எப்போது விடியும்?..
துபாய் நாட்டினிலே..
வானத்து நிலவொளியில்
நள்ளிரவில் துணையின்றி
கார்களின் ஒலிகளுக்கு நடுவே
மூடிய கடைகளைப் பார்த்தபடி
எங்கோ கேட்கும் ஏதோ
ஒலிகளை உணர்ந்தபடி...
தெரு விளக்குகளின்
பிரகாசத்தை ரசித்தபடி
சுத்தமான அகலத் தெருகளில்
நிமிர்ந்த நடையுடனும்
நேரான பார்வையுடனும்
காசு நிறைந்த கைப்பையுடனும்..
விலைமதிப்பான பொருட்களுடனும்
விலைமதிப்பற்ற பெண்மையுடனும்
சின்ன ஒரு சீண்டலுக்கும்
சிக்காமல் வீடு திரும்பும்போது
இதயம் ஏங்கியது எப்போது விடியும்
என் தேசமும் இப்படியென்று????!!!
(எசப்பாட்டு எப்பூடி? ஸாதிகா அக்கா கண்ணை மூடுங்கோ..., மக்கள்ஸ்!! இது சொந்த “ரீ” அல்ல...:)).
இனிப்பு
யாருக்காவது வேலையில்
பிரமோஷன் கிடைத்தால்
இனிப்பை வழங்குவார்கள்
இனிப்பை எடுத்துக்கொண்டு நீ
சிரிப்பை வழங்குவாய்
வாங்கியதை திருப்பித் தருவதில்
உனக்கு நிகர் நீயே....
***** ***** ***** *****
காதல் என்பது???
காதலிக்கும்போது
புனிதமாய்த் தோன்றியது
தோல்வியானதும்
துரோகமாய்த் தோன்றியது
வாழ்வு புரிந்ததும்
விழையாட்டாய்த் தோன்றியது
அடுத்தவனின் காதல்
மடத்தனமாய்த் தோன்றியது
பிள்ளையின் காதல்
வெறுப்பை ஊட்டியது
அப்படியென்றால்
காதல் என்பது??
---------------------------------------------------------------------------------------------------
பூந்தோட்டத்திலே பூஸார்... ரொம்ப அழகு இல்ல?:)... இது அன்பு அம்முலு பூஸாருக்காக அனுப்பியது...
---------------------------------------------------------------------------------------------------
நாளை முதல் குடிக்க மாட்டேன்... இது சத்தியம் “கவிசிவா”(கவிசிவாவின் புளொக் பதிவு பார்த்ததன் எஃபெக்ட்:))

இரண்டு மனம் வேண்டும்.. இறைவனிடம் கேட்டேன்
நினைத்துவாழ ஒன்று....
பின் இணைப்பு:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஈஸ்ரர் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் "Happy Easter" சொல்கிறோம் எங்கட குண்டர் “மொப்பி” அண்ட் அதிரா...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
“பேசுவதற்கு முன் ஒருமுறை யோசியுங்கள்
எழுதுவதற்கு முன் இருமுறை யோசியுங்கள்”
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
|
|
Tweet |
|
|||




