நல்வரவு_()_


Wednesday 24 October 2018

நமக்கு, இறப்பின் பின்னர் சிறப்புத் தேவையோ?

ங்கள் புளொக்கிலே ஸ்ரீராம் பகிர்ந்துகொண்ட இந்தக் கதைப் பகுதிதான், என்னை இப்போஸ்ட்  போடத் தூண்டியது. நான் எப்பவும் நினைப்பதுண்டு, உயிரோடிருக்கும் போதுதானே எதுவும் தேவை, இந்த உயிர் உடம்பை விட்டுப் பிரிந்த பின், நம்மை சந்தனத்தால் குளிப்பாட்டி என்ன? வைரத்தால் அலங்கரித்தென்ன? நமக்குத் தெரியவா போகிறது?..

Tuesday 9 October 2018

அப்பிள் பெண்ணே நீ யாரோ?:)

நிலவு..பெண், புய்ப்பம்... பெண், எண்டெல்லாம் சொல்லி இப்போ பார்த்தீங்களோ அப்பிளையும் பெண்ணுக்கு ஒப்பிட்டு விட்டார்கள்:).. வர வர மருவாதை:) ரொம்பவும் தான் கூடிட்டே போகுது நமக்கு:).. சரி சரி முறைச்சு ஒண்ணும் ஆகப்போவதில்லை:)) ஸ்மைல் பிளீச்ச்ச்ச்ச்ச்:)) ஹா ஹா ஹா.

Wednesday 3 October 2018

சொர்க்கத்துக்கு போறதை நினைச்சாலே பயம்மாக்கிடக்கூஊஊ:)

ஹா ஹா ஹா இப்போ எதுக்கு திடீரென அதிரா சொர்க்கம் பற்றிப் பேசுறா எனத்தானே ஓசிக்கிறீங்க:).. அது மீ ஞானியாகிட்டேனெல்லோ.. ஞானி ஆனாலே இப்படியான அலசல்கள் எல்லாம் தானா வந்திடுது:).

இப்போ நாம் சொர்க்கத்தைக் காணுவதென்பது பரலோகம் போய்த்தான் என்றில்லை:).. சொர்க்கம் என்றால் என்ன எனில் ஒரு மட்டட்ட மகிழ்வைத் தரக்கூடிய சூழலே சொர்க்கம். அதுக்கு நாம் என்ன பண்ணோனும், நம்மைப்போன்ற ஒத்த அலைவரிசையுடையோரோடு நட்பை ஏற்படுத்திக் கொள்ளோனும், நம் ரசனை விருப்பு வெறுப்புக்கேற்றபடி இன்னொருவரும் இருக்கும் போது, அவரோடு நாம் பேசும்போது நம் மனம் மகிழ்ச்சியை உணருது. இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமே என மனம் எண்ணுது.. அதுதான் சொர்க்கம்.
சிலர் எப்பவும், நம் கருத்துக்கு முரணாகவே கருத்துச் சொல்வர்.. அதுக்காக நம் கருத்துத்தான் சரி என அர்த்தம் இல்லை..  ஆனா அவருக்கும் நமக்குமான அலைவரிசை பொருந்தவில்லை என அர்த்தம், அதனால அப்படியானோரோடு எப்பவும் கூடியிருந்தால் அது நம் மனதுக்கு எப்பவும் துன்பத்தையே கொடுக்கும். அதனாலதான் நம் மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுப்பது நம் கையிலேயே இருக்கிறது.

வேலியில் போகும் ஓணானைப் பிடிச்சுத் தோளில் போட்டு விட்டுக் குத்துதே குடையுதே என்றால் என்ன அர்த்தம்:) ஹா ஹா ஹா.

இதேபோல, சந்தோசம் என்பதும் ஒரு தொற்று நோய்போலத்தான்:), நாம் சந்தோசமாகப் பேசுவோரோடு சேர்ந்து இருப்பின், அவர்களின் மகிழ்ச்சி நம்மைத் தொற்றிக் கொள்ளும்..

=======================இடைவேளை======================
ம் மூத்தவருக்கு இங்கு யுனிக்காக வொலன்ரியர் வேர்க் செய்யோணும் எனச் சொல்லியிருந்தேன் தானே. அதுக்காக இவர் கடந்த ரெண்டு வருடங்களாக ஒரு பிறைவேட் சீனியர் ஹோமுக்குப் போய்க் கொண்டிருந்தார். அதனை சிஸ்டேர்ஸ்தான் நடத்துகிறார்கள்.. மிக அழகிய இடம்.. பூங்கா போல இருக்கும். அங்கு உள்ளே ஒரு குட்டிச் சேர்ஜ் உம் உண்டு, சென் ஜோசப் சேர்ஜ்.. நாமும் அங்கு போனதுண்டு, எனக்கு அதில் நம்பிக்கையும் அதிகம். அந்த சேர்ஜ் ன் வெளியே.. ஃபிரான்ஸ் லூர்த்து மேரி மாதா சிலையும் உண்டு.. மிக அழகாக இருக்கும்.

ப்போ மெடிசின் கிடைச்சதும், கேக் சொக்லேட் எல்லாம் வாங்கி தாங்கியூ கார்ட்டும் எடுத்துப் போய்க் குடுத்தோம்,  அப்போ அங்கு ஒரு வயதானவரை சந்தித்தோம்... பார்த்தால் சின்னப் பெடியன்போல இருந்தார்.. குடுகுடுவென தொப்பியும் போட்டு வெளியே வோக் போயிட்டு வந்தார், கண்ணில கண்ணாடி கூட இல்லை. வயசு போனதன் அடையாளமாக முகத்தில சுருக்கங்கள் இருந்தது... அது மட்டும்தான்..

வருக்கு 92 வயசென அறிஞ்சிருந்தோம்... கேட்டபோது சொன்னார், இல்லை எனக்கு இப்போ 94 என... உங்கள் இளமையின் ரகசியம் என்ன எனக் கேட்டதுக்கு[வழமையான கேள்விதானே:)]...

அவர் சொன்ன பதில்...

நான் எப்பவும் சிரிச்சுக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பேன், மற்றது, அடுத்தவர்களோடு எப்பவும் நல்ல வார்த்தையில் மகிழ்வான வார்த்தையில் மட்டுமே பேசுவேன் என்றார்... அப்போ அதிலும் உண்மை இருக்கிறதுதானே பார்த்தீங்களோ?
===================================================
லகத்திலே உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் துக்கம் இருக்கத்தான் செய்யும்.. ஒவ்வொரு வடிவில்.. ஆனா அதுக்காக அதையே நினைச்சிருந்தால், இப்போ நமக்கிருக்கும் மகிழ்ச்சியை நாம் இழந்து விடுவோம்.. அதனால எப்பவும் கடந்த காலத்தையும் நினைக்கக்கூடாது எதிர்காலத்தையும் நினைக்கக்கூடாது... இப்போ இருக்கும் மகிழ்ச்சியை கைவிட்டிடவும் கூடாது... இதுவும் உண்மைதானே? போன வருடம் நடந்ததை நினைச்சு.. கவலைப்பட்டு:), இப்போ அதிராவுக்கு கொமெண்ட் போடாமல் விட்டிடாதீங்கோ எனச் சொல்ல வந்தேனாக்கும்:)..

%%%%%$$$$$%%%%%$$$$$%%%%%$$$$$%%%%%$$$$$%%%%%
சே..சே ட்றம்ப் அங்கிளுக்கு பேசனல் செக்கரட்டறியாக இருந்தும் அவரின் பெயரைக் காப்பாற்ற முடியாமல் போச்சே என்னால:) ஹா ஹா ஹா:).
%%%%%$$$$$%%%%%$$$$$%%%%%$$$$$%%%%%$$$$$%%%%%
ரு நல்ல குடும்பம், நல்ல வீடு என்பதற்கு அடையாளம் என்ன தெரியுமோ? சண்டை கூச்சல் இல்லாத, மகிழ்ச்சி சிரிப்பொலியுடன் கூடிய அமைதியான வீடே நல்ல வீடாகும். “ஒலிக்குறைவான வாழ்க்கை முறை.. உயர்ந்த வாழ்க்கை முறை” என்கின்றனர்.. இதில் சொல்லப்படும் ஒலிக்குறைவு என்பது சண்டை சச்சரவைக் குறிக்கும்.

ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்வதுதான் வாழ்க்கை முறை என்கிறார்கள். இதில் புரிதல் என்றால் என்ன?.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும், அதை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழப் பழக வேண்டும். அதுக்காக ஒருவருக்கு தப்பான நடவடிக்கைகள் இருப்பின், அதை அப்படியே ஏற்று வாழ வேண்டும் எனச் சொல்லவில்லை.. ஒருவரின் குணாதிசயங்கள் எனப்படும்போது... நகைச்சுவைப்பேச்சு, சிரிப்பு, கோபம், அமைதியாக இருத்தல்.. இப்படியான குணங்கள்...

அவற்றை மாற்ற வெளிக்கிடக்கூடாது... 
அவர் அப்படித்தான்.., சொன்னாலும் கேட்க மாட்டார்.. ஓன் லைனில் தான் எல்லாம் வாங்குவார்.. என மனைவியும்... அவ அப்படித்தான் இருப்பா, எனக்கு இப்போ அக்குணம் பிடித்து விட்டது, பழக்கமாகியும் விட்டது என கணவனும்[ஒரு உதாரணத்துக்குச் சொன்னேன்].. புரிந்து கொண்டு அதன்படி விட்டுக் கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை.... அதை விட்டுப்போட்டு அடிச்சுப் பிடிச்சுத்.. திருத்துறேன் பேர்வழி எனத் திருத்த வெளிக்கிட்டால் வாழ்வு நரகமாகிவிடும்.

தேபோல குடும்பத்தில் ஒரு தவறு நிகழ்ந்துவிட்டால், சரி ஏதோ கோளாறு.. தவறாகி விட்டது, இனிமேல் அப்படி நடந்திடக்கூடாது என்பது பற்றித்தான் சிந்திச்சு செயல் பட வேண்டுமே தவிர, அத்தவறை அடிக்கடி சுட்டிக் காட்டி, குடும்ப மகிழ்ச்சியை நாசம் பண்ணிக்கொண்டிருக்கக் கூடாது.

ஊசி இணைப்பு:

ஊசிக் குறிப்பு:
==============நன்றி_()_=============
ஒரு குட்டி வேண்டுகோள்:
கடவுளை நாம் வணங்குவதற்குக் காரணம் “பக்தி” தான், என்பதற்குக் கொஞ்சம் பொயிண்ட்ஸ் சொல்லுங்கோவன் பிளீஸ்ஸ்.. ஒவ்வொருவர் ஒவ்வொரு பொயிண்ட் சொன்னாலே நிறைய வந்துவிடும்.. நன்றி.
==============================================