நல்வரவு_()_

****
என்ன பாட்டோ என நினைத்து வந்திருந்தால் மன்னிக்கவும்:))

Thursday, 31 January 2019

பூஸோ 😺கொக்கோ?:)💩


சூரியன் மறைந்துகொண்டே இருக்கிறது, 
மழை மெதுவாகத் தூறத் தொடங்கியிருக்கிறது,
ரோட்டு மங்கலாகத் தெரிகிறது.. 
பாதையின் இருபக்கமும் 
பெரிய மலைகளும் காடுகளும்,
ஒத்தையடிப் பாதைபோல 
நேராகப் போய்க் கொண்டிருக்கிறது ரோட்..

தோ சுடுகாட்டில்
போவதைப்போல 
அடர்ந்த மரங்களின் 
இரைச்சல் என்னைப்
பயமுறுத்துகிறது...
பறவைகள் கூட
பாதுகாப்புக்கில்லாமல்
உறங்கச் சென்றுவிட்டன போலும்.. 

ன்னை விட, 
மனித நடமாட்டமே அங்கில்லை..
நான் தனியே, 
அக்ஸிலரேட்டரை 90 மைல் 
வேகத்தில் அழுத்தியபடி..

ன் பயத்தைப் போக்க..,
ஜேசுதாஸ் அங்கிளின் 
பாடலை 
மிகச் சத்தமாகப் 
போட்டுக் கேட்டுக்கொண்டு..
காரில் போய்க் கொண்டிருக்கிறேன்...
இல்லையில்லை பறந்து கொண்டிருக்கிறேன்ன்...

திடீரென காரின் உள்ளே, 
பின் பக்கம் பார்க்கும் 
கண்ணாடியூடாகப் பார்க்கிறேன்..
தூரே ஒரு பெரீய சிங்கம்..
என் காரைவிட உயரமானது..
நாலுகால்:) பாய்ச்சலில், 
குறைந்தது 100 மைல் வேகத்தில்...,
என் காரைக் கலைத்துக் கொண்டு வருகிறது...

னக்கு தலை சுற்றுகிறது,
கண் மங்குகிறது...
இந்தக் குளிரிலும் வியர்த்துக் கொட்டி,
அதனால் ஒரு கிலோ எடை 
குறைந்து விட்டதுபோல இருக்கிறது..
அக்ஸிலரேட்டரை அமத்த முடியாமல்
 கால் நடுங்குகிறது..

தெய்வாதீனமாக, தூரத்திலே
ஒரு நாற்சந்தி வருவது
கண்ணுக்குத் தெரிகிறது..
டக்கென என் கிட்னி பலமாக யோசிச்சுது:),
உடனே காரின் சிக்னலை
 “வலது பக்கம் திரும்பப்போகிறேன்” 
எனும் அடையாளமாகப் போட்டேன்..

சிங்கம்..!! கிட்டத்தட்டக்..
கிட்ட வந்துவிட்டது,
நாற் சந்தியும் வந்துவிட்டது,
உடனே திருப்பினே......ன் காரை
 “இடது பக்கமாக”:),
சிங்கப் பிள்ளை சடின் பிரேக் போட முடியாமல்
வலப்பக்கம் திரும்பிட்டார்ர்...:)
பூஸோ கொக்கோ:) 
எங்கிட்டயேவா?:) ஹா..ஹா..ஹா..

இதை மிக அழகாக எழுதி உங்களுக்காக இங்கு இலவசமாகப் பிரசுரித்திருப்பவர்..
கவிமாமணி, கவிப்பேரசு, கவிதைச் செம்மல், கவிப்புயல், கவிச்சூறாவளி, கவி அமுதம் அதிரா:)...[ஸ்ஸ்ஸ்ஸ் எதுக்கு இப்போ கத்தி பொல்லு எல்லாம் எடுக்கிறீங்க.. பேசியே தீர்த்திடலாம்:)).. நான் என்ன பொய் சொல்லுவேனோ?:)].

💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥இடைவேளை💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
(1)

அஞ்சு இந்தாங்கோ மோர்ர்:)) வயிறு எரியாதாமே குடிச்சால்:) ஹா ஹா ஹா:)
(2)
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥 முடிஞ்ஞ்ஞ்ச்:)💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
இம்முறை எங்களுக்கு ஸ்னோ வரத் தொடங்கி விட்டது, ஆனா மோசமாக இல்லை, ஒருநாள் மட்டுமே கொஞ்சம் சிரமப்பட்டோம்ம்.. மற்றும்படி சாதாரணமாக இருக்கு, ஊரெல்லாம் வெள்ளையாக இருக்கு, ஆனா ரோட்டெல்லாம் கிளியர்...... அதனால படம் போடவில்லை பெரிதாக..

இது நேற்றுக் காரில் வந்து கொண்டிருந்தபோது, நிறுத்தச் சொல்லி, ஜம்ப் பண்ணி.. காராலதேன்:) எடுத்தேன்.. எங்கள் வீட்டு அதே  மலைகள்தான்..
பின்பக்க மலைகள் ஃபுல் ஸ்னோவால் மூடப்பட்டிருக்குது தெரியுதோ? முன்பக்கம் ஆற்றங்காற்றாலும் மற்றும் மரங்களாலும் ஸ்னோவால் மூடுப்படவில்லை...
(3)

இது இன்று ஜன்னலூடாக எடுத்தேன்
(5)
(6)
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

இந்த பீன்ஸ் ஐப் பாருங்கோ, முன்பு போட்ட அதே மரபீன்ஸ்தான். இந்தக் குளிரிலும், பட்டு.. திரும்ப முளைச்சுப் பூக்கிறா.. என்னா ஒரு முயற்சி..
(7)

(8)
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

(ஊசி இணைப்பு)

(ஊசிக் குறிப்பு)

(ஸ்பெஷல் இணைப்பு)..
ஹவ்வ்வ்வ் இஸ் இற்ற்?:).. அதிரா எதிலே கீறியிருக்கிறேன் எனக் கண்டு பிடிச்சுச் சொல்லுங்கோ பார்க்கலாம்?😛:))..
💥💥💥💥💥💥🙏💥💥💥💥💥💥

142 comments :

 1. Replies
  1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. என் இந்த அழகிய விலைமதிப்பற்ற.. ஆராலும் கீறமுடியாத... அருமையான பொக்கிஷம் உங்களுக்கே...:).

   Delete
 2. / இதை மிக அழகாக எழுதி உங்களுக்காக இங்கு இலவசமாகப் பிரசுரித்திருப்பவர்..//
  ஹலோவ் மியாவ் சிங்க கவிதையை அங்கே பார்த்த போலிருக்கே :) லாங் லாங் எங்கோ :)
  ஆமா :) அந்த சிங்கம் ஓடி வந்துச்சா இல்லை Peugeot காரில் வந்துச்சா ?? இல்லைனா ஹோல்டன் காரில் வந்ததா :)) இல்ல சடன் பிரேக் போட முடிலனிங்க :) அதான் கேட்டேன்

  ReplyDelete
  Replies
  1. பேஸ் புக்கில் இருந்து அப்பூடியே என் வாலைப்பிடிச்சுத்தாவி இங்கும் இருக்கும் இரு பேர்வழி இப்போ நீங்களும் அம்முலுவும்தானே..

   இதில் பாதிதான் அங்கு போட்டிருந்தேன்ன்.. நேற்றுப் போய் தேடிப்பிடிச்சு எடுத்து வந்தேன்ன்.. என்னா தெகிறியம் என நீங்க ஜொள்ளுவது கேய்க்குது தங்கூ தங்கூ:)..

   ஜிங்கத்துக்குப் பூஸைப்போல கார் ஓட்டத் தெரியாதெல்லோ.. 4 லெக்ஸ் ஓட்டம்தேன்ன்:))..

   அம்மாக்கள் புல் மேயும்போது, நீங்கள் ஆட்டுக்குட்டி இல்ல மாட்டுக்கண்டு ஓடுவது பார்த்ததுண்டோ? ஸ்பீட்டா ஓடி, பக்கென சடின் பிரேக் அடிச்சு நிற்பினம்.. பார்க்க சூப்பர் அழகா இருக்கும்..

   Delete
  2. ஹலோவ் மியாவ் சிங்க கவிதையை அங்கே பார்த்த போலிருக்கே :// எனக்கும் ஞாபகம் வந்தது.

   Delete
 3. ஹலோ :) உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது அப்போ ரொம்ப ரொம்ப நல்லஉள்ளம் உறங்குமா ??
  கேட்டு சொல்லுங்க .அதோடஎனக்கு மோர் வித் வல்லாரை அரைச்சி போட்டு வேணும் :) என்னா ருசி தெரியுமா ? :)

  ReplyDelete
  Replies
  1. ///ரொம்ப ரொம்ப நல்லஉள்ளம் உறங்குமா ??//

   அல்லோ மிஸ்டர் அப்பூடி ஒரு வெள்ளம் சே..சே உள்ளம் இந்த உலகத்திலேயே இல்லியாமே:)).

   //அதோடஎனக்கு மோர் வித் வல்லாரை அரைச்சி போட்டு வேணும் //
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) விட்டால் தங்கக் கிண்ணத்தில வேணும் எனவும் கேய்ப்பா:).

   Delete
 4. அந்த மை ப்ரண்ட் யா :) ஒரு நட்பின் நினைவை ஞாபகப்படுத்திவிட்ட்டது ..நாளைக்கு சொல்றேன் :)

  ReplyDelete
  Replies
  1. பாருங்கோ நீங்க எனக்கு அனுப்பியது, உங்களுக்கே ஆப்பாயிடுச்சி:)).. இதுதான் பொல்லுக் குடுத்து அடி வாங்குவதோ ஹா ஹா ஹா.

   டெல்லுங்கோ..

   Delete
 5. ஸ்னோ கொட்டி உடனே கரைஞ்சிடுச்சி இங்கே ..ஆனா மூணு நாளா புல்லெல்லாம் ப்ரீஸ் ஆகி உறைந்த நிலையில் இருக்கு .ஆனாலும் நான் பூட்ஸ் போட்டு நடந்து போயிட்டு வந்தேனே .
  மலையரசியின் மேல் பனி கிரவுன் :) உங்க ஏரியா அழகா இருக்கு ஸ்னோ உறைந்து வெள்ளையாய்

  ReplyDelete
  Replies
  1. இங்கு அடிக்கடி மழை பொழிவதால்ல்.. ஆவ்வ் என்னா ஒரு டமில்:)).. கரைந்துவிடும் ஆனா இம்முறை மழை இல்லை.. அதனால அப்படியே இன்னும் வெள்ளையாகவே இருக்கு.. இரவில இன்னும் ஐஸ் வந்து இறுக வைக்குது.. ஆரம்பம் குளிர் குறைவாக இருந்துது இப்போ கூடிக்கொண்டு வருது.. பெப்ரவரி 15 வந்திட்டால் வெளிச்சம் அதிகமாகிடும்.. பக்கென சமர் போலாகிடும்... எப்படிப் பறக்குது காலம் பாருங்கோ.. ஆனா அதிராவுக்கு மட்டும் வயசு ஏற மாட்டேங்குது:))

   Delete
 6. பீன்ஸ் விடா முயற்சிதான் .அதுக்கு ஒரு ரெயின் கோட் கிறீன் ஹவுஸ் மாதிரி கவர் பண்ணுங்க :) இங்கே மணத்தக்காளியும் ப்ரென்ச்பீன்சும் வளர்ந்து காஞ்சிட்டாங்க குளிருக்கு ..உள்ளே எடுத்து வைக்க முடியாது ஜெசி ரொம்ப அட்டகாசம் செய்வா .பாவமா இருக்கு செடிங்க

  ReplyDelete
  Replies
  1. கபேஜ், புரோக்கோலி எப்பவும் ஸ்னோவில் நிற்கும்.. இப்பவும் நிக்குது, ஆனா பீன்ஸ் அதுவும் ஓட்டம் சீசனில் முற்ரிலும் பட்டு கறுப்புக் காம்பாகி, இப்போ விண்டரில் கடகடவென முளைச்சுப் பூத்திருப்பதைப் பார்க்க மீ வியக்கேன்ன்:)).

   நான் வீட்டுள் இருக்கும் சாடியில் மண் தெரியாமல், பூச்செண்டில் வரும் காம்புகளை நடுவதுபோல குத்தி விட்டிடுவேன், அதனால டெய்ஷிப்பிள்ளையின் தொந்தரவு இல்லை, இல்லாட்டில் மண்ணைத்தோண்டுவா.

   Delete
 7. ஊசி இணைப்பு :)) இருங்க இருங்க ஒரு ராதா ரசிகர் இருக்கார் அவர் கண்ணில் படட்டும் அப்போ இருக்கு உங்களுக்கு :)
  ஆனா சைட் வியூவில் பார்த்தா அடி ஆத்தீ இது வாத்து கூட்டம் பாடினவங்க மாதிரியும் இருக்கே :)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ராதா ரசிகர் இப்போ கட்சி மாறிட்டாரெல்லோ:).

   Delete
 8. ஊசி குறிப்பு :))
  எனக்கு நீங்க சந்தோஷமா இருக்கீங்களான்னு உடனே சொல்லுங்க மியாவ் .பிக்காஸ் உங்களோட பச்சை கலர் நெக்லெஸுக்கு நான் ஆசைபட்டுட்டேன்

  ReplyDelete
  Replies
  1. ஹா... ஹா.. ஹா.... எனக்கு அந்தக் கார்!

   Delete
  2. ஹா ஹா ஹா நெக்லெஸ் கட்டிக்கொண்டு காரில் போகும்போது மிக்க மகிழ்ச்சியாக இருப்பேன்ன்ன்:))..

   ஆனா இப்போ லொக்கரில இருக்கு.. ச்ச்சோ வேறு எதுக்காவது ஆஜைப்படுங்கோ:))

   ஸ்ரீராம், லெக் மசாஜர் வாணாமோ?:).

   Delete
 9. படம் அழகா வரைஞ்சிருக்கீங்க
  option இல்லாம ஒரே பதில் வாழைப்பூ மடல் :) சரியா :)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்.. நீங்கள் சொவ்லதுதான் சரி ஏஞ்சல்! நீங்கள் சொன்னதும் மறுபடிபோய்ப் படத்தைப் பார்த்தால் அப்படிதான் இருக்கிறது!

   Delete
  2. எனக்கென்னவோ சிப்பில (அதன் உள் பகுதி சில்வர் கலர்ல இருக்கும்) வரைந்தது மாதிரி தெரிஞ்சது. இவ்வளவு பெரிய சிப்பி டவுட்ஃபுல். வேற ஏதேனும் சில்க் மாதிரி துணில இருக்கலாமா? பக்கத்துல ஒரு பேப்பரை வைத்து அதனால கன்ஃப்யூஸ் பண்ணிட்டாங்க

   Delete
  3. இந்தப்படம் பத்தியே இப்போத் தான் கவனிச்சேன். வாழைப்பூவின் உள் மடல் போல் இருக்கு. அஞ்சுவும், ஶ்ரீராமும் கூட அதான் சொல்றாங்க! இந்தக் கமென்டைப் பார்த்ததும் தான் வந்து படத்தையே பார்த்தேன். :)))

   Delete
  4. ஆவ்வ்வ்வ் சுற்றிச் சுற்றி அஞ்சுவும் நெ தமிழனும் எல்லைக்குள் வந்திட்டீங்க.. நெல்லைத்தமிழன் இன்னும் நெருங்கிட்டார்ர்.. கமோன் இன்னும் கொஞ்சம் ஓசிச்சால் கண்டு பிடிச்சிடலாம்ம்.. நமக்கு தெரியாட்டிலும் விஞ்ஞானத்தில் படிச்சிருப்போம் தானே:)).. இது குளூ:).

   வாழைப்பூ இவ்ளோ வெள்ளையா எங்கு கிடைக்குது ஆராட்சி அம்புஜமே:))..

   Delete
  5. கவிபெருங்கோ, இது சோழியில் வரைஞ்ச படமோ? ஏனெனில் இப்படி வரைஞ்ச சரஸ்வதி எங்களோட கொலுவில் இருந்தது. சோழின்னா தெரியும் தானே? விளையாடக் கூடச் செய்யலாம் அதை வைச்சு.

   Delete
  6. [im]http://www.leemarpet.com/photos/product/standard/2809940S46250/-/large-13-5-15-cm-1-pack-.jpg[/im]

   Delete
  7. இதோ இந்த cuttlebone இதில வரைஞ்சிருப்பீங்கன்னு நேத்து நினைச்சேன் :) ஆனா உங்க வீட்ல பேர்ட்ஸ் இல்லையே அதனாலே டவுட் பட்டு நீங்க வாங்கி சமைச்ச வாழைப்பூவை யிருக்கும்னு முடிவுக்கு வந்தேன்

   Delete
  8. கீசாக்கா வாழைப்பூவிலல்ல...

   //இது சோழியில் வரைஞ்ச படமோ? //
   கிட்டக் கிட்ட நெருங்கிறீங்க.. ஆனா இதன் சைஸ் 6..7 இஞ்சி நீளம் வரும்..

   அஞ்சு.. நீங்களும் நினைப்பது பொருந்துது ஆனா ஈசியாக நினைக்காமல் தூரவா யோசிக்கிறீங்க.. சரி இன்னும் கொஞ்சம் சொல்றேன்.. சமையலுக்கு எடுத்துக் கொண்டு, இதை எறிவோம்:)). அதைப் பார்த்ததும் எறிய மனமில்லாமல் கழுவிப்போட்டு படம் கீறினேன்ன்ன்:)) ஹா ஹா ஹா:)).. இப்போ கண்டு பிடிங்கோ..

   Delete
  9. ஆஆஆவ்வ்வ்வ்வ்வ் இப்போதான் மினக்கெட்டுத் தேடிப் பார்த்தேன்ன்ன் அ.ஞ்வின் பதில் பொருந்திவிட்டது... ஆனா இது cuttlebone illa... Squid shell:).... வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் கணவாய் ஓட்டில் கீறியிருக்கிறேன்ன்ன்ன்ன்ன் ஹா ஹா ஹா....

   Delete
  10. Squid, Calamari and Cuttlefish. Squid, Calamari and Cuttlefish are closely related cephalopod molluscs found in virtually all of the world's oceans. ... Cuttlefish differ from squid and cuttlefish in having an internal 'cuttlebone'. Calamaris have longer fins than the squids.

   Delete
  11. அல்லோ சரி சரி cuttlefish நாங்க சமைப்பதில்லை என்பதனால மனம் அப்போ ஒத்துக்கல்ல..:)).. சரி இந்தாங்கோ உங்களுக்கு 98% தருகிறேன்:)).. squid shell எனச் சொல்லியிருந்தால் 100 போட்டிருப்பேனெல்லோ:)) ஹா ஹா ஹா இன்னொரு புதிரோடு மீண்டும் ஜந்திக்கிறேன்:) அப்போ 100 எடுக்கோணும்:))

   Delete
 10. //கவிஅமுதம் அதிரா //

  ஹையோ யாராவது A அன்ட் E க்கு என்னை ஹெலிகாப்டரில் கொண்டுபோங்க :)
  கவி அமுதமாம் ..பார்க்க மயக்கம் வந்து விழ றெஈஈ ன்ணன்ணன்

  ReplyDelete
  Replies
  1. வெயிட் அஞ்சு வெயிட் மோர் குடிச்சிட்டுப் போகலாம்:)) ஹா ஹா ஹா.. இதுக்கே மயங்கினால் எப்பூடி? இன்னும் இருக்குதெல்லோ.. அதை எல்லாம் கேட்ட பிறகு போயிடலாம் மெதுவா:)) புவஹா புவஹா...

   மிக்க நன்றிகள் அஞ்சு.

   Delete
 11. பாடல் கேட்டதில்லை.

  ஹலோ... ஆங்கில வார்த்தைகள் கலந்து கவிதையா? ஆனால் சொல்லப்பட்டிருக்கும் வர்ணனையில் சாலையில் செல்வது ரசனை.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

   ஆங்கிலம் கலந்து பாடல் வரும்போது.. கவிதை ஏன் எழுதக்கூடாது என்கிறேன்ன்ன்?:)).. ஹா ஹா ஹா கவிதைக்கு வரையறை இருப்பதாக எனக்குத் தெரிவதில்லை:)).. ஆனாலும் பாருங்கோ.. கவிதை எனச் சொல்லிட்டீங்க அது போதும்.. புவஹா புவஹா..

   இது ஒரு வித்தியாசமான படம் ஸ்ரீராம்.. பார்க்க நேரம் கிடைச்சால் பாருங்கோ..

   https://www.youtube.com/watch?v=u_5FGuQ9Y0k&t=1630s

   Delete
 12. ஜேசுதாஸ் அங்கிளின் எந்தப்பாடலையென்று சொல்லவில்லை... நீயும் பொம்மை நானும் பொம்மை நினைத்துப் பார்த்தல் எல்லாம் பொம்மை என்று கேட்டுக்கொண்டிருந்திருந்தால் சூழலுக்கு இன்னும் ஏதுவாக இருந்திருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. ஜேசுதாஸ் அங்கிள் என்றாலே.. எனக்கு முதலில் பிடிச்சது...

   https://www.youtube.com/watch?v=Pj9GDt_MI50

   Delete
 13. தூரே என்று வருமோ... தூரத்தே என்று வரவேண்டுமோ? ஆ... காய்சியில் நகைச்சுவைக் கவிதையா? நான் புலியை வைத்து இப்படி ஒரு 'கவிதை' எழுதினேன்!!!!

  ReplyDelete
  Replies
  1. அது நான் பேசும் பாசையில் எழுதினேன்.. தூரப் போகிறோம்ம்.. தூரப்போங்கோ.. இப்படி ஹா ஹா ஹா..

   //நான் புலியை வைத்து இப்படி ஒரு 'கவிதை' எழுதினேன்!!!!//
   ஓ லிங் கிடைக்குமோ? புளொக்கில் இருக்கோ..

   Delete
 14. படித்துச் சிரித்து விட்டேன். ஏமாந்து போனார் சிங்கராஜா!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா.. ஜிங்கத்தையே ஏய்ச்சுப்புட்டேனே:))

   Delete
 15. எனக்குக் கூட நைட்ல சரியா தூக்கமில்லை என்பது உங்களுக்கே தெரியும்! என்ன இது ஜாமத்தில் வந்து பதில் சொல்லிக்கொண்டு என்று நீங்களே கேட்டீர்கள். நானும் நல்லவன்தான்!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா மிக மிக அருமையாக, இன்று நான் போஸ்ட் போடுமுன்.. நேற்று முழிப்பிருந்து நிரூபிச்சிருக்கிறீங்க.. ராகு கேது மாற்றம் உங்களுக்கு “வெள்ளி துலாவில” போல:))

   Delete
 16. புகைப்படத்தில் தெரியும் அளவு பனி காணொளியில் தெரியவில்லை. ஹா... ஹா... ஹா.. நித்தி பார்த்தா எனக்கும் ராதா மாதிரிதான் தெரிஞ்சார்!

  ReplyDelete
  Replies
  1. அப்போ உங்க வயசு 50+ஆ? இது என்னடா எங்களுக்கு வந்த சோதனை... நாங்க 20-30 இருக்கும்னு, அதாவது எங்க ஏஜ் என்று நினைச்சுக்கிட்டிருக்கோம்...

   Delete
  2. ஸ்ரீராம் படம் எடுத்தது சுடச்சுட, வீடியோ கொஞ்சம் ஆறியபின்... அப்படி என்றுமில்லை, நேரே பார்க்கும்போது இருக்கும் அழகு வீடியோவில் வருகுதில்லை, இது ஐபோன் கமெரா வீடியோ.. வீடியோக் கமெராவில் எனில் இன்னும் சூப்பரா எடுக்கலாம் என நினைக்கிறேன்.

   Delete
  3. நெல்லைத்தமிழனின் கொமெண்ட்டை மெயிலில் பார்த்து பக்கென்றாகி:) பாதி மயிர் நரைச்ச ஃபீலிங்கோடு இங்கு வந்து பார்த்தால்ல்.. அப்பாடீஈஈஈஈஈ என்னை அல்ல ஸ்ரீராமைச் சொல்லியிருக்கிறார்ர் ஆவ்வ்வ்வ்வ்வ் ஹா ஹா ஹா.. நான் தேன் அன்றே ஜொள்ளிட்டனே 60 பிளஸ் என ஹா ஹா ஹா இருப்பினும் நெ தமிழன்.. இந்தக் கொமெண்ட்டைக் கை மாறி எண்டாலும் நீங்க அஞ்சுவுக்குப் போட்டிருந்தால்.. இன்றைய வெள்ளிக்கிழமை எனக்கு ஒரு மறக்க முடியாத வெள்ளியாகி இருக்கும் புவஹா.. புவஹா... புவஹா....:))

   Delete
 17. கண்ணதாசனின் வார்த்தைகள் விபரீத அர்த்தத்தைக் கொடுக்கின்றன! அதிரா கீறியிருப்பது கேசரியில்!

  ReplyDelete
  Replies
  1. திருமண விசயத்தில் மட்டும் அது பொருந்தாது... பொருட்கள் விசயத்தில் பொருந்தலாம்.. ஆனா இதில எனக்கொரு டவுட் இருக்கு.. இது உண்மையில் கண்ணதாசன் அங்கிள் சொன்னதோ இல்லை, அவரின் படத்தைப்போட்டு யாரோ எழுதியதுபோல இருக்கு.. கண்ணன் அங்கிளின் ரச் இதில் இல்லைப்போல எனக்கு உள்ளுணர்வு சொல்லுது:)..

   கேசரியிலோ அவ்வ்வ்வ்வ்.. சுற்றிவரப் பாருங்கள் விளிம்பு தெரியுதே...

   Delete
 18. வல்லிம்மா ஊரில் பயன்களை குளிர், பனி போல... காணொளிகள் பார்க்கிறேன். ரயில்பாதையில் தீ வைத்தார்களாம் பனி உருக...

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் அமெரிக்காவின் சில மானிலங்கள் இம்முறை ரொம்ப மோசமாகவும் பலர் இறந்து விட்டதாகவும் நியூஸில் காட்டுகிறார்கள்... இன்னும் என்னென்ன ஆகப்போகுதோ.. சொல்ல முடியாது கடவுள் என்ன நினைச்சுக்கொண்டிருக்கிறாரோ...

   மிக்க நன்றிகள் ஸ்ரீராம்... கடசியில் கொமெண்ட்டில் பின்பு சொல்கிறேன் பதிலை, ஆரும் கண்டு பிடிக்காது விட்டால்.

   Delete
 19. என்னமோ தெரியலை, கவிதைங்கற பேரிலே ஏதேதோ எழுதிட்டுத் தனக்குத் தானே பட்டமும் கொடுத்துக்கிட்டு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் போனால் போகுதுனு பாராட்டி வைக்கிறேன். அந்தச் சிங்கம் அப்புறமா என்ன செய்தது? ஒருத்தரையும் ஒண்ணும் பண்ணாமல் போயிடுச்சா?

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீசாக்கா வாங்கோ...

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எங்கட புளொக் வட்டத்தில கவிதை எழுதும் என்னைப் பாராட்டி ஊக்குவிக்க மாட்டீங்க:) எங்கெங்கோ தெரியாதோரை எல்லாம் பெயர் சொல்லி ஊக்கம் கொடுப்பீங்க கர்:) இது எந்த வகையில் நியாயம்ம்.. அஞ்சுவை இப்படி ஒரு கவிடை:) எழுதச் சொல்லுங்கோ எழுதுறாவோ பார்ப்போம்ம் ஹா ஹா ஹா:)..

   ஜிங்கம் அது பிரேக் இல்லாமல் போயிடுச்சு வலது பக்கமா:)).. ஹா ஹா ஹா..

   இது உண்மையில் ஒரு கொமெடி.. அதை வச்சு பெரிதாக்கி கவிதையாக்கினேன்ன்..

   இதுபோலத்தான் ஏதும் கொமெடி காதில் விழுந்தால்ல்.. அதை வச்சு கதை எழுதுவேன்ன்.. அப்படி எழுதிய ஒரு கதைதான் எங்கள்புளொக்கில் போட்ட.. “வீட்டில் ஆருமே இல்ல்லை” எனும் கதை:)).

   Delete
 20. நாங்கல்லாமும் உறங்கறதில்லை தெரியுமா? அப்போ இத்தனை நல்ல உள்ளம் இருக்குங்கறீங்க, இல்லையா? அந்த ஸ்நோ படம் அருமை. கண்ணதாசன் அங்கிளோட தத்துப்பித்துவம் உண்மையிலேயே நல்லா இருக்கு. பீன்ஸ் செடியைப் பிடுங்கலைன்னா மறுபடி துளிர்த்து வரும். ஆனால் பீன்ஸ் அவ்வளவு சுவையா வரதில்லை. நீங்க பொறுத்திருந்து பார்த்துட்டு நினைவாச் சொல்லுங்க.

  ReplyDelete
  Replies
  1. ///நாங்கல்லாமும் உறங்கறதில்லை தெரியுமா?/

   இது ஸ்லிப்பியோஃபோமியா:) உடனேயே டொக்டரைப் பாருங்கோ:))..

   பீன்ஸ் ல காய் வருமோ தெரியல்ல கீசாக்கா.. ஏனெனில் தொடர்ந்து ஸ்னோ விழுந்தால் பூ அழுகிவிடும்.. பார்ப்போம்ம்...

   மிக்க நன்றிகள்.

   Delete
 21. யம்மாடி.... கிட்னி பயங்கரமா யோசிக்கிது...!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா வாங்கோ டிடி வாங்கோ.. மிக்க நன்றிகள்.

   Delete
 22. சிங்கத்துக்கு ஐந்தறிவுதானே அதனாலதான் அதுக்கு குறுக்கு யோசனை வராமல் சிக்னலை வைத்து வலதுபக்கமாக போய் விட்டது.

  ஆனால் அதிராவுக்கு ஆஆஆஆஆஆறறிவு ஆகவே ஆபத்திலும் ஆராய்ந்து ஏழாம் அறிவை பயன்படுத்தி இருக்கீங்க...

  இருந்தாலும் இந்த யோசனை மனோபாலா தந்ததானு ஏஞ்சல் கேட்காதவரை மகிழ்ச்சி

  படங்களும், காணொளியும் ஸூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ...

   அப்பாடா இப்போதான் நிம்மதி அதிராவுக்கு ஆறவு என்பதை தெளிவா இங்கு தெகிறி:)யமாச் சொன்னமைக்கு:)).. இல்லை எனில் அஞ்சறிவு என அஞ்சு ஜொள்ளியிருப்பா:)) கர்ர்ர்:).

   ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் கில்லர்ஜி.

   Delete
 23. வணக்கம் அதிரா சிஸ்டர்.

  கவிதை அருமை. வரிகள் சூப்பர். கவிச்சூறாவளியின், இலவச கவிதையை படிக்க தந்தமைக்கு மிக, மிக நன்றிகள். உண்மையிலேயே எப்படி தங்களால் இப்படி யோசிக்க முடிகிறது? தங்களின் ஆழ்ந்த திறமைக்கு மனமார்ந்த பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்.

  பூஸாரின் கார் ஓட்டும் திறமை வியக்க வைக்கிறது. மிகவும் ரசித்தேன்.

  "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவள் வகுத்ததடா கண்ணா" என்பதையும் இன்று கண்டு கொண்டேன். பிரமாதம் போங்கள்.நல்ல உள்ளங்களுக்கு உறக்கம் வராத காரணத்தை கண்டு பிடித்த தங்களுக்கு பாராட்டுக்கள். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கமலாக்கா வாங்கோ...

   //கவிச்சூறாவளியின், இலவச கவிதையை படிக்க தந்தமைக்கு மிக, மிக நன்றிகள்//
   ஹா ஹா ஹா.. அமேசன் கிண்டிலில் விற்க நினைச்சு பின்பு இங்கு ஃபிறீயாப் போட்டு விட்டேன் கவிதையை:)).

   //உண்மையிலேயே எப்படி தங்களால் இப்படி யோசிக்க முடிகிறது? //
   ஹையோ மெதுவாப் பேசுங்கோ:)) காதில யாரின் காதில் கேட்டாலும்.. மீக்கு கல்லெறி விழுந்திடப்போகுதே:)) ஹா ஹா ஹா.

   //பிரமாதம் போங்கள்.நல்ல உள்ளங்களுக்கு உறக்கம் வராத காரணத்தை கண்டு பிடித்த தங்களுக்கு பாராட்டுக்கள்.//

   ஹா ஹா ஹா மிக்க நன்றி மிக்க நன்றி.

   Delete
 24. ஓ அதுதான் எனக்கும் இரவு தூக்கம் வரமாட்டேன் என்கிறதா?
  தங்கை போலவே அக்கவும். நல்ல உள்ளம் படைத்தவள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

   ஆவ்வ்வ்வ்வ்வ் புளொக் எழுதும் ஆருக்குமே தூக்கம் வருவதில்லைப்போலும் ஹா ஹா ஹா.. ஆனாக் கோமதி அக்கா.. அஞ்சுவுக்கு நல்ல தூக்கம் வருமாமே:)) அவதான் சொன்னவ:)) ஹா ஹா ஹா...

   // அக்கவும். நல்ல உள்ளம் படைத்தவள்.//
   இது நீங்க சொல்லியோ நாங்கள் புரியோணும் கோமதி அக்கா.. எங்களுக்கு தெரியுமே...

   Delete
 25. சூரியன் மறைந்துகொண்டே இருக்கிறது,
  மழை மெதுவாகத் தூறத் தொடங்கியிருக்கிறது,
  ரோட்டு மங்கலாகத் தெரிகிறது..
  பாதையின் இருபக்கமும்
  பெரிய மலைகளும் காடுகளும்,
  ஒத்தையடிப் பாதைபோல
  நேராகப் போய்க் கொண்டிருக்கிறது ரோட்..//

  மர்மநாவல் ஆரம்பம் மாதிரி இருந்தது.
  சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா.. இபடியே ஒரு பேய்க்கதை எழுதியிருக்கலாம் போல:))

   Delete
 26. //உடனே காரின் சிக்னலை
  “வலது பக்கம் திரும்பப்போகிறேன்”
  எனும் அடையாளமாகப் போட்டேன்..//

  உடனே திருப்பினே......ன் காரை
  “இடது பக்கமாக”:),
  சிங்கப் பிள்ளை சடின் பிரேக் போட முடியாமல்
  வலப்பக்கம் திரும்பிட்டார்ர்...:)
  பூஸோ கொக்கோ:)
  எங்கிட்டயேவா?:) ஹா..ஹா..ஹா..//

  பூஸார் புத்திசாலிதான். இப்படி சிங்கத்தையே ஏமாற்றி போட்டதே!

  ReplyDelete
  Replies
  1. அது பூஸுக்கு ஆறறிவு கோமதி அக்கா ஹா ஹா ஹா:)..

   Delete
 27. ஸ்னோ பெய்து இருக்கும் படத்தில் கால் தடம் விழுந்து இருப்பது அழகு.
  ஸ்னோ பார்க்க அழகு, ஆனால் வேலை அதைகம் இல்லையா? வேளியே ஆட்கள் சுத்தம் செய்து விடுவார்கள் தானே? வீட்டுக்குள், கார் மேல் உள்ளதை நாம் தானே சுத்தம் செய்ய வேண்டும்?

  ReplyDelete
  Replies
  1. ரோட்டுக்கு உப்பு போட்டு விடுவார்கள்.. நம் driveway ஐ நாம் தான் கிளீன் பண்ணோணும்.. காலையில் கார் எடுப்பதுதான் கஸ்டம்.. சில சமயம் கண்ணாடி எல்லாம் ஐஸ் ஆகி கல்லுப்போல இருக்கும்.. கதவு திறக்க முடியாமல் கல்லாகியிருக்கும்... பின்பு ஐஸ் றிமூவர் இருக்கு அதை அடிச்சு.. ஒரு பிளேட் போல விக்குது.. அதை வச்சு வழிச்சு எடுத்து.. கார் எடுக்க 10-15 நிமிடங்கள் தேவைப்படும்..

   Delete
  2. ஸ்னோவில் புதையும்தானே கால்ல்.. இன்னொன்று அப்போது காலை நேராக வைத்து நடக்காமல் குறுக்க குறுக்க/சொத்தியாக வைத்து நடக்க வேண்டும் அப்போதான் வழுக்காது.. அது என் கால் அடையாளம் தேன்ன்ன்:)))

   Delete
 28. அடர்ந்த மரங்களின் இரைச்சல் - இது எங்க சுடுகாட்டுல இருக்கும் (இரைச்சல்). கவிதைக்குப் பொய் அழகுதான். ஆனால் இது டூப்புன்னா.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ...

   //இது எங்க சுடுகாட்டுல இருக்கும் (இரைச்சல்). //
   ஹா ஹா ஹா கர்ர்ர்:) ஒரு கவிதை எழுத விடமாட்டனென்கிறீங்களே:) நல்லவேளை சீராளனைக் காணம்:)))..

   வைரமுத்து அங்கிள் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமோ? கவிஞர்கள் பொய் சொல்பவர்களாம்:)).. சரி பிழை பார்க்காமல் எழுதோணுமாம்.. அவரின் ஸ்பீச் களும் எனக்குப் பிடிக்கும்.. இடைக்க்கிடை கேட்பேன்ன்..

   இப்போ யூ ரியூப்பில், கண்ணதாசன் அங்கிளின் ஸ்பீச் என, அவர் முன்பு பேசியதை.. அவரின் குரலில் அப்படியே போட்டு வருகிறார்கள் சூப்பரா இருக்குது கேட்க.. அங்கு உங்களுக்கு வருகுதோ தெரியாது.. கேட்டுப் பாருங்கோ.

   Delete
 29. ஊசி இணைப்பு உங்கள் குறும்பு.
  ஊசிக்குறிப்பு சிந்தித்து பார்க்க சொல்லுது.  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா மிக்க நன்றி கோமதி அக்கா...
   ஊசிக்குறிப்பு.. பலபேர் விடும் தப்பு, அடுத்தவர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதற்காகவே தானும் வாங்குவது..

   Delete
 30. பனி பொழியும் போதும் பீன்ஸ் செடியில் பூ !
  அதன் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 31. ஏஞ்சல் சொல்வது போல் வாழைப்பூ மடல் என்று நினைக்கிறேன். நீங்கள் வரைந்த ஓவியம் அழகு.

  ReplyDelete
  Replies
  1. பதில் மேலே அஞ்சுவே கிட்டத்தட்ட 98 வீதம் சொல்லிட்டா:))[100 தரச்சொல்லி என்னை மெயில் போட்டு மிரட்டுறா:))] ஹா ஹா ஹா கணவாய் எனப்படும் மீன் வகைக்குள் இருக்கும் ஓடு, கோமதி அக்கா.. squid shell.

   Delete
 32. காணொளிகள் பார்க்க முடியவில்லை, மீண்டும் வந்து தெரியும் போது பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. பாருங்கோ சூப்பராக இருக்கு... அப்படியே பனிமலை.. திருநீற்று மலைபோல தெரியும்.. அதுசரி திருநீற்று மலை என்பினம்.. உண்மையில் அப்படி ஒரு மலை இருக்கோ? நான் சின்ன வயசில கற்பனை பண்ணிப் பார்ப்பேன்.. திருநீறாலேயே மலை எனில்.. அருகில் போனால் அள்ளி அள்ளிப் பூசலாம்.. பாக் இல் அள்ளி வரலாம் எண்டெல்லாம்:).

   Delete
  2. வாழைபாடி பக்கம் இருக்குவேளூர் என்ற ஊரில் திருநீறு மலை இருக்கு.
   எடுக்க எடுக்க வந்து கொண்டே இருக்கிறது கவி அமுதம் அதிரா.
   அந்த திருநீறு வீட்டில் இருந்தால் மிகவும் நல்லது என்று வராகடன்கள் வசூல் ஆகிவிடும், என்றும் வீட்டில் செல்வம் நிறைந்து இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

   எல்லோரும் உங்களை போல் அள்ளி வருவார்கள்.

   Delete
  3. ஓ.. கோமதி அக்கா நீங்க பார்த்திருக்கிறீங்களோ? அது எப்படி இருக்கும்.. மலைபோலவே இருக்குமோ.. புல்லு முளைக்காதோ? காற்றடிச்சால் பறக்காதோ? இப்படி எல்லாம் கேள்வி நிறைய இருக்கு எனக்குள்..

   யாராவது நேரில் போனோர் படமெடுத்து வந்தா மட்டுமே நம்பலாம்.. நெட் இல் சும்மா சும்மா எல்லாம் போடுவார்கள்.

   மிக்க நன்றி கோமதி அக்கா... பதில் தந்தமைக்கு.

   Delete
 33. ஹல்ல்ல்ல்லோ தமிள்ல டி ஈ எஃப் ஜி ஹெச் மேடம் - "உறங்காது" அப்படீன்னா "இறக்காது, மரணமடையாது"ன்னு அர்த்தம். சும்மா தூங்கறதுன்னு அந்தப் பாட்டுக்கு அர்த்தம் சொல்றீங்க...... நல்லவேளை உங்ககிட்ட அங்க பசங்க தமிள்ள்ள்ள் படிக்கலை. தப்பித்தது.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அதெப்பூடி? 5ம் வகுப்பில சிமியோன் ரீச்சர் சொல்லித்தந்தவ.. உறக்கம்/தூக்கம்/நித்திரை/துயில்.... இவை எல்லாம் ஒத்த கருத்துக்கள் என.. அப்போ அது டப்பா?:)..

   சரி சரி பாட்டுக்கு அந்த மீனிங்கோ.. போனாப்போகுது விட்டிடுங்கோ:)) ஹா ஹா ஹா..

   Delete
 34. 'முதல் மரியாதை ராதா' - யார் இதனை கிரியேட் பண்ணியிருந்தாலும், அவரது ரசனை நகைச்சுவை உணர்வு என்னை வியக்கவைக்கிறது. அவரைப் பாராட்டணும்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதானே பார்த்ததும் டக்கெனப் பிடிச்சுப்போகுது எல்லோருக்கும்.. ஹா ஹா ஹா.. ஆனா நித்தியானந்தா ஆச்சிரம ரசிகர்கள் என் பக்கம் வந்தால் மீ காலி:)) ஹா ஹா ஹா:).

   Delete
 35. //எதற்காவது ஆசைப்படும்போது....// - அதிரா... இது 'அ', 'த' ரசிகர்களை நோக்கி நீங்க சொல்லலை இல்லையா? இல்லை, அதுக்குத்தான் சொல்லியிருக்கீங்க என்றால், எங்களுக்கு அதற்கான பதிலையும் சொல்லணும் (கரகாட்டக்காரன் கார் காமெடி)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அவ்வ்வ்வ்வ் சொப்பனசுந்தரீஈஈ தானே:)) ஹா ஹா ஹா..

   இதுவரை அ/த இருவரும் ஆருக்கும் சொந்தமாகவில்லை:)).. ச்சோஓஓஒ இனிமேல் நீங்களிருவரும்[நெல்லை,3ராம்:))] ஆப்பியாக:) இருக்கிறீங்களோ எனப் பார்த்துத்தான், அவர்களை[அ/த:)] ஆராவது மணம் முடிக்க வரலாம்:)) ஹையோ எனக்கென்னமோ ஆகிப்போச்ச்ச்ச்ச்ச்:)) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))

   Delete
 36. பனிப்பொழிவில் இருக்கிற மலைப்பகுதி, உங்க வீட்டருகான பகுதியைப் பார்க்கும்போது, 'பனிவிழும் மலர் வனம்' என்ற பாடல் நினைவுக்கு வருது.

  படங்களும் இடங்களும் யம்மி.... ஆனா இவ்வளவு பனிபொழியும்போது நமக்கு வீட்டைவிட்டு வெளியே செய்யமுடியாமலும், வீட்டுக்குள்ளேயும் க்வில்ட்ல படுத்துக்கலாம்னும் தோணி சோம்பேறித்தனமா இருக்காதா?

  ReplyDelete
  Replies
  1. இல்ல நெல்லைத்தமிழன்.. ஏனைய நாட்டுப் பனியுடன் பார்க்கும்போது இது நத்திங்.... ஆனா குளிர்தான்.. வேர்க்கால வந்தால்ல்.. நீ குடிப்பது சாப்பிடுவதை விட வேறு எந்த வேலையும் செய்ய முடியாமல் இருக்கும்.. அப்படியே குல்ட்க்குள் போகத்தான் மனம் சொல்லும்.. உடம்பும் குளிருக்கு அதிகம் சோர்வாகிடும்.. ஆனாலும் பழகிவிட்டது... நாம் டெய்லி என்ன என்ன செய்வோமோ அப்படியே தான் செய்வோம்ம்.. என்ன ஒன்று.. லோக்கலில் ஊர் சுற்றுவது, நடப்பது இப்படியானவை குறைந்து.. மோல்களில்தான் தஞ்சம்.

   நம் நாட்டில் வெக்கைக்கு, உடம்பு பெரிதாக சோர்வடையாதெல்லோ..

   Delete
 37. பூனை நினைப்பதாக எழுதின கவிதை (கடைசியில் பூஸோ என்று சேர்த்ததையும் பரவாயில்லைனு விட்டிடலாம்) நல்லாத்தான் இருக்கு. ஆனால் இதை நிறைய தடவை நாங்க, இந்தியாவில் மற்றவர்கள் கார் ஓட்டுவதைப் பற்றி கிண்டலடித்துப் பேசுவதால் (ஆட்டோக்காரன், லெஃப்ட் இண்டிகேடர் போட்டு, ரைட்ல கையைக் காண்பித்து -கை காண்பிக்கும் வழக்கம் இன்னும் நிறையபேர்ட இருக்கு, நேர ஓட்டிக்கொண்டுபோவான் என்று நாங்க சொல்லிப்போம். இண்டிகேடர் உபயோகம் இவங்களுக்கு 70% ஓட்டுநர்களுக்குத் தெரியாது.

  ReplyDelete
  Replies
  1. அது தொட்டில்பழக்கம் போலாகிவிட்டது போலும்... ஆனால் இங்கும் .. கார் பழக்கும்போது சொல்லித் தந்தார்கள்.. இப்போ நாம் ஒரு நாற் சந்தியில், வலது பக்கம் திரும்புவதற்காக சிக்னல் போட்டபடி நிற்கிறோம் எனில்.. வலது பக்கம் இருந்து ஒரு கார் நம்மை நோக்கி வருகிறது அதன் சிக்னலை இடது பக்கம் போட்டுக் கொண்டு எனில்.... அப்போ அக்கார் நம் பாதைக்குள் என்றியாகப்போகிறது எனத்தானே அர்த்தம்.. அப்போ நாம் காரை எடுக்கலாம்தானே..

   இருப்பினும் .. அப்படியான நேரம் அக்கார் திரும்பும்வரை வெயிட் பண்ணுங்கோ.. சிலர் ஓல்ரெடி அப்படி சிக்னல் போட்டுவிட்டு.. ஓஃப் பண்ண மறந்துபோயும் வரலாம்.. அதனால நாம் தான் கெயாஃபுலாக இருக்கோணும்.. எதுக்கும் பொறுமை முக்கியம் என...

   Delete
  2. மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்.

   Delete
 38. கவிமாமணி

  கவிப்பேரசு

  கவிதைச் செம்மல்

  கவிப்புயல்

  கவிச்சூறாவளி

  கவி அமுதம் அதிரா:)...

  கவி சுனாமி ,

  கவி நிலநடுக்கம்

  கவி பூகம்பம் ,

  கவி பேரலை ...


  ஹா ஹா சூப்பர் ல..பேரும் சூப்பர் கவிதையும் சூப்பர்

  என்ன இனி கவிதையை விட பேரு பெருசா இருக்கும் போலவே ...


  வெள்ளை பனி குவியல் பார்க்கும் போதே குளிருதே ,,,ஆஹா அதிரா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அனு வாங்கோ..

   ஆஆவ்வ்வ்வ் யான் பெற்ற பட்டங்களை எல்லாம் சுட்டிக் காட்ட்டி.. என்னைப் பனிபோல குளிரப்பண்ணிட்டீங்க.. இதை எல்லாம் அஞ்சு படிக்க மாட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்:))..

   ஹா ஹா ஹா மிக்க நன்றி அனு.

   Delete
 39. சீத்தலை சாத்தனார் என்று கவிஞர் இருந்தாராம், கன்னா பின்னா கவிதைகளை பார்த்தால் தன கையில் இருக்கும் எழுத்தாணியால் தன் தலையில் குத்திக்கொள்வாராம், அதனால் அவருடைய தலை புண்ணாகி, சீழ் பிடித்திருக்குமாம் அதனால்தான் அவருக்குள் சீத்தலை சாத்தனார் என்று பெயர். சீ! சீ ! நீங்கள் எதுவும் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் கவிதைக்கும் நான் சொன்ன விஷயத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. உங்கள் கவிதை சூப்பர். ஹா ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ பானுமதி அக்கா வாங்கோ..

   ஆவ்வ்வ்வ் அவரை உங்களுக்குத் தெரியுமோ? மீக்கு 4ம் வகுப்பிலேயே இந்துமதி ரீச்சர் சொல்லித்தந்தவ உண்மையா..

   அவர் சீத்தலை இல்லை. சீழ்த்தலைச் சீத்தனார் என்பதுபோல நினைவு.. சீழ் தலை மருவி சீத்தலை ஆகியிருக்கலாம்..

   கவிதைகளைப் பார்த்தால் அல்ல.. அவர் எழுதும் பாக்களில் பிழை வந்திட்டால், உடனே தன் தலையில் குத்துவாராம்ம்.. என்ன ஒரு கொடுமை பாருங்கோ.. நான் எனில் ஓடிப்போய் அஞ்சுவுக்குத்தான் கொத்திப் போட்டு வருவேன் ஹா ஹா ஹா எங்கிட்டயேவா:)).. என் தலை நேக்கு முக்கியம்.. சுவர் இருந்தால்தானே சித்திரம் கீறலாம்ம்.. ஐ மீன் கவிதை எழுதலாம்:)... ஹா ஹா ஹா...

   Delete
  2. [im]https://media1.tenor.com/images/9aad30dd62c75fcb93721ed598b97114/tenor.gif?itemid=12374477[/im]

   Delete
  3. ஹலோ மியாவ் நேத்துத்தான் உங்களை பற்றி பெருமையா 5 வார்த்தை சொல்லலானு நினைச்சேன் .நோ மைண்ட் சேன்ஜ்ட் ,சொல்ல மாட்டேன்

   Delete
  4. சரி மியாவ் ஒரு கேள்வி ஐம்பெரும் காப்பியங்கள் ஐஞ்சிறு காப்பியங்கள் ஆக மொத்தம் பத்தையும் ஒரே மூச்சில் சொல்லுங்க பார்க்கலாம் :) நீங்க தேட மாட்டிங்கன்னு எனக்கு தெரியும் உடனே சொல்லுங்க

   Delete
  5. https://media1.tenor.com/images/9aad30dd62c75fcb93721ed598b97114/tenor.gif?itemid=12374477////

   ஹா ஹா ஹா நினைச்சேன்ன்ன் இப்படி ஒன்று வருமென:)) ஜெரி ஆருக்கு அம்பு எறியுது? சீழ்த்தலைச் சீத்தனாருக்கோ?:)) ஹா ஹா ஹா..

   Delete
  6. ///AngelFriday, February 01, 2019 5:45:00 pm
   ஹலோ மியாவ் நேத்துத்தான் உங்களை பற்றி பெருமையா 5 வார்த்தை சொல்லலானு நினைச்சேன் .நோ மைண்ட் சேன்ஜ்ட் ,சொல்ல மாட்டேன்///

   பீஸ்.. அஞ்சு பீஸ்ஸ்ஸ்ஸ் இதுக்கெல்லாம் மைன்டை டக்குப் பக்கென மாத்தக்கூடா:).. ஜொள்ளுங்கோ ... ஹா ஹா ஹா என் ஆத்துக்காரர் என்னிடம் அடிக்கடி கேட்பது.. என்னில உங்களுக்குப் பிடிச்ச ரெண்டு விசயம்.. பிடிக்காத ரெண்டு விசயம் சொல்லுங்கோ என... நோஓஓ இப்போ மீ ரயேட் சொல்ல மாட்டேன் என்றால்ல்.. பிளீஸ்ஸ் பிளீஸ்ஸ் என சொல்லும்வரை விடமாட்டார்ர் ஹா ஹா ஹா,

   அப்பூடித்தான்..
   பீஸ் அஞ்சு பீஸ்ஸ்.. என்னிடம் அதுவும் நல்ல விசயம் அஞ்சு இருக்கா ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்?:))... ஓகே பிங்கி புறொமிஸ்ஸ்.. குத்த மாட்டேன்ன்ன் ஹா ஹா ஹா உண்மையாத்தான் நம்புங்கோ:))

   Delete
  7. //சரி மியாவ் ஒரு கேள்வி ஐம்பெரும் காப்பியங்கள்//
   சிலப்பதிகாரம்
   சீவகசிந்தாமணி
   மணிமேகலை.. இதுக்கு மேல.. நாக்கு நுனிவரை வருது ஆனா நினைவு வரமாட்டுதாமே ஹா ஹா ஹா

   //ஐஞ்சிறு காப்பியங்கள் //
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதை ஆரு உருவாக்கியது?:) இது அலாப்பி வெளாட்டூஊஊஊ:))

   Delete
  8. ///நீங்க தேட மாட்டிங்கன்னு எனக்கு தெரியும் உடனே சொல்லுங்க///
   ஹா ஹா ஹா எப்பவும் இப்ப்படியான கேள்விகளுக்கு தேடாமல்தான் பதில் சொல்வேன்ன்.. தேடிச் சொன்னால் அதிலென்ன சுவாரஸ்யம் இருக்கப் போகுது...

   Delete
  9. big kaapiyams ----valaiyapathi ,kundalakesi

   small kaappiyams ---yasothara,uthayanakumara nagakumara }kaaviyam then soolamani and neelakesi

   Delete
  10. கொஞ்சம் உங்க சிமியோன் டீச்சர் அட்ரஸ் மட்டும் தர முடியுமா .வலையுலகம் சார்பா அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த நினைக்கிறோம்

   Delete
  11. ஐஞ்சிறு காப்பியத்தை அலாப்பி வெளாட்டு ஆக்கிய ஸ்டூடண்ட்டை உருவாக்கியவருக்கு என்ன பரிசு தரலாம்னு நெல்லைத்தமிழன்கிட்டத்தான் கேக்கணும்

   Delete
  12. இல்லை நான் ஒரு தடவை சொன்னேனா என் பேச்சை நானே கேக்க மாட்டேன் ..ஆனா yesterday உங்கள பெருமையா நினைச்சேன் அது மட்டும் சொல்லவே மாட்டேன்

   Delete
  13. //தேடிச் சொன்னால் அதிலென்ன சுவாரஸ்யம் இருக்கப் போகுது...//

   garrrrrrrrrrrrrr

   Delete
  14. //big kaapiyams ----valaiyapathi ,kundalakesi//

   ஆவ்வ்வ்வ் யேச்ச்ச்ச்ச்:) இதைத்தான் ஜொன்னேனே நாக்கு நுனியில வந்திட்டுது என:)) வெளியே வரமுன், நீங்க சொல்லிட்டீங்க ஹா ஹா ஹா:)).

   //small kaappiyams //
   இது சத்தியமாக எனக்கு தெரியாது.. எங்கள் சிலபஸ் ல இல்லை.. ஒருவேளை இது உயர் வகுப்பில் தமிழ் ஒரு பாடமாக எடுத்திருந்தால் வந்திருக்கலாமோ என்னமோ..

   Delete
  15. ///கொஞ்சம் உங்க சிமியோன் டீச்சர் அட்ரஸ் மட்டும் தர முடியுமா .வலையுலகம் சார்பா அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த நினைக்கிறோம்
   //

   நோஓஓஓஓஓஓஓஓஓ நான் உங்களை நம்பி அவவ்இன் அட்றஸ் தர மாட்டேன்ன்:) பிக்கோஸ் சிமியோன் ரீச்சர் இன்னொன்றும் ஜொள்ளித்தந்திருக்கிறா.. “நம்ப நட, நம்பி நடவாதே” என ஹா ஹா ஹா.. பின்னாளில் இப்பூடி எல்லாம் கேட்பீங்க அட்றஸ் எனத் தெரிஞ்சிருக்குது அவவுக்கு அப்பவே:)) அவ்வ்வ்வ்வ்:))..

   Delete
  16. AngelFriday, February 01, 2019 6:10:00 pm
   ஐஞ்சிறு காப்பியத்தை அலாப்பி வெளாட்டு ஆக்கிய ஸ்டூடண்ட்டை உருவாக்கியவருக்கு என்ன பரிசு தரலாம்னு நெல்லைத்தமிழன்கிட்டத்தான் கேக்கணும்//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அவர் இன்னும் 3 நாளுக்கு ரொம்ப பிஸியாம் என இப்போதான் எனக்கு வட்ஸப்பில:) மெசேஜ் போட்டிருக்கிறார்.. அத்தோடு தன்னை டிசுரேப்பு பண்ண வேண்டாம் என அஞ்சுக்கும் சொல்லச் சொன்னார்ர்:)) ஹா ஹா ஹா..

   பூஸோ கொக்கோ?:) எங்கிட்டயேவா?:).. ஹா ஹா ஹா..

   Delete
  17. //ஆனா yesterday உங்கள பெருமையா நினைச்சேன் அது மட்டும் சொல்லவே மாட்டேன்///

   https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcROk0BByhOG0fmu3pGvzUBqWa8LiwAauxRo8HcDOWidA0yWF5CyPQ

   Delete
  18. //AngelFriday, February 01, 2019 6:15:00 pm
   //தேடிச் சொன்னால் அதிலென்ன சுவாரஸ்யம் இருக்கப் போகுது...//

   garrrrrrrrrrrrrr//

   ஹா ஹா ஹா நான் என்ன டப்பா ஜொள்ளிட்டேன்ன்.. விளக்கமச் சொல்லட்டோ?.. இப்பொ ஒரு விசயத்தை தேடித்தாங்கோ.. எனக்கு தெரியல்ல சொல்லுங்கோ எனக் கேட்டால் தேடிச் சொல்லலாம்.. ஆனா ஒருவரை ரெஸ்ட் பண்ணுவதற்காக ஒரு கேள்வி ஜாலியாக் கேட்கும்போது... தேடாமல் நம் கிட்னியில் உள்ளதைச் சொன்னால்தானே சுவாரஷ்யம் அதைச் சொன்னேன்ன்ன்:)) ஹா ஹா ஹா

   ஹையோ இந்த டமில்ல டி எடுத்ததால:)), பெரிய பிரெப்பிலமாக் கிடக்கூ:) எல்லோருக்கும் விளக்கம் குடுத்துக் குடுத்தே மீ வெயிட் குறைஞ்சுகொண்டு போகிறேன்ன்ன்:)) ஹா ஹா ஹா..

   Delete
  19. அதிரா... இந்த ஏஞ்சலின் ஆண்டி கேள்விக்கெல்லாம் நம்ம இரண்டுபேருக்கும் எப்படி பதில் தெரியும்? ஒன்று, நாம அந்தக் காப்பியங்கள் உண்டாக்கினபோது பொறந்திருக்கணும். இல்லைனா, 1950கள்ல அதைச் சொல்லித்தந்தபோதாவது படித்திருக்கணும். நமக்கு இப்போதானே ஸ்கூல் போகும் வயசாகுது. அதுனால அவங்களே சொல்லட்டும்னு விட்டிருக்கலாமே

   Delete
  20. /// இந்த ஏஞ்சலின் ஆண்டி கேள்விக்கெல்லாம்//

   ஹா ஹா ஹா ஹா புவஹாஆஆஆஆஆஅ.. ஹையோ நெலைத்தமிழன், உங்கள் இந்தக் கொமெண்ட் படிச்சதும்.. அஞ்சுவை சூப்பரா ஓட்டோணும் என நினைச்சு சிரிச்சு முடிப்பதற்குள்.. இளங்கோ அண்ணன் பற்றிய செய்தி கிடைத்தது.. அப்படியே அனைத்தையும் ஆறப்போட்டு விட்டேன்ன்:(.. பாருங்கோ அஞ்சுவுக்கு ராகு கேது மாற்றம் நல்லா வேர்க் பண்ணுது போல:)..

   ஓடி ஓடி நெட் ல தேடி வந்து எனக்கு ரெஸ்ட் வைக்கிறாவாம் கர்ர்ர்ர்:)).. இருந்தாலும் நெல்லைத்தமிழன் இப்பூடியான நேரம், அவ என்ன பண்ணுவா எனில்.. தான் பார்க்கவே இல்லை இக் கொமெண்ட்டை என்பதுபோல காக்கா போயிடுவா:)).., மீ பூஸோ கொக்கோ?:)).. கொப்பி பண்ணி மெயில்ல அனுப்பிடுவேன்ன் எங்கிட்டயேவா ஹா ஹா ஹா:)). .. ஹையோ இதுக்கு மேல வாணாம்:) இத்தோடு நிறுத்திடுறேன்:))..

   Delete
 40. முதலில் அதிரடி, பிறகு, ஞானி, இப்போது கவிஞர், இதற்குப் பிறகு அபிநய சரஸ்வதியாகி வீடியோ பதிவா...?? நினைத்தாலே பகீரெங்குதே..! வைரவர் என்னை காப்பாத்து

  ReplyDelete
  Replies
  1. இடையில வந்த பட்டங்களை எல்லாம் மறந்துபோயிட்டீங்க:)).. வீடியோப் பதிவோ அவ்வ்வ்வ்வ்வ்:))

   //நினைத்தாலே பகீரெங்குதே..! வைரவர் என்னை காப்பாத்து //
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவருக்கு வைரத்தில தோடு அப்படி ஏதும் தருவேன் எனவும் வேண்டுங்கோ[அதிராவைப்போல:)].. ச்சும்மா எல்லாம் வேண்டப்பூடா:))

   Delete
 41. பனி மூடிய மலை அழகு. ராதா ரசிகர்கள் பார்த்தால் நொந்து போய் விடுவார்கள். எப்படியாவது உங்கள் உள்ளத்தை கொஞ்சம் கெட்டதாக்கிக்கொண்டு உறங்குங்கள், அப்போதுதான் எங்களுக்கு சுவாரஸ்யமான கதை கிடைக்கும்.
  நீங்கள் வரைந்திருப்பது பழைய கேன்வாஸ் ஷூவில்தானே..?

  ReplyDelete
  Replies
  1. ///எப்படியாவது உங்கள் உள்ளத்தை கொஞ்சம் கெட்டதாக்கிக்கொண்டு உறங்குங்கள்//
   ஹா ஹா ஹா அதனாலதான் அஞ்சுவுக்கு 98 கொடுத்தேன்ன்:) இன்று நல்ல நித்திரை வருமெனக்கு:))..

   அதற்கான விடை.. squid shell பானுமதி அக்கா... மிக்க நன்றிகள்.

   Delete
 42. ஜன்னல்வழியாக எடுத்த காணொளிகள் இரண்டும் அருமை.
  பனி மூடிய மலை மற்றும் இயற்கை காட்சி பார்க்க பார்க்க பரவசம்.

  ReplyDelete
  Replies
  1. ஓ வீடியோவும் பார்த்திட்டீங்களோ. மியாவும் நன்றி கோமதி அக்கா..

   Delete
 43. பூனைப்பிள்ளையை புலிப்பிள்ளையாக்கும்..
  ஆமா எல்லாரும் நெனைச்சுக்கொண்டு இருக்காங்கள்
  எலிப் பிள்ளைக்கும் இளைய பிள்ளைஎண்டு...

  ஆகா.. அருமை.. அருமை..எல்லாம் அருமை..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ

   //பூனைப்பிள்ளையை புலிப்பிள்ளையாக்கும்..
   ஆமா எல்லாரும் நெனைச்சுக்கொண்டு இருக்காங்கள்
   எலிப் பிள்ளைக்கும் இளைய பிள்ளைஎண்டு...//

   ஆஆஆஆஆஆ துரை அண்ணனின் கவிதை நேக்குப் புரியுதில்லையே....அபுரி:)).

   மிக்க நன்றி துரை அண்ணன்.

   Delete
 44. கவி அமுதம் பெயர் சூப்பர், பட்டங்கள் அதிகமாகி கொண்டு போகுதே!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கோமதி அக்கா.. அது தானாகக் கிடைக்கும்போது மீ என்ன பண்ணுவேன்ன்:).

   Delete
 45. உங்கள் கவிதையை ரசித்தேன் யாராவது ரசித்துதான் ஆகணுமே

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ.. ஹா ஹா ஹா இல்ல, திட்டி விட்டும் போகலாம்:)).. பிடிச்சால்தானே ரசிக்க முடியும்:)) ஹா ஹா ஹா.

   மிக்க நன்றி ஜி எம் பி ஐயா..

   Delete
 46. கவி அமுதம் அதிரா அழகா கீறி இருக்கிறீங்க. வரவர வால் போல பட்டங்கள் நீளுது. இங்கு வழமைபோல இல்லாமல் கடும் ஸ்னோ. குளிரும் கூடவே. ஒவொருமுறையும் புதிதாகவே குளிரை எதிர்கொள்கிறோம்.(வந்தாச்சு)
  நல்ல உள்ளம் உறங்காது ஹா..ஹா..
  கண்ணதாசன் வரிகள் அருமை. படங்கள் அழகு.

  ReplyDelete
  Replies
  1. வாவ்வ்வ்வ் வாங்கோ அம்முலு வாங்கோ.. நீங்க இன்னும் நாடு திரும்பவில்லை என்றெல்லோ நினைச்சிருந்தேன்..

   //வரவர வால் போல பட்டங்கள் நீளுது//
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:).

   மிக்க நன்றி அம்முலு, குளிர் நேரம் பார்த்து வந்திருக்கிறீங்கள், ஆனா நல்லது ஊரில் நுளம்பு இருந்திருக்குமே.. ரெஸ்ட் எடுங்கோ.

   Delete
 47. கவி அமுதம் அதிரா.... கலக்கல்.

  அனைத்தும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வெங்கட் வாங்கோ.. ஹா ஹா ஹா பெயர் பிடிச்சிருக்குது போல மிக்க நன்றி.

   Delete
 48. styrofoam /package பழங்கள் டேட்ஸ் எல்லாம் பேக் செஞ்சு வரும்னு நேத்து நினைச்சேன் ஆனா க்ளோசப்பில் அந்த மரம் மீனுக்கு age ரிங்ஸ் வருமே அது மாறி டிசைன் கன்பியூஸ் ஆகிடுச்ச

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ஜெரி, ட்றக் மாறி ஓடுதே என நினைச்சேன்ன்:)..

   Delete
 49. வணக்கம் அதிரா சிஸ்டர்

  பனி போர்த்திய பாதைகளும், மலைகளும் மிகவும் அழகாக உள்ளது. எங்களுக்கு அழகாக தெரியுது. ஆனால் உங்களுக்கு குளிர் வாட்டி வதைக்கும் அல்லவா? வெளியில் போய்வர கஸ்டமாகத்தான் இருக்கும்.

  பயிர்கள் நன்றாக வந்திருக்கின்றன. குளிரிலும் கவனத்துடன் வளர்க்கும் தங்களுக்கு அவைகள் தரும் நட்புடனான நன்றியுடன், என்னுடைய பாராட்டுகளும்.

  ஊசி இணைப்பு அப்படியே ஒத்துப் போகிறது. ஒத்துப் போக வைத்த நல்ல ரசனையை கண்டு ரசித்தேன்.

  ஊசி குறிப்பும் அபாரம். ஆனால் இந்த தத்துவ வரிகள் அதிக ஆசை வரும் சமயம் நம் மைண்டிலிருந்து ( மைண்ட்.. இதற்கு தங்கள் பாணியில் என்னவோ?) காணாமல் போய் விடுவது இயற்கை.

  சோளத்தட்டையில் படம் வரைந்துள்ளீர்களோ? இல்லை.. பாதம் பருப்பு தோல்களா? எதுவாயிருந்தாலும் படம் நன்றாக உள்ளது. சிறந்த ஓவியராகவும் ஆகி விட்டீர்கள். வாழ்த்துக்கள். அனைத்தையும் மிகவுமே ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. ஆவ்வ்வ்வ் ரெண்டாம் தடவையாகவும் வந்து ரசிக்க்கிறீங்க மிக்க மகிழ்ச்சி..

   //ஆனால் உங்களுக்கு குளிர் வாட்டி வதைக்கும் அல்லவா? வெளியில் போய்வர கஸ்டமாகத்தான் இருக்கும்.//

   இங்கு வீட்டுக்குள் காரில் எல்லாம் ஹீட்டர் பாவிப்போம்ம்.. அதனால குளிர் தெரியாது.. மற்றும்படி நல்ல உடுப்புப் போட வேண்டும்.. உடுப்பு குறைவாகப் போட்டால்தான் பெரும் அவஸ்தை ஆகிடும்.

   //ஆனால் இந்த தத்துவ வரிகள் அதிக ஆசை வரும் சமயம் நம் மைண்டிலிருந்து ( மைண்ட்.. இதற்கு தங்கள் பாணியில் என்னவோ?) காணாமல் போய் விடுவது இயற்கை.///
   அது உண்மைதான் நமக்கு வரும் ஆசைதானே அழிவுக்குக் காரணம்.. இதுக்குத்தான் சொல்கிறேன் எல்ல்லொரும் ஞானி ஆகிடுங்கோ என.. ஆரும் கேட்கிறீங்க இல்லையே.. ஆசையை விட்டுவிட மாட்டேன் என்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

   இல்லை இல்லை அது கணவாய் எனப்படும் ஒருவகை மீனில் இருக்கும் ஓடு.. பள்ளிக்கூட காலத்தில் படிச்சிருப்பீங்க.. squid shell அதில்தான் கீறியிருக்கிறேன்.

   மிக்க நன்றி கமலா சிஸ்...

   Delete
  2. வணக்கம் சகோதரி

   சரி. சரி..! தெரிந்து கொண்டேன். நன்றாக வரைந்துள்ளீர்கள். இந்த கலையையும் விடாமல் தொடருங்கள். பிஸ்தா என்பதற்கு பாதாம் என்று எழுதி விட்டேன். கிளிஞ்சல்கள் எனச் சொல்வோம்.. கடற்கரை மணல்களில் இருந்து பெரிதும், சிறிதுமாக பொறுக்குவோம். அதுவா எனவும் கேட்க நினைத்தேன். விடுபட்டு விட்டது.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  3. வாங்கோ கமலாக்கா வாங்கோ.. நீங்க உற்சாகமாக ஓடி ஓடி வருவது என்னை டக்குப் பக்கெனப் போஸ்ட் போடத் தூண்டுதே:)..

   ஓ கடற்கரையில் கிடைக்கும் என நீங்களும் கரெக்ட்டாத்தான் நினைச்சிருக்கிறீங்க மிக்க நன்றி.

   Delete
 50. கடல் நுறை காய்ந்த மடலில் வரைந்து இருக்கிறீர்கள் கவி அமுதம் அதிரா.

  ReplyDelete
  Replies
  1. இது எதைச் சொல்றீங்க கோமதி அக்கா.. ஓ கடற்கரையிலும் இது பொறுக்கலாம் என நினைக்கிறேன்.. மிக்க நன்றி.

   Delete
 51. இந்தபாட்டு வரும் படத்த சேவ் செஞ்சு வச்சிருக்கேன் பார்க்கணும்
  கண்டேன் சீதையை .என்னமோ சவுந்தர்யா இல்லாததால் பாக்க கஷ்டமா இருக்கு

  ReplyDelete
  Replies
  1. பாருங்கோ அஞ்சு நல்ல படம்.. வித்தியாசமாக இருக்குது.. சமீபத்தில ஒரு வீடியோ உங்கட மெயிலில் போட்டிருந்தேனே அது இப்படத்தில வரும் கோர்ட் சீன் தான்...

   இந்தாங்கோ அஞ்சு இது உங்களுக்கு ஒரு கிவ்ட்.. கண் மங்குது என்றீங்க :)) உங்கட வயசைச் சொல்லிக் கேட்டேன்ன்:) இதைத் தந்தினம்:))

   https://previews.123rf.com/images/julos/julos1607/julos160760804/82238451-cartoon-yellow-fish-with-glasses.jpg

   Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.