என்னாது தலைப்பைப் பார்த்ததும், எல்லோருக்கும் தலை சுத்தி, தங்களின் முதுகை, தாமே பார்க்கும் பாக்கியம் அதிராவால கிடைச்சிருக்குமே:)). அது குயிலிங் கார்ட்டை சோட் அண்ட் சுவீட்டா குயில் எண்டமாக்கும்:))..
ஸ்ஸ்ஸ்ஸ் “இந்தாட்டிக்கா போய் வந்ததுதான், இன்னும் கிளீன் பண்ணி முடியுதில்ல”
============================================
சரி சரி மீ இந்தாட்டிக்காவால வந்ததும் வராததுமா செய்த முதல் வேலை இதுதான்.. இன்று என் இங்கத்தைய வைட் நண்பியின் பிறந்ததினம், என் முன்னைய குயிலிங் கார்ட்டைப் பார்த்து, ஒரு மணித்தியாலம் அதுபற்றி ரசிச்சு ரசிச்சுப் பேசுவா.. அவ்ளோ ஆசை:)).. அப்போ அஞ்சுவின்.. இளமதியினதைப் பார்த்தால்ல்:)) மீ காட்டமாட்டனே:)) [ஹையோ ஒரு பேச்சுக்குச் சொன்னேன்:))... ]அதனால்தான் அவவுக்கு இதைச் செய்தேன், இப்போ ஷோ கேஷில் இதை வச்சிருப்பா.. வீட்டுக்குப் போவோருக்கெல்லாம் காட்டுவா:).
X Box Games விளையாட வாங்கிய மைக் பொக்ஸ்ஸில், இப்படி இரு கார்ட் இருந்துது, பயன்படுமே என எடுத்து வச்சேன்ன்.. யூஸ்ஃபுல் ஆச்சு..
அதற்கு இப்படி பேப்பர் ஒட்டி அழகாக்கிட்டு...
கார்ட்டை செய்து முடிச்சிட்டேன். மேல் மூலையில் பலூன்போல செய்தேன், ஆனா சரியான வடிவம் வரவில்லைப்போலும்.
=======================INTERVAL=========================
நான் “இந்தாட்டிக்கா” வால வந்ததும், தங்கட கார்டினில் பூத்த, இந்த, “அஞ்சு” இதழ் பூவை அனுப்பி வரவேற்றவர்... சே..சே.. பெயர் சொல்ல எனக்கு “ஷை”யா வருது.. நீங்களே கண்டுபிடியுங்கோ:).
================முடிஞ்சு போச்ச்ச்ச்.. இடைவேளை:)==============
சரி இப்போ மீ பொயிண்ட்டுக்கு வந்திட்டேன்:).. இம்முறை “இந்தாட்டிக்கா” வில வாங்கினேனாக்கும் இவற்றை. இதில் ஒழுங்கா கலர் புரியுதில்லை, திரும்ப படம் எடுத்து போட ரயேட்டாக இருந்திச்சா.. விட்டிட்டேன். இதில் மேலே இருப்பது அழகான புலூ கலர். கீழே கடசியில் இருப்பது ஒரேஞ் கலர்.. போனமுறை லூட்ஸ்ஸில வாங்கிய பிரேஸ்லட்டுக்கு சூப்பரா மச் பண்ணுது.. மகி நோட் திஸ் பொயிட்:)).
அதுசரி, ஏன் மேலே ஒருவர் சோடி இல்லாமல் இருக்கிறார் என யோசிப்பீங்களே:) அந்த சொந்தக் கதை... யோகக் கதையைக் கொஞ்சம் கேளுங்கோ:))) அதுக்கு முதல்.. அஞ்சூஊஊ டிஷூ பிளீஸ்ஸ்:)).. பிங் கலரிலதான் வேணும்:).
அது அழகான வெள்ளைக் கல்லு பதிச்ச தோடு, கணவர் சொன்னார் அனைத்திலும் அதுதான் நம்பர் வன் என.. சரி அப்போ முதலாவதா அதைப் போடுவமே என போட்டனா.. வீட்டுக்கு திரும்பி வந்தால் ஒரு காதைக் காணம்:))... இன்னொரு டிஷ்சூ பிளீஸ்ஸ்:)).
இதுவும் எனக்கு சேகரிக்க பிடிக்கும் விதம் விதமா.. இங்கு வெளியில் போகும்போது வைப்பது குறைவு, ஆனாலும் கண்டால் வாங்காமல் விடுவதில்லை.
ஆங்ங்ங்ங் ஆரும் டச் பண்ணப்பூடா... தொட்டாலும் கறுக்காத தங்கம்.. 32 கேரட் ஹையோ இது வேற கரட்:)) ஓவரா புழுகிட்டமோ?:) இதுவும் அங்கின வாங்கியதுதான், இங்கு எங்க போடப்போறேன், இனி போட்டாலும் தெரியாது குளிர்காலம் தொடங்குது, ஆனாலும் இவை எல்லாம் வாங்கி வாங்கி சேர்ப்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இது கறுக்காதாம் என கடைக்கார அங்கிள் சொன்னார், கறுத்தால், ரிக்கெட் செலவு பார்க்காமல் கொண்டு வருவேன் உடனே என சொல்லிட்டுத்தான் வந்தேன்:) எங்கிட்டயேவா?:) அதிராவோ கொக்கோ:).
குட்டி இணைப்பு:
இவற்றை “மே”யில நட்டேன், இப்போ வந்து பார்த்தால் இப்பூடி விளைஞ்சிருக்கு:) விளைச்சல் எப்பூடி? நான் வெங்காயத்தைக் கேட்டனாக்கும்:)).
=================================================================
கோபம் மனதில் இருக்க கூடாது
வார்த்தையில் தான் இருக்க வேண்டும்..!!!
அன்பு வார்த்தையில் மட்டும் இருக்க கூடாது
மனதிலும் இருக்க வேண்டும்...!!
இந்த அரிய தத்துவத்தை,
உங்களுக்காக வெற்றிகரமாகக் களவாடி எடுத்து வந்தவர்..
புலாலியூர்ப் பூஸானந்தா:)
=================================================================
|
|
Tweet |
|
|||









