நல்வரவு_()_


Saturday 15 May 2010

“அடிரா” மழைடா அட மழைடா....

இமாவின் மழையைத் தொடர்ந்து... அடிரா..சீ.. எனக்கே தடுமாற்றமாகுது அதிரா வீட்டு மழை... இப்போது எமக்கு மழை வருமா எனத் தெரியவில்லை, எனவே கைவசம் இருந்தவற்றையெல்லாம் ஒண்ணொண்ணாத் தொகுத்து எடுத்துப் போடுகிறேன்.. இதுக்குத்தான் சொல்றது கண்டது நிண்டதை எல்லாம் படமெடுத்து வைத்தால் ஒருநேரமாவது உதவும் என்று..

இது சில மாதங்களின் முன்பு எடுத்தது
மூன்று கிழமைக்கு முன்பு ஒருநாள், பாடசாலையில் இருந்து பிள்ளைகளை அழைத்து வருவதற்காகப் போனேன், அன்று நல்ல மழை, ஸ்கூல்பெல் அடிக்க நேரம் இருந்தது, எனக்குப் பொழுது போகவில்லை, அப்போ என் வாகனத்தின் உள்ளே இருந்து படமெடுத்தேன் என் மொபைலால்...


மழை முன் கண்ணாடியில் விழுந்து, உருண்டு போவது தெரியுதோ??
அதே மழைநாள் எங்கள் வீட்டுக் கார்டினில் பார்த்தேன் ஒரு மயில்(மயில் என்றுதான் இதை நினைக்கிறேன், ஏனெனில் எங்கள் வீட்டுக்கு பின் பக்கமாக பெரிய ஹொல்வ் கிளப் உண்டு.. அதைத்தாண்டி மான், மயில், முயல்பிள்ளைகள் எல்லோரும் இருக்கிறார்களாம், இடையிடை இப்படி அவர்கள் வளவுகளுக்குள் விசிட் பண்ணுவதுண்டு., ஆண்மயிலென நினைக்கிறேன் தோகை இல்லை... வெளியே போனால் ஓடிவிடுவார் எனப் பயந்து கிச்சின் ஜன்னலூடாக எடுத்த படம்..இதுவும் ஒரு அழகான மழை நேரம்....


பின் இணைப்பு:
பேபி அதிரா, சொல்லுக் கேட்கவேணும் மழையில் நனைந்து தடிமனாக்கிடப்போகுது உள்ளே வாங்கோ..தம்பியும் அக்காவும் மழை பற்றிக் கலந்துரையாடும்போது ஒரு கிளிக்... இது அன்புத்தம்பி ஜீனோ கொசுமெயிலுக்கு அனுப்பினார்...
பிளீஸ் இமா டிசுப்ரேப்புப் பண்ணக்கூடாது, ரீவியில் வாழை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் பாட்டுப்போகுது, இந்த நேரம் பார்த்து, என்னைப் பார்க்க விடாமல்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
இதில்போய் பாருங்கோ, நன்கு அழகாக தெரிகிறது...
http://www.youtube.com/watch?v=fJr2evLANsE


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
உழைப்பு, பிழைப்புக்காக மட்டுமல்லாமல்,
உண்மைக்காகவும் இருக்க வேண்டும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@25 comments :

 1. ம்ம்ம்...ம்ம்..சபாஷ்..சரியான போட்டி!

  ReplyDelete
 2. அடடா நான் சொல்ல வேண்டியதை ஜீனோ சொல்லிட்டாரே!!! வடை போய் சட்னி கிடைச்சுதே!!!..எங்கே போய் முடியப்போகுதோ!! நா மழைய சொன்னேன்.

  ReplyDelete
 3. அதுசரி..முட்டையிலிருந்து ஆமை வந்துச்சா , இல்லை ஆமை முட்டை போட்டு ஆமை குட்டி வந்துச்சா ??? !!!.

  ReplyDelete
 4. மழைத்துளிகள் வடியத் தோதாய்ச் சரிந்து கொடுக்கும் இலைகள்.. அழகு.

  //மழை முன் கண்ணாடியில் விழுந்து, உருண்டு போவது தெரியுதோ??//
  ம். கண்ணாடியில அதுவும் தெரியுது, தெரியாததும் தெரியுது. ;)

  அழகான மழை நேரம், அழகான மாலை நேரம். அழகு படங்கள் அதிரா.

  பின்னிணைப்புகள் அதை விட அழகு. ஆனாலும்.... பூஸ் ஃப்ரென்ட்தானே!!!! ;)

  தாரா, இது பெசன்ட்!!!
  http://en.wikipedia.org/wiki/Common_Pheasant

  ReplyDelete
 5. ம்ம்ம்...ம்ம்..சபாஷ்..சரியான போட்டி! // கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நோப் ஜீனோ.. இது போட்டியல்ல, இமா அழைத்ததும் தொடராமல் இருக்க மனம் வரவில்லை.

  முதலாவதாக வந்த ஜீனோவுக்கு இந்தாங்கோ... இது ஆயா சுடவில்லை அதிராக்கா சுட்ட வடை:). நன்றி ஜீனோ.

  ReplyDelete
 6. வாங்கோ ஜெய்..லானி, மழை சார்ஜாவில்தான் முடியப்போவதாகக் கேள்விப்பட்டேனே உண்மையோ?:).

  இல்லை ஜெய்..லானி, அது அழகான 55 செக்கண்ட் வீடியோ, ஆனால் இதில் இணைக்கும்போது ஸ்பீட்டாகப் போகுது, அப்போ அவசரத்தில் செய்து போட்டுவிட்டு ஓடினேன், ஆனால் மாற்ற முடியாமல் இருக்கு. மிக்க நன்றி.

  ReplyDelete
 7. இமா... அழகு சொன்னதற்கு மிக்க நன்றி.

  கண்ணாடியில அதுவும் தெரியுது, தெரியாததும் தெரியுது. ;)/// எப்பூடி இப்படிக் கரெக்ட்டாக் கண்டு பிடிக்கிறீங்க?? :).

  ஆனாலும்.... பூஸ் ஃப்ரென்ட்தானே!!!! ;)// அவர்கள் ஃபிரெண்ட்ஸ்தான் இமா, பூஸ் ரீவி பார்க்க, ஆமையர் விடாமல் குழப்புகிறார், என்னால் யூ ரியூப்பில் உ??ள்ளபடி இணைக்கமுடியவில்ல்லை. இதில் போய் பாருங்கோ..

  http://www.youtube.com/watch?v=fJr2evLANsE

  தாரா, இது பெசன்ட்!!!// ஓ இமா எப்பூடிக் கண்டு பிடிச்சீங்க? நான் யோசித்தேன், என்னைக் கண்டதும் எழும்பிப் பறந்துபோனது, மயில் இப்படிப் பறக்குமோ எனத் தெரியாது, ஒருவேளை குஞ்சு மயில்தானே பறக்கும் என நினைத்தேன். நல்ல அழகான பறவையாக இருக்கு. மிக்க நன்றி இமா.

  ReplyDelete
 8. அதீஸ், மழை அழகு. மயில் !?( பெசன்ட் ) அழகு. மழையில் நனையும் பேபி அதிரா ( கி. பி அல்லது கி. மு ) க்கு சளி பிடிக்கப் போவுது.

  ReplyDelete
 9. உழைப்பு, பிழைப்புக்காக மட்டுமல்லாமல்,
  உண்மைக்காகவும் இருக்க வேண்டும்
  அருமையான பொன்மொழி.நீங்களும் இமாவும் பாலைவனத்தில் மழை ஆசையை ஊட்டக்கூடாது,இங்கும் இன்று கொஞ்சம் மந்தாரமாக உள்ளது.படங்கள் சூப்பர்.

  ReplyDelete
 10. சூப்பரான கிளீக்குகள்,

  மழையில் எடுத்த படங்கள் அருமை.

  வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கு பாட்டு ரொம்ப பேமஸாச்சே ஆனால் உங்கள் லின்கை என்னால் கேட்கமுடியல.

  பரவாயில்லை மான் மயில் , கடல்கலுக்கு நடுவில் இருக்கிறீர்கள்.

  எங்களுக்கு, கடல பார்க்கவும், மான் மயிலை பார்க்கவும் அந்த அந்த இடத்துக்கு தேடி போனால் தான் உண்டு.

  ஆனால் வீட்டிலிருந்து இரங்கும் பூஸார் மட்டும் கரெக்டா ஆஜர் ஆகிடுவார்,போன வெள்ளி நானும் ஹஸும் வெளியில் கிளம்ப கீழே இறங்கியதும் ஒரு பூஸார் (வெள்ளை) கார் மேலும், மற்றொரு பூஸார் காரில் கீழேயும் உட்கார்ந்து கதைத்து கொண்டிருந்தனர், உடனே பேபி அதிராவின் ஞாபகம் வந்து விட்டது, ஒரு கிளிக் ,

  ReplyDelete
 11. நன்றி வாணி. அது ”பெசண்ட் மயில்”.....இது எப்பூடி இருக்கு?.

  மழையில் நனையும் பேபி அதிரா () க்கு சளி பிடிக்கப் போவுது.// ஆடு நனையுதென... அந்தக் கதை இல்லையே....:)

  ( கி. பி அல்லது கி. மு )/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..இது சு.சி.மு(அதாவது சுவீட் சிக்ஸ்-ரீனுக்கு முன்..கிக்..கிக்...கீஈஈஈஈ

  ReplyDelete
 12. ஆசியா மிக்க நன்றி... ஏன் பாலைவனத்தில் மழைவராதோ? உண்மையாகத்தான் கேட்கிறேன். ஆனால் மண் மழை என வருமாமே? அப்படியானவற்றைப் படமெடுத்துப்போட்டால் பார்க்க ஆசையாக இருக்கும்.

  ReplyDelete
 13. ஜலீலாக்கா.. மிக்க நன்றி. வாழை.. மீனுக்கும் பாட்டு அந்தநேரம் எனக்கு பைத்தியம் பிடித்ததுபோல கேட்பேன்.. இப்பவும் அலுக்காது. அந்த வீடியோவில் அப்பாட்டு இல்லை, பூனையாரும் ஆ...மையாரும் வி “ழை”யாடீனம்....

  பூஸாரைப் படமெடுத்தீங்களோ? உங்கள் ஹஸ் கேட்டிருப்பாரே, எதுக்கு பூனையை எங்குகண்டாலும் படமெடுக்கிறீங்களென?:), புளொக்கில் போடுங்கோ பார்க்கிறேன்.

  ReplyDelete
 14. அந்த மழையை விட அழகு லங்கையின் கொஞ்சும் தமிழ். கலக்குங்க.

  ReplyDelete
 15. மழையில் கிளிக்கியது அருமை.பதிவிடுவதில் அதீஸின் ஸ்டைலே தனிதான்.இப்பொழுதும் ஊசி(சின்ன)பின்னூட்டம்தான்.(அதீசின் கர்ர்ர்ர்ர்ர் சப்தம் கேட்டு நாளாச்சு இல்லே?

  ReplyDelete
 16. ஆ.. அன்னு மிக்க நன்றி நல்வரவு. அன்னு என்றவுடன் எனக்கு, அன்னுவின் தோசைதான் நினைவுக்கு வருகிறது. கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு முன்பிருக்குமென நினைக்கிறேன், உங்கள் முக்கூட்டு பவுடர் போட்ட தோசை சுட்டேன், அதை இப்பவும் மறக்கமுடியாமல் இருக்கு. அதன்பின் பெரிதாக உங்களைச் சந்திக்க முடியவில்லையே.

  ReplyDelete
 17. ஸாதிகா அக்கா வாங்கோ. எங்கே போயிருந்தீங்கள்??? தேடாத இடமெல்லாம் தேடினேன்.... மீண்டும் எங்காவது ஊர் சுற்றப்போய்விட்டீங்களோ என யோசித்தேன். இனிக் காணாமல் போகாதீங்கோ அதிராபோல ஒழுங்கான:) பிள்ளையாக இருக்க வேண்டும் ஓக்கை?.

  என்னாது.. ஊசி சின்னதாக இருக்கோ? சொல்லிட்டீங்க இல்ல இனிப்பாருங்கோ கிக்..கிக்..கீஈஈஈஈஈஈஈஈஈஈஈ மிக்க நன்றி ஸாதிகா அக்கா. எனக்கும் நேரம் கிடைப்பது கஸ்டமாகவே இருக்கு.

  ReplyDelete
 18. லைலா வரட்டும் என காத்து (காத்து) இருந்தேன். நாளைதான் இந்தியாவை தாண்ட போகுதாம். போட்டி படங்கள் லைலா போனபின், இது அந்த Pin அல்ல இது வேற பின்....

  ReplyDelete
 19. ஹைஷ் அண்ணன் வாங்கோ. மிக்க நன்றி. புதிர்போட்டிருக்கிறமாதிரித் தெரியுது... புரிஞ்சமாதிரியும் இருக்கு புரியாதமாதிரியும் இருக்கு. மழையைப் பற்றிப்போட்டால் மழையைப்பற்றிக் கதைப்பதை விட்டிட்டு காத்தைப்பற்றி என்ன கதை? உதுதான் நான் அப்பவே சொல்லிட்டனே பூனைபற்றிக் கேட்டால் எலிபற்றிச் சொல்லுவார் என.

  அதுசரி முந்தி ஏதோ சாந்தி எண்டு வச்சினம் இப்போ லைலாவோ? எப்பவுமே காத்துக்குப் புயலுக்கெல்லாம் பெண்கள் பெயராகவே வைக்கினமே ஏன்ன்ன்ன்???

  போட்டியோ? எங்களோடயோ? ஆ.... நீங்களுமோ? மீஈஈஈ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  ReplyDelete
 20. காரோட்டும் போது மொபைலை கையில் எடுக்கக் கூடாது என்று உங்கட நாட்டில் சட்டம் போடச் சொல்லோனும் அதீஸ்.. :)) வெளியில் இறங்கி எடுத்திருந்தால் படம் இன்னமும் நன்றாக வந்திருக்கும் :)) (அதுவரைக்கு கேமரா உயிரோடிருந்தால் :)) )

  ReplyDelete
 21. சந்து, காரோடும்போது மொபைல் கையில் எடுக்கப்படாது என முதன்முதலில் சட்டம் வந்ததே பிரித்தானியாவில்தான் பின்னர்தான் அமெரிக்கா கனடாவில் கொண்டுவரப்பட்டதாக நினைவு. இது பார்க் பண்ணியிருக்கும்போது, பொழுதுபோகாமல் செய்த வேலை. பொழுதைப் போக்க என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்குப் பாருங்கள்.

  ஊரிலெண்டால் பக்கத்துவீட்டுக் குட்டீசைக் கூட்டிவந்து அழகாக மேக்கப் போட்டுவிடுவது அப்போது என் பொழுதுபோக்காக இருந்தது.....

  ReplyDelete
 22. // ஊரிலெண்டால் பக்கத்துவீட்டுக் குட்டீசைக் கூட்டிவந்து அழகாக மேக்கப் போட்டுவிடுவது அப்போது என் பொழுதுபோக்காக இருந்தது.....//
  பாவம் அந்த குட்டீஸ் எல்லாம்.

  ஏன் இப்ப உங்கட வீட்டுப் பக்கம் குட்டீஸ் இல்லையோ? எல்லோருமே வயசானவர்களோ?????

  ReplyDelete
 23. வாஆஆஆஆணிஈஈஈஈஈஈஈஈஈ.... அது வேஏஏஏற, இது வேஏஏஏஏற:):):):)

  ReplyDelete
 24. மழையைவிட, ஒரு ஒற்றைக்கண் மாயாவி, புதைபொருள் ஆராய்ச்சி சாலையிலிருந்து எடுத்த மொபைலில் படம் எடுப்பதுதான் எனக்குத் தெரியுது....

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நெ தமிழன் வாங்கோ...
   எப்பூடி இம்முறை கரீட்டா பதில் தருகிறேன்:) எப்படி பழைய கொமெண்ட்ஸ் மிஸ்சாகிறது என யோசிச்சு கண்டுபிடிச்சமையால் இப்போ கரெக்ட்டா பதில் தாறேன்.
   அதாவது நான் மொபைலில் இருந்தே கொமென்ஸ் ஐப் பப்ளிஸ் பண்ணுவதால், வாசிக்காமலேயே பப்ளிஸ் பண்ணுவேன், அப்போ புதுப் போஸ்ட் கொமெண்ட்ஸ் உடன் இப்படி பழைய போஸ்ட் கொமெண்ட்டும் வந்தால், எனக்கு தெரியாமல் போய் விடுது, அதனால இப்போ படிச்சு பார்க்கிறேன்... எந்தப் போஸ்ட்டுக்கானது என்பதை மட்டும்...

   அது நோக்கி நோக்க்கி நோக்கியா 100 /300என நினைக்கிறேன் அப்போதான் ஐபோன் வன் வெளியாகி கணவர் வாங்கியிருந்தார்:)..
   மியாவும் நன்றிகள்..

   Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.