நல்வரவு_()_

****
என்ன பாட்டோ என நினைத்து வந்திருந்தால் மன்னிக்கவும்:))

Thursday, 1 April 2010

ஜலீலா, ஸாதிகா அக்காஸ்`க்கு எசப்பாட்டு!!!
எப்போது விடியும்?..
துபாய் நாட்டினிலே..
வானத்து நிலவொளியில்
நள்ளிரவில் துணையின்றி
கார்களின் ஒலிகளுக்கு நடுவே
மூடிய கடைகளைப் பார்த்தபடி
எங்கோ கேட்கும் ஏதோ
ஒலிகளை உணர்ந்தபடி...

தெரு விளக்குகளின்
பிரகாசத்தை ரசித்தபடி
சுத்தமான அகலத் தெருகளில்
நிமிர்ந்த நடையுடனும்
நேரான பார்வையுடனும்
காசு நிறைந்த கைப்பையுடனும்..

விலைமதிப்பான பொருட்களுடனும்
விலைமதிப்பற்ற பெண்மையுடனும்
சின்ன ஒரு சீண்டலுக்கும்

சிக்காமல் வீடு திரும்பும்போது
இதயம் ஏங்கியது எப்போது விடியும்
என் தேசமும் இப்படியென்று????!!!

(எசப்பாட்டு எப்பூடி? ஸாதிகா அக்கா கண்ணை மூடுங்கோ..., மக்கள்ஸ்!! இது சொந்த “ரீ” அல்ல...:)).இனிப்பு
யாருக்காவது வேலையில்
பிரமோஷன் கிடைத்தால்
இனிப்பை வழங்குவார்கள்

இனிப்பை எடுத்துக்கொண்டு நீ
சிரிப்பை வழங்குவாய்
வாங்கியதை திருப்பித் தருவதில்
உனக்கு நிகர் நீயே....

***** ***** ***** *****

காதல் என்பது???
காதலிக்கும்போது
புனிதமாய்த் தோன்றியது
தோல்வியானதும்
துரோகமாய்த் தோன்றியது
வாழ்வு புரிந்ததும்
விழையாட்டாய்த் தோன்றியது
அடுத்தவனின் காதல்
மடத்தனமாய்த் தோன்றியது
பிள்ளையின் காதல்
வெறுப்பை ஊட்டியது
அப்படியென்றால்
காதல் என்பது??


---------------------------------------------------------------------------------------------------

பூந்தோட்டத்திலே பூஸார்... ரொம்ப அழகு இல்ல?:)... இது அன்பு அம்முலு பூஸாருக்காக அனுப்பியது...

---------------------------------------------------------------------------------------------------

இது அன்புச் ஸாதிகா அக்கா, அதிராவின் பீலிங்ஸைப்போக்க அனுப்பிய மருந்து சே..சே.. பூஸ் பிக்ஸர்...
நாளை முதல் குடிக்க மாட்டேன்... இது சத்தியம் “கவிசிவா”(கவிசிவாவின் புளொக் பதிவு பார்த்ததன் எஃபெக்ட்:))இரண்டு மனம் வேண்டும்.. இறைவனிடம் கேட்டேன்
நினைத்துவாழ ஒன்று....
மறந்து வாழ ஒன்று....
*** *** *** *** *** *** *** *** *** ***** *** *** ***

பின் இணைப்பு:

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஈஸ்ரர் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் "Happy Easter" சொல்கிறோம் எங்கட குண்டர் “மொப்பி” அண்ட் அதிரா...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
“பேசுவதற்கு முன் ஒருமுறை யோசியுங்கள்
எழுதுவதற்கு முன் இருமுறை யோசியுங்கள்”
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

22 comments :

 1. ஹை . கவிதை கூட வருமா

  ReplyDelete
 2. //அப்படியென்றால்
  காதல் என்பது??//

  உங்களுக்கும் தெரியலயா ? அப்ப எனக்கும் தெரியல ( அப்பாடி தப்பிச்சாச்சி )
  //இனிப்பை எடுத்துக்கொண்டு நீ
  சிரிப்பை வழங்குவாய்
  வாங்கியதை திருப்பித் தருவதில்
  உனக்கு நிகர் நீயே.//

  சிரிப்பே ஒரு பிரமோஷன் மாதிரிதான்

  ReplyDelete
 3. ///விலைமதிப்பான பொருட்களுடனும்
  விலைமதிப்பற்ற பெண்மையுடனும்
  சின்ன ஒரு சீண்டலுக்கும்
  சிக்காமல் வீடு திரும்பும்போது
  இதயம் ஏங்கியது எப்போது விடியும்
  என் தேசமும் இப்படியென்று????!!!///
  ஹிக்..ஹிக்..ஹிக்..அப்பூடியா?நான் உங்கட பதிவை மட்டும் படிக்கும் பொழுது கண்களில் லைட் ஆயில் (அதாம்ப்பா விளக்கெண்ணெய் ஹி..ஹி....விட்டுட்டுட்டு படிப்பேன்)
  இன்னும் கொஞ்சம் விரிவான எசப்பாட்டு தந்து இருக்கலாம்.யாருக்கோ பயந்து கொண்டு சட்டென முடித்தாற்ப்போல் இருக்கேகேகே.......

  காதலைப்பற்றிய கவிதை சூப்பர்.இதுவும் சொந்த சரக்கு ஆக இருக்காது என்று நம்புகிறேன்.
  //அப்படியென்றால்
  காதல் என்பது??///
  கத்தரிக்காய் என்று முடித்து இருக்கலாம்.

  காதல்தோல்வி அடைந்த பூஸைப்பார்த்தீர்களா?ரோடில் விழுந்து கிடக்கிறது.அதிரா உங்கட இந்த கத்தரிக்காய்..சேசே..காதல் கவிதையை படித்து விட்டு கீழே இருக்கும் நான் அனுப்பிய பூஸ் படத்தை பார்த்ததும் எனக்கு இப்படி தோன்றி விட்டது.

  ReplyDelete
 4. ஹை . கவிதை கூட வருமா// “கூட” எதுவும் வராது ஜெய்..லானி... வீடுவரை உறவு.... இனி இப்பாட்டுக் கேட்கும்போதெல்லாம் நியாபகம் கூட வருமே... நான் கவிதையைச் சொன்னேன்..கிக்....

  சிரிப்பே ஒரு பிரமோஷன் மாதிரிதான்/// ஓம்... இனிப்பான புரொமோஷன்... மிக்க நன்றி ஜெய்..லானி.. முதேஏல் பின்னூட்டத்துக்கும்.

  ReplyDelete
 5. யாருக்கோ பயந்து கொண்டு சட்டென முடித்தாற்ப்போல் இருக்கேகேகே......./// பயமா? எனக்கா? என்ன ஸாதிகா அக்கா என்னைப்பார்த்து இப்பூடிக் கேட்டிட்டீங்களே!!! கட்டிலுக்குள்கீழ மின்னும் என் கண்ணைப் பார்த்துத்தான் உலகமே பயப்புடூஊஊஊஊது..கிக்..கிக்...

  கத்தரிக்காய் என்று முடித்து இருக்கலாம்/// சே..சே.. சே.. ஸாதிகா அக்கா அப்படியெல்லாம் சொல்லப்படாது.... திருமணம் முடித்தபின் எமக்குள் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோமே அதெல்லாம் புனிதமானதுதானே... ஆனால் இளவயதில காதல் என்ற பெயரில தடக்கி விழுந்து எல்லாத்தையும் இழக்கிறார்களே “சிலர்”.. அப்படியான காதல்தான் வெறுக்க வைக்கிறது...

  ஸாதிகா அக்கா எதுக்கு விளக்கெண்ணெய்? அங்கு லைட் இல்லையோ? ஐ மீன் கறண்டு கட்டாயிடுத்தோ எனக் கேட்டேன்.... முறைக்கப்படாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..மிக்க நன்றி ஸாதிகா அக்கா சில்வர் மெடலுக்கு.... அதுதான் 2வது பின்னூட்டத்துக்கு...கிக் கீஈஈஈஈ.

  ReplyDelete
 6. காதல் பற்றிய கவிதை மிக அழகு, அதிரா!
  எல்லா கவிதைகளிலும் ஒரு நேர்மையான மனசு தெரிகிறது எனக்கு.
  முதல் கவிதை யார் எழுதியது?

  ReplyDelete
 7. அனைத்துமே அருமை அதிரா! நன்றாகத் தேர்வு செய்து தொடுத்துள்ளீர்கள்..

  ஆனாலும், மொப்பியை குண்டர் என்று சொன்னதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.. அதுவும், அவர் சாப்பிடும் போது அவரது அனுமதியின்றி படமெடுத்ததை இன்னமும் வன்மையாக கண்டிக்கிறோம்.. :))

  பூஸ் இஸ் boozing! எனக்கு ஹைஷ் குழம்பிப் போய் நின்ன நிமிஷம் ஞாபகத்துக்கு வருது அதிரா!! :))))))

  அது காதலில் தோற்றவர் சொன்ன கவிதை.. உண்மையுங் கூட!! வென்றவர் வேறு மாதிரி சொல்லுவார் :)) அதுவும் உண்மையே :))

  ReplyDelete
 8. அதிரா விற்கு கவிதை அப்படியே அள்ளி அருவி போல கொட்டுதே.

  அதுவும் பாடலுடன், சூப்பர், எப்பூடி அதிரா இப்பூடி எல்லாம் ஒரு கலக்கல், காமடி, சோகம், காதல் கவிதை. எல்லாம் வாவ்..

  ReplyDelete
 9. மிக்க நன்றி மனோ அக்கா. எனக்கு கவிதை என்றால் ஒரு பைத்தியம் மாதிரி. பொழுது போகாத நேரங்களில் கவிதைகள் தேடுவேன். சில வருடங்களுக்கு முன்பு அப்படித் தேடிய இடத்திலேதான் முதல் கவிதை கிடைத்தது, பிடித்திருந்தது எழுதிவைத்திருந்தேன். யார் எழுதியதென்பதெல்லாம் குறித்து வைக்கவில்லை.

  ஆனால் நான் இங்குபோடும் கவிதைகள் பல வருடங்களுக்கு முன் பேப்பரில்(இலங்கை)வந்த கவிதைகளே.

  இதிலிருக்கும் 2வது கவிதை இளைய கவிஞர் விஜய் எழுதியதாக நினைவு.

  ReplyDelete
 10. சந்து, ஹைஷ் அண்ணன்...
  சந்தனா... இமாவுக்கு ஈஸ்டர் வாழ்த்துச் சொல்வோமே என்றுதான் மொப்பியரைப் பிடித்து வைத்துப் படமெடுத்தேன்... அவர் சொக்கலேட் bunny ஐக் கடிக்கத் தொடங்கிற்றார்.. தடுத்த எனக்கும் ஒரு கடி... சரியான செல்லம், இதைப்பார்த்துக்கொண்டிருந்த என் கணவர் சிரிக்கத்தொடங்கிற்றார், சிரிக்கிறீங்களே ஹெல்ப் பண்ணக்கூடாதோ என்றேன், அதுக்குத்தான் ஐடியா சொன்னார்.. அவரின் சாப்பாட்டைக் கொடுத்தால் அவர் பேசாமல் இருப்பாரே என்று, அதுதான் கபேஜ் இலை சாப்பிடுகிறார்:).

  பூஸ் இஸ் boozing! எனக்கு ஹைஷ் குழம்பிப் போய் நின்ன நிமிஷம் ஞாபகத்துக்கு வருது அதிரா!! :))))))எனக்கும்தான்.

  ஹைஷ் அண்ணன்.... முடியும்போது வந்துபோங்கோ..பிளீஸ்ஸ்ஸ்... உங்களுக்காக நிறைய அன்புள்ளங்கள் காத்திருக்கிறோம்...:(:(.

  ReplyDelete
 11. ஜலீலாக்கா... வாங்கோ... ஈஸ்டர் எக் சேகரிப்பதுபோலதான் கவிதையும் சேகரித்து வைத்திருக்கிறேன்:). கவிதை என்றாலும் எல்லாம் பிடிக்காது எனக்கு... மனதைத் தொடவேண்டும்..

  ReplyDelete
 12. ஆசியா மிக்க நன்றி.

  ReplyDelete
 13. அது காதலில் தோற்றவர் சொன்ன கவிதை.. உண்மையுங் கூட!! வென்றவர் வேறு மாதிரி சொல்லுவார் :)) அதுவும் உண்மையே :))/// சந்து உண்மையே...

  சமீபத்தில் ஒரு மகஸின் படித்தேன். இந்தியாவில் ஒரு குடும்பம் பரம்பரையாக காதலித்து திருமணம் முடிக்கிறார்களாம்... அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம்....

  என்ன ஒரு பிரச்சனை???.... காதலித்துக்காட்டவேண்டுமே... அதுவும் பெரிய வேலையல்லோ.. இல்லாவிட்டால் அப்பா, அம்மா பார்த்துக்கொள்வார்கள் என நாம் என்சோஓஓஓஓய் பண்ணலாம்..... இது பொறுப்பு எம்மிடம்...

  ReplyDelete
 14. அதிரா கவிதைகள் கலக்கல்.

  மிக அழகான புகைப்படத்துடன் சூப்பர்.

  வந்துபோங்க நம்ம பக்கமும்..

  ReplyDelete
 15. மலிக்கா நல்வரவு மிக்க நன்றி. உங்களோடு பெரிதாக கதைத்ததாக நினைவில்லை, நீங்கள் தேடிவந்து பதிவு போட்டதைப் பார்த்தமும் சந்தோஷம், வருகிறேன் உங்கள் வீட்டுக்கும்... பப்பி பூஸ் ஏதாவது வளர்த்தால், கட்டி வையுங்கோ நேக்குப் பயம்:).

  ReplyDelete
 16. ################
  உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி
  http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html
  ###########

  ReplyDelete
 17. தோழி அதிர கவிதைகள் மிக அருமை.
  பாராட்டுக்கள்.

  அன்புடன்,
  அப்சரா.

  ReplyDelete
 18. மிக்க நன்றி அப்ஷரா.

  ReplyDelete
 19. இதயம் ஏங்கியது எப்போது விடியும்
  என் தேசமும் இப்படியென்று????!!!//

  ஆதங்கம் ஃபீல் செய்ய வைக்கிறது.

  ReplyDelete
 20. காதலிக்கும்போது
  புனிதமாய்த் தோன்றியது
  தோல்வியானதும்
  துரோகமாய்த் தோன்றியது
  வாழ்வு புரிந்ததும்
  விழையாட்டாய்த் தோன்றியது
  அடுத்தவனின் காதல்
  மடத்தனமாய்த் தோன்றியது
  பிள்ளையின் காதல்
  வெறுப்பை ஊட்டியது//

  காதல் என்பது மனதின் திருவிளையாடல்

  ReplyDelete
 21. ஹா...ஹா..ஹா.... மாயா இதை எப்பூடித் தேடிப் புடிச்சீங்க?:)))...

  மனதின் அல்ல வயதின்:)))

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.