கதவைத் தட்டாத காரணத்தினால் எத்தனையோ சந்தர்ப்பங்கள் இழக்கப் பட்டிருக்கின்றன... என நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது உண்மைதானே.
அதுபோலத்தான், கடவுளில் நம்பிக்கை வைத்து நன்கு கும்பிடுவோம், ஆனால் ஏதும் ஒரு பிரச்சனை ஏற்பட்டால் ..கடவுள் கூடக் கை விட்டு விட்டாரே எனப் புலம்புவதும் உண்டுதானே. ஆனால் பூஸ் ரேடியோவில் கேட்டேன், கடவுள், நம்பிக்கை வைத்திருக்கும் தம் பக்தர்களைக் கை விடுவதில்லையாம், அவர் நமக்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருவாராம், நாம் தான் அச் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன் படுத்தாமல் தவற விட்டு விட்டு, கடவுளைக் குறை கூறுகிறோமாம்.
ஒரு குட்டிக் கதை.
ஒருவர் மிக கடவுள் நம்பிக்கையானவர், அவருக்கு கடவுள் தன்னை எப்பவும், கை விட மாட்டார், காப்பாற்றுவார் எனும் நம்பிக்கை இருந்தது.
அப்போ ஒரு நாள், அவர்கள் ஊரில் வெள்ளம் பெருக்கெடுக்கத் தொடங்கி விட்டது. இவரின் வீட்டுக்குள்ளும் வெள்ளம், ஊரெல்லாம் வெள்ளம், அப்போ தோணிகளில் சென்று சென்று மக்களைக் காப்பாற்றினார்கள். அப்போ தோணிக்காரர் ஒருவர் இவரை வந்து ஏறும்படி அழைத்தார், அதுக்கு இவர்.. “இல்லை, எனக்கு யாரின் உதவியும் தேவையில்லை, என்னைக் கடவுள் வந்து காப்பாற்றுவார்” எனக் கூறி, வீட்டின் கூரையில் ஏறி அமர்ந்து கொண்டார்.
பின்பு கூரைகளில் இருப்போரைக் காப்பாற்றவென தீயணைக்கும் படையினர் வந்து அழைத்தனர்.. அதுக்கு இவர் அப்பவும்.. “இல்லை, எனக்கு யாரின் உதவியும் தேவையில்லை, என்னைக் கடவுள் வந்து காப்பாற்றுவார்”
எனக் கூறிக் கொண்டு , போக மறுத்து விட்டார். பின்னர் வெள்ளப் பெருக்கு இன்னும் அதிகமாகிவிட்டது, இவர் பக்கத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தில் தாவி ஏறிக் கொண்டார், உச்சிக் கொப்பிலே இருந்தார்..
அப்போ ஹெலி வந்து மக்களைக் காப்பாற்றியது, அப்பவும் இவர் ஹெலியில் ஏற மறுத்து.. “இல்லை, எனக்கு யாரின் உதவியும் தேவையில்லை, என்னைக் கடவுள் வந்து காப்பாற்றுவார்” எனக் கூறி போக மறுத்து விட்டார்.
மறுநாள் இன்னும் வெள்ளம் அதிகமாகி, மரத்தை மூடி விட்டது, இவர் வெள்ளத்தோடு அடிபட்டு, இறந்து போய்ச் சொர்க்கத்தில் சேர்ந்தார்...
அப்போ கடவுளைத் திட்டினார்ர்.. “உன்னை நான் எவ்வளவு நம்பினேன், நீ என்னைக் கை விட்டு விட்டாயே” என.
அதுக்கு கடவுள் சொன்னார்...
“நீ என் மீது வைத்த நம்பிக்கையை வீணடிக்காமல்தான், நான் உனக்கு ஒவ்வொரு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தந்தேன், ஆனால் அதைப் புரிந்து கொள்ளாமல் நீ, நானே நேரில் வருவேன் என தவறாக எதிர்பார்த்து, அத்தனை சந்தர்ப்பங்களையும் இழந்து விட்டாயே, இதுக்கு நான் என்ன செய்வேன்” என்றார்.
இப்படித்தான் நமக்கு அளிக்கப்படும் சந்தர்ப்பங்களை நாம் சரியாகப் பயன்படுத்திட வேண்டும். எதுவும் நேராகக் கிடைக்கும் என எதிர்பார்ப்பது தவறு.
========================================================================
ஸ்ஸ்ஸ்ஸ் மக்களுக்கு “அட்வைஸ்” :) பண்ணிப் பண்ணியே:) நான் நொந்து நூலாகிடுவன் போல இருக்கே வைரவா:)..
========================================================================
நன்றி காட்டுவது 3 வகைப்படும்:
1.இதயத்தால் உணர்தல்.
2.சொற்களால் தெரிவித்தல்.
3.பதிலுக்கு உதவி செய்தல்.
கரீட்டா?..: இப்படிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்..
===================================================================================================
|
Tweet |
|
|||