நல்வரவு_()_


Thursday 10 January 2019

அவருக்குத்தான் தெரியும் ஒரு ...🙈

ஆரம்பமும் அதன் முடிவும்:))
வர்[கடவுள்] நினைத்தால்தான் எதுவும் நடக்கும். நம்மிடம் பணபலம் இருந்தாலோ இல்லை ஆட்பலம் இருந்தாலோ, அதை வைத்து நம்மால் ஒரு பூஸ் குட்டியின் உயிரைக்கூட காப்பாற்ற முடியாது:(, கடவுள் என்ன நினைக்கிறாரோ அதுதான் நடக்கும்.

Monday 7 January 2019

👭பிரித்தானியாப் புயல்கள்👭
, எக் இட்டலி..

 “எக் இட்டலி”
என்ன இது தலைப்புக்கும், போஸ்ட்டுக்கும் சம்பந்தமே இல்லையே எனத்தானே யோசிக்கிறீங்க?:).. உங்களைக் குழப்புவதில் அலாதி பிரியம் எனக்கு:).. ஆனாலும் ஆரம்பம் கரெக்ட்டாகி:), இடையில குழப்பி.. முடிவை சரியாக் கொண்டே முடிச்சுப் போடுவன்.. அதனால அவசரப்பட்டுக் குழம்பிடாமல் என் இட்டலி செய்ய ரெடியாகுங்கோ.

நீண்ட நாளாக என் கப்கேக்கரை:) பாவிக்காமல் இருக்கிறேனே என நினைச்சு, சரி ச்சும்மா ஒரு இன்ஸ்டண்ட் பிரேக்ஃபெஸ்ட் செய்யலாம் எனும் முயற்சியில் இறங்கிறேன், நன்றாக வந்துது, ஆனா ஆஹா ஓஹோ பிரமாதம் எனச் சொல்லுமளவில் இல்லை:).. அதுக்கு காரணம், இக் கலவையினுள் வெங்காயம் மிளகாய், ஏதும் கரட், கோவா இப்படிச் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.. சரி எதுவாயினும்.. நான் செய்ததைச் சொல்லிடுறேன்:)..

முட்டை -5, self raising flour - 2 மே க., ரவை- 2 மே க. மற்றும் உப்பு, மிளகு, மிளகாய்த் தூள்.

மிகுதியைப் படம் பார்த்துப் புரிஞ்சுக்கோங்கோ:)


பாருங்கோ கப் கேக் மேக்கரில் இருக்கும்போது புஸ்ஸ்ஸ்ஸ் எனப் பொங்கிப் பெரிசா வந்துது பபிள்கம்போல.. பின்பு டக்கென சுருங்கிட்டுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

ஆஆஆ................. பொயிண்டுக்கு[இடைவேளை] வந்தாச்சூஊஊஊ.. புயலடிக்குதாமே பிரித்தானியாவில:)..
 காஜா:)


தேஜா:)

 காஜா:)  

தேஜா:)
👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭

நியூ இயர் கெட்டுக்கெதருக்குச் செய்ததில் கொஞ்சம்:).. ஆஆஆ டோண்ட் டச்சூ:).. உள்ளே என்ன இருக்கெனக் கேட்டிடாதீங்கோ:) பிறகு, மே மே எனச் சொல்லிடப் போறேன்ன்:)..

ஹா ஹா ஹா:)



ஊசி இணைப்பு:)

ம்முறை ஊசிக்குறிப்பு இல்லை:(. அதுக்குப் பதிலாக, போனமுறை கண்டு பிடிக்க முடியாமல் போன பாட்டைக் கண்டு பிடிச்சதனால இணைக்கிறேன், தனிப்பாட்டாகக் கிடைக்கவில்லை.. இதிலிருக்கும் கடசிப் பாடல்தான் நான் சொன்ன “மாலைக் கருக்கல் வந்து மனசைக் கெடுக்குதடி மயிலே மயிலே..”, நம் உறவில் ஒரு அண்ணன் .. எப்படிப் பட்ட பாட்டாயினும் தேடித்தருவார்... அவரிடம்தான் அதிகமாக பாட்டுக் கேட்டு தேடி எடுப்பேன், ஸ்ரீராம் பல வருடமாகத் தேடும் பாட்டையும் அவரிடமும் கொடுத்த்திருந்தேன்.. ஆனா அவருக்கும் ஸ்ரீராம் கேட்கும் புளொக் போஸ்ட் லிங்தான் கிடைச்சது, பாட்டுக் கிடைக்கவில்லை:(.

24:35 செக்கனில் கிடைக்கும்:).

👭👭👭👭👭👭👭👭🙏👭👭👭👭👭👭👭

Tuesday 1 January 2019

கணேசா கணபதி நமக!!🙏

திரும்பிப் பார்ப்பதற்குள் 2018 முடிவுக்கு வந்து விட்டது... 2018 ஐ சந்தோசமாக நன்றி சொல்லி வழியனுப்பி வைத்து விட்டு, 2019 ஐ இனிய வாழ்த்துச் சொல்லி.. பயபக்தியோடும்.. மரியாதையோடும், வணக்கத்தோடும் வரவேற்போம்... இனித்தானே ஆரம்பமாகப்போகுது அப்போ மரியாதையா வரவேற்பது தானே நல்லது...
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.