ஆவ்வ்வ்வ்.. வாங்கோ வாங்கோ.. காதைக் கொண்டு வாங்கோ.. அட..சே..சே.. நான் என்ன கதைக்கிறேன் என எனக்கே புரியுதில்லை.. ஓடிவாங்கோ!!! உங்கட உங்கட மூக்குக் கண்ணாடிகளைப் போட்டுக் கொண்டு... பூஸோ கொக்கோ.. லேட்டானாலும் லேட்டஸ்ட்டா... கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன்:))..
இதைப் பார்க்க முன்பு இங்கின ( http://gokisha.blogspot.co.uk/2013/06/blog-post_12.html ) போய் வாங்கோ பிளீஸ்ஸ்ஸ்..
நீண்ட விடுமுறைக்குப் பின்பு, இன்றுதான் வோக் போக ஆரம்பித்தேன், அப்போ மனதில எண்ணினேன்ன்.. அந்த சுவான் தம்பதிகள், குழந்தைகளோடு இருப்பார்களா.. சே..சே.. குழந்தை கிடைத்து, தொட்டிலில் போடும் வைபவம் பெயர் வைப்பு:) எல்லாம் முடிஞ்சு காணாமல் போயிருப்பினம், என எண்ணிக்கொண்டே.. அப்பக்கம் போனனா... அவர்கள் இருந்த அந்த அழகிய மெத்தை இப்படி வெறிச்சோடிக் கிடந்தது... அதைப் பார்க்க எனக்கும் சோகமாக இருந்துது...:(
கண்படாமல் வாழ்க இந்த அழகிய சுவான் குடும்பம்... எனக்கு இவையை பார்க்கும்போது.. பறவை இனமாகத் தெரியவில்லை.. மனிதக் குடும்பமாகவே தெரிகினம்... உணவேதும் எடுத்துப் போகவில்லையே எனக் கவலையாக இருந்துது... நாளை போகும்போது பார்க்கலாம்ம்..
இதைப் பார்க்க முன்பு இங்கின ( http://gokisha.blogspot.co.uk/2013/06/blog-post_12.html ) போய் வாங்கோ பிளீஸ்ஸ்ஸ்..
நீண்ட விடுமுறைக்குப் பின்பு, இன்றுதான் வோக் போக ஆரம்பித்தேன், அப்போ மனதில எண்ணினேன்ன்.. அந்த சுவான் தம்பதிகள், குழந்தைகளோடு இருப்பார்களா.. சே..சே.. குழந்தை கிடைத்து, தொட்டிலில் போடும் வைபவம் பெயர் வைப்பு:) எல்லாம் முடிஞ்சு காணாமல் போயிருப்பினம், என எண்ணிக்கொண்டே.. அப்பக்கம் போனனா... அவர்கள் இருந்த அந்த அழகிய மெத்தை இப்படி வெறிச்சோடிக் கிடந்தது... அதைப் பார்க்க எனக்கும் சோகமாக இருந்துது...:(
நான் எதிர்பார்த்து மனக்கோட்டை எல்லாம் கட்டிப் போனால், அது ஏடாகூடமாய்த்தான் நடக்கும்:)).. ஆனா எதிர்பாராமல்... போனால் தலைகால் புரியாத, புதுப்புது நிகழ்வெல்லாம் நடக்கும்:))... இது எதிர்பார்த்ததே நடந்துபோச்ச்... அவர்கள் போயே விட்டினம் என எண்ணினேன்ன்...
“எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் இருக்கும்” எனும் அரிய தத்துவம் நன்கு தெரிந்தாலும், பாழாப்போன மனது பலதடவைகளில் எதிர்பார்த்து விடுகிறது... :)) இப்போ இதுவா முக்கியம்:)... ஹையோ பொயிண்ட்டுக்கு வாங்கோ எல்லாரும், கொஞ்சம் இங்கின திரும்புங்கோ..
நானும் திரும்பி மறுபக்கம் பார்த்தனா...
செந்ந்ந்ந்ந்ந்ந்ந்....தேனில் கலந்து....
பொன்வானில் மிதந்தூஊஊஊஊஊஊ...
ஹையோ கண்ட நிண்ட பாட்டெல்லாம் வாயில வருதே.. நேக்கு சந்தோஷத்தில தலையும் தெரியல்ல.. லெக்கும் ஆடல்ல... ஹார்ட் அட்டாக் வந்திடும்போல இருந்துது... அந்த “அஞ்சு” பேர் கொண்ட குடும்பத்தை, பார்த்ததும், கடவுள் சத்தியமா என் மனதில் எழுந்த நினைப்பு... “ஆண்டவா இக் குடும்பம் கண்பட்டுவிடக்கூடாது”.. என்பதாகும்.
அனைவரும் நல்ல உறக்கத்திலிருந்தினம் அப்போ..
நான் அருகே போனதும், இரு குழந்தைகள் முழித்து கீச்ச்ச்ச்...கீச்ச்ச்ச்.. என குரலெழுப்பிச்சினம், “ஆரோ வந்திருக்கினம் அப்பா அம்மா எழும்புங்கோ”.. என்பதுபோலவோ.. அல்லது “ஆரோ உணவு கொண்டு வந்திருக்கினம்” எனச் சொல்வது போலவோ இருந்துது அது...
அவர்களின் குரல் கேட்டு, தாயாக இருக்கலாம், விழித்துக் கொண்டா. தந்தை.. கண்களைத் திறந்து பார்த்து விட்டு.. “அட இது அதிரா:) அவ ஒண்ணும் பண்ணமாட்டா.. பயப்பூடாதீங்கோ”:) என்பதுபோல சொல்லிவிட்டு மீண்டும் உறங்கிட்டார்ர்:)).[கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஏன் முறைக்கிறீங்க:))]
எனக்கு அவர்களைப் பார்த்ததும் உச்சியிருந்து உள்ளங்கால் வரை இனம் புரியாத மகிழ்ச்சி.. கிடைக்காது என நினைத்திருந்தது, இப்படி ஒரு அழகிய குடும்பமாகத் தென்பட்டதும்.. என் நடையின் ஸ்பீட்டும், ஸ்டைலும்:)) கூட மாறி விட்டதெனில் பாருங்கோவன்:)).. கடகடவென ஒரு ரவுண்ட் நடந்து விட்டு, திரும்பி வந்தேன்ன்..
இப்படி சன்பார்த் எடுக்கினம்ம்..
கண்படாமல் வாழ்க இந்த அழகிய சுவான் குடும்பம்... எனக்கு இவையை பார்க்கும்போது.. பறவை இனமாகத் தெரியவில்லை.. மனிதக் குடும்பமாகவே தெரிகினம்... உணவேதும் எடுத்துப் போகவில்லையே எனக் கவலையாக இருந்துது... நாளை போகும்போது பார்க்கலாம்ம்..
ஊசி இணைப்பு:
இவை அங்கிருந்து பொறுக்கி வந்து கழுவி விட்டிருக்கிறேன்ன்.. ஏன் எதுக்கு என உங்களுக்கு ஏதும் புரியுதோ? இல்லல்ல? நேக்கும்தான்:)).. ஆனா குப்புறக் கிடந்து, கிட்னியை ஊஸ் பண்ணிக் கண்டுபிடிச்சு:).. எதாவது செய்திட்டு விரைவில் வருகிறேன்ன்ன்:)).
=============================================================
==============================================================
|
Tweet |
|
|||
சுவான் குடும்பம் பார்க்கவே கண்கொள்ளாக் காட்சி. நீங்கள் சொல்வது போல் கண்பட்டுவிடக்கூடாது. அழகிய புகைப்படங்களாக்கி ரசிக்கத் தந்தமைக்கு நன்றி அதிரா.
ReplyDeletehttp://gokisha.blogspot.co.uk/2013/06/blog-post_12.html அங்கின போய் வந்தாச்சி...
ReplyDelete///எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் இருக்கும்///
ReplyDeleteஇதுவல்லவோ தத்துவம்,....!!!!!!
படங்கள் சூப்பர்..!
ReplyDeleteஆஆவ் !!!1 வாஆவ் சூப்பர் அதிராஆவ் !!!!
ReplyDeleteஅவங்களை பார்த்ததில் என்னா சந்தோஷாம் மியாவுக்கு :))
இவ்ளோ கிட்ட போய் எப்படி படம் புடிச்சீங்க ??அழகோ அழகு
என் நடையின் ஸ்பீட்டும், ஸ்டைலும்:)) கூட மாறி விட்டதெனில் பாருங்கோவன்:))..//
ReplyDeleteஇந்த வரிகளுக்கு பதில் கூறும் பொறுப்பை ..அன்பு தம்பி மணியிடமே ஒப்படைக்கின்றேன் :)))
அதிஸ் ஒரே ஒரு விண்ணப்பம் ..நீங்க அங்கே போகுபோது உணவேதும் கொண்டு போலேன்னாலும் பரவாயில்லை ..இயன்ற வரையில் அஞ்சுபேர் குடும்பத்தின் அருகில் கம்பி போன்ற அல்லது நூல்போன்ற வகையாறாக்கள் இருந்தா உடனே அப்புறப்படுத்துங்க ..அந்த குழந்தைகளுக்கு ஆபத்து தெரியாம மாட்டுப்படும் ..
ReplyDeleteஏன் எதுக்கு என உங்களுக்கு ஏதும் புரியுதோ? இல்லல்ல? நேக்கும்தான்:))//
ReplyDeleteமீக்கு தெரியுதே :))ஒரு பிரேம் செய்து பார்டரில் இவற்றை ஓட்டுங்க உள்ளே போட்டோ படத்தை ஓட்டுங்க
[im]http://31.media.tumblr.com/b84dd79d745d3bd510850c545804a24d/tumblr_mrrd6osRKZ1sqpwkao1_400.gif[/im]
ReplyDeleteOK :))OK :))We all know that you are verrrrrrie happy :))
அதிரா .....
ReplyDeleteஎல்லாப்படங்களும் சூப்பரோ சூப்பர்
>>>>>
[co="purple"] ஆவ்வ்வ்வ் இன்று பார்த்து நேக்கு.. நேரம் கிடைக்குதில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) போஸ்டை சரியா போஸ்ட் பண்ணினனா என்று பார்க்ககூட முடியாமல் போயிட்டுது.. இப்போதான் பார்க்கிறேன்ன்ன்...
ReplyDeleteவந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.. ஈவிங் வருகிறேன்ன் விளளளக்கமா பழகலாம்:))..
ஹிட்டார் சத்தம் இங்கின வரை கேட்குதே:)) [/co]
”கண்டு” புடிச்சிட்டேஏஏஏஏன்ன்ன்ன்:)!!
ReplyDeleteநானும் தான் .... ஆனாக்க சொல்ல மாட்டேன் .... அதைப்பற்றி.
காதைக்கழட்டி என்னிடம் கொடுத்தால் மட்டுமே இரகசியமாகச் சொல்லுவேன்.
>>>>>
//“எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் இருக்கும்” எனும் அரிய தத்துவம் நன்கு தெரிந்தாலும், பாழாப்போன மனது பலதடவைகளில் எதிர்பார்த்து விடுகிறது... :))//
ReplyDeleteஅதானே ! எதிர்பார்ப்பு இல்லாவிட்டால் என்ன வாழ்க்கை - உப்புச்சப்பில்லாமல் அல்லவா இருக்கும்.
// இப்போ இதுவா முக்கியம்:)... //
நிச்சயமாக உங்களுக்குப் பின்னூட்டங்கள் தான் இப்போ முக்கியம்.
அதனால் அவசரத்தில் நானும் ஏதேதோ சொல்லியிருக்கிறேன்.
நாளையும் மறுநாளும் ரொம்பவும் பிஸியாக இருப்பேனாக்கும்.
ஆவணியாவட்டம் + காயத்ரி ஜபம்.
வாழ்த்துகள் அதிரா.
OK OK Bye for Now.. ! ;)
”கண்டு” புடிச்சிட்டேஏஏஏஏன்ன்ன்ன்:)!!///
ReplyDeleteஎதை?
எப்போ?
எப்படி?
எங்கு வைத்து? :))
ஆவ்வ்வ்வ்.. வாங்கோ வாங்கோ.. காதைக் கொண்டு வாங்கோ.. ///
ReplyDelete[im]http://i.livescience.com/images/i/000/017/091/i02/human-ear-110606-big.jpg?1307393740[/im]
இதோ நீங்கள் கேட்ட காது...!! சரி விஷயத்தை சொல்லுங்க :))
அட..சே..சே.. நான் என்ன கதைக்கிறேன் என எனக்கே புரியுதில்லை.. ////
ReplyDeleteரொம்ப காலமா எங்களுக்கும் புரியவில்லை :))))
“ஆரோ வந்திருக்கினம் அப்பா அம்மா எழும்புங்கோ”.. என்பதுபோலவோ.. அல்லது “ஆரோ உணவு கொண்டு வந்திருக்கினம்” எனச் சொல்வது போலவோ இருந்துது அது... ///
ReplyDeleteநோஓஓஓஓஓஓஓ உங்களுக்கு ஸ்வான் பாஷை இன்னும் சரியா புரியவில்லை! அவைகள் சொன்னது...................................................................................
“அம்மா, அப்பா எங்களுக்கு பயமா இருக்கு”
“அட இது அதிரா:) அவ ஒண்ணும் பண்ணமாட்டா.. பயப்பூடாதீங்கோ”:) ///
ReplyDelete“இந்தக் காலத்தில தங்களைத் தாங்களே புகழ்ந்தால்தான் உண்டு” :)))))
ReplyDeleteஏன் எதுக்கு என உங்களுக்கு ஏதும் புரியுதோ? இல்லல்ல? நேக்கும்தான்:)).. ///
எனக்கு ஒரு ஐடியா வருது.... சொல்லட்டுமா?? :))))
என் நடையின் ஸ்பீட்டும், ஸ்டைலும்:)) கூட மாறி விட்டதெனில் பாருங்கோவன்:))..//
ReplyDeleteஇந்த வரிகளுக்கு பதில் கூறும் பொறுப்பை ..அன்பு தம்பி மணியிடமே ஒப்படைக்கின்றேன் :)))
ஹா ஹா அக்கா இதுல ஆச்சரியப்பட ஒண்ணும் இல்லை! வழக்கமா ஒன் அவர்ல 100 மீட்டர் நடப்பாங்க..... இப்ப 101 மீட்டர் நடக்கறாங்களாம் :))))))))))))))))))
ஹையோஓ... அதிரா... சூப்பர்... :)
ReplyDeleteஸ்வான் குடும்பத்தைக் கண்டு பிடிச்சிட்டீங்களோ... எனக்கே சந்தோஷம் தாங்க முடியேலை....:)
படம் எல்லாம் நல்லா இருக்கு. பதிவும் அசத்தல் வழமைபோல.
எனக்குத்தான் நேரமே சரியில்லை..
பிறகு வாறேன்... நன்றி நன்றி!
அந்த நடையின் ஸ்டைல்..... அக்கா நீங்களே பாருங்க....!!//
ReplyDeleteநடையா இது நடையா :))இருந்த இடத்தில இருந்தே பூசார் நடக்கற அழகு ....!!!!!!!!!!!!!
ReplyDelete[co="purple"] வாங்கோ கீத மஞ்சரி வாங்கோ.. முதலாவதாகவும் அத்தோடு முதன்முதலாகவும் வந்திருக்கிறீங்க...நல்வரவு மிக்க மகிழ்ச்சி.. அதனால உங்களுக்கு ஏதாவது பரிசு தந்தே தீரோணும்... இந்தாங்கோ .. எடுத்துப்போய் ஒரு வாஸில தண்ணி விட்டு மேசையில வையுங்கோ.. மியாவும் நன்றி.[/co]
[im]http://cdn8.staztic.com/app/a/2457/2457853/red-rose-cat-live-wallpaper-2-1-s-307x512.jpg[/im]
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDelete///எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் இருக்கும்///
இதுவல்லவோ தத்துவம்,....!!!!!!//
[co="blue green"] வாங்கோ வாங்கோ.. பதிவு போட்டதும் வந்திட்டீங்க.. மிகவும் சந்தோசம்..
ஹா..ஹா..ஹா.. உதுவும் தத்துவம்தான்.. ஆனா சிலர் எனக்கு சொல்லீனம், தத்துவம் பேசுறனாம்ம் ஆனா நடைமுறையில் அதைக் கடைப்பிடிக்கிறேன் இல்லையாம்ம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
மியாவும் நன்றி.. இதன் பகுதி ஒன்று உங்களுக்கு நினைவிருக்கும், இருப்பினும் மீண்டும் பார்த்தமைக்கு நன்றிகள். [/co]
Cherub Crafts said...
ReplyDeleteஆஆவ் !!!1 வாஆவ் சூப்பர் அதிராஆவ் !!!!
அவங்களை பார்த்ததில் என்னா சந்தோஷாம் மியாவுக்கு :))
இவ்ளோ கிட்ட போய் எப்படி படம் புடிச்சீங்க ??அழகோ அழகு///
[co="blue green"]ஆஹா அஞ்சு வாங்கோ வாங்கோ.. சந்தோஷமெனில் சொல்லி முடியாது, அதிலும் அதை எப்போ உங்க எல்லோருக்கும் சொல்லுவேன் என எண்ணும்போது தலை.. வால்ல்.. வெரி சாரி டங்கு ஸ்லிப் ஆச்ச்ச்ச்:)) கால் புரியல்ல:))..
அதுவோ அஞ்சு?:).. அது மீயும் டக்கைப் போலவேதான் எனச் சொல்லுவினம்:)) அதனால மீ கிட்டக் கிட்டப் போனனா:)).. இன்னொரு குட்டி:) ஸுவான் வருகுதென அவர்களுக்கும் மகிழ்ச்சி:))..
ஹையோ எதுக்கு இப்போ சூவைக் கழட்டுறீங்க?:)) நோ..நோ.. அதை எல்லாம் கழட்டக்கூடா.. கால்ல முள்ளுக் குத்திடும்:)) போடுங்கோ போடுங்கோ:)).. [/co]
Cherub Crafts said...
ReplyDeleteஎன் நடையின் ஸ்பீட்டும், ஸ்டைலும்:)) கூட மாறி விட்டதெனில் பாருங்கோவன்:))..//
இந்த வரிகளுக்கு பதில் கூறும் பொறுப்பை ..அன்பு தம்பி மணியிடமே ஒப்படைக்கின்றேன் :)))//
[co="blue green"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹையோ முருகா.. மீயும் என்னைக் காப்பாத்தச் சொல்லி:) முருகனுக்கு எவ்ளோ நேர்த்திதான் வைக்கிறதாம்:).. என் தோடு நகை எல்லாம் வச்சாச்சு:))... இனி பக்கத்து வீட்டுக் கிரிஸ் அங்கிளின் ஜீப்பைத்தான் நேர்த்தி வைக்கப்போறேன்ன்:)).. முருகா காப்பாத்திடப்பா மீயை:)) [/co]
Cherub Crafts said...
ReplyDeleteஅதிஸ் ஒரே ஒரு விண்ணப்பம் ..நீங்க அங்கே போகுபோது உணவேதும் கொண்டு போலேன்னாலும் பரவாயில்லை ..இயன்ற வரையில் அஞ்சுபேர் குடும்பத்தின் அருகில் கம்பி போன்ற அல்லது நூல்போன்ற வகையாறாக்கள் இருந்தா உடனே அப்புறப்படுத்துங்க ..அந்த குழந்தைகளுக்கு ஆபத்து தெரியாம மாட்டுப்படும் ..
[co="blue green"] ஓ... அங்கு பெரும்பாலும் சிப்பி சோகிகள்தான் தெரியுது அஞ்சு.. இனிமேல் கவனிக்கிறேன். [/co]
Cherub Crafts said...
ReplyDeleteஏன் எதுக்கு என உங்களுக்கு ஏதும் புரியுதோ? இல்லல்ல? நேக்கும்தான்:))//
மீக்கு தெரியுதே :))ஒரு பிரேம் செய்து பார்டரில் இவற்றை ஓட்டுங்க உள்ளே போட்டோ படத்தை ஓட்டுங்க//
[co="blue green"] ஆஹா இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே.. நான் ஒரு குட்டி பூ செய்து ரெடிமேட்டாக வாங்கினேன் சீ ஷெல்ஸ்ல.. அந்த நினைவில் பொறுக்கி வந்தேன்ன்.. இது கொஞ்சம் பெரிசு. குட்டிகள் இருக்கு பொறுமையா இருந்து பொறுக்கோணும் ஒரு நாளைக்கு. [/co]
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅதிரா .....
எல்லாப்படங்களும் சூப்பரோ சூப்பர்//
[co="blue green"] வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ... [/co]
ஓ... அங்கு பெரும்பாலும் சிப்பி சோகிகள்தான் தெரியுது அஞ்சு.. இனிமேல் கவனிக்கிறேன்.//
ReplyDeletebuttttttt ..i can see a blue colored bag or an old swim shorts with a rope in the photos
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete”கண்டு” புடிச்சிட்டேஏஏஏஏன்ன்ன்ன்:)!!
நானும் தான் .... ஆனாக்க சொல்ல மாட்டேன் .... அதைப்பற்றி.
காதைக்கழட்டி என்னிடம் கொடுத்தால் மட்டுமே இரகசியமாகச் சொல்லுவேன்.
[co="blue green"] ஹா..ஹா..ஹா.. அதுதான் அண்டைக்கு “ஒரு காதைக் காணம்” எனச் சொன்னேனே.. இப்போ இருப்பது ஒரு காதுதான்ன்.. அதைத் தந்திட்டு மீ எப்பூடி சுவான் ஃபமிலியுடன் போய்க் கதைப்பது?:).. [/co]
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete//“எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் இருக்கும்” எனும் அரிய தத்துவம் நன்கு தெரிந்தாலும், பாழாப்போன மனது பலதடவைகளில் எதிர்பார்த்து விடுகிறது... :))//
அதானே ! எதிர்பார்ப்பு இல்லாவிட்டால் என்ன வாழ்க்கை - உப்புச்சப்பில்லாமல் அல்லவா இருக்கும்.////
[co="blue green"] அடடா இப்படியும் ஒரு கோணம் இருக்கோ? இதை சிந்திக்கவில்லை நான்.. அதுதானே நீங்க சொல்லுவதும் சரிதான், ஆனா ஏமாற்றமாகும்போது அதை தாங்கும் சக்தி எல்லோருக்கும் இருப்பதில்லையெல்லோ...
சரி நல்லபடி உங்கள் பூஜைகளை முடியுங்கள்.. ஆவணி வந்தாலே.. ஒரே அமர்க்களம்தான்ன்..
மியாவும் நன்றி கோபு அண்ணன். [/co]
MaaththiYosi Jeevan said...
ReplyDeleteசெந்ந்ந்ந்ந்ந்ந்ந்....தேனில் கலந்து....
பொன்வானில் மிதந்தூஊஊஊஊஊஊ... ///
பூந்தேனில் கலந்து, பொன் வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன? தள்ளாடி நடப்பதென்ன?
இப்படித்தான் நான் ரேடியோவுல கேட்கும் போது பாடினாங்க..... !!
( அப்பாடா ஒழு பிழை கண்டு பிடிச்சுட்டேன் )///
[co="blue green"]ஆவ்வ்வ்வ் வாங்கோ மணியம் கஃபே ஓனர்ர்... அடடா ஹரிஸ் ஜெயராஜின் வாரிசாச்சே நீங்க:)) தப்ப முடியுமோ உங்களிடம்..
அது வந்து சந்தோசத்தில நேக்கு தலை வா..கால்:) புரியாமல் அப்பூடி வந்திட்டுதாக்கும்:)).. ஹையோ எப்பூடியெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டிக் கிடக்கு:).
அப்பாடா ஒரு பிழை மட்டும்தானோ?... அப்போ மீ பாஸாகிட்டேன்ன்:))..
[/co]
இனிய வணக்கம் சகோதரி அதிரா...
ReplyDeleteகண்டு பிடிச்சிட்டேன் என்று சொன்னவுடன்...
கின்னசிற்கு தகவல் கொடுத்துவிட்டு தான் வந்தேன்..
எதிர்பார்ப்பு என்ற ஒன்று தானே நம்மை
ReplyDeleteஉயிர்ப்புடன் வைத்திருக்கிறது...
இன்று நாம் சேமிப்பது வாழ்வது எல்லாம்
நாளை என்ற எதிர்பார்ப்பு நோக்கித்தானே...
அன்னப்பறவைகளின் புகைப்படங்கள் அருமை..
ReplyDeleteநெஞ்சை கொள்ளை கொள்ளுகிறது...
ஆஹா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க....
ReplyDeleteஎன் நடையின் ஸ்பீட்டும், ஸ்டைலும்:)) கூட மாறி விட்டதெனில் பாருங்கோவன்:))..
ReplyDelete/////////////////////////
ஆமா உசைன் போல்டு மாதிரி வராம விட்டா சரிதான்
அப்போ முள் இல்லாத மலருக்கெல்லாம் கற்புத் தேவையில்லையா...
ReplyDeleteஎனக்கென்னவோ கிறுக்குத் தனமான வரியாகத்தான் தெரிகிறது.. ஆனாலும் எனக்கு கிறுக்குத்தனம் பிடிக்கும் என்பதால் அந்த வரிகளும் பிடிக்கிறது
வழக்கும் போலவே படங்களும் பதிவும் அருமை.
ReplyDelete“எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் இருக்கும்” உண்மையான வரிகள். நீங்கள் பார்த்தவற்றை சொல்கிற விதம் பாராட்டுக்குரியது.
ரொம்ப சந்தோஷமான திருப்தி தரக்கூடிய "Feel GOOD" பதிவு அதிரா!
ReplyDeleteஒண்ணு இல்ல, இரண்டு இல்ல, மூணு! :)))))) டிரிப்லெட்ஸ் பெற்ற ஸ்வான் தம்பதியினருக்கும், வெற்றிகரமா அவர்களைப் பின் தொடர்ந்து எங்களுக்குக் காட்டிய உங்களுக்கும் வாத்துக்கள், ச்சீச்சீ...சிலிப்;) ஒஃப்;) தி டங்;)!!! வாழ்த்துக்கள்!
சிப்பிகளை வைத்து முத்தெடுத்து சீக்கிரம் பகிரவேணும், டீல்?
ரோஜா மிக மிக அழகாக இருக்கு. வழக்கம் போல என் ஃபேவரிட் கலர் பூவைப் போட்டு என்னை இன்னும் கொஞ்சம் சந்தோஷப் படுத்திட்டீங்க, நன்னி ஹை!
அதிரா..
ReplyDeleteஎன் லப்ரொப் உங்கள் பதிவுக்கு வரும்போதே ஏதேதோ கறமுறன்னு சத்தம் போட்டிச்சு. அப்புறம் மெல்ல மெல்ல தன் கண்களை நல்லா இறுக்கி மூடிக்கிட்டுது..:(
அதுதான் இவ்வளவு தாமதம். இப்பவும் வேஏற ஒண்ணிலதான் இங்கின வந்தேன்.
அது சரியான எங்க ஊர்க் ”கரிக்கோச்சி” ... இதிலதான் இனித் தொடரும் என் ஊர் வலம்... :(
சொந்தக்கதை சோகக்கதை இருக்கட்டும்...
----------------------------
அழகாய் இருக்கினம் அதிரா ஸ்வான் குடும்பம்.
அதுசரி.. இந்த குஞ்சுகள் வெள்ளையா இல்லாம கொஞ்சம் வித்தியாசமான நிறத்தில இருக்கினமே...
இன்னும் அவைக்கு ஒழுங்கா செட்டைகள் முளைக்கேலையோ?.. இல்லாட்டி இதுதான் நிறமோ?...
எப்புடியெண்டாலும் அழகே அழகுதான்.
ஒவ்வொருத்தரையும் பார்க்கேக்கை அப்பிடியே சொக்கிப்போனேன்.
நேரில பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலகிடக்கு...:)
அவையைப் போய்ப் பார்த்து படம்பிடிச்சு எங்களுக்கும் இங்கே காட்டினதுக்கு மிக்க மிக்க நன்றி அதிரா!
அதிரா!...
ReplyDeleteநீங்க இருக்கிற இடம் கொள்ளை அழகும் இப்படி மனதுக்கு மிகமிக அமைதியும் ஆறுதலும் தாற இடமா இருக்கு. பார்க்கும்போதே அங்கேயே வந்துடவேணும்போல இருக்கு. வரட்டோ..;)
நாள் முழுக்க இப்படியான இடத்தில போய் இருக்கோணும். அண்டை அயல் எல்லாத்தையும் மறந்திட்டு....அருமை!!!
எனக்காகவும் நீங்கள் தினமும் கட்டாயம் இங்கெல்லாம் போய் அனுபவியுங்கோ. அப்பிடிப் போகேக்கை இந்த இளமதியையும் நினையுங்கோ.
பக்கத்தில நிழல்மாதிரி வாறனெண்டு.. சரியோ...:).
பூவுக்குள் புன்னகைத்த பூஸின் வாச(க)மும் அருமை!
எல்லாம் சூப்பர்! மிக்க நன்றி!
இனிய வாழ்த்துக்கள் அதிரா!
அன்புள்ள அதிரா,
ReplyDeleteபகுதி-25 முதல் பகுதி-36 வரை வருகை தந்து கருத்தளிக்க பாக்கியுள்ளது.
12 பகுதிகள் மட்டுமே பாக்கி.
தினம் 4 பகுதிகள் வீதம் மூன்றே நாளில் முடியுங்கோ. தினமும் ஒரு அரை மணி நேரம் கோபுவுக்காக ஒதுக்குங்கோ.
அப்போது தான் என் கிளி தனது பகுதி-45 இல் உங்களை ஞாபகமாகச் சேர்த்துக்கொள்ளும், நடுவில் விட்டுப்போன பரிசுப்பொருட்களையெல்லாம் அள்ளித்தரும்.
ஓடியாங்கோ ஓடியாங்கோ உடனே ஓடியாங்கோ ... Last Date 28/08/2013 சொல்லிட்டேன், சொல்லிட்டேன்.
பகுதி-25 க்கு இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2013/07/25.html
அன்புடன் கோபு
//MaaththiYosi Jeevan said...
ReplyDelete”கண்டு” புடிச்சிட்டேஏஏஏஏன்ன்ன்ன்:)!!///
எதை?
எப்போ?
எப்படி?
எங்கு வைத்து? :))//
[co="blue green"] கடவுளே.. இப்படி ஏதும் நடந்திடக்கூடாது:)(கேள்விகள் கேட்டிடக்கூடாது:)) என நேர்த்தி வச்சுத்தானே பதிவை எழுதினேன்ன்..:)) நேர்த்தி வச்சும் நடந்திட்டுதே:)) [/co]
MaaththiYosi Jeevan said...//
ReplyDeleteஇதோ நீங்கள் கேட்ட காது...!! சரி விஷயத்தை சொல்லுங்க :))
[co="blue green"] நோஓஓஓஓ உந்தக் காதில வைரத் தோடில்லையே:)) [/co]
MaaththiYosi Jeevan said...
ReplyDeleteநோஓஓஓஓஓஓஓ உங்களுக்கு ஸ்வான் பாஷை இன்னும் சரியா புரியவில்லை! அவைகள் சொன்னது...................................................................................
“அம்மா, அப்பா எங்களுக்கு பயமா இருக்கு”//
[co="blue green"] ஹா..ஹா..ஹா... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) [/co]
MaaththiYosi Jeevan said...
ReplyDelete“அட இது அதிரா:) அவ ஒண்ணும் பண்ணமாட்டா.. பயப்பூடாதீங்கோ”:) ///
“இந்தக் காலத்தில தங்களைத் தாங்களே புகழ்ந்தால்தான் உண்டு” :)))))//
[co="blue green"] இந்த வசனத்தை எங்கயோ பார்த்திருக்கிறனே.. இது புலாலியூர்ப் பூஸானந்தாவின் கொப்பி வலதாச்சே:).. [/co]
MaaththiYosi Jeevan said...
ReplyDeleteஅப்புறம் அந்த நடையின் ஸ்டைல்..... அக்கா நீங்களே பாருங்க....!!
எங்களுக்குப் புகையேலயாக்கும்ம்ம்ம் :) :) :///
[co="purple"] ஹா..ஹ..ஹா.. நம்பிட்டேன்ன்ன்:)) மியாவும் நன்றி மணி வருகைக்கும், நகைச்சுவைக் கருத்துக்களுக்கும்.. [/co]
இளமதி said...
ReplyDeleteஹையோஓ... அதிரா... சூப்பர்... :)
ஸ்வான் குடும்பத்தைக் கண்டு பிடிச்சிட்டீங்களோ... எனக்கே சந்தோஷம் தாங்க முடியேலை....:)//
[co="purple"] வாங்கோ இளமதி வாங்கோ... எனக்கும் கவலையாக இருந்துது... குஞ்சுகளைப் படம் எடுத்துப் போட முடியவில்லையே என... அவர்களைப் பார்த்ததும் சந்தோஷம் தாங்க முடியல்ல.
இன்றும் போனேன்.. போகும்போது எங்கும் தேடினேன் ஆட்கள் இல்லை. திரும்பி வரும்போது பார்த்தேன்.., ஐவரும் சன்பார்த் எடுக்கினம்:). [/co]
Cherub Crafts said...
ReplyDeleteஓ... அங்கு பெரும்பாலும் சிப்பி சோகிகள்தான் தெரியுது அஞ்சு.. இனிமேல் கவனிக்கிறேன்.//
buttttttt ..i can see a blue colored bag or an old swim shorts with a rope in the photos
[co="purple"]ஓகே..ஓகே ஒத்துக்கறேன்ன் ஒத்துக்கறேன்ன்:)) பா....புக் கண்ணேதான்ன்:))...
அது சரிதான் அஞ்சு.. அப்படியே செய்கிறேன்ன், இன்று ஒரு குளோத்தை எடுத்து பக்கமா போட்டு விட்டு வந்தேன், ஆனாவர்கள் ஒரு இடத்தில் இருக்கிறமாதிரி தெரியேல்லை... பெரு வெளி எங்கும் சுற்றித் திரிகினம்.. [/co]
மகேந்திரன் said...
ReplyDeleteஇனிய வணக்கம் சகோதரி அதிரா...
கண்டு பிடிச்சிட்டேன் என்று சொன்னவுடன்...
கின்னசிற்கு தகவல் கொடுத்துவிட்டு தான் வந்தேன்.//
[co="blue green"] வாங்கோ மகேந்திரன் அண்ணன் வாங்கோ.. ஹா..ஹா..ஹா.. நேக்கு ஷை ஷையா வருகுதே...:) இனி கின்னசில என் பெயரும் இருக்கப்போகுதே.. மறக்காமல் என் புரொஃபைல் படத்தையும் இணைக்கச் சொல்லிடுங்கோ பிளீஸ்ஸ்:). [/co]
மகேந்திரன் said...
ReplyDeleteஎதிர்பார்ப்பு என்ற ஒன்று தானே நம்மை
உயிர்ப்புடன் வைத்திருக்கிறது...
இன்று நாம் சேமிப்பது வாழ்வது எல்லாம்
நாளை என்ற எதிர்பார்ப்பு நோக்கித்தானே...//
[co="blue green"]ஆவ்வ்வ்வ் மாத்தி ஓசிக்கும் என்னை.. மாத்தி ஓசிக்க வச்சிட்டீங்க... நீங்க சொல்வதும் தத்துவம்தான்ன்..
மியாவும் நன்றி வருகைக்கும்.. கின்னசுக்கு பெயர் அனுப்பி வைத்தமைக்கும்:)).. பாருங்க இங்கின ஆருக்குமே இந்த நல்லெண்ணம் வரவில்லையே:). [/co]
ஆத்மா said...
ReplyDeleteஆஹா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க....
[co="blue green"] அடடா நீண்ட மெளன காலத்துக்குப் பின்.. சிட்டுவா இது.. வாங்க சிட்டு வாங்க... கிளம்பிட்டாங்களாஆஆஆஆஆஆ?:) ...ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க?:)) [/co]
ஆமா உசைன் போல்டு மாதிரி வராம விட்டா சரிதான்
[co="blue green"]ஹா..ஹா..ஹா.. அதாரது? அவ்ளோ நடையழகியோ அவ?:) [/co]
ஆத்மா said...
ReplyDeleteஅப்போ முள் இல்லாத மலருக்கெல்லாம் கற்புத் தேவையில்லையா...
எனக்கென்னவோ கிறுக்குத் தனமான வரியாகத்தான் தெரிகிறது.. ஆனாலும் எனக்கு கிறுக்குத்தனம் பிடிக்கும் என்பதால் அந்த வரிகளும் பிடிக்கிறது//
[co="purple"]ஆவ்வ்வ்வ்வ் ஒவ்வொருவரும் என்னமாதிரியெல்லாம் யோசிக்கிறீங்க சூப்பர்ர்...
ிதைப் படிச்சதும் எனக்கு சடாரென மண்டையில் தட்டிச்சுது.. இதுவும் சரிதானே என... ஆனா பலமா கிட்னியை ஊஸ் பண்ணினேன்ன்..:) பல கருத்துக்கள் உதிச்சன...:)
அதாவது ஜிட்டு.. அனைத்து மலர்களுக்குமே தம்மைத் தாமே பாதுகாக்கும் தன்மையை ஆண்டவன் கொடுத்திருக்கிறார்ர்.. ஆனா பாருங்கோ.. இந்த ரோஜா மலர் என்பது கொள்ளை அழகெல்லோ..
அதாவது 1000 மலர்களை அடுக்கி வைத்தால்.. அனைவரும் அதிகமாக விரும்புவது ரோஜாவைத்தானே? அப்போ ரோஜாவுக்கு களங்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்:))... அதனால ஒரு எக்ஸ்ரா பாதுகாப்பாக கூட இருக்கலாம்:)).. ஹா..ஹா..ஹா..
இப்போ பாருங்கோ தன்னைத்தானே பாதுகாக்க தெரிந்தோருக்கு எக்ஸ்ரா பாதுகாப்பு தேவையில்லை.. ஆனா அத் திறமை எல்லோரிடமும் இல்லை..
ஒரு குழந்தைகூட தன்னைப் பாதுகாக்கும் புத்தி வரும்வரை, பெற்றோர் அதனை கைப்பிடிச்சு கூடவே இருந்து வளர்ப்பதுபோல:))
இதில் நேரடியாக பூவுக்குத்தான் இத் தத்துவம் எனும் கருத்து எடுக்கப்பூடாது..:))..
உஸ்ஸ்ஸ் அப்பாடா.. ஒரு வசனம் எழுதிப்போட்டு அதைச் சமாளிக்க ஒன்பது வசனம் பேச வேண்டியிருக்கே:))..
ஹா..ஹா..ஹா... மியாவும் நன்றி சிட்டு. உங்கள் பக்கம் வரமுடியவில்லை துள்ளுதே.. அதுக்கு ஒரு வழி இருக்காம் முயற்சிக்கிறேன். [/co]
Viya Pathy said...
ReplyDeleteவழக்கும் போலவே படங்களும் பதிவும் அருமை.
“எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் இருக்கும்” உண்மையான வரிகள். நீங்கள் பார்த்தவற்றை சொல்கிற விதம் பாராட்டுக்குரியது.
[co="purple"] வாங்கோ வையாபதி வாங்கோ.. மிக்க நன்றிகள். [/co]
Mahi said...
ReplyDeleteரொம்ப சந்தோஷமான திருப்தி தரக்கூடிய "Feel GOOD" பதிவு அதிரா!
சிப்பிகளை வைத்து முத்தெடுத்து சீக்கிரம் பகிரவேணும், டீல்?
//[co="blue green"] டீல் டீல்ல் விரைவில வருது ஒன்று.. பின்னால வரும் இன்னொன்று.. வெயிட் அண்ட் சீயா...:) [/co]//
ரோஜா மிக மிக அழகாக இருக்கு. வழக்கம் போல என் ஃபேவரிட் கலர் பூவைப் போட்டு என்னை இன்னும் கொஞ்சம் சந்தோஷப் படுத்திட்டீங்க, நன்னி ஹை!
[co="blue green"] உங்களை நினைச்சே இன்றொரு மஞ்சள் ரோஜா படம் எடுத்தேன்ன்... அனுப்பி வைக்கலாம்:)) ஆனா கொஞ்சம் கோஸ்லியா இருக்கும் பறவாயில்லையோ?:)..
ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி மகி. [/co]
இளமதி said...
ReplyDeleteஅதிரா..
என் லப்ரொப் உங்கள் பதிவுக்கு வரும்போதே ஏதேதோ கறமுறன்னு சத்தம் போட்டிச்சு.//
[co="blue green"]அது எலிகள் ஓடி ஒளிச்சிருப்பினம்:)).. பின்ன பயமிருக்காதா அவைக்கு:))
[/co]
அப்புறம் மெல்ல மெல்ல தன் கண்களை நல்லா இறுக்கி மூடிக்கிட்டுது..:(
அதுதான் இவ்வளவு தாமதம். இப்பவும் வேஏற ஒண்ணிலதான் இங்கின வந்தேன்.
அது சரியான எங்க ஊர்க் ”கரிக்கோச்சி” ... இதிலதான் இனித் தொடரும் என் ஊர் வலம்... :(
சொந்தக்கதை சோகக்கதை இருக்கட்டும்...
[co="blue green"] இருக்கட்டும் இருக்கட்டும்.. ஒரு வாசல் மூடினால் இன்னொரு வாசலை ஆண்டவன் திறப்பாராம்ம்.. ஹா..ஹா..ஹா... கரிக்கோச்சி ஆனாலும்.. இப்போ அதில ஏறி வந்திட்டீங்கதானே:)).. சந்தோஷம்.. [/co]
இளமதி said...
ReplyDeleteஅதிரா..
அழகாய் இருக்கினம் அதிரா ஸ்வான் குடும்பம்.
அதுசரி.. இந்த குஞ்சுகள் வெள்ளையா இல்லாம கொஞ்சம் வித்தியாசமான நிறத்தில இருக்கினமே...
இன்னும் அவைக்கு ஒழுங்கா செட்டைகள் முளைக்கேலையோ?.. இல்லாட்டி இதுதான் நிறமோ?..
[co="blue green"] நானும் பார்த்தவுடன் பயந்திட்டேன்ன்ன்.. ஏதும் அசம்பாவிதம் நடந்திடிச்சா... அம்மா அப்பா வெள்ளை ஆச்சே என:)).. ஆனா அப்புறம்தான் கண்டு பிடிச்சேன்ன்.. இன்னும் இறகுகள் முளைக்கேல்லை.
கிட்டத்தட்ட பிறந்தமேனிபோல புஸூ புஸூ வென குட்டிக் குட்டி பஞ்சுபோன்ற சாம்பல் இறகோடிருக்கினம்....
இனி வளரக் கலர் மாறும்.. மாறோணும்:)).. நான் எங்கின போயிடப்போறேன்ன்:)).. படம் பிடிப்பேன்ன் அவர்களின் வளர்ச்சியை:). [/co]
இளமதி said...
ReplyDeleteஅதிரா!...
நீங்க இருக்கிற இடம் கொள்ளை அழகும் இப்படி மனதுக்கு மிகமிக அமைதியும் ஆறுதலும் தாற இடமா இருக்கு. பார்க்கும்போதே அங்கேயே வந்துடவேணும்போல இருக்கு. வரட்டோ..;)
[co="blue green"]வாங்கோ வாங்கோ... கதைச்சுக்கொண்டே நடந்தால் களைப்பும் தெரியாது.. [/co]
நாள் முழுக்க இப்படியான இடத்தில போய் இருக்கோணும். அண்டை அயல் எல்லாத்தையும் மறந்திட்டு....அருமை!!!
[co="blue green"] உங்களுக்கொரு புறுணம் சொல்லோணும்... இப்போ நான் நடக்கும் அந்த ஆற்றங்கரை ஏரியாவில.. ஃபிரீயா ஜிம் மெஷின்கள் பூட்டி விட்டிருக்கினம்... மக்களை ஜிம் செய்ய ஊக்குவிக்கவாம்ம் சூப்பரா இருக்கு.. இன்று கொஞ்சநேரம் செய்தேன்ன் [/co]
எனக்காகவும் நீங்கள் தினமும் கட்டாயம் இங்கெல்லாம் போய் அனுபவியுங்கோ. அப்பிடிப் போகேக்கை இந்த இளமதியையும் நினையுங்கோ.
பக்கத்தில நிழல்மாதிரி வாறனெண்டு.. சரியோ...:).//
[co="blue green"] சொல்லிட்டீங்க இல்ல... இனி அங்கு போகும்போதெல்லாம் உங்கட நினைவு தானாக வந்திடும்...
மியாவும் நன்றி இளமதி.. கரிக்கோச்சி பிடிச்செண்டாலும்... தவறாமல் வந்து பதிவிட்டமைக்கு.[/co]
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅன்புள்ள அதிரா,
பகுதி-25 முதல் பகுதி-36 வரை வருகை தந்து கருத்தளிக்க பாக்கியுள்ளது.//
[co="blue green"] கோபு அண்ணன்.. இப்போ நீங்க.. தன் முயற்சியில் சிறிதும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக தெரிகிறீங்க எனக்கு.. ஹா..ஹா..ஹா.. ஊக்குவிப்புக்கு மியாவும் நன்றி... பூஸோ கொக்கோ விடமாட்டேன்ன்.. அடாது மழை பெய்தாலும் விடாது பின்னூட்டம் போடப்படும்.. ஆனா ஒரு விண்ணப்பம்:):)
நான் பின்னூட்டங்கள் போட்டு முடியும்வரை.. நீங்க பதிவு 45 ஐ வெளியிடக்கூடாது:))... ஹையோ ஏன் ஓடுறீங்க ஓடாதீங்க.. ஓடாதீங்க..:))..
ஹா..ஹா..ஹா.. முடிந்தவரை பின்னூட்டம் இடுகிறேன் கோபு அண்ணன்.. மிக்க நன்றி. [/co]
\\ வாங்கோ கீத மஞ்சரி வாங்கோ.. முதலாவதாகவும் அத்தோடு முதன்முதலாகவும் வந்திருக்கிறீங்க...நல்வரவு மிக்க மகிழ்ச்சி.. அதனால உங்களுக்கு ஏதாவது பரிசு தந்தே தீரோணும்... இந்தாங்கோ .. எடுத்துப்போய் ஒரு வாஸில தண்ணி விட்டு மேசையில வையுங்கோ.. மியாவும் நன்றி.\\
ReplyDelete[im]http://cdn8.staztic.com/app/a/2457/2457853/red-rose-cat-live-wallpaper-2-1-s-307x512.jpg[/im]
நன்றி நன்றி அதிரா. நீங்க சொன்னபடியே வாஸில் தண்ணீர் விட்டு பூவை வச்சிட்டேன். நித்தமும் வாடாத புத்தம்புதிய ரோஜாவுக்கு நன்றி.
கண்படாமல் வாழ்க
ReplyDeleteஇந்த அழகிய சுவான் குடும்பம்.
மணம் வீசும் ரோஜாவாய் அழகான படங்களுடன் அன்னநடை நடந்து
மனம் கவருகிறன தங்கள் பதிவுகள்..பாராட்டுக்கள்..
சுவான் குடும்பம்.ஹீ சூப்பர் அதிரா போல!ஹீ
ReplyDeleteஎன் நடையின் ஸ்பீட்டும், ஸ்டைலும்:)) கூட மாறி விட்டதெனில் பாருங்கோவன்:))..//ஹீ சொல்லவே இல்லை!ஹீ
ReplyDeleteகீத மஞ்சரி said...
ReplyDelete\\
நன்றி நன்றி அதிரா. நீங்க சொன்னபடியே வாஸில் தண்ணீர் விட்டு பூவை வச்சிட்டேன். நித்தமும் வாடாத புத்தம்புதிய ரோஜாவுக்கு நன்றி.//
[co="blue green"] ஹா..ஹா..ஹா.. திரும்படியும் உங்கள் வருகைக்கு மியாவும் நன்றி.
உங்கள் புளொக் பார்க்கலாம் என உங்கள் பெயரை கிளிக் பண்ணினால்ல்.. அது கூகிள் பிளசில் மட்டும்தான் கொண்டுபோய் விடுது..
அங்கு 3,4 தடவைகள் போய், ஒவ்வொரு தடவையும் சுப்புதாத்தாவின் ஹனிமூன் பதிவே ஓபின் ஆகி படிச்சிட்டு வருகிறேன்ன்:))).. இதைப் படித்தால், முடிந்தால் இங்கு லிங் போடுங்கோ அல்லது ஆரிடமாவது பாதை:) கேட்டு வந்து சேருவேன்ன்ன்:)) [/co]
[co="blue green"] வாங்கோ ராஜேஸ்வரி அக்கா.. நானும் அப்படித்தான் வேண்டுகிறேன்ன்.. ஒவ்வொரு நாளும், வோக் போகும்போது , அக்குடும்பத்தை பார்க்க மனதுக்கு எவ்வளவோ சந்தோசமாக இருக்கு.
ReplyDeleteமியாவும் நன்றி.[/co]
தனிமரம் said...
ReplyDeleteசுவான் குடும்பம்.ஹீ சூப்பர் அதிரா போல!ஹீ
Saturday, August 24, 2013 8:49:00 pm
தனிமரம் said...
என் நடையின் ஸ்பீட்டும், ஸ்டைலும்:)) கூட மாறி விட்டதெனில் பாருங்கோவன்:))..//ஹீ சொல்லவே இல்லை!ஹீ
[co="blue green"]வாங்கோ தனிமரம் வாங்கோ.. ஹா..ஹா..ஹா.. அதுதான் இப்போ சொல்லிட்டனே... மியாவும் நன்றி. [/co]
அடடா! அழகழகாக குஞ்சுகள். இப்ப எப்பிடி இருக்கினம்? இன்னும் வளர்ந்து இருப்பாங்கள்.
ReplyDelete