நல்வரவு_()_


Saturday 31 August 2013

துன்பங்களிலிருந்து விடுதலை பெற:)

ஆவ்வ்வ்வ் என்னா இது இப்பூடிக் கிரவுட்டாக் கிடக்கே...:)).. உஸ்ஸ்ஸ்.. இவ்ளோ பேருக்கும் துன்பமா?:) சரி சரி எல்லோருக்குமே விடுதலை கிடைக்கும்:).. முதல்ல கியூ வரிசையா:) நில்லுங்கோ:).. அதாரது இடிக்கிறது?.. அக்கா அக்கா அந்தக் குட்டித் தம்பியை இடிக்காதையுங்கோ:).. அண்ணா.. உங்களைத்தான்.. கொஞ்சம் அரக்கி நில்லுங்கோ:)..ஹையோ ஆச்சி.. ஏன் இடையில நுழையுறீங்கள்..:) எல்லோருக்கும் விடுதலை வாங்கித் தருவன்:).. துன்பங்களில் இருந்துதான்ன்.. நம்புங்கோ அதிராவை:))
ஸ்ஸ்ஸ் தியானத்தில் இருக்கும்போது டிஸ்ரேப் பண்ணப்பூடாது:) .. இப்போ நான் பேஷனலாப் பேசுகிறேன்ன்.. ஆண்டவனோடு:))
சரி இனி விஷயத்துக்கு வருவோம்ம்.. துன்பங்கள் எதனால் வருகின்றன? அதற்குப் பல காரணங்கள் உண்டுதானே. பல காரணங்களாலும் வரும் துன்பங்கள் நிவர்த்தி செய்யப்படக்கூடியவை.. ஆனா இந்த “நோயால்” வரும் துன்பம் இருக்கே... அது பூரண மருந்துகள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டாலும்.. நோய் ஒன்று வந்துவிட்டதென்றாலே துன்பம்தானே, மனம் சோர்ந்து விடுகிறார்கள்.

அப்போ இத் துன்பத்தை போக்க நாம் “வருமுன் காப்போனாக” இருப்பது நல்லதல்லவா?.. அதையும் தாண்டி ஏற்படுமாயின்.. அதுகுத்தான் ஒரு பெயர் வைத்திருக்கிறோம் அது “விதி”...  “அதனை மாற்ற முடியாதே” என, விதியில் பழியைப் போட்டு, எம் மனதுக்கு நிம்மதி வாங்கிக் கொடுக்கிறோம்.

அதுசரி, இப்போ வருமுன் காப்போனாக இருக்க என்ன பண்ணோணும் என்றுதானே கேட்கிறீங்க?:)) ச்ச்சோஓஒ ஈசி:).. அதிராவின் சமையலைச் சாப்பிடுங்கோ:))(ஹையோ ஏன் உந்த முறைப்பூஊஊஊ?:)).

அதிராவின் வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்:)..
 வரகரிசிக் கஞ்சி. 
ஒரு கப் வரகை, கழுவி, குக்கரில் அவியவிட்டு, அதனோடு நிறையச் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் வெட்டிப் போட்டு் விடோணும். பாதி வெந்ததும் ஒரு பூண்டு உள்ளியை முழுதாக உரித்துப் போடோணும். அளவுக்கு உப்பும் போட்டு, இறக்கும் தறுவாயில் ஸ்பினாஜ் கீரை குட்டியாக அரிந்து போட்டு, கொஞ்சம் பால் சேர்த்தேன்.. ஓவ் பண்ணியதும்.. பாதி தேசிக்காய் பிளிந்து விட்டுக் குடிக்க, சூப்பர் சுவையாக இருக்கும்.

அதிராவின் சனிக்கிழமை ஸ்பெஷல்:)
கரட் இலை சுண்டல்..
தாவது இப்போ எல்லா இடமும் கரட், இலைகளோடு கிடைக்குது, அதனை எடுத்து நன்கு கழுவிவிட்டு, தண்டோடு, மிகவும் குட்டியாக அரிந்து, அதனோடு ஒன்றிரண்டு கரட்டை எடுத்து, ஸ்கிரேப் பண்ணி கொஞ்சம் தேங்காய்ப்பூ, மிளகாய்த்தூள்(கொஞ்சம்),  உப்பு சேர்த்து பிசைந்து, வெங்காயம்,செத்தல் தாளித்து அதனுள் இதைக் கொட்டி மெல்லிய நெருப்பில் மூடி...பிரட்டி, மூடி அவிய விட்டு பிரட்டி இறக்கவும். ஒரு இனிப்போடு கூடிய சுவை கிடைக்கும்.

எனக்கு இலை வகைகளில் வறை செய்து சாப்பிட ரொம்பவும் பிடிக்கும், ஆரம்பம் கரட் இலைகள் பார்த்தபோது, கரடுமுரடாக இருக்கே என நினைத்து பயப்பிட்டேன்ன், இமா றீச்சர் தான் சொன்னா வறை செய்யலாம் என, அப்போ என் கிட்னியை ஊஸ் பண்ணிய இடத்தில், வறையை சொஃப்ட் ஆக்க, கரட்டையும் சேர்த்தேன், சூப்பரோ சூப்பர்.
=======================இடைவேளை===========================
டைவேளையில் ச்சும்மா இருக்காமல், இப்பூடி ஏதாவது உடற்பயிற்சிகள் செய்த வண்ணம் இருக்கோணும். சமீபத்தில் இங்கத்தைய ஒரு புரோகிராமில் சொல்லிச்சினம், உடம்பு மெலிவதற்கு, முதல் வேலையாக, நம்மை எப்பவுமே ஆக்டிவாக வைத்திருக்கட்டாம். இப்படி இருந்தாலே உடம்பு மெலியும் வாய்ப்பு அதிகமாம்.

அதாவது, ஓரிடத்தில் இருக்க வேண்டாமாம். உடம்பை எப்பவும் அசைத்து ஆட்டி எதாவது செய்யட்டாம்.


============உஸ்ஸ்ஸ் இடைவேளை முடிஞ்சு போச்ச்ச்ச்ச்:))===========

ஆங்ங்ங் இது அதிராவின் செவ்வாய்க்கிழமை ஸ்பெஷல்:)..
இஞ்சி மோர்..
ப்பவுமே சாப்பிட்டுக் கொண்டிருக்காமல், அடிக்கடி நீராகாரமும் உட்கொள்ளோணும்[(ஆவ்வ் எப்பூடி என் தமிழ்?:) அழகா இருக்கோ?:) இருக்காதா பின்ன:)) நாங்களெல்லாம் தமிழ்ல “டி” எடுத்த ஆட்களாக்கும்..க்கும்..க்கும்..:))]..

அதனால, இப்பூடியெல்லாம் விதம் விதமா செய்து குடிக்கோணும்:).இது ஒரு இஞ்சி சேர்த்த மோர். அதாவது ஒரு சின்ன துண்டு இஞ்சி, 4,5 சின்ன வெங்காயம், கொஞ்சூண்டு உப்பு,அத்தோடு தயிர் சேர்த்து அடித்து, முடிவில் கொஞ்சம் தேசிக்காய் சேர்த்துக் கொள்ளோணும். இதுவும் ஒருவித மருத்துவக் குறிப்புத்தான்.

உணவில் பழப்புளி சேர்ப்பது, உடம்புக்கு நல்லதல்லவாம்.. இது எனக்கொரு,  “நாட்டு வைத்தியர்” சொன்னார். அதுக்குப் பதில் எலுமிச்சை சேர்ப்பது மிகவும் நல்லதாம். எலுமிச்சம் புளியை உணவில் அதிகம் சேர்த்தால்,நமது தோல் பழபழப்பாகுமாம்.

அடுத்து இஞ்சி உணவில் சேர்க்கும்போது, எப்பவும் நன்கு தோல் நீக்க வேண்டுமாம், அதன் தோலில் ஒருவித நச்சுத் தன்மை உள்ளதாம். தினமும் இஞ்சி சேர்த்து வந்தால் பல நோய்கள், தொல்லைகளிலிருந்து விடுபடலாமாம்.

இப்போ சொல்லுங்கோ.. இனி, துன்பங்களிலிருந்து விடுதலைதானே?:)).

ஊசி இணைப்பு:
வழமைபோல எம் இடத்தில் கிரான்பெரீஸ் எல்லாம் பூத்து, காய்த்து பழுத்து, தேடுவாரில்லாமல் உதிர்ந்து போகுது... என் கை சொல்லுக் கேட்கவில்லை, கொஞ்சம் ஆய்ந்து வந்தேன்...

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
குண்டூசி இணைப்பூ:)..
அக்கா பிளீச்ச்ச்ச்ச்ச்:)) வாறீங்களா  ஓட்டுப் போட?:) வந்து தமிழ்மணத்தில, ரெண்டு ஓட்டுப் போட்டு:), அதிராவை “மகுடம் சூட்ட” வைக்கிறீங்களோ?:))
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

Sunday 25 August 2013

காசு! பணம்!! துட்டு!! மணி:) மணி:)

ஒரு சிப்பி எடுக்க, இவ்ளோ கஸ்டப்படவேண்டி இருக்கே:)

சுவான் ஆத்தங் கரையில்.. அந்த அழகிய மணலில்... பொறுக்கிய சிப்பி சோகிகளையும் சேர்த்து குயிலிங் வேர்க் பண்ணி விட்டேன்ன்.. இதுக்கு என்ன பெயர் வைக்கலாம் எனச் சொல்வோருக்கு.. ஒரு சுவான் முட்டை இலவசமாக வழங்கப்படும்:))


அதுக்கு இப்பூடி பெயிண்ட் பண்ணினேன்.. என்ன பெயிண்ட் எனக் கண்டு பிடிப்போருக்கு.. ஒரு சுவான் குஞ்சு இலவசம்:)

கீழே ஒட்டியிருக்கும் சிப்பிக்கு.. இன்னொரு வகைப் பெயிண்ட் கொடுத்தேன்:).. மேலே கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வோர்ர் இதுக்கும் கரீட்டாப்:) பதில் சொன்னா.. ஒரு சுவான் குஞ்சோடு கெட் வன் சுவான் முட்டை ஃபிறீ:)) 


===============================INTERVAL================================
ஆவ்வ் பொயிண்ட்டுக்கு வந்தாச்சு... இப்போ தமிழ்மணம் வோட் பண்ணும் வசதி செய்தாச்சு இங்கே.. எல்லோரும் ஓடிவந்து ரெண்டு கைகளாலும் வோட் பண்ணோனும் எனப் புலாலியூர்ப் பூஸானந்தா இனிய வேண்டுகோள் விடுக்கிறார்ர்(ரெண்டு கைகளாலும் போட்டால்.. ரெண்டு ரெண்டு வோட் கிடைக்குமெல்லோ?:)) எப்பூடி என் கிட்னி..யா?:)).

அதனை இங்கு வெற்றிகரமாக போட்டுத் தந்தவர்.. வேறு ஆருமல்ல.. வலையுலகில் காணாமல் போய்:), ரேடியோவில் கலக்கிக் கொண்டிருக்கும் “நிரூபன்” தான்ன்.. மிக்க நன்றி நிரூபன்.. அதுக்காக, நிரூபனுக்கு பிடித்த இந்த ஸ்டோபரி சீஸ் கேக்கை கொடுக்கிறேன்ன்.. இதில ஆருக்கும் பங்கில்லை:)..
==============================இடைவேளை முடிஞ்சு போச்ச்ச்ச்:)==============================
ஊஊஊஊஊசி இணைப்பு:
ஓர் முக்கிய அறிவித்தல்.. நான் தினமும் நடக்கும் எங்கட சுவான் ஆத்தங்கரைப் பார்க்கில்.. வெள்ளிக்கிழமை நடக்கப் போனனா.. ஷொக்ட் ஆகிட்டேன்ன்ன்ன்:).. ஏன் தெரியுமோ... ஃபிறீ அவுட் டோர் ஜிம் வைத்திருக்கிறார்கள்... என்னால் நம்பவே முடியல்ல.. ஏறலாமா வாணாமா என ஒரு கணம் ஓசிச்சேன்ன், அப்போ சைக்கிள் ஓடிவந்த ஒருவர், டக்கென சைக்கிளை விட்டு விட்டு ஜிம் செய்ய ஆரம்பித்தார், மெதுவா கிட்டப் போய்.. கேட்டேன்ன்.. இது எல்லோரும் செய்யலாமா என.. அதுக்கு அவர்.. ஆமா.. ஆமா.. இது முழுக்க முழுக்க ஃபிறீ என்றார்ர்:))(இங்கின மொழி பெயர்ப்பாளர்.. பு.பூ))... அதன் பின்னர் கேட்கவா வேண்டும்.. பின்னி பெடல் எடுத்திட்டுத்தான் வந்தேன்ன்:))(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
இதில இருக்கும் மஞ்சள் பூவை மட்டும் மகியிடம் கொடுத்திடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)

(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

Monday 19 August 2013

”கண்டு” புடிச்சிட்டேஏஏஏஏன்ன்ன்ன்:)!!

ஆவ்வ்வ்வ்.. வாங்கோ வாங்கோ.. காதைக் கொண்டு வாங்கோ.. அட..சே..சே.. நான் என்ன கதைக்கிறேன் என எனக்கே புரியுதில்லை.. ஓடிவாங்கோ!!! உங்கட உங்கட மூக்குக் கண்ணாடிகளைப் போட்டுக் கொண்டு... பூஸோ கொக்கோ.. லேட்டானாலும் லேட்டஸ்ட்டா... கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன்:))..

இதைப் பார்க்க முன்பு இங்கின  ( http://gokisha.blogspot.co.uk/2013/06/blog-post_12.html ) போய் வாங்கோ பிளீஸ்ஸ்ஸ்..

 நீண்ட விடுமுறைக்குப் பின்பு, இன்றுதான் வோக் போக ஆரம்பித்தேன், அப்போ மனதில எண்ணினேன்ன்.. அந்த சுவான் தம்பதிகள், குழந்தைகளோடு இருப்பார்களா.. சே..சே.. குழந்தை கிடைத்து, தொட்டிலில் போடும் வைபவம் பெயர் வைப்பு:) எல்லாம் முடிஞ்சு காணாமல் போயிருப்பினம், என எண்ணிக்கொண்டே.. அப்பக்கம் போனனா... அவர்கள் இருந்த அந்த அழகிய மெத்தை இப்படி வெறிச்சோடிக் கிடந்தது... அதைப் பார்க்க எனக்கும் சோகமாக இருந்துது...:(

நான் எதிர்பார்த்து மனக்கோட்டை எல்லாம் கட்டிப் போனால், அது ஏடாகூடமாய்த்தான் நடக்கும்:)).. ஆனா எதிர்பாராமல்... போனால் தலைகால் புரியாத, புதுப்புது நிகழ்வெல்லாம் நடக்கும்:))... இது எதிர்பார்த்ததே நடந்துபோச்ச்... அவர்கள் போயே விட்டினம் என எண்ணினேன்ன்...

“எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் இருக்கும்” எனும் அரிய தத்துவம் நன்கு தெரிந்தாலும், பாழாப்போன மனது பலதடவைகளில் எதிர்பார்த்து விடுகிறது... :)) இப்போ இதுவா முக்கியம்:)... ஹையோ பொயிண்ட்டுக்கு வாங்கோ எல்லாரும், கொஞ்சம் இங்கின திரும்புங்கோ..

நானும் திரும்பி மறுபக்கம் பார்த்தனா...
செந்ந்ந்ந்ந்ந்ந்ந்....தேனில் கலந்து....
பொன்வானில் மிதந்தூஊஊஊஊஊஊ...

ஹையோ கண்ட நிண்ட பாட்டெல்லாம் வாயில வருதே.. நேக்கு சந்தோஷத்தில தலையும் தெரியல்ல.. லெக்கும் ஆடல்ல... ஹார்ட் அட்டாக் வந்திடும்போல இருந்துது... அந்த “அஞ்சு” பேர் கொண்ட குடும்பத்தை, பார்த்ததும், கடவுள் சத்தியமா என் மனதில் எழுந்த நினைப்பு... “ஆண்டவா இக் குடும்பம் கண்பட்டுவிடக்கூடாது”.. என்பதாகும்.

அனைவரும் நல்ல உறக்கத்திலிருந்தினம் அப்போ..


நான் அருகே போனதும், இரு குழந்தைகள் முழித்து கீச்ச்ச்ச்...கீச்ச்ச்ச்.. என குரலெழுப்பிச்சினம்,  “ஆரோ வந்திருக்கினம் அப்பா அம்மா எழும்புங்கோ”.. என்பதுபோலவோ.. அல்லது  “ஆரோ உணவு கொண்டு வந்திருக்கினம்” எனச் சொல்வது போலவோ இருந்துது அது...


அவர்களின் குரல் கேட்டு, தாயாக இருக்கலாம், விழித்துக் கொண்டா. தந்தை.. கண்களைத் திறந்து பார்த்து விட்டு.. “அட இது அதிரா:) அவ ஒண்ணும் பண்ணமாட்டா.. பயப்பூடாதீங்கோ”:) என்பதுபோல சொல்லிவிட்டு மீண்டும் உறங்கிட்டார்ர்:)).[கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஏன் முறைக்கிறீங்க:))]எனக்கு அவர்களைப் பார்த்ததும் உச்சியிருந்து உள்ளங்கால் வரை இனம் புரியாத மகிழ்ச்சி.. கிடைக்காது என நினைத்திருந்தது, இப்படி ஒரு அழகிய குடும்பமாகத் தென்பட்டதும்.. என் நடையின் ஸ்பீட்டும், ஸ்டைலும்:)) கூட மாறி விட்டதெனில் பாருங்கோவன்:)).. கடகடவென ஒரு ரவுண்ட் நடந்து விட்டு, திரும்பி வந்தேன்ன்..

இப்படி சன்பார்த் எடுக்கினம்ம்..

கண்படாமல் வாழ்க இந்த அழகிய சுவான் குடும்பம்... எனக்கு இவையை பார்க்கும்போது.. பறவை இனமாகத் தெரியவில்லை.. மனிதக் குடும்பமாகவே தெரிகினம்... உணவேதும் எடுத்துப் போகவில்லையே எனக் கவலையாக இருந்துது... நாளை போகும்போது பார்க்கலாம்ம்..

ஊசி இணைப்பு:
வை அங்கிருந்து பொறுக்கி வந்து கழுவி விட்டிருக்கிறேன்ன்.. ஏன் எதுக்கு என உங்களுக்கு ஏதும் புரியுதோ? இல்லல்ல? நேக்கும்தான்:)).. ஆனா குப்புறக் கிடந்து, கிட்னியை ஊஸ் பண்ணிக் கண்டுபிடிச்சு:).. எதாவது செய்திட்டு விரைவில் வருகிறேன்ன்ன்:)).
=============================================================

==============================================================

Friday 16 August 2013

பூஸும் குயிலும்:)

என்னாது தலைப்பைப் பார்த்ததும், எல்லோருக்கும் தலை சுத்தி, தங்களின் முதுகை, தாமே பார்க்கும் பாக்கியம் அதிராவால கிடைச்சிருக்குமே:)). அது குயிலிங் கார்ட்டை சோட் அண்ட் சுவீட்டா குயில் எண்டமாக்கும்:)).. 

ஸ்ஸ்ஸ்ஸ் “இந்தாட்டிக்கா போய் வந்ததுதான், இன்னும் கிளீன் பண்ணி முடியுதில்ல”
============================================
சரி சரி மீ இந்தாட்டிக்காவால வந்ததும் வராததுமா செய்த முதல் வேலை இதுதான்.. இன்று என் இங்கத்தைய வைட் நண்பியின் பிறந்ததினம், என் முன்னைய குயிலிங் கார்ட்டைப் பார்த்து, ஒரு மணித்தியாலம் அதுபற்றி ரசிச்சு ரசிச்சுப் பேசுவா.. அவ்ளோ ஆசை:)).. அப்போ அஞ்சுவின்.. இளமதியினதைப் பார்த்தால்ல்:)) மீ காட்டமாட்டனே:)) [ஹையோ ஒரு பேச்சுக்குச் சொன்னேன்:))... ]அதனால்தான் அவவுக்கு இதைச் செய்தேன், இப்போ ஷோ கேஷில் இதை வச்சிருப்பா.. வீட்டுக்குப் போவோருக்கெல்லாம் காட்டுவா:).


X Box Games விளையாட வாங்கிய மைக் பொக்ஸ்ஸில், இப்படி இரு கார்ட் இருந்துது, பயன்படுமே என எடுத்து வச்சேன்ன்.. யூஸ்ஃபுல் ஆச்சு..


அதற்கு இப்படி பேப்பர் ஒட்டி அழகாக்கிட்டு... கார்ட்டை செய்து முடிச்சிட்டேன். மேல் மூலையில் பலூன்போல செய்தேன், ஆனா சரியான வடிவம் வரவில்லைப்போலும்.


=======================INTERVAL=========================
நான் “இந்தாட்டிக்கா” வால வந்ததும், தங்கட கார்டினில் பூத்த, இந்த, “அஞ்சு” இதழ் பூவை அனுப்பி வரவேற்றவர்... சே..சே.. பெயர் சொல்ல எனக்கு “ஷை”யா வருது.. நீங்களே கண்டுபிடியுங்கோ:).


================முடிஞ்சு போச்ச்ச்ச்.. இடைவேளை:)==============
சரி இப்போ மீ பொயிண்ட்டுக்கு வந்திட்டேன்:).. இம்முறை “இந்தாட்டிக்கா” வில வாங்கினேனாக்கும் இவற்றை. 

இதில் ஒழுங்கா கலர் புரியுதில்லை, திரும்ப படம் எடுத்து போட ரயேட்டாக இருந்திச்சா.. விட்டிட்டேன். இதில் மேலே இருப்பது அழகான புலூ கலர். கீழே கடசியில் இருப்பது ஒரேஞ் கலர்.. போனமுறை லூட்ஸ்ஸில வாங்கிய பிரேஸ்லட்டுக்கு சூப்பரா மச் பண்ணுது.. மகி நோட் திஸ் பொயிட்:)).

அதுசரி, ஏன் மேலே ஒருவர் சோடி இல்லாமல் இருக்கிறார் என யோசிப்பீங்களே:) அந்த சொந்தக் கதை... யோகக் கதையைக் கொஞ்சம் கேளுங்கோ:))) அதுக்கு முதல்.. அஞ்சூஊஊ டிஷூ பிளீஸ்ஸ்:)).. பிங் கலரிலதான் வேணும்:).

அது அழகான வெள்ளைக் கல்லு பதிச்ச தோடு, கணவர் சொன்னார் அனைத்திலும் அதுதான் நம்பர் வன் என.. சரி அப்போ முதலாவதா அதைப் போடுவமே என போட்டனா.. வீட்டுக்கு திரும்பி வந்தால் ஒரு காதைக் காணம்:))... இன்னொரு டிஷ்சூ பிளீஸ்ஸ்:)).

இதுவும் எனக்கு சேகரிக்க பிடிக்கும் விதம் விதமா.. இங்கு வெளியில் போகும்போது வைப்பது குறைவு, ஆனாலும் கண்டால் வாங்காமல் விடுவதில்லை.

ஆங்ங்ங்ங்  ஆரும் டச் பண்ணப்பூடா... தொட்டாலும் கறுக்காத தங்கம்.. 32 கேரட் ஹையோ இது வேற கரட்:)) ஓவரா புழுகிட்டமோ?:) இதுவும் அங்கின வாங்கியதுதான், இங்கு எங்க போடப்போறேன், இனி போட்டாலும் தெரியாது குளிர்காலம் தொடங்குது, ஆனாலும் இவை எல்லாம் வாங்கி வாங்கி சேர்ப்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இது கறுக்காதாம் என கடைக்கார அங்கிள் சொன்னார், கறுத்தால், ரிக்கெட் செலவு பார்க்காமல் கொண்டு வருவேன் உடனே என சொல்லிட்டுத்தான் வந்தேன்:) எங்கிட்டயேவா?:) அதிராவோ கொக்கோ:).

குட்டி இணைப்பு:
இவற்றை “மே”யில நட்டேன், இப்போ வந்து பார்த்தால் இப்பூடி விளைஞ்சிருக்கு:) விளைச்சல் எப்பூடி? நான் வெங்காயத்தைக் கேட்டனாக்கும்:)).
=================================================================
கோபம் மனதில் இருக்க கூடாது 
வார்த்தையில் தான் இருக்க வேண்டும்..!!! 
அன்பு வார்த்தையில் மட்டும் இருக்க கூடாது 
மனதிலும் இருக்க வேண்டும்...!!
இந்த அரிய தத்துவத்தை,
 உங்களுக்காக வெற்றிகரமாகக் களவாடி எடுத்து வந்தவர்.. 
புலாலியூர்ப் பூஸானந்தா:)

=================================================================