நல்வரவு_()_


Wednesday 3 October 2018

சொர்க்கத்துக்கு போறதை நினைச்சாலே பயம்மாக்கிடக்கூஊஊ:)

ஹா ஹா ஹா இப்போ எதுக்கு திடீரென அதிரா சொர்க்கம் பற்றிப் பேசுறா எனத்தானே ஓசிக்கிறீங்க:).. அது மீ ஞானியாகிட்டேனெல்லோ.. ஞானி ஆனாலே இப்படியான அலசல்கள் எல்லாம் தானா வந்திடுது:).

இப்போ நாம் சொர்க்கத்தைக் காணுவதென்பது பரலோகம் போய்த்தான் என்றில்லை:).. சொர்க்கம் என்றால் என்ன எனில் ஒரு மட்டட்ட மகிழ்வைத் தரக்கூடிய சூழலே சொர்க்கம். அதுக்கு நாம் என்ன பண்ணோனும், நம்மைப்போன்ற ஒத்த அலைவரிசையுடையோரோடு நட்பை ஏற்படுத்திக் கொள்ளோனும், நம் ரசனை விருப்பு வெறுப்புக்கேற்றபடி இன்னொருவரும் இருக்கும் போது, அவரோடு நாம் பேசும்போது நம் மனம் மகிழ்ச்சியை உணருது. இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமே என மனம் எண்ணுது.. அதுதான் சொர்க்கம்.
சிலர் எப்பவும், நம் கருத்துக்கு முரணாகவே கருத்துச் சொல்வர்.. அதுக்காக நம் கருத்துத்தான் சரி என அர்த்தம் இல்லை..  ஆனா அவருக்கும் நமக்குமான அலைவரிசை பொருந்தவில்லை என அர்த்தம், அதனால அப்படியானோரோடு எப்பவும் கூடியிருந்தால் அது நம் மனதுக்கு எப்பவும் துன்பத்தையே கொடுக்கும். அதனாலதான் நம் மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுப்பது நம் கையிலேயே இருக்கிறது.

வேலியில் போகும் ஓணானைப் பிடிச்சுத் தோளில் போட்டு விட்டுக் குத்துதே குடையுதே என்றால் என்ன அர்த்தம்:) ஹா ஹா ஹா.

இதேபோல, சந்தோசம் என்பதும் ஒரு தொற்று நோய்போலத்தான்:), நாம் சந்தோசமாகப் பேசுவோரோடு சேர்ந்து இருப்பின், அவர்களின் மகிழ்ச்சி நம்மைத் தொற்றிக் கொள்ளும்..

=======================இடைவேளை======================
ம் மூத்தவருக்கு இங்கு யுனிக்காக வொலன்ரியர் வேர்க் செய்யோணும் எனச் சொல்லியிருந்தேன் தானே. அதுக்காக இவர் கடந்த ரெண்டு வருடங்களாக ஒரு பிறைவேட் சீனியர் ஹோமுக்குப் போய்க் கொண்டிருந்தார். அதனை சிஸ்டேர்ஸ்தான் நடத்துகிறார்கள்.. மிக அழகிய இடம்.. பூங்கா போல இருக்கும். அங்கு உள்ளே ஒரு குட்டிச் சேர்ஜ் உம் உண்டு, சென் ஜோசப் சேர்ஜ்.. நாமும் அங்கு போனதுண்டு, எனக்கு அதில் நம்பிக்கையும் அதிகம். அந்த சேர்ஜ் ன் வெளியே.. ஃபிரான்ஸ் லூர்த்து மேரி மாதா சிலையும் உண்டு.. மிக அழகாக இருக்கும்.

ப்போ மெடிசின் கிடைச்சதும், கேக் சொக்லேட் எல்லாம் வாங்கி தாங்கியூ கார்ட்டும் எடுத்துப் போய்க் குடுத்தோம்,  அப்போ அங்கு ஒரு வயதானவரை சந்தித்தோம்... பார்த்தால் சின்னப் பெடியன்போல இருந்தார்.. குடுகுடுவென தொப்பியும் போட்டு வெளியே வோக் போயிட்டு வந்தார், கண்ணில கண்ணாடி கூட இல்லை. வயசு போனதன் அடையாளமாக முகத்தில சுருக்கங்கள் இருந்தது... அது மட்டும்தான்..

வருக்கு 92 வயசென அறிஞ்சிருந்தோம்... கேட்டபோது சொன்னார், இல்லை எனக்கு இப்போ 94 என... உங்கள் இளமையின் ரகசியம் என்ன எனக் கேட்டதுக்கு[வழமையான கேள்விதானே:)]...

அவர் சொன்ன பதில்...

நான் எப்பவும் சிரிச்சுக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பேன், மற்றது, அடுத்தவர்களோடு எப்பவும் நல்ல வார்த்தையில் மகிழ்வான வார்த்தையில் மட்டுமே பேசுவேன் என்றார்... அப்போ அதிலும் உண்மை இருக்கிறதுதானே பார்த்தீங்களோ?
===================================================
லகத்திலே உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் துக்கம் இருக்கத்தான் செய்யும்.. ஒவ்வொரு வடிவில்.. ஆனா அதுக்காக அதையே நினைச்சிருந்தால், இப்போ நமக்கிருக்கும் மகிழ்ச்சியை நாம் இழந்து விடுவோம்.. அதனால எப்பவும் கடந்த காலத்தையும் நினைக்கக்கூடாது எதிர்காலத்தையும் நினைக்கக்கூடாது... இப்போ இருக்கும் மகிழ்ச்சியை கைவிட்டிடவும் கூடாது... இதுவும் உண்மைதானே? போன வருடம் நடந்ததை நினைச்சு.. கவலைப்பட்டு:), இப்போ அதிராவுக்கு கொமெண்ட் போடாமல் விட்டிடாதீங்கோ எனச் சொல்ல வந்தேனாக்கும்:)..

%%%%%$$$$$%%%%%$$$$$%%%%%$$$$$%%%%%$$$$$%%%%%
சே..சே ட்றம்ப் அங்கிளுக்கு பேசனல் செக்கரட்டறியாக இருந்தும் அவரின் பெயரைக் காப்பாற்ற முடியாமல் போச்சே என்னால:) ஹா ஹா ஹா:).
%%%%%$$$$$%%%%%$$$$$%%%%%$$$$$%%%%%$$$$$%%%%%
ரு நல்ல குடும்பம், நல்ல வீடு என்பதற்கு அடையாளம் என்ன தெரியுமோ? சண்டை கூச்சல் இல்லாத, மகிழ்ச்சி சிரிப்பொலியுடன் கூடிய அமைதியான வீடே நல்ல வீடாகும். “ஒலிக்குறைவான வாழ்க்கை முறை.. உயர்ந்த வாழ்க்கை முறை” என்கின்றனர்.. இதில் சொல்லப்படும் ஒலிக்குறைவு என்பது சண்டை சச்சரவைக் குறிக்கும்.

ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்வதுதான் வாழ்க்கை முறை என்கிறார்கள். இதில் புரிதல் என்றால் என்ன?.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும், அதை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழப் பழக வேண்டும். அதுக்காக ஒருவருக்கு தப்பான நடவடிக்கைகள் இருப்பின், அதை அப்படியே ஏற்று வாழ வேண்டும் எனச் சொல்லவில்லை.. ஒருவரின் குணாதிசயங்கள் எனப்படும்போது... நகைச்சுவைப்பேச்சு, சிரிப்பு, கோபம், அமைதியாக இருத்தல்.. இப்படியான குணங்கள்...

அவற்றை மாற்ற வெளிக்கிடக்கூடாது... 
அவர் அப்படித்தான்.., சொன்னாலும் கேட்க மாட்டார்.. ஓன் லைனில் தான் எல்லாம் வாங்குவார்.. என மனைவியும்... அவ அப்படித்தான் இருப்பா, எனக்கு இப்போ அக்குணம் பிடித்து விட்டது, பழக்கமாகியும் விட்டது என கணவனும்[ஒரு உதாரணத்துக்குச் சொன்னேன்].. புரிந்து கொண்டு அதன்படி விட்டுக் கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை.... அதை விட்டுப்போட்டு அடிச்சுப் பிடிச்சுத்.. திருத்துறேன் பேர்வழி எனத் திருத்த வெளிக்கிட்டால் வாழ்வு நரகமாகிவிடும்.

தேபோல குடும்பத்தில் ஒரு தவறு நிகழ்ந்துவிட்டால், சரி ஏதோ கோளாறு.. தவறாகி விட்டது, இனிமேல் அப்படி நடந்திடக்கூடாது என்பது பற்றித்தான் சிந்திச்சு செயல் பட வேண்டுமே தவிர, அத்தவறை அடிக்கடி சுட்டிக் காட்டி, குடும்ப மகிழ்ச்சியை நாசம் பண்ணிக்கொண்டிருக்கக் கூடாது.

ஊசி இணைப்பு:

ஊசிக் குறிப்பு:
==============நன்றி_()_=============
ஒரு குட்டி வேண்டுகோள்:
கடவுளை நாம் வணங்குவதற்குக் காரணம் “பக்தி” தான், என்பதற்குக் கொஞ்சம் பொயிண்ட்ஸ் சொல்லுங்கோவன் பிளீஸ்ஸ்.. ஒவ்வொருவர் ஒவ்வொரு பொயிண்ட் சொன்னாலே நிறைய வந்துவிடும்.. நன்றி.
==============================================

115 comments :

 1. ///"ஒலிக்குறைவான வாழ்க்கை முறை.. உயர்ந்த வாழ்க்கை முறை”///

  இதில் நிறைய வாழ்வியல் உண்மை அடங்கி உள்ளது.

  சில நேரங்களில் நான் நினைப்பதுண்டு ஊமையாய் பிறந்தவர்களுக்கு பிரச்சனைகள் குறையுமோ... என்று.

  காரணம் பேச்சுதானே சிலரது வாழ்வை புரட்டி விடுகிறது.

  நிறைய சிந்தனைகளை தட்டி விட்டது தங்களது பதிவு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

   //சில நேரங்களில் நான் நினைப்பதுண்டு ஊமையாய் பிறந்தவர்களுக்கு பிரச்சனைகள் குறையுமோ... என்று//
   ஹா ஹா ஹா அப்படியும் சொல்ல முடியாது.. அவர்களுக்குக் கோபம் அதிகமாக வருமெலோ.. வாயால் சொல்ல முடியாததை செய்கையால காட்டி விட்டிடுவினம்.. :).

   //காரணம் பேச்சுதானே சிலரது வாழ்வை புரட்டி விடுகிறது.//
   உண்மை... இது வாழ்வின் நன்மைக்கும் பொருந்தும் சீரழிவுக்கும் பொருந்தும்.

   மிக்க நன்றி கில்லர்ஜி.

   Delete
 2. ஒரே மாதிரி கருத்துடையவர்களுடன் பேசினாதான் சொர்க்கம்.. மனைவி கணவனுக்கிடையில் எத்தனை விஷயங்களில் ஒரே மாதிரி கருத்து இருக்கும்?!!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

   //மனைவி கணவனுக்கிடையில் எத்தனை விஷயங்களில் ஒரே மாதிரி கருத்து இருக்கும்?//

   பல இடங்களில் ஒத்த கருத்துடையோர் வாழ்கின்றனர் ஸ்ரீராம்:)... அதுதான் கடவுள் கொடுத்த வரம் என்பினம்...

   Delete
  2. ஸ்ரீராம் நான் லேட்டு...நான் கேட்க நினைத்ததை நீங்க சொல்லிருக்கீங்க!! ஹா ஹா ஹ

   கீதா

   Delete
 3. புரிகிறது... கருத்துக்கு முரணாகவே கருத்து சொல்பவர்கள் பற்றிய விவரம் புரிகிறது. பாவம் அப்படிப்பட்டவர்கள்.

  ReplyDelete
  Replies
  1. அவர்களின் கருத்தோடு ஒத்துப் போபவர்களும் இருப்பார்கள்தானே.. தேடிக் கண்டு பிடிக்க வேண்டும் அவர்கள்.

   Delete
 4. ப்போ யாரோட ஏற்பட்ட அனுபவத்தால் இந்தப் பதிவிட்டீர்கள் அதிரா?!!!!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ஹையோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என்னை வம்பில மாட்டிவிடப் பார்க்கிறீங்களே:) சத்தியமா அப்படி எதுவும் இல்லை, நான் எதுவும் பிடிக்கவில்லை எனில், கோபித்தாலும் பறவாயில்லை என்னோடு பேசாமல் போனாலும் பறவாயில்லை என நேரடியாகவே சொல்லி விடுவேன்.. இப்படி எல்லாம் பண்ணவே மாட்டேன்ன்..

   இது வடிவேல் அங்கிளின் அந்த ஊசி இணைப்பிலுள்ள் மீம்ஸ் பார்த்ததும்.. அதை வச்சே ஒரு போஸ்ட் போடோணும் என நினைச்சு அப்போதிருந்து மனதில குறிப்புக்களைக் கலக்ட் பண்ணிப் போட்டேன்... இது அனுபவப் பதிவல்ல:) கேள்விஞானம் ஹா ஹா ஹா:)..

   Delete


 5. சென்ற கமெண்ட்டில் விட்டுப்போச்சு இந்த எழுத்து... இதை அங்கே சேர்த்துப் படிக்கவும்!!

  அடுத்தவங்களோட மகிழ்வான வார்த்தைகள் மட்டுமே பேச சமயங்களில் அவர்கள் விடுவதில்லை. சமயங்களில் இரண்டு மூன்று பேர்களாகச் சேர்ந்துகொண்டு கார்னர் செய்து விடுகிறார்கள்...

  ReplyDelete
  Replies
  1. ///இ

   சென்ற கமெண்ட்டில் விட்டுப்போச்சு இந்த எழுத்து... இதை அங்கே சேர்த்துப் படிக்கவும்!!///

   ஹா ஹா ஹா இதுக்காகவே ஒரு போஸ்ட் போட இப்போ கொஞ்ச நாளா மனதில ஒரு போஸ்ட் ரெடியாகுது:) தலைப்புச் சொல்ல மாட்டனே இப்போ:).

   //சமயங்களில் இரண்டு மூன்று பேர்களாகச் சேர்ந்துகொண்டு கார்னர் செய்து விடுகிறார்கள்...//

   இதை நான் படு வன்மையாக ஆமோதிக்கிறேன், சிலர் நம் வாயால் திட்டு வாங்கும்வரை விடமாட்டார்கள் சீண்டிக் கொண்டே இருப்பினம்.. என்னதான் வீரம் பேசினாலும் எல்லாம் தெரிஞ்சிருந்தாலும் நாமும் சாதாரண மனிசர்தானே... சில சமயங்களில் தடம் புரளவேண்டி வந்துவிடும்..

   Delete
  2. ஹையோ ஸ்ரீராம் நான் மனதில் நினைத்தவை எல்லாம் இங்க நீங்க சொல்லிட்டீங்களே..எனக்கு வேலையே இல்லை அதிரா ...நான் நினைத்த கருத்துகள் சொல்லிய விதம் வேறாக இருக்கலாம் ஆனால் அஃதே அஃதே!!

   கீதா

   Delete
  3. ஆஆஆஆஆ எல்லோரும் ஒத்த அலைவரிசையிலயே உலா வருகினமே:) இது நாட்டுக்கு நல்லதில்லையே:) ஏதும் நாரதர் கலகத்தை ஆரம்பிச்சிட வேண்டியதுதேன்ன் ஹா ஹா ஹா:).

   Delete
 6. அந்த நாலுகால் செல்லத்தின் திறமையைப் பார்த்து ஆச்சர்யப்படும்போதே....

  ச்சே.. இப்படிப்பழக்கப் படுத்தி வைத்திருக்கிறார்களே...!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அதுக்குக் காரணம் ட்றம்ப் அங்கிளோடு பலருக்கு அவ்ளோ வெறுப்பு:))

   Delete
 7. //அவற்றை மாற்ற வெளிக்கிடக்கூடாது... //

  இந்த எண்ணம் என்னிடம் உண்டு. அவ்விடத்தில் குறைவு!

  ReplyDelete
  Replies
  1. //அவ்விடத்தில் குறைவு!//
   ஹா ஹா ஹா அதனாலென்ன.. விட்டுக் குடுக்கக் குடுக்கத்தான் இல்லறம் மகிழ்ச்சியடையும்... விட்டுக் குடுங்கோ விட்டுக் குடுங்கோ:)) ஆருக்காக விட்டுக் குடுக்கிறோம் என நினைச்சாலே விட்டுக் குடுக்கிறோம் எனும் எண்ணம் எழாமல் போயிடும்:))..

   ஊசிக்குறிப்பு:
   என்னைப்பொறுத்து ஆண்கள் நிறையவே விட்டுக் குடுத்துப் போகும் இடத்திலதான், மனைவியிடமிருந்து அதிக அன்பு கிடைக்கும்.., மனைவி சந்தோசமடைவா.. ஆண் எவ்ளோ ஹப்பியாக இருந்தாலும் மனைவி ஹப்பி இல்லை எனில் வீடே அலங்கோலமாகிவிடும், ஆனா வீட்டில் இருக்கும் பெண் ஹப்பியானவராக இருந்தாஅல் வீடு எப்பவும் கலகலப்பாக இருக்கும்.. அப்போ ஆண்கள் விட்டூஊஊஊஉ விட்டுக் குடுத்துப் போகும்போது எப்போதும் வீட்டில் மகிழ்ச்சிதான்.. சந்தோசம் தானே முக்கியம்:)) ஹா ஹா ஹா நெல்லைதமிழன் வருமுன் மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:)).

   Delete
 8. //ஒவ்வொருவர் ஒவ்வொரு பொயிண்ட் சொன்னாலே நிறைய வந்துவிடும்//

  சின்ன வயசிலிருந்து அப்படியே பழக்கிட்டாங்க அதான்!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா “பொக்கினவர் புக்கையிலும் தண்டினவர் புக்கை அதிகம்” என ஊரில ஒரு பயமொயி சொல்லுவினம்:) அதை ஞாபகப் படுட்த்ஹிட்டீங்க ஹா ஹா ஹா.. ஆனா நீங்க அதுக்கு பதில் சொல்லவே இல்லையே.. ஆஞ்சநேயரிடம் ஒழுங்கா போறீங்களே? எதனால பக்தியாலயா?:) பதில் ஜொள்ளுங்கோ பீஸ்ஸ்ஸ்ஸ்:))..

   ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

   Delete
 9. அதிரடியின் ஆலோசனைகள்/புத்திமதிகள் கேட்டு எல்லோரும் நடந்துக்கப் பிரார்த்திக்கிறேன். கடவுளை வணங்குவதற்குக் காரணம் பக்தி மட்டுமா? இல்லைனு நினைக்கிறேன். மத்தவங்க பதிலைப் பார்த்துட்டு அப்புறமா வரேன். ஊசி இணைப்பும் ஊசிக்குறிப்பும் வழக்கம்போல் கலக்கல். அதிரடியா, கொக்கா! இஃகி, இஃகி!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீசாக்கா வாங்கோ..
   //அதிரடியின் ஆலோசனைகள்/புத்திமதிகள் கேட்டு எல்லோரும் நடந்துக்கப் பிரார்த்திக்கிறேன். //

   ஹா ஹா ஹா நன்றி நன்றி நன்றி:)..

   //கடவுளை வணங்குவதற்குக் காரணம் பக்தி மட்டுமா?//
   கேள்வி அதுவல்ல.. பக்திதான் காரணம் என நினைச்சு.. அது என்ன காரணம் எனக்கூறுங்கோ:)).

   ஹா ஹா ஹா மிக்க நன்றி.

   Delete
 10. நான் எப்பவும் சிரிச்சுக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பேன், மற்றது, அடுத்தவர்களோடு எப்பவும் நல்ல வார்த்தையில் மகிழ்வான வார்த்தையில் மட்டுமே பேசுவேன் என்றார்... அப்போ அதிலும் உண்மை இருக்கிறதுதானே பார்த்தீங்களோ?

  அருமை
  உண்மை
  ஒவ்வொரு படத்தையும் ரசித்தேன்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கரந்தை அண்ணன் வாங்கோ.. மிக்க நன்றிகள்.

   Delete
 11. கடவுளை நாம் வணங்குவதற்குக் காரணம் “பக்தி”

  காரணம் அல்ல. வணங்குவதே பக்தி. பக்தி இல்லை என்றால் ஏன் வணங்க வேண்டும். அதற்காக முதலாளியை வணங்குவது பக்தி என்று சொல்லப்பிடாது. வணக்கம் என்பது வணங்கப்படுவரை வைத்து மாறுபடும்.
  பின்னே சொர்க்கத்துக்கு போகணும் என்றால் கீசாக்கா கிட்டே கேட்டால் போதும். சொர்க்கத்துக்கு போய் திரும்பி வந்து சொர்க்கத்தில் வசிப்பவரே அவர்.
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ..

   //வணங்குவதே பக்தி. பக்தி இல்லை என்றால் ஏன் வணங்க வேண்டும். //
   அதேதான், தானாக மனதில் பக்தி வந்து வணங்கும்போதுதான் அது நீடிக்கும்.. மற்றும்படி பயத்தாலோ இல்லை ஏதும் கட்டாயத்தாலோ வணங்குவோர்.. அத்தோடு நிறுத்திக் கொள்வர்.. ஆனா இப்போ பலரும் பயத்தினாலேயே வணங்குவதைப்போல ஒரு ஃபீலிங்காது..

   //சொர்க்கத்துக்கு போகணும் என்றால் கீசாக்கா கிட்டே கேட்டால் போதும். சொர்க்கத்துக்கு போய் திரும்பி வந்து சொர்க்கத்தில் வசிப்பவரே அவர்.///

   ஹா ஹா ஹா உண்மைதான்.. ஆனா அது எந்த சொர்க்கத்துக்குப் போய்த் திரும்பி வந்தவ எனக் கேட்கோணும் அவவிடம் ஹா ஹா ஹா..

   மிக்க நன்றிகள்.

   Delete
  2. ஓ கீசாக்கா கைலாயம் போய் வந்திட்டாவோ? கடவுளே என்னைச் சின்ன வயசில இருந்து வெருட்டி வச்சிட்டினமே கைலாயம் போனால் திரும்பி வரமுடியாது . அப்படியே சொர்க்கம் தான் என்பது போல:)) ஹா ஹா ஹா..

   ஊரில ஆரும் தெரியாதோர் வயதானோர் இறந்திட்டால்.. சும்மா சொல்லுவினம்.. அவர் கைலாயம் போயிட்டாராமே என:).

   Delete
 12. கலகலப்பான பதிவு..
  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ மிக்க நன்றி.

   Delete
 13. >>> கடவுளை நாம் வணங்குவதற்கு பக்தி தான் காரணம், என்பதற்கு.. <<<

  அது இருக்கட்டும்..

  உங்களோட அப்பா அம்மா மேல
  உங்களுக்கு அன்பும் மரியாதையும் இருக்கிறதுக்கு என்ன காரணம்!?..

  ReplyDelete
  Replies
  1. துரை சார்... அதற்கும் காரணம் பக்தி அல்ல. அன்பு. நம்மையும் கைவிட்டுவிடாமல் நம் குறைகளை ஏற்றுக்கொண்டு முடிந்த வரையில் நம்மை வழிநடத்தி வளர்த்தார்களே என்ற நன்றி உணர்ச்சி.

   இந்த உணர்ச்சியும் 9 வயதுவரை அன்பாகவும், பெண்களுக்கு பதின்ம வயதில் இந்த அன்பு குறைந்தும், அதாவது அடல்ட் ஆகும் சமயம், திருமணம் ஆனபின்பு அதிகரித்துக்கொண்டே செல்லும். ஆண்களுக்கு பதின்ம வயதிலிருந்து குறைந்து, தனக்கான குழந்தைகள் வந்த பிறகுதான், அப்பாவிடம் மீண்டும் பாசம் ஆரம்பிக்கும்.

   Delete
  2. //உங்களோட அப்பா அம்மா மேல
   உங்களுக்கு அன்பும் மரியாதையும் இருக்கிறதுக்கு என்ன காரணம்!?..//

   இது அன்புதானே காரணம்..??.

   நெல்லைத்தமிழன் சொன்னதுதான் எனக்கும் ஒத்துப்போகுது....

   Delete
 14. பயம் என்ற நிலையிலேயே கடவுளை பெரும்பாலும் வணங்குகின்றார்கள். பக்தி என்பது அடுத்தே வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வாங்கோ.. அப்படித்தான் நானும் நினைக்கிறேன்ன்.. ஆனால் கடவுளுக்கு ஒன்றைச் செய்யும்போது மனதால விரும்பித்தானே செய்கிறோம் பயத்தினால் அல்லவே... அதுதான் குழப்பமாக இருக்கு...

   மிக்க நன்றி.

   Delete
 15. //காரணம் “பக்தி” தான், என்பதற்குக் // - பக்தி என்றால் என்ன? பொதுவா பார்த்தோம்னா, நாம சொர்க்கத்தை எதிர்பார்ப்பதில்லை.. இப்போ வாழும் வாழ்க்கை நல்லா சந்தோஷமா இருக்கணும் என்ற எதிர்பார்ப்புலதான் கடவுளைக் கும்பிடுகிறோம். நீங்ககூட விளையாட்டுக்குச் சொல்வதுபோல், இதைச் செய், நான் அதைச் செய்கிறேன் என்பதுதான் நாம் கடவுளிடம் கொண்டுள்ள so called பக்தி.

  உண்மையான பக்தி என்பது, நீதான் உருவாக்கியவன், எல்லாவற்றிலும் பெரியவன். உன்னைப் பணிகிறேன். எனக்கு எதிர்பார்ப்பு கிடையாது. நல் வழியில் நான் எப்போதும் நடக்க நீ உதவிசெய்யவேண்டும், நான் என் கடமையை முடிந்த அளவில் குறைவில்லாமல் செய்யவேண்டும், அதற்கான மனநிலையைக் கொடு என்று வேண்டுவதுதான்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

   //பொதுவா பார்த்தோம்னா, நாம சொர்க்கத்தை எதிர்பார்ப்பதில்லை.. இப்போ வாழும் வாழ்க்கை நல்லா சந்தோஷமா இருக்கணும் என்ற எதிர்பார்ப்புலதான் கடவுளைக் கும்பிடுகிறோம். //

   100 வீதம் உண்மை..

   ஏனையவை நீங்க சொன்னது உண்மைதான் நெ தமிழன், ஆனா பக்தி எனும்போது இக்காலத்தில் நாம் நம்மை சேஃப் ஆக வைத்துக் கொண்டுதானே கடவுளை வணங்குகிறோம்.. அதாவது நம் உடம்பில் ஊத்தை பட்ட்டிடாமல் நம் உடுப்பில் அழுக்கு, நெருப்பு பட்டிடாமல்.. நம் உடம்புக்கு நோ வந்திடாமல் இப்படித்தானே கும்பிடுகிறோம்..

   ஆனா முந்தின காலத்தைப் பார்த்தால் அவர்கள் தம் உடலுக்கோ தம் குடும்பத்துகோ எதுக்குமே முதலிடம் கொடுக்காமல் முழுக்க முழுக்க கடவுளையே முன்ன்றுத்தினார்கள்.. கண்ணப்ப நாயனார்ர்.. காரைக்கால் அம்மையார்... அப்போ அதுதானே பக்தி..

   இப்போ அப்படி ஆரும் இருக்கினமோ?..

   இன்னுமொன்று துன்பம் என வரும்போது ஓடிப்போய்.. ஆண்கடவுளா பெண் கடவுளோ எண்டெல்லாம் பார்க்காமல் ஹா ஹா ஹா அவர்களை இறுக்கி அணைச்சு மூச்சு முட்ட வச்சு, கேட்ட வரம் குடு என கத்தி காட்டி மிரட்டி வாங்குவதைப்போலவும் வாங்குகிறார்களே இதை என்ன சொல்வது ஹா ஹா ஹா..

   துன்பம் வரும்போது மட்டும் கடவுளை அதிகம் நினைக்கிறோம் மற்றும்படி நினைப்பது கொஞ்சம் குறைவுதானே.. ஒப்பீட்டளவில், அப்போ இதில் பக்தியை என்ன எனச் சொல்வது என்பதே எனக்குக் குழப்பம்..

   Delete
 16. இன்றைக்கு நிறைய நகைச்சுவைக் குறிப்பு இருக்கு (வடிவேலுவினுடையது). அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்.. ஒரு நகைச்சுவைக்காகவே தொகுத்துப் போட்டேன்.

   Delete
 17. கொஞ்சம் அசந்து தூங்கி எழும்பரத்துக்குள்ள பதிவு வந்துருச்சே கர்ர்ர்
  நம்ம ஸ்டைலில் ரிவர்ஸ் ஆர்டரில் வரேன் .

  கடவுளை வணங்க பக்தி மட்டும் காரணமில்லை
  அன்பு ,நம்பிக்கை பாதுகாப்பு நேசம் பாசம் இதெல்லாம் விட வார்த்தையால் சொல்லவோ எழுதவோ முடியாத ஒரு உணர்வு .

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆஆ வாங்கோ அலர்ஜித் தேவதையே வாங்கோ ஹா ஹா ஹா:)).

   ///கடவுளை வணங்க பக்தி மட்டும் காரணமில்லை
   அன்பு ,நம்பிக்கை பாதுகாப்பு நேசம் பாசம் இதெல்லாம் விட வார்த்தையால் சொல்லவோ எழுதவோ முடியாத ஒரு உணர்வு .///

   ஆஆஆஆஆஆஅ என்னா ஒரு தத்துவம் அழகு அழகு.. அந்த சோன் பப்டியைக் களவெடுத்துச் சாப்பிட்டதிலிருந்து தத்துவமாக் கொட்டுது...

   என் கேள்வி அஞ்சு.. பக்தியாலதான் கும்பிடுகிறோம் என்றால் அது என்ன ...

   //இதெல்லாம் விட வார்த்தையால் சொல்லவோ எழுதவோ முடியாத ஒரு உணர்வு //
   இது பக்தி என எடுக்கலாம்.. உண்மைதான் எனக்கும் இப்படி உணர்வு அடிக்கடி வரும்.. அப்படியே பாசம் பொத்துக் கொண்டு வரும் கடவுளின்மேல்ல்ல்.. அதிலும் கோயிலில் நின்றால்.. அந்த மணி ஓசை தீபாராதனையின்போது கண்ணால தண்ணி வந்திடும்.. அதை மறைக்க எவ்ளோ கஸ்டப்படுவேன் தெரியுமோ ஹையோ ஹையோ.. ஹா ஹா ஹா.

   Delete
  2. ஹலோ மியாவ் நாம் நேர் வழியில் நடக்க நமக்கு ஒரு பாதுகாப்பு தேவை அது கடவுள் நம்மை கைபிடிச்சி கூட்டிட்டு போக தவறு செய்யும்போது உள்ளுணர்வில் சொல்லி நம்மை கட்டுப்படுத்த .கூடவே இருக்கேன் பயப்படாதே என்ற உணர்வைத்தர அந்த உணர்வுதான் பக்தி .அப்புறம் நானா என்னிக்குமே கடவுள் கிட்ட எனக்காக எதுவும் கேட்டதில்லை இன்னிவரைக்கும் மற்றவங்களுக்குத்தான் எப்பவும் வேண்டுவேன் .

   Delete
  3. உங்களுக்கு தீபாராதனை மாதிரி எனக்கு ஆர்கன் மியூசிக் எங்க சர்ச்சில் கூடவே சில ஆங்கில ஹிம்ஸ் பாட்டுக்கள் கேட்டா அழுகை வரும்

   Delete
  4. //அப்புறம் நானா என்னிக்குமே கடவுள் கிட்ட எனக்காக எதுவும் கேட்டதில்லை இன்னிவரைக்கும் மற்றவங்களுக்குத்தான் எப்பவும் வேண்டுவேன் .//

   ஹா ஹா ஹா நான் மற்றவர்களுக்கும் மற்றும் மீக்காகவும் கேட்பேனே.. ஹா ஹா ஹா:)

   Delete
  5. //எனக்கு ஆர்கன் மியூசிக் எங்க சர்ச்சில் கூடவே சில ஆங்கில ஹிம்ஸ் பாட்டுக்கள் கேட்டா அழுகை வரும்//

   உண்மைதான் அதிலேயே லயித்து விடும்போது அழுகை வந்திடுது.. நாங்களும் பல ஆர் சி சேர்ஜ் களுக்குப் போவதுண்டு.. பயங்கர அமைதி அங்கு நிலவும்போதும் ஒருவித பரவச நிலைக்கு போயிடுவேன் நான்.. ஆனா ஒன்று அஞ்சு.. எந்த மதக் கோயிலுக்குப் போனாலும்.. அதாவது ஜேசு சிலையின் முன்னால நின்று நான் கும்பிடுவேன் என்னை அறியாமல்.. “அப்பனே முருகா பிள்ளையாரே எல்லாம் நல்லபடி நடக்கோணும்”.. இப்படி ஹா ஹா ஹா இது எல்லோருக்கும் இப்படித்தான் வருமோ என்னமோ..

   Delete
  6. ஹாஹாஹா :) உண்மைதான் அதிரா நானா முந்தி மெட்றாஸில் இருக்கும்போது அடிக்கடி அஷ்டலக்ஷ்மி கோவிலுக்கு விசிட் விடுவேன் அங்கும் அதோட மருதமலை ஸ்டெப்ஸ் ஏறும்போதும் உள்ளே கண்மூடி கும்பிட்டபோதும் ஜீசஸ் எல்லாரையும் காப்பாத்துங்கன்னு தான் வேண்டிப்பேன் அது இயற்கை ..ஆழ்மனதில் பிறப்பில் இருந்து பதிந்த ஒன்னை எப்படி மாத்த முடியும் .
   இன்னோர் சம்பவம் சொல்றேன் ..கேள்விப்பட்டது .பிரான்சில் நிறைய இலங்கைத்தமிழர்கள் மதம் மாறி இருக்காங்க ஒரு கிறிஸ்தவ கூட்டத்தில் திடீர்னு அப்படி மதமாறிய ஒரு ஆண் பாட்டு பாடும்போது ப்ரேயர்ட்டைம் உணர்ச்சிவசப்பட்டு முருகா முருகான்னு உருண்டு பிரண்டாராம் !! பேரை மாற்றினார் ஞானஸ்நானம் எடுத்தார் கோயிலுக்கு போனார் ஆனால் அவர் ஆழ்மனதில் இருக்கும் பக்தியை முருகனை எடுக்க முடியல்லியே :)

   Delete
  7. ஹா ஹா ஹா ஓ ஃபிரான்ஸ் பக்தர் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. உண்மைதானே சமயம் என்பது நம் இரத்தத்திலேயே ஊறிய ஒன்றெல்லோ..

   Delete
 18. ஊசிகுறிப்பு ..சரி இப்போ யார் குறை சொன்னாங்க என்ன குறைன்னு எனக்கு சொல்லுங்க :) பிறகு முடிவுக்கு வரேன் ஆனா சிலர் இருக்காங்க அவங்க பிடிச்ச முயலுக்கு 3 கால்தான் அவர்களை திருத்தவே முடியாதது

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அப்படி இல்லை அஞ்சு.. குறை கேட்காத மனிதர் இவ்வுலகில் உண்டோ.. நாம் எவ்ளோ கரெக்ட்டாக வாழ்ந்தாலும், சிலருக்கு நம்மைப்பற்றி நெகடிவ் எண்ணங்கள் வரலாம்தானே.. அதைத்தான் டத்துவம் ஜொள்ளுதாக்கும்:)..

   Delete
 19. குடும்பத்தில் தவறு நடந்தா அதை குத்தி காமிச்சிட்டே இருக்கக்கூடாதுதான் .யாருக்குமே சொல்லிக்கட்டாடுவது பிடிக்காத ஒன்று .ஆமா என்ன இன்னிக்கு இவ்ளோ தத்துவம் ??

  ReplyDelete
  Replies
  1. //ஆமா என்ன இன்னிக்கு இவ்ளோ தத்துவம் ??//
   ஞானியிலிருந்து “அஞ்ஞானி” ஆக முயற்சிக்கிறேன்ன்:)) அதுக்கு நேக்கு இன்னும் சிஷ்யர்கள் தேவை:)) அப்போ இப்பூடிப் போஸ்ட் போட்டு எல்லோர் மனதையும் மாற்றினால்தானே என் அச்சிரமம் முட்டி வழியும்.. உண்டியலும் பொங்கி வழியும் ஹா ஹா ஹா:))

   Delete
 20. // அவர் அப்படித்தான்.., சொன்னாலும் கேட்க மாட்டார்.. ஓன் லைனில் தான் எல்லாம் வாங்குவார்..//
  ஹாஹாஹா இதை படிச்சதும் எங்க வீட்டு சம்பவம் ஒன்னு நினைவுக்கு வருது .சில வருஷமும் royal மின்ட் கோல்ட் காயின் Sovereign Bullion Coins இருக்குமே அதை ஆன்லைனில் பார்த்து பார்த்து வாங்கி குவிச்சர இவர் ..ஒரு நாள் அவர் கபேர்ட்டில் எதேச்சையா பார்த்தா நிறைய இருக்கு .உண்மையில் அதெல்லாம் சுத்த பண வேஸ்ட் .பிள்ளைங்க பிரகாலத்தில் இதெல்லாம் பத்திரமா வைப்பார்களா ?சொல்லி பார்த்தேன் கடைசியில் கைவிட்டேன் ஒருவழியா 12 box நிறைஞ்சதும் அவருக்கே போர் அடிச்சி வாங்குறதை நிப்பாட்டிட்டார் :)
  ஆன்லைனில் வாங்குறது தப்பில்லை எதை வாங்கறோம் என்பது முக்கியம்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா உங்கள் கொமெண்ட்டிலும் ஒரு தத்துவம் இருக்குது அஞ்சு.. அதை நான் பல சமயம் கடைப்பிடிப்பேன்ன்.. அதாவது ஒரு கூடாத செயல் அல்லது கெட்ட விசயம் எனில் கழுத்திலே பிடிச்சு கொன்றோல் பண்ணத்தான் வேணும்.. மற்றும்படி இப்படியான விசயங்களைக் கண்டும் காணாததுபோல காக்கா போயிடோணும்.. அப்படி விட்டால் கொஞ்சக் காலத்தில் அது அவர்களுக்கு தானாக அலுத்து விடும்..

   இழுத்துப் பிடிச்சு, மறுத்துச் சண்டை போடும்போதுதான் அது இன்னும் இன்னும் அதுக்குள் போகத் தூண்டும் அவர்களை.. பிள்ளைகளின் விசயத்துக்கும் இது பொருந்தும்..

   //ஆன்லைனில் வாங்குறது தப்பில்லை எதை வாங்கறோம் என்பது முக்கியம்//

   சில சமயங்களில் நம் மனம் நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை அஞ்சு.. நானே எத்தனையோ பொருட்கள் வாங்கி அப்படியே சரட்டி சொப்புக்கு கொடுத்திருக்கிறேன்ன்:). என் கணவரும் எதுக்கும் நோ சொன்னது கிடையாது.. வாங்குங்கோ எனத்தான் சொல்லுவார்.. அதனால வாங்கி வாங்கி இப்போ அப்படி ஆசை குறைஞ்சுபோச்ச்ச்:)) ஹா ஹா ஹா.

   Delete
 21. / ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும், அதை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழப் பழக வேண்டும்//

  சரிங்க பாட்டிம்மா :) என் திருமணம் முடிஞ்சி கணவர் வீட்டுக்கு போகும்போது இதைத்தான் எங்க பாட்டி சொன்னாங்க .

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா பார்த்தீங்களோ அப்போ அதிரா இந்த சுவீட் 16 லயே பாட்டியின் ஞானம் பெற்று விட்டேன்ன்ன் ஹா ஹா ஹா அதனாலதானே ஞானி அதிராவானேன்ன்:)).. சரி சரி சமாதானமாகிப் போயிடலாம்:) இதுக்காக ஓடிப்போய்த் தேவதை கிச்சினைத்தூசு தட்டி நம்மைப் பழி வாங்கிடாதீங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)) ஹா ஹா ஹா:).

   Delete
 22. ஒலிக்குறைவான வாழ்க்கை முறை மிக நல்லது நமக்கும் பிள்ளைங்களுக்கு .
  என் பிரென்ட் ஒருத்தி சொல்வா கல்லூரி காலத்தில் //எனக்கு வீட்டுக்குபோகவே பிடிக்கலை அப்பா அம்மா இன்னேரம் சண்டை //
  இது சில இடங்களில் நானா பார்த்ததும் ..வாக்குவாதம் பிள்ளைகளை எப்படி பாதிக்குது பாருங்க .
  சிலசமயம் நியூஸ் ஏதாவது (சைல்ட் அபியூஸ் /வன்முறை ,குடிச்சிட்டு சாவரவங்க ) மட்டும் நான் கோபத்தில் திட்டுவேன் அதுக்கே பொண்ணு என்னை கோபிப்பா யூ டோன்ட் ஹேவ் டு பி எமோஷனல் என்று

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் அஞ்சு, பெற்றோர் சண்டை போட்டால் பிள்ளைகளுக்கு அது நரக வேதனைதானே.. அதிலும் சில பெண்கள் .. விடவே மாட்டார்கள் ஒரு பொயிண்ட் கிடைச்சிட்டால் போதும் கணவன் வாயை மூடினாலும் இவர்கள் நாள் முழுக்க கத்துவார்கள் பக்கத்து வீட்டுக்கு கேட்கும்படி... தம்மை நிலை நாட்டுவதுதான் அப்போ அவர்களின் குறிக்கோளாக இருக்கும்.. வேறெதுவும் புரியாது.

   இப்போ குறிப்பா வெளிநாட்டுப் பிள்ளைகளுக்கு சத்தம் கொஞ்சம் அதிகமானாலே எரிச்சலாகிறார்கள் டென்சனாகி விடுகிறார்கள்.. நான் டெய்சிக்கு சத்தமா ஏசுவேன் அதிக நேரம் வெளியே இருந்திட்டு வந்தால்:).. அவ கீழே விழுந்து கால்களைத்தூக்கி மன்னிப்புக் கேட்டபடி படுத்திருப்பா.. மகன் ஓடி வருவார்ர்.. ஏன் ஏன் எதுக்கு பேசுறீங்க பாவம் பயப்படப்போறா என ஹா ஹா ஹா..

   Delete
 23. அஆவ் !! அழகா பேரெழுதுதேன்னு நினைச்சி முடியரதுக்குள்ள இப்படி பண்ணிடுச்சே செல்லம் .நியாயப்படி எழுத சொன்னவர் மேல்தான் அது செஞ்சிருக்கணும் .
  வாயில்லாத ஜீவனை இப்படி கஷ்டப்படுத்தி எழுத வைக்கிறதும் தவறே

  ReplyDelete
  Replies
  1. ///அஆவ் !! அழகா பேரெழுதுதேன்னு நினைச்சி முடியரதுக்குள்ள இப்படி பண்ணிடுச்சே செல்லம்//

   அதானே பாஅருங்கோ ட்ரம்ப் அங்கிள் பாவமெலோ:)..
   உண்மைதான் சில மிருகங்களுக்கு குடுக்கும் ரெயினிங் பார்க்க அழுகை வரும்.. அப்படி ஏன் வருத்துகிறார்கள் என... ஆனா காலம் என்னவோ இப்படித்தானே முன்னேறு இப்போதெல்லாம்.

   Delete
 24. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் துக்கம் இருக்கத்தான் செய்யும்.. ஒவ்வொரு வடிவில்.. ஆனா அதுக்காக அதையே நினைச்சிருந்தால், இப்போ நமக்கிருக்கும் மகிழ்ச்சியை நாம் இழந்து விடுவோம்.. //
  சரிங்க டீச்சர் .மறதி வரத்துக்கு மெடிசின் ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க துக்கத்தை மறக்க துக்கப்படுத்தினவங்களை மறக்க .தப்பே செய்யாதப்போ நம்மை குற்றவாளியாக்குறவங்களை என்ன செயலாம்னும் சொல்லுங்க டீச்சர்

  ReplyDelete
  Replies
  1. //தப்பே செய்யாதப்போ நம்மை குற்றவாளியாக்குறவங்களை என்ன செயலாம்னும் சொல்லுங்க டீச்சர்//

   இப்படியான சந்தர்ப்பத்தில் மனம் கொதிக்கும்தான், ஆனா நமக்குத்தான் கடவுள் நம்பிக்கை அதிகமெல்லோ.. நான் கடவுளிடம்தான் பொறுப்பை ஒப்படைப்பேன் பல சமயம்.. கடவுளே என்னை சும்மா வருத்துகிறார்கள்.. அவர்களை நீயே கவனி.. தவறு என்னில் எனில், எனக்கு உணர்த்து நான் திருத்திக் கொள்கிறேன் எனவும் சொல்லி வைப்பேன்..

   என்னெனில் பாரத்தை அவரிடம் ஒப்படைத்து விட்டு நாம் ஃபிரீயாகிடோணும் இல்லை எனில், அது நம் மனதில் இருந்து அரித்து நம்மை நோயாளியாக்கிடும்...

   ஒரு பழமொழி இருக்கு அஞ்சு..
   அது பழமொழியா..?

   “மெலியாரை வலியார் கேட்டால், வலியாரைத் தெய்வம் கேட்குமாம்”.

   Delete
  2. இ து குறளோடு பொருந்தி வந்த நன்மொழி :)
   அருள் இல்லாதவர்கள் வேறு எவருக்கும் அடங்காமலிருந்தாலும், கடவுள் கிட்டயாவது அடங்கி இருக்க வேண்டும் //
   ஆனா கடவுளையே மதிக்காதவங்க கிட்ட நல் எண்ணத்தை எதிர்பார்க்க முடியுமா

   Delete
  3. அதன் விளக்கம் அஞ்சு.. நம்மை விட வலிமை பொருந்தியோர், நம்மை வருத்தும் இடத்தில் நம்மால் ஒண்ணும் பண்ண முடியாதெல்லோ.. அப்போ அவர்களை தெய்வம் கேட்குமாம்.. இப்போ அரசியல்வதிகள் பெரிய அதிகாரத்தில் இருப்போர் , கீழே இருப்போரைக் கொடுமைப் படுத்தினால் எதிர்க்க முடியாதெல்லோ.. அப்போ அவர்களைத் தெய்வம் தானே கேட்கோணும்...

   Delete
 25. /இடைவேளை தாத்தா போன்ற வாழ்க்கை வாழ கொடுத்து வச்சிருக்கணும் .இங்கே நிறையபேர் இருக்காங்க மியாவ் அவங்களுக்கு மகிழ்ச்சி மட்டுமே தெரியும் வேறே எந்த துர்குணமும் இல்லதஹ்தால்தான் ஆக்டிவா இருக்காங்க முதிய வயதிலும் .
  ஆமா அதென்ன வழமையான கேள்வி ?உங்களை யாராச்சும் அடிக்கடி கேட்டார்களா ஹாஹ்ஹ்ஹா

  ReplyDelete
  Replies
  1. இங்குள்ளவர்களுக்கு பொறுப்பு அதிகம், தம் சந்தோசத்தை மட்டுமே கருத்தில் கொண்டு வாழ்வர். அடுத்தவர் பிரச்சனையில் மூக்கை நுழைப்பதில்லை.

   ஆனா நம் இனத்தவர். பிள்ளை.. பெற்றோர் பின்பு பேரபிள்ளைகள் என அனைத்தையும் தம் தலையில் கட்டி பாரத்தை ஏற்றி வாழ்வதனாலேயே துன்பம் அதிகம் என நினைக்க்கிறேன்...

   //ஆமா அதென்ன வழமையான கேள்வி ?உங்களை யாராச்சும் அடிக்கடி கேட்டார்களா ஹாஹ்ஹ்ஹா//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

   [im] https://media.giphy.com/media/rho9L4MsYXaec/giphy.gif [/im]

   Delete
 26. /சிலர் எப்பவும், நம் கருத்துக்கு முரணாகவே கருத்துச் சொல்வர்.. அதுக்காக நம் கருத்துத்தான் சரி என அர்த்தம் இல்லை.. ஆனா அவருக்கும் நமக்குமான அலைவரிசை பொருந்தவில்லை என அர்த்தம்,//

  ஐ know ஐ know ஹஹஹஹஹா :)

  //வழி இருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்
  துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
  குணம் குணம் அது கோவில் ஆகலாம்
  மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்//

  வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் இதெல்லாம் சொல்லித்தந்ததே நீங்க தானே மியாவ்

  ReplyDelete
  Replies
  1. //ஐ know ஐ know ஹஹஹஹஹா :) //

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என்னா சிரிப்பூ?:)

   //வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் இதெல்லாம் சொல்லித்தந்ததே நீங்க தானே மியாவ் //

   [im] https://media.giphy.com/media/xFOc3rYIGE3aE/giphy.gif [/im]

   Delete
 27. //இதேபோல, சந்தோசம் என்பதும் ஒரு தொற்று நோய்போலத்தான்:), நாம் சந்தோசமாகப் பேசுவோரோடு சேர்ந்து இருப்பின், அவர்களின் மகிழ்ச்சி நம்மைத் தொற்றிக் கொள்ளும்.//
  அதே அதே 1000 டைம்ஸ் உண்மை முகப்புத்தகத்தை விட்டு நானா வெளியேற பல காரணங்களில் இதுவும் ஒன்று ..சந்தோஷமான பதிவுகள் சந்தோஷத்தை கூட்டிப்போடும் ஆனா ஒரு சண்டை மூட்டற வெறுப்பைக்கக்கும் பதிவு ஒன்னு வந்தாலும் நம்மை அது பாடாய்படுத்திடும் பிறரின் வெறுப்பு கோபம் எல்லாத்தையும் நம்மையும் தூக்கி சுமக்க நேரிடும்

  ReplyDelete
  Replies
  1. ///அதே அதே 1000 டைம்ஸ் உண்மை முகப்புத்தகத்தை விட்டு நானா வெளியேற பல காரணங்களில் இதுவும் ஒன்று///

   ஹா ஹா ஹா வாழ்கையில எதை மறந்தாலும் இதை மட்டும் மறக்கவே மாட்டீங்க:)) நல்ல அனுபவம்:)..

   //ஆனா ஒரு சண்டை மூட்டற வெறுப்பைக்கக்கும் பதிவு ஒன்னு வந்தாலும் நம்மை அது பாடாய்படுத்திடும் பிறரின் வெறுப்பு கோபம் எல்லாத்தையும் நம்மையும் தூக்கி சுமக்க நேரிடும்///
   ஹையோ இதுக்கு நல்ல உதாரணம் பிக்கி பொஸ்ஸ் ஐஸ்வர்யா.. ஆண்டவா அதைப்பார்த்தாலே பிபி ஏறிடுது உடம்பு கொதிச்சுப் போயிடுது.. பார்க்கக்கூடாதெனக் கங்கணம் கட்டினாலும் பார்த்திடுறோம்ம்.. இப்போதான் நிம்மதி ஹா ஹா ஹா.

   Delete
  2. / எதை மறந்தாலும் இதை மட்டும் மறக்கவே மாட்டீங்க:))//

   ஹாஹாஹா வாழ்க்கைல நல்லது கெட்டது இரண்டையும் மறக்கக்கூடாது .நல்லது இன்னும் நிறைய நம்மை பலப்படுத்த .கெட்டது இனிமே தவறே செய்யக்கூடாதென்னும் முடிவுக்கு வர ..

   Delete
  3. சிலர் 100 ஐஸ்வர்யாக்களுக்கு சமமானோர் சுத்தறாங்க அதனால் பிக் பாஸ்லாம் ஜுஜுபி

   Delete
 28. ஹாஹ்ஹா வேலி ஓணான் :) சில நேரம் அசந்தாப்பல இருந்தா ஓணான் நம்மை வேலைன்னு நினைச்சும் ஏறிடும் அதிலும் கவனமாவே இருக்கணும்

  ReplyDelete
  Replies
  1. //நம்மை வேலின்னு//

   Delete
  2. ஹா ஹா ஹா இதுவும் உண்மைதான்.. இதுக்குத்தான் ஓடித் தப்பத் தெரிஞ்சிருக்கோணும்:).

   Delete
 29. சொர்க்கத்துக்கு போக எதுக்கு பயம் :) உங்களுக்கு வேணும்னா ஸ்பெஷலா kfc கடை போட சொல்லட்டா :)
  அனைத்தும் அருமை ரசித்தேன் வடிவேலு அங்கிள் கலக்கிட்டார் .:)

  ReplyDelete
  Replies
  1. //உங்களுக்கு வேணும்னா ஸ்பெஷலா kfc கடை போட சொல்லட்டா :)// அதெல்லாம் கிடைக்குமாமெ:) ஆனா நீங்க எல்லாம் அங்கு வருவீங்களோ எனும் பயம்தான் ஹா ஹா ஹா ஹையோ கல்லைக் கீழே போடுங்கோ :)

   மிக்க நன்றிகள் அஞ்சு அனைத்துக்கும்.. இனி ஓடிப்போய் ரெஸ்ட் எடுங்கோ:)

   Delete
 30. //நம் ரசனை விருப்பு வெறுப்புக்கேற்றபடி இன்னொருவரும் இருக்கும் போது, அவரோடு நாம் பேசும்போது நம் மனம் மகிழ்ச்சியை உணருது. இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமே என மனம் எண்ணுது.. அதுதான் சொர்க்கம்.//

  உண்மை அதிரா.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. மிக்க நன்றி.

   Delete
 31. நம் மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுப்பது நம் கையிலேயே இருக்கிறது.//

  உண்மை உண்மை.

  //அதேபோல குடும்பத்தில் ஒரு தவறு நிகழ்ந்துவிட்டால், சரி ஏதோ கோளாறு.. தவறாகி விட்டது, இனிமேல் அப்படி நடந்திடக்கூடாது என்பது பற்றித்தான் சிந்திச்சு செயல் பட வேண்டுமே தவிர, அத்தவறை அடிக்கடி சுட்டிக் காட்டி, குடும்ப மகிழ்ச்சியை நாசம் பண்ணிக்கொண்டிருக்கக் கூடாது.//

  இனிமேல் அப்படி நடக்காமல் சிந்தித்து செயல்படவேண்டும்தான்.சரியாக சொன்னீர்கள்.
  தவறை குத்திக்காட்டி குத்திக்காடி வாழ்வை நரகமாக்கி கொள்பவர்கள்தான் அதிகமாய் இருக்கிறார்கள் அதிரா. சிந்தித்து செயல்பட்டால் மகிழ்ச்சி நீடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதானே கோமதி அக்கா, அது சிலருக்கு தம்மை ஏமாற்றி விட்டுவிட்டார்களே[தவறு பண்ணிட்டினமே நம்பி இருந்தேனே] என, அத் தவறை ஜீரணிக்கவோ மன்னிக்கவோ முடிவதில்லை அதனாலதான் அடிக்கடி குத்திக் காட்டி கெடுத்துப்போடுவார்கள்..

   ஆனா கொஞ்சம் மனதை கட்டுப்படுத்தி, சிந்திச்சு செயல்பட்டால் எல்லாம் நல்லபடி நடக்க வாய்ப்பு அதிகம் தானே.

   Delete
 32. ஊசி இணைப்பு, ஊசிக்குறிப்பு அனைத்தும் அருமை.

  ReplyDelete
 33. //“ஒலிக்குறைவான வாழ்க்கை முறை.. உயர்ந்த வாழ்க்கை முறை” என்கின்றனர்.. இதில் சொல்லப்படும் ஒலிக்குறைவு என்பது சண்டை சச்சரவைக் குறிக்கும்.//

  நன்றாக சொன்னீர்கள் அதிரா.
  தினம் கூச்சலும், சண்டையும் இருந்தால் அந்த வீட்டில் அமைதி இருக்காது.
  வாழ்க்கை முறை நன்றாக இருக்க ஒலி அளவை குறைத்து கொள்ளவேண்டியதுதான்.

  ReplyDelete
 34. அதிரா, சிறுவயதிலிருந்தே இறைவனை வணங்க சொல்லிக் கொடுத்து விட்டார்கள்.
  மகிழ்ச்சியாக இருக்கும் போது கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும்.
  துன்பமாய் இருக்கும் போது அதிலிருந்து மீள மனபலத்தை தர கடவுள்தான் என்று உறுதியாக நம்ப வேண்டும்.

  குழந்தை அடித்தாலும் அம்மாவிடம்தான் போகும் அது போல் . துன்பத்தை கொடுத்த போதும் பக்தன் இறைவனிடம் தான் சரண் அடைகிறான்.

  துன்பத்தில்தான் இறைவனை நிறைய அழைப்பார்கள் (நினைப்பார்கள் ) இன்ப என்ற மாயையில் நான் அமிழ்ந்து போய் இறைவனை மறந்து விடுவார்கள். அப்போதும் அவரை மறவா நிலை பக்தி நிலை.

  இறைவா உன்னை என்றும் மறவாமல் இருக்க வேண்டும் கணபொழுதும் என்று வரம் கேட்கும் பக்தரும் உண்டு.

  நம் கடமைகளை செய்து கொண்டே கடவுளை வணங்க வேண்டும் .  ReplyDelete
  Replies
  1. ///துன்பத்தில்தான் இறைவனை நிறைய அழைப்பார்கள் (நினைப்பார்கள் ) இன்ப என்ற மாயையில் நான் அமிழ்ந்து போய் இறைவனை மறந்து விடுவார்கள். அப்போதும் அவரை மறவா நிலை பக்தி நிலை.///

   அழகாக சொன்னீங்க கோமதி அக்கா.. நான் உண்மையில் நல்ல விசயங்கள் நடந்தாலும் தங்கூ சொல்லி ஏதாவது செய்து குடுப்பேனாக்கும்:)... ஆனா டென்சன் துன்பம் ஏதும் எனும்போது கொஞ்சம் அதிகமாகவே கும்பிடுவேனாக்கும் ஹா ஹா ஹா.

   Delete
 35. //இப்போ நாம் சொர்க்கத்தைக் காணுவதென்பது பரலோகம் போய்த்தான் என்றில்லை:).. சொர்க்கம் என்றால் என்ன எனில் ஒரு மட்டட்ட மகிழ்வைத் தரக்கூடிய சூழலே சொர்க்கம்//

  சொர்க்கம் என்றும் நிலைத்து இருக்க வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்.


  //நான் எப்பவும் சிரிச்சுக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பேன், மற்றது, அடுத்தவர்களோடு எப்பவும் நல்ல வார்த்தையில் மகிழ்வான வார்த்தையில் மட்டுமே பேசுவேன் என்றார்... அப்போ அதிலும் உண்மை இருக்கிறதுதானே பார்த்தீங்களோ?//

  உண்மை உண்மை.
  பெரியவர் சொன்னது முற்றிலும் உண்மை.
  அது போல் அதிரா சிரித்து கொண்டு, மகிழ்வான வார்த்தைகளால் பேசி எழுதி

  இப்படி அழகான அருமையான பதிவை போட்டு எல்லோரையும் மகிழ்ச்சி படுத்தி கொண்டு இருக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 36. Replies
  1. ஹா ஹா ஹா சிலர் பாட்டுக் கேட்டு வெய்க்கப்பட்டிட்டினமோ என்னமோ:))).. ஆனா வீடியோவை விட்டுவிட்டுக் காதால் கேட்கும்போது நல்ல நகைச்சுவைப் பாட்டு எல்லோ ஹா ஹா ஹா.. அனைத்துக்கும் மிக்க நன்றி கோமதி அக்கா.

   Delete
 37. கடவுளை நாம் வணங்குவதற்குக் காரணம் “பக்தி” தான், என்பதற்குக் கொஞ்சம் பொயிண்ட்ஸ் சொல்லுங்கோவன் பிளீஸ்ஸ்.. ஒவ்வொருவர் ஒவ்வொரு பொயிண்ட் சொன்னாலே நிறைய வந்துவிடும்.. //

  பக்தி மட்டும் என்று சொல்ல முடியாது அதிரா. பெரும்பாலோருக்குப் பயம் என்றுதான் தோன்றுகிறது. சென்டிமென்ட்ஸ் ஹையோ இன்று சாமி கும்பிடவில்லை அதனால்தான் இன்று எனக்கு இப்படி ஆகிவிட்டது என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.

  கடவுளிடம் கோரிக்கை வைத்து வணங்குபவர்க்ளும் இருக்கிறார்கள் இதை பக்தி என்று சொல்ல முடியாதே...கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் கடவுளை திட்டவும் செய்வார்கள்...கடவுளே இல்லை என்றும் சொல்வார்கள்...இதை எல்லாம் பக்தி என்று சொல்லவே முடியாது. அது போல கடவுளிடம் பேரம் பேசுவது அதாவது உனக்கு நான் இதைச் செய்கிறேன்...எனக்கு நீ இதை செய் என்று...இது பக்தி என்று சொல்ல முடியாது.

  பக்தி என்பது அது இறைவனை இறைவனுக்காகத் தொழுவது. அவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான் என்று முழுவதும் சரணாகதி அடைவது. மனதில் எந்தக் கேள்வியும் இல்லாமல் அதாவது இறைவனிடம் எந்தக் கேள்வியும் வைக்காமல்....ஆழ்வார்கள், நாயன்மார்கள் பல மகான்கள் பக்திக்கு உதாரணம் என்று சொல்லலாம்.

  ஆனால் நம்மில் பலரும் இறைவனை தொழுதால் பக்தி என்று சொல்கிறோம். அது அல்ல. இறைவனைத் தொழ வேண்டும் பக்தி என்ற பெயரில் சின்ன பிள்ளைகளுக்கும் நாம் நீ இப்படிச் செய்தால் இறைவன் கண்ணைக் குத்திவிடுவார் பனிஷ்மென்ட் தருவார் என்றும் இறைவனிடம் கேள் எல்லாம் கிடைக்கும் என்றும் தவறான கான்செப்டை விதைக்கிறோம் என்றே தோன்றுகிற்து..

  லவ் இஸ் காட்! அன்பே சிவம் ..

  இன்னும் நிறைய சொல்லலாம் அதிரா இதில்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீதா வாங்கோ..

   //பக்தி என்பது அது இறைவனை இறைவனுக்காகத் தொழுவது. அவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான் என்று முழுவதும் சரணாகதி அடைவது. மனதில் எந்தக் கேள்வியும் இல்லாமல் அதாவது இறைவனிடம் எந்தக் கேள்வியும் வைக்காமல்.//

   எனக்கிது ரொம்பப் பிடிச்சுப்போச்சு... அருமையாக சொல்லிட்டீங்க.

   //இறைவனைத் தொழ வேண்டும் பக்தி என்ற பெயரில் சின்ன பிள்ளைகளுக்கும் நாம் நீ இப்படிச் செய்தால் இறைவன் கண்ணைக் குத்திவிடுவார் பனிஷ்மென்ட் தருவார் என்றும் இறைவனிடம் கேள் எல்லாம் கிடைக்கும் என்றும் தவறான கான்செப்டை விதைக்கிறோம் என்றே தோன்றுகிற்து..//

   இது உண்மைதான் பயப்படுட்த்ஹி வணங்க வைக்கும்போது, அப்பயம் போனபின் பக்தி இருக்காதே.. பக்தி என்பது தானாக உருவாவது என்பதுதான் என் நினைவும்.

   Delete
  2. அட கீதா க்கா நானும் இதே சொல்லி இருக்கேன் ..

   Delete
 38. அப்பெரியவர் சொன்னதை மிக மிக மிக மிக கன்னா பின்னாவென்று ஆதரிக்கிறேன். நூற்றுக்கு நூறு உண்மை. வாட்சப்பில் கூட ஒரு வீடியோ வந்தது. பல பெரியவர்களை பேட்டி எடுத்ததில் அவர்களிடம் அறிந்தது இதுதான்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கீதா.. யாரைக் கேட்டாலும் மகிழ்ச்சியாக இருங்கள் எனத்தான் சொல்கிறார்கள். நீண்ட ஆயுளுக்கு மட்டுமல்ல.. நோய் துன்பங்கள் நெருங்காமல் இருப்பதற்கும்.

   Delete
 39. அதிரா வடிவேலு செம....

  அந்த செல்லம் அழகு எப்படி ஒரு திறமை அதுவும் வாலை ஆட்டி ஆட்டி செய்யும் விதம் அழகு. ஆனால் பாவம் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்றும் தோன்றியது மனதிற்கு வேதனை அளித்தது அது பாவம்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. எவ்ளோ கஸ்டப்பட்டுப் பழக்கியிருப்பார்கள். முன்பு ஒன்று பார்த்தோமே யானை பெயிண்ட் பண்ணுவது..

   Delete
 40. அதிரா வாழ்வியல் குறித்து சொல்லியிருக்கும் பாயிண்டுகள் அனைத்தும் மிகவும் சரியே. எனக்கும் இதே கருத்துதான்.

  ஆனால் யதார்த்தத்தில் ஒரு கை மட்டுமே தட்டிக் கொண்டிருந்தால் ஓசை எழாதே...

  ஆனால் விரிவாகச் சொல்லிட இயலவில்லை

  கீதா

  ReplyDelete
  Replies
  1. //ஆனால் யதார்த்தத்தில் ஒரு கை மட்டுமே தட்டிக் கொண்டிருந்தால் ஓசை எழாதே...
   //

   இது உண்மைதான் கீதா.. இது அனைத்து விசயங்களுக்குமே பொருந்தும்.. ஒருவர் மட்டுமே எப்பவும் அனைத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, பெறுபவர் அதற்கேற்ப தன்னைக் கொஞ்சம் மாற்றினால் நன்றாக இருக்கும்.. ஆனா காலப் போக்கில், இந்த ஒருவர் கொடுப்பதை நிறுத்திட்டால், பின்பு பிளவுதான் மிஞ்சும்...

   Delete
 41. ஆனா அவருக்கும் நமக்குமான அலைவரிசை பொருந்தவில்லை என அர்த்தம், அதனால அப்படியானோரோடு எப்பவும் கூடியிருந்தால் அது நம் மனதுக்கு எப்பவும் துன்பத்தையே கொடுக்கும். //

  இதை நான் கன்னாபின்னாவென்ரு உருண்டு பெரண்டு கை தட்டி குதித்து ஆதரிக்கிறேன். நான் அடிக்கடி சொல்லும் பாயின்ட்!!!!! என்பதால்...

  //அதனாலதான் நம் மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுப்பது நம் கையிலேயே இருக்கிறது.//

  உண்மையே ஆனால் யதார்த்தத்தில் அதற்கும் ஆப்பு வருவதுண்டு...எடுக்க முடியாத சூழலும் வரும்....ஹா ஹா ஹா ஹா என்றாலும் கிடைக்கும் ஊசி கேப்பில் கூட மகிழ்ச்சியாக இருந்திட முனையலாம்...இதுவும் ஒவ்வொருவரின் மன நிலையைப் பொருத்து இருக்கிறது. அதனால்தானே உலகில் ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து வித்தியாசமாய் இருக்கிறார்கள்!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. //இதை நான் கன்னாபின்னாவென்ரு உருண்டு பெரண்டு கை தட்டி குதித்து ஆதரிக்கிறேன். நான் அடிக்கடி சொல்லும் பாயின்ட்!!!!! என்பதால்...///

   ஹா ஹா ஹா அல்லோ கீதா நான் புளொக்குக்கு இன்ஸ்சூரன்ஸ் எடுக்கவில்லை:) பின்பு நீங்க அடிகிடி பட்டு கோர்ட்க்குப் போனால் மீ என்ன பண்ணுவேன்ன் :)).

   //உண்மையே ஆனால் யதார்த்தத்தில் அதற்கும் ஆப்பு வருவதுண்டு...எடுக்க முடியாத சூழலும் வரும்///
   உண்மைதான் சில சமயங்களில் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

   Delete
 42. அதிரா உங்கள் கருத்துகள் அனைத்தும் மிக மிகச் சரியே. நல்லதொரு பதிவு. மகிழ்ச்சி நம் கையில்தான், சில சமயம் தொலைந்திட வாய்ப்பு இருந்தாலும் மீண்டும் அதை தேடி எடுத்துவிட வேண்டும். மகிழ்ச்சி இருந்துவிட்டால் அது எப்படிப்பட்ட தருணத்தில் ஏற்படும் மகிழ்ச்சியாக இருந்தாலும் எப்போதுமே நாம் நம்மை மகிழ்வாக வைத்துக் கொண்டுவிட்டால் அதுதானே சொர்க்கம்!

  துளசிதரன்

  கீதா: யெஸ் அதிரா நான் இந்தக் கருத்தைத்தான் சொல்ல வந்தேன் துளசி அனுப்பியிருந்த கருத்தும் சேம் என்பதால் அதையே எனது கருத்தாகவும் வழி மொழிகிறேன்...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ.. ஞானி எனப் பெயரை வச்சுக்கொண்டு:) இதுகூடச் சொல்லாட்டில் எல்லோரும் அடிச்சுக் கலைப்பினமெல்லோ ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்.

   அனைத்துக்கும் மிக்க நன்றிகள் கீதா.

   Delete
 43. நல்ல பதிவு அதிரா..

  நாம் என்ன பண்ணோனும், நம்மைப்போன்ற ஒத்த அலைவரிசையுடையோரோடு நட்பை ஏற்படுத்திக் கொள்ளோனும்,...


  ரொம்ப சரி ..எப்பவும் நேர்மறை எண்ணங்களுடன் மகிழ்ச்சியுடன் பேசும் நட்புகள் கிடைப்பது என்பது வரம் ..

  அத்தகைய நட்பு இருந்தால் நம் கஷ்டங்களும் விலகி நிற்க்கும் இல்லையா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அனு வாங்கோ..

   உண்மைதான், ஆனா நேர்மறை எண்ணங்கள் எனும்போது, அனைத்தையும் நாம் நேர்மறையாகவே எடுத்திடக்கூடாது முடிந்தவரை பலதை நகைச்சுவையாகவே எடுத்திடோணும் .. அப்படித்தான் நான் எடுப்பதுண்டு.. ஆனா சில நேரங்களில் அது தவிர்க்கப் பட வேண்டி வந்துவிடும்.

   Delete
 44. “ஒலிக்குறைவான வாழ்க்கை முறை.. உயர்ந்த வாழ்க்கை முறை” என்கின்றனர்.. இதில் சொல்லப்படும் ஒலிக்குறைவு என்பது சண்டை சச்சரவைக் குறிக்கும்.


  ..இதுவும் ரொம்ப ரொம்ப சரி...கத்தி கத்தி சண்டை போட்டு என்ன பண்ண எதையும் மாற்ற முடியாது..

  எப்பவாவது சண்டை ன்னா ஓகே..தினம் தினம் என்பது கேடு..

  எல்லாமே நம்ம கையில் தானே இருக்கு..

  ReplyDelete
 45. அடுத்து பக்தி..

  ஒரே வார்த்தையில் சரணாகதி

  அவனை முழுதாக நம்பனும்..

  இன்னும் சொல்லணும் ன்னா நம்ம அப்பாவின் அப்பா (தாத்தா வை சொல்ல) இறைவன்..

  நம்ம அப்பாவிற்கு நமக்கு எது எப்போ செய்யணும் ன்னு தெரியும் அவர் வேண்டாம் ன்னு சொன்னா காரணம் இருக்கும்..அந்த நம்பிக்கை தான் சரணாகதி

  அது போல் ரொம்ப தேவையானது ம் நம்ம அப்பா ட்ட கேக்கலாம் அவர் ட்ட கேக்காம யார்ட்ட கேக்குறது..அந்த உரிமையும் சரணாகதி

  இது தான் பக்தி என்று என் குட்டி மூளையில் உதித்தது..

  ReplyDelete
  Replies
  1. ஓ நம்பிக்கைதானே பக்தி.. இதுவும் சரியெனவே எனக்கும் தோணுது.

   மிக்க நன்றிகள் அனு.

   Delete
 46. ஆபோசிட் போல்ஸ் அட்ராக்ட் என்றுபடித்த நினைவு

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ.. மிக்க நன்றி.

   Delete
 47. லேட் தான் பரவாயில்லை. கருத்தை பிரசுரிப்பீங்க என்ற நம்பிக்கையில்....
  முதல்ல நீங்க போட்டிருக்கும் நகைச்சுவை அத்தனையும் வாசிச்சு சிரிச்சாச்சு. வடிவேலு,நாகேஷ் என் பேவரிட்.
  ஊசிகுறிப்பு அருமை. பாட்டும் எனக்கு பிடித்திருக்கு. அடிக்கடி கேட்பதுதான். புஷ்வனம் குப்புசாமி கணீர் குரல் பிடிக்கும். காட்சியை விட்டு கானத்தை மட்டும் கேட்டால் நல்லாயிருக்கு.
  அடுத்து உங்க பதிவு.. தலைப்பை பார்த்ததும் 'சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான் என் ற பாட்டுதான் ஞாபகம் வருது. ஹா..ஹா..ஹா.
  //நம் ரசனை விருப்பு வெறுப்புக்கேற்றபடி இன்னொருவரும் இருக்கும் போது, அவரோடு நாம் பேசும்போது நம் மனம் மகிழ்ச்சியை உணருது. இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமே என மனம் எண்ணுது.. அதுதான் சொர்க்கம்.// உண்மைதான் அதிரா. எனக்கும் அனுபவத்தில் நடந்தது. நாமும் நம்மை நல்ல நினைவுகள், மகிழ்ச்சியான நல்ல எண்ணத்துடன் இருந்தால் நம் சூழலும் நல்ல விதமா இருக்கும் . நாம் பழகும் மனிதர்கள் பலதரப்பட்ட குணத்தோடு இருப்பதால் பார்த்து பழகவேண்டி இருக்கு.
  நீங்க சொல்லியிருக்கும் "அவற்றை மாற்ற வெளிக்கிடகூடாது " என்பதில் உள்ள கருத்துக்கள் மிகவும் உண்மை. தவறு செய்யின் எவ்வளவு நாளைக்கு செய்வினம். முடிவு வரத்தான் செய்யும். நீங்க சொல்ல்லியிருக்கும் கருத்துக்கள் அத்தனையும் மிகவும் சரியானதும்,வாக்கைக்கு தேவையானதும் கூட.


  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்முலு வாங்கோ..

   லேட்டா? சே..சே.. ரெயின் இனித்தானே வெளிக்கிடப்போகுது:).. உண்மையில நான் தான் பதில் தர லேட்.

   //பாட்டும் எனக்கு பிடித்திருக்கு. அடிக்கடி கேட்பதுதான். //
   இங்க சிலபேர் வெய்க்கப்பட்டு பேசாமல் போயிட்டினம் ஹா ஹா ஹா:).

   உண்மைதானே அம்முலு.. இப்போ நாங்க தப்பா சொன்னாலும்.. சின்னச் சின்ன விசயங்களில்.. அதை சேர்ந்து அது தப்பில்லை ஓகே அதனாலென்ன எனச் சொல்லும்போது சந்தோசம் கூடுது ஹா ஹா ஹா..

   மிக்க நன்றி அம்முலு.

   Delete
 48. நாம் கடவளை வணங்க பக்தி என்பது நாம் வைக்கும் நம்பிக்கைதான். அவர் எல்லாம் பார்த்துப்பார். நல்லதே செய்வா என நம்புவது. இனி யாரிடமும் சொல்லமுடியாதவைகளை அவரிடம் சொல்லலாமெல்லோ..ஏன் என்றா அவர் ஒருவருக்கும் சொல்லமாட்டார். ஹா..ஹா.. சந்தேகமற்ற நம்பிக்கை பக்தி இருந்தால் நமக்கு நல்லதை அந்த சக்தி செய்யும் என்று ஒருவர் திடமாக நம்பமுடியும். இப்ப பக்தியை ஒரு வியாபாரமாகிபோட்டினம். உண்மையான பக்தியை தேடி போகவேண்டி இருக்கு. ஊரில இருக்கும் போது கூட நல்லூருக்கு திருவிழா காலத்தில போவது எனக்கு பக்தியா படல. விடுப்பு பார்க்க போவது மாதிரி இருக்கும். ஆனா இதே சந்நிதியானுக்கு போனால் ஏதோ எனக்கு உடம்பெல்லாம் சில்லிட்டு போகும் அதிரா. என்ன்வோ மாதிரி இருக்கும். கண்களிலிருந்து கண்ணீர் ஓடும். மனசு படபடக்கும். போனமுறை போனபோதும் இதே உணர்வுதான்.
  இங்கு என் வீட்டுக்கு அருகில் இருக்கும் சேர்ச் மணி அடிக்கும்போது வரும் உணர்வு சொல்லமுடியாது.

  /எந்த மதக் கோயிலுக்குப் போனாலும்.. அதாவது ஜேசு சிலையின் முன்னால நின்று நான் கும்பிடுவேன் என்னை அறியாமல்.. “அப்பனே முருகா பிள்ளையாரே எல்லாம் நல்லபடி நடக்கோணும்”.. இப்படி ஹா ஹா ஹா இது எல்லோருக்கும் இப்படித்தான் வருமோ என்னமோ..// எனக்கும் அப்படித்தான் வரும்.

  ReplyDelete
  Replies
  1. //இனி யாரிடமும் சொல்லமுடியாதவைகளை அவரிடம் சொல்லலாமெல்லோ..ஏன் என்றா அவர் ஒருவருக்கும் சொல்லமாட்டார். ஹா..ஹா.//

   ஹா ஹா ஹா இதுவும் சரிதான்.. சொல்லிப்போடாதையுங்கோ கடவுளே எனச் சொல்லிப்போட்டும் சொல்லலாம் ஹா ஹா ஹா..

   என் கருத்துக்களோடு ஒத்த கருத்துக்களையே சொல்லி இருக்கிறீங்க:) இல்லை எனில் நம் நட்பு பத்து வருடமா நீடிக்குமோ ஹா ஹா ஹா.. மிக்க நன்றி அம்முலு.

   Delete
 49. என்ன ஒரேயடியாக தத்துவ விசாரத்தில் இறங்கி விட்டீர்கள்?
  கடவுளை வணங்குவதற்கு பயம் காரணம் கிடையாது. ஏனென்றால் சில குழந்தைகளே பக்தியோடு இருப்பதை பார்க்க முடிகிறது. சிறு வயதில் கடவுளை கும்பிட கற்றுக் கொடுத்த படி செய்கிறோம், பின்னர் வாழ்க்கை தேவைகளுக்காக இறைவனை வேண்டுகிறோம், அதன் பிறகு விடை தெரியாத சில கேள்விகளுக்கு விடை காணவும், வாழ்க்கையின் குறிக்கோளை அடையவும் கடவுளை வணங்குவதை தவிர வேறு வழி தெரியவில்லையே.

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.