நல்வரவு_()_


Sunday 11 April 2010

தாத்தாவின் நினைவுகள்(பகுதி 2)


நினைவு தொடர்கிறது...

ங்கு நான் தனிமை என்பதை உணர்ந்துவிடக்கூடாது என்பதற்காக மகனும் மருமகளும் ஏதேதோ வசதிகளெல்லாம் செய்துதான் தந்திருக்கிறார்கள். பாவம் இவர்கள்தான் என்ன செய்வார்கள். நான் அவர்களை ஒருபோதும் குறை கூறமாட்டேன். அவர்கள் வேலைக்குப் போகிறார்கள். பின்னேரம் வேலையால் வந்தால் சமையல்வேலை, வீட்டுவேலை, பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தல் இப்படியே பம்பரமாகச் சுற்றுவார்கள். பத்துமணிக்கு முன்னரே எல்லோரும் படுத்து விடுவார்கள். வெள்ளிக்கிழமை வந்தால் கொண்டாட்டம்தான். இரவு ஒன்று இரண்டு மணியாகிவிடும் எல்லோரும் படுக்க. அதேபோல் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பெரும்பாலும் காலை பத்து மணிக்குப் பின்னர்தான் எல்லா வீடுகளிலும் எழும்புவார்கள். அதனால் பத்து, பதினொரு மணிக்கு முன்பு, யாரும் யாருக்கும் "போன்" கூடப் பண்ணுவதில்லை. அப்படியொரு பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

பாடசாலை மூன்று மணிக்குத்தான் முடிவடையும். வீட்டுக்கு வந்தால் ரீவியுடனேயே பிள்ளைகளின் பொழுது கழிகிறது. அவர்கள்தான் என்ன செய்வார்கள். வெளியில் இறங்கமுடியாது குளிர். என் கடைசிப் பேரனுக்கு இப்போ ஐந்து வயதுதான். முதலாம் வகுப்பில் படிக்கிறான். அந்தக் குட்டியும் ஏதோ "காட்டூன்" என்கிறார்கள், பூனை, நாய் எல்லாம் ஆங்கிலத்தில் கதைக்கிறது. அதைப் பார்த்து இவன் சிரித்தபடி இருப்பான். கூப்பிட்டால்கூட காதில் விழாது. அப்படியே இங்குள்ள பிள்ளைகள் வளர்ந்து வருகிறார்கள். பகல் முழுவதும் ஆங்கிலத்திலேயே கதைத்துவிட்டு வீட்டுக்கு வருவதால் தமிழை மறந்து விடுகிறார்கள். அவர்களுக்கு அது புரிந்துகொள்ளக் கஸ்டமாக இருக்கிறது. படங்கள் என்றாலும் பாட்டென்றாலும் ஆங்கிலத்தையே விரும்புகிறார்கள்.

வீட்டுக்குள்ளேயே, பிள்ளைகள் ஒருவருக்கொருவர் "தங்கியூ" எனச் சொல்லிக்கொள்கிறார்கள். ஒருமுறை எனது கடைசிப் பேரனிடம், கொஞ்சம் தண்ணீர் எடுத்து வரும்படி சொன்னேன். அவனும் கொண்டுவந்தான். நான் எதுவும் சொல்லவில்லை, வாங்கிக் குடித்துவிட்டேன். அது அவனுக்கு பெரிய குறையாகிவிட்டது. தாத்தா தங்கியூ சொல்லவில்லை எனத் தகப்பனிடம் முறையிட்டான். நான் தங்கியூ எனச் சொன்ன பின்பே, அவனுக்கு ஆறுதல் ஏற்பட்டது. இங்கு குழந்தைகள் காப்பகம் அல்லது நேசறியிலேயே, அங்குள்ள ஆசிரியர்கள், ஒரு பொருளை பிள்ளைகளின் கையில் கொடுக்கிறபோது, "தங்கியூ" சொல்லுங்கோ எனக்கூறி, பிள்ளைகள் சொன்ன பின்னரே, கையை விடுகிறார்களாம். அப்போது தொடக்கம் குழந்தைகளும், தங்கியூ என்பது கட்டாயமான ஒன்றாகக் கருதுகிறார்கள். தொட்டதற்கெல்லாம் தங்கியூ, சொறி, என சொல்லப் பழகுகிறார்கள். எங்கள் ஊர்களில் ஒரே குடும்பத்துள், நன்றி என்றெல்லாம் நாங்கள் சொல்வதில்லையே. தப்பித்தவறி யாராவது சொல்லிவிட்டாலோ, ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்து, ஏழனப்படுத்தி, திரும்பவும் அவர் அப்படிச் சொல்லமுடியாதபடி செய்துவிடுவோமே.

-------------------------------------------------இடைவேளை------------------------------

இது அன்பு ஆசியா, என் கொசுமெயிலுக்கு அனுப்பிய பூஸாரும் பப்பியும்.... இப்படத்தைப் பார்த்ததும் அவவுக்கு உடன்பிறப்புக்களின்(கிக்..கிக்..கீஈஈஈஈ தெரியாட்டில் கேளுங்கோ ஆரென) ஞாபகம் வந்துவிட்டுதாம், அதுதான் உடனே அனுப்பியிருந்தா. டிங்...டிங்....டிங்... இடைவேளை முடிந்து நினைவு தொடர்கிறது.......

ட்டு மணிவரை வீட்டில் ஒரே அமளியாக இருக்கும். பின் ஒவ்வொருவராகத் தத்தமது கட்டிலுக்குப் போய்விடுவார்கள். மகனும் மருமகளும் பத்து மணிவரை, என்னுடன் கதைத்துக் கொண்டிருப்பார்கள், பின் அவர்களும் நித்திரையாகிவிடுவார்கள். விடிய எழுப்பவேண்டுமே என்ற ஏக்கம் அவர்களுக்கு, எனக்குத்தான் எந்தப் பொறுப்பும் இல்லையே. எத்தனை மணிக்கும் படுக்கலாம், எத்தனை மணிக்கும் எழும்பலாம். அதிலும் இந்த நாட்டிற்கு வந்தபின், இரவு பகலெல்லாம் ஒன்றாகவே இருக்கிறது. குளிர்காலங்களில், விடிவதே எட்டு மணியின் பின்னர்தான். பின்னேரம் மூன்றரைக்கே இருட்டிவிடும். சூரியனைக் காண்பதும் குறைவுதான். அந்தக்காலங்களில்தான், நான் ஊரை அதிகமாக நினைப்பேன். இது என்ன நாடென்று வெறுப்பேற்படும்.

னது கிராமத்து வீட்டில், கிழக்கு வாசலில், ஒரு பெரிய மாமரம் இருக்கிறது. அதன்கீழ், சாய்மனைக் கதிரையில் உட்கார்ந்திருந்தால், என்ன ஒரு சுகம்... அங்காங்கே மர இலைகளினூடாக, வெயில் மண்ணில் படுவதே, ஒரு தனி அழகுதான். அதை எல்லாம் இனி நினைத்துப் பார்க்கவே முடியாதே. எங்கள் பக்கத்து வளவில், மகன், பெரிய மாடி வீடு கட்டியிருக்கிறான். எவ்வளவோ தடவை சொல்லியும், நானும் மீனாட்சியும் எங்கள் வீட்டிலேயே இருந்தோம். அது எங்களுக்குப் பழகிவிட்டது. எங்கள் வயோதிபக் காலத்திற்கு, அது ஒரு சுதந்திரமான வீடாக இருந்தது.

ங்கு, துப்புவது, மூக்குச் சீறுவதெல்லாம் வீட்டுக்குள்ளேயே செய்வது, மிகவும் கஸ்டமாக இருக்கிறது. வெளியில் துப்பக்கூடாதாம். வீதிகளில், அடிக்கடி குப்பை போடுவதற்கென, குப்பை பரல்கல் வைக்கப்பட்டிருக்கும். சிறு கடதாசியைக்கூட குப்பைத் தொட்டியில் போட, மக்கள் பழகிவிட்டார்கள். தப்பித்தவறி விழும் குப்பைகளை, துப்பரவு செய்வதற்காக வாகனங்களோ அல்லது ஆட்களோ இருப்பார்கள். இங்குள்ள வெள்ளையின மக்கள், நாய்களை அதிகமாக விரும்பி வளர்க்கிறார்கள். ஒரு பிள்ளையை எப்படி வளர்க்கிறோமோ, அந்தளவு கவனமாக நாய்களை வளர்க்கிறார்கள். நாய்களை பெல்ட்டால் கட்டி, கையில் பிடித்தபடி வெளியில் கொண்டு செல்வார்கள். அப்போது, கையில் பொலித்தீன் பைகள் வைத்திருப்பார்கள், ஆரம்பத்தில், எனக்கது விளங்கவில்லை, பின்னர் மகன்தான் சொல்லித் தந்தான், நாய்களைக் கூட்டிச் செல்கிறபோது, அவை ஏதாவது அசிங்கம் செய்தால், அதை அப்படியே, அந்தப் பையால் அள்ளி, அதை அங்காங்கே, நாய்க்கழிவுகளுக்கென்றே "பின்கள்" வைக்கப்பட்டிருக்கும், அதில் போடுவார்களென்று. இது இங்கே ஒரு சட்டமாகவே இருக்கிறது. எனக்கு, அதனைப் பார்க்கவே பெரிய அருவருப்பாக இருந்தது. ஆனால் யோசித்துப் பார்க்கையில், எவ்வளவு தூரம், நாட்டைச் சுத்தமாகப் பேணுகிறார்கள் என்று ஆச்சரியமாகவே இருக்கிறது.

தொடரும்..........*********************************************************************************** பூனைகளின் எதிரி???..... அப்போ எப்பூடி எனக்கு இவரைப் புடிக்கும் சொல்லுங்கோ??

***********************************************************************************
பின் இணைப்பு:

மக்கள்ஸ்ஸ்......
தீயனவற்றைப் பார்க்காதீங்கோ....(நிலவு பார்க்கலாம்)
தீயனவற்றைக் கேளாதீங்கோ....(காதில் இலவம் பஞ்சை அடையலாம்)
தீயனவற்றைப் பேசாதீங்கோ....(பெரீஈஈ அமெரிக்கன் பேர்கரை வாயில் திணிக்கலாம்). ஏதோ என்னாலான ஒரு சிறிய உதவி....


எனவே இப்படி மகிழ்ச்சியாக இருப்போம்....(கண்படுத்திடாதீங்கோ....)

****************************************************************************************************************************************************************
“ஒருவருக்குப் புத்திமதி கூற விரும்பினால்,
தனிமையில் கூறுங்கள்,
ஒருவரைப் புகழ விரும்பினால்,
நாலுபேர் மத்தியிலே புகழுங்கள்”
********************************************************************************

27 comments :

 1. //ஒருவரைப் புகழ விரும்பினால்,
  நாலுபேர் மத்தியிலே புகழுங்கள்”//

  பூஸார் ரொம்ப்ப அழகுஊஊஊஊஊஊஊ

  ReplyDelete
 2. உண்மையில் இது பேபி அதிராவா???

  கதை ரொம்ப நல்லா போகுது. மேடம் ரொம்ப பிசி போல! ஒரு மெயில் கூட இல்லை.

  ReplyDelete
 3. //செந்தமிழ் செல்வி said...

  உண்மையில் இது பேபி அதிராவா???//

  கண்ணால் கான்பது பொய்!!., காதால் கேட்பது பொய் கிட்னியால் யோசிப்பது மெய்.

  ReplyDelete
 4. நினைவு தொடரட்டும். ;)

  என் அடி மனதில இருக்கிறதெல்லாம் கலக்கி மேல கொண்டுவந்திட்டீங்க மொப்ஸ். நானும் எழுதப் போறன்ன். ;)

  ReplyDelete
 5. தாத்தாவின் வெளிநாட்டு வாழ்க்கை படுசுவாரஸ்யமாக சொல்லிவருகிறீர்கள் அதிரா.பார்த்தீர்களா?உங்களைமாதிரியே ஜெய்...லானியும் கதைக்க ஆரம்பித்துவிட்டார்.ஹ்ம்ம்ம்...இவ்வளவு நாள் பழகியும் எனக்குத்தான் வரவில்லை இன்னும்.அதிரா..நிஜமாலுமே நீங்கதானா?ம்ஹும்..கற்பூரம் ஏற்றி நீங்க சத்தியம் பண்ணாலும் நான் நம்பப்போவதில்லை.

  உங்கள் பொண்ணு...ஹ்ம்ம்..அதிராவுக்கு பொண்ணு இருப்பதாகவும் தெரியவில்லை.யாருன்னு சொல்லுங்க.இல்லேன்ன்னா தலை வெடிச்சுடும்

  ReplyDelete
 6. மிக்க நன்றி ஜெய்..லானி.. //பூஸார் ரொம்ப்ப அழகுஊஊஊஊஊஊஊ// புல்லாஆஆஆஆஅ அரிக்குதெனக்கு... உங்களமாதிரி பெரிய மனதுள்ளவர்கள், எங்கட வலைப்பூக்களில் மன்னிக்கவும் உலகத்திலேயே ரொம்பாஆஆஆஆஆ குறைவூஊஊஊஊ.

  பூவோட சேர்ந்தால் நாரும் மணம் பெறுமாம் என்பதுபோல, அதிராவோட சேர்ந்ததால நீங்களும் எவ்ளோஓஓஓஓ முன்னேறிட்டீங்க பாருங்கோ..... நான் கிட்னியை யூஸ் பண்ணுவதைச் சொன்னேன்... முறைக்கப்படாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

  ReplyDelete
 7. உண்மையில் இது பேபி அதிராவா???// செல்வியக்கா இதென்ன இது இடையில போய் அதிராவைச் சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டீங்க??:(. நீங்களே சந்தேகப்படலாமோ? பேர்த் சேர்ட்டிபிகேட்:) அனுப்பட்டோ?.

  மேடம் ரொம்ப பிசி போல! ஒரு மெயில் கூட இல்லை.// இதென்ன செல்வியக்கா இது? நடுச்சந்தியில வைத்து தண்டவாளம் அண்டவாளம் எல்லாம் அவிழ்த்துவிடுறீங்கள்.. பாம்புக்கண், கழுகுக்கண்ணோடெல்லாம் இஞ்ச சனம் உலாவீனம். அது இப்போ போஸ்டல் சேவீஸ் ஸ்ரைக்காம்... என்னில் தப்பில்லே... நன்றி செல்வியக்கா வருகைக்கு.

  ReplyDelete
 8. நன்றி இமா.
  //நானும் எழுதப் போறன்ன். ;)// ஆஆஆஆ.... இதிலயும் எனக்குப் போட்டியாகவோஓஓஓஓஓஓ... கிக்..கிக்..கீஈஈஈஈ.

  எழுதுங்கோ இமா ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன், நீங்கள் என்னைவிட அழகாக எழுதுவீங்கள், ஆரம்பியுங்கோ.

  ReplyDelete
 9. நன்றி ஸாதிகா அக்கா.
  //உங்களைமாதிரியே ஜெய்...லானியும் கதைக்க ஆரம்பித்துவிட்டார்// பின்னே சும்மாவோ ஸாதிகா அக்கா... டெய்லி உங்கட புளொக்கில் ஜெய்..லானிக்கு ஃபிறீஈஈஈஈஈ ட்ரெயினிங்கெல்லோ கொடுக்கிறேன்.. ஜெய்..லானியை முறைக்கவாணாம் எனச் சொல்லுங்கோ ஸாதிகா அக்கா, முறைக்கிறபோது அந்த சொக்கலேட் பொம்மை?? மாதிரியே என் கண்ணுக்குத் தெரிகிறார்....

  அதிரா..நிஜமாலுமே நீங்கதானா?// ஸாதிகா அக்கா.. சந்தேகக்கோடு இது சந்தோஷக்கேடு... இன்னுமா அதிராவை நம்பவில்லை.. நம்புங்கோ ஸாதிகா அக்கா.. கற்பூரம் வேண்டாம் என்றிட்டீங்கள்..... அப்போ குழல்புட்டும் சிக்கின் பிரட்டல் கறியும் சாப்பிட்டு அல்லது பொரித்திடித்த சம்பல் சாப்பிட்டு நிரூபிக்கட்டோ???? கடவுளே இனி ஜலீலாக்கா சீனவெடியோடுவருவதற்குள் மீஈஈஈஈஈ எஸ்ஸ்ஸ்ஸ்... ஒபாமா காப்பாத்துங்கோ...

  ReplyDelete
 10. ///உண்மையில் இது பேபி அதிராவா???// செல்வியக்கா இதென்ன இது இடையில போய் அதிராவைச் சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டீங்க??:(. நீங்களே சந்தேகப்படலாமோ? பேர்த் சேர்ட்டிபிகேட்:) அனுப்பட்டோ?.///
  அதிரா உங்கட ஊரில் பர்த் செர்டிபிகேட்டில் போட்டோவும் ஒட்டிக்கொடுக்றாங்களா என்ன????

  ReplyDelete
 11. அப்பா தாத்தாவின் வாழ்க்கை எல்லா வெளிநாடுகளில் வாழும் தாத்தாக்களின் மொத்த மனதும் காண்பிக்கிறது,

  அய்யோ நாய கூப்பிட்டு போன கூட பையுமா.... மீ த எஸ்கேப்பு//////

  ஜெய்லாணிக்கு நல்ல டிரெயினிங்க் கொடுத்து அவருக்கும் பூனை கிட்னி எப்படி யூஸ் பன்ணனும் சொல்லி கொடுத்துட்டீங்கலா. அப்ப எனக்கு மட்டும் தன் கிட்னிய யூஸ் பண்ண தெரியலையோ.

  பேபி அதிரா ரொம்ப ஜ்மாட்டு....
  ஐய்யோ ஜெய்லாணி காதுல‌ வேற‌ மாதிரி விழ‌ப்போகுது, ரொம்ப‌ ஸ்மாட். so sweet,


  கதைய , விளம்பரம், இடைவெளியுடன் ரொமப் ஸ்வாரசியமாக கொண்டு சென்று இருக்கீங்க.

  இமா எழுதுங்க படிக்க ஆவலாய் உள்ளென். எழுத தான் வரல இபப்டி படித்த்தாவது எப்படி எழுதுவது கத்துக்கலாம்./.

  ReplyDelete
 12. அன்புள்ள அதிரா!

  உங்களுக்கு எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 13. //ஜெய்..லானியை முறைக்கவாணாம் எனச் சொல்லுங்கோ ஸாதிகா அக்கா, முறைக்கிறபோது அந்த சொக்கலேட் பொம்மை?? மாதிரியே என் கண்ணுக்குத் தெரிகிறார்....//

  நீங்க என்ன ,என்ன மாதிரி வேண்டாலும் கதைங்கோ , ஆனா சொக்கலட் மாதிரின்னு மாட்டம் வானாம் . பின்ன சொக்லட்ட கண்டா பாவிக்க ஏலாது. இப்ப்டி கதைப்பேன்னு எண்டா நெனச்சேள். நெவர் .

  //அய்யோ நாய கூப்பிட்டு போன கூட பையுமா.... மீ த எஸ்கேப்பு//////

  அவ்வளாவு பெரிய்ய்ய்ய்ய்ய்ய பையா வேனும்
  பூஸாரை தூக்கி உள்ளே போட

  //அதிரா உங்கட ஊரில் பர்த் செர்டிபிகேட்டில் போட்டோவும் ஒட்டிக்கொடுக்றாங்களா என்ன????//

  போட்டோ கலரா இல்ல நெகட்டிவ்வா?

  ReplyDelete
 14. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. அருமையான கதை... சித்திரை திருநாள் வாழ்த்துகள்.

  //உண்மைதான் நட்பை விலைக்கு வாங்க முடியாது//

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 16. அதிரா உங்கட ஊரில் பர்த் செர்டிபிகேட்டில் போட்டோவும் ஒட்டிக்கொடுக்றாங்களா என்ன????// ஸாதிகா அக்கா, இதென்ன இது புதுக்கதையாக இருக்கு? உங்களிடத்தில் அப்பூடி இல்லையோ?:):).

  இமா said...
  ;) x 25/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 17. மிக்க நன்றி ஜலீலாக்கா.
  ///பேபி அதிரா ரொம்ப ஜ்மாட்டு....
  ஐய்யோ ஜெய்லாணி காதுல‌ வேற‌ மாதிரி விழ‌ப்போகுது, ரொம்ப‌ ஸ்மாட். so sweet,//// தங்கியூஊஊஊஊஊஊ, உங்களுக்குப் புரியுது.....

  ///இமா said...
  u 2 Jalee!! ;)/// ஜலீலாக்கா என்ன இது யூ ரியூப்பிலயும் கலக்கிறீங்களோ? எப்ப தொடக்கம்? எனக்குத் தெரியாதேஏஏஏஏஏஏஏஏஏ:):).

  ReplyDelete
 18. மனோ அக்கா.. தேடிவந்து வாழ்த்துச் சொல்லியிருக்கிறீங்கள் மிக்க நன்றி.

  ReplyDelete
 19. அவ்வளாவு பெரிய்ய்ய்ய்ய்ய்ய பையா வேனும்
  பூஸாரை தூக்கி உள்ளே போட/// பிளீஸ்ஸ் ஜெய்..லானி... பையுக்குள்ள நல்ல பஞ்சுபோன்ற மெத்தை விரித்து போர்க்க பிங்கலரில அழகான சீட்டும் வேணும்.... இல்லாட்டில் பூஸாருக்கு நோகும்.... சோஓஒ சொவ்ட்..... நான் பூஸாரைச் சொன்னேன், கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

  போட்டோ கலரா இல்ல நெகட்டிவ்வா?/// அப்பாட்டைக் கேட்டுத்தான் சொல்லவேணும், ஏனெனில் நான் அப்போ பேபிதானே???:):).

  பேபி அதிராவுக்கு வாழ்த்துச் சொன்னதுபோல தெரிஞ்சுது..... இப்ப காணேல்லை:(.

  தேடி வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ஜெய்..லானி.

  ReplyDelete
 20. மிக்க நன்றி ஹைஷ் அண்ணன். புதுவருஷப்பிறப்பிலே நீங்கள் பூக்களை வலம்வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 21. அதிரா, தாத்தா கதை நல்லா இருக்கு. அவரை கொஞ்சம் வேகமாக நடக்கச் சொல்லுங்கோ. வீல் chair இல் வைத்து தள்ளி விடுங்கோ.

  அதெப்படி எங்கடை நாட்டில் இருந்து ஒபாமாவை சுட்டீர்கள், பிறகு புஷ், எல்லாவற்றையும் விடக் கொடுமை பேபி அதிரா என்று சொல்லி பேபி வாணியின் படத்தையும் சுட்டு போட்டிருக்கின்றீர்கள்?????? இது நாயமா???? அடுக்குமா?????

  ReplyDelete
 22. வாணீஈஈஈஈஈஈஈ... வரும்போதே சீனவெடி போடுறீங்களே? இது ஞாயமா? நான் யாரைச் சுட்டேன்? எனக்கு துவக்கை எந்தப்பக்கம் பிடிக்கோணும் என்றே தெரியாது, நான் ஒரு அப்பாவி... என்னைப்போய் இப்படிச் சொல்லலாமோ???

  சீ...., ஜெய்.. லானி மட்டும்தேன் ஒயுங்கான பிள்ளை.. மனதார பேபி அதிரா அழகெனச் சொன்னவர், மற்ற எல்லோருக்குமே பொர்..... ஆண்ண்ண்ண்ண்மை...

  நன்றி வாணி.

  ReplyDelete
 23. தாத்தாவின் நினைவுப்பகுதி அருமை,படங்களும் அருமை.நான் அனுப்பிய படத்தை இங்கு பார்க்கின்ற பொழுது அழகோ அழகு.

  ReplyDelete
 24. மிக்க நன்றி ஆசியா.

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.