நல்வரவு_()_


Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Wednesday, 27 March 2019

பள்ளிக்கூடம்...💃💃

ப்படிப் பள்ளிக்கூடம் என எழுதும்போதே, கொஞ்சம் டவுட்டாகவும், ஏதோ புதுசா எழுதுவதுபோலவும் இருந்துது:), பலதடவை.. எழுத்துக்கள் எல்லாம் சரிதானா எனவும் செக் பண்ணினேன், ஏன் தெரியுமோ, இப்படித்தமிழில் பள்ளிக்கூடம் என யாராவது சொல்லுவதுண்டோ? வயதான /ஆங்கிலம் தெரியாதோர் கூட ஸ்கூல் எனத்தான் சொல்கின்றனர்.. நாங்களும் ஸ்கூல் எனச் சொல்லித்தானே பழக்கம்... அதனால எழுதும்போது புதுச்சொல்லாக இருந்துது, இப்படி புளொக் எழுதுவதனாலேயே இச்சொல் இன்னும் புழக்கத்தில் இருக்குது என எண்ணிப் பெருமைப்பட்டேன்ன்.. எனக்கு நானேதேன்ன்ன்ன்ன்:).

சரி சரி எனக்குப் பாருங்கோ அலட்டுவது பிடிக்காது:).. அதனால ஸ்ரெயிட்டா ஸ்கூலுக்குள் போவோமா?:).
என்னை ஆஜீர்வாதம்:) பண்ணுங்கோ குருவே:)

Friday, 28 December 2018

நம் எனர்ஜி லெவல்:)

(1)
ந்த நம்முடைய எனர்ஜி லெவல் பற்றி, பல பல விசயங்கள்.. அனுபவங்களாகவும், கேட்டதும் அறிஞ்சதும் தெரிந்ததுமாக பல விசயங்கள் இருந்தாலும், போஸ்ட்டாகப் போடலாமே எனும் எண்ணம் தோன்றியதில்லை, ஆனா அடிக்கடி டெய்சிப் பிள்ளைக்கு இப்படிச் செய்வேன், இருப்பினும் சமீபத்தில் டக்கென நினைச்சேனா, உடனே போஸ்ட்டில் எழுதும் ஆசை வந்துது.
(2)

அதாவது நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு எனர்ஜி இருக்குதுதானே, அது அனைவருக்கும் மாறுபடும்.. இந்த எனர்ஜி தான் நம்மை வெளிக்கொணர உதவுகிறது, அதாவது நல்லவராகவும் மாற்றும், தீயவராகவும் மாற்றும், கெட்ட செயல்கள் செய்யத் தூண்டும்.. இப்படி.

(3)

முதலில் கணவன் மனைவியிலிருந்து ஆரம்பித்தால், இருவருக்கும் எனர்ஜி லெவல் சேம் எனில் பிரச்சனை இல்லாமல் வண்டில் ஓடும்:).. ஆனா பொதுவாக ஆண்கள் வேலைக்குப் போய் வருவதனால் அவர்களின் எனர்ஜி செலவழிக்கப்படும், பெண்ணும் அதேபோல வேர்க் பண்ணுபவராயின் ஓகே, ஆனா பெண் வீட்டிலிருப்பவவாயின்... அதிலும் அவவின் எனர்ஜி லெவல் அதிகமாகவும் இருக்கும் இடத்து....

அவவின் எனர்ஜியை எவ்வழியிலாவது செலவழிக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்... இப்போ நம்மைப்போல புளொக் எழுதி... கொமெண்ட்ஸ் போட்டு, இல்லை சிலர் விதம் விதமாக சமைப்பார்கள், கைவேலை செய்வது, கார்டினிங், வீட்டை அலங்கரிப்பது, இப்படி எதுவாயினும் ஒரு வழியில் பெண்கள் ஈடுபடும்போது, தேவையில்லாத பிரச்சனைகள் தவிர்க்கப்படும்... அதாவது அவர்களின் எனர்ஜி.. இவ்வழியில் செலவழிக்கப்பட்டுவிடும்.

ஹா ஹா ஹா மன்னிச்சுக்கோங்க, இம்முறை அதிக ஆசையா இருந்தமையால இரண்டு ஆங்கில கோட்ஸ் போடுறேன்ன்:))
(4)


எங்காவது பெட்டி வைத்தால் போதும், உடனே அதனுள் இறங்கி 
இடம் பிடிச்சிடுவா:) கர்ர்ர்ர்ர்:)))
(5)

ஆனா இப்படி எதுவும் செய்யாமல் பொழுது போகவில்லையே என இருப்போர்தான் அதிகமாக வீண் வம்புகளில் சிக்கல்களில் மாட்டி தம் எனர்ஜியை தப்பான வழியில் செலவழித்து விடுகின்றனர். இதனால வீட்டிலிருப்போரை, எப்பவும் அடக்கி வைத்திருக்க நினைக்கக்கூடாது, அவர்களின் எனர்ஜி நல்ல வழியில் செலவழிவதற்கு நாம் ஊக்கம் கொடுக்க வேண்டும். அதையும் தாண்டி தப்புப் பாதையில் போவோரை ஒண்ணும் பண்ண முடியாது:)..

அதேபோலத்தான் ஆண்களிலும் ஓவர் எனர்ஜி உள்ளோர், வேலை முடிந்த பின்பும்.. எப்பவும் ஓடி ஆடி அங்கு போக வேண்டும், இங்கு போக வேண்டும் என அமளிப்படுவோரும் இருக்கிறார்கள், அதுக்கேற்ப நாமும் அவர்களோடு ஒத்துப் போக வேண்டும். சண்டை, வெட்டுதல், போராட்டம் இப்படியானவைகூட ஒருவிதத்தில் அவர்களின் எனர்ஜி வேறு வழியில் செலவழிக்கப்படாமையாலேயே, இப்படிப் பாதையில் செலவாகிறது...
(6)

பிள்ளைகள் விசயத்தில் இது சரியான முறையில் கையாளப்பட வேண்டும். அவர்களை எப்பவுமே வீட்டில் இரு, படி படி எனச் சொல்லிக் கொண்டிருந்தால்.. சில பிள்ளைகள் முளுக்க முளுக்க படிப்பில் செலவிடக்கூடும், ஆனா பெரும்பாலான பிள்ளைகளுக்கு வேறு பொழுது போக்கு, விளையாட்டும் தேவைப்படுகிறது, அதை நாம் கண்டித்து முடக்கினால், அது தப்பாக தேவையில்லாத சட்டிங்குகளில் ஈடுபடுதல்[காதல் பிரச்சனை], இல்லை சிகரட், குடி என இறங்குதல் இப்படி தப்பான வழியில் செல்லும் வாய்ப்பும் அதிகம்.

(7)

முக்கியமாக ஆண்குழந்தைகளை நன்கு விளையாட அனுமதிக்க வேண்டும்.. அப்போதான் எனர்ஜி வெளியேறி, அமைதியாக அடக்கமாக இருப்பார்கள். எங்கள் வீட்டில் சில நாட்களில் இரவு 10 மணிக்கும்.. கோல் வரும்[வீட்டுக்குள் இருந்தே:)] அல்லது கதவு தட்டப்படும்.. ரெட்மில் செய்யப் போகிறேன் என, ஓம் செய்யுங்கோ எனத்தான் ஓகே பண்ணுவது, போய் 20-30 நிமிடங்கள் செய்வார்கள், பின்பு குளித்துவிட்டுப் படுப்பார்கள்.. இப்படி எந்த வழியிலாவது ஒவ்வொருவரின் எனர்ஜியும் செலவழிக்கப் பட வேண்டும், அது நல்ல வழியில் செலவழியும்போது பிரச்சனை இல்லை, மாறி தீய பாதையில் கால் வைத்திட்டால் மீள்வது கஸ்டமாகிவிடும்.

இதேபோல்தான் எங்கள் டெய்சிப்பிள்ளையும் எப்பவும் வெளியே விடு வெளியே விடு என அடம் பிடிப்பா....

கவனமாகப் பாருங்கோ.. இடப்பக்கம் அணில்பிள்ளை ஜம்பண்ணி வேலியால ஓடுறார், எனக்கு இவ கீழே குதிக்கும்வரை நெஞ்சுக்குள் தண்ணியே இல்லை:)..

 சாதாரண பூனைகளை விட இவவுக்கு எனர்ஜி லெவல் கொஞ்சம் அதிகம்.. எப்பவும் ஓவரா ஓடோணும் துள்ளோணும் என இருப்பா. சிலசமயம் வெளியே போய் மழையில் நனைந்து வந்திருப்பா, அப்படி உள்ளே வந்தால் உடனே அவவை புரட்டிப் புரட்டி துடைச்சு விடோணும்.. அதுவரை விடமாட்டா.. மீயா மீயா எனக் கத்திக் கொண்டே பின்னால வருவா, துடைக்கும்போது கீழே படுத்திருந்து, வடிவேல் அங்கிளைப்போல .. இங்க துடை.. ஆ இங்க துடை எனபது போல கை காலை தூக்கித் தருவா, பின்பு 5 நிமிடத்தில் உடனேயே அடம் பிடிப்பா, கதவைத்திற வெளியே போக என...

விடாமுயற்சி:)

அந்நேரம் திரும்பவும் மழையில விட்டு துடைக்கோணுமெல்லோ.. அதனால நான் அவவுக்கு ஓடப்பண்ண விளையாட்டுக்கள் காட்டுவேன்.. ஓடி ஓடி பாய்ந்து பிடித்து உருண்டு பிரண்டு விளையாடுவா.. ஒரு 5 -10 நிமிடத்தில் எனர்ஜி இழந்து களைத்து ஓடிப்போய்ப் படுத்து அமைதியாக நித்திரை கொள்ளுவா... இதனை நோட் பண்ணியே.. இந்த எனர்ஜி லெவல் உண்மை என நம்பி.. இப்போஸ்ட் எழுத ஆரம்பிச்சேன்.

(8)

இது உண்மைதானே?
(9)

கீசாக்கா போனதடவை .. மீ கேக்கூஊஊ தரவில்லை எனச் சொல்லியிருந்தா, அதனால இந்தாங்கோ கிறிஸ்மஸ்க்கு[வாங்கிய:)] எக்லெஸ் ஃபுருட் அண்ட் நட் கேக்:)

ஊசி இணைப்பு:)
ஆஆஆஆ புதுவருடத்துக்கு இம்முறை அதிரா நிறையக் காசு தரப்போறேனாக்கும் எல்லோருக்கும்:))).. என்னிடம் இருந்தவற்றை மட்டும் வச்சுப் படமெடுத்தேன்:).. இதில முதலாவதாக வருபவருக்கு.. 20 ரூபாய்த் தாள்கள்.. 2 வதாக வருபவருக்கு 10 பவுண்ட் தாள்கள்.. லேட்டா வருபவருக்கு கேக் துண்குகள்:).. கடசிப் பெட்டியில் ஏறுவோருக்கு வெற்றலை பாக்கு:)) ஹா ஹா ஹா அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்💝.

ஊசி இணைப்பு
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மேலே படங்களுக்கு நம்பர் கொடுத்திருக்கிறேன், ஏதும் சொல்ல நினைச்சால் உங்கள் வேலையை ஈசியாக்க:).
கமலா சிஸ்டர் சொன்னா, தான் வருசம் முடிவதற்குள் 4 போஸ்ட்டாவது போட்டிட வேணும் என, அப்பூடித்தான் நானும் நினைச்சேன், 2018 சூசைட்டு பண்ண முந்தி:) மீயும் போட்டிடோணும் என.. போட்டிட்டேன்ன்ன்:).
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Sunday, 15 April 2018

சிரிச்சது ஒரு குத்தமாஆஆ?:))

நீண்ட நாள் ஆகிட்டுது போஸ்ட் எழுதி.. அதனால எப்பூடி எழுதுவது:).. எங்கின ஆரம்பிப்பது என ஒன்றுமே பிரியுதில்ல:). மனதில பல ட்ராவ்ட் இருக்கு எழுத:).. ஆனா எழுத வரும்போது .. புதியதை எழுதலாமே என மனம் எண்ணுவதால்.. பழையவை இன்னும் ட்ராவ்ட் ஆகவே இருக்கு.. மனதிலதேன்:).

Tuesday, 30 January 2018

வெள்ளையர்களும் வெளிநாட்டு வாழ்க்கையும்...

வ்வொரு கொமெண்ட்களிலும் ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்லும்போது, இது பற்றி நிறைய சொல்ல வரும், ஆனா தொகுப்பாக எழுதலாமே என வந்து கொம்பியூட்டரை ஓன் பண்ணினால் ...ஙேஙேஙேஙே... கிட்னியில் எதுவுமில்லை, அனைத்தும் பிளாங் கா இருக்கு:).. கர்ர்ர்ர்ர்ர்ர்:).

Wednesday, 24 January 2018

இரண்டு மாதத்தில் பிறந்த, ஒன்பது மாதக் குழந்தை:)

லைப்புப் பார்க்க லேசா தலை சுத்துதோ?:) ஹா ஹா ஹா இது ஒரு உண்மைச் சம்பவம்.. அதுவும் வெளி நாட்டிலே நடந்திருக்கு:)..

Friday, 24 February 2017

நானும் என் அழகிய பற்களும்:)

ன் பல்லைப் பற்றிய  “அவர்கள் ட்ருத்”  இன், கொமெண்ட் படிச்சதும், ஓடினேன்ன்.. ஓடினேன்ன்ன்.. தேம்ஸ் இன் ஆரம்பம் வரை ஓடினேன்... ஆனா அங்கு சடின் பிரேக் போட்டு நின்று விட்டேன்ன்...:)

Sunday, 29 January 2017

சகிப்புத் தன்மை...

ளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதானே வளர்த்தி என்று சொல்லிப்போட்டினம்.... ஆனா அத்தோடு சகிப்புத் தன்மையையும் வளர்க்க வேண்டி இருக்கே.

முக்கியமா இங்கு வெளிநாட்டுக்கு வந்ததில் இருந்து என் சகிப்புத் தன்மையை நாளுக்கு நாள் பல்லைக் கடிச்சு, நாக்கைக் கடிச்சு கூட்டிக்கொண்டே வாறேன்.. ஏனெனில் நாம் இருக்கும் ஊரும் அப்படிப்பட்டது. கலப்படமில்லாத வெள்ளையர்கள் இருக்கும் இடம், வெளிநாட்டவர்கள் எனில் நாமும் இன்னொரு குடும்பமும்தான், மற்றும்படி 2 சைனீஸ் குடும்பமும் உண்டு, எங்கு போனாலும் மிக ஒழுங்காக இருப்பார்கள்.

ரோட்டில் என்னதான் மெதுவா போனாலும், இடையே அவசரமா காரை நிறுத்தி யாருடன் பேசினாலும், பின்னாலே வரும் கார்கள் எல்லாம் பொறுமை காப்பார்கள், கோன் அடிக்க மாட்டார்கள். கோன் சத்தமே காதில் கேட்காது.

இரண்டே இரண்டு விசயத்துக்கு மட்டுமே கோன் அடிப்பார்கள்... 
1. சிக்னலில் முதலாவது ஆளாக காரை நிறுத்திவிட்டு கனவில மிதந்து கொண்டே இருந்து, கிரீன் லைட் மாறியபின்பும் அப்படியே கனவு காணும்போது:) கோன் பண்ணுவார்கள்... எடு காரை என:).

2. டக்கென ஏதும் றூல்ஸ் ஐ மீறி, காரைக் கண்டபடி திருப்பினாலோ, வெட்டினாலோ மட்டும் கோன் அடிப்பார்கள்(அதாவது, எதிர்பாராமல் பின்னே வரும் காரை திடுக்கிடப் பண்ணினால் மட்டும்).

ப்படியான மென்மையான ஊரில் இருப்பதனால் மிகவும் கவனமாக நாம் நடப்பது வழக்கம். தப்பித் தவறியும், ஏசியன்ஸ் என்றாலே இப்படித்தான் என இவர்கள் எண்ணிடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருப்பதனால்.. அதிகமா சகிப்புத் தன்மை தேவைப்படுது.

டுத்து Learners car முன்னாலே போகும்போது, பின்னாலே ஊர்ந்து ஊர்ந்து போவதுக்கு எவ்வளவு சகிப்புத் தன்மை தேவை தெரியுமோ? Dual carriageway எனில் (டபிள் ரோட்) முந்திக்கொண்டு போயிடலாம், ஒரு ரோட் எனில் முந்தவும் முடியாது... அந் நேரம் ஸ்கூலுக்கு நேரமாச்சே என காருக்குள் இருந்து பதறத்தான் முடியுமே தவிர ஒண்ணும் பண்ண முடியாது:).

னா நான் நினைப்பேன் முன்பு ஒருகாலத்தில் கார் பழகும்போது, என் பின்னாலேயும் இப்படி சகிப்புத் தன்மையோடுதானே ஏனையோர் இருந்திருப்பார்கள்.... இனி நம் பிள்ளைகள் பழகும்போதும் யாரும் திட்டாமல் சகிச்சுக் கொண்டு பின்னாலே ஊர்ந்து செல்லத்தானே போகிறார்கள் அதனால.. இது நான் கடந்து வந்த பாதை.. என நினைச்சு மிகவும் சகிப்புத் தன்மையோடு..  "நீ ஓடு ராசா!! பத்திரமா ஓடு" என நினைச்சு, பொறுமை காப்பேன்.

ன்னொரு இடம், சில இடங்களில் வயதானோரின் பின்னால் நடப்பது. முந்தவும் முடியாத இடமாகவும் சன நெருசலான இடமாகவும் இருக்கும் இடங்களில், வயதானோர் மிக மெதுவாக நடப்பார்கள்.. ஒரு காலை எடுத்து வைத்து பின் மெதுவா அடுத்த காலை எடுத்து வைப்பார்கள், இவ்விடத்தில் பயங்கர சகிப்புத் தன்மை வேணும் - பின்னாலே மெதுவா ஊர:).. அப்போ நினைப்பேன்.. இது நான் பின்னாளில் சந்திக்கப் போகும் பாதைதானே- அதாவது கடக்க இருக்கும் பாதை, என. அதை நினைச்சே மிகவும் சகிச்சுக்கொண்டு பின்னாலே போவேன்.

னக்கு என்னமோ வயதானோரிலும், குழந்தைகளிலும் அதிக பாசம் உண்டு. எங்கு போனாலும் நான் அதிகம் ஒட்டியிருப்பது இந்த இருவரோடும்தான். அதிலும் நான் நினைப்பதுண்டு, நம் வயதை ஒத்தோரை எல்லோரும் கவனிப்பார்கள் நோர்மலா, ஆனா வயதானோரைத்தான் தேடுவது குறைவு, அதனால நான் நம் வீட்டுக்கு விருந்தினர் வரும்போது பெற்றோரை அழைச்சு வந்தால், பெற்றோரோடுதான் அதிகம் பேசுவேன்.

ம் வீட்டுக்கு எதிர் வீட்டில் ஒரு தம்பதியினர் இருக்கிறார்கள் (65/70) வயசுக்காரர்(ஸ்கொட்டிஸ்) அவர்கள் என்னைக் கண்டால் நொன் ஸ்ரொப்பாக பேசுவார்கள், நானும் தப்பி ஓடாமல் பொறுமையா நின்று பேசுவேன், வீட்டுக்கும் போய்ப் பேசிவிட்டு வருவேன், நம் சமையல் பிடிக்கும் அவர்களுக்கு, ஏதும் செய்தால் கொண்டு போய்க் கொடுப்பேன்.  இந்த விசயத்தில் நிறையப் பேசலாம், ஆனா அது தற்பெருமை பேசுவது போலாகிடும் என்பதனால என்னைக் கொன்றோல் பண்ணிக் கொண்டு...

ப்போகூடப் பாருங்கோ உங்களுக்கும் சகிப்புத் தன்மை வந்திருக்குமே?:) என் போஸ்ட்டை ஒருவரிகூட விடாமல்:) முழுவதையும் சகிச்சுக்கொண்டு படிச்சு முடிச்சிட்டீங்கதானே?:)).

ச்ச்சோஓ நான் சொல்ல வருவது யாதெனில் சில நேரங்களில் கெட்ட கெட்ட கோபமா வரும், கோபத்தை அடக்க அடக்க உடம்பும் நடுங்கப் பார்க்கும்.. ஆனா இப்பூடியான நேரங்களில்.. மேலே நான் யோசிச்சதைப்போல “மாத்தியோசிச்சு” சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கோ...

இதிலிருந்து முடிவா நான் என்ன சொல்கிறேன் எனில்... பார்த்தீங்களோ? அதிரா ரொம்ப நல்ல பொண்ணு:)).. இதைச் சொல்லத்தான் சுத்தீஈஈஈ வளைச்சு இவ்வளவும் சொல்லி முடிச்சேன்ன்ன்.. ஸ்ஸ்ஸ் இனி யாரும் என்னைத் திட்டிடக்கூடாது:) சகிச்சுக் கொள்ளோனும்:))... ஹா ஹா ஹா..

ஊசிக்குறிப்பு:
புளொக் ஆரம்பித்து இத்தோடு ஒன்பது வருடங்கள்... ஆனா இதுதான் என் 200 ஆவது பதிவு:) எல்லோரும் ஓடி வந்து, அதிரா கையில தாம்பூலம் எடுத்து, வாழ்த்துங்கோ அதிராவை:).
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
வாழ்க்கையில் எந்த விசயத்தில் தோற்றாலும், 
ஒன்று மனசை மாத்தத் தெரியோணும், 
இல்லையெனில் தேற்றவாவது தெரியோணும்
இவ்வரிய தத்துவத்தை, இந் நன்னாளில் உங்களுக்காக காவி வந்து தந்திருப்பவர்.. 
உங்கள் பெருமதிப்பிற்கும்:), பேரன்புக்கும் உரிய புலாலியூர்ப் பூஸானந்தா:)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Tuesday, 8 October 2013

 என்னைக் கொஞ்சம் தனியாக அழ விடுங்கள்:)

 “தனிமை”...


என்னைக் கொஞ்ச நேரம் தனியாக இருக்கவிடுங்கள் நான் அழப்போகிறேன்.

என் துயரங்களைத் தலையணையில் இறக்கி வைக்கப் போகிறேன்.
விதியின் சுழற்சியை மீறமுடியாத நேரங்களிலெல்லாம் இப்படி அழுவது என் பழக்கம்.

என்னைத் தனியாக இருக்க விடுங்கள்.

பூமி தன் கடமையை ஒழுங்காகச் செய்கிறது.
மேகம் தன் கண்களை அடிக்கடி திறந்து மழை பொழிகிறது.
காலங்களின்படி புஷ்பங்கள் மலர்கின்றன.
அலுப்புச் சலிப்பில்லாத இயற்கையின் ஓட்டத்தில் எனக்கு மட்ட்டும் ஏனோ, அடிக்கடி சலிப்பு வருகிறது. இனம் தெரியாத பயம் வருகிறது.
காரணம் இல்லாமல் துணிச்சல் வருகிறது.
ஒன்றும் புரியாத நேரத்தில், ஓ வெனக் கதறவேண்டும்போல் இருக்கிறது.
ஒருதடவை கண்ணீர் விட்டு அழுது முடித்தால், கனம் உள்ளத்தில் குறைகிறது.

என்னைக் கொஞ்ச நேரம் தனியாக இருக்கவிடுங்கள் நான் அழப்போகிறேன்.

நான் ஒரு வலை பின்னினேன், அதில் நானே சிக்கிக் கொண்டேன்.
நான் ஒரு காடு வளர்த்தேன், அதிலிருந்து வெளியேற எனக்கே வழி தெரியவில்லை.
நான் ஒரு கிணறு வெட்டினேன், அதில் நானே விழுந்து விட்டேன்.
ஆக்கியதும் நானே.. என்னை அழித்துக் கொண்டதும் நானே...

சிந்திக்கச் சிந்திக்க எனக்கே என்மீது கோபம் வருகிறது.
என்னை நானே கோபிக்காமல் இருக்க வேண்டுமென்றால், நன்றாக அழ வேண்டும்.
என்னைத் தனியாக அழ விடுங்கள்.

நான் ஒரு மகாகவி(பூஸ்) என்பதில் சந்தேகமில்லை.
எப்படி வாழ்வது என எனக்குத் தெரியாததிலிருந்தே, நான் ஒரு மகாகவி(பூஸ்:)) ஆகத்தான் இருக்கவேண்டுமென்பதில், உங்களுக்குச் சந்தேகமில்லை.

பாம்பின்(பூஸின்)அழகை நான் ரசிக்கிறேன். புலியின் மீது அழகான கோடுகள் இருக்கின்றனவே, அவற்றை நான் தடவிப் பார்க்கிறேன்.
நான் கவிஞனல்லவா? அவற்றை நான் ரசிக்கிறேன்.

ஆனால், பாம்பு என்னைக் விழுங்குகிறது, புலி என்னைக் கடிக்கிறது. நான் என்ன செய்வேன், என்னைத் தனியாக இருக்க விடுங்கள்.. மீ அழப்போகிறேன்...

கற்பூரம் எரிந்து போனபிறகு, அதன் கரித்தூள்கூட மிஞ்சுவதில்லை.
நான் கற்பூரமாக இருந்திருக்கக் கூடாதா?... என்னுடைய காலடிச் சுவடுகள் பூமியில் பதியாமல் இருந்திருக்குமே.

எண்ணங்களை வலிதாகச் சொல்லுகிறேன்... அது எல்லோர் மனதிலும் பதிகிறது.

எனது சிந்தனைப் புஸ்பங்களுக்கு நானே உரம்.என்னைத் தின்ற பிறகுதான், அவை பூத்துக் குலுங்குகின்றன.

தொளிலாளி கட்டிய வீட்டில், தொழிலாளி குடியிருக்க முடியாததுபோல, எனது சிந்தனைகள் எனக்கு ஆறுதல் அளிக்கவில்லை.

இறைவனிடம் முறையிட வேண்டும்போல் இருக்கிறது.
இறைவன் தான் வரமாட்டேன் என்கிறார்.என்னை அங்கே வரச் சொல்லுகிறார். சீக்கிரம் போய்விடலாமா என எண்ணுகிறேன்.
கால்கள் சங்கிலிகளால் பிணைக்கப் பட்டிருக்கின்றன.
சாலை சுத்தமாக இருக்கிறது, ஆனாலும் பயணத்தைப் பற்றிய பயம் இருக்கிறது.

பிறருக்காகவே நான் இங்கே இருக்க வேண்டியிருக்கிறது. என்னுடைய அபிலாஷைகளெல்லாம் ஆகாயத்தில் இருக்கின்றன.

எனக்காக வாழ வேண்டும் என்றால், நான் மேலே போய் விடவேண்டும்...

ஆனால் பிறகு ஆருக்காவது நான் திரும்பி வரவேண்டும் என்றால், இறைவன் அதுக்கொரு வழி வைக்கவில்லை.. என்ன செய்வேன்?...

என்னைக் கொஞ்ச நேரம் தனியாக இருக்கவிடுங்கள் நான் அழப்போகிறேன்.

நான் மூடனாக இருந்திருந்தால், எதையும் சிந்தித்திருக்க மாட்டேன். தாயை அறியாத கன்றுபோல, வாயும் வயிறுமாக வாழ்ந்திருப்பேன்.

நினைக்கத் தெரிந்த மனதை எனக்கு வைத்தது, இறைவன் செய்த குற்றம். அந்தக் குற்றத்துக்கான தண்டனையை, நான் அனுபவிக்கின்றேன்.

அவன் நியதிகளுக்கு நான் கட்டுப் பட்டாக வேண்டும். ஆனால் அவனோ என் தேவைகளை உணர மாட்டானாம், நான் என்ன செய்வேன்ன்?..

நான் அழத்தான் வேண்டும், என்னைத் தனியாக அழ விடுங்கள்...

எதை முழுதாகச் சொல்ல முடியவில்லையோ, அதை உளறிக் கொட்டுவது என் வழக்கம்.
உடைந்து போன கண்ணாடித் துண்டுகளை, ஒவ்வொன்றாக எடுத்து ஒட்ட வைக்க, யார் யாரால் முடியுமோ, அவர்களெல்லாம், சிதறிக் கிடக்கும் இந்தச் சிந்தனைகளை, ஒட்ட வைத்துப் பாருங்கள்...

என்னை மட்டும் தனியாக இருக்க விடுங்கள்.. ஏனெனில் நான் அழப் போகிறேன்:).
+++++++++++++++++++++++++++++++++ __( ) __++++++++++++++++++++++++++++++++++

ஊஊஊஊசி இணைப்பு:
அடடா.. எப்பவுமே பகிடியாகத் தானே அதிரா பேசுவா:) இண்டைக்கு என்னாச்சோ ஏதாச்சோ?:) என எண்ணிக் கொண்டே.. உங்க உங்க குலதெய்வங்களையும்:) வேண்டிக்கொண்டு:).. அதிராவுக்கு இப்படி ஏதும் கவலைகள் வந்திருக்கப் படாதென:)... படிச்சிருப்பீங்களே [இல்லயே நாங்க ஏதும் அப்படி கும்பிடேல்லையே:) எண்டு மட்டும் சொல்லிடாதீங்க பிளீஸ்ஸ்:) சுவீட் 16 கார்ட்:) தாங்காது:) ரொம்ப மென்மையாக்கும்:)).. 

ஹா..ஹா..ஹா.. அதுதான் மீ சொல்ல வருவதென்னவென்றால், இம்முறை வாங்கி வந்த கண்ணதாசனின் கட்டுரைப் புத்தகத்திலே ஒரு பகுதி...  தலைப்பு “தனிமை”... படிச்சேன், சற்று வித்தியாசமாக இருக்கே பகிரலாமே என...

இன்று எங்களுக்கு கும்மிருட்டு.. + குளிர்.. அதனால, ரேபிள் லாம்பைப் போட்டு விட்டு.. ஒண்ணொண்ணா புத்தகம் பார்த்து ரைப் பண்ணிய பதிவாக்கும்... ச்சோஓ:) . இதனை ஆரும் மிஸ் “சூஸ்”:) பண்ணினால்ல்.. மீ அவிங்களை “சூ” பண்ணிடுவேன்ன்.. ஹையோ இது வேற சூ:).  மிஸ் “சூஸ்” என்பது.. கொப்பி பண்ணிப் போய் எங்காவது வெளியிடுதல்:)[ இதையும் என்னையே சொல்ல வைக்கிறியே முருகா!!!!)]... நீங்க கேட்டால் நான், மாட்டேன் என்றா சொல்லிடப் போறேன்ன்ன்:).
=================================================================




Saturday, 23 February 2013

அப்பாவின் அட்வைஸ்....


ம்முறை நான் சிரிக்கப் போறதில்லை:) சீரியசாக எழுதப்போறன்:)... ஏனெண்டால் சிரிச்சால் விஷயத்துக்கு வர நேரமெடுக்குது:).. அதனால ஸ்ஸ்ஸ்ஸ்ரெயிட்டா களமிறங்கிடோணும் எனக் கங்கணம் கட்டிட்டன்:)) அதனால மீற மாட்டன்....:).

நான் குட்டிப் பொண்ணாக:) இருந்த காலத்தில(அதுக்காக இப்ப வளர்ந்திட்டீங்களோ எனக் கேட்கப்புடா:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதான் வளர்த்தியாம்ம்:)) சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)), இலங்கையின் வடபகுதி, இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் இருந்த கொஞ்சக் காலத்தை அனுபவித்திருக்கிறேன். அந்தப் பாக்கியம் எல்லோருக்க்கும் கிடைக்காது, அந்நேரம் அங்கிருந்தோருக்கு மட்டுமே கிடைச்சிருக்கும். அது ஒரு அழகிய பொற்காலம்....:).

ஏன் அப்படிச் சொல்கிறேன் எனில், ஊரில் களவு என்ற சொல்லுக்கே அந்நேரம் இடமில்லை. ஒரு பொம்பிளைப் பிள்ளை எத்தனை மணிக்கும் வெளியே போய்வரக்கூடிய சுகந்திரம் இருந்தது. எந்த விதமான ஷேஸ்டைகள், தனகல்களே கிடையாது.. அவ்வளவு ஒரு கட்டுப்பாடான காலமாக அது இருந்தது.

ஆனா எந்தவித வெளித் தொடர்புகளும் இருக்கவில்லை. தபால் தொடர்பு மட்டுமே இருந்தது. ரெலிபோன் எனில் கச்சேரியில் இருந்தது.. அது ஒன்றுதான் எனக்குத் தெரியும். போக்குவரத்துக்கூட துண்டித்திருந்தது, தரைப்பாதை இல்லை. இடையில் கடல்வழியேதான் தொடுக்கப் பட்டிருந்தது.

வெளி உணவுகள் , இங்கிலீசு மரக்கறி, சோப், இப்படியாக எதுவும் வாங்குவது கஸ்டம். ஆனாலும் கிடைக்கும்.. ஆனை விலை பூனை விலையில்:).. காசு இருப்போருக்கு பிரச்சனை பெரிதாக தெரியாது. கரண்ட் இல்லை ஆனாலும் ஜெனரேட்டர் பிடிச்சு புதுப்படங்கள் எல்லாம் பார்ப்போம். 

சைக்கிள் டைனமோவில் பாட்டுக் கேட்பார்கள், பனம்பழத்தில் சோப் உற்பத்தி நடந்துது... இப்படி பல புதுமைகள். பற்றரி வாங்கலாம் ஆனா விலைதான். மண் எண்ணெயிலயே வாகனங்கள் இயங்கின.

வீடுகளில் தேங்காய் எண்ணெய், மண்ணெண்ணெய் விளக்குகள்தான். ஆனால் ஜெனரேட்டர் பிடிச்சு, கோயில் திருவிளாக்கள், கல்யாணக் கொண்டாட்டம் எல்லாம் கோலாகலமாக நடக்கும்.. அதுக்கெல்லாம் குறையிருக்கவில்லை.

இப்படியான காலத்தில என் அளப்பரிய சொத்தாக ஒரு புது “லுமாலா லேடீஸ் பைக்” எனக்கிருந்தது. 

ஓரம்போங்கோ.. ஓரம்போங்கோ அதிராட லுமாலா
சைக்கிள் வருதூஊஊஊஊ:)
அதுக்கு கரியர், முன்னால குடை எல்லாம் அழகாகப் போட்டு, என்னவெல்லாம் போட்டு அலங்கரிக்கோணுமோ அலங்கரிச்சு:), ஸ்டிக்கர் எல்லாம் அளவா+ அழகா ஒட்டி, எப்பவும் துடைச்சு துடைச்சு பளபளா என வைத்திருப்பேன். அந்நேரம் என்னைப் பார்த்தொருவர் சொன்னார், உங்களின் சைக்கிளைப் பார்த்தாலே தெரியுது, நீங்கள் எவ்வளவு சுத்தமாக இருப்பீங்களென, ஆனா இப்போ என் காரைப் பார்த்தால் அவர் என்ன சொல்லுவாரோ?:) ...ஙேஙேஙே.... சரி சரி அதெல்லாம் இப்ப எதுக்கு:).

கூகிள் கூகிள் பண்ணிப் பார்த்தேன்ன் .. உலகத்தில..
இப்படி ஒரு காரைக் காணவில்ல:)
ஆனாலும் என் வயிற்றெரிச்சலைச் சொல்லியே ஆகணும். அப்படிப்பட்ட என் ஆசைச் சைக்கிளை இடம் பெயர்வின்போது, நாவற்குழி என்னுமிடத்தில் வைத்து களவெடுத்திட்டினம்... பிறகுதானே அறிஞ்சன் அது வேறு ஆருமில்லை.. இப்போ ரேடியோ ஜக்கியாக இருக்கும்.. நி.... வில்:) ஆரம்பிக்கும் பெயர் கொண்டவர்தான் எடுத்ததென:)).. சரி சரி பழசெல்லாம் இப்ப எதுக்கு:)?. விஷயத்துக்கு வாறன்.

இப்படியான காலப்பகுதியில், அப்பா வடபகுதிக்கு வெளியேதான் வேலை பார்த்தவர்... அதனால் அவர் 3,4 மாதங்களுக்கொரு முறைதான் ஊருக்கு வந்து போவார். அப்போ அம்மாவும் நானும்தான். அப்பாவின் ஊர் பக்கத்து ஊர்தான் என் சைக்கிளில் 15, 20 நிமிடத்தில், நான் மாமி வீட்டில் நிற்பேன். அப்பாவின் ஊரில்தான் அந்நேரம் என் வயதொத்த மச்சாள்மார் நிறைய இருந்தவை. எங்களிடத்தில் பெரிதாக எனக்கு குரூப் இல்லை..

அதனால நான் எப்பவும் அங்குதான் ஓடுவேன். அதிலும் ஒரு மாமிக்கு இரு மகள்மார். அவர்களோடுதான் நான் அதிகம் ஒட்டு. தினமும் அவர்களை மீட் பண்ணுவேன், இல்லையெனில் சாப்பிடாததுபோல இருக்கும்.

அம்மாவின் சட்டம், நீ போய்வா, ஆனா 3 மணிக்கு முன் போகக்கூடாது, 6 மணிக்கு வீட்டுக்கு வந்திடோணும்... இதை எப்பவும் மீறமாட்டேன் நான், ஆனா எப்படியும் 6 மணிக்கு 10, 15 நிமிடம் தாமதமாகிடும் வந்து சேர.. ஏனெனில் என்னைக் காணவில்லை எனில், இன்னொரு ஆள் அனுப்பித்தான் தேடோணும், ஃபோன் வசதி இல்லையெல்லோ. அதுதான் பிரச்சனையே. அங்கு மாமி வீட்டு Gate இல் 5.45 க்கு சைக்கிளோடு வெளியே வருவேன், ஆனால் விடமாட்டினம், கேட்டில் நின்று கதைக்கவே நேரம் போயிடும்.. கதைச்சு முடியாது, பிறகு மின்னல் வேகத்தில் வீட்டுக்கு வந்திடுவேன்.

மாமி சுகமில்லாமல் இருந்தவ. அதனால் மகள்மாரால் வெளியே பெரிசாக வெளிக்கிட முடியாது. ஆனாலும் நான் 3 மணிக்கு அங்கு போகவில்லையாயின், 3.30 க்கு மாமியின் மகளின் சைக்கிள் எங்கட வீட்டில இருக்கும், ஏன் வரவில்லை எனக் கேட்டபடி.

அதிகமான நாட்கள் திரும்பிவர விடாயினம், நில்லுங்கோ என மறிப்பினம், அப்படியெனில்... ஆரும் தம்பிமாரை கெஞ்சி, ஓடிப்போய் அம்மாவிடம் சொல்லிப்போட்டு வரும்படி அனுப்பி வைப்போம்.. இப்படியெல்லாம் செட்டப்புக்கள் நடக்கும்.

அப்படியான காலநேரத்தில் ஒரு தடவை, அப்பா லீவில் வந்து நிண்டவர். ஒருநாள் இரவு, என் ரூமில் நான் படுத்திருக்கிறேன், வெளியே ஹோலில் அப்பாவும் அம்மாவும் கதைச்சுக் கொண்டிருக்கினம், நான் நித்திரையாகவில்லை, அது அவர்களுக்கும் தெரியும் என்பது அப்போ எனக்கு புரியவில்லை:).

அப்போ அம்மா சொல்கிறா அப்பாவுக்கு.... “இஞ்ச பாருங்கோ, என்னால அதிராவைப் பார்க்க முடியாது, 6 மணிக்கு வீட்டுக்கு வந்திடும்படி சொன்னால், நேரத்துக்கு வருவதில்லை, நானும் எத்தனை நாளைக்குத்தான் இப்படிப் பயப்பிடுவது தனியே, நீங்கள் நிண்டு கவனியுங்கோ” என. இதைக் கேட்டதும் எனக்கோ அப்பா ஏசுவாரோ என நெஞ்சு திக்கு திக்கு எண்ணுது...

ஆனா பாருங்கோ உடனே அப்பா என்ன சொன்னார் தெரியுமோ?:).. “அதிராவைப் பற்றியா சொல்றீங்க? என் பிள்ளையைப் பற்றி எனக்குத் தெரியாதோ? சும்மா எல்லாம் சொல்லாதீங்க, அதிரா சொன்ன சொல் மீறாத பிள்ளை, அவள் நேரத்துக்குத்தான் வந்திருப்பாள், நீங்கதான் சும்மா சொல்றீங்க” என்றார்....

இதைக் கேட்ட எனக்கு நெஞ்செல்லாம் அடைக்கத் தொடங்கிட்டுது, கடவுளே அப்பா என்னில எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கிறார், இந்த நம்பிக்கையை எண்டைக்கும் நான் வீணடிச்சிடக்கூடாது, என மனதில் சபதம் எடுத்தேன். ஏனெனில் அப்போதிருந்த வயது சபலமான வயது, பல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நேரம்:).. நாட்டிலும் பிரச்சனையான நேரம்..ஆனால் அப்பாவின் அந்த ஒரு வசனம், என்னை உறுதியான ஒரு பெண்ணாக வளர வழிவகுத்தது.

பின்னர்தான் நான் ஓசிச்சுக் கண்டு பிடிச்சேன், எனக்குக் கேட்கட்டும் என்றுதான் அப்பா அப்படிச் சொல்லியிருப்பார் என. ஏனெனில் எப்பவுமே பிள்ளைகளை ஏசுவதை விட, இப்படிச் சொன்னால் அவர்கள் நல்லபடி வளர இதுவும் ஒரு முறையாம்.

சின்ன வயதிலிருந்தே ஒரே அட்வைஸ் நடக்கும், அப்போ சொல்லித் தருவார், ஆரும் ஏதும் சொன்னாலோ, கிண்டல் பண்ணினாலோ பயந்திடாதே.. உன்னைப் பார்த்து குரங்குபோல இருக்கே என ஒருவர் சொன்னால்கூட... கலங்கிடாதே.. நீ சொன்னால் சொல்லிட்டுப்போ எனக்குத் தெரியும் என்னைப்பற்றி என மனதில நினை... இப்படியான பிரச்சனைகள் வரும்போது மனதில் போட்டுக் குழம்பிடாதே, தூசுபோல தட்டிப்போட்டு உன் வேலையைக் கவனிக்கப்பழகு...

இப்படி அட்வைஸ்கள் நீளும். அப்போ எழுந்து போக முடியாமல் பல்லைக் கடித்தபடி கேட்டுக்கொண்டிருப்போம், ஆனால் அவைகள்தான் எனக்கு மனதில் பல உறுதியையும் எல்லோரோடும் தயங்காமல் பழகும் தன்மையையும் கொடுத்ததெனலாம். ஆண்பிள்ளைகளோடு எப்படிப் பழகுவது என்றெல்லாம் கூச்சப்படாதே, ஆரோடும், பேசினால் பேசு, ஆனா பழகும்போது உனக்கு தெரியவரும், எப்படிப் பட்டவர்கள் என, உன் மனதுக்கு ஏதும் வித்தியாசமாகத் தோன்றினால் உடனேயே கட் பண்ணிடு தொடர்பை, அப்படிக் கற்றுக்கொள், அதை விடுத்து கதைக்காமல் ஒதுங்கிப் போகாதே என்றெல்லாம் சொல்லுவார்ர்...

இப்பவும் தொடருது அட்வைஸ் எனில் பாருங்களன்:)).. இப்போ பிள்ளை வளர்ப்பு பற்றியும், உணவுமுறை பற்றியும் நடக்கும்:).. இன்று கூட சொன்னார், தினமும் 3 மிளகு சப்பிச் சாப்பி்ட்டு தண்ணி குடிச்சால், இருமல், தடிமன் போன்ற வருத்தங்கள் வராதாம், எல்லோரும் அப்படி செய்யுங்கோ என்றார்:).

ஊசிக்குறிப்பு:
தனிப் பதிவுகள் போட்டும், எனக்காக நேரம் ஒதுக்கி கார்ட்ஸ்கள் செய்தும், “எண்ணம் அழகானால்..” குரூப்பிலும் தனிப்பதிவுகள் போட்டும், மற்றும் மனதார என் பிறந்தநாளுக்கு(ஹையோ மீக்கு ஷை ஷையா வருதே:)).. வாழ்த்துக்கள் சொல்லிய அனிவருக்கும்... இதயத்திலிருந்து நன்றிகள் சொல்லிக் கொள்கிறேன்ன்ன்...
=============================================
நிழல் பிரிவதில்லைத் தன் உடலை விட்டு, 
அது அழிவதில்லைக் கால் அடிகள் பட்டு...
நீ நடமாடும் பாதையில் கவனம் வைத்தால், 
இங்கு நடப்பது நலமாய் நடந்துவிடும்... 
உருக்கத்தோடு சொல்பவர்:) புலாலியூர்ப் பூஸானந்தா:)
=============================================
எனக்கு இன்னும் தமிழ்மணத்தில் வோட் பண்ணக் “கை” வருகுதில்லை, அதனால அதிராவுக்கு வோட் பண்ணோனும் என  “பெரியமனசு” பண்ணி முன் வந்தீங்கன்னா:).. இந்த லிங்கில் போய் வோட் பண்ணுங்கோ.. வோட் பண்ணினால்..  “அகரகர்” கலர்கலரா செய்து தருவனாக்கும்:)
இங்கே கிளிக் செய்யுங்கோ மக்கள்ஸ்
==============================================