======================================
நம் காதலைக் கொன்று
தன் காதலை உயிர்ப்பிக்கிறாரே
அவர் காதலாவது நிலைக்கட்டும்
.... ஒரு பூவையின் சே..சே.. டங்கு ஸ்லிப்பாகுதே:) ஒரு பூவின் புலம்பல்:)).. கவித.. கவித.. படைத்தவர்.. கவிப்பேரரசு.. கவிமாமணி.. அதிரா:).
========================================================
காதலன்: அன்பே உனக்காக நான் உயிரையும் தரத் தயாராக இருக்கிறேன்..
காதலி:. உயிர் தருவது இருக்கட்டும், முதல்ல என்னிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தாங்க அது போதும்:)
========================================================
========================================================
ஒருவர் மிக மிகக் குண்டாகிட்டாராம், அப்போ உடலைக் குறைக்க முடியல்லியே எனும் கவலையில் இருந்தபோது, அமெரிக்காவுக்கு செல்லும் வாய்ப்புக் கிடைச்சதாம்... அங்கு போனதும் “உடல் எடையைக் குறைக்க வேண்டுமோ?.. வருக வருக” என ஒரு போர்ட் கண்டு, உள்ளே போய் விசாரிச்சாராம்.
அங்கிருந்த பெண் சொன்னாராம் இது ஜாலியாக விளையாடி எடையைக் குறைப்பது, சாதாரண ரிக்கெட் எனில் 50 டொலர்கள்.. லக்ஷரி எனில் 200 டொலர்கள் என.
இவர் நினைத்தார், சாதாரணமே போதும், எதுக்கு அவ்ளோ பணம் செலவு பண்ணோனும் என 50 டொலர் ரிக்கெட்டை வாங்கினாராம்.
சற்று நேரத்தில் அவரைச் சொன்னார்களாம் சரி உள்ளே போங்கள் என. இவர் உள்ளே போனாராம், பெரிய ஹோல் இருந்ததாம்.. அங்கு மேசை கதிரை எல்லாம் தலைகீழாக உருண்டு அலங்கோலாமாக இருந்ததாம்.. தூரத்தே பார்த்தால் ஹோலின் மூலையில் ஒரு 18 வயசு பெண்.. அரை குறை ஆடையுடன் .. மிக அழகாக இவரைப் பார்த்து கூப்பிட்டதாம்..
இவரும் அப்பெண்ணைத் தொடலாம் என ஓடினாராம்.. அப்பெண் அக் ஹோல் முழுவதும் சுற்றிச் சுற்றி ஓடினாவாம்.. இவரால் பிடிக்க முடியவில்லையாம்.... களைச்சுப் போய் வெளியே வந்தாராம்.
வெளியே வந்தவருக்கு ஆசை அதிகமானதாம்.. அதாவது ஓடினறி ரிக்கெட்டுக்கே இப்படி எனில் லக்ஷரி ரிக்கெட்டுக்கு எப்படி இருக்கும் எனும் ஆசையில் போனால் போகுதென, லக்ஷரி ரிக்கெட் தாங்கோ என கேட்டு வாங்கிக்கொண்டு உள்ளே போனாராம், அதேபோல உள்ளே பெரிய ஹோலில் கதிரை மேசை எல்லாம் உருண்டு பிரண்டு அலங்கோலமாகக் கிடந்ததாம்.. ஆனா மூலையிலே ஒரு 90 வயது ஆச்சி.. அதே அரை குறை ஆடையுடன்.. இவரைத் துரத்தத் தொடங்கியதாம்:).. ஆச்சியிடம் இருந்து தப்பினாலே போதும் என இவர் ஓடோடெண்டு ஓடி தப்பி வெளியே வந்தாராம்:).. ஆசை படுத்தும் பாடு:).[தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள்.]
========================================================
========================================================
கணவன்: நான் ஏன் சொல்லணும்
மனைவி: நீங்க அவர் பிரண்டுதானே
கணவன்: அவன் மட்டும் எனக்குச் சொன்னானா என்ன?:)
*******************************
அடுத்த வீட்டுக்காரர்: சார்.. பக்கத்து வீட்டுக்காரர் சம்சாரம் காணாமல் போய் மூணு மாசமாகுது
இன்ஸ்பெக்டர்: அதுக்கு ஏன்யா பொலீஸ் ஸ்ரேஷனுக்கு, நீ வந்து புகார் குடுக்கிற?
அடுத்த வீட்டுக்காரர்: சார்.. அந்த ஆளு புகாரே குடுக்காம சுத்திட்டு இருக்கார் சார்:))
========================================================
சத்து இருங்கோ... தொண்டை வரண்டு போச்சு:) கொஞ்சம் கூலா ஊஸ்:) குடிச்சிட்டு வாறேன்:)
========================================================
===================================
இந்த இடத்தில நான் ஜிரிக்கல்ல.. ஜிரிக்கல்ல:)) மீ ரொம்ப நல்ல பொண்ணு:))
=================================================================
கணவன்: நெஞ்சு வலிக்குது.. டாக்டருக்குப் ஃபோன் பண்றியா?
மனைவி: உங்க ஃபோன் பாஸ்வேர்ட் சொல்லுங்க
கணவன்: இல்ல இப்ப பறவாயில்ல.. ஃபோன் பண்ண வேண்டாம்..
================================================================
ஊசிக்குறிப்பு:
======000======
அஞ்சூஊஊஊஊஊஉ அஞ்சூஊஊஊஊஊஉ வாணாம் வாணாம் எந்த விபரீத முடிவும் எடுத்திடாதீங்க.. கீழே இறங்குங்கோ.. பீஸ்ஸ்ஸ் நீங்க தேவதைக் கிச்சினில் போடும் சமையல் எல்லாம் நாங்க வாயை மூடிக்கொண்டே:) சாப்பிடுறோம்ம்:)).. இறங்கிடுங்கோ அஞ்சூஊஊ:).
ஊஞ்சல் ஆடுபவர் ஆஷா.. ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே:)) ஆடுபவர் அஞ்சு:)).. இனிமையான சுவிட் 16 குரலில் பாடுபவர் உங்கள் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய ஆஷா போஸ்லே அதிரா:)
வீடியோ இங்கு தெரியாட்டில் இந்த லிங்கில் பாருங்கோ பிளீஸ்ஸ்..
https://youtu.be/J4IZj8pxcXc
நன்றி.. இப்படிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா:)
======_()_======
|
Tweet |
|
|||