இது (Aircraft carrier)இரண்டு கிழமைக்கு முன்பு எங்கள் ஆற்றிலே வந்தபோது படம் எடுத்தேன். பின்னாலே இரண்டு ஹெலியும் முன்னாலே ஒரு பிளேனும் நிற்கிறது(பெரிதாக்கிப் பார்த்தால் தெரியும்).
தாத்தாவின் நினைவு தொடர்கிறது...
என் மகனுக்கு நான்கு குழந்தைகள். இரு ஆண்களும், இரு பெண்பிள்ளைகளும் இருக்கிறார்கள். எனக்கும் மீனாட்சிக்கும் திருமணமாகி ஐந்து வருடங்கள் குழந்தை கிடைக்காமல், நாங்கள் செய்யாத வைத்தியமில்லை, போகாத கோயிலில்லை. எமக்கு அந்தநேரம், ஆறுதல் தந்து, எம்மை மனிதராக வாழத் தைரியம் கொடுத்தது, எமது உறவுகளும், ஊர் மக்களுமே. பின்னர்தான் எம் மகன் பிறந்தான். அத்துடன் நிறுத்திக் கொண்டோம் என்று சொல்ல மாட்டோம், அவனுக்குப் பிறகு குழந்தைகள் கிடைக்கவில்லை.
பல இடங்களில் பார்த்திருக்கிறேன், தனிப்பிள்ளைகளாக இருப்பவர்கள், தனிமையில் வளர்வதால், அவர்களுக்கு, விட்டுக்கொடுக்கும் தன்மை, பகிர்ந்துகொள்ளும் தன்மை என்பன குறைவாகவே இருக்கிறது. பெற்றோரும், ஒரு பிள்ளை என்று, மொத்த செல்லத்தையும் அப்பிள்ளைமேல் பொழிந்து, பொத்திப் பொத்தி வளர்ப்பதால், பிள்ளை பெரியவர் ஆனால்கூட, தோல்வியைக் கண்டு துவண்டு போகிறது. இது எனது உடை, எனது விழையாட்டுப் பொருட்கள், யாரும் எடுக்கக்கூடாது, வைத்த பொருள் கலையாமல் அதிலேயே இருக்கவேண்டும். இப்படியெல்லாம் பழக்கப்பட்டு விடுகிறது. இதனால், திருமணத்தின் பின்னரும், அனுசரித்துச் செல்லும் தன்மைகள் குறைகிறது.
இவற்றை எல்லாம் மனதில் கொண்டே, நாங்கள் மகனைப் பூட்டி வைத்து வளர்க்கவில்லை. ஒரு சொக்கலேற் வாங்கிக் கொடுத்தாலும், அதை அவனது நண்பர்களுக்கும் கொடுத்தே உண்ணவேண்டும் எனச் சொல்லிக் கொடுத்தோம். "ஆடையைப் பார்த்து எடை போடக்கூடாது, சேற்றிலேதானே செந்தாமரை மலர்கிறது" என்பதைப் புரியவைத்து, தகுதி, தராதரம் பார்க்காமல் எல்லாப் பிள்ளைகளோடும் சேர்ந்தே விளையாடவேணும் என்பதைச் சொல்லிக் கொடுத்தோம். மொத்தத்திலே, நங்கள் அவனுக்குப் பெற்றோராக மாத்திரம் இராமல், நல்ல நண்பர்களாகவும் இருந்து, நன்கு படிக்க வைத்து, இன்று நல்ல ஒரு பதவிக்கு வர வழிவகுத்துக் கொடுத்துவிட்டோம். அவனது விருப்பத்தோடும், எங்களது ஆசியோடும், எமது ஊர்ப்பெண்ணையே முடித்து வைத்தோம். மீனாட்சியினதும், என்னுடையதும் வழிநடத்தல் வீணாகவில்லையென்பது, இன்று என் மகன், தன் குடும்பத்தை அக்கறையோடும், அன்போடும் வழிநடாத்தும் விதத்திலே புரிந்து, நான் பெருமைப்படுகிறேன்.
என் மருமகள், நாலாவது வாரிசை வயிற்றிலே சுமந்தபோது ஒருநாள், போனிலே மகனுடன் கதைத்தபோது, மீனாட்சி கேட்டாள், "தம்பி!! தூர தேசத்திலே, தனியாக இருக்கிறீங்களே, எப்படி வளர்க்கப்போறீங்கள்?, ஊரிலே என்றால் பறவாயில்லை, நாங்கள் இருக்கிறோம், பார்த்துக்கொள்வோம்" என்று. அதற்கு மகன் சொன்னான், " அம்மா!! நான் தனிப்பிள்ளையாக இருந்தேன் ஆனால், ஊர் என்பதால், என்னைத் தனிமை தெரியாமல் வளர்த்துவிட்டீங்கள், வெளிநாட்டில் அப்படி வளர்க்க முடியாதம்மா, வீட்டுக்குள்லேதானே இருந்து வளர்கிறார்கள், நாம் அதிகம் கஸ்டப்பட்டாலும் பறவாயில்லை, பிள்ளைகள் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பார்களே என்றுதானம்மா" என்று. இங்கு வந்த பின்னரே எனக்கும், மகன் சொன்னது சரியென்றே படுகிறது.
வீட்டுக்குள்ளேயே சேர்ந்து விழையாடுகிறார்கள். ஆண்பிள்ளைகளுக்கு ஒரு அறையும், பெண்குழந்தைகளுக்கு ஒரு அறையும் கொடுக்கப்பட்டுள்ளது. தங்களது அறையை, தமது விருப்பத்திற்கேற்ப சோடித்து வைத்திருக்கிறார்கள். இரவு எட்டுமணியானதும், தத்தமது கட்டிலுக்குப் போகப் பழகியிருக்கிறார்கள். காலையில்தான் கொஞ்சம் கஸ்டப்பட்டு எழும்புவார்கள். அதுவும் குளிர்காலத்தில், பார்க்கப் பாவமாக இருக்கும். அவர்களின் எடையைவிட, அதிகமாக உடையணிந்து வெளிக்கிடுவார்கள்.
ஆனாலும் பள்ளிக்கூடம் போவதென்றால், மிகவும் பிரியமாகப் போகிறார்கள். உடல் நலமில்லை என்றாலும், வீட்டில் நிற்க மறுக்கிறார்கள். அதற்குக் காரணம், பாடசாலையில், படிப்பை மட்டுமே திணிக்காமல், பாதி படிப்பு, பாதி விழையாட்டாக நடாத்துகிறார்கள். அத்துடன் ஆசிரியர்களும், மிகவும் அன்பாகவும், பொறுமையாகவும் எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்துப் புரிய வைக்கிறார்களாம். வீட்டு வேலைகூட அதிகம் கொடுப்பதில்லை. பள்ளிப்படிப்பே போதுமென்கிறார்களாம். ஹை ஸ்கூல் போனபின்னரே, படிப்பு அதிகமாகுமாம். சிறு வயதிலேயே அதிகமாகப் படிப்பைத் திணித்து, வெறுப்பேற்றிடக் கூடாதென்று எண்ணுகிறார்கள்.
ஓ.... சுவர் மணிக்கூட்டிலுள்ள குருவி, வெளியே வந்து கூவி, இரவு பதினொரு மணியாகிவிட்டதை அறிவிக்கிறது. எனக்கு மீண்டும் ஊர் ஞாபகம் வந்துவிட்டது. எங்கள் ஊரிலே, எது குறைவாக இருக்கிறதோ தெரியாது, ஆனால் அதிகமிருப்பது கோயில்கள்தான். அங்கே இருந்த காலங்களில், நான் மணிக்கூட்டில் நேரம் பார்ப்பதில்லை. அதிகாலை நாலரை மணிக்கு, கந்தசாமியாற்ற மணி அடிக்கும். அதைத் தொடர்ந்து, பிள்ளையாற்ற மணி, ஐந்து மணியாகிவிட்டதைத் தெரிவிக்கும். அந்த மணியோசையோடு நான் எழுந்துகொள்வேன். அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு நேரமும் ஒலிக்கும் மணியோசை நேரத்தை அறிவித்தபடியே இருக்கும்.
இங்கு வந்ததிலிருந்து, மணியோசை என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. எனது வயோதிபக் காலத்தில் எல்லாவற்றையுமே இழந்துவிட்டமாதிரி ஓர் உணர்வு அடிக்கடி வந்து போகிறது. ஆனால் எது எப்படி இருந்தாலும், என் மகன் ஒருநாள் சொன்னான், "அப்பா!! ஊரை நினைத்துக் கவலைப்படாதயுங்கோ, தமிழே தெரியாமல் இருந்த என் பிள்ளைகள், இப்போ நீங்கள் வந்தபிறகுதான், நன்கு தமிழ் கதைக்கிறார்கள், அதை நினைத்துப் பெருமைப்படுங்கோ" என்று, அந்த ஒரு வார்த்தை எனக்குப் போதும், எத்தனை துன்பங்களையும், இதற்காக நான் தாங்கிக் கொள்வேன். என மனதிலே எண்ணியபடி, என் அறையை நோக்கிச் செல்கிறேன் நித்திரைக்காக.
------------- முற்றும் -----------------
இது நான் முதன் முதலில் பார்த்த.... சீ...சீ...
முதன் முதலில் தொட்ட.... சே..சே... என்னப்பா இது,
முதன் முதலில் எங்கள் வீட்டில் பூக்கத் தொடங்கியிருக்கும் டஃபடில்(Daffodils) பூவிதூஊ.....
இப்போ, இங்கு, எங்கு பார்த்தாலும்(காடு, மேடு, ரோட்டோரம்) டபடில் பூ மயமாகவே அழகாகக் காட்சி தருகிறது.
இது அன்புச் ஸாதிகா அக்கா, என் கொசு மெயிலுக்கு அனுப்பியது... எதிரிக்கும்(கவனிக்கவும்) கப்கேக்கைக் கொடுத்து உண்ணும் பரம்பரையாக்கும் எங்கட பரம்பரை:).
பின் குறிப்பு::
இதைப் படிச்சிட்டு, பதில் போடாமல்,பேசாமல் மூடிட்டுப் போனீங்களே எண்டால், ஒரு மாத்தத்துக்குள் தாத்தா அல்லது பாட்டியாகிடுவீங்களாம். பூனை சொன்னால் பலிக்குமாமே? முடிவு உங்கட கைகளில்.
------------------------------------------------------------------------------------------
“உண்மையான நண்பர்கள், மறந்துவிடுவார்கள்,
நம்மையல்ல நாம் விட்ட தவறுகளை”
------------------------------------------------------------------------------------------
|
Tweet |
|
|||
//எதிரிக்கும்(கவனிக்கவும்) கப்கேக்கைக் கொடுத்து உண்ணும் பரம்பரையாக்கும் எங்கட பரம்பரை:).//
ReplyDeleteஇதுல பூஸார் நீங்க எதிரி எலியா !!எலியை விட ஸாதிகா கேக் ருசி அதான் கவனிக்கல
//ஒரு மாத்தத்துக்குள் தாத்தா அல்லது பாட்டியாகிடுவீங்களாம். பூனை சொன்னால் பலிக்குமாமே? முடிவு உங்கட //
ReplyDeleteஇப்படி பயங்காட்டியா கமெண்ட் வாங்கறது. மங்குக்கு இப்பவும் வடை போச்சி.
//“உண்மையான நண்பர்கள், மறந்துவிடுவார்கள்,
ReplyDeleteநம்மையல்ல நாம் விட்ட தவறுகளை”//
அதுபேருதாங்க உன்மையான நட்பு.
//முதன் முதலில் தொட்ட.... சே..சே... என்னப்பா இது,
ReplyDeleteமுதன் முதலில் எங்கள் வீட்டில் பூக்கத் தொடங்கியிருக்கும் டஃபடில்(Daffodils) பூவிதூஊ....//
கையில் மூனு பூ இருக்கு.கிக்....க்கி...க்கிஈஈஈஈஈஈஈ
தாத்தா நினைவுகள் ரெம்பவும் அருமை. அடுத்தது பாட்டி கதை எப்ப வரும்.
ReplyDeleteஆ... ஜெய்..லானி, இம்முறை வடை உங்களுக்கு...அதுவும் சட்னியோட, ஆயாவை எம்பிக்கு.... இல்லயில்லை நான் ஒண்ணுமே சொல்லல்லே.
ReplyDeleteகையில மூணு பூவாஆஆஆஆஆஆஆஆ? சோப் எல்லாம் போட்டு வடிவாக்கழுவியும் பார்த்தேன் எனக்குத் தெரியலியே:(.. நான் கையைச் சொன்னேன்:).
பாட்டியும் வந்திட்டா ஜெய்..லானி, இனித் தாத்தா பாட்டியின் மகனைத்தான் எழுதோணும்... ஆங்... ஐடியா வந்திடிச்சீஈஈஈஈ..
மிக்க நன்றி ஜெய்..லானி.
கருத்துப் பறந்து வருகிறது. ;)
ReplyDeleteநல்லா எழுதுறீங்கள் அதிரா.
தமிழே தெரியாமல் இருந்த என் பிள்ளைகள், இப்போ நீங்கள் வந்தபிறகுதான், நன்கு தமிழ் கதைக்கிறார்கள், அதை நினைத்துப் பெருமைப்படுங்கோ" அதிரா இந்த இடத்தில் என்னை தொட்டூட்டீங்க.அருமையான கதை.அந்த மணியடிக்கும் நிகழ்ச்சி நெஞ்சத்தை நிறைத்தது.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSuper Athira akkaa..geno likes happy ending stories.
ReplyDeletedaffodil is beautiful.Expecting more flowers from your garden.
Happy spring! :) :) :)
சூப்பர் அதிரா.ஆசியாக்காவுக்கு ஏற்பட்ட உணர்வுதான்(மன்னிக்க ஆசியா) எனக்கும் ஏற்பட்டது. தொடர்ந்து எழுதுங்க அதிரா.
ReplyDelete*உங்க மலர்(க் கரம்)ரெம்ப அழகு.*
tulip,rose தான் நான் வைத்திருக்கிறேன்.
நன்றி இமா. ஆமா.... என்ன கருத்து??? ஓ... நீங்கட கருத்தோ??? ரொம்ப தாங்ஸ்ஸ்ஸ்ஸ். அப்போ நீங்க இப்போதைக்கு பாட்டியாகமாட்டீங்கள்.... ஆனால் சிலர் படிச்சிட்டும் பதில் இன்னும் போடேல்லை.... கெதியில தாத்தா.... பாட்டியாகப் போகினம்..... ஆ.... கிக்..கிக்...கிக்...
ReplyDeleteஆசியா மிக்க நன்றி. எனக்கும் அந்த மணியடிப்பதை நினைத்தாலே இப்பவும் என்னவோ செய்யும் நெஞ்சுக்குள்.... ஒன்றை இழந்துதான் இன்னொன்றைப் பெறவேண்டியிருக்கு. நான் ஊரைச் சொன்னேன்.
ReplyDelete;)
ReplyDeleteSuper Athira akkaa/// Mee..??? Thanks Geno Thanks..... according to the change in place "Thaaththa" has changed his mind, so the ending is happy.
ReplyDeleteI have some of our garden pictures from last year. I will add these soon to my mops(picasa) album..... please!! check "every minute":)...... ohhhh Geno... don't bark.... meee essssssssssss.
Thanks Geno.
கடவுளே.... யாராவது இமாவைப் பிடிச்சுத்தாங்கோ... போற வழியில புண்ணியம் கிடைக்கும் மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்... அல்லது பிளீஸ்ஸ்ஸ்ஸ் இந்த பாழாப்போன ஸ்மெலியை மன்னிக்கவும் ஸ்மலியை.... கூகிளில்... வெப்பில்.. ஏன் இந்த உலகத்திலிருந்தே... நீக்கிவிடுங்கோஓஓஓஓஓஓஓஓஓஓ.....
ReplyDelete;) x 25
ReplyDeleteநன்றி அம்முலு... கிக்..கிக்...கிக்... நேக்கு வெட்கம் வரப்பார்க்குதூஊஊஊ.... ஏனெனக் கேட்கப்படாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
ReplyDeleteஇங்கு இப்பத்தான் ரியூலிப்ஸ் மொட்டு அரும்புது... என்னிடம் பிங் டயமனும் ரெட்டும் இருக்கு... என் அல்பத்தில் போடுவேன் பாருங்கோ.. ரோஸ்தான் நன்றாகவரும் இங்கத்தைய காலநிலைக்கு, ஆனால் நாம் வளர்ப்பதில்லை. ரோட்டோரமெல்லாம் மே பிளவர் மொட்டை விரித்துக்கொண்டிருக்கு பிங்கலரில் சூப்பரோ சூப்பர்....
இமா said...
ReplyDelete;) x 25//// போ(ட்டா)னால் போகட்டும் போ... இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடாஆஆஆஆஆஆஅ..... இனியும் என்னால முடியாது நான் ஞானியாகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்... ஹைஷ் அண்ணன் எனக்கும் ஒரு மான் தோல் பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே வருகிறேன்.... ஆலமரத்தடிக்கு.... இப்படிக்கு ஞானியாகிட்ட அதிரா:(:(:(.
ஆஹா வடை காலியாடுச்சா
ReplyDelete//இது அன்புச் ஸாதிகா அக்கா, என் கொசு மெயிலுக்கு அனுப்பியது... எதிரிக்கும்(கவனிக்கவும்) கப்கேக்கைக் கொடுத்து உண்ணும் பரம்பரையாக்கும் எங்கட பரம்பரை:).////
ReplyDeleteஆகா , என்னா பரம்பர ? பாவம் உங்க பரம்பரைல விட்டுல வழக்குர பூனை , எலிக்கு சாப்பாடு போடமாட்டிகளா , பாவம் திருடி தின்னுதுக
Atheeeee....s. ;D
ReplyDeleteTissue plz. ;)
ஜலீலாக்கா.. உங்களுக்கில்லாததோ? நீங்க எப்படியும் வருவீங்க எனத் தெரிந்தே, உடனேயே பிரீஸ் பண்ணிட்டேன், இருங்கோ வண் மினிட்டில மைக்குறேவேவ் பண்ணித்தருகிறேன்... ஆனால் ஜெய்..லானிக்கும், எம்பிக்கும் காட்டிடாதீங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.
ReplyDeleteவாங்கோ அமைச்சரே... நாங்கள் பூனை எலிக்கெல்லாம் அப்படியே ட்ரேயுடன் கொடுத்திடுவோம்.... அதாவது கிள்ளிக் கிள்ளிக் கொடுப்பதில்லை:)... அள்ளிக் கொடுக்கும் பரம்பரை:)... புரியவே மாட்டேன் என்கிறதே உங்களுக்கு..... நன்றி எம்பீஈஈஈஈஈஈ.
ReplyDeleteஇமா said...
ReplyDeleteAtheeeee....s. ;D
Tissue plz. ;)/// உங்களுக்கு இப்போ எதுக்கு அவசரமா ரிசூ??. அதிரா ஞானியாகிட்டேன்.... அதனால அடக்கொடுக்கமாத்தான் கதைப்பேன்...
பின்குறிப்பு:
யாராவது சுத்தமான பெரிய டவல் ஒன்று தாங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்... என் மான் தோல் நனைந்துவிட்டது..... எல்லாம் ஆனந்தக்கண்ணீரால்தான்...
அதிரா,
ReplyDeleteகதையின் முடிவு நல்லா இருக்கு. மணி சத்தம் முன்பு நாங்கள் இருந்த வீட்டை ஞாபகப்படுத்தி விட்டது. மார்க்கெட்டில் இருக்கும். மணிக்கொரு முறை அடிக்கும். எழாமலே நேரம் தெரியும். ஒன்றை இழந்தால் தான் ஒன்றைப் பெற முடியும். ரொம்ப சரி.
heyyyyyyyyyyyyyyyyy
ReplyDeletenanthan first comments poduven..
erunga poi padithuvitu varukiren..
eppudi..
complan surya
மிக்க நன்றி செல்வியக்கா. ஊர் வாழ்க்கையும் ஒரு இனிமையான சுகம்தான். இருக்கும்போது தெரிவதில்லை, இழந்தபின்புதான் தெரிகிறது.... இன்னும் நன்கு ரசித்து அனுபவித்திருக்கலாமோ என்று.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநல்வரவு சூரியா... உங்களை யாரெனவே தெரியவில்லையே....
ReplyDeleteபடுத்திட்டுப் போட்டாலென்ன,கொமெண்ட்டைப் போட்டுவிட்டுப் படுத்தாலென்ன எல்லாம் சந்தோசம்தான்.. ஆனால் தமிழில் எழுதினால் இன்னும் சந்தோஷம். தமிங்கிலீஷ் புரிந்துகொள்ளக் கஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்டமாக இருக்கு:(.
ஜெய்லானி பார்த்தால் உடனே அவர் புதுசா ஆரம்பித்துள்ள ஜெய்லானி டீவிக்கு கொண்டு போ விடுவார்,
ReplyDeleteஇன்று ரொம்ப சந்தோஷம். கடிகாரத்தை பார்த்து கொண்டே இருக்கிறேன், நேரம் கழிய மாட்டுங்க்றது
என்ன என்று சொல்லுங்க பார்க்கலாம்.
Jaleela--//ஜெய்லானி பார்த்தால் உடனே அவர் புதுசா ஆரம்பித்துள்ள ஜெய்லானி டீவிக்கு கொண்டு போ விடுவார்,//
ReplyDeleteஎப்பவே சுட்டாச்சி
//இன்று ரொம்ப சந்தோஷம். கடிகாரத்தை பார்த்து கொண்டே இருக்கிறேன், நேரம் கழிய மாட்டுங்க்றது
என்ன என்று சொல்லுங்க பார்க்கலாம்.///
ஸாதிகா வை பாக்க போறீங்களா என்ன .
ஜலீலாக்காஆஆஆஆஆஆ விழுந்திட்டுதோஓஓஓஓஓஒ? லொட்டரியோ??????? அதுக்குத்தான் நேரத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறீங்களோ போய் வாங்க.....? நேக்குக் கையும் ஓடல்லே காலும் ஓடல்லே...
ReplyDeleteஜெய்..லானி ரீவி ஆரம்பித்துவிட்டாரா? கடவுளே... என்னவோ எல்லாம் நடக்குது ஜெய்..லானி வீட்டில.... யாரோ எழுப்பியும் விடுவினமாம் காலையில.....:):).
ஆ... ஜெய்..லானி உதுவோ மற்றர்... ஸாதிகா அக்காவைச் சந்திக்கப்போறாவோஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ???? கடவுளே... ஐஸ் கியூப் நிறையப் போட்டு மோர் ஊத்துங்கோ பிளீஈஈஈஈஈஸ்..... எனக்குத்தான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்...
அதிரா ஜெய்லானிக்கு எப்படியோ மூக்கில் வேர்த்து விடுகிறது.
ReplyDeleteசின்ன நூல் விட்ட வலை பின்னிடுகிறார்.
ஆஹா சந்திப்புன்ன சந்திப்பு அப்படி ஒரு சந்திப்பு.
எல்லோரும் ஒரு குரூப்பா சேர்ந்து கட்டி கொண்டோம், ஆமாம் குட்டி பதிவர் சந்திப்பு பிளாக்கில் போட என்ன எழுத எப்படி எழுத எல்லார் காதிலும் புகை வருமே என்று யோசனைய இருக்கு..
வரும் ஆனா வராது ஆன வர வேண்டிய நேரத்தில் சந்திப்பு பதிவு கண்டிப்பா வரும்.. ஹா ஹா
aa.. ஜலீலாக்கா...///வரும் ஆனா வராது ஆன வர வேண்டிய நேரத்தில் சந்திப்பு பதிவு கண்டிப்பா வரும்.. ஹா ஹா /// கட்டாயம் வரும் வந்திட்டுதூஊஊஊஊஊஊஊஊஊ... நான் புகையைச் சொன்னேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
ReplyDeleteஹாய் தோழி அதிரா..,இன்றுதான் உங்களுடையை தாத்தாவின் நினைவுகளின் மூன்று பகுதியையும் படிக்க முடிந்தது.இல்லை இல்லை இன்றுதான் என் கண்ணில் பட்டது எனலாம்.
ReplyDeleteமிகவும் அழகாக வயோதிக நிலையில் இருக்கும் மனிதரின் உணர்வுகளை எழுதியிர்க்கின்றீர்கள்.அத்தனையும் அனைத்து எண்ணங்களும் இதே நிலையில் இருக்கும் அனைவருக்கும் ஏற்படுவதே....அருமை அதிரா அருமை...
இதோ அடுத்து பாட்டியின் நினைவுகளை படித்துவிட்டு அங்கே உங்களை மறுபடியும் கூப்பிடுகிறேன் சரியா...?
ஒவ்வொரு பதிவின் முடிவிலும் ஒரு அர்த்தமிக்க சொற்றொடர் மிகவும் அருமை ரசித்து படித்தேன்.எனக்கு தேவையான போது யாருக்கேனும் தெரிவிக்க இதை காப்பியடித்து கொள்கிறேன்.நீங்கள் அனுமதி தந்தால்....
பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் பல பல....
அன்புடன்,
அப்சரா.
வாங்கோ அப்ஷரா, முதலில் உங்களுக்கு மிக்க மிக்க நன்றி. என் பழைய பதிவெல்லாம் தேடிப் படிப்பதோடுமட்டுமல்லாமல் பின்னூட்டமும் போடுறீங்க.
ReplyDeleteஉங்கலில் ஒன்று கவனித்தேன்.... எல்லோரு புளொக்கிலும் போய் நன்கு கவனித்து அனுபவித்து எழுதுறீங்க... ஒரு சொல்ல், பாதிச் சொல் என்றில்லாமல் நிறைய விமர்சிக்கிறீங்க.. அது எனக்கு ரொம்ப பிடித்திருக்கு.. அப்படியே தொடர்ந்து நடவுங்க.
தாத்தா கதை படித்தமைக்கு மியாவும் நன்றி.
//.எனக்கு தேவையான போது யாருக்கேனும் தெரிவிக்க இதை காப்பியடித்து கொள்கிறேன்.நீங்கள் அனுமதி தந்தால்....//
என்ன இப்படிச் சொல்லிட்டீங்க, என்னைப்பொறுத்து எதுவும் எமக்கு சொந்தமானதல்லவே.... யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்....:).
மனதை உறுத்திய கதை. அனுபவத்திலிருந்து அல்லது கேட்ட செய்திகளிலிருந்து எழுதியதுபோலவே தோன்றியது.
ReplyDeleteஇந்தமாதிரி, புலம் பெயர்ந்த, அதுவும் கலாச்சாரம் முழுவதுமாக மாறுபட்ட இடத்தில் இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஓராயிரம் கதைகள் இருக்கும். கொஞ்சம் நினைத்தால் பாவமாகத்தான் இருக்கும். அவர்களுக்கு மட்டும் வேர் சொந்த நாட்டில், ஒழுங்கில், வீட்டில் இருக்கும். அவர்களது பிள்ளைகளுக்கு....
வாங்கோ நெல்லைத்தமிழன்... ஆவ்வ்வ் படிச்சு கொமெண்ட்டும் போட்டு விட்டீங்கள் மிக்க நன்றி. உண்மைதான், இது காதில் கேட்ட, அறிந்த சம்பவங்களை வைத்தே கதை எழுதினேன். இதன் முதலாம் பாகத்தை இங்கு இணைக்க தவறிவிட்டேன், நேரமுள்ளபோது இணைத்து விடுகிறேன், படிப்போருக்கு பயன்படும்.
ReplyDeleteமிக்க நன்றி.