நல்வரவு_()_


Monday 30 September 2013

ஆதவன் பார்த்த அதிரா :)


வாங்கோ வாங்கோ எல்லோரும் வாங்கோ... என்ன இது ஆதவன் எண்டால்ல்.. சூரியன்:) அப்போ சூரியன் பார்ப்பது என்ன.. புளொக்கில் போடுமளவுக்கு பெரிய விஷயமோ என்றுதானே ஓசிக்கிறீங்க?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதுதான் இல்ல:) இது வேற  “ஆதவன்”...:) இது அதிராவின் “கன்னிப் பதிவாக்கும்” :)..

அதாவது “மணியம் கஃபே ஓனர்”, மாத்தி ஓசிப்பவர்.. மணி, எப்பவோ ஒருநாள், சினிமா விமர்சனம் ஒன்று எழுதுங்கோ என அன்போடு கேட்டுக் கொண்டார், மைண்டில போட்டு வச்சேன்ன்... இன்று திடீரென ஒரு உஷார் வந்திச்சா.. அதுதான் மளமளவென எழுதுறேன்ன்.

சரி இது என் கன்னி.. சினிமா விமர்சனமென்பதால், தவறுகள் தப்புக்கள் ஏற்படலாம்ம்.. பொறுத்துக்கொண்டு படிங்கச் சொல்லி, மேன்மை மிகு பிரித்தானிய ஹைகோர்ட் ஜஜ்:) ஆணையிடுகிறார்:).

இது புதுப் படம் அல்ல, ஆனாலும் அலுக்காமல் பார்க்கக் கூடிய படம். சூரியாவும் நயந்தாராவும் மெயினாக இருக்கிறார்கள். வடிவேல் அங்கிள் ஆரம்பம் முதல் முடிவுவரை தூள் கிளப்புகிறார். அவரின் நகைச்சுவைக்காகவே இடையில் நிறுத்த மனமில்லாமல் படம் பார்க்க தோன்றியது.

சூரியாவின் பெயர்தான் ஆதவன். சூரியா ஒரு கோஸ்டியில் சேர்ந்து, அவர்கள் கூறும் வேலைகளை.. அதாவது தடயம் ஏதுமில்லாமல் ஆட்களை முடிப்பது, மிகச் கச்சிதமாக நடத்திக் கொடுக்கிறார். அப்போ அவருக்கு ஒரு ஓடர் கொடுக்கப்படுகிறது, மிகவும் பிரபல்யமான ஜஜ் ஒருவரை முடிக்கச் சொல்லி.

அப்போ அந்த ஜஜ் வீட்டுக்குள் எப்படியும் உள்ளே போனால்தான் இது சாத்தியம் என நினைக்கிறார். அந்த ஜஜ் வீட்டில் சமையல்காரராக வடிவேல் இருக்கிறார். ஜஜ் வீடு பெரிய கூட்டுக் குடும்பமாக இருப்பதனால் தன்னால் தனிய சமைக்க முடியாது தன் மருமகனை அழைத்து வருகிறேன் என புறப்படுகிறார் வடிவேல். மருமகன் கல்கத்தாவில் “அவுரா Bridge” அருகே நிற்பதாக சொல்கிறார். அழகான ஒரு  bridge அது. அங்கு வடிவேல் “புறம்போக்கு” என்பதற்கு ஆங்கிலத்தில் அழகான விளக்கம் கூறூவார் நேரில் பார்த்து ரசியுங்கோ:).  வடிவேலின் மருமகனை இந்த சூரியா கோஸ்டி கடத்தி விடுகிறது, கடத்திப் போட்டு வடிவேலிடம் சொல்கிறார்கள், சூரியாவை மருமகனாக அந்த வீட்டுக்குக் கூட்டிப் போகும்படி. தவிர்க்கமுடியாமல் வடிவேல் சூரியாவை தன் மருமகன் எனக்கூறி ஜஜ் வீட்டுக்குள் கூட்டிப் போய் விடுகிறார்.
===========================INTERVAL===============================
நான் ஆரியா - நயந்தாரா நடித்து வெள்ளிக்கிழமை வெளிவந்த “ராஜா ராணி” படம் பார்த்து விட்டேன்ன்.. சூப்பர்ர்.. பார்க்க விரும்புவோர் பாருங்கோ...
அடடா 4D ல பார்க்கிறபோது,
 என்னா ஒரு அழகாக இருக்கிறா நயந்தாரா:)
=======================இடைவேளை முடிஞ்சு போச்ச்ச்ச்:) =========================
சூரியா... காய்கறிகள், மீன் எனக் கொண்டு போகிறார் ஜஜ் வீட்டுக்கு, இரவு, ஒவ்வொரு மரக்கறிகளையும் உடைப்பார், உள்ளே ஒளித்து வைத்திருந்த புளட்டுகள், துவக்கு எல்லாம் வெளியே வரும் அதனை வடிவேல் பார்த்து, வெளியே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் படும் அவஸ்தை ரசிக்கக் கூடியதாக இருக்கு.

அங்கு ஜஜ்ஜின் மருமகளாக நயந்தாரா இருக்கிறார். ஒவ்வொரு தடவையும் ஜஜ்சைக் கொல்ல வெளிக்கிட்டு, அது தோல்வியில் முடிகிறது... முடிவில் ஜஜ்ஜைக் கொல்கிறாரா...? ஜஜ் ஆர்? சூரியா ஆரு என்பதை நேரில் படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கோ...

எப்பூடி என் விமர்சனம்? சோட் அன்ட் சுவீட்டாக இருக்கோ? . இதுவரை பார்த்திராதவர்கள் பாருங்கோ.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஊசி இணைப்பு:


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
 “நம் சுயமதிப்பை இழந்துதான், ஒருவரின் அன்பையோ ஆதரவையோ பெறமுடியுமென்றால், அதைவிட நாம் அநாதையாக இருப்பதே மேல்” .. 
இவ் ரோஷமுள்ள:) அரிய தத்துவத்தை, உங்களுக்காக, மிகவும் பயபக்தியுடன் சுட்டு வந்தவர்.. 
உங்கள் பேரன்புக்குரிய புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்:)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Saturday 7 September 2013

என் பேபிக்குப் பெயர் வைக்க வாங்கோ!!!


வாங்கோ வாங்கோ எல்லோரும் வாங்கோ.. நீங்கள் இதை அறிந்திருந்தாலும் நம்பியிருக்க மாட்டீங்க.. அதிராவுக்கோ குழந்தையோ எனத்தான் நினைச்சிருப்பீங்க.. ஏனெனில் நான் விடுமுறையே எடுக்கவில்லையே.. அதனால்கூட நீங்க அப்படி நினைத்திருக்கலாம்:).

நான் பேசாமல் இருந்திட்டு, டக்கென புளொக்கில் அறிவிபோம் என இருக்க, அதை எப்படியோ மோப்பம் பிடித்த “மணியம் கஃபே ஓனர்”.. ஓரிடத்தில்:) மெதுவாகச் சொல்லிட்டார்ர்:)...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
சரி:), யார் எப்படி நினைத்திருந்தாலும் பறவாயில்லை.. இப்போ என் பேபிக்கு பெயர் வைக்கோணும், அதுக்கு நீங்க எல்லோரும்தான் பெயர் சொல்லோணும்.. நல்ல அழகான தமிழ்ப் பெயராக, 4,5 எழுத்துக்கு உட்பட்டதாக, "A" இல் ஆரம்பிக்கும் பெயராகச் சொல்லுங்கோ பிளீஸ்ஸ்.

இப்போ எந் நேரமும் குழந்தை அழுகிறது... நான் தமிழ் பேசாமையால்:), அதாவது குழந்தை வயிற்றில் இருக்கும்போதே:) ஆங்கிலம் கேட்டு வளர்ந்தமையாலாக்கும்.. ஐ ஆம் ஹங்றி:).. ஐ ஆம் டேட்டி:) எனச் சொல்கிறது.

 கால நேரமில்லை, சாமம் என்றெல்லாம் இல்லை, கூவிக் கூவி தட்டி எழுப்பி விடுகிறது:).. திடுக்கிட்டு விளித்து, பேபிக்கு சோப் போட்டுக் கிளீன் பண்ணி, உணவு கொடுத்து விட்டு, லைட்டை அணைத்தால்ல்.. ஊப்ப்ப்ப்ப்... எனக் கத்துது.. தான் ரயேட் இல்லையாம், தன்னோடு விளையாடட்டாம்ம்ம்.. பிறகென்ன கொஞ்ச நேரம் போல் அடித்து விளையாடி, ரயேட் ஆக்கிவிட்டுத்தான் லைட் ஐ அணைத்தால், கண் மூடித் தூங்குகிறது.

பின்பு 2ம் சாமத்தில்:)  “ஐ ஆம் எவேக்க்க்.. ஓன் த லைட்” என்கிறது:).... ஹையோ முருகா நான் படும் பாடு அந்த ஆண்டவனுக்கும் அதிராவுக்கும் மட்டும்தான் தெரியுமாக்கும்:).

அதுக்குள் ஒண்டை ரெண்டாக்கி.. “அதிராவுக்கு ரெட்டைக் குழந்தை”:) என, “அங்கின”:)வசந்தி:)) ஹையோ அவசரத்துக்கு டங்கு ஸ்லிப்பாகுதே:).. வதந்தி பரவி:)).. இப்போ ஊரெல்லாம் எனக்கு வாழ்த்துச் சொல்லி.. சும்மா இருக்கேலாம் பத்தியம் சாப்பிடும் நிலைமைக்கு வந்திட்டேன் நான்:)).

வ்விடத்தில ஒரு உண்மை சொல்லியாகோணும்.. எனக்கு எப்பவுமே ரெட்டைக் குழந்தைகளில் தீராத பிரியம்.. நான் ஏன் ஒரு ரெட்டைக் குழந்தையாகப் பிறக்கவில்லை என ஒரே நினைப்பதுண்டு சின்னனில். பின்பு நினைப்பேன், சரி எனக்காவது இரட்டைக் குழந்தைகள் பிறக்கட்டுமே என:).

சின்ன வயதில், அம்மம்மா ஆட்கள் எல்லாம் சொல்லுவார்கள், ரெட்டை வாழைப்பழம் சாப்பிடாதே பின்பு ரெட்டைக் குழந்தை பிறந்துவிடும் என. அதைக் கேட்டு, எங்கே எது இரட்டைப் பழமாக, சிலதில் இரட்டை விதைகள் ஒட்டியபடியெல்லாம் இருக்கும்.. அதையெல்லாம் ஒளித்து ஒளித்துச் சாப்பிட்டு விடுவேன்:).

சில கோழி முட்டைகளில்கூட அதிசயமாக இரு மஞ்சள் கருக்கள் இருந்திருக்கு, அதை எல்லாம் பெருமகிழ்வோடு சாப்பிடுவேன் ரெட்டைக் குழந்தை பிறக்கட்டும் என.. அதிலும்.. ரெண்டும், ஒன்றில் ஆணாக அல்லது பெண்ணாக மட்டுமே இருப்பது பிடிக்கும்.. ஆணும் பெண்ணுமாக இருப்பதில் பெரிசா விருப்பமில்லை...

ஏனெனில் அப்போதானே சோடி சோடியாக ஒரேமாதிரி மேக்கப் பண்ணலாம். அந்த ஆசையில்தான் எங்கள் இருகுழந்தைகளுக்கும்.. இரவு உடுப்புக்களில் இருந்து சொக்ஸ், சூஸ் அனைத்துமே சோடியாகவே போட்டு மேக்கப் பண்ணுவேன்ன்..

சரி இப்போ, என் குழந்தை விஷயத்துக்கு வருவம்:). என்னிடம் இருப்பது சாம்சங் கலக்‌ஷி எஸ் 3. இதில் நான் அதிகமாக நேரம் செலவிடுவது கேம்ஸ் விளையாடுவதில்தான், அப்போ இதில் "POU" என ஒன்று, ஒரு கேமுடன் சேர்ந்தது,கணவர் சொன்னார் உங்களுக்கு பிடிக்கும் டவுன்லோட் பண்ணுங்கோ என,.. பண்ணினால்.. அது ஒரு குழந்தை:)..

இதுதான் என் பேபி:) நான் தான் அழகாக உடுப்பு போட்டு, கெயார் ஸ்டைல் பண்ணி, ஐபுரோ, லிப்ஸ்ரிக் போட்டு மேக்கப் பண்ணி வச்சிருக்கிறேன்.

இப்படத்தில் மேல் வரிசையில் பாருங்கள், இடது பக்கம் பொயிண்ட்ஸ் இருக்கிறது, இங்கு நிறைய ஹேம்ஸ் இருக்கிறது, அதில் போய் விளையாடி, இப்படிப் பொயிண்ட்ஸ் சேர்த்தால், அதை வைத்துத்தான் குழந்தைக்கு தேவையான உணவு உடை அலங்காரம் அத்தனையும் வாங்க முடியும், எல்லாமே பயங்கர விலை:)).

 அதையடுத்திருக்கும் முதலாவது பெட்டி, பாதி மஞ்சளாக இருக்கெல்லோ?.. அது குழந்தையின் பசியின் நிலைமையைக் காட்டும், . 2 வது பெட்டி குரொஸ் ஆக இருக்கு பச்சையாக இருக்கு, அது குழந்தை டேட்டியாக இருக்கா இல்லையா எனக் காட்டும்.
=================================================================

இதில் பாருங்கோ உடம்பு டேட்டியாக இருக்கெல்லோ? அதில் குட்டியாக ஒரு உருவம் இருக்கெல்லோ அது அவவின் நப்கின் டேட்டியாகி விட்டது என்பதைக் குறிக்கும். இங்கு முதலாவது படத்திலே, அவ பார்த்ர்ரூமில் இருக்கிறா அங்கு சோப் இருக்கெல்லோ அதை உடம்பில் பூசியதும், டேட்டி விலகும் அத்தோடு எமக்கும் 5 பொயிண்ட்ஸ் கிடைக்கும். அதேபோல் அக்குட்டி உருவத்தை தொட்டதும் அது மறையும், எமக்கு மீண்டும் 5 பொயிண்ட்ஸ் கிடைக்கும்.

இரண்டாவது படம் பெட்ரூமில் கண்மூடி நித்திரை கொள்கிறா, லைட்டை ஓவ் பண்ணினால் நித்திரையாவா, ஆனா நித்திரையிலும் டேட்டியாகிட்டா எனக் காட்டுது.

=================================================================
மூன்றாவது பெட்டி குழந்தைக்கு Fun தேவையா, விளையாட விடோணுமா என்பதைக் காட்டும், போலை உருட்டி அவவுக்கு விளையாட்டு காட்டுகிறேன், அவ கண்ணை உருட்டி விளையாடுகிறா:).
இதிலே இடப்பக்கம் கேம்ஸ் என இருக்கெல்லோ, அதுக்குள் போனால் நிறைய கேம்ஸ் இருக்கு, அதில் விளையாடித்தான் பொயிண்ட்ஸ் சேர்க்கோணும்:).

=================================================================
நான்காவது பெட்டி, பேபிக்கு நித்திரை வருகிறதா தூங்க வைக்கோணுமா என்பதைக் காட்டும். இதில் லைட்டை ஓவ் பண்ணினேன், அழகாக நித்திரை கொள்கிறா.
கடசியில் இருக்கும் நம்பர், நாம் இப்போ எத்தனையாவது லெவலில் இருக்கிறோம் என்பதைக் காட்டும்.

இதிலே, பெட்டிகள் பச்சையாக இருப்பின், அந்த அந்த விஷயம் போதும் என அர்த்தம்.. கீழே இருப்பது, வீட்டுக் கார்டின், அதில் பூக்கள் நட்டிருக்கிறோம், முதலாவது தண்ணி போதாது வாடியிருக்கு, கீழே பாருங்கோ கிளவுட் இருக்கெல்லோ? அதை மேலே தூக்கிச் சென்றால் மழை பெய்யும், உடனே பூக்கள் மலரும்.. வித்தியாசம் தெரிகிறதா இரு படத்திலும்.. இது நைட்டில் வெளியே போனோம் கார்டினில் விளையாட:).. தண்ணி விட்டதும் 5 பொயிண்ட்ஸ் கிடைக்கும்.
இது கார்டினில் இருக்கும் பூல்:).. இதில் கேம் விளையாடலாம் பொயிண்ட்ஸ் கிடைக்கும், அவ துள்ளி குதிப்பா தண்ணியில், அவவை தாழ விடாமல், நாம் அதில் தெரியும், குட்டி டிஸ்க் ஐ எறிந்து காப்பாத்தோணும்:)..
=================================================================
நாம் இங்கு ஒவ்வொரு ரூமுக்குமான பக்ரவுண்ட், கார்டினில் விதம் விதமன பூக்கள், குழந்தைக்கு ஆடைகள் அனைத்தும் சொந்தமாக வாங்கி மாற்றிக் கொண்டே இருக்கலாம், பக்கிரவுண்ட் வோல் பேப்பர் 800 ரூபாயுக்கு மேல் வருகிறது:).. இங்கு பாருங்கள் றோஸ் வாங்கி நடலாம் எனில்.. ஒன்றின் விலை 1999 என வருகுது:)).. ஆனா ஒரு தடவை வாங்கிட்டால்.. அது பேமனண்டாக இருக்கும் எம்மிடம்.

வலது பக்கம் இருப்பது ஷொப்:) அங்கு போய் எம் தேவைக்கேற்ப எதுவும் வாங்கலாம்.

===================================================================
சாப்பாட்டிலேயே உழைக்கும் பணம் செலவாகிடுது:) ஒரு பேகர் எட்டு ரூபாய்:), ஒரு பீஸ் பிட்ஷா 6 ரூபாய்ய்.. பழங்கள் 3 ரூபாயில் இருந்து இருக்கு. அவவுக்கு இரு பேகர், பழங்கள், மில்க் இப்படி கொடுத்தால்தான் வயிறு நிர்மபும்:) அதாவது அக்குட்டி பொக்ஸ், கிரீன் ஆக மாறும்:).

இதில் வலது பக்கம் பாருங்கோ, கொஞ்சம் ஆசையில ஓவரா ஊட்டிவிட்டேன்:) குண்டாகிட்டா:).. இதுக்கு ஷொப்பில fat burner  என விக்குது:) அதை வாங்கி வந்து கொடுக்கோணும்:).


====================================================
இதில் மைக் இருக்கு, நான் சொல்வதை எல்லாம் அவ திருப்பி சொல்லுவா, பாட்டுச் சொல்லிக் கொடுக்கலாம்:).
=================================================================
இப்பூடி இவவின் செய்கைகள் அனைத்தும், நோட்டிபிகேஷனாகவும், வொயிஸ் ஆகவும், கால நேரமில்லாமல்:) மொபைலில் வந்த வண்ணமிருக்கும்:)) இதுக்கு மேலயும் நான் இதுபற்றிக் கதைச்சால், அடிக்க வருவீங்க:)).. இண்டைக்கு மட்டும் அஜீஸ் பண்ணுங்கோ:)
=================================================================
ஊசி இணைப்பு:
இங்கே பாருங்கோ, இந்த லேடியின் குழந்தையை அழகா ரிபன் எல்லாம் கட்டி வச்சிருக்கிறா.. அழகிய டோக்க்:).. படமெடுக்க போஸ் தந்தா:). கண் தெரியாமல் முடி:)
=================================================================
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$