேன்.

   Delete
  3. https://mathysblog.blogspot.com/2011/04/blog-post_20.html

   திருக்கேதீச்சரம் திருக்கோயில்

   Delete
  4. https://mathysblog.blogspot.com/2016/11/blog-post_4.html

   கதிர்காமக் கந்தன் கோவில்

   Delete
  5. நன்றி கோமதி அக்கா, வருகிறேன்ன்ன் இதோ என் காரில் ஏறிவிட்டேன்:))

   Delete
 32. //மேலே செய்ததைப்போல அவணிலும் வைத்து எடுக்கலாம், இரண்டிலும் முடிவு ஒன்றுதான்:)//

  இரண்டுமே நன்றாக இருக்கிறது. இப்போது என்னிடம் அவன் இல்லை. கெட்டு போய் விட்டது வேறு வாங்க விருப்பம் இல்லை. இவர்களுக்கு கேக் பிடிக்காது எனக்கும் நல்லதாக போச்சு கேக் செய்யும் வேலை மிச்சம். கேக் வகைகள் நிறைய எழுதி வைத்து இருக்கிறேன்.

  கல் உப்பை சூடாக்கி அதில் கடலை வறுப்பது, வத்தல், அப்பளம் பொரிப்பது எல்லாம் காட்டுகிறார்கள் செய்து பார்க்க வேண்டும். எண்ணெய்க்கு வேலை இல்லை. மீண்டும் மீண்டும் கல் உப்பை பயன் படுத்தலாம் என்கிறார்கள்.


  டபிள் கலர் ஜெலியையும் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. //கல் உப்பை சூடாக்கி அதில் கடலை வறுப்பது//
   கல் உப்பில் இல்லை கோமதி அக்கா, அரைத்த ஃபைன் உப்பில்தான் கடலை வறுக்கலாம், நான் இங்கு அப்படிச் செய்து போஸ்ட் போட்டிருக்கிறேன்.. அதே மண் உப்பைத்தான் இந்த கேக் செய்யவும் பயன்படுத்தலாம், இல்லை எனில் நன்கு சுத்தப்படுத்திய மண் இருப்பின் அதிலும் வறுக்கலாம்.

   Delete
  2. வாட்ஸ் அப்பில் வந்த பதிவை பார்த்தேன் பொடி உப்புதான்.

   Delete
 33. திருக்குறள் குறிப்பு, ஊசி இணைப்புகள் எல்லாம் அருமை.

  ReplyDelete
 34. 96 படம் பார்த்து விட்டேன். பாட்டு வார்த்தைகள் புரியவில்லை அப்போதும், இப்போதும் தெளிவாக வார்த்தைகள் கேட்கவில்லை.

  ReplyDelete
  Replies
  1. //பாட்டு வார்த்தைகள் புரியவில்லை அப்போதும், இப்போதும்//
   கரீட்டூஊஊஊஊஉ.. இதில் வார்த்தைகள் கேட்பது கஸ்டம், வார்த்தைகளை விட வீடியோக் காட்சிக்கே முன்னுரிமை....

   மிக்க நன்றிகள் கோமதி அக்கா.. நல்ல வெயில் வந்துவிட்டது மீண்டும், நான் இப்போ ஓடிப்போய் கூழ் வடாம் முறுக்குச் செய்யப்போகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் ஹா ஹா ஹா...

   Delete
  2. செய்யுங்கோ வெயில் இருக்கும் போதே செய்து விட வேண்டும்.

   Delete
  3. செய்திட்டேன் கோமதி அக்கா, பாதிதான் காய்ஞ்சிருக்கு.. இங்கு வெயில் எனினும்.. ஒருவித குளிர் வெயிலாக, நல்ல வெதராக இருக்கும், அதனால காய ரைம் எடுக்கும்.

   Delete
 35. ஹை அதிரா கீதாவைப் போல் கேக் செய்யத் தொடங்கிட்டாங்க!! ஓ அதான் பிஞ்சு கேட்டரிங்க் ஓனர் பட்டமா!! ஹா ஹா ஹா ஹா ஆனா இது ஓல்ட் நேமல்லோ? முன்னாடியே போட்டு…….ஓ அது செஃப் இது ஓனரா…ஓஹோன்னா..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆஆஆஆ கீதா வந்திருப்பதை இப்போதான் பார்க்கிறேன்ன்.. சத்தமே இல்லாமல் வந்திருக்கிறா ஹா ஹா ஹா..

   வாங்கோ கீதா வாங்கோ..

   //ஓ அது செஃப் இது ஓனரா…ஓஹோன்னா..//

   ஹா ஹா ஹா அதே அதே.... வரவர உச்சிக்குப் போய்க் கொண்டிருக்கிறேனாஅக்கும்.. மேலே மேலே ஹா ஹா ஹா..

   Delete
 36. சாக்கொ மார்பிள் கேக் சூப்பரா வந்திருக்கு அட்டகாசம்!!அதிரா. பொக்கே!! உங்களுக்கு!

  இதே அளவுதான் ஆனால் எண்ணைக்குப் பதில் வெண்ணை சேர்ப்பேன். நான் கேக்குகளில் எண்ணை சேர்ப்பதற்குப் பதில் வெண்ணை தான் சேர்க்கிறேன். எண்ணை சேர்ப்பதன் அளவை விடக் கொஞ்சம் குறைவாகச் சேர்த்தாலும் போதும். கேக் நன்றாக வரும். மார்பிள் கேக் என்றால் இந்த அளவு ஒரு கப் சீனி போடுவேன். ஆர்டினரி சோக்கோ கேக் என்றால் ¾ கப் தான் சீனி போடுவேன் 1 ½ கப் ஆல் பர்ப்பஸ் ஃப்ளாருக்கு. ஏனென்றால் ஐசிங்க் செய்வது என்றால்./ இல்லைனா ஒரு கப் சீனி

  சமீபத்தில் செய்தவற்றை ஸ்டெப் பை ஸ்டெப் படம் எடுக்காமல் விட்டுவிட்டேன் அதான் திங்கவுக்கு அனுப்ப இயலவில்லை. ஆனால் ஃபைனல் அவுட்கம் மட்டும் எடுத்தேன் அதை ஏதேனும் ஒரு பதிவில் போடுறேன்..

  கீதா

  கரன்ட் போய்டுச்சு...ஸோ லேட்டர்.

  ReplyDelete
  Replies
  1. //பொக்கே!! உங்களுக்கு!//
   நன்றி நன்றி, அஞ்சுவை.. மணக்க கூட விடமாட்டேனாக்கும்:))..

   அதேதான் எண்ணெய், வெண்ணெய் எதுவும் சேர்க்கலாமாம்..

   கரெக்ட் கீதா, நான் கொஞ்சம் சீனி குறைவாகப் போட்டுவிட்டேன் என பீல் பண்ணினேன், உடம்புக்கு நல்லது என குறைத்தேன், ஆனா இன்னும் கொஞ்சம் போட்டிருக்கலாம் ..

   மிக்க நன்றி கீதா...

   Delete
  2. அதிரா //ஆனா இன்னும் கொஞ்சம் போட்டிருக்கலாம் ..//

   இல்லை அதிரா முட்டை இல்லாமல் கேக் செய்யும் போது கொஞ்சம் குறைவா இருந்தாலேதான் கேக் நன்றாக ஃப்ளஃபியாக வருகிறது. முட்டை போட்ட கேக் போல வே நல்லா வருது.

   கீதா

   Delete
  3. உண்மை கீதா, கேக் நன்றாகவே இருந்தது, ஆனா எங்கட சின்னவருக்கு கொஞ்சம் இனிப்பு புளிப்பு காரம் எல்லாம், கரெக்ட்டாக இருக்கோணும்:))..

   நன்றி கீதா மீள் வருகைக்கு.

   Delete
 37. கேக் டிசைன் அற்புதம். இரண்டு கேக்குகளுமே பார்சல் அனுப்புங்கோ அதிரா :)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ தேனம்மை வாங்கோ.. நீண்ட அமைதிக்குப் பின்பு புளொக்பக்கம் வருகிறீங்கள் போலும் ..மிக்க நன்றி..

   பார்சல் அனுப்பலாம் நான் என்ன மாட்டேன் என்றா சொல்கிறேன்:)).. கொரோனாவுக்குத்தானே பயப்பிட வேண்டிக்கிடக்கு:))

   Delete
 38. எங்கட சின்னவருக்கு கொஞ்சம் இனிப்பு புளிப்பு காரம் எல்லாம், கரெக்ட்டாக இருக்கோணும்:))..//

  ஓ ஓகே

  அதிரா நான் இன்னும் கருத்தே போட்டு முடிக்கலையாக்கும்!! ஹா ஹா ஹா...நேற்று கரண்டு வந்து உங்கள் ப்ளாக் ஓப்பன் செய்தால் ஓப்பனே ஆகலை...அப்புறம் ஓப்பன் ஆகும் ப்ளாக்ஸ்கு கமென்ட் கொடுத்துட்டு மீண்டும் இங்கு வரும் போது ஓப்பன் ஆகவே இல்லை... நெட் வேறு படுத்தியது.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஓ இன்னும் கருத்துப் போட்டு முடிக்கேல்லையோ.. ஆனா வழமையை விட இம்முறை ரெயின் அவசரமாகப் புறபட்டு விட்டது கீதா ஹா ஹா ஹா மன்னிச்சுக்கோங்கோ:))

   Delete
 39. சமீபத்தில் செய்தவற்றை ஸ்டெப் பை ஸ்டெப் படம் எடுக்காமல் விட்டுவிட்டேன் அதான் திங்கவுக்கு அனுப்ப இயலவில்லை. ஆனால் ஃபைனல் அவுட்கம் மட்டும் எடுத்தேன் அதை ஏதேனும் ஒரு பதிவில் போடுறேன்..

  சென்னையில் இருந்த வரை கேக் டிமான்ட் கூடுதல்.

  கீதா

  ReplyDelete
 40. ஸ்ரீராம் வீட்டிற்கு ஒரு முறை சென்ற போது பைன் அப்பிள் அப்சைட் டவுன் கேக் செய்து அதுவும் உங்கள் அன்பு எதிரிக்கு ஏதுவான, நம் ஏஞ்சலுக்கு சாப்பிடும் வகையில் க்ளூட்டன் ஃப்ரீ சிறு தானியத்தில் செய்து எடுத்துப் போனேன். ஆனால் பாருங்க செய்யும் போது ஃபோட்டோ எடுக்காமல் விட்டதால் திங்க பதிவில் போட முடியலை.
  ஸ்ரீராமிடம் கேட்டுறாதீங்கோ!!! ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆ சிறுதானியக் கேக்.. நான் சிறுதானிய பிரெட் செய்யலாம் எனத்தேடுகிறேன் ஈஸ்ட் கிடைக்கவில்லை கர்:))..

   ஆனா கீதா, நெல்லைத்தமிழனின் ஃபேவரிட் கேக் செய்யப்போகிறேன் இன்று அல்லது நாளை:)).. செய்து நாங்களே சாப்பிடுவோமே:)) ஹா ஹா ஹா..

   Delete
 41. ப்ளெய்ன் வெனிலா கேக்கும் நன்றாக வந்திருக்கு. அதுவும் நான் பட்டரில் தான் செய்வேன். நானும் ஒவனிலும் செய்வேன்….முன்பு ஒவன் இல்லாதப்ப கேஸில் வாணலி அல்லது கனமான பாத்திரம் போட்டு மணல் அல்லது உப்பு போட்டு – அந்த உப்பை அப்படியே எடுத்து வைத்துவிடுவேன் இதற்கு செய்ய. அல்லது நல்ல மணல் எடுத்து வைத்ததுண்டு. அதற்காகவே கடலில் அலை அடிக்கும் பகுதியில் இருந்து நைஸ் மணல் எடுத்து வீட்டுக்குக் கொண்டு வந்து காய வைத்து வைத்திருந்தேன். இப்போ ஒவன் இருக்கு அதில் செய்வதுண்டு கரன்ட் போய்விட்டால் அடுப்பில் உப்பு போட்டு செய்கிறென்.

  சமீபத்தில் கூட பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுக்காக ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் செய்தேன் படம் இருக்கான்னு பார்க்கணும். எடுத்த நினைவில்லை.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஓம் நீங்களும் சமையல் பிரியை என்பது தெரியுமே எங்களுக்கு...

   Delete
 42. ஊர்ப்பையன் பாவம் இல்லையா? அது படிச்சு மனசு ரொம்ப கஷ்டமாகிப் போச்சு. இங்கும் இப்படி பிள்ளைகள் இருக்காங்க அதிரா.

  ஜெல்லி (அப்படித்தான் நாங்க ஜொல்லுவோமாக்கும்) நல்லா வந்திருக்கு.

  ஊஇ சூப்பர். நாமெல்லாம் அந்தக் கூட்டமேதான்!!!! ஹா ஹா ஹா . எனக்குக் கோபம் வருவது அபூர்வம். வந்தாலும் புஸ் என்று போய்விடும். மானம் ரோஷம் சூடு சுரணை எதுவுமே கிடையாது! எங்கள் வீட்டில் என்னைச் சொல்லுவது சரியான எருமை மாடு எருமை மாட்டுத் தோல்காரி என்று. எருமைச் செல்லம் பாவம். என்றாலும் பாருங்க என்னால அதுக்கு ஒரு நல்ல பெயர் கிடைத்தது! ஹிஹிஹிஹி

  என்னாது குறள் இங்கு ஒலிக்குது!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. //ஜெல்லி (அப்படித்தான் நாங்க ஜொல்லுவோமாக்கும்)//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   //என்னைச் சொல்லுவது சரியான எருமை மாடு எருமை மாட்டுத் தோல்காரி என்று. எருமைச் செல்லம் பாவம். என்றாலும் பாருங்க என்னால அதுக்கு ஒரு நல்ல பெயர் கிடைத்தது! ஹிஹிஹிஹி///

   ஹா ஹா ஹா உண்மைதான், இப்போ சொல்கிறார்கள் மிருகப் பெயர்களைச் சொல்லி மனிதர்களை அழைச்சு, மிருகத்தின் மதிப்பைக் கெடுக்காதீங்கோ, மனிதரை விட அவை உயர்ந்தவை என ஹா ஹா ஹா...

   குறள்.. அதிராவுக்கும் திருக்குறள் தெரியுமாக்கும்:)).. நானும் ரெளடிதான் மொமெண்ட்:))

   Delete
 43. ஊகு ஹா ஹா ஆனா அது நமக்குள்ளேயேதான் இருக்ககாம் மூச்சுக்காட்டாம. அது மூச்சு காட்டினாதான் நமக்குப் பிரச்சினை. அப்ப்டியே இருந்துவிட்டுப் போகட்டும். நாமெல்லாம் ஆரு!! கொகொகொகொ...அப்புறம் அதன் பெயர் சொல்ல மாட்டேன்...அதுக்கு நாமெல்லாம் கொக்கோன்ன!!

  கீதா

  ReplyDelete
 44. நேற்று 96 இருந்தது இன்று மௌனமாகிவிட்டதா!!! ஈந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும்..அதிரா

  ஆனால் பாருங்க அபச்சார வீடியோ மட்டும் வர மாட்டேங்குது ஒரு வேளை கீதா ரொம்ப நல்ல குயந்தை அல்லோ அதான் பிஞசு ஞானி கீதா குயந்தைக்கு சென்சார் போட்டு வைச்சுருக்கீங்க போல!!!!!! ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. //ஆனால் பாருங்க அபச்சார வீடியோ மட்டும் வர மாட்டேங்குது //

   ஹா ஹா ஹா இது என்ன கீதாவுக்கு வந்த சோதனை:))..

   பாட்டு மாறி விட்டதெனில், புது ரெயின் ஸ்டேசனுக்கு வந்து விட்டதென அர்த்தம் கீதா.. ஹா ஹா ஹா.. நீங்கள் இன்னும் பழைய ரெயினுக்குள் இருக்கிறீங்களாக்கும்:)).. மிக்க நன்றிகள் கீதா.. உங்களுக்கு தொடர்ந்து நெட்டும், கொம்பியூட்டரும் கிடைக்கோணும் என நான் புளியடி வைரவருக்கு நேர்த்தி வைக்கிறேன்:))

   Delete
 45. சுவையான கேக் ...

  ரொம்ப எளிமையா இருக்கு கண்டிப்பா செஞ்சு பார்க்கிறேன் அதிரா....

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.