நல்வரவு_()_


Friday 28 May 2010

பெண்வண்டாய்.... வந்தேனே!!!!!!!

இமாவைத் தொடராமல் விட்டிடுவோமா? பின்னாலே மலை உச்சிக்கே போனவர்களாச்சே நாங்கள்:):)...
ஆரம்பித்தது சந்து......
தொடர்ந்தது.. தொடரச்சொன்னது
இமா...

தக்காளி, கிரான்பெரி, உருளைக்கிழங்கு பயன்படுத்தி உருவான வண்டுகள்..
ஆப்பிள், கிரான்பெரி, உருளைக்கிழங்கு & அதிராவின் கிட்னியைப் பாவித்து உருவாக்கப்பட்ட இவர்களுக்கு, தரை பிடிக்காதாம், கோவா இலையில்தான் இருப்பார்களாம்...நாங்கள் மலை ஏறுகிறோமே....சும்மா மசமச என்று பார்த்துக்கொண்டிருக்காமல் தொடருங்கோவன்:).....
தொடர்வதற்கும் “அதிராவைப்போல” தைரியம் வேணுமெல்லோ..... இங்க யாருக்கு வரும்... கிக்..கிக்..கீஈஈஈஈஈஈஈஈஈஎன் ஏனைய கைவண்ணங்கள் சில....

நேரம் போதவில்லை அவசரமாகச் செய்தது...

ரியூலிப்ஸ் வாஸ்... செரிரொமாட்டோ & வைன்ரொமாட்டோ.கரட் இலைகள் தக்காளிப் பூ:
இது யார் இவர்கள்??:):) வெக்கை அதிகமோ இவர்கள் நாட்டில்????(பெயர்களைப் படித்து, ஆட்களைக் கண்டு பிடியுங்கோ)


இதன் அடுத்த பாகம் விரைவில் தொடரும். நான் மெதுவாகப் போடலாம் என இருக்க, இமா வண்டைத் தொடர அழைத்தமையால் உடனே வெளியிட்டிருக்கிறேன். அவசரப் பதிவிது, தவறுகள் இருப்பின் மன்னிக்கவேண்டும்.

பின் இணைப்பு:
நான் “ஆரோக்கியத்துக்காக:)” நடக்கப்போகும்போது என்னை அன்பாக பார்த்து விடைதரும் எங்கள் அயலவர்...@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

“உன்னிடம் என்னென்ன திறமைகள் இருக்கோ,
அவற்றையெல்லாம் பயன்படுத்து,
நன்றாகப் பாடக்கூடியவற்றைத்தவிர,
ஏனைய பறவைகள் பாடக்கூடாதென்றிருந்தால்,
கானகம் மிக அமைதியாகவெல்லோ இருக்கும்”

....-வேன் டைக்-.....

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Sunday 23 May 2010

ஆ..அழகுக்கு அழகு:)


யாரும் திட்டிடக்கூடாது... அதிரா அடுத்தடுத்து தலைப்பாகப் போடத்தொடங்கிற்றாவே என:), ஜெய்..லானி அன்பாகத் தந்ததை அதுவும் ஒரு “அழகை” உடனே போடோணும்போல இருந்துது.... அதனால் போடுகிறேன். பின்னூட்டம் போடாவிட்டாலும், திட்டாமல் ரசித்துக்கொண்டு போங்கோ எனக்கு சந்தோஷமே....

மிக்க நன்றி ஜெய்..லானி!.

இது இன்று வந்த நிலவு:
நேரம் மாலை ஏழு மணி, கிழக்கிலே நிலவு, மேற்கிலே நல்ல சூரியன்.... ஒரே நேரத்திலே எடுத்த படங்கள்..பின் இணைப்பு:
கங்கை ஆற்றில்... சீ... எங்கள் ஆற்றில் நேற்று வந்த Container Ship.... எந்தப்பெரிய கப்பல்ல்ல்ல்ல்ல்ல்

இதில் மேலே பறப்பவர் Seagull


யாராவது திட்டிப்போடுவினமோ என உடம்பெல்லாம் நடுங்குது பூஸாருக்கு... இது யார் அனுப்பிய படம் எண்டெல்லாம் குறுக்குக்கேள்வி யாரும் கேட்கப்படாதூஊஊஊஊ... எல்லோருக்கும் தெரிந்த நகைச்சுவையாளரேதான்...###################################
முள் நிறைந்த செடியிலேதான் அழகு வாய்ந்த ரோஜா பூத்து மலர்கிறது,
அதுபோல் சொல்லொண்ணாத துயரங்கிடையேதான் இன்பமும் மலரும்
###################################

Wednesday 19 May 2010

“தம்பியும் .....ம்ம்ம்ம்”

தம்பி ஜீனோ தனக்கு இனிப்பாகத் தரும்படி கேட்டிருந்தார்.... அதுதான்.. பலமாக சிந்தித்து(எவ்வளவு பெரிய “கிட்னி” அதிராவுக்கு எனச் சொல்வது கேட்குது தேங்கியூஊ) இந்த முடிவுக்கு வந்தேன்.

தம்பி பேபியாக இருக்கும்போதே கடலைக்கறியைத்தான் விரும்புவார், அதுதான் தம்பிக்கு...

ஜீனோ!! இது ஆயா செய்ததல்ல, அக்கா செய்தனான் பயப்பூடாமல் சாப்பிடுங்கோ..

ஜீனோ சொன்னாக் கேளுங்கோ.. உந்த விபரீத ஆசையெல்லாம் வாணாம் கீழே இறங்குங்கோ...களைச்சிருப்பீங்களே ஜீனோ!!! வாங்கோ “க்கிறஷா” குடிக்கலாம்... தம்பிக்கு லெமன், அக்காவுக்கு ஸ்டோபெரி..My favourite add::: “CRUSHA”

http://www.youtube.com/watch?v=qvEOjDeLWkA

ஜீனோ, உங்கட டோராவின் பெஸ்ட் ஃபிரண்ட் டியகோ(Diago), நீங்களும் கர் சொல்லாமல் கதையுங்கோ.தம்பி சிங்கம்ல???? தம்பி வி“ளை”யாட ஒரு சிங்கம்... உப்பூடிப் பயந்தால் எப்பூடி??? பயப்படாமல் வி“ழை”யாடுங்கோ தம்பீஈஈஈஈஈ


நெடுகவும் வீட்டுக்குள் இருக்கப்படாது வெயிலும் படவேணும் அதுதான் உடம்புக்கு நல்லதெண்டு சொல்லீனம்.... கொஞ்சம் பொறுங்கோ ஏதோ சத்தம் கேக்கிற மாதிரி இருக்கே... தம்பி உங்களுக்குக் கேட்குதோ???அங்க பாருங்கோ அக்காவின் வீட்டுக்கு மேலால, உது “வேவுப் பிளேன்” போலதான் தெரியுது, ஆர் றைவர்:) எனப் பாருங்கோ.... எனக்குத் தெரிஞ்சுபோச்சு, பிளேன் சரிஞ்சுகொண்டெல்லோ போகுது:) பிறகென்ன எங்கட பைலட் அண்ணனேதான், எனக்குத் தெரியும் இப்படியெல்லாம் நடக்குமென்று.... தம்பி ஓடிவாங்கோ உள்ளே போய் எங்காவது “சேவ்” ஆன இடமாக இருக்கலாம்..


(நான் எடுத்த படம் தான் மொபைலால் ஸூம் பண்ணி எடுத்தமையாலோ என்னவோ சின்னதாகத்தான் வருகிறது பிளேன்)


அப்பாடா... இதுதான் பாதுகாப்பான இடம்... Bye!! Bye!!பின்(ஊசி)இணைப்பு: அதிர(ரா)மான்
(ஸாதிகா அக்கா!!இப்ப ஓக்கையோ பின் இணைப்பு?)

#################################################
“மரத்தின் ஒடுக்கமே விதை
விதையின் விரிவே மரம்”
#################################################

Saturday 15 May 2010

“அடிரா” மழைடா அட மழைடா....

இமாவின் மழையைத் தொடர்ந்து... அடிரா..சீ.. எனக்கே தடுமாற்றமாகுது அதிரா வீட்டு மழை... இப்போது எமக்கு மழை வருமா எனத் தெரியவில்லை, எனவே கைவசம் இருந்தவற்றையெல்லாம் ஒண்ணொண்ணாத் தொகுத்து எடுத்துப் போடுகிறேன்.. இதுக்குத்தான் சொல்றது கண்டது நிண்டதை எல்லாம் படமெடுத்து வைத்தால் ஒருநேரமாவது உதவும் என்று..

இது சில மாதங்களின் முன்பு எடுத்தது
மூன்று கிழமைக்கு முன்பு ஒருநாள், பாடசாலையில் இருந்து பிள்ளைகளை அழைத்து வருவதற்காகப் போனேன், அன்று நல்ல மழை, ஸ்கூல்பெல் அடிக்க நேரம் இருந்தது, எனக்குப் பொழுது போகவில்லை, அப்போ என் வாகனத்தின் உள்ளே இருந்து படமெடுத்தேன் என் மொபைலால்...


மழை முன் கண்ணாடியில் விழுந்து, உருண்டு போவது தெரியுதோ??
அதே மழைநாள் எங்கள் வீட்டுக் கார்டினில் பார்த்தேன் ஒரு மயில்(மயில் என்றுதான் இதை நினைக்கிறேன், ஏனெனில் எங்கள் வீட்டுக்கு பின் பக்கமாக பெரிய ஹொல்வ் கிளப் உண்டு.. அதைத்தாண்டி மான், மயில், முயல்பிள்ளைகள் எல்லோரும் இருக்கிறார்களாம், இடையிடை இப்படி அவர்கள் வளவுகளுக்குள் விசிட் பண்ணுவதுண்டு., ஆண்மயிலென நினைக்கிறேன் தோகை இல்லை... வெளியே போனால் ஓடிவிடுவார் எனப் பயந்து கிச்சின் ஜன்னலூடாக எடுத்த படம்..இதுவும் ஒரு அழகான மழை நேரம்....


பின் இணைப்பு:
பேபி அதிரா, சொல்லுக் கேட்கவேணும் மழையில் நனைந்து தடிமனாக்கிடப்போகுது உள்ளே வாங்கோ..தம்பியும் அக்காவும் மழை பற்றிக் கலந்துரையாடும்போது ஒரு கிளிக்... இது அன்புத்தம்பி ஜீனோ கொசுமெயிலுக்கு அனுப்பினார்...
பிளீஸ் இமா டிசுப்ரேப்புப் பண்ணக்கூடாது, ரீவியில் வாழை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் பாட்டுப்போகுது, இந்த நேரம் பார்த்து, என்னைப் பார்க்க விடாமல்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
இதில்போய் பாருங்கோ, நன்கு அழகாக தெரிகிறது...
http://www.youtube.com/watch?v=fJr2evLANsE


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
உழைப்பு, பிழைப்புக்காக மட்டுமல்லாமல்,
உண்மைக்காகவும் இருக்க வேண்டும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@Friday 14 May 2010

சொந்தக்காரங்க... எனக்கு ரொம்பப் பேருங்கோ....


ஏனோ தெரியவில்லை, இவர்களைப்பார்த்ததும், படமெடுத்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் மனதில் வந்துவிட்டது. எடுத்தேன், பின்பு இங்கு போடவேண்டும் என்ற ஆசை அதிகமாகிவிட்டது.... அதுதான்..சுட்டிட்டேஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.. சீ இதென்ன இது போட்டிட்டேஏஏஏஏஏன்ன்ன்ன்ன்.. கடகடவெனப் பாருங்கோ உங்களுக்கு போறிங் வரமுன்ன்ன்ன்ன்ன்..:).

ஒற்றுமையான தம்பதிகள்..ஏதோ அலுவலாகப் போன இடத்தில் பக்கத்திலே ஒரு பொண்ட்.. அதில் இவர்களைக் கண்டேன் கையில் கமெராவும் இருந்தமையால் சூட் பண்ணிட்டேன்.. இது வேற சூட்:).
இவதான் “தாரா”..


ஆ... கண்பட்டுவிட்டதுபோலும் கோபித்துக்கொண்டு எதிராகப் போயினமே....
பின்பு ஒற்றுமையாகி அருகே வந்தார்கள், நாம் எதிர்பார்த்துப்போகாமையால் உணவேதும் கொண்டு போகவில்லை, கையை நீட்டியதும், ஆ.. என விரலை உள்ளே இழுத்துவிட்டார்... ஒருகணம் திடுக்கிட்டுப், பின்பு ஒரு உண்மை தெரிஞ்சுகொண்டேன்..... தாராக்குப் பல்லில்லை, அதிராவுக்குப் பல்லிருக்கு.. கிக்..கிக்...கீஈஈஈஈ...
அவர்கள் திரும்பிச் சென்றபோது, அதிர்ந்துவிட்டோம் பார்த்து, அதில் ஒருவருக்கு கால் உடைந்து அதை இறகின்மேலே போட்டிருக்கிறார்.
அவர்கள் போகிறார்கள் Bye!! Bye!!!
அங்கே நீந்திய இன்னொரு ஜோடி... யாரையோ நினைக்கவைக்கிறார்கள் இவர்கள்:)..இவர்களும் அங்கிருந்த உறவினர்தான்..
இன்னும் சிலர் அங்கு இருந்தார்கள், எல்லாப் படங்களையும் இணைக்கவில்லை.

ஊசிக்குறிப்பு:
இதைப்பார்க்கும் உங்களில் யாருக்காவது தைரியம்:) இருந்தால், பறவைகள், விலங்குகள்... படங்களை நீங்களே.. எடுத்து தொடர் பகுதியாக தொடருங்கள் எனக்கேட்டுக்கொள்கிறேன்... இமா, சந்தனா, ஜெய்லானி, ஜீனோ... அல்லது யாராவது.

ஆனால் நீங்கள் இதைத் தொடரவில்லையாயின், அதற்குச் சில காரணங்கள் இருக்கலாம்..
1. கமெரா இல்லாமல் இருக்கலாம்.
2. நேரமில்லாமல் இருக்கலாம்.
3. பறவை, விலங்கினத்தை விரும்பாதவராக இருக்கலாம்...
இவை அனைத்தையும் தாண்டி.. முக்கிய காரணம்....இதுவாகத்தான் இருக்கும்... “ஒரு பூஸுடன் மோதப்பயம்”:)...2222222222222222222222222222
எதற்கும் காலம் வரும், என எண்ணி,
கடமையைக் கைவிடலாகாது

2222222222222222222222222222^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பிந்திய இணைப்பு::
உஸ் அப்பாடா பூஸோ கொக்கோ??? இப்படியெல்லாம் எதிர்ப்பார்கள் எனத் தெரிஞ்சுதானே, வாயைக் கொடுத்து வம்பில மாட்டப்படாதூஊஊ என
பூஸ்குட்டிக்கு ~சூப்ஸ்ஸ்~ வாயில வச்சுவிட்டிட்டேன்...

1)முதலாவது மோதல்... நியூ..விலிருந்து..
தாரா தாரா வந்தாரா என வெள்ளைக்கு கறுப்பா போட்டு எதிர்த்திட்டா இம்ஸ்ஸ்ஸ்மாஆஆஆ.... போய்ப் பாருங்கோ... மற்றவைக்கு துணிவில்லைப்போல ஓக்கை காக்கா போகிறேன் ... முறைக்காதீங்கோ..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Tuesday 11 May 2010

எனக்குப் பொழுது போகவில்லை:):)

நிலவுக்கு எசப்பாட்டு.... சூரிய அஸ்தமணம்.... சீ இதென்ன இது, அஸ்தமனம்..
இரவு 9..9.30 மணிபோல் எடுத்தேன்... சூடு ஆறமுன்....


பாருங்கோ... பாருங்கோ... இவர்தான் எங்கட “சூஊஊஊரியன்”
சூப்பரா இருக்கு இல்ல???? (எனக்கு நானே சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டியதுதான்.. :)..)ஹைஷ் அண்ணன், ஜீனோ சூரியனை, சன்னைக் காணவில்லை எனக் கேட்டதனால், காவல் இருந்து, இன்று இரவு எடுத்தேன்... மலையில் மறையமுன் ஒரு கிளிக்க்க்..


என்னைக் கண்ட:) நாணத்தால் மலையின் பின் மறைகிறார்...


முகிலை இழுத்துப் போர்த்துக்கொள்கிறார்....
பின் இணைப்பு:
நாங்களெல்லாம் பேபியாக இருக்கும்போதே... எவ்ளோ பாரத்தையும் தாங்குவோம்.. சிரித்தமுகத்தோடு.. சுமைதாங்கீஈஈஈஈஈஈஈ.

*******************************
இயற்கை வனப்பை வர்ணிக்கும்போது
இயல்பாகவே கவிதை உருவாகி விடுகிறது
*******************************