நல்வரவு_()_


Wednesday 24 January 2018

இரண்டு மாதத்தில் பிறந்த, ஒன்பது மாதக் குழந்தை:)

லைப்புப் பார்க்க லேசா தலை சுத்துதோ?:) ஹா ஹா ஹா இது ஒரு உண்மைச் சம்பவம்.. அதுவும் வெளி நாட்டிலே நடந்திருக்கு:)..

தில் ஒளிச்சு மறைக்க என்ன இருக்கு, பெண்குழந்தைகளுக்கு பருவ வயதை அடைந்தபின், ஒவ்வொரு மாதமும் ஏற்படும் உடல் உபாதைகள் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாக இருக்கும்.

அதில் ஒவ்வொருவரும் படும் அவஸ்தைகள் சொல்லிப் புரிய வைக்க முடியாது, ஆனா சிலருக்கு வருவதும் தெரியாது போவதும் தெரியாது.. எது எப்படியோ, நம் நாட்டில் மட்டும் இதை என்னமோ பெரீய ஒரு குற்றமாகப் பார்ப்பதுபோல தோணும்... அந்த மூன்று நாட்களும் மெத்தையில் படுக்க முடியாது, வீட்டுக்குள் உலாவ முடியாது, கிச்சினுக்குள் போக முடியாது, புறிம்பான படுக்கை புறிம்பான பாத்திரங்கள்:)) ஹையோ இது இந்துக்களிடையே ரொம்பவும் மோசம்:)) இது எனக்கு கொஞ்சம் கூடப் பிடிப்பதில்லை..[இவை அனைத்தும் திருமணத்தின் முன்னர்தான், பின்புதான், நாம் அம்மா பேச்சைக் கேட்க மாட்டோமே:)] ஆனா உடல் ஓய்வுக்கு எனத்தான் அப்படிச் செய்வது எனச் சொல்கிறார்கள்.... அது ஒரு வகையில் சரியாக இருக்கலாம், ஆதி காலத்தில் பெண்கள், வீட்டு வேலை முளுவதையும் இழுத்துப் போட்டுச் செய்வதனால்..கட்டாயப்படுத்தப் படுவதால், இச்சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன், இல்லை எனில் அவர்களுக்கு ஓய்வு ஏது?..

ஆனா இப்படியான காலங்களில் பெண்கள் உடலால் மட்டுமல்ல மனதாலும் கொஞ்சம் டிப்பிரெஸ்ட் ஆவே இருப்பார்கள், இதனை கண்டு கொள்ளாத சில ஆண்களும் உலகில் இருக்கிறார்கள், பெண்களுக்கும் ஓய்வு தேவை என எண்ணிக்கூடப் பார்க்க முடியாதோரும் இருப்பதை அறியும்போது வேதனையாகவே இருக்கும்.

பேபி அதிரா:) வைரவருக்குப் பூ பிடுங்கினது போதும் வாங்கோ:)

இலங்கையைப் பொறுத்து அங்கு யூனிஃபோம் வைட் அண்ட் வைட் தான் எப்பவுமே... அதனால அந்த யூனிஃபோமோடு நாம் போடும் போராட்டமிருக்கே:) இப்படியான நாட்களில்... சொல்லி முடியாது. ஆனா அங்கு ஒரு நல்ல நடை முறை இருக்கிறது, ஹைஸ்கூல்கள் பெரும்பாலும் ஆண்களுக்கு தனி, பெண்களுக்கு தனி.... தரமான ஸ்கூல்கள் எல்லாம் இப்படித்தனித்தனியே தான் இருக்கும். ஸ்கூல் பஸ்கள்கூட தனித்தனிதான், அதனால நமக்கு சுகந்திரம் அதிகம்:)...

சுவீட் 15 அதிரா:).. தண்ணி பட்டு படம் கலங்கி விட்டது:)

இப்போதைய தலைமுறையில் இது நிறைய மாறிவிட்டது, பிள்ளைகள், வாய்காட்டி.. அப்படி எல்லாம் முடியாது, ஸ்கூலுக்குப் போவேன், நான் இப்படித்தான் இருப்பேன் என்பதுபோல இருக்கிறார்கள்.. முக்கியமாக வெளிநாட்டில் இப்போ இந்த ஓய்வுமுறை அடியோடு இல்லாமல் போய்விட்டது, பிள்ளைகளும் எதையும் பெற்றோருக்கு சொல்வதுமில்லை.

ஆனா வெளிநாட்டைப் பொறுத்தவரை, ஸ்கூலிலேயே அனைத்தையும் சொல்லிக் குடுத்து விடுகிறார்கள், அதனால பருவமடைய முன்பே குழந்தைகள் மனதால் ரெடியாகி, அந்நாளை எதிர்ப்பார்த்திருக்கிறார்கள்.. இது மிகவும் வரவேற்கத்தக்கது, நமக்கு அப்படி என்றால் என்னவென்றே தெரியாது:), நான் எல்லாம், எனக்கென்னமோ ஆகிப்போச்சு என அழுதேன் தெரியுமோ ஹா ஹா ஹா... இப்படி தெரியாமல் இருப்பது தப்புத்தானே.

இன்னொன்று வெளிநாட்டில், இப்படியான நாட்களில், ஸ்கூலில் ஜிம் செய்யத்தான் வேண்டும், மற்றும் சில ஸ்கூலில் சுவிமிங் வகுப்புக்கள் இருந்தால் கூட, பங்குபற்ற வேண்டுமாம், விடமாட்டினமாம், மெடிகல் வசதி, விஞ்ஞான வளர்ச்சிதான் இதுக்கெல்லாம் காரணம்.

அடுத்து நம்மவர்களில் ஒரு பழக்கம், பெண் குழந்தை கண்ணுக்கு குளிர்ச்சியாக வளர்ந்திருந்தாலே, முதலாவது கேட்கும் கேள்வி, மகள் சாமத்தியப்பட்டு விட்டாவோ?:).. இல்லை எனச் சொல்லிட்டால், கண்ணால குழந்தையை அளந்தபடியே சொல்லுவார்கள்... அப்போ விரைவில உங்களுக்கு ஒரு கொண்டாட்டத்துக்கு இடமிருக்குதுபோல:)... இது எல்லாம் எனக்கு அடியோடு பிடிப்பதில்லை.

இங்கத்தைய ஸ்கொட்டிஸ் நண்பியோடு இது பற்றி டிஸ்கஸ் பண்ணிய இடத்தில், அவ சொன்னா ஆரிடமும் கேட்டிடாதையுங்கோ அதிரா, மகள் பருவமடைந்திட்டாவோ என, இவர்களுக்குப் பிடிக்காது, வெளியில் சொல்ல விரும்பவும் மாட்டார்கள், ஏனெனில் இங்கு தெரிந்தால் ஆண் பிள்ளைகள் தவறுக்கு அழைத்திடுவார்கள் என்பதுபோல ஒரு எண்ணம் இருக்கிறதாம், அதனால் குழந்தைக்கு ஓரளவு புத்தி வரும்வரை வெளியே சொல்ல மாட்டினமாம்.

கனடாவில் அக்காவின் மகளின் டான்ஸ் வகுப்பினரோ, ஏதோ ஒரு வகுப்பினரோடு காம்பிங் அழைத்துப் போனார்களாம், அதில் 4,5 நம் நாட்டுக் குழந்தைகளாம், எல்லோரும் அப்போதான் வயதுக்கு வந்திருந்தனர், அதில் ஒரு குழந்தை மட்டும் சாமத்தியப் படாதவவாம். அப்போ tour போன இடத்தில், முதல் நாளே அக்குழந்தை சாமத்தியப் பட்டு விட்டாவாம், வீட்டுக்கு சொன்னால் வந்து அழைத்துப் போய் விடுவார்கள் என, நண்பிகள் சேர்ந்து அவவை ரெடியாக்கி, தம்மோடு ஜாலியாக எஞோய் பண்ண விட்டு, 4 நாட்களின் பின்பு வீட்டுக்கு வந்தும், பெற்றோரிடம் சொல்லப் பயத்தில், ஒரு கிழமை போனபின்னரே மெதுவாக தாயிடம் சொன்னாவாம்.. அதன் பின்னரே பெற்றோர் அமளிப்பட்டு ஸ்கூல் போக விடாமல் மறிச்சு, பத்தியம்,, சடங்கு சம்பிரதாயம் எனப் பண்ணினார்களாம் ஹா ஹா ஹா.. அப்போ பாருங்கோ... இதில் எனக்கு என் ஒன்றுவிட்ட அண்ணா சொன்னது நினைவுக்கு வருது:-  “உங்களுக்கு நன்கு பிடிச்ச விசயம், அது தப்பில்லாததாக இருப்பின்...அதனை செய்திடுங்கோ:), செய்தபின் விட்டில் அடிவாங்கினாலும் பறவாயில்லை:))”.. ஹா ஹா ஹா.

சரி இப்போ தலைப்புக்கு வருகிறேன்..
இப்படியான மாதம் மாதம் வரும் உபாதைகளால், பெண்கள் நினைப்பது கடவுளே இது வராமல் விட்டால் நல்லாயிருக்குமே என:).. சிலருக்கு ஒழுங்காக வருவதில்லை, 2,3 மாதத்துக்கு ஒரு தடவை கூட வரும்... இப்படியான ஒருவரின் கதைதான் சொல்லப்போறேன்.

எனக்கு தெரிந்த ஒருவருக்கு, இப்படித்தான் 2 மாதமாக எதையும் காணவில்லையே என, வீட்டில் வைத்து test பண்ணியிருக்கிறா, அது நெகடிஃப் என்றே காட்டியிருக்கு, அதனால சரி இது நோர்மல்தானே என விட்டிட்டா, அத்தோடு அவர்கள் குடும்பமாக இலங்கை போகவென ரிக்கெட் எல்லாம் போட்டிருந்தமையால், ஷொப்பிங்.. அது இது என நாட்கள் ஓடியிருக்கு... வயிறு மெதுவாக பெருத்திருக்கு... இவ நினைச்சிருக்கிறா.. ஏதும் கட்டி வளருதாக்கும் எதுக்கும் ஊர் அலுவலை முடிச்சு வந்து டொக்டரைப் பார்க்கலாம் என:),  வண்டி[வயிறு] எனச் சொல்லுவோமே நாம்.. அப்படி வண்டி வச்சிருந்ததாம், ஆனா அவ நல்ல வடிவா சாப்பிடுவா:) நோர்மலாவே  வண்டிதான், அதனால பெரிசு பண்ணவில்லை.

ஊருக்குப் போய் நன்கு ஸ்கூட்டர், ஓட்டோ, வான் , பஸ் என சுத்தி அடிச்சு, கோயில், குளம் எல்லாம் உலாவி விட்டு, திரும்பி வெளிநாடு வந்திட்டினம்.. அப்போ கூட எந்த அசம்பாவிதமும் இல்லை.. பின்பு ஊர்க் களை எல்லாம் போக்கியபின்புதான், இவவுக்கு வயிற்றில் ஏதோ அசைவதுபோல ஒரு ஃபீலிங் வந்திருக்கு:).. பதறிக்கொண்டு டொக்டரிடம் ஓடினால், செக் பண்ணி விட்டு.. உனக்கு 7 மாதம் முடிந்து விட்டது .. இன்ன திகதியில் குழந்தை கிடைக்கும் எனச் சொல்லியாச்சு ஹா ஹா ஹா.. இரண்டு மாதத்தில் நல்ல அழகான குண்டான கெல்த்தியான பெண் குழந்தை கிடைச்சது .. இது அவர்களுக்கு பிறந்திருக்கும் 3 வது குழந்தை:).

அப்போ பாருங்கோ அனைத்துக்கும் மனம் தானே காரணம், முதல் மாதத்திலேயே தெரிஞ்சிருந்தால், நடக்கப் பயம், இருக்கப்பயம், வேலை செய்யப் பயம், இப்படி எவ்வளவு பத்திரமாக இருப்போம்.. சத்தி, பிரட்டு என அது ஒரு பக்கம்... இது இவவுக்கு எதுவுமே இல்லையாம் ஹா ஹா ஹா:)..

இப்போஸ்ட்ட்டை சும்மா எழுதத் தொடங்கினேன், ஆனா இன்று பார்க்கிறேன், இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினமாமே:).. பாருங்கோ கடவுள் அதிராவின் பக்கம்:)).. அதனால இன்றே போட்டிடுவோம் என அவசரமாகப் போடுகிறேன்:).. 

வாழ்த்துக்கள் அனைத்துக் குழந்தைகளுக்கும் அண்ட் அதிராவுக்கும்:))
=====================================================================

ஊசி இணைப்பு:
_________________________()____________________________

111 comments :

  1. Replies
    1. ஆவ்வ்வ்வ் நீங்கதான் 1ஸ்ட்டூஊஊஊ:) அப்போ ஆயா உங்களுக்கு இல்லை:)) ரொம்ப இருமுறாவே.. பார்ப்போம் 2 வது ஆர் அகப்படுகிறார்கள் ஆயாவுக்கு என:)) haa haa haa:)

      [im] http://www.lovethispic.com/uploaded_images/304872-This-Rose-Is-For-You-.gif [/im]

      Delete
    2. சர்வதேச பெண்குழந்தைகள் தின வாழ்த்துக்கள் அஞ்சுவிற்கு,sharonனுக்கும்

      Delete
    3. அம்முலு அதிராவுக்குச் சொல்லேல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மீயும் சைல்ட் தானே பிக்கோஸ் அண்ட 16:))

      Delete
  2. வாவ் !! அட்டகாசமான அதிரடி பதிவு அவசியமான பதிவும் கூட அது இன்றைய சர்வதேச பெண் குழந்தைகள் தினத்துக்கு பொருத்தமாக அமைந்ததும் அருமை

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ... இப்படி சில விசயங்கள் எழுத விருப்பமாக இருக்கும், ஆனா எப்படி எடுத்துக் கொள்வார்களோ என தயக்கமாகவும் இருக்கும்... ஆனா உங்களைப்போன்ற சப்போர்ட்டேர்ஸ்:) இருக்கும்வரை எனக்கென்ன கவலை:).. அதுதானே அஞ்சு.. எனக்கு இது தெரியாது, சும்மா எழுதினேன், பார்த்தால் பெண் குழந்தைகள் தினமாம்... இப்படி கேள்விப்பட்டதில்லை முன்பு... ஆண்குழந்தைகளுக்கும் இருக்கோ தெரியாது.. இருப்பின் எங்கட மகனுக்கு மீசை முளைச்ச வரலாறை எழுதலாம் ஹா ஹா ஹா:))

      Delete
    2. கவலைப்படாதேங்கோ அடுத்தடுத்த வருஷங்களில கொண்டுவந்திடுவினமாம். ஐநா வில தீர்மானம் நிறைவேற்றப்போயினமாம். இப்போதைக்கு childerns day, men 's day, father 's day only.
      ஆனாலும் நீங்க எழுதுங்கோ. யார் கண்டது நீங்க எழுதின நாளை போய்ஸ் டே ஆக்கினாலும் ஆச்சரியமில்லை அதிரா. ஹா.ஹா...

      Delete
    3. ஹா ஹா ஹா அம்முலு.. நான் அடிக்கடி நினைப்பதுண்டு ஆண்பிள்ளைகளும் பாவம்தானே:).. மீசை முளைச்சு முன்ன முன்னம் சேஃப் எடுப்பதை ஒரு விழாவாக நடத்தோணும் என நினைப்பேன்.

      அண்ணாவின் மகளின் சாமத்தியவீடும் பெரிசா செய்தவை, அப்போ நிறைய கிஃப்ட்ஸ் வந்ததை பார்த்து எங்கட சின்னவர் கேட்டார் ஏன் எனக்கும் இப்படி கிஃப்ட் தரக்கூடாது என:) அவருக்கு கிஃப்ட்ஸ் என்றால் சரியான விருப்பம்.. பேர்த்டே, கிரிஸ்மக்கு இப்பவும் நிறைய பக் பண்ணிக் குடுக்கோணும் இல்லை எனில் போதாது கிஃப்ட்ஸ் என அழுவார்:))

      Delete
  3. ஆமாம் அதிரா என் நண்பி ஒருத்தி சொல்லுவா அவங்க வீட்டில் எல்லாரும் சாப்பிட்டு முடிச்சபிறகுதான் அவளுக்கு இலைபோடுவாங்களாம் பசியுடன் அந்நேர வலி உபாதைகள் எல்லாம் சேர்ந்து எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பா .
    எங்களுக்கு சாப்பாடெல்லாம் பிரச்சினை இல்லை ஆனா எங்கம்மா என்னை செடிகிட்ட நெருங்க விட மாட்டாங்க எண்ணெய்யில் பொரிச்ச காரமான உணவு தொட விட மாட்டாங்க .தனி பக்கெட்டில் போட்டிருக்கும் துணிகளை அவங்க தோய்ப்பாங்க ஆனா தனிபக்கெட்டில் போடாம விட்டா திட்டு கிடைக்கும் :) அவங்களை கட்டிப்பிடிக்க விட மாட்டாங்க வேணும்னே நான் தொட்டுட்டு ஓடுவேன் ஆனாலும் :)

    ReplyDelete
    Replies
    1. ///ஆமாம் அதிரா என் நண்பி ஒருத்தி சொல்லுவா அவங்க வீட்டில் எல்லாரும் சாப்பிட்டு முடிச்சபிறகுதான் அவளுக்கு இலைபோடுவாங்களாம் பசியுடன் அந்நேர வலி உபாதைகள் எல்லாம் சேர்ந்து எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பா .///

      இது இப்படி நான் எங்கயுமே கேள்விப்பட்டதில்லையே அஞ்சு? இது புதுக்கதையாக இருக்கு... உண்மையில் சொல்லப்போனால் அந்த 3 நாட்களும் தான் ஓவரான ராஜ மரியாதை:)) எந்த வேலையும் கிடையாது, ஹோட்டல் சாப்பாடு... சிக்கின் பிரட்டல்:).. ஒரு நாளைக்கு 4 அவிச்ச முட்டைகள்கூட தருவா அம்மா:)) ஹா ஹா ஹா:)... கேட்கும் நேரமெல்லாம் நெஸ்டமோல்ட் ரீ கிடைக்கும்:))...

      ///ஆனா எங்கம்மா என்னை செடிகிட்ட நெருங்க விட மாட்டாங்க //

      ஓம் இது நான் அறிஞ்சிருக்கிறேன், எங்கள் வீட்டில் பூக்களை தொடக்கூடாது மற்றும் துளசிக்கு அருகில் போகக்கூடாது என்பா அம்மா...

      //அவங்களை கட்டிப்பிடிக்க விட மாட்டாங்க வேணும்னே நான் தொட்டுட்டு ஓடுவேன் ஆனாலும் :)//

      ஹா ஹா ஹா இதுதான் என் கவலையும்:) இதை மறந்திருந்தேன் நினைவு படுத்திட்டீங்க:).. நான் எப்பவுமே அம்மாவோடு உரசியபடியேதான் இருப்பேன், குட்டி செயாரில அம்மா இருந்தாலும், அதில கொஞ்சமா இடிச்சுக்கொண்டே இருப்பேன்... அதனால இந்நேரத்தில் அம்மா அருகில் முட்டிக்கொண்டிருக்க விடமாட்டா கர்:)).. தான் குளிச்ச பின் தொட விடமாட்டா:)).. சில நேரங்களில் அம்மாக்கள் பொல்லாதவர்கள்:)) ஹா ஹா ஹா. இப்போ ஆரும் அப்படி இல்லையே..

      Delete
  4. /இவை அனைத்தும் திருமணத்தின் முன்னர்தான், பின்புதான், நாம் அம்மா பேச்சைக் கேட்க மாட்டோமே:)]//

    ஹாஹாஆ :) நானும்தான் சான்ஸ் அமைஞ்சது வெளிநாட்டில் :) எங்கம்மாக்கு 6 மணிக்குமேல் நகம் வெட்ட பிடிக்காது திட்டுவாங்க கருப்பு நிற சட்டை வாங்கவே அனுமதிக்கலை :) ஒவ்வொருநேரம் சொல்லுவாங்க .இப்படி அட்டகாசம் பண்ணாதே போற இடத்தில மாமியார் கிட்ட வாங்கிக்கட்டிப்பேன்னு :) ஆனா எனக்கு பிரச்சினையே இல்லாம போச்சு ஹ்ஹா :)

    ReplyDelete
    Replies
    1. விதி வலியது:)... எங்கட அப்பாவும் இந்த விசயத்தில் தலையிட மாட்டார்ர்... எதுக்கு இப்படி கொன்றோல் எனத்தான் அம்மாவுக்குப் பேசுவார். ஆனா எனக்கு தெரிஞ்சு ஒரு குடும்பம் ஊரில்.. அவர் பொலீஸ், மூன்று பெண் குழந்தைகள்... மனைவி குளிச்சிட்டுத்தான் வீட்டுக்குள் கால் வைக்கோணும் என்பாராம் காலையில்... பாவம் அவ 5 மணிக்கே குளிச்சிட்டு ஓடி வந்து ரீ போட்டு, சமைப்பாவாம்ம்.. ஏன் அவர் செஞ்சால் என்ன குறைஞ்சு போயிடுவாரோ எனக் கெட்ட கோபம் வரும்... ஆனா அவர் நல்லவர்தானாம், இந்த விசயத்தில் மட்டும் இப்படி... அவரின் அம்மாவைப் பார்த்துப் பழகியிருக்கலாம்..

      எங்கட மாமியும் வெளிநாட்டிலேயே வாழ்ந்தவர்கள் என்பதாலே.. இதுபற்றி எதுவுமே இல்லை:)..

      Delete
  5. டிப்ரஷன் பற்றி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை அதிரா எல்லா பெண்களுக்கும் அட்லீஸ்ட் 80 சதவீதம் பேருக்கு அந்த நாட்களில் ஹார்மோனல் சேஞ்சஸால் அது ஏறி ஏறி இறங்குமாம் அப்போ தலைவலி கோபம் வெறுப்பு என பல குழப்பங்கள் இருக்குமாம் அதை பல ஆண்கள் புரிந்துகொள்வதில்லை :(
    சமீபத்தில் கேள்விப்பட்டது மும்பையில் ஒரு கம்பெனி முதல் நாள் பெண்களுக்கு லீவ் தராங்களாம் .

    ReplyDelete
    Replies
    1. //மும்பையில் ஒரு கம்பெனி முதல் நாள் பெண்களுக்கு லீவ் தராங்களாம் .//

      ஓ மிக நல்ல விசயமாச்சே... என் மாமியின் மகள் ஒருவருக்கு 3 நாட்களும் வயிற்று வலியோடு சத்தி இருக்கும்... அவ வேர்க் பண்ணிக் கொண்டிருந்தவ.. அப்போ சொல்லுவா சத்தி எடுத்தெடுத்தே வேலை செய்வேன் என... ஏன் இப்படி எல்லாம் உபத்திரவங்கள் என்றே எண்ணத் தோன்றும்..

      Delete
    2. மியாவ் ஒரு பெரிய வியாபார நிறுவனத்தின் மேனேஜர் இங்கே அது துணி கடை பெரிய பெரிய தள்ளிட்டு போற racks இருக்கும் அதை ஒரு பொண்ணு தள்ளிட்டு அப்படியே வயிற்றை பிடிச்சிட்டு நின்னிருக்கா அப்போ மேனேஜர் தூரத்தில் இருந்து பார்த்து ஓடி வந்து அவளுக்கு ஹெல்ப் பண்ணாராம் அது வெள்ளைகாரப்பொண்ணு ஹெல்ப் பண்ணது இந்தியர் அது ரொம்ப தாங்க்ஸ் சொல்லியிருக்கு கண்ணை துடைச்சிட்டே போனாளாம் .சில விஷயங்களை அக்கா தங்கையுடன் பிறந்த வளர்ந்த அம்மாவின் கஷ்டங்களை புரிந்து வளர்ந்த ஆண்கள் எளிதில் கிரகிப்பாங்க ..சிலர்தான் எதையும் கண்டுக்காம விட்டேற்றி டைப் ஆண்கள் ..

      Delete
    3. இதுபற்றி நிகழ்ச்சிகளில் பார்த்த.. கேட்ட நிறைய செய்திகள் சேர்ந்திருக்கு, அதையும் எழுத நினைச்சேன் பின்பு போஸ்ட் பெருத்திடும், அத்தோடு இன்று போஸ்ட் போடோணும் என நினைச்சதாலேயே அவசரமா பலதை எழுதாமல் விட்டிட்டு பப்ளிஸ் பண்ணிட்டேன்..

      இப்போ 90 வீதம் ஆண்களும் நல்ல புரிந்துணர்வுடனேயே இருக்கினம், எங்காவது சிலர்தான் கண்டபடி நடக்கிறார்கள்.. உதவி செய்யாவிடினும் உபத்திரவம் குடுக்காமல் ஆவது இருக்கலாம்..

      Delete
  6. //இலங்கையைப் பொறுத்து அங்கு யூனிஃபோம் வைட் அண்ட் வைட் தான் எப்பவுமே//
    அடக்கொடுமையே ..எங்க ஊரில் வெள்ளை ஸ்கர்ட் ஸ்போர்ட்ஸ் டேக்கு மட்டும் அணிவதுண்டு மற்றபடி நானா படித்த ஸ்கூலில் ப்ளூ ஸ்கர்ட் வெள்ளை ஷர்ட் 10த் வரை அப்புறம் அரைத்தாவணி .
    எங்கள் பகுதியில் எல்லா பள்ளிகளிலும் ப்ரவுன் /சாம்பல் நீல பச்சை நிற அரைப்பாவாடை தான் பார்த்திருக்கிறேன் அதைவைத்து எந்த ஸ்கூல்னு கண்டுபிடிக்கலாம் . வெள்ளை ஸ்கர்ட் பாவம் தாம் பிள்ளைகள் .எங்களுக்கும் நிறைய கேர்ள்ஸ் ஸ்கூல்ஸ் ஒன்றிரண்டு தான் CO ED ஸ்கூல்ஸ் .

    ReplyDelete
    Replies
    1. எங்களுக்கு ரையை வச்சேதான் ஸ்கூல் அடையாளம் கண்டு பிடிப்பது... இது ஸ்கேட் அண்ட் பிளவுஸ் அல்ல, பிளீட்டட் சட்டை, இடுப்பில் பெல்ட் இருக்கும்...

      இலங்கையில் எங்குமே இதுதான் யூனிஃபோம்.

      சில சிங்கள ஸ்கூல்களில் மட்டும், இதேதான் ஆனா கை இல்லாத சட்டை கழுத்து பெரிதாக ப வடிவில் வெட்டிய சட்டை இப்படியும் யூனிஃபோம் இருக்கும்.

      ஆண் பிள்ளைகளுக்கு ஒ லெவல் வரை புலூ சோட்ஸ் அண்ட் வைட் சேட்... ஏ லெவல் வந்ததும்.. நைட் சேண்ட் அண்ட் வைட் ட்றவுசர்... இப்ப எப்படியோ தெரியவில்லை, ஆனா மாறியதாக நான் அறியவில்லை.

      அம்மா படிச்ச காலத்தில் முழுப்பாவாடை சட்டை, பின்பு கால்ஃப் சாறி இருந்ததாம் ஆனா அதுவும் வெள்ளை என்றே நினைக்கிறேன்.

      Delete
  7. ஆமா :) அது யாரது சைக்கிள் பக்கத்தில் தில்லா நிக்கிறது :) என்கிட்டயும் இருக்கே ஸ்வீட் 15 படம் :)
    என் சைக்கிள் BSA SLR ரெட் கலர் :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இப்படம் தவறி விட்டது, இப்போ அண்ணி ஊருக்குப் போன இடத்தில் கண்டு எடுத்து வந்து தந்தா... இது என் முதலாவது சைக்கிள்.. இதன் பின் இன்னொன்று வச்சிருந்தேன்.. அது லுமாலா:)..

      Delete
  8. // முக்கியமாக வெளிநாட்டில் இப்போ இந்த ஓய்வுமுறை அடியோடு இல்லாமல் போய்விட்டது, பிள்ளைகளும் எதையும் பெற்றோருக்கு சொல்வதுமில்லை.// ஆமாம் அதிரா இப்போதைய பிள்ளைகளுக்கு அதுவும் ஒரு சாதாரண சம்பவம் அவ்வளவே நம் அம்மாக்கள் வெந்தயத்தண்ணி ஹனி உளுந்ந்து களி நல்லெண்ணெய் எல்லாம் கொடுத்து உடம்பை பலவீனம் ஆகாம பார்துக்கிட்டாங்க அதெல்லாம் கொடுத்தா சிரிக்கிறாங்க இப்போதைய ஜெனரேஷன் .
    இங்கே பள்ளிகளில் 7 ஆம் வகுப்பு சேர்ந்தவுடன் முதல் பாடமே இதுதானே மென்ஸ்ட்ரல் சைக்கிள் டிவேலப்மென்டைல் பயாலஜி அப்புறம் சகலமும் .என் மகள் படிச்சிட்டிருந்ததை பார்த்து மயக்கமே வந்தது 7 ஆம் வகுப்பு பாடம் .இங்கே அது பாடம் அவ்வளவே , ஆனால் நம்மூரில் தான் எல்லாவற்றையும் அசிங்கப்படுத்தி அதிலும் சினிமாக்கள் தேவையிலலாம காதலன் காதலிக்கு சானிட்டரி நாப்கின் வாங்கி தர காட்ச்சியையும் படு கேவலமாக சினிமாவில் காட்டி எல்லா அசிங்கத்தையும் செஞ்சு தொலைக்கிறாங்க .அதைவிட கேவலம் தொலைக்காட்சி விளம்பரங்களும் உருப்படாத ஜென்மங்கள் .

    ReplyDelete
    Replies
    1. //அதெல்லாம் கொடுத்தா சிரிக்கிறாங்க இப்போதைய ஜெனரேஷன் .//

      உண்மைதான், பிள்ளைகள் மட்டுமில்ல, இப்போ இங்கு சில நம் வயது தாய்மார்களே பிள்ளைகளுக்கு பத்தியம் குடுப்பதில்லை, தாமும் வெள்ளைகள்போல மாறி விட்டாங்க:))..

      ஹா ஹா ஹா அதேதான், 5ம் வகுப்பிலேயே கேள்ஸ் ஐ புறிச்சுக் கூட்டிப்போய் இதுபற்றிச் சொல்லிக் குடுக்கிறார்கள். ஏனெனில் இங்குள்ள பிள்ளைகள் 10,11 இலேயே வயதுக்கு வந்து விடுகிறார்களெல்லோ.

      உண்மைதான் இதுபற்றி பேசவே ஊரில் ஏதோ கெட்ட விசயம் என்பதுபோலவும் பிள்ளைகளுக்கு அது தெரிஞ்சிடக்கூடாது என்பது போலவும் எண்ணுவினம்... அது எவ்வளவு தப்பு...

      வீட்டில் பேசுவது சங்கடமெனில், ஸ்கூலில் கல்விமுறை இருந்தால் நல்லதே... பிள்ளைகளுக்கு தெரிஞ்சிருந்தால் பாதுகாப்பாகவும் இருப்பினமெல்லோ.

      Delete
  9. இங்கே ஸ்கூலில் கால் கை அடிபட்டிருந்தா மட்டுமே ஜிம் மற்றும் ஸ்போர்ட்ஸ் விலக்கு உண்டு மற்றபடி எல்லாம் நோர்மல் டேஸ் போலத்தான்

    //அடுத்து நம்மவர்களில் ஒரு பழக்கம், பெண் குழந்தை கண்ணுக்கு குளிர்ச்சியாக வளர்ந்திருந்தாலே//
    அவ்வ்வ் அதை ஏன் கேட்கறீங்க சில பெண் பிள்ளைகள் சீக்கிரமாகவும் சிலர் தாமதமாகவும் பெரிய பிள்ளை ஆகுவாங்க .இது தெரியாம சிலதுங்க எப்போ எப்போ னு கேட்டு தொல்லை நடக்கும் அதுவும் மேலிருந்து கீழ் பாதம் வரை அளவெடுக்கும் சில GOSSIP ஆன்டிங்களை சாக்குப்பையில் போட்டு கட்டி அடிக்கணும்னு தோணும் :)
    ஒன்று நினைவுக்கு வருது அப்போ முந்திலாம் பெரிய பிள்ளையானாதும் வீட்டில் ஜாடை தைத்து போட்டோ ஸ்டுடியோ அப்படியே கூட் டி போய் படமெடுப்பாங்க .அப்படி நானா ஒரு முறை டான்ஸ் முடிஞ்சி அம்மாவுடன் டான்ஸ் மேக்கப் தலை பில்லை நெற்றிச்சுட்டி பூச்சடையுடன் பாவடைச்சட்டை போட்டு ஆட்டோ கிடைக்காததால் அமமா கூட நடந்து வந்தேன் ரோட்டில் 10 பேராவது விசேஷமான்னு இங்கிதமில்லாம கேட்டாங்க .கொஞ்ச கூட மேனர்ஸ் இல்லாதவங்க பப்லிக்கில் கேப்பதான்னு கோவமா வந்துச்சி

    ReplyDelete
    Replies
    1. அதுதான் அஞ்சு... அதெல்லாம் ஒன்றுமில்லை வா ஓடு ஓடு என்பார்கள். என் கசின் ஒருவரின் மகள், இப்படியான நேரம் சுவிமிங் லெசன் இருப்பின் .. ஸ்கூலுக்கே போக மறுப்பாவாம், ஏஎனெனில் போனால் சுவிம் பண்ணோனுமாம்... அப்போ பெண் குழந்தைகளுக்கு எவ்வளவு பிரச்சனை. ஆனா ஸ்கூலில், சில பிள்ளைகள் இதனோடு ரன்னிங், லோங் ஜம்ப், ஹை ஜம்ப் எல்லாம் செய்திருக்கிறார்கள் ஸ்போர்ட்ஸ் ரைம் தவிர்க்க முடியாமல்.. சிலரால் முடிகிறது..

      //அப்போ முந்திலாம் பெரிய பிள்ளையானாதும் வீட்டில் ஜாடை தைத்து போட்டோ ஸ்டுடியோ அப்படியே கூட் டி போய் படமெடுப்பாங்க ///

      எனக்கும் வீட்டில் நடந்து எடுத்த படமெல்லாம் வைத்திருக்கிறேன்.. அது ஒல்லிப் பாப்பா:))..

      ஹா ஹா ஹா நம் நாட்டவருக்கு இது கேட்காட்டில் தலை வெடிச்சிடும்:)).. இன்னொரு கேள்வியும் கேட்பினம்.. “நல்லா வளர்ந்திட்டா.. இன்னும் சாமத்தியப்படேல்லையோ:)” என... ஹா ஹாஅ ஹா ஹையோ ஹையோ

      Delete
    2. ஹையோ நான் நடந்து வந்தது டான்ஸ் ப்ரோக்ராம் முடிஞ்சி :) அதுக்குலா ஆன்டிங்களுக்கு கியூரியாசிட்டி தாங்க முடில

      Delete
    3. //“நல்லா வளர்ந்திட்டா.. இன்னும் சாமத்தியப்படேல்லையோ:)” என.// நல்ல காலம் எனக்கு மகன் தான். ஆனாலும் என் ப்ரெண்ட் சொல்லுவா இதைப்பற்றி 2 ம் கேர்ள்ஸ். அதிலும் அவாவுக்கு ஒரு தர்ம சங்கடமாகிவிட்டது இருவருக்கும் 1வயது 4மாத வித்தியாசம். 2வது மகள் 11 வயதில சாமத்தியப்பட்டுட்டா.. 1வது மகள் ஒன்ரை வருஷத்துக்கு பிறகுதான். எப்படியிருக்கும் அவாவின் நிலைமை. பட்டபாடு எனக்கு நல்லாத்தெரியும். டொக்டரிடம் போனால் அவர் ஏசிட்டார். அதெல்லாம் ஆகிவிடுவா என. எங்கட ஆட்களால கஷ்டப்பட்டு போனா..திருத்தமுடியாது சில ஆட்களை.

      Delete
    4. ஹா ஹா ஹா, சாமத்தியபட்ட பிள்ளையை அப்படியா நடத்திக் கூட்டிப் போய் படமெடுப்பினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இது கூடவா அவிங்களுக்கு புரியல்ல:)..

      Delete
    5. அது மியாவ் எங்கம்மா நடந்து வரும்போதே அந்த gossip ஆன்டிங்களை பார்த்தவுடன் ..அக்கா கார் கராஜுக்கு போயிருக்கு நடந்தே வறோம்னாங்க :) அந்த ஆண்டிஸ்த்தான் காத்திண்டிருக்கங்களே :) உடனே கேட்டிட்டாங்க :) ம்ம் அந்த ஆண்டிஸ் கூட்டமே சிசிடிவி க்ரூப் also it was late night about 11 pm ..

      Delete
    6. ///இருவருக்கும் 1வயது 4மாத வித்தியாசம். 2வது மகள் 11 வயதில சாமத்தியப்பட்டுட்டா.. 1வது மகள் ஒன்ரை வருஷத்துக்கு பிறகுதான். //

      ஓ இது இன்னொரு கொடுமை, பெற்றோருக்கு எவ்வளவு கஸ்டமாக இருந்திருக்கும், மூத்த பிள்ளைக்கும் ஒருமாதிரி இருந்திருக்கும், இப்படி நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை... வயசுக்கு வந்தாலும் பிரச்சனை:) வராவிட்டாலும் பிரச்சனை:)..

      எங்கள் குடும்பத்திலும், என்னை விட ஒரு வயசு மூத்தவ மாமியின் மகள்[அப்பாவின் அக்காவின் மகள்], ஆனா அவவை விட ஒரு வருடம் முந்தி மீ அவசரப்பட்டு:) வயசுக்கு வந்திட்டேன்:)) ஹா ஹா ஹா அப்பம்மாவுக்கு ஒரே கவலையாப் போச்ச்ச்ச்:))..

      Delete
    7. ஆம் ப்ரியா ஆனா வெள்ளைகாரங்க பாருங்க எதுக்கும் கவலையில்லை நம் மக்கள்தான் எல்லாத்துக்கும் பதட்டம்

      Delete
    8. ///also it was late night about 11 pm ..//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒரு வயசுக்கு வராத பிள்ளையை:) நடுச்சாமம் 11 க்கு நடத்திக் கூட்டிப்போனவவோ அம்மா:)).. அப்போ அந்த ஆன்ரீஸ் கேட்பினம்தானே ஹா ஹா ஹா:)).. அந்நேரத்திலயும் முழிச்சிருந்து இப்பூடி விடுப்ஸ் கேட்டிருக்கினமே கர்ர்ர்ர்:))

      Delete
    9. அஞ்சு வெள்ளையள் இதை பெரிதா எடுப்பதில்லை. சொன்னாலும் அதை முகம் சுளித்துக்கொள்வார்கள். இங்கு சில பிள்ளைகள் வெள்ளையளை கூப்பிடுவினம்.அவையள் இன்ரெஸ்டா பார்ப்பினம்.ஆனா அங்கால போய் நக்கல்தான்.
      ஆனா அவங்க கேட்பது ஒன்றே ஒன்று. மகனாயின் " என்ன மகனுக்கு கேர்ள் ப்ரெண்ட் இல்லையோ, மகளாயின் பாய் ப்ரெண்ட் இல்லையா என்பதே.. 16,17 வயதானால் இக்கேள்வி நிச்சயம் இருக்கும்.

      Delete
    10. //இங்கு சில பிள்ளைகள் வெள்ளையளை கூப்பிடுவினம்.அவையள் இன்ரெஸ்டா பார்ப்பினம்.ஆனா அங்கால போய் நக்கல்தான்.//

      எங்கட சில சனங்களைத் திருத்த முடியாது!.. உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என்பதை நிரூபிச்சுக் கொண்டே இருக்கும் நம்மவர்களில் சிலரின் போக்கு...

      Delete
  10. /அனைத்துக்கும் மனம் தானே காரணம்,//

    உண்மைதான் அதிரா நிறைய பெண்களுக்கு மாதாந்திர பிரச்சினை இருக்கு சிலருக்கு நாட்கள் தவறியது தெரியாமல் போகும் இதனால் அதை ஆரம்பத்திலேயே கவனிக்கலைனா பின்னாளில் பிரச்சினைகள் வரும் .என்னைப்பொறுத்தவரை அப்பெண் எதுவும் தெரியாமல் குழந்தை கிடைத்ததும் ஆச்சர்யப்பட்டுப்போயிருப்பார் இல்லையா அதுவும் சந்தோஷம்தான் :)

    ReplyDelete
    Replies
    1. மாதம் மாதம் ஒழுங்காக வருவோருக்கு இப்படியான தொல்லை இல்லை, உடனே அவர்களுக்கு சொக்ட் ஆகிட்டாங்க.. ஏனெனில் எந்த மருந்தும் எடுக்கவில்லை ஸ்கான் பண்ணி பார்க்கவில்லை, கண்டபடி உலாவி வந்தாச்சு, குழந்தை ஆரோக்கியமாக இருக்குமோ இல்லையோ எனும் பயம்....

      ஸ்கான் பண்ணி எல்லாம் ஓகே என்றதும்தான் நிம்மதி.

      இன்னொன்று அவர்களுக்கு 8,6 வயதில் இரு குழந்தைகள், அதனால இனி வேண்டாம் என்றே இருந்தார்கள் [என் அப்பா அம்மாவைப்போல:).. இதுபோல ஒரு அதிரடியாகத்தான் மீயும் பிறந்தேன்:)]... இது ஆரம்பமே தெரிஞ்சிருந்தால் குழந்தை வேண்டாம் என நினைச்சிருப்பினமோ என்னவோ... அதனால்கூட விதி இப்படி கண்ணை மறைச்சு குழந்தையை வளரப் பண்ணியிருக்கலாம்:).. இப்போ அவர்களுக்கு படு ஹப்பி.

      Delete

    2. அதுதான் அதிரா :) வேண்டாம்னு கவலையில்லாம இருக்கவங்களுக்கு கடவுள் கிஃப்டா கொடுத்திருக்கார் . நீங்களும் கிஃப்ட்னு நினைக்கிறேன் :)
      இங்கே ஒரு பிரிட்டிஷ் லேடியும் கவனமில்லாம இருந்து பேப்பரில் போட்டாங்க அது நினைச்சிருக்கு அது சாப்பிட உணவால் வயிறு வீங்கின்னு :) அதுக்கும் மன்த்லி இர்ரெகுலர் :)

      Delete
    3. நண்பர் ஒருவர் குடும்பத்தில் அவர் மனைவிக்கு இந்த மன்த்லி பிரச்சினை உண்டு அவர் முதல் பிள்ளையே மணமாகி 3 வருடம் கழித்து பல ட்ரீட்மெண்டுக்குப்பின் பிறந்தது அதன் பின் அவர்களுக்கு இன்னொன்றில் ஆசை ஆகவே மீண்டும் நிறைய சிகிச்சை மருந்து எடுத்தார் அந்த லேடி அவர் உருவம் நாசமானதுதான் மிச்சம் . ஆனால் குழந்தை உருவாகளை கடைசியில் வேண்டாம்னு விட்டு ஊருக்கு போய் செட்டில் ஆக எல்லாம் ரெடியாகிட்டாங்க ஊருக்கு போனபின் பார்த்தா அவர் 3 months கர்ப்பம் :) மூத்த பிள்ளைக்கும் இரண்டாம் பிள்ளை க்கும் 12 வயது வித்யாசம் ஆனால் அவர்களுக்கு ஆச்சர்யம்.இன்ப அதிர்ச்சி
      இப்படித்தான் எதிர்பாராத நேரத்தில் கடவுள் சர்ப்ரைஸ் கொடுப்பார்

      Delete
    4. //அதுதான் அதிரா :) வேண்டாம்னு கவலையில்லாம இருக்கவங்களுக்கு கடவுள் கிஃப்டா கொடுத்திருக்கார் . நீங்களும் கிஃப்ட்னு நினைக்கிறேன் :)//

      ஹா ஹா ஹா ஆவ்வ்வ்வ் மீயும் கிஃப்ட் ...இது நல்லா இருக்கே கேட்க:)) அதனாலதான் வீட்டில ஓவர் செல்லம்:)).. அண்ணா, அக்கா ..அப்பாவிடம் நல்ல அடி வாங்கியிருக்கினம், எனக்கு ஒரு அடிகூட அப்பா அடிச்சதே கிடையாது, ஆனா அம்மா சடார் என எதிர்பாராமல் அப்பப்ப கையால அடிச்சிடுவா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      ///அது நினைச்சிருக்கு அது சாப்பிட உணவால் வயிறு வீங்கின்னு :///
      ஹா ஹா ஹா என்ன கொடுமை ஜாமீஈஈஈஈஈ:))

      Delete
    5. //மூத்த பிள்ளைக்கும் இரண்டாம் பிள்ளை க்கும் 12 வயது வித்யாசம் ஆனால் அவர்களுக்கு ஆச்சர்யம்.இன்ப அதிர்ச்சி //

      ஹா ஹா ஹா எங்கள் உறவுக்குள்ளும் மூத்த பிள்ளைக்கு 16 வயசு 2 வதுக்கு 13 வயசு.. ஏஜ் அட்டேன் பண்ணிட்டா .. அதன் பின் எதிர்பாராமல் ஒரு குழந்தை, இத்தனைக்கும் தந்தை டொக்டர்:)) ஹா ஹா ஹா.. அவர்களுக்கும் பெரிய ஹப்பி.. முக்கியமா மூத்த குழந்தைகளுக்கு மிகவும் ஹப்பியாம்.

      Delete
  11. மழையை திட்டிய அம்மா நிறைய இருக்காங்க :)
    நானும் திட்டிருக்கேன் என் குழந்தை நனைஞ்சி வரும்போது அதெப்படி என் பிள்ளை குடை கொண்டு போகாத அன்னிக்கு மழை பெய்யலாம்னு :)
    அதைவிட கீழ விழுந்தா தரையை அடிக்கிற அம்மாக்களும் உண்டே :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா 100 வீதம் உண்மை... நேற்றுகூட டோரைத் திறந்து பார்த்தேன் ஸ்கூல் பஸ் வரும் நேரமாச்சே என, மழை கொட்டிச்சுது, மனதில முதலில் தோன்றியது .. சே..சே.. பிள்ளைகள் பச் ஆல இறங்கும் நேரம் பார்த்தா மழை வரோணும் என... உடனேதான் மேலே போட்ட அந்த கோட்... வசனம் நினைவுக்கு வந்துது.. எவ்ளோ உண்மை என நினைச்சேன்.

      நாங்களும் குழந்தையில் மகனுக்கு, செயார் அடிபட்டா, இல்ல நிலம் தடக்கி விழுந்தா ஓடிப்போய் செயாருக்கு.. நிலத்துக்கு அடிப்போம், தானும் சேர்ந்து அடிப்பார்.. அத்தோடு வலி மறந்திடுவார்:).. ஹா ஹா ஹா.

      Delete
  12. ஹையோ பரோட்டாவே வேண்டாம் :) எனக்கு

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஸ்பெஷலும் வாணாமோ?:) மிக்க நன்றிகள் அஞ்சு.

      Delete

  13. //இதனை கண்டு கொள்ளாத சில ஆண்களும் உலகில் இருக்கிறார்கள்//

    'சில 'இந்த வார்த்தையை மட்டும் எழுதாமல் இருந்திருந்தால் நிச்சய்ம உங்களை தேம்ஸ் நதியில் நானே வந்து தள்ளி விட்டு இருப்பேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ... ஆவ்வ்வ்வ்வ் ஆயாவுக்கு இம்முறை அடிச்சிருக்கு அமெரிக்க யோகம்ம்:)) ஹா ஹா ஹா ஸ்ரீராமுக்கு ஜஸ்ட்டு மிஸ்ட்ட்டு:)))..

      ட்றுத் ஆயா பத்திரம் அவவுக்கு 97 வயசு:) ரொம்ப இருமுறா:).. கண் மட்டும் நல்ல கூர்மை:) அவவை பத்திரமாக் கூட்டிப்போய் நல்ல நல்ல சாப்பாடெல்லாம் வாஅங்கிக் குடுங்கோ பிளீஸ்ஸ்:)).. ஃபிரிஜ் உணவு அவவுக்கு ஒத்துக் கொள்ளாதாக்கும்:)).. ஆயா பத்திரம்:))

      Delete
    2. கொடுங்க கொடுங்க :) ட்ரூத் பொங்கல் பரிசா எடுத்திட்டு போகட்டும் :)

      Delete
    3. //இதனை கண்டு கொள்ளாத சில ஆண்களும் உலகில் இருக்கிறார்கள்//

      'சில 'இந்த வார்த்தையை மட்டும் எழுதாமல் இருந்திருந்தால் நிச்சய்ம உங்களை தேம்ஸ் நதியில் நானே வந்து தள்ளி விட்டு இருப்பேன்///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் உண்மையைத்தான் பேசுவேன்:).. ஆனா அந்த சில:) என்பதுக்குள் ட்றுத் இருக்கிறாரா இல்லையா என்பதனை மாமியிடம் தான் கேட்கோணும்:))...

      அவ்வ்வ்வ்வ்வ்வ் கரெக்ட்டா அஞ்சு ஜொள்ளிட்டா... ட்றுத் பொயிங்கல் பரிசு கேட்டீங்க இல்ல:) தானா அமைஞ்சிருக்குது பார்த்தீங்களோ:) அதுதான் விதி:)).. கொஞ்சம் பிந்தியிருந்தா.. ஸ்ரீராமிடம் போயிருப்பா ஆயா:)..

      Delete
  14. என் அம்மாவின் மூன்று நாட்கள் அவஸ்தையில் போதுதான் நான் அடுப்புப் பக்கம் போகக் கற்றுக்கொண்டேன்.பத்து வயதில் வெண்கலப்பானையில் சாதம் வடிப்பேனாக்கும்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ...

      ஓ அதனால்தான் உங்களுக்கு சமையலில் ஆர்வம் இருக்கு:)..

      ///பத்து வயதில் வெண்கலப்பானையில் சாதம் வடிப்பேனாக்கும்!//
      ஹா ஹா ஹா உண்மையாவோ.. திறமைசாலிதான் நீங்க..
      நான் பழகினதே றைஸ் குக்கரில் தான், ஆனா பின்பு இப்போ 2,3 வருடமாகத்தான் வடிப்பது நல்லதென அறிஞ்சு, வடிக்கிறேன்..

      Delete
  15. உங்கள் படத்தில் யாருடைய சைக்கிளைப் பிடித்துக்கொண்டு போஸ் தருகிறீர்கள்? கருப்பு வெள்ளைப் படம் என்பது தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. ///உங்கள் படத்தில் யாருடைய சைக்கிளைப் பிடித்துக்கொண்டு போஸ் தருகிறீர்கள்? ///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒரு பபுளிக்குப் பிளேசில வச்சு மானபங்கப் படுத்திய குற்றத்துக்காக தேம்ஸ் கரை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி மேன்மை மிகு நீதிபதி அவர்கள் ஓலை:) அனுப்புகிறார்:)).. வரத் தவறும் பட்சத்தில் , தேம்ஸ் இல் தலைகீழாகக் குதிச்சுக் காட்ட வேணும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது..

      //கருப்பு வெள்ளைப் படம் என்பது தெரிகிறது.//
      இல்ல ஸ்ரீராம் அது கறுப்பு வெள்ளை இல்லை, அந்தக்காலம் போச்ச்ச்:).. இது நோர்மல் படம்தான், ஆனா ஏன் அப்படி ஆச்சுதென தெரியவில்லை.. என் கையிலிருந்து தவறி ஊரில் எங்கோ வெயில் படும் இடத்தில் வெளிறி தண்ணியும் பட்டு அழிஞ்சு, பின்பு சமீபத்தில்தான் கையில் கிடைச்சது, ஸ்கானரை ஓன் பண்ணும் அலுப்பில், ஃபோனாலேயே போட்டோ எடுத்தேன், அதனாலதான் கலர் இப்பூடி ஆச்ச்ச்ச்ச்:)).. ஹையோ வியக்கம் குடுத்தே மீ ரயேட் ஆகிட்டனே:).. இருங்கோ ஒரு கப் அயன்புரூ குடிச்சிட்டு வாறேன்:))

      Delete
  16. சாதாரணமாக கர்ப்பமாக இருக்கும் காலத்தில் நன்றாக உடல் வளைந்து வேலை செய்தால் பிரசவம் எளிதாகும் என்று சொல்வார்கள். தாயும் சேயும் நலமாக இருக்கும் பட்சத்தில் இப்படி இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. அது உண்மைதான், ஆனா நமக்கு தெரிஞ்சிட்டால் முதல் 3 மாதங்களும் மிகவும் கவனமாக இருக்கோணும்.. ஓடக்குடா துள்ளக்கூடா, படுக்கும்போது கவனமாக சரிஞ்சே படுக்கோணும், பூசணிக்காய் வெட்டக்கூடாது, தேங்காயை உடைக்கக்கூடாது.. அன்னாசி பப்பாளி சாப்பிடக்கூடாது, குழந்தை உருவாகு முன்பே folic acid tablet எடுக்கோணும்.. இப்பூடி ஒரு பெரீய லிஸ்ட்... இதைத்தாண்டி, எதைப்பார்த்தாலும் சத்தி பிரட்டு.. தலைச்சுத்து இப்பூடி ஒரு லிஸ்ட்.... இவற்றை எல்லாம் தாண்டி.. இப்படி ஒரு குழந்தை பிறந்தது அதிசயம்தானே?:)..

      ஆனா உண்மைதான், அவவுக்கு எதுவும் தெரியாமையால்... நன்கு ஓடித்திரிஞ்சிருக்கிறா.. அதனால 3 மணித்தியாலத்துக்குள் நோர்மல் டெலிவரி ஆகி அன்றே வீட்டுக்கு வந்திருக்கிறா... எல்லாம் அவன் செயல்:)) ஹா ஹா ஹா.

      Delete
  17. ஸ்பெஷல் பரோட்டாவின் தகுதி நன்று. அம்மா பற்றிய செய்தி வேறு வடிவில் படித்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஸ்பெஷல் என்ற சொல்லுக்கு ஒரு மருவாதை இருக்கத்தானே வேணும்:)..

      அம்மா பற்றிய செய்தி வேறு வடிவிலோ?:) எ ஒ பு:)).. ஹா ஹா ஹா எனக்கும் உங்களைப்போல எழுதத் தெரியுமாக்கும் கண்டு பிடிங்கோ:)..

      மிக்க நன்றிகள்.

      Delete
  18. 40 வருஷத்திற்கு முன்னால் எடுக்கப்பட்ட ஸ்வீட் 15 படம் அழகாக இருக்கிறது ஆனால் மிக பொல்லாத வாலு போல தோன்றுகிறதே அது எனக்கு மட்டும்தானா?

    ReplyDelete
    Replies
    1. ///40 வருஷத்திற்கு முன்னால் எடுக்கப்பட்ட ஸ்வீட் 15 படம் அழகாக இருக்கிறது///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அப்பூடியே மின்னாமல் முழங்காமல் நைஸா ஊத்தி ஏத்தினா நாங்க விட்டிடுவமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))சமீபத்தில எடுத்ததாக்கும் அதாவதூஊஊஊஊஉ வன் இயர் முன்பு:) பிக்கோஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்போ 16 எல்லோ நடக்குதூஊஊஊஊ:)).

      //மிக பொல்லாத வாலு போல தோன்றுகிறதே //
      இல்ல இல்ல மீ ரொம்ப நல்ல பொண்ணு:) ஆர் சிரிச்சாலும் சிரிச்சுப்போட்டே போவேன் முறைக்கவே மாட்டேன்ன்:) அதனாலேயே வலிய நிறையப் பிரச்சனைகள் வந்திருக்கு ஹா ஹா ஹா:).. ஆராவது சிரிச்சா.. பதிலுக்கு சிரிப்பது தப்போ ட்றுத்????:)..

      Delete
  19. சரி சரி வேலைக்கு நேரமாகிவிட்டது மீண்டும் வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. சரி சரி கடமை முக்கியம்:) மாமியின் பூரிக்கட்டை வருமுன் கொம்பியூட்டரை சட்டவுன் பண்ணுங்கோ:)

      Delete
  20. ஏஞ்சல் அதிரா நீங்க ரொம்ப மோசம் பொங்கல் சீர் எனக்கு இன்னும் வந்து சேரவில்லை

    ReplyDelete
    Replies
    1. ட்றுத் நீங்க கேட்டு நாங்க சீர் குடுக்காமல் இருப்போமோ:), ஆனா நாங்க நம்ம்ம்ம்பிக் குடுத்திருக்கும் சீர்:) ஐ:) பத்திரமாக கூட்டிப்போய் சே சே எடுத்துப் போய்ப் பாதுகாத்திடுங்கோ:))).. எங்க கண்ணையே ஒப்படைக்கிறோம்:)))

      [im] https://ih0.redbubble.net/image.10492863.1902/flat,1000x1000,075,f.jpg [/im]

      Delete
  21. சரி.......... ஸ்வீட் 15 தண்ணீர் பட்டு கலங்கி விட்டது ஆனால் பேபி அதிரா நேற்று எடுத்தது போல இருக்கிறதே...

    ReplyDelete
    Replies
    1. haahaaa :) கில்லர்ஜி அது அதிராவின் பேத்தி :) பூ பறிக்கிறது மூணாம் ஜெனரேஷன் மியாவ்

      Delete
    2. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ:) அது கொயந்தைப்படம்:) ஆல்பத்தில் பத்திரமாக இருந்தமையால் ஃபேட் ஆகல்ல:)) மற்றையது வெளியே இருந்து ஃபேட் ஆச்சு:)) ஹையோ தெரியாம வார்த்தையை விட்டிட்டு:) பின்பு எப்பூடி எல்லாம் ஜமாளிக்க வேண்டிக் கிடக்கூஊஊஊஊ:)).

      ///haahaaa :) கில்லர்ஜி அது அதிராவின் பேத்தி :)///

      நான் ஜொன்னனே:) மீக்கு எடிரி வெளில இல்ல:) ஊட்டுக்குள்ளயேதேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அதிரா பேபியில கொள்ளை அயகு:) என எல்லோருக்கும் பொர்ர்ர்ர்ர்ராமை:))

      Delete
    3. மிக்க நன்றி கில்லர்ஜி.. மேலே சொல்ல மறந்திட்டேன்.

      Delete
    4. haa haa haaaa

      [im] https://tse3.mm.bing.net/th?id=OIP.rSOaTAtWQ9E6fFmvsgfvFAEaEs&w=177&h=188&c=7&o=5&pid=1.7 [/im]

      Delete
  22. From work: எனக்கும் சைக்கிளோட நின்று போஸ் கொடுக்க ஆசைதான் ஆனால் என்ன செய்வது எனக்கு இன்றுவரை சைக்கிள் ஓட்ட தெரியாதே

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஜெயம்ரவி அஞ்சலிக்கு சைக்கிள் ஓடப் பழக்கிய நினைவு வருது.. சகலகலா வல்லபனில்:))

      அனைத்துக்கும் மிக்க நன்றி ட்றுத்.

      Delete
  23. அந்த நாட்களையும் எழுதி,அந்த 3 நாட்களையும் எழுதி சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையா மறந்திருந்த வலியையும், அந்நேரத்தில் பக்கதில கோவில் திருவிழா நடக்கும்போது வேலியால கூட சாமியை எட்டிப்பார்க்க விடாமல் செய்த செல்லாச்சி ஆச்சியையும், அடிவயிற்று வலிக்கு அம்மா தந்த வேப்பங்குருத்து,மஞ்சள் அரைத்த விழுதை மிண்டி விழுங்கனை என சொல்லி விழுங்க முடியாமல் ஓங்காளித்து பின் மூக்கைபிடித்துக்கொண்டு விழுங்கி அந்த கசப்பு தாங்காமல் சீனியை அள்ளி சாப்பிட்டதும், தலைக்கு தோஞ்சால் உள்ளி சுட்டு சாப்பிடு என வற்புறுத்தி சாப்பிடவைத்ததும்,நல்ல நாள் பெருநாள் வந்தால் அது தெரியாமல் அது பாட்டுக்கு வந்து மனவேதனை ஏற்பட்டதும் ஒவ்வொன்றா ஞாபகம் வந்தது. எங்க வீட்டிலும் நீங்களும்,அஞ்சுவும் சொன்னமாதிரி கெடுபிடிதான். ஆனா என் அம்மா சொல்லுவா இதெல்லாம் உங்க நன்மைக்குதான். ஆனபடியால் சொல்லு கேளு என. அந்த 3 நாளும் விரும்ப்பிய சாப்பாடு,கேட்டதெல்லாம் கிடைக்கும்.
    உங்களை மாதிரிதான் நானும் அன்று முழுதும் அழுதேன். அத்தோடு சரியான காய்ச்சல்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ...

      ஹா ஹா ஹா என் எழுத்தில ஊர் வாசனை அடிச்ச்சிடுது போல எப்பவும்:)..

      நீங்கள் கோயில் திருவிளா என்றதும்தான் நினைவுக்கு வருது, ஊரில் தேர் தீர்த்தத்துக்கு மட்டுமே சாறி உடுப்போம், அப்போ சாறி உடுத்துப் போவதெனில் பெரீய சந்தோசம்தானெ..

      புதுசாறி வாங்கி பிளவுஸ் தைச்சு... மல்லிகைப்பூ பிடுங்கி மாலை கட்டி, மச்சாள் ஆட்கள் எல்லோரும் வந்து கும்பலா சேர்ந்து போகவென எங்க வீட்டில நிண்டு, விடிய தலை எண்ணெயா இருக்கே என.. பயத்தில தோய்ந்தாலும் வந்திடும் என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) தோயாமல் தலையை மட்டும் கவிட்டுப் பிடிச்சுக் கொண்டு கழுவிப்போட்டு ஓடிப்போய் தேரிலன்று காலை சாறி உடுத்ததுதான்..... கதை கந்தலாயிட்டுது ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அழுதழுது முருகனை திட்டியபடி நின்றிட்டேன்ன்:)) ஹா ஹா ஹா:)..

      உண்மைதான் மருந்து போட விடுவதில்லை, கை வைத்தியம்தான், பனடோல் போடப்போறேன் என்றால் அம்மா சொல்லுவா, திருமணத்தின் பின் நீ என்ன வேணுமெண்டாலும் பண்ணு.. அதுவரை வேண்டாம் என:).. ஹா ஹா ஹா நீங்களும் அழுதீங்களோ ஹையோ ஹையோ.. விளையாடப்போக முடியாதே எனவும் கவலைதானே:))..

      Delete
  24. இந்த நாட்டில் எங்களுக்கு செய்து தந்த சாப்பாட்டை செய்து கொடுத்தால் பிரயோசமில்லை.இங்குள்ள பிள்ளைகள் சாப்பிடுவதில்லை. பெண்பிள்ளைகள் வைத்திருப்போர் சொல்லக்கேட்டிருக்கேன். அவையின்ர மகள்கள் சொல்லு கேட்பதில்லை.அதனால இவர்களும் வற்புறுத்துவதில்லை. ஆனா சாமத்தியவீடு மட்டும் சில பெண்பிள்ளைகள் ஆடம்பரமாக செய்ய நினைக்கிறார்கள்.(இப்போ இங்கு ட் ரெண்ட் ஆ இருக்கு.) அம்மாமார் ஆசைப்பட்டது போக பிள்ளைகள் ஆசைப்படுகினம்.
    இங்கு மாதிரி எங்களுக்கும் தெரிந்திருந்தால் மனதால் பக்குவப்பட்டிருப்போம்.அங்கு இதைப்பற்றி கதைத்தாலே தெய்வகுத்தமாகிவிடுமாதிரி பார்ப்பார்கள். இங்கு எல்லாமே டேக் இட் ஈசி டைப் தான்.
    அந்த பெண்ணுக்கு குழந்தை கிடைக்கவேணுமென்று இருந்திருக்கு. ஆனா அவாவுக்கு இது சம்பந்தமா ஒரு அறிகுறியும் இல்லாமல் இருந்ததுதான் ஆச்சர்யம்...நீங்க சொன்ன மாதிரி மனமே எல்லாவற்றுக்கும் காரணம்..

    ReplyDelete
    Replies
    1. /இங்குள்ள பிள்ளைகள் சாப்பிடுவதில்லை//

      இங்கென்றில்லை அம்முலு ஊரிலும் அப்பவும் அப்படித்தான், பெரும்பாலும் பலரும் பத்திய உணவுகளை விரும்புவதில்லை, பெண்குழந்தைகளுக்குப் பிடிக்காது.. ஆண்குழந்தைகளுக்கு பிடிக்கும்.

      நான் இந்த விசயத்தில் நிறைய வித்தியாசமான கரெக்ட்டர்.. என்ன தந்தாலும் சிரிச்சுக் கொண்டே விழுங்குவேன், முகம் சுழிக்கவோ, வேண்டாம் என்றோ சொல்ல மாட்டேன்... எனக்கு பத்தியம் தந்திட்டு பின்பு அப்பம்மா, மச்சாளைப் போய்ப் பார்த்தா, அந்த மச்சாள் சரியான ஃபசி... எதுவும் தொட மாட்டா.. வேண்டாம் வேண்டாம் என்பா...

      அப்போ அப்பம்மா என்னைப் புகழ்ந்து கொண்டே இருப்பாவாம்.. பிள்ளை எண்டால் அதிராவைப்போல இருக்கோணும்:) எந்தக் கரச்சலும் இல்லாத பிள்ளை எண்டு, பின்னர் மச்சாள் சொன்னா உங்களால நான் வாங்கிய ஏச்சுக்கு அளவில்லை என ஹா ஹா ஹா:)..

      இன்னுமொன்று இக்காலப் பிள்ளைகள் வேண்டாம் என்றால் வேண்டாம்தான், வற்புறுத்துவது கஸ்டம்.. எதுக்கு ஃபோஸ் பண்றீங்க என்பினம்:)..

      உண்மைதான் சாமத்திய வீடு இப்போ, கூட இருக்கும் நண்பியைப் பார்த்தே, நமக்கும் அதுபோல வேணும் என்கிறார்கள்... பெரிய கிராண்ட்டாகவே நம்மவர்கள் செலவழிச்சு செய்கினம்.. கல்யாணம் போல.

      Delete
  25. வாவ்..என்கிட்டேயும் லுமாலா சைக்கிள் தான் இருந்தது. பிரச்சனையோடு போய்விட்டது அதுவும். ப்ளாக் அண்ட் வைட் படத்தில் அழகா இருக்கிறீங்க. யூனிபார்ம்,வைட் ஷு அழகுதான்.
    குட்டி அதிராவும் அழகா இருக்காங்க.
    எல்லா அம்மாமாரும் செய்ற செயல்தான் இது.
    ஆ.வ் இப்படித்தான் ஸ்பெஷல் இருக்குமோ... நல்லதொரு பதிவு அதிரா. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இந்தக் சைக்கிளில் நானும், இதேபோல சைக்கிளில் நண்பியும் போவோம்.. அப்போ கார் கோன் போல வாயால பீப் பீப் என அடிப்போம்.. ஒரு அண்ணாக்கு மட்டும், அவர் எப்பவும் நமக்கு முன்னால போவார்ர்... அமைதியானவர்..

      நாம் எப்பவும் அமைதியானவர்களைச் சீண்டுவோம்:)..

      அந்த அண்ணா,எங்க வீட்டு ஆன்ரியின் [படிக்கும்போது சில நாட்கள் ஒரு றூம் எடுத்திருந்தோம்] உறவினர்:).. இதை ஒவ்வொரு தடவையும் வீட்டு அன்ரி அங்கிளுக்கு வந்து சொல்லிச் சிரிப்போம்.

      ஒருதடவை, அந்த அண்ணா எங்களுக்கு பின்னால வந்திட்டார்... அதனால எங்களுக்கு பீப் பீப் என அடிச்சுக் கொண்டே முந்திப்போனார்ர்:).. அன்று வந்து ஆன்ரி எங்களுக்கு இன்று அந்த அண்ணா கோன் அடிச்சிட்டார் எனச் சொன்னோம்:)..

      ஈவினிங் அந்த அண்ணா அன்ரி வீட்டுக்கு வந்தார்... அப்போ உள்ளே இருந்த அங்கிள் கலைச்சுக் கொண்டு ஓடினார்.. எங்க வீட்டுப் பிள்ளைகளுக்கு கோன் அடிச்சனியா எண்டு:) கொமெடிக்கு:)..

      நாங்க செய்வதெல்லாம் செய்து போட்டு மாட்டியும் விட்டிடுவோம்:))
      ஹா ஹா ஹா மிக்க நன்றி அம்முலு.

      Delete
  26. அட பழைய முக்கால் சைக்கிள் படத்தில் இருப்பது சத்தியமாக வேற யாரோ?))) அந்தக்கால சைக்கிள் பல நினைவுகளை மீட்டுகின்றது!)))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ..

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது முக்கால் சைக்கிள் அல்ல, லேடீஸ் பைக்.

      //படத்தில் இருப்பது சத்தியமாக வேற யாரோ?))) //
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) முகத்தைப் பாருங்கோ:))..
      சைக்கிள் என்றாலே நினைவலைகள் வெளியே வந்திடும்...

      Delete
  27. ஊசிக்குறிப்பு தேடி எடுப்பதுக்கு அதிக பொறுமை இருக்கு உங்களுக்கு பாவம் பேபி அதிராவை வைரவருக்கு பூ புடுங்க விடுங்கோ சுதந்திரமாக விசாக்காட்டுப்பாடு போடாமல்)))

    ReplyDelete
    Replies
    1. ///ஊசிக்குறிப்பு தேடி எடுப்பதுக்கு அதிக பொறுமை இருக்கு//
      ஹா ஹா ஹா எப்போ எங்கு கண்ணில கண்டாலும் உதவுமே என சேர்த்து வைப்பேன், பின்பு போஸ்ட்டுக்கு எது பொருந்தும் என தேடிப் போடுவேன்:)..

      //அதிராவை வைரவருக்கு பூ புடுங்க விடுங்கோ சுதந்திரமாக விசாக்காட்டுப்பாடு போடாமல்)))//

      ஹா ஹா ஹா அதுதானே பூவைப் பிடுங்கவும் கட்டுப்பாடோ:)

      Delete
  28. நானும் சினேஹா பரோட்டா இங்கேகிடைக்கும் என்று கடைக்கு விளம்பரம் செய்யலாம் போல )))

    ReplyDelete
    Replies
    1. என்னாதூஊஊஊஉ ஸ்னேகா பரோட்டாவோ?:) அவ்ளோ மலிவாகிட்டாவோ ஸ்னேகா ஹா ஹா ஹா:).

      Delete
  29. அம்மாவின் அன்புக்கு நிகர் ஏதும் இல்லை!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான், இப்போ மீயும் அம்மா எல்லோ:) ஹா ஹா ஹா மிக்க நன்றி நேசன்...

      Delete
  30. எங்கெங்கும் அன்பு மயம் தான்..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துரை அண்ணன்... உலகமெல்லாம் அன்பு மயமாகிட்டால் நாட்டில் பிரச்சனைகளே வராதே:)..

      மிக்க நன்றி.

      Delete
  31. அன்றாடப் பிரச்னையை அலசிய விதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ உங்கள் தொடர் வருகை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி.

      Delete
  32. ஊசி இணைப்பு - நல்லா இருந்தது. இட்லி ஃப்ரையும் பழைய மிஞ்சுன இட்லிதான். சாம்பார் வடையும் அதேதான்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெலைத்தமிழன் வாங்கோ..

      இம்முறை என்ன சொல்லப் போறீங்களோ என எதிர்பார்த்தேன்[தோம்:)] ஹா ஹா ஹா எஸ்கேப் ஆகிட்டீங்க..

      மிக்க நன்றி.

      Delete
    2. போட்டிருந்த படம் 'ஆதிரை'யோன்னு பார்த்தேன். இல்லை, துவக்கும் இல்லை, அதனால 'அதிரா'தான். அவங்க போட்டிருப்பது பள்ளி Tieதான், துவக்கு இல்லை.

      Delete
    3. ஹா ஹா ஹா நாங்க எதிர்பார்த்தது இதுவல்ல நெல்லைத்தமிழன்:)... இந்தப் பெண்களின் பிரச்சனைக்கு ஏதும் ஏடாகூடமாகப் பதில் சொல்லுவீங்க எனத்தான் எதிர்பார்த்தோம்:) ஹா ஹா ஹா சரி ரொம்ப கூச்சப்படுறீங்க விட்டிடலாம்:) ஹையோ மீ தேம்ஸ்க்குப் போறென்ன்ன்ன்ன்ன்:))

      Delete
  33. பெண்ணாய்ப் பிறந்திட மாதவம் செய்திருக்க வேண்டுமாம் சில பல காரணங்களுக்காக ஏற்படுத்தப் பட்ட கண்டிப்புகள் காரணம் தெரியாமலேயே பின் பற்ற்ப் படுவதுதான் வேடிக்கை முதலில் பதிவில் இருவர் பேசிக் கொள்கிறார்களே நாம் நுழையலாமா என்றிருந்தது அந்த நாட்களில் கோவிலுக்கும்போகக் கூடாது என்பார்களே சுகாதார விஷயங்களைஏற்கலாம் மற்றபடி ...... மாதவிடாய் நிற்கும் போதும் பெண்களுக்கு கஷ்டம்தான்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ...

      //பெண்ணாய்ப் பிறந்திட மாதவம் செய்திருக்க வேண்டுமாம்//
      இது சத்தியமான உண்மைதான், எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.. பெண்ணாகப் பிறந்ததும், பெண்ணாக இருப்பதும்தான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு... இது பிறந்ததிலிருந்து இன்றுவரை, இந்த எண்ணம் என்றைக்கு எனக்கு மாறியதே இல்லை.

      //சில பல காரணங்களுக்காக ஏற்படுத்தப் பட்ட கண்டிப்புகள் காரணம் தெரியாமலேயே பின் பற்ற்ப் படுவதுதான் வேடிக்கை///
      உண்மை!!..

      //முதலில் பதிவில் இருவர் பேசிக் கொள்கிறார்களே நாம் நுழையலாமா என்றிருந்தது//

      ஹா ஹா ஹா இருவர் அல்ல ஆர் வந்தாலும் ஒன்லைனில இருந்தால் கும்மி அடிப்போம், தயங்காமல் எப்போதும் உள்ளே வாங்கோ.. மிக்க நன்றிகள் ..

      Delete
  34. பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்களுங்கோ.
    ம்ம் அழகான கதை தெரியாததால மன பிராண்டி இல்லாமல் ரிலாக்ஸா பெற்று எடுத்திருக்கிறா.அல்லது 9 மாசமும் குய்யோ குய்யோ எண்டு நோய் வந்த கணக்கா எல்லாத்தையும் கொண்டாடீட்டெல்லோ இருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆவ்வ்வ்வ்வ் இது ஆரூஊஊஊஊஊ:).. தங்கச்சியையும் கூட்டி வாறேன் எனப் போனவங்க இப்போதானே வந்திருக்கிறாக:)...
      வாங்கோ சுரேகா வாங்கோ....

      படிக்கிறீங்க என் போஸ்ட் எனத்தெரியும், இருப்பினும் புளொக்கை விட்டுப் போனவர்களுக்கு டக்குப் பக்கென கால் வைக்கச் கூச்சமா இருக்கும் என நினைச்சிடுவேன், ஏனெனில் நானும் கொஞ்சக்காலம் புளொக்கை திரும்பிப் பார்க்காமலே பேஸ் புக்கில் இருந்திருக்கிறேன்:))..

      மீண்டும் இங்கே பார்த்தது மிக்க மகிழ்ச்சி.. றீச்சரையும் கையோடு கூட்டி வந்திருக்கலாமெல்லோ:)..

      //அல்லது 9 மாசமும் குய்யோ குய்யோ எண்டு நோய் வந்த கணக்கா எல்லாத்தையும் கொண்டாடீட்டெல்லோ இருப்போம்///

      ஹா ஹா ஹா 100 வீதம் உண்மை:)..

      மிக்க நன்றி சுரேக்கா..

      Delete
  35. வணக்கம் !

    இனிய பெண்குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் அப்படியே ஸ்வீட் 61 அதிராவுக்கும் (பழங்கால நினைவை மீட்டுக்கொண்டு இருப்பதால்) அன்பான வாழ்த்துகள்
    வாழ்க நலம் !


    ReplyDelete
    Replies
    1. சீராளன்... என்ன தைரியமா உண்மையைச் சொல்லிட்டீங்க. இன்றைக்கு அவங்க ஸ்கூல் உடைலயும், இப்போது இருக்கும் நிலையையும் ரெண்டு படங்கள் போட்டிருக்காங்களே.... பாத்தீங்களா?

      Delete
    2. வாங்கோ மேஜரே வாங்கோ:))..

      //அப்படியே ஸ்வீட் 61 அதிராவுக்கும் // யூ ரூஊஊஊஊஊஊஊ?????? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. அது அடிமேல் அடி அடிச்சா அம்மியும் நகருமாமே:).. அதுதான் இங்கின நடக்குதூஊஊஊஊஊஊ.. அடிக்கடி இப்பூடிச் ஜொள்ளிச் ஜொள்ளியே எல்லோர் மனதிலும் 61 ஐ பதிய வைக்கப் பார்க்கினம்:)).. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. சரி விடுங்கோ இது என்ன புதுசா எனக்கு:)) ஹா ஹா ஹா:)).. சிலருக்கு 30 வந்தாலே 20 ல நடந்த விசயம் எதுவும் நினைவில இருக்காது:)).. மீக்கு 5 வயசில போட்ட சட்டைகூட நினைவில இருக்குது தெரியுமோ?:).. ஏனெண்டால் மீ சுவீட் 16 ...ன்ன்ன்ன்ன்ன்ன்:))

      ஹா ஹா ஹா மிக்க நன்றி சீராளன்.. இம்முறை கவிதை எல்லாம் எதிர்பார்க்கல்ல இருப்பினும் பெண்ணாகப் பிறத்தல் ..வாழ்தல் பற்றி உங்க கற்பனையில் சொல்லியிருந்தா நல்லா இருந்திருக்கும்... வேண்டாம் அடுத்தமுறை பார்ப்போம்.

      Delete
    3. ///சீராளன்... என்ன தைரியமா உண்மையைச் சொல்லிட்டீங்க.///

      ஆவ்வ்வ்வ்வ் அதிராவைத் தேம்ஸ்ல தள்ளவென்றே :) ரொக்கட் எடுத்துப் பறந்து வந்திருக்கிறார் பாருங்கோ வேலை மிகுதியிலயும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      //அவங்க ஸ்கூல் உடைலயும், இப்போது இருக்கும் நிலையையும் ரெண்டு படங்கள் போட்டிருக்காங்களே.... பாத்தீங்களா?///
      ஹா ஹா ஹா எதையாவ்து மிஸ் பண்ணியிருந்தாலும் என எடுத்து எடுத்துக் குடுக்கிறாராம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... இது சுவீட் 15:), நேற்றுப் போட்டது சுவீட் 16:) அவ்ளோதேன்ன்ன்ன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...

      அடுத்துப் போடப்போவதும்:) சுவீட் 16 தேன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா:))...

      அனைவருக்கும் நன்றி.. நன்றி.. ரெயின் புறப்படுகிறது:))..

      Delete
  36. ரொம்ப இயல்பா சொல்லி இருக்கீங்க அதிரா....

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ... இதுபற்றி நிறைய விசயங்கள் வந்தது சொல்ல, ஆனா குறைச்சிட்டேன்.. மிக்க நன்றி,.

      Delete
  37. போஸ்ட்டையும் வாசிச்சு கலந்துரையாடல்களையும் வாசிச்சாச்சுது. :-)

    என்னட்டயும் சைக்கிள் படம் இருக்குது அதிரா. தேடப் போறன். :-)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ றீச்சர் வாங்கோ.. சுரேக்கா தூது சொல்லித்தான் வந்திருக்கிறீங்கபோல கர்ர்ர்:))..

      ஓ சைக்கிள் படத்தோடு, எங்கெங்கெல்லாம் விழுந்தீங்க:) ஆர்மீதெல்லாம் சைக்கிளை ஏத்தினீங்க... காரை புல் மேட்டில் ஏத்தியதைப்போல:).. தெளிவாச் சொல்லுங்கோ:)..

      மிக்க நன்றி.

      Delete
  38. ஹையோ, அதுக்குள்ளே 102 கருத்துக்களா? நான் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பச் சீக்கிரமா வந்துட்டேனோ! :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ...

      ஆமா ஆமா நீங்கதான் லாஸ்ட்டில 1ஸ்ட்டூஊஊஊஊஊ:)).. பறவாயில்லை கார்ட் பெட்டியிலயாவது ஏறிட்டீங்க மிக்க நன்றி.

      Delete
  39. அந்தநாட்களில் கோ எசுகேஷன் முதலானவைகள் கிடையாது. பெண்களுக்கு ஸானிடரி நாப்கின்ஸ் கிடையாது. பெற்றவர்களுக்குக் குழந்தைகள் பெரியவர்களானதைக் கொண்டாடும் ஸந்தோஷம். பெண் பெரியவளானதை ,இப்படித் தெரியப்படுத்தி விட்டால், மாப்பிள்ளை தேடும் பொறுப்பு இல்லை. பெண்கேட்டு வருவார்கள். அதற்கும் முந்தி சாரதா சட்டம் வந்த பின்னர், விவாகத்திற்கு முன்னரே,பெண்கள் பூப்படைந்ததை சொல்லமுடியாத மூட நம்பிக்கைகள், இப்படி சில பல ஸமுதாயத்தினர் பலவித மன உளைச்சல்கள். இப்போது கோ எசுகேஷனுக்குப் பிறகு,பெண்கள் வெட்கப்படுகிரார்களே என்று அடக்கி வாசிப்பவர்கள். காலமும் மாறிண்டே இருக்கு. மாறிண்டே இருக்கம்மா!!!!!! மனமும் மாறிண்டே இருக்கு. இப்போது திடீரென பேரன்,பேத்தி பிறந்ததைக் கேட்கிறோம். காலம்தான் எல்லாவற்றையும் மாற்றுகிறது. எதுவும் பிரமாதமில்லை. ஸரியோ,தப்போ நானும் எழுதிவிட்டேன் பின்னூட்டம்.அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ காமாட்ஷி அம்மா வாங்கோ...

      அழகாக சொன்னீங்க, நானும் அறிந்தது, நம் நாடுகளில் இதை பெரிதாகக் கொண்டாடுவதன் காரணம், எங்கள் வீட்டில் திருமணத்துக்கு ஒரு பெண் தயாராக இருக்கிறா என்பதை அறிவிப்பதாம்.

      ஆனா இது தெரியாமல் இப்போ இங்குள்ள பிள்ளைகளே தமக்கு பெரிதாகச் செய்யச் சொல்லி அடம் பிடித்து செய்ய வைக்கின்றனர்.. பாஷன் என ஆகி விட்டது.. இதுவும் மகிழ்ச்சியே.

      உண்மைதான் எல்லாமே மாறிக்கொண்டே இருக்குது.

      மிக்க நன்றி காமாட்ஷி அம்மா..

      Delete
  40. உயிரினைக் காக்கும், உயிரினைச் சேர்க்கும்
    உயிரவள்க்கு உண்டோசொல் ஒப்பு!

    மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல
    மாதவம் செய்திட வேண்டுமம்மா! என்று கவிமணி மிக அழகாகச் சொல்லியுள்ளார்.

    பெண்ணாகப் பிறந்தவர்கள் சந்திக்கும் பல நிகழ்வுகளை இனிய பதிவாக்கித் தந்திருக்கின்றீர்கள் அதிரா!
    பதிவும் பலரின் கருத்துப் பகிர்வும் மணங்கமழும் கதம்பச் சரமாக இருந்தது! மிக அருமை!

    அன்பும் அரும்பொறையும் என்றும் அகத்துளப்
    பொன்னிகர்ப் பெண்ணவளைப் போற்று!

    பெண்ணைப் பெருமைப்படுத்திப் பல விடயங்களைப் பேசும் பதிவாக்கினீர்கள்!..:)
    நன்றியுடன் நல் வாழ்த்துக்கள் அதிரா!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ இளமதி வாங்கோ எங்கே கவிதையும் இல்லை ஆளும் இல்லை என ஓசிச்சேன்:)..

      உண்மைதானே பெண்கள் என்றால் ச்ச்சும்மாவோ?:) ஹா ஹா ஹா கலைக்கப்போகிறார்கள் என்னை... :)

      மிக்க நன்றி இளமதி.

      Delete
  41. அருமையான அலசல். எங்கள் அப்பா என் அம்மாவை தனியாக இருக்க அனுமதிக்கவில்லை அந்த காலத்திலேயே! அம்மா குளித்து விட்டு சமைப்பார்கள். நாங்கள் வயதுக்கு வரும் வரை தெரியாது , அப்புறம் அம்மா நிறைய சொல்லி கொடுத்தார்கள். நம் வீட்டில் உள்ளது போல் எல்லா வீட்டிலும் இருக்க மாட்டார்கள், அதனால் அந்த சமயத்தில் யார் வீட்டுக்கும் போக அனுமதிக்க மாட்டார்கள்.

    சிறு வயது அதிரா அழகு.
    அம்மா பற்றி சொன்னது அருமை.







    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.